Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்13Points19134Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்12Points20019Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87990Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்7Points46793Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/24/25 in Posts
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆறாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து சராசரியான 236 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, இலகுவான ஓட்ட இலக்கை ரச்சின் ரவிந்திராவின் சதத்துடன் 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 240 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணித்த @ஏராளன் க்குப் புள்ளிகள் இல்லை, மற்றைய அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:4 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இதென்ன விளையாடு திரியா எண்டு ஷாக் ஆகிடடன் 😃4 points
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
4 pointsஇதுவரைக்கும் பிரித்தானியாவில் இல்லை. இங்கே AfD யுடன் ஒப்பிட கூடியவர்கள் Britain First, BNP, National Front, English Defense League போன்றவை. இவர்களுக்கு ஒரு உள்ளாட்ட்சி மன்ற சீட் கூட இல்லை. அண்மையில் உருவாக்க பட்ட பராஜின் ரிப்போர்ம் பாராளுமன்றில் 3 சீட் எடுத்தது - ஆனால் இவர்கள் கூட வலதுசாரிகள் (டிரம்ப் போல) ஒழிய அதி தீவிர வலதுசாரிகள் என இதுவரைக்கும் சொல்ல முடியாது. மஸ்கு அண்மையில் பராஜ் “இந்த வேலைக்கு சரிவரார்” என கூறி இனவாதியான டாமி ரொபின்சனை ஆதரித்தார். கனடா, அவுஸ், நீயூசிலாந்து ஏனைய உதாரணங்கள். நான் பிரான்சையும் இந்த பட்டியலில்தான் சேர்ப்பேன். AfD, நேசனல் ரலி மிக வேறுபட்டவர்கள். இன்று ஒரு AfD தலைவரை பேட்டி கண்டார்கள். யார் ஜேர்மனியர் என்பது கேள்வி. பதில்: ஜேர்மன் பாஸ்போர்ட் உள்ளவர் எல்லாம் ஜேர்மன் பிரஜைகள். ஆனால் இனவழி ஜேர்மனியர் மட்டுமே - ஜேர்மனியர். பதில் சொன்னவர் பிபிசியிடம் உங்கள் நாட்டின் பாகிஸ்தானிகளும் இப்படித்தானே என மறு கேள்வி கேட்டார். பிபிசி காரர் சொன்னார் - இல்லை, ரிசி சுனாக் ஒரு ஆங்கிலேயன், பிரித்தானியன், இந்திய வம்சாவழியினன். பிரிதானியாவில் பாராளுமன்றத்தில் இருக்கும் எந்த கட்சியில் யாரை கேட்டாலும் இதுதான் பதிலாக வரும். மேலே சொன்ன நிலைப்பாட்டை நான் கூறிய உதிரி அமைப்புகள்தான் எடுக்கும். இது ஒரு பாரிய வித்தியாசம். இதனால்தான் ஜேர்மனியில் AfD உத்தியோகபூர்வ எதிர்கட்சியானது ஏனையவை சகலதையும் விட ஆபத்தானது.4 points
-
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு அவசர எச்சரிக்கை | உடனடி கைது
3 points
- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
எங்களுக்கு ட்ஸ்கவுன்ட் கேட்டே பழகிப்போச்சு. சாவகச்சேரி மீன் சந்தையில் டிஸ்கவுன்ட் கேட்டு அதற்கு வாங்கிய செந்தமிழ் வடு இப்போதும் மறக்க முடியவில்லை.😁3 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவர் போக வைப்பார்.................... ஆனால் பரிசுப் பணத்தில் பாதிக்கு மேலேயே கேட்பார்...... 🤣......... நான் இன்னும் இன்னா இல்லை ஏற்கனவே அவுட்டா........2 points- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
எனது ஒன்று விட்ட மச்சானின், அக்காவின் புருசன்... அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார். அவரிடம் ஈழப்பிரியனின் அண்ணரின் மகன் ரெஸ்ரோறன்ற் வைத்திருக்கின்றார் என்று சொல்ல, அவரும் டிஸ்கவுண்டுக்கு... உங்கள் கடையின் பெயரை வாங்கித் தரட்டாம் என்று, ஒரே... நச்சரிப்பாக, கேட்டுக் கொண்டு இருக்கின்றார் வணக்கம் நிர்வாகம். எனக்கு அவுசில் யாரையுமே தெரியாது. எனக்கு அண்ணனுமில்லை உறவினரும் இல்லை. தெரிந்தோ தெரியாமலோ எழுதிப் போட்டேன். அதை அப்பிடியே அழித்துவிட்டால் நல்லது போல. அவுஸ்காரரின் டிஸ்கவுண்ட் தொல்லை தாங்க முடியலை. சாப்பாட்டுக் கடைக்கே டிஸ்கவுண்ட் என்றால் தண்ணிக்கடை வைத்திருக்கிறார்கள் என்றால் விமானம் பிடித்து அமெரிக்காவுக்கே வந்துடுவாங்க போல.2 points- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
மிருணாஸ் சரியான பதில்...என கூறி இரண்டு வடை பரிசாக பெற்று கொள்கிறேன் ...2 points- ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
