Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points88798Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்11Points19651Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்9Points3118Posts -
satan
கருத்துக்கள உறவுகள்8Points10272Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/07/25 in Posts
-
யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
இந்த நேர்காணலை பார்க்கும்போது சிரிப்பாகவும் அதேநேரம் ரணிலின் கால நேரத்தையும் நினைத்தேன். விடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்தபின் கோத்தாவை சணல் நான்கு என நினைக்கிறன், நேர் காணலில் கேட்ட கேள்விக்கு உண்மைக்கு புறம்பான கருத்தை கோத்த சொன்னபோது, கேள்வி கேட்டவர் ரொம்ப கடுப்பாகிவிட்டார். அப்போ கோத்த அவரை பாத்து சொன்னது, நீங்கள் ஏன் பதற்றப்படுகிறீர்கள்? பதற்றமடைய வேண்டியவன் நான், நானே அமைதியாக இருக்கிறேன் என்றார். திட்டமிட்டு செய்பவன் பதற்றமடைய மாட்டான், தேவையுமில்லை என்றே புரிகிறது. அதன் பின் மஹிந்தவை பல பத்திரிகைகள் நேர்காணல் கண்டன, அதில் அல் ஜெஸீரா, சணல் நான்கு கேட்ட கேள்வி ஒன்று. அதெப்படி உங்கள் அரசில் பல உங்கள் குடும்ப உறவுகள் பதவி வகிக்கின்றனர்? அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, மக்கள் வாக்களித்து தெரித்தெடுக்கின்றனர், அவர்கள் விரும்பாத போது அவர்கள் நம்மை வெளியேற்றுவார்கள் என்றார். கடந்த வருடமென நினைக்கிறன் இந்த நரியை ஒருவர் நேர்காணல் செய்து, உயிர்த்த ஞாயிறு பற்றி வினவிய போது. எப்படி அட்டகாசம் போட்டார்? சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மாட்டேன், நான் இலங்கை கத்தோலிக்க சபையோடு உறவில் இருக்கிறேன், கர்தினால் மட்டுமே பிரச்சனை செய்கிறார் என்று என்று படு பொய் சொல்லி தப்பித்துக்கொண்டார். இந்தமுறை வளமாக மாட்டினார். உயிர்த்த ஞாயிறு சம்பவம் பற்றி கேள்வி கேட்டவுடன் நான் கார்த்தினாலோடு உறவிலுள்ளேன் என பொய் சொல்லுகிறார். அதே நேரம் எல்லா குற்றங்களுக்கும் தான் பொறுப்பில்லை என்கிறார். மஹிந்த வீட்டில் கேக் வெட்டினாராம். இவரது கட்சி ஆட்சி செலுத்திய காலத்திலும் தமிழருக்கு அநிஞாயம் நடந்திருக்கு. பலதடவை இவர் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார். ஏன் இந்தப்பிரச்னைக்கு தீர்வு காண இவரால் முடியவில்லை? தாங்கள் பாடசாலைகளை திறந்து மக்களுக்கு உணவு வழங்கினார்களாம். அப்போ கப்பலில் மக்களை வடக்கிற்கு அனுப்பியது யார்? ஏன் அந்த கலவரத்தை உடனடியாக நிறுத்தவில்லை? இதே ஜே .ஆர் .சொன்னார், போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம். புலிகளை அழிப்பதற்கு எந்தப்பேயுடனும் பேசத்தயார் என்றார். பாவம், அவரது இறப்பு நாட்டில் பொதுவிடுமுறை விடவில்லை, நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவில்லை. இப்போ, கோத்த பாய, விமானப்படையே போருக்கு காரணம் என்பது மாதிரி சொல்லி தப்பி விட்டேனென நினைத்திருப்பார். ரணில் நாட்டுக்கு வர, எப்படியான வரவேற்பிருக்கிறது என்று பாப்போம். அப்படியானால், ஐநாவில் இவரது ஆட்சிக்காலத்தில் இவற்றை ஒத்துக்கொள்ளாதது ஏன்? ராஜ பக்சக்களை காப்பாற்றியது ஏன்? பாவம் ரணில்! ஆப்பிழுத்த குரங்குபோல டுமாட்டுப்பட்டு முழிப்பது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. உண்மையிலேயே ஹசனுக்கு ஒரு சலூட். பிச்சு உதறிட்டார். நிராஜ் தேவா என்பவரா அவர்? அவருந்தான் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம், தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார்.5 points
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
உங்களுக்கும் தலை சுத்தி விட்டதா? மேலே நீங்கள் சொல்வதெல்லாம் அரசியல். ஆனால் நான் கேட்பது வெறும் வழக்கு பற்றிய ஒரு கேள்வி மட்டுமே. கேள்வி இதோ… இங்கே சீமான் முன் உள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான். அவருக்கும், விஜி அண்ணிக்கும் 2010 இல் இருந்த உறவு எப்படியானது? மாலைமாற்றிய திருமண உறவு மாலை எதுவும் மாற்றவில்லை, ஆனால் திருமணம் செய்வேன் என்று இருவரும் பரஸ்பரம் கொடுத்த சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த உறவு இவை இரெண்டும் இல்லாமல் வெறும் - இரு பராயாம் வந்த மனிதர்கள் காம இச்சையை தீர்ந்து கொள்ளும் பொருட்டு வைத்து கொண்ட casual sex உறவு உறவே அல்ல, ஒரு பாலியல் தொழிலாளியிடம் வாடிக்கையாளர் சீமான் வைத்து கொண்ட வியாபாரம் (transactional sex). செந்தாமரை விடயத்தை தயவு செய்து பரப்ப முன்னம் கொஞ்சம் யோசிக்கவும். அது உருவ ஒற்றுமையை வைத்து சொல்லப்படும் பொய் கதை என்கிறார்கள். உங்கள் கருணாநிதி மீது உள்ள கோவம், அநியாயமாக செந்தாமரையின் மனைவி மீது அவதூறு பரப்புவதில் முடிய கூடாது. இல்லை என்றால் ராஜாத்தி அம்மாள் செந்தாமரையின் மனைவி என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுங்கள். அந்த படத்தில் இருப்பது கெளசல்யா செந்தாமரையும், செந்தாமரை தம்பதிகளின் மகள் இராஜலட்சுமி என்கிறார்கள். யாழ் போன்ற ஒரு கண்ணியமான தளத்தில் செந்தாமரை போன்ற ஒரு அறியப்பட்டவரின் மனைவி, மகள் பற்றி ஆதாரம் இல்லாத அவதூறு பரப்பகூடாது. அவர் இப்போதும் இருக்கலாம், மகள் இருக்கிறார், பேரப்பிள்ளைகள் இருப்பார்கள். சம்பந்தமே இல்லாமல் இப்படி அவர்களை இழுத்து சேறடிக்க கூடாது. ஒன்றில் நம்பகமான ஆதாரத்தை தாருங்கள் அல்லது நீங்களே எழுதியை நீக்கி விடவும் இரெண்டும் இல்லை என்றால் நிர்வாகத்திடம் முறையிடுவேன். அதன் பின் அவர்கள் இஸ்டம். இது பற்றி நான் அறிந்த fact-check கீழே ராசாத்தி அம்மாள் செந்தாமரையின் மனைவி என்று வதந்தி தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. Fact Check/Verification ராசாத்தி அம்மாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மனைவி ஆவார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே கனிமொழி. ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று பரப்பி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் செந்தாமரை மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு போன்ற பலத் தமிழ் படங்களில் நடித்தவர். இதையும் தாண்டி அவர் மிகப்பெரிய நாடகக் கலைஞரும் ஆவார். செந்தாமரை அவர்கள் ஒரு மேடை நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் அவர் உயிர் பிரிந்ததாகக் கூறுவர். இவர் எம்.ஜி.ஆர், கலைஞர் என அனைவருடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். இப்படி இருக்க இவரின் மனைவிதான் ராசாத்தி அம்மாள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு பரப்பப்படும் புகைப்படத்தின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய, நியூஸ் செக்கர் சார்பில் இச்செய்தியை ஆராய முடிவெடுத்தோம். உண்மை என்ன? பரப்பப்படும் புகைப்படத்தில் நடிகர் செந்தாமரையும் அவருடன் ஒரு பெண்மணி மற்றும் ஒரு குழந்தைக் காணப்படுகிறார்கள். அப்பெண்மணி ராசாத்தி அம்மாள் என்றும் அக்குழந்தை கனிமொழி என்றும் அப்புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையை அறிய, வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் பரிசோதித்தோம். இதன்பின் இதனுள் இருக்கும் உண்மையை எங்களால் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடிந்தது. உண்மையில், வைரலாகும் படத்தில் செந்தாமரை அவர்களுடன் இருப்பவர் ராசாத்தி அம்மாளே கிடையாது. அப்பெண்மணியின் பெயர் கௌசல்யா செந்தாமரை ஆகும். இவர் ஒரு நடிகை ஆவார். உடன் இருக்கும் குழந்தை இவர்களின் மகள் ராஜலட்சுமி ஆவார். கௌசல்யா செந்தாமரை அவர்களின் படம். இவர் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் “பூவே பூச்சுடவா” உட்பட பலத் தொடர்களில் நடித்து வருகிறார். பூவே பூச்சூடவாத் தொடரில் யுவராணியுடன் கௌசல்யா செந்தாமரை அவர்கள். வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி, கௌசல்யா செந்தாமரைதான் என்பதை வாசகர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக, வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணியின் புகைப்படத்தையும் கௌசல்யா செந்தாமரை அவர்களின் புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம். வைரலானப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி கௌசல்யா செந்தாமரை அவர்களின் புகைப்படம். ஒப்பீடுப் படம். கௌசல்யா செந்தாமரை அவர்கள் ஆனந்த விகடனுக்கு நேர்காணல் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் இவரின் குடும்பப் படத்தையும் பகிர்ந்துள்ளார். ஆனந்த விகடன் கட்டுரைக் குறித்த டிவீட். இந்தப் புகைப்படத்தை வைத்தே விஷமிகள் இவ்வாறு பொய்யான செய்தியைப் பரப்பியுள்ளனர் என்று நம் ஆய்வில் தெளிவாக உணர முடிகிறது. Conclusion நம் விரிவான ஆய்வுக்குப்பின் ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரை அவர்களின் மனைவி என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது என்பதும் வைரலானப் புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் செந்தாமரை அவர்களின் மனைவியும் நடிகையுமான கௌசல்யா செந்தாமரை அவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. Result: False Our Sources Onenov.in: https://www.onenov.in/kousalya-senthamarai-actress/ Andrukandamugam: https://antrukandamugam.wordpress.com/2019/01/03/kousalya-senthamarai/ Ananda Vikadan Twitter Profile: https://twitter.com/vikatan/status/987659938901217280 https://newschecker.in/ta/fact-check-ta/it-is-a-rumour-that-rasathi-ammal-is-the-wife-of-senthamarai5 points
-
யாழில் மாற்றுவலுவுடையோருக்காக உள்ளூரிலேயே தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்
யாழில் மாற்றுவலுவுடையோருக்காக விசேட திட்டம் இலங்கையில் முதன் முறையாக யாழ் மாவட்டத்தில் மாற்றுவலுவுடையோருக்காக விசேடமாக உள்ளூரிலேயே தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் யாழ் மாவட்டத்தில் இன்று மாலை வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு யாழ் மாவட்ட மோட்டார் வாகன திணைக்களத்தினால் இலங்கையில் முன்னுதாரணமான முறையில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு வடமாகாண மாகாண மோட்டார் வாகன திணைக்களத்தின் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது. https://www.facebook.com/LankasriTv/videos/1166145185015299/?ref=embed_video&t=42 சாரதி அனுமதி பத்திரம் இதன் பொழுது உள்ளூரில் மாற்றுதிறனாளிகளுக்கு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு பயணிப்பது மற்றும் அவர்களுக்கான விசேட சாரதி அனுமதி பத்திரங்களை வழங்குமாறும் இதன் காரணமாக தாம் பொலிஸ் மற்றும் சட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுவதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மோட்டார் வாகன தலைமையக தொழில்நுட்ப பிரவின் உதவியுடன் வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவியுடனும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கு வாகன பதிவு வழங்கப்பட்டு சாரதி அனுமதி பத்திரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருந்த பொழுதிலும் குறித்த சாரதி அனுமதி பத்திரத்தில் அவர்களுடைய வாகன இலக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. [ZKFXWMB ] 8 மோட்டார் வாகனங்கள் இந்நிலையில் வேறு வாகனங்களை அவர்கள் செலுத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அனுமதி வழங்கபட்ட 8 மோட்டார் வாகனங்களின் உரிமையாளர்களான எட்டு மாற்றுத்திறனாளி உரிமையாளர்களுக்கு இவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டதோடு மேலும் மாற்றுதிறனாளிகள் பதிவு செய்ய முற்படுகின்ற பொழுது அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/special-program-for-the-disabled-in-jaffna-1741293670#google_vignette3 points
-
பிரித்தானியாவில் ஆங்கிலம் பேசத் திணறும் மக்கள்!
