Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38756
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3061
    Posts
  4. வல்வை சகாறா

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    5818
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/01/25 in Posts

  1. பூனைகளின் பேச்சுவார்த்தை ----------------------------------------------- எவ்வளவு பெரிய பூனையாலும் எவ்வளவு சின்ன சுண்டெலியையும் அடித்துப் பறிக்க இயலாத ஒரு காலம் பூமியில் வந்திருந்தது அந்த ஒரு நாளில் ஒரு சுண்டெலியை சில பூனைகள் கூப்பிட்டன வரச் சொல்லி சமாதான காலம் தானே என்று கூட்டமும் சுற்றி நிற்கும் தானேயும் என்று துணிந்து உள்ளே வந்தது சுண்டெலி சுண்டெலியின் வீரம் தீரம் போற்றி ஆரம்பித்த பூனைகள் அடுத்ததாக அடித்துப் பறிக்க முடியாததை எழுதிப் பறிக்க ஆயத்தமாகின கேட்கிறதை கொடுக்கின்றேன் ஆனால் இன்னொரு அநியாயப் பூனை அது அங்கே என் வேலியில் எந்நேரமும் நிற்கின்றது அதை பதிலுக்கு தடுங்கள் என்றது பேச வந்த சுண்டெலி 'ராஜதந்திரமாக அணுக வேண்டும்.....' என்றது பெரிய பூனையின் உதவிப் பூனை கொஞ்சம் குனிந்த சுண்டெலி 'எந்த வகை ராஜதந்திரம்..........' என்று உதவிப் பூனையை மெதுவாகக் கேட்டது பூனைக் கூட்டம் துள்ளி விழுந்தன மின்சாரம் அடித்தது போல 'மியாவ் மியாவ்.......' என்று கத்தின நமக்கு இது அவமானம் என்று குறுகின நன்றி கெட்ட சுண்டெலி என்றன ஒரே ஒரு வார்த்தையால் அடிபட்ட பூனைகள் சுண்டெலிக்கு பொறி வைக்க வேலியில் நிற்கும் அந்தப் பூனையுடன் இனிப் பேசும்.
  2. இந்த விடியோவை பார்ததும் எனக்கு கீழ் உள்ள வடிவேலு நகைச்சுவை ஞாபகத்திற்கு வந்தது. 😂
  3. பதினோராவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 38.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து179 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி, இலகுவான ஓட்ட இலக்கை 29.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 181 ஓட்டங்களை எடுத்து எட்டியது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் 14 பேருக்குத் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த மற்றைய 10 பேருக்கும் புள்ளிகள் இல்லை. யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை:
  4. நாம எங்க நிக்கிறம் என்றே புரியவில்லை.....
  5. சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்! 15 ஆண்டுகளாக ஒரு பாலியல் புகார் இழுத்தடிக்கப்பட்டு வருவதே ஒரு அவலம். அதை கறாரான நடவடிக்கை இன்றி, மீண்டும், மீண்டும் சமூகத்தின் பேசு பொருளாக்குவது அதைவிட அவலம். ”நீதிமன்றம், சட்டம், சமூகத்தின் மனசாட்சி எதுவும் எனக்கு ஒரு பொருட்டல்ல..” என ஒரு அரசியல் தலைமை வலம் வருவது ஆட்சிக்கே பேரவலம்! சமூகத்திற்கு பயனற்ற இது போன்ற விவகாரங்களை எழுதுவதையும், பேசுவதையும் முடிந்த அளவு தவிர்த்தே வருகிறேன். அதை விரைந்து முடிவுக்கு கொண்டு வந்து உண்மையான குற்றவாளியை தண்டிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது? இந்த மாதிரி ஒரு விவகாரம் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு பேசப்படுவதற்கு இங்குள்ள ஆட்சியாளர்களின் நேர்மையின்மையும் ஒரு காரணமாகும். ஒரு பெண் நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு இருக்கிறாள். ஒருவனை தீவிரமாக காதலித்த காரணத்தால், அவன் விருப்பபடி மீண்டும், மீண்டும் கருக் கலைப்பு என்ற அவலத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறாள். பிறகு காதலித்தவளை கைவிட்டு , செல்வாக்கும், செல்வ வளமும் உள்ள அரசியல் குடும்பத்து பெண்ணை மணந்துள்ளார். சீமான் மண்ணும், மரபும் சார்ந்த தமிழ் தேசியம் என்னும் உன்னத அரசியலை பேசுகிறார்! ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்கிறார். அந்த வகையில் கணிசமான இளைஞர்களின் நம்பிக்கையை வென்று எடுத்துள்ளார். எனில், அவர்கள் பின்பற்றத் தக்க முன்னுதாரண வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவது தான் ஒரு தலைவனுக்கு அழகாகும். மற்றொரு கல்யாணம் செய்து கொண்ட பிறகும் காதலித்த பெண்ணை கைவிட முடியாமல் மாதாமாதம் ரூ50,000 தந்து தொடர்பை நீடித்துக் கொண்டே வந்துள்ளார். பிறகு அதையும் தராமல் அந்த பெண்ணை நட்டாற்றில் விடுகிறார். அவள் தெருவிற்கு வருகிறாள்! இவரும் மல்லு கட்டுகிறார். கவியரசர் கண்ணதாசன் மூன்று மனைவியரோடு வாழ்ந்திருக்கிறார். கருணாநிதி அவர்களும் இரு பெண்ணோடு வாழ்ந்திருக்கிறார். எம்.ஆர்.