Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்18Points19129Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points87990Posts -
பாலபத்ர ஓணாண்டி
கருத்துக்கள உறவுகள்10Points1836Posts -
satan
கருத்துக்கள உறவுகள்6Points10103Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/27/25 in Posts
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சமாதான காலத்தில் தினமும் 1 டாலர், என்ற மாதிரி ஒரு திட்டத்தைப் புலிகள் வெளிநாட்டுத் தமிழ் மக்களிடம் கொண்டு வந்தார்கள். அதற்கே பெரும் பிரச்சனை பண்ணி, அந்தந்த நாட்டு அரசுகளிடம் போட்டுக் கொடுத்துப் புலிகளுக்கு தடைகள் விழவும் சிலர் சிறை செல்லவும் காரணங்களை உருவாக்கியவர்கள், சீமானுக்கு ஏதோ புலம்பெயர் நாடுகளில் இருந்து கோடிகளாகப் பணம் போவதாக உருட்டுவது எல்லாம் நகைச்சுவை. ஐயா. பொன் தியாகத்தின் செலவுகளுக்குக் கூட நாம் தமிழர் தான் செய்து கொண்டிருக்கின்றது. இங்கே சீமான் பொய் பேசுகின்றார், புரணி பேசுகின்றார் என்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் 15 வருடங்களாக ஈழத்தையே பேசுகின்றார். வைகோ, கௌத்தூர் மணி எல்லாம் 15 வருடங்களாக எங்கே சென்றுவிட்டார்கள். புலிகள் அழிந்து விட்டார்கள் என்று அப்படியே தூக்கி எறிந்துவிட்டார்கள். ஒரு வேளை சீமான் இல்லை என்றால் இவர்கள் அங்கே ஒரு போராட்டம் நடந்தது என்பதையே தமிழக மக்களிடம் மறைத்திருப்பார்கள் அல்லவா? சீமான் ஈழப் போராட்டத்தில் மற்றவர்கள் போல விளக்கம் உள்ளவர் அல்ல. என்ன, எவற்றை எப்போது பேச வேண்டும் என்ற தெளிவின்மை அவரது குறைபாடு தான். புலிகளின் விருந்துபுசாரத்தை விட, அங்கே நடந்த போரக்குற்றங்களை முன்னிலைப்படுத்தி இருக்க வேண்டும். அவர் பேசிய ஆமைக்கறி விடயம் இப்படி. எதிராக மாற்றப்படும் என்பதை அவர் எதிர்பார்த்து இருக்கமாட்டார். ஆனால் அது ஒன்றும் பெரிய குற்றமல்ல. தலைவர் தமிழகத்தில் ஏற்படுத்த நினைத்த மாற்றத்தை சரியாகவே உருவாக்கினார். புதுவை இரத்தினதுரையின் குரலில் தமிழக ஆதரவை வேண்டி வெளியிடப்பட்ட 2 ஒளிப்பதிவுகளை வன்னியரசு சரியாகத் தமிழக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை. அதைச் சீமான் கிட்ட கொடுத்துவிட்டிருக்கலாம். கருணா, டக்ளஸ் பற்றிப் பேசதா வாய்கள், எதற்காகச் சீமானை விழுத்தத் துடிக்கின்றார்கள்5 points
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
2015 இல் அமரதாஸ் எழுதிய பதிவு பத்து வருடம் கழிந்தும் அடிப்படை மாறாமல் உள்ளது. ஓ ரசிக்கும் சீமானே… widevisionstudio2025-01-26T21:34:06+00:00 தமிழ்த் திரைப்பட இயக்குநராக அறியப்பட்டு ஈழப் பயணத்திற்குப் பின்னர் ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளராக மாறியிருக்கும் சீமான் அவர்கள், ஈழப் பயணம் தொடர்பான பொய்களையும் புனைவுத் தகவல்களையும் பொதுவெளியில் அவ்வப்போது பகிர்ந்திருக்கிறார். புனைகதைகளை உருவாக்கிப் பிறர் ரசிக்கும் விதத்தில் நடித்து ரசித்து வெளிப்படுத்துவதில் ‘வல்லவர்’ என்று சீமான் அறியப்படுகிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திரைப்பட உருவாக்கப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த சேரலாதன் அவர்களால் வன்னிக்கு வரவழைக்கப்பட்டிருந்த சீமான், ‘எல்லாளன்’ திரைப்படக் குழுவினரோடு தங்கவைக்கப்பட்டிருந்தார். சேரலாதனின் ஏற்பாட்டில் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் பலரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். மற்றபடி, ‘எல்லாளன்’ திரைப்பட உருவாக்கத்திற்கும் அவருக்கும் தொடர்பு இருக்கவில்லை. இரண்டு வாரங்களுக்கான பயண அனுமதியோடு (Visa) இலங்கை வந்து சில நாட்கள் மட்டுமே வன்னிக்குள் இருந்துவிட்டு, தமிழ்நாட்டுக்குத் திரும்பிச் சென்றவர் சீமான். பிறகு, ஒரு மாதம் வன்னியில் இருந்ததாகப் பொதுவெளியிற் பொய் சொல்லியிருக்கிறார். வெள்ளை மேலாடை அணிந்த நிலையில் ஆயுதங்களுடன் சீமான் இருப்பது போன்ற ஒளிப்படங்கள் பரவலாக்கப்பட்டு, அவை ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டபோது பதிவுசெய்யப்பட்டவை என்னும் தவறான ‘தோற்றப்பாடு’ உருவாக்கப்படுகிறது. ‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நிகழ்ந்துகொண்டிருந்த ஒரு இடத்திற்கு வந்திருந்த சீமானின் விருப்ப வேண்டுகோளுக்கு அமைவாக, அந்த ஒளிப்படங்களை நான் உருவாக்கியிருந்தேன். அப்போது, ‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான ஒளிப்படக்கலை சார்ந்த பணிகள் அனைத்தும் எனது பொறுப்பில் மேற்கொள்ளப்பட்டன. அத் திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு ஒரு நாள் வந்திருந்த சீமான், படப்பிடிப்பு சார்ந்த பயன்பாட்டிற்காக அங்கிருந்த ஆயுதங்களைக் கண்டு ஆவலாதிப்பட்டார். அவற்றோடு தான் இருப்பதுபோல ஒளிப்படங்களை உருவாக்குமாறு வேண்டிக்கொண்டார். அதன் பிறகு, பின்னணியைத் தேர்வுசெய்து அவரை நிறுத்தி வைத்து ஆயுதங்களைப் பிடிக்கும் விதத்தை ‘ஓரளவு’ சரிசெய்து ஒளிப்படங்களை உருவாக்கினேன். அப்போது அங்கு நிகழ்ந்த அங்கதச் சம்பவங்களை இப்போது விரித்துரைக்க வேண்டியதில்லை. அப்போது அருகில் இருந்த ஒருவர் மூலம், அந்த ஒளிப்படங்களைத் தமிழ்நாட்டில் இருந்து பின்னர் பெற்றுக்கொண்டார் சீமான். எல்லாளன் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சந்தோஸ் அவர்களுடன் இறுதிப் போர் முடியும் தறுவாயில் சூசை அவர்கள் (கடற்புலிகள் பிரிவின் தளபதி) தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார். அந்த உரையாடலின் பதிவைக் கேட்டு வாங்கிய சீமான், பொய்யான தகவல்களோடு அரசியல் உள்நோக்கத்துடன் பயன்படுத்தியிருக்கிறார். (அதில் சூசை பேசியிருக்கும் விடயங்கள் தனியாக நோக்கப்பட வேண்டியவை.) தான் உறக்கத்தில் இருந்தபோது தனது தொலைபேசியில் சூசையின் அழைப்பு வந்ததாகவும் தனது உதவியாளர் அந்த அழைப்பில் சூசையுடன் உரையாடியதாகவும் ஒரு புனைகதையைக் கட்டிவிட்டிருக்கிறார் சீமான். சந்தோஸ், சீமானின் உதவியாளர் அல்ல. சூசையுடன் அவர் உரையாடியபோது சீமான் அருகிலேயே இருக்கவில்லை. சூசை, சந்தோஸ் ஆகியோருடன் பழகியிருக்கும் என்னால், அந்த உரையாடலின் ‘உண்மைத்தன்மை’ உறுதிசெய்யப்படக்கூடியது. எல்லாளன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஸ், அத் திரைப்படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். சூசையின் தொலைபேசி உரையாடல், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கையிடல் அல்ல. நெருக்கடிகள் நிறைந்த சூழ்நிலையில் அவர் காயப்பட்டிருந்தபோது தனக்குத் தெரிந்த தமிழ் நாட்டு ‘ஆதரவாளர்கள்’ சிலரது பெயர்களை மட்டும் நினைவுபடுத்திப் பயன்படுத்தியிருக்கிறார். அந்த உரையாடல், சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை சார்ந்து (context) புரிந்துகொள்ளப்பட வேண்டியது. சந்தோஸ் வைத்திருந்த உரையாடலின் பதிவைத் தருமாறு கேட்டுப் பெற்றுக்கொண்ட சீமான், அது பற்றிய பொய்யான தகவல்களோடு தன் கட்சி அரசியலுக்கான முதலீடு ஆக்கிக்கொண்டார். கட்சியின் தொடக்க நிகழ்வில் அதை அவர் ஒலிபரப்பியதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகச் சூழலில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களை வலிந்து திணிக்கும் வகையிலான சீமானின் பிரயத்தனங்கள் ஆபத்தானவை. வன்னியில் மட்டுமல்ல, இறுதிப் போர் முடிந்த பிறகு தமிழ்நாட்டிலும் சீமானை நான் சந்தித்திக்க முடிந்தது..ஒரு திரைப்படக் கலைஞராக அறிமுகமாகியிருந்த சீமான், ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளராக மாறியிருந்தார். அவரது ஈழப் பயணம் பற்றி நான் அறிந்திருந்ததாலோ என்னவோ, ஒருவித எச்சரிக்கை உணர்வுடன் அல்லது தயக்கத்துடன் அப்போது அவர் இருந்ததாகத் தோன்றியது. அவர் கேட்ட முதற் கேள்வி ‘அண்ணனுக்கும் (பிரபாகரன்), சேரா வுக்கும் (சேரலாதன்) என்ன நடந்தது?’ என்பதுதான். அவர்கள் ‘தியாகச் சாவு’ அடைந்துவிட்டமை பற்றிச் சொன்னேன். திரு. கொளத்தூர் மணி, திரு. தியாகு போன்றவர்களையும் அக் காலத்தில் நான் சந்தித்து உரையாடியிருக்கிறேன். சீமானின் ஈழப் பயணம், அவரது அரசியற் செயற்பாடுகளின் போதாமைகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுப் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு திறந்த மடல் எழுதியிருந்தேன். வன்னியில் சீமான் தங்கியிருந்தபோது பிரபாகரனைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். அதற்கு முன்னரே தமிழ்நாட்டில் இருந்து ஈழத்திற்கு வந்து சென்ற சிலர் பிரபாகரனைச் சந்தித்திருக்கிறார்கள். அவருடன் சாதாரணமாக நிகழ்த்தப்பட்ட சந்திப்பை மையப்படுத்தி, அரசியல் ரீதியான ஆதாயங்களைப் பெறும் உள்நோக்கத்துடன் கட்டுக்கதைகளை உருவாக்கியிருக்கிறார் சீமான். நடந்து முடிந்த நிகழ்வுகளைத் திரிபுபடுத்தியும் நடக்காதவற்றைப் புனைந்தும் சீமான் சொல்லியிருப்பவற்றைப் பகுப்பாய்வு செய்து பட்டியலிடுவது சிரமமான காரியம். பல விடயங்களையும் அவர் சிக்கலாக்கி வைத்திருக்கிறார். ஈழப் பயணத்தில் அவரோடு சம்மந்தப்பட்டிருந்த பலர் இப்போது இல்லை. வன்னியில் அவரோடு பழகிய சிலர் அவரது ஆதரவாளர்களாக மாறிப் பொய் சொல்லக்கூடும். அவரது குளறுபடிகளை அறிந்த சிலர் அமைதியாக இருக்கிறார்கள். இக் கட்டுரை சார்ந்த எதிர்வினைகள், அவதூறுகளாகவோ மடைமாற்றக் கருத்துகளாகவோ அல்லாமல் ஆக்கபூர்வமானவையாக வெளிப்படுமாயின் நன்று.. எனக்குத் தெரிந்த விடயங்களையும் நான் சம்மந்தப்பட்டிருந்த நிகழ்வுகளையும் ஒரு சுயாதீன ஊடகராகப் பதிவு செய்வது அவசியம் என்று தோன்றியது. ஈழத்தமிழ்த் தேசியம் தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியத்திற்கு மாற்றீடு ஆக முடியாது. ஆனால், இரண்டுக்குமான அடிப்படை வேறுபாடுகள் மற்றும் பொதுத் தன்மைகள் விவாதிக்கப்பட வேண்டியவை. சீமானின் சில பேச்சுகளும் நடவடிக்கைகளும், தேசியவாதம் சார்ந்த சிந்தனைகளைத் தமிழ்த் தேசிய அடிப்படைவாதமாக மடைமாற்றும் வகையில் அமைந்துவிடுகின்றன.