Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்14Points3054Posts -
பாலபத்ர ஓணாண்டி
கருத்துக்கள உறவுகள்10Points1836Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்9Points38756Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87990Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/23/25 in all areas
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
5 pointsதிராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாதையைக் காப்பாற்றும் முகமாக பீஷ்மரின் பின்னால் ஓடிய அன்றைய பாரததேச அரசர்களில் ஒரு அரசன் திராவிட அரசன் என்று வாசித்ததாக ஞாபகம். பீஷ்மரின் அம்பு பட்டு ஒரு ஓரமாக இவர் விழுந்தார் என்றும் ஞாபகம். இதற்கு முன்னரேயே இன்னொரு அரசனின், சித்ராங்கதன், தேவைகளுக்காக ஆண்கள் பல இடங்களில் இருந்தும் அவருடைய அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் வருகின்றது. பழுப்பு நிறத்தில் இருந்த யவனர்களும், கருமையான நிறத்தில் இருந்த திராவிடர்களும் கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் அங்கே இருந்தது என்று நினைக்கின்றேன். மேலே ஆரியம், கீழே திராவிடம் என்று தான் ஆரியர்களின் வருகையின் பின்னர் பாரததேசம் இருந்தது போல. ஆரியத்தையும், அதன் ஊடகமான பிராமணியத்தையும், தேவபாசை என்று அவர்களே சொல்லிக் கொள்ளும் சமஸ்கிருதத்தையும், ஆட்சி மொழி என்று சொல்லிக் கொள்ளும் ஹிந்தி மொழியையும் ஒரே குடையின் கீழ் நின்று எதிர்த்துப் போராடுவோம் என்று தென்னிந்திய மக்களை ஒற்றுமைப்படுத்த இதே கருதுகோளை பின்னாட்களில் சிலர் கையில் எடுத்தனர். அதில் ஒருவர் பெரியார். ஆனாலும், தமிழர்கள் தவிர மற்ற தென்னிந்தியர்கள் ஏன் இந்த திராவிட ஒற்றுமையை முன்வைப்பதில்லை என்ற கேள்வி சரியானதே. திராவிட மொழிகளின் மூலமொழி தமிழ் என்றும், தமிழில் இருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வந்தன என்றும், தமிழர்கள் ஒரு முன்னோடிகள் என்றும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் விடயங்களை வேறு எந்த தென்னிந்திய மக்களும் ஏற்கத் தயாராகவில்லை. இது அவர்களை காயப்படுத்துகின்றது, அந்நியப்படுத்துகின்றது. சமஸ்கிருதம் தான் ஆதிமொழி என்பது எப்படி எங்களை வட இந்திய மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றதோ, அது போலவே தான் தமிழ் மொழி தான் ஆதிமொழி என்பதும் மற்றைய தென்னிந்திய மக்களை அந்நியப்படுத்துகின்றது. அதனால் தான் அவர்கள் திராவிடம் என்னும் குடையின் கீழ் வருவதில்லை. இதை விட்டு விட்டால், தமிழ்நாட்டில் எல்லா அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், மிகச் சாதாரண அரசியல் செய்பவர்களே. சிலர் திராவிடம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். இன்னும் சிலர் தமிழ் தேசியம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். தங்களினதும், தங்கள் குடும்பங்களின் நலன்களையும் தவிர, இவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு திராவிடம் மீதோ அல்லது தமிழ் மீதோ எந்தப் பற்றும் அறவே கிடையாது. சீமானுக்கும் பற்றில்லை, உதயநிதிக்கும் பற்றில்லை, விஜய்க்கும் பற்றில்லை........................... சீமானின் அரசியல் பரபரப்பு சார்ந்தது. ஈழத்து மருத்துவரின் அரசியலும் அதுவே. ஆனால் இவை பொருளற்றவை. திமுகவிற்கு அவர்களின் கொள்கைத் தலைவரை சீமான் எப்படி இப்படிச் சொல்லலாம் என்பது ஒரு தன்மானப் பிரச்சனை. அதனால் திமுகவினர் சில நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றனர். அதில் ஒன்று தான் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை. ஈழத்தில் எங்களுக்கு தமிழர் என்னும் அடையாளமே எங்களின் நோக்கத்திற்கு, எங்கள் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு, போதுமானதாக இருந்தது. நாங்கள் திராவிடம் என்பதையும், தமிழ் தேசியம் என்பதையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் நலன்களுக்கு ஏற்ப ஆக்கிக் கொண்டதைப் போல ஆக்கவும் இல்லை, அதற்கான தேவைகளும் எங்களுக்கு இருக்கவில்லை. நாங்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாறவும் இல்லை.5 points
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
5 pointsஇந்த கேள்வியே அபத்தமானது. ஹோமோ சேப்பியன்ஸ் இல் இருந்து பல்லாயிரம் ஆண்டுகால மரபணுத்திரிபுகள், பரிணாம வளர்சசி மூலம் பல்வேறு மரபு இனங்கள் உருவாகியுள்ளன. இது டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த டிஎன்ஏ பரிசோதனைகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களின் மரபு இனங்களை துல்லியமாக இனங்காட்டும். ஆனால் அந்த மரபு இனங்களில் இருந்து பிரிந்த தேசிய இனங்களை அடையாளம் காட்டாது. எடுத்துக்காட்டாக உங்களது அல்லது எனது டிஎன்ஏயும் ஒரு தெலுங்கு, கன்னட அல்லது மலையாள இனத்தில் பிறந்த ஒருவரது டிஎன்ஏ எல்லாமே எம்மை ஒரே இனக்கூட்டாகவே அடையாளம் காட்டும். உங்களையோ என்னையோ தமிழ் தேசிய இனத்தை சேர்ந்தவர் என்று பிரித்தோ தெலுங்கு, கன்னட, மலையாளத்தவரை பிரித்தோ அடையாளம் காட்டாது. அதாவது மரபு இனங்களை அடையாளம் காட்டும் டிஎன்ஏ, தேசிய இனங்களை அடையாளம் காட்டாது. வட இந்தியர் ஒருவரது டிஎன்ஏ, அவரை Indo- Aryan என்ற வகை மரபு இனமாக அடையாளம் காட்டுமே தவிர, இவர் குஜராத்தியர், இவர் பஞ்சாபியர் என்று தனித்து அடையாளம் காட்டாது.5 points
-
பாட்டுக் கதைகள்
4 pointsமனதில் சில பாடல்களுடன் சில சம்பவங்கள் இணைந்தே இருக்கும். பாடலைக் கேட்டவுடன், பாடலின் முதல் ஓரிரு வரிகளின் பின், பாடல் பின்னால் ஒலிக்க மனம் அந்தப் பழைய நினைவில் மூழ்கிவிடும். மீண்டு இன்றைய உலகத்திற்கு திரும்பி வருவதே சிலவேளைகளில் பெரும் சிரமம்தான். பழைய நினைவுகளை மீட்பது என்பது தேன் தடவிய விசம் போன்று என்று ஒரு இடத்தில் எழுதப்பட்டிருந்ததை பார்த்திருக்கின்றேன். ஊக்கத்தை கெடுத்து விடும் என்ற பொருளில் சொல்லியிருப்பார்கள் போல. ஆலால கண்டன் போல விசம் முழுவதும் உள்ளிறங்காமல் இடையிலேயே தடுத்து நிறுத்தி விட்டு, நினைவுகளை இடையில் கலைத்து விட்டு, ஊக்கமது கைவிடேல் என்று வாழ வேண்டும் போல...............