Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    87988
    Posts
  2. putthan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    14675
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    31956
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3054
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/15/25 in all areas

  1. அண்மையில் தேசிய பாடசாலை அதிபர் ஒருவர் பாடசாலை கடித தாளில் (லெட்டர் ஹெட்டில்)பாழைய மாணவ சங்கங்களுக்கு "கிளீன் (விரும்பிய பாடசாலையின் பெயரை போடவும்) கல்லூரி"என்ற திட்டத்தை அமுல் படுத்த பணம் தேவை என கடிதம் அனுப்பியிருந்தார் . நல்ல விடயம் கேட்ட தொகை கிட்டதட்ட 3லட்சம் ... கிளீன் சிறிலங்கா என ஜனாதிபதி பாடம் நடத்த இவர்கள் புலம்பெயர் மக்களிடம் கிளீன் பாடசாலை என வெளிக்கிட்டினம் ..சிங்கள பாடசாலையிலும் இது நடை பெறுகிறது. தேசியம் பேசுகிறார்கள், தேசிய ஒற்றுமை என கூவுகின்றனர்.பாடசாலைகளுக்கு குப்பை தொட்டி வாங்குவதற்கு ஏன் புலம் பெயர் தமிழ் தேசிய மக்களிடம் கை ஏந்துகின்றனர் இந்த இடதுசாரிகள்...விகாரை கட்டுவதற்கு ,,இராணுவ கட்டமைப்புக்கு என பணத்தை வாரி இறைக்கின்றனர் ஏன் குப்பை தொட்டிக்கு பணம் கொடுக்க முடியவில்லை... நாங்கள் படிக்கும்/பாடசாலைக்கு செல்லும் பொழுதும் குப்பைகள் இருக்கவில்லையா அல்லது குப்பைகளுக்குள் இருந்து படித்து முன்னுக்கு வந்தார்களா அன்றைய மாணவர்கள் என்ற கேள்வி என்னுள் எழுகின்றது.சிறிலங்கா மக்களின் எதிர் பார்ப்பு தான் என்ன ? ஜனாதிபதி வெளிநாடுகளிடம் கை ஏந்துகிறார் நாட்டு மக்களுக்கு அன்றாட தேவைகளான அரிசி,தேங்காய்,முட்டை போன்றவற்றை வழங்க, .பாடசாலை அதிபர்கள் பழைய மாணவ சங்கத்திடம் கை ஏந்துகின்றனர் குப்பைகளை முகாமைத்துவம் பண்ணுவதற்காக. வெளிநாடுகளை போல தங்கள் நாடு முன்னுக்கு வர வேணும் என நினைப்பதில் தப்பு இல்லை ஆனால் அதை சொந்த மண்ணில் உற்பத்தி யாகும் பொருட்களில் இருந்து செய்ய முன்வர வேணும் ... ஒரு பக்கம் கிளீன் சிறிலங்கா ,என சொல்லி கொண்டு பிளாஸ்டிக் பொருட்களினால் ஆன குப்பை தொட்டிகள்,பிளாஸ்டிக் பைகள் போன்ற வற்றை உபயோகப்படுத்த முயற்சிக்கின்றனர். எமது தாயக பகுதிகளில் பனை ஒலைகள் தாராளமாக கிடைக்கின்றது ஏன் இதை பயன்படுத்தி பெரிய கடகம் போன்ற குப்பை தொட்டியை உருவாக்க முடியாது ?வர்ணம் பூசி வேரு படுத்தி காட்டலாம் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஏன் சணல் நூலினால் பின்னப்பட்ட சாக்குகளை உபயோக படுத்த முடியாது.. பனை மட்டைகளை பயன் படுத்தி பெரிய கூடுகளை அமைக்கலாம் .. இப் பொருட்கள் இலகுவில் உக்கி போகும் .. அட்வைஸ் பண்ணுவது இலகுவானது அதை நடை முறையில் நாங்களே(அட்வைஸ் பண்ணும் நானே) செய்வது கடினம் .
  2. இன்று பிரதமர் வருகை தந்த தொல்புரம் மேடை வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமேடை. பிரதமர் வருகை தந்தபோது சிறிது நேரம் நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தேன்.
  3. வலம்புரி…. தங்கும் விடுதிகளும் வைத்துள்ளார்கள் என நினைக்கின்றேன். தங்கும் விடுதியும், மேலே சம்பவம் நடந்த உணவகமும் ஒன்றா அல்லது வேறானவையா எனத் தெரியவில்லை. ஆனால்… பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தரமான விடுதிகளில் இதனையும் குறிப்பிடுகின்றார்கள். நானும் பிள்ளைகள் குடும்பமாக இந்த உணவகத்திற்கு போயிருந்தேன்.நல்ல சாப்பாடு நன்றாக கவனித்தார்கள்.நிறைய பேர் நிறைய சாப்பாடு எடுத்தபடியால் ஏதாவது சுத்துமாத்து விட்டிருப்பார்களோ என்று மருமகனிடம் பில்லைக் கொடுத்தேன்.எதிலும் தவறு இல்லை என்றார். வான் சாரதி தான் அமைதியாக குடும்பமாக இருந்து சாப்பிடக் கூடிய இடம் என்றார். பாவம் அவர் பக்கத்து மேசையில் போய் உட்காந்தார். தம்பி அமெரிக்காவில நானும் ரைவர் தான் என்று கட்டாயப்படுத்தி கூட்டியாந்தேன். ஆரம்பத்தில் சமூகவலைத் தளங்கள் இவர் பின்னால் திரிந்து நன்றாக பணம் பண்ணினார்கள். இப்போ டாக்ரர் தனியே யுரியூப் தொடங்கியபடியால் கொஞ்சம் கடுப்பில் இருக்கிறார்கள்.
  4. கவனமா போய் வா மச்சான் ! புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் தொடர்கிறார். மட்டக்களப்புக்கு மருத்துவ அணி ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல். அங்கே போராளி மருத்துவர் அடம்ஸ் தலைமையிலான மருத்துவ அணி நிலை கொண்டு பணியில் இருந்தாலும், மேலதிக மருத்துவ அணியின் தேவை எழுந்தது. அதனால் அண்ண உடனடியாக படகில் மட்டக்களப்புக்கான மருத்துவ அணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை சூசை அண்ணையிடம் கொடுக்கிறார். அதற்கான நடவடிக்கை பொறுப்பாளனாக மணலாறு மாவட்ட படையணியில் ( மணலாறு கட்டளைப்பணியகம் ஆரம்ப காலங்களில் மாவட்டப்படையணியாகவே இருந்தது.) நின்ற போது என் நண்பனாகி, பின்நாட்களில் கடற்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்டளை அதிகாரி தரத்தில் இருந்த மருதுவை நியமிக்கிறார் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி. அதற்கான ஆயுத்தங்கள் நிறைவு பெற்றிருந்தன. படகு தயாராக செம்மலைக் கடற்கரையில் நிற்கிறது. படகுக்கட்டளை அதிகாரி மருது மற்றும் படகு இயந்திரவியலாளன், ஓட்டுனர் என பல நிலைகளைக் கொண்ட பாலையா ஆகியோர் அதன் அருகில் எம் அணிக்காக காத்து நிற்கிறார்கள். நாம் சென்ற போது மச்சான்… நீயும் வாறியா? என்கிறான் மருது. நீண்ட நாட்களின் பின்னான அவனுடனான சந்திப்பு மகிழ்ச்சியை தந்த போது புன்னகைத்துக் கொண்டு, இல்ல மருது வாமன் அண்ணை டீம் தான் வருகுது. நான் கூறிய உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய மருத்துவ அணியில் இருந்த போராளி மருத்துவர் வாமன் மற்றும் அவரது துணைவியாரான போராளி மருத்துவர் வான்மதி ஆகியோருடன் வேறு சில மருத்துவ போராளிகளை மருது பார்க்கிறான். வணக்கம் வாமன் அண்ண… மருது அவர்களை வரவேற்றுக் கொள்கிறான். டொக்டர் எல்லாம் ரெடியா? அவரோடு சில விடயங்களைக் கதைத்தான். அவன் செல்வதற்கான இறுதித் தயார்ப்படுத்தல்கள் செய்தான். அவனிடம் பல இரகசிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அவை எதிரியிடம் பிடிபடவோ அல்லது கொண்டு செல்லப்படும் மருத்துவ அணிக்கு இழப்புக்கள் ஏற்படவோ கூடாது என்பது இறுக்கமான கட்டளை. அத்தனையும் எதுவும் நடந்துவிடாது இலக்கில் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பெரும் பொறுப்பு இருந்தது. அவனின் படகிற்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்புக்காக இரு படகுகள் கனரக ஆயுதங்கள் கொண்ட போராளிகளுடன் செல்லத் தயாராக உள்ளது. அவர்களையும் இறுதியாக அழைத்து, அனைத்து ஒழுங்குகளும் சரியா என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி கொள்கிறான் மருது. சாக்குகள் தயாரா என்று கேட்டான். எல்லாம் சரி என்றவுடன் புறப்படத் தயாராகினான். கடற்பயணம் பல சிக்கல்களை உருவாக்கும். பழக்கமற்றவர்களுக்கு வாந்தி, தலைச்சுத்து, மயக்கம் போன்றவை வரும். போகும் பாதையில் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகலாம். அத்தனையையும் தாண்டி இலக்கிற்கு சென்றடைய வேண்டும். ( சென்ற மருத்துவ அணி பற்றி பின்பொரு பதிவில் சொல்கிறேன்) அவர்கள் செல்லும் பாதை குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் பல சிக்கல்கள் நிறைந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை கூட அவர்கள் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இயந்திரத்தின் சத்தம், படகின் வேகத்தால் எழும் இரைச்சல்கள் அவர்களை எதிரிக்கு இனங்காட்டக் கூடியவை. இதற்கெல்லாம் அவர்களிடம் துணிவு மட்டுமே பாதுகாப்பாக இருந்தது. இயந்திரத்தின் சத்தத்தை குறைப்பதற்காக ஈரச்சாக்குகளை அதற்கு மேல் போட்டு சத்தத்தை குறைக்கும் நடவடிக்கையை செய்தார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் விடுபட்ட போது, யாழ் நகரில் இருந்து