ராதாவும் மூன்று மனைவியரையும், ஏராளமான ஆசை நாயகிகளையும் கொண்டிருந்திருக்கிறார்! நிச்சயமாக இவை எதுவும் பின்பற்றத் தகுந்த முன் உதாரணங்கள் இல்லை. ஆனால், சம்பந்தப்பட்ட பெண்களை சமமாக நடத்தி, சந்தோசமாக வைத்துக் கொள்ளும் பக்குவப்பட்டவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள். சீமானால் அது முடியவில்லை. மாதம் வெறும் 50,000 அனுப்பி போனில் பேசக் கூட பயந்து வாழ்ந்த காலமும் முடிவுக்கு வந்து, முதல் மனைவியால் அவர் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து நிராதரவாக விட்டு விடுகிறார், விஜயலட்சுமியை! இந்தச் சூழலில் அந்தப் பெண் பல முறை ஆண்டுக்கணக்கில் போலீசில் புகார் தந்தும் எந்தப் பயனுமற்று தான் சில காலம் கிணற்றில் போட்ட கல்லானது, விவகாரம்! சீமான் குறைந்தபட்ச மனசாட்சி உள்ளவராக இருந்திருந்தால், இந்த பிரச்சினைக்கு என்றோ முற்றுபுள்ளி வைத்திருக்கலாம். பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு கெளரமான ஒரு நஷ்ட ஈட்டை தந்து, புதியதொரு வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ள உதவி இருக்கலாம். ஆனால், அவர் எப்போதும் எளியவர்களோடு சமரசமாகமாட்டார். கட்சிக்காக உழைத்த எத்தனை பேரை அலட்சியப்படுத்தி வெளியே அனுப்பி உள்ளார்! அவரது அகங்கார மனோபாவமே இந்த பிரச்சினை நீடிப்பதற்கு முழு முதற் காரணம். இதற்கு தோதாக இவரது மனைவி கயல்விழியும் அமைந்துவிட்டார். முதன் முதலாக இது வெளியே தெரிய வந்த போது, ஜெயலலிதா ஆட்சியில் இந்த காரணத்தால், தன்னை தண்டித்துவிடக் கூடாதே என ”இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’’ என அரசியல் ஸ்டண்ட் அடித்தார் சீமான். அதன் பிறகும் அதிமுகவுடனும், பாஜகவுடனும் நல்லுறவு வைத்துக் கொண்ட நிலையில், தொடர்ந்து விஜயலட்சுமி புகார் தூங்கிக் கிடந்தது. பாஜகவினர் அன்று சீமானுக்கு ஆதரவாகத் தன்னை மிரட்டியதாக விஜயலட்சுமி கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனது புகார் கவனிக்கபடுமென்று நம்பிய விஜயலட்சுமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது…! கடந்த நான்காண்டுகளில் பல முறை விஜயலட்சுமி புகார் தந்து, பல முறை போலீசால் விசாரிக்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு முறை காவல்துறையினர் சீமானை அழைத்து விசாரித்ததோடு விவகாரத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். அந்த அளவுக்கு அரசியல் அழுத்தம் இருந்த காரணத்தால் சீமான் ஒருபோதும் தண்டிக்கப்பட முடிந்தவரல்ல… என்ற முடிவுக்கு தான் வந்ததை விஜயலட்சுமி வெளிப்படையாக அழுகையோடு அறிவித்து விட்டுத் தான் பெங்களூர் சென்றார். இந்தச் சூழலில் தான் வழக்கை நீதிமன்றம் விசாரித்ததில் விஜயலட்சுமியின் குற்றச்சாட்டில் உள்ள உண்மைத் தன்மையையும், இந்த புகார் தொடர்ந்து அலட்சியப்பட்டு வருவதையும் கவனத்தில் கொண்டு சீமானை விசாரித்து அறிக்கை தர நீதிபதி உத்தரவிடுகிறார். நீதிபதி விசாரிக்கத் தான் கூறியுள்ளார். தன் மீது தவறு இல்லாத பட்சத்தில் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறேன் என்றல்லவா சீமான் சொல்லி இருக்க வேண்டும். ஏற்கனவே 15 ஆண்டுகள் இழுத்தடித்தது போதாது என்று, தற்போது மீண்டும் வாய்தா கேட்பதும், விசாரணையை தள்ளிப் போட்டுக் கொண்டே போக நினைப்பதும் கோழைத்தனமின்றி வேறென்ன? வீட்டு வாசலில் அழைப்பாணை ஒட்டுவது என்பது ஒரு நடைமுறை தானே. அதை நான் தான் படிப்பதற்காக கிழித்து வரச் சொன்னேன் என்கிறார் சீமான் மனைவி. ஆனால், வாயிற்காவலர் அதை அக்குவேறு ஆணிவேராக கிழித்து போட்டாரே தவிர, படிக்கத் தோதாக கிழிக்கவில்லை என்பதே நிஜம். அதை செல்போனில் போட்டோ எடுத்து வரச் சொல்லி கூட சீமான் மனைவி கயல்விழி அம்மையார் படித்திருக்க வாய்ப்புள்ளது. கிழித்துப் போட்ட விவகாரத்தை அவமதிப்பாக கருதி காவல்துறை வருகின்றனர். கேட்டை திறந்து அவர்களை பார்த்தவுடன், சட்டென்று கேட்டை மீண்டும் சாத்த முயற்சிக்கிறார் அந்த செக்யூரிட்டி மனிதர். வந்த காவல்துறையினரிடம் இயல்பாக பேசி, விசாரணைக்கு தானே ஒத்துழைத்து அவர் சென்று இருக்க முடியும் தானே! இத்தனைக்கு பிறகும் சீமானும், அவர் மனைவியும் எந்தவிதக் குற்றவுணர்வுமின்றி, பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஆவேசம் காட்டுகின்றனர் என்றால், சட்டத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாக இவர்கள் தங்களை கருதுகிறார்கள் என்றே பொருளாகும். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சென்று விசாரிக்கவே தடை கேட்கிறார் சீமான் என்றால், இது தப்பிக்கும் முயற்சி தானே! எதிர்கொள்வதில் இருக்கும் கோழைத்தனம் தானே! ஒரு பாலியல் குற்றச் செயல் செய்தவர் 15 ஆண்டுகளாக வருங்கால முதல்வரை போல வலம் வருவதும், அரசியல் நியாயங்கள் பேசி அரசியல் நட்சத்திரமாக வலம் வருவதும் அவரது செல்வாக்கை மட்டும் காட்டவில்லை. தற்போதுள்ள ஆட்சியாளர்களின் ஆளுமை பற்றாகுறையையும் சேர்த்தே காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலினால், சீமானை நியாயப்படி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி தண்டிக்க முடியாவிட்டால், அது அவரது திறமையின்மையை – உறுதிபாடற்ற நிர்வாக ஆளுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே அமைந்துவிடும். இத்தனைக்கு பிறகும் சீமானை தண்டிக்கவியலாமல் போனால் அது – சட்டம், நீதிமன்றம், காவல்துறை, ஆட்சி நிர்வாகம், சமூகம் போன்ற சகலத்தின் தோல்வியாக – வரலாற்றில் கரும்புள்ளியாகிவிடும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று…! லட்சிய நோக்கும், அர்ப்பணிப்பும் கொண்ட நாம் தமிழர் இயக்கத்தின் தம்பி, தங்கைகள் சீமானை புறக்கணித்து, தங்களில் இருந்து ஒரு புதிய தலைமையை கண்டடைய வேண்டும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/20907/seeman-vijayalaxmi-stalin/
  6. ”சீன் போட்டுட்டு இருக்காத.. உன்கூட போய் வாழ்ந்தேன் பாரு..” சீமானுக்கு ஆவேசமாக பதில் கொடுத்த நடிகை Mani Singh SUpdated: Saturday, March 1, 2025, 19:36 [IST] நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்க கூடிய சீமான், தன்னை ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவக்கம் காவல் நிலையத்தில் நடிகை ஒருவர் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே, அந்த புகாரை நடிகை வாபஸ் பெற்றார். எனினும், சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யாமல் போலீசார் வைத்து இருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமானின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன், அவர் மீதான வழக்கை விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து, இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், என்ன பாலியல் குற்ற வழக்கு.. நிரூபிக்கப்பட்டு இருக்கா.. சேட்டை பண்ணக்கூடாது.. திருமணம் என்ற ஒப்பந்தத்திற்குள்ளேயே போகல.. 6,7 மாதங்கள் தான் பழகியிருப்போம்.. அதன்பிறகு, 2008, 2009, 2010 கால கட்டங்களில் நான் தொடர்ச்சியாக சிறையில் தான் இருந்தேன். 2009 க்கு பிறகு தொடர்பு இல்லை" என்று காட்டமாக பேசினார். சீமானின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகை இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- என்னதான் அவளோட பிரச்சினை என்று பிரஸ்காரங்க கேள்வி கேக்கனுமாம்.. சீமான், 2023 ல் எதுக்கு நீ 50 ஆயிரம் போட்ட.. நீ என்னமோ பிள்ளைங்க வளர்ந்துடுச்சு.. அது வளர்ந்துடுச்சு.. இது வளர்ந்துடுச்சு.. அப்புறம் எதுக்குடா என்கிட்ட வீடியோஸ் வாங்குனீங்க.. எதுக்கு வீடியோஸ் வாங்குனீங்க.. நீ வாங்கி வைப்ப.. அப்புறம் நான் வாயை மூடிட்டு இருப்பேன். அப்புறம் உங்க ஆட்களே வந்து டெலிகாஸ்ட் பண்ணுவேனு மிரட்டுவாங்க.. இதுக்குள்ளயே நான் வந்து சாகணுமா? நீ ஆம்பளயா இருந்தா அநாகரீகமாக பேசாத சீமான்.. 2008 ல இருந்து வெறும் 6 மாதம் தான் பழகினேனாம். அப்புறம் எதுக்குடா நான் 2011 ல் வந்து புகார் கொடுப்பேன். 2011-ல் நீங்க கொடுத்த டார்ச்சருக்குதான் நான் போட்ட துணியோட வந்து கமிஷனர் ஆபிசில் புகார் கொடுத்தேன். அசிங்கமாக பேசும் வேலையெல்லாம் வைத்துக்கொள்ளாதே.. நீ பேசினால் உன்னை விட கேவலமாக பேசுறதுக்கு எனக்கு தெரியும். சும்மா டிராமா போடாத.. நேற்று வரைக்கு என்ன சொல்லிட்டு இருந்த.. நடிகை யாருன்னே தெரியாது... திமுக கூட்டிட்டு வந்தாங்கன்னுதான சொல்லிட்டு இருந்த.. நேற்று தான சொல்லுற.. ஆமா நான் 50 ஆயிரம் கொடுத்துட்டு இருந்தேன்னு.. எதுக்கு மதுரை செல்வம் என் கிட்ட வீடியோ வாங்கிட்டு இருந்தான். எதுக்கு 50 ஆயிரம் என் அக்கவுண்டில் போட்டீங்க.. மீடியா முன்னாடி சீன் போட்டுட்டு இருக்காத.. கேவலம் பிடிச்ச பொம்பளயாம்.. உன்னை மாதிரி துப்பு கெட்டவன் கூட வாழ்ந்தேன் பாரு.. எனக்கு தான் கேவலம்.. பெரிய ஆள் மாதிரி பேசாத" இவ்வாறு அவர் நடிகை பேசினார். நடிகை பேசிய வார்த்தைகள் அப்படியே இங்கே எழுதப்பட்டுள்ளன. https://tamil.oneindia.com/news/chennai/actress-release-new-video-and-replies-to-ntk-chief-seeman-allegations-684125.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel
  7. ஏன் வீணா காசிப்புக்கு செலவு செய்யுறியள் ..?
