Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87988Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்8Points38756Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33600Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்6Points19122Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/27/25 in all areas
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாகிஸ்தான் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையேயான ஒன்பதாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டது. எனவே யாழ்களப் போட்டியாளர்கள் எல்லோருக்கும் மழை முட்டைகளைப் பொழிந்துள்ளது! யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை):3 points
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
உண்மை தோழர் .. ராமதாஸ் vs MRK பன்னீர் செல்வம்(திமுக) C.Ve சண்முகம்(அதிமுக) அண்ணாமலை (பாஜக) VS ஈ.பி.எஸ்(அதிமுக) VS செந்தில்பாலாஜி(திமுக) ஒபிஎஸ்(அதிமுக தனி) VS உதயகுமார் (அதிமுக) சக்கரபாணி(திமுக) கடம்பூர் ராசு(அதிமுக) தங்கம் தென்னரசு (திமுக) ராதாகிருட்டினண் (பாஜக) அனிதாகிருட்டினன்(திமுக) தளவாய் சுந்தரம் (அதிமுக) தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக) கனிமொழி , கீதா ஜீவன்(திமுக) எசி சண்முகம் VS தாமோதரன் VS காந்தி எவ வேலு அக்ரி VS கிருட்டிணமூர்த்தி திருமாவளவன் சந்திர காசி பூவை ஜெகன் கிருட்டினசாமி சான் பாண்டியன் எனக்கு தெரிந்தது கொஞ்சம் இன்னும் நிறைய இருக்கு.இவர்கள் எல்லாம் திராவிட தலைமைகளால் ஸ்பெசல் ஒப்பாயின்மென்ற் செய்யபட்டவர்கள் . தங்கள் தலைமையை யார் எதிர்த்து அறிக்கைவிட்டாலும் அவரின்ட குலம் கோத்திரம் அறிந்து ( சாதி ஒழிப்பு ? ) முன் களத்திற்கு வந்து நிற்பார்கள்.. ஆனால் சீமானுக்கு எதிராக வித்தியாசமான ஒப்பாயின்மென்ட் சுப வீரபாண்டியன் வீரமணி கொளத்தூர் மணி கோவை ராமகிருட்டினண் :: கொள்கைவழி ( ? ) விசயலட்சுமி / வீரலட்சுமி / சுந்தரவள்ளி / ஜோதிமணி /காளியம்மாள்..? (கொம்பு சீவப்படுவதாக கேள்வி ) ::பெண்கள் வழி ( ? ) ராஜீவ் காந்தி / தமிழன் பிரசன்னா / செந்தில்குமார்(திமுக) வன்னியரசு (வி.சிறுத்தைகள்) அர்ஜூன் சம்பத் :: அரசியல் வழி (?) காவல் துறை :: வருண் IPS / இப்போ பிரவீன் ராஜேஷ் :: இன்னும் தொடருமாம் .. சுருங்க கூறின் அவன் பொருளை எடுத்து அவனையே போடு என்பதாகும்.இதுவே திராவிட சித்தாந்தமாகும்3 points
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
‘‘அப்பா, உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்’’ என மகன் ஆரம்பித்தான். அவனுக்கு 10 வயது இருக்கும். ‘‘சொல்லுப்பா?’’ ‘‘நீங்க படிச்சது பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரியா?’’ ‘‘ஆமா. ஏன் கேக்குறே?’’ ‘‘கெமிஸ்ட்ரி படிச்சிட்டு ஏன் மரக்கடை வச்சிருக்கீங்க?’’ ‘‘ஏன்... வைக்கக்கூடாதா?’’ ‘‘வைக்கலாம். ஆனா உங்க படிப்புக்கும் நீங்க செய்யற வேலைக்கும் சம்பந்தமே இல்லையே அப்பா!’’ ‘‘சரி, இப்ப நீ சைக்கிள் ஓட்டுறேதானே... அது எப்படி ஓடுகிறது?’’ ‘‘அது டயர் இருக்கறதால ஓடுதுப்பா!’’ ‘‘அந்த டயர்ல காத்து இல்லன்னா என்னவாகும்?’’ ‘‘சைக்கிளை ஓட்ட முடியாது.’’ ‘‘சரி, இப்படி காற்று அடைக்கிற சைக்கிள் டயரை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்... சொல்லு!’’ ‘‘ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் டன்லப் என்ற விஞ்ஞானிதான் அதைக் கண்டுபிடித்தவர் அப்பா.’’ ‘‘சரியான விடை. காற்று அடிக்கும் வகை சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர் ஜான் டன்லப்தான். ஆனால், அவர் விஞ்ஞானி கிடையாது. அவர் ஒரு கால்நடை மருத்துவர். அவருக்கும் டயருக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் தன் மகனின் முச்சக்கர சைக்கிளை வேகமாக நகர வைக்க என்ன வழி என்று யோசித்தார். இந்த காற்று அடைக்கும் டயரைக் கண்டறிந்தார். அதைப் பயன்படுத்தும்போது சைக்கிள் வேகமாக ஓடியது. அந்த காற்று அடைக்கும் டயர் முறை பிரபலமாகி, அதைக் கண்டுபிடித்த பெருமையும் ஜான் டன்லப்புக்கு வந்து சேர்ந்தது.’’ ‘‘இந்த புதிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அப்பா.’’ ‘‘ஆமாம். இதைக் கேட்கும் அனைவருக்கும் ‘கால்நடை மருத்துவரா காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்’ என்று ஆச்சரியமாக இருக்கும். ஜான் டன்லப் தான் கற்ற கல்வியை ஒரு துறை சார்ந்த கல்வியாக பார்க்கவில்லை. எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையைத்தான் அவர் கல்லூரியில் கற்றுக் கொண்டதாக நினைத்தார். அதனால்தான் தன் மகனின் சைக்கிளைக் கூட தனது துறையைச் சார்ந்ததாக இல்லாவிட்டாலும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்.’’ ‘‘புரிகிறது அப்பா!’’2 points
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இதையே பாம்புகள் புணரும்போது ஒரு வெள்ளை சேலை அல்லது வேட்டியால் மூடினால் இப்படி கல்லுவரும் என்பார்கள். 1998 தை மாதம் வீடு வாங்கும்போது 13ம் திகதிதான் இரண்டு வழக்கறிஞர்களுக்கும் ஒன்றுமே இல்லை அந்த நாளில் எழுதுவமா என்றனர். எமக்கு பிரச்சனை இல்லை என்று அந்த நாளிலேயே எழுதினோம். 13ம் திகதியை பலரும் மறுத்தபடியால் நல்லதாக போய்விட்டது. அமெரிக்காவில் பல கட்டட பாரம் தூக்கிகளில் 13ம் இலக்கமே இருக்காது.2 points
-
அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
தலைவர் காலத்தில், களத்தில், டிரம்ப் போன்ற ஒருவர் இருக்கவில்லை, டிரம்ப் புட்டினுக்கு சேவகம் செய்வதை போல இலங்கை/இந்தியாவுக்கு சேவகம் செய்யவில்லை என்பதும், இப்போதும் செலன்ஸ்கி வளைந்து கொடுத்தே போக முனைகிறார், நெகிழ்வுதன்மையை காட்டுகிறார் என்பது இரு பாரிய வேறுபாடுகள் ஆனால் இருவர் மீதான அளுத்தமும் ஒன்றே. 2000-2024 அமெரிக்காவின் உக்ரேன் கொள்கை, உக்ரேனின் வளங்களை இப்போ சவுதியின் வளங்களை பாவிப்பது போல் பாவிக்கும் ஒரு திட்டம். டிரம்ப் கேட்பது 100%. இப்போ செலன்ஸ்கி ஒத்து கொள்வதாக சொல்லப்படுவது 50%. எந்த நாடும் தர்மஸ்தாபனம் நடத்துவதில்லை. எல்லாம் உள்நோக்கோடுதான்.2 points
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
2 pointsநீங்கள் சொல்வது மிக சரி. செய்திகளில் நான் கவனமாக அவதானித்தேன். கம்யுனிச ஆக்கிரமப்பின் கீழ் முன்பு இருந்த யேர்மனின் கிழக்கு பகுதி தொகுதிகளில் பேர்லின் தலைநகர தொகுதியை தவிர இனவெறி AFD கட்சி மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் 43 வீதம் வாக்குகளை பெற்றுள்ளது.கம்யுனிச ஆக்கிரமப்பின் கீழ் வாழ்ந்த யேர்மனிய மக்கள் ஏன் இனவெறி சிந்தனை பெற்றார்கள் என்பது விளங்கவில்லை.யேர்மன் மேற்கு பகுதிகளில் இனவெறி AFD கட்சி தோல்வி அடைந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது 16 -18 வீதம் வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் பிரித்தானியாவில் இனவாதிகள் 16 வீதம் பெறுவார்களா தமிழ்நாட்டில் சீமான் இவ்வளவு வாக்குகள் பெற்று கொள்ள முடியாது. ஈரோடு இடை தேர்தலில் மற்ற கட்சிகள் போட்டியிடாததால் பிஜேபி அதிமுக வாக்குகள் அவருக்கு கிடைத்தபடியால் 15 வீதம் வந்தது இனவெறியை நிராகரிக்கும் தமிழ்நாட்டு பிரித்தானிய மக்கள் உயர் மக்கள்👍2 points
-
கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?