காயங்களை ( காயப்பட்ட போராளிகளை) அல்லைப்பிட்டி கடலால் வெளியேற்ற கடற்புலிகள் பயன்படுத்திய வழிமுறையும் இதுவே என்று நினைவு வந்தது( இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன் ” குருதிக்குள் ஒரு பயணம் 5 ) செல்ல வேண்டிய அணியை ஏற்றிவிட்டு என்னிடம் இருந்து விடைபெற தயாராகிறான் மருது. “மருது கவனம் கடல்ல அவன் கண்டபடி முட்டுப்படுவான் பார்த்து போ சரியா? ” மருத்துவரே கவலைப்படாத நாங்கள் பிரச்சனை ஒன்றும் இல்லாமல் போய் சேருவம். அப்பிடி எதாவது ஆச்சுதென்றாலும் பயப்பிடாத சாமான் இருக்கு. அவன் கை காட்டிய திசையில் பாக்கிறேன். படகின் அணியத்தை அவன் சுட்டிக் காட்டுகிறான். அதற்குள் முழுவதுமாக சக்கை அடைக்கப்பட்டிருந்தது. அவன் வேறு எதையும் கூற வில்லை. படகு புறப்பட்டு விட்டது. இவன் எதற்காக அணியத்தை காட்டுகிறான்? அதுவும் எப்போதும் வெடிக்க வைக்கப்படும் நிலையிலே அந்த அணியத்துக்குள் தூங்கும் சக்கை இருந்தது. நான் பாதுகாப்பாக மட்டக்களப்பிற்கு போய் சேர் என்று தானே கூறினேன். சென்ற படகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். படகு அந்த இருட்டுக்குள் மறைந்துவிட்டது. மருதுவிடம் நான் கவனமாக போ என்று சொன்னதன் அர்த்தத்தையும் அவனின் பதிலின் அர்த்தத்தையும் எடை போடுகிறேன். ஒவ்வொரு போராளியும் எப்பவும் சாவதற்கு தயாராகவே இருப்பார்கள் இதை அவர்கள் கழுத்தில் தூங்கும் நஞ்சுக்குப்பி சொல்லும். ஆனாலும் ஒரு பயணத்தின் போது “கவனமா போ ” என்று கூறப்படும் வார்த்தைகள் எம் உள்ளக்கிடக்கைகளில் அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் போக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. அதற்கு கூட அவன் “சரிடா “என்று ஒரு வார்த்தையை பதிலாக கூறி இருந்தால் மனம் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவன் தன் செய்கைக்குறியியீட்டால் எது நடந்தாலும் உயிருடன் பிடிபட மாட்டோம் அவ்வாறு எதாவது நடந்தால் எதிரியை அழித்து நாமும் அழிந்து விடுவோம் என குறிப்பிட்டு செல்வது என்பது அவனது தேசத்தின் மீதான பற்றுதலையும் தன் உயிரை விட தான் தாங்கி செல்லும் செய்திகளின் பெறுமதியையும் எனக்கு உணர்த்திச் சென்றது. தரைச்சண்டைகளுக்கும் கடற்சண்டைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர். அவ்வாறான நிலையில் படகின் வேகத்தையும் துப்பாக்கிகளின் சூட்டு வீச்சையும், கட்டளை அதிகாரிகள் அல்லது படகு ஓட்டுனர்களின் கடல் ஆளுமையையும் மட்டும் காப்பாக கொண்டு சண்டையிடும் கடலணிக்கு எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பது நான் சொல்ல வேண்டிய செய்தியல்ல. ஆனாலும் இந்த நடவடிக்கைப் பொறுப்பாளன் மருது அன்று செம்மலையில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற அந்த நடவடிக்கையில் தான் ஒரு கரும்புலியாகவே சென்றிருந்தான் என்பதே நியம்… கரும்புலிகள் என்பவர்கள் போராளிகளில் இருந்து வேறுபட்டவர்கள் ஆனால் போராளிகளில் இருந்து தான் அவர்களும் உருவானவர்கள். மருதுவும் தன்னையும் தன் அணியையும் கரும்புலி அணியாகவே நினைத்துக் கொண்டான். சரி அண்ண வேறு ஒரு போராளி பற்றிய குறிப்போடு சந்திப்போம் அண்ண… நான் எமக்காக பல ஆண்டுகள் போராளி மருத்துவராக வாழ்ந்து தமிழீழ தேசம் எங்கும் தன் மருத்துவ அறிவைப் பதித்து மக்களையும் போராளிகளையும் உயிர்ப்பித்த போராளி மருத்துவர் அறத்தலைவனிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி அண்ண… கவிமகன்.இ 17.11.2017
  5. இன்று இரவு யாழ் களம் இயங்காது என்று அறிவித்தல் வருகின்றது. இன்னமும் ஒரு நாளே இருப்பதால் விரைந்து உங்கள் பதில்களைத் தாருங்கள்.. பஸ்ஸைத் தவறவிட்டால் பிடிக்கமுடியாது! @goshan_che @பிரபா @Ahasthiyan, @கந்தப்பு @kalyani @theeya @கறுப்பி @P.S.பிரபா @முதல்வன் @நீர்வேலியான் @ரதி நமக்கும் மண்டையில் இருக்கும் முடியைப் பிச்சுக்கிற வேலைதான்.. அதற்குள் இருந்து கொஞ்சம் தப்பத்தான் இந்தப் போட்டியை வைக்கின்றேன்..!
  6. படம் நன்றாக உள்ளது, நன்றி! prime video இலே இதே போல ஒரு ஒரு பிரிந்து வாழும் தந்தைக்கும் மகளுக்குமிடையேயான கதை I want to talk இதற்கு தமிழில் உப தலைப்பும் உள்ளது. அதில் அந்த சிறிய குழந்தை தனக்கு நெருக்கமான பெரியவர்களின் பேச்சை உண்மை என கருதி தந்தை பொய் கூறுகிறார் என உறுதியாக கருதியிருக்கும் போது உண்மை தாக்கும் போது குழந்தை காட்டும் அந்த அதிர்ச்சியான உணர்வினை வெளிப்படுத்தும் அழகு, மிக சிறப்பான நடிப்பு, உங்களை இந்த படமும் கவரும் என கருதுகிறேன். அந்த குழந்தைக்கு தந்தை நெருக்கமானவர் அல்ல.
  7. போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 3 களமுனைக்கு மிக அருகில் புலிகளின் இராணுவ மருத்துவர்கள் ! களமுனைக்கு மிக அருகில் கொண்டுபோய் பிரதான இராணுவமருத்துவமனையை நிர்வகித்த விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்கள். 2007 இன் ஆரம்ப காலம், மன்னார் களமுனையில் கட்டளைத்தளபதியாக இருந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் உடல்நலம் குறைந்த போது பின்நகர்த்தப்பட்டு கட்டளைத் தளபதியாக கேணல் பானு அவர்கள் நியமிக்கப்பட்டார். அந்த நாட்கள் பல இடர்களை சுமந்து நின்றது தமிழீழ எல்லை வேலி. சிங்களப்படை புதிது புதிதாக களமுனைகளை திறந்து கொண்டிருந்தது. எங்கும் ஓய்வற்ற சண்டை. வெடியோசைகளும் இரத்த சிதறல்களும். வீரச்சாவுகளும் காயங்கள் நிறைந்தன. அதைப்போலவே மன்னார் களமுனையும் அதிர்ந்தது. அந்த பிரதேசம் எங்கும் எம் படையணிகள் வீழ்ந்து விதையாகிக் கொண்டிருந்தாலும் நிமிர்ந்து நின்று எதிரிக்கும் இழப்புக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் நிலை சொல்ல முடியாதது. மிக கொடூரமான சிங்களத்தின் தாக்குதல்களால் தம் உடல், உயிர் , உடமைகளை இழந்து ஏதிலிகளாக்கப் பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பள்ளமடுவில் இருந்த அரச மருத்துவமனை தான் மாந்தை மேற்கு பிரதேசத்தின் பிரதான மருத்துவ சிகிச்சைக்கான இடம். அந்த மருத்துவமனையில் தமிழீழ சுகாதாரசேவை பணிப்பாளர் மருத்துவர் சுஜந்தன் அவர்களின் பணிப்பில் விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்களான தமிழ்நேசன் ( பின் நாள் ஒன்றில் சுதந்திரபுரம் பகுதியில் லெப் கேணல் தமிழ்நேசனாக வீரச்சாவு) , தணிகை, இசைவாணன் (இறுதி சண்டையின் போது லெப் கேணல் இசைவாணனாக வீரச்சாவு ) , காந்தன்( இறுதி சண்டையில் லெப் கேணல் காந்தனாக வீரச்சாவு) , வளர்பிறை ( பின் நாட்களில் இராணுவ மருத்துவராக அம்பாறைக்குச் சென்று கடமை செய்த போது லெப் கேணல் வளர்பிறையாக வீரச்சாவு) ஆகியோர் கடமையில் இருக்கிறார்கள். அங்கு செறிந்து வாழ்ந்து வந்த மக்களுக்கான பிரதான மருத்துவமனையாக இருந்த அந்த அரசினர் மருத்துவ மனையில் அரசமருத்துவரான வைத்திய கலாநிதி விஜயன் அவர்கள் கடமையில் இருந்தார். அவரோடு போராளி மருத்துவர்களும் கடமையில் இருந்தார்கள். இங்கே தமிழீழ சுகாதாரப்பிரிவு பற்றி நாம் சிறு விடயத்தை பார்க்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவத்துறை இரு பிரதான பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒன்று மருத்துவப்பிரிவு. இது பிரதானமாக போராளிகளுக்கான மருத்துவம் மற்றும் சிகிச்சைகளை வழங்கும் பிரதான செயற்பாட்டை கொண்டதாகும் இரண்டாவதாக தமிழீழ சுகாதாரப்பிரிவு. இது முற்றுமுழுதாக மக்களுக்கான மருத்துவ சேவையை அடிப்படையாக கொண்டது. இதற்குள் பெரும்பாலான செயற்பாட்டளர்கள் மருத்துவப்பிரிவு போராளிகளே. இவ்வாறான பெரும் பிரிவுகளைக் கொண்ட மருத்துவத்துறை அப்போது ரேகா அவர்களின் தமிழீழ பொறுப்புக்குள் இயக்கம் கொண்டிருந்தது. இது இவ்வாறு இருக்க, தமிழீழ மருத்துவப்பிரிவின் பொறுப்பாளர் ரேகா அவர்களின் அனுமதியோடு தமிழீழ சுகாதாரப்பிரிவு பணிப்பாளர் சுஜந்தன் போராளி மருத்துவர்களை மன்னார் பிரதேசத்தில் மக்கள் பணிக்காக அனுப்பி இருந்தார். அவர்கள் அங்கே