Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3054
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19122
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    7048
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/10/25 in all areas

  1. ஈரோட்டில் பாஜக வின் வாக்குகளை சேர்த்தும் கட்டுப்பணம் கிடைக்கவில்லை என்பதை அறிந்த “நாம் தற்குறிகள்” தம்பிகளால் அதை பொறுக்க முடியாமல் ஒரு சிறிய கலந்துரையாடலுக்கு சென்று காட்டுமிராண்டிகள் போல் கத்தி அந்த கலந்துரையாடலை நடத்த விடாமல் சீமானை போலவே காட்டு கத்து கத்தி குழப்ப முயன்று, காவற்துறையால் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளார்கள். அது ஒரு சிறிய கலந்துரையாடல். அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தமக்கு மன வளர்சசியோ அறிவு வளர்ச்சியோ இல்லை என்பதை கூட உணரும் அறிவு இவர்களுக்கு இல்லை போலிருக்கிறது. தாம் வாழும் நாட்டில் இனவாதத்தால் பாதிக்கப்பட்டு இங்கு வந்துள்ளோம் என்ற அறிவு கூட இல்லாமல் படு மோசமான இனவெறியை கக்கியுள்ளது இந்த சீமானின் காட்டுமிராண்டி கூட்டம். சிங்கள இனவாதத்தை பற்றி பேசும் அருகதை இந்த சீமானின் இனவாதிகளுக்கு கிடையாது. சிங்கள இனவாதிகளை விட ஆயிரம் மடங்கு மோசமானவர்கள் இவர்கள். அதனால் தன் இந்த காட்டு மிராண்டிகளை மானசீகமாக ஆதரிக்கின்றனர்.
  2. சீமான் ஆதரவாளர்கள் ஒருவரையும் இங்கால காணவில்லை. "தொண்டையில் முள்ளா" அல்லது "மௌனம் சம்மதம்" என்ற நிலையா தெரியவில்லை😂!
  3. பௌசர் அவர்களால் நேற்றையதினம் லண்டனில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அவரது புத்தக நிலையத்தில் நடந்த 'தந்தை பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகளும் கலந்துரையாடலும்' என்ற கருப்பொருளிலான உரையாடல்நி நிகழ்வு தொடங்கும் நேரத்தில் அங்கு வந்திருந்த ஒரு குழுவினர் அந்த நிகழ்வு பற்றியும் பெரியார் பற்றியும் இழிவுபடுத்திக் கத்தியதுடன் ஏற்பாட்டார்கள் நிகழ்வைத் தொடங்க அனுமதிக்காதவகையில் கத்திக் கொண்டிருந்தார்கள். கூட்டம் முடியும்போது உங்கள் கருத்துக்களை நீங்கள் தாராளமாகத் தெரிவிக்கலாம் என்று கூட்ட அமைப்பாளர் பௌசர் திரும்பத்திரும்பச் சொன்னபோதும் செவிசாய்க்காமல் தொடர்ந்து பெரியாரை திட்டியபடியும் கூட்டத்தை நடத்தமுடியாது என்றும் கூச்சலெழுப்பிக் குழப்பினர். எவ்வளவோ தடவை அமைதியைப் பேணுமாறு கேட்டபோதும் அதைக் கேட்காது அவர்கள் அட்டகாசம் செய்ததை அடுத்து அவர்களைப், பொலிசாரை அழைத்துப் பலவந்தமாக அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால், இதில் பலமாகக் கத்தித் தன்னை தீவிரமான ஒருவராகக் காட்டிக்கொண்ட ஒரு நபர் அது பற்றித் தனது முகநூலில் எந்தவித வெக்கமுமின்றி, 'வீரம் ததும்ப' இவ்வாறு பதிவிட்டிருந்தார்: 'கிழக்கு இலண்டனில் திராவிடர்களால் தமிழர்கள் என்ற போர்வையில் புத்தக அறையில் 7 நபர்களுடன் நடக்கவிருந்த ஈர வெங்காயம் இராமசாமியின் கல்யாணக் கொண்டாட்டம் தமிழர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் விளம்பரப் பலகையும் அகற்றப்ப்பட்டது'!. என்றும், 'பொலிஸ் வந்து கூட்டத்தை நிப்பாட்டிட்டுப் போட்டுப் போனவன்' என்றும் பச்சைப் பொய்யைப் பெருமையாக பதிவுசெய்திருந்தார். உண்மையில் பெரியாரின் பாசையில் சொல்வதானால் அங்கு இவர்கள் வந்து கத்தியதன் மூலம் ஒரு 'வெங்காயமும்'புடுங்கப்படவில்லை. உண்மையில் பொலிசார் விரட்ட ஓடித் தப்பி ஊரைப்பேய்க்காட்டவும் தமது வீரத்தைப் பறை சாற்றவும் இப்படி ஒரு பச்சைப் பொய் முகநூல் பதிவொன்றை இட்டதைத் தவிர இவர்கள் வேறெதையும் சாதிக்கவில்லை. திட்டமிட்டபடி கூட்டம் நடந்து முடிந்தது. இந்த ஒன்றே போதும், பெரியார் யார், அவரை எதிர்த்து அரசியல் பிழைப்பு நடாத்தப் புறப்பட்டுள்ள இவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள! பெரியார் இருக்கும் போது மட்டுமல்ல, இறந்து இத்தனையாண்டுகளுக்குப் பிறகும் இத்தகைய அயோக்கிய அரசியல் வெறியர்களுக்கு இன்னமும் அச்சமூட்டும் ஒருவராகத்தான் இருக்கிறார்! https://www.facebook.com/vickneaswaran.sk/videos/1130441498822683/?app=fbl
  4. வாசகர் இலகு கருதி இதை திருத்தங்களுடன் மீள் பிரசுரம் செய்கிறேன். கீழே உள்ள லிஸ்டில் தாம் இருப்பதாக கருதுவோர் முறையிட்டால் - லிஸ்ட் மீள் பரிசீலனை செய்யப்படும். ———— வீட்டில் பெற்ற தாயையே தூசணத்தில் திட்டும் மூதேசிகளை, தெருச்சந்தியில் நின்று தண்ணி அடித்த கூட்டத்தை, ஊரில் ஒன்றுக்கும் உதவாததுகள் என்பதாலும், காதல் தோல்வியாலும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டத்தை, சுடர் ஒளி, உதயன் போன்ற தரத்தில் தாழ்ந்த பத்திரிகை செய்திகளைக் கூட வாசிக்காத கூட்டத்தை, இவர்களுடன் எல்லாம் சேரக்கூடாது என்று பெற்றோர் சொல்வார்கள் அல்லவா அந்தக் கழுசறைகளை ஈழத்தின் முகவரி ஆக்கிவிட்டது தான். (C) - @பகிடி
  5. "ஏனிந்தக் கோலம்" "ஏனிந்தக் கோலம் வாலைக் குமரியே ஏமாற்றிப் பிழைப்பதும் ஒரு வாழ்க்கையா ஏராளம் வேடம் ஏன் உனக்கு ஏக்கத்தில் இனியும் தவறு செய்யலாமா?" "பெண்ணியம் சொல்லுவது எல்லோரும் சமம் கண்ணியம் காக்கும் செயல் பாடுகளே மண்ணும் பெண்ணும் இயல்பில் ஒன்றே எண்ணமும் கருத்தும் ஒன்றாய் இருக்கட்டும்!" "அன்பும் நீதியும் ஒருங்கே நின்றால் அழகு பெண்ணும் மகிழ்ச்சி அடைவாள் அடிமைச் சங்கிலியை உடைத்து எறிந்து அச்சம் மடம் நாணம் ஒழியட்டும்!" "உண்மையை உணர்ந்து உலகை அறிந்து பண்பாட்டு நிலையில் சமநிலை போற்றி கண்கள் போகும் வழிகளில் போகாமல் பெண்ணே உங்கள் கைகள் சேரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  6. அவ்வாறு செய்தால் இஸ்ரேலின் அகன்ற இஸ்ரேல் என்ற திட்டம் சாத்தியப்படாது,வெற்றி பெறாது...சுயஸ் கால்வாய்க்கு போட்டியாக அமைக்க இருக்கும் அடுத்த கால்வாயும் அமைக்க முடியாது...என்ன அமேரிக்காவும் ,மேற்கும் ஆயுத பலத்துடன் பலஸ்தீனத்தை சிதைக்கின்றனர் ,மேற்கு கரையையும்,ஹாசாவையும் பிரித்து இறுதியில் ஹாசாவை தம் வசம் எடுத்து விட்டனர் ... சிறிலங்காவில் வடக்கையும் கிழக்கையும் அரசாங்கங்கள் அதிகாரங்கள் மற்றும் திட்டமிட்டு குடியேற்றி பிரித்தது . 72 வருடங்களாக செய்கின்றனர் .இது தொடர்கதை பலஸ்தீனருக்கு ஆயுத பலத்துடன் நடை பெறுகிறது ஈழத்தமிழருக்கு அதிகார/ஆயுத /அரச உத்வியுடன் நடைபெறுகிறது...இருவருக்கும் பொதுவானவர்கள் சர்வதேச நாடுகள் மனித உயிர்களை மதிக்க தெரிந்த உலகமாக இருந்ததால் ஏன் இந்த உலகம் ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது
  7. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் AUS 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND NZ PAK BAN 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ENG AFG SA 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) AUS #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SA அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், IND அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், AUS அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் IND அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? ENG 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? ROHIT SHARMA 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? BUMRAH 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்?VIRAT HOLI 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? BUMRAH 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? HARDIK PANDYA 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND
  8. சுவிசின் முக்கிய சுற்றுலா தளங்கள்
  9. தி மு க.. அதிமுக ஆட்சி காலங்களில் இடைத்தேர்தல்களில் எதிர்கட்சிகள் வெற்றி பெற்றதுண்டா..?! சனநாயகம் செத்து பணநாயகம்.. ரவுடிசம் ஆட்சி செய்யும் தமிழகத்தில் சீமானின் துணிச்சல் பாராட்டத்தக்கது. ஏனையவை எதிர்கட்சிகளாக இருக்கவே தகுதி அற்றவை. ஏனெனில் மக்களுக்கான சனநாயகம் என்றால் மக்களின் விருப்புக்கு மதிப்பளிச்சு களத்தில் நிற்கனும். மாறாக வெல்வமா தோற்பமா என்பதல்ல சனநாயகம். அதுசரி.. கிந்தியாவில் சனநாயகம் இருந்தால் தானே..?! சீமானின் துணிச்சல் வாக்கு சதவீத வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள். ஈவே ராமசாமி ஒரு கன்னடப் பொய்யர். தமிழ் மொழி வெறுப்பாளர். தமிழீழ வெறுப்பாளர். ஈழத்தில் அவருக்கு முக்கியத்துவம் எதுவும் இருந்ததில்லை.. புலிகள் காலத்தில் கூட. கறுப்புச் சட்டைகள் சில தமிழீழத்தை ஆதரித்திருப்பினும்.. புலிகள் ஈ வே ராவை தூக்கிப் பிடித்ததே இல்லை. உண்மையில் ஈழத்தில் பலருக்கு ஈவே ராவை யாரென்றே தெரியாது. இப்ப சில ஈழ புலம்பெயர் அடிபொடிகள் தாங்கள் தங்கள் சுயவிளம்பரம்... சுயதேவைகள்.. புலி துதிபாடலுக்காக ஈவே ராவை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சீமானும் ஒரு காலத்தில் ஈவே ரா பக்தர் தான். இப்போ புத்தி தெளிந்திருப்பது நல்லது. ஈவே ராவை கடந்து நவீன ஏ ஐ காலத்துக்குரிய அரசியல் செய்யாவிடில்.. சீமான் அல்ல.. எவருமே வளரும் சந்ததியிடம் செல்வாக்கு செய்ய முடியாது.
  10. இங்கே கருத்துகளை வாசிக்கும்போது உலகம் தட்டையானது (flat earth theory) என்று அமெரிக்காவில் உண்டல்லவா? அதை வாசித்தது போல் இருக்கு 😅 2014 இல் இருந்தே கேள்விப்பட்டு வருகிறேன். நாம் தமிழர் இதோ கூட்டணி வைத்து விடுவார்கள்; பெட்டி வாங்கிவிடுவார்கள். விஜயலச்சுமி இத்யாதி.. இதை தவிர வேறொன்றும் இல்லை. சலிப்பு.. இப்போ புதுசா ஒன்று ஓடுது. நாம் தமிழரை உருவாக்கியதே பாரதிய ஜனதா கட்சியாம். அதாவது 2010 இல் பாஜக ஆட்சியைப் பிடிப்போம் என கனவும் கண்டிருக்க மாட்டார்கள். ஆனால் நாம் தமிழரை உருவாக்கி விட்டார்களாம் 😂
  11. காற்றாடி - அத்தியாயம் மூன்று ----------------------------------------------- இரண்டு வேலைகளை அவன் செய்து கொண்டிருந்தான். பகல் நேரங்களில் அயலவர் ஒருவருடன் சேர்ந்து வயரிங் வேலை என்று சொல்லப்படும் வீடுகளுக்குள் செய்யும் மின்சார அமைப்பு வேலையையும், பின்னேரம் மற்றும் இரவு நேரங்களில் ஊரில் இருக்கும் தியேட்டரில் ஒரு வேலையையும் செய்ய ஆரம்பித்திருந்தான். வயரிங் வேலை செய்வதற்கு அவன் வீட்டில் உடன்பட்டார்கள். ஆனால் தியேட்டரில் வேலை செய்வதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை காட்டியிருந்தனர். அவன் வயரிங் வேலைக்கு போவதற்கு காரணமே, அதன் காரணமாக தியேட்டரில் அவன் வேலைக்குப் போவதற்கு வீட்டில் ஒத்துக் கொள்வார்கள் என்ற ஒரே ஒன்றுக்காக மட்டுமே. மற்றபடி வயரிங் வேலையில் அவனுக்கு எந்த நாட்டமும் இல்லை. அதுவும் அந்தக் காங்கிரீட் சுவர்களுக்குள்ளால் வயர்களை கொண்டு செல்வதற்காக, அந்த சுவற்றை வெட்டுவது போன்ற ஒரு வேலையில் எவருக்குத் தான் நாட்டம் வரும். ஆனால், அவனை வேலையில் துணையாக கூட்டிப் போகும் அயலவர் சில வயதுகள் கூடியவர் என்றாலும், நல்ல ஒரு நண்பர் போன்றே பழகினார். வேலை முடிந்தவுடன் அன்றன்றே அவனுக்கான சம்பளத்தையும் கொடுத்துவிடுவார். அதில் ஒரு பகுதியை அவன் அம்மாவிடம் கொடுத்து விடுவான். பல நாட்களிலும் வேலையும் இருக்கும். சினிமாவும் தியேட்டரும் அவனுக்கு ஒரு கனவு போல. அவன் பிறந்ததே சினிமாவிற்கு என்று அவனுக்குள் ஒரு உறுதியான எண்ணம் இருந்தது. பொதுவாக சமூகத்தில் எல்லோருக்கும் இருக்கும் அளவில்லாத நாயக நாயகிகள் மீதான கவர்ச்சி அவனிடம் மிகக்குறைவாகவே இருந்தது. சினிமா என்பது வெறும் ஒரு பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, அதில் வரும் விடயங்களும், அங்கே வரும் கதாபாத்திரங்களும், அவற்றை திரையில் கொண்டு வரும் நடிகர்களும் உண்மை என்றே பலரும் எண்ணி, அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் அவர்களால் முடியாத, ஆனால் அவர்கள் செய்ய விரும்பும் சில நாயகத்தனங்களை திரையில் கண்டு, அதுவேதான் தாங்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள் போல. இந்த சமூகத்தில் சினிமா நடிகர்கள் மேல் இருக்கும் தீராத கவர்ச்சிக்கு இந்த மனப்பன்மையும் ஒரு அடிப்படைக் காரணம். அவனுக்கு ஒரு திரைப்படம் எப்படி உருவாக்கப்படுகின்றது, பின்னர் அது எவ்வாறு திரையில் ஓடுகின்றது என்பதிலேயே ஆர்வம் இருந்தது. அம்புலிமாமா புத்தகத்தில் இருக்கும் படங்களை ஒரே அளவுகளில் வெட்டி, அவற்றை நீட்டாக ஒட்டி, ஒரு சுருளாகச் சுற்றி , நடுவே ஒரு ஈர்க்கை வைத்து, அதைச் சுற்றிப் பார்த்து, இப்படித்தான் சினிமா உருவாகின்றது என்று அவனாகவே பரீட்சித்துப் பார்த்திருக்கின்றான். பின்னர் சிந்தனையில் இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு படம் அளவு இடைவெளியில் இரண்டு ஈர்க்குகளை வைத்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அவனின் படச்சுருளை சுற்றிப் பார்த்தான். இது தான் சரியான தொழில்நுட்பம் என்று, அதையே இன்னும் முன்னேற்றி, பலருக்கும் அம்புலிமாமா படங்கள் காட்டியும் இருக்கின்றான். தியேட்டரில் வேலைக்கு போனவுடன், தினமும், தியேட்டரின் உள்பக்கத்தை கூட்ட வேண்டும். ஒவ்வொரு வரிசையாக கூட்ட வேண்டும் என்றில்லை. முன்பக்கம், முகாமையாளர் அறை மற்றும் தியேட்டரின் உள்ளே இருக்கும் நடைபாதைகளை கூட்டவேண்டும். அத்துடன் படம் பார்த்து விட்டுப் போனவர்கள் போட்டுவிட்டுப் போகும் கஞ்சல், குப்பை, கழிவுகளையும் அள்ளி எடுத்து, வெளியில் தியேட்டரின் பின்னால் இருக்கும் குப்பையில் கொண்டு போய் கொட்டவேண்டும். அதை விட்டுவிட்டுப் போனோம், இதை விட்டுவிட்டுப் போனோம் என்று பின்னர் ஓடி வருபவர்களும் உண்டு. அவன் நேராக பின்னால் இருக்கும் அந்த சின்ன குப்பை மலையைக் காட்டுவான். அநேகமானவர்கள் அங்கே தங்கள் பொருட்களை தேடி எடுக்காமலேயே போய்விடுவார்கள். சிலர் அவனையும் சேர்ந்து தேடச் சொல்லியிருக்கின்றனர்.சிலருக்கு அந்த இடத்தை பார்த்தவுடன் பொல்லாத கோபம் வந்து, சீறி விழுந்தும் இருக்கின்றனர். தங்களின் கதாநாயகர்களின் பின்னால், அவர்கள் உலவும் இடத்தின் பின்னால், இப்படி ஒரு குப்பை மலை இருப்பதை அவர்கள் இதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. படம் ஆரம்பிப்பதற்கான முதல் மணி அடித்தவுடன், கலரிப் பகுதியில் உள்ள கதவில் அவன் போய் நிற்கவேண்டும். அங்கே வருபவர்களின் அனுமதிச்சீட்டுகளை கிழித்து, அவர்களை உள்ளே விடவேண்டும். கலரிப் பகுதியில் நீண்ட வாங்குகள் மட்டுமே போடப்படிருந்தது. தனிதனியான இருக்கைகள் கிடையாது. ஆண்கள், பெண்கள் என்ற இரு பக்கங்களும் கிடையாது. அதனால் தான் அது மிகக்குறைந்த விலையில் இருக்கும் பகுதியாக இருக்கின்றது. திரைக்கு அருகில் இந்தப் பகுதி இருக்கும். கழுத்தை நிமிர்த்தியே படம் பார்க்கவேண்டும். இந்தப் பகுதியின் பின்னால் இரண்டாம் வகுப்பு, முதலாம் வகுப்பு, ரிசர்வ் என்று மூன்று பகுதிகள் அந்த தியேட்டரில் இருந்தன. மேலே பால்கனி என்று இன்னொரு பிரிவும் இருந்தது. அதற்கான அனுமதி எல்லாவற்றையும் விட மிக அதிகம். பால்கனிக்கு அருகிலேயே, ஒரு தனி அறையில், படம் ஓடும் இயந்திரங்கள் இருந்தன. ஒரு நாள் கலரியிலிருந்து அந்த அறைக்கு முன்னேறுவதே அவனின் இலட்சியமாக இருந்தது. (தொடரும்...................)