இந்த திரியில் எழுதி என்ன பயன் இருக்குமெனத் தெரியவில்லை, ஆனாலும் "I told you so!" 😉 என்று பிற்காலத்தில் சொல்லிக் கொள்ள உதவும் என்பதால் இந்த விடயம் சொல்ல வேண்டும்: நவநாசிகளும், நாசிகளும் "ஜேர்மனியர்" எனும் போது மண்ணிறத் தோல் கொண்டவர்களை நினைப்பதில்லை. அதனால் "சட்ட ரீதியாக வசிக்கும் எங்கள் ஆட்களையும் தூக்கி வெளியே அனுப்பி விடுவார்களா?" என்றால் பதில் "இல்லை" என்பது தான். ஆனால், சட்ட ரீதியாக வசிக்கும் எங்கள் ஆட்களுக்கு (குழந்தைகள், பேரன், பூட்டிகள்) நவநாசிகளின் ஆட்சியில் ஒரு மட்டத்திற்கு மேலே கல்வி, பதவிகளில் மேலே செல்ல முடியாத நிலை உருவாகும். இதற்காக அவர்கள் புதிய சட்டங்களைக் கூட இயற்ற வேண்டியதில்லை. இருக்கும் சட்டங்களை மீறி இனவாத வெள்ளை ஜேர்மனியர்கள் குடியேறி வம்சாவழியினரை ஒதுக்கி வைக்கும் போது, அந்த மீறல்களை அலட்சியம் செய்தாலே ஒதுக்கலை நிறுவன மயப்படுத்தி விடலாம்! ஒரு துரும்பையும் அசைக்க வேண்டிய அவசியமில்லை! இதற்கு முன்னுதாரணம் இருக்கிறதா? ஆம், 60 களில் இருந்து கறுப்பின மக்களை ஒதுக்கி வைக்க இந்த முறை தான் அமெரிக்காவில் பயன்பட்டது!இன்னும், 10 ஆண்டுகளில் மீண்டும் பயன்படப் போகிறது. இத்தகைய இன ஒதுக்கல் வாதிகளின் நுண்மைகளை , வரலாறு தெரியாத ஒருவருக்கு விளக்குவது கடினம். எனவே அவரவர் பட்டுத் திருந்துவதே ஒரே வழி.2 points- ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
ஜேர்மனியின் உண்மையான அரசியல் தெரியாத ஒருவரின் காணொளி தயாரிப்பு என நினைக்கின்றேன். இதன் பின் புலத்தில் உள்ளவர்களையும் ஊகிக்க முடிகின்றது. ஜெர்மனிக்கு அகதி அரசியல் நெருக்கடி இருப்பது உண்மைதான். ஆனால் வெளிநாட்டவர் பிரச்சனை அல்ல.CDU,Afd கட்சிகள் அகதிகளை பற்றித்தான் பேசு பொருளாக எடுத்துள்ளார்கள்.வெளிநாட்டு வேலையாட்களைப்பற்றி அல்ல....அகதிகளாக வந்து வேலை வெட்டிக்கு போகாமல் சோசல் காசு எடுத்துக்கொண்டு பிள்ளை குட்டிகளை டசின் கணக்கில் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் கவனிக்கவும். இந்த காணொளியில் பேட்டி கொடுக்கும் பெண் CDU,Afd கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் எனும் தொனியில் ஏதோவெல்லாம் கூறுகின்றார். ஆனால் எந்த கட்சிக்கு வாக்களியுங்கள் என சொல்லவில்லை.CDU கட்சிதான் என்றுமில்லதவாறு அகதிகளை உள்வாங்கியவர்கள்.அதனாலேயே ஜேர்மனிக்குள் அதிக பிரச்சனைகள் வந்தது.சிறுமிகள் பல்லியல் வன்கொடுமை,கத்திக்குத்துக்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை ஏன்?அகதிகள் பற்றி ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் வந்தது பற்றியும் இவர் ஒரு வார்த்தை கூறவில்லை.அது பற்றி அலசவுமில்லை. மொட்டையாக வெளிநாட்டவர்களை அடிக்கப்போகிறார்கள். துரத்தப்போகின்றார்கள் என ஏதோவெல்லாம் சொல்லி தான் சார்ந்த கட்சி பிரச்சாரம் செய்கின்றார்.அவ்வளவுதான். 80களில் SPD கட்சிதான் ஈவு இரக்கமில்லாமல் அன்றைய அகதிகளையும் அகதி தஞ்சம் கோரிய எம்மவர்களையும் இரவோடு இரவாக திருப்பி அனுப்பியவர்கள் இதெல்லாம் அந்த காணொளி தயாரித்தவர்களுக்கு தெரியுமா?படிக்கவும் விடாமல்,வேலை செய்யவும் விடாமல் இழுத்தடித்தவர்கள் எந்த கட்சியினர் என்றாவது இவர்களுக்கு தெரியுமா? தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். ஜேர்மனிக்கு வந்து அவர்கள் மண்ணில் இராஜ கோபுரம் கட்டி பந்தா காட்டும் நீங்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் புத்த விகாரை பற்றி கதைக்க அருகதை அற்றவர்கள். தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். ஜேர்மனிக்கு வந்து அவர்கள் மண்ணில் இராஜ கோபுரம் கட்டி பந்தா காட்டும் நீங்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் புத்த விகாரை பற்றி கதைக்க அருகதை அற்றவர்கள். ஊர் திருவிழாக்களில் பக்கத்து ஊர்க்காரன் வந்து பெண்களுடன் சேட்டை விட்டால் உயிருடன் விட்டுவைக்காத எமது சமூகம்.....👈 ஜேர்மனிக்கு அகதியாக வந்து பெண்கள்,சிறுமிகள் என பாரபட்சம் இல்லாமல் பாலியல் கொடுமை செய்தும் கொலை செய்தும்,அப்பாவி மக்களை கத்தியால் குத்தி கொலை செய்தும்......பொது வீதி விழாக்களில் மக்கள் கூட்டங்கள் மீது வாகனங்களால் மோதி கொலை செய்வதையும் ஒரு ஜேர்மன்காரனை பார்த்து சும்மா இரு என சொல்ல வருகின்றார்களா? இதே மாதிரி உங்கள் ஊர்களில் நடந்தால் வாய் மூடிக்கொண்டு சும்மா இருப்பீர்களா?2 points- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
உதென்ன பிரமாதம். இன்னுமொரு பெரிய புதினம் சொல்லுறன் கேளுங்கோ.. ஊரில இருக்கிற இரத்த உரிமை சொந்தங்களுக்கே நீங்கள் காசு பணம் குடுக்கேல்லை எண்டால் அவ்வளவுதான். அதாவது அவையள் கேக்கிற நேரம் மணி குடுக்கேல்லை எண்டால் மனிசராயே மதிக்க மாட்டினம்.2 points- ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
