Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்12Points19134Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்11Points7054Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்10Points33600Posts -
island
கருத்துக்கள உறவுகள்8Points1749Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/02/25 in Posts
-
வைரஸ் தாக்கம் காரணமாக பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் உயிரிழப்பு ; கிளிநொச்சி பண்ணை உரிமையாளர் கவலை !
ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் (African Swine fever) கடந்த ஒக்ரோபர் முதல் இலங்கையினுள் நுழைந்து வேகமாகச் சகல மாகாணங்களுக்கும் பரவி வருகிறது. யால காட்டில் காட்டுப் பன்றிகளுக்குக் கூட பரவி விட்டது எனக் கண்டறிந்திருக்கிறார்கள். பன்றிகளில் இந்த நோயின் இறப்பு வீதம் ஏறத்தாழ 100% - ஒரு பன்றியும் உயிர் பிழைக்காது. ஆனால் மனிதர்களுக்கும், ஏனைய கால் நடைகளுக்கும் ஆபத்தில்லை. கட்டுப் படுத்துவது மிகக் கடினம். தடுப்பூசிகள் இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை. நோய் தொற்றிய, தொற்றாத சகல பண்ணைகளையும் போக்குவரத்தைக் கட்டுப் படுத்தித் (quarantine) தான் இதைப் பரவாமல் தடுக்கலாம். பண்ணைக்குள் ஒரு சைக்கிள் வந்தால் கூட, அதன் சக்கரத்தை தொற்று நீக்கியால் சுத்திகரித்துத் தான் அனுமதிக்க வேண்டும். இப்படியான இறுக்கமான quarantine கட்டுப் பாடுகளை இலங்கையின் பெரும்பாலான பண்ணைகளில் நினைத்துப் பார்க்கவே முடியாது. இந்த பண்ணையாளர் போன்றோர் என்ன செய்யலாம்? பண்ணைக்கு காப்புறுதி இருந்தால் (சாதாரணமாக இது எடுத்திருக்க வேண்டும்) அதன் மூலம் நட்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், மீண்டும் புதிதாக அதே நிலத்தில் பன்றிப் பண்ணை தொடங்குவதை குறைந்தது 1 வருடமாவது தள்ளிப் போட வேண்டும். எங்கள் நாட்டில் இருக்கும் கட்டுப் பாட்டு முறைகளின் படி, இந்த வைரஸ் நோய் இலங்கையில் மறையப் போவதில்லை. எனவே பன்றிப் பண்ணையை விட்டு வேறு கால் நடைகளைப் பற்றிப் யோசிப்பது நல்லது.5 points
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
இப்பேட்டியில் தமிழர்கள் திராவிடர்கள் என்று கிட்டு கூறியுள்ளதுடன் பெரியாரையும் பாராட்டியுள்ளார்.4 points
-
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்
3 pointsஅமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம் சிவதாசன் அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப் நேற்று இரவு (பெப். 01) விடுத்த அதிரடி வரித்திணிப்பு அறிவித்தலின்படி தனது அயல் நாடுகளான கனடா மற்றும் மெக்சிக்கோவிற்கு 25%; சீனாவுக்கு 10% என்ற வகையில் இறக்குமதித் தீர்வைகளை அறிவித்திருக்கிறார். ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரே பல்வேறு வாண வேடிக்கைகளை நிகழ்த்தியவர் ட்றம்ப். ‘இவர் சும்மா வெருட்டுகிறார், பொறுத்திருந்து பார்ப்போம்’ எனப் பல பண்டிதர்கள் அப்போது கூறினார்கள். இப்போது அது நிஜமாகியிருக்கிறது. இந்த இறக்குமதித் தீர்வையால் அமெரிக்க, கனடிய, மெக்சிக்க, சீன மக்களுக்கு எவ்வித இலாப நட்டங்கள் ஏற்படலாம் என்பதுகூட ‘பொறுத்திருந்து பார்க்கவேண்டிய’ ஒரு விடயம் தான். இத்தீர்வையால் ஒன்ராறியோ மாகாணத்தில் மட்டும் பல இலட்சம் பேருக்கு வேலை இலாமல் போகலாம் என ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் கடந்த சில வாரங்களாக வெருட்டி வந்தார். ட்றம்பைப் போலவே ‘ Onrtario is Not For Sale’ எனத் தொப்பியையும் அணிந்துகொண்டு அவர் ட்றம்ப் பாணியில் பவனி வரும்போது இவரும் ஏதோ திட்டமிடுகிறார் எனப்பட்டது. இத் தொப்பி மூலம் திடீரென அவருக்கு ஏறிய மவுசைப் பயன்படுத்தி தனது ஆட்சியை நீடிக்கும் கனவோடு அவரும் அதிரடித் தேர்தல் ஒன்றை அறிவித்திருக்கிறார். இப்படியான அதிரடிகள் அரசியல்வாதிகளால் தற்காலிக வெற்றிகளுக்காகப் பாவிக்கப்படும் சுய இன்ப முயற்சிகள். பெரும்பாலான தருணங்களில் இவை எதிரான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கின்றன. ட்றம்பரைப் போலவே 1930 களில் ஹேர்பேர்ட் ஹூவர் என்னும் அமெரிக்க ஜனாதிபதி 20% இறக்குமதித் தீர்வையை அறிவித்து அமெரிக்க விவசாயிகளைக் காப்பாற்றப் போகிறேன் எனச் சூளுரைத்தார். ஆனால் The Great Depression என்ற பெயரில் அது அமெரிக்க பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டதுமல்லாது அவரையும் பதவியிலிருந்து தூக்கியெறிந்தது. ட்றம்பர் ஜனாதிபதியாக வருவதை வரவேற்று இதற்கு முன் நான் எழுதியிருந்தேன். அதற்குப் பல முணு முணுப்புகள் கிடைத்தன. அவரின் வருகையால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அடிவாங்கும் அதனால் உலகம் கொஞ்சம் சுவாசிக்க இடைவேளை கிடைக்கும் என்பதுவே எனது வரவேற்புக்குக் காரணம். ஆனால் இந்த இறக்குமதித் தீர்வை விவகாரம் நான் எதிர்பார்த்ததை விட மேலும் அதிகமான நன்மைகளைத் தரப்போவதாக இப்போது நான் கருதுகிறேன். அமெரிக்கா உருவாகிய காலத்திலிருந்து கனடாவை அது தனது சின்னத் தம்பியாகவே கருதி வந்தது. கனடாவின் இயற்கை வளங்களை வேறெவரும் அனுபவிக்காதவாறு ‘தலையைத் தடவித்’ தன்னிடமே பாதுகாப்பாக வைத்திருந்தது. கனடிய வரியிறுப்பாளர்களின் தலைகளில் மிளகாயை அரைத்து அது தனது சுயநலத்திற்காக கனடாவைச் சுரண்டிக்கொண்டு வந்தது. அமெரிக்க – கனடிய – மெக்சிக்கோ சுதந்திர வலய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்நாடுகளிடையே பண்டப் பரிவர்த்தனை பரஸ்பர பலன்களுடன் சுமுகமாக நடைபெற்று வந்தமையால் எவரும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. இதன் பலனாக உறவு அமைதியாகவும் பலமாகவும் இருந்தாலும் அமெரிக்கப் பெரியண்ணரே கூடிய அனுகூலங்களைப் பெற்றுவந்தார். முக்கியமான விவகாரங்களில் அவரே முடிவு எடுப்பவராகவும் சின்னத் தம்பிமார் சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளைகளாகவும் இருந்து வந்தனர். வெளியார் அச்சுறுத்தல் எதுவும் இல்லாத நிலையிலும் தமது பாதுகாப்பை பெரியண்ணர் பார்த்துக்கொள்வார் என்ற நிலையில் அவரது சலசலப்புக்களைப் பொருட்படுத்தாது இனிதே வாழ்ந்து வந்தனர். இதனால் தமது சுய தேவைகளைக் கவனிக்காது அசமந்தமாக இருந்து வந்தனர். ட்றம்பரின் வருகையால் அவர்கள் இப்போ விழித்துக்கொண்டு விட்டனர். இனிமேல் கனடாவும் மெக்சிக்கோவும் தமது சுய அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது. சிறிது காலம் சிரமப்பட்டாலும் எதிர்காலச் சந்ததிகளுக்கு அது அவசியமானது என்ற நினைப்பு இவ்விரு நாடுகளுக்கும் ஏற்பட்டதற்கு ட்றம்பருக்கே நன்றி சொல்ல வேண்டும். ட்றம்பரின் அறிபிப்பிற்கு எதிர்வினையா நேற்றிரவு கனடிய பிரதமர் ட்றூடோ பதிலடி அறிவிப்பைக் கொடுத்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து கனடா இறக்குமதி செய்யும் சுமார் $155 பில்லியன் டாலர் பெறுமதியான இறக்குமதிகளுக்கு 25% தீர்வை வசூலிக்கப்படும் என ட்றூடோ அறிவித்திருக்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் $30 பில்லியன் பெறுமதியான இறக்குமதிப் பண்டங்களுக்கு இத்தீர்வை அமுலாக்கப்படும். மேலும் மூன்று வாரங்களின் பின் மீதமான பண்டங்கள் தீர்வைக்குள்ளாக்கப்படும். இத்தீர்வைக்குள்ளாகும் பண்டங்களில் சில: அமெரிக்க பியர், வைன், சில வகை விஸ்கி, பழங்கள், பழரசங்கள், மரக்கறி வகைகள், வாசனைத் தைலங்கள், ஆடைகள், சப்பாத்துகள், வீட்டுப் பாவனை உபகரணங்கள் (appliances), தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள், மரம் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புகள் உட்பட மேலும் பல பொருட்கள் அடங்கும். “ட்றம்ப் கூறுவதைப் போல் அமெரிக்கா ‘பொற்காலத்தில்’ நுழைய வேண்டுமாகில் கனடாவுடன் பங்காளியாகப் போகவேண்டுமே தவிர அதைத் தண்டிக்கக் கூடாது. ட்றம்பின் இந்நடவடிக்கை உங்களுக்குப் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்” என பிரதமர் ட்றூடோ அமெரிக்க மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்லாது “கனடியரும் தம் பங்கினைச் சரியாகச் செய்யவேண்டும்; அமெரிக்கத் தயாரிப்புகளுக்குப் பதிலாக