கடமையில் இருந்த அரசமருத்துவருடன் இணைந்து மருத்துவப்பணி செய்தனர். ஆனாலும் அங்கே தீவிரசிகிச்சைகளை வழங்கவோ அல்லது சத்திரசிகிச்சைகள் செய்யக்கூடிய சத்திரசிகிச்சை ஏற்பாடுகளோ இல்லை. அவை எதுவும் அரசால் பள்ளமடு மருத்துவமனைக்கு கொடுக்கப்படவில்லை. அவை அனைத்தையும் விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவும் மருத்துவர்களுமே ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்கள் போராளிகளுக்கான சிகிச்சைகள் மட்டுமன்றி மக்களுக்கான சிகிச்சையையும் சிறப்பாகவே கொடுத்தார்கள். மக்களுக்காக சாகத் துணிந்து நின்ற ஒவ்வொரு போராளிகள் அவர்கள். மக்கள் அழியக் கூடாது என்ற பெரும் இலக்கிற்காக இரவு பகல் தூக்கமற்று கிடக்கிறார்கள். இந்த நிலையில் திடீர் என்று ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, உடனடியாக களமுனையில் இருந்து பாதுகாப்பான பகுதியில் மருத்துவமனையை நகர்த்துமாறு மன்னார் களமுனை கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் பானு அவர்களிடம் இருந்து கட்டளை கிடைக்கிறது. மக்கள் மருத்துவமனையாக இருந்த பள்ளமடு மருத்துவமனையை அண்டி இருந்த மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து போய்விட, முற்றுமுழுவதுமாக இராணுவ மருத்துவமனையாக இயங்கத் தொடங்கியது. பள்ளமடு மருத்துவமனை. அப்போது பாதுகாப்பு பிரதேசமாக கொள்ளக்கூடிய பகுதிகளாக இருந்த இடங்கள் என்பதை விட இலுப்பக்கடவை மற்றும் வெள்ளாங்குளம் ஆகிய இடங்களில் தான் அரச மருத்துவமனைகள் இருந்தன. அதனால் அவை முன்மொழியப்பட்டன. ஆனால் அந்த இருபகுதிகளுக்கும் காயமடைந்த போராளிகளையோ அல்லது மக்களையோ நகர்த்துவது என்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை. ஏனெனில் அங்கே பயணிக்கும் இராணுவ வாகனங்களை குறி வைத்து LRRP என்று கூறப்படும் ஆழ ஊடுருவும் படையணியின் சிங்கள சிப்பாய்கள் கிளைமோர் தாக்குதல்களை செய்து கொண்டிருந்தனர். மேலும் 20 கிலோமீட்டர்கள் கடந்து களமுனையில் இருந்து காயப்பட்ட போராளிகளை அல்லது மக்களை கொண்டு வந்து சேர்ப்பதற்குள் அவர்களுக்கு உயிரிழப்புக்கள் அதிகமாகும் சந்தர்ப்பங்கள் அதிகம். இந்த நிலையில் லெப் கேணல் தமிழ்நேசன் வீரச்சாவடைந்த நிலையில், நான்கு இராணுவ மருத்துவர்களும் ஆலோசித்து முடிவுக்கு வர முடியாது தவித்துக் கொண்டிருந்த போது, போராளி மருத்துவர் லெப் கேணல் காந்தன் ” நாங்கள் பெரியமடுவில கொஸ்பிட்டல போடுவம். அங்க போட்டால் லைன்ல மெயினுக்கு என்று பெடியள விடத் தேவையில்ல களமருத்துவ போராளிகளிடம் இருந்து நாங்களே பெடியள நேரே பொறுப்பெடுத்து காயங்கள காப்பாற்றலாம்” என்கிறார். அந்த யோசினையிலும் பாரதூரமான சிக்கல்கள் இருந்தன. களமுனைக்கு மிக அருகில் மருத்துவமனை அமைந்திருப்பதால் அதுவும் எதிரியின் ஐந்து இஞ்சி மற்றும் ஆட்லறி செல் தாக்குதல் இலக்குக்கு உள்ளாகலாம் அல்லது தாக்குதல் வலயத்துக்குள் இருப்பதால் இருப்பிடத்தை அறிந்து திடீர் என்று மருத்துவமனை கூட கைப்பற்றப்படலாம் என்ற பல பிரச்சனைகள் கண்முன்னே எழுந்தன. ஆனாலும் போராளி மருத்துவர்கள் முடிவெடுத்துக் கொள்கிறார்கள். கட்டளை அதிகாரியான பிரிகேடியர் பானு அவர்களுக்கு விடயத்தை தெரிவிக்கின்றனர். அவர் முற்றுமுழுதாக அந்த திட்டத்தை மறுக்கிறார். மருத்துவர்கள் நிலமையை தெளிவு படுத்தி விளக்கம் கொடுக்கிறார்கள் நாம் இரகசியத்தையும், மருத்துவமனையை சுற்றி நல்ல பாதுகாப்பையும் போட்டால் எந்தப் பிரச்சனையும் வராது என்ற உண்மையை உணர வைக்கின்றனர் காயப்பட்ட போராளிகளை வாகனங்களில் கொண்டு வந்து இறக்காது கொஞ்சம் தூரத்திலையே இறக்கி தூக்கி வருவது எதிரியின் கண்காணிப்பை உடைத்தெறியக் கூடியது என்ற உண்மைகளை எல்லாம் புரிந்து கொண்டாலும் பிரிகேடியர் பானு அவர்களால் மனம் உவந்து அனுமதி கொடுக்க முடியவில்லை எதாவது ஒன்று நடந்து மருத்துவமனை தாக்கப்பட்டால் அத்தனை போராளிகளையும் இழக்க நேரும் என்ற உண்மையும் ஒரு பக்கத்தில் உதைத்தெறிந்தது. எதாவது ஒன்று நடந்தால் நீங்கள் நால்வரும் தான் ஆளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும் இதற்கு நான் அனுமதி தர முடியாது. ஆனால் இது உங்கள் முடிவு மட்டுமே என் முடிவல்ல உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள். அந்த வார்த்தை மட்டுமே அனுமதி கிடைத்து விட்டதுக்கான அறிகுறியாக கருதியவர்கள் பள்ளமடுவில் இருந்து பெரியமடுவிற்கு மருத்துவமனையை நகர்த்துகிறார்கள். சண்டையின் போக்கு சற்று மாறுபட்டது. பின்நகர்ந்து கொண்டிருந்த எம் படையணிகள் நின்று நிலைத்து சண்டையிட்டன. வழமையை விட எதிரி பல விழுக்காடு அதிகமான இழப்புக்களை சந்திக்க நேர்ந்தது. எதிரிக்கு பேரிடிகளைக் கொடுத்து சண்டையிட்டன எமது சண்டையணிகள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலான காலப்பகுதி அந்த களமுனையை உடைத்து முன்நகர முடியாது திகைத்தது சிங்களம். மருத்துவமனை அங்கே போடப்பட்ட சில நாட்களில் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களை சந்தித்த பிரிகேடியர் பானு ” நீங்கள் சொன்னது சரிதான்டாப்பா… நீங்கள் பக்கத்தில நிக்கிறியள் என்றவுடனே பெடியளுக்கு நம்பிக்கை இன்னும் வந்திட்டுது எந்த தயக்கமும் இன்று சண்டை பிடிக்கிறாங்கள். உங்களுக்கு என்ன வேணும் என்றாலும் கேளுங்கோடாப்பா உடனே ஒழுங்கு படுத்துறன் ஆள் உங்கள பற்றி கதைச்சவர் பிரச்சனை இல்லைடாப்பா பெடியள கவனமா பாருங்கோ…” அவர் கொடுத்த உற்சாகம் இராணுவ மருத்துவர்களுக்கு ஊக்கத்தை தந்தது. பொதுவாக இராணுவ மருத்துவமனைகள் களமுனையை விட்டு பின்நகர்த்தப்படுவதே வழமை ஆனால் எம் போராளி மருத்துவர்களான தணிகை, காந்தன், இசைவாணன் மற்றும் வளர்பிறை ஆகியோர் பின்னால் கொண்டு செல்லாது களமுனைக்கு அருகில் முன்னோக்கி கொண்டு சென்று போராளிகளின் மனதில் நம்பிக்கையை விதைத்தது மட்டுமல்லாது சண்டையின் போக்கையே மாற்றினார்கள்… சண்டை அணிகளுக்கு வழங்கல் அணியும் மருத்துவ அணியும் அருகில் இருந்து இரு விநியோகமும் தடை இன்றி கிடைக்குமானால் சிறு சோர்வு கூட வராது. தமக்கான ரவைகளும் மருத்துவமும் அருகில் இருக்கின்றது என்ற நம்பிக்கை பிறக்கும் இதை அவர்கள் செய்து காட்டினார்கள். அவர்களது மனவுறுதிக்கு இன்னும் பலம் சேர்க்கும் மருத்துவத் துறையின் அருகாமை. அதுவும் இயக்கத்தின் மூத்த இராணுவ மருத்துவர்கள் களமுனையில் நிற்பதால் காயப்பட்டவர்கள் நிட்சயமாக காப்பாற்றப்படுவார்கள் என்ற மனவுணர்ச்சி அவர்களுக்கு இன்னும் புது வேகத்தை கொடுத்தது. படையணிகள் தீவிரத் தாக்குதலில் மடிந்து கொண்டிருந்தது சிங்களபடையணிகள். அப்போதும் எம் மருத்துவப்பிரிவின் பொறுப்பாளர் ரேகா அவர்கள் ஓயாது எம்மை வழி நடத்துவார் ஆனால் இப்போது அவரது இருப்பு வினாக்குறியோடு நீளும் அதே நேரம் என்னோட கூட நின்ற மற்ற மருத்துவர்கள் நால்வரும் பின் நாட்களில் விதையாக வீழ்ந்து லெப் கேணல் இசைவாணன், லெப் கேணல் காந்தன் , லெப் கேணல் வளர்பிறை, லெப் கேணல் தமிழ்நேசன் என்ற நிலையோடு மண்ணுக்குள் வாழ்கிறார்கள். அவர் விழிகள் கலங்கி உதட்டில் இருந்து விம்மல் ஒலி வருகிறது. சரி கவி சந்திப்போம் என்ற வார்த்தையோடு நிறைவு பெறுகிறது எனக்கும் போராளி மருத்துவர் தணிகைக்குமான இன்றைய தொலைபேசி உரையாடல் நன்றி தணிகையண்ண…. கவிமகன்.இ 24.11.2017
  8. குமாரசாமி குதித்து விட்டார் ........ நிர்வாகத்துக்கு நன்றி . ..........! 💐 கிருபன் எனது 30 வது கேள்விக்கு விடை kagiso rabada என்று சேர்த்து விடுங்கள்........! 😁
  9. நியாயம்… எனக்கு இந்தத் தாடியை தெரியாது. இப்படிப் பட்ட கீழ்த்தரமான குணநலன் உள்ளவர்கள் எனது நண்பர் வட்டத்தில் இல்லை. ஜேர்மனியில் வசித்தும்…. சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் மற்றவனின் மேசையில் போய் காவாலித்தனம் செய்யும் தாடிக்கும், நான்கு போட்டு அனுப்பியிருக்கலாம். தாடியருக்கு விழ வேண்டிய அடி, மாறி அவரின் சாரதிக்கு விழுந்திட்டுது போலுள்ளது.