பொதுவெளியில் அவர் பேசும் சில விடயங்களும் கேள்விகளை எதிர்கொள்ளும் தோரணைகளும் ஒரு அடிப்படைவாதியாக அவரைக் காண்பித்துவிடுகின்றன. அண்மையிற் கூட, ‘தூய இரத்தம்’ பற்றிப் பேசியிருக்கிறார். அடிப்படைவாத மனத்தின் ஆபத்தான குரல் அது. ‘இனத்தூய்மைவாதம்’ சார்ந்த நிலைப்பாடுகள் மானுட விரோதச் செயல்களுக்கு இட்டுச்செல்லக்கூடியவை. தமிழ் நாட்டின் அரசியற் சூழல், ஈழத்தமிழ் அரசியற் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஈழத்தின் போராட்ட இயக்கத் தலைவர்களில் ஒருவராக இருந்த பிரபாகரனை வலிந்து முன்நிறுத்துவதன் மூலம் புதியதொரு அடையாள அரசியலைக் குறுக்கு வழியிற் கட்டமைக்க விழைகிறார் சீமான். சமூகச் சீர்திருத்தவாதி ஈ. வெ. ராமசாமி அவர்களையும் ஏனைய சில அரசியற் கட்சிகளையும் அரசியல் சார்ந்த தலைவர்களையும் எதிர்ப்பதற்கான ஆயுதமாகப் பிரபாகரனைச் சீமான் கட்டமைத்துப் பயன்படுத்திக்கொள்ளும் விதம் ஆரோக்கியமானதல்ல.. பிரபாகரனை மகிமைப்படுத்துவதான தோரணையில், அவரைக் கேடயமாக்கிக் கட்சி அரசியற் களத்தில் முன்நிறுத்தும் சீமானுக்குப் பிரபாகரனின் ‘புகழ் வெளிச்சம்’ மட்டுமே இப்போதைய தேவை. மற்றபடி, பிரபாகரனை விமர்சனபூர்வமாக அணுகக்கூடிய திராணியும் நேர்மையும் விடுதலை அரசியல் சார் புரிதலும் சீமானிடம் இல்லை. தமிழ்நாட்டில் பிரபாகரனைப் ‘பணயம்’ வைத்து, அரசியல் ரீதியாகச் சீமான் தொடரக்கூடிய ‘சூதாட்டம்’ கண்டனத்திற்குரியது. ஈ. வெ. ரா. போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளும் பிரபாாகரன் போன்ற போராளிகளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. நடைமுறைத் தேவைகளுக்கும் சனநாயக விழுமியங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் அமைவாக, எத்தகைய சித்தாந்தங்களும் மேம்படுத்தப்பட வேண்டியவை. மாற்றுக் கருத்துகளையோ அவதூறுகளையோ கண்டு பதற்றமடையாமல் அறிவுபூர்வமாக எதிர்வினையாற்றுவதன் மூலமே ‘எதிர்ப்பு அரசியல்’ நடைமுறைகளைப் பலப்படுத்த முடியும். தனிமனித வழிபாடு’ மற்றும் ‘தனிமனித அவதூறு’ போன்றவை, மானுட இழி செயல்களாகவே பார்க்கப்பட வேண்டியவை. எத்தகைய விடயங்களும் ஆரோக்கியமான வழிமுறைகளில் விவாதிக்கப்படக்கூடியவை. தனது ஈழப் பயணம் தொடர்பான புனைகதைகளைச் சுயலாப அரசியல் உள்நோக்கத்துடன் இட்டுக்கட்டி வெளிப்படுத்தும் இழி செயலை இனியாவது சீமான் நிறுத்த வேண்டும். தவிர்க்க முடியாத ஒரு அரசியற் சக்தியாகத் தமிழ் நாட்டில் ‘நாம் தமிழர் கட்சி’ உருவாகி வருகிறது. அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொண்டும் அரசியல் நிலைப்பாடுகளைத் திருத்தியமைத்துக்கொண்டும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை ஆரோக்கியமான வழிமுறைகளில் மேற்கொள்ள முன்வருவாரா? சீமானின் இப்போதைய அதிகபட்ச இலக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவது. அதனால், தமிழ்நாட்டுத் தமிழருக்கும் ஈழத்தமிழருக்கும் புதுவித நன்மைகள் நடக்குமென்றால் அது வரவேற்கப்படலாம். இந்திய அரசியல் அமைப்பின் விதிகளுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டிய முதலமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு அவரால் என்னவெல்லாம் செய்ய முடியும்? 2015-01-25 அமரதாஸ் இவை, ‘எல்லாளன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் உருவாக்கப்பட்ட ஒளிப்படங்கள். https://widevisionstudio.com/archives/3812?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR0isTEPYSOPsx80PY_CUOgdyqft-okNG13REK0hbGfwJnt77nIVS4wy5vw_aem_Niv3yqN7HZJetZhNUOIRig5 points
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
கனடாவுக்கோ, வேறு வெளிநாடுகளுக்கோ சுமந்திரன் பயணம் செய்யும் போது எந்தப்பாதுகாப்புமில்லாமல் பயணம் செய்து கூட்டங்களில் பகிரங்கமாக பங்கேற்றுவிட்டு எந்தப்பாதிப்புமில்லாமல் வந்தார். அப்படி அங்கே அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால்: சுமந்திரன் உயிருக்கு அச்சுறுத்தலான பயணங்களை தவிர்க்கலாம். அவர் அந்த நாடுகளுக்கு போய் எதுவும் சாதிப்பதில்லை, யாரும் கட்டாயப்படுத்தி அழைப்பதுமில்லையே. இந்தியாவுக்கே எந்தப்பாதுகாப்புமில்லாமல் தானாகவே அழைப்பை ஏற்படுத்தி, போய், நன்றாக படங்கள் பிடித்து விளம்பரப்படுத்தி வந்துள்ளார். நிற்க, அவர் இப்போ பாராளுமன்ற உறுப்பினருமல்ல. அப்படியிருக்க அவருக்கு உயிர் அச்சுறுத்தலாம், அதற்கு பாதுகாப்பாம். தமிழரசுக்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் யாருக்கும் வழங்கப்படாத பாதுகாப்பு இவருக்கு மட்டும் எதற்கு? சிறிதரன் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டதற்கு சிவஞானம் கொடுத்த விளக்கம், சிறிதரன் அரசாங்கத்தை விமர்சித்ததால் இந்த நிலையேற்பட்டது என்கிறார். சுமந்திரன் சொல்கிறார், இலங்கையரசால் தடையுத்தரவு பெற்ற கனடா தமிழ் அமைப்போடு சிறிதரன் சந்திப்பை நடத்தியதால், அவருக்கு விமான நிலையத்தில் பிரச்னையேற்பட்டதென்கிறார். விமான நிலைய அதிகாரியோ அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை என்கிறார். அப்போ சிறிதரனுக்குத்தான் பாதுகாப்பு தேவை. இவருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு, அவர் சிங்களத்துக்கு கால் கழுவும் வேலைக்காக இருக்கலாம். அல்லது பதவிக்கு நாண்டு பிடிப்பதால் பாதுகாப்பை அளித்து சமாதானப்படுத்தியிருப்பாரோ அனுரா?4 points
-
``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
3 pointsவாசகர் இலகு கருதி இதை திருத்தங்களுடன் மீள் பிரசுரம் செய்கிறேன். கீழே உள்ள லிஸ்டில் தாம் இருப்பதாக கருதுவோர் முறையிட்டால் - லிஸ்ட் மீள் பரிசீலனை செய்யப்படும். ———— வீட்டில் பெற்ற தாயையே தூசணத்தில் திட்டும் மூதேசிகளை, தெருச்சந்தியில் நின்று தண்ணி அடித்த கூட்டத்தை, ஊரில் ஒன்றுக்கும் உதவாததுகள் என்பதாலும், காதல் தோல்வியாலும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டத்தை, சுடர் ஒளி, உதயன் போன்ற தரத்தில் தாழ்ந்த பத்திரிகை செய்திகளைக் கூட வாசிக்காத கூட்டத்தை, இவர்களுடன் எல்லாம் சேரக்கூடாது என்று பெற்றோர் சொல்வார்கள் அல்லவா அந்தக் கழுசறைகளை ஈழத்தின் முகவரி ஆக்கிவிட்டது தான்.3 points
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
3 points@goshan_che @Justin இநு தான் உலக ஜதார்ததம். பல தலைமுறைகளாக மலையகத்தில் வாழ்ந்த மலையக மக்களை நாடற்றவர்களாக்க சட்டம் நிறைவேற்றப்பட்ட போதோ எந்த விதமான வாழ்வாதார கட்டமைப்பும் இன்றி அவர்கள் நாடு கடந்தப்படும் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதோ ஈழத்தமிழர்கள் பொங்கி வீதிக்கு வந்தார்களா? உலக ஜதார்த்தத்தை புரிந்து அதை அனுசரித்து போராட்டத்தை கொண்டு செல்லாமல. அழிந்துவிட்டு இப்படி தமிழ்நாட்டு தமிழர் உதவ வில்லை என்று மூக்கால்்அழுவதில் பயன் இல்லை. தமிழ் நாட்டில் எத்தனை இயற்கை அழிவுகள் நடந்தன எந்த ஒரு ஈழத்தமிழர் அமைப்பாவது நிதி சேர்தது அவர்களுக்கு உதவினார்களா?3 points
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
3 pointsஇந்தி எதிர்ப்பு போராட்டம், ஜல்லி கட்டு இவை இரெண்டும் மட்டுமே எனக்கு நினைவில் வருகிறன. ஆனால் இங்கே சிலர் தமிழ் நாட்டு மக்கள் பெரும்பாலோனோர் சுயநலமற்ற தமிழ் உணர்வாளர்கள் என ஒரு மாயை தாமும் நம்பி, ஏனையோரையும் நம்ப வைக்கிறார்கள். அப்படி அல்ல…அவர்களுக்கு தமிழ் உணர்வு, இன உணர்வு உள்ளது, ஆனால் அது தமது வாழிடத்தில் தமக்கு இன்னல் எனும் போதுதான் வெளிகிளம்ப்பும். அதுவும் மேலே சொன்ன இரு உதாரணங்கள் போல. 1983 இல் எமக்கு பாரிய ஆதரவு அலை இருந்தது - ஆனால் த.நா வில் அது பாரிய போராட்டமகவில்லை. 80 களின் மத்தியில் பம்பாயில், 1991 இல் - பக்கதில் இருந்த கர்நாடகா தமிழர் அடித்து துரத்தபட்ட போது கூட தமிழ் நாடு கொதிக்கவில்லை. நாடளாவிய பந்த் - ஒரு நாள். இதுதான் தாம் சம்பந்த படதா விடயங்களில் தமிழ் நாட்டு மக்களின் போராட்ட எல்லை. முன்பே எழுதியுள்ளேன். கருணாநிதி பதவி விலகினால், மத்திய ஆதரவை விலக்கி இருந்தாலும், போர் நின்றிராது - ஆனால் அவர் விலகி இருக்க வேண்டும். ஈழத்தமிழரை போலவே தமிழ்நாட்டு தமிழரும் சுயநலமிகள். அத்தோடு அவர்கள் எதையும் முதலில் இந்தியன் என்ற கோணத்தில்தான் அணுகுவார்கள், ஆகவே ஒரு அளவுக்கு மேல் அவர்கள் எமக்காக இறங்க மாட்டார்கள்.3 points
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஓம்…நான் 95 போர் நிறுத்தம் வரைக்கும் ஊரில் வாழ்ந்தவன், அதன் பின் 2001 வரை தெற்கில் இருந்த போதும் வடக்கு கிழக்கு எங்கும் போய் வந்தவன், வாழ்ந்தவன். ஒழுங்காக பிடித்து உச்சா போக தெரியாத வயதில் டென்மார்க் வந்து, சீமானிடம் ஈழப்போராட்டம் பற்றி படித்தவர் நீங்கள். நீங்கள் சொல்வது சரிதான். யாழ்பாணத்தில் உங்கள் ஊரை விட்டு வெளியே கொண்டே அடுத்த ஊரில் விட்டால் கூட வழி தெரியாது தொலையகூடியவர்கள் எல்லாம், பிராபாக்ரனிடம் கொள்கை படித்தார்களாம் 🤣. அண்ணனை போலவே, அளப்பதில் ஒரு வஞ்சகமும் தம்பி செய்வதில்லை.3 points
-
மாற்றமொன்றே மாறாதது!