மனித உரிமைகள் விசாரணையில் இருந்து இலங்கை அரசை காப்பாற்றியுள்ளார். இது ஒன்றே போதாதா?2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதல்வர் நேற்றே தனி நாட்டுபிரகடனம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்2 points
-
விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலிற்கு அருகில் அமர்ந்து நான்கு மணிநேரம் பயணம் - தங்கள் மனஉளைச்சல் குறித்து அவுஸ்திரேலிய தம்பதியினர் தகவல்
அவசரப்படக்கூடாது.....இதிலை அடுத்தவர்களை பார்த்து விமானத்தில் பயணிக்கவில்லையா என்ற நக்கல் தொனி வேற. நானே விமான ஊழியர்களின் அனுமதியுடன் மூன்று ஆசனங்களில் நன்றாக கையையும் காலையும் நீட்டி உறங்கி சிங்கையிலிருந்து சன்பிரான்சிஸ்கோ சென்று இறங்கியுள்ளேன்2 points
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointவாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். வாழும்வரை போராடு....... 01. யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருக்கும் அந்தப் பிரமாண்டமான கோட்டை போத்துக்கேயரால் முற்றிலும் மனித வலுவைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. அது பகலில் மிகவும் அழகாகவும் இரவில் மிக மிகப் பயங்கரமாகவும் தோற்றம் தரும். அந்த மாலை நேரத்தில் சூரியன் தன் பொற் கதிர்களைத் தெறிக்கவிட்டு மறைவதையும், அதே நேரத்தில் வெண்ணிலவு மேலெழும்புவதையும் சில காலங்களில் தரிசிக்க முடியும். அன்றும் அதுபோன்றதொரு நாள் அருகில் இருக்கும் முனியப்பர் கோவிலின் மாலைப் பூசையின் மணியோசை அந்த அமைதியை ஊடறுத்துக் கொண்டு கேட்கின்றது. அந்தக் கோட்டை மதிலின் கட்டில் இராகவன் அமர்ந்திருக்கிறான். கீழே புற்தரையில் சந்துரு சப்பாணி கட்டி சக்கப்பனிய உட்கார்ந்திருக்கிறான். இருவரின் கைகளும் அனிச்சயாய் கோவிலை நோக்கிக் கும்புடுகின்றன. கீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. அப் பெண்ணின் இடையழகும் கூடவே அசையும் பேரழகுகளும் பார்க்க ரசனையாக இருக்கின்றன . இராகவன் அவர்களைப் பார்த்தபடி சந்துருவிடம், என்னடா சந்துரு இனி என்ன செய்வதாய் உத்தேசம் என்று வினவுகிறான். --- அதுதாண்டா இராகவ் நானும் யோசிக்கிறேன். நாமிருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே பாடசாலையிலும் ஒரே வகுப்பிலுமாகப் படித்து பின் கல்லூரியிலும் சேர்ந்து படித்து அதுவும் சென்ற வாரத்துடன் முடிந்து விட்டது. --- ஓமடா சந்துரு, நாங்கள் கடந்து வந்த காலத்தை நினைத்தால் இனிமையாகவும் மலைப்பாகவும் இருக்குதடா. எங்களைப்போல் இவ்வளவு வகுப்புகள் சேர்ந்து படித்த பள்ளித் தோழர்கள் குறைவு என்னடா. --- உண்மைதான் இராகவ், இனி மேற்கொண்டு படிப்பதாய் இருந்தாலும் உனக்கு வசதியிருக்கு. உன் அப்பா தாமோதரம் கஸ்தூரியார் வீதியில் பெரிய நகைக்கடை வைத்திருக்கிறார். இனி நீ அந்தக் கடையைக் கூட உங்க அப்பாவுக்கு உதவியாய் பார்த்துக் கொள்ளலாம். நான் இனித்தான் என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும். சந்துரு நீ சொல்வது உண்மையென்றாலும் கூட, எனக்கு அப்பாவின் கடையைப் பார்த்துக் கொண்டு வேலை செய்வதில் கொஞ்சமும் ஈடுபாடில்லை. மேற்கொண்டு படிப்பதென்றாலும் உன்னளவுக்கு எனக்கு படிப்பு வராது என்றும் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முடிவு செய்து விட்டேன், நான் ஜவுளி வியாபாரம் செய்வதென்று. நீ விரும்பினால் நாமிருவரும் சேர்ந்துகூட இந்த வியாபாரம் செய்யலாம். இப்ப நான் உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். --- என்னடா இராகவ் புதிர் போடுகின்றாய். என்னவென்று சொல்லடா.........! வாருங்கள் போராடலாம் ......... 💪 .1 point
-
காற்றாடி
1 pointகாற்றாடி - அத்தியாயம் ஒன்று ---------------------------------------------- மழை இன்னும் விட்டுவிடவில்லை, ஆனால் முன்பிருந்ததை விட நன்றாகக் குறைந்து விட்டது போன்று தோன்றியது. மழையின் சத்தம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. கூரையில் இருக்கும் ஓட்டைகளினூடாக வீட்டுக்குள் விழுந்து ஓடும் மழை நீர் முற்று முழுதாக அவனைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அவன் படுத்திருக்கும் இடத்திற்கு சரி மேலாக கூரையில் எந்த ஓட்டைகளும் இல்லாதபடியால், மழைநீர் அவன் மேல் இன்றும் விழுந்திருக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு அகலமான மா பலகையை தரையின் மேல் போட்டு அதன் நடுவிலேயே அவன் படுத்திருந்தான். தரையில் விழுந்து தெறிக்கும் சில மழை ஒழுக்குகள் தன்னில் விழுவதை தவிர்க்க, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தபடி, இரண்டு கைகளையும் இரண்டு கால்களுக்கும் இடையில் வைத்து, கால்களை வயிறு நோக்கி இழுத்து, முழு உடலையுமே குறுக்கி வைத்திருந்தான். சில மழைக் காலங்களை இதே வீட்டில் இப்படியே கடந்து வந்து விட்டபடியால், ஒழுகும் மழையை ஏமாற்றி எப்படி இரவில் தூங்குவது என்று அவன் நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தான். இப்படி ஏராளமான விசயங்களில் அவனுக்கு சமயோசிதமும், அறிவும் இருந்தாலும், அவனுக்கு கழுத்தில் கத்தி வைத்தாலும் வரவே வராது என்று சில விசயங்களும் இருக்கின்றன. எல்லோருக்கும் எல்லாம் வந்து விடுமா என்ன, எந்த மனிதருக்கும் சிலது வரும், சிலது வராது, சிலது வரவே வராது. அவனுக்கு வரவே வராது என்ற வரிசையில் முதலாவதாக வராமல் இருப்பது கணிதபாடம். சாதாரணமான இரண்டு தெரியாக் கணியங்களும், இரண்டு சமன்பாடுகளும் இருக்கும் கணிதம் கூட அவனுக்கு தலைச்சுற்றலைக் கொடுக்கும். அவன் போன வருடம் சாதாரணதரப் பரீட்சை எழுதியிருந்தான். எட்டுப் பாடங்களில் ஏழு பாடங்களில் சித்தி பெற்றிருந்தான். கணிதத்தில் படுதோல்வி. விஞ்ஞானத்தில் சிறப்புச் சித்தி பெற்றிருந்தான். ஆங்கிலத்தில் சாதாரண சித்தி, ஆனால் கணிதத்தில் எஃப் வந்திருந்தது. கணிதமோ அல்லது எந்தப் பாடங்களுமோ என்றுமே அவன் வீட்டில் படித்ததேயில்லை. ஊரில் இருக்கும் பாடசாலைக்கு போவான், பின்னர் வீட்டுக்கு வருவான், அவ்வளவு தான் அவனுடைய கல்வியின் எல்லையும் தேடலும். வீட்டில் எதையும் படிப்பதோ அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போவதோ கிடையாது. மற்ற நேரங்களில் ஊர் விதானையார் போல ஊரை சுற்றிக்கொண்டு திரிவான். அவன் ஏழு பாடங்களில் நல்ல சித்திகள் பெற்றிருந்தபடியால், அவன் வீட்டில் அவனை அடுத்ததாக இன்னும் மேலே படிக்கச் சொன்னார்கள். இதுவரை அவர்களின் குடும்பங்களில், அவனின் அம்மா மற்றும் அப்பாவின் குடும்பங்கள், முதலாவதாக உயர்தர வகுப்புகளுக்கு போகும் ஆள் என்ற பெருமை எவருக்கும் கொடுக்கப்படாமல் அவனுக்காகவே காத்துக்கொண்டு கிடந்தது. கணித பாடத்தில் தவறி இருந்தபடியால், பாடசாலையில் கலை அல்லது வர்த்தகப் பிரிவுக்கு அவனைப் போகச் சொன்னார்கள். அதுவும் கூட அடுத்து நடக்கும் சாதாரண பரீட்சையில் கணித பாடத்தில் சாதாரண சித்தியையாவது அவன் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன். அரைக்காற்சட்டையில் இருந்து அப்போது தான் முழுக்காற்சட்டைக்கு மாறியிருந்தான். வெள்ளை நிற முழுக்காற்சட்டை. அதை தைக்கும் தையல் கடைக்காரர் அவனின் அப்பாவிற்கு மிகவும் தெரிந்தவரே. பாடசாலைக்கு தேவையானது போலவும் இல்லாமல், அன்றைய நாயகர்களின் அகன்ற கால்கள் உடையது போலவும் இல்லாமல், இரண்டுக்கும் மத்தியில் ஒன்றை தைத்துக் கொடுத்திருந்தார் அந்த தையல்காரர். அவனின் ஆலோசனை தான் அது. அந்த முழுக்காற்சட்டையுடன் முதன்முதலாக பாடசாலை போயிருந்த போது, அப்பொழுது தான் கணிதபாடத்தில் சித்தி அடையவே வேண்டும் என்று பாடசாலை அதிபர் சொன்னதற்கு, உடனேயே தலையை ஆட்டியிருந்தான். உயர்தர வகுப்பில் படிக்கின்றோம் என்பதே அவனுக்கு ஒரு நிமிர்வைக் கொடுத்திருந்தது. ஒன்று அல்லது இரண்டு அப்பியாசக் கொப்பிகள் மட்டும், அதையும் சைக்கிளின் பின் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஏதோ சில மணிநேரங்கள் பாடசாலைக்கு போய் வருவது நல்ல ஒரு அனுபவமாகவே அவனுக்கு இருந்தது. அப்படியே அருகிலேயே இருக்கும் தனியார் கல்வி நிலையத்திலும் சேர்ந்திருந்தான். பாடசாலை விட்டு வந்தவுடன் தனியார் கல்வி நிலையத்திற்கு போய்விடுவான். அங்கே போய் அதை நடத்திக் கொண்டிருப்பவருக்கு ஒத்தாசையாகவும் நின்றுகொள்வான். தனியார் கல்வி நிலையத்திற்கு என்று வெள்ளையில் இல்லாத இன்னொரு முழுக்காற்சட்டை, 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் கமல் போட்டு வருவதைப் போன்ற ஒன்று, வைத்திருந்தான். அவனுடைய சித்தப்பா ஒருவர் பெறாமகன் பெரிய படிப்புகள் படிக்கின்றானே, தான் எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று, இந்த இரண்டாவது முழுக்காற்சட்டைக்கான செலவைப் பொறுப்பேற்றிருந்தார். அதுவே சித்தப்பா