  10. நான் இங்கே கதைப்பது உணவகத்தில். நடந்தது சரியா ???அல்லது பிழையா ??? என்பதை மட்டும் தான் அவரின் மனைவிகளின். எண்ணிக்கை பற்றியே வேறு இடங்களில் நடந்து கொண்டது பற்றியே அல்ல ஒவ்வொருவரும் உணவகங்களில் நிம்மதியாக மகிழ்ச்சியாக உணவு சாப்பிட்டு வரமுடியும். அர்ச்சுனா இந்த ரவுடிகளுடன். கதைக்கவில்லை இந்த ரவுடிகள் தான் முதலில் சேஷ்டை விட்டார்கள் அதற்கு அர்ச்சுனா நடநநு கொண்ட விதம் மிகவும் சரியானது ஆகும் குறிப்பு,...ஜேர்மனியில் சாப்பிட உணவகளுக்கு போனால் நல்ல முறையில் வரவேற்று மகிழ்ச்சியாக அனுப்பி வைப்பார்கள் எவரும் நக்கல் செய்ய அனுமதி இல்லை
  11. இந்த யாழ் கள உறுப்பினர்கள் சொல்லி உள்ளார்களா,..??? அர்ச்சுனா அடிபட. போகவில்லை ...சாப்பிடத் தான் போனார் உணவகங்களில் சாப்பிட போகலாம் ....அவர் ஒரு சாதாரண மனிதனாக சாப்பிட போனார் .. விருந்தினர்களை .....வாடிக்கையாளர்களை உணவகங்களில் நிற்பவர்கள். முதலாளியின். நண்பர்கள் நக்கல் அடிக்கலாமா??? இங்கே கருத்துகள் எழுதியவர்கள். உங்கள் துணையுடன் அல்லது தனியாக உணவு உள்கொள்ள. அதாவது சாப்பிட உணவகங்களுக்கு செல்கிறார்கள் என வைப்போம் அங்கே நிற்கும் ரவுடிகள் I Love You என்று சொன்னால் உங்கள் வாழ்க்கை துணை அல்லது நீங்கள் என்ன செய்வீங்கள் ??? அடிப்பீர்கள். ....அர்ச்சுனா போல் தாக்குவீர்கள். இல்லை எதுவும் செய்ய மாட்டீர்கள் ....உங்கள் வாழ்க்கை துணைக்கு பாதுகாப்பு கொடுக்க. முடியாது இல்லையா?? கண்டவன் நின்றவன். எல்லாம் I Love You சொல்லலாமா. ???. இங்கே அர்ச்சுனா செய்தது மிக மிக. சரியான வேலை இதற்க்கும். பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும். எந்தவொரு சம்பந்தமில்லை அர்ச்சுனா நீங்கள் தான் உண்மையான தமிழன் உண்மையான மனிதன். வாழ்த்துக்கள் 🙏
  12. சொந்த தாய் மொழியை காட்டுமிராண்டின்னு விளித்தவன் முன் காட்டுமிராண்ன்டிகளாக இருப்பதில் என்ன தவறு. கன்னட தேசத்தில் போய் அவன் போற்றும் மொழியை காட்டுமிராண்டி என்று சொல்லி.. தந்தை... பெரியார் பட்டங்களை எவனாவது ஒரு தமிழன் வாங்கி வரட்டும் பார்க்கலாம். சீமானின் தம்பிகளை காட்டுமிராண்டி என்று வசனம் எழுதுபவர்கள்.. பேசுபவர்கள். எல்லாப் போலிகளையும் இழிச்ச வாய் தமிழனிடத்தில் தான் விதைக்கலாம். தமிழனை மட்டும் தான் அந்நியன் ஆளலாம். ஆனால் மற்ற எல்லாரையும் அவரவர் இனம் தான் மொழிதான் ஆளலாம். சாபக்கேடு தமிழனே இதுக்கு காவடி தூக்கித் திரிவது தான்.
  13. இப்ப தலைவரையே உண்மையோ போலியோன்னு கேக்க வைக்கிற அளவுக்கு இருக்கு.. எம்மவர்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள நச்சு விதைகள். உளவியல் போரின் உச்சக்கட்டங்கள் அரங்கேறுகின்றன. அதுக்கு இன்னும் இன்னும் உயிர்ப்பூட்ட இங்கையும் ஆக்கள் இருக்கினம்... எழுதினம். தமிழகத்தில் போலித் திராவிடம் மும்மரமா இயங்குது. கிந்தியா சிதைவதை விட திராவிடம் அழிவது தமிழர்களின் இருப்புக்கு மிக அவசியம் என்றாகி வருகிறது. சிங்கள பெளத்த பேரினவாதத்தை விஞ்சும் அளவுக்கு தமிழர்கள் அழிப்பில் திராவிட மேலாதிக்க பாசிச சிந்தனை இருக்குது.
  14. 30ம், 31ம் விடைகள் மாறிவிட்டன, கிருபன். 30 வது கேள்விக்கான விடை: Shaheen Shah Afridi 31 வது கேள்விக்கான விடை: PAK பச்சைக் கலர் முக்கியம்.............................🤣. 👍.............. பையன் சார், எண் சாத்திரப்படி எட்டாம் நம்பர் எங்கேயோ போகுமாம். இங்கு களத்தில் தான் சில நாட்களின் முன் இந்த சாத்திரத்தை சொன்னார்கள். பங்குபற்றுபவர்களின் வரிசையை ஒரு தடவை பார்த்துக் கொள்ளுங்கள், குறிப்பாக யாருடைய பெயர் எட்டாவதாக இருக்கின்றது என்று...................😜.
  15. இதுவரை போட்டியில் பங்குபற்றியவர்கள்: 1 ஈழப்பிரியன் 2 ஏராளன் 3 வீரப் பையன்26 4 சுவி 5 அல்வாயன் 6 தமிழ் சிறி 7 நிலாமதி 8 ரசோதரன் 9 நுணாவிலான் 10 வசீ 11 வாத்தியார் 12 நந்தன் 13 செம்பாட்டான் 14 குமாரசாமி 15 நியாயம் 16 வாதவூரான் பலரின் பதில்களில் திருத்தம் வேண்டும். ஒவ்வொருவராகச் சொல்லுகின்றேன் 😃 @ஏராளன் இருவரும் விளையாடாததால் வேறு பெயர்களைத் தாருங்கள். @suvy ஐயா, இவர் விளையாடவில்லை. வேறு பதிலைத் தாருங்கள்.