1 pointஜேர்மனி ஜெர்மனியில் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆட்சியில் இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில், கூட்டணிக் கட்சியை சேர்ந்தவரான நிதி அமைச்சரை சான்சலர் ஒலாப் ஸ்கால்ஸ் திடீர் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியுற்றதை தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், ஒலாப் ஸ்கால்ஸின் சமூக ஜனநாயகக் கட்சிக்கும், முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி, கட்சியும் கடும் போட்டியை அளித்து வருகிறது. ஆளும் கட்சி சார்பில் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU-CSU) சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர், சான்சலர் பதவிக்கான தேர்தலில் மோதுகின்றனர். பசுமை கட்சியின் ராபர் ஹபெக்கும் களத்தில் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் சான்சலர் ஆவதற்கே வாய்ப்புள்ளதாகவும், அவரது கன்சர்வேடிவ் கட்சியே முன்னணியில் இருப்பதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகளில் தெரியவந்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகளின்படி, பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சி (CDU/ CSU) கூட்டணி தேர்தலில் 28.9% வாக்குகளையும், தீவிர வலதுசாரி கட்சியான AFD (Alternative for Germany) 19.9% வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்து எதிர்க் கட்சியாக உருவெடுக்கும் என தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் தற்போதைய சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸின் SPD கட்சி 16% வாக்குகளுடன் 3வது இடம் பிடிப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஜெர்மனி சான்சலர் பதவிக்கான தேர்தலில் பிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி உறுதியானதை தொடர்ந்து, ஒலாஃப் ஸ்கால்ஸ் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு பிரெட்ரிக் மெர்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தேர்தல் முடிவுகளானது SPD கட்சியினருக்கு கசப்பானது என்றும் தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/international/germany-election-conservative-alliance-wins-elections-show-exit-polls-682517.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards பிந்திய நிலவரம் - தோல்வியை ஏற்று கொண்டார் நடப்பு அதிபர். வெற்றியை கோரியது மெர்சின் கட்சி. அதி தீவிர வலது, மறைமுக நாஜிகள் AfD இரெண்டாம் இடம். 20.6% வெற்றியீட்டிய சி எஸ் யூ -28.5%1 point- Pi Network Cryptocurrency
1 pointகடந்த 20.02.2025 இலிருந்து இந்த coins சந்தைக்கு வந்திருக்கிறது. இது crypto உலகில் தூரநோக்கில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு இந்த ப்ரொஜெக்ட் தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே நான் இதில் இணைத்திருக்கிறேன். கடந்த 5 வருடங்களாக இந்த திட்டம் சோதனை முயற்சியில் இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் விரும்பியவர்கள் pi coinsஇனை கைத்தொலைபேசி மூலம் மைனிங் செய்துகொள்ளும் வாய்ப்பும் இருந்தது. இது ஒரு ஏமாற்று வேலை, snowball system என்றெல்லாம் கல்லெறிகள் விழுந்த போதும் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டு தான் இருந்தது. இப்பொழுது 55 மில்லியன் மக்கள் இணைந்து இதனை சந்தைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த 55 மில்லியன் மக்களும் தங்களின் தகவல்களை அரசபத்திரம் மூலம் உறுதிப்படுத்திய பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். எந்த விதமான அறிவியல் அறிவும் இதற்கு தேவையில்லை. ஒரு கைத்தொலைபேசி போதும். சந்தைக்கு வந்து முதல் நாளே எதிர்பார்ப்பினை விட அதிக விலைக்கு சென்றது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சி Web3 நோக்கியது. யாழ் உறவுகள் யாராவது இந்த coins வைத்திருக்கிறீர்களா?1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வேணும் எண்டா நானும் சாரா டெண்டுல்காரும் பீச்சில் இருப்பது போலவும் செய்துதரலாம் உதுகளை கண்டு பிடிக்கத்தானே @ரசோதரன் இருக்கிறார்.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மைதான். நேரில் பார்க்கும் போது வேறு விதமாக இருக்கும். இந்த இங்கிலாந்து வீரர் பென் டக்கட் - ஸ்டம்பசை விட கொஞ்சம் வளர்த்தி. அவ்வளவு உயரம் குறைவு. ஆனால் டிவியில் அப்படி தெரியாது. இப்படி பல சுவாரசியங்கள் உள்ளன. நான் இலங்கையில் ஒரு first class கிளப்பின் 17 வயதுக்கு கீழ் பட்ட அணியில் 1st change bowler. அப்போ எனக்கு 15+தான். இலங்கை அணி, இந்திய, மே.