முறை என்றபடியால் அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருந்தார்கள். இதையே ஒரு மாமன் முறை உள்ளவர் செய்யக் கேட்டிருந்தால், அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருக்கவேமாட்டார்கள். இதுவே ஒரு கடமையாகி, அது எங்கே போய் முடியுமோ என்ற பலமான ஒரு காரணம் இதன் பின்னால் இருந்தது. அவனுக்கு சொந்தத்தில் ஏழு எட்டு மச்சாள்மார்கள் இருந்தனர். இன்று இப்பொழுது விடியப் போகும் காலையில் சாதாரணதர கணிதபாட பரீட்சை. மழை தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து கொண்டிருந்தது. போன தடவை அவன் கணிதபாட பரீட்சை எடுத்ததிற்கும், இன்றைக்கும் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கின்றதா என்ற யோசனை அவன் மனதில் ஓடியது. போன தடவை மழை பெய்யவில்லை என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. இந்த காலப்பகுதியில் அவன் ஒரு நாள் கூட கணிதம் படித்திருக்கவில்லை. போன தடவை வந்த அதே பரீட்சை முடிவு தான் இந்த தடவையும் வரப் போகின்றது என்பது தெளிவாகவே அவனுக்கு தெரிந்தது. இப்பொழுது என்ன செய்யலாம் என்று நினைத்தபடியே நிமிர்ந்துபடுத்தான். நிலத்தில் விழுந்த மழை ஒழுக்கு ஒன்று தெறித்து அவன் முகத்தில் வந்து விழுந்தது. அது விழுந்த இடம் சில்லென்று குளிர்ந்தது. (தொடரும்....................)1 point
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
வீடியோ பார்த்தேன், பொலிஸ் அதிகாரி அராஜகமாத்தான் நடந்து கொண்டிருக்கின்றார். அவர் தான் முதலில் தாக்கி இருக்கின்றார். சம்மனை கிழித்தது தவறு. ஆனால் அதற்காக இந்த அதிகாரி செய்தது தவறுமட்டுமல்ல, அதிகார துஷ்பிரயோகம்.1 point
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
https://x.com/nellaiselvin87/status/1895113833825403340?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A வீடியோவில் எல்லாம் தெளிவாக உள்ளது.காவல்துறை ஆய்வாளர்தான் முதலில் படலையைத்திறந்தவரிடம் என்ன விடயம் என்று விளக்காமல் படலை சற்றுத் திறக்க முன்னரே காவலரைத் தள்ளித் தாக்க முயற்சித்திருக்கிறார்.அதுமட்டுமல்ல அந்தக் காவலரின் தாக்குதலால் காரணமாக வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறாராம் அந்த காவலர்.ஊடகங்கள் சொல்வதற்கும் காணொளியில் இருப்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன.1 point
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இப்போது ஆப்கானின் வெற்றியை அதிர்ச்சி என்று கூறமுடியது. அவர்கள் உண்மையிலேயே நன்றாக விளையாடுகிறார்கள்.1 point
-
திட்டமிட்டபடி நாளை தொடர் உண்ணாவிரதம் - தமிழக மீனவர்கள் அறிவிப்பு
எல்லை தாண்டி கொள்ளை அடிக்க அனுமதி கேட்டும், கொள்ளையடித்தவர்களை விடுதலை செய்யக் கேட்டும் நிகழும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை சாகும் வரைக்குமான உண்ணாவிரதமாக மாற்றி போராடுமாறு நான் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.1 point
-
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி பூஜைகள் அமைதியாக இடம்பெற்றது
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி பூஜைகள் அமைதியாக இடம்பெற்றது நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது. அந்தவகையில் புதன்கிழமை (26) மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றது. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது. இம்முறை ஆலயத்தில் மாலை 6மணிவரை மாத்திரமே பூஜைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் மாலை 6 மணிவரை ஆலயத்தில் விசேடவழிபாடுகளை மேற்கொண்ட பொதுமக்கள் அதன்பின்னர் தமது வீடுகளிற்கு சென்றிருந்தனர். இதேவேளை புதன்கிழமை (26) காலை முதல் ஆலய பகுதியில் நெடுங்கேணி பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் பொதுமக்களின் வழிபாட்டுசெயற்பாடுகளுக்கு எந்தவித தடைகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. கடந்தவருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்யமுற்ப்பட்ட 8பேர் நெடுங்கேணி பொலிசாரால் அடாவடியான முறையில் கைதுசெய்யப்பட்டனர். அந்த செயற்பாடு பதற்றம் ஒன்றை உருவாக்கியிருந்ததுடன், பொலிசாரின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றிருந்தது. https://akkinikkunchu.com/?p=3140681 point
-
"கரை கடந்த புயல்"
1 point"கரை கடந்த புயல்" நவம்பர் 27, 2024 அன்று காலை கடற்கரை நகரமான திருகோணமலை அபாய எச்சரிக்கையுடன் விழ்த்தெழுந்தது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் புயலாக வலுப்பெற்ற, பெஞ்சல் புயலாக [Fengal Cyclone] வலுவடைந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. செல்வராஜா குடும்பத்தினருக்கு இந்தப் புயல் இயற்கைப் பேரிடரை விட அதிகம்; இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளை சீர்குலைக்கும் அச்சுறுத்தலாக இருந்தது. மீன்பிடி தொழிலாளியான செல்வராஜாவுக்கும், மீனா என்ற அவரின் மனைவிக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூத்தவரான 18 வயது கவிதா, தனது குழந்தைப் பருவ காதலியான அரவிந்துடன் நவம்பர் 29ஆம் தேதி திருமணத்தை பதிவு செய்யவிருந்தார். அரவிந்த் அடுத்த வாரம் உயர் படிப்பைத் தொடர லண்டனுக்குப் புறப்பட இருப்பதால், அவன் புறப்படுவதற்கு முன்பு அவர்கள் தங்கள் காதலை, திருமணப் பதிவாக, அதை இரு குடும்பத்தார்களின் மத்தியில் உறுதிப்படுத்த முடிவு செய்தனர். ஆனால், அவன் திரும்பி வந்த பின்புதான், குடும்ப மரபின்படி [சம்பிரதாய முறைப்படி] திருமணம் செய்வதென்றும் முடிவெடுத்தனர். இலங்கையில், நவம்பர் 27 2024 புதன்கிழமை மாலை வரை, நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளதுடன் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, 8 பேர் காணாமல் போயுள்ளனர். இது தவிர 9 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 8 வீடுகள் முழுமையாகவும், 620 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என அரசு அறிவித்தது. இவைகளில், திருகோணமலையில் 1537 குடும்பங்களைச் சேர்ந்த 4385 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை இது கிழக்கு கடலின் ஊடாக நகர்வதால் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றராகக் காணப்படும் எனவும் ஆழ்கடல் பகுதிகளில் 80 – 90 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசு தெரிவித்தது. செல்வராஜாவும் மீனாவும் தங்கள் வீட்டில் இருந்து கடலை நோக்கினார்கள். அங்கே, அவசர அவசரமாக கரைக்கு திரும்பிக்கொண்டு இருக்கும் மீன்பிடி படகு ஒன்று, புயல் காற்றினால் கவிழ்வதைக் கண்டனர். "கால் ஏமுற்ற பைதரு காலைக் கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு" 'கடிய புயற்காற்று வீசிச் சுழற்றுதலாலே துன்புற்று கடலிலே தாம் ஏறியிருக்கும் மரக்கலங் கவிழ்ந்து விட, கலக்கமுற்றுத் தாமும் ஒருசேர வீழ்ந்து' என நற்றிணை (30: 7-8) கூறுவதை செல்வராஜா ஒப்பிட்டுப் பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர் சிந்தியது. இந்த பெஞ்சல் புயல் மேகங்கள் மெல்ல மெல்ல பெரிதாக திரண்டதால், செல்வராஜா குடும்பத்தின் கவலைகளும் அதிகரித்தன. அவர்களின் சாதாரண வீட்டிற்கு மேலும் பலமான காற்றுடன் மழை பெய்தது, அந்தக் கடலோரக் காற்று அச்சுறுத்தலாக வளர்ந்தது. எனவே திருமண பதிவை ஒத்திவைக்கலாமா என்று செல்வராஜாவும் மீனாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிவாளர் அலுவலகம் கூட அருகில் இல்லை, சில கிலோமீட்டர் தொலைவில் தான் இருந்தது. அதேவேளை இலங்கை வானொலி, எச்சரிக்கை அறிவித்தல்களை தொடர்ந்து அவசரம் அவசரமாக அறிவித்துக்கொண்டு இருந்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன .கூரைகள் பறந்தன. ஆடு மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பெரியோரும் குழந்தைகளும் உணவின்றி தவித்தனர் என ஒரு பட்டியலையே கொடுத்துக் கொண்டு இருந்தது. "கடற்கரை ஊருகள், நகரங்கள் அழிந்திடுமாம் வெள்ளம், ஊதி வந்த காற்றுடனே போட்டியிடுமாம் சீருந்துகள் [மகிழுந்து], படகுகள் அழிந்திடுமாம் வீடுகள், பாடசாலைகள் வெள்ளம் நுழைந்துடுமாம் சோலைகளும் மரங்களும் வேர்கள் பிடுங்கிடுமாம்" "புயல் தீவிரமடைந்தால் என்ன செய்வது?" மீனா கேட்டாள், அவள் குரல் கவலையில் கனத்தது. "இது மிகவும் ஆபத்தானது." ஆனால் கவிதா, அரவிந்தின் கையைப் பிடித்துக் கொண்டு உறுதியாக இருந்தாள். “அம்மா, இது எங்களுக்கு முக்கியம். புயல் நம்மைத் தடுத்து நிறுத்த அனுமதிக்க முடியாது. அரவிந்தும் தலையசைத்தான், அமைதியான உறுதியால் அவர்கள் இருவரினதும் கண்கள் நிரம்பி ஒளிர்ந்தன. "இதை ஒன்றாகச் சந்திப்போம்," என்று அவன் உறுதியளித்தான். "உரு கெழு யானை உடை கோடு அன்ன, ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ, தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்: நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ வில் எறி பஞ்சி போல, மல்கு திரை வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே" 'அச்சம் தரும் யானையின் உடைந்த தந்தம் போல மலர்ந்திருக்கும் தாழம்பூவின் மடல், வாடைக்காற்று வீச்சில், மகளிர் வண்டல் விளையாடும் களத்தில் வந்து விழும் ஊர் நம் [கடற்கரை] ஊர். இந்த ஊரே என்னைக் கைவிட்டுத் தனிமைப்படுத்தினாலும், அவர் தான் எனக்குத் துணை. அவரும், நான் இல்லாமல், தான் இல்லை என்று வாழ்பவர். வில்லால் அடித்த பஞ்சு போல அலைநுரை பொங்கும் குளிர்ந்த கடல்நிலத் தலைவனாகிய சேர்ப்பன் [நெய்தல் நிலத்து மகன் ] அவன். அவனோடு சிரித்துக்கொண்டு விளையாடாவிட்டால் நான் இருக்கமாட்டேன்.' என்கிறது நற்றிணை 299 கூறுகிறது. அப்படித்தான் கவிதா இருந்தாள். நவம்பர் 29 காலை இடைவிடாத மழை மற்றும் பலத்த காற்றுடன் விடிந்தது. வெளியே குழப்பம் இருந்தாலும், செல்வராஜா குடும்பத்தினர் அன்றைய தினத்திற்கு தங்களை தயாராக்கினர். அக்கம்பக்கத்தினர் எல்லோரும் எல்லாவித உதவிக்கும் விருப்பத்துடன் உள்ளே வந்தனர். கையில் குடைகள் மற்றும் மழையங்கிகளும் கொண்டுவந்தனர். மற்றும் பதிவாளர் அலுவலகத்திற்கு பயணம் செய்ய ஒரு வேனையும் [கூண்டுந்து] கொண்டு வந்தனர். கவிதாவின் சகோதரர்கள், 15 வயது ரமேஷ் மற்றும் 12 வயது சஞ்சய், மழையில் இருந்து அக்காவை பாதுகாக்க, குடைகளைப் பிடித்துக் கொள்ளும் பணியில் ஈடுபட்டனர். செல்வராஜா குடும்பம் வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் செல்லும்போது, மரங்கள் மற்றும் மின்கம்பிகள் அங்கும் இங்கும் விழுந்து கிடந்தது . வேன், அங்கு வீதியில் ஓடாமல் தேங்கி இருக்கும் வெள்ளத்தில் பல முறை சறுக்கியது, ஆனால் ஓட்டுநர், அனுபவம் வாய்ந்த உள்ளூர்வாசி, திறமையாக அந்த வீதியில் சமாளித்து ஓட்டினான். "நாங்கள் சரியான நேரத்துக்கு முன் அங்கு போவோம்," என்று அவன் அவர்களுக்கு உறுதியளித்தான், “பொதுவில் தூங்கு விசியுறு தண்ணுமை வளி பொரு தெண் கண் கேட்பின்” எனப் புறநானூறு 89 இல் கூறும் 'மன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போர்த்தண்ணுமையில் (போர்முரசு) காற்று மோதுவதால் உண்டாகும் சிறிய ஒலியான' ஊளையிடும் காற்றையும் மீறி அந்த அவனது குரல் அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது. பதிவாளர் அலுவலகத்தில், ஒரு சில தம்பதிகள் மட்டும், புயலையும் தைரியமாக எதிர்கொண்டு, தங்கள் குடும்பத்துடன் பதிவு திருமணம் செய்ய அங்கு வந்திருந்தனர். வளிமண்டலம் பதட்டமாக இருந்தாலும், தங்கள் நல்ல நாளை பின்போடாமல், நிறைவேற்றுவதில் அவர்கள் மகிழ்வாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். கவிதா மற்றும் அரவிந்தின் முறை வந்ததும், பதிவாளர் விழாவை விரைவாக, சுருக்கமாக ஆனால் ஆடம்பரமாக நடத்தினார். இளம் தம்பதிகள் ஒருவருக்குஒருவர் சபதம் பரிமாறிக் கொண்டார்கள். அவர்களின் காதல், வெளியில் வீசும் புயலை விட பலமாக இருந்தது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய சுமேரியாவில் ஆண் பெண் இருவருக்கும் இடையிலான உறவுகள், ஒரு திருமணக் கோரிக்கை அல்லது முன்மொழிதல் உடன் ஆரம்பமாகி, அதை தொடர்ந்து, திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டு , இறுதியாக ஒரு கல்யாணத்தில் முடிவுக்கு வருகிறது. அங்கு பொதுவாக எல்லா பெண்களும் தமது சம்பிரதாய பங்கான, மனைவி, தாய், வீட்டுக் காப்பாளர் ஆகிய நிலைகளுக்கு சிறு வயதில் இருந்தே நன்கு பயிற்றுவிக்கப் பட்டுள்ளனர். பெண் தெய்வம் குலாவிற்கான [goddess Gula] துதிப்பாடல், பெண்களின் வெவ்வேறு நிலைகளை "நான் ஒரு மகள், நான் ஒரு மணமகள், நான் ஒரு மனைவி, நான் ஒரு இல்லத் தரசி" ["I am a daughter, I am a bride, I am a spouse, I am a house keeper"].என கூறுகிறது. அப்படித்தான் இன்று கவிதா மகள் நிலையில் இருந்து மணமகள் நிலைக்கு வந்துள்ளார். "புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி, ''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என, நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க, வதுவை நல் மணம் கழிந்த பின்றை" திருமண பதிவு நிலையத்தில் கூடியிருந்த சிறுகூட்டத்தில் இருந்த திருமணமான மகளிரும் தம் தம் கணவருடன் சேர்ந்து கூடிநின்று ஈரமான பூக்களையும், நெல்லையும் தலையில் போட்டு, நீர் தெளித்து வாழ்த்திச் சடங்குத் திருமணத்தை நடத்திவைத்தனர். “கற்புநெறி வழுவாமல் வாழ்க, நல்ல பல பிள்ளைகளை உலகுக்கு உதவி வாழ்க, தன்னைப் பெற்ற பெற்றோரையும், கணவனைப் பெற்ற பெற்றோரையும் விரும்பிப் பேணும் பிணைப்புடையவளாக வாழ்க” என்றல்லாம் வாழ்த்தினர். கவிதாவின் தலையில் போட்ட பூவும், நெல்லும், சீவி முடித்த கூந்தலில் (கதுப்பு) கிடந்தன. அவள் மகிழ்ச்சியின் ஒரு எல்லைக்கே போய்விட்டாள். தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “பெங்கல்” சூறாவளியானது திருகோணமலைக்கு வடக்கே 360 கிமீ தொலைவிலும் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கிமீ தொலைவிலும் நவம்பர் 29, 2024 இரவு 11.30 மணிக்கு நிலை கொள்ளுமென வானிலை ஆய்வு மையம் அன்று தெரிவித்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவித்தது. எனவே வீட்டிற்கு திரும்பிய குடும்பம், அவசரம் அவசரமாக ஒரு சிறிய கொண்டாட்டத்திற்கு கூடியது. அக்கம் பக்கத்தினர் கலந்து கொண்டு, வீட்டில் இருந்து இனிப்புகளை எடுத்து வந்து வாழ்த்துக்கள் [ஆசிர்வாதம்] கூறினர். அரவிந்தும் கவிதாவும் எதிர்கால கனவுகளைப் பகிர்ந்து கொண்டு, மாலைப் பொழுதை தங்கள் வீட்டின் சுற்றாடலில் கழித்தனர். "புயல்கள் கரையைத் தாக்கினாலும், கடல் கிசுகிசுக்கிறது: எங்கள் காதல் நிலைத்திருக்கும்." என்ற உணர்வுதான் அவர்கள் இருவரிடமும் இருந்தது. புயல் ஓயாமல் தொடர்ந்தாலும், அவர்களின் இதயம் அமைதியாக இருந்தது, அவர்களின் அன்பாலும், குடும்பத்தினரின் ஆதரவாலும் அது நங்கூரமிட்டது. மறுநாள் காலை, வானம் தெளிவாகத் தொடங்கியது. என்றாலும் இருவர் குடும்பமும் மற்றொரு சவாலை எதிர்கொண்டது: அரவிந்தை கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லவேண்டி இருந்தது. பொது போக்குவரத்து தடைப்பட்டதால், செல்வராஜா ஒரு நம்பகமான வேனை ஏற்பாடு செய்தார். ஆனால் மரங்கள் முறிந்து விழுந்த மற்றும் உடைந்த பாலங்கள் நிறைந்த சாலைகளும் இடைவிடாத மழையும் பயணத்தை அவர்களுக்கு கடினமாக்கியது. எது எப்படியாயினும் அவர்கள் சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைந்தனர். புறப்படும் வாயிலில் கவிதாவும் அரவிந்தும் கண்ணீர் மல்க விடைபெற்றனர். அரவிந்த் அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டான். “தினமும் உன்னுடன் பேசுவேன், எழுதுவேன், இந்த ஆண்டுகள் விரைவில் கடந்துவிடும்" என்று ஆறுதல் கூறினான். அவன் சென்றதும், கவிதா தன் கண்ணீரைத் துடைத்தாள், அவளுடைய இதயம் கனமாக இருந்தாலும் நம்பிக்கையுடன் இருந்தது. அவர்களின் காதல் தூரத்தையும் நேரத்தையும் தாங்கும் என்று அவளுக்குத் தெரியும். செல்வராஜா குடும்பத்தினர் அன்று மாலையே திருகோணமலைக்குத் திரும்பினர். புயல் அவர்களின் நெகிழ்ச்சியை சோதித்தது, ஆனால் அவர்கள் அதை ஒன்றாக எதிர்கொண்டனர். கவிதா மற்றும் அரவிந்துக்கு, புயல் இயற்கையின் சக்தி மட்டுமல்ல, அவர்களின் அன்பின் வலிமைக்கு ஒரு சான்றாக இருந்தது, கடுமையான காற்று கூட அவர்களைப் பிரிக்க முடியாது என்பதை நினைவூட்டியது. காதலும் கரையைப் போலவே ஒவ்வொரு புயலையும் தாங்கும் என்பதை உணர்ந்தாள். "புளகாங் கிதமே புறவேலி யாக. கன்னந் தனில் நீ சின்ன மாகள். அடைக்கலப் பொருள்போல் அமையப் பேணும்" [காதா சப்த சதி 1 - 69] [காதா சப்த சதி' என்பது கி. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பாடல்கள்] ஒரு பொருளை ஒருவரிடம் அடைக்கலமாகக் கொடுத்தால், அதை பாதுகாப்பது அவரின் அறத்தின் கடமை. அதைப்போலத்தான் அரவிந், விமான நிலையத்தில் பிரியும் முன் கவிதாவை காதலுடன் முத்தமிட்ட பற்குறியை கவிதா கண்ணாடியில் காணும் போதெல்லாம் புளகிதம் அடைந்து, அதை அரவிந்தின் நினைவாக விரும்பி பாதுகாத்தாள்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point
- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
வயது முதிர்ந்த நாக பாம்புகளின் வாயில் பெறுமதி மிக்க... ஒளி வீசும் இரத்தினக் கற்கள் உள்ளது. அவை இரவில்... இரை தேடும் போது, அதனை கக்கி விட்டு அந்த ஒளி வெளிச்சத்தில் இரை தேடும். அப்போது.... மாட்டு சாணத்தை, அந்த இரத்தினக் கல்லின் மீது போட்டால்... பாம்புக்கு கண் தெரியாமல், இரத்தினைக் கல்லை விட்டுவிட்டு போய் விடும். பாம்பு போன பின்... அந்தக் கல்லை நாம் எடுக்கலாம். 😂 🤣1 point- யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ.1 point- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