😜. *********************************************************************************** பாடல் ஒன்று - கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் -------------------------------------------------------------------------- எத்தனை தடவைகள் தான் ஊரின் ஒரு எல்லையிலிருந்து மற்ற எல்லைக்கு நடப்பது. என்னதான் தெருவெங்கும் குழாய் மின்விளக்குகள் பத்து அடிகளுக்கு ஒன்று என்று இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டு, அவை பளிச்சென்று பகல் போல எரிந்து கொண்டிருந்தாலும், சூடான தேநீர் கோப்பி மற்றும் குளிரான இனிப்பு பானங்கள் என்று தாராளமாக, இலவசமாகவே, பல இடங்களில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், கால்கள் போதும் போதும் என்று கெஞ்ச ஆரம்பித்திருந்தது. அக்காவின் கால்களின் நிலைமையும் அதுவே தான். ஆனால் அக்காவிற்கு பாடல்கள் மேல் இருக்கும் ஆசை பூமிக்குள் கொதித்து எரிந்து கொண்டிருக்கும் எரிமலை போன்றது. அன்று அது வெளியே வந்து ஆகாயம் வரை பரவிக் கொண்டிருந்தது. பாடல்களை கேட்பதில் மட்டுமே அவரின் கவனம் குவிந்திருந்தது. அந்த இரவில் ஊரின் பிரதான வீதியில் பத்து இசைக்குழுக்கள் பாடிக் கொண்டிருந்தன. இரண்டு மைல்கள் நீண்ட வீதியில் ஓரளவிற்கு சரியான இடைவெளிகள் விட்டு இசைக்குழுக்களின் மேடைகள் இருந்தன. ஒரு இசைக்குழுவின் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் அக்கா, 'சரி வா, அடுத்ததிற்கு போவோம்.............' என்று சொல்லிக் கொண்டே, என் பதிலை எதிர்பார்க்காமலேயே, எழும்பி நடந்து கொண்டிருந்தார். அவர் பின்னால் நான் ஓடிக் கொண்டிருந்தேன். அக்காவிற்கும் எனக்கும் ஒரு வயது தான் இடைவெளி. ஆனால் அக்கா எங்களிருவருக்கும் இடையில் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது போல நடந்துகொள்வார். அவருக்கு எல்லாமே தெரிந்தும் இருந்தது. எனக்கு எதுவுமே தெரியாது என்று தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். அதனாலோ என்னவோ ஒரு நசிந்த விரலை கவனமாக பொத்திப் பொத்தி பார்ப்பது போல அக்காவும் அம்மாவும் என்னைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மண்டைதீவிலிருக்கும் ஒரு சாத்திரியார் தான் வீட்டில் எல்லோருக்கும் குறிப்புகள், ஜென்ம பலன், எழுதி இருந்தார். என்னைத் தவிர மற்ற எல்லோருடைய குறிப்புகளிலும் அவர்கள் ஆஹா, ஓஹோ என்று வருவார்கள் என்று இருந்தது. என்னுடைய குறிப்பு மட்டும் படு மோசமாக இருந்தது. வீட்டில் எல்லோருக்கும் நல்ல குறிப்புகளும், எனக்கு மட்டுமே மோசமாகவும் இருந்தபடியால் வீட்டில் எல்லோரும் எல்லா குறிப்புகளையும் சரியே என்று நம்பியும் இருந்தனர். மண்டைதீவு சாத்திரியார் எழுதிய குறிப்பின் படி நான் கடைசியாக படிக்கும் வகுப்பு பத்தாம் வகுப்புத்தான். அத்துடன் கல்வி முடிந்து விடும் என்று தெளிவாக எழுதி இருந்தார். நான் அந்தக் குறிப்பை பல தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்திருக்கின்றேன். திருமணம் அந்நிய வழியில் நடக்கும் என்றும் ஜென்ம பலனில் எழுதப்பட்டிருந்தது. அந்நிய வழி என்றால் என்னவென்ற சந்தேகம் எப்போதும் இருந்தது, ஆனால் நான் எவரையும் இது சம்பந்தமாக இன்று வரை விசாரிக்கவில்லை. அக்காவும் நானும் ஊரின் ஒரு எல்லையில் நடந்து கொண்டிருக்கும் இசைக்குழுவின் மேடை போடப்பட்டிருந்த பாடசாலை மைதானத்தின் முன் மீண்டும் வந்து விட்டிருந்தோம். இது நாலாவது தடவை. இதற்கு மேலால் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது, இங்கேயே இருப்போம் என்று நான் அக்காவிடம் கெஞ்சினேன். அக்கா என்னைக் கவனிக்கவில்லை. அவர் மேடையையே பார்த்துக் கொண்டிருந்தார். கிழக்கு மேற்காக நீண்ட மைதானத்தில் மேடை வடக்குப் பக்கமாக அமைக்கப்பட்டிருந்தது. மைதானத்தின் மேற்குப் பக்கத்தில் ஒரு வரிசை வீடுகள், அதன் பின்னர் இராணுவ முகாம். மைதானத்தின் வடக்குப் பக்கமாக, மேடையின் பின்னால், பனைமரங்கள், அதன் பின்னால் கடல். தெற்குப் பக்கத்தில் வீதி, அதன் பின்னர் பாடசாலை. அக்கா மைதானத்திற்குள் கால் வைக்காமல் வீதி ஓரத்திலேயே நின்று கொண்டிருந்தார். திரும்பி நடந்து விடுவாரோ என்று நான் ஏங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தேன். இராணுவ முகாமில் இருந்து பல இராணுவ வீரர்கள் அங்கங்கே வந்து நின்று இசைக்குழு பாடுவதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கைகளில் எதுவும் இல்லை. அவர்கள் எல்லோரும் சாதாரண உடையிலேயே இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வேறு, நாங்கள் வேறு என்றும், எங்களுக்கிடையில் ஏதோ சில அடையாள வித்தியாசங்கள் இருப்பதும் வெளிப்படையாகவே இருந்தன. மேடையின் பின்னால், கொஞ்சம் மேற்குப் பக்கமாக, முன் நின்ற மிக உயர்ந்த சில பனைமரங்களின் முன்னால் மிகப்பெரிய ஒரு போர்டிகோ கட்டப்பட்டிருந்தது. கட் அவுட்டை நாங்கள் போர்டிகோ என்று சொல்வோம். இன்று நடிகர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வைக்கும் கட் அவுட்டுகளை விட என்னுடைய ஊரில் சிறப்பானதும், பெரியதுமான கட் அவுட்டுகளை அன்றே வைப்பார்கள். ஐம்பது அடிகளில் கூட சாதாரணமாக செய்து வைப்பார்கள். எல்லா கட் அவுட்டுகளும் சாமியின் உருவங்களாகவோ அல்லது அழகிய பெண்ணின் உருவங்களாகவோ மட்டுமே இருக்கும். ஆண் உருவங்களில் கட் அவுட் வைப்பதில்லை போல. நான் பார்த்ததில்லை. அந்த மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட் பிரமாண்டமாக இருந்தது. லவனும் குசனும் ஒரு குதிரையை கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போன்ற மிக உயர்ந்த ஒரு கட் அவுட். பனைமரங்களிற்கு மேலால் லவனும் குசனும் நின்றார்கள். அவர்கள் இருவருக்குமிடையில் ஒரு வெள்ளைக் குதிரை. சீதாப்பிராட்டியின் புத்திரர்களின் அதே அளவு கம்பீரத்துடன் அந்தப் புரவியும் அங்கே நின்று கொண்டிருந்தது. அடுத்த பாடல் 'கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான். கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்..................' என்று அந்த இசைக்குழுவின் அறிவிப்பாளர் அறிவித்தது எதிரொலித்துக் கொண்டிருந்தது. 'சரி............. வா, போய் இருப்பம்...........' என்று அக்கா மைதானத்திற்குள் நடந்தார். நான் அக்காவைப் பின்தொடர்ந்தேன்.4 points
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
3 pointsகனதியான, அறிந்திடாத பல விடயங்களை உள்ளடக்கிய நல்லதொரு கட்டுரை. தலைவரின், புலிகளின் அறிக்கைகளில் இருக்கும் தெளிவு, பெண்ணியம் தொடர்பானபுரிதல், மூட நம்பிக்கைகள் மீதான விமர்சனம், மதசார்பின்மையின் அவசியம் என்பனவற்றை மீண்டும் அறியும் போது, எத்தனை தெளிவாக தம் கோட்பாடுகளில் இருந்திருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது. தாயகத்தின் இன்றைய நிலவரமும், போக்கும் புலிகளின் கொள்கைகளில் இருந்து முற்றாக விலகி ஓடுகின்றது.. மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டனர்3 points
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