நீங்கள் கனடியத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்” என கனடியருக்கும் அவர் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். இரண்டாம் உலக யுத்ததிற்குப் பிறகு இப்போதுதான் கனடியத் தேசியம் விழித்துக்கொண்டிருக்கிறது. அல்பேர்ட்டா முதல்வரைத் தவிர ஏனைய மாகாண முதல்வர்களும், நாட்டு மக்களும் பிரதமர் பின் அணி திரள்கிறார்கள். சரிந்துபோயிருந்த அவரது செல்வாக்கு திடீரென்று உச்சம் பெறுவதுடன் அவரது கட்சிக்கான ஆதரவையும் அது மேலெழச் செய்திருக்கிறது. ட்றம்பின் அலை சிலவேளைகளில் கன்சர்வேட்டிவ் கட்சியின் சமீபத்திய அலையையே அடித்து சென்றுவிடக்கூடிய ஆபத்தை ஏற்படுத்திருக்கிறது என்கிறார்கள். பொதுமக்கள் பலர் அமெரிக்க தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் இயக்கங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். அல்பேர்ட்டாவின் மசகு எண்ணை இதுவரை குழாய்கள் மூலம் அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மேற்குப் பக்கமாக வான்கூவர் மூலம் ஆசிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய, மானில அரசாங்கங்கள் எடுத்த முயற்சியை சுதேசிகள் நிறுத்தி வைத்திருந்தார்கள். இதனால் கனடாவின் எண்ணை வருமானம் தனியே அமெரிக்காவின் தயவிலேயே இதுவரை இருந்து வருகிறது. ட்றம்பரின் அதிரடி அறிவிப்பிற்குப் பின் சுதேசிகளின் தலைவர்கள் தாமாகவே முன்வந்து மேற்கு இணைப்புக்குழாய் திட்டத்தைத் தொடரும்படி கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதுவரை கனடிய மசகு எண்ணையைச் (crude oil) சுத்திகரிக்கும் நிலையங்கள் எதையும் கனடா தனது மண்ணில் நிர்மாணிக்கவில்லை. அதனால் மசகு எண்ணையை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு சுத்திகரிக்கப்பட்டபின் பெற்றோலாக நாம் வாங்கவேண்டியிருந்தது. ட்றம்பரின் அறிவிப்பின் பின் கனடா இனிமேல் தனது சொந்த சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்துக்கொள்ள வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. மொத்தத்தில் ‘வாயும் வயிறும் வேறு’ என்று கனடியர்கள் உணரும் நிலைக்கு ட்றம்பர் தள்ளிவிட்டிருக்கிறார். இதுவரை அமெரிக்காவின் பணிப்பின் பேரில் சில சீன இறக்குமதிகளுக்கு, குறிப்பாக மின் வாகனங்களுக்கு அதிக தீர்வையை வசூலிக்கப் போவதாக கனடா அறிவித்திருந்தது. இதனால் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மின்வாகங்கள் ரெஸ்லா போன்ற அமெரிக்க இறக்குமதிகளூடன் போட்டி போட முடியாத நிலை இருந்தது. இனிமேல் அமெரிக்க ரெஸ்லா வாகனங்களுக்கு கனடாவில் வழங்கப்படும் ஊக்கப்பணம் நிறுத்தப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது. ட்றம்பரின் இவ்வெருட்டுக்கள் எல்லாம் உண்மையில் இறக்குமதி சம்பந்தப்பட்டதல்ல, அவை வேறு விடயங்களில் கனடா, மெக்சிக்கோ போன்ற நாடுகளை இணங்க வைக்க ட்றம்பர் பாவிக்கும் ஒரு ஏமாற்று வித்தை எனச் சிலர் கூறுகிறார்கள். கொலம்பியாவில் இந்ந்டைமுறையைப் பாவித்து அவர் வெற்றிகண்டுவிட்டார் எனவும் இதன் மூலம் அமெரிக்க எல்லைகளைப் பாதுகாக்க அவர் எடுக்கும் முயற்சிகளே இவை எனவும் சிலர் நம்புகிறார்கள். கனடாவிலிருந்து ஃபென்ரனில் எனப்படும் போதை மருந்து அமெரிக்காவுக்குள் வருகிறது என்பது அவரது குற்றச்சாட்டு. அமெரிக்காவிற்குள் கொண்டுவரப்படும் ஃபென்ரனில் போதை மருந்தின் அளவு 0.2% மட்டுமே. அடுத்த சில மாதங்கள் கனடிய மக்களுக்குச் சிரமமான ஒன்றாக இருக்கலாம். வேலை வாய்ப்புகள் இழக்கப்படலாம். கனடிய டொலரின் பெறுமதி வீழ்ச்சியால் வெளிநாட்டுப் பயணங்கள் அதிக செலவீனத்தை ஏற்படுத்தலாம். வீட்டு விலைகள் மேலும் வீழ்ச்சி காணலாம். வாழ்க்கைப் பயணம் கொஞ்சம் கரடு முரடாக இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும் எதிர்காலம் பிரகாசமாக இருக்குமெனவே பட்சி சொல்கிறது. பார்ப்போம். https://veedu.com/அமெரிக்க-வரி-கனடாவின்-அத/?fbclid=IwY2xjawIMamhleHRuA2FlbQIxMQABHQJ_b9AA4eTrx0CVohnSiUPhQaHDzOVLFWHxmOEEntyOeY6VlWt3yeK0bw_aem_5s4krdp_DP8GXYgD88VeEw#google_vignette3 points
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
நன்றி….. இது ஒரு வரலாற்று ஆவணம். @நன்னிச் சோழன் பார்வைக்கு. ————- இங்கே இரு வருடங்கள் முன் புலிகளின் மதம் சாரா கொள்கை நிலைப்பாட்டை நான் கருத்தாக எடுத்து சொல்லியபோது @குமாரசாமி அண்ணை உட்பட பலர் அது அப்படியில்லை என்றார்கள். புலிகள் இனவாத அரசுக்கு எதிராக மட்டுமே போராடினார்கள், சாதி மதம் இட்டு போராடவில்லை என அவர்களின் பல்பரிமாண போராட்டத்தை ஒற்றை பரிமாண போராட்டமாக சுருக்கினார்கள். குறிப்பாக தலைவரின் மத நம்பிக்கை அற்றதன்மையை, அவர் இயற்கையைதான் எப்போதும் உயர் சக்தியாக சுட்டினார் என சொன்ன போது @MEERA அதை மறுத்தார். அதே போல் புலிகள் பெரியார் மீதும் அவர் சாதித்த விடயங்கள் பற்றியும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்கள் என நான் எழுதியபோதெல்லாம், @Nathamuni போன்றோர் அதை மறுத்துரைத்தனர். இந்த பாதி-உண்மைகள், பொய்கள் எல்லாவறின் மீதும் சம்மட்டியடிகாக வீழ்ந்துள்ளது கேணல் கிட்டுவின் இந்த பேட்டி. 1989 இல் இந்தியாவிடனான போருக்கு பின், இலண்டனில் கொடுத்த பேட்டி இது. இதில் இந்து/சைவ மதம் எமது எதிரி, பெரியார் அதை மெட்டிராசோடு தடுத்தார் என சொல்லி விட்டு. நாம் திராவிடர்கள் எனவும் சொல்கிறார் கேணல் கிட்டு. அவர் இருக்கும் வரை தலைவருக்கு அடுத்து புலிகளின் குரல் என்றால் அது கேணல் கிட்டுதான். மேலே அவர் சொல்லியுள்ளதுதான் மதம், திராவிடம் பற்றிய புலிகளின் நிலைப்பாடு தொடக்கம் முதல் முடிவு வரை. கேணல் கிட்டுவை விட கொள்கை விடயத்தில் தாம் தான் புலிகளின் பேச்சாளர்கள் என கிளம்பி வரும் துணிவு இங்கே எவருக்கும் இல்லை என நினைக்கிறேன் (சொல்ல முடியாது). ——— @வீரப் பையன்26 உங்கள் புலிகளின் கொள்கை நிலைப்பாடு பற்றிய தேடலை வளர்க்க இது உதவலாம்.3 points
-
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்
3 pointsட்ரம்ப் போன்ற "4 வருடங்களுக்கு அப்பால் என்ன நடக்கும்?" என்று யோசிக்க முயலாத தலைவர்களால், உலகில் ஏற்படப் போகும் மாற்றங்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டியிருக்கும் நல்ல கட்டுரை. இதே போன்ற மாற்றங்கள் பல முன்னரும் நடந்திருக்கின்றன. 1. 2000 களில் இந்தியாவுக்கு றொக்கற் இயந்திரங்களை விற்க அமெரிக்கா தடை போட்டு அவர்களது விண்வெளி ஆய்வுகளை முடக்கிய போது, இந்தியாவே சுயமாக, மலிவான றொக்கற் இயந்திரங்களை வடிவமைத்து வெற்றி கண்டது. 2. 2014 இல் கிரைமியாவை ரஷ்யா ஆக்கிரமித்த போது அமெரிக்கா செயலற்றிருந்தது. விழித்துக் கொண்ட ஐரோப்பிய நாடுகள், ஈட்டி முனை என்ற திட்டம் மூலம் சில நேட்டோ அணிகளை உருவாக்கி சகல ஐரோப்பிய நேட்டோ எல்லைகளுக்கு அருகில் நிறுத்தினார்கள். 3. 1970 களில் இஸ்ரேலுக்கு ஆதரவு தந்த அமெரிக்காவிற்கு எரிபொருள் விற்க அரபு நாடுகள் மறுத்து பாரிய எரிபொருள் தட்டுப் பாட்டை ஏற்படுத்தினார்கள். இதன் பின்னர் தான் எரிபொருள் சிக்கனமான வாகனங்களை உருவாக்கவும், உள் நாட்டு எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கவும் ஆரம்பித்தார்கள். பசுமைத் தொழில் நுட்பத்தின் தோற்றுவாய் இது எனலாம். 4. மிக அண்மையாக, ரஷ்யாவின் எரிவாயுவை கணிசமாகக் குறைத்து விட்டு, நோர்வேயில் இருந்து வடகடல் வழியாக எரிவாயுவை இறக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அத்தோடு, அமெரிக்க எரிவாயுவை திரவமாக்கி, ஐரோப்பாவிற்கு LNG ஏற்றுமதி செய்வதை அதிகரித்திருக்கிறார்கள். இது ரஷ்யாவின் ஐரோப்பா மீதான மிரட்டலால் வந்த விளைவு. எனவே, சிவதாசன் சொல்வது போல, கனடா தன் "வேட்டைப் பல்லைத்" தீட்டிக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் சனத்தொகையில் பத்திலொரு பங்கை வைத்துக் கொண்டே இவ்வளவு வளர்ச்சியைக் கண்ட கனடா உண்மையில் ரௌத்திரம் கொண்டால், மெக்சிகோவோடு NAFTA இற்கு மாற்றான ஒரு ஏற்பாட்டைச் செய்து அமெரிக்காவிற்கு சில நட்டங்களை ஏற்படுத்தலாம்!3 points
-
இதற்காக மட்டுமே நாம் தமிழரை கழுவி ஊத்துவதில் கலந்துகொள்வதில்லை.