இ தீவுகள், தெ.ஆ, இங்கிலாந்து பயிற்சியின் போது, நெட்சில் இல்லாமல் சிலசமயம் கிரவுண்டில் பேட், போல் பண்ணுவார்கள் அப்போ பீல்டிங் நாங்கள்தான். அதே போல் மேட்சில் டிரெசிங் ரூமுக்கு அடுத்த வரிசையில் எங்களுக்கும் பேர்சிக்கும் இருக்கைகள் இருக்கும். அசாருதீனும் பேர்சியும் ஆளோடு ஆள் தனகுவார்கள். வூக்கேரி ராமன் என ஒரு தமிழக வீரர் இந்தியன் ஓப்னராக இருந்தார் - மேட்ச் நடக்கும் போதே டிரெசிங் ரூமில் இருந்து தொடர்ந்து சிகரெட் பத்தி கொண்டிருப்பார். இந்திய அணியின் ஸ்பொன்சரும் வில்ஸ் சிகெரெட். 1996 முந்தைய கிரிகெட்டில் பணம் பாயாத காலங்கள் அவை. வீரர்கள் மிக இயல்பாகவே இருந்தார்கள். தாஜ் சமுத்திரா ஹோட்டல் போனால் மிக சாதாரணமாக காணலாம். இலண்டன் வந்த பின், ஒரு நாள் அரவிந்தவை பவுண்ட இலாண்ட் எனும் மலிவு விலை கடையில் கண்டேன். கதைக்கவில்லை. ஆனால் எனது பகுதியில் குடியேறியுள்ளதாக சிலர் கூறினர். இதுதான் பைனலாக வரக்கூடிய மேட்ச்சாகவும் இருக்க கூடும். தெ. ஆ வெல்ல வாய்ப்புகள் உண்டு. உள்ளதில் அதிக மிரட்டல் உள்ளதும், balance உள்ளதும் அவர்கள்தான்.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்ரேலிய அணியில் இங்கிலாந்துடனனான போட்டியில் 4 முழு அளவிலாலன பந்து வீச்சாளர்களை ஐந்தாவது பந்து வீச்சாளருக்கு பதிலாக பகுதிநேர பந்து வீச்சாளர்களையும் அவுஸ் பயன்படுத்தியிருந்தது. பென்ஸர் ஜோன்சன் வெறும் 7 ஓவர்கள் மட்டுமே வீசினான் (காயம்?) அதனையும் சேர்த்து 13 ஓவர்களை பகுதிநேர பந்து வீச்சாளர்களை அவுஸ் பயன்படுத்தியது இறுதி ஓவரை பகுதிநேர சுழல் பந்து வீச்சாளர் மானஸினை பயன்படுத்தி இருந்தார்கள். அடம் சம்பா போலவே மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர் சங்காவும் முழுநேர பந்து வீச்சாளர், ஆனால் அவரை போட்டியில் இறக்கவில்லை. அவுஸை விட தென்னாபிரிக்கா பலமான அணி. இந்த போட்டியிலும் அதே அணியுடன் அவுஸ் களமிறங்க வாய்புள்ளது, அனைத்து அணிகளும் பெரும்பாலும் இவ்வாறான கொளைகையினையே பின் பற்றுகின்றன. இந்தியா அணியிற்கு இந்தநிலை இல்லை. தென்னாபிரிக்க அணிதான் பலமான அணி, ஆனால் அவுஸ் அழுத்தமில்லாமல் விளையாடகூடிய அணி.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஒரு விரைவு உணவகத்தில் வேலை செய்த போது,என்னுடன் மும்பாயினை சேர்ந்த பெண்மணியும் வேலை செய்திருந்தார், ஒரு நாள் டென்டுல்கர் உனவகத்திற்கு வந்திருக்கிறார் என கூறினார் (அது ஒரு விரைவு உணவகம் எப்போதும் கூட்டமாக இருக்கும்) அவர் வழமையாக என்னை முட்டாளாக்கும் வேலை செய்பவர் என்பதால் அதனை காதில் வாங்காமல் வேலை செய்துகொண்டிருந்தேன். எனது கையினை பிடித்து தர தரவென இழுத்து சென்றார், கவுண்டரில் ஒருவர் நின்று கொண்டிருந்தார் வரிசையில் அவரை பார்த்தவுடன் நினைத்தேன் இது இவரரது வழமையான முட்டாளாக்கும் முயற்சி என நினைத்து இது தெண்டுல்கர் இல்லை என்றேன். எமக்கும் அவருக்குமிடையே 5 அடி தூரம் இருந்திருக்கும், அவர் எங்களை நிமிர்ந்து பார்த்து விட்டு அவர் எந்த உணர்வையும் காட்டாமால் நிற்க இவர் அவர்தானெ வலியுறுத்த, அதனை நான் மறுக்க பக்கத்தில் நின்றவர் தலையாட்டி தெண்டுல்கர்தான் என உறுதிபடுத்தினார், பின்னர் எமது உணவகத்தில் வேலை செய்தவர்கள் கைதுடைக்கும் பேப்பரில் கூட அவரது கையெழுத்தினை வாங்கினார்கள். தொலைகாட்சியில் பார்ப்பதற்கும் நேரில் பார்க்கும் அடையாளம் காணமுடியவில்லை.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிருபன் ஜி, மனசை தளர விட வேண்டாம். உங்களுக்கும் அல்வாயானுக்கும் வெறும் 6 புள்ளிகள்தான் வித்தியாசம்😆.1 point- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
நல்லகாலம் லண்டனில் உள்ள கடைக்காரரின் பெயர் எதையும் சொல்லலை. ஈழப்பிரியா நீ வேணுமானால் திண்டுட்டுப் போ. ஆனால் மூச்சு.1 point- தையிட்டி விகாரை பிரச்சினையை ஆறு மாத காலத்துக்குள் தீர்த்துவிடுவோம் - சிவசேனை அமைப்பினர்
வேட்டியை உரிஞ்சு குடுத்தமாதிரியோ?1 point- காளியம்மாள் .... கழகத்துக்கு?
1 pointபாவம் இந்த அக்கா... தமிழ் தேசிய பரப்பில் காளியாக நின்று பேசியவர்.. இனி எங்காவது சேர்ந்து கூலியாக பேச வேண்டி வரக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன். 🫶🙏1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிரிக்கெட்டுக்கு இப்படி ஒரு எதிர்காலம் இருக்கின்றது என்று தெரிந்திருந்தால், பிந்திப் பிறந்து கிரிக்கெட் விளையாடி இருக்கலாம் போல.......................😜.1 point- மரணதண்டனை நிறைவேற்றம் குறித்து அரசாங்கம் ஆராய்கின்றதா? நீதியமைச்சர் தெரிவித்துள்ளது என்ன?