பிரான்ஸில் உள்ள சில தமிழர்களின் நிலையும் இதுதான். எனது குடும்பத்திலும் 80 ஆம் ஆண்டுகளில் இங்கு வந்தவர்கள் சிலர் ஒரு வசனம் கூடச் சரியாக பிரெஞ்சில் பேச மாட்டார்கள். ஆயுட்காலத்தில் பெரும்பாலான வருடங்கள் பிரான்சில் வாழ்ந்தவர்கள் - கிட்டத்தட்ட அரை நுற்றாண்டுகள் - பிரெஞ்சு தெரியாமல் இருப்பதற்கான காரணங்கள் : வேலை செய்யும்போது வேறு நாட்டவர்களுடன் பழகுவதில்லை. ஓரிரு தமிழர்கள் கூட வேலை செய்தால் தமிழிலேயே கதைத்துக் கொள்வது. வீட்டில் தமிழ் தொலைக்காட்சி, படங்களை மட்டுமே பார்ப்பது தற்போதும் உலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தமிழ் யூரியூபர்களையும் சாத்திரிகளையும் தொடர்வது ஓய்வு நேரங்களில் வெளியில் சென்று உலாவ விரும்பாமல் கிடைக்கும் ஓய்வு நேரங்களை தொலைபேசியில் வீணாகச் செலவிடுவது (அல்லது லா சப்பலுக்குச் செல்வது) பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் இருந்தால் மொழிப் பிரச்சனையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள என்று பொறுப்பின்றி இருப்பது மறுபடி இலங்கை திரும்ப விரும்பாதவர்கள் இனிமேல் இதுதான் தமது நாடு என்பதை ஏற்றுக் கொண்டு இங்குள்ள மொழி வரலாறு கலாச்சாரம் அரசியல் போன்றவற்றை ஓரளவாவது அறிந்து கொள்ள வேண்டும்.3 points
-
முழிக்கும் மொழி
2 pointsமுழிக்கும் மொழி --------------------------- இருமொழிக் கொள்கையா அல்லது மும்மொழிக் கொள்கையா எது சரி, எந்த வழியில் போவது என்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடத்தில் வார்த்தைப் போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது வெறுமனே வார்த்தைப் போர்கள் தான். இந்தப் போர்க் களத்தில் நிற்கும் பெரும்பாலான முன்னணி தளபதிகளின் குடும்பங்களில் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படுகினறன. ஆனாலும் தமிழைக் காப்பதற்காக, தமிழை வளர்ப்பதற்காக தாங்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிரானவர்கள் என்று இவர்கள் வெளியில் சொல்லிக் கொள்கின்றனர். இதில் பலரும் மும்மொழிகளும் படிப்பிக்கும் தனியார் பாடசாலைகளின் உரிமையாளர்களாகவும் கூட இருக்கின்றனர். வழமையான அரசியல் தான் இங்கேயும். மேடையில் ஏறி வாக்குகளுக்காகவும், கைதட்டலுக்காகவும் எதைப் பேச வேண்டும் என்று தெரிந்து அதையே பேசுவது, மேடையிலிருந்து இறங்கிய பின் தங்களின் குடும்ப நலன்களையும், தங்களின் வளமான எதிர்காலத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு, மேடையில் பேசியதற்கு முற்றிலும் எதிரான செயல்களில் ஈடுபடுவது என்பது ஜனநாயக அரசியலின் தவிர்க்க முடியாத ஒரு பக்கம். சர்வாதிகாரிகளுக்கு இந்த இரட்டை நிலைப்பாடுகள் தேவையில்லை. ஊரில் சிறுவயதில் ஒருமொழிக் கொள்கையுடனேயே என் இளமைக்காலம் கழிந்தது. அந்த ஒரு மொழி கூட எந்தப் பாடசாலையிலும் கற்றதால் வந்தது அல்ல. என்னுடைய அம்மாச்சியும், அம்மாவும், அப்பாவுமே அந்த ஒரே மொழியை எனக்கு கொடுத்தார்கள். அம்மாச்சி கதைகள் சொல்வார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கமரூன் போன்றவர்களால் கூட அம்மாச்சியை நெருங்கமுடியாது. அவர் ஒரே சேலையையே தினமும் உடுத்திக் கொண்டே தமிழ் வார்த்தைகளால் பிரமாண்டங்களை உருவாக்கினார். பின்னர் ஊரில் இருந்த வாசிகசாலைகள் அம்மாச்சியின் இடத்தை நிரப்ப முயன்றன. தமிழ் சொற்களும், வசனங்களும் அவ்வாறே உள்ளே புகுந்தன. தமிழையே சொல்லிக் கொடுக்காத பாடசாலைகளில் இன்னொரு மொழியை சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நான் போன எந்தப் பாடசாலையிலும் ஆங்கிலத்தை மருந்துக்கு கூட படிப்பிக்கவில்லை. என்னுடைய பாடசாலை நாட்களில் ஹாட்லிக் கல்லூரியில் படித்தவர்கள் சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடும். ஆனால், பின்நோக்கிப் போய் நிதானமாகப் பார்த்தால், அவர்களுக்கும் உண்மை தெரியவரக்கூடும். அன்று ஆங்கில மொழியில் பரிச்சயம் வருவதற்கு வளரும் சூழலில் ஏதாவது சிறிய அளவில் தன்னும் ஒரு ஆங்கில புழக்கம் இருந்திருக்க வேண்டும் அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போயிருக்க வேண்டும். இவை அமையாவிடத்து ஆங்கிலமும் அமையாது. சிங்கள மொழியின் நிலை இன்னும் பரிதாபம். அதைக் கற்றல் முற்றாகவே தடை செய்யப்பட்டிருந்தது. ஊரில் ஒரு இடத்தில் 'மேக்கட்ட கீயா......' என்று பெரிதாக தமிழில் எழுதப்பட்டிருந்தது. பல வருடங்களின் பின், ஊரை விட்டு வெளியே வந்த பின் தான், இவை சிங்கள மொழிச் சொற்கள் என்பது தெரியவே வந்தது. அது எழுதப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த வீட்டில் ஒரு அக்கா இருந்தார். அப்போது அந்த அக்காவை ஒரு அண்ணன் விரும்பிக் கொண்டிருந்தார். அந்த அண்ணனின் நண்பர்கள் தான் இந்த சிங்கள மொழி வசனத்தை தமிழில் அங்கே எழுதியிருந்தனர். அவர்களுக்கு எப்படி சிங்கள மொழி தெரிய வந்தது என்றால் அவர்களில் சிலர் வெளிநாடு அல்லது கப்பலில் போவதற்காக கொழும்பிற்கு போய் வந்து கொண்டிருந்தார்கள். போகும் வழிப்பாதையில் வழித்துணையாக சிங்கள மொழியில் சில சொற்களையும், வசனங்களையும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். நான் பின்னர் தேவை காரணமாக சிங்கள மொழியையும், ஆங்கிலத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஒரு மொழியை வெறும் மொழியாகவே பார்க்கும் போது அது உண்டாக்கும் ஆச்சரியம் அளவில்லாதது. எப்படி இவை உண்டாகியிருக்கும், எப்படி சத்தங்களை வார்த்தைகளாக உருவாக்கினார்கள், எப்படி உணர்வுகளை வார்த்தைகளாக வெளிப்படுத்தினார்கள் என்பது மனிதர்களின் கூட்டு ஆற்றலுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு. எந்த மொழியையும் மனிதர்களுடன், நிலத்துடன், வரலாற்றுடன், பண்பாட்டுடன் சேர்த்து பார்க்கும் போது பேதங்கள் வர ஆரம்பித்து, அவை பெரும் மோதல்களாவும் ஆகிக்கொண்டிருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை பாடசாலைகளில் புகுத்தும் போது, ஒரு மொழியைக் கொண்டு இன்னொரு மொழியை அழிக்க முற்படுகின்றார்கள் என்பதே இன்று சொல்லப்படும் பெரும் குற்றச்சாட்டு. உதாரணமாக, தமிழ் மொழியை இந்தி மொழியால் அழிக்கப் பார்க்கின்றார்கள் அல்லது தமிழ் மொழியை சிங்கள மொழியால் அழிக்கப் பார்க்கின்றார்கள் என்பன. ஆங்கிலத்திற்கு இந்தக் கட்டுப்பாடு அநேக நாடுகளில் இல்லை. ஆங்கிலம் இன்று உலக இணைப்பு மொழி ஆகிவிட்டது, ஆகவே ஆங்கில மொழியை இரண்டாவது மொழியாகக் கொண்ட இருமொழிக் கொள்கைக்கு பெரும்பாலான நாடுகளில், பிரதேசங்களில் எதிர்ப்புக் காட்டப்படுவதில்லை. கோவாவில் இருக்கும் மக்கள் கொங்கணி என்னும் மொழியைப் பேசுகின்றார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் இப்பொழுது கர்நாடகாவில் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் ஒரு பகுதியில் அந்தப் பிரதேசத்தின் பேச்சு மொழியாக துளு இருக்கின்றது. கன்னடம் கர்நாடக மாநிலத்தின் மொழி. இந்த மக்கள் மூன்று மொழிகளிலும் முதலில் பரிச்சயம் ஆகின்றனர். ஆண்கள் தங்கள் பகுதி பெண்களுடன் துளு மொழியிலும், ஆண்களுடன் கொங்கணி மொழியிலும், பிறருடன் கன்னடத்திலும் உரையாடுகின்றனர். இதைவிட ஆங்கிலமும், இந்தியும் பாடசாலைகளில் கற்றுக்கொள்கின்றார்கள். இந்த தகவல்களை அங்கிருந்த வந்த ஒரு நண்பன் சொன்னான். அவனுடைய ஆங்கில மொழித்திறனும் அபாரம். அவன் இந்தி மொழியையும் மிக நன்றாகப் பேசுகின்றான் என்றே வட இந்திய நண்பர்கள் சொன்னார்கள். அவனுக்கு தமிழும் ஓரளவு தெரிந்திருக்கின்றது. பழைய கன்னட மொழி அப்படியே தமிழ் தான், ஆனால் இதை இங்கு இருக்கும் வேறு எந்த தமிழர்களுக்கும் சொல்லாதே என்று அவன் எனக்கு சொன்னான். எத்தனை மொழிகளை சிறுவயதில் கற்க ஆரம்பிக்கலாம் என்பதில் பெரிய சிக்கல்கள் இல்லை என்றே தெரிகின்றது. மூன்று அல்லது நான்கு மொழிகளை கற்றுக் கொள்ளலாம் என்றே சொல்கின்றனர். இந்த மொழிகள் புழங்கும் சூழல் இருந்தால், இன்னும் மிக இலகுவாக இவைகளை கற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்கின்றனர், என்னுடைய கொங்கணி - துளு - கன்னட - ஆங்கில - இந்தி மொழிகள் தெரிந்த நண்பன் போல. அதிக மொழிகளை தெரிந்திருப்பதால் அது நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை விடவும் பல பயன்கள் உண்டு. உதாரணமாக, அதிக மொழிகள் தெரிந்திருப்பவர்களின் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும், சிக்கல்களுக்கு தீர்வுகளைக் காண்பதில் அதிக நெளிவுத்தன்மை இருக்கும் போன்றன. இலங்கையில் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் சிலர் மும்மொழி வல்லுநர்கள் என்றனர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்றும் தெரிந்த அவர்களால் ஏதாவது நல்லது நடக்கப் போகின்றது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடந்தது போல தெரியவில்லை. ஒரு வேளை அவர்கள் தங்களுக்கு மட்டும் தேவையானவற்றை தங்களின் திறமைகளின் ஊடாக பெற்றுக் கொண்டார்களோ என்னவோ. அரசியலில் பலதும் பொய்த்துப் போகின்றன. எவரும் இன்னும் ஒரு மொழியை அறிந்து கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவற விடுவது சரியென்று தெரியவில்லை. அதுவும் வசதியுள்ளவர்களுக்கு இந்த வசதி கிட்டும் போது, வசதியில்லாதவர்கள் மட்டும் இதை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம். மற்றும் உலகெங்கும் பத்து கோடிப் பேர்கள் வரையும், தமிழ்நாட்டில் மட்டும் ஒன்பது கோடிப் பேர்கள் வரையும் பேசும் தமிழ் மொழி இன்று இன்னொரு மொழியால் அழிந்து போகும் என்றால், பிரச்சனை உள்ளே வரும் அந்த புதிய மொழியால் இல்லை, அது எங்களில் என்று தானே அர்த்தம்.2 points
-
"மன்னிப்பாயா என்னை", தாய்மை & "தாத்தா"
"மன்னிப்பாயா என்னை", தாய்மை & "தாத்தா" "மன்னிப்பாயா என்னை" மன்னிப்பாயா என்னை அழகு சுந்தரியே அன்பைப் புரியாத பாவி நானே இன்பம் ஒன்றுக்கே பெண்ணென நினைத்தேனே துன்பம் தந்து கண்ணீரை வரவழைத்தேனே! பெண்ணில் பிறந்தவன் அவளையே தேடுகிறான் கண்ணை நம்பி எங்கேயோ அலைகிறான் மண்ணில் மனிதம் காக்கத் தவறி கண்ணியம் தாண்டியவனைப் பொறுத்தால் என்ன? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................. தாய்மை [கைக்கூ] தாய்மை என்பது தாயாக இருக்கும் நிலையோ தாலியின் பாக்கியமோ கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. "தாத்தா" [தன்முனைக் கவிதை] தாராள பாசத்துடன் தன்னையே கொடுக்கும் தாத்தா! கண்ணைப் போலவே பேரனைக் காக்கும் பாட்டன்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்2 points
-
கோடி பேர் இருக்காங்க வெளில.. ராயப்பேட்டையில் மாஸ் காட்டிய விஜய்! பதறிப் போன பவுன்சர்கள்.. என்னா அடி!