புலிக்கொடியை பெரியார் - பிரபாகரன் என்று தமிழக மக்களைப் பிளவுபடுத்தி தங்கள் சுயநல உள்ளூர் அரசியலுக்கு சீமானின் நாம் தமிழர் கட்சி பாவிப்பதை தடுக்கமுடியாமல் அதற்கு ஒரு முட்டுக்கொடுப்பு வேறு. புலிகளின் அடையாளங்களை வைத்து பிழைப்பு நடாத்துவோரிடம் இருந்து வேறு எதனை எதிர்பார்க்கமுடியும்?😡 புலிகளின் தத்துவத்தை அடுத்த சந்ததிகளுக்கு கடத்த ஈழத்தமிழருக்கும், புலம்பெயர் ஈழத் தமிழருக்கும் இயலவில்லையா? தூய்மையான இனம் என்று வெறுப்பரசியல் செய்யும் சீமானிடம் புலிக்கொடியை குத்தகைக்குக் கொடுத்துவிட்டதால் சீமானைக் கழுவி ஊத்தமுடியாதுதான்.2 points
-
இதற்காக மட்டுமே நாம் தமிழரை கழுவி ஊத்துவதில் கலந்துகொள்வதில்லை.
காளியம்மாள், ரஜீவ்காந்தி, கல்யாணசுந்தரம் இன்னும் எத்தனையோ பேர் இப்படியான உண்மையானவர்கள் நா த கவில் இருப்பதால், இருந்ததால்தான் …… அவர்கள் எவரையும் கழுவி, கழுவி ஊத்துவதில்லை. உங்களை போலவே புலிக்கொடி, தலைவர் படத்தை காட்டி சீமான் இவர்களையும் கட்டி போட்டுள்ளார். கழுவி, கழுவி உற்றுவது சீமானை மட்டுமே. இப்படியான நல்ல உள்ளங்களை எல்லாம் ஏமாற்றி, கட்டிப்போட்டு, மடை மாற்றுகிறார் என்ற கோபமே சீமானை கொஞ்சம் எக்ஸ்டிராவாக கழுவி ஊத்த காரணம்.2 points
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
பொட்டம்மானைத் தூக்கிப் போட்டு விட்டே முரட்டு முட்டுக் கொடுத்திருக்கிறார்கள், கிட்டுவைக் கடந்து போக முயற்சிக்காமல் இருப்பார்கள் என நம்புகிறீர்களா? Optimist ஐயா நீங்கள்😂!2 points
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
@island தலைப்பை புலிகளின் மதம், பெரியார், திராவிடம் சம்பந்தமான பார்வை என மாற்றுவதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். கேணல் கிட்டு மிக தெளிவாக இங்கே சொல்லபடுவது அமைப்பின் கொள்கை என்பதை சுட்டுகிறார். போகட்டும்… இனி யாரும் சருவசட்டியை தூக்கி கொண்டு வந்தால் இந்த லிங்காலே அடிக்கலாம்தானே🤣2 points
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
@goshan_che பெருந்தலைகள் எல்லால் இதை பார்தது வயிரெரிந்துவிட்டு, பார்காதது போல் சென்றிருப்பர். கிட்டுவை தெலுங்கன் என்றும் திட்டமுடியாது என்ற வெப்பிய்யாரம். 😂 இது ஒரு விரவான பேட்டி. இதனை 1992 ல் VHS video வில் நான் கேட்டுள்ளேன்.2 points
-
சத்தம் இல்லாத தனிமை வேண்டாம்…..- T. கோபிசங்கர், யாழ்ப்பாணம்
சத்தம் இல்லாத தனிமை வேண்டாம்….. அப்ப எங்களுக்கெல்லாம் நேரம் பாக்க மணிக்கூடு தேவையில்லை. காது இருந்தாச் சரி அதிலேம் பாம்புக் காதெண்டா விசேசம். பாம்புக்கு காதில்லாமல் எப்பிடி அதிர்வுகள், உணர்வுகள் மூலம் கேக்குதோ அப்பிடித் தான் எங்கடை சனத்துக்கும் சத்தம் இல்லாமலே எல்லாம் கேக்கும். “சின்னவா ஆறு மணி ஆகீட்டு”எண்டு அம்மா கூப்பிட்டா அது அரை மைலுக்க எங்க இருந்தாலும் கேக்கும், இல்லாட்டியும் கேக்கிறமாதிரி இருக்கும். கேட்ட உடனயே அடுத்து வரி “சாமி கும்பிடோணும் விளையாடினது காணும்” எண்டு சொல்லேக்க கிணத்தடீல நிப்பம். விடிய நாலரை, ஐஞ்சு எண்டு நேரம் மாறமல் அடிக்கிற கோயில் மணி அவையவையின்டை தேவைக்கு ஏத்த மாதிரி எழுப்பி விடும். காலமைக் கோயில்களின்டை மணியடிக்கிற ஐயர் என்னெண்டு தான் ஆரும் எழுப்பாமல் மணிக்கூடும் இல்லாமல் விடிய எழும்பிறாரோ எண்டு யோசிக்க வைக்கும். ஊரில இருந்து கொஞ்சந் தள்ளி ஏதோ ஒரு கோயில் “விநாயகனைக் கூப்பிட்டு வெவ்வினையை வேரோட அறுக்கிற” சீர்காழீன்டை பாட்டு அறைக்குள்ள இறுக்கி மூடிக்கொண்டு படுத்தாலும் இதமா எழுப்பிவிடும். இந்த இடைவெளீக்க பக்கத்து வீட்டை கரப்பைக்கால கலைச்சு விடகொக்கரிக்கிற அடைக்கோழீன்டை சத்தம், பாலுக்கு அவிட்டு விடாம தானே முழுப் பாலையும் கறக்கிற வேலுச்சாமியோட சண்டைக்குப் போற கண்டுக்குட்டி கத்திற சத்தம், வேப்பம் பழம் சாப்பிட்டு தொண்டை கட்டிக் கீச்சிடிற கிளீன்டை சத்தம், தண்ணி தெளிக்காம முத்தத்தைக் கூட்டேக்க புழுதி மணத்தோட வாற சத்தம், எண்ணை விடாத கப்பீல மாசிலாமணியார் தண்ணி இழுத்துக் குளிக்கிற சத்தம் எல்லாம் snooze பண்ணின alarm மாதிரித் தொடந்து எழுப்பிக் கொண்டே இருக்கும். இதையெல்லாம் கேக்காமல் படுத்தாலும் அம்மாவின்டை குரல் எப்பிடியும் எழுப்பி விட்டிடும். விடிஞ்சு கொஞ்சம் வெளிக்கத் தொடங்கப் பக்கத்து ஒழுங்கேக்க “டிங் டிங்”எண்டு சைக்கிள் மணி அடிக்கிற பால்க்காரனுக்கு இங்க செம்பு கழுவி ரெடியாகி, அந்த இடைவெளீக்க குப்பைக் காரனின்டை டிரக்டர் சத்தத்துக்கு குப்பை வாளியை ஒழுங்கை முடக்கில வைச்சிட்டு , அவன் குப்பையை மட்டும் தான் எடுத்துக் கொண்டு போறான் எண்டதைக் confirm பண்ணீட்டு இருக்க ஐஞ்சு மணிக்கு வந்திருக்க வேண்டிய வாற மெயில் ரெயின் பிந்தி அரசடி ரோட்டை தாண்டிப் போறது கேக்கும். கொஞ்சம் கொஞ்சமாப் பள்ளிக்கூடக் கெடுபிடிச் சத்தமெல்லாம் எட்டு மணிக்கு அடங்க ஒவ்வொரு மீன்காரனா horn அடிக்க எங்கடை மீன்காரன் அடிக்கிறது பிறிம்பாக் கேக்கும். எத்தினை சைக்கிள் போனாலும் தபால்க்காரன்டை சைக்கிள் மணி தனியாத் தெரியும், அதுகும் அம்மம்மாவுக்கு பென்சன் வாற நாளில இன்னும் பிலத்தாக் கேக்கும். அப்பப்ப புளியும், ராசவள்ளிக்கிழங்கும், சின்ன வெங்காயமும் கொண்டந்து ரோட்டில கூவி விக்கிற சித்திரம், வருசத்துக்கு ரெண்டு தரம் மூண்டு தரம் எண்டு சுத்தித் திரியிற கூட்டத்தில கத்தி சாணை, அம்மி பொழியிறவன், பழைய போத்தில், பேப்பர் வாங்கிறவன், எப்பாவது சீவப் போகாமல் தேங்காய் புடுங்க, ஓலை வெட்டிறதுக்கு வாறவன் எண்டு கத்திக்கொண்டு எவன் ஒழுங்கையால போனாலும் வீட்டுக்குள்ள எங்க இருந்தாலும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். மத்தியானம் வேலை முடிஞ்சு அம்மா அயர்ந்திருக்க முன்வீட்டில பக்கத்துப் பள்ளிக்கூடம் முடிஞ்சு வாறவை படலை துறக்க வாற சத்தம் கேட்டு அம்மா எழும்பி வாற எங்களுக்கு முட்டை பொரிப்பா ஒரு நேரக்கணிப்போட. எல்லாம் முடிச்சுச் சாப்பிட்டிட்டு திருப்பிப் படுக்க காத்துக்கு கூரையில மாங்கொப்பு முட்டிற சத்தம் கேட்டா அடுத்த நாள் குருவிச்சையும் கொப்பும் வெட்ட ஆளைக் கூப்பிட்டிட்டுவா. கொஞ்சம் அயரேக்க வெத்திலைக்கு சுண்ணாம்பு, இண்டையான் பேப்பர், இந்தக் கதைப்புத்தகம் இருக்கா, விளயாட வாறியா எண்டு கேட்டு அரட்டைக்கு வந்து படலைக்க நிண்டு கூப்பிடறவின்டை சத்தம், மற்றாக்களின்டை நித்திரையைக் குழப்பாமல் தேவையான ஆளை மட்டும் எழுப்பும். அக்கம் பக்கம் நடக்கிற சண்டை அப்பப்ப காத்தோட கேக்கும். ஒரு வீட்டுச் சண்டை மற்ற வீட்டை தெளிவாக் கேக்காட்டியும் சண்டை பிடிச்ச ஆக்கள், நடந்த நேரம், அப்பப்ப காத்தில வந்து போன அவளின்டை, அவன்டை பேருகளை வைச்சும், போனமுறை வந்த சண்டையை வைச்சும் என்ன பிரச்சினையாம் எண்டு வெத்திலை வாங்க வந்த gapஇல அலசிப் பிடிச்சிடுவினம். கலாஜோதி கலையரங்கத்தில நடக்கிற பட்டிமன்றத்தையும், அரசியல் நிகழ்வுகளையும் வீட்டை இருந்தே கேட்டு தீர்ப்புச் சொல்லிறாக்களும் இருந்தவை . அதே போல கோயில்த் திருவிழாக் காலத்தில எல்லாரும் ஒண்டா அந்தரப்பட்டுப் போகத் தேவேல்லை. ஆய்த்த மணி கேட்டு அம்மம்மா போக, அபிசேக மணிக்கு அம்மாவும் தம்பியும் போக, கொடி மரப் பூசை மணிக்கு நாங்கள் வெளிக்கிட்டு சரி இனி வசந்தமண்டபப் பூசை சாமி தூக்கச் சரியா இருக்கும் எண்டு கணிச்சுப் போறனாங்கள். இரவில தூரத்தில வாற ஐஷ்கிறீம் வானின்டை பாட்டும், மணத்தோட வாற கரம் சுண்டல் வண்டிலின்டை மணியும் main road ஆல போகும். சத்தத்தை வைச்சு தூர நேரம் பாத்து சரியா ஒழுங்கை முடக்குக்குப் போவம் நாங்கள். இரவு