Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    3054
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87988
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19122
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/19/25 in Posts

  1. ஒரு முட்டை ஆயிரம் டாலர் ------------------------------------------ இப்ப இங்கே பல கடைகளில் முட்டை இல்லை சில கடைகளில் இருக்கின்றது ஆனால் எண்ணி எண்ணித்தான் வாங்கலாம் பலத்த கட்டுப்பாடு தட்டுப்பாட்டால் விலையும் பல மடங்காகிவிட்டது கோழிகளுக்கு காய்ச்சல் வந்தது என்று சும்மா சுகமாக நின்றவைகளையும் அழித்துப் போட்டார்கள் இப்ப புதுதாகக் குஞ்சுகளும் வேண்டாம் என்று அங்கே குடும்பக் கட்டுப்பாடு திட்டமும் வந்துள்ளது இது என்ன கலிகாலம் அமெரிக்காவில் முட்டைப் பொரியல் கூடக் கிடையாதா...... ஊரில் வீட்டில் கோழிகள் இருந்தன அப்பா முதன் முதல் ஒரு கோழி வாங்கித் தந்தார் ஒரு விதமான மஞ்சள் கலரில் வெள்ளைப் புள்ளிகள் போட்ட கோழி அது அது வீட்டுக்கு வரும் போது அதன் வயது நாலு மாதங்கள் இருக்கும் ஒரு நாள் முழுக்க கிளிசரியா மரத்தடியில் கட்டி வைத்து விட்டு அடுத்த நாள் அவிழ்த்துவிட்டேன் அப்படியே வீட்டை சுற்றிச் சுற்றியே நின்றது அடுத்த அடுத்த மாதம் முட்டை போட ஆரம்பித்தது முதல் முட்டை போடு முன் பெரிய எடுப்புகள் எல்லாம் எடுத்தது ஒரு அதிகாலையிலேயே தலைமாட்டில் வந்து பதுங்கியது அது கேரிக்கொண்டு திரியும் போதே முட்டை போடப் போகின்றது என்று ஆச்சி சொன்னார் அதைப் பிடித்து கடகத்தால் கவிழ்த்து வைக்க முட்டை போட்டது சுற்றி இருந்த மூன்று வீட்டுக்கும் அது முட்டை போட்ட விசயம் தெரிந்தது அப்படி ஒரு விடாத கொக்கரிப்பு பன்னிரண்டு முட்டை போட்டு விட்டு அது அடை என்று ஒரு மூலையில் குணுகிக்கொண்டு படுத்துவிட்டது பின்னர் அயலூரில் முட்டை வாங்கி அடை வைத்து குஞ்சுகள் வந்து வந்து அதன் குடும்பம் பெருகியது பின்னர் முட்டை நாங்கள் கடையில் வாங்கவே இல்லை சரி இங்கும் கோழி வளர்ப்போம் என்று விசாரித்தேன் அக்கம்பக்கத்தவர்கள் சம்மதம் சொல்லவேண்டும் முதலில் பின்னர் ஒரு பெரிய கூடு வேண்டும் கோழிகளுக்கு தீனி வாங்க வேண்டும் கடையில் மருத்துவரும் வந்து போவார் அப்பப்ப அந்த செலவும் இருக்கின்றது கோழிக் குஞ்சுகளும் வாங்க வேண்டும் அதை மறந்துவிட்டேன் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் முதல் முட்டை கிடைக்கும் போது செலவு ஆயிரம் டாலர்கள் ஆகி விடும் என்று கணக்கு காட்டுகின்றது கலிகாலம் தான்!
  2. ஒரு காலத்தில் எமது முன்னோர்கள் வயல்வெளிகளின் அருகாமையில் கோவில் கட்டி அதற்காக‌,குளங்களை வெட்டினார்கள்,கேணிகளை உருவாக்கினார்கள்..மன்னர்கள் ஆட்சியில் அல்லது வேளான்மை சமுகம் உருவான காலத்தில் இது ஒர் சமுக கட்டமைப்பு ..சகல கிராமங்களிலும் உள்ள பழைய கோவில்களில் இந்த டெம்பிளெட்டை அவதானிக்கலாம்.. இதற்கு பணம் எங்கிருந்து வந்திருக்கும்? ஊர்மக்கள் அல்லது மன்னர்கள் கொடுத்திருப்பார்கள் அநேகமாக பொதுமக்கள் பொதுநோக்குடன் கொடுத்த பணமாக த்தான் இருக்க வேண்டும் ...அந்த பணம் மக்களின் நலன் கருதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை . எமது கண் முன்னே குளங்கள்,கேணிகள்(மருதடி கேணி..காக்கா சுயா),கிணறுகள் இன்றும் சாட்சியாக இருக்கின்றது... இன்று புலம் பெயர் நாடுகளிலிருந்து கிடைக்கு பணம் போன்று அன்றைய காலத்தில் நிச்சயம் பணம் கிடைத்திருக்காது.இருந்தும் உள்ளூர் மக்கள் சொந்த வருமானத்தில் இப்படியான செயல்களை செய்து உள்ளனர் யாழ் மாவட்டம் ஆறுகள்,கங்கைகள்,அருவிகள் நிறைந்த மாவட்டம் அல்ல.... விவசாயத்திற்கு மழை நீரை பெரிதும் நம்பிருந்தார்கள்.மழையும் வருடத்தில் ஒர் குறிப்பிட்ட காலத்தில் தான் பெய்யும்..மழையும் சில நாட்களில் அடித்து பெய்யும் அந்த நீர் வீணாக கடலுக்கு சென்று கலந்து விடும்.இந்த நீரை சேமித்து விவசாயம் செய்யத்தான் குளங்கள்,கேணிகள்,கிணறுகள் கட்டினார்கள். இவை யாவும் பொது நோக்குடன் பொது இடத்தில் பொதுமக்களினால் பொது நன்மைக்கு ...பொது மக்கள் சேர்த்த பணத்தில் ...என நான் நினைக்கிறேன் ...நிச்சயமாக மருதடியான் தனிமனிதனாக இவற்றை(கேணி கட்டுதல்,கிணறு வெட்டுதல்,குளம் அமைத்தல்) செய்திருக்கமுடியாது....அவர் ஓரு சக்தியாக செயல் பட்டிருக்கலாம்...(ஏன் வீணாக் மருதடியானை எங்கன்ட அலட்டலுக்குள்ள பிறகு மனுசன் என்னோட கோபித்து கொண்டால்) ஊர் மக்கள் பணம் கொடுத்து,அந்த பணத்தில் ஊர்மக்கள் பயன் அடையும் வகையில் நல்ல திட்டங்களை அமுல் படுத்தியுள்ளார்கள்.அதற்கு பொதுக்கட்டமைப்பு (கோவில் சபை அல்லது கிராம சபை) துணை புரிந்திருக்கின்றது.. குளம் ... மழை நீர் சேர்ந்து நிற்கும் .நீண்ட நாட்களின் நீரோட்டத்தின் விளைவாக‌ ஊரில் உள்ள மண்,கல்,சகதி மற்றும் கழிவுகள்(வாழைமரம்கள்,தடிகள்,மரங்கள்) யாவும் நீரோடு சென்று அடியில் படிந்து குளத்தின் ஆழத்தை குறைத்து விடும்..நீர் வற்றிய பின்பு, கழிவுகள்,மண் போன்றவற்றை அன்று வாழ்ந்த மக்கள் சிரமதான முறையில் துப்பரவு செய்தார்கள் ...தூர் வாருதல் என சொல்வார்கள் ...பொது நோக்குடன் (கிளீன் சிறிலங்கா 30 நாட்கள்.கிளீன் அப் அவுஸ்ரேலியா நாள் 30 வருடங்கள்)எங்கன்ட சன‌த்தின்ட கிளீன் அப் குளம் எப்பவோ தொடங்கிட்டுது ...(கிளீன் அப் செய்யும்பொழுது கள்,தேனீர்,வடை,மோதகம்..