2 pointsமாற்றமொன்றே மாறாதது! ****************************** ஆண்டுகள் பழசு,அனுபவம் பழசு மாண்டவர் பழசு,மன்னர்கள் பழசு இன்றைய நாளே எமக்கு புதிது எனிவரும் நாட்களும் புதிது புதிதே! பத்து ரூபாய்க்கு பவுண் விலை விற்றதும் பனாட்டொடியல் நாங்கள் உண்டதும் வித்துகள் சேர்த்து விவசாயம் செய்ததும் வேறு கிராமங்கள் வண்டிலில் சென்றதும். சூள்கொழுத்தி மீன்கள் பிடித்ததும்-தோணி சுக்கான் பிடித்து கரைகளத் தொட்டதும் நடந்தே நாங்கள் பள்ளிக்கு சென்றதும் நம்முன்னோர் வாழ்வுக் கதைகள் சொல்வதும். இந்தகாலத்து பிள்ளைகள் காதுக்கு இவைகள் எல்லாம் கற்பனைக்கதைகளே! எங்கள் வாழ்வோ இப்போது இல்லை இவர்களின் வாழ்வும் இதுபோல்லாகலாம். ஏனெனில்…. பாலை வனங்கள் மழையால் அழியுது-வெண் பனி கொட்டுமிடமெல்லாம் வெய்யில் அடிக்குது மும்மாரி மழையும் மோசமாய் போயிற்று முன்பு போல் இல்லை இயற்கையே மாறிற்று. பழசை மட்டுமே இறுக்கமாய் பிடிப்பதால் பயனொன்றுமில்லை புரிதலும் வேண்டும் புதுசை நோக்கியே போய்க்கொண்டிருந்தாலே புதுமைகள் பார்த்து மகிழ்வோடு வாழலாம். அன்புடன் -பசுவூர்க்கோபி.2 points
-
``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
2 pointsஅண்ணை வழமையாக தரம்தாழ்ந்து பதிவிடும் என்னைப்போல் படிப்பறிவற்றவர்களை விடுங்கள்..ஆனால் இங்கு சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் அண்மைக்காலமாக சகட்டு மேனிக்கு தரம் தாழ்ந்து அர்ச்சனைகளை பதிவிடுபவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தால் மெத்த படித்த நபர்களா தம்மை தாமே சொல்பவர்களாக உள்ளனர்.... அப்படியெனில் ஒரே ஒரு காரணம்தான்... ஒருவன் எவ்வளவு படித்தாலும் பொது ஞானம் என்பது வளரவில்லை என்பதே... அவர்களின் சீமான்மீதான தரம்தாழ்ந்த பதிவுகளை படிக்கும் போது அவர்கள் மீது பரிதாபம் தான் எழுகிறது…2 points
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நேற்று நியூஸ் 18 இல் செய்திகளின் ஒரு பகுதியாக அதன் ஆசிரியர் கார்த்திகைச்செல்வனுக்கு ஒளிப்பதிவாளர் பிரசாந்த் வழங்கிய நேர்கணலின் சில பகுதிகள் போய்க் கொண்டிருந்தது. அந்தப் பகுதிகளை பார்த்த பின், தலைவர் மேல் இன்னும் மரியாதை கூடியது. 'கொன்று போட்டீர்களே...................' என்று உலகத்தின் மேல் உள்ள கோபம் அப்படியே துயரமாக மாறி உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. சீமானின் ஏமாற்று வேலைகளுக்கும், போலிப் பாவனைகளுக்கும் இது இன்னுமொரு சாட்சியமாகவும் இருந்தது. எவ்வளவு ஏமாற்று வேலைகள், அது அவ்வளவும் ஒரு தனிமனிதனின் நலனுக்கு மட்டுமே என்னும் போது இன்னும் அருவருப்பாகவும் இருந்தது. இன்று எங்களின் சமூகத்திற்கு, எம்மக்களுக்கு ஒரு மாற்று, ஒரு தலைமை இல்லை என்னும் நிலையில், சீமான் போன்ற ஒருவரை நம்பும் நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்பது ஒரு பெரும் ஏமாற்றம் ஆகவும் இருக்கின்றது.2 points
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
2 pointsஇறுதி போர் காலத்தில் உலக நாடுகள் எப்படி அணுகியது, என்ன எதிர்பார்த்தது என்பதை விக்கிலீக்ஸில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பபட்ட கேபிள்களை படித்தால் சில புதிய விடயங்கள் தெரிய வரும், புது கேள்விகளும் பிறக்கும். நமது எதிர்ப்பார்ப்புக்கும் உலக நாடுகளின் அணுகுமுறைக்கும் பாரிய தூரமுண்டு. நான் அறிந்தவரை இதுபோன்ற நாடுகளுக்குயிடையேயான போர்களிலும் சரி, உள்நாட்டு போர்களிலும் சரி இருபக்கத்திற்கும் ஆதரவு கிடைக்கும். பெரும்பாலும் அது அமெரிக்க- உருஷ்ய ஆதரவு நாடுகளாய் பிரிந்து நிற்கும். இது தற்போதைய சண்டைகளான சிரியா , உக்ரைன், காசா போன்றவற்றில் பார்க்கலாம். ஆனால் ஈழப் பிரச்சனையில் எல்லா நாடுகளும் ஒரு பக்கமாய் இருந்தது. ராஜபக்சேவிற்கு ஒருவருக்கு தலையையும் மற்றவருக்கு வாலையும் ஆட்டி தனக்கு வேண்டியதை சாதிக்க முடிந்தது. என்னைப் பொறுத்தவரை இந்தியா எப்பவுமே ஈழம் அமைய விரும்பியதில்லை, அவர்களின் தேவை இலங்கை அவர்களின் கீழிருக்க வேண்டும். இதை சாதித்துக் கொள்ள இங்குள்ள இயக்கங்களை பயன்படுத்திக்கொண்டனர். வங்காளதேசம் அமைந்ததை ஒரு உதாரணமாக சொல்வார்கள், அது பாகிஸ்தான் எதிரி நாடாகயிருந்ததால் நடந்தது, இலங்கை அப்படியல்ல. இறுதிப்போரில் கூட இந்தியாவின் எண்ணம் புலிகளின் தலைமை அழிந்தால் போதும் என்பதாய் தான் இருந்திருக்கும், அவர்களுக்கு இசைவாய் ஒரு போராளி குழுயிருந்தால் இலங்கை அரசை கட்டுப்படுத்த ஏதுவாயிருக்கும். ஆனால் ராஜபக்சே தன்னுடை அரசியல் எதிர்காலத்தை உறுதிபடுத்திக்கொள்ள அனைத்து நாடுகளையும் சாட்சியாக வைத்து வெறியாட்டம் ஆடிவிட்டார்கள். இந்த நாடுகளாடும் சதுரங்கத்தில் வீழ்த்தப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான்.2 points
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
2 pointsஇறங்க வேணுமா இல்லையா என்ற தார்மீக கேள்விக்கோ…. நாம் இறங்காமல் ஓடி வந்து விட்டு அவர்களை நோகலாமா? என்ற நியாயமான கேள்விக்கோ கூட பதில் தேவையில்லை. இறங்க மாட்டார்கள். நாமும் அவர்களுக்காக இறங்க மாட்டோம். ஜல்லிகட்டு இலண்டன் போராட்டத்துக்கு நான் போனேன் - மருந்துக்கு கூட ஈழதமிழரை காணவில்லை. சில இளையோரை தவிர. இந்தியன் ஹைமிசன் முன் வெளிநாட்டிலோ, இலங்கையிலோ காவிரி, நீட், தூத்துகுடி விடயங்களில் நாம் போராடி உள்ளோமா? இதுதான் எமது தொப்புள்-கொடி உறவின் யதார்த்தம். இரு பக்கத்திலும்.2 points
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
2 pointsசரி! ஆனால் என் கேள்வி, தமிழ் நாட்டுத் தமிழர் ஏன் வீதிக்கு இறங்க வேண்டும்? இங்கே தமிழ் நாட்டுத் தமிழரைத் திட்டிக் கொண்டிருக்கும் சீமான் தம்பிகளே இறங்கவில்லை, மாறாக ஏறினார்கள் 😎: கிளாலிப் படகில், உழவு யந்திரத்தில், ட்ரெயினில், விமானத்தில்! இப்ப வந்து "வயசுக்கு வராமையால் ஏறினேன்" என்று சொல்லிக் கொண்டு தமிழ் நாட்டுத் தமிழர் எல்லோரும் ஈழவருக்காக தீ குளிக்க வேணுமெண்டு அட்வைஸ் வேற. இன்னொரு தரப்பு : ஆமி ஊருக்குள் நுழைய முன்னரே "ஆமி என்னைத் தேடினது" என்று வந்த ஆட்கள். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், வெளிநாட்டில் இருந்து இணையப் போராளிகளாக படம் காட்டும் குழு தான் தமிழ் நாட்டுத் தமிழர் ஏதோ கடமை தவறி விட்டதாகக் காட்டாப்புக் காட்டுகின்றனர்!2 points
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
தலைவர் நீங்கள்தான முந்தாநாத்து சீமான் பிக்காலிப்பய வார்த்த சொன்ன வீடியோ காட்டமுடியாது ஓணாண்டி முக்காடு போட்டாப்ல எண்டு எழுதின ஆளு.. நீங்களே இப்பிடி இன்னும் ரெண்டு மூண்டு சவால் எங்கிட்ட விட்டிட்டி கல்லுமாரி திரியேக்க அவனுக்கு என்ன சின்னப்பொடியனுக்கு..2 points
-
``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
2 pointsA/L பாஸ்பண்ணினவனுக்கு ரெண்டு கொம்பு முளைச்சிருக்கு மற்றவனுக்கு இல்லையா..? ஊரில 60வீதத்துக்கும் கூடின மக்கள் ஏலெவலில் ஏதோ ஒருபாடம் இல்லா எல்லாம் பெயில்தான்.. ஆனால் அவர்கள்தான் இந்த இனத்தின் பெரும்பான்மை சமூகம்.. என்ர அம்மா அப்பாகூட ஏலெவல் பாஸ்பண்ணேல்லதான்.. அதுக்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழாமல் விடேல்ல.. என்ர அம்மா அப்பா போல எத்தனையோ அம்மா அப்பாக்கள் ஏலெவல் பாஸ்பண்ணேல்ல ஆனால் அவர்கள் தங்கட பிள்ளையள் நல்லா இருக்கவேணும் எண்டு தம்மை உருக்கி தம்பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள் வளர்க்கிறார்கள்.. ஏலெவல் பாஸ்பண்ணாதவர்கள் சமூகத்தில் நன்றாக உழைத்து தாமும் முன்னேறி தம் குடும்பத்தையும் முன்னேற்றி இந்த சமூகத்தில் நல்ல உதாரணமனிதர்களாக வாழ்கிறார்கள்.. ஏலெவல் பாஸ்பண்ணி படிச்சு பட்டம் எடுத்தும் உழைச்சு திண்ண களவில அப்பன் ஆத்தாவின் சோத்தை முப்பது நாப்பது வயசு ஆனாப்பிறகும் ஓசியில வெக்கமே இல்லாமல் திண்டுகொழுத்துகொண்டு றோட்டில நிண்டு கொண்டு உழைத்து கெளரவமாக வாழும் துப்புரவு தொழிலாளர்களை நக்கலடிக்குமாப்போல வேசம்போட்டு அரசாங்கத்திட்ட வேலைப்பிச்சை கேட்டதுகள் கிழட்டு மூதேவிகள்.. இதுல ஆர் உயர்ந்தவர்கள்..? ஏலெவல் பாசாகாட்டியும் உழைத்து கெளரவமாக வாழும் துப்புரவு தொழிலாளர்களா இல்லாட்டி ஏலெவல் பாசாகியும் ஆறாவது அறிவு விருத்தி அடையாத சோம்பேறிகளா..?2 points