படுத்தாப் பிறகு முகட்டில தலைகீழா நிண்ட படி திண்ட பூச்சி சமிக்காம பல்லி உச்சுக்கொட்ட , கதவில மூண்டு தரம் தட்டீட்டு அப்ப தான் நெச்சதுக்கு தடையில்லை, நாளைக்கு போட்டு வரலாம் எண்டிற மாமா, உழுந்து மணம் மணக்குது பாம்புக் கொட்டாவியா இருக்கும் பாத்துப் பின்பக்கம் போ கண்டு பிடிச்சு சொல்லிற ஆச்சி, படுத்தாப் பிறகு நித்திரையில இரவில குசினீக்க வந்தது ஆர் வீட்டுப் பூனை, நேற்றை முழுக்க குலைச்சது எந்த வீட்டு நாய், ரோட்டில குலைக்கிற நாய் பழக்கமான ஆளுக்கு குலைக்குதா இல்லாட்டி ஆமிக்கோ குலைக்குதா, கிறீச் கிறீச் எண்டு இரவு late ஆ ஓடிற சைக்கிள் ஆர்டை, சாமத்தில வேலிக்கு வேலி தட்டித் தடவிப் பாட்டோட போனது அமரசிங்கமா, தளையசிங்கமா எண்டு துப்பறிஞ்சு சொல்லிற அம்மம்மா எண்டு எல்லாருக்கும் ஐம்புலனிலும் செவிப்புலன் அதிகமா வேலை செய்யும். எண்பதுகளின் நடுப்பகுதி, இரவில திரியிறது கள்ளனா குள்ளனா எண்டு சனம் பயந்திருந்த காலம் அப்ப. “ஐயோ கள்ளன்” எண்டு தூர எங்கயாவது கேட்டா தகரம் தட்டி, தடி எடுத்து, கோயில் மணி அடிச்சு, ஊரே கள்ளனைத் தேடி, ஓடிறான் எண்டு பின்னால ஓடிப் பிடிக்கப் போய் களைச்சு வாறவைக்குப் பிளேன்ரீ குடுத்து போன கள்ளன் திருப்பி வாறானா எண்டு விடியவிடியப் படுக்ககாமலே பாத்திட்டு அப்பிடியே பள்ளிக்கூடம் போறனாங்கள். இதுக்கு எல்லாம் மேலால என்டை மனிசி புலுமைச் சிலந்தி expert , “ இங்கயப்பா சிலந்தி சத்தம் போடுது” எண்டு என்னை அடிக்கடி எழுப்பிறது பயத்திலயா இல்லை அது உண்மையா சத்தம் போடிறது கேக்கிறதா எண்டு தெரியாது. எங்கடை சனம் இதில expert ஆகித் தான் பிறகு கோட்டைக்க செல் குத்திக் கேக்கிற சத்தத்தில alert ஆகி சைரன் போட்டுச் சனத்தைக் காப்பாத்தினவை . பொம்மர் சுத்த வாற சத்தத்துக்கு எந்தக் campக்கு அடி விழும் எண்டு தெரியும் , அதுகும் இந்தா குத்திறான், இந்தா போட்டிட்டான் எண்டு கண்டுபிடிச்சு வெடிக்கமுதலே பங்கருக்க போய் safeஆ இருந்து , சரியா நேரம் பாத்து அவன் போகவிட்டு எழும்பி வாறனாங்கள். அம்மாமார், எத்தினைமணிக்கு எவ்வளவு தூரத்திலேம் துவக்குச் சூடு கேட்டால் ரெண்டாவது சூட்டுக்கே எழும்பி இருந்துடுவினம். இப்பிடி கதைக்கிறதைக் கேட்டு, குண்டுச் சத்தத்தைக் கேட்டு , வாகனச் சத்தத்தைக் கேட்டு , பிள்ளை பிடிக்கவாறவனோட சத்தம் போட்டு சண்டை பிடிச்சு எண்டு சண்டைக்கால தப்பினது சத்தத்தால தான். சத்தத்துக்குள்ள சத்தமா வாழ்ந்திட்டு இப்ப என்னெண்டா வீட்டுக்குள்ளயே கூப்பிடிற சத்தம் கேக்காம, calling bell அடிக்கிறது உணராம, மழை பெய்யிறது தெரியாம, இருட்டினதும் விடிஞ்சதும் அறியாம சத்தமே இல்லாமல் இருக்கிறம். அக்கம் பக்கத்தில வீட்டிலயோ இல்லாட்டி ரோட்டிலயோ ஏதாவது சத்தம் கேட்டா இங்க light off பண்ணிப் போட்டுப் படுத்திடுறம். அது பயமா இல்லை சுய நலமா எண்டு தெரியேல்லை. இந்தச் சத்தம் இல்லாத தனிமை நெச்சும் பாக்கேலாத கொடுமை. Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்2 points
-
ராமசாமியும்... பல்லு டாக்குத்தரும்.
2 pointsபஞ்.....வாழ்க்கையில் சந்தோஷத்தின் கால் பகுதியை இழந்து விடீர்களா? 7 பற்கள் இல்லாமல். மென்று சாப்பிடும் ருசியே தனி . 😄2 points
-
டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?
2 pointsநான் இதை இப்போதைக்கு தரவிறக்கம் செய்யப் போவதில்லை. வேறு ஏதாவது வழிகளில் உபயோகித்து பார்க்க முடியும் என்றால் பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கின்றேன். ஆனால் இதன் source code ஐ எடுத்துப் பார்ப்பதாக உள்ளேன். சீனாவிற்கு என்னுடைய தகவல்கள் எல்லாம் போய்விடும் என்ற பயமில்லை.................. என்னிடம் எதுவுமே இல்லை என்ற விபரம் சீனாவிற்கு தெரிந்து போய் விடுமே என்ற கவலையில் தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை..................🤣.2 points
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
1 pointபண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 01: முகவுரை "நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே; வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்; துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத் துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார்." [மகாகவி பாரதியார்-] ஒரு மனிதன் தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ,ஒவ்வொரு நாள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ,முடிவற்ற பல நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டு அதனால் ஆளப்படுகிறான். நம்பிக்கை (belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது. அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம்.அது அறிவியலின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாக இல்லாத இடத்து மூடநம்பிக்கை(Superstition)யாகிறது. "யானையின் பலம் தும்பிக்கையிலே மனிதனின் பலம் நம்பிக்கையிலே" என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தானே இயங்குகிறது? நம்பிக்கைகள் தாமே மனிதனை இயக்குகின்றன? இதை எவராலும் மறுக்க முடியாது?இயற்கையின் புதிரான செயல்களை உணர இயலாத நிலையிலும்,திடீர் நிகழ்வுகளுக்குச் காரணம் அறியாத நிலையிலும், மனிதமனம் தன்போக்கில் பதிவுசெய்து கொண்ட காரண காரியங்களே நம்பிக்கைகள்’ ஆகும். நம்பிக்கைகளின் நம்பகத் தன்மை, செயல்பாடு இவற்றின் அடிப்படையில் நம்பிக்கைகளை நம்பிக்கை(Belief) , திட நம்பிக்கை (Faith), மூட நம்பிக்கை(Superstition) என்று வகைப்படுத்தலாம் காரண காரியத் தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிவதை நம்பிக்கை (Belief) என்றும், நிச்சயம் பலன் உண்டு என்ற உறுதியான நம்பகத் தன்மையைக் கொடுப்பதைத் திட நம்பிக்கை (Faith) என்றும் (நான் நன்றாகத் தேர்வு எழுதியுள்ளேன். எனக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று உறுதியாக நம்புவது), காரண காரியம் அறியப் படாத நிலையில் உள்ளதை மூட நம்பிக்கை (Superstition) என்றும் குறிப்பிடுவதுண்டு. பெரும்பாலும் மூடநம்பிக்கைகளின் பூர்வீகம் ஏதேனும் ஒரு அறிவுரை சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், சில அந்த வகைகளில் அடங்காது என்பதும் கண்கூடு. சொல்லப்பட்ட சமூக, கலாச்சார, நிகழ்வுப் பின்னணியில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்காமல் அதற்கு ஒரு பிரபஞ்ச அங்கீகாரம் கொடுக்கும்போது மூட நம்பிக்கைகள் விஷ விதைகளாகி விடுகின்றன. வெவ்வேறு கலாச்சாரம்[பண்பாடு ] வழிவழி வந்த மாறுபட்ட மூட நம்பிக்கைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக, ரோம,கிரேக்க நாகரீக மக்கள்,இயற்கை நிகழ்வுகள் கடவுளின் செயலே என நம்பினர்.அதனால் ஏற்பட்ட கடவுள் மேல் உள்ள பயமே[deisidaimonia:in a good sense reverencing god or the gods, pious, religious in a bad sense superstitious religious or The fear of supernatural powers ] ,ரோமர்கள் மூட நம்பிக்கை என கருதியது. மேற்குலக சில நம்பிக்கைகள் உண்மையிலே பெரும் அழிவை ஏற்படுத்தயுள்ளது.இங்கிலாந்தில் பூனை ஒரு சூனியகாரியாக கருதியது[cats were witches] ,அதனால் பூனைகளை சாக்கொண்டது /அழித்தது ,எலி தனது தொகையை பெரும் அளவு அபிவிருத்தி செய்ய உதவியது.இதனால் 1665-1666இல் கொள்ளை நோய்[Plague/பிளேக்நோய்.] வந்து 100,000 மக்களை பலி கொண்டது எல்லோருக்கும் இன்னும் நினவு இருக்கலாம்?மேலும் மேற்குலகில் முதலிடம் வகுப்பது இலக்கம் 13 ஆகும்,அதனுடன் வெள்ளி கிழமை சேர்ந்தால் அது மேலும் மோசமாகிறது.