ஆட்களுக்கு கொலை செய்வதில் பயம் இல்லாமல் போய்விட்டது. இதற்கு கொலையாளிகளுக்கு மரண தண்டனை கொடுப்பது தீர்வு இல்லை என்றால் வேறு என்ன பரிகாரம் உள்ளது?1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பையன் சார், நீங்கள் எவ்வளவு தான் ஆறுதல்படுத்தினாலும், நான் பாகிஸ்தான் கொடியை ஒரு வாரத்துக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடுவதாக உள்ளேன்................🤣.1 point- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
டிஸ்கவுண்ட் வாசிகளே மன்னித்துக் கொள்ளுங்கோ. வேணுமானால் முழங்கால் நோகநோக 10 தோப்புக்கரணம் போடுகிறேன். இதுக்காக கோடுடெல்லாம் ஏறி இறங்க வேண்டுமா? எதுக்கும் சட்டத்தரணி சுமந்திரனுடன் கதைத்து வைத்திருப்பது நல்லது போல.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்ன தம்பி @ஏராளன் கொடுப்புக்குள் சிரிப்பாக இருக்கிறீர்கள்? வாய்ப்பில்லை தம்பீ.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
லான்ஸ் குளூஸ்னரும், அலன் டொனால்டும் 🤦♂️. பின்னொரு நாளில் இங்கிலாந்து மேட்சை ஒன்றை ஒரு வெள்ளையர் அருகில் இருந்து பார்த்தேன். எங்கேயோ பார்த்த முகம் போல இருந்தது …மேட்ச் முடிந்து எழும்பும் போதுதான் உறைத்தது அது லான்ஸ் குருஸ்னர். நீ லான்ஸ் குரூஸ்னரா என கேட்டேன்…ஆம் என கைலாகு கொடுத்து பிரிந்தார். 1998 இல் பங்களாதேசில் நடந்த முதல் சாம்பியன்ஸ் கோப்பையை தெ.ஆ தான் தூக்கியது.1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆங்கிலத்தில் stingy, frugal என இரு வார்த்தைகள் உள்ளன. தமிழில் கஞ்சத்தனம், சிக்கனம் எனலாம். Stingy எண்டால் கஞ்சதனம். எதற்கும் செலவழிக்காமை. Frugal என்றால் முடிந்தளவு தேவைக்கு ஏற்ப செலவழித்து கடும் சிக்கனம் பேணல். 2ம் எலிசபெத் மகாராணியின் படுக்கை அறையில் கடைசிவரை ஒரு ரேடியோவும், கறுப்புவெள்ளை டிவியும் மட்டுமே இருந்ததாக சொல்லுவார்கள். எனது தந்தையாரும் மிகவும் சிக்கனமான பேர்வழி. எனக்கு அதில் பாதியளவுதான். அதில் பத்து வீதத்தையாவது என் மகனுக்கு கடத்தி விட படாதபாடு படுகிறேன்😂. பங்களாதேஷ் எல்லாரும் நல்லா தொடங்கி விட்டு அவசரப்படு அவுட் ஆகிறார்கள். காசு கீசு வாங்கீட்டாங்களோ🤔1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
நேரடியாகவே நல்ல கேள்வியை கேட்டுள்ளீர்கள் விசுகர்!👍 இதற்கு இடக்கு முடக்கு பதில் சொல்லாமே தவிர நீதி நேர்மையான பதில்கள் இல்லை. எந்த நாட்டில் இனவாதம் ,மதவாதம் இல்லை? இதே கேள்வியை ஈழ மண்ணில் கேட்பதாயின் இன்னொரு கேள்வி போனஸ்! அது எதுவென்றால் சாதி வேகுபாடு எங்கில்லை?👈1 point- ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
1 pointபிரான்சில் நிலைமை சற்று வேறுபாடானது. அங்கே AfD யுடன் ஒப்பிடுகூடிய கட்சி என்றால் லிபென்னின் நேசனல் ரலிதான். ஆனால் செனெட்டில் இவர்கள் பலம் 3/348. கீழ் சபையில் 126/577. மிகுதி இருப்பவர்கள் எல்லாம் ஒன்றில் வலதுசாரிகள், அல்லது நடுவாதிகள், அல்லது நடுவிற்கு அருகான வலதுசாரிகள். இந்த பகிர்வு கிட்டதட்ட 20 வருடமாக பிரான்ஸில் தொடர்கிறது என நினைக்கிறேன். அங்கே ஆபத்து இருப்பது அதிபர் தேர்தலில். அங்கே டிரம்பை/ஜோன்சனை போல் ஒருவர் வந்தால் - அதி தீவிர வலதுசாரிகள் கை ஓங்கலாம். ஆனால் ஜேர்மனி, இத்தாலியில் நாஜி/பாசிசம் உள்ளே ஊறிய நஞ்சு. கிட்டதட்ட தென்னமரிக்காவில் கம்யூனிசம் போல. இன்றைய AfD தலைவர்களின் பாட்டன்கள் பலர் ஹிட்லரின் நெருங்கிய சகாக்கள், அமைச்சர்கள். இத்தாலியிலும் இன்னும் முசோலினியின் பிடி இருக்கிறது. பிரான்சில் அப்படி அல்ல. குடியேற்றத்தை கட்டுபடுத்த வேண்டும் என்பது பிரான்சில் மட்டும் அல்ல, மேற்கு முழுவதும் அடுத்த 50 ஆண்டுக்கு தவிர்க்க முடியாத அரசியல் கொள்கை.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இரவு உங்களுடன் எழுதி விட்டு அப்படியே தூங்கி விட்டேன் இல்லை அண்ணா நான் இதை சீடியேசா எடுக்க வில்லை................. பழைய யாழ்கள நண்பனும் நானும் யாழுக்கு வெளியில் செய்த பம்பல் இதை விட பல மடங்கு அதிகம் அண்ணா......................................1 point- ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
கோலி சாதனை சதம்: இந்தியா பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தே வெளியேறுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 23 பிப்ரவரி 2025 விராட் கோலியின் ஆகச் சிறந்த சதத்தால் துபையில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலையில் இருந்தநிலையில் தற்போது 3-3 என்ற கணக்கில் இந்தியா-பாகிஸ்தான் சமநிலையில் இருக்கிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு வரை விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் பெரிய கவலையாக இருந்தது. பெரும்பாலான கிரிக்கெட் விமர்சகர்கள் கோலியின் ஃபார்ம் பற்றி குறிப்பிடத் தவறவில்லை, விமர்சிக்கத் தவறவில்லை. ஆனால், அனைத்துக்கும் இந்த ஒற்றை சதத்தின் மூலம் கோலி பதில் அளித்துள்ளார். இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்? மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து, நடிகைகளுக்கு மிரட்டல் - வங்கதேசத்தில் மதவாதம் தலைதூக்குகிறதா? 'நான் எழுவேன்' - பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை 2024 விருது பெற்ற மனு பாக்கரின் உத்வேக பயணம் சதம் மூலம் பதில் விராட் கோலி போன்ற ஆல்டைம் கிரேட் பேட்டர்கள், இதுபோன்ற ஏதாவது ஒரு இன்னிங்ஸ் சிக்கிவிட்டால் இழந்த ஒட்டுமொத்த ஃபார்மையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள். ரசிகர்கள் கிங் கோலி என்பதற்கு விளக்கமாக இன்றைய கோலியின் ஆட்டம் அமைந்திருந்தப்பதாக சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக ஆடக்கூடிய விராட் கோலி இந்த ஆட்டத்திலும் தனது மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறவில்லை. சதம் அடிப்பாரா, அதற்கான வாய்ப்பு இருக்குமா என்ற நிலையில் கடைசியில் பவுண்டரி அடித்து 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கோலி இருந்தார். அவருக்கே ஆட்டநாயகன் விருது அறிவிக்கப்பட்டது. சர்வதேச அரங்கில் தனது 51வது ஒருநாள் சதத்தையும் கோலி நிறைவு செய்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் வெளியேறுமா? இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. அதேநேரம் பாகிஸ்தான் அணி ஏறக்குறைய சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறிவிட்டது. பாகிஸ்தான் அணிக்கு ஒரே வாய்ப்புதான் இருக்கிறது, வங்கதேச அணியை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும், நியூசிலாந்து அணி அடுத்த 2 ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். இப்படி நடந்தால் அரையிறுதிக்குள் பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இது நடக்குமா என்பது நிச்சயமில்லை. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் சுப்மன் கில்(46), ஸ்ரேயாஸ் அய்யர்(56) ஆகியோரின் பேட்டிங்கும் குறிப்பிடத்தக்கது. இருவரும் சேர்ந்து கோலியுடன் அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சுப்மன் கில், கோலி கூட்டணி 70 ரன்களும், ஸ்ரேயாஸ், கோலி கூட்டணி 114 ரன்களும் சேர்த்தது. ஒரே வாரத்தில் உலகிலும், உள்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டிரம்பின் 19 நடவடிக்கைகள்2 மணி நேரங்களுக்கு முன்னர் போதைப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளைத் தடை செய்த இந்தியா23 பிப்ரவரி 2025 ஹர்திக் அற்புதமான பந்துவீச்சு பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் பந்துவீச்சும் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது. பாபர் ஆசம் விக்கெட்டை வீழ்த்தி ஹர்திக் பாண்டியா தொடங்கி வைத்தார். பாண்டியாவின் பந்துவீச்சில் இன்று ஏகப்பட்ட வேரியேஷன்கள், ஸ்லோபால், ஸ்விங் என அற்புதமாக இருந்தது. 8 ஓவர்களையும் 3.4 ரன்ரேட்டில் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பாண்டியா. ஜடேஜா, அக்ஸர், குல்தீப் ஆகியோர் சேர்ந்து 26 ஓவர்களை வீசி, 129 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த 3 பேருமே, 4 ரன்ரேட்டுக்கு மேலாக ரன்களை வழங்கவில்லை. குறிப்பாக நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்தாமல் இந்திய அணி திணறுகிறது என்ற விமர்சனத்துக்கு இந்த முறை பதில் அளித்து நடுப்பகுதியில் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தைத் திருப்பினர். சேவாக் சாதனை சமன்: இங்கிலாந்துக்கு எதிராக 352 இலக்கை எட்டிப் பிடித்து வரலாறு படைத்த ஆஸ்திரேலியா23 பிப்ரவரி 2025 நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை22 பிப்ரவரி 2025 'கோலியின் ஆட்டம் வியப்பைத் தரவில்லை' பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் "பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு அருமையாகத் தொடங்கினோம். இந்த விக்கெட் பற்றி நன்கு தெரியும் என்பதால் எங்கள் பேட்டர்கள் நிதானமாக ஆடினர். குல்தீப், அக்ஸர், ஜடேஜா சிறப்பாகப் பந்துவீசினர். ரிஸ்வான், சவுத் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷமி, ஹர்திக் மற்றும் ராணா சரியான நேரத்தில் சிறப்பாகப் பந்துவீசினர். ஒவ்வொரு வீரரும் என்ன விதமான பணியைச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டனர். பேட்டர்களுக்கு யார் அதிகமாக தொந்தரவு கொடுப்பார்கள் என்பதை அறிந்து பந்துவீசச் செய்தேன். கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டார். ஓய்வறையில் இருப்போர் கோலியின் ஆட்டத்தைப் பார்த்துப் பெரிதாக வியப்படையவில்லை" எனத் தெரிவித்தார். 5 முறை ஆட்டமிழப்பு இந்திய அணி, 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மா வழக்கம்போல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அதிரடியாகத் தொடங்கினார். ஆனால், அப்ரிடி வீசிய 5வது ஓவரின் கடைசிப் பந்து கணிக்க முடியாத வகையில் வந்த இன்-ஸ்விங் யார்க்கரில் ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 8 முறை அப்ரிடி பந்துவீச்சை சந்தித்துள்ள ரோஹித் சர்மா, அதில் 5 முறை ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின் விராட் கோலி களமிறங்கி, சுப்மன் கில்லுடன் சேர்ந்தார். அப்ரிடி வீசிய 7வது, 9வது ஓவர்களில் 4 பவுண்டரிகள் விளாசினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்த்தது. பிரான்சில் பிரிட்டிஷார் பிடியில் இருந்து தப்ப, கப்பலில் இருந்து கடலில் குதித்த சாவர்க்கர் - என்ன நடந்தது?22 பிப்ரவரி 2025 பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?20 பிப்ரவரி 2025 சச்சினை முந்திய கோலி பட மூலாதாரம்,GETTY IMAGES ஹாரிஸ் ராஃப் வீசிய 13வது ஓவரில் கோலி பவுண்டரி அடித்தபோது, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 14 ஆயிரம் ரன்களை எட்டி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடித்தார். சச்சின் 350 இன்னிங்ஸிலும், சங்கக்கரா 378 இன்னிங்ஸிலும் இந்தச் சாதனையைச் செய்த நிலையில், கோலி 287 இன்னிங்ஸில் 14 ஆயிரம் ரன்களை எட்டினார். அதே ஓவரில் கோலி கவர் டிரைவில் அற்புதமான பவுண்டரியும் விளாசினார். அப்ரார் அகமது வீசிய 18வது ஓவரில் கில் 46 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். கோலி 2வது அரைசதம் அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர், கோலியுடன் இணைந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்திருந்தது. 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது. நசீம் ஷா வீசிய 27வது ஓவரில் டீப் கவர் திசையில் பவுண்டரி அடித்து தனது 74வது அரைசதத்தை கோலி நிறைவு செய்தார். கடந்த 3 போட்டிகளில் விராட் கோலி அடித்த 2வது அரைசதம் இது. இந்திய அணி, 36வது ஓவரில் 200 ரன்களை எட்டியது. நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 63 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 56 ரன்கள் சேர்த்திருந்தபோது, குஷ்தில் வீசிய 39வது ஓவரில் இமாம் உல்ஹக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பவுண்டரி அடித்தநிலையில் 8 ரன்களில் அப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அக்ஸர் படேல் 3 ரன்களிலும், கோலி பவுண்டரி அடித்து சதத்தை நிறைவு செய்தும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 42.3 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்து இலக்கை அடைந்தது. சர்வதேச தலைவர்களை சந்திக்கும் போதும் ஈலோன் மஸ்க் தனது குழந்தைகளை அழைத்துச் செல்வது ஏன்?17 பிப்ரவரி 2025 மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? இந்தி எதிர்ப்பின் நெடிய வரலாறு18 பிப்ரவரி 2025 பாகிஸ்தான் தோல்விக்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தான் அணி கவனமாக ஆட