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
உண்மை. விபத்து ஒன்று நிகழ்ந்து விட்ட அடுத்த கணம், பலர் மிகவும் பதட்டமடைந்து விடுகின்றனர். அடுத்தது என்ன செய்வது என தடுமாறி விடுகின்றனர். அதுவே அவர்களை தவறிழைக்கவும் செய்து விடுகின்றது. முதல் விபத்து இவரால் ஏற்படுத்தப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர். விபத்து ஏற்பட்டவுடன், அந்த இடத்தினை விட்டு தப்பி ஓடாமல், நிற்க வேண்டும். ஆனால் இவர் அவ்வாறு நிற்காமல், அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடியிருக்கின்றார். அதுவே இரண்டம் விபத்தை தோற்றுவித்து இருக்கு என நினைக்கின்றேன் அவ்வாறு வேகமாக ஓடியதால் வீதியின் தடுப்பு சிவரில் மோதி இவரது வாகனம், Ditch இற்குள் சென்று இருக்கின்றது. அதில் இருந்து மகளையும் தூக்கிக் கொண்டு வீதியை சடுதியாக கடக்கும் போதுதான் மூன்றாவது விபத்து நிகழ்ந்து இந்த பெருந்துயரம் நடந்து இருக்கின்றது. இதில் இறந்த குழந்தையின் வீடியோக்கள் பல இச் சம்பவத்தின் பின்னர் வெளியாகியுள்ளன. பார்க்கும் போது மனசு பதறுகின்றது. நான் அடிக்கடி பயன்படுத்தும் வீதி இது. பல தமிழர்களின் உயிர்களை விபத்தில் காவு கொண்ட வீதியும் இது. கொஞ்சம் விசாலமாக இருப்பதால், பலர் கடும் வேகத்தில் தான் இதில் பயணிப்பர். பனிக்காலத்தில் சில இடங்கள் மிகவும் இருளாக இருக்கும். இதில் குளிர் காலத்தில் இரவில் அவதானமாக வாகத்தை செலுத்த வேண்டியது அவசியம். முன்னர் 80/KM வேக வீதியாக இருந்து, பின்னர் பல இடங்களில் 70 ஆக்கி இன்னும் சில இடங்களில் 60 ஆக்கியுள்ளனர். ஆனால் பலர் இன்னமும் 80 KM இல் இருந்து 120 வரைக்கும் செல்கின்றனர்.2 points
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
2 pointsசீமனே வெல்வார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும், உண்மையே சீமான், சீமானே உண்மை.2 points
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
2 pointsவேறு அரசு வந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்.??? இலங்கையில் தான் போர் நடந்தது இந்தியாவில் இல்லை எனவே… எந்த இந்தியா அரசும் போரை நிறுத்தி இருக்காது ஆயுதம் கொடுப்பதை குறைத்து இருக்கலாம் அல்லது கொடுக்காமல் விட்டிருக்கலாம்… இந்தியா கொடுக்கவில்லை என்றால் சீனா கொடுக்கும் அப்படியான நிலையில் எந்தவொரு கட்சி இந்தியாவை ஆட்சி செய்தாலும் இல்லை இல்லை சீனாவில் வேண்டாதீர்கள் நாங்கள் சும்மா இலவசமாக ஆயுதங்களையும் ஆலோசனைகளும் தருகிறோம் என்பார்கள் தமிழ்நாடு இந்தியா அரசு இலவசமாக இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதை தடுக்கவில்லை தடுக்க முடியவில்லை ஏனெனில் தமிழ்நாடு இந்தியாவை ஆளவில்லை இந்த ஆயுதங்கள் ஏன் கொடுக்கப்பட்டது போர் செய்வதற்கு தமிழ் பகுதிகளில் வடக்கு கிழக்கு இல் தமிழர்களை சுடுவதற்க்கு குண்டுகள் போடுவதற்கு. இதை தடுக்க முடியாதவர்கள் எப்படி போரை நிறுத்த முடியும் ??? இவர்கள் போராடி இருந்தால் ஒரு குண்டு போட சீமான் உள்பட எல்லோரும் வீட்டில் போய் இருந்து விடுவார்கள் மட்டுமல்ல உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் வீட்டிலேயே இருங்கள்’ வெளியில் போக வேண்டாம் என்பார்கள் இவர்கள் போராடி வென்ற ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பவத்தை சொல்லுங்கள் பார்ப்போம் .......🙏2 points
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
கொடிய பாம்பினை அடித்து சாகடித்தாலும் அதன் விஷம் போகாது ...அந்தமாதிரி இந்த சும் ....கண்ட இடத்தில கும்மனும்2 points
-
தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்; வந்தது அரசின் அறிவிப்பு
கோவிலில் சிதறுதேங்காய் அடிப்பதையும் தடை செய்த்தால் இன்னும் மிச்சம் வருமே2 points
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய் இது தலைப்பு. இதற்கான பதிவோ தற்போது தடம்மாறி அமெரிக்கன் மதில் பாய்வதில் வந்து நிற்கிறது. இதுவும் மாற்றம் கண்டு, சீமானின் வரவு தமிழர்களுக்கு எழுச்சி என்றும் மாறுமோ தெரியவில்லை.🤔2 points
-
முதல்வர் ஆசை… அந்த கட்சி பெயரை சொல்ல மாட்டேன்.. சீமானை விளாசிய ஸ்டாலின்
நான் சீமானை ஆதரிக்க முக்கிய காரணம் தமிழ் தேசியமும் அவரது சமூக நலன்களுமே. அதை மேடைக்கு மேடை உரக்க கூறிவருகின்றார். அது மட்டுமல்லாமல் பொது இணைய வெளிகளில் தலைவர் படத்தை இணைத்தால் சில நிமிடங்களிலேயே அகற்றப்படும் நிலை இருக்கும் போது ......மேடைக்கு மேடை தலைவர் பிரபாரகரனின் படத்தையும் விடுதலைப்புலிகளின் கொள்கையையும் காவித்திரிபவர் சீமான் மட்டுமே. சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய விரும்பினால் எத்தனையோ கொள்கைகளை முன்னிறுத்தலாம். இப்படி நாலா பக்கமும் அடிவாங்கி அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் சீமானுக்கு தேவையில்லாத வேலைதான்.1 point
-
``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
1 pointதயிரைக் கடைந்தார்கள் அது வெண்ணையைத் தந்தது. ரோகன வியையவீராவைக் கடைந்தார்கள் அது இன்று அவர் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்தது. வைத்தியர் அர்ச்சுனாவைக் கடைந்தார்கள் அது அவருக்கு இன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தந்தது. தற்போது சீமானைக் கடைகிறார்கள் அது அவருக்கு என்ன தரும் என்று பார்க்கலாம்.🤔🤩1 point
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
முன்னைய அரசாங்கங்களே, இவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறதென கூறி பாதுகாப்பு அளித்தார்கள். சுமந்திரன் அரசுடன் சேர்ந்து செயற்படுவதால், அதாவது அவர்களுக்கு கால் கழுவுவதால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் என காரணமும் கூறினார்கள். பின்னர், அவருக்கு அப்படியேதும் அச்சுறுத்தல் இல்லை, அவர் பேரணியில் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் கலந்து கொள்கிறார்,ஆகவே அவருக்கு பாதுகாப்பு தேவையில்லை அது விலக்கப்படும் என்று விளக்கமளித்தார்கள். (இங்கே கவனிக்கப்படவேண்டியது: பாதுகாப்பு கொடுக்கப்பட்டதற்கும் , விலக்கப்பட்டதற்கும் கொடுக்கப்பட்ட காரணங்கள்). ஆனால், குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டார்களா? இது பற்றி அப்போது சுமந்திரனிடம் வினவியபோது, தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தான் முறையிடவில்லை, பாதுகாப்பு கோரவில்லை என்றார். சரி...... அப்போ ஏன் எனக்கு பாதுகாப்பு வேண்டாம் என மறுக்கவில்லை? அவர்கள் சொன்னது, அவர்கள் சந்தேகம், நான் அப்படி பாதுகாப்பு கோரவில்லை என மறுப்பு தெரிவிக்கவில்லை? ஏன் அந்த அப்பாவி இளைஞர்களை விடுவிக்கவில்லை? சரி, அனுரா ஆட்சியில் சுமந்திரன் மக்களாலும் அவர் சார்ந்த கட்சிகளினாலும் நிராகரிக்கப்பட்டவர். அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக எங்கேயும் அனுராவிடம் முறையிடவில்லை. தன்னிச்சையாக இந்தியாவுக்கே போய் பகிரங்கமாக படம்பிடித்து பேச்சுக்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இது. அவர் சொன்னது! அப்படியிருக்கும் போது, நமக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது பாதுகாப்பு தாருங்கள் என்பவர்களின் பாதுகாப்பை குறைத்தவர்கள், வெறும் சாதாரண மனிதனுக்கு பாதுகாப்பு கொடுப்பதன் அவசியம், மர்மம் என்ன?1 point
-
``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
1 pointஇவர்கள் எல்லாம், வீட்டில் பெற்ற தாயையே தூசணத்தில் திட்டும் மூதேசிகளை, தெருச்சந்தியில் நின்று தண்ணி அடித்த கூட்டத்தை, ஊரில் ஒன்றுக்கும் உதவாததுகள் என்பதாலும், காதல் தோல்வியாலும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டத்தை, சுடர் ஒளி, உதயன் போன்ற தரத்தில் தாழ்ந்த பத்திரிகை செய்திகளைக் கூட வாசிக்காத கூட்டத்தை, இவர்களுடன் எல்லாம் சேரக்கூடாது என்று பெற்றோர் சொல்வார்கள் அல்லவா அந்தக் கழுசறைகள் லிஸ்ட்டில் சேர்க்கப்படவேண்டியவர்கள்…1 point
-
மாங்குளத்தில் தூக்கிலிடப்பட்டு நாய் கொலை; பெண் கைது!