2 pointsஅவர்களே ‘திராவிட’ புலிகள் தான்! Jan 21, 2025 ப.திருமாவேலன் கொழுப்பெடுத்த கூமுட்டை ஒன்று, தான் பிரபாகரனைச் சந்திப்பதற்கு முன்பு ‘திராவிடம்’ பேசியதாகவும், பிரபாகரன் தான் ‘திராவிட’ மாயையை உடைத்தார் என்றும் உளறித் திரிகிறது. அதைக் கேட்ட போது ‘ஆமைக் கறி’ நாற்றத்தை விடக் கேவலமாக இருந்தது. அவர்களே ‘திராவிட’ புலிகள் என்பது இந்த குணக்கேடனுக்குத் தெரியாது. ‘தமிழர்கள்'( திராவிடர்கள்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1978 ஆம் ஆண்டு கியூபாவில் உலகம் முழுக்க இருக்கும் விடுதலைப் போராட்ட அமைப்புகள் கலந்து கொண்ட மாநாட்டில் புலிகள் பங்கெடுத்தார்கள். 11TH WORLD FESTIVAL YOUTH AND STUDENTS – IN CUBA – 1978 என்று அந்த மாநாட்டுக்குப் பெயர். We “LIBERATION TIGERS OF THAMIL EALAM” என்ற அறிமுகத்துடன் நான்கு பக்க அறிக்கையை அப்போது புலிகள் அங்கு தாக்கல் செய்தார்கள். அந்த அறிக்கையில் WHO ARE THAMILS ( DRAVIDIANS) என்ற தலைப்பில் இரண்டாவது பாரா உள்ளது. அதில், ”The Thamils have ancient culture and speak Thamil language which is one of the oldest languages of India that formed the Dravidian family spoken today in Thamil Nadu of india, Thamil Ealam of Ceylon, Singapore, Malaysia, Fiji Islands, South Africa and in other countries by more than 65 million people. In Ceylon Thamils are 3 million in number” – என்று குறிப்பிட்டுள்ளார்கள். ( அந்த அறிக்கையில் TAMILS என்பதில் ‘H’ இடம்பெற்றுள்ளது) புலிச்சின்னத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்? 1976 ஆம் ஆண்டு புலிச்சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. புலிச்சின்னம் தேர்வு செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ இதழான ‘விடுதலைப்புலிகள்’ இதழில் 1991 பங்குனி மாதம் வெளியாகி உள்ளது. ”புலிச்சின்னத்தை தமிழீழத்தின் தேசியச் சின்னமாக பிரபாகரன் தேர்ந்தெடுத்ததற்கு காரணமுண்டு. புலிச் சின்னம் திராவிடர் நாகரிகத்தில் வேரூன்றி நிற்கும் ஒரு படிமம். தமிழரின் வீர வரலாற்றையும் தேசிய எழுச்சியையும் சித்தரிக்கும் ஒரு குறியீடு” ( பக்கம் 3) என்று அறிவிக்கப்பட்டது. தனது போராட்டத்துக்கு அடித்தளம் தமிழார்வம் தான் என்று விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்தது. “அறிவுசார் மானிடத்தின் பொதுமூதாதை மொழி தொல் திராவிட மொழியாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற கருதுகோள்களின் படி தமிழார்வம் முகிழ்ந்துள்ளது. எமது விடுதலைப் போரும் தமிழார்வத்துக்கு இன்னுமோர் காரணமாகலாம்” ( விடுதலைப்புலிகள், 2007 பங்குனி சித்திரை) என்று அதிகாரப்பூர்வமான அமைப்பின் இதழ் எழுதியது. திராவிடத் தமிழ் இராச்சியங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் அறிஞரான அன்ரன் பாலசிங்கம் அவர்கள், ‘போரும் சமாதானமும்’ என்ற நூலை எழுதி இருக்கிறார். அதில் திராவிட ( தமிழ்) குடியிருப்புகள் என்றே முந்தைய இலங்கையைக் குறிப்பிடுகிறார். ”இலங்கைத் தீவானது தொன்மை வாய்ந்த இரு நாகரிகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பர்யங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்குகிறது. இத்தீவில் வதியும் தமிழ் மக்களது வரலாறானது பண்டைய யுகம் வரை வேரோடிச் செல்கிறது. சிங்கள மக்களின் மூதாதையர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வங்காளத்திலிருந்து தமது இளவரசன் விஜயனுடன் இத்தீவை வந்தடைந்த போது – தொன்மை வாய்ந்த திராவிட ( தமிழ்) குடியிருப்புகள் இங்கிருக்கக் கண்டார்கள். இலங்கைத் தீவில் சிங்களக் குடியேற்றம் நிகழ்வதற்கு முந்திய காலத்தில் நாகர், இயக்கர் என்ற திராவிடத் தமிழ் இராச்சியங்கள் நிலைபெற்றிருந்ததாக சிங்கள வரலாற்றுப் பதிவேடுகளான தீபவம்சமும் மகாவம்சமும் எடுத்தியம்புகின்றன… இத்தீவின் பூர்வீகக் குடிகளாகத் திராவிடத் தமிழர்களே இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு( பக்கம் 14) என்று குறிப்பிடுகிறார் அன்ரன் பாலசிங்கம். பூர்வீகக் குடிகளான திராவிடத் தமிழர்களின் திராவிடத் தமிழ் இராச்சியங்களை சிங்களவர்களிடம் இருந்து மீட்கவே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை எடுத்தார்கள். இவர்களை திராவிடத் தமிழர்கள் என்று தான் பாலசிங்கம் அழைக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பின் முழு வரலாற்றுப் புத்தகத்திலேயே இது இருக்கிறது. சின்னத்தில் ‘கருப்பு’ ஏன்? விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியின் சின்னமாக மஞ்சள், சிவப்பு, கருப்பு ஆகிய நிறங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமது வழிவழித் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட மஞ்சளும், சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கு புரட்சிகரப் போராட்டத்தின் நிறமாக சிவப்பும், மக்களின் மன உறுதியைக் குறிக்க கருப்பும் தேர்வு செய்ததாக தலைமை அறிவித்தது. ( விடுதலைப் புலிகள் 1990 வைகாசி) சோசலிசப் பாதையே தனது அரசியல் பாதையாக பிரபாகரன் அறிவித்தார். ( 1986 இந்து இதழுக்கு அளித்த பேட்டி.) புரட்சிகரமான சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதை தமது விடுதலை இயக்கத்தின் இலட்சியமாகச் சொன்னார். வர்க்கம், சாதி என்ற சுரண்டல் முறைகள் ஒழிக்கப்பட்டு பெண் ஒடுக்குமுறை போன்ற சமூக அநீதிகள் அழிக்கப்பட்டு உழைக்கும் பாட்டாளி மக்களின் சுவர்க்க பூமியாக சோசலிச தமிழீழம் திகழும்( விடுதலைப்புலிகள் 1986 நவம்பர்) என்று சொன்னார். மனுவை எதிர்த்த பிரபாகரன் ”பழமைவாதத்திலும் மூடநம்பிக்கைகளிலும் ஊறிப்போன எமது சமூக அமைப்பில் நீண்ட நெடுங்காலமாக பெண்ணினம் ஒடுக்கப்பட்டு வருகிறது. எமது, வேதாந்தங்களையும் மத சித்தாந்தங்களையும் மனுநீதி சாஸ்திரங்களையும் அந்தக் காலங்கொண்டே பெண் அடிமைத்தனத்தை நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. ஆணாதிக்கம், சாதியம், சீதனம் என்று பல்வேறு பரிமாணங்களில் இந்த ஒடுக்கு முறையானது பெண்ணினத்தின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது. அவர்களது வாழ்க்கையைச் சிதைத்து வருகிறது” என்று உலக மகளிர் தினச் செய்தியாக பிரபாகரன் வெளியிட்டார்.( விடுதலைப்புலிகள் 1991 பங்குனி) ”பெண்ணடிமை வாதம் என்பது மூடநம்பிக்கைகளின் பிறப்பிடம். கருத்துலகம். பழமைவாதக் கருத்துகள் பெண்மையின் தன்மை பற்றிய பொய்மையை புனைந்து விட்டுள்ளது. தலைவிதி என்றும், கர்மவினை என்றும் தனக்காக விதிக்கப்பட்ட மனுநீதி என்றும் பழைமை என்றும் பண்பாட்டுக் கோலமென்று காலங்காலமாக மறைமுக இருளுக்குள் முடங்கிக் கிடந்த பெண்ணினம் விழித்தெழ வேண்டும்” ( விடுதலைப்புலிகள் 1992 பங்குனி) என்றும் பிரபாகரன் எழுதி இருக்கிறார். பிரபாகரன் தனது இறுதி மாவீரர் உரையில், ” சுதந்திரமும் சமத்துவமும் கூடிக் குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டு கொண்டான். சாதி,சமய, பேதங்கள் ஒழிந்த – அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற – சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய ஓர் உன்னத வாழ்வை கற்பிதம் செய்தான்” ( விடுதலைப்புலிகள் ஐப்பசி,கார்த்திகை) என்றே தனது கனவுகளை அறிவித்தார். மதச்சார்புக் கொள்கை ”தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மதச்சார்பற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும். விடுதலைப் புலிகள் இயக்கம் மதச்சார்பற்றது. தமிழ் இன ஒருமைப்பாட்டையும் தேசிய சுதந்திரத்தையும் லட்சியமாக வரித்துக் கொண்ட ஒரு விடுதலை இயக்கம் மதச்சார்புடைய கொள்கையைக் கடைப்பிடிப்பது தவறானதாகும். இந்தக் குறுகிய மதவாதப் போக்கு தமிழ் இனஒற்றுமைக்கும் தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பெரும் முட்டுக்கட்டையாக