போன்றவற்றை ஊர்மக்கள் செய்து கொடுப்பார்கள் ஊர்மக்கள் கூடி சேர்த்த பணம்) கிளீன் அப் அவுஸ்ரேலியா செய்யும் பொழுதும் நாலு பேர் சேர்ந்து காசு போட்டு பியர் அடிக்கிறனாங்கள் ..,அதற்காக அவுஸ்ரேலியா அரசு எங்கள் மீது குற்றம் சாட்ட முடியாது , "அரசாங்க காசில பியர் குடிக்கிற எண்டு" இந்த குளங்கள் விவசாயத்துக்கு மட்டுமல்ல கால் நடைகளின் தாகத்தையும் தீர்க்க உதவியிருக்கு,இருக்கின்றது . கேணிகள் இவற்றில் அநேகமானவற்றுக்கு மூன்று பக்கமும் சுவர் கட்டியிருப்பார்கள் ஒரு பக்கம் திறந்த வாறு இருக்கும் படிகள் கட்டியிருக்கும் ,மழை நீர் ஒடிவந்தாலுமொரு பக்கத்தினால் மட்டுமே அடி தளத்துக்கு செல்ல முடியும் ஊர் கழிவுகள் குறைவாக அடித்தளத்திற்கு செல்லும் இதனால் நீண்ட நாட்களுக்கு தூர் வார வேண்டிய அவசியமில்லை ... இன்று கேணிகளை மூடிவிடுகிறார்கள் ,அல்லது தீர்த்தமாடுவதற்காக கேணிக்குள் சிறிய கட்டித்தை கட்டிவிடுகிறார்கள் ...இதை செய்வது ஊரில் உள்ள மேதாவிகள் .. கிணறு. முக்கியமாக தோட்ட கிணறுகள் அதிலும் யாழ் மாவட்ட கிணறுகள் மழை நீர் ஓடுவதற்கு ஏற்ற வகையில் ஒர் பாதை விட்டு கட்டியிருப்பார்கள் .தற்பொழுது இந்த கிணறுகள் முற்றாக மூடி கட்டப்பட்டிருக்கின்றது அதுபோக யாரும் கிணறு வெட்டுவதில்லை ,பணம் அதிகம் வேண்டும் வெட்டுவதற்கு. கேணிகளுக்கு பக்கத்தில் கிணறு வெட்டியிருப்பார்கள் ,முட்டாள்கள் தண்ணீர் கேணியில் இருக்கின்றது வீணாக கிணற்றையும் வெட்டி யிருக்கிறாங்கள் பழசுகள் என திட்டியும் இருக்கின்றேன் .ஆனால் அதன் முக்கியத்துவம் பின்பு தான் அறிந்து கொண்டேன்.கோயில்களுக்கு சற்று தொலைவில் இருக்கும் வீட்டு கிணற்று தண்ணீர் உவர் தன்மையுடன் இருக்கும் ஆனால் கோயில் கிணற்று தண்ணீர் நன்னீராக இருக்கும் .கேணிகளில் சேரும் மழைநீர் கிணற்றுக்கு உள்ளே மண்,சிறுகட்கள் ஊடாக வடிகட்டப்பட்டு ஊற்றாக உட்செல்வதனால் தான் என நினைக்கிறேன். மேலும் தோட்டங்கள் ,வயல்களுக்கு மத்தியில் கிணறுகள் வெட்டியிருப்பார்கள் அங்கும் நன்னீர் தான். குழாய் கிணறு பாவனைக்கு வந்துவிட்டது.அதிக இடம் தேவையில்லை .. மொத்தத்தில் மழை நீரை நிலத்தடியில் சேமித்து வைக்கும் சகல பொறிமுறைகளும் இல்லாமல் போகின்றது. அன்றைய ஊர்மக்கள்,மன்னர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) இருந்த அறிவு ,தற்பொழுது நூறு வீதம் கல்வியறிவு கொண்ட ஊர்மக்களுக்கும் இல்லை ,அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் இல்லை ,கோவில் நிர்வாக சபைக்கு போட்டி போட்டு கொண்டு வரும் தலைவர்கள்,உறுப்பினர்களுக்கும் இல்லை..... கோயில்கள்,பாடசாலைகள் எல்லாம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், தேவைகளை இப்பொழுது வாழும் மக்கள் மறந்துவிட்டனர் போல உள்ளது .
  3. முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, வில் யங், ரொம் லதம் ஆகியோரின் சதங்களுடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 320 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 60 ஓட்டங்களால் வெற்றியீட்டியது நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய 8 பேருக்கும் புள்ளிகள் இல்லை! முதலாவது போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஏராளன் 2 2 வீரப் பையன்26 2 3 சுவி 2 4 அல்வாயன் 2 5 தமிழ் சிறி 2 6 நிலாமதி 2 7 வசீ 2 8 செம்பாட்டான் 2 9 குமாரசாமி 2 10 நியாயம் 2 11 சுவைப்பிரியன் 2 12 எப்போதும் தமிழன் 2 13 புலவர் 2 14 கோஷான் சே 2 15 நீர்வேலியான் 2 16 கந்தப்பு 2 17 ஈழப்பிரியன் 0 18 ரசோதரன் 0 19 நுணாவிலான் 0 20 வாத்தியார் 0 21 நந்தன் 0 22 வாதவூரான் 0 23 பிரபா 0 24 கிருபன் 0 கருத்துக்கள மாற்றம் வர்ணங்களைக் கொண்டுவரவில்லை!
  4. எனது நண்பர் ஒருவர் கோழி வளர்த்து அடிச்சுச் சாப்பிட ஆசைப் பட்டு (பெரிய வளவுடன் வீடு ) பக்கத்துக்கு கிராமத்துக்குள் சென்று அஞ்சாறு கோழி வாங்கிவந்து நிலத்தோடு கூடு செய்து விட்டு வளர்த்து வந்தார் . ...... முதல் கோழி சமைக்கும்போது எங்களுக்கும் சாப்பிட சந்தர்ப்பம் கிடைத்தது . .......ஒரு மாதம் வரை நன்றாகத்தான் போச்சு . ...... அன்று சமைப்பதற்கு கோழி பிடிக்க போயிருக்கிறார் ....... உள்ளே ஒரு பாம்பு இருந்து அவரை வரவேற்றிருக்கு . ........ பின் நாங்கள் எல்லாரும் சென்று ஒருமாதிரி அவரை வெளியேற்றி விட்டம் ....... மிச்ச கோழிகளை அன்றே உரித்து குளிர்பெட்டியில் அடக்கம் செய்தாயிற்று . .......!
  5. நீங்கள் மேலே குறிப்பிட்ட எதையும் நான் மறுக்கப்போவதில்லை. இவை நடந்தவை தான். ஆனால் நீங்கள் சாட்டும் குற்றச்சாட்டு அனைவரிலும். உங்களுக்கு அந்த நாலு பேரைத்தெரிவதும் எனக்கு மிச்ச நாலாயிரம் பேரை எனக்கு தெரிந்திருப்பதும் தான் வித்தியாசம். தம் வாழ்வையே அர்ப்பணித்து இன்றும் விசா இல்லாமல் வீடில்லாமல் வேலை கிடைக்காமல் எம்மவராலையே வேலை தடுக்கப்பட்டு பிள்ளைகளுக்கு கூட உயர் கல்வி மறுக்கப்பட்ட (பெற்றோர் சிவப்புக்குறி) இருக்கும் நாடுகளில் கூட அடுத்த நகரங்களுக்கு செல்லமுடியாமல் பக்கத்து நாடுகளுக்கு கூட குடும்பத்துடன் செல்ல முடியாமல் கணவன் ஒரு நாட்டிலும் மனைவி பிள்ளைகள் இன்னொரு நாட்டிலும் வாழ்ந்தபடி...... இப்படி பல நூறு பேர் இன்றும். வேண்டும் என்றால் வாருங்கள். சந்திக்க செய்கிறேன். இப்படியானவர்களின் தொடர்பில் நான் இருக்க இங்கே வந்து நாலு பேரை வைத்து அவ்வளவு பைரையும் நாறடிக்கும் போது என்ன பேச வரும்? கிட்டத்தட்ட உங்கள் செயல் முரளிதரன் தவறு செய்தது கிழக்கு மாகாணமே ஊத்தவாளிகள் என்று எழுதுவதற்கு சமன்.