கோடி பேர் இருக்காங்க வெளில.. ராயப்பேட்டையில் மாஸ் காட்டிய விஜய்! பதறிப் போன பவுன்சர்கள்.. என்னா அடி!
2 pointsமதச்சார்பற்ற நாடாக மாறாத எந்த நாடும் உருப்படாது.. அதுவும் முட்டாள் அடிப்படைவாத இந்துக்களும் முஸ்லீம்களும் இருக்கும் இந்தியா ரெம்ப நல்லா உருப்படும்.. இப்படி மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் கலந்துகொண்டு ஊக்குவிப்பதை தவிர்க்க வேண்டும்..2 points -
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
சட்டம் மிக அரிதாகவே black and white ஆக இருக்கும். இதுவும் அப்படி நிறைய grey areas உள்ள விடயம்தான். எது public place என்பதில், என்னத்துக்காக எடுக்கப்படுகிறது (intention) என்பதில் நிறைய தங்கி உள்ளது. அத்தோடு, upskirting போட்டோ எடுப்பது நிச்சயமாக குற்றம். இன்னொரு விடயம் வீடியோ எடுப்பதற்கு உள்ள சுதந்திரம் அதை பகிர இல்லை. அங்கே reasonable expectation of privacy யையும் கருத்தில் எடுக்க வேண்டும். இங்கேதான் பெண்பிள்ளைகளின் ஸ்போர்ட்ஸ் மீட்டில் போய் படம் எடுத்தது பிரச்சனையாகலாம். Intention அதை விட மோசமானது என நிறுவினால் - சிறுவர் பாலியல் வழக்கும் ஆகலாம். உதாரணமாக ஒரு வங்கியில் போய் 20x ஆப்டிகள் சூம் லென்சை பாவித்து ஒவ்வொருவருடைய பாங் பலன்சையும் ஸ்கீரீனில் போட்டோ எடுக்க முடியுமா? ஆகவே இடம் பொருள் ஏவல் முக்கியம். இங்கே இவர் செய்வது யூடியூப் லைக்சுக்காக video auditors என்பவர்கள் எடுக்கும் வீடியோக்கள். இப்படி போய் வீடியோ எடுத்து, சர்ச்சையாக்கி லைக்ஸ் அள்ளுவது. யூகேயில் விடுற சேட்டையை ஊரில் விட்டிருக்கிறார்…சேட்டை கிழிச்சு போட்ட்டானுவோ🤣. பிகு ஆள் லண்டன் ரிட்டேர்ன்னாம் எண்டதும் எனக்கு திக் என்றாகிவிட்டது. இப்ப எல்லாம் ஓகே யா🤣2 points
-
யாழில் மாற்றுவலுவுடையோருக்காக உள்ளூரிலேயே தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்
உங்களைப் போல திறமையான இயந்திர வல்லுநர்கள் சிலருடைய முயற்சிகளால் இது சாத்தியமாகி உள்ளது. நானும் எனது பற்றறியில் இயங்கும் முச்சக்கர ஸ்கூட்டரிற்கு சோலார் பனல் பூட்ட திட்டமிடுகிறேன். வெயிலுக்கு நிழலும் பற்றறிக்கு மின்சாரத் தேவையையும் பூர்த்தி செய்யலாம்! கடந்த மாதத்தின் பெருமளவு நாட்கள் எனதும் தம்பியினதும் வண்டிகள் பழுதடைந்ததால்(வயறிங் டமேஜ், பற்றறி புதிது மாற்றம்) றீசார்ஜ் செய்வது குறைந்துவிட்டது. இதனால் 30-35 யுனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. தற்போது lead acid battery மாற்றிவிட்டேன்.2 points
-
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
சிலருக்கு…. வெளி நாட்டு பாஸ்போட்டுடன், ஊருக்குப் போனவுடன்.. ஏதோ வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த மாதிரி ஒரு நினைப்பு. இப்ப… இவர் வழக்கு முடியும் மட்டும், நாட்டை விட்டு போக இயலாது என நினைக்கின்றேன். கிடைத்த விடுமுறையில்… இரண்டு கிழமையை இலங்கை விளக்கமறியலில் கழிக்க வேண்டி வந்திட்டுது. 😂2 points
-
பிரித்தானியாவில் ஆங்கிலம் பேசத் திணறும் மக்கள்!
இதுக்கேன் இவ்வளவு சீரியசாக இருக்கிறாங்கள்? "ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே, அது அறிவல்ல" 😉2 points
-
மத்தள விமான நிலையத்தை, விமான பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் தீர்மானம்!
கொஞ்சக் காலம் இந்த விமான நிலையத்தில், நெல் காயப் போட்டார்கள். இப்போ.... காயப் போட, நெல்லும் இல்லைப் போலுள்ளது.2 points
-
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
ஆள்... இவர் தான். நல்ல அடி கொடுத்து, பிற கைதிகளுடன் சேர்த்து விலங்கும் மாட்டி, சட்டையையும் கிழித்து அனுப்பி இருக்கின்றார்கள். 😅2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நீங்கள் இருவரும்.. டக்கென்று புரிந்து கொண்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. காணொளி என்றால், யூ ரியூப் முகவரியை பதிய வேண்டும். முகநூல் காணொளிகளை யாழ். களத்தில் நேரடியாக இணைக்க முடியாது. அதன் இணைப்பை பதிந்தால்... பார்வையாளர்கள் சுட்டியை அமத்தி காணொளிகளை பார்வையிட முடியும். உதாரணம்: யூ ரியூப்: 👉 https://www.youtube.com/watch?v=52kDVborPj 👈 முகநூல்: 👉 https://www.facebook.com/watch/?v=743323616693101 👈2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
சின்ராசு என்ன பிராண்ட் கஞ்சா இழுக்கிறார் என்று அறிய ஆவல். ஒருக்கா ட்ரை பண்ணி பாப்பம் எண்டுதான் எபெக்ட் தாறுமாறா இருக்கும் போல.2 points- சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
ஆமை கறி விருந்து புகழ் சீமான் கற்று கொடுத்தது2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முயற்சி பண்ணிப் பார்த்தேன். கீழே பாருங்கள்.🥰 செய்து பார்த்தோம். தலையைச் சுத்தி மூக்கத்தொடுற மாதிரி. ஆனா மூக்கத் தொட்டாச் சரிதானே. கீழே பாருங்கள்.2 points- யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
உண்மைகளை ஒருபோதும் மறைக்க முடியாது, எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் அத்தனையையும் உடைத்துக்கொண்டு ஒருநாள் தக்க சமயத்தில் வெளியில் வரும். சமுதாயத்தில் மதிக்கப்படவும் வரலாற்றில் இடம்பெறவும் செய்த சாகசங்கள் பின்னாளில் மறக்கப்பட்டு குற்றவாளிகளாக வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களுமுண்டு. இதுதான் ஆரம்பம் உண்மைகள் வெளியே வர, இது தொடரும். எல்லோராலும் சிங்கள இனவாதிகளின் முகம் வெளியே கொண்டுவரப்படும். புதிய சமுதாயம் இதற்காக வெட்கப்படும்.2 points- யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
யுத்தம் முடிந்து 15 வருடங்கள் முடிந்தும் பாதிக்கப்பட்ட இனத்துக்கு நீதி வழங்க முடியாத தலைவர்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? போர் நடந்தபோது தவறுதலாக குண்டு போட்டீர்கள் என்றால் போர் முடிந்து சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றது எந்த விதத்தில் நிஞாயம்? சர்வதேச சட்டத்திலேயே சரணடைந்தவர்களை பாதுகாக்க வேண்டும் என்று தானே சொல்கிறார்கள். தலைவரின் மகன் என்பதற்காக பாலகனை விசுக்கோத்து கொடுத்து சுட்டுக் கொன்றீர்களே இதுவும் தவறுதலாகவா நடந்தது? இதற்கெல்லாம் என்றோ ஒருநாள் பதில் சொல்லயே ஆகணும்.2 points- காற்றாடி
2 pointsகாற்றாடி - அத்தியாயம் ஐந்து -------------------------------------------- சிவா அண்ணாவும், முரளி அண்ணாவுமே அந்த அறையில் எப்போதும் இருப்பார்கள். இருவருக்கும் மட்டுமே அந்த அறையில் இருந்த இரண்டு திரைப்படக் கருவிகளையும் இயக்கத் தெரிந்திருந்தது. அவன் திரைப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது, அந்த அறையின் கதவோரம் நின்று எட்டிப் பார்ப்பான். சிவா அண்ணா எதுவும் சொல்லமாட்டார். முரளி அண்ணா அவன் அங்கே வருவதை விரும்புவதில்லை. 'கீழே போடா.........' என்று சத்தம் போடுவார். அந்த அறையின் கதவோரத்திலேயே வெக்கை அடிக்கும். ஒரு அடி அளவு நீளமான கார்பன் குச்சிகள் திரப்படக் கருவிகளின் உள்ளே எரிந்து கொண்டிருக்கும். அங்கிருந்து வரும் ஒளியே திரையில் ஓடும் திரைப்படமாக விழுத்தப்படுகின்றது. அந்த வெக்கை தான் முரளி அண்ணாவை எரிச்சல் படுத்துகின்றது போல என்று நினைத்துக் கொள்வான். படங்கள் ஆயிரம் அடிகள் நீளமான ரீல்களாக வரும். அநேகமாக ஒரு தமிழ்ப் படம் என்றால் 14 ரீல்கள் இருக்கும். ஒவ்வொரு படமும் 14000 அடிகள் நீளமானது என்று சொல்லலாம். ஒவ்வொரு ரீலும் தனிதனியே ஒரு வட்டமான, தட்டையான தகரப் பெட்டிக்குள் இருக்கும். எல்லா வட்ட தகரப் பெட்டிகளும் ஒரு பெரிய வெள்ளி நிறத்திலான பெட்டிக்குள் இருக்கும். ஒரு ரீல் 11 நிமிடங்கள் வரை ஓடும். பெரிய படங்கள் என்றால் ரீல்களின் எண்ணிக்கை இன்னும் கூடும். ஆங்கிலப் படங்கள் போல சிறிய, 90 நிமிடங்களே ஓடும், படங்கள் என்றால், அதில் எட்டு அல்லது ஒன்பது ரீல்களே இருக்கும். திரைப்படக் கருவிகளில் இரண்டு ரீல்களை ஒன்றன் பின் ஒன்றாக பொருத்தும் வசதி இருக்கின்றது. ஒரு ரீல் ஓடி முடிந்தவுடன், அதைக் கழட்டி விட்டு அடுத்த ரீலை எடுத்து மாட்டி விடவேண்டும். இப்படி மாறி மாறி செய்து கொண்டிருப்பதால், தடங்கல்கள் இல்லாமல் படம் ஓடும். இரண்டு திரைப்படக் கருவிகளையும் ஒரு காட்சிக்கு பயன்படுத்தமாட்டார்கள். இரண்டுக்கும் கார்பன் குச்சிகளை போடுவது தேவையில்லாத மேலதிக செலவு. கார்பன் குச்சிகளை கடைசிவரை எரிய விடமுடியாது. ஓரளவு எரிந்து முடிந்து கொண்டு வரும் போது, புதுக் குச்சிகளை போடவேண்டும். அவனிடம் வீட்டில் ஏராளமான எரிந்து மீதமான கார்பன் குச்சிகள் இருந்தன. காதலிக்கும் பெண் எறிந்து விட்டுப் போன பொருட்களை சேர்த்து வைத்துக் கொள்வது போல, அவன் சினிமா தியேட்டரிலிருந்து பொருட்களை சேகரித்து வைத்துக் கொண்டிருந்தான். ஓடிக் கொண்டிருக்கும் ரீல் இடையில் பொசுங்கி அல்லது எரிந்து போவது தான் பெரிய பிரச்சனை. ரீல் எரிவது திரையிலும் தெரியும். படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் சத்தம் போடுவார்கள், கூவென்று கத்துவார்கள். பதட்டப்படாமல் எரிந்து கொண்டிருக்கும் ரீலை கழட்டி, எரிந்த பகுதிகளை வெட்டி எறிந்து விட்டு, இரண்டு பக்கங்களையும் மீண்டும் பொருத்தி, ஓடவிட வேண்டும். பொருத்துவதற்கு ஒரு பசை இருக்கின்றது. அப்படி வெட்டி எறியப்படும் ரீல் துண்டுகளையும் அவன் சேர்த்து வைத்திருந்தான். சில படங்களின் ரீல்கள் அடிக்கடி எரிந்துவிடும். படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் உள்ளே கதிரைகளை உடைத்தும் இருக்கின்றார்கள். பெரிய வாய்ச்சண்டையாகவும் மாறிய நாட்களும் உண்டு. ஆனால் எவரும் எவருக்கும் இதுவரை அடித்ததேயில்லை. அது திரையில் கதாநாயகனும், வில்லன்களும் மட்டுமே செய்வது என்பதில் நல்ல ஒரு தெளிவு எல்லோரிடமும் இருந்தது. அன்றோரு நாள் சிவா அண்ண வரவில்லை. அவரால் சில நாட்களுக்கு வர முடியாத ஒரு நிலையில் இருக்கின்றார் என்று சொன்னார்கள். சிவா அண்ணாவிற்கு ஏர்ப்பு வலி வந்து, அவரை மந்திகை ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தார்கள். அவர் அருந்தப்பில் உயிர் தப்பியதாக சொல்லிக்கொண்டார்கள். எப்பவோ ஏதோ ஒரு பழைய ஆணியோ எதுவோ அவருக்கு காலில் குத்தி இருக்கின்றது. அவர் அதைக் கவனிக்காமல் விட்டிருந்ததாகவும் சொன்னார்கள். பின்னர் அவருக்கு முடியாமல் போகவே, உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தனர். அங்கிருந்து அவசரம் அவசரமாக மந்திகைக்கு அவர் அனுப்பப்பட்டார். அவனின் வீட்டில் இப்படி ஏதாவது நடந்தால், ஏதாவது குத்தினாலோ அல்லது வெட்டினாலோ, மரமஞ்சளை அவித்து குடிக்கக் கொடுப்பார்கள். சிவா அண்ணாவின் வீட்டில் கொடுக்கவில்லை போல. இல்லாவிட்டால் இந்த மரமஞ்சள் அவ்வளவாக வேலை செய்வதில்லையோ தெரியவில்லை. அவன் ஏர்ப்பு வலி என்று கேள்விப்பட்டிருந்தான், ஆனால் இதுதான் முதல் தடவையாக அந்த வலியால் ஒருவர் சாகும் வரை போனார் என்று தெரிந்து கொண்டது. கீழே குனிந்து காலைப் பார்த்தான். பாடசாலைக்கு போய் வரும் நாட்களில் செருப்பு போட்டிருந்தவன், ஆனால் இப்பொழுது போடுவதில்லை. இனிமேல் செருப்பு போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். சிவா அண்ணா இல்லாததால் முரளி அண்ணா அவனை உதவிக்கு வைத்திருக்க ஒத்துக்கொண்டார். முகாமையாளர் உரத்துக் கதைத்தபடியால் மட்டுமே முரளி அண்ணா சம்மதித்தார். 