  8. நாங்கள் இங்கு சீமானுக்காக அல்லது சீமானுக்கு எதிராக கருத்தாடுவதால் எந்த பிரயோசனமும் இல்லை. உண்மையில் நாம் சிந்திக்கவேண்டியது தமிழக மீனவர்களும், தாயக மீனவர்களும் மிகப்பெரும் எதிரியாக மாறிவிட்டார்களே... அதைப்பற்றித்தான் நாம் இப்போது கவலைப்படவேண்டும். ஒருகாலத்தில் தாயகம் தமிழகம் இறுக்கமான உறவை வைத்திருந்ததே இந்த மீனவர்களால்தான் இப்போது அத்திவாரமே தகர்க்கப்பட்டு சிதைவடைந்துள்ளது. இதனை எப்படி சுமூகநிலைக்கு கொண்டு வருவது என்று கலந்துரையாடுவதும் அதனைச் செயற்படுத்துவதுந்தான் காலத்தின் தேவை.
  9. எல்லாம் இந்த கடவுள் வருகிறார் என்பதை பொறுத்தது.அதிக நோபல் பரிசுகளை வென்ற இஸ்ரேலியர்கள் என்ன கூறுவார்கள் என நினைக்க தோன்றுகிறது.🙂 எவ்வளவு பெரிய பூனையாலும் எவ்வளவு சின்ன சுண்டெலியையும் அடித்துப் பறிக்க இயலாத ஒரு காலம் பூமியில் வந்திருந்தது நான் ஒரு வேளை பூமி சுற்றவில்லையோ என நினைத்தேன். 🙃
  10. அப்பவே, 2011ம் ஆண்டில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றினார்கள் என்று தான் விஜயலட்சுமி சொல்கின்றார். சமயாசாரப்படி நடந்த விவாகம் என்று ஒன்று ஊரில் இருப்பது போல. நீங்கள் சொல்லியிருப்பது தான் அண்ணா மிக எளிய தீர்வு. இருவருமே ஒன்றாக வாழ்ந்திருப்பதால் இதை ஏற்றுக் கொண்டு போவது தான் சரி. தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒரு மனைவியா அல்லது ஒன்றுக்கு மேலா என்பதெல்லாம் பிரபலங்களுக்கும், அரசியலுக்கும் ஒரு பொருட்டே அல்ல. மேலும் சீமானின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் எவரும் அவர் இதை ஒத்துக் கொண்டால் கூட, அவரை விட்டு நீங்கப் போவது கிடையாது. தமிழ் தமிழ் என்று சொல்லி விட்டு, அவரின் மகனே தமிழில் படிக்கவில்லை என்பது வெளியில் தெரிந்த போது, அவரின் ஆதரவாளர்கள் எவராவது அதன் காரணமாக விலகினார்களா............ இல்லைத்தானே, மாறாக அவரின் தெரிவை நியாயம் தான் செய்தார்கள். யார் முதல் மனைவி, அதன் காரணமாக சொத்துரிமை என்பதில் சிக்கல் வரும் தான். கயல்விழி வீட்டில் இருந்து வந்ததவைகள் அவருக்கே சொந்தமாகும், ஆனால் இவர் சேர்த்தவைகளை பிரிக்கத்தான் வேண்டும். திமுக இதை வேண்டும் என்றே தான் செய்கின்றது. இது மட்டும் இல்லை, இன்னும் பல வழக்குகள் இவர் மேல் சமீபத்தில் போடப்பட்டன. நேற்று இன்னொரு சம்மனும் ஈரோட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போயிருக்கின்றார்கள். 'வெடிகுண்டு எறிவேன்.................' என்று சமீபத்திய இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதால் வந்த வழக்கு அது. இதைவிட பெரியார் பற்றி இவர் பேசியதை ஒட்டி பல ஊர்களில் வழக்கு போடப்பட்டிருக்கின்றது. வருண் ஐபிஎஸ் வழக்கும் இருக்கின்றது. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக, மேடையில் எதையும்பேசலாம் என்றில்லை. எவரையும் எந்த சொல்லாலும் இழிவுபடுத்தலாம் என்றில்லை. இணையத்தில் அநாகரீகமாக தனிமனிதர்களையும், குடும்பங்களையும் சித்தரிக்கலாம் என்றில்லை. மீறி, இவர் கட்டுப்பாட்டை இழந்ததால், அதுவே பூமராங் போல சுழன்று கொண்டு திரும்பி வருகின்றது இப்பொழுது .........................