யாரப்பா அந்த இணக்க சபை நீதிபதி? தீர்ப்பு கொடுத்த இணக்க சபை உறுப்பினர்களை முதலில் கைது செய்ய வேணும் மத்திய சபை ஒழுங்கா வேலை செய்திருக்கினம்...1 point
-
``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
1 point🤣 இப்ப சீரோ கோக் விட்டாச்சு…Apple Tango Zero🤣1 point
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இப்ப chat gptல search பண்ணீட்டு Audi carபற்றி எழுதப்போறன். நானுமொரு intellectual.😂1 point
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இதுக்கே சலிச்சுகிட்டா எப்படி… அடுத்து விஜி அண்ணி, திகதிகள் சம்பந்தமா சில fact-findings கேட்பேன் - சும்மா ஆடிப்போய்டுவியள், ஆடி 🤣.1 point
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நீங்கள் உண்மையாக இருப்பதற்கு வாழ்த்துகள். உயிர் கொடையளித்த மாவீரர்களுக்கு எனது நன்றிகளும், அஞ்சலிகளும்🙏1 point
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
எதோ நீங்கள் Albert Einstein என்ற நினைப்புபோல இருக்கு.1 point
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 pointஆனால் சகோ எனது சந்தேக லிஸ்ட் மிக நீளமானது. இறுதி யுத்தத்தின் போது எம்மை கைவிட்ட , காணாதிருந்த அதற்கும் மேலாக காட்டிக்கொடுத்த தமிழக தலைவர்கள் என்ற எனது லிஸ்டில் அண்ணர் வைகோ, பாதர் கஸ்பர், மகிழ்ந்தவுக்கு மலர் கொடுத்த திருமாவளவன் மற்றும் கனிமொழி..... என்பதில் சீமான் கடைசியாக தான்தான் இருக்கிறார்.1 point
-
30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
சென்னை போல 4 மடங்கு பெரிய பிரமாண்ட பனிப்பாறை ஒரு தீவின் மீது மோதும் அபாயம் - என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் & எர்வன் ரிவால்ட் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிட்டத்தட்ட சென்னையைப் போல் நான்கு மடங்கு பெரிதாக இருக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை, பிரிட்டனுக்குச் சொந்தமான தொலைதூரத்தில் இருக்கும் தீவு ஒன்றின் மீது மோதும் வகையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது அங்கு வாழும் பென்குயின்கள் மற்றும் சீல்களை ஆபத்தில் தள்ளக்கூடும். இந்தப் பெரும் பனிப்பாறை அன்டார்டிகாவில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பாதையில் அது தெற்கு ஜார்ஜியாவை நோக்கிச் சுழன்று நகர்கிறது. அதுவொரு கரடுமுரடான நில அமைப்பைக் கொண்ட, பென்குயின் போன்ற பல விலங்குகள் வாழும் பிரிட்டிஷ் தீவு. அதன்மீது மோதுவதால், இந்தப் பனிப்பாறை பல துண்டுகளாக நொறுங்கக் கூடும். தெற்கு ஜார்ஜியா தீவில் இருந்து, பனிப்பாறை தற்போது 280 கி.மீ தொலைவில் இருக்கிறது. சென்னை போல 4 மடங்கு பெரிதான இந்த பனிப்பாறை தெற்கு ஜார்ஜியா தீவின் மீது மோதினால் என்ன நடக்கும்? கடந்த காலங்களில் இத்தகைய பெரும் பனிப்பாறைகள் இந்தத் தீவு மீது மோதிய போது, தெற்கு ஜார்ஜியாவில் இருந்த எண்ணற்ற பென்குயின்களும் சீல்களும் நீர்நாய்களும் உணவு கிடைக்காமல் உயிரிழந்துள்ளன. "இயல்பாகவே பனிப்பாறைகள் ஆபத்தானவை. தீவின் மீது மோதாமல் அந்த பனிப்பாறை பாதை மாறிச் சென்றால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்," என்று தெற்கு ஜார்ஜியாவின் அரசாங்க கப்பலான ஃபரோஸில் இருந்து பேசுகையில், அதன் கேப்டன் சைமன் வாலேஸ் பிபிசியிடம் கூறினார். சிங்கப்பூரை விட பெரிய ராட்சத பனிப்பாறையின் நகர்வை 'அழிவின் பாதை' என்று விஞ்ஞானிகள் கூறுவது ஏன்? பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை கரையாமல் மாதக்கணக்கில் சுழன்று வருவது எப்படி? பெண்ணை மகிழ்விக்க பரிசு மட்டுமின்றி, உயிரையே தரும் ஆண் - பூச்சி, பறவைகளில் என்ன நடக்கிறது? உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மாலுமிகள், மீனவர்கள் அடங்கிய குழு இந்தப் பனிப்பாறையின் அன்றாட நகர்வைக் கண்காணிக்க செயற்கைக்கோள் படங்களை ஆர்வத்துடன் அவதானித்து வருகிறது. பனிப்பாறைகளின் ராணியாகக் கருதப்படும், உலகின் பழமையான பனிப்பாறைகளில் ஒன்றான இது, A23a என்று அழைக்கப்படுகிறது. இது 1986இல் அன்டார்டிகாவில் உள்ள ஃபில்ஷ்னர் பனி அடுக்கில் (Ice Shelf) இருந்து உடைந்து பிரிந்தது. நீண்ட காலத்திற்கு கடலடியில் சிக்கியிருந்த அந்த பனிப்பாறை பின்னர் கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நீரோட்டச் சுழலில் சிக்கிக்கொண்டது. இறுதியாக கடந்த டிசம்பரில் அதிலிருந்து விடுபட்டு, தற்போது அதன் இறுதிப் பயணத்தில் வேகமெடுத்து நகர்ந்து கொண்டிருக்கிறது. அன்டார்டிகாவின் வடக்கே இருக்கும் வெப்பம் மிகுந்த நீரோட்டம், 1,312 அடி வரை உயரமாக பனிப்பாறையின் பரந்த பக்கங்களை உருக்கி பலவீனப்படுத்துகிறது. பட மூலாதாரம்,BFSAI படக்குறிப்பு, ராயல் விமானப்படை சமீபத்தில் A23a பனிப்பாறை தெற்கு ஜார்ஜியாவை நெருங்கியபோது அதைப் பார்வையிட்டது. இது ஒரு காலத்தில் 3,900 சதுர கி.மீ பரப்பளவுக்கு இருந்தது. ஆனால், சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் அது மெதுவாகச் சிதைந்து வருவதைக் காட்டுகின்றன. இப்போது இந்தப் பெரும் பனிப்பாறை சுமார் 3,500 சதுர கி.மீ அளவுக்கு இருக்கிறது. அதிலிருந்து பெரிய அளவில் பனிக்கட்டிகள் உடைந்து கடலில் மூழ்கி வருகின்றன. A23a பனிப்பாறை எப்போது வேண்டுமானாலும் பல்வேறு பகுதிகளாக உடைந்து போகக் கூடும். பின்னர் அது தெற்கு ஜார்ஜியா தீவை சுற்றிக் கட்டுப்பாடின்றிச் சுழன்று, மிதக்கும் பனி நகரங்களைப் போல பல ஆண்டுகளுக்குச் சுற்றிக் கொண்டிருக்கக் கூடும். இது அந்தத் தீவு மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது, தெற்கு ஜார்ஜியா மற்றும் சாண்ட்விச் தீவுகளை அச்சுறுத்தும் முதல் பிரமாண்ட பனிப்பாறை இல்லை. கடந்த 2004ஆம் ஆண்டில், A38 என்ற ஒரு பனிப்பாறை கடலடியில் தரைதட்டியது. அதன் அளவு மிகப் பிரமாண்டமாக இருந்ததால், அதைக் கடந்து உணவு கிடைக்கும் இடத்தை அடைய முடியாமல் போனதால், பல பென்குயின் குஞ்சுகள், சீல் குட்டிகள் உயிரிழந்தன. இந்தப் பிரதேசம், கிங் பென்குயின்களின் காலனிகள், லட்சக்கணக்கான சீல்கள், நீர்நாய்கள் வாழும் பகுதி. ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம்17 ஜனவரி 2025 புத்தர் பிறந்த லும்பினி அழியும் ஆபத்தில் இருக்கிறதா? கசியும் கூரை, வாடிய நிலையில் தாவரங்கள் - பிபிசி கள ஆய்வு17 ஜனவரி 2025 பட மூலாதாரம்,SIMON WALLACE படக்குறிப்பு, பனிப்பாறைகள் ஆபத்தானவை என்பதையும் அவற்றைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அனுபவம் வாய்ந்த மாலுமிகள் அறிந்திருப்பதாக சைமன் வாலஸ் கூறுகிறார் "தெற்கு ஜார்ஜியாவின் மீன் வளம், இதர உயிரினங்கள் என இரண்டின் மீதும் இந்தப் பனிப்பாறையின் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்" என்று தெற்கு ஜார்ஜியா அரசுக்கு ஆலோசனை வழங்கும் கடல் சூழலியல் நிபுணர் மார்க் பெல்ச்சியர் கூறுகிறார். பனிப்பாறைகள், அதிகரித்து வரும் ஒரு பிரச்னையாக இருப்பதாக மாலுமிகளும் மீனவர்களும் கூறுகின்றனர். 2023ஆம் ஆண்டில், A76 எனப்படும் ஒரு பனிப்பாறை, தரை தட்டும் நேரத்தில் அவர்களை மிகவும் அச்சுறுத்தியதாகக் கூறுகின்றனர். "அந்த பனிப்பாறையின் துண்டுகள் சாய்ந்து கொண்டிருந்தன. அது பார்ப்பதற்கு நுனியில் ஒரு பெரிய பனி கோபுரம் போலவும், அடிப்பகுதியில் ஒரு பனி நகரத்தைப் போலவும் காட்சியளித்தது," என்று பனிப்பாறை கடலில் இருந்த போது பார்த்த பெல்ச்சியர் கூறுகிறார். அந்தப் பனிப்பாறையின் சிதைந்த பகுதிகள், இன்றும் தீவுகளைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன. "அளவில் பல விளையாட்டு மைதானங்களை ஒன்று சேர்த்தது போல் இருந்த அந்த பனிப்பாறை, மேசை அளவிலான துண்டுகளாக உடைந்து சுழன்று கொண்டிருக்கிறது" என்று தெற்கு ஜார்ஜியாவில் பணியாற்றும் ஆர்கோஸ் ஃப்ரோயன்ஸ் மீன்பிடி நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ நியூமன் கூறுகிறார். "அந்தத் துண்டுகள் அடிப்படையில் ஒரு தீவு அளவுக்கு விரவிக் கிடக்கின்றன. அவற்றுக்கு இடையே நாங்கள் போராடிக் கப்பலைச் செலுத்த வேண்டும்," என்று கேப்டன் வாலெஸ் கூறுகிறார். பட மூலாதாரம்,ROB SUISTED/REUTERS நியூமனின் கூற்றுப்படி, A76 ஒரு "கேம்சேஞ்சர்". "அது எங்கள் ஆபரேஷன்களில், எங்களுடைய கப்பலையும் பணியாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது." ஆண்டுதோறும் உருகிக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள், கடலிலுள்ள பனிப்பாறைகளின் நிலையற்ற தன்மை என இவர்கள் மூன்றும் பேருமே, வேகமாக மாறி வரும் சூழலை விவரிக்கிறார்கள். பனி உறைந்த அன்டார்டிகாவில் இருந்து உடைந்து, தனியே A23a பனிப்பாறை உருவாக, காலநிலை மாற்றம் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அது