'சின்னப் பொடியன், அவன் அங்கே வேண்டாம்...................' என்று மட்டுமே முரளி அண்ணா மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். தன்னால் தனியாக சமாளிக்க முடியும் என்றும் அவர் சொன்னார். ஆனாலும் முகாமையாளர் விடவில்லை. தியேட்டரில் கதிரைகள் உடைந்தால், அதற்கு முகாமையாளர் தான் முதலாளிக்கு பதில் சொல்லவேண்டும். முதல் பயிற்சியாக எரிந்து பொசுங்கிப் போன ரீல்களை எப்படி வெட்டி ஒட்டுவது என்று முரளி அண்ணா அவனுக்கு செய்து காட்டினார். மிக வேகமாகச் செய்ய வேண்டும் என்றார். பாடல் காட்சியாக இருந்தால் எவ்வளவையும் வெட்டி எறியலாம், சண்டைக் காட்சியாக இருந்தால் அளவாகத்தான் வெட்டி எறிய வேண்டும் என்று சில தொழில் ரகசியங்களையும் சொன்னார். வெட்டி ஒட்டிக் கொண்டிருந்தவனின் பார்வை அந்த அறையின் ஒரு மூலைக்கு போனது. அங்கே பல வெறும் போத்தல்கள் இருந்தன. 'அங்கே என்ன பார்க்கின்றாய்............. இங்கேயோ அல்லது வேறு எங்கேயுமோ இதை எதையாவது தொட்டாய் என்றால், உன்னை கொன்று போடுவேன்..........................' என்று அதட்டினார். பின்னர், 'படிப்பை விட்டிட்டு ஏண்டா இங்க வந்தாய்............' என்று மெதுவாக முணுமுணுத்தார். அவரின் குரலிலும், முகத்திலும் ஒரு மெல்லிய சோகம் தெரிந்தது. (தொடரும்................................)2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1kcsdXNbmjH_DgikjBBctvJFH2ulbAnjaEcdBUmVBdxI/edit?usp=sharing அதிகபட்ச புள்ளிகள் 218 குழுநிலைப் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2 தோல்வி (Loss)- 0 முடிவில்லை (No Result) - 1 சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சம்நிலையில் முடிய வாய்ப்பில்லை வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும். அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) குழுநிலைப் போட்டிகள் முடிவடைந்து தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த Playoff கட்டத்திற்கு போகும். முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும். மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். இறுதிப் போட்டியில் Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 25 மே 2025 அன்று ஏடென் கார்டன்ஸ் மைதானத்தில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும். Qualifier 1: 1st placed team v 2nd placed team Eliminator: 3rd placed team v 4th placed team Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி வியாழன் 20 மார்ச் 2025 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்1 point- பிரித்தானியாவில் ஆங்கிலம் பேசத் திணறும் மக்கள்!
இன்னுமொரு 20 வருடத்தில் அந்த தலைமுறை இல்லாமல் போய் பிரான்சில் பிறந்து வளரும் தமிழர்கள்தான் இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். பிரென்ச் மொழி பேச பழகுவது கொஞ்சம் சவாலான விடயம் என்றே எண்ணுகிறேன். உச்சரிப்புகள் கொஞ்சம் கடினம் AI இந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்டிவிடும் நாங்கள் தமிழில் பேசினாலே போதும் உங்களுக்கு என்ன பாசையில் யாருடைய குரலில் வேண்டுமோ அதை அது பார்த்து கொள்ளும். நான் சமாளிக்க கூடிய அளவிற்கு ஸ்பானிஸ் பேசுவேன் சரளமாக ஸ்பானிஸ் விளங்கும். கடந்த ஜனவரி மாதம் பிரேசில் சென்று இருந்தேன் அங்கு போர்துகேஸ் தான் பேசுவார்கள். முதல்நாள் கொஞ்சம் கடினமாக இருந்தது பின்பு ஸ்மார்ட் போன் மூலம் மொழிபெயர்ப்பு செய்ய தொடங்கியதால் பெரும்பாலும் எந்த சிக்கலும் இருக்கவில்லை. நான் ஆங்கிலத்தில் பேசுவதை அது போர்த்துக்கீசில் சொல்லும். மிக இலகுவாக இருந்தது. இன்னமும் வளர்ச்சி அடைந்த பின்பு இன்னமும் சிறப்பாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்1 point- கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் சிலரின் செயற்பாடு கிறிஸ்தவ மக்களின் மனங்களை நோகடிக்கும் செயல்
1 pointஒரு ரோயலிஸ்ட் இப்படி செய்யலாமா? ஒ வட் ஏ செம்... அந்த குருசை வைத்து ஆடியது கிரிஸ்தவரா? பெளத்தரா? இந்துவா? இஸ்லாமியனா? கிறிஸ்தவனாக இருந்தால் நாங்கள் மன்னிப்போம் ..ஆசிர்வதிப்போம்.. ஏனைய மதத்தினர் என்றால் நாங்கள் அதை வன்மையாக கண்டிக்கிறோம் ....நாட்டில் பிரிவினையை தூண்டும் செயல் இது1 point- யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
இங்கு அனுமதி இல்லாமல், 18 வயதுக்குட்பட்ட பெண்ணின் படத்தை எடுத்து, அதற்கெதிராக பொலிசாருக்கு முறைப்பாடு செய்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். பாடசாலைக்கருகில் ஒருவர் காரிற்குள் இருந்து சுய இன்பம் அனுபவித்ததுக்கே கைது செய்யப்பட்டார். அவ்வளவு ஏன், பாடசாலை முடிந்து வீதியில் வந்து கொண்டிருந்த ஒரு மாணவிக்கு லிப்ட் தர முயன்றதுக்கே ஒருவரை கடுமையாக விசாரித்தார்கள்.1 point- யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
2 கிழமை வித்தியாசமான...சாப்பாடுதானே சாப்பிட்டுப் பார்க்கட்டும்1 point- யாழில் மாற்றுவலுவுடையோருக்காக உள்ளூரிலேயே தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்
நல்ல செய்தி .......நன்றி ஏராளன் .........! 😁1 point- துர்நாற்றம் வீசும் சடலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இலங்கையில் இந்திய இராணுவத்தின் குற்றங்கள்
1 pointஎண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கைக்கு வந்த இந்தியப் படைகளால் 35 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் பிழைத்தவர்களிடம் இருந்து தகவல்களை சேகரித்து சர்வதேச மனித உரிமை சட்டத்தரணி தலைமையிலான அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய அறிக்கை வடக்கில் வெளியிடப்பட்டுள்ளது. படுகொலையில் ஈடுபட்ட இந்திய இராணுவ அதிகாரிகளைக் கண்டறிந்து, அவர்களை பொறுப்புக்கூறச் செய்து, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு இழப்பீடு வழங்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொள்வதாக தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் (ITJP) இன்றைய தினம் (மார்ச் 2) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. “இறந்த சடலங்களின் துர்நாற்றமும், எரிந்த மணமும் கலைந்து போவதற்கு முன்னரே, உயிர்தப்பியவர்களிடமிருந்து வாக்குமூலங்களை கவனமாகப் பதிவுசெய்து, ஆவணப்படுத்திய தனியொருவரின் அசாதாரண செயற்பாடே இவ்வறிக்கை உருவாகுவதைச் சாத்தியமாகியது.” என "வல்வெட்டித்துறை: ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்" என்ற தலைப்பிலான 62 பக்க அறிக்கை குறித்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் ஜஸ்மின் சூகா தெரிவிக்கின்றார். இந்திய அமைதி காக்கும் படை “அநியாயங்கள் நடைபெறும் போதே அவற்றை ஆவணப்படுத்துவது எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டுக்கு செய்யப்படும் முதலீடாகும் என்பதே இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாகும். மேலும், நீதி கிடைப்பதற்கான வாய்ப்புக் கிடைப்பதற்கு பல தசாப்தங்கள்கூட எடுக்கலாம், ஆனால், இழைக்கப்பட்ட மீறல்களும் துன்பங்களும் ஆவணப்படுத்தப்படாவிட்டால், இது சாத்தியமே இல்லை.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 1989 இல், பாடசாலை அதிபராகவும், விஞ்ஞான ஆசிரியராகவும் இருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நடராஜா ஆனந்தராஜ் என்பவர் இப்படுகொலை நிகழ்ந்தபோது தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, மயிரிழையில் உயிர் பிழைத்திருந்தார். சடலங்களை எரித்துவிட்டு, வெறும் ஒருசில நாட்களுக்குள்ளேயே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 200 வரையான சத்தியப் பிரமாணங்களைச் சேகரிக்க ஆரம்பித்திருந்தார். அதன் பின்னர் அவர் இந்தியாவிற்கு சென்று வல்வெட்டித்துறையில் நடந்ததை இந்திய அரசாங்கத்திடம் தெரிவித்ததோடு, 'வல்வைப் படுகொலை" என்னும் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார். பல தசாப்தங்கள் நீடித்த போரில், அவரது வீடு இலங்கை இராணுவத்தினரால் தீக்கிரையாக்கப்பட்டதோடு, அவர் சேகரித்த சத்தியப் பிரமாணங்களில் பாதிக்கும் மேல் இதில் அழிவடைந்தன. தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி, 1990களின் இறுதியில் இலங்கையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்திய அமைதி காக்கும் படைகளை 'குரங்குப் படையினர்' என விமர்சித்திருந்தது. வல்வெட்டித்துறைப் படுகொலைகள் தொடர்பாக சுயாதீன விசாரணையை நிறுவவும், படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை உறுதிப்படுத்தவும் இலங்கையின் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம் இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக, இந்தியர்களால் இராணுவத் தளமாகப் பயன்படுத்தப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலும், வல்வெட்டித்துறையிலும் பத்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் புதைகுழியை இலங்கை அகழ வேண்டும் எனவும் அந்த செயற்திட்டம் பரிந்துரைத்துள்ளது. ஜொகன்னஸ்பர்க்: எண்பதுகளின் இறுதியில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும்படையினரால் 35 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் உயர்தப்பியவர்களின் வாக்குமூலங்களைத் தொகுத்து ITJP அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இப்படுகொலையில் ஈடுபட்ட இந்திய இராணுவ அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களை இப்படுகொலைக்குப் பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோருவதுடன் அவர்களிற்கு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்றும் இந்திய அரசாங்கத்திடம் இவ்வறிக்கை கோரிக்கை விடுக்கின்றது. ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் 'ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்" என்னும் இந்த அறிக்கையானது 1989 ஓகஸ்ற்றில் வல்வெட்டித்துறை மக்களை இலக்கு வைத்து, மூன்று நாட்கள், திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விபரிக்கின்றது. இப்படுகொலையில் ஐந்து சிறுவர்கள், ஒரு குழந்தை உட்பட 60 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். 'இறந்த சடலங்களின் துர்நாற்றமும், எரிந்த மணமும் கலைந்து போவதற்கு முன்னரே, உயிர்தப்பியவர்களிடமிருந்து வாக்குமூலங்களை கவனமாகப் பதிவுசெய்து, ஆவணப்படுத்திய தனியொருவரின் அசாதாரண செயற்பாடே இவ்வறிக்கை உருவாகுவதைச் சாத்தியமாகியது. அநியாயங்கள் நடைபெறும்போதே அவற்றை ஆவணப்படுத்துவது எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டுக்கு செய்யப்படும் முதலீடாகும் என்பதே இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாகும். மேலும், நீதி கிடைப்பதற்கான வாய்ப்புக் கிடைப்பதற்கு பல தசாப்தங்கள்கூட எடுக்கலாம், ஆனால், இழைக்கப்பட்ட மீறல்களும் துன்பங்களும் ஆவணப்படுத்தப்படாவிட்டால், இது சாத்தியமே இல்லை" இவ்வாறு சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தி;ன நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார். 1989 இல், பாடசாலை அதிபராகவும், விஞ்ஞான ஆசிரியராகவும் இருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நடராஜா ஆனந்தராஜ் என்பவர் இப்படுகொலை நிகழ்ந்தபோது தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, மயிரிழையில் உயிர்பிழைத்திருந்தார். சடலங்களை எரித்துவிட்டு, வெறும் ஒருசில நாட்களுக்குள்ளேயே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 200 வரையான சத்தியப் பிரமாணங்களைச் சேகரிக்கத் தொடங்கினார். பின்னர், அவர் டெல்லிக்குச் சென்று வல்வெட்டித்துறையில் நடந்ததை இந்திய அரசாங்கத்திடம் தெரிவித்தார், மேலும் 'வல்வைப் படுகொலை"1 என்னும் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார். பல தசாப்தங்கள் நீடித்த போரில், அவரது வீடு இலங்கை இராணுவத்தினரால் பின்னர் தீக்கிரையாக்கப்பட்டது, அவர் சேகரித்த சத்தியப் பிரமாணங்களில் பாதிக்கும் மேல் இதில் அழிக்கப்பட்டன. இலண்டனில் நிகழ்ந்த ஒரு தற்செயலான கண்டுபிடிப்பே இச்சம்பவத்தை மீண்டும் கண்டறிந்துகொள்வதற்கு வழிவகுத்தது. தமிழ் தகவல் மையத்தின் காகித ஆவணங்களை டிஜிற்றல் மயமாக்கும்போதுதான் இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. 