  6. பாரதிதாசன் தனது துன்பம் நேர்கையில் பாட்டில் இப்படி எழுதி இருப்பார்…. அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது - யாம் அறிகிலாத போது - தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ இயம்பிக் காட்ட மாட்டாயா? இது ஒரு பெண் குழந்தையை நோக்கி ஒரு வயதானவர் பாடும் பாட்டு. அறம் எது அறமில்லாதது எது? என தெரியாத மனநிலையில் இருக்கும் ஒரு வயதானவருக்கு, திருக்குறளை பாடிக்காட்டி அந்த பெண் பிள்ளை அறத்தை நினைவூட்டுவதாக இதை நான் விளங்கி கொள்வேன். சிலர் எழுதும் எழுத்துகள் அவர்களுக்கு பெண் பிள்ளைகள் இருக்க வாய்ப்பிலை என்றே நினைக்க வைக்கிறது (இந்த திரியிலும், ஏனையதொரு திரியிலும்). பராவாயில்லை - குறைந்த பட்சம் statutory rape என்றால் என்ன என்பதை கூகிள் பண்ணியாவது பாருங்கள். 👆 இங்கே சிவப்படித்திருக்க வேண்டியது இதற்கு மட்டுமே.
  7. அமெரிக்காவிற்கு ரஷ்யாவிடமிருந்தூ ஏதோ சில பொருட்கள் மிகவும் மலிவு விலையில் அல்லது இலவசமாக கிடைக்கப் போகின்றன.............. ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போகமாட்டார்.... இது எல்லா நாடுகளுக்கும் ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும். ஒரு நாடு, ஒரு இனம் அதன் சுயநிர்ணய உரிமையை இழப்பது கொடுமையான, அநியாயமான ஒரு நிகழ்வு. எங்களுக்கு நடந்தது, இன்று உக்ரேனுக்கு நடக்கின்றது, இதே பலசாலிகளால் நாளை இன்னும் பலருக்கும் இதே நிலைமை வரும்................. பாதிக்கப்பட்டவர்களாவது பாதிக்கப்படுகின்றவர்களுக்கு ஒரு ஆதரவுக் குரலையாவது பதிவு செய்யவேண்டும்.
  8. நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் இமான் ஏமாற்றிவிட்டார்.. பாடகி விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு V VasanthiUpdated: Wednesday, February 19, 2025, 17:01 [IST] ஒரு சில பாடல்கள் கேட்கும் போது நம்முடைய மனதிற்குள் இருக்கும் சந்தோஷங்கள், கவலைகள், பாசம் உட்பட எல்லா உணர்வுகளும் நம்மை மீறி வெளிப்படும் அதுபோல பாடல்களை பாடும் பாடகர்கள் மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் வைக்கம் விஜயலட்சுமியும் ஒருவர். இவர் தமிழில் வெளியான குக்கூ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "கோடை மழை போல" என்ற பாடல் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு கேட்பவர்களை ஆட வைக்கும் "சொப்பன சுந்தரி நான்தானே", "காக்...கா முட்டை... காக்கா முட்டை கண்ணால" என்ற பாடல்களை இவர் பாடி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. அதுபோல "மண்ணிலே ஈரம் உண்டு" என்ற பாடல் பலருடைய பெருந்தன்மையை பறைசாற்றும் இடமாக பாடியிருந்தார். அதற்கு பிறகு பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். வைக்கம் விஜயலட்சுமி பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பலருக்கும் முன்மாதிரியாக தன்னுடைய குரல் மூலம் தனித்து நிற்கிறார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் ஆனது ஆனால் மாப்பிள்ளை வீட்டினர் போட்ட கண்டிஷன் தனக்கு செட் ஆகவில்லை என்று திருமணத்திற்கு மறுத்துவிட்டார். பிறகு குடும்பத்தினரின் வற்புறுத்தலினால் 2018 ஆம் ஆண்டு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண பங்க்ஷனில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர். ஆனாலும் இவர்களுடைய திருமண வாழ்க்கை சில வருடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது தன்னுடைய கணவர் குறித்து பல குற்றச்சாட்டுகளை விஜயலட்சுமி கூறியிருந்தார் அது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு தொடர்ந்து சினிமாக்களில் பாட்டு பாடி கொண்டிருக்கிறார். அதுபோல விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கெஸ்ட் ஆகவும் கலந்து கொண்டு வருகிறார். இதன் நிலையில் பேட்டி ஒன்றில் அவர் பேசும் போது தன்னுடைய வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை குறித்து பேசி இருக்கிறார். அதில் தனக்கு இளையராஜா, ஏ ஆர் ரகுமான், வித்யாசாகர் கூடவும் பாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். அதோடு தன்னை பார்ப்பதற்காக ஜெயச்சந்திரன், மலையாள டைரக்டர் கமல் என பலர் வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதுபோல இமான் சார் தன்னை பார்க்க வருகிறேன் என்று சொன்னார் ஆனால் அவர் இப்போ வரைக்கும் என்னை பார்க்க வரவே இல்லை என்று ஏக்கமாகவும் பேசி இருக்கிறார். https://tamil.oneindia.com/television/singer-vaikom-vijayalakshmi-accuses-music-composer-iman-details-emerge-681381.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி ஓடியாந்திருப்பியளே 🤣
  9. அப்பிடி ஒருவரை விடமுடியாது. அது ஒரு பதினாறு தலை ராவணன். அது சேர்ந்து அந்த எட்டுக்கால் பூச்சிய நசிக்கிய தருணம் இது. போடுறா வெடிய. 😉
  10. என்ன பெரியப்பு (@கிருபன் ஜி) இந்த பக்கம்
  11. இந்திரா பந்து வீச, ஷியா சென்சுரி அடிக்க… தேர்ட்மானில் விபி சிங் தலையை சொறிந்து கொண்டு நிற்பார்… அதெல்லாம் கிரிகெட்டின் பொற்காலம் அண்ணா🤣
  12. போகிற போக்கை பார்த்தால் இன்றைக்கு பாபர் விசேட பிரியாணி இருக்கும் போல. பாபரும் துரத்தி அடிப்பதில் வல்லவர். இன்று பிடிகளை தவறவிட்ட பாகிஸ்தான் வீரர்கள், கிளென் பிலிப்சிடம் பாடம் படிக்க போகலாம். ரிஷ்வான் விலக்கி அடித்த அந்தப் பந்தை காற்றில் பறந்து பிடித்தாரே ஒரு பிடி. இந்தச் சுற்றுப்போட்டியின் சிறந்த பிடியாக அது அமையப் போகிறது.