  12. நீங்கள் இருவரும் சொல்வது ஒரு விதத்தில் சரியாக இருக்கலாம். ஆனால் கட்டிய விகாரையை இடிப்போம் வீராவேச வசனங்கள்,மேடைப்பேச்சுக்கள் முக்கிய அரசியல்வாதிகளுக்கு சரியானதல்ல. இது இன்னும் பகையுணர்ச்சிகளை தமிழ்- சிங்கள மக்களிடையே உருவாக்கும். கடைசியில் தமிழர்களின் பிரச்சனையே இதுதான் என முடித்து விடக்கூடும்.அனுர ஆட்சியில் மக்கள் அபிவிருத்தி முக்கிய விருத்தி எனும் பெயரில் நாடகம் ஆடுவது போல்....... தமிழ் அரசியல்வாதிகள் போராட்ட அரசியலை /பேச்சுவார்த்தை அரசியலை செய்யலாமே ஒழிய வெட்டுவோம்,புடுங்குவோம்,இடிப்போம்,உடைப்போம் என்ற அரசியல் சர்வதேசமே ஒத்துக்கொள்ளாது. அனுபவங்கள்.
  13. காற்றாடி - அத்தியாயம் இரண்டு ------------------------------------------------ சில்லென்று குளிர்ந்த இடத்தை விரல்களால் தொட, விரல்கள் அதைவிடக் குளிராக இருந்தது தெரிந்தது. உரசி சூடாக்கிக் கொண்டே, தான் இன்று பரீட்சைக்கு போகப் போவதில்லை என்பதை எப்படி பக்குவமாகச் சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான். அம்மா அழக்கூடும், ஊரையும் கூட்டக் கூடும், ஆனால் இந்த மழையில் ஊர் இங்கே வராது. அப்பா குதிக்கத்தான் போகின்றார். வளர்ந்த பிள்ளை என்று இப்பொழுது ஒரு வருடமாக அடிகள் எதுவும் விழவில்லை. இன்று அது மாறக்கூடும். சித்தப்பா அவர் வாங்கித் தந்த முழுக்காற்சட்டை பற்றி கவலைப்படக்கூடும். அம்மா ஏற்கனவே எழும்பி விட்டிருந்தார். அடுப்படியில் அரவம் கேட்டது. இப்ப, இந்த மழையில் எந்த விறகு ஈரமில்லாமல் இருக்குமோ தெரியவில்லை. ஆனாலும் எங்கள் எல்லோருக்குமாக அவர் அந்த இரண்டு அடுப்புகளையும் தினமும் விடாமல் ஊதிக் கொண்டேயிருக்கின்றார். தேத்தண்ணியை போட்டு விட்டு, எல்லோருக்கும் காலையில் ஏதாவது உணவு செய்யும் நாட்களில், நாங்கள் எல்லோரும் பாடசாலைகளுக்கு கிளம்பிப் போகும் வரை அவர் அடுப்புக்குள் முன்னால் ஒரு காலை முழுவதும் மடக்கி, மறு காலை முழங்கால் வரை மடித்தும் இருப்பார். 'ஏன் இப்படி இருக்கிறீங்கள், அம்மா...............' என்று கேட்டால் சிரிப்பொன்றே பதிலாக வந்து கொண்டிருந்தது. பெண்கள் எதையுமே வெளியில் சொல்லமாட்டார்களாமே. இன்று பரீட்சைக்கு போகாவிட்டால், இன்றுடன் படிப்பு நின்றுவிடும். அடுத்ததாக என்ன செய்வது............... ஆரம்ப ஆரவாரங்களின் பின், என்ன செய்யப் போகின்றாய் என்று கேட்கவும் போகின்றார்கள். என்ன செய்வது என்று பல திட்டங்கள் இருக்கின்றன. அதில் எதையாவது ஏற்றுக் கொள்வார்களா என்று தான் தெரியவில்லை. தங்கைகளும், தம்பிகளும் என்ன நினைப்பார்களோ. ஒரு தம்பியை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது. எங்கு படித்தாலும், அவன் தான் வகுப்பில் முதலாவதாக வந்து கொண்டிருக்கின்றான். அவன் மட்டும் இப்படி எப்படி பிறந்தானோ தெரியவில்லை. வயிற்றில் பிள்ளைகள் இருக்கும் போது, தாய்மார்களின் உணவுப் பழக்கம் கூட பிள்ளைகளின் மூளைத் திறனை வளர்க்கும் என்று சொல்லுகின்றார்கள். இந்த முற்றத்தில் நிற்கும் புளி வைரக்கண்டி மாங்காயைத் தான் அம்மா எப்போதும் கடித்துக் கொண்டிருந்திருப்பார். தம்பி வயிற்றில் இருக்கும் போது, அந்த வருடம் அந்த மரம் காய்க்கவில்லையோ என்னவோ. மழை தற்காலிகமாக விட்டிருந்தது. மீண்டும் அது ஆரம்பிக்க முன், முகத்தை கழுவி விட என்று கிணற்றடிக்கு போனான். பெரிய வட்டக் கிணறு. ஆனால் மூன்றாக பிரிக்கப்பட்டு இருந்தது. மூன்று வீடுகளுக்கு அது தான் கிணறு. கிணற்றின் மேலேயே தகர வேலிகளால் அது பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு வீட்டுக்காரருக்கு இன்னொரு வீட்டுக்காரை பார்க்க முடியாத வகையில் அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த வேலிகள். அவை தார் தகரங்கள். எம் எஸ் விஸ்வநாதன், கே வி மாகாதேவன் போன்ற பழையவர்களின் ரசிகரான அப்பா, இந்த தார் தகர வேலியை தினமும் பார்ப்பதால் தான், புதிதாக வந்த இளையராஜாவின் பாடல்கள் தார் தகரத்தில் கம்பால் அடிப்பது போல கொடூரமாக இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லுவார். அவர் சிவாஜியின் ரசிகரும் கூட. பொதுவாகவே அப்பாமார்களும், மூத்த மகன்களும் எதிரும் புதிருமாகவே வளர்வார்கள் போல. அள்ளிய வாளித் தண்ணீருக்குள் ஒரு சின்ன ஜப்பான் மீன் குஞ்சும் வந்திருந்தது. மழை பார்க்க மேலே வந்து ஆவென்று நின்றிருக்கின்றார் போல. அப்படியே வாளிக்குள் வந்தும் விட்டார். இரண்டு கைகளாலும் அதை தண்ணீருடன் அள்ளி எடுத்து கிணற்றுக்குள் கொட்டிவிட்டான். கிணற்று நீர் சூடாக இருந்தது. வெளியே குளிராக இருக்கும் போது இப்படித்தான், கிணற்று நீர், கடல் நீர் கூட, சூடாக இருப்பது போல தெரியும். இன்னும் சில நாட்கள் மழை பெய்தால், கிணற்றில் தண்ணீர் எட்டித் தொடும் அளவிற்கு வந்துவிடும். எங்களின் பக்க கிணற்றில் உயரமான தடுப்புக் கட்டுகள் எதுவும் இல்லை. ஆனாலும் இதுவரை எவரும் இந்தக் கிணற்றுக்குள் தெரிந்தோ அல்லது விபத்தாகவோ விழுந்திருக்கவில்லை. அம்மா தேத்தண்ணி போட்டு வைத்திருந்தார். அது எல்லோருக்கும் சேர்த்து ஒரு பெரிய சட்டியில் இருக்கும். 'எத்தனை மணிக்கு சோதனை...............' என்று கேட்டார் அம்மா. பதில் எதுவும் சொல்லாமல் குடித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்த அம்மா மீண்டும் அதையே கேட்டார். 'நான் போகவில்லை, அம்மா......................' என்றான் அவன். அப்படியே சில கணங்கள் இருந்த அம்மா, மீண்டும் நினைவு வந்தவராக, 'போகாமல் என்ன செய்யப் போகின்றாய்................' என்றார். ஒரு வேலைக்குப் போகலாம் என்றிருக்கின்றேன் என்றான் அவன். 'அப்பாவிடம் இதை யார், எப்படிச் சொல்வது..................' என்று அம்மா அடுத்த கட்டத்தை நோக்கி விரைவாக போய்க் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. நான் எப்படியும் படிக்கப் போவதில்லை என்று அம்மாவிற்கு முன்னமே தெரிந்திருந்தது போல. தாய்க்கு தெரியாத பிள்ளைகளா........... 