'எண்பதுகளின் பிற்பகுதியில், பாதுகாத்து வைக்கப்படுவதற்காக விமானத்தபால்மூலம் இலண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்களை நான் வாசித்துக்கொண்டிருந்தபோதுதான் ஒரு கடிதம் எனது கவனத்தை ஈர்த்தது. இந்திய அமைதிப்படையைச் சேர்ந்த கப்டன் மேனன் என்பவர், 'தன்னிலை மறந்து செயற்பட்டதாகத் தோன்றினார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்த அக்கடிதத்தில், உள்;ர் பிரஜைகள் குழுவைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்தனர். அப்பெயரைப் பார்த்ததும், என் மனதில் பொறி தட்டியது. இணையத்தில் தேடிப்பார்த்தபோது, அவரைப்பற்றிய பல தகவல்கள் வெளிப்பட்டன. துப்பாக்கிச் சூடு அக்கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் யாராவது இன்னும் உயிருடன் இருக்கிறார்களா என்று இலங்கையில் உள்ளவர்களிடம் கேட்டேன், ஆனால் பலன் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு நாள், லண்டனில் உள்ள இளம் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களிடம் வல்வெட்டித்துறையில் இருந்து யாராவது இருக்கிறார்களா என்று கேட்டேன், மேலும் அவர்களுக்கு அந்தக் கடிதத்தைக் காட்டினேன். உடனடியாவே அதிலிருந்தவர்களின் ஒருவர் வல்வெட்டித்துறையிலிருந்த தன் நண்பனின் தாத்தாவுடன் என்னைத் தொடர்புபடுத்திவிட்டார்" இவ்வாறு இலண்டனிலுள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் இயக்குனர், பிரான்ஸிஸ் ஹரிசன் கூறினார். நடராஜா ஆனந்தராஜ் சேகரித்து வைத்த பிரமாணப்பத்திரங்கள் மூன்று நாள் படுகொலையில் உயிர்பிழைத்தவர்களின் அனுபவப் பகிர்வினைப் பேணிப்பாதுகாக்கின்றன. வல்வெட்டித்துறை மக்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் தம்முன்னே இந்திய அமைதிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படுவதை எவ்வாறு கண்டார்கள் என்பதை இவை விபரிக்கின்றன. காயமடைந்த பலர் உயிர் பிழைப்பதற்காக இரத்த வெள்ளங்களில் செத்தவர்களைப் போல பாசாங்கு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஒரு வயதான கடற்றொழிலாளர், தன் பேரன்கள் இருவர் தனது வீட்டிற்குள் ஓடி வந்ததுபோது அவர்களை ஆரத்தழுவியதையும், ஆனால், அவர்களின் தாய் வீட்டிற்கு மார்பிலிருந்து இரத்தம் கொட்டியபடி ஓடிவந்து, தனது காலடியில் விழுந்து இறந்ததையும் விபரிக்கின்றார். அவள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் தனது கணவனைப் பறிகொடுத்து, விதவையாகியிருந்தாள். மற்றொரு சம்பவத்தில், இந்திய சிப்பாய்கள் இரண்டு சகோதரர்களை அவர்களின் வீட்டிலிருந்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர், அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. அவர்களின் மனைவிகள் அவர்களை கட்டிப் பிடித்துக்கொண்டிருக்கும்போது, அவர்கள் அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பெண்கள் மட்டுமே உயிர் பிழைத்தனர். அந்நேரத்தில் வெளிநாட்டில் வாழ்ந்த சிவகணேஷனின் வீட்டிற்குள் இந்தியப் படைகள் உள்நுழைந்தபோது, அங்கு தஞ்சம் புகுந்திருந்த பெண்கள் சிப்பாய்களின் கால்களில் விழுந்து, தங்களைச் சுட வேண்டாம் என்று கெஞ்சினர். ஆனால் படையினரோ அவர்களை உதைந்து தள்ளிவிட்டனர். 60 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்களும் ஒரு மாட்டுத்தொட்டியின் அருகில் சோடி சோடியாக வரிசையாக நிறுத்தப்பட்டுச், சுடப்பட்டனர். அதே நேரத்தில், எட்டிப்பார்த்து அழுதவர்களையும் சுடப்போவதாக இந்தியப் படையினர் மிரட்டினர். சுப்ரமணியம் நில அளவை மேலாளராக இருந்து ஓய்வுபெற்றிருந்தார். அவரது வீட்டில் ஐம்பது வரையானவர்கள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். வீட்டுக்குள் புகுந்த படைவீரர்கள் அவரை உடனடியாகச் சுட்டதுடன், இன்னொருவருடைய சட்டைப்பையிலிருந்த பணத்தையும்கொள்ளையடித்தார்கள். பின்னர், அங்கிருந்த பெண்களையும் குழந்தைகளையும் நோக்கிச் சுட்டார்கள். சீக்கியச் சிப்பாய் ஒருவன் காயமடைந்தவர்களின் இரத்தம் நிலத்தில் வழிந்து அவனது கால்களை வந்தடையும்வரை சுட்டுக்கொண்டிருந்தான். ரவைக்கூட்டை மாற்றி மீண்டும் சுடுவதற்குத் தயாரானபோது, அவனது சகா ஒருவனால் தடுத்து நிறுத்தப்பட்டான். பிறிதொரு சம்பவம் ஒன்றில், காயமடைந்தவர்களை சுட்டுக்கொல்லும்படி ஒரு படைவீரன் இன்னொருவனுக்கு உத்தரவிட்டபோது, அவர்கள் அனைவரும் இரத்தப்போக்கில் இருப்பதால், விரைவில் சாகத்தான் போகின்றார்கள் என்று பதில்கூறியதாக அச்சம்பவத்தில் உயிர்தப்பிய ஒருவர் நினைவுகூர்ந்தார். குறைந்தது 20 வரையானவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக, அறிக்கைகள் தெரிவித்தன. இவர்களில் ஒருவரைத் தவிர மற்றையவர்கள் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்த விரும்பவில்லை. தனது வீட்டுக்குள் புகுந்த படைவீரர்கள், தனது குழந்தையை ஒரு மூலையில் இருக்கச்செய்து, தனது வாயை ஒரு படைவீரன் பொத்திப் பிடித்திருக்க இரண்டு சீக்கியப் படைவீரர்கள் தன்னை மாறி மாறிப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக வாக்குமூலம் வழங்கினார். இக்கொடுமையினை அக்குழந்தை பார்த்தபடி இருந்தது. நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், முழுக் குடும்பத்தையுமே கொன்றுவிடுவோம் என படைவீரர்கள் அப்பெண்ணை எச்சரித்துவிட்டுச் சென்றார்கள். ஒரு வீதியில் மட்டுமே இருபத்தி மூன்று வீடுகள் எரியூட்டப்பட்டன. படுகொலை இந்தியச் சிப்பாய்கள் சிரித்துக்கொண்டே மக்களின் வீடுகளை எரித்ததாக நேரில் கண்ட சாட்சிகள் விபரித்தார்கள். கடைகள், திரையரங்குகள், நூலகம், வாகனங்கள், உணவுக் கையிருப்புக்கள், பயிர்கள், மீன்பிடி உபகரணங்கள் என எல்லாவற்றையும் இந்தியப் படையினர் எரியூட்டி அழித்தார்கள். இந்தியப் படையின் ரோந்து அணிமீது நடாத்தப்பட்டதாக அவர்கள் விபரித்த பதுங்கித் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக ஒட்டுமொத்த சமூகத்திற்குமான கூட்டுத் தண்டனையாக இது நடாத்தப்பட்டது. பொதுமக்களை வறுமைக்குள்ளாக்கி, வீடற்றவர்களாக்கி, காயப்படுத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, சித்திரவதை செய்து, துன்பங்களை ஏற்படுத்தி, கொலைசெய்ததுடன் அந்த நகரத்தின் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் நோக்குடன் நன்கு திட்டமிட்டே இந்த அழிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவே தோன்றுகின்றது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதனால், வல்வெட்டித்துறையில் சிக்குண்டிருந்தவர்கள் உடனடியாகவே பட்டியினியால் தவித்தார்கள். மூவாயிரம் வரையான மக்கள் தங்களது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தார்கள். ஆயிரம் வரையான மக்கள் படகுகளில் தென்னிந்தியாவுக்குத் தப்பிச்சென்றார்கள். அந்நகரில் வசித்தவர்களில் பாதிப்பேர் பயத்தில் அல்லது விரகத்தியில் அங்கிருந்து வெளியேறியதாக ஊடகவியலாளர் ஒருவர் வெளிப்படுத்தினார். இவர்களில் பலர் பிரித்தானியாவிலும் கனடாவிலும் தற்போது வசித்தாலும், ஆண்டுதோறும் இப்படுகொலையினை நினைவுகூருகின்றார்கள். உயிர் பிழைத்தவர்களால் விபரிக்கப்பட்டுள்ள கோரமான மீறல்களில் நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை, கொடூரமான, அவமானகரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தை, தன்னிச்சையான கைது மற்றும் வலிந்து காணாமல் போதல் போன்றவை அடங்கும். போராளிகளையும் பொதுமக்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதற்கு இந்தியப் படைகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இலங்கையில் இந்தியப் படைகள் இருந்த 32 மாதங்களில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மற்றைய அட்டூழியங்களுடன் பார்க்கையில், இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்டதும் பரந்துபட்டதுமான தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே இந்த வன்முறையும் இடம்பெற்றுள்ளதுடன், இவை எந்தவகையில் பார்த்தாலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக அமையலாம். இப்படுகொலையினை இந்தியா ஒப்புக்கொள்வதுடன், படுகொலைக்கு எழுத்துமூலமான மன்னிப்புக்கோரி, படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளும் மறுவாழ்வும் வழங்கவேண்டும் எனவும் இவ்வறிக்கை இந்திய அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிப்படையான மன்னிப்புக்கோரலாக இருக்கவேண்டும். மேலும் இப்படுகொலை நடந்த நேரத்தில், கட்டளையிடும் நிலையில் இருந்த அதிகாரிகளின் பெயர்களை வெளிப்படுத்தவேண்டும் என்றும், இவ்வன்முறைகளில் ஈடுபட்டவர்களை, அதிலும் குறிப்பாக தற்போதும் இந்திய இராணுவத்தின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை, குற்றவியல் ரீதியா பொறுப்புக்குக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கின்றது. மேலும் இவர்கள் மீது தடைகளையும், பயண உள்நுழைவுத் தடைகளையும் சர்வதேச சமூகம் விதிக்கவேண்டும் என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் கோரிக்கை விடுப்பதுடன், இதில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ள நபர்கள் பற்றிய விபரங்களை ஐ.நா. மற்றும் இதர அரசாங்கங்களுக்கும் வழங்கியுள்ளது. இந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்தை வல்வெட்டித்துறைப் படுகொலை தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதிசெய்யவும் வேண்டுமென அழைப்பு விடுக்கின்றது. குறிப்பாக, இந்திய இராணுவ முகாமாகப் பயன்படுத்தப்பட்டு, பத்து இளைஞர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் உடுப்பிட்டி பெண்கள் கல்லூரியில் இருப்பதாகச் சொல்லப்படும் புதைகுழியினை தோண்டுவதற்குரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது. 'இது பல தசாப்தங்களாக இலங்கையில் நடந்த நூற்றுக்கணக்கான படுகொலைகளில் ஒன்றுதான் இது என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் இது அந்த நேரத்தில் மிகவும் கவனமாக ஆவணப்படுத்தப்பட்டது, மேலும் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டால், அவற்றை அடையாளம் காண்பது சாத்தியமாகும் என்பதுடன் இது குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் அவர்களது ஏக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும். வல்வெட்டித்துறை நிகழ்வானது, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒரு பரிசோதனையாக இருக்கவேண்டும்" என்று ஜஸ்மின் சூக்கா கூறினார். https://tamilwin.com/1 point- துர்நாற்றம் வீசும் சடலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இலங்கையில் இந்திய இராணுவத்தின் குற்றங்கள்
1 pointஇலங்கை இராணுவத்திற்கு வெள்ளைஅடிக்கும் வேலையாகவும் இருக்கலாம்...அனுர அரசின் ராக்கெட் ..வல்வைதான்...இதற்காக அங்கு அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கின்றார்கள்.... அதாவது சாம பேத ..தாண்டவம்1 point- "மன்னிப்பாயா என்னை", தாய்மை & "தாத்தா"
கம்பனும் கண்ணதாசனும் கவிதைக்கு ஒரு அதிர்ச்சியும் இன்பமும் கொடுப்பான் , ஆனால் அவன் வம்பன் இல்லை, அவனின் எதிரொலி, சமூகத்தில் நடப்பாவையின் பதிவு, இதை உணர்ந்து, அறிந்து திருந்தானா என்ற ஒரு ஏக்கம், அவ்வளவுதான்!1 point- "மன்னிப்பாயா என்னை", தாய்மை & "தாத்தா"
என்ன தில்லை நீங்கள்? நல்ல மனிசன் என்று எண்ணினால் இப்படியும் ஒருபக்கம் இருக்கிறதா?1 point- 108ஆவது பொன் அணிகளின் போர் : சென்.பெட்றிக்ஸை 52 வருடங்களின் பின்னர் வெற்றிகொள்ளுமா யாழ்ப்பாணக் கல்லூரி ?