அமையும். வழிபடுவதும் வழிபடாமல் விடுவதும் அவரவர்க்கே உரித்தான தனிமனித சுதந்திரமாகும். வழிபாட்டு உரிமையானது, மனிதனின் சிந்தனைச் சுதந்திரம் சார்ந்தது. இதை எமது இயக்கம் தடுக்காது” ( விடுதலைப்புலிகள் 1992 ஆடி,ஆவணி) என்று தமது இயக்கத்தின் கொள்கைத் திட்டமாக அறிவித்திருந்தார் பிரபாகரன். பிரபாகரன் கண்டித்த பார்ப்பனீயம் 1983 திம்பு பேச்சுவார்த்தையின் போது இந்திய அரசு சொல்வதை பிரபாகரன் ஏற்க வேண்டும் என்று ரா உளவுப் பிரிவு அதிகாரியான சுந்தரம் கடுமையாக நிர்பந்தம் செய்தார். அதனை பிரபாகரன் கடுமையாக எதிர்த்தார். இந்த சுந்தரம், ஒரு பார்ப்பனர். இது தொடர்பாக கொளத்தூர் மணியிடம் பேசிய பிரபாகரன், ”திராவிட இயக்கத்தின் பிராமண எதிர்ப்பை நமது முகாம்களில் சில புலிகள் கிண்டல் செய்வது உண்டு. திராவிட இயக்கத்தினர் பிராமணர்களை ஏன் இப்படி தீவிரமாக எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எனக்கு இருந்தது. இந்த சுந்தரம் போன்றவர்களைப் பார்க்கும் போதுதான் எனக்குப் புரிகிறது. திராவிட இயக்கத்தவர்களின் பிராமண எதிர்ப்பில் நியாயம் புரிகிறது” ( பக்கம் 578, வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்ட வரலாறு, செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை) என்று சொல்லி இருக்கிறார். ‘ஆரிய’ ஜெயவர்த்தனாவும் ‘திராவிட’ பிரபாகரனும் ஈழத்தமிழர்களை 1980 களின் தொடக்கத்தில் படுகொலை செய்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தன்னை ஆரியராகவே சொல்லிக் கொண்டார். தமிழர்களை திராவிடர்களாக அடையாளப்படுத்தினார். 1983 ஆம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த அமிர்தபஜார் இதழில் நிருபர் அதிபர் ஜெயவர்த்தனாவை பேட்டி காணச் சென்றார். அவரிடம் ஜெயவர்த்தனா சொன்னார். ”நீங்கள் சிங்களவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த பூமியில் இருந்து வந்திருக்கிறீர்கள். எனவே சிங்களவர்களுக்குள்ள ஆரிய இனத் தொடர்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இங்கே உள்ள சிறுபான்மையினர் (தமிழர்கள்) திராவிட இனத் தொடர்பு உள்ளவர்கள். சிங்களவர்களின் ஆரிய இனத்தைச் சார்ந்த வங்காளியான உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்” என்றார் ஜெயவர்த்தனா. இதை குறிப்பிட்டு ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் அன்றைய இந்தியத் தூதர் எஸ்.பார்த்தசாரதி, ”சிங்கள வரலாற்றாசிரியர்கள் தமிழர் சிங்களவர் போராட்டத்தை ஆரிய – திராவிட போராட்டமாகவே கூறுகிறார்கள்” என்று எழுதினார். ( 31.8.1983 இந்து) இதற்கு பதிலளித்து ‘விடுதலை’ எழுதி தலையங்கம், ‘இது ஒரு ஆரிய திராவிடப் போர்’ என்று தலைப்பிட்டது.( விடுதலை 14.9.1983) இதே கருத்தை மையமாக வைத்து புலிகளின் அதிகாரப்பூர்வமான ‘புலிகளின் குரல்’ வானொலியில் ‘இலங்கை மண்’ என்ற தொடரை கலை இலக்கியவாதியும் பகுத்தறிவாளருமான பொன்.கணேசமூர்த்தி தயாரித்து ஒலிபரப்பினார். இதற்கு எதிர்ப்பு வந்தபோது, இந்த நாடகத்தை இரண்டாவது முறையும் ஒலிபரப்பச் சொன்னார் பிரபாகரன். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பிரபாகரன் எழுதுகிறார்: “மனிதகுல வரலாற்றில் மனிதர் அனைவரும் ஒன்று சேர்த்து, ஒத்திசைவாக ஒரு போதும் இருந்ததில்லை. மனிதன் குடும்பமாக, குழுவாக, இனக் குழுவாக வாழ்ந்த நாளிலிருந்து அவனுக்குள் முரண்பாடுகள் தலைதூக்கின. அவை முற்றி, மோதல்களாக வெடித்தன. அனைத்தையும் ஆள வேண்டும் என்ற ஆசை அவனிடம் பிறந்தது. மனிதனே மனிதனுக்கு விரோதியாக மாறும் விந்தை நிகழ்ந்தது. தான் சாராத பிறரை எதிரியாகக் கண்டான். அவர்களைத் தீண்டத்தகாதோராக விலக்கிவைக்க முயற்சித்தான். மனிதகுல விரோதியாக, கொடியோராக, கொடுமைக்காரராக, மனிதரே அல்லாத ‘அரக்கராக’ முத்திரை குத்திப் பொய்யான கதைகள் கட்டினான். காலம் காலமாகக் கட்டியெழுப்பப்பட்ட அவர்களது வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கோலங்களையும் ஈவிரக்கமின்றிச் சாடினான். அவர்களை அடியோடு அழிப்பதே தர்மம் என்று போதனை வேறு செய்தான். கடவுட் கோட்பாட்டைத் துணைக்கு அழைத்துத் தன்னைத் தெய்வ அவதாரமாகக் காட்டிக் கொண்டான். பொய்யான விளக்கங்களை வியாக்கியானங்களைக் கொடுத்தான். தான் வாழ்ந்தாற் போதும் என்ற சுயநலத்துடன் தனது எதிரிகள் மீது ஈவிரக்கமின்றிப் போர் தொடுத்தான். இப்படியாக ஒருவரது அழிவில், இன்னொருவரது வெற்றியிற் புதிய வரலாறு எழுதப்பட்டது. உண்மை வரலாற்றைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, பொய்களையும், புழுகுகளையும் புகுத்திப் புதிய வரலாறு, வெற்றி பெற்ற மனிதனுக்குச் சார்பாக எழுதப்பட்டது. சூதுகளையும், சூழ்ச்சிகளையும் செய்து, கோழைத்தனமாக, வஞ்சகமாக எதிரியைக் கொன்ற அசிங்கம் அதில் சொல்லப்படவில்லை. உண்மை வரலாறு இறந்தவர்களின் புதைகுழிகளின் இருளுக்குள் அப்படியே அடங்கிப் போனது. இதே கதிதான் இலங்கை மண்ணை ஆதியில் ஆண்ட தமிழ் மன்னனான இராவணனுக்கும் நிகழ்ந்தது. அன்றைய போர் விதிமுறைகளுக்கு மாறாக, மிகவும் கபடமான வழியில் தமிழ் மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு, உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரியில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது” என்றார் பிரபாகரன். இவை எதுவும் இன்றைய கூமுட்டைகளுக்குத் தெரியாது. திராவிடம் வளர்த்ததே ஈழம் தான்! தந்தை பெரியார் அரசியலுக்கு வருவதற்கு முன்னால், அவருக்கு இருபது வயது இருக்கும் போதே ஈழத்தில் ‘திராவிடக் குரல்’ எழுந்துவிட்டது. 1899 ஆம் ஆண்டு சபாபதி நாவலர் தனது மொழியியல் நூலுக்கு ‘ திராவிடப் பிரகாசிகை’ என்று பெயர் சூட்டினார். 1903 ஆம் ஆண்டு இலங்கைச் சரித்திர சூசனம் என்ற நூலை ஆ.முத்துத்தம்பி பிள்ளை எழுதினார். இலங்கையை திராவிட நாட்டார் (அதாவது தமிழ்நாட்டவர்) சிங்களத் தீவு என்று அழைத்ததாகத் தான் அந்தப் புத்தகத்தை தொடங்குகிறார். திராவிட மொழித் தொடர்புகள் குறித்து வி.கனகசபை ( 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்) விரிவாக எழுதி இருக்கிறார். இலங்கையின் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை இருக்கும் கல்வெட்டில் பெருமகன், வேலு,மருமகன், ஆசிரியன், வணிகன், திராவிடன் ஆகிய சொற்கள் இருப்பதாக இலங்கை நான்காவது உலகத் தமிழ்மாநாட்டு மலர் (1970) கூறுகிறது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி வளர்ச்சிக் கழகத்தின் நான்காம் தமிழ் விழாவில் (1951) பேசிய தனிநாயகம் அடிகள், ‘இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம், இந்தியக் கலைகள், இந்திய மொழிகள் என்று மொழிவதெல்லாம் திராவிடப் பண்பு, திராவிடநாகரிகம், திராவிட கலைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டதே’ என்று பேசினார். (உலகத்தமிழாய்வில் தனிநாயகம்) இந்த நோக்கத்துக்காகத் தான் அனைத்துலக தமிழாராய்ச்சி நிறுவனத்தை அவர் தொடக்கினார். இதுவே உலகத் தமிழ் மாநாடு நடத்தத் தொடங்கியது. 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் உலகத் தமிழ்மாநாட்டில் பச்சைப் படுகொலைகளை அரங்கேற்றியது சிங்களம். அதைப் பார்த்து கொந்தளித்தே புலிகள் உள்ளிட்ட போராளிகள் ஆயுதம் தூக்கத் தொடங்கினார்கள். குருமூர்த்தியால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் இதனை அறிய மாட்டார்கள். நன்றி: முரசொலி கட்டுரையாளர் குறிப்பு: ப.திருமாவேலன் மூத்த பத்திரிகையாளர், கலைஞர் தொலைக்காட்சி’யின் ஆசிரியர். ‘ https://minnambalam.com/featured-article/dravidian-tigers-velupillai-prabakaran-and-dravidam/2 points