மிக நீண்ட காலத்திற்கு முன்பே உடைந்து, பிரிந்துவிட்டது. இப்போது நாம் எதிர்கொள்ளும் வெப்பநிலை உயர்வின் தாக்கங்களுக்கு முன்பே அது உருவாகிவிட்டது. ஆனால், இத்தகைய ராட்சத பனிப்பாறைகள் நமது எதிர்காலத்தின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. கடல் மற்றும் காற்றின் வெப்ப நிலை அதிகரித்து, அன்டார்டிகா மேலும் நிலையற்றதாக மாறும் போது, பிரமாண்ட பனிப் படலங்கள் இப்படியான பனிப்பாறைகளாக உடைந்துவிடும். டைனோசர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? பிரிட்டனில் கிடைத்த பிரமாண்ட கால்தடங்கள் சொல்வது என்ன?18 ஜனவரி 2025 லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ வேகமாகப் பரவியது எப்படி? எளிதாக விளக்கும் ஐந்து புகைப்படங்கள்15 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES A23a பனிப்பாறை, அதன் காலம் முடிவதற்குள்ளாக, விஞ்ஞானிகளுக்கு ஒரு பரிசை விட்டுச் சென்றுள்ளது. சர் டேவிட் அட்டன்பரோ ஆராய்ச்சிக் கப்பலில் இருந்த பிரிட்டிஷ் ஆய்வுக் குழுவுக்கு, 2023இல் இந்த பிரமாண்ட பனிப்பாறைக்கு அருகில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அரிய வாய்ப்பை, இத்தகைய ராட்சத பனிப்பாறைகள் சுற்றுச்சூழல் மீது எத்தகைய தாக்கத்தைச் செலுத்துகின்றன என்பதை ஆராய்வதற்காகப் பயன்படுத்த விஞ்ஞானிகள் விரும்பினர். அந்தக் கப்பல், A23a பனிப்பாறையில் இருந்த ஒரு விரிசலுக்குள் நுழைந்தது. உள்ளே 400 மீட்டர் தொலைவில், ஆராய்ச்சியாளர் லாரா டெய்லர் பனிப்பாறைகளில் இருந்த நீர் மாதிரிகளைச் சேகரித்தார். "என் கண்களுக்கு எட்டிய வரை உயர்ந்திருந்த மிகப்பெரிய பனிச் சுவரைக் கண்டேன். அது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டிருந்தது. ஆங்காங்கே பனித் துண்டுகளாக உதிர்ந்து கொண்டிருந்தன. அது பார்க்க மிகவும் அற்புதமாக இருந்தது," என்று அவர் கேம்பிரிட்ஜில் உள்ள தனது ஆய்வகத்தில் இருந்து விளக்கினார். அங்கு அவர் சேகரித்து வந்த மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்து வருகிறார். கோனோ கார்பஸ்: அழகான ஆபத்தா இந்த மரங்கள்? இவற்றை தமிழகத்தில் வளர்க்கத் தடை ஏன்?4 மணி நேரங்களுக்கு முன்னர் தினமும் தொழ மாட்டார்கள், ரமலான் நோன்பு இருக்க மாட்டார்கள் - இஸ்லாம் மதத்தில் இப்படி ஒரு குழு இருப்பது தெரியுமா?26 ஜனவரி 2025 பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC படக்குறிப்பு, A23a-இல் இருந்து லாரா டெய்லர் எடுத்த நீர் மாதிரிகள், பனிப்பாறைகள் கரிம சுழற்சியை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராய உதவுகின்றன பனிப்பாறையில் இருந்து உருகும் நீர், தெற்கு கடலில் கரிம சுழற்சியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர் ஆய்வு செய்கிறார். "இது நாம் குடிப்பதைப் போன்ற தண்ணீர் மட்டுமில்லை. இது ஊட்டச்சத்துகளும் ரசாயனங்களும் நிறைந்தது. இதனுள்ளே மிதவை நுண்ணுயிரிகளும் உறைந்திருக்கும்," என்று டெய்லர் கூறுகிறார். பனிப்பாறைகள் உருகும் போது நுண்துகள்களையும் கடலில் கலக்க விடுகின்றன. இந்தத் துகள்கள் கடலின் இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளை மாற்றுகிறது. அந்தத் துகள்கள் கடலில் மூழ்கினால், காலநிலை மாற்றத்தைத் துரிதப்படுத்தக் கூடிய கரிம வாயுவை காற்றில் இருந்து அவற்றால் கிரகிக்க உதவ முடியும். இந்தச் செயல்முறை, வளிமண்டலத்தில் இருக்கும் கரிமத்தை ஓரளவு கிரகித்து, ஆழ்கடலில் சேமிக்க உதவுகிறது. பனிப் பாறைகளை யாராலும் கணிக்க முடியாது. ஆகவே, அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் விரைவில், இந்த பிரமாண்ட பனிப்பாறை தெற்கு ஜார்ஜியா போன்ற தீவுகளில் இருந்தே பார்க்கும் அளவுக்கு நெருங்கி வரும். அப்போது, ஒரு பெருந்தீவு நெருங்கி வருவதைப் போல அது தோற்றமளிக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg8v0lq3gqo1 point
-
புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்!
🎧 அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் வசந்த காலத்தில் மழை தரும் மேகம் அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் இசையெனும் அமுதினில் அவளொரு பாகம் இந்திரலோகத்து சக்கரவாகம்1 point
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
புலியோடையும் ,சகரானோடையும் மல்லுக்கட்டின மகிந்தவுக்கே ..பாதுகாப்பு குறைத்தாயிற்று....இதென்னடாவென்ற்றால்...சும்மா இருக்கிற சுமந்திரனுக்கு பாதுகாப்பாம்...😄1 point
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
வடகிழக்கு தமிழ் மக்களால் வெறுக்கப்பட்ட செத்து போன கிளிக்கு பாதுகாப்பு கொடுத்து என்ன ஆவ போகுது ?1 point
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 pointசந்தேகத்தை தீர்க்கும் வரை என் கட்டை வேகாது🤣. உங்களுக்கு மட்டு அல்ல… பலருக்கு…. எனக்கு பிடித்த யாழ்கள உறவுகள் பலருக்கு🙏.1 point
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 pointமன்னிக்க வேண்டு அண்ணை. என்னை பொறுத்தமட்டில் கருணா, கேபி, போல ஒரு விசம்தான் சீமான். இந்த மூவரினையும், அவர்களின் ஆதரவாளர் முன்வைக்கும் கருத்த்தையும் எதிர்ப்பதில் எந்த சமரசமும், எல்லையும் எனக்கு இல்லை.1 point
-
பாட்டுக் கதைகள்
1 point
-
"கால மாற்றத்தில் காணாத புள்ளினம்"
நம் முன்னோர்கள் கலிகாலம் என இதைத்தான் அறிவுறித்தினரோ? கவிதை ஆணித்தரம்.1 point
-
பாட்டுக் கதைகள்
1 pointபாடல் இரண்டு - செந்தூர பூவே செந்தூர பூவே --------------------------------------------------------------------------- ஊரில் பல பாடசாலைகள் இருந்தன. வீட்டுக்கு அருகிலேயே ஒரு பாடசாலை இருந்தது. கொஞ்ச தூரத்திலும் ஒரு பாடசாலை இருந்தது. ஆனால் என்னை வீட்டிலிருந்து அதிக தூரத்தில் இருக்கும் பாடசாலையிலேயே சேர்த்தார்கள். என்னை மட்டும் இல்லை, எங்கள் வீட்டில் எல்லோரும் அந்தப் பாடசாலைக்கு தான் போய் வந்து கொண்டிருந்தார்கள். அது தான் எங்களின் பரம்பரைப் பாடசாலை என்று காரணம் கூறப்பட்டது. சார்பட்டா பரம்பரைக் கதைகள் போல பரம்பரைப் பெருமைகள் எதுவும் வெளி வந்திருக்காத அந்த நாளில், இது என்ன பெரிய பரம்பரை, இதற்காக நான் ஏன் நேர்த்திகடன் போல தினமும் நடக்க வேண்டும் என்று அலுப்பாக இருந்தது. அந்தப் பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. சில நாட்களில் நான் போகும் பொழுது பாடசாலையின் கதவுகள் திறந்திருக்காது. அவ்வளவு முன்னரே அங்கு போயிருக்கின்றேன். படிப்பில் எக்கச்சக்கமான ஆர்வம் என்றோ, பாடசாலையில் விருப்பமோ என்றில்லை. இது ஒரு பிறவிப் பழக்கம். இன்றும் இது தொடர்கின்றது. பாடசாலைக்கு அருகிலேயே ஒரு ஆசிரியரின் வீடு இருந்தது. அவர் வீட்டில் போய்க் கேட்டால், வந்து கதவைத் திறந்துவிடுவார்கள். ஆசிரியர் அலுத்திருக்கமாட்டார், ஆனால் அவர் வீட்டில் இருந்தவர்களுக்கு இது அலுப்பாக இருந்திருக்கக்கூடும். பாடசாலை முடிந்தால் வீட்டை எப்போதும் போய்க் கொள்ளலாம். தேடவே மாட்டார்கள். ஒரு நாள் பூரா போகாமல் இருந்தால் கூட, அப்படி ஒரு நாளும் நடக்கவில்லை, அடுத்த நாள் வந்து விடுவான் என்று இருந்திருப்பார்களோ தெரியாது. எப்போதும் பாடசாலைக்கு வருவது ஒரே வழியில் தான் என்றாலும், திரும்பிப் போவதற்கு மூன்று வழிகள் இருந்தன. வந்த வழியிலேயே, தெருக்களினூடாக, திரும்பிப் போவது முதலாவது வழி. இரண்டாவது வழி கடற்கரையின் வழியே நடந்து போய், பின்னர் ஒரு ஒழுங்கையினூடாக பிரதான வீதியைக் கடந்து வீட்டுக்கு போகும் வழி. மூன்றாவது வழி கடலினூடாக நடந்து போவது. முழங்கால் ஆழம் வரை இருக்கும் கடலுக்குள் போய், பின்னர் அப்படியே நடப்பது. இது ஒரு பெரிய உடற்பயிற்சியாக இன்று உலகெங்கும் செய்யப்படுகின்றது. நாங்கள் அன்று முழங்கால் அளவு ஆழக் கடலில் பறந்திருக்கின்றோம். பவளப்பாறைகள் காலைக் கிழித்து இரத்தம் சொட்டச் சொட்ட எதுவுமே நடக்காத மாதிரி இருந்திருக்கின்றோம். கடல் பொங்குவதும், கடல் வற்றி நீர் உட் போவதும் ஒரு சுழற்சியில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு. சில நாட்களிலேயே இந்த அறிவு அனுபவத்தில் வந்துவிட்டது. எந்த நேரம் கடல் பொங்கும், எப்போது நீர் வற்றும் என்று தெரிய ஆரம்பித்திருந்தது. பாடசாலை விடும் நேரத்தில் கடல் பொங்கும் என்று தெரிந்தால், அன்று அந்தப் பாதையை தவிர்த்து, வந்த வழியிலேயே தெருக்களினூடாக வீட்டுக்கு போக வேண்டும். அப்படியே உடனேயே நேரே போய் வீட்டை என்ன தான் செய்வது. போகும் வழியில் மூன்று வாசிகசாலைகள் இருந்தன. சந்தியில் இருந்த வாசிகசாலை பெரியது. ஆங்கில, தமிழ் செய்தித்தாள்கள், ஆனந்த விகடன், குமுதம் போன்ற இந்திய வார வெளியீடுகள், டொமினிக் ஜீவாவின் மல்லிகை என்று