படங்களுடனான பகிர்வுக்கு நன்றி ஏராளன் .........! 👍1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointDavid Attenborough Fans · Rejoindre Eyasin Ali · odonrtpseS12la604595i374t4 511580t9sr2fc0c5uhg a:6f6mg1i4,03 · The flower of Patience. It opens every 7 years. And it lasts 7 days 😮"1 point- யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
சுமந்திரனும் இவரும் ஒரே ராசி என்று நினைக்கிறேன்.🤣1 point- யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
சின்ராசு...எப்படியும் பதவி எடுத்திடவேணுமென்று ஓடுப்பட்டுத்திரியிது...ஒருமாதத்திலை 3 விசிட் இந்தியாவுக்கு.. அது இரத்தமெல்லே...1 point- காற்றாடி
1 pointகாற்றாடி - அத்தியாயம் ஒன்று ---------------------------------------------- மழை இன்னும் விட்டுவிடவில்லை, ஆனால் முன்பிருந்ததை விட நன்றாகக் குறைந்து விட்டது போன்று தோன்றியது. மழையின் சத்தம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. கூரையில் இருக்கும் ஓட்டைகளினூடாக வீட்டுக்குள் விழுந்து ஓடும் மழை நீர் முற்று முழுதாக அவனைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அவன் படுத்திருக்கும் இடத்திற்கு சரி மேலாக கூரையில் எந்த ஓட்டைகளும் இல்லாதபடியால், மழைநீர் அவன் மேல் இன்றும் விழுந்திருக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு அகலமான மா பலகையை தரையின் மேல் போட்டு அதன் நடுவிலேயே அவன் படுத்திருந்தான். தரையில் விழுந்து தெறிக்கும் சில மழை ஒழுக்குகள் தன்னில் விழுவதை தவிர்க்க, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தபடி, இரண்டு கைகளையும் இரண்டு கால்களுக்கும் இடையில் வைத்து, கால்களை வயிறு நோக்கி இழுத்து, முழு உடலையுமே குறுக்கி வைத்திருந்தான். சில மழைக் காலங்களை இதே வீட்டில் இப்படியே கடந்து வந்து விட்டபடியால், ஒழுகும் மழையை ஏமாற்றி எப்படி இரவில் தூங்குவது என்று அவன் நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தான். இப்படி ஏராளமான விசயங்களில் அவனுக்கு சமயோசிதமும், அறிவும் இருந்தாலும், அவனுக்கு கழுத்தில் கத்தி வைத்தாலும் வரவே வராது என்று சில விசயங்களும் இருக்கின்றன. எல்லோருக்கும் எல்லாம் வந்து விடுமா என்ன, எந்த மனிதருக்கும் சிலது வரும், சிலது வராது, சிலது வரவே வராது. அவனுக்கு வரவே வராது என்ற வரிசையில் முதலாவதாக வராமல் இருப்பது கணிதபாடம். சாதாரணமான இரண்டு தெரியாக் கணியங்களும், இரண்டு சமன்பாடுகளும் இருக்கும் கணிதம் கூட அவனுக்கு தலைச்சுற்றலைக் கொடுக்கும். அவன் போன வருடம் சாதாரணதரப் பரீட்சை எழுதியிருந்தான். எட்டுப் பாடங்களில் ஏழு பாடங்களில் சித்தி பெற்றிருந்தான். கணிதத்தில் படுதோல்வி. விஞ்ஞானத்தில் சிறப்புச் சித்தி பெற்றிருந்தான். ஆங்கிலத்தில் சாதாரண சித்தி, ஆனால் கணிதத்தில் எஃப் வந்திருந்தது. கணிதமோ அல்லது எந்தப் பாடங்களுமோ என்றுமே அவன் வீட்டில் படித்ததேயில்லை. ஊரில் இருக்கும் பாடசாலைக்கு போவான், பின்னர் வீட்டுக்கு வருவான், அவ்வளவு தான் அவனுடைய கல்வியின் எல்லையும் தேடலும். வீட்டில் எதையும் படிப்பதோ அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போவதோ கிடையாது. மற்ற நேரங்களில் ஊர் விதானையார் போல ஊரை சுற்றிக்கொண்டு திரிவான். அவன் ஏழு பாடங்களில் நல்ல சித்திகள் பெற்றிருந்தபடியால், அவன் வீட்டில் அவனை அடுத்ததாக இன்னும் மேலே படிக்கச் சொன்னார்கள். இதுவரை அவர்களின் குடும்பங்களில், அவனின் அம்மா மற்றும் அப்பாவின் குடும்பங்கள், முதலாவதாக உயர்தர வகுப்புகளுக்கு போகும் ஆள் என்ற பெருமை எவருக்கும் கொடுக்கப்படாமல் அவனுக்காகவே காத்துக்கொண்டு கிடந்தது. கணித பாடத்தில் தவறி இருந்தபடியால், பாடசாலையில் கலை அல்லது வர்த்தகப் பிரிவுக்கு அவனைப் போகச் சொன்னார்கள். அதுவும் கூட அடுத்து நடக்கும் சாதாரண பரீட்சையில் கணித பாடத்தில் சாதாரண சித்தியையாவது அவன் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன். அரைக்காற்சட்டையில் இருந்து அப்போது தான் முழுக்காற்சட்டைக்கு மாறியிருந்தான். வெள்ளை நிற முழுக்காற்சட்டை. அதை தைக்கும் தையல் கடைக்காரர் அவனின் அப்பாவிற்கு மிகவும் தெரிந்தவரே. பாடசாலைக்கு தேவையானது போலவும் இல்லாமல், அன்றைய நாயகர்களின் அகன்ற கால்கள் உடையது போலவும் இல்லாமல், இரண்டுக்கும் மத்தியில் ஒன்றை தைத்துக் கொடுத்திருந்தார் அந்த தையல்காரர். அவனின் ஆலோசனை தான் அது. அந்த முழுக்காற்சட்டையுடன் முதன்முதலாக பாடசாலை போயிருந்த போது, அப்பொழுது தான் கணிதபாடத்தில் சித்தி அடையவே வேண்டும் என்று பாடசாலை அதிபர் சொன்னதற்கு, உடனேயே தலையை ஆட்டியிருந்தான். உயர்தர வகுப்பில் படிக்கின்றோம் என்பதே அவனுக்கு ஒரு நிமிர்வைக் கொடுத்திருந்தது. ஒன்று அல்லது இரண்டு அப்பியாசக் கொப்பிகள் மட்டும், அதையும் சைக்கிளின் பின் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஏதோ சில மணிநேரங்கள் பாடசாலைக்கு போய் வருவது நல்ல ஒரு அனுபவமாகவே அவனுக்கு இருந்தது. அப்படியே அருகிலேயே இருக்கும் தனியார் கல்வி நிலையத்திலும் சேர்ந்திருந்தான். பாடசாலை விட்டு வந்தவுடன் தனியார் கல்வி நிலையத்திற்கு போய்விடுவான். அங்கே போய் அதை நடத்திக் கொண்டிருப்பவருக்கு ஒத்தாசையாகவும் நின்றுகொள்வான். தனியார் கல்வி நிலையத்திற்கு என்று வெள்ளையில் இல்லாத இன்னொரு முழுக்காற்சட்டை, 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் கமல் போட்டு வருவதைப் போன்ற ஒன்று, வைத்திருந்தான். அவனுடைய சித்தப்பா ஒருவர் பெறாமகன் பெரிய படிப்புகள் படிக்கின்றானே, தான் எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று, இந்த இரண்டாவது முழுக்காற்சட்டைக்கான செலவைப் பொறுப்பேற்றிருந்தார். அதுவே சித்தப்பா முறை என்றபடியால் அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருந்தார்கள். இதையே ஒரு மாமன் முறை உள்ளவர் செய்யக் கேட்டிருந்தால், அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருக்கவேமாட்டார்கள். இதுவே ஒரு கடமையாகி, அது எங்கே போய் முடியுமோ என்ற பலமான ஒரு காரணம் இதன் பின்னால் இருந்தது. அவனுக்கு சொந்தத்தில் ஏழு எட்டு மச்சாள்மார்கள் இருந்தனர். இன்று இப்பொழுது விடியப் போகும் காலையில் சாதாரணதர கணிதபாட பரீட்சை. மழை தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து கொண்டிருந்தது. போன தடவை அவன் கணிதபாட பரீட்சை எடுத்ததிற்கும், இன்றைக்கும் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கின்றதா என்ற யோசனை அவன் மனதில் ஓடியது. போன தடவை மழை பெய்யவில்லை என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. இந்த காலப்பகுதியில் அவன் ஒரு நாள் கூட கணிதம் படித்திருக்கவில்லை. போன தடவை வந்த அதே பரீட்சை முடிவு தான் இந்த தடவையும் வரப் போகின்றது என்பது தெளிவாகவே அவனுக்கு தெரிந்தது. இப்பொழுது என்ன செய்யலாம் என்று நினைத்தபடியே நிமிர்ந்துபடுத்தான். நிலத்தில் விழுந்த மழை ஒழுக்கு ஒன்று தெறித்து அவன் முகத்தில் வந்து விழுந்தது. அது விழுந்த இடம் சில்லென்று குளிர்ந்தது. (தொடரும்....................)1 point- யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
கேட்ட கேள்விக்கு மழுப்பல் பதில்கள். இதற்குள் உனது வயது தான் எனது அரசியல் அனுபவம் என்று வாய்ச்சவடால் வேறு.1 point- யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
சின்ராசுவுக்கு அம்னெஸ்ரி , ஐரோப்பிய ஒன்றியம் பிடிக்கவில்லையாம் செவ்வி எடுத்தவருக்கு பாராட்டுக்கள். ரனில் குடும்பியை மறைக்க முயன்றதை பார்க்க முடிந்தது. திக்குமுக்காடி போனார் ரனில்.1 point- அமைதி மணம்
1 pointஉண்மை தான் @putthan . சற்றேறக் குறைய எல்லா உலக இராணுவங்களும்(!) மனிதத் தன்மை இல்லாமல் நடக்கப் பயிற்றப் பட்டவை தான்.1 point- காற்றாடி
1 pointவணக்கம் ரசோதரன் நீங்கள் சுவி எல்லாம் சினிமா படங்களுக்கே திரைக்கதை எழுதக் கூடியவர்கள். பெருமையாகவும் லேசான பொறாமையாகவும் இருக்கிறது. பாராட்டுக்கள்.1 point- கருத்துக்களம் - வடிவமைப்பு
1 pointகருத்துக்களத்தின் முகப்புப் பக்கத்தினை கள உறுப்பினர்கள் தாங்கள் விரும்பியவாறு முகப்பில் சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியும். இதனை உங்கள் Profile பகுதியில் Account Settings என்பதனைத் தெரிவு செய்து அங்கு Content Preferences என்பதில் அழுத்தவும். அதில் Change layout views என்பதைத் தெரிவு செய்து உங்களுக்கு விருப்பமான தெரிவைச் செய்து save செய்து கொள்வதன் மூலம் உங்களுக்கு விரும்பிய வகையில் முகப்பினை மாற்றிக் கொள்ளலாம்.1 point- கருத்துக்களம் - வடிவமைப்பு
1 pointநன்றி ஐயா! காலத்திற்கேற்ற மாற்றங்கள் தெரிகின்றது. தேடல்கள் இலகுவாக இருக்கின்றது.சில தொழில் நுட்பங்கள் மறுக்கப்பட்டாலும் முன்னோக்கிய பயணத்திற்கு நன்றிகள்.🙏1 point- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன். இங்கு ஒரு குரங்கால்… நாடு முழுக்க மின்சாரம் தடைப்பட்டதாக, மின்சார துறை அமைச்சர் கருத்து கூறி… அரசாங்கத்தின் தவறை குரங்குகளின் மீது சுமத்தி இருந்தார். ஏற்கெனவே தேங்காய் தட்டுப்பாட்டிற்கும் குரங்குளின் மீது பழி சுமத்தி இருந்தது போதாது என்று… இது வேறு. 😂 சில வருடங்களுக்கு முன்பு… தமிழ் நாட்டில் மின்சாரம் தடைப் பட்டதற்கு… அணில்கள் காரணம் என்று ஒரு அமைச்சர் கூறியது உங்களுக்கு நினைவு இருக்கலாம். 🤣1 point- காற்றாடி