அப்படியே விரலை குறுக்கே வைப்பதும்["crossing fingers"], சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பதும் ஆகும். பொதுவாக பல மூட நம்பிக்கைகள் சமயத்துடன் தொடர்புடையவை .உதாரணமாக தாயத்து[Talisman/மந்திரக்காப்பு] கட்டுதல் போன்றவையாகும் .இந்தியாவிலும் மற்றும் தமிழர்களுக்கிடையில் நிலவும் பொதுவான மூட நம்பிக்கைகளை நாம் சங்க பாடல்களில் காணக்கூடியதாகவும் உள்ளது. ஒரு மனிதனுக்கு நீரழிவு நோய் இருப்பதை அறிய[screening diabetes] எப்படி இரத்த பரிசோதனை செய்கிறோமோ அப்படியே ஒரு தமிழ் குடும்பத்தில்,கல்யாண பொருத்தம்,இருவரினதும் சாதகம் பரிசோதனை[horoscope matching] மூலம் அறியப்படுகிறது. இந்த சோதிடம்[astrology] பிள்ளைக்கு பெயர் வைப்பதில் இருந்தே ஆரம்பிக்கப்படுகிறது. முன்னோர்கள் காலத்தின் தேவை கருதி சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்திருக்கிறார்கள். உதாரணமாக இரவில் வீட்டை கூட்டுதல் நல்லதல்ல என்பதால். காரணம் வெளிச்சம் குறைவான படியால் பெறுமதியான சிறிய பொருட்களையும் தெரியாமல் எறிந்து விட சந்தர்ப்பம் அதிகம் என்பதால்.அது போல, இரவில் நகம் வெட்டக் கூடாதும் ஆகும். “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும்.தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும் போலும்? . இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர்தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள்.நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!எப்படியாயினும் சங்க காலத்திலேயே தமிழன் இதை,இப்படியான மூட நம்பிக்கைகளை நம்ப தொடங்கி விட்டான். ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந்தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது.இடைக்காட்டுச்சித்தர் தன் ஆடுகளுக்கு எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர், "6௦" ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார்.பெண்பால் சோதிடர்கள் கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர் என்று சங்க பாடல் கூறுகிறது .மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் நம்பினர் . "வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி"-- பட்டினப்பாலை. இப்படியாக இன்னும் கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டுநம்பிக்கைகளுடனும் மனிதன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும் [முகவுரை தொடர்கிறது]1 point
-
"இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025]
"இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025] "பெப்ரவரி இரண்டாம்நாளில் நீலவானத்தின் கீழ்பிறந்தவளே அதிசயமாக வந்தவளே இன்று கொண்டாடுகிறோம்! பெருமைக்குரிய இளையமகளே கலங்கரை விளக்கே அம்மாவின் வாழ்த்து விண்ணில் ஒலிக்கிறேதே!!" "அன்னை வளர்ப்பில் அறிவோடு வளர்ந்து இன்பம் துன்பம் இரண்டையும் அனுபவித்து உன்னை அறிந்து பிறரை உணர்ந்து இன்று கொண்டாடுகிறாய் அகவை நாளை!" "உறுதியான கைகளுடனும் அன்பான இதயத்துடனும், மகிழ்வான புன்னகை ஆறுதல் தருகிறதே! கணவரும் மூன்று மழலைகளும் வாழ்த்த அன்பிலும் சிரிப்பிலும் நீங்கள் செழிப்பீர்களே!!" "பிறந்த நாள் இன்று உனக்காம் பிரகாசமாய் வாழ்வு ஜொலிக்க என பிரபஞ்சம் எல்லாம் அதிரும் ஒலியில் பிரியம் உடன் வாழ்த்து கூறுகிறோம்!" "எங்கள் இளைய மகளுக்கு அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "On this second of February, under the sky so blue, We celebrate the wonder that is you! Our youngest, our pride, a beacon so bright, Mum's greetings are ringing in the sky!" "With steady hands and a heart so kind, Healing smiles, bringing comfort to all! Three little ones and a husband you cherish, In their laughter and love, you truly flourish!" "Wishing our daughter a wonderful birthday filled with love and joy!" [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]1 point
-
இதற்காக மட்டுமே நாம் தமிழரை கழுவி ஊத்துவதில் கலந்துகொள்வதில்லை.
யார் சொன்னால் என்ன. சொல்வது சீமான் என்ற நஞ்சை பற்றி. நஞ்சை விதை என நான் நம்பபோவதில்லை. யார் சொன்னாலும். நேற்றைய சபேசன் பேட்டி + இன்று பகிரப்பட்ட கேணல் கிட்டு பேட்டி - இரெண்டையிம் பார்த்த பின்னும், நஞ்சை நாம் ஏன் நஞ்சு என சொல்கிறோம் என்பது புரியாவிட்டால், ஜி போல டொட் எல்லாம் போட மாட்டேன். புரியும் வரை எழுதுவேன்.1 point
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
ஆமாம் உண்மை .....ஆனால் இது எவருக்கும் தெரியாத கலை சாத்திரிமார். சொல்வது பொய் ஆனால் சாத்திரம். உண்மை நன்றி உண்மை போல் தெரிகிறது 🤣. ஊதியத்தை தமிழ் சிறி. இடம கொடுத்து விடுகிறான் வேண்டி கொள்ளுங்கள் 🤣1 point
-
முடக்குவாதம் நீங்க புலி சிறுநீர்; சீன உயிரியல் பூங்காவில் விற்பனை
கடவுளே..சீனர்களுக்கு ஊர்வன , பறப்பன, நடப்பன, என்று ஒன்றும் மிச்சமில்லை தெரிந்த விசயம் தானே.. 🤭🤭1 point
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
கண்டேன் மிக்க நன்றி1 point
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
மாற்றியாச்சு.1 point
-
த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்கம்: தலைவர்களின் சிலைகளை விஜய் இன்று திறந்து வைக்கிறார்
சீமானின் pressure washer திறமாக வேலை செய்கிறது! 😂 உங்களுக்குக் கூட சீரியசான கருத்தாடல் கை விட்டுப் போய் விட்டது!1 point
-
தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
1 pointஇந்த ஆளுனர் ஒரு இனவாத-மாமா என நான் எழுதிய போது பலர் இல்லை இல்லை நேர்மையானவர் அது இது என தூக்கி பிடித்தார்கள். அதே போல் அருச்சுனா, ஆளுனரை குறை சொல்லும் அனுர காவடி தூக்குவோர், அனுர சொல்லித்தான் இவர்கள் இப்படி உளறுகிறார்கள் என்பதையும் மறைத்து, ஏதோ இவர்களில் மட்டுமே பிழை என்பது போல் முழு பிலாப்பழத்தை சோற்றுகோப்பைக்குள் மூடிவிடப்பார்கிறார்கள்.1 point
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
மத்திய தரவர்க்கதின் கனவுகளில் ஒன்றான கார் வாங்குவதை இது மேலும் கடினமாக்குகிறது. இந்தியன், சீன கம்பெனிகள் பல எலெக்ரிக் கார்கள் செய்கிறன. இவற்றில் ஒன்றை வைத்து ஒரு உள்ளூர் எலெக்ரிக் தயாரிப்பை உருவாக்கலாம். ஏற்கனவே micro என்ற ஒரு உள்ளூர் கம்பெனி உள்ளது. https://en.m.wikipedia.org/wiki/Micro_Cars1 point
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
ஜென்மத்தில் அதிஸ்ட்டத்தை கொண்டுள்ள ஜேர்மன் வாசிக்காரருக்கு, நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க போகிறது. இதுவரை கவனமாக செலவு செய்த நீங்கள், இனி கணக்கின்றி வரப்போகும் இலாபத்தால், செலவு செய்ய நேரம் இல்லாமல் திண்டாடப்போகிறீர்கள். ஆனால் கணக்கு வழக்கில் கொஞ்சம் அதிக சிரத்தை எடுக்கவும். குறிப்பாக 12, 24 எண்கள் வரும் விடயங்களிம் மிக அவதானமாக இருக்கவும்🤣.1 point
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