  11. நான் பிபிசி யில் வந்திருந்த காணொளிகளை பார்த்தேன். உலகில் ஒரு நாட்டின் சனாதிபதியை இன்னொரு நாட்டின் சனாதிபதி இவ்வாறுஅவமதித்ததை காணவும் இல்லை, கேள்விப்படவும் இல்லை. தாம் மிக உயர்ந்தவர்கள் என்றும், தம் உதவியின்றி வாழ முடியாது என்றும் மமதையில் இருக்கும் ஒருவரின் திமிர்தனமான செயல்பாடுகள் தான் ரம்ப் செய்வது. உக்ரைனுக்கு இந்த சந்திப்புக்கு முன்னர் இருந்ததை விட, அன் நாட்டு மக்களினது மட்டுமல்ல, பல நாடுகளில் இருந்தும் தார்மீக ஆதரவு இதன் மூலம் கிடைக்க போகின்றது.
  12. தம்பி அன்புமணி முதலமைச்சர் பதவி மணக்குது. மேளதாளங்களுக்கு ஓடர் கொடுத்துட்டு காவல் இருக்கிறோம். ஆனால் எந்த மேளம் என்று கேட்கக் கூடாது.
  13. ஐ!!! அதே பழைய “திமுக செய்யலாம், நாங்க செய்ய கூடாதா” இத்து போன லாஜிக்🤣. நாளைக்கு சீமான் 2 ஆயிரம் கோடி ஊழலை மறைக்க இனப்படுகொலைக்கு ஆதரவளித்தாலும் - திமுக செய்யலாம் நாம் செய்யகூடாத என்பார்கள். திமுக ஆபாசத்தை பற்றி கதைக்க முடியாது - நாங்கள் கதைக்கலாம்… ஏன் என்றால் இந்த ஆபாச ஆமைகுஞ்சு பயன்படுத்துவது எங்கள் மாவீர செல்வங்களின் பெயரை, தியாகத்தை. ஒருத்தர் நீண்ட நித்திரையில் இருந்து எழும்பி வந்து ஆஜர்🤣
  14. நான் கூறிய விடயத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் கூறியது சீமான் விதைத்த இனவெறி சிங்கள இனவாதத்தை விட மோசமானது என்பதை மட்டுமே. சீமானால் உண்மையான தமிழ் தேசியம் சிதைக்கப்பட்டே வருகிறது.
  15. நாளைக்கு வாத்தியார் தயவு காட்டுவார்😝
  16. நாளைக்கு யார் வென்றாலும் முதல்வர் பதவியில் மாற்றம் இல்லை. மழையே, மழையே என் செய்ய நினைத்தாய் கோஷானை 🤣.
  17. தலைவர் பிறந்த மண்ணிலயே சிங்கள தேசியவாதிகளுக்கு ஆதரவாக மக்கள் நிற்கும் பொழுது நாங்கள் தமிழக தமிழ் தேசியவாதிகளை குறை சொல்ல முடியாது .. தமிழகத்தில் தமிழ் தேசியம் வளர்ந்தால் நல்லது ஆனால் அதையும் நம்மவர்கள் விரும்பவில்லை போல தெரிகின்றது... புலம்பெயர் தமிழ்தேசியவாதிகள்,தமிழக தேசிவாதிகள் சொல்வது செய்வது எல்லாம் பிழை....சிறிலங்கா சிங்கள தேசியவாதிகள் வடிக்கும் முதலை கண்ணீர் மட்டுமே சிறந்தது என நினைக்கும் மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்வார்கள்
  18. கிருபனும் சழைக்காம ஒரே கேள்வியைத்தானே கேற்கிறார். யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்
  19. முன்னாடி இரண்டு பேரையும் பிடிக்கமுடியுமா. இல்ல இது முடிந்த முடிவா.
  20. சம்மனை இங்க ஒட்டி செல்லவும்..
  21. இது நான் அங்கு நின்றபோது கண்ட அனுபவம்...அலுவலகத்தில் புகார் கொடுக்கப்படும் ..அந்த புகார் பைலில் போடுவதற்கு ஒருமாதம் எடுக்கும்...அததி ஒரு கிளாக் பொருப்பெடுக்க 2 கிழமை ...அதன்பிறகு..மேல் கிளக் ,கீழ் கிளாக் என்றுபோய்..6 மாதத்தின்பின்தான் ..அலுவல்ரிடம் போய் சேரும்...அப்ப புகார் கொடுத்தவர் அங்கு நிற்கமாட்டார்... கடைசியில் பைல் ..அலுமாரிக்குப்போய் ..நின்மதியாய் நித்திஐ கொள்ளும்..
  22. மோடி மாதிரி... "சிங், சக்" போட்டுக் கொண்டு இருக்கிறதுதான் நல்லது போல கிடக்கு.