வேண்டும், விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்ற கவனத்தோடு ஆடியதே தவிர ரன்சேர்ப்பில் கவனம் செலுத்தவில்லை. தொடக்கத்தில் இருந்தே மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர்ப்ளேவில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை எடுத்த பாகிஸ்தான் அடுத்த 10 ஓவர்களில் 27 ரன்களையே சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் சவுத் ஷகில்(62), கேப்டன் ரிஸ்வான்(42) தவிர வேறு எந்த பேட்டர்களும் பெரிதாக ரன்களை சேர்க்கவில்லை இந்திய பந்துவீச்சாளர்கள் ஹர்திக், குல்தீப், அக்ஸர், ஜடேஜா ஆகிய 4 பந்துவீச்சாளர்களும் நடுவரிசையில் பாகிஸ்தான் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்ததால் பாகிஸ்தான் பேட்டர்களின் பேட்டிலிருந்து பெரிய ஷாட்களும் வரவில்லை, பெரிதாக ரன்களும் வரவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES கேப்டன் ரிஸ்வான் ஆட்டமிழந்தவுடன் பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சி தொடங்கியது. அவர் ஆட்டமிழந்தபின் அடுத்த 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்து தடுமாறியது. நடுவரிசை மீது மிகுந்த நம்பிக்கை வைத்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களும், கேப்டன் ரிஸ்வானும் ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்தாமல் விக்கெட்டை தக்க வைப்பதிலேயே கவனம் செலுத்தினர். ஆனால், அவர்கள் நினைப்புக்கு மாறாக நடுவரிசை பேட்டர்கள் சொதப்பலாக பேட் செய்தனர். பாகிஸ்தான் அணி, 200 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்த 41 ரன்களுக்கு மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. நடுவரிசை பேட்டர்களை நம்பி பாகிஸ்தான் கேப்டனும், தொடக்க வீரர்களும் ஏமாந்தனர். பாகிஸ்தான் அணி தேவையின்றி பந்துகளை வீணடித்தது அந்த அணியின் ஸ்கோர் குறைவுக்கு முக்கியக் காரணம். பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் மட்டும் 152 டாட் பந்துகளை விட்டுள்ளது, இது ஏறக்குறைய 25 ஓவர்களுக்கு சமம். ஒருநாள் போட்டியில் இந்த அளவு டாட் பந்துகளை விடுவது ஸ்கோரை பெரிய அளவு பாதிக்கும். டாட் பந்துகளை விட்டதற்கு விலையாக பாகிஸ்தான் அணி ஸ்கோரை பறிகொடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் என 3 பேருக்கும் கேட்சை கோட்டைவிட்டனர். இந்த கேட்சுகளை பிடித்திருந்தாலே ஆட்டத்தை நெருக்கடியில் கொண்டு சென்றிருக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2gppq980go1 point- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
மிருணாஸ்? சிந்து?? 10 to 10? சொல்லுங்கோ…!1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பையன்! சும்மா விளையாட்டிற்காக பதியும் கருத்துக்களை சீரியசாக எடுக்கதீர்கள்.1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாடல்: இன்று வந்த சொந்தமா பாடியவர்கள்: TMS , சுசிலா இசை: வேதா பாடல்: வாலி / கு.மா.பாலசுப்ரமணியம் இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா தொன்று பல ஜென்மமாய் தொடர்ந்து வரும் இன்பமே வெண்ணையை அள்ளி உண்டு வேங்குழல் ஊதி நின்று கண்ணனாக நீ இருந்த காலத்திலே என்னையே கொள்ளை கொண்ட புன்னகை வீசி நின்ற கன்னிகை ராதையாக தேடி வந்தாய் குயில் இசையும் குழல் இசையும் குழைந்திடும் வேளையிலே அன்பில் மிதந்து தன்னை மறந்து அகம் மகிழ்ந்தாடியது இன்று வந்த சொந்தமா கணையாழி கையில் தந்து துஷ்யந்தனாக வந்து காதல் மணம் புரிந்த காலத்திலே மானோடு நீ வளர்ந்து சகுந்தலையாய் இருந்து மாறாத அன்பு கொண்டு மாலையிட்டாய். குளிர் நிலவும் மலர் மணமும் குலாவிடும் சோலையிலே அன்பில் மிதந்து தன்னை மறந்து அகம் மகிழ்ந்தாடியது இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா தொன்று பல ஜென்மமாய் தொடர்ந்து வரும் இன்பமே இன்று வந்த சொந்தமா....1 point- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
உங்கன்ட பெயரை சொன்னா டிஸ்கவுன்ட் ஏதாவது கிடைக்குமோ அடபாவிகளா வடைக்கும் தோசைக்கும் அப்பத்தக்குமா டிஸ்கவுண்ட்?1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1 point- ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
வலதுசாரிகள் தான் இலங்கையில் தமிழர்களை ஏதிலி ஆகியவர்கள் ஐரோப்பாவில் இப்போதும் அகதிகளுக்கான ஆதரவு இருக்கின்றது என்பதற்கான சான்றாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. பழமைவாதக் கிறிஸ்த்தவக் கட்சி இதுவரை அரசாண்ட காலத்திலேயே அதிக அகதிகள் நாட்டிற்குள் வந்தார்கள். அம்மையார் மேக்கேல் தாய்ப்பாசத்துடன் எல்லோரையும் வரவேற்றார் . இன்று.... அந்தக் காலத்தில் அம்மையாரின் கட்சிக்குள்ளேயே அம்மையாரால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருவர் புரட்சி செய்ய வந்துள்ளார் . பொருளாதார வல்லுநர் எனப் பலராலும் அறியப்பட்டவர் இருந்தாலும் அகதிகள் விடையத்தில் வலது பக்கம் நிற்பதால் அவருக்கான ஆதரவு பலமாக அதிகரிக்கவில்லை பழமைவாதக் கட்சியும் தொழிலாளர் சார்பான சோஷலிஸக் கட்சியும் (இந்தத் தேர்தல் வரை ஆடசியில் இருந்தவர்கள்) தான் கூட்டுச் சேர்வதற்கான தெரிவாக இருக்கின்றது. வேறு விதமான கூட்டணிக்கு யாரும் ஆசைப்பட மாட்டார்கள் இருந்தாலும் ஒரு காலத்தில் யூதர்களின் நிலை ஜெர்மனியில் மீண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது வரலாறு எப்போதும் தன்னை மீட்டுக் கொண்டேயிருக்கும்1 point- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
நானும் அதே மூவரை பற்றி தான் எழுதியிருந்தேன் ...நான் சென்ற நேர்ம் காலை 9 மணிக்கு அந்த நேரத்திலயே ஆட்கள் தடுமாறுகிறார்கல் ...மாலை 9 மணிக்கு மேல் என்றால் சகித்து கொள்ளலாம் ...காலையிலயே இப்படி என்றால்...அதுவும் வேலை நாள் ஒன்றில்... உங்கன்ட பெயரை சொன்னா டிஸ்கவுன்ட் ஏதாவது கிடைக்குமோ 😀1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி, இலகுவான ஓட்ட இலக்கை விராட் கோலியின் சதத்துடன் 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 244 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்த்தான் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:1 point- பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 21
நல்லது நடந்தால் ஆண்டவரால் நடைபெறுகின்றது மோசமான செயல்கள் நடைபெறுகின்ற போது ஆண்டவர் பேச்சே வரமட்டுது 🤣1 point- காளியம்மாள் .... கழகத்துக்கு?