  13. நீங்கள் தேவையற்று இந்த மாபியாக்களை புனிதர்களாக்காட்டமுனைகின்றீர்கள். இதில் மறைப்பதற்கு என்ன உள்ளது. 2009 மே மாதம் வரை, மக்கள் சேகவர்கள் போல் வேஷமிட்டு மக்களிடம் நிதி சேகரிப்பதற்காக மக்களிடம் நெருங்கிய தொடர்பில் இருந்து விட்டு, 2009 மே மாதத்தின் பின்னர் சடுதியாக தொலைபேசிகளை கூட நிறுத்தி விட்டு மக்களிடம் இருந்து விலகினார்கள். இந்தத்திருட்டுத்தனத்தை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். மக்கள் ஒப்பு கொண்ட தொகையை விட மிக அதிகமாக மக்களுக்கு கூட தெரியாமல் அவர்கள் நம்பிக் கொடுத்த சம்பள படிவங்களில் மோசடியாக மாற்றங்களை செய்து வங்கிகளில் கடனாக பெற்று மக்களை வருமானத்துக்கு அதிகமாக கடனாளியாக்கிவிட்டு எந்த குற்றவுணர்சசியும் இன்றி அனைத்து பணத்தையும் தாயகத்துக்கு அனுபகி விட்டோம் என்று பொய்யுரைத்த இவர்கள் புனிதர்களா? இவர்களில் யாரும் அனேமதயங்கள் அல்ல. மிக நீண்ட காலமாக தேசிய செயற்பாடாளர்களாக வலம் வந்தவர்களே. தலைவரால் நேரடியாக அனுப்பியவர் என்று சிலரை இறுதி யுத்த காலப்பகுதியில் அறிமுகப்படுத்தி கடன் பெற்று விட்டு பின்னர் எல்லாம் முடிந்த பின்னர் அந்த நபர கள் தலைமறைவாகி விட, தமக்கு ஒன்றும் தெரியாது பணம் முழுவதும் அவர்களிடம் தான் என்று நடித்த இவர்களை நீங்கள் ஏன் புனிதராக்க முனைகின்றீர்கள்? இவர்கள் எல்லோரும் கூட்டு களவாணிகள் தானே! போரட்டத்தின் முடிவை ஏற்கனவே 2009 ன் ஆரம்பத்திலேயே கணிப்பிட்டு அறிந்தும் அதை மறைத்து திட்டமிட்டு மக்களிடம் கொள்ளையில் ஈடுபட்ட இவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதில் எந்த பிரயோசனமும் இல்லை. நீங்கள் என்னை கோடரிகாம்பு என்று திட்டியதை போலவே இந்த மாபியாக்களும் நிதி சேகரிக்கும் போது தர மறுத்த, கேள்வி கேட்ட மக்களை கோடரிகாம்புகள், துரோகிகள் என்று அவர்களுக்கு முத்திரை குத்தியவர்களே. இது இவ்வாறனவர்களின் பழக்க தோசம். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அப்படி தானே இருப்பர். துவாரகாவை அறிமுகப்படுத்தி மீண்டும் பணவேட்டையை நடத்த திட்டமிட்டு அதற்கு ஆதரவான பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்கள் அனைவருமே முன்னாள் பிரபலமான தேசிய செயற்பாட்டாளர்களே. இன்றும் இப்படியான வேலைகளில் பாதாள உலக கும்பல்கள் போல் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்கள். இத்திரியில் பேசப்பட்ட பொஸ்கோ என்ற நபரை பற்றி எனக்கு தெரியது. ஆனால் அவர் நிரபராதி என்றால் நிச்சயம் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
  14. சிட்னியியிலும் முட்டை வலு தட்டுப்பாடு தான்..! அண்டைக்கு ஒரு நாள் சுப்பர் மார்க்கட்டில முட்டையைக் கண்டு வாங்கியாச்சு. விலை போட்டிருக்கவில்லை. வீட்டை வந்து மனிசி விலையப் பார்த்தா வழக்கத்தை விடவும் இரண்டு டொலர் கூட. விசாரிச்சுப் பாத்தால் இந்தியாக் காறர் தான் இப்ப மனேச்சராம். எங்க போனாலும் எங்களைக் கலைக்கிறாங்கள் இவனுகள்…! எங்கட கோழிகளுக்கு பேர்ட் புளூவாம்🥱
  15. சீமானுக்கு எதிராக திமுக காழ்ப்புணர்வுடன் அவதூறைகளை பேசிக்கொண்டிருக்க இன்றைய திருமாவின் பேட்டி கருத்தியல் ரீதியான பேச்சாக மிகவும் கவனிக்ககூடியதாக நியாயமான கேள்விகளுடன் அமைந்தது.. பார்க்கலாம் நாளை சீமானின் பதிலை.. திருமா பேசியது 👇 சீமான் ரொம்ப குதர்க்கவாதம் பேசுறாரு.. ஒரு கருத்தியல் விவாதம்னா நம்ம வரவேற்கலாம்.. பெரியாரை வந்து விமர்சிக்க கூடாதுன்னு எல்லாம் கிடையாது.. பெரியாரே சொல்லி இருக்கிறாரு என் கருத்தை ஒருத்தன் வந்து மறுத்து பேசினான்னா அது முற்போக்கானதா இருந்தா அதை நான் வரவேற்கிறேன்னு சொல்லி இருக்கிறாரு..என்னுடைய கருத்தை நான் சொன்னேங்குறதுக்காக யாரும் ஏத்துக்க கூடாது அதுல எது சரின்னா ஏத்துக்கோ அப்படிங்கிறதுதான்… அது பெரியாரே ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் அது.. அதனால பெரியார் வந்து விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் கிடையாது.. அம்பேத்கரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் கிடையாது.. ஆனா சீமான் பேச்சு பெரியாரை கொச்சைப்படுத்துவதாகவும் அவதூறுபரப்புவதாகவும் தான் இருக்கு.. அவர் வந்து கருத்தியல் ரீதியா கடவுள் இல்லைன்னு ஏன் சொன்னாரு கடவுள் இருக்கிறார் அப்படின்னு பேசுங்க.. பார்ப்பன எதிர்ப்பு ஏன் வைத்தார்.. பார்ப்பன எதிர்ப்பு தப்பு.. அவங்க சிறுபான்மையினர்.. சிறுபான்மை துவேஷம் கூடாது.. பார்ப்பனர்கள் என்ன ஆதிக்கம் பண்ணிட்டாங்க இவர் வந்து பார்ப்பனர்களை எதிர்க்கிறார்.. இது ஒரு சமூகத்துக்கு எதிரான வெறுப்பு அரசியல் தானே.. அப்ப பெரியார் பேசுறது ஒரு துவேஷ அரசியல்.. அதனால நான் எதிர்க்கிறேன் அப்படின்னு பேசுங்க நம்ம விவாதிப்போம்.. ஆனா பெரியார் பேசின அரசியல்தான் தமிழ் தேசியத்திற்கு எதிராய் இருக்கு அப்படின்னு சொல்றதும் பிறமொழி வெறுப்பை வந்து விதைப்பதும் எல்லாம் டோட்டலா அவர் வந்து தமிழ் தேசியம் பேசல.. அவர் வந்து ஒரு வெறுப்பு அரசியலை பார்ப்பன அரசியலுக்கு அல்லது இந்த சனாதன அரசியலுக்கு துணை போகக்கூடிய ஒரு அஜெண்டாதான் அவர்கிட்ட இருக்குது.. அவர் பேசுறது தமிழ் தேசியமே கிடையாது..