  23. இது அமெரிக்காவின் வழமையான, எதிர்பார்த்த செயல்தான். ஒவ்வொரு நாட்டின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைப்பது, ஆயுத இராணுவ உதவிகளை வழங்குவது, அந்த நாட்டை சுடுகாடாக்குவது, இடைநடுவில் அம்போ என்று கைவிடுவது, அச்சுறுத்தி தான் நினைத்ததை சாதிப்பது. இவ்வாறு தனக்கு எதிரிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. போர் என்று தொடங்கினால் எல்லா நாடுகளும் சேர்ந்து அமெரிக்காவை மொத்தும். அதற்கு ஏற்ற ஆள்தான் ட்ரம்ப்.
  24. ஆப்கானிஸ்தானுடனான போட்டி கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறியது Published By: VISHNU 01 MAR, 2025 | 01:20 AM (நெவில் அன்தனி) லாகூர் கடாபி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண போட்டி சீரற்ற காலநிலை காரணமாக இடையில் கைவிடப்பட்டதால் பி குழுவிலிருந்து அவுஸ்திரேலியா அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இந்தப் போட்டி கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. இதனை அடுத்து அவுஸ்திரேலியா 4 புள்ளிகளைப் பெற்று அரை இறுதியில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டது. ஆப்கானிஸ்தான் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆனால், தென் ஆபிரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நாளைய போட்டி முடிவிலேயே ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறுமா இல்லையா என்பது தெரியவரும். பி குழுவில் இடம்பெறும் தென் ஆபிரிக்காவும் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 274 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 109 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது இரவு 7.00 மணிக்கு மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. மழையினால் ஆட்டம் தடைப்பட்டால் டக்வேர்க் லூயிஸ் முறைமை அமுலுக்கு வரும் என்பதை அறிந்திருந்த அவுஸ்திரேலியா அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தது. மெத்யூ ஷோர்ட் 15 பந்துகளில் 20 ஓட்டங்களைப் பெற்றதுடன் முதல் விக்கெட்டில் 27 பந்துகளில் 44 ஓட்டங்களை ட்ரவிஸ் ஹெட்டுடன் பகிர்ந்தார். தொடர்ந்து ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 50 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது இரவு 7.00 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்தது. ட்ரவிஸ் ஹெட் 40 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 59 ஓட்டங்களுடனும் ஸ்டீவன் ஸ்மித் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். மழை விட்ட போதிலும் மைதானம் ஈரலிப்பாக இருந்ததால் ஆட்டத்தைத் தொடர முடியாது எனத் தீர்மானித்த மத்தியஸ்தர்கள் இரவு 9.00 மணியளவில் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றது. சிதிக்குல்லா அத்தல், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து ஆப்கானிஸ்தானை கௌரவமான நிலையில் இட்டனர். ஆனால் மழை பெய்ததால் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. சிதிக்குல்லா அத்தல் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 85 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஒரு பவுண்டறி, 5 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட இப்ராஹிம் ஸத்ரான் 22 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதி 20 ஓட்டங்களையும் பெற்றனர். ஆப்கானிஸ்தானின் மொத்த எண்ணிக்கையில் 17 வைட்கள் உட்பட 37 உதிரிகள் அடங்கியிருந்தன. பந்துவீச்சில் பென் த்வார்ஷுய்ஸ் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்பென்சர் ஜோன்சன் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/207957
  25. ஏழு வருடங்களுக்கு முன்பே என்னுடைய ஆணித்தரமான கருத்தை இப்பகுதியில் வைத்துவிட்டேன் இது கருத்துக்கள உறுப்பிர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய நாற்சந்தியில் அமைந்திருக்கிறது. யாழ் கருத்துக்களத்தின் நிலவரம் இதுவரையும் மாற்றமடையவில்லை கருத்தாடல்கள் தனிமனிதத் தாக்குதல்களாக மாறுவது காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்று செவ்வியன். கருத்தாளர்களைக் குறை சொல்ல முடியாது ஏனெனில் அவர்கள் பார்வை என்பது அவர்களுக்குள் இருக்கக்கூடிய எண்ணங்கள் நம்பிக்கையின் பால் ஏற்படுவது. எண்ணங்கள் நம்பிக்கைகளை தூரநோக்கில் பார்க்கப் பழக்கப்படாதவர்களிடம் எதையும் கலந்தாலோசிக்கமுடியாது அவ்வளவுதான்.
  26. உங்கள் கருத்து எனக்கு விளங்கிட்டு,நான் உங்களை குறிப்பிடவில்லை, நான் குறிப்பிட்டது பொதுவாக இந்த கேடு கெட்ட செயலுக்கு இயக்கத்தின் பெயரை துணைக்கு அழைத்து கொள்பவர்களை பற்றி.
  27. எழுதுவதுதான் அத்திபூத்தாற்போல் ஆனால் நாளாந்தம் இங்கு வருகை தந்து வாசிக்கிறேன். இந்தப்பக்கம் வரும்போதுதான் ஈழத்தமிழினம் எவ்வளவுதூரம் பலவீனமாகி விட்டது என்பதை முழுமையாக உணரமுடிகிறது.
  28. கேட்கிறதை கொடுக்கின்றேன் ஆனால் இன்னொரு அநியாயப் பூனை அது அங்கே என் வேலியில் எந்நேரமும் நிற்கின்றது அதை பதிலுக்கு தடுங்கள் என்றது பேச வந்த சுண்டெலி தேடித்தேடி பார்த்த..வீடியோ செய்திகளை ஒரு கவிதைமூலம் கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்... அருமை தொடருங்கள்...