1 pointபண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 12 கனவுகள்: கனவு என்பது நமக்கு வரும் நன்மையையும் கேட்டையும் உணர்த்த கடவுள் அனுப்பும் முன்னெச்சரிக்கை யாகவே (Prenomination) நம் மக்கள் நீண்டகாலமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் முதல் காப்பியம் படைத்த இளங்கோவடிகள் இதே நம்பிக்கையில், சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியின் கனவை [5 புகார்க்காண்டம் / 9 கனாத்திறம் உரைத்த கதை] விரிவாக தந்திருப்பதுடன், பாண்டிய அரசன் நெடுஞ் செழியனிடம் அரசி கோப்பெருந்தேவி தான் கண்ட கனவின் சகுனத்தைப் பற்றி கூறும் போது, அது உண்மை ஆவது போல அப்பொழுது அங்கு ஒரு கால் சலங்கையுடன் கண்ணகி முறையிட வந்தாள் என்கிறார். நம் நாட்டில் அறிவுக்குக் கொடுக்கும் இடத்தைவிட, உணர்வுக்கே மிகுதியான இடம் தருகின்றனர். உதாரணமாக குடும்பத்தில் ஒரு பெண் சொல்லுகிறாள்: "மாமி ! இரவு விடியற்காலம் எனக்குக் கனவு ஒன்று வந்தது. நம் வீடு திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது!" இதற்கு மாமி கூறுகிறாள்: "அடி, விவரம் கெட்டவளே, சீக்கிரம் உன் மகள் பூப்பு [பெண்மை] அடைந்து அமர்வாள்! அதிலும் நீ விடியற்காலையில் கண்ட கனவு! இன்னும் இரண்டொரு நாளில் நடக்கும்!" மேலும் ஒரு உதாரணமாக பேரன் தன் பாட்டனிடம் சொல்லுகிறான்: "தாத்தா எனக்குப் புதையல் கிடைத்தது, நான் பணத்தில் புரள்வதைப் போல்க் கனவு கண்டேன்; விழித்துப் பார்த்தால் நான் பழைய கிழிந்து போன பாயில்தான் புரண்டு கொண்டிருந்தேன்." தாத்தா சொல்லுகிறார்: "உனக்கு நோய் வரும் என தெரிகிறது." மேலும் சில கனவு பற்றிய நம்பிக்கையைப் பார்ப்போம்: "கனவு (dream) என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. "கனவு என்பது மனிதனின் தூக்கத்தில் உலாவரும் உள்மன வெளிப்பாடாகும். வேடிக்கை என்னவென்றால் கனவில் நல்லது நிகழ்ந்தால் வாழ்க்கையில் அதற்கு நேர்மாறாகத் தீயது நடக்கும் என நம்புகிறார்கள். ஆகவே கனவில் தீயது நிகழ்ந்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும் என நம்புகிறார்கள். இது கனவு நம்பிக்கைகளுக்கு மட்டுமே உரிய சிறப்புத் தன்மையாகும். அதாவது மரணம் வருவது போன்று கனவு கண்டால் வீட்டில் நல்லகாரியம் நடக்கும் என்றும் திருமணம் நிகழ்வது போன்று கனவு கண்டால் அவ்வீட்டில் துன்பம் ஏற்படும் என்றும் நம்புகின்றனர். அதிகாலையில் கனவு கண்டால் பலிக்குமெனவும், பகலில் கனவு கண்டால் பலிக்காது எனவும் நம்புகின்றனர். அகநானூறு 141, நக்கீரர், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது "அம்ம வாழி, தோழி ! கைம்மிகக் கனவும் கங்குல் தோறு இனிய: நனவும் புனை வினை நல்இல் புள்ளும் பாங்கின! நெஞ்சும் நனி புகன்று உறையும்; எஞ்சாது" என் தோழியே உன்னை வாழ்த்துகிறேன் ,என் இரவு இனிய கனவுகளுடன் கழிந்தது, எனது பகலும் எமது அலங்காரிக்கப்பட்ட வீட்டில் நல்ல சகுனத்துடன் கழிந்தது, எனது நெஞ்சும் மிகவும் மகிழ்ச்சியுள்ளது. என் தலைவன் வருவானா? இப்படி ஒரு சங்கத் தலைவி கேட்கிறாள் . ஆனால் உண்மையில் கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது, நினைவுகள், கோட்பாடுகள், மற்றும் விருப்பங்கள். கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன. நமக்கு அல்லது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைத் தான் பெரும்பாலும் கனவு காண்கிறோம். அவை நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள் தான்! இதைத்தான் கிழே குறிப்பிட்ட சங்க கால உரையாடல் ஒன்றும் எடுத்து காட்டுகிறது. "கேட்டிசின் வாழி தோழி யல்கற் பொய்வ லாளன் மெய்யுற மரீஇ வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந் தமளி தைவந் தனனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற வளியேன் யானே" [குறுந்தொகை 30] தோழி [தலைவியை பார்த்து ]: "அவன்தான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வருகிறேன் என்று சொல்லி விட்டுச் சென்றானே. அப்படியிருக்கும் போது நீ பொறுமையாக இல்லாமல் துடிப்பது ஏன்? " தலைமகள் [தோழியிடம்]: "தோழி! இதனைக் கேள். அவன் நாள்தோறும் பொய் சொல்வதில் வல்லவன். அவன் என் கனவில் வந்தான். என்னை ஆரத் தழுவினான். மகிழ்ச்சியோடு அவனைத் தழுவினேன். விழித்துப் பார்த்தபோது நான் படுத்திருந்த மெத்தையைத் தடவிக் கொண்டிருந்தேன். வண்டு உண்டபின் குவளை மலர் உணர்ச்சி இழந்து / சாய்ந்து ஏக்கத்தோடு கிடப்பது போலத் தனித்தவளாய்க் கிடந்தேன்". இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். கனவில் மலத்தைக் கண்டால் பணவரவாம்! மாங்கல்யத்தைக் கண்டால் துன்பம் சூழுமாம்! உடலின் மேல் பாம்பு ஊர்ந்து செல்வது நல்லது. சங்க காலத்தில் வாழ்ந்த வேடுவர்கள் இதனை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தனர். எனவே, பாம்பு ஒருவர் மீது ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால், அவருக்கு இருந்த கண்டம் அல்லது கெட்ட நேரம் விலகிச் சென்று விட்டதாகக் கருதலாம். எது எப்படியாயினும், இப்படியும் சிலர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். பல்லி விழுந்தாலும் பலன் சொல்வார்கள்! பல்லு விழுந்தாலும் பலன் சொல்வார்கள். ஆனால் தங்கள் பலனை மட்டும் பார்க்க மாட்டார்கள். அப்படி பார்த்திருந்தால் இப்படி வெற்றிலைப்பாக்குக்கும் ,பழந்துணிக்கும், கால்படி அரிசிக்கும் வாசலில் வந்து நம் தூக்கத்தை கலைக்க மாட்டார்கள்? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 13: " சோதிடம் தொடரும்1 point
-
கட்சியை காப்பாற்ற மும்மூர்த்திகள் பதவி விலக வேண்டும் - சி.சிவமோகன்
சிவமோகன் குறிப்பிடும் மும்மூர்த்திகள். 1) சுமந்திரன். 2) சிவஞானம். 3) சத்தியமூர்த்தி. என நினைக்கின்றேன்.1 point
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
ஒரு விழா ஒன்றில் சாத்திரங்கள் பற்றி பேச்சு வந்த போது எண் சாத்திரமும் வந்தது நான் அதுவும் ஒரு பொய் தானே எனறேன்.அதற்கு பெரியவர் ஒருவர் நீங்கள் அப்படி சொல்ல முடியாது சாத்திரத்தோடு அதை கொண்டுவராதீர்கள் அது ஒரு விஞ்ஞானம் என்றார்🤣1 point
-
சேனாதி : மார்ட்டின் ரோட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே தத்தளிக்கும் ஆவி? - நிலாந்தன்
இவை எல்லாவற்றிற்க்கும் காரணம் முன்னோக்கு சிந்தனையில்லாத சர்வாதிகாரி சம்பந்தனே! தன்னோடு தோளோடு தோளாக நின்ற மாவையரை அவர் மதித்ததேயில்லை. சொல்லப்போனால், சுமந்திரனுக்கு முன்னாலேயே அவரை கடிந்துள்ளார். சம்பந்தன் மேல் உள்ள மரியாதை, வயதுக்கு கொடுத்த மதிப்பு, கட்சி உடைந்து போகக்கூடாது என்கிற எண்ணம் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டார். அவ்வாறே ஏனைய உறுப்பினர்களும் சம்பந்தனை பகைக்காமல் நடந்து கொண்டனர். அதை அவர்களின் பலவீனமாகவும், தான் ஏதோ சாணக்கியன் போலவும் நடந்துகொண்ட சம்பந்தர். தனக்குப்பின் கட்சியை அநாதரவாக விட்டுச்சென்ற முட்டாள். அதை சுமந்திரன் என்கிற பேராசை பிடித்த ஊழல்வாதி சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். எந்த இலட்சியம், திறமை இல்லாத இரண்டு நரிகள் சிங்கத்தின் வாலோடு வால் இணைத்துக்கொண்டு திரியுதுகள். இவர்களுக்கு எதிராக அம்பு திரும்பும்போது புலம்புவதை தவிர வேறுவழியிருக்காது. சுமந்திரனை இவர்கள் பாதுகாத்து காப்பாற்றியதும் அவரின் அடுத்த இலக்கு இவர்கள்தான். சுமந்திரனுக்கு பதவியாசை மட்டுமல்ல, அவருக்கு இருப்பது தன்னைவிட அறிவாளியில்லை என்கிற ஒரு மனநோய்.1 point
-
ராமசாமியும்... பல்லு டாக்குத்தரும்.
படிப்பது, கேட்பதை விடவும் அதிகமாக, அனுபவம்தான் உண்மையை உணர்த்துகிறது. உங்களுக்கு எத்தனை பற்…….? எனது அப்பு இறைச்சி உண்ணும் ஆசையில், பொக்கைவாய்க்குள் சப்பி, பொச்சடித்து உறுஞ்சி உண்ணுவதை பிறர்வலி அறியாத சிறுவயதில் பார்த்து ரசித்துள்ளேன்.😟1 point
-
அர்ச்சுனாவின் அரசியலும் அதைவிரும்பும் இரசிகர்களும்.