'டில்லிக்கு ராஜாவானாலும்........................' என்று ஒரு பழமொழியை அம்மா அடிக்கடி சொல்லுவார். எந்தப் பிள்ளை டில்லிக்கு ராஜாவாக வரும் என்றும், எது டில்லியையே வாழ்நாளில் பார்க்காது என்றும் அவர்களுக்கு தெரியும் போல. அப்பா எப்போதும் அப்படியே படுக்கையில் இருந்தபடியே அன்றைய நாளின் முதலாவது தேத்தண்ணியைக் குடிப்பார். பின்னர் ஒரு பத்து அல்லது பதினைந்து குடிப்பார். ஆனால், வீட்டில் எல்லோரும் பல் துலக்கி, முகம் கழுவி விட்ட பின்னேயே, எதை என்றாலும் குடிப்போம் அல்லது சாப்பிடுவோம் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் பதில்களை பாடசாலையில் சொல்லியிருக்கின்றேன். முதலாவது தேத்தண்ணியின் பின் கொஞ்ச நேரம் கண்மூடிப் படுத்திருப்பார். அது அவரின் சிந்திக்கும் நேரம் போல. அம்மா அப்பாவின் சிந்தனையைக் கலைக்காமல், பொறுமையாகவே விசயத்தை உடைத்தார். எதிர்பார்த்த எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 'சரி, இனி என்ன செய்யப் போகின்றாராம்............' என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டே, அப்பா எழுந்து இருந்தார். அம்மா அடுத்த தேத்தண்ணியை சுடவைக்கப் போனார். பெரும் எடுப்போடும், பரபரப்போடும் வாழ்க்கையின் ஒரு தருணத்திற்கு காத்திருக்கும் போது, சில வேளைகளில் அந்த தருணம் ஒரு பூனையின் நடை போல எந்த சத்தமும் எழுப்பாமல் எங்களைக் கடந்து போய்விடுகின்றது. (தொடரும்........................)
  14. பெரியார் விவகாரம்.. சீமான் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டார்.. தேர்தலுக்கு பின் ஒரே போடாக போட்ட அண்ணாமலை! Yogeshwaran MoorthiUpdated: Saturday, February 8, 2025, 14:47 [IST] ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமாரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 63,984 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 13,945 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏற்கனவே சுமார் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் திமுக முன்னிலை பெற்றுள்ளது. Also Read இதனால் திமுக தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் இந்த வெற்றி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஏராளமானோர் வாக்கு செலுத்தவில்லை. வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல் நோட்டாவுக்கான வாக்குகள் அதிகரிக்கும். நிச்சயம் ஈரோடு பகுதியில் நோட்டாவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் அதிகம்தான். இந்த இடைத்தேர்தல் மக்களிடையே எழுச்சி இல்லாத, உற்சாகமில்லாத தேர்தல். என்னை பொறுத்தவரை வாக்கு வங்கி இங்கு போனதா, அங்கு போனதா என்று சொல்வதை விடவும் மக்களே உற்சாகமாக பங்கேற்காத தேர்தலாக பார்க்கிறோம். ஏற்கனவே திமுகவின் வெற்றி எழுதப்பட்ட ஒன்று தான். தொடக்கம் முதலே இந்த இடைத்தேர்தலுக்கு திமுகவும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முதலமைச்சர் உள்ளிட்ட யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. எங்களை பொறுத்தவரை பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் தான், மக்களை பட்டியில் அடைத்து வைத்த கொடூரம் நிகழவில்லை. Recommended For You இந்த தேர்தல் களத்தில் நான் ஏற்கனவே பார்த்துள்ளோம். அதேபோல் பெரியாரை யாரும் புகழ்ந்து பேசினால் ஓட்டு கிடைக்குமா? அல்லது பெரியாரை தாக்கி பேசினால் வாக்குகள் மாற்றமடைந்து அதிகரிக்குமா என்று நிச்சயம் கிடையாது. அந்த காலம் மாறிவிட்டது. பெரியாரை பிடித்தவர்கள் இருக்கிறார்கள். பெரியாரை பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். அதற்காக வாக்கினை மாற்றி போடும் அளவிற்கு சக்தி இருக்கா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. சீமான் உள்ளிட்டோர் ஒரு வாதத்தை முன் வைத்தார்கள். பெரியார் தொடர்புடைய வாதம் கொஞ்சம் கூடுதலாக சென்றுவிட்டதோ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால் பெரியாரை பற்றிய கருத்துகளுக்கு வாக்கினை மாற்றி போட வைக்கும் சக்தி கிடையாது. அதனைதான் ஈரோடு உணர்த்தி இருக்கிறது. பெரியாரை கடந்து தமிழ்நாடு பயணித்துவிட்டது. ஒருவேளை பெரியாரால் தான் நாம் தமிழர் தோல்வியடைந்துவிட்டது என்று திமுகவினர் நினைத்தால், அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் சொல்வேன். யாரும் இல்லாத இடத்தில் நாதக மட்டுமே இருந்துள்ளது. அதனால் திமுகவிற்கு கிடைத்துள்ள வாக்கு சதவிகிதம், பெரியாரை எதிர்த்து பேசியதால் வாக்குகள் கிடைத்தது போன்ற வாதத்தை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/seeman-has-spoken-a-bit-too-much-against-periyars-thoughts-says-bjp-state-president-annamalai-after-678343.html?ref_source=OI-TA&ref_medium=Article-Page&ref_campaign=More-Articles-DMP&ref_content=678465-p8 டிஸ்கி தட் “வாங்கின காசுக்கு மேலாலயே கூவீட்டாண்டா கொய்யால” மொமெண்ட்
  15. உடல் ஆரோக்கியம் குன்றியிருந்தும் யாழ்களத்தை கலகலப்பாக வைத்திருக்க @suvy ஐயா கலந்துள்ளார். நன்றி பல🙏🏽 முதல்முறை அல்வாயனும் கலந்துள்ளார். அவருக்கும் நன்றி😀 இதுவரை 5 பேர் போட்டிக்கான பதில்களைத் தந்துள்ளனர். இன்னும் 5 பேராவது விரைந்து கலந்துகொண்டால்தான் மேலேயுள்ள விதியின்படி யாழ்களப் போட்டி நடைபெறும். 😎
  16. நீங்கள் இதில் வடக்கு மலையகம் என இல்லாத பகையை கண்டு மருள்வதாகவே நான் காண்கிறேன். சந்திரசேகரன்: 1. ஒரு இனவாத காவடி. 2009 க்கு முன்பே ஜேவிபியின் அத்தனை இனவாத நடவடிக்கையையும் ஆதரித்தவர் 2. கம்யூனிச காவடி - விளக்கம் தேவையில்லை. 3. சுயநல காவடி - விளக்கம் தேவையில்லை. இப்படித்தான் இதை பார்க்க வேண்டும். கதிர்காமர், டக்கிளஸ் வடக்கு, பிள்ளையான், கருணா கிழக்கு. 👆மேலுள்ளதை நாம் பிரதேச கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. அப்படிதான் இதிலும். கூடவே பெரியசாமி சந்திரசேகரன் போன்றோர் போராட்டத்துக்கு அளித்த ஆதரவை அதனால் அவர் அடைந்த துன்பத்தை மறக்க கூடாது.