  16. Hybrid Bharatham...💃
  17. போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 2 மீன் அடிச்ச ஆப்பு ! மணலாறு காட்டுக்குள் அலைந்து திரிந்த அந்த மனிதர்களின் வீரம் பற்றி யாரும் அறிய மாட்டார்கள். குண்டுகளும் துப்பாக்கிகளும் கிளைமோர்களும் தான் அவர்களுக்கு அதிகம் பிடித்தவை. உணவு என்பது அவசியமற்று போகும் போதெல்லாம் எங்கோ ஒரு இலக்கில் எதிரி சிதறப் போகும் யாதார்த்தம் நிமிர்ந்து நிற்கும். இலக்குக்காக அந்த மனிதர்கள் அலைந்த நாட்கள் கொஞ்சமல்ல. ஓய்வு என்பது மரணத்துக்கு பின் என்பது அவர்களது இயல்பாக இருக்கலாம். ஓய்வின்றி தேசியத்தலைவரின் எண்ணங்களுக்கு அந்த மனிதர்கள் வண்ணம் பூசி வெற்றி என்ற பாதையில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். 1996 முல்லை மண்ணில் முப்படைகளும் குந்தி இருந்து எம் மக்களுக்கு கொடுத்த பெரும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளியிட்டனர் விடுதலைப்புலிகளின் சண்டையணிகள். யாழ்ப்பாணத்தை தம் ஆளுகைக்குள் கொண்டு வந்த பின் விடுதலைப்புலிகள் பலமிழந்துவிட்டதாக பரப்புரை செய்து கொண்டிருந்த சிங்களத்துக்கு நெத்தியடி கொடுத்த விடுதலைப்புலிகளின் அணிகளில் இவர்களும் இருந்தார்கள். பெரும் வெற்றியை எமக்குத் தந்துவிட்டு மீண்டும் மணலாறுக் காட்டை வதிவிடமாக கொண்டு எதிரிக்காக அலைந்து கொண்டிருந்தார்கள். இவ்வாறு தான் அவர்களில் இருந்த வேவுப் போராளிகளின் அணி ஒன்று வேவுக்காக சென்று திரும்பிய போது புன்னகையோடு இலக்கை கூறுகிறார்கள். “மரியதாஸ் ( பின்நாட்களில் “ஜெயசிக்குறு” நடவடிக்கையில் கப்டன் மரியதாஸ் வீரச்சாவு) அண்ண 10 பேரண்ண வடிவா குடுக்கலாம்…” ரைபிள் எல்லாத்தையும் நிலத்தில வைச்சிட்டு சென்றிக்கு ஒருத்தன் மட்டும் நிக்கிறான் மற்றவ குளிக்கிறாங்கள் கிளைமோர் ஒன்று செட் பண்ணினால் 10 பேரையும் தூக்கலாம்” எந்த இடத்தில? தளபதி ஆவலோடு வினவுகிறார். அண்ண எங்கட சின்னக் குளத்தில அண்ண. மணலாறு காட்டிடையே விடுதலைக்காக பயணித்துக் கொண்டிருந்த மூத்த போராளியும் அந்த வேவு அணிகளுக்கான அணித்தலைவனாகவும் இருந்த மரியதாஸ்க்கு வேவுத்தகவல் பிரியோசனமானதாகவே தோன்றியது. அந்த இலக்கு அவர்களின் வேவு வலயத்துக்குள் கொண்டுவரப்படுகிறது. அடிச்சால் பத்து சிங்களப் படையைக் கொண்ட எதிரியின் ஒரு அணி உயிரிழக்கும். அந்த குளம் எம்மவர்களின் பார்வை வீச்சில் இருந்து தப்பிக்க முடியாத அளவிற்கு வேவுப் போராளிகள் காத்திருந்தார்கள். தளபதி ஊடாக தலைவரின் அனுமதிக்காக திட்டம் அனுப்பப்படுகிறது. உடனடியாக திட்டம் அனுமதிக்கப்பட மகிழ்வில் பூரித்து போகிறார்கள் அவர்கள். குளத்தின் இந்தக்கரை எம்மவர்களாலும் மறு கரை இராணுவத்தாலும் சூழப்பட்டருந்தது. தினமும் குளிப்பதற்காக குறித்த நேரத்தில் அந்த அணி வந்து போகிறது. இது அந்த காலத்தில் அரியதான ஒரு இலக்கு. தொடர் வேவுகள் இலக்கை உறுதிப்படுத்திக் கொள்ள அன்றைய காலை வேளை அவர்களுக்காக குளத்துக்குள் ஒரு கிளைமோர் தயாராக காத்திருக்கிறது. இரவோடு இரவாக மரியதாஸ் கிளைமோரை குளத்து நீரின் அடியில் புதைத்திருந்தான். காத்திருக்கிறார்கள். அடிச்ச மறு நிமிடம் தங்களை எதிர்த்து தாக்க வேறு அணி வரலாம் அவர்கள் எம் அணிகளை நோக்கி பாரிய தாக்குதல் செய்யலாம் என்ற நியம் மரியதாஸ் தலமையிலான போராளிகளுக்கு தெரியாமல் இல்லை. அவர்கள் அதற்கும் தயாராகவே காத்திருந்தார்கள். அப்போதெல்லாம் எம் வெடிகுண்டு தொழில்நுட்பம் வயிரின் மூலம் மின் கொடுக்கப்பட்டு வெடிக்க வைப்பதே. அதனால் நீண்ட மின் கடத்தக்கூடியதான தொலைபேசி வயரை குளத்து நீரின் அடியால் மிக சிரமத்தோடு தாட்டு கிளைமோரை நிலைப்படுத்துகிறார் மரியதாஸ். நீரிற்கு வெளியிலும் மண்ணுக்குள் வயரை தாட்டு குளக்கரையில் இருந்த பெரும் காட்டுக்குள் கொண்டு வருகிறார். இப்போது எல்லாம் தயார். மின்கலத்தின் மூலம் வெடிக்க வைக்க தயாராக காத்திருக்கிறார்கள் அந்த மனிதர்கள். மரியதாஸ் கண் இமைக்காமல் இராணுவ அணியை அவதானித்த்துக் கொண்டிருக்கிறார். தூர சில உருவங்கள் காட்டை விட்டு வெளி வருவது தெரிகிறது. இராணுவ அணி உடைகளை கழைந்து குளிப்பதற்காக குளத்துக்குள் இறங்குகின்றனர். அவர்களில் சிலர் துப்பாக்கியோடும் சிலர் குளிப்பதற்கான பொருட்களோடுமே வந்திருந்தனர். குளத்துக்குள் இறங்கி சிலர் குளிக்க இரண்டு மூன்று பேர் அருகில் இருந்த கற்களில் உடைகளை தோய்க்கத் தொடங்கி இருந்தனர். இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் நெருக்கமாக வந்து விட்டது. மரியதாஸ் மின் இணைப்பை மின்கலத்தின் மூலம் கொடுக்கிறான். “ஏமாற்றம்…” கிளைமோர் வெடிக்காமல் சதி செய்தது மின்கலத்தில் மின் இல்லை என்று நினைத்து வேறு மின்கலத்தின் மூலம் மீண்டும் முயற்சி செய்த போது அதுவும் தோல்வி. மனம் வெறுத்துப் போக குளத்தையே வெறித்து பாக்கிறார்கள். ச்சீ… தப்பீட்டாங்கள்… அனைவரும் மனம் வெறுத்து அந்த குளக்கரையோரம் நீண்டு நிமிர்ந்த மரங்களின் அடியில் படுத்து கிடக்கிறார்கள். இலக்கு தப்பி விட்டது. வந்த அணி திரும்பி விட்டது. தளபதிக்கு விடயம் தெரிவிக்கப்பட்டு இவர்களும் அன்று முழுவதும் அந்த காட்டோரம் படுத்திருந்து தாம் தயாராக்கி வைத்த கிளைமோரை மீட்க குளத்துக்குள் இறங்குகிறார்கள். கிளைமோரை தூக்கி வெளியில் வந்து பார்த்த போது சிரிப்பதா அழுவதா என்று நிலை தெரியாது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.என்னண்ண ஆச்சு? இங்க பார் மீன் என்ன செய்திருக்கு என்று? அட நாசமா போன மீன்கள் இப்பிடி வயர கடிச்சு தின்டிருக்குதகள்? இடையில் அறுபட்டு கிடந்த வயரைப் பார்த்து மீன்களை திட்டத் தொடங்கினான் ஆறுமுகம். விடுடா அதுகளுக்கு தெரிஞ்சு போச்சு போல இவங்கள் ஆமிய மட்டுமல்ல எங்களையும் சேர்த்து சாகடிக்க போறாங்கள் என்று அது தான் அதுகள் எங்களுக்கு எதிரா போர்க்கொடி தூக்கி இருக்குதுகள். என்று இரகசியமாக கூறி சிரித்து விட்டு முகாம் மீண்டார்கள். அதில் ஒருவனுக்கு மட்டும் அந்த இலக்கு தவறியது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. நீரைத் தவிர வேறு இடத்தில் கிளைமோரை பொருத்தினால் இலக்கு வலயத்துக்குள் அந்த அணி முழுவதும் வராது அதனால் அவர்கள் தப்பிக்க வாய்ப்புண்டு. அதனால் சிந்தனையை கூர்மையாக்கிக் கொண்டான். என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? யோசித்து யோசித்து களைத்த அவனுக்கு வயர்லெஸ் ( wireless ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் என்ன என்ற சிந்தனை கருத்தரித்தது. அதாவது வயர் இணைப்பு இல்லாது வெடிக்க வைக்கும் தொழில் நுட்பம். உதாரணத்துக்கு ரிமோட்கொன்ரோல் (remote control ) தனக்கு தோன்றியதை மரியதாஸ்க்கு தெரியப்படுத்தினான். மரியதாஸுக்கும் அது சரியான ஒன்றாகவே பட்டது. சிந்தனை செயலாக்கம் பெற்றது இரண்டு வோக்கிகள் அதற்காக பயன்படுத்தப்பட்டன. ஒரு வோக்கியின் ஒலிபெருக்கிக்கு செல்லும் வயரில் இருந்து கிடைக்கும் மின்சாரம் கிளைமோரோடு இணைக்கப்படுகிறது. அந்த மின்சாரத் தூண்டல் கிளைமோரை வெடிக்க வைக்க போதுமானதா என்று சரிபார்க்கப்பட்டு அதற்கான மின்சாரத் தூண்டலை அதிகரிக்க செய்யும் ஒரு இலத்திரனியல் பகுதி அதனுடன் இணைக்கப்படுகிறது. அதன் மூலம் கிளைமோருக்கான வெடிப்பிக்குத் தேவையான மின்சாரம் சரி செய்யப்படுகிறது. இப்போது இவர்கள் கையில் இருக்கும் வோக்கியின் PTT அமத்தப்பட்டால் கிளைமோருடன் இணைக்கப்பட்ட வோக்கியில் இருந்து மின்சாரம் பாச்சப்படும் அந்த மின் தூண்டல் வெடிப்பியை வெடிக்க வைத்து கிளைமோர் வெடிக்கும் இலக்கு தவறாது சிதறும். ஆனால் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. அதாவது இவர்கள் அந்த திட்டத்துக்காக பயன்படுத்திய வோக்கியின் இலக்கம் 328. இதே இலக்கத்தில் எதிரியும் தொடர்பை பேணுவானாக இருந்தால் அல்லது வோக்கியின் அழைப்பு வலயத்துக்குள் இருந்து வேறு எதாவது வோக்கியில் இருந்து அந்த இலக்கத்துக்கு PTT அழுத்தப்பட்டால் கட்டாயமாக கிளைமோர் வெடித்து சிதறும். ஆனாலும் எமது அணிகளுக்கு இந்த இலக்கத்தை பாவிக்க வேணாம் என்ற ஒரு கட்டளையை வழங்கி ஆபத்தை தவிர்க்கலாம். ஆனால் எதிரி…? யோசித்த போது இறுதியாக முயற்சி செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தவர்களாக நடவடிக்கையில் இறங்கினர் மரியதாஸ் தலமையிலான அணி. அந்த நெருக்கடியான காலமானது தொழில்நுட்ப அறிவியல் வளராத இயக்க வரலாற்றின் பக்கத்தை கொண்டது. ஆனாலும் கிடைக்கும் பொருட்களின் மூலம் உயர் பயன்பாட்டை பெறக்கூடிய விடுதலைப்புலிகளின் போராளிகள் தமது உயர் தொழில்நுட்ப அறிவை தம் சிந்தனைகளுக்கூடாகவே வளர்த்துக் கொண்டார்கள். அதன் ஒரு வெளிப்பாடே இந்த கிளைமோர் தாக்குதல்.