தேசியம்ங்கிற சொல்லே முதல்ல தமிழ் சொல் கிடையாது.. அப்படி பார்த்தா தூய தமிழ் வரணும்னா தேசியம்ங்கிற சொல்லே தமிழ் சொல் கிடையாது.. தமிழ் தேசம் அப்படிங்கறது தமிழரசன் பேசின அரசியல்.. அது தமிழ் தேசியம்.. எங்களுக்கு தனி தமிழ்நாடு வேணும்.. நாங்க இந்திய பேராதிக்கத்தின் கீழ இருக்க மாட்டோம்.. எங்களுக்கு இந்திய தேசியம் வேண்டாம்.. நாங்க வந்து தனி தமிழ்நாடு கோறுகிறோம் என்பதுதான் தமிழ்நாடு தமிழரசன் பேசின அரசியல்.. தனி தமிழ்நாடு கோரிக்கை தான் தமிழ் தேசியமா இருக்க முடியும்.. இப்ப நாம பேசுறது வந்து மொழி உரிமையும் இன உரிமையும் உள்ளடங்கிய இந்திய தேசத்திற்குள் கட்டுப்பட்ட ஒரு அரசியல்… இப்ப இவர் வந்து தேர்தல்ல நிக்கிறார்…அப்படின்னா இந்த எலக்டோரல் சிஸ்டத்தை ஏத்துக்கிறார்.. அப்படின்னா இந்த கான்ஸ்டிடியூஷன் ஏத்துக்கிறார்.. அப்படின்னா இந்த இந்தியாவையும் ஏத்துக்கிறாரு.. அப்ப இந்தியாவை ஏத்துக்கிட்டாருன்னா இந்திய தேசியத்தை ஏத்துக்கிட்டாருன்னா தமிழ் தேசியம் எங்க இருக்கும்..? தமிழ்தேசியம்ங்கிறது சிங்கள பேரினவாதத்தை மட்டுமே எதிர்க்கல.. எங்களுக்கு வெறும் எங்க தமிழ் மொழியையும் ஆட்சி மொழியா வச்சு அவங்க கோரிக்கை வைக்கல.. எங்களையும் ஒரு தேசிய இனமா அங்கீகரிச்சு எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுங்கன்னு அவரு கேக்கல..முதலமைச்சர் பதவி கொடுங்கன்னு கேக்கல.. முதலமைச்சர் தரேன்னு சொல்லவே வேணான்ட்டாருல.. அவரு அதை வடக்கு கிழக்கு மாகாணத்தை ஒரே ப்ராவின்ஸா மாற்றி அந்த ப்ராவின்ஸ்க்கு அவரை முதலமைச்சர் ஆக்குறோம்னு தானே சொன்னாங்க.. அதுதானே 13 அமெண்ட்மென்ட்.. அதை அவர் ஏத்துக்கல.. அப்ப அவருடைய கோரிக்கை என்ன..? நாங்க வேற நீங்க வேற.. எங்களுக்கு தனியா எங்க தாயகத்தை பிரிச்சு கொடுங்க.. அதான் தாயகம் தேசியம் தன்னுரிமைங்கிறது.. தன்னாட்சிங்கிறது.. தாயகம் தேசியம் தன்னாட்சி.. எங்கள் நிலப்பரப்பை எங்கள் தாயகமா ஏத்துக்குங்க.. எங்களுடைய அரசியல் எங்களை வந்து ஒரு தேசியமாகவும் தேசிய இனமாகவும் ஏத்துக்குங்க.. அதனால எங்களை நாங்களே ஆண்டுகொள்வதற்கான இறையாண்மையை எங்கள்ட்ட ஒப்படைங்க.. இதுதான் வந்து தமிழ் அரசியல்.. தமிழ் தேசிய அரசியல்.. இப்ப இவங்க அதை வைக்கிறாங்களா..? தாயகம் தேசியம் தன்னாட்சிங்கிறதை வைக்கிறாங்களா..? வெறும் மொழி உணர்வையும் இன உணர்வையும் பேசிட்டு இருக்காங்க.. தெலுங்கு எதிர்ப்பை முன் வைக்கிறாங்க தெலுங்கர்களால் தான் இங்க எல்லாமே போச்சுன்றாங்க.. அந்த வரிசையில பார்க்கும்போது பெரியார் வந்து ஒரு கன்னடர்.. அவரு அந்த கட்சியில இருந்தவங்க எல்லாம் தெலுங்கர்கள்.. அதனால இங்க தெலுங்கர்களால்தான் நாங்க அழிஞ்சு போயிட்டோம் அப்படிங்கிறார்கள்.. இது வந்து கருத்தியல் ரீதியாவே வரலாற்று தவறு.. வரலாற்றுப் பிழை இந்திய தேசியம் தான் தமிழ் தேசியத்திற்கு எதிரா இருக்க முடியும்.. தெலுங்கு தேசியம் தமிழ் தேசியத்திற்கு எதிரா இருக்க முடியாது.. டெல்லியில் இருக்கிறது ஹிந்தி பேசக்கூடிய ஆட்சியாளர்கள் தான் இருக்குறாங்க.. தெலுங்கு பேசக்கூடிய ஆட்சியாளர்கள் அங்க இல்லை.. எந்த வகையில வந்து தமிழ் தேசியத்திற்கு வந்து பெரியார் முட்டுக்கட்டையா இருந்துட்டாரு..? தமிழ்ங்கிற உணர்வையும் தமிழன் என்கிற உணர்வையும் அவர் சைமல்டேனியஸா சமகாலத்துல முன் வச்சிருக்கிறாரு.. தமிழை ஏன் பழிச்சாருன்னா தமிழ்ல வந்து அறிவார்ந்த செய்திகள் இல்லை.. எல்லாம் புராண குப்பைகள் இருக்குன்றதுனால ஆத்திரப்பட்டாரு..காட்டுமிராண்டி காலத்துல இருந்த அதே மொழியாதான் இது வளர்ச்சி இன்னும் வளர்ச்சி அடையல.. ஒரு நவீனமா அப்டேட் ஆகல சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இதுக்குள்ள வரல.. அதுக்கான டெர்மினாலஜி அதுக்கான சொல்லகராதிகள் இதுல இல்ல அப்படிங்கிற ஆத்திரத்துல அவர் சொன்னாரு.. ஒரு விரக்தியின் விளிம்புல இருந்து அதை சொன்னாரே தவிர கன்னட பற்று வைத்துக்கொண்டு தமிழை வந்து அவர் பழிக்கல.. சீமான் என்ன தோற்றத்தை உருவாக்குறாருன்னா அவர் கன்னடரா இருந்ததுனாலதான் தமிழர்களை கொச்சைப்படுத்தி இருக்கிறாருன்றாரு:: தமிழ் அறிஞர்கள் பங்களிப்புங்கிறது வேற..ஒரு அரசியல் களத்தில் நின்னு ஒருத்தர்செய்யக்கூடிய பங்களிப்புங்கிறது வேற.. அண்ணா பேசுனது எல்லாரும் தமிழறிஞர்கள் பேசி இருக்காங்க.. ஆனா அண்ணா ஏன் நம்ம ஒரு ஐக்கனா பார்க்கிறோம்னா அவர் அரசியல் களத்தில் நின்னு பேசினார்.. அதே மாதிரி அம்பேத்கர் பேசின அரசியலை அதுக்கு முன்னாடி எவ்வளவு பேர் பேசி இருக்காங்க.. ஆனா அம்பேத்கர் அரசியல் களத்தில் நின்று செஞ்சதுனால நம்ம வந்து தூக்கி பிடிக்கிறோம்.. அரசியல் களத்தில் நின்னு செய்யறவங்களுடைய பங்களிப்பையை நம்ம இலக்கிய தளத்தில் நின்னவங்கள கூட வந்து ஒப்பிடக்கூடாது.. மாபோசி காலத்துல பேசின அரசியல் வந்து அவங்களும் அன்னைக்கு வந்து திராவிட வெறுப்புங்கிறதை முன்னிறுத்தி தான் பேசுனாங்களே தவிர தனித்தமிழ்நாடு கோரிக்கை யாரும் வைக்கலையே.. மாபோசி தனி தமிழ்நாடு கோரிக்கை வச்சாரா அல்லது வேற யாராவது தனி தமிழ்நாடு கோரிக்கை வைக்கிறாங்களா இப்ப இவங்களே தனித்தமிழ்நாடு கோரிக்கை வைக்கிறாங்களா..? வைக்க முடியாது இல்லையா..? அப்ப முடியாதுன்னா நீ பேசுறது தமிழ் தேசியம் கிடையாது.. அது மொழி உரிமை.. இன உரிமை.. அவ்வளவுதான் நீங்க கான்ஸ்டிடியூஷன் ஏத்துக்கிட்டு எலக்சன்ல நிக்கிறீங்கன்னு சொன்னா நீங்க பேசுறது போலி.. அது தமிழ் தேசியமா இருக்க முடியாது.. நீங்க தமிழ் தேசியம் பேசுறதுனா இந்த கான்ஸ்டிடியூஷன் நான் ஏத்துக்கல இந்த எலக்சன்ல நான் நிக்க மாட்டேன் எங்க தமிழ்நாடு தனி நாடு.. எங்களை இந்த இந்தியாவுக்குள்ள வச்சிருக்காதீங்க நாங்க தனி தமிழ்நாடு வென்றெடுப்போம்னு சொல்லுங்க.. யாரும் சொல்ல முடியாது.. அப்படி வெளிப்படையா சொல்ல முடியாது அப்ப எதுக்காக நீங்க பெரியாரை கொச்சைப்படுத்துறீங்க..? பெரியார் எப்படி தமிழ் தேசத்துக்கு முட்டுக்கட்டையா இருக்க முடியும்..? பெரியாருடைய அரசியல் முழுக்க முழுக்க பார்ப்பனிய எதிர்ப்பு,பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு.. அதனாலதான் திராவிடம் என்கிற சொல்லாடலே வருது.. திராவிடத்தை பெரியார் கண்டுபிடிக்கல திராவிடம் என்கிற சொல் வந்து பண்டிதர் அயோத்தியதாசரால தான் இங்க முழக்கத்துக்கே வருது..