  29. கெட்ட சயனைட்டுகள் என்பதில் 100 % உடன் படுகிறேன். உதவி செய்தவர்கள் ,குறிப்பாக இராணுவம் இந்த வழியால் வந்து கொண்டு இருக்கிறார்கள் என எனது அம்மமாவிடம் சொல்லி "டேய் வாறாங்களாம்" என்று சொன்னது இன்றும் மனதிலுண்டு. இது சில தமிழ் நாட்டு ரெஜிமன்ட் இருந்த போது நடந்தது. வடக்கு ரெஜிமன்ட் வந்த போது எந்த குழப்பமுமேற்படவில்லை. நாய் குலைத்தலோடு எண்ணை மணம் அவர்களின் இருப்பை காட்டி கொடுத்து விடும்.😂
  30. செத்தகிளி ஒருக்காலும் சிறகடித்துப் பறக்காது. கிளி செத்தது செத்ததுதான். ட்ரம்புக்கு இரானைக் கண்ணிலையும் காட்டக்கூடாது. ஆனால் செத்தகிளிக்கு இரான்: எப்படி அமெரிக்காவுக்கு இஸ்ரேல் இருக்கின்றதோ அப்படி. இஸ்ரேல் முல்லாக்களின் முட்டாள் தேசத்துக்கு ட்ரம்பின் துணையுடன் ஒரு போடுபோடேக்க செத்தகிளி வேற வழியில்லாமலுக்கு இரானுக்காக சிறகடித்துப் பறக்க முற்படும். அப்ப செத்தகிளிக்கு சடங்கை வச்சு செஞ்சிடலாம். செத்தகிளிக்கு எம்பாம் பண்ணுற மருந்தும் ஆக்களும் இஸ்ரேலிலதான் இருக்கிறார்கள். 😂
  31. இங்கு எல்லாவற்றையும் முழுமையாக பார்ப்பதற்கு நேரம் இல்லை. ஆனால் சீமான் காவற்துறை குறிப்பிட்ட காலத்தில் தான் வரமுடியாமைக்கான காரணத்தை நேரடியாகவும், தனது சட்டத்தரணிகள் மூலமாகவும் அறிவித்திருக்கிறார். அதற்கு மதிப்பளித்து உடன்பட்டிருக்கவேண்டும். சரி, சட்ட அடிப்படையில் ஒட்டினார்கள், சாட்சியாக ஒளிப்பதிவு செய்தார்கள் அவர்களது கடமை நிறைவேறியது. அவர்கள் கிழிக்கிறார்களா, வாசிக்கிறார்களா என்பதை ஏன் ஒட்டுப்பார்க்கவேண்டும்? சரி கிழித்தது தவறென்றால் அதற்கு அவர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் போலீசார், இராணுவத்தினர் ஆட்சியாளரின் கூலிகளாக செயற்படுகின்றனர். பின்னர் தாக்கப்படுவதும் தண்டிக்கப்படுவதும் அவர்களே. இங்கே அமலராஜ், பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து போலீசாரை தாக்க முயன்றார் போலீசார் உடனடியாக செயற்பட்டு அவரை சுட்டுக்கொன்றார் அல்லது சிறையில் தற்கொலை செய்து கொண்டாரென செய்தி வராமலிருந்தால் சரி. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை அனுபவித்தவர்கள், உண்மையான குற்றவாளிகள் அல்லர் என்று தெரிந்தும், அவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்த கொடிய பாவிகள், அவர்கள் தங்கள் இறுதிக்காலத்தை கூட வெளியில் அனுபவிக்க விடாமல் அவர்களின் விடுதலையை எதிர்த்து கூப்பாடு போட்டவர்கள், தமிழருக்கு ஆதரவாக கதைக்கும் சீமானை பழிவாங்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருப்பார் எனும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என கடந்து போக முடியாது. வற்புறுத்தி செய்யாத குற்றத்தை ஏற்றுக்கொள்ள வைத்து தண்டனையளிப்பதும், பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து அப்பாவிகளை கைது செய்வதும் கொலை செய்வதும் ஒன்றும் இவர்களுக்கு புதிதில்லை. நாட்டில் அமைதி சமாதானம் நிலவவேண்டுமானால்; அரசியல் அடாவடிகள், துணைபோகும் நீதிமன்றம், காவற்துறை, ஊடகத்துறை பொறுப்போடு செயற்படவேண்டும். விஜய லட்சுமி பாதிக்கப்பட்டிருந்தால்; சீமானின் கலியாணத்தை நிறுத்தி அப்போதே பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கலாம், சட்டத்துறையை நாடியிருக்கலாம், நட்ட ஈட்டை பெற்றிருக்கலாம், இல்லை அவரையே திருமணம் செய்திருக்கலாம் விரும்பினால். இதுவெல்லாம் நடக்காத காரியமா இந்தியாவில்? வேறென்ன செய்ய எதிர்பார்க்க முடியும் இச்சந்தர்ப்பத்தில்? அதை விட்டு காலம் காலமாக இந்த விடயத்தை நீட்டுவது ஏதோ பின்னணியில் என்பது தெளிவாக தெரிகிறது.
  32. 🤣........... நீங்கள் அலுவல்கள் காரணமாக இங்கே வருவது குறைவாக இருந்த சமீப நாளொன்றில், 'செத்தகிளிக்கு செட்டை முளைத்து அது பறக்குது. எங்கே வாலி...........' என்று யாரோ தேடினார்கள்..........🤣.