ஆமாம் உண்மை ஆனால் 2020,...2024 கொள்கை ஆனாது என்ன??? மக்கள் இந்த உலகில் சுதந்திரமாக வாழ வேண்டும் அதாவது உக்கிரேன். மக்களும் நாடும் அடிமை படுத்தப்படமால். அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது தான் இவர்களுக்கு கனிமவளங்களில். ஆசை இல்லை விருப்பம் இல்லை என்றால் இதோ உதவிகளை உலகில் விடுதலைக்கு போரடும். மக்களுக்கு இதோ போன்ற உதவிகளை ஏன் செய்யவில்லை ?? ஈராக் குவைத்தை அடித்து பிடிக்கிறான் பிடிக்கட்டும். ஆளட்டும். அமெரிக்காவுக்கு அங்கே என்ன வேலை?? எண்ணை இருந்த . காரணத்தால் கூட்டாளிகளுடன். சேர்ந்து அடித்தார்கள். 2020,...2024. இல். ஒப்பந்தம் செய்யவில்லை கனிமவளங்களை கோரப்படவில்லை ஆகவே அவர்களுக்கு அதில் ஆசையும் இல்லையா?? இருந்தது ஆனால் சொல்லவில்லை ஊரிலேயே அனேகமாக மாணவர்கள் காதலிக்கிறார்கள். திருமணமும் செய்கிறார்கள் ஆனால் நான் படித்த காலத்தில் காதலிப்பார்கள். ஆனால் இறுதிவரை அதை சொல்வது இல்லை 🤣🤪. அதேபோல தான் 2020,....2024. காலப்பகுதியும். 🙏1 point- கருத்து படங்கள்
1 point1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
நன்றி சகோ விரிவான நேரத்திற்கு. இந்திய பூதத்தை திருப்தி படுத்தியபடி எமது தேசத்தை மீட்கும் போராட்டத்துக்கும் ரசிய பூதத்தை திருப்தி படுத்தியபடி உக்ரைனை காக்கும் போராட்டமும் கடைசி காலப்பகுதியில் நிகழ்ந்த நிலைப்பாடுகளில் ஒரே வரை கோட்டில் வந்து நிற்பதாக உணர்கிறேன். இந்த காலகட்டத்தில் தலைவர் மீது வைக்கப்பட்ட ஏற்கமுடியாத நிபந்தனைகள் தவிர்க்க முடியாத கட்டளைகள் விட்டு கொடுக்க முடியாத கொள்கைகள் நிலங்கள் நம்பிக்கை துரோகங்கள் முதுகு குத்தல்கள் வெறும் நாக்கு ஜாலங்கள் மிரட்டல்கள் பெரிய இடத்து அதிகார அத்துமீறல்கள் என்று எமக்கு தெரிந்த தெரியாத பல விடயங்கள் இருக்கும். ஆனால் தோல்வி எம்மில் சிலரை தலைவர் மீது இவை சார்ந்து விரல் நீட்ட வைக்கிறது. எனவே அதை நாம் முழுமையாக உணர உக்ரைன் எமக்கு உதவும் என்று நம்புகிறேன். நன்றி.1 point- டொலரில் சம்பாதிப்பவர்களுக்கு வரி - அமைச்சர் வெளியிட்ட தகவல்
உவையளை பாராளுமன்றத்துக்கு அனுப்ப பாடுபட்ட யூ டியுப் காரரும் வரி கட்ட வேணும் பாதாள உலக குழுவினர் அல்லது மகிந்தா கோஸ்டியினர் அபகரிப்பினம் ...என சொல்லாமல் சொல்லுகின்றார்1 point- விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலிற்கு அருகில் அமர்ந்து நான்கு மணிநேரம் பயணம் - தங்கள் மனஉளைச்சல் குறித்து அவுஸ்திரேலிய தம்பதியினர் தகவல்
பயணிகள் எல்லோரும் ஏறிய பின், இருக்கைகள் காலியாக இருந்தால்… மாறி அமர்வது சர்வ சாதாரணமானது. நானே பலமுறை மாறி அமர்ந்து இருக்கின்றேன். இதுவரை… எனக்கு எந்த விமான ஊழியரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.1 point- யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
இலங்கையில் புதிதாக அரசு வெளியிட்ட பாலர் பாடப்புத்தகத்திலிருந்து.🐕…..👇 நாய் அரிசி காக்கும்.1 point- ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
சாம்பியன்ஸ் டிராஃபி: ஆப்கானிஸ்தான் திரில் வெற்றி, இங்கிலாந்து ஏமாற்றம் - சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அணியின் வெற்றியை கொண்டாடும் ஒமர்ஸாய் 27 பிப்ரவரி 2025, 03:37 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் லாகூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் இங்கிலாந்து அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆப்கானிஸ்தான் அணி. இதனால், சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 325 ரன்கள் எடுத்தது. 326 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் விளையாடியது இங்கிலாந்து. ஆனால், 49.5 ஓவர்களில் 317 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இங்கிலாந்து அணி. இந்தியா - பாகிஸ்தான் 'ஆயுதமில்லா போரை' இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது எது? ஒரு பகுப்பாய்வு இந்தியாவிடம் தோல்வி - பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறியது என்ன? இந்தியா அரையிறுதிக்கு தகுதி, பாகிஸ்தான் வெளியேற்றம்: நியூசிலாந்து - வங்கதேசம் ஆட்டத்தில் என்ன நடந்தது? சேவாக் சாதனை சமன்: இங்கிலாந்துக்கு எதிராக 352 இலக்கை எட்டிப் பிடித்து வரலாறு படைத்த ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 111 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். 11 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து இந்த ஸ்கோரை அடைந்தார் ஜோ ரூட். அவருடைய காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக, இறுதியில் 26 பந்துகளுக்கு 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜோ ரூட் அவுட் ஆனார். ஜோ ரூட் ஆட்டத்தில் இருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தானின் தோல்வி முகம் வெற்றியின் பக்கம் திரும்பியது. இங்கிலாந்து அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் மிக விரைவாகவே அவுட் ஆகினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபில்ட் சால்ட் 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பென் டக்கெட் 45 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். ஜேமி ஸ்மித் 9, ஹேரி ப்ரூக் 25, கேப்டன் ஜோஸ் பட்லர் 38, லியம் லிவிங்ஸ்டோன் 10, ஜேமி ஓவர்டன் 32, ஜோஃப்ரா ஆர்ச்சர் 14, அடில் ரஷித் 5 ரன்களை எடுத்தனர். மேலும், மார்க் வுட் 2 ரன்களை எடுத்த நிலையில் பெவிலியனுக்கு திரும்பினார். இங்கிலாந்து அணி வீரர் ஜேமி ஓவர்டன் 32 ரன்கள் அடித்த நிலையில், வெற்றி நோக்கி வந்த இங்கிலாந்துக்கு மூன்று விக்கெட்டுகள் மீதமிருக்கும் நிலையில், 14 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆல் அவுட் ஆனது. தொழிலதிபர் ஷியாம் சுந்தர் பார்டியா மீது பாலியல் வன்கொடுமை புகார் - புகார்களை மறுத்து அறிக்கை3 மணி நேரங்களுக்கு முன்னர் அரசுப் பள்ளி கழிப்பறையில் சடலமாக கிடந்த 14 வயது மாணவர் - என்ன நடந்தது? இன்றைய முக்கிய செய்திகள்2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 111 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். இதில், 11 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார் அசத்திய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை அஸ்மதுல்லா ஒமர்ஸாய் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை எடுத்தார். முகமது நபி 2 விக்கெட்டுகளையும் ஃபஸல்ஹக், ரஷித் கான் மற்றும் குல்பதின் நயிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலிருந்து வெளியேறியது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக வலுவாக பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் ஸத்ரான் 146 பந்துகளில் 177 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 12 ஃபோர்களும் அடங்கும். இது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியில் இதுவரை ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 37 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அந்த அணி தோற்று விடுமோ என கருதப்பட்டது. ஆனால், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் ஹஸ்மத்துல்லா இருவரும் சேர்ந்து 103 ரன்கள் எடுத்து அணி அதிக ஸ்கோர் குவிக்க உதவினர். அஸ்மத்துல்லா ஒமர்ஸாய் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். முகமது நபி 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். 