அவர்தான் திராவிடம் என்கிற சொல்லை முதல்ல கையாளுறாரு அதுக்கு முன்னாடி எத்தனையோ பேர் பயன்படுத்தி இருக்கலாம் ஆனா ஆரியத்திற்கு எதிரான ஒரு சொல்லாடலா திராவிடத்தை கையாண்டவர் பண்டிதர் அயோத்தியதாசர்.. அப்படி துணிச்சல் இருந்தா நீங்க பண்டிதர் அயோத்திதாசர் விமர்சனம் பண்ணுங்க.. திராவிடத்தை அவர்தான் முதல்ல அறிமுகப்படுத்தினார்.. ஆதி திராவிடம் என்கிற சொல்லை இவர் இரட்டமலை சீனிவாசன் அறிமுகப்படுத்தினார்.. ரெவரன் ஜான் ரத்தினம் திராவிடர் கழகம் என்கிற பெயரிலேயே ஒரு அமைப்பு உருவாக்கினார் 1880களில் அல்லது 82, 83… அவர் இந்த அமைப்பை உருவாக்கும் போது பெரியாருக்கு மூணு வயசு நாலு வயசு.. திராவிடர் கழகம் என்கிற பெயரிலேயே ஒரு அமைப்பு உருவாக்கினார் அப்ப அவங்க எல்லாம் வந்து தமிழ் தேசியத்துக்கு எதிராக இருந்தாங்களா..? அன்னைக்கு மதராஸ் மாகாணத்துல எல்லா மொழியும் பேசக்கூடியவங்களா இருந்தாங்க அந்த காலத்துல நாம பிறந்திருந்தாலும் அப்படித்தான் இயக்கத்தை உருவாக்கி இருப்போம்.. இன்னைக்கு திராவிடர் என்கிற சொல்லு தேவையில்லை தமிழன்னு சொன்னா போதும் தமிழர் தேசியத்தை பேசினா போதும்னா அது ரைட்.. நமக்கு திராவிடம் என்கிற சொல் தேவையில்லைன்னா அத சொல்லலாம்.. ஆனா அதுதான் தமிழ் தேசிய தேசியத்தையே வந்து முட்டுக்கட்டையா இருந்துச்சு.. பெரியாரால தான் அங்க தமிழர்களே எழுச்சி பெறாமல் போனாங்க.. பெரியாரை ஒழிச்சாதான் தமிழ் தேசியத்தை கொண்டு வர முடியும்ங்கிறது தவறு.. மேலும் அவர் பேசியது 👇
  16. 🤣................. இணைத்தலைமை கேட்பதில் ஓபிஎஸ் போல இருந்தாலும், ஜெயக்குமார் போல நல்ல கலகலப்பாகவும் இருக்கின்றார்......
  17. இந்தியிலே என்ன இருக்கிறது? | அண்ணா உரை அறிஞர் அண்ணா அவரது புலமையின் காரணமாக அறிஞர் என்று அழைக்கப்பட்டவர். அவர் சிறந்த பேச்சாளர். அவரது காலத்தில் தமிழகத்தின் சிறந்த பேச்சாளர் அவர்தான். கணீரென்ற குரலில் கேட்பவரை கட்டுப்படுத்திவிடும் குரல் அவரது குரல். இந்த உரையில் அவர் இந்தி மொழியின் அவசியம் என்ன என்பதைக்கேள்விக்குள்ளாக்குகின்றார். அதை மக்களுக்கு விளங்கப்படுத்த அவர் ஆற்றிய உரை ஒவ்வோர் பேச்சாளரும் கேட்க வேண்டிய உரை. எவ்விதம் ஓர் உரையினைத் தெளிவாக, நிதானமாக, சுவையாக, அறிவு பூர்வமாக, தர்க்கபூர்வமாக உரையாற்றுகின்றார் என்பதைக் கவனியுங்கள். எவ்விதம் தன்னுரையால் அவையோரைக் கட்டிப்போட்டு விடுகின்றார் என்பதையும் அவதானியுங்கள். இவ்வுரையில் அவர் தமிழ் மொழி, தாய் மொழியின் அவசியம், இணைப்பு மொழி போன்ற பல விடயங்களைப்பற்றி விபரிக்கின்றார். இணைப்பு மொழியாக இந்திக்குப் பதிலாக ஏன் ஆங்கிலம் இருக்க வேண்டுமென்று தெளிவாக, தர்க்கபூர்வமாகத் தெளிவு படுத்துகின்றார். இன்றுள்ள தலைமுறை யு டியூப்பின் வம்பளப்புகளில் நேரம் செலுத்துவதை விட இது போன்ற அறிஞர்களின் உரைகளைக் கேட்க வேண்டும். அண்ணாவுக்குப் பிறகு இவ்விதமானதோர் ஆளுமையைத் தமிழ் நாடு காணவில்லை. அதனால்தான் அன்று அண்ணாவின் மறைவின்போது தமிழகமே திரண்டு வந்தது. அது ஒரு உலக சாதனை என்று கின்னஸ் பதிவு செய்திருக்கின்றது.
  18. நீங்கள் சொல்லுறதும் சரி. ✅ நான் மேலே… பகிடிக்குத்தான் எழுதினேன், சீரியசாக எடுக்காதீர்கள். 🙂
  19. பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (20 பெப்) ஒரு போட்டி நடைபெறவுள்து. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND இப்போட்டியில் அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! இப்போட்டியில் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா அல்லது முட்டைகளா கிடைக்கும்?
  20. ப‌ழைய‌ போட்டி புள்ளி ப‌திவுக‌ளுக்கும் இதுக்கும் நிறைய‌ வித்தியாச‌ம் தெரியுது பெரிய‌ப்பு.........................
  21. ஆங்கிலத்தில் leading questions என்பார்கள். எந்த பதில் சொன்னாலும் தர்மசங்கடத்தில்தான் முடியும் படி கேட்கப்படும் கேள்விகள் இவை. இந்திய பிரதமரை, அமெரிக்க அரசியலில் கட்சிசார்ப்பு நிலை எடுக்கும் வண்ணம் பதில் சொல்ல நிர்பந்தித்த ஒரு leading question கேள்வியை பதில் சொல்லாமல் மோடி தவிர்க்க, அதை புரிந்த டிரம்ப் தானே பதில் கூறினார். இதற்கு மோடி மீது ஒரு விமர்சனத்தை வைக்கலாம். “இந்திய பிரதமராக, அமெரிக்க உள்நாட்டு அரசியலில் நான் கருத்து சொல்வதை, டிரெம்போ, பைடனோ, சாதாரண அமெரிக்கரோ விரும்பமாட்டார்கள், எனவே கேள்வியை தவிர்கிறேன்” என ஒரு இராஜதந்திர பதிலை கூறி இருக்கலாம். நேரு அப்படித்தான் தன்னிச்சையாக சிந்தித்து நழுவி இருப்பார். நம்மாளுக்கு எல்லாம் சொல்லி கொடுத்து செய்துதானே பழக்கம். அதான் பேந்த பேந்த முழிச்சார்🤣
  22. இப்போது நிற்கின்ற இருவரும் அருமையாக ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். வான வேடிக்கைகளுக்கு தயாராகுங்கள். கிரிக்கெட்டில் ஒரு கையளவு சொல்வார்கள். 35வது பந்துப் பரிமாற்றத்தில், ஒரு உறுதியான இணைப்பாட்டம் ஒன்றுடன், அரைவாசி ஓட்டங்களுக்கு மேல் குவித்துவிட்டால், வெல்வதற்கான சாத்தியம் மிக அதிகம். அது இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. பாகிஸ்தானுக்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கின்றது.