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
2 pointsஆதாரம் கேட்டல் அவர்களிடம் இருக்கிறது இவர்களிடம் இறக்கிறது என்று சொல்வது தான் இங்கே பிரச்சனையே. சரி அவர்களிடம் ரகசியமாக இருந்தது உங்களிற்கு எப்படி தெரியவந்தது?2 points
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
2 pointsசீமானுக்கு ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுவதல்ல நான் கருதி எழுதிய பிரச்சினை.. புலிகளுக்கு திராவிட பெயின்ட் அடிப்பதுதான் இங்கு எனக்கு பிரச்சினை.. நீங்கள் தலைக்குள் இருந்து சீமானை எடுத்துவிட்டு இந்த கட்டுரையில் புலிகளுடன் திராவிட சித்தாந்தத்தை இணைத்து எழுதப்பட்டதை மட்டும் பாருங்கள்.. மீண்டும் சொல்கிறேன் இந்த கட்டுரையாளர் சொலவதுபோல் திராவிடப்புலிகள் அல்ல அவர்கள்.. அவர்கள் முற்போக்கு சிந்தனைகளுடன் தமக்கு என்று ஒரு பாதையை வைத்து போராடியவர்கள்..2 points
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
2 pointsஇங்கே புலிகளை பற்றிய திரிப்பைக்காட்டுவது சீமான் இல்லையே! ஒரு DMK ஊதுகுழல்தானே!!2 points
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
2 pointsதமிழ் பார்ப்பனியத்தை எதிர்க்க பெரியார் கையிலெடுத்த ஆயுதமே திராவிடம் என்பது. புலிகளோ, இலங்கை தமிழர்களோ திரவிடத்தை பற்றி கதைத்ததே கிடையாது!2 points
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
2 pointsதிராவிடத்தை எதிர்த்து மட்டுமல்ல திராவிடத்தை ஆதரித்தும் அவர்கள் எதுவும் சொல்லவில்லை.. சிவனே என்று அவர்கள் பாட்டுக்கு போராடிக்கொண்டிருந்தார்கள்.. அவர்கள் எப்பொழுதும் தமிழ்நாட்டு விடயங்களில் நியூட்றல் கொள்கைதான்..2 points
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
ஏனையா வாகனத்தில் பிழை சொல்கிறீர்கள்? வாகனங்களை சாரதிகளே ஓட்டுகிறார்கள். வாகனங்கள் தானியங்கிகள் அல்ல. கடந்த 15 வருடங்களாக இந்த விபத்து நடைபெற்ற வீதியைப் பாவித்து வந்திருக்கிறேன்… கிழமைக்கு குறைந்தது இரண்டு விபத்துக்களையாவது ஒரு 25 KM இடைவெளிக்குள் காணலாம். விபத்துகளுக்கு பிரதான காரணம் சாரதிகளின் poor judgment தான். இந்த வீதி Taunton 70-90KM வேக அலகைக் கொண்டவை. இந்த வீதியைச் சந்திக்கும் மற்றைய வீதிகள் அனைத்தும் 60Km கொண்டவை. 60Km ல் இருந்து பிரதான வீதி Taunton Road க்கு வந்து சேரும்போது அந்த வீதி பல இடங்களில் 70, 80, 90 Km ஆக மாறுகிறது. ஆனால் வாகனங்கள் அதற்கும் அதிக வேகத்தில் செலுத்துகிறார்கள். Taunton road ல் வந்து சேரும்போது வாகன சாரதிகள் Taunton Road ல் வரும் வாகனங்களின் வேகத்தை சரியாகக் கணிப்பிடத் தவறுகிறார்கள். அங்கேதான் தவறு ஆரம்பமாகிறது. இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும் 🙏2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
2 pointsஅப்போ ஒரு மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ திராவிடத்தை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதபோது தமிழ் காட்சிகள் மாத்திரம் ஏன் திராவிடத்தை காவித்திருக்கிறார்கள்?2 points- அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
2 pointsமதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான உத்தியோகபூர்வமான தளத்தில் இருந்து.. https://antonbalasingham.com/archives/2052 points- அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
2 pointsதிராவிட என்பது மரபு இனம். தமிழர் என்பது தேசிய இனம். ஐரோப்பாவில் பல தேசிய இனங்களை கொண்ட லத்தீன் மொழிக்குடும்ப மக்கள் ஜேர்மானிய மொழிக்ககுடும்ப மக்கள், ஸலாவிய மொழிக்குடும்ப மக்கள் உள்ளது போல் தான் இதுவும். இவ்வாறான மரபு இனங்களும அதற்குள் பல தேசிய இனங்களும் உலகம் முழுவதும் உள்ளன. நீங்கள் பரீட்சித்து பார்கக விரும்பினால் உங்கள் டிஎன்ஏ மாதிரியை அனுப்பி பரீட்சிக்கலாம். உங்கள் மரபு இன பிரதேசங்களாக இலங்கையில் தொடங்கி கிட்டதட்ட தென்னிந்தியா முழுவதும் என்று வரைபடத்தில் அடையாளமிடப்பட்டு காட்டப்பட்டிருப்பதை தரவுகள் தெரிவிக்கும்.2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025 வணக்கம், சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 19 பெப் 2025 அன்று குழு நிலைகளில் ஆரம்பித்து 09 மார்ச் 2025 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. குழு நிலைப் போட்டிகள்: குழு நிலைப் போட்டிகளில் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்குத் தெரிவான 8 அணிகளும் குழு A, குழு B என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 4 அணிகள் விளையாடுகின்றன. அவை தரநிலைப்படி கீழே தரப்பட்டுள்ளன: குழு A: இந்தியா (IND) பாகிஸ்தான் (PAK) நியூஸிலாந்து (NZ) பங்களாதேஷ் (BAN) குழு B: அவுஸ்திரேலியா (AUS) தென்னாபிரிக்கா (SA) இங்கிலாந்து (ENG) ஆப்கானிஸ்தான் (AFG) குழு நிலையில் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 19 பெப் முதல் 02 மார்ச் வரை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தரநிலைகளில் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் வரும் இரு அணிகளும் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறவுள்ளன. நொக்கவுட் போட்டிகள் அரையிறுதிப் போட்டிகள்: அரையிறுதித் போட்டிகளில் குழு A இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், குழு B இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும். அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) முதலாவது அரையிறுதிப் போட்டி 04 மார்ச் அன்று துபாயிலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி 05 மார்ச் அன்று லாஹூரிலும் நடைபெறவுள்ளன. முக்கிய குறிப்புக்கள்: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் ** பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் எனவே அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்பவர்கள் சரியான முறையில் தெரிவைக் கொடுக்கவேண்டும்! இறுதிப் போட்டி: அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் 09 மார்ச் அன்று லாஹூரில் மோதவுள்ளன. குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் மோதும் அணிகளின் வீரர்களின் விபரங்கள் குழு A: இந்தியா (IND) BATTERS: Rohit Sharma (c), Shubman Gill (vc), Shreyas Iyer, Yashasvi Jaiswal, Virat Kohli, Rishabh Pant, KL Rahul† ALLROUNDERS: Hardik