2020 டெல்லி கலவரம்: ஐந்து ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களுக்கு விடுதலை எப்போது? பிபிசி கள ஆய்வு25 பிப்ரவரி 2025 தவெக ஆண்டு விழாவில் விஜய் பேசிய 5 முக்கிய விஷயங்கள்26 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டநாயகன் விருதைப் பெற்ற ஸத்ரான் சாதனை படைத்த ஸத்ரான் ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஸத்ரான் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இதுவரை ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் டக்கெட் 165 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. மேலும், உலகக் கோப்பைக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராஃபியில் ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்ற ஸத்ரானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஸத்ரான் 146 பந்துகளில் 177 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 12 ஃபோர்களும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய இங்கிலாந்து அணி போட்டியின் ஆரம்பத்தில் இங்கிலாந்து வெளிப்படுத்திய பிரமாதமான ஆட்டத்தோடு ஒப்பிட்டால் போட்டியின் முடிவு மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. முதல் நான்கு ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே வழங்கினார்கள் வுட் மற்றும் ஆர்ச்சர். அதனைத் தொடர்ந்து ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் சேதிக்குல்லா அதால் ஆகியோர் ஐந்தாவது ஓவரில் அவுட் ஆனார்கள். சில நிமிடங்களிலேயே ரஹ்மத் ஷாவும் அவுட்டானார். கடந்த 14 ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு, நேற்று பவர்ப்ளேயில் 3 விக்கெட்டுகளை இங்கிலாந்து வீழ்த்தியது. வுட் அவருடைய நான்காவது ஓவரில் காலில் பிரச்னை ஏற்பட்டு வெளியேற, இப்ராஹிம் தன்னுடைய அணிக்கான ரன்களை குவிக்க ஆரம்பித்தார். இப்ராஹிமும் ஹஸ்மத்துல்லா ஷாஹிதியும் சேர்ந்து 124 பந்துகளுக்கு 103 ரன்கள் குவித்து அபாரமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். பின்பு ஷாஹிதி ரஷித்தின் பந்தில் அவுட் ஆனார். ஆப்கானிஸ்தான் அணி 30-வது ஓவரில் 140 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த போதும் இங்கிலாந்து தான் போட்டியை கட்டுப்பட்டுத்தியது. முகமது நபியும் இப்ராஹிமும் சேர்ந்து 9.1 ஓவர்களுக்கு 111 ரன்களை எடுத்தனர். முகமது நபி 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தனர். மீண்டும் களத்துக்கு வந்த வுட் 4.2. ஓவர்களுக்கு 37 ரன்களை வாரி வழங்கினார். 47-வது ஓவரில் பந்து வீசிய ரூட் ஆப்கானிஸ்தானின் 6-வது விக்கெட்டை எடுத்தார். முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை களத்தில் நின்று ஆடிய இப்ராஹிம் பவுண்டரிகளை விளாசினார். நான்கு நாட்களுக்கு முன்பு டக்கெட் புரிந்த சாதனையை அவர் முறியடித்து புதிய சாதனையை சாம்பியன்ஸ் டிராஃபி வரலாற்றில் அவர் பதிவு செய்தார். இங்கிலாந்து ஆட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணி டி20 போட்டிகள் போல் விளையாடுவது சரியான அணுகுமுறை இல்லை என்று முன்னாள் வீரர் கருத்து இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கூறியது என்ன? இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் விக் மார்க்ஸ் இது குறித்து பேசும் போது, "இது பிரபலமற்ற கருத்தாகக் கூட இருக்கலாம். ஆனால் சர்வதேச அளவில் நீங்கள் 50-ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை என்றால் அத்தகைய போட்டி ஆட்டங்களில் சிறப்பான பங்களிப்பை தர இயலாது. ஜோ ரூட்டைப் பாருங்கள். அவர் 50-ஓவர் இன்னிங்க்ஸை சிறப்பாக ஆடினார். ஆனால் டி20 விளையாட்டு அனுபவம் மற்றும் அதில் உள்ள திறன்களை மையமாக கொண்டு நீங்கள் அணியை உருவாக்கி இருந்தால், 10 ஓவர்களுக்கு மேல் பந்து வீசாதவர்களாகவே அவர்கள் இருப்பார்கள்," என்ற விமர்சனத்தை முன்வைத்தார். "இதில் கவனமும் மிக முக்கியம். பில் சால்ட் இந்த குளிர்காலத்தின் துவக்கத்தில் நல்ல ஆரம்பத்தைக் கொண்டிருந்தார். ஆனால் அது டி20க்கு என்று வரும் போது சரியாக இருக்கும். ஒரு நாள் போட்டிகளில் இதே போக்கு இருந்தால் அது விரைவாக விக்கெட்டுகளை இழக்கவே வழிவகை செய்யும். அது அடுத்தடுத்து விளையாட வரும் பேட்ஸ்மென்களுக்கும் நெருக்கடியைக் கொடுக்கும். இது டி20-ல் இருந்து முழுமையாக மாறுபட்டது. நீங்கள் இதை வேறொரு விதத்தில் அணுக வேண்டும். இதனை பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் உணர்ந்திருப்பதாக தோன்றவில்லை," என்றும் அவர் கூறினார். இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் இது குறித்து பேசும் போது, "தொடரில் இருந்து வெளியேறியது வருத்தமே அளிக்கிறது. எங்களுக்கான வாய்ப்புகள் இருந்தது. இது சிறப்பான விளையாட்டு. ஆனால் போட்டி முடிவுகள் எங்களுக்கு வேறுவிதமாக அமைந்துவிட்டது," என்று கூறினார். ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, "ஒரு அணியாக இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்கள் மொத்த நாடும் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என்று எனக்கு தெரியும். நாங்கள் அடுத்த ஆட்டத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் முதல்முறையாக இங்கிலாந்தை 2023 உலக கோப்பைப் போட்டியின் போது தோற்கடித்தோம். ஒவ்வொரு நாளும் ஒரு அணியாக நாம் முன்னேறி வருகிறோம் என்று நான் அடிக்கடி கூறுவது உண்டு. போட்டி முடிவுகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgkmm1l0jlxo1 point- பாட்டுக் கதைகள்
1 pointநாங்கள் பேருந்துக்கு கால் கடுக்கக் காத்திருக்கும் போது எதிர்ப்பக்கமாத் தான் வாகனங்கள் போகும். மர்பியின் விதிகள் போல. 😄 டிப்போக் கதையைக் கேட்க ஆவல் 🫡1 point- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
சஞ்சய் இராமசாமி யார் என்று எனக்கு தெரியவில்லை மேலே உள்ள கருத்தை படித்துவிட்டு நானும் விழுத்து விழுந்து சிரித்தேன் சீமான் தான் இப்படியான நிலைக்கு கொண்டு வந்திருப்பார் என்பது எனது நம்பிக்கை1 point- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
ஓட விட்டுத்தான் சொல்ல முடியும். என் கருத்து: டிரம்ப் உண்மையில் இப்படி கேட்பது, கனிமத்தை பெற அல்ல. மாறாக உக்ரேன் தரமுடியாத ஒன்றை கேட்கிறார். பின் அதை சாட்டி உக்ரேனை முழுமையாக கைவிடுவதே திட்டம். டிரம்பிடம் என்ன செய்தாலும் அது ரஸ்யாவின் நலனை காப்பதிலேயே முடியும். செலன்ஸ்கி துருக்கியை நெருங்குவதே சாலச்சிறந்தது என நினைக்கிறேன். டிரம்பையும், புட்டினையும் ஒரே நேரத்துல் வெட்டி ஆட முடியும் என்ற தைரியம் ஐரோப்பியருக்கு வந்திருப்பதாக படுகிறது. மேர்சின் பேச்சு, நேற்று டிரம்ப் முன்னிலையில் மக்ரோன் நடந்து கொண்ட விதம், இன்றைய ஈயுவுக்கு 25% வரி அறிவிப்பு… போன தடவை போல அன்றி, இந்த முறை ஈயு உயர்மட்டம் டிரம்ப்பை அவர் பாணியில் டீல் பண்ண முனைகிறது. இது டிரம்ப் புட்டினின் கூலி என்பதை கண்டுகொண்டதாலும் இருக்கலாம். பார்ப்போம் நாளைக்கு ஸ்டாமர் போய் காலில் விழுகிறாராரா அல்லது மக்ரோன் எடுத்த நிலையை எடுக்கிறரா என. அப்போ தெரியும் ஈயூ அணியில் பிரித்தானியாவும் உள்ளதா என. நிச்சயம் இவர்கள் சீனா பக்கம் தம் பார்வையை திருப்ப வேண்டும். ஏனைய மேற்கு நாடுகள் இல்லாமல் சீனாவுடன் ஒரு வர்தக போரை டிரம்ப் தொடங்கினால் தோல்வி நிச்சயம். புட்டினின் கையாள் டிரம்ப் விரும்புவதும் இதுவாகவே இருக்கலாம். ஆனால் ஈயூ சும்மா இருக்க முடியாது. டிரம்பை தேர்வு செய்தது அமெரிக்கா, அதன் பலனாக அவர்கள் இராணுவ, கேந்திர, பொருளாதார, இராஜதந்திர பின்னடைவை சந்தித்தால் அதை அமெரிக்க மக்கள்தான் அனுபவிக்க வேண்டும், நிவர்த்தி செய்ய வேண்டும்.1 point- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
யாழ்கள உறவுகளுக்கு short term memory loss என நினைக்கிறேன். சஞ்சய் இராமசாமி மாதிரி கருத்து எழுதுகிறார்கள். கீழே உள்ளதை உங்கள் உடம்பில் பச்சை குத்தி வைத்து கொள்ளவும். கருத்து எழுதமுன் இதை படித்து விட்டு எழுதவும். 2024 டிசம்பரில் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வென்றார் அவர் இதுவரை கடைபிடித்து வந்த அமெரிக்காவின் உக்ரேன்/ரஸ்யா கொள்கையை 180 பாகையால் திருப்பி, கனிம கொள்ளையிலும் ஈடுபட முனைகிறார். டிரம்ப் இப்போ வைக்கும் கனிம கொள்ளை கோரிக்கையை பைடனோ, வேறு எந்த மேற்கு நாடோ வைக்கவில்லை. ஆகவே ஜனவரி 2025 க்கு பின்ன்னான அமெரிக்காவின் உக்ரேன் கொள்கையை வைத்து 2020-2024 அமெரிக்காவின் உக்ரேன் கொள்கையை மதிப்பிடமுடியாது.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
96 உலக கோப்பை இறுதி ஆட்டம் நினைவிருக்கும். வார்ண் பந்தை துணியால் ஒத்தி ஒத்தி போடுவார். அப்படி இருந்தது பனிப்பொழிவு (அந்த மேட்சில் அவுசுக்கு ஆடிய ரைபில், இந்த தொடரில் அம்பயர்). அதன் பின் நடந்த இன்னொரு தொடரிலும் இறுதி ஆட்டத்தில் பனி பெரும் பங்கு வகித்தது. லாகூரின் எந்த மேட்சிலும் இந்த தொடரில் அவ்வளவு பனிப்பொழிவு இல்லை. ஆனால் அந்த மேட்ச் நடந்தது மார்ச் மாதம் நடுப்பகுதியில். ஒருவேளை மார்ச்சை நெருக்க பனிபொழிவு கூடக்கூடும். நண்பரிடம் கேட்டுபாருங்கள். கொசுறு லாகூர் இப்போதும் பஞ்சாபில்தான் உள்ளது. Pakistani Punjab. 1992 செமிபைனலை நினைச்சா இப்பவும் ரத்த கண்ணீர் வரும்😭1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குழு Bயில் அவுஸ்திரேலியா நிலைமை தான் கவலைக்கிடம். அவர்கள் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வென்றாக வேண்டும். அந்தப் போட்டி ஒரு கால் இறுதிப் போட்டி போல் அமையப்போகின்றது. அல்லது மழை வந்து தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். தென்னாபிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிராக, படுமோசமாக தோக்காவிடில், அவர்கள் அடுத்த சுற்றுக்கு இலகுவாக சென்றுவிடுவர். அவர்களிடம் கனதியான ஓட்ட விகிதம் உள்ளது. இந்த முறை மழையோ ஓட்ட விகிதமோ அவர்களை தடுக்க முடியாது.1 point- அதிசயக்குதிரை