சில வாரங்கள் கடந்து போக, மீண்டும் வேவுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட அந்த இரவு அவர்களுக்கு மிகவும் பதட்டமாகவே இருந்தது சிலவேளைகளில் இதுவும் தவறினால்? அனைவரின் மனதிலும் இதுவே எழுந்த கேள்வி. வெடிக்காமல் போனால் பரவாயில்லை தவறி இலக்கு வர முன் வெடித்தால்? இலக்கு பிசகி விடும் அதே நேரம் இப்படியான இலகுவாக கிடைக்கும் இலக்குக்காக நீண்ட காலங்கள் காத்திருக்க வேண்டி வரும். அனைவரும் அந்த குளக்கரையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மரியதாஸ் கையில் வெடிக்க வைக்கும் வோக்கி இருந்தது. இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் வருகிறது. இவர்களின் மனப் பதட்டம் அதிகரிக்கிறது. வந்தவர்கள் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு தமக்கான ஆபத்து காத்திருப்பதை அறியாது சிரித்து மகிழ்கின்றனர். மரியதாஸின் கையில் இருந்த வோக்கியின் PTT அழுத்தப்படுகிறது. அந்த காலை நேரம் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாது கிளைமோர் வெடித்து சிதறிப் போக சிங்களத்து சிப்பாய்கள் 9 பேர் அந்த இடத்திலையே சிதறிப் போனார்கள் காவல் பணியில் இருந்த ஒரு இராணுவம் மட்டும் காயத்தோடு தப்பித்து சென்று விட இலக்கை துவம்சம் செய்த வோக்கிக்கு ஒரு முத்தத்தை கொடுக்கிறான் மரியதாஸ். உடனே பின்தளம் திரும்ப கட்டளையிடுகிறான். அனைவரும் வெற்றி பெற்றுக் கொண்டு தளம் திரும்பினர். மரியதாஸ் தலமையிலான மணலாறு மாவட்ட படையணியின் வேவுப் போராளிகளின் இந்த தாக்குதலானது சிங்களத்துக்கு தடுமாற்றத்தையும் எமக்கு மகிழ்வையும் தந்த போது, அடுத்த இலக்கைத் தேடி அந்த மனிதர்கள் அந்த பெரும் காட்டுக்குள் ஓய்வின்றி அலைந்து கொண்டிருந்தார்கள்… கவிமகன்.இ 22.11.2017
  18. காதலர் தினக் கதை ------------------------------ என் நண்பன் சொன்ன அவனின் கதை இது ஆள் அப்படி ஒன்றும் கண்டவுடன் காதலிக்க தோன்றும் புற அழகு என்றில்லை ஆனால் அவனின் அகம் நல்ல அழகு என்று அவனே சொல்லிக் கொள்வான் சொந்த இடம் பீஜிங் சோகக் கதை நடந்ததும் அங்கே தான் அங்கே ஒரு பெண் நல்ல அழகு அவர் ஊரில் பலரும் அவர் பின்னால் திரிய அவரோ நம்மாளை எப்படியோ காதலிக்க ஆரம்பித்தார் கனவா நிஜமா என்று காற்றிலே மிதந்து கொண்டிருந்தான் நம்மாள் அடுத்து வந்த காதலர் தினத்தில் நம்மாள் ஒரு பூங்கொத்து கொடுத்தார் எங்கே வாங்கிய பூங்கொத்து என்ற கேள்விக்கு நானே செய்தேன் என்றார் நம்மாள் பூ......... என்று இழுத்தாள் ஊரில் அழகான அந்தப் பெண் வீட்டுக்கு முன் இருந்தது என்றான் அப்பாவியாக அன்று போன அந்த அழகுப் பெண் பின்னர் திரும்பிப் பார்க்கவே இல்லை இப்ப இருப்பது இரண்டாவது காதலா என்றேன் ஆமாம் என்று அவசரமாக தலையாட்டினான் இப்ப அவர் அவனின் மனைவியும் கூட பூ............ என்று நான் இழுத்தேன் கடையில் வாங்கிக் கொடுத்தேன் என்றான் சோகமாக இதில் ஏன் சோகம் என்று நான் முழிக்க இவருக்கும் அப்பவே தெருவில் புடுங்கி கொடுத்திருக்க வேண்டும் என்றான்...................
  19. பாகிஸ்தான் ஃபைனலிற்கு வரும் என்று தெரியும்....................... ஆனால் தென் ஆபிரிக்காவும் வந்தால், பாகிஸ்தான் படுத்திருந்தே வெல்லப் போகுதே.....................😜. இந்தியா வெளியில் போகும் போது, நாங்கள் அந்தக் கொட்டிலுக்கு போகின்றோம், பையன் சார். உங்களின் துக்கத்தை அன்று தீர்க்க, நான் உங்களுக்கு கம்பனி கொடுக்கின்றேன்...............🤣.
  20. தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா எங்குமே, ஏன் அதை தாண்டி இலங்கையிலும் சாதி வெறி பரப்பப்பட்டதானது ஆயிரக்கணகான வருட வரலாற்றைக் கொண்டது. இந்து மதத்தை அடிப்படையாக கொண்டு தமது மேலாண்மையை பேண மற்றய மக்களை ஒடுக்க அவர்களுக்கு கல்வியை மறுத்து அது கட்டமைக்கப்பட்டது. அது பற்றி விவாதிப்பதே நீண்ட ஒரு தனி சப்ஜெக்ட். தற்காலத்தில் தேர்தல் அரசியல் கட்சிகள் சாதி வாரி வேட்பாளரை தேர்தல் வெற்றி என்ற யுக்திக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனவே தவிர மற்றப்படி சாதி வெறியை கட்சிகளாகவோ கட்டமைக்கப்பட்ட மக்கள் அமைப்புகளாகவோ யாரும் பரப்பவுல்லை. ஒடுக்கப்பட்ட மக்களை தூக்கி விடுவதற்கான இட ஒதுக்கீடு அரசியலே கடந்த 100 வருட அரசியலாக அம்பேத்கார் பெரியார் போன்ற தலைவர்களின் போராட்டங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டது. அதுவும் தமிழ் நாடு மற்றைய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக 69 விடழுக்காடுவரை இட ஒதுக்கீட்டை வழங்கு சாதி ஒடுக்குமுறையில் இருந்து மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனல் இனவெறி என்பது ஆபத்தானது மக்களை பிரித்து வெறுப்புகளை வளர்தது பேரழிவை உண்டாக்கக்கூடியது என்பதை அனுபவர்ரீதியாக உணர்ந்துள்ள நாங்கள் தமிழ் நாட்டில் இனவெறியை தூண்ட ஆதரவளிக்க கூடாது. ஈழ அரசியலில் உசுப்பேற்றுபவர்களை சாடி பல பதிவுகளை நீங்களே இட்டுள்ளீர்கள். நடைமுறை சாத்தியமான அரசியலை இலங்கையில் வலியுறுத்தும் நீங்கள் அங்கு இனவெறியளர்கள ஆதரிப்பது முரண்பாடாக உள்ளது. நாம் பட்ட துன்பம் அவர்களும் படடும் என்ற நல்லெண்ணமோ😂😂😂😂
  21. The Mehta Boys- அப்பா - மகன் உறவு பற்றி நான் பார்த்த படங்களில் மிகச் சிறந்த, அருமையான படம்! எந்த போலித்தனமான, சினிமாத்தனமான template களும் இல்லாத, நல்லதொரு படம். அநேகமான அப்பாக்களும் மகன்களும் ஒரு குறிப்பிட்ட வயதின் பின் கட்டி இணைப்பதில்லை.. கொஞ்சுவதில்லை.. சேர்ந்து ஒரு வேளை சாப்பிடுவது கூட இல்லை. அப்படி அணைக்கும், hug பண்ண மனசு விரும்பும், சேர்ந்து உண்ணும் தருணங்களை போலி ego நிராகரித்து விடும். ஆனால் அப்படி செய்யாமல் விட்டு, அப்பாவை புரிந்து கொள்ளும் முயற்சிகளை வேண்டும் என்றே ego காரணங்களால் மறுத்தமையால் உருவாகும் காயங்கள் வலி மிகுந்தவை. ஆயுள் வரைக்கும் ஆறாதவை. நான் அந்த வலியை அனுபவிக்கின்றவன். இப் படத்தை பார்க்கின்ற ஒவ்வொரு மகன்களுக்கும் அந்த வலியை கடத்திச் செல்கின்றது இப் படம். Amazon Prime இல், IPTV யில் தமிழ் ஒலிப்பதிவுடன் உள்ளது. பாருங்கள்
  22. தமிழ் நாட்டை பொறுத்தவரை இது ஒரு பொல்லாப்பும் இல்லை.. அங்கால திமுக அதிமுக பாமக etc.. சாதிவெறியை பரப்புகிறார்கள்.. இவர் இனவெறியை பரப்புகிறார் என்கிறீர்கள்.. ஆக மொத்தத்தில் வெறி.. வெறி.. அதில அவரவர்க்கு புடிச்ச வெறியை அவரவர் எடுக்கிறார்கள்.. அப்படியே அதை வெளிய இருந்து எட்டிப்பார்க்கும் நாமும் உள்ள பேயில் ஓரளவு நல்லபேயாய் நமக்கு தெரிவதை ஆதரிக்கிறம்.. இதில் நீங்கள் கிட்லர் பட்லர் எண்டு எழுதிக்கிளிக்கிற அளவுக்கு தமிழ்நாட்டு அரசுக்கு ஒரு அதிகாரமும் இல்ல.. திமுக அதிமுக பாமாக விசிக நாம்தமிழர் எல்ல்லாரும் றோவுக்கு கீழதான் .. றோ சொல்றததான் கேக்கனும்.. கருணாநிதியே றோ சொல்றதகேட்டுத்தான் 2009 இல் இருந்தவர் .. உண்ணாவிரதமும்.. ஆதலால் ஒரு பொல்லாப்பும் இல்லை நமக்கு..