Pandya, Washington Sundar, Ravindra Jadeja, Axar Patel BOWLERS: Arshdeep Singh, Jasprit Bumrah, Mohammed Shami, Kuldeep Yadav பாகிஸ்தான் (PAK) BATTERS: ALLROUNDERS: BOWLERS: நியூஸிலாந்து (NZ) BATTERS: Tom Latham†, Kane Williamson, Will Young, Devon Conway ALLROUNDERS: Mitchell Santner(c), Michael Bracewell, Mark Chapman, Daryl Mitchell, Nathan Smith, Glenn Phillips, Rachin Ravindra, BOWLERS: Lockie Ferguson, Matt Henry, Ben Sears, Will O’Rourke பங்களாதேஷ் (BAN) BATTERS: Najmul Hossain Shanto (c), Jaker Ali, Tanzid Hasan, Towhid Hridoy, Parvez Hossain Emon†, Mushfiqur Rahim † ALLROUNDERS: Mehidy Hasan Miraz, Mahmudullah, Soumya Sarkar, Nasum Ahmed, Rishad Hossain, Tanzim Hasan Sakib BOWLERS: Taskin Ahmed, Mustafizur Rahman, Nahid Rana குழு B: அவுஸ்திரேலியா (AUS) BATTERS: Travis Head, Josh Inglis, Alex Carey †, Marnus Labuschagne, Matthew Short, Steven Smith ALLROUNDERS: Mitchell Marsh, Glenn Maxwell, Marcus Stoinis, Aaron Hardie BOWLERS: Pat Cummins (c), Nathan Ellis, Josh Hazlewood, Mitchell Starc, Adam Zampa தென்னாபிரிக்கா (SA) BATTERS: Temba Bavuma (c), Heinrich Klaasen, David Miller, Ryan Rickelton, Tristan Stubbs, Tony de Zorzi, Rassie van der Dussen ALLROUNDERS: Aiden Markram, Marco Jansen, Wiaan Mulder BOWLERS: Keshav Maharaj, Anrich Nortje, Kagiso Rabada, Tabraiz Shamsi, Lungi Ngidi இங்கிலாந்து (ENG) BATTERS: Jos Buttler (c), Harry Brook, Ben Duckett, Phil Salt, Joe Root, Jamie Smith † ALLROUNDERS: Liam Livingstone, Jacob Bethell, Brydon Carse, Jamie Overton BOWLERS: Jofra Archer, Adil Rashid, Mark Wood, Gus Atkinson, Saqib Mahmood ஆப்கானிஸ்தான் (AFG) BATTERS: Hashmatullah Shahidi(c), Rahmanullah Gurbaz, Ibrahim Zadran, Ikram Alikhil †, Sediqullah Atal ALLROUNDERS: Rahmat Shah (vc), Rashid Khan, Azmatullah Omarzai, Gulbadin Naib, Mohammad Nabi BOWLERS: Fareed Ahmad, Fazalhaq Farooqi, Noor Ahmad, Fareed Ahmad, AM Ghazanfar * பாகிஸ்தான் அணி வீரர்களின் விபரங்கள் வெளியானதும் பகிரப்படும் கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.1 point- அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 point- அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 pointம்ம்..நீங்கள் சீமான் ஆதரவாளர் இல்லாமல் இரு தரப்பையும் சாடும் ஒருவரென்றால் இந்த "பறக்கும் வசவு" 😂வந்திருக்காது என ஊகிக்கிறேன். உங்கள் கேள்வி (பதில் எதிர்பார்க்காத rhetoric கேள்வி) யின் அர்த்தமே "இந்தக் கட்டுரையில் இருப்பது நம்ப இயலாத விடயம்" என்று சுட்டிக் காட்டும் நோக்கமுடையதாகத் தான் எனக்கு விளங்கியது. என் படிப்பு என் மூளையை மழுங்கடித்து விட்டதால் இருக்கலாம், இனிப் "படிக்காமல்" இருக்க முயற்சிக்கிறேன்!😂1 point- அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 pointநான் நாறிய என்று எழுதியது "சீமானிசம்".. "சாமானிசம்" எல்லாத்தையும் தான். சக கருத்தாளர்களை ஒரு "பக்கட்டுக்குள்" Bucket போட்டு வாதாட வராதீர்கள். படித்த உங்களுக்கு அழகல்ல. I don't give a flying F about Seeman or Periyaar. Thank You!!1 point- அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 point"பிரபாகரன் தான் ‘திராவிட’ மாயையை உடைத்தார்.." 👆 எல்லா சீமான் ஆதரவாளர்கள் போலவே நீங்களும் கட்டுரையின் முதல் இரு வரிகளை வாசிக்காமல் வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஈழப் போராட்டத்தில் திராவிடப் பாரம்பரியத்தில் வந்த (அதே போல கம்யூனிசம், மாவோயிசம், ரிரோயிசம் வழி வந்த) நல்ல அம்சங்கள் ஒரு package ஆக உள்ளீர்க்கப் பட்டிருந்தன. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் "திராவிடத்தை நிராகரிப்போம்" என்று திரைமறைவில் கூட சொல்லப் பட்டதாக பதிவுகள் இல்லை! இதற்கான பதிலைத் தேட நீங்கள் கட்டுரையில் இருக்கும் மேற்கோள்களை வாசித்தால் போதும், எந்த சாக்கடையிலும் முங்கி முத்தெடுக்கத் தேவையில்லை. ஆனால், இப்படிச் செய்ய சீமான் விசிறிகளுக்கு முடியாதென்பதும் புரிகிறது. ஆதாரம் இல்லாமல் சொல்வது "சத்தியம்", மீறி ஆதாரம் யாரும் காட்டினால் அது "கக்கா" என்று கடந்து போவதே தீவிர சீமானிசம்😎!1 point- பாட்டுக் கதைகள்
1 pointஅண்ணா, நீங்கள் பலர் இங்கு களத்தில் பழம் தின்று மரம் நட்ட அளவு அனுபவம் உள்ளவர்கள். நாங்கள் ஓரிருவர் புதியவர்கள். எங்களுக்கு இது ஒரு குழந்தைப் பிள்ளையை முட்டாசிக்கடைக்குள் எதை வேண்டும் என்றாலும் எடு என்று விட்டது போலத்தான் இருக்கின்றது......................🤣.1 point- பாட்டுக் கதைகள்
1 pointஅல்வாயன் சாத்திரியாரா........... அப்ப பகுதிநேரமாகத்தான் அரசியல் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார்.............🤣. என்ன சாத்திரங்களோ, அண்ணா.............. ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் எடுத்து கொடுத்துக் கொண்டிருக்கின்ற படங்களைப் பார்த்தால், இந்தப் பிரபஞ்சத்தில் நாங்கள் எல்லாம் ஒரு சொல் கூட கதைக்க கூடாது என்று தான் தெரிகின்றது............ ஒரு தூசுக்கு கூட நாங்கள் சமானம் இல்லை போல..................1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
எரியுது, எரியுது....................... வேற என்ன சொல்வது, அண்ணா. இப்பொழுது இங்கு நடுக்குளிர் காலம், ஆனால் இன்றைய வெப்பநிலை 27 C அல்லது 81 F ................🫣. இந்த இடத்திலிருந்து 10 மைல்கள் தெற்குப் பக்கமாக சில நண்பர்கள் இருக்கின்றார்கள். தங்களின் பகுதிக்கு இன்னும் ஆபத்தில்லை என்று நேற்றிரவு சொன்னார்கள்................1 point- பாட்டுக் கதைகள்
1 pointமுன்னர் காதலிக்க பாட்டு காதல் தோல்விக்கு பாட்டு காதல்வெற்றிக்கு பாட்டு நையாண்டிக்கு பாட்டு. சாத்திரியார் எழுதியது சரியாகவே எழுதியிருப்பார். ஆனால் உங்களுக்கு பின்னால் பிறந்தவர் உங்களுக்கு குழந்தை(கள்) குடும்பத்தில் யாரும் தவறியிருந்தால் உங்களின் பலன் மாறும். இதை நான் சொல்லவில்லை. @alvayan உங்க ஊர்க்கார சாத்திரியார் தான் சொன்னார்.1 point- அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 pointஅரசியல் என்பது சந்தர்ப்பத்துக்கு ஏற்றது. எம்ஜிஆர் தனது அரசியலுக்கு விடுதலைப் புலிகளை ஆதரித்தார். அதை கச்சிதமாக தலைவர் பயன்படுத்திக் கொண்டார். போராட்டத்தைப் பற்றி எம்ஜிஆர் கேட்டபோது, “நீங்கள் திரையில் செய்த புரட்சியை பிரபாகரன் நிஜத்தில் செய்கிறார்” என்று அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ஒரு பெரிய ஜஸ் கட்டியையே எம்ஜிஆர் தலையில் வைத்து தங்களுக்குத் தேவையானதைப் பெற்றுக் கொண்டார்கள்.1 point- அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும்! -ட்ரம்ப் அறிவிப்பு!