1 pointகாற்றாடி - அத்தியாயம் நான்கு ----------------------------------------------- தனம் மாமி வீட்டுக்கு வந்திருந்தார். ஊரில் முறை தெரிந்த சொந்தக்காரர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் மாமா, மாமி, அண்ணா, அக்கா, அப்பாச்சி, அம்மாச்சி, இப்படி ஏதாவது ஒரு உறவுமுறை சொல்லி அழைப்பதே வழக்கம் என்றாகியிருந்தது. முறை தெரிந்த சொந்தக்காரர்களை அவர்களின் முறையை வைத்தே அழைத்துக் கொண்டார்கள். ஒரு சில அரச உத்தியோகத்தர்களைத் தவிர, வேறு எவரையும் ஒரு உறவுமுறையில் இல்லாமல் குறிப்பட்டதாகவோ அல்லது அழைத்ததாகவோ ஞாபகமில்லை. தனம் மாமி சொந்தத்தில் மாமி இல்லை. இதே ஒழுங்கையில் அவரும் குடியிருக்கின்றார். வீடு நிறைய ஆண் பிள்ளைகளை பெத்து வளர்த்துக் கொண்டிருக்கின்றார். அவர்களில் இருவரைத் தவிர மற்ற எல்லோருமே அவனை விட வயது கூடியவர்கள். பெண் பிள்ளை ஒன்று வேண்டும் என்றே, அடுத்து அடுத்து ஆண்பிள்ளைகளை சளைக்காமல் பெற்றதாக தனம் மாமி சொல்லியிருக்கின்றார். அவனின் வீட்டில் ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் மாறி மாறிப் பிறந்திருந்தார்கள். அவனின் வீட்டில் வேறு ஒரு கொள்கை வழியில் பெற்றிருக்கின்றார்கள் போல. 'என்ன, மூத்தவன் படிப்பை நிற்பாட்டி விட்டானாம்.................' என்று ஆரம்பித்தார் தனம் மாமி. அவனின் அம்மா பரீட்சை அன்று கடுமையாக மழை பெய்ததால், அவன் பரீட்சைக்கு போகவில்லை, அதனால் படிப்பு நின்று போனது என்று ஒரு வெள்ளந்தியாக கதைக்கவில்லை. அம்மா அப்படிக் கதைக்கவேமாட்டார். அவர் பிடி கொடுக்கவேமாட்டார். ஒரு ஆணாக பிறந்திருந்தால், அவர் எப்படியோ ஒரு பெரியாளாக ஆகியிருப்பார். பெண்ணாகப் பிறந்தபடியால், ஓட்டைகளில்லாத கறுப்பு புல்லாங்குழல் போல இருக்கும் ஒன்றால் சர்வ காலமும் அடுப்பை ஊதிக் கொண்டிருக்கின்றார். அவனும் அதை ஊதிப் பார்த்திருக்கின்றான். ஒரு தடவை ஊதுவதற்கு பதிலாக, அடுப்புப் புகையை உள்ளே இழுத்துவிட்டான். இருமிக் கொண்டே ஊதுகுழலை கீழே போட்டு விட்டு, அதை திருப்பி எடுக்கும் போது, அதன் அடுத்த பக்கத்தில் பிடித்து தூக்கியும் விட்டான். எந்த வேலைக்கும் அனுபவம் மிகவும் முக்கியம். 'படிப்பு என்ன படிப்பு, படிக்காதவர்கள் தான் இன்று உலகத்தை ஆளுகின்றார்கள்............' என்று தொடர்ந்தார் தனம் மாமி. ஏட்டுச் சுரைக்காயில் எங்கே கறி வைப்பார்கள், கழனிப் பானைக்குள் யார் கவிழ்ந்து விழுகின்றார்கள், இப்படி இன்னும் சில உதாரணங்கள் ஒரு மன ஆறுதலுக்காகச் சொல்லப்பட்டன. அவரின் பிள்ளைகள் எவருக்கும், இதுவரை, இந்தப் பழமொழிகளையும், முதுமொழிகளையும் எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு தேவையும் வரவில்லை. நாலு மனிதர்களுடன் மட்டும் பழகுகின்றோம், அந்த நால்வரும் ஒன்றையே சொல்கின்றனர் என்றால் முழு உலகமே ஒத்த குரலில் அதையே சொல்வது போன்றே இருக்கும். இன்று இலங்கையின் பெரிய பணக்காரராக இருப்பவர், அவர் படிக்கவேயில்லை, கொழும்பில் தெருத்தெருவாக பேப்பர் பொறுக்கிக் கொண்டிருந்தாராம் என்று தனம் மாமி இலங்கையில் உள்ளவர்களிலேயே பெரிய சாட்சியாக ஒருவரை கொண்டு வந்து நிறுத்தினார். 'பிறகு............... அவருக்கு என்ன லொத்தரே விழுந்தது...............' என்று அவனின் அம்மா ஆச்சரியம் காட்டினார். அம்மா கேட்பதைப் பார்த்தால், அந்தப் பணக்காரருக்கு லொத்தர் விழவில்லை என்பது அம்மாவிற்கு ஏற்கனவே தெரிந்தே இருந்தது போன்றே அவனுக்கு தெரிந்தது. கடுமையாக உழைத்து, படிப்படியாக அவர் முன்னேறினார் என்று தனம் மாமி சொன்னார். தன்னுடைய மூத்த பிள்ளைகளும் கடுமையாக வேலை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். அதில் மூத்த அண்ணன் போன மாதம் இதே ஒழுங்கையில் இருக்கும் அக்கா ஒருவருக்கு கடிதம் கொடுத்து, அது பெரிய வாக்குவாதம் ஆகியது. அன்று இரவு அந்த அக்காவின் வீட்டிற்கு கல்லெறி கூட விழுந்தது. இரவு வெளியே வரப் பயந்து இருந்த அவர்கள், விடி விடியென ஆள் சேர்த்துக்கொண்டு அடிக்கப் போனார்கள். தனம் மாமி வீட்டில் என்ன நடந்தது என்றே தெரிந்திருக்கவில்லை. வேற யாரோ ஒரு கணக்குப் பண்ணி, அந்த அக்காவின் வீட்டிற்கு இரவு கல்லை எறிந்து விட்டுப் போயிருக்கின்றார்கள் போல. கொழும்பில் பேப்பர் பொறுக்கி, பின்னர் பெரும் பணக்காரராக ஆனவரும் முதலில் அவரின் சொந்த ஊரில் ஒரு கடிதப் பிரச்சனையில் மாட்டுப்பட்டிருப்பாரோ என்று அவன் நினைத்தான். அவனை அப்பொழுது தான் கண்ட தனம் மாமி, 'என்ன வேலைக்கு போகின்றாய்..................' என்றார். அவனின் அம்மா வயரிங் வேலைக்குப் போகின்றான் என்று சொன்ன அதே நேரத்தில், அவன் தான் தியேட்டரில் வேலை செய்வதாகச் சொன்னான். சில பின்னேரங்களிலும், இரவுகளிலும் அங்கே போய் தியேட்டரிலும் சும்மா நிற்கின்றவன் என்று அவனின் அம்மா, அப்படியே அவனை முறைத்துக் கொண்டே, சமாளித்தார். 'தியேட்டருக்கு எல்லாம் போகவே கூடாது, அங்கே தான் எல்லா கெட்ட பழக்கங்களையும் இந்தப் பிள்ளைகள் பழகுதுகள்...............' என்று சொல்லிக்கொண்டே மாமி நல்ல வசதியாக பக்கத்தில் இருந்த தூணில் சாய்ந்து கொண்டார். மேடைப்பேச்சாளர் ஒருவர் தொண்டையைக் கணைத்து முழுவீச்சில் பேசுவதற்கு ஆயத்தமாக இருப்பது போன்ற ஒரு நிலையில் மாமி இருந்தார். இன்று இரவு மாமி வீட்டிற்கு யாரும் கல்லால் எறிந்தால் பரவாயில்லை என்று எண்ணம் ஒரு மின்னல் போல தோன்றி மறைந்தது. புகை, குடி, கூத்து என்று பல கெட்ட பழக்கங்கள் வரிசையாக அடுக்கப்பட்டன. எல்லாமே தியேட்டரிலேயே ஆரம்பிக்குது என்றார். ஆனால், காதல், கடிதம் என்ற சொற்கள் மட்டும் வரவேயில்லை. நல்லதோ, கெட்டதோ வெளியில் தான் எட்டிப் பார்க்க வேண்டியிருக்கின்றது. எந்த மனிதனும் கொஞ்சமாக கண்ணை மூடி அவனுக்குள்ளே எவைகளையும் தேடுவதில்லை. (தொடரும்.........................)1 point- காற்றாடி
1 pointகாற்றாடி - அத்தியாயம் மூன்று ----------------------------------------------- இரண்டு வேலைகளை அவன் செய்து கொண்டிருந்தான். பகல் நேரங்களில் அயலவர் ஒருவருடன் சேர்ந்து வயரிங் வேலை என்று சொல்லப்படும் வீடுகளுக்குள் செய்யும் மின்சார அமைப்பு வேலையையும், பின்னேரம் மற்றும் இரவு நேரங்களில் ஊரில் இருக்கும் தியேட்டரில் ஒரு வேலையையும் செய்ய ஆரம்பித்திருந்தான். வயரிங் வேலை செய்வதற்கு அவன் வீட்டில் உடன்பட்டார்கள். ஆனால் தியேட்டரில் வேலை செய்வதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை காட்டியிருந்தனர். அவன் வயரிங் வேலைக்கு போவதற்கு காரணமே, அதன் காரணமாக தியேட்டரில் அவன் வேலைக்குப் போவதற்கு வீட்டில் ஒத்துக் கொள்வார்கள் என்ற ஒரே ஒன்றுக்காக மட்டுமே. மற்றபடி வயரிங் வேலையில் அவனுக்கு எந்த நாட்டமும் இல்லை. அதுவும் அந்தக் காங்கிரீட் சுவர்களுக்குள்ளால் வயர்களை கொண்டு செல்வதற்காக, அந்த சுவற்றை வெட்டுவது போன்ற ஒரு வேலையில் எவருக்குத் தான் நாட்டம் வரும். ஆனால், அவனை வேலையில் துணையாக கூட்டிப் போகும் அயலவர் சில வயதுகள் கூடியவர் என்றாலும், நல்ல ஒரு நண்பர் போன்றே பழகினார். வேலை முடிந்தவுடன் அன்றன்றே அவனுக்கான சம்பளத்தையும் கொடுத்துவிடுவார். அதில் ஒரு பகுதியை அவன் அம்மாவிடம் கொடுத்து விடுவான். பல நாட்களிலும் வேலையும் இருக்கும். சினிமாவும் தியேட்டரும் அவனுக்கு ஒரு கனவு போல. அவன் பிறந்ததே சினிமாவிற்கு என்று அவனுக்குள் ஒரு உறுதியான எண்ணம் இருந்தது. பொதுவாக சமூகத்தில் எல்லோருக்கும் இருக்கும் அளவில்லாத நாயக நாயகிகள் மீதான கவர்ச்சி அவனிடம் மிகக்குறைவாகவே இருந்தது. சினிமா என்பது வெறும் ஒரு பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, அதில் வரும் விடயங்களும், அங்கே வரும் கதாபாத்திரங்களும், அவற்றை திரையில் கொண்டு வரும் நடிகர்களும் உண்மை என்றே பலரும் எண்ணி, அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் அவர்களால் முடியாத, ஆனால் அவர்கள் செய்ய விரும்பும் சில நாயகத்தனங்களை திரையில் கண்டு, அதுவேதான் தாங்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள் போல. இந்த சமூகத்தில் சினிமா நடிகர்கள் மேல் இருக்கும் தீராத கவர்ச்சிக்கு இந்த மனப்பன்மையும் ஒரு அடிப்படைக் காரணம். அவனுக்கு ஒரு திரைப்படம் எப்படி உருவாக்கப்படுகின்றது, பின்னர் அது எவ்வாறு திரையில் ஓடுகின்றது என்பதிலேயே ஆர்வம் இருந்தது. அம்புலிமாமா புத்தகத்தில் இருக்கும் படங்களை ஒரே அளவுகளில் வெட்டி, அவற்றை நீட்டாக ஒட்டி, ஒரு சுருளாகச் சுற்றி , நடுவே ஒரு ஈர்க்கை வைத்து, அதைச் சுற்றிப் பார்த்து, இப்படித்தான் சினிமா உருவாகின்றது என்று அவனாகவே பரீட்சித்துப் பார்த்திருக்கின்றான். பின்னர் சிந்தனையில் இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு படம் அளவு இடைவெளியில் இரண்டு ஈர்க்குகளை வைத்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அவனின் படச்சுருளை சுற்றிப் பார்த்தான். இது தான் சரியான தொழில்நுட்பம் என்று, அதையே இன்னும் முன்னேற்றி, பலருக்கும் அம்புலிமாமா படங்கள் காட்டியும் இருக்கின்றான். தியேட்டரில் வேலைக்கு போனவுடன், தினமும், தியேட்டரின் உள்பக்கத்தை கூட்ட வேண்டும். ஒவ்வொரு வரிசையாக கூட்ட வேண்டும் என்றில்லை. முன்பக்கம், முகாமையாளர் அறை மற்றும் தியேட்டரின் உள்ளே இருக்கும் நடைபாதைகளை கூட்டவேண்டும். அத்துடன் படம் பார்த்து விட்டுப் போனவர்கள் போட்டுவிட்டுப் போகும் கஞ்சல், குப்பை, கழிவுகளையும் அள்ளி எடுத்து, வெளியில் தியேட்டரின் பின்னால் இருக்கும் குப்பையில் கொண்டு போய் கொட்டவேண்டும். அதை விட்டுவிட்டுப் போனோம், இதை விட்டுவிட்டுப் போனோம் என்று பின்னர் ஓடி வருபவர்களும் உண்டு. அவன் நேராக பின்னால் இருக்கும் அந்த சின்ன குப்பை மலையைக் காட்டுவான். அநேகமானவர்கள் அங்கே தங்கள் பொருட்களை தேடி எடுக்காமலேயே போய்விடுவார்கள். சிலர் அவனையும் சேர்ந்து தேடச் சொல்லியிருக்கின்றனர்.