  17. இவர் அமைச்சராக? அல்லது சிறீலங்கா ஜனாதிபதியா? எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து....? சிங்களத்தின் திட்டத்தை சக்கைப்போட வைக்க சரியான ஆளைத் தான் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
  18. நான் தெளிவாக இருக்கிறேன் சகோ ஈரோட்டில் நாம் தமிழர் வளரவில்லை என்றீர்கள் ஓகே 2026இல் பார்க்கலாம் என்றேன். 2026 இல் புறக்காரணிகளை (விஜய் மற்றும் கூட்டுக்கள்) வைத்தே என்னால் எழுதமுடியும். இதை நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதவர் இல்லை. ஆனால் நீங்கள் உங்கள் வியூகத்திற்குள் என்னை கொண்டு வரப் பார்க்கிறீர்கள்? அப்புறம் புறமுதுகு ஜன்னலால் தாவியது என்று நானும் அனுபவப்படவா?😂
  19. இது சரியான தகவல் அல்ல. ட்ரம்ப் பொலிசாரும் ஒருவரின் குடிவரவு நிலையை கேள்வி கேக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அமெரிக்காவின் மிகப் பெரும்பாலான நகர , மாநில காவல் துறையினர் ஒருவரின் குடிவரவு நிலையை (immigration status) கேள்வி கேட்க அதிகாரமில்லை. அப்படிக் காவல் துறை குடிவரவு நிலையைக் கேட்டாலும், தடுத்து வைக்கப் படுபவர் சொல்ல வேண்டிய கடமை இல்லை. இதை "right to remain silent" என்பார்கள். இந்த சட்டப் பாதுகாப்பு அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டு வெவ்வேறு திருத்தங்களில் (5th and 14th amendments) உள்ளடக்கப் பட்டிருக்கிறது. அமெரிக்காவினுள் - சட்ட ரீதியாகவோ, சட்ட விரோதமாகவோ- வசிக்கும் அனைவருக்கும் இந்த அரசியலைப்பு விதிகள் பொருந்தும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் சில தடவைகள் உறுதி செய்திருக்கின்றன. எனவே, நகரகாவல் துறை, மாநில காவல்துறை குடிவரவு நிலையைக் கேள்வி கேட்கும் போது பதில் சொல்ல வேண்டிய கடமை இல்லை.
  20. ஓம், AI! நெடுக்கர் சொல்வது என்னவென்றால், கடந்த இரு வாரங்களாக வெவ்வேறு திரிகளில் இணைக்கப் பட்ட புலிகள், பெரியார், பிரபாகரன் பற்றிய grainy VHS-grade காணொளிகளை தூக்கிக் கடாசி விட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப் பட்ட பொய்க் காணொளிகளையும் , படங்களையும் வைத்து வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்கிறார். இதைத் தான் சீமான் தம்பிகள் யாழுக்கு வெளியே செய்து கொண்டிருக்கிறார்கள் - யாழில் அவற்றை இணைக்கும் போது தூக்கி விடுகிறார்கள் அல்லது கருத்தாளர்களிடம் கல்லெறி கிடைப்பதால் அதைப் பற்றி முறைப்படுகிறார்கள்! புரிகிறதா உங்களுக்கு😎?
  21. மிகவும் தேவையானதும் துணிச்சலுமான பேச்சு. பங்குபற்றிய சகல மாணவர்களுக்கும் பாராட்டுக்கள்.
  22. இன்றைய நாகரீகமடைந்த மனித சமுதாயத்துக்கு குத்துச்சண்டை அவசியமற்ற ஒன்றாகும். ஒருவர் முகத்தில் ஒருவர் பாய்ந்து குத்தித் தம்வீரத்தை நிலைநாட்டப் போட்டியிடும் இத்தகைய விளையாட்டுகள் உயிராபத்தை விளைவிக்க்க்கூடியவை ஆதலால் எதிர் காலததில் சர்வதேச மட்டத்தில் இதனைத் தடைசெய்தல் வேண்டும். பாதிக்கப்பட்ட வீரருக்கு அஞ்சலிகள். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.
  23. மிக மிக அழகான இடங்கள் . ........... ஒரு முறை போய்ப் பார்க்கத்தான் வேண்டும் . ........! 😂 நன்றி நுணா .......!
  24. நானும் என் பாரதியும் · Rejoindre Jay R Jayakumar · · ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம், “உன் அம்மா ஏன் இன்னும் உன்னுடனேயே வாழ்கிறார்? நீ ஏன் அவளுக்குச் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கவில்லை?" எனக்கேட்டார். கிறிஸ்டியானோ இதயப்பூர்வமான வார்த்தைகளால் பதிலளித்தார்: “என் அம்மா தன் வாழ்நாள் முழுவதையும் எனக்காக அர்ப்பணித்தார். அவள் அளவில்லாத தியாகங்களை எனக்காகச் செய்தாள், நான் சாப்பிடுவதற்காக அவள் அடிக்கடி பசியுடனே படுக்கைக்குச் சென்றாள். எங்களிடம் பணம் இல்லை, ஆனால் அவள் அயராது வேலை செய்தாள்-வாரத்தில் ஏழு நாட்களும், இரவில் பணிப்பெண்ணாகக்கூட. எனக்கு முதல் ஜோடி கால்பந்து பூட்ஸை வாங்கித் தத்தார். அதனால் நான் ஒரு வீரராக வேண்டும் என்ற எனது கனவை நனவாக்கினேன். நான் சாதித்த அனைத்தும், எனது வெற்றிகள் அனைத்தும் அவளுடைய அசைக்க முடியாத அன்பிற்கும் தியாகத்திற்கும் கிடைத்தவை. நன்றிகள். நான் அவளுக்கு எல்லாம் கடமைப்பட்டிருக்கிறேன். நான் வாழும் வரை அவள் என் பக்கமே இருப்பாள். நான் கொடுக்கக்கூடிய அனைத்தும் அவளிடம் ஏற்கனவே உள்ளது, ஆனால் மிக முக்கியமாக, அவள் என் அடைக்கலம், என் வலிமை மற்றும் என் மிகப்பெரிய ஆசீர்வாதம். கிரெடிட்: மஹௌ க்ரூஸ்..........!
  25. நானும் கவனித்தேன் இவர்கள் தான் சீமானின் வெளிநாட்டு ஈழ படையணி 😟 பையன் உறவு ஒருவரின் காணொளி இணைத்திருந்தார் அவரும் 50 வயது பிறந்த தினத்தை பிரமாண்டமா கொண்டாடிய இலங்கை தமிழர். சீமானின் நச்சு கருத்துக்கள் இவர்களிடம் நன்றாக வேலை செய்கின்றது. மற்றய தமிழர்களை பொறுத்தவரை விஜய் ரஜனிகாந்தை தெரிந்த அளவுக்கு சீமானை தெரியவில்லை இது மகிழ்ச்சி. திரள் நிதிக்கு எதிர்காலம் இல்லை. அதனால் இப்போதே முடிந்தளவு சுருட்டுவார்.