  23. எங்களை மாதிரி திருடர் சார்பில் நன்றி
  24. 👉 https://www.facebook.com/watch/?v=1137664734195084👈 (அமெரிக்காவில் மோடி, டிரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பு.) உள்நாட்டில் "ஹிந்தி படிங்கோ, ஹிந்தி படிங்கோ"னு சொல்ல வேண்டியது. வெளிநாட்டுக்கு போய் என்ன கேட்கிறாங்கனே தெரியாம, பதிலும் தெரியாம, கேள்வியும் புரியாம translators வச்சும் பயன் இல்லாம அப்பாவியா பேந்த பேந்த முழிச்சிட்டு இந்தியா வந்து நேருவையும், காந்தியையும், அம்பேத்கரையும் குறை சொல்ல வேண்டியது. காந்தி, நேரு, அம்பேத்கர் எல்லாம் ஹிந்தியை மட்டும் வைத்துக் கொண்டு ஆங்கிலேயனை வெல்லவில்லை. அந்த காலத்திலேயே கப்பலில் வெளிநாட்டுக்கு சென்று, அன்றே படித்து பட்டம் பெற்று வட்ட மேஜை மாநாடுகளை நடத்தி வென்ற தலைவர்கள். சீனா அதிபரும் translators வைத்து இருப்பார். அவர் கெமிகல் engineer. அவர் doctor of law படித்தவரும் கூட. மொத்த Chinese cabinet ல் 75% PhD பட்டமோ, Techinical Masters முடித்தவர்கள். கெத்தா உட்காந்து அவிங்க சீன மொழியில் பேசினால் English ல் translation செய்த கதையும் உண்டு. நம்ம ஆளிடம் கேட்ட ஒரு கேள்விக்கு, இந்த கேள்விக்கு நானே பதில் சொல்கிறேன் என்கிறார் Trump. நம்ம கிட்ட இருக்கும் cabinet அப்படியா. கோமியம் விக்கிற specialist, மாட்டு hospital கட்டும் சாமியார்கள், குறி சொல்லும் ஜோசியர்கள், மயில் தனது கண்ணீர் மூலம் இனப் பெருக்கம் செய்கிறது என்கிற பிரபலம், நம் முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை என்ற ஒரு uneducated bunch of people. படித்தவர்கள் பிரதமராக வருவது நம் நாட்டுக்கு மட்டுமல்ல அயல் நாட்டு கொள்கை- foreign policy மற்றும் trade negotiations-ல் வெல்ல வாய்ப்புக்களை உருவாக்கித் தரும். International arena-வில் கெத்தா இருக்கும். இதுல ஹிந்தியை வேற தூக்கிட்டு வந்து இந்தி படி , இந்தி படினு உருட்ட வேண்டியது. 56"சீ இன்னும் கூட பேட்டி கொடுக்காம இருக்க ஒரே காரணம் பதில் சொல்லத் தெரியாது என்கிறது மட்டுமல்லாமல், அவருக்கு கேள்விகளே புரியாது என்பதால் தான். இந்த ஒரே காரணத்தினால் தான் அக்சய் குமார் போன்றோருக்கு scripted பேட்டி கொடுக்கிறது, அதாவது கேள்வியும் நானே...அதற்கு பதிலும் நானே, இந்த கேள்விகளைத் தான் நீ கேட்க வேண்டும்! மும்மொழிக் கொள்கையின் மூலம் ஹிந்தி திணிப்பு தேவை இல்லாதது என்று நிரூபணம் ஆன தருணம், மோடியின் தற்போதைய அமெரிக்க பயணம். தமிழ், ஆங்கிலம் இரண்டே போதும் உலகையே வெல்லலாம். தமிழ்நாட்டின் பாதை தான் இந்தியாவுக்கு தேவை. Regional Language + English. #மும்மொழிக்கொள்கைதோல்வி #தமிழ் #தமிழ்நாடு N Deva 😂 🤣
  25. உங்களின் கார் கதை நன்றாக உள்ளது ....... என்னிடமும் ஒரு 1986 ம் ஆண்டு கார் உள்ளது ......அதைப்பற்றியும் இங்கு எழுதலாம் என்று இருக்கின்றேன் ....... அதிலும் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன . ......... பார்க்கலாம் .........! 😁
  26. தனி நாட்டுக்குள்தான் இனவழி தேசியம் அமைய வேண்டும் என்பதல்ல. ஆனால் இறுதி கோரிக்கையாக தனிநாடு இருக்க வேண்டும். உதாரணம் Scottish National Party யும் அவர்கள் யூகேயில் இருந்த படி முன்னெடுக்கும் ஸ்காட்லாந்து தேசியமும். அவர்கள் தேர்தலில் பங்கெடுப்பார்கள், ஸ்கொட்லாந்தில் ஆட்சியும் அமைப்பார்கள். ஆனால் அதே உத்வேகத்தோடு தனிநாட்ட கோருவார்கள். சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வைப்பார்கள். இதை இந்தியாவில் சீமான் அல்ல, யார் செய்தாலும் டின்னு கட்டி விடுவார்கள். தனி நாடு கோராத தேசியம் பொம்பிளை இல்லாத கல்யாணம் போன்றது. பிகு பிரபாகரன், தமிழரசன், முத்துகுமார் மட்டுமே உண்மையான தமிழ் தேசியவாதிகள்.
  27. நான் த‌வ‌றாக‌ புரிந்து விட்டேன் க‌ந்த‌ப்பு அண்ணா ந‌ன்றி👍......................
  28. அமெரிக்காவும், ஐரோப்பாவும்….. உக்ரைனுக்கு ஆயுதத்தையும், பணத்தையும் கொடுத்து ரஷ்யாவுடன் தொடர்ந்து சண்டை பிடி என்று… கொம்பு சீவி விட்டு விட்டு, இப்ப ஒரேயடியடியாக உக்ரைனை மாட்டி விடுகின்றார்கள். சொந்தப் பலத்தை நம்பாமல், மற்றவனின் ஏவல் பேச்சைக் கேட்டு… போரில் குதித்த உக்ரைன் தனது நாட்டை… கற்குவியலாக மாற்றியதும் அல்லாமல், நாட்டின் பெரும் பகுதியை ரஷ்யாவிடம் இழந்து நடுத்தெருவில் நிற்கின்றது. செலன்ஸ்கியின் கோமாளித்தனத்துக்கு கிடைத்த விலை இதுதான்.
  29. புத்தன், எமது இளம் வயதுகளில் தூர் வாருதல் போன்ற வேலைகளில் ஈடுபட்ட அனுபவம் உண்டு. மு. தளையசிங்கம் அவர்களது சர்வோதய இயக்கம் இவற்றை ஒழுங்கு செய்திருந்தது. இரண்டு பெரிய குளங்களை இணைக்கும் திட்டம் கூட ஆயத்த நிலையில் இருந்தது. இப்போது பார்க்கும் போது எல்லாமே வரண்டு போய்க் கிடப்பது மிகவும் கவலையாக உள்ளது. அங்கு எவருக்கும் எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. மிகக் குறுகிய காலத்திலேயே கூர்ப்படைந்து விட்டார்கள் போல உள்ளது…!
  30. இம்முறை நான்தான் கடைசியாக வருவேன் என நினைக்கிறேன். அரை இறுதி போட்டிக்கு பாகிஸ்தானா அல்லது நியூசிலாந்தா, அவுஸ்திரேலியாவா அல்லது இங்கிலாந்தா தெரிவு செய்வது என்று நல்லாய் குழம்பிப் போயிட்டேன். பாகிஸ்தான் மண்ணில் போட்டி நடைபெறுவதால் பாகிஸ்தானுக்கு சாதகம். ஆனால் அண்மையில் நடந்த முக்கோணப்போட்டியில் நியூசிலாந்து பாகிஸ்தானை இருமுறை தோற்கடித்து விட்டது. நான் சரியான முடிவை எடுத்தேனா? முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. வெல்லுமா வெல்லாதா என்பது கேள்விக்குறி? பந்து வீச்சாளர்கள் பற்றிய கேள்வி ஒன்றுக்கு Nortje இனை நினைத்துக் கொண்டு Rabada வின் பெயரை எழுதி விட்டேன். Nortje இம்முறை காயம் காரணமாக விளையாடவில்லை.