சிலருக்கு அந்த இடத்தை பார்த்தவுடன் பொல்லாத கோபம் வந்து, சீறி விழுந்தும் இருக்கின்றனர். தங்களின் கதாநாயகர்களின் பின்னால், அவர்கள் உலவும் இடத்தின் பின்னால், இப்படி ஒரு குப்பை மலை இருப்பதை அவர்கள் இதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. படம் ஆரம்பிப்பதற்கான முதல் மணி அடித்தவுடன், கலரிப் பகுதியில் உள்ள கதவில் அவன் போய் நிற்கவேண்டும். அங்கே வருபவர்களின் அனுமதிச்சீட்டுகளை கிழித்து, அவர்களை உள்ளே விடவேண்டும். கலரிப் பகுதியில் நீண்ட வாங்குகள் மட்டுமே போடப்படிருந்தது. தனிதனியான இருக்கைகள் கிடையாது. ஆண்கள், பெண்கள் என்ற இரு பக்கங்களும் கிடையாது. அதனால் தான் அது மிகக்குறைந்த விலையில் இருக்கும் பகுதியாக இருக்கின்றது. திரைக்கு அருகில் இந்தப் பகுதி இருக்கும். கழுத்தை நிமிர்த்தியே படம் பார்க்கவேண்டும். இந்தப் பகுதியின் பின்னால் இரண்டாம் வகுப்பு, முதலாம் வகுப்பு, ரிசர்வ் என்று மூன்று பகுதிகள் அந்த தியேட்டரில் இருந்தன. மேலே பால்கனி என்று இன்னொரு பிரிவும் இருந்தது. அதற்கான அனுமதி எல்லாவற்றையும் விட மிக அதிகம். பால்கனிக்கு அருகிலேயே, ஒரு தனி அறையில், படம் ஓடும் இயந்திரங்கள் இருந்தன. ஒரு நாள் கலரியிலிருந்து அந்த அறைக்கு முன்னேறுவதே அவனின் இலட்சியமாக இருந்தது. (தொடரும்...................)1 point- காற்றாடி
1 pointகாற்றாடி - அத்தியாயம் இரண்டு ------------------------------------------------ சில்லென்று குளிர்ந்த இடத்தை விரல்களால் தொட, விரல்கள் அதைவிடக் குளிராக இருந்தது தெரிந்தது. உரசி சூடாக்கிக் கொண்டே, தான் இன்று பரீட்சைக்கு போகப் போவதில்லை என்பதை எப்படி பக்குவமாகச் சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான். அம்மா அழக்கூடும், ஊரையும் கூட்டக் கூடும், ஆனால் இந்த மழையில் ஊர் இங்கே வராது. அப்பா குதிக்கத்தான் போகின்றார். வளர்ந்த பிள்ளை என்று இப்பொழுது ஒரு வருடமாக அடிகள் எதுவும் விழவில்லை. இன்று அது மாறக்கூடும். சித்தப்பா அவர் வாங்கித் தந்த முழுக்காற்சட்டை பற்றி கவலைப்படக்கூடும். அம்மா ஏற்கனவே எழும்பி விட்டிருந்தார். அடுப்படியில் அரவம் கேட்டது. இப்ப, இந்த மழையில் எந்த விறகு ஈரமில்லாமல் இருக்குமோ தெரியவில்லை. ஆனாலும் எங்கள் எல்லோருக்குமாக அவர் அந்த இரண்டு அடுப்புகளையும் தினமும் விடாமல் ஊதிக் கொண்டேயிருக்கின்றார். தேத்தண்ணியை போட்டு விட்டு, எல்லோருக்கும் காலையில் ஏதாவது உணவு செய்யும் நாட்களில், நாங்கள் எல்லோரும் பாடசாலைகளுக்கு கிளம்பிப் போகும் வரை அவர் அடுப்புக்குள் முன்னால் ஒரு காலை முழுவதும் மடக்கி, மறு காலை முழங்கால் வரை மடித்தும் இருப்பார். 'ஏன் இப்படி இருக்கிறீங்கள், அம்மா...............' என்று கேட்டால் சிரிப்பொன்றே பதிலாக வந்து கொண்டிருந்தது. பெண்கள் எதையுமே வெளியில் சொல்லமாட்டார்களாமே. இன்று பரீட்சைக்கு போகாவிட்டால், இன்றுடன் படிப்பு நின்றுவிடும். அடுத்ததாக என்ன செய்வது............... ஆரம்ப ஆரவாரங்களின் பின், என்ன செய்யப் போகின்றாய் என்று கேட்கவும் போகின்றார்கள். என்ன செய்வது என்று பல திட்டங்கள் இருக்கின்றன. அதில் எதையாவது ஏற்றுக் கொள்வார்களா என்று தான் தெரியவில்லை. தங்கைகளும், தம்பிகளும் என்ன நினைப்பார்களோ. ஒரு தம்பியை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது. எங்கு படித்தாலும், அவன் தான் வகுப்பில் முதலாவதாக வந்து கொண்டிருக்கின்றான். அவன் மட்டும் இப்படி எப்படி பிறந்தானோ தெரியவில்லை. வயிற்றில் பிள்ளைகள் இருக்கும் போது, தாய்மார்களின் உணவுப் பழக்கம் கூட பிள்ளைகளின் மூளைத் திறனை வளர்க்கும் என்று சொல்லுகின்றார்கள். இந்த முற்றத்தில் நிற்கும் புளி வைரக்கண்டி மாங்காயைத் தான் அம்மா எப்போதும் கடித்துக் கொண்டிருந்திருப்பார். தம்பி வயிற்றில் இருக்கும் போது, அந்த வருடம் அந்த மரம் காய்க்கவில்லையோ என்னவோ. மழை தற்காலிகமாக விட்டிருந்தது. மீண்டும் அது ஆரம்பிக்க முன், முகத்தை கழுவி விட என்று கிணற்றடிக்கு போனான். பெரிய வட்டக் கிணறு. ஆனால் மூன்றாக பிரிக்கப்பட்டு இருந்தது. மூன்று வீடுகளுக்கு அது தான் கிணறு. கிணற்றின் மேலேயே தகர வேலிகளால் அது பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு வீட்டுக்காரருக்கு இன்னொரு வீட்டுக்காரை பார்க்க முடியாத வகையில் அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த வேலிகள். அவை தார் தகரங்கள். எம் எஸ் விஸ்வநாதன், கே வி மாகாதேவன் போன்ற பழையவர்களின் ரசிகரான அப்பா, இந்த தார் தகர வேலியை தினமும் பார்ப்பதால் தான், புதிதாக வந்த இளையராஜாவின் பாடல்கள் தார் தகரத்தில் கம்பால் அடிப்பது போல கொடூரமாக இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லுவார். அவர் சிவாஜியின் ரசிகரும் கூட. பொதுவாகவே அப்பாமார்களும், மூத்த மகன்களும் எதிரும் புதிருமாகவே வளர்வார்கள் போல. அள்ளிய வாளித் தண்ணீருக்குள் ஒரு சின்ன ஜப்பான் மீன் குஞ்சும் வந்திருந்தது. மழை பார்க்க மேலே வந்து ஆவென்று நின்றிருக்கின்றார் போல. அப்படியே வாளிக்குள் வந்தும் விட்டார். இரண்டு கைகளாலும் அதை தண்ணீருடன் அள்ளி எடுத்து கிணற்றுக்குள் கொட்டிவிட்டான். கிணற்று நீர் சூடாக இருந்தது. வெளியே குளிராக இருக்கும் போது இப்படித்தான், கிணற்று நீர், கடல் நீர் கூட, சூடாக இருப்பது போல தெரியும். இன்னும் சில நாட்கள் மழை பெய்தால், கிணற்றில் தண்ணீர் எட்டித் தொடும் அளவிற்கு வந்துவிடும். எங்களின் பக்க கிணற்றில் உயரமான தடுப்புக் கட்டுகள் எதுவும் இல்லை. ஆனாலும் இதுவரை எவரும் இந்தக் கிணற்றுக்குள் தெரிந்தோ அல்லது விபத்தாகவோ விழுந்திருக்கவில்லை. அம்மா தேத்தண்ணி போட்டு வைத்திருந்தார். அது எல்லோருக்கும் சேர்த்து ஒரு பெரிய சட்டியில் இருக்கும். 'எத்தனை மணிக்கு சோதனை...............' என்று கேட்டார் அம்மா. பதில் எதுவும் சொல்லாமல் குடித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்த அம்மா மீண்டும் அதையே கேட்டார். 'நான் போகவில்லை, அம்மா......................' என்றான் அவன். அப்படியே சில கணங்கள் இருந்த அம்மா, மீண்டும் நினைவு வந்தவராக, 'போகாமல் என்ன செய்யப் போகின்றாய்................' என்றார். ஒரு வேலைக்குப் போகலாம் என்றிருக்கின்றேன் என்றான் அவன். 'அப்பாவிடம் இதை யார், எப்படிச் சொல்வது..................' என்று அம்மா அடுத்த கட்டத்தை நோக்கி விரைவாக போய்க் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. நான் எப்படியும் படிக்கப் போவதில்லை என்று அம்மாவிற்கு முன்னமே தெரிந்திருந்தது போல. தாய்க்கு தெரியாத பிள்ளைகளா........... 'டில்லிக்கு ராஜாவானாலும்........................' என்று ஒரு பழமொழியை அம்மா அடிக்கடி சொல்லுவார். எந்தப் பிள்ளை டில்லிக்கு ராஜாவாக வரும் என்றும், எது டில்லியையே வாழ்நாளில் பார்க்காது என்றும் அவர்களுக்கு தெரியும் போல. அப்பா எப்போதும் அப்படியே படுக்கையில் இருந்தபடியே அன்றைய நாளின் முதலாவது தேத்தண்ணியைக் குடிப்பார். பின்னர் ஒரு பத்து அல்லது பதினைந்து குடிப்பார். ஆனால், வீட்டில் எல்லோரும் பல் துலக்கி, முகம் கழுவி விட்ட பின்னேயே, எதை என்றாலும் குடிப்போம் அல்லது சாப்பிடுவோம் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் பதில்களை பாடசாலையில் சொல்லியிருக்கின்றேன். முதலாவது தேத்தண்ணியின் பின் கொஞ்ச நேரம் கண்மூடிப் படுத்திருப்பார். அது அவரின் சிந்திக்கும் நேரம் போல. அம்மா அப்பாவின் சிந்தனையைக் கலைக்காமல், பொறுமையாகவே விசயத்தை உடைத்தார். எதிர்பார்த்த எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 'சரி, இனி என்ன செய்யப் போகின்றாராம்............' என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டே, அப்பா எழுந்து இருந்தார். அம்மா அடுத்த தேத்தண்ணியை சுடவைக்கப் போனார். பெரும் எடுப்போடும், பரபரப்போடும் வாழ்க்கையின் ஒரு தருணத்திற்கு காத்திருக்கும் போது, சில வேளைகளில் அந்த தருணம் ஒரு பூனையின் நடை போல எந்த சத்தமும் எழுப்பாமல் எங்களைக் கடந்து போய்விடுகின்றது. (தொடரும்........................)1 point- யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
1 pointஒரு பெண் சுயநினைவில்லாமல் இருக்கும்போது அவரை தமது உடற்பசிக்கு இரையாக்கிய இந்த கேடுகெட்ட கயவர்களுக்குக் கொடுத்த தண்டனை போதாது. டொமினிக் ஒரு சதமும் வாங்காமல் தனது மனைவியை மற்றவர்கள் புணர்வதை வீடியோ எடுப்பதை மாத்திரம் நிபந்தனையாகச் சொல்லியிருக்கின்றான். இந்த விகாரமான விடயம் அந்த 50 பேருக்கும் ஏன் உறுத்தலை ஏற்படுத்தவில்லை? பெண்ணை வெறும் போகப்பொருளாக மட்டும் பார்க்கும் ஆணின் மனம்தான் காரணம் என்று நினைக்கின்றேன். அவர்களில் ஒருவர்கூட பொலிஸிடம் முறையிடவில்லை. டொமினிக் பாவாடைக்குள் படம்பிடித்ததை சுப்பர்மார்க்கெற் செக்கியுரிட்டி முறைப்பாடு செய்திருக்காவிட்டால் டொமினிக் இப்பவும் தனது மனைவியை மயக்கமருந்தைக் கொடுத்து மற்றவர்கள் அவரைப் புணர்வதை வீடியோ எடுத்துக்கொண்டிருப்பான்!1 point- நான் உங்கள்... மின்கம்பம்
1 pointகவிதைக் களத்திற்கு நல்ல கவிதையால் காருண்யத்துடன் நீர் வார்த்துள்ளீர்கள் ........! 👍 தொடர்ந்து வார்க்கவும் . ........!1 point- நான் உங்கள்... மின்கம்பம்
1 point - யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
Important Information
By using this site, you agree to our Terms of Use.