1 pointபஸ்ஸே காலி ஆனாலும் ஓட்டுநர் இடத்தில இருந்து சீமான் எழுந்தால் வீழ்ச்சிதான். தமிழ் தேசிய அரசியலை பொறுத்தவரை தேர்தல் வெற்றி இரண்டாம் பாகம்தான். முதலாம் பாகம் மண்ணில் நிற்பதுதான். அதை சீமான் அடிக்கடி பேசுகிறார் ஆனால் அதை எவ்வளவு தெளிவாக புரிந்து இருக்கிறார் என்று தெரியவில்லை. நாதாக வை பொறுத்தவரை எந்த பதவியிலும் யாரையும் வைத்திருக்க கூடாது .. வைத்திருக்கவும் முடியாது. நானே மந்திரி நானே ராஜா என்று இருக்கும்வரைதான் கடசியும் இருக்கும். அல்லாதுபோனால் துரோகத்தால் வீழ்த்தப்படுவார்கள். ராஜீவ் கல்யாணசுந்தரம் போன்றவர்கள் விலகிய போது போங்கடா என்றுவிட்டு தொடர முடிந்தது என்றால் அதுக்கு ஒரே காரணம் நானே ராஜா நானே மந்திரிதான். இல்லையென்றால் பிரித்து இன்னொரு கும்பலை உருவாக்குவார்கள் ........ இப்போது இருக்கும் தெரிவு விலகுவது ..... எங்காவது போய் ஒட்டிக்கொண்டு இவ்வளவு காலமும் பேசியதற்கு நேர் எதிராக வாய்கூசாமல் பேசிக்கொண்டு இருப்பது.... அது தமிழக அரசியலில் பழகிப்போன ஒன்றும் கூட.1 point- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
இப்போ எல்லாம் பொருட்களாக வாங்குவதை விட பணத்தை தான் அங்குள்ள மக்கள் பெருதும் விருப்ப பட்டு ஏற்றுக் கொள்கிறார்கள்..பொருட்களாக விருப்பபடுதாக இருந்தால் ஜபோன் 15 மேலும் என்னவெல்லாம் புதுசு, புதுசா வருகிறதோ அது எல்லாம் அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கு.சாதரணமாக 5ம், ஆறாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளிடையே தொடங்கும் ஒரு வித போட்டிகளே வளர, வளர இப்படியான பிரச்சனைகளை கொண்டு வருகிறது..ஊர் மக்களின் செயல்பாடுகள், கதைகளை கேட்டு, கேட்டு வெறுத்து போச்சு அண்ண.1 point- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
இது சகல நாடுகளிலும் நடக்கின்ற ஒன்று ...இங்கு அவுஸ்ரேலியாவிலும் சிலர் இருக்கின்றனர் .இந்த நாட்டிலயே அண்மையில் வந்த (10 வருடங்களுக்குள்) நம்ம நாட்டு இளைஞர்கள் (சிலர் மட்டுமே)வீதியில் போதையில் இருப்பதை கண்டுள்ளேன் அது மட்டுமல்ல சில சமயம் வீதியில் செல்பவ்ர்களுக்கு நக்கல் அடிப்பதும் உண்டு ... வெளிநாடுகளில் வாழும் வெள்ளை இனத்தவ்ர்களில் சிலர், எவ்வளவு வசதிகள் வாய்ப்புக்கள் இருந்தாலும் வீடு அற்றோர் போல வாழ வேணும் என்று பஸ் ஸ்டான்ட் ,மற்றும் பூங்காவில் வாழ்கின்றனர் ... அது போல இந்த புலம் பெயர் காவாலிகளும் ஒரு காலகட்டத்தில் அப்படி வாழ்க்கைக்கு செல்வார்கள் ...1 point- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
எமது ஊர்களில் ஏற்கனவே வாழ்க்கை போராட்டம். அப்படி இருக்க குடும்பத்தை சுமந்து கொண்டிருந்த தூணையே தகர்த்து விட்டார்கள்.கனடாவில் இருக்கும் கொலையாளிகளின் உறவினர்கள்,நண்பர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முன்வந்து மாதாந்த உதவிகளை செய்ய வேண்டும்.அதுதான் நீதியும் தர்மமும். அன்னாரின் உற்றார் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பறவைகள் பலவிதம் . ......... மேல்நாட்டு நடனமும் இறுதியில் உண்டு...... நன்றாக இருக்கின்றது . ........! 😍1 point - சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
Important Information
By using this site, you agree to our Terms of Use.