என்ன Paanch இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? இந்த வருட ஆரம்பத்தில் இருந்து யேர்மனிய அரச தொலைக்காட்சியில், (meine Damen und Herren) ஆண்கள் பெண்கள் என்று விழிக்காமல் பொதுவாக (Guten Tag) நல்லநாள் என்று எல்லாப் பாலினத்துக்கும் வாழ்த்துச் சொல்லியே செய்திகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.1 point- பாட்டுக் கதைகள்
1 pointஅப்போ உங்கள் வாழ்க்கை ஆஹா ஓஹோ என்று இருக்கிறது என்று சொல்கிறீர்கள். ‘பாம்பின் உழுத்தமா கொட்டாவி’ என்று சொல்வதை நானும் அனுபவித்திருக்கிறேன்.1 point- இந்திய பங்குச் சந்தையில் ரூ.7 லட்சம் கோடி சரிவு - டிரம்ப் காரணமா? முதலீடு செய்யலாமா, கூடாதா?
1 pointஒரு ஐம்பதாயிரம் போட்டு அது இருபதாயிரமா இருந்தது வரை ஞாபகம்! இப்ப வருசத்தில ஒருக்கா 200/300ரூபா செக் அனுப்புவாங்கள், வங்கில போட்டிட்டு முகட்டைப் பார்த்துக் கொண்டிருப்பன். பிசி ஹவுஸ்(அப்பவே அது விழுந்துகொண்டிருந்த கணனி உதிரிப்பாக விற்பனை செய்யும் கம்பனி) என்ற தற்போது மூடப்பட்ட கம்பனி பங்குகளை புரோக்கர் தம்பி எங்களைக் கேக்காமலே வாங்கி 50ஆயிரத்தை 20 ஆயிரமாக்கின பெருமை அவரையே சாரும்!! இப்ப பங்கு வர்த்தகம் ஏற்றத்தில போறதாக செய்திகள் சொல்லுது அண்ணை. இலங்கையில் பங்குவர்த்தக முதலீட்டாளர்களுக்கு வருமானவரி இல்லையாம்! கீழுள்ள காணொளிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். உச்சம் தொடும் இலங்கையின் பங்கு சந்தை | Share Market Sri Lanka | Rj Chandru Report உச்சம் தொட்ட பங்கு சந்தை.. வெளிநாட்டு பணத்திற்கு வரி? | Share Market | Rj Chandru Report1 point- யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி முற்றவெளியில் நாளை ஆரம்பம்!
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி முற்றவெளியில் நாளை முதல் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளது. பிளாஸ்ரிக் அற்ற வலயத்தை உறுதிப்படுத்தும் விதமாக இம்முறை கண்காட்சி முன்னெடுக்கப்படவுள்ளது. பொருளாதார முன்னேற்றத்துக்கான வடக்கின் நுழைவாயில் என்ற தொனிப்பொருளுடன் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 15ஆவது ஆண்டாக இந்த வருடமும் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 45 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம் வரையிலான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 350க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயம், தொழில்நுட்பம், விருந்தோம்பல், கல்வி, உணவு, நவநாகரிகம் மற்றும் இதர தொழிற்துறைகள் என பல்வேறுபட்ட வர்த்தக நிறுவனங்களின் பொருள்கள் மற்றும் சேவைகள் இம்முறை காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. இம்முறை கூடுதலான நிலப்பரப்பில் கூடுதலான காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களை மகிழ்வூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் முதல் பல்வேறுபட்ட புதிய ஏற்பாடுகள் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. (ப) சர்வதேச வர்த்தகக் கண்காட்சி முற்றவெளியில் நாளை ஆரம்பம்!1 point- 2025 தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள்.
2025 தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள்- பாகம் இரண்டு.(காணொளி) Posted on January 23, 2025 by சமர்வீரன் 25 0 தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 100 மேற்பட்ட தமிழாலயங்கள் தமிழ்மொழியோடுஇ தமிழினத்தின் பண்பாட்டுப் பனுவல்களை எமது அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்கு ஊட்டி வருகின்றன. ஆண்டின் தொடக்கமான தை மாதத்திலே உலகை தன் சக்தியால் உய்வித்துவரும் கதிரோனின் வளம்போற்றி நன்றி செலுத்தும் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலைத் தாயகம். தமிழகம். சிங்கப்பூர். மலேசியா உட்படத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளெங்கும் கொண்டாடிவருகின்றனர். Video Player 00:15 03:00 https://www.kuriyeedu.com/?p=6505121 point- அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 pointதமிழ்தேசியம் திராவிடத்துக்கு எதிரானது என்று ஈழத்தமிழர்கள் உருட்டவில்லையே.. இப்பவும் ஈழத்தமிழர்களுக்கு அதே நிலைப்பாடுதான்.. திராவிடக்கொள்கைகஉடன் ஈழத்தமிழர்களுக்கு என்ன வாய்க்கால் தகராறா..? எல்லாக்கொள்கைகளிலும் இருக்கிற நல்லவற்றை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.. தமிழ்நாட்டில் அவர்கள் நிலப்பரப்பு சமூகபிரச்சினைகள் சார்ந்து இரண்டு வேறு கொள்கைகள் உள்ள கட்சிகளுக்கு இடையில் பிரச்சினை..1 point- அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 pointநன்றி கோசான். முற்றாக வாசித்தேன். முன்னர் அறிந்திராத பல விடையங்களை அறிந்து கொண்டேன்.1 point- அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
இந்தியாவில் உள்ள கடவுளுக்கு அவர் காணும் குமரிகள் எல்லாம் பெண்டாட்டிகள். இலங்கையில் உள்ள கடவுளுக்கு பாவம் இரண்டே இரண்டுதான்.😩1 point- பாட்டுக் கதைகள்
1 pointஎனது வீட்டின் பின்புறம் பெரிய வளவு ஒன்றுளது. அடர்ந்த காடு போல இருக்கும். அதற்குள் ஒரு பாம்பு குடும்பம் வாடகை இன்றியே பலகாலம் வசித்து வந்தது. அடிக்கடி நாய்க்கும் பாம்புக்கு WWE நடக்கும். சிலவேளை ஒரு பச்சை மணம் அடிக்கும் அதை பாம்பு கொட்டாவி மணம் என்பார்கள். சில சமயம் இந்த resident snakes ஐ விட இன்னும் சிலது வீட்டுக்குள் கூட வந்து விடும். அதை அப்பா தடியால் அடித்து மண்ணெண்ணை ஊத்தி கொழுத்துவார். அவருடன் கூடவே 6 பாட்டரி டோர்ச், மண்ணெணை போத்தல், பார்தடி சகிதம் நிற்கும் துணைப்படை நான். அப்போதும் ஒரு மணம் வரும். In-house subject specialist @Justin அண்ணாதான் இது கொட்டாவியா அல்லது கெட்ட ஆவியா என விளக்க வேண்டும்.1 point- பாட்டுக் கதைகள்