  26. வாழும்வரை போராடு . ...... 06. அனுராதபுரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்களுக்கு முன் காடையர்கள் வாகனங்களை மறித்து கொள்ளையடித்து பின் எரிக்கிறார்கள் என்னும் செய்தி இவர்களுக்குக் கிடைக்கிறது. அந்த இடத்தில் என்ன செய்வதென்று அறியாது முன்னும் பின்னுமாய் வாகனங்கள் தரித்து நிக்கின்றன. எல்லா சாரதிகளும் வீதிகளில் இறங்கி கும்பல் கும்பலாய் கதைத்துக் கொண்டு நிக்கிறார்கள். தூரத்தில் பார்க்க ஆகாயத்தில் ஒரே புகையும்,வாகனங்கள் எரியும் வெடிச்சத்தமும் கேட்கிறது. சந்துரு பீற்றரிடம் அண்ணை இப்ப என்ன செய்யலாம் என்று கேட்கிறான். அதுதான் தம்பி நானும் யோசிக்கிறன். அப்போது இவர்களின் பின்னால் ஒரு லொறி வந்து நிக்கின்றது. சந்துரு திரும்பிப் பார்க்க அது இராகவனின் இரண்டு லொறிகளில் ஒன்று என்று தெரிகின்றது. சந்துரு இராகவனோடு கதைத்தே நெடுநாட்களாகி விட்டன. அந்த லொறியில் இருந்து இறங்கி வந்த சாரதியும் கிளீனரும் சந்துருவை இனங்கண்டு, சந்துரு அண்ணே மேலே போகமுடியாது போல் இருக்கே, என்ன செய்வது. ஓம் தம்பி அதுதான் நாங்களும் யோசித்துக் கொண்டு இங்கு நிக்கிறம். ஆனால் இரவாகிக் கொண்டு போகுது அதனால் இங்கு அதிகநேரம் தங்குவதும் ஆபத்து, பாதுகாப்பில்லை. --- அண்ணை, எங்கட முதலாளியின் மற்றலொறியும், ஸ்ரீகாந் அவர்களின் இரண்டு லொறிகளும் புல்லா லோட் ஏற்றிக்கொண்டு நேரத்தோடு எங்களுக்கு முன்னால் வந்தவை. இப்ப அவை இந்தக் கலவரத்தைத் தாண்டிப் போய் விட்டினமோ, அல்லது கலவரத்துக்குள் மாட்டுப் பட்டினமோ தெரியவில்லை. --- நாங்கள் வரும்போது அவைகளைக் காணவில்லை தம்பி. --- உங்களுக்குத் தெரியும்தானே அண்ணை, ஊருக்குள் பதுக்கி வைத்திருந்த அவ்வளவு பொருட்களும் இன்று கொழும்புக்கு கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்னும் நோக்கத்துடன் ஏற்றிக்கொண்டு வந்தது. அது இன்று பார்த்து இப்படிக் கலவரம் வெடித்திருக்கு. அதுதான் பயமாய் இருக்கு. --- சந்துரு அவரிடம் ஏன் தம்பி இவ்வளவு நாளும் இருந்திட்டு இப்ப எல்லாத்தையும் கொழும்புக்கு கொண்டு போகினம் என்று கேட்கிறான் . --- என்னண்ணா தெரியாதமாதிரிக் கேட்க்கிறீங்கள் . --- எட உண்மையா எனக்குத் தெரியாது அப்பன் . --- அண்ணை இந்தக் கிழமை விடுமுறைகள் முடிந்து பாடசாலைகள் எல்லாம் திறக்குது எல்லோ, அதுதான் பொருட்கள் எல்லாம் இங்கு கொண்டு வருகினம் . பாடசாலை உடுப்புகள் வியாபாரமும் அதைவிட மாணவர்களிடம் கஞ்சா மற்றும் விதவிதமான போதைப்பொருள் விற்பனையும் அமோகமாய் நடக்கும் இவை மட்டுமல்ல இன்னும் இரண்டு படகுகளில் சாமான்கள் நிறைய படகுகளில் வருகுது . --- ஓ அப்படியா , முதல்ல நீ காடையர்களிடம் இருந்து மட்டுமல்ல காவலர்களிடம் இருந்தும் தப்ப வேணும்........மிகவும் கவனம் தம்பி . --- ஓமண்ணை ........! --- சரி....சரி.....நீ பயப்பிடாதை ஏதாவது வழி இருக்கும் பார்க்கலாம். என்று சொன்ன சந்துரு பீற்றரின் பக்கம் திரும்பி, அண்ணா உங்களுடைய அண்ணரின் வீடும்கூட இங்குதான் எங்கோ இருப்பதாய் நீங்கள் சொன்ன ஞாபகம், இப்ப அங்கு சொல்லமுடியுமா வழியிருக்கா என்று கேட்கிறான் ....... --- ஓம் தம்பி, அதை நான் முதலில் நினைத்தனான், சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீங்களோ என்றுதான் சொல்லவில்லை. இங்கால மிகிந்தலை வீதியில் பத்து கி.மீ தூரம் போக அவரின் வீடு வயல் எல்லாம் வரும் என்று சொல்கிறார். --- நீங்கள் என்னண்னை ...... உங்களை நான் அப்படி நினைப்பேனா .....இனியும் தாமதிக்க வேண்டாம்.வாகனங்களைத் திருப்பிக்கொண்டு அங்கு செல்வோம்.பிறகு யோசிக்கலாம் என்று சொல்லிவிட்டு, லொறி சாரதியின் பக்கம்திரும்பி தம்பி நீங்களும் எங்களுடன் வாறீங்களா என்று கேட்க அவரும் சரி என்கிறார். பின் அவன் தனது மினிபஸ்சுக்குள் வந்து பயணிகளிடம் நிலைமையைச் சொல்லி அவர்களின் அனுமதியையும் பெற்றுக் கொள்கிறான். இரு வாகனங்களும் மிகிந்தலை வீதிக்குள் திரும்பி பீற்றரின் வீட்டுக்குப் பயணிக்கின்றன.இரவு அங்கு தங்குகின்றார்கள். பீற்றரின் அண்ணன் குடும்பமும் அந்த அகால நேரத்தில் எல்லோருக்கும் உணவு தயாரிப்பதில் ஈடுபடுகின்றார்கள். அங்கு இருக்க இருக்க சந்துருவுக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை. ஆதங்கத்துடன் பீற்றரைப் பார்க்கிறான். அவரும் அவன் பார்வையை உணர்ந்து, என்ன தம்பி செய்ய வேணும் என்று கேட்கிறார். அண்ணை என் நண்பர்களின் மற்ற லொறிகளும் சாரதிகளும் என்ன பாடோ தெரியவில்லை. அதோ அங்கு நிக்கிற மோட்டார் சைக்கிளில் கிட்டவா சென்று என்ன நிலைமை என்று பார்த்து வருவோமா என்று கேட்கிறான். அதுக்கென்ன தம்பி பார்த்துவரலாம். வாகனங்கள் இங்கு நிக்கட்டும். அண்ணர் இருக்கிறார் பயமில்லை என்று சொல்ல, இருவரும் கொஞ்ச உணவுகளும் தண்ணீரும் எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கலவரம் நடக்கும் இடத்துக்குச் செல்கின்றனர்………………………………… 🐘 🐘 🐘 🐘 🐘 🐘. வாருங்கள் போராடலாம் . .........!
  27. சீமானின் தம்பிகள் என்றால் அறிவு அற்ற, நாகரீகம் தெரியாத காட்டு மிராண்டிகள் என்பது தெரிந்த விடயமே. அவர்களாக வந்து நாம் எந்த அறிவு வளர்சசியடைந்த நாடுகளில் வாழ்ந்தாலும் சீமானின் காட்டு மிராண்டி கூட்டமே என்பதை உறுதிப்படுத்தி சென்றார்கள்.
  28. ஒரு காலத்தில் ஈவே ரா பேசிய பேச்சுக்களை விட சீமானின் மொழியாடல்கள் எவ்வளவோ மேல். சீமானின் மொழியாடல்களில் மிகுதிகள் குறைகள் இருப்பினும் மக்களின் எண்ணப் பிரதிபலிப்புக்கள் இலகு வடிவில் இருப்பதால்.. மக்களிடம் எடுபடுகிறது என்பதே உண்மை.
  29. இவர்களைதான் @பகிடி முள்ளம்பண்டி தலையனுகள் என்றார்🤣. ஆனா எல்லாருக்கு மேல வெளிச்சிட்டு, தாடியில்தான் உரோமம் இருக்குது….. முழுவதும் கஞ்சா கூட்டம். எத்தனை சிங்கள இனபடுகொலையாளிகள் தமிழர் வாழும் பிரதேசத்திலே வந்து நடந்து திரிகிறார்கள். இந்த பேடிகளில் ஒருவர் கூட அவர்களை ஒரு வார்த்தை கேட்பாரா? யாரோ ஒரு பெண்ணுடனும், வயசான இருவரிடமும் வீரத்தை காட்டும் பேடிகள். இந்திய தமிழில் சொன்னால் - பொ***ட பசங்க 🤣.
  30. இதையும் சென்னை விமான நிலையத்தையும் ஒரு ஆட்கள் தான் கட்டியிருப்பார்களோ?
  31. யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கும், கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே நடந்த விவாதம் அது. விவாதத்தின் தலைப்பு: “ஈழமணித்திருநாட்டிலே தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அன்றாட இடர்களுக்கு பெரிதும் காரணமாக இருப்பவர்கள் அரச ஊழியர்களா அல்லது அரசியல்வாதிகளா?” என்பதாகும் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள்…. அரச ஊழியர்கள் என்றும், கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்கள்…. அரசியல்வாதிகள் என்றும் வாதாடினார்கள். ஆக… அரச ஊழியர்களையும், தமிழ் அரசியல்வாதிகளையும் மாணவர்கள் கிழித்து தொங்க விட்டுள்ளார்கள். 😂 இணைப்பிற்கு நன்றி, @ஈழப்பிரியன் 👍🏽
  32. அதனால் என்ன சகோ அடுத்த வருடம் பார்க்கலாம்.... என்ன அவசரம்? என்ன இருக்கிறது தொலைந்து போக....?
  33. திட்டமிட்டே செய்யப்பட்டது. தலைவரின் குடும்பமே இருக்க கூடாது என்பதில் சிங்களம் மிகத்தெளிவாக இருந்தது. 16 வருடம் கழித்து நாமல் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.
  34. ரங்கா ரங்கா மன மோகன ரங்கா என்னைப் பாரடா . .........! 😍
  35. 🤣................ தெளிவாக ஒருவர் அர்ச்சுனா, அடுத்தவர் சீமான் என்று சொன்னால், இந்த திரி இன்னும் நாலு பக்கங்கள் போகுமே, அந்தப் பயம்தான்....................😜. பாக்கு நீரிணை வடக்கு, பாக்கு நீரிணை தெற்கு என்று ஒரு 'கோட் வேர்ட்' வைத்துக் கொள்ளலாம்..........🤣.