அர்ச்சுனாவின் அரசியலும் அதைவிரும்பும் இரசிகர்களும். ( யாழ் தினக்குரல்- 2/2,ஞாயிறு) தமிழ்த் திரைப்படமொன்றில் தன்னை ஊரில் ரவுடியாகப் ‘பில்ட்டப்’ பண்ணும் நோக்கில் நகைச்சுவை நடிகர் வடிவேலு “நானும் ரவுடிதான். என்னையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு போங்கள்” என்று கெஞ்சுவதை சிலர் பார்த்திருப்பீர்கள். அந்தக்காட்சிதான் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனா இராமநாதனை சாவகச்சேரியில் வைத்து அனுராதபுர காவல்துறையினர் கைது செய்தபோது அவர் நடந்தகொண்டவிதம் நினைவுபடுத்தியது. காவல்துறையினர் அவரைக் கைவிலங்கின்றி அழைத்துச்செல்ல முற்பட்டபோது அர்ச்சுனா தனக்கு விலங்கிட்டுக் கூட்டிச் செல்லுங்கள் என்று தானே வலிந்து கேட்டு விலங்கு கையில் மாட்டப்பட்டதைப் பார்த்தோம். அர்ச்சுனாவின் அரசியலை விளங்கிக் கொள்ள இதுவொன்றே போதும். வடிவேலுவின் நடிப்பை இரசிகர்கள் எவ்வாறு கைதட்டி ரசித்தார்களோ அதேபோல அர்ச்சுனாவின் இது போன்ற நடிப்புகளை இரசிப்பதற்கென்றும் நம்மத்தியில் ஒரு ரசிகர் வட்டம் இருக்கவே செய்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்களே அவரது ஆதரவாளர்களாகவும் இருந்து வருகின்றனர். ஆனால் அரச்சுனாவின் இதுபோன்ற நடிப்புகளுக்கான அவரது உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் மனநிலையில் அந்த வட்டத்தினர் இல்லாமலிருப்பதே அர்ச்சுனாவுக்கான பலம். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்யட்சகராக அர்ச்சுனா பதவியேற்றது தொடக்கம் நேற்றுவரை அவரது நடத்தைகளை அவதானித்து வந்தால் அவரது குணச்சித்திரத்தைப் (மனப்பாங்கு+ நடத்தை) புரிந்து கொள்வது கடினமானதொன்றல்ல. சிலர் அவரை நகைச்சுவைத் துண்டாக( comedy piece)க் கடந்து செல்கின்றர். சிலர் அவரை மனநலம் குன்றியவராகப் பார்க்க முனைகின்றனர். அதேவேளை அரச்சுனாவின் இரசிகர்கள் அவரைக் கதாநாயகனாவே பார்க்கின்றனர். இவற்றுள் அர்ச்சுனா யார்? நகைச்சுவையாளரா? மனநலம் குன்றியவரா? அல்லது கதாநாயகனா? இவை எல்லாமாகவுமன்றி இதற்கப்பால் வில்லனாகவுங்கூட அவரைப் பார்க்க முடியும். கிராமத்தவர்களின் ‘காரிய விசரன்’ என்ற பேச்சுமொழி இவ்வாறான குணச்சித்திரம் கொண்டவர்களைத்தான் குறிப்பதாக இருக்கிறது போலும். தொடக்கத்தில் சாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்பட்டதாக அவரால் சில விடயங்கள் வெளிப்படுத்தப்பட்போது அவரை ஒரு ‘குறை அறைவோன்’(Whistleblower) ஆகச் சிலர் பார்த்தார்கள். ஆனால் அவரது அடுத்தடுத்த செயற்பாடுகள் குறைகளைக் களைவதற்கான உண்மையான வெளிப்படுத்தல்களாக அல்லாமல் தன்னையொரு மீட்பராகக் காட்டுவதற்காகப் பொய்கள், புனைவுகள், ஊதிப்பெருப்பித்தல் போன்ற நடவடிக்கைகளாக மாறியதால் அவர் குறை அறைவோனல்லன் என்றும் குறிக்கோளோடு நகர்வோன் என்றும் மக்கள் இனங்காணத் தொடங்கியதால் அவரைச் சுற்றியேற்படுத்தப்பட்ட ஒளிவிம்பம் மெல்ல மெல்ல அகலத்தொடக்கியது. நிறுவனமொன்றின் தவறுகளைத் திருத்த விரும்பும் ஒருவன் முதலில் அதனை உரியவழிகளில் தீர்க்கவே முயற்சிப்பான். அவை வெற்றிபெறாதவிடத்து மட்டுமே அதற்காகப் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டப் பொதுவெளிக்கு அவற்றைக் கொண்டு வருவான். இவையாவற்றுக்குமுன் அக்குறைகள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதுடன் அதற்கான ஆதாரங்களையும் இயன்றவரை சேகரிக்கத்திருப்பான். இவை எதுவும் இல்லாத அர்ச்சுனாவின் செயற்பாடுகள் அவர் உண்மையில் குறைகளைக் களைவதற்காகவன்றி வேறு தேவைகளுக்காக முயற்சிக்கிறார் என்பதை மக்கள் படிப்படியாக விளங்கிக் கொள்ளத் தலைப்பட்டனர். சாவகச்சேரி வைத்தியசாலையில் தொடங்கிய அவரது குற்றச்சாட்டுகள் மாவட்டம், மாகாணம், போதனா வைத்தியசாலை என வைத்தியத்துறை முழுவதுமே சாக்கடை தான்மட்டும் சந்தனம் என்ற நிலைக்கு உயர்ந்தபோதே அவர்தொடர்பான விம்பமும் சரியத் தொடங்கிவிட்டது. அவரது குற்றச்சாட்டுகள் எவற்றுக்குமே ஆதாரங்களை முன்வைக்காமையினால் வழக்குகளுக்குமேல் வழக்குகளாக நாளாந்தம் ஒவ்வொரு நீதிமன்றிலும் முன்னிலையாகவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.சாவகச்சேரியில் போற்றியும் தூக்கியும் கொண்டாடாடிய கூட்டத்தினர் படிப்படியாக உண்மையை உணரத் தொடங்கிவிட்டனர். அவருக்காகப் பிணை நின்றவர்களும் தாமாகவே அதிலிருந்து விலகிக் கொண்டனர். ஆனாலும் அதற்கிடையில் அவர் தனது மூலதனத்திற்கான பயனை அறுவடை செய்து கொண்டார். தொடர்ந்து அதனைத் தக்கவைப்பதற்கான செயற்பாடுகளிலேயே அவர் தற்போது ஈடுபட்டுவருகிறார். ஒருவர் தன்னை மற்றவர் கவனிக்க வேண்டும், தன்னைப்பற்றி பேசவேண்டும், புகழவேண்டும் என்று எண்ணுவது இயல்பானதே. அதற்காகப் பலர் நேர்மறையான நடத்தைகளை வெளிப்படுத்துவர். சிலர் எதிர்மறையான நடத்தைகளை வெளிப்படுத்துவர். ஒப்பீட்டு ரீதியில் எதிர்மறையான நடத்தைகள் அதிகவனத்தைப் பெறுவதுடன் அதன் பரவல் வேகமும் கூடுதலாக இருக்கும். அத்துடன் அவர்கள் அவ்வாறான நடத்தைகளை அடிக்கடி மேற்கொள்ளவும் விரும்புவர். இவர்கள் தமது நடத்தையின் நேரடி விளைவின்மீது கவனத்தைக் குவிப்பார்களேயன்றி அதன் தொடர்விளைவுகளின்மீது கவனம் செலுத்தமட்டார்கள். பிறர் நலனுக்காகச் செய்வதாகக் கூறும் இவர்கள் தமது நடத்தைகளால் பிறருக்கு ஏற்படுத்தப்படும் விளைவுகள் பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை. இவ்வாறான நடத்தைகளுக்கு சிறுவயதில் அவர்களுக்கு ஏற்பட்ட தாக்கங்கள், தாழ்வு மனப்பாங்கு போன்ற பல காரணங்கள் இருக்கலாம் என உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். மக்களைத் தன்பால் ஈர்க்க இந்த முறையையே அர்ச்சுனா அதிகம் கையாள விரும்புகிறார். தான் வைத்தியத்துறையில் சாதனை செய்து பெயரெடுப்பதற்குப் பதிலாக மற்ற வைத்தியர்கள் பிழை என்று கூறி நக்கீரராக பெயரெடுக்க அர்ச்சுனா விரும்புகிறார்.அடிக்கடி செய்திகளில் தான் வரவேண்டும் எனக் கணக்குப் பண்ணுகிறார். ஒழுக்கத்தையும் அற, விழுமிய பண்புகளையும் அதிகம் மதிக்கும் சமூகமொன்றில் ஒருவரின் இவ்வாறான எதிர்மறை நடத்தைகள் அவர்மீதான வெறுப்பையே அதிகம் உருவாக்கும். ஆனால் அப்பண்புகள் குறைந்துவரும் ஒருசமூகத்தில் இதனை வரவேற்கும் போக்கு வளரும். இவ்வடிப்படையில் நோக்கும்போது அரச்சுனா எமது சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சியின் குறியீடா? சிலர் கூறுவதுபோன்று அர்ச்சுனா தெரியாமல் எதையும் செய்யவில்லை. அவர் அவ்வாறான பேர்வளியுமல்லர். தெரிந்தகொண்டே தேவைக்காகவே அனைத்தையும் செய்கிறார். அதனாற்றான் தான் செய்வதையெல்லாம் தானே ஊடகங்களில் நேரலையாக வெளிப்படுத்துகிறார். தனது செயல்களைக் கண்டு முகஞ்சுழிக்கும் பெருங் கூட்டத்தைவிட அதனை ரசித்து வரவேற்கும் சிறுகூட்டமே அவரது தற்போதைய இலக்கு. தரக்கரீதியாக சிந்திக்காத அக்கூட்டத்தைக் கெத்து காட்டுவதன்மூலம் அவர் கவரவிரும்புகிறார். பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவரின் கதிரை என்பது, அதிகாரிகளின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து கலாட்ட செய்வது, கௌசல்யாவின் காதலனை இழிவுபடுத்துவது, கேவலமான வார்த்தைப் பிரயோகங்கள், அவற்றையெல்லாம் நேரலையில் சமூக ஊடகங்களில் வெளிவிடுவது போன்ற விடயங்கள் தவறானவை என்பது எம்.பி.பி எஸ் படித்தவருக்கு தெரியாததல்ல. இதன்மூலம் தனது வாக்கிலும் கணக்கிலும் வரவு கூடுமென அவர் எண்ணுகிறார். அவர் இவ்வாறு எண்ணுவது சரியென இங்கும் அங்கும் சிலர் இருப்பதுதான் கவலை. இது தமிழ்ச் சினிமாவின் தாக்கமாகவும் இருக்கலாம். அதில்தான் ரஜனி,விஜய் போன்ற கதாநாயகர்கள் செய்யும் சட்டரீதியற்ற மோசமான செயல்கள் யாவும் நியாயமானவை என நிறுவப்படுகின்றன. மக்களைக் கனவுலகில் மிதக்கவைத்து அவர்கள் பெட்டியை நிரப்புவது போல்தான் இதுவும். அடிக்கடி தான் எம்.பி.பி.எஸ் என்று கூறி மற்றவரை கல்வித் தரத்தின் மூலம் இழிவு படுத்துவதும் தெரிந்துகொண்டே செய்யும் ஒருவகை உளவியல் ரீதியான தாக்குதல்தான். ஒருவனை மட்டந்தட்ட, அடக்க இவ்வாறான முறைகள் எமது சமூகத்தில் நீண்ட காலமாகவே கையாளப்பட்டு வருகின்றன. சாதி,படிப்பு அல்லது பட்டங்கள், ஆங்கில மொழியறிவு அதற்கப்பால் தாய்,தந்தை, உறவுகளின் தவறான நடத்தைகள் என்பவை சிலர் கையாளும் அங்குசங்கள். அர்ச்சுனா எமது சமூகத்திற்கு அதிலும் குறிப்பாக இளையோருக்கு தவறானதொரு முன்மாதிரி. அவரை ஊக்குவிப்பது என்பது நமக்கு நாமே சூனியம் வைப்பது போன்றது. பணத்துக்காக தவறாகப் புனையும் யு ரியூப்பினரும், உண்மைநிலை அறியாது உதவும் புலம்பெயர் உறவுகளும் ஆழமாகச் சிந்திக்கவேண்டிய நேரமிது. தவறுகள் திருத்தப்பட வேண்டும். ( யாழ் தினக்குரல்- 2/2,ஞாயிறு)1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?