எல்லா வகையானவைகளும் அங்கே போடப்பட்டுக்கொண்டிருந்தன. அந்த வயதில் எப்போதும் என்னை ஈர்த்தது சினிமாச் சஞ்சிகைகளான பொம்மையும், ஜெமினி சினிமாவும் தான். ஒரு பத்து வயது அளவில் இருக்கும் பையனுக்கு இவை தான் அன்றைய டிக்டாக். ஜெமினி சினிமாவில் நடுப்பக்கத்தில், இரண்டு பக்கத்தையும் சேர்த்து, ஒரு நடிகையின் படம் இருக்கும். ஆனால் அதை யாரோ புதிதாக ஜெமினி சினிமாவை போட்ட அன்றே கிழித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். இதை ஒரு பிரச்சனையாக பெரியவர்கள் கதைத்தார்கள். எல்லோரும் அந்தப் படத்தை பார்த்த பின், அந்தப் படத்தை கிழித்துக் கொண்டு போனால் பரவாயில்லை என்று நினைத்தார்களோ என்னவோ. அதனால் ஜெமினி சினிமாவிற்கு கிட்டே போய் வருபவர்களை எல்லோரும் கொஞ்சம் கவனமாகவே பார்க்காத மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொம்மைக்கு அவ்வளவு காவலும், கண்காணிப்பும் இருக்கவில்லை. அன்று பொம்மையில் வரும் கேள்வி - பதில் பகுதி மிகவும் பிடிக்கும். அன்று ஆகப்பெரிய அறிவாளிகள் என்று நான் நினைத்திருந்தது எம்ஜிஆரையும், சிவாஜியையும் தான். ஒரு பொம்மையில் கேள்விகளுக்கு சிவாஜி பதிலளித்து இருந்தார். இந்த வருடத்தின் சிறந்த பாடல் எது என்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 'செந்தூர பூவே செந்தூர பூவே...........' என்று அவர் பதில் சொல்லியிருந்தார். நான் இந்த பாடலை அதுவரை கேட்டிருக்கவில்லை. இந்தப் பாட்டை எப்படியாவது கேட்டு விடவேண்டும் என்று மனதில் குறித்து வைத்துக்கொண்டேன். அடுத்த நாள், வழமை போலவே, நான் பாடசாலை போன பொழுது, பாடசாலைக் கதவு பூட்டியிருந்தது. மெதுவாக ஆசிரியரின் வீட்டுக்குள் போனேன். 'சரி வா.................' என்று ஆசிரியர் திறப்புக் கொத்துடன் வந்தார். அந்த நேரம் அவர்களின் வானொலியில் 'செந்தூர பூவே செந்தூர பூவே..........' என்று ஆரம்பித்தது. நான் அசையவேயில்லை. ஆயிரம் தடவைகள் அல்லது அதற்கு மேலும் இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டேன். இந்தப் பாடல் அசைய விடுவதேயில்லை. காணொளியாகப் பார்த்தாலும் அப்படியே. ஶ்ரீதேவியை அவரின் வீட்டில் இருந்து கூட்டி வந்து, இந்தப் பாடலில் அப்படியே நடிக்க வைத்திருப்பார்கள். அவர் இந்தப் பாடலில் கொஞ்சம் கறுப்பாக இருப்பது போல இருக்கும். ஒரு ஊரில் இருக்கும் மிக அழகான பெண் போன்று தான் இருப்பார். ஒரு நடிகை போன்று இந்தப் பாடலில் அவர் இருக்கவில்லை. இப்போது எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் அப்படியே அவரின் கடைசி நாட்களும் ஞாபகத்திற்கு வரும். அது வேற ஶ்ரீதேவி, செந்தூரப் பூ ஶ்ரீதேவி வேற என்றும் மனதில் தோன்றிக் கொண்டிருக்கின்றது.1 point
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
திரியை முழுமையாக முடக்கி... இழு, இழு என்று இழுத்து போரடிக்க வைத்தால், இப்படிதான் நடக்கும் பையா! 🤗1 point
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் உரிய தரத்தில் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்... நாற்புறமும் கடலால் சூழப்படட இலங்கையில் மீன்கள் இருக்கின்றன . ஆனால் "தரம் " தான் இல்லை. அதை தரக்கட்டுப்பாடு செய்பவர்களிடம் கேட்க வேண்டும் .ஐஸ் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் .அதற்கான தொழில் நுட்ப வசதியை பெருக்க வேண்டும்.1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
இறந்த பின் யாரைப் பற்றியும் எதுவும் பேசுவதில் ஆர்வமில்லாதவள் நான்.பெற்றோர், பிள்ளைகளின் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாது வாழப் பழகி கொண்டால் நன்று.இருவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.🙏🙏1 point- Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
ஏனையா வாகனத்தில் பிழை சொல்கிறீர்கள்? வாகனங்களை சாரதிகளே ஓட்டுகிறார்கள். வாகனங்கள் தானியங்கிகள் அல்ல. கடந்த 15 வருடங்களாக இந்த விபத்து நடைபெற்ற வீதியைப் பாவித்து வந்திருக்கிறேன்… கிழமைக்கு குறைந்தது இரண்டு விபத்துக்களையாவது ஒரு 25 KM இடைவெளிக்குள் காணலாம். விபத்துகளுக்கு பிரதான காரணம் சாரதிகளின் poor judgment தான். இந்த வீதி Taunton 70-90KM வேக அலகைக் கொண்டவை. இந்த வீதியைச் சந்திக்கும் மற்றைய வீதிகள் அனைத்தும் 60Km கொண்டவை. 60Km ல் இருந்து பிரதான வீதி Taunton Road க்கு வந்து சேரும்போது அந்த வீதி பல இடங்களில் 70, 80, 90 Km ஆக மாறுகிறது. ஆனால் வாகனங்கள் அதற்கும் அதிக வேகத்தில் செலுத்துகிறார்கள். Taunton road ல் வந்து சேரும்போது வாகன சாரதிகள் Taunton Road ல் வரும் வாகனங்களின் வேகத்தை சரியாகக் கணிப்பிடத் தவறுகிறார்கள். அங்கேதான் தவறு ஆரம்பமாகிறது. இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும் 🙏1 point- சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
சில வருடங்களுக்கு முன் இவரும் சசின் மகளும் காதல் என இணையத்தில் கசிந்தது இப்போது அது முடிந்து விட்டது இவர் எல்லாம் பெரிய ஜாம்பவான் கிடையாது சில மச்சில் நல்ல விளையாடி இருக்கிறார் அம்மட்டும் தான்.................இவரை விட Yashasvi Jaiswal சிறந்த இளம் வீரர் மூன்று வகை கிரிக்கேட்டில் எப்படி விளையாடனும் Yashasvi Jaiswalக்கு நங்கு தெரியும் இந்த நூற்றாண்டு கண்ட இளம் திறமையான வீரர் Yashasvi Jaiswal🙏👍................1 point- 1/12/2003 இலிருந்து 8/09/2004 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்த குறிப்புக்கள் - த.சபாரட்ணம்
பெளத்த பிக்குகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்த ரணில் அரசும், அரசியலுக்குள் நுழைந்த மகாசங்கத்தினரும் 4 தை, 2004 கடந்தவாரம் நான் எழுதிய குறிப்பில் தென்னிலங்கையின் பெளத்த சிங்கள இனவாதிகள் மீளவும் தம்மை அரசியலின் மையத்திற்குள் கொண்டுவந்திருப்பதையும், அதனால் ஏற்படப்போகும் அபாயகரமான நிலை குறித்தும் எழுதியிருந்தேன். நான் கூறியவாறே பெளத்த துறவிகளளின் அழுத்தத்திற்குப் பணிந்து அவர்களின் விருப்பத்தின்படி நடக்க அரசாங்கம் ஒத்துக்கொண்டிருக்கிறது. உண்ணாவிரதம் இருந்த பெளத்த துறவிகளுக்கு, உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாளான கடந்த புதன்கிழமையன்று உணவுப் பொட்டலங்களை எடுத்துச் சென்ற பெளத்த சாசன அமைச்சர் லொக்குபண்டார, அவர்களின் அருகில் அமர்வதற்கு அனுமதிகோரி இரைஞ்சியிருந்தார். "அதி வணக்கத்திற்குரிய மகான்களே, நான் உங்களின் அருகில் அமர்வதற்கு அடியேனுக்கு அனுமதி தருவீர்களா?" என்று உண்ணாவிரதத்தில் அன்று காலையே பங்குகொண்டிருந்த பிரபல பெளத்த இனவாத பிக்கு, சோபித தேரவிடம் பவ்வியமாக இரைஞ்சினார். அமைச்சரை ஏளனமாகப் பார்த்த சோபித தேரை, "அமைச்சரே, நீங்கள் அமரலாம், ஆனால் எதற்காக உங்களின் நேரத்தினை இங்கே வீணடிக்கிறீர்கள்? முதலில் சென்று மதமாற்றங்களில் ஈடுபடுவோருக்கெதிரான சட்டங்களை இயற்றுங்கள்" என்று கூறினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் லொக்குபண்டார, "நான் நிச்சயமாக பாராளுமன்றத்தில் இதுதொடர்பான சட்டங்களை முன்வைப்பேன். எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இதற்கான தனது ஆதரவினைத் தருவதாக உறுதியளித்திருக்கிறார்" என்று கூறினார். ஆனால் உண்ணாவிரதத்தை முதல் நாளன்று ஆரம்பித்துவைத்த இன்னொரு இனவாதப் பிக்குவும் இனவாத பிக்குகள் அமைப்பான தேசிய பிக்குகள் முன்னணி எனும் அமைப்பின் தலைவருமான எல்லாவெல மேதானந்த தேரை, அமைச்சரின் உறுதிமொழியினை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பாராளுமன்றத்தில் அமைச்சரினால் சட்டவரைபு முன்வைக்கப்படும் வரை தான் உண்ணாவிரதத்தினை நிறுத்தப்போவதில்லை என்று அவர் சபதம் செய்தார். இதனையடுத்து பிரதமர் ரணிலுடன் கலந்தாலோசித்த லொக்குபண்டார, மேலும் பல முக்கிய பிக்குகளுடன் கலந்தாலோசித்து உண்ணாவிரத்த்தினை முடிவிற்குக் கொண்டுவரும் செயற்பாடுகளில் ஈடுபட்டார். மதமாற்றும் விடயங்களைத் தடுப்பதற்கான சட்டத்தினைஉடனடியாகக் கொண்டுவருவேன் என்று பிக்குகளிடம் உறுதியளித்த ரணில், ஜே.