  31. பையன் சார், உங்களை இங்கு எல்லோரும் நன்கு அறிவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத, எந்த வித கணக்குகளும் போடாமல், அப்படியே நினைப்பதைச் சொல்லும், கள்ளம் கபடமற்ற ஒரு மனிதன் நீங்கள். என்னூரில் 'அவன் ஒரு அப்பிராணி......' என்று இப்படியானவர்களை சொல்லுவார்கள். ஒருவரை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் நல்ல நட்பின் அடிப்படையே. நீங்கள் நீங்களாகவே இருங்கள்.............. மற்றவர்களும் அப்படியே அவர்களாகவே இருந்து கொள்ளட்டும். மிகவும் முயன்று தமிழில் நீண்ட பந்திகள் எழுதுகின்றீர்கள்.......👍. சில சொற்களை தவிர்க்க முடிந்தால் தவிர்க்க முயலுங்கள்.....🙏. சிவப்பு புள்ளிகள் பற்றிக் கவலைப்பட ஒன்றுமேயில்லை, பையன் சார்............... ஒன்றை விரும்புவதை விட, வெறுப்பதற்கே மனிதனுக்கு அதிக வலு தேவைப்படுகின்றது. ஒரு மனிதன் வெறுக்கும் விடயங்களே அந்த மனிதனை அறியாமல் அந்த மனிதனை ஆட்கொள்கின்றது. வெறுப்பதனால் மனிதன் தன்னையே அழிக்கின்றான். 'விருப்பம்' அல்லது 'விருப்பம் இல்லை' என்று எதையும் சாதாரணமாக கடந்து போவது நல்ல ஒரு நிலை........ இல்லாவிட்டால் மற்றவர்கள் அவர்களின் செய்கைகளாலும், சொற்களாலும் எங்களை கட்டுப்படுத்துவது போலாகி விடும்.....🤝.
  32. வீரப்பையன் தொடந்து எழுதுங்கள் எந்த ஒரு விளையாட்டுத் திரி என்றாலும் பம்பலாக இருந்தால்தான் நல்லது........ ❤️ கோஷான் நீங்களும் இணைந்திருங்கள்🙏 நாளைக்கு பாக்கிஸ்தான் தங்களின் முதல் விளையாட்டு என்றபடியால் கொஞ்சம் உசாராக இருப்பினம்
  33. உங்களிடம் இந்த முரண்பாட்டை அடிக்கடி காண்கிறேன், எனவே மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. ஒரு பிழையைச் சுட்டிக் காட்டுவது எப்படி அழிவுக்கும், ஒற்றுமையின்மைக்கும் வழி வகுக்கும் என எனக்கு விளங்கவில்லை! புலிகள் பற்றி ஐலண்ட் எழுதவில்லை, புலிகளுக்கு பணம் சேகரித்த ஆட்கள் பின்னர் வழி தவறிப் போயிருப்பதைச் சொல்கிறார் (இதையே மேலே நானும் அமைப்புகளை உடைப்போருள் ஒரு தரப்பாகச் சுட்டியிருக்கிறேன்). இதற்கு, இல்லாத புலிகள் அமைப்பு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நீங்கள் ஐலண்ட் போன்றவர்களிடம் காட்டும் ஆத்திரத்தில் ஒரு துளியைத் தன்னும் உங்களுக்குத் தெரிந்த நேர்மையற்ற சேகரிப்பாளர்களிடம் காட்டுவதில்லை.
  34. வ‌ண‌க்க‌ம் பெரிய‌ப்பு இந்த‌ போட்டி தொட‌ங்க‌ முத‌ல் நீங்க‌ள் என்னை தான் முத‌ல் கேட்டிங்க‌ள் இந்த‌ போட்டிய‌ ந‌ட‌த்துவோமா என்று நான் ஆம் சொன்னேன் ந‌டுவில் விட்டு சென்றால் அது உங்க‌ளுக்கு நான் செய்யும் துரோக‌ம் மாதிரி ஏதோ ஒரு குற்ற‌ உன‌ர்வு மாதிரி என் ம‌ன‌ம் சொல்லுது இந்த‌ போட்டி முடியும் வ‌ரை உங்க‌ளுட‌ன் இணைந்து இருக்கிறேன் பெரிய‌ப்பு🙏👍................
  35. 18 Feb, 2025 | 03:21 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்றாலும் வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாமல் இருப்பதையிட்டு கவலையடைகிறேன் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதன் தெரிவித்தார். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வரவு செலவு திட்டத்தில் வைத்தியர்கள் தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த வருடம் மாத்திரம் 2ஆயிரம் டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். பட்டப்பின் படிப்பு பயிலுனர்களுக்காவது அரசாங்கம் ஏதாவது ஒரு விடயத்தை செய்திருக்க வேண்டும். அதேபோன்று வடக்கு கிழக்கு மீனவர் தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் எதுவும் இல்லை. குறிப்பாக வடக்கு கிழக்கு மீனவர்கள் இந்திய மீனவர்களின் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். அதற்கு எந்த தீர்வும் இதில் இல்லை. மேலும் யாழ் மாவட்ட உறுப்பினர் என்றவகையில் வரவு செலவு திட்டத்தை வரவேற்கிறேன். ஏனெனில் யாழ்ப்பாண நூலகத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வட்டுவாக்கல் பாலத்தை புனரமைக்க 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாகாண பாதைகளை செப்பனிடுவதற்கு 500 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுவுக்கு வருகை தந்து, நாங்கள் அங்கு முன்வைத்த பல விடயங்களை ஏற்றுக்கொண்டிருந்தார். அதன் பிரகாரம் எமது கோரிக்கைக்கமைய யாழ் மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என்றார். ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்; வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை - அர்சுனா இராமநாதன் | Virakesari.lk
  36. 25 ஆம் ஆண்டு அண்ணை. பெரும்பாலும் தந்தைகள் தம்வலி காட்டாது வாழ்ந்தவர்களே. 1907 இல் பிறந்த உங்கள் தந்தைக்கான கவிதை 1904 இல் பிறந்து 1997இல் மறைந்த எங்கள் அப்புவின்(அம்மப்பா) நினைவுகளை கிளறிவிட்டது. மடியில் வைத்து பல கதைகள் சொல்வார். எள்ளிலும் சின்னி கதை இப்போதும் நல்ல ஞாபகம். தம்மட மகளைத் தாயார் தின்ன நமக்கென்ன பாடு டும்டும் என்று எள்ளிலும் சின்னி பாடுவதாக அப்பு சொன்னது இன்றும் காதுகளில் கேட்கிறது! மாலுமியாய் எமக்கு வழி காட்டி மாயை உலகிற்கு விடைகொடுத்தது ஏனோ?
  37. தாய், தாய் என நீங்கள் தந்த கவிதை, தாயுமானவர் உங்கள் தந்தை என காட்டி நிற்கிறது🙏.
  38. மீண்டும் ஒரு திரியில் வேலி பாய்ந்தோடினார் வீரப் பையன். இனி என்ன பதுங்கி இருந்து -1 துப்பாக்கியால் சுட வேண்டியதுதான்🤣. பொது நல அறிவிப்பு அறிவித்த படியே என் அடிகள் எல்லாமும் சீமான் மீது மட்டுமே. எந்த கள உறவையும் அடிக்கும் எண்ணம் அறவே இல்லை. தாமாக வந்து வாங்கினால் கம்பெனி பொறுப்பல்ல.
  39. இந்த விடையத்தில் யேர்மானியரைப் போற்றவேண்டும். ஒருமுறை நான்வந்த புதுதில் என் பெயரிட்டு யேர்மனி என்ற முகவரிமட்டும் இட்ட என் நண்பர் ஒருவரின் கடிதம் என்னை வந்தடைந்தது.😁
  40. வணக்கம், யாழ் இணைய வழங்கி சில புதுப்பித்தல்களுக்கு உள்ளாவதால் யாழ் இணைய சேவைகள் செவ்வாய் 18 பெப் ஐரோப்பிய நேரம் 09:30 இலிருந்து அண்ணளவாக ஒரு மணித்தியாலத்திற்கு தடங்கலுக்கு உள்ளாகலாம்.
  41. இன்று பிறந்த நாள் காணும் நுணாவிலானுக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  42. உங்களுக்கு நீங்களே விருப்புக்குறி போடமுடியாதல்லவா😂! அதுதான் இதயக்குறி ❤️உங்கள் கருத்துக்குக் காண்பிக்காது!
  43. போலந்து - சோலசொவ்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.