  33. சுண்டெலி தப்பீட்டுது. ஆனால் ஒண்டு அந்தக் கிழட்டுப் பூனையாலதான் செத்தகிளிக்கும் இருக்குது சடங்கு! வெய்ட் அன்ட் சீ! 😂
  34. இதில் இரெண்டு சிக்கல்கள் உள்ளது. முன்னர் இதை பற்றி யாழில் கதைத்திருந்தோம். Obtaining consent through deception. உதாரணமாக யூகேயில் - ஒருவரை நான் ஏமாற்றி அதன் மூலம் அவர் உடலுறவுக்கு இசைந்தால் - அந்த இசைவு செல்லாது. ஆகவே அந்த உறவு பாலியல் வல்லுறவாக கொள்ளப்படலாம். இந்திய சட்டம், திருமணம் செய்வேன் என ஆசை வார்த்தை காட்டி, ஒரு பெண்ணின் இசைவை பெறுவதையும் இப்படி ஒரு குற்றம் என்றே கருதுவதாகத்தான் என் தேடல் காட்டுகிறது. ஆகவே - இந்த குற்றவியல் வழக்க்குக்கு - ஆம் விஜி அண்ணியை நான் திருமணம் செய்வதாக சொல்லி உடலுறவு கொண்டேன் என சீமான் ஏற்பது - குற்றத்தை ஏற்பது ஆகி விடும். மாறாக நான் அவரை சொல்லியது போல் திருமணம் செய்தேன் (கோவிலில் மாலை மாற்று) ஆகவே ஏமாற்றவில்லை என சீமான் சொன்னால். ஒரு பென்ணை டிவோர்ஸ் பண்ணாமல் இன்னொரு பென்ணை திருமணம் செய்த polygamy வழக்கில் குற்றத்தை ஒப்பு கொண்டதாகிவிடும். ஆகவே சீமானின் நிலை ஆப்பிழுத்த குரங்கு போல. இரெண்டே தெரிவுகள்தான் உள்ளன. ஒன்று விஜி அண்ணியிடம் எந்த வாக்குறுதியும் கொடாமல், தனியே sex for fun உறவு மட்டுமே வைத்தேன் என சொல்லுவது, அதை நிறுவுவது. அதன் மூலம் இரு குற்றசாட்டில் இருந்தும் தப்புவது. அல்லது எவர் காலில் விழுந்தாவது வழக்கை குழப்பி அடிப்பது. கொகேயின் பாவனையாளர்கள் திருந்த வாய்புகள் அதிகம். பேச்சு சுதன்ந்திரத்தை போலவே வழக்கு போடும் சுதந்திரமும் உள்ளது. வாயை வாடகைக்கு விட்டால், வாடகைக்கு வரி கட்டத்தானே வேண்டும்🤣.
  35. ஒரு மாதிரி கோசானின் முதலமைச்சர் பதவிக்கு வேட்டு வைத்துவிட்டீர்கள், இந்த மழை திருப்பத்தினை நான் எதிர்பார்க்கவே இல்லை, இந்த் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றால் கோசான் முதலைம்ச்சராகலாமா? இந்த் போட்டியில் கோச்சானை வாழ வைத்த தெய்வமும் காலை வாரினால் என்ன ஆகும்?
  36. இதே புரிதல் சீமானுக்கு இருக்க வேண்டும். சீமானின் சாக்கடைத் தனமான அரசியல் உத்திகளை ரசிக்கும் தீவிர சீமான் தம்பிகளுக்கும் இருக்க வேண்டும். தற்போதைய நிலையின் படி, இந்த இரு தரப்புகளும் மாறப் போவதில்லை (தங்களுக்கு இன்பம் தரும் ஒன்றை யார் மாற்றுவர்?). எனவே, நா.த.க நச்சுச் செடியாகத் தொடரப் போவதே நடக்கும்!
  37. அடுத்த 4 வருடங்களுக்குள், ஒரு கட்டத்தில் புரின் ஓவல் அலுவலகம் வரக் கூடும். அப்போது எப்படி இந்த இருவரும் குனிந்து நின்று வழிவார்கள் என்பதையும் ஊடகங்கள் பதிவு செய்யும். அது தான் இன்னும் அருவருப்பான காட்சியாக இருக்குமென நினைக்கிறேன்.
  38. காணொளி நாட்டு வருகை தந்த ஒருவரை இவ்வாறு அவமானப்படுத்தியது அமெரிக்க வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்.
  39. சபைகளில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டாக ஆட்சி அமைக்க முடியும். இது தொடர்பாக எமது கட்சித் தலைவர் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இல்லை சார்....அவருடைய ஐடியாவே வேறைசார்...தேர்தல் முடிந்ததும்...என்.பி.பி கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது...அதை வைத்து ...மத்திய அரசுடன்...பேசிப் ப்பேசி ஐக்கியமாவது...அப்புறம் தமிழரசு போகும்...அதன் பின்னாடி செல்வம் போகும் ..படிப்படியாக தமிழனே காணாமல் போவான்..
  40. இவ்வளவு மில்லியனைக் கொட்டி வருவதற்கு அமெரிக்காவில் என்ன இருக்கிறது ?
  41. 7 கோள்கள் ஒரே நேர் கோட்டில் தோன்றும் அபூர்வ நிகழ்வு . ........! 😁
  42. இதனால் தங்களுக்கு மன உழைச்சலாகி விட்டது என்று விமான நிறுவனத்திடம் பணம் பறிக்கும் விதமாகவும் மாறலாம் இல்லயா.?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.