  36. வாழும்வரை போராடு . .......... 05. இப்பொழுது மாணிக்கம் நேராக சந்துருவைப் பார்த்து தன்னருகே அழைக்கின்றார். அவனைப் பார்த்து சந்துரு நீ இப்பொழுது என்ன செய்ய நினைக்கிறாய், எதுவாயினும் தயங்காமல் சொல்லு என்கிறார். அப்போது அவரது மூத்தமகன் குறுக்கிட்டு சந்துரு நீ பேசாமல் என்கூட கொழும்புக்கு வந்துவிடு. என் கடையையும் பார்த்துக் கொண்டு என் கூடவே இருக்கலாம் என்கிறார். இளையமகனோ நோ....நோ.....அதெல்லாம் முடியாது அவன் எப்பொழுதும் போல எங்ககூடவே இருக்கட்டும் என்னப்பா என்று தகப்பனையும் துணைக்கு அழைக்கிறான். --- நீங்கள் கொஞ்சம் பொறுங்கள், சந்துரு சொல்லட்டும். சந்துரு நீ என்ன சொல்கிறாய். --- சந்துரு சொல்கிறான் .....ஐயா இந்தக் கடை வணிகத்தில் நீங்களும் பெரியமுதலாளி, சின்ன முதலாளி மற்றும் இங்கு வேலை செய்யும் பெரியவர்களும் என்னைத் தங்களில் ஒருவராய் வளர்த்து வந்திருக்கிறீர்கள். எல்லோருக்கும் மிக மிக நன்றி.நான் எப்போதும்போல் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பொருட்கள் யாவற்றையும் பாதுகாப்பாக கொண்டு போய் சேர்ப்பது உட்பட தனியாகத் தொழில் செய்ய விரும்புகின்றேன். அதுபோல் நீங்களும் உங்களுக்கு வரும் மேலதிகமான ஓடர்களை எனக்குத் தந்துதவ வேண்டும் என்று விரும்புகின்றேன். ஆயினும் அது செய்வதற்கு எனக்கு தனியாக ஒரு வேன் வேணும்.அதற்காக நான் வங்கியில் கடன் எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.அதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்கிறான். --- கொஞ்சம் யோசித்த பெரியவர் அவனிடம் தம்பி நீ கொஞ்சம் வெளியில் இரு நான் பிறகு கூப்பிடுகிறேன் என்று சொல்கிறார்.அவனும் வெளியில் போகிறான். உடனே இளையமகன் தந்தையிடம் என்னப்பா சந்துரு இப்படி சொல்கிறான் . சம்பளத்தைக் கொடுத்து நிப்பாட்டி விடலாமா என்று கேட்கிறான். --- சரி, நிப்பாட்டிப் போட்டு என்ன செய்யப் போகிறாய் . ......அவன் துடியாட்டமாய் செய்யும் வேலைகளை உன்னால் செய்ய முடியுமா ....... என்னுடைய அண்ணர், தங்கச்சி பிள்ளைகள் எல்லாம் இப்ப வளர்ந்து அஞ்சாறு பேர் எங்கள் கடையில் வேலை செய்யினம்தான் . ...... ஆனால் எப்ப பார் நான் பெரிசு நீ பெரிசு என்று தினம் தினம் சண்டையும் சச்சரவுமாய் கடை இருக்கு ......எல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன் . ........ எங்கே சந்துருவின் இடத்தை நிரப்பக்கூடிய ஒருவரை நீங்கள் இருவரும் சொல்லுங்கள் நான் ஏற்றுக் கொள்கிறேன் . ...... --- மூத்தமகன் சொல்கிறார் . ....... தம்பி அப்பா சொல்வதும் சரியாத்தான் இருக்கு ....... தற்சமயம் சந்துருவைவிட நம்பிக்கையானவன் எங்களிடம் இல்லை . ..... நீ இங்கே கடை பார்க்க வேண்டும் . ..... நான் கொழும்பில் கடையை கவனிக்க வேண்டும் . ....... நாங்கள் கொஞ்சம் அசந்தாலும், இது மற்ற மற்ற வியாபாரம் போல் கிடையாது, எல்லாம் சேதாரமாய் போயிடும். அதனால் நாங்கள் நல்லா யோசித்து சந்துருவை எங்களில் ஒருவனாய் நினைத்து முடிவெடுப்போம் என்று சொல்கிறார் . --- மாணிக்கமும் தம்பி , நீ சொல்வது ரெம்பச் சரி . ....... பின் அவர்கள் கலந்துரையாடி ....... சிறிது நேரத்தின்பின் அவர்கள் தங்களுக்குள் விவாதித்து சந்துருவை மீண்டும் உள்ளே அழைக்கின்றனர். அவன் வந்ததும் மாணிக்கம் முதலாளி அவனைப் பார்த்து சொல்கிறார், தம்பி சந்துரு நீ சொன்னதை நாங்கள் யோசித்துப் பார்த்தோம் அதுவும் ஒரு வகையில் சரியென்றே படுகின்றது. நீ விரும்பியபடியே செய்யலாம். எமக்கு வரும் மேலதிகமான ஓடர்களை உனக்குத் தருகின்றோம். நீயும் குறித்த நேரத்தில் தாமதமின்றிச் செய்து தரவேண்டும்.உனக்கு வேன் ஒன்று நாங்களே வாங்கித் தருகின்றோம். மூத்தமகனைப் பார்த்து நீ அவருக்கு ஒரு நல்ல வேன் ஒன்று வாங்கிக் குடு என்று சொல்ல அவரும் சரி என்கிறார்........ சிலநாட்களில் மினிபஸ் போன்ற ஒரு வானை மாணிக்கம் சந்துருவிடம் கையளிக்கின்றார் ......... சந்துருவும் அந்த வானில் நகைகள் , பணம்கள் மறைத்துக் கொண்டு போகக்கூடியவாறு சில திருத்தங்கள் செய்து விடுகிறான் . ....... இப்பொழுது சந்துருவிடம் ஒரு மினிபஸ் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் ஓடுகின்றது. அதில் அவனும் பீற்றர் என்றொரு பெரியவரும் சாரதிகளாக இருக்கின்றனர். பீற்றர் முன்பு ஒரு ஓவசியரிடம் டிப்பர் வண்டி ஓடிக்கொண்டிருந்தவர். ஓவசியர் ஒய்வு பெறும்பொழுது அவரின் சிபாரிசுடன் சந்துருவிடம் வேலைக்கு வந்து சேர்ந்தவர். அவருக்கு குடும்பம் என்று எதுவுமில்லை. ஒரு தமையனின் குடும்பம் அனுராதபுரத்தில் வசதியாக இருக்கின்றது. எப்போதாவது அங்கு போய் வருவது வழக்கம். மற்றும்படி வேனில்தான் அவரது வாழ்க்கை எல்லாம். சந்துருவும் அந்த வேனிலேயே பயணிகளை ஏற்றி இறக்குவதும், நகைக் கடைகளுக்கு பொருட்கள் பரிமாற்றத்தையும் செய்து வருகின்றான். தனது வீட்டையும் கொஞ்சம் பெரிதாகக் கட்டி அங்கு நகைகள் செய்வதற்குத் தேவையான சில யந்திரங்களையும் வாங்கிப் போட்டிருந்தான். அங்கும் சில பொற்கொல்லர்கள் வேலை செய்கின்றனர்.அவர்களுடன் அவனது தந்தையும் தம்பிகளும் கூடமாட ஒத்தாசையாய் இருக்கின்றனர். அன்றைய பொழுது அவர்களுக்கு அவ்வளவு நல்ல பொழுதாக விடிந்திருக்கவில்லை. சந்துருவும் பீற்றரும் அவர்களது வாடிக்கையான கடைகளுக்குச் சென்று பொருட்களையெல்லாம் (நகைகள்,பவுன்கள் மற்றும் பணம் முதலியன) கணக்குப் பார்த்து எடுத்துக் கொண்டு அவற்றை வேனில் பத்திரப்படுத்தி வைத்து விட்டு நேராக பேரூந்து நிலையத்துக்கு வந்து கொழும்பு செல்லும் பயணிகளையும் ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிப் புறப்படுகின்றார்கள். ஆணையிறவைத் தாண்டும்பொழுது அங்கு சென்றியில் நிக்கும் போலீசார் பீற்றரிடம், பார்த்துப் போங்கள் பீற்றர். அனுராதபுரத்தில் கலவரம் ஏற்படும்போல் செய்திகள் வருகின்றன.என எச்சரித்து விடுகிறார்கள். பின் இருக்கையில் இருந்த சந்துரு என்ன அண்ணை என்று வினவ அவரும் அந்தப் போலீஸ்காரர் எச்சரித்ததை சொல்கிறார். சரி விடுங்க அண்ணை , வவுனியா மதவாச்சி வரை போய்ப் பார்க்கலாம் என்று சந்துரு சொல்கின்றான்.வேனும் மிதமான வேகத்தில் செல்கின்றது. எதிரே வரும் வாகனங்களும் வழமைபோலன்றி குறைவாக இருப்பதையும் கவனித்துக் கொண்டு செல்கிறார்கள்....... சில வாகனங்கள் முன் லைற்றுகளால் அவர்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டு போகின்றன . ..... அவர்களுடைய வானும் தொடர்ந்து முறிகண்டியில் சாமி கும்பிட்டு கடையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பயணம் தொடங்கி வவுனியாவையும் மதவாச்சியையும் கடந்து அனுராதபுரத்துக்கு கிட்ட முட்டவா வந்தாச்சுது….........! வாருங்கள் போராடலாம் ............ 🐈 🐈 🐈 🐈 🐈.