1 pointடாக்டர் என்ன பிரச்சினை உங்களுக்கு...? எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர்... அப்படியா...!? ஆமா டாக்டர்... இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும்... சின்ன வயசுல அப்பா, அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல... இப்ப என்ன உங்க வயசு அவ்ளோதானே...? ஆமா டாக்டர்... ஆமா...? சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க... உங்க பேரென்ன... ராமநாதன்... என்ன தொழில் பண்றீங்க... பைனான்ஸ்... நைட்டு நல்லா தூங்குவீங்களா...? கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்... சந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா... நெறய டாக்டர்.... அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...? ஆமா டாக்டர்.. எந்த மாதிரி நடிகைங்க... ரேவதி, அமலா மாதிரியான நடிகைங்க.... சிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்... சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா...!!?? சிலசமயம் அம்பிகா, ராதா மாதிரியான வங்களும் வருவாங்க... சந்தோஷம்... சிஸ்டர் 48 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...? ஷகிலா... ஊஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்... அதவெச் செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...? வேற... சில சமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஶ்ரீபிரியாக்கூட வருவாங்க... ம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்... அப்புறம்... அப்புறம்... ம்... என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன், நயன்ஸ் வருவாங்க... சிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்... ம்ம்... அவ்ளோதான் டாக்டர்... அவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க... 45, 48, 54, 41... நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47... மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு... அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்...!! என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா...? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா...? தெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன்... அங்கே ஒரே கூட்டம் ஒருமணி நேரமாகும்னுட்டாங்க... திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல... பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்...! அடேய்... இந்தாடா... அடப்பாவி... போய்ட்டானே!!1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஜோ ரூட் உங்களுக்காகத்தான் தனி ஒருவனாக இன்று விளையாடினார். தனி ஒருவன்! அது அடைக்கோழியாக்கும். முட்டை போடாது. 🥚1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாகிஸ்தான் தங்கள் வீட்டுக் கூரையில் ஏறி கோழி பிடிக்கும் என்று நினைத்தேன்😁 இப்படி கூமுட்டையாக இருக்கும் என்று யார் கண்டார்கள்😩1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்றைய முதல்வர் @Eppothum Thamizhan க்கு வாழ்த்துக்கள். @alvayan க்கு கம்பத்துக்கு கிறீஸ் பூசி கீழே இறக்கிவிட்டார்கள். கோசானும் அருகில் போய்விட்டார். என்னா @கிருபன் மூச்சுவிட முடியுதா?1 point- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (27 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! இப்போட்டியில் பாகிஸ்தான் தனது பெருமையை கொஞ்சம் காத்து எல்லோருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்குமா அல்லது முட்டைகளை உடைத்து எறியுமா?1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குடுத்து வச்ச மனிசன் ஜி நீங்கள் ஆப்கானிஸ்தான் 300 தாண்டியவிடனேயே இங்கிலாந்து கிட்டப்போய் தோற்கும் என நினைத்தேன். ஆனால் ஒவர்டன் நிண்டு ஆடியபோது மாற்றியும் யோசித்தேன். வாழ்த்துக்கள் முதல்வர்💐💐💐. இவ்வண், மாண்பு மிகு துணை-முதல்வர், இணை ஒருங்கிணைப்பாளர்🤣1 point- வடக்கு கிழக்கில் 92,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்
தமிழ் அரசியல் கட்சிகள் காலம் தாழ்த்திய விழிப்புணர்வு இது கிட்டதட்ட ஒரு சந்ததி கல்வி, போசாக்கின்மை என்பவற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு விட்டது. குறைகூறுவது நோக்கமில்லை அரசியல்வாதிகள் தம்மை பற்றி மட்டும் சிந்திக்காமல் சிறியளவிலாவது மக்களை பற்றியும் சிந்திக்கவேண்டும்.1 point- சிந்தனைக்கு சில படங்கள்...
1 point1 point- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
1 point- சிரிக்கலாம் வாங்க
1 pointபசங்க படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் என்றால் சும்மாவா? 3 மாணவர்கள் சரியாக படிக்காத காரணத்தால் பரீட்சைக்கு வராமல் கட் அடித்து விட்டு படத்துக்கு சென்றனர். படம் முடிந்ததும், ஆடையில் சேற்றை பூசி கொண்டு தலைமையாசிரியரிடம் சென்றனர். அவரிடம் "சார் காலையில் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு பரீட்சைக்கு வந்திரலாம்னு நெனைச்சோம்... வர்ற வழில பைக் பஞ்சராகி மூணு பேரும் சேத்துல விழுந்துட்டோம் சார்... எங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க சார்" என்றனர். ஆசிரியரும் புரிந்து கொண்டு மூன்று நாள் அவகாசம் கொடுத்தார். மூன்று நாள் கழிச்சு மூன்று பேரும் நல்லா படிச்சிட்டு வந்தாங்க. மூணு பேரையும் தனித்தனி ரூம்ல உட்கார வச்சார். கேள்வித் தாளில் நாலே நாலு கேள்வி தான் இருந்திச்சு... 1.யாருக்கு கல்யாணம்? (25 மார்க்) 2.கல்யாணம் எங்கே நடந்துச்சு? (25 மார்க்) 3.மாப்பிள்ளை என்ன கலர் டிரஸ் போட்டிருந்தார்? (25 மார்க்) 4.எந்த பைக்ல போனீங்க? (25 மார்க்). கண்டிசன்: பதிலெல்லாம் ஓரே மாதிரி இருக்கணும்.... (😎: நீங்க படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா...1 point- மாற்றுத் திறனாளிகளா?மாற்றத்துக்கான திறனாளிகளா?
மாற்றுத் திறனாளிகளா?மாற்றத்துக்கான திறனாளிகளா? இந்தக் கிழமை ஜீ தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியைப் பார்த்தேன். கண் தெரியாதவர்களும் அவர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர். மிக மிக ஆச்சரியமாகவும் எப்படி இவர்களுக்கு இத்தனை கெட்டித்தனம் கிடைக்கிறது என்று யோசிக்க வைத்துவிட்டார்கள். இதில் நடந்த சம்பவங்களை எழுதலாம் என்று எண்ணியே வந்தேன். இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு முதலே தெரிந்தால் ஒரு சுவாரசியம் இருக்காது என்பதற்காக நிகழ்ச்சி நடந்தவற்றை தவிர்க்கிறேன். நேரமிருந்தால் முடிந்தால் பாருங்கள். கனடிய உறவுகள் IPTV மூலம் பார்க்கலாம். மற்றைய நாடுகள் பற்றி தெரியவில்லை. நான் பார்ப்பது கீழே உள்ள இரண்டிலுமே. https://www.skytamil.net/ https://www.tamildhool.net/1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
13ம் இலக்கம் ராசி இல்லாத இலக்கம். அதை இன்றும் பரவலாக நம்புகின்றார்கள் 😂1 point- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointவாழும்வரை போராடு . .......... 04. காலங்கள் எதற்காகவும் காத்திருப்பதில்லை. அவை தன் பாட்டுக்கு நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த இரு வருடங்களில் இராகவன் சந்துரு வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டிருந்தன.....