1 pointசில மணங்கள் அப்படியே தான், கோஷான். உதாரணமாக, உழுத்தம் மாவின் மணம் போன்ற ஒன்று பாம்புகள் பற்றிய நினைவுகளையும், என்னவென்று ஒரு காரணம் இல்லாமலேயே, சுப்பிரமணியம் சோடா தொழிற்சாலைக்கு பின்னால் இருந்த சில இடங்களையும் நினைவிற்கு இழுத்துக் கொண்டு வரும். பாம்பின் கொட்டாவி உளுத்தம் மாவின் மணத்தை ஒத்தது என்று சிறுவயதில் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். பாம்பு கொட்டாவி விடுமா என்று கூட எனக்கு உண்மையில் தெரியாது.....................🤣. 🤣................... அமெரிக்கா போகின்றேன் என்று வீட்டில் சொன்னவுடன், ஏன் போகின்றாய், எப்பொழுது போகின்றாய் என்று கூட வீட்டில் கேட்கவில்லை. 'சரி போ...............ஆனால், ஒரு கல்யாணத்தை கட்டிக் கொண்டு போ........' என்று மட்டுமே சொன்னார்கள். மண்டைதீவுச் சாத்திரியார் சொன்னது எல்லாமே தவிடுபொடியாகிக் கொண்டிருந்தாலும், 'அந்நிய வழி' என்பது சரியாகி விடுமோ என்று ஒரு பயம் அவர்களின் மனதில் இருந்தது போல............🤣.1 point- யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
1 point- நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது - தீவக சிவில் சமூகம்
அதுவும் அனுர சகோதரயாவின் ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்குமா? நாய் எப்படித்தான் வேஷம் போட்டாலும், அதனால் குரைக்காமல் விட முடியாது. இனவாத ஜேவிபி, எத்தனை பெயர்கள் மாற்றி, முகமூடிகள் அணிந்து வந்தாலும், அதன் இனவாத நடவடிக்கைகளை கைவிட மாட்டாது. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாமை, அரசியல் கைதிகள் என்று எவருமே இல்லை என்று கூறியமையுடன் சேர்ந்து இதுவும் ஒன்று.1 point- யாழ். சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!
1 pointநாங்கள் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் இந்தியா வட மாகாணத்தை சுற்றிய பாம்பு ...சிங்களவனையும் ,தமிழனையும் உருப்பட விட மாட்டார்கள்.1 point- அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 point- யாழ். சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!
1 pointஇந்த விமான நிலைய விரிவாக்கம் இந்தியாவுக்கே பெரும்பாலும் சாதகமாக இருக்கும். குறிப்பாக இண்டிகோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் தெற்கில் சீனாவின் பிரசன்னம் இருப்பதால் வடக்கில் தேவைப்படும்போது இந்திய இராணுவ தேவைக்கும் பயன்படுத்தலாம்.1 point- அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
இந்தியாவில் உள்ள குருக்கள் இந்து இலங்கையில் உள்ள குருக்கள் சைவம்.1 point- அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 pointஎங்கப்பா கனதியான ஆட்களின் (heavy weights) அசுமாத்தங்களைக் காணவில்லை இந்தப் பக்கம்? #தொண்டையில முள்ளு😎1 point- மூளையை செயலற்றதாக மாற்றும் செல்போன் | SMART PHONE
தொடர்ச்சியாக செல்போன் பாவிப்பதால் மூளை செயலற்றதாக மாறுவதாக காணொளியில் கூறுகிறார்கள்.1 point- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
உண்மை, என்னை போல் இங்கு பலர் நெஞ்சில் அண்ணன் சைமன் நீக்கமற நிறைந்திருக்கிறார் ஆனால் வெளியில் சொன்னால் தாங்கள் ******** அறியப்படுவோமென அமைதியாய் இருக்கிறோம்1 point- 2025 தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள்.
தைப் பொங்கல் என்பது உலகத் தமிழர் எல்லோரையும் ஒன்றுசேர்க்கும் பெருவிழாவாக மாற்றம் பெற வேண்டும். 🙏1 point- கருத்து படங்கள்
1 point1 point- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
கொளத்தூர் மணி ஜயா மீது எனக்கு அளப்பரிய மரியாதை இருக்கிறது எமது போராட்டம் மீது நீங்கள் செய்தவைக்கு.. உங்களுக்கும் சீமானுக்குமான சண்டை இருக்கட்டும்.. அது உங்கள் பிரச்சினை.. ஆனால் புலிகள் பின்நாட்களில் பாதுகாப்பு கருதி தலைவர் தங்குமிடங்களில் பின்னுக்கு ஸ்ரூடியோவில் இருப்பதுபோல் திரைச்சீலை கட்டித்தான் எடுப்பார்கள் எதிரிகளுக்கு அடையாளம் தெரியக்கூடாது இருக்குமிடத்தினது என்று.. உதாரணத்துக்கு ஒன்று..👇1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointTamil foods dpotSnrose li9ij2a0ihvru35h8g1t1631u004:aemf1hn840ui3a0, h0h · பேரீச்சம்பழக் கேக்! தேவையான பொருட்கள்: 500 கிராம் பேரீச்சம்பழம் 4 முட்டை 200 கிராம் சீனி 200 கிராம் பட்டர் 100 கிராம் கோதுமை மா 150 கிராம் ரவை 1 தே.க பேக்கிங் பவுடர் ½ தே.க பேக்கிங் சோடா 1 தே.க வனிலா சுகர் / வனிலா எசன்ஸ்* 1 ½ மே.க தேயிலைத்தூள்* ½ கப் சுடுதண்ணீர்* கயூ* செய்முறை: பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். தேயிலையில் ½ கப் சுடுதண்ணீர் விட்டு சாயம் எடுக்கவும். வெட்டிய பேரீச்சம்பழத்துடன் சாயம் சேர்த்து, குறைந்தது 1 மணித்தியாளம் ஊற வைக்கவும் (பேரீச்சம்பழம் காய்ந்த பழமாக இருந்தால் 6 மணித்தியாலங்கள் ஊறவிடவும் அல்லது இரவு ஊற விட்டு மறு நாள் கேக் அடிக்கவும்) ஒவனை 175 °C சூடேற்றவும். ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு கேக் அடிக்கும் கருவியால் அடிக்கவும். அடுத்ததாக பட்டருடன் சீனியைச் சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து அடிக்கவும் (விட்ட முட்டை நன்றாக அடித்துக் கலந்த பின்பே அடுத்த முட்டையை விடவும்). ஊற வைத்த பேரீச்சம்பழக் கலவையை சேர்த்து 5 நிமிடங்கள் அடிக்கவும். மா, ரவை, பேக்கிங்சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் வனிலாபவுடரை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, பட்டர் கலவைக்குல் 2 அல்லது 3 பிரிவாக சேர்த்துக் கலக்கவும். பேக்கிங் தட்டில் பேக்கிங் பேப்பரை வைத்து அதன் மேல் கேக் கலவையை ஊற்றி, சமப்படுத்தி கொள்ளவும் விரும்பினால் கயூ தூவவும். 175° C யில் 30 - 40 நிமிடம்கள் கேக்கை வேக விடவும். கேக் ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும். பேரீச்சம்பழக் கேக் தயார்!!! குறிப்பு: பேரீச்சம்பழம் காய்ந்த பழமாக இருந்தால் மேலதிகமாக சுடுதண்ணீர் சேர்க்கவும் மற்றும் ஊற விடும் நேரத்தையும் கூட்டவும். பேரீச்சம்பழக் கலவை களித் தன்னையாக இருக்க வேண்டும். வனிலா எசன்ஸுக்கு பதிலாக் சாதிக்காய்த் தூள் சேர்க்கலாம். கயூ தவிர்த்தும் கேக் செய்யலாம். Source:- #ஆச்சி_சமையல்.........!1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
1 point - அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.