  37. பாக்கு நீரிணைக்கு ஒருபுறம் ஒராள் பாக்கு நீரிணைக்கு மறுபுறம் ஒராள் என ஒரு சமநிலை பேணப்படுகிறது.😁
  38. வெளிநாடு வந்த ஆரம்பத்தில் ஒரு வழி பாதையில் தவறுதலாக காரினை திருப்பி விட்டேன் அந்த பாதையில் எவருமில்லாத நிலையில் வெறும் 50 மீட்டர் தூரத்தில் பிரதான வீதியிருந்தது, அதில் போய் திரும்பிவிடலம் என இருந்தேன் அது குறுகலான பாதை என்பதால் 3 முனை திருப்பமும் கடினமாக இருக்கும் என்பதால், பாதி தூரம் போகுமுன்னர் எனது எதிரில் கார் வந்துவிட்டது. தெரியாமல் படித்தவர்களின் திரிக்குள் நுழைந்துவிட்டேன்.😁
  39. கோட்டையிலே ஒரு ஆலமரம் . ..........! 😁
  40. இவர்கள் எல்லோரும் எனக்கும் தெரிந்தவர்களே.............! ஆனால், கணேசலிங்கம் மாஸ்டரிடம் மட்டுமே படித்தேன். மற்றவர்களிடம் ஏன் போகவில்லை என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு என்று நினைக்கின்றேன் - ஒரு நோக்கமோ அல்லது வழிகாட்டலோ இருக்கவில்லை. அதைவிட முக்கியமாக பந்தடி மேல் இருந்த விருப்பம். அதிகாலையில் தீருவில் மைதானத்தில் பந்தடிப்பார்கள். அந்த நேரத்தில் தான் இந்த ஆசிரியர்களின் வகுப்புகளுக்கு நண்பர்கள் போய் வந்தார்கள். பூவா தலையா போட்டுப் பார்க்காமலேயே, நான் பந்தடி என்று முடிவு செய்துகொண்டேன். என் அதிர்ஷ்டம் எனக்குத் தெரிந்த கேள்விகளே பரீட்சைகளில் வந்தன.................. 'Slumdog Millionaire' படத்தை பார்த்த போது இது நல்லாவே விளங்கியது................🤣. 'நூறு டாலர் நோட்டில் யார் இருக்கின்றார்கள் என்ற கேள்வியைக் கேட்காமல், வேறு ஏதாவது ஒரு நோட்டில் யார் இருக்கின்றார்கள் என்று கேட்டிருந்தீர்கள் என்றால், எனக்கு அதற்கு பதிலே தெரியாது...............' என்பது போல ஒரு காட்சி அந்தப் படத்தில் வரும். நம்ம வாழ்க்கை இது என்று தோன்றியது...............🤣.
  41. நான் ஊரில் இரண்டு தவணை ஏ எல் படித்தேன். ஹாட்லியில் கணேசலிங்கம் மாஸ்ரரிடம் தூய கணிதம், உடுப்பிட்டி பீக்கோன் ரியூசனில் நல்லையா மாஸ்ரரிடம் தூயகணிதம், பிரயோக கணிதம், தில்லையம்பலம் மாஸ்ரரிடம் தூயகணிதம் என்று எல்லோரையும் போல ஓடுப்பட்டுப் படித்தேன். ஓ எல் ரிசல்ட்ஸ் தந்த செருக்கும், கூவிற வயசில் இருந்ததாலும் ஏ எல் படிப்பில் அக்கறை காட்டவில்லை. கெமிஸ்ற்றி, பிஸிக்ஸ் படிக்க வந்த பெண்பிள்ளைகள் மேல்தான் முழு நாட்டமும் போனது!🥰 பாடசாலையில் முதல் வரிசையில்தான் இருப்பேன். கணேசலிங்கம் மாஸ்டர் வந்து முதல்நாளே மற்றைய இடங்களில் படிப்பிக்காத தூயகணிதத்தில் கடினமான graph sketching (தமிழ் இப்ப தெரியாது) கேள்விகளைத் தந்தார். சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தமாதிரித்தான் இருந்தது. பின்னால் திரும்பி அவரிடம் ரியூசனில் படிக்கும் நண்பனை எப்படிச் செய்வது என்று கேட்டேன். அவன் மெதுவாக சொல்ல ஆரம்பிக்க, கணேசலிங்கம் மாஸ்ரர் எனது மேசையை நோக்கி வந்தார். கன்னம் பழுக்கப்போகின்றது என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் வந்து எனது மேசையில் சோக்கால் இரண்டு கோடுபோட்டுவிட்டு கரும்பலகைக்குப் போய் ஒரு கேள்வியை விளங்கப்படுத்தினார். அதை அவர் எனக்காகத்தான் செய்தார் என்று புரிந்துகொண்டேன். மிச்சக் கேள்வி எல்லாவற்றையும் நான் கிறுகிறுவென்று செய்து முடித்தேன்😎 அவர் சொல்லித்தந்த method ஐ நான் இன்னமும் மறக்கவில்லை. பலருக்குச் சொல்லிக்கொடுத்திருக்கின்றேன், எனது வாரிசுகள் உட்பட! கணிதத்தில் இன்றுவரை குன்றாத காதலுக்கு ஓ எல் வரை படிப்பித்த சர்வானந்தா மாஸ்ரர், நம்ம ஊர் அரசன் வாத்தி, ஏ எல்லில் குறுகிய காலம் என்றாலும் கணேசலிங்கம் மாஸ்டர், நல்லையா மாஸ்டர், தில்லையம்பலம் மாஸ்டர் ஆகியோர் எனது ஆசான்கள். அதே போல இலண்டனிலும் இரண்டு ரீச்சர்கள் எனது மதிப்புக்குரிய ஆசான்களாக இருந்ததால் 100க்கு கீழே இலண்டன் ஏ லெவலில் எடுத்ததில்லை!
  42. ஓஎல் காலம்தான்...பிரக்ரிக்கலுக்கு லாப் போகவேணும்..இரசாயன வாத்தியார்..படிச்சு படிச்சு பொசுபரசு பற்றி விளங்கப் படுத்திவிட்டுத்தான் ..லாப் போக விட்டவர்..அங்கு பொசுபரசு தண்ணீரில் இருந்தால் எரியாது...வெளியில் இருந்தால் தீப்பற்றும் ..என்று உதாரணங்களுடன் விளங்கப் படுத்தியும் ...பிரக்டிக்கல் முடிய இரண்டுபாவிகள்...முடிந்தபொசுபரசை அமத்திப் போட்டங்கள்... அடுத்தபாடம் வகுப்பில்...உயிரியல்பாடம் வாத்தியார் படங்கீறி விளக்க..ஒருதனின் புத்தகத்துகீழை புசு புசு என்று நெருப்பு...பக்கத்து மேசை நான்.. நெருப்பை கண்ட மற்றவன் ..தீயணைப்பு படைவீரன் மாதிரி..பாய்ந்து சீ.ஆர் கொப்பியால் அடிக்க ..பறந்த பொசுபரசு..வலது புறங்கையில் ஆழமாக எரித்துவிட்டது...அதிபரின் காரில் காரில் ஆசுப்பத்திரிபோய் ..இரண்டுநாள் வாசம்...ஒழித்தவனும் இப்ப கனடாவில்...சூடு பட்டவனும் இப்ப கனடாவில்தான் இருக்கிறம்..இப்படி கனக்க..
  43. 🤣.................. ஜெயமோகன் தனக்கும் கணிதபாடம் வரவே வராது என்று சொல்லியிருக்கின்றார். ஆனால், எல்லாக் கணக்குகளையும் பாடமாக்கி, கணிதப் பரீட்சைகளில் நல்ல புள்ளிகள் எடுத்தேன் என்றும் சொல்லுகின்றார். அவருக்கு ஞாபகசக்தி அதிகம் தான், அதற்காக கணக்குகளையே பாடமாக்குவதா............🤣. அத்துடன் இலங்கையில் படிப்பிக்காத கணக்கு மட்டும் தானே பரீட்சையில் வரும்............ நாங்கள் எதையென்று பாடமாக்குவது....................
  44. கணக்கீட்டில் வாகனத்தை பொதுவாக depreciating asset விலை தேய்மானம் அடையும் பொருள் என படிப்பிப்பார்கள். ஆனால் இலங்கையில் அது ஒரு appreciating asset. மேலே அக்னி சொல்லி உள்ளார் பாருங்கள் - 2011 இல் 55 இலட்சத்துக்கு போன கார் இப்போ 110 இலட்சம். அப்போ ஒரு பவுண் 190 ரூபாய், இப்போ 370 ரூபாய். ஆனால் கார் விலை டபிளாகி கூடியுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.