ஒரே இடத்தில் வசித்தும் வேலைப்பளுவால் அவர்கள் சந்திப்பதும் அரிதாகவே போய்விட்டிருந்தது. இராகவன் ஸ்ரீ காந்துடன் சேர்ந்து ஜவுளி வியாபாரமும் அதனூடே சிறிதாகவும் பெரிதாகவும் கடத்தல்களும் செய்து பெரும் முதலாளியாக வந்திருந்தான். யாழ்ப்பாணம் பெரியகடை வீதியில் ஒரு பெரிய ஜவுளிக்கடையும் வாங்கி விட்டிருந்தான் . அத்துடன் இரண்டு புதிய இசுசு லொறிகளும் யாழ்ப்பாணம்--- கொழும்பு என்று ஓடுகின்றன. சராசரி பதினைந்துபேர்கள் அவன் கடையிலும் லொறியிலுமாக வேலை செய்கின்றார்கள். அவனும் ஸ்ரீகாந்தும் தங்களது ஒரு ஜீப்பிலோ காரிலோ திரிந்து திரிந்து இடையில் வரும் தடைகளை விலக்கி சுழன்று சுழன்று வேலை செய்கின்றார்கள். சந்துருவும் இந்த இரு வருடங்களில் மாணிக்கம் ஜூவலரியில் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து நகைத்தொழிலையும் அதன் நுணுக்கங்களையும் நன்றாகக் கற்றுக் கொண்டு வருகின்றான். மாணிக்கத்தின் இரு மகன்களுடனும் சேர்ந்து அவர்களுக்கு உதவியாக கடையில் வியாபாரம் செய்வதும், அன்றன்றைய வரவு செலவுகளைக் கணக்கெடுத்து வங்கிகளில் பணம் வைப்பிடுவது என்று மிகவும் நேர்மையாக அவர்களுக்கு உதவியாக இருந்தான். மற்ற நேரங்களில் கடையின் உள்ளே பட்டறையில் மோதிரம், காதணிகள்,வளையல்கள், சங்கிலிகள் என்று எல்லாம் துப்பரவாகவும் அழகாகவும் செய்யக் கற்றிருந்தான். கல்யாண நாட்களில் தாலிக்கொடி பின்னும் வேலைகள் அதிகம் வருவதால் அவர்களின் அனுமதியுடன் கடையில் இருந்து தங்கக் கம்பிகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது தந்தை தம்பிகளுக்கும் அதை இழுத்துப் பின்னுவதற்கு பழக்கி விட்டிருந்தான். பாய், பெட்டி இழைப்பதில் வரும் வருமானத்தைவிட இதில் அதிக வருமானம் வருவதால் அவர்களும் இதை ஆர்வமுடன் பழகிச் செய்துகொண்டு வருகின்றார்கள் . அதனால் மாணிக்கம் ஜுவல்லரியில் வாடிக்கையாளர்கள் குடுக்கும் வேலைகள் தாமதம் இல்லாமல் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்தன.வியாபாரமும் அமோகமாய் நடந்து கொண்டிருந்தது. வீட்டிலும் அவர்களது வாழ்வும் மேம்பட்டிருந்தது. சென்ற சில மாதங்களுக்கு முன் மாணிக்கம் மூப்பின் காரணமாய் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார்.அதனால் அவர் தனது இரு மகன்களையும் குடும்பத்துடன் வீட்டிற்கு அழைத்திருந்தார். அவர்களோடு அவர்களது குடும்ப வக்கீலும் வந்திருந்தார். அவரது மூத்த மகன் கொழும்பில் பெரிய ஷோரூமுடன் கூடிய நகைக்கடை வைத்திருக்கின்றார். அவருடைய கடைக்கும் இங்கிருந்தே நகைகள் எல்லாம் போய் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது பெரும்பாலும் சந்துருவே கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் அவர்களுடைய ஒரு வானில் பொருட்களை ஏற்றி இறக்கிக் கொண்டு வருகின்றான். மாணிக்கத்தின் இளையமகன் தந்தையுடன் இருந்து இந்தக் கடையை நடத்தி வருகின்றான். மேலும் கடையில் ஆரம்பகாலத்தில் இருந்து அவருடன் கூடவே வேலைசெய்து வந்த தொழிலாளர்களும் அங்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மாணிக்கம் அவ்வப்போது யாழ்பாணத்திலேயே ஆங்காங்கே வீடுகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவர்களுடைய வீட்டு வைபவங்கள் மற்றும் பெரிய செலவுகள் யாவையும் மாணிக்கமே மனங்கோணாது செய்துகொண்டு வந்திருந்தார் . அதனால் அவர்கள் எல்லோருடைய கணக்குகள் எல்லாம் அதிக சிரமமின்றி முடித்து தேவையான பணம் எல்லாம் குடுத்து அவர்களை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார்கள். இக்காலகட்டத்தில் மாணிக்கத்தின் கடையில் அவரது சகோதர சகோதரிகளின் பிள்ளைகள் என்று பலர் வந்து வேலை செய்கிறார்கள். அதனால் உறவினர்களுக்குள்ளே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவது வாடிக்கையாகி இருந்தது. அது சிலசமயங்களில் சந்துருவையும் பாதித்து வருகின்றது. அதனால் அவனும் இப்பொழுது ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறான். வாருங்கள் போராடலாம் . ........ 🐐 🐐 🐐 🐐.1 point- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointவாழும்வரை போராடு . ........ 02. --- உனக்கு எங்கட நண்பன் ஸ்ரீ காந்தை நினைவிருக்கா. --- யார் அவன், சென்ற வருடம் கணக்கு ஆசிரியருடன் பிணக்குப் பட்டு பாடசாலை வருவதையும் விட்டு விட்டானே அவனா. --- ஓமடா சந்துரு அவனேதான்.... அவனை சிலநாட்களுக்கு முன்பு லிங்கம் கூல்பாரில் சந்தித்திருந்தேன். இப்ப அவன் நல்ல நிலைமையில் மிகவும் வசதியாய் வாழுறானடா. இந்த இரு வருடங்களில் இரண்டு புதிய லொறிகள், அவனது ஊரில் அழகான பெரிய வீடு, கார், ஹோண்டா மோட்டார் சைக்கிள் எல்லாம் அவனிடம் இருக்குடா. --- அப்படியா எனக்குத் தெரியாதே, அப்படி என்ன வேலை செய்கிறானாம். --- எல்லாம் ஜவுளி வியாபாரம்தான் என்று கண்ணடித்துக் கொண்டே சொல்கிறான் இராகவ்.....ம்....நாங்களும் அவன்கூட சேர்ந்து செய்யலாமடா. --- என்னது கள்ளக் கடத்தலா ...... இது உனது அப்பாவுக்குத் தெரியுமா. --- தெரியாது.....ஆனால் நான் நேற்றிரவு வீட்டில் அப்பா அம்மாவுடன் கதைத்திருந்தேன்..இவையெதையும் சொல்லவில்லை. பொதுவாக வியாபாரம் செய்யப்போகிறேன் அதற்கு எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று மட்டும் சொன்னேன். அப்பா முதலில் சம்மதிக்கவில்லை. நிறைய புத்திமதி எல்லாம் சொன்னார். ஒரே போர்.... வியாபாரத்தில் பலப்பல நுணுக்கங்கள், தந்திரங்கள் எல்லாம் உண்டு.இப்ப ஏமாற்றும் பேர்வழிகள் அதிகமாகி விட்டார்கள். நீ ஓரிரு வருடங்கள் எங்கள் கடையில் வேலை செய். கொஞ்சமாவது வியாபாரத்தைக் கற்றுக்கொள், பின் தனியாக வியாபாரம் செய்யலாம் என்று. அதைக் கேட்டு கேட்டு எனக்கு ஒரே சலிப்பாகி விட்டது. பின்பு அம்மாதான் எனக்காக அப்பாவுடன் வாதாடி அவரை இறங்கி வரப் பண்ணிவிட்டா. --- அட இவ்வளவும் நடந்திருக்கா. நல்லா இருக்கு. பிறகு என்னடா நடந்தது சொல்லடா இராகவ். --- பிறகென்ன அப்பா சமாதானமாகி எனக்கு வியாபாரம் செய்ய இரண்டு இலட்சம் ரூபா தருவதாக சொல்லி இருக்கிறார். அம்மாவும் என்னைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் அப்பாவுக்குத் தெரியாமல் தானும் ஒரு இலட்சம் ரூபா தருவதாக சொல்லியிருக்கிறா. --- அட.... பரவாயில்லையே, நீ கெட்டிகாரனடா இராகவ். --- அதுதாண்டா சந்துரு நானும் சொல்கிறேன், நீ ஒரு இலட்சம் ரூபா போட்டால் கூடப் போதும், போட்ட பணத்துக்கு தகுந்த மாதிரி இலாபத்தைப் பிரித்துக் கொள்ளலாம். --- எனக்கு உடனடியாய் என்ன சொல்வதென்று தெரியவில்லை. எதற்கும் வீட்டில் கதைத்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன், ஒரு வாரம் அவகாசம் தா என்கிறான். இருவரும் இராகவனின் மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் செல்கிறார்கள். அடுத்தநாள் மதியம் கடந்து இரண்டு மணியிருக்கும் சந்துருவின் தந்தை நாகலிங்கம் வீட்டின் பின்னால் கொட்டிலில் கட்டியிருந்த பசுமாட்டை அவிழ்த்து படலையால் தெருவில் விட்டு விட்டு சாப்பிட வீட்டுக்குள் வருகிறார். உள்ளே நிலத்தில் புற்பாய் விரித்து அதில் உணவுகளை சட்டிகளுடன் கொண்டுவந்து வைத்துவிட்டு வந்து சாப்பிடும்படி அழைக்கிறார் பெரியப்பா பழனிவேல். சந்துருவோடு அவரது மகனும் சேர்ந்து நாலைந்து வாழையிலையுடன் வந்து அமர்கின்றார்கள். நாகலிங்கமும் வந்தமர பெரியப்பாவும் அவர்களுக்குப் பரிமாறி விட்டு தனது இலையிலும் சோறும் கோழி இறைச்சிக் கறிகளையும் போட்டு விட்டு பிள்ளையள் இந்த எலும்பு ரசத்தைச் சூட்டோடு குடியுங்கோ நெஞ்சுக்கு பிலமாய் இருக்கும் என்று சொல்லி எல்லோருக்கும் கிளாசில் ஊற்றி வைக்கிறார். அவர்களும் சூடான அந்த ரசத்தை ஊதி ஊதி குடித்துக் கொண்டு எலும்புகளையும் கடித்து சுவைக்கின்றனர். அப்போது பக்கத்து வீட்டில் குஞ்சாச்சி சத்தம் போடுவதும் கந்தப்பு வேலிக் கதியாலால் இடறுபட்டுக்கொண்டு இவர்கள் வீட்டுக்கு ஓடிவரவும் சரியாய் இருக்கு. என்னனை குஞ்சியப்பு நெத்தி வீங்கிக் கிடக்கு முழங்கால் சில்லாலை இரத்தம் ஒழுகுது என்று சந்துரு கேட்க, அத விடுடா அப்பப்ப நடக்கிறதுதானே என்று சொல்கிறார்.அப்போது பெரியப்பா தனக்கு கிளாசில் ஊற்றி வைத்திருந்த ரசத்தை எடுத்து இந்தா முதல்ல இதைக் குடி என்று குடுக்கிறார்.அவர் அதைக் குடிக்கும் பொழுது தனக்குப் பக்கத்தில் அவருக்கும் ஒரு இலை போட்டு சோறும் கறிகளையும் பரிமாறி வைக்கிறார். பிறகு அண்ணை உந்த இரத்தத்தை துடையனை என்று ஒரு துண்டைக் குடுக்கிறார். அவரும் அதை வாங்கி துடைத்துக் கொண்டே அவளும் பாவம்தான், என்ன செய்யிறது நான் கலியாணம் கட்டேக்க எனக்கு இருபது வயது அவளுக்கு பதினாலு வயது இருக்கும். இப்ப எனக்கு எழுபது வயதாகுது. அம்மாவின்ர கையால சாப்பிட்டதை விட அவளின்ர கையாள சாப்பிட்ட காலம்தான் அதிகம். அவளிலும் பிழையில்லை கண்டியளோ. அவள் ஆசையாய் வளர்த்த சேவலை காலையில் இருந்து காணேல்லை என்று தேடிக் கொண்டிருக்கிறாள், அந்த நேரம் நானும் குடிச்சுட்டு வெறியில வீட்ட வந்ததும் ஏதோ நான்தான் அதை பிடித்துக் கொண்டுபோய் வித்துட்டு குடிச்சுட்டு வாறன் என்று நினைத்திட்டாள். உன்னாணை அதைநான் கண்ணிலும் காணேல்ல. --- சரி சரி உதை விடு, அது உங்கனேக்கைதான் எங்காவது மேயப் போயிருக்கும் என்று பெரியப்பா சொல்லிவிட எல்லோரும் சாப்பிடுகிறார்கள். கந்தப்பு அங்கேயே குந்தில துண்டை விரித்துப் படுத்துக் கொள்கிறார். நாகலிங்கமும் பழனியும் முற்றத்தில் கை கழுவும்போது, அண்ணை நான் மாட்டுக் கொட்டிலில கோழிச் செட்டைகளைப் பார்த்தேன், இனி இதுபோல செய்ய வேண்டாம் என்று சொல்ல பழனி தலை கவிழ்ந்து கொள்கிறார்............! வாருங்கள் போராடலாம் . ........ 🐶 🐶 .1 point - சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.