  23. AUS நன்றி அவுஸ்ரேலிய விளையாட்டு துறை பத்திரிகையாளரான ஜெராட் கிம்பரின் சிலந்தி வரைபின் அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் குழுநிலை போட்டியில் (Group A) தெரிவாகும். காணொளி
  24. படக்குறிப்பு, அட்ரியன் சிமன்காஸ் கயாக்கிங் செய்து கொண்டிருந்த போது, அவரை ஒரு ஹம்பேக் திமிங்கிலம் (humpback whale) விழுங்கியது. கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்ட்ரியா டியாஸ் & அயெலன் ஒலிவா பதவி, 3 மணி நேரங்களுக்கு முன்னர் கயாக்கிங் (கயாக் என்பது துடுப்பு போட்டு இயக்கக் கூடிய ஒரு சிறு படகு) சென்ற அட்ரியன் சிமன்காஸை ஒரு திமிங்கிலம் விழுங்கியபோது, அவர் முதலில் கவனித்தது வழுவழுப்பான ஒரு உணர்வைத் தான். "நான் ஏதோ ஒன்றின் வாய்க்குள் இருப்பதை உணர்ந்தேன், ஒருவேளை அது என்னை சாப்பிட்டிருக்கலாம், அது ஓர்கா (திமிங்கிலம்) அல்லது கடல் அரக்கனாக இருக்கலாம் என நினைத்தேன் " என்று 23 வயதான அட்ரியன் பிபிசி முண்டோவிடம் கூறினார். அட்ரியன், "பினோச்சியோவைப் போல" (ஒரு கற்பனைக் கதாபாத்திரம்) ஹம்பேக் திமிங்கிலத்திற்குள் எப்படி உயிர் வாழ முடியும் என்று சிந்திக்கத் தொடங்கினார். ஆனால் அந்த உயிரினம் திடீரென்று அவரை வெளியே துப்பியது. வெனிசுலாவைச் சேர்ந்த அட்ரியன் தனது தந்தையுடன் சிலியின் படகோனியா கடற்கரையில் உள்ள மெகல்லன் கடல் பகுதியில் வழியாக கயாகிங் சென்ற போது, "பின்னாலிருந்து ஏதோ ஒன்று என்னைத் தாக்கியது, அருகில் வந்து மூடிக்கொண்டு என்னை மூழ்கடித்தது" என்றார். அவரது தந்தை டாலால், அந்தச் சம்பவத்தை சில மீட்டர் தொலைவில் இருந்து படம் பிடிக்க முடிந்தது. "நான் என் கண்களை மூடிக் கொண்டேன், மீண்டும் கண்களைத் திறந்த போது, நான் திமிங்கிலத்தின் வாய்க்குள் இருப்பதை உணர்ந்தேன்" என்று அட்ரியன் பிபிசியிடம் விவரித்தார். "எனது முகத்தில் வழுவழுப்பான தன்மை கொண்ட ஏதோ ஒன்று உரசியதை உணர்ந்தேன்" என்று கூறிய அவர், தான் பார்த்தது அடர் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது என்றும் அவர் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பேசிய அட்ரியன், "அதை தடுக்க நான் இனி போராட முடியாது என்பதால் அது என்னை விழுங்கிவிட்டால் என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன்," என்றும், "அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நான் யோசிக்க வேண்டியிருந்தது" என்றும் தெரிவித்தார். ஆனால் சில நொடிகளில், அட்ரியன் மேற்பரப்பை நோக்கி எழுவதைப் போல உணரத் தொடங்கினார். டீப் ஃபேக்: நெருங்கிப் பழகி ரகசியமாக ஆபாசப் படங்களை வெளியிட்ட நண்பன் - தம்பதி செய்தது என்ன? பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா? விரல் நகத்தில் தோன்றும் வெள்ளை நிற கோடு எதை குறிக்கிறது? தீவிர உடல்நல பிரச்னைகளை நகம் காட்டுமா? "எவ்வளவு ஆழத்தில் உள்ளேன் என்பது தெரியாமல் மூச்சை அடக்க முடியுமா என்று சற்று பயந்தேன், மேலே வருவதற்கு நீண்ட நேரம் எடுத்தது போல் உணர்ந்தேன்" என்று விளக்குகிறார் அட்ரியன். "நான் இரண்டு வினாடிகள் மேலே வந்தேன், இறுதியாக நான் மேற்பரப்புக்கு வந்தபோது , அது என்னை உண்ணவில்லை என்பதை உணர்ந்தேன்." என்கிறார். அருகிலுள்ள கயாக்கில் இருந்து , அட்ரியனின் தந்தை டால் சிமான்காஸ் இக்காட்சியை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். சிலியின் தெற்கு நகரமான புன்டா அரீனாஸில் இருந்து கடற்கரையோரம் இருக்கும் ஈகிள் பே-வை அவர்கள் இருவரும் கடந்தபோது, பின்னால் ஒரு சத்தம் கேட்டது. "திரும்பிப் பார்த்தபோது, அட்ரியனைக் காணவில்லை" என்கிறார் அட்ரியனின் தந்தை டால் சிமான்காஸ். மேலும் "அட்ரியன் கடலில் இருந்து மேலே வருவதை பார்க்கும் வரை நான் கவலைப்பட்டேன்" என்று 49 வயதான டால் கூறினார். "பின்னர் நான் ஏதோ ஒரு உடலைப் பார்த்தேன், அதன் அளவின் காரணமாக திமிங்கிலமாக இருக்கலாம் என்று நான் உடனடியாக புரிந்துகொண்டேன்" என்றும் குறிப்பிடுகிறார். கயாக்கிங் செய்யும் போது எழும் அலைகளைப் பதிவுசெய்ய, டால் தனது கயாக்கின் பின்புறத்தில் ஒரு கேமராவைப் பொருத்தியிருந்தார். இது அவரது மகனின் அனுபவத்தைப் படம்பிடித்தது. கடல் நடுவே உள்ள சிறிய தீவை ஆயிரக்கணக்கான மக்கள் காலி செய்ய என்ன காரணம்?12 பிப்ரவரி 2025 இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு: நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பு உண்டா?11 பிப்ரவரி 2025 மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?10 பிப்ரவரி 2025 Play video, "ஆளையே விழுங்கி துப்பிய ஹம்பேக் திமிங்கிலம் - தப்பியவர் கூறுவது என்ன?", கால அளவு 0,52 00:52 காணொளிக் குறிப்பு, ஏழு ஆண்டுகளுக்கு முன் தந்தையுடன் வெனிசுலாவிலிருந்து சிலிக்குக் குடிபெயர்ந்த அட்ரியன், அந்த வீடியோவை மீண்டும் பார்த்த போது, திமிங்கிலத்தின் அளவு எவ்வளவு பெரிதாக இருந்தது என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். "அந்த திமிங்கிலத்தின் முதுகு மேலெழுந்த தருணத்தையும், அதன் துடுப்புகள் தெரிந்ததையும் நான் பார்க்கவில்லை. சத்தத்தை மட்டும் தான் கேட்டேன். அதனால் தான் எனக்கு பயமாய் இருந்தது," என்றார் அட்ரியன். தொடர்ந்து பேசிய அவர், "பின்னர் அந்த வீடியோவை பார்த்த போது, அது என் முன்னால் மிகப்பெரிய அளவில் தோன்றியது என்பதை உணர்ந்தேன். அதை அப்போதே பார்த்திருந்திருந்தால், என்னை அது இன்னும் அதிகமாகப் பயமுறுத்தியிருக்கும் என்று தோன்றியது" என்றும் தெரிவித்தார் . 'ஹம்பேக் திமிங்கிலத்தால் மனிதனை விழுங்க இயலாது' அட்ரியனைப் பொருத்தவரை, அந்த அனுபவம் வெறும் உயிர் தப்பியதைப் பற்றியது மட்டுமல்ல. ஆனால் திமிங்கிலம் அவரைத் துப்பியபோது தனக்கு "இரண்டாவது வாய்ப்பு" கிடைத்ததாக உணர்ந்ததாக அவர் கூறினார். "உலகின் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றில் ஏற்பட்ட அந்த 'தனிப்பட்ட' அனுபவம், அதுவரை நான் என்ன சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்பதைப் பற்றியும், அந்த அனுபவத்தை எவ்வாறு பயன்படுத்தி, அதற்காக நன்றியுடன் இருக்க முடியும் என்பதையும் சிந்திக்க என்னை வித்திட்டது," என்று அவர் மேலும் கூறினார். ஆனால், வனவிலங்கு நிபுணரின் கூற்றுப்படி, அட்ரியன் இவ்வளவு விரைவாக திமிங்கிலத்திலிருந்து தப்பிக்க ஒரு காரணம் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹம்பேக் திமிங்கிலங்கள், சிறிய மீன்கள் மற்றும் இறால்களை விழுங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட "வீட்டு தண்ணீர்க் குழாயின் அளவே உடைய" குறுகிய தொண்டைகளைக் கொண்டுள்ளன என்று பிரேசிலிய பாதுகாவலர் ரோச்ட் ஜேக்கப்சன் செபா பிபிசியிடம் தெரிவித்தார். "கயாக்கர்கள், டயர்கள் அல்லது ட்யூனா போன்ற பெரிய மீன்களை கூட அவற்றால் விழுங்க முடியாது," என்பதைத் தெரிவித்த செபா, "இறுதியில், அந்த திமிங்கிலம் கயாக்கிங் சென்றவரைத் துப்பியது, ஏனெனில் அதனால் விழுங்க இயலாது" என்று அவர் கூறினார். ஹம்ப்பேக் திமிங்கிலம் தற்செயலாக அட்ரியனை மூழ்கடித்திருக்கலாம் என செபா பரிந்துரைத்தார். அதாவது, "திமிங்கிலம் மீன் கூட்டத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தவறுதலாக, அது மீன்களுடன் அவரை விழுங்கியிருக்கலாம்" என்கிறார் செபா. "திமிங்கிலங்கள் உணவுக்காக மிக விரைவாக மேலெழும்பும் போது, அவை தற்செயலாக தங்கள் பாதையில் உள்ள பொருட்களை தாக்கலாம் அல்லது மூழ்கடிக்கலாம்." திமிங்கிலங்கள் வழக்கமாக நீந்தும் பகுதிகளில் துடுப்புப் பலகைகள், மிதவைப்படகுகள் அல்லது அதிகம் சத்தம் எழுப்பாத மற்ற படகுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு "முக்கியமான நினைவூட்டலாக" அமைந்துள்ளதாக அவர் எச்சரித்தார். திமிங்கிலத்தைப் பார்ப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் பயன்படுத்தப்படும் படகுகள், அவற்றின் இயந்திரங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த ஒலியின் மூலம் திமிங்கிலங்களால் அந்த படகுகளின் இருப்பைக் கண்டறிய முடியும். லூயிஸ் பர்ருச்சோ மற்றும் மியா டேவிஸ் ஆகியோர் தந்த கூடுதல் தகவல்கள் இச்செய்தியில் இடம்பெற்றுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8q0my3g42o
  25. அதுவே தான் புங்கையூரான். பொதுவாகவே ஒரு போட்டி பொறாமை என்ற எண்ணங்கள் ஏற்படாத இடங்களில் மனிதர்கள் நல்லவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகக் குறைந்தது அப்படியான இடங்களில் அவர்கள் விரோதிகளாக மாறுவதில்லை. அதுவே ஒரு போட்டி பொறாமை போன்றன இடையில் வந்து விட்டால், மெதுமெதுவாக அங்கே மனிதப் பண்புகள் சிதைந்து போக ஆரம்பிக்கின்றன. அக்கறையும், கருணையும் உள்ள மனிதர்கள் சிலருக்கு அவற்றை வெளிப்படுத்துவதில் சிக்கல்களும் இருக்கின்றன. இதில் வந்த முரளி அண்ணா போல...............