வி. பி யினரும் ஏனைய இனவாத அமைப்புக்களும் பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசியல் இலாபம் அடைய எத்தனிப்பதாகக் குற்றஞ்சாட்டினார். "நாடு ஏற்கனவே இனக் குரோதத்தினால் கடுமையான விளைவுக;ளைச் சந்தித்து நிற்கின்றது. மத ரீதியிலான பிரச்சினை ஒன்றை உருவாக்குவதன் ஊடாக நிலைமையினை இன்னமும் சீரழிக்கவே சிலர் விரும்புகின்றனர்" என்று அவர் கூறினார். லொக்குபண்டாரவினால் வழங்கப்பட்ட வாய்மூல உறுதிமொழியினை மேதானந்த தேரை நிராகரித்துவிட்டதையடுத்து அமைச்சர் லொக்குபண்டாரவும், அமைச்சர் கரு ஜயசூரியவும் இணைந்து தேசிய பிக்குகள் முன்னணியினருடன் பேரம்பேசலில் ஈடுபட்டனர். இப்பேரம்பேசலின் ஊடாக பெளத்த விவகாரங்களுக்கான குழுவொன்றினை 14 நாட்களுக்குள் உருவாக்கவும், 60 நாட்களுக்குள் மதமாற்றத்தினைத் தடுக்கும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தவும் ஒத்துக்கொள்ளப்பட்டது. பேரம்பேசலில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவேன் என்று லொக்குபண்டார எழுத்துவடிவில் உறுதிமொழியொன்றினை வழங்கினார். இதனையடுத்து பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. பெளத்த சமயம் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகளை ஆராய்ந்து உடனடியாகத் தீர்த்துவைக்கவென்று அமைக்கப்பட்ட பெளத்த விவகார குழு எடுக்கும் தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்றுவதென்று அமைச்சர் லொக்குபண்டார உறுதிவழங்கினார். நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெளத்த பீடத்தினதும் ஐந்து பிரதிநிதிகளும், தேசிய பிக்குகள் முன்னணியின் உறுப்பினர்களும் அடங்கிய பெளத்த விவகாரக் குழு உடனடியாக அமைக்கப்பட்டது. மதமாற்றத் தடுப்பு சட்டத்தை வரைய அமைச்சரவை உபகுழுவொன்றினை ரணில் நியமித்தார். இக்குழுவில் அமைச்சர்களான லொக்குபண்டார, ஜோன் அமரதுங்க, மகேஸ்வரன், ரவுப் ஹக்கீம் மற்றும் கருணாசேன கொடித்துவக்கு ஆகியோர் அங்கம் வகித்தனர். அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் மதச் சுதந்திரம் என்பது ஒருவர் தனது மதத்தினைச் சுதந்திரமாக அனுட்டிக்க முடியும் என்று கூறும் அதேவேளை, அவர் இன்னொரு மதப்பிரிவினரிடத்தில் தனது மதத்தினைப் பலவந்தமாகத் திணிக்கமுடியாது என்று கூறப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் தொடரப்பட்ட அடிப்படி உரிமை மீறல் வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றாம் மதமாற்றத் தடைச்சட்டத்திற்கும் உடனடியாகவே அனுமதி வழங்கிவிடும் என்பதனை நாம் எதிர்பார்க்க முடியும். ஒருவரை இன்னொரு மதத்திற்கு மாற்றம் செய்வதை உச்சநீதிமன்றம் நிச்சயம் அனுமதிக்கப்போவதில்லை என்பது திண்ணம். "பெளத்த துறவிகளின் அழுத்தத்திற்கு உடனடியாகவும், வினைத்திறனுடனும் அரசு செயற்பட்ட விதத்தினைப் பார்க்கும் எவருக்கும் அரசியல் விவகாரங்களிலும் இனவாதப் பிக்குகள் மிக இலகுவாகத் தலையீடு செய்வதற்கான முன்னுதாரணத்தை அரசு வழங்கியிருக்கிறது என்பதனை புரிந்துகொள்ள முடியும்" என்று கொழும்பிலுள்ள அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். பிக்குகளின் உண்ணாவிரதமும் அதற்கு அரசு அடிபணித்த விதத்தினையும் அரசியல் அவதானிகள் விமர்சித்து வரும் அதேவேளை மகாசங்கத்தினரை அரசியலுக்குள் இழுத்துவிடும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரணிலை கடந்த வாரம் சந்தித்த பீடாதிபதிகள், ரணிலுக்கும் சந்திரிக்காவிற்கும் இடையிலான சிக்கலை தமக்கு விளங்கப்படுத்துமாறு கோரினர். இதனையடுத்து அவர்களுக்கு விளக்காமான பதிலை அளித்த ரணில் சமாதானப் பேச்சுக்கள் சுமூகமான முறையில் நடப்பதற்கு பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட அமைச்சுக்கள் மீதான அதிகாரம் தன்னிடம் இருக்கவேண்டும் என்று கூறினார். இதனையடுத்து ரணிலுடன் பேசிய பீடாதிபதிகள், ரணிலின் விளக்கத்தினைத் தாம் புரிந்துகொள்வதாகவும், ஆனால் சந்திரிக்கா இதுகுறித்து தமக்கு வேறுவகையான விளக்கத்தினை வழங்கியிருப்பதாகவும் கூறினர். பீடாதிபதிகளில் அதிகாரம் படைத்தவராகக் காணப்படும் பெல்லன்வில விமலரத்ன தேரை பேசும்போது, "நீங்களும், சந்திரிக்காவும் நேரடியாக எங்கள் முன்னால் வந்து உங்களின் பிரச்சினையினைக் கூறுவதன் மூலமே எம்மால் இதுகுறித்த முடிவிற்கு வரமுடியும். அதன் மூலமே எம்மால் இதற்கான தீர்வினை எடுக்கமுடியும்" என்றும் கூறினார். இதனை நகைச்சுவையாக மறுதலித்த ரணில், "நாம் இருவரும் ஒரே இடத்தில் எமது பக்க நியாயங்களைப் பேசினோம் என்றால் பொறிபறக்கும்" என்று கூறினார். இதனையடுத்து பீடாதிபதிகளின் மத்தியஸ்த்திற்கான முயற்சி கைவிடப்பட்டது. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த டெயிலி மிரரின் ஆசிரியர்த் தலையங்கம் பீடாதிபதிகள் தொடர்ந்தும் ரணிலுக்கும் சந்திர்க்க்காவுக்கும் இடையே சமரசத்தில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டிருந்தது. அப்பத்திரிக்கையின் செய்தியில், "எமது பார்வையில் பீடாதிபதிகளின் முயற்சி எளிதில் தட்டிக் கழித்துவிடும் ஒன்றல்ல. அது அவர்களின் கடமையென்றே நாம் நினைக்கிறோம். நாடு தற்போது இருக்கும் மிகவும் அபாயகரமான சூழ்நிலையில், சரித்திர காலம் தொட்டு பீடாதிபதிகள் ஆற்றிவந்த அரசியல்த்தலைவர்களுக்கான அறிவுரையினையும், வழிகாட்டலினையும் அவர்கள் தற்போதும் வழங்க வேண்டும். இதனூடாகவே நாடு எதிர்நோக்கும் சிக்கலான விடயங்களுக்கு எம்மால் தீர்வு காண முடியும்" என்று கூறப்பட்டிருந்தது. மேலும் "ரணிலிற்கும், சந்திரிக்காவிற்கும் இடையிலான சிக்கலைத் தீர்ப்பதற்கு மகாசங்கத்தினர் திறமையுள்ள பிக்குகள் சிலரைக் கொண்ட குழுவொன்றினை அமைத்து, பிரச்சினையினை சரியாக ஆராய்ந்து இரு தலைவர்களும் ஒத்துக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றும் அவ்வாசிரியத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.1 point- தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
நேற்று உரிக்காமல் பொச்சோட 280 தேங்காய் 105 ரூபாய்ப்படி முப்பதாயிர சொச்சத்துக்கு குடுத்தன்.. உரிக்காத தேங்காயே இந்த விலைபோகுது.. அதுவும் வீட்ட வந்து எடுத்துக்கொண்டு போகிறார்கள்.. அவ்வளவு தேங்காய்க்கு டிமாண்ட் இருக்கு இப்ப.. நிற்க.. இவ்வளவும் தானாய் பழுத்து விழுந்த தேங்காய்தான்.. இப்ப தேங்காய் புடுங்க உரிக்க எல்லாம் வேலைக்கு ஆள்கள் இல்லை.. இப்ப மரம் ஏறும் தொழிலாளர்கள் அருகி வருகின்றனர்.. அவர்கள் தலைமுறை எல்லாம் படித்தும், வெளிநாடு போயும், வேறு மெக்கானிக் மேசன் நகைவேலை போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர்.. இந்த தொழில்களை வைத்துதானே சாதிகளை பிரித்தார்கள்.. இப்பொழுது இந்த பரம்பரை தொழிலை நாங்கள் செய்யமாட்டம் என்பதும் சாதி ஒழிப்பில் முக்கிமான பங்காற்றுகிறது.. அப்புறம் பொருளாதரம்.. பொருளாதாரம் மேம்படும் போது நீ என்னடா மயிர்சாதி என்ன சொல்லுறது உன்னட்ட நான் என்ன மயித்துக்கு வேலைக்கு வரப்போறன் என்ற நிலை வரும்போது சாதி தேவையில்லாத ஆணியாகப்போய்விடும்.. இப்ப வெளிநாட்டுக்கு போய் எல்லா சாதியினரும் நல்ல வசதியாக இருக்கிறார்கள்.. மேல்மாடி வீடுகள் என்ன கார் என்ன.. எங்கட ஊரிலையே தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் பகுதிகள் ஓலைக்குடிசைகளுடன் புறிம்பாக தெரியும்.. இண்டைக்கு ஊரே வெளிநாடு போய் எல்லாரும் வசதியான்வர்கள்.. யாரும் யாரையும் கணக்கில் எடுப்பதில்லை.. நீ ஜயரா இரு இல்லா ஆட்டுக்குடீயா இரு .. எனக்கென்ன.. எண்ட மனநிலை.. மிகச்சிறந்த மாற்றம்.. இது தொடரவேண்டும்.. இப்படி பரம்பரையாக மீன்பிடிப்பவர்கள், தச்சுவேலை செய்பவர்கள் செய்பவர்கள், நகை வேலை செய்பவர்கள் எல்லாம் தம் தம் குலத்தொழிலை விட்டு மாறி வேறு வேலைகள் படிப்பு என்று பொருளாதாரத்தில் மேம்படவேண்டும்.. இது சாதி அமைப்பின் தலையில் ஓங்கி அடிக்கும் சம்மட்டி அடிகளில் பலமான ஒரு அடியாக இருக்கும்.. மீன் தேவை எண்டால் மீனவர்கள் அல்லாத வெள்ளாளரும் மற்றைய சமூகத்தவரும் மீன்பிடிக்க போகனும்.. தேங்காய் வேணும் என்றால் கோயிலுக்கு புக்கை பொங்கவேணும் எண்டால் ஜயர் ஏறிபுடுங்கட்டும்.. வெளிநாடுகளில் தொழில்கள் சாதிமுறை இல்லாமல் லாபம் பார்த்து விரும்பியவர்கள் எல்லோரும் செய்கிறார்கள்.. முடிதிருத்த யாரும் படிக்கலாம்.. அதுபோல ஊரில் இன்னும் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிள்ளைகள் படிப்பு, வெளிநாடு என்று போய் பொருளாதரத்தில் மேம்படட்டும்.. எங்கள் தலைமுறையில் இல்லை எண்டாலும் இன்னும் ஒரு மூன்று நாலு தலைமுறையில் கிழடுகள் ஆரும் வாங்கில இருந்து கொண்டு ரைம்பாசுக்கு பழையகதை பேசுற விடயமாகட்டும் சாதி.. புதுத்தலைமுறை உதுக்கு நேரமில்லாமல் இருக்கட்டும்..1 point- தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
இதுவரை கூறப்பட்ட காரணங்கள் 1. குரங்கு 2. வெப்பநிலை ஆனால் உண்மை இன்னமும் வெளிவரவில்லையே??? $$$ உள்ளூர்ச் சந்தையை புறக்கணித்து ஏற்றுமதியை ஊக்குவித்ததன் பலன். பாரிய தென்னந்தோட்டங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க தமது உற்பத்திகளை ஏற்றுமதி நோக்கி திருப்பியதால் டாலர் இருக்கு தின்ன தேங்காய் இல்லையே…..! யாழ் உறவுகளுக்கு ஞாபகம் இருக்கும் “தேங்காய் தண்ணீர் ஏற்றுமதி”1 point - Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
Important Information
By using this site, you agree to our Terms of Use.