1 pointஎன்னதான் வீரம், திறமை என்று பலரிடமும் இருந்தாலும், எல்லாவற்றையும் ஒருங்கமைக்கவும், ஒழுங்கமைக்கவும் ஒரு நல்ல தலைமை தேவை போல.......😔1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
அப்படியே இருந்து விட்டுப் போகட்டும், அண்ணா.......................👍. என்ன, ஒரு பெரிய அரசியல்வாதியாகி, புகழ்பெற்று, திடீரென்று ஒரு நாள் அகாலமாகப் போய்விடுவனோ என்ற புதுக்கவலை ஒன்று மனதில் துளிர் விடாமல் இருந்தால் சரி................அமெரிக்காவில் ஒரு அரசியல் வெற்றிடம் இருக்குது என்றும் சொல்கின்றார்கள்..................🤣.1 point- புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக கூடிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது – ரோகிங்யா அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
அருமையான வசனம்!1 point- நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
1 pointமுதலில் பயங்கரவாத தடை சட்டத்தை எடுக்காமல் தமிழ் மக்களுக்கு புனுகு பூசுவதில் ஒன்றும் நடக்காது புலம்பெயர் தமிழர்கள் நம்ப போவதில்லை .1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
அண்ணை ரசோ,......சோதிடம். 100 %. பொய் என்று செல்ல முடியாது எண் சோதிடம். என்பது உதாரணமாக ஒவ்வொரு நம்பருக்கும். அந்தந்த நம்பரில். உள்ள பல ஆயிரம் பேரில் இயல்புகளை ஆரய்ந்து எழுதப்பட்டது ஆகும். 100 %சரி வராது” தான் இதை நன்கு படிந்தவன். எவருமில்லை நான் அறிந்த வரையில் வேலனையில். சிவராசா நல்லூர் நவாலர் றோட்டில். கனகரத்தினம். என்று ஒருவர் இருந்தார். ராசி நட்சத்திரம் கூட. சனி வியாழன் புதன்,.........கோள்கள் உடன் ஒத்து. வருகிறது ......சாதகம். எழுதுவது கிரிஸ்லாந்து ஊடக போகும் ஒரு கோட்டை வைத்து தான் கோட்டின் பெயர் மறந்து விட்டேன். கைரேகை வைத்து தான் பொலிஸார் ஒவ்வொரு மனிதனையும் பிரிந்து அறிகிறார்கள். சாத்திரம். உண்மை இது தெரிந்தவர்கள் உலகில் இல்லை எல்லாரும் அரைகுறை தான் 🙏 நான் ஓரளவு நம்புகிறேன் நீங்கள் நம்பாமல் விடலாம் நன்றி வணக்கம்1 point- வேதனையில் நீதிபதி இளஞ்செழியன், புரியாத புதிராக நீதித்துறை வாழ்வு முடிவு
அவர்கள் நம் இனத்தை விழுங்கப் போகின்றார்கள்....இப்போ ..அமைதியாக சில விடையங்களை ..செய் கின்றனர்...அதி நீதியின் காவலன் என சகல இனத்தாலும் மதிக்கப்பட்ட நீங்களே பலியாகிவிட்டீர்கள்...உங்கள் பாதுகாவலன் குடும்பத்தையே பொறுப்பெடுத்து ஆளாக்கினீர்கள் ..அந்தப் புண்ணியம் கூட ..கை கொடுக்கவில்லை அய்யா ...எம் இன தலைவிதி அது1 point- டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?
1 pointஆயுத பலத்தினூடாக ஒர் இனத்தை எதிரி அழிக்கும் பொழுது அந்த இனம் வீரத்துடன் தீரத்துடன் எதிர்த்து நின்று போராடும்...இதில் எதிரிக்கு கெட்ட பெயர் உலகில் வரும் (சில வல்லரசுகளின் நலன் சார்ந்து)அத்துடன் எதிரி பலமாக இருந்தால் தனியாகவும் ,இல்லையென்றால் ஏனைய நாடுகளின் உதவியுடன் அழித்து விடுவான்... முதலில் வன்முறையினுடாக இப்பொழுது நடப்பது அரவணைத்து அழிப்பது .. இதை ஆகிரமிப்பாளர்கள் யாவரும் பல நூற்றாண்டு காலத்துக்கு முன் செய்து வெற்றி கண்ட ஒர் கொள்கை... அசோகர் வன்முறையினால் மதம் பரப்பினார் ஆனால் இன்று "பெளத்தம்"உலகின் சமாதான சித்தாத்தம் என அமெரிக்கா முதல் ஆசியா வரை (ஏனைய மதங்களை பின் பற்றுபவர்களும் விரும்பி பின்பற்றும் மதமாக ) அதே போன்று இந்து மதம்,கிறிஸ்தவம் ,இஸ்லாம்...முதலில் வன்முறை பின்பு அரவணைப்பு... அவுஸ்ரேலியா பூர்வீக குடிகளை அழித்து துவசம் பண்ணிய பின்பு அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் ,பூர்வீக குடிகள் என கிராமங்களில் மன்னிப்பும் ,மரியாதையும் செலுத்துதல் (அந்த பூர்வீக குடிகள் அந்த கிராமத்தில் ஒருத்தரும் இருக்க மாட்டார்கள் ஆனால் மன்னிப்பு செலுத்துவார்கள்) ஆயுத ஆக்கிரமிப்ப இன்றி மெளன ஆக்கிரமிப்பு (அரவணைத்து ஆக்கிரமிப்பு)1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
சில வேளை பெரியார், தலைவர் இருவர் சொன்ன தத்துவங்களயும் உள்வாங்கியதால் - இந்த சில்லறை நியூமராலஜி தகவலை மிஸ் பண்ணி இருக்கலாம் 🤣. நியுமராலாஜியை பார்த்தவர்கள் தத்துவத்தை மிஸ் பண்ணி இருக்கலாம்.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சுவி இந்த பதிவை பலதும் பத்தும் திரியில் சிறி ஏற்கனவே பதிந்து புடுங்குப்படுகிறோம்.1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
அண்ணா, இப்படி ஒன்றைச் சொல்லி திக்குமுக்காட வைத்து விட்டீர்களே............. எண் சாத்திரம் மட்டும் இல்லை, எல்லா சாத்திரங்களுமே இட்டுக்கட்டிய பொய்கள் அல்லவா..............1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
யாழ் களத்தின் இன்னொரு உறவு சபேசன் விகடனுக்கு அளித்த பேட்டி. @goshan_che1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : காலங்களில் அவள் வசந்தம் (1976) இசை : விஜயபாஸ்கர் வரிகள் : ப சு அருணாசலம் பாடியவர் : எஸ்பிபி மற்றும் வாணி1 point- ஜெர்மனியின் பொருளாதாரம் மந்த நிலையில்!
நோட்டோ இல்லையென்றால் 3 ஆம் 4ஆம் 5 ஆம்,.......... உலகப். போர்கள். வந்து இருக்கும் .....நோட்டோவை கலைத்து பார்க்கட்டும். உலகப் போர் வருமாயின. சீனா இந்தியா பிரேசில் ....மற்றும் ஆபிரிக்கா நாடுகள் போரில் வெல்வார்கள். ஐரோப்பா அமெரிக்கா தோற்க்கும். இவர்களிடம் மனித வளசக்தி அறவே இல்லை ஜேர்மனியில் வெளிநாட்டவர்கள் இல்லை என்றால் நிறைய வீடுகள் காலியாகி விடும் அரசாங்கத்திற்கு வருமானம் குறைந்து விடும் வீட்டு வரி இல்லை தொலைக்காட்சி வரி இல்லை தண்ணீர் குப்பைகள் காசு காட்டுவார்கள் இல்லை மாடு மாதிரி உழைத்து விட்டு 50. 60. வயதில் உயிரை விடுகிறார்கள் இவர்கள் காட்டிய பென்சன். பணம் அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது மேலும் நோட்டோ இல்லையென்றால் குசையின். இராக். அதிபர் உயிர் உடன். இருந்து குவைத் உள்பட பக்கத்து நாடுகளை பிடித்து ஆட்சி செய்துகொண்டு இருப்பார் அமெரிக்கா கனடாவை பிடிப்பது இலகுவாகும். புட்டின். உக்கிரேன். உட்பட பக்கத்து நாடுகளை இணைத்து ஆட்சி செய்வார் 🙏1 point- இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
அதை சொன்னால் பலருக்கு கோவம் வருது .1 point- இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
82 வயது வரையிலும் பதவி,அரசியல் செல்வாக்குடன் மரணமடைந்துள்ளார். மாவைக்கு நல்ல வாழ்வும் நல்ல சாவும் இனிதே அமைந்திருக்கின்றது. இந்திய தூதுவர் கூட அஞ்சலி செலுத்த நேரடியாக வந்திருக்கின்றார் என்றால் இவர் சாதாரண மனிதர் அல்ல. இந்த நிலையில் மாவையின் உறவினர்கள் இறுதி சடங்கிற்கு யார் யாரெல்லாம் வரக்கூடாது என பட்டியலிட்டிருப்பது ஒரு வித அவமானங்களே.1 point- பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
1 pointநல்லதொரு பகிர்வு, நல்ல நேரம் பார்ப்பது இன்று வரை தொடர்கிறது. இந்த நம்பிக்கையினால் இதில் சில நேரம் பாதிப்பு ஏற்படுகிறது. எனக்கு தெரிந்தவரின் மனைவி நிறை மாதமாக இருந்த போது, மருத்துவர் மருத்துவமனையில் அனுமதிக்க சொல்லியிருக்கிறார். ஆனால் அவரின் தாயாரோ நல்ல நாளில்லை இல்லை மறுத்திருக்கிறார். பெரும் போராட்டத்துக்கு பின்னர் தான் அது நடந்தேறியுள்ளது இவ்வாறான நல்ல நேர நம்பிக்கை வேறு ஏதாவது சமூகத்தில் உள்ளதா?1 point- இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
மாவை ஐயா சம்பந்தர்' >சுமத்திரன் போல் இலகுவாக அரசியலுக்கு வரவில்லை. இளம் வயதில் பல போராட்டங்களில் ஈடுபட்டார். சிறை சென்றார். தமிழரசுக்கட்சிக்கு தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட போதிலும் பெயருக்கே தலைவராக ஆளுமையற்ற தலைவராக இருந்தார். அவருக்கு சம்பந்தரை மீறிச் செயற்பட முடியாதிருந்தது. 9மரியாதை காரணமாக இருக்கலாம்).சம்பந்தர் கொடுத்த தைரியத்தில் சுமத்திரன் மாவையை மீறி ஆட்டம் போட்டார்.இருந்தாலும் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் அரவணைத்துப் போகும் தன்மை அவருக்கு இருந்தது.அவரது இறுதிச்சடங்குடன் தமிழரசுக்கட்சிக்கும் இறுதிச்சடங்கு நடத்த வேண்டியதுதான். சிறிதரனால் சுமத்திரனின் சுத்துமாத்துகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாது. இருந்தாலும் சம்பந்தர் போல் அரசியல் அநாதைப்பிணமாகப் போகமாட்டார். அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் அவருக்கு மரியாதை செலுத்தும். ஆளுமையற்ற தலைமையினால் தமிழ்மக்களிடத்தில் செல்வாக்கிழந்த போதிலும். அவரது இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல்.1 point- Facing the truth..
1 pointஇழப்பு இழப்பு இழப்பு.. இழப்பை தவிர எதுவுமில்லா முதுமை.. உறவுகளின் இழப்பு.. நண்பர்களின் இழப்பு.. உடலில் பலம் இழப்பு.. இவர்கள் இளையவர்களுக்கு கூறுவது..1 point - டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?
Important Information
By using this site, you agree to our Terms of Use.