  26. என‌க்கு புள்ளி போனாலும் ப‌ர‌வாயில்லை தென் ஆபிரிக்கா வேண்டால் பெரும் மிகிழ்ச்சி அடைவேன்................ நியுசிலாந் ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌த்த‌ தூக்கி விட்டின‌ம் தென் ஆபிரிக்கா தூக்க‌ வில்லை தூக்கினால் ம‌கிழ்ச்சி நான் தெரிவு செய்த‌து இந்தியாவை.........................
  27. சதுரம், முக்கோணம், வட்டம். 😂
  28. உங்கடை ஊர்(france) பிள்ளையள் தானே? 😀
  29. நான் இதுவரை பிள்ளைகள் போல் வளர்த்து வந்த அந்த சேவல்களை இறைச்சிக்கு விற்க மாட்டார்கள் என்றுதான் நினைத்திருந்தேன் . ......... இது எனக்கு புதிய தகவல் .......! 😴
  30. குறள்போல் சிறிதாகச் சொன்னாலும் பெரிதாக சிந்திக்க வைத்திருக்கிறீர்கள் . ........இதையும் யாழ் அகவை 27 ல் சேர்த்து விடலாம் . ........ நன்றாக இருக்கின்றது . ........ உபயோகமாகவும் இருக்கின்றது புத்ஸ் . .........! 👍
  31. இந்த நடனத்தின் வேதனை, பாண்டவர் காதையில் அபிமன்யு அனுபவித்த வேதனையைப் படித்தபோதும் ஏற்படவில்லை. உயிரோடு ஊண் உண்ணும் ஓநாயைவிடக் கொடியதாகச் சிங்களம் தன்னை உணரவைக்கிறது.😳
  32. நன்றி ..சிறி ...சுய ஆக்கம் தான் ....அதற்கு வேறு எழுதுகிறேன்.. நான் தருமி அல்ல🤣 மற்றவன் எழுதியதை யாழில் எழுதுவதற்கு ...சும்மா பம்பலுக்கு தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம்🤣
  33. அனுர அரசுக்கு தமிழரின் ஆதரவு என்பது, எந்த சிங்கள தலைமைகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் தமிழரை அரவணைக்கவும் அவர்களுக்கு இயலாத காரியம். இரு இனத்தையும் பரம எதிரிகளாக வைத்திருக்குமட்டும் தங்கள் அரசியலுக்கு பாதகமில்லையென்றே நினைத்திருந்தனர். அனுரவோ தமிழர் தன்னை ஆதரிப்பது போல் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இங்கே சவாலாகப்போவது இந்த விகாரை விவகாரம். இங்கே அனுரவின் திறமை வெளிப்படுமானால் சிங்கள மக்களின் எதிர்ப்பை ஊதுவார்கள். அதையும் கடந்து செய்ய முடியும் அனுரவால் ஆனால், அவரும் முயற்சிப்பது போல் தெரிகிறது. அதை நிறைவேற்ற முடியாவிடில் சிங்களம் அனுரவையும் தமிழர் வழங்கிய ஆதரவையும் ஏளனம் செய்யும். அவரை செய்யவும் விடமாட்டார்கள், தடைகளை ஏற்படுத்தி தடுக்கவே செய்வார்கள். தாங்கள் தீர்க்காத பிரச்சனையை யாரும் தீர்க்கக்கூடாது, தடைகளை ஏற்படுத்துவது. அப்போ யார்தான் தீர்ப்பது? யாருக்கும் துணிவு இல்லை. மக்களால் முடியும். இவர்கள் கலவரங்களை ஏற்படுத்த முனையும்போது, எதிர்த்து நிற்கவேண்டும். மக்கள் ஓரளவு சிந்திக்கிறார்கள். ஏற்கெனவே கஜேந்திரன் குமாரின் வீட்டை முற்றுகையை ஏற்படுத்தவும், தையிட்டிக்கு பெருமெடுப்பில் மக்களை திரட்டி வர முயற்சித்தும் பயனளிக்கவில்லை. ஊழையிட்டு விட்டு அடங்கி விட்டார்கள். இனி அப்படி முயற்சிக்கும்போது அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டும். பல ஊழல் மோசடிக்காரரே இதன் பின்னால் உள்ளனர். அவர்களில் ஒருவரை விகாரை பிரச்சனையில் கைது செய்து அவரது ஊழலை வெளிப்படுத்தி நடவடிக்கை எடுத்தால் போதும், மற்றவர்கள் தாங்களாகவே பொறியில் தலைவைக்க விரும்பாமல் விலகுவர்.
  34. எம் சமுகத்தில் படிப்பு எவ்வளவு முக்கியம் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. எங்கிருந்தாழும் அது மாறாது என்றே தோன்றுகிறது. வெயில் படத்திலும் இந்த தியேட்டர் சம்பந்தமான விடயம் விரிவாகக் காட்டப்படிருக்கும். நீங்கள் விவரிக்கும்போது எனக்கு அப்படக்காட்சிகள்தான் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன.
  35. கன்னட ஈவே ரா திராவிடப் பொய்யர்களுக்கு எப்படி தந்தை.. பெரியார் ஆனார் என்று ஈவே ராவுக்கு சீமான் சொம்பு தூக்கிய காலத்தில் இருந்தே இதே யாழில் பக்கம் பக்கமாக விவாதிச்சு முடிஞ்சுது. இப்ப சீமானுக்கு தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் தெளிவே போதும். இதுக்கு மேல் இந்தக் காலத்தின் இந்தச் செல்லாக் காசுகளை பற்றி விவாதித்து ஒரு பயனும் இல்லை. இதற்காகவே யாழில் முன்னர் மட்டுறுத்தினராக இருந் த இளைஞன்.. வலைஞன் நமக்கு அதிக தண்டனைப் புள்ளிகளை வழங்கினவர். அவரும் ஒரு ஈ வே ரா விசுவாசியாக தன்னைக் காட்டுக்கொண்டிருந்ததால். அது வேற கதை.
  36. வெளிநாட்டுக்காரர் அரசியல் செய்ய முடியாதென்றே வீசா சட்டத்தில் உள்ளது. அவர்களுக்கு தங்கத்தின் மீது தான் கண். அவர்கள் மட்டுமல்ல இங்கும் பலருக்கும் தங்கத்தை எண்ணி பத்தி எரியுது.
  37. மோகன் அண்ணா… பையனின் கருத்தே எனதும். குமாரசாமி அண்ணைக்கு விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டை தயவு செய்து தளர்த்தி விடவும். நன்றி குமாரசாமியை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு நானும் @மோகன் ஐ கேட்டுக் கொள்கிறேன்.
  38. ஆவணி27.2024 லிற்குப்பின்பாக பிறந்தநாள் வந்த உறவுகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களை மகிழ்வித்து நானும் மகிழவில்லையே என்ற ஆதங்கத்தில் அப்படி வாழ்த்தினேன். ஆனாலும் கள உறவுகள் பெரும் கில்லாடிகள் என்பதை மறந்துவிட்டேன். இருந்தும் என்பிறந்தநாளை இன்றும் ஞாபகம் வைத்திருக்கும் இனிய உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.🙏🤩
  39. பேரறிவாளன் ஒன்றும் தனது வீட்டு பிரச்சனைக்காக தண்டனை பெறவில்லை. ஈழத்தமிழருக்கு உதவி செய்ய விரும்பியதாலேயே தண்டனை பெற்றார். அவரது தமிழ் உணர்வை ஈழத்தமிழர்கள் பயன்படுத்தினர். உண்மையில், தனது இளமைக்காலம் முழுவதையும் ஈழத்தமிழருக்காக தொலைத்த பேரறிவாளனுக்கு தான் ஈழத்தமிழினம் நன்றிக்கடன் பட்டுள்ளது. உண்மையாக உணர்வுடன் எமக்கு உதவி செய்த உணர்வாளர்களை மறந்து எமது அவலத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சீமான் போன்ற கேடு கெட்ட அயோக்கிய அரசியல்வாதிகளை ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் தான் இந்த உலகிலேயே நன்றி கெட்டவர்கள்.
  40. அவள் முகத்தில் வழிந்தது. வாசித்த எனக்கோ ஆறாய் ஓடியது. ஏனென்றால் நானும் ஒருத்தியின் காதலன்.😌❤️
  41. திராவிடப் பண நாயகத்தின் முன் சீமான் என்ன சிவாஜி ரஜனி கமல் விஜய காந்த் எல்லாருமே கட்டுக்காசை இழந்திருக்கினம்.. அரசியல் கனவை இழந்திருக்கினம். அண்ணர் விஜய் இதனை உணர இன்னும் காலம் இருக்கு. ஆனால் கட்டுக்காசை இழந்தாலும் பணநாயகத்தையோ... அண்ணா ஆட்டிக்குட்டி ஈ வே ரா என்று புலம்பாமல்... தெளிவான தமிழ் தேசியக் கொள்கையோடு தனித்துப் பயணிக்கும் சீமான் சனநாயகத்தின் அடையாளம் எனலாம். அது சிறப்பு தானே.
  42. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? NZ ?? BAN ?? 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SA ?? ENG ?? AFG ?? 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், IND அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், SA அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் IND அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? IND 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AFG 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Shubman Gill 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Arshdeep Singh 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Kane Williamson 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? NZ 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Arshdeep Singh 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Hardik Pandya 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND
  43. அர்ச்சுனாவின் பிரச்சினைகளை கவனிக்க என்றே, தனி பொலிஸ் படை அமைக்க வேண்டும் போல் உள்ளது. 😂 அதற்கு முதல் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து… ஆள் “நோர்மல்” ஆன நிலையில் இருக்கின்றாரா உறுதிப் படுத்த வேண்டும். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.