Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    3061
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19134
    Posts
  3. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    34974
    Posts
  4. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1836
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/13/25 in all areas

  1. கண் கண்ட தெய்வம் ---------------------------------- வரிசை நீண்டு உள் வாசலைத் தாண்டி வெளிவரை வந்திருந்தது. நான் வருவதற்கு கொஞ்சம் சுணங்கிவிட்டது. வேறு வழி இல்லை, இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது, வரிசையில் நின்று கடமையை முடித்து விட்டே போவோம் என்று வரிசையின் முடிவில் நின்றேன். வீட்டுக்கு போய் செய்வதற்கும் வேலைகள் என்றும் ஏதும் இல்லை. தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு அலைவரிசையில் முன்னரே பார்த்த, பிடித்த படம் ஏதாவது ஓடினால், அதை மீண்டும் பார்க்கலாம், அவ்வளவுதான். இப்பொழுது எல்லாம் புதிதாக எந்தப் படத்தையும் பார்ப்பதற்கு பொறுமை இல்லை. மனைவி இருந்திருந்தால் சிவராத்திரிக்கு எப்போதோ கோவிலுக்கு வந்திருப்பார். பின்னர் 'நீங்கள் இப்ப வரலாம்...........' என்று ஒரு செய்தியை கோவிலில் இருந்து சரியான நேரத்துக்கு அனுப்பியிருப்பார். வீட்டிலிருந்து ஒரு பதினைந்து நிமிட நேர தூரத்தில் தான் கோவில் இருக்கின்றது. ஒரு இருபத்து ஐந்து வருடங்களின் முன் இது ஒரு தேவாலயமாக இருந்தது. இப்பொழுது கூட கோவிலின் கூரைக்கு மேலால் நீண்டு நிற்கும் ஒரு மெல்லிய நீண்ட கூம்பு வடிவிலான தேவாலயக் கோபுரத்தை பார்க்கலாம். அன்று இங்கு வர்த்தகம் செய்து வசதியாக இருக்கும் குஜராத் மக்கள் இந்த இடத்தை தேவாலயத்துடன் சேர்த்து வாங்கினார்கள். தேவாலயத்தில் சில மாற்றங்களை செய்து அதை ஒரு கோவிலாக மாற்றினார்கள். அதன் அருகிலேயே இன்னொரு பெரிய கோவிலையும், குஜராத் முறைப்படி, கட்டினார்கள். அதை மந்திர் என்று சொல்லுகின்றார்கள். சிவபெருமான், அம்மன், பிள்ளையார், முருகன் என்று தென்னிந்திய மக்களுக்கு தேவையான கடவுள்களை பழைய கோவிலும், புதிய கோவிலில் வட இந்திய மக்களுக்கு தேவையான கடவுள்களையும் வைத்தார்கள். ஒரே ஒரு தடவை இந்த மந்திருக்குள் போயிருக்கின்றேன். அது ஒரு அயலவரின் மகனின் திருமண நிகழ்வு. அவர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள் தான். மந்திருக்குள் சுவாமியின் முன் பெண்கள் அரைவட்ட வரிசைகளில் அமர்ந்து இருந்தார்கள். அதன் பின் ஒரு சின்ன இடைவெளி விட்டு ஆண்கள் அமர்ந்து இருந்தார்கள். எப்பவுமே, நித்திய பூசையில் கூட, இப்படித்தான் இருப்பார்களாம். பெண்களுக்கும், ஆண்களுக்கும் பின்னால் நான் நின்று கொண்டிருந்தேன். எங்கே போனாலும் பின்னுக்கு நிற்பது அல்லது இருப்பது என்பது சௌகரியமாக இருக்கின்றது. பின் வரிசைக்கு பின்னால் இருந்து எவரும் கவனிக்காமல் இருப்பது ஒரு சுதந்திரமான உணர்வைக் கொடுக்கின்றது போல. தென்னிந்தியக் கடவுள்கள் இருக்கும் கோவிலில் ஆரம்பத்தில் ஒரு வட இந்தியரே பூசை வைத்தார். அப்பொழுதெல்லாம் இங்கு இந்தியர்கள் வெகு குறைவு. ஒரு சிலர் மட்டுமே கோவிலுக்கு வந்து போவார்கள். என்னுடைய மனைவி மிகவும் ஒழுங்காகப் போய் வருவார். அங்கிருந்த கடவுள்களுக்கு அந்த வட இந்திய பூசகருக்கு அடுத்தபடியாக மிகவும் பழக்கமானவர் என் மனைவியே. விசேட நாட்களில் மட்டும் என்னை கோவிலுக்கு வரச் சொல்லுவார். அதுவும் ஒரு குறுகிய நேரத்துக்கு மட்டுமே. இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் நன்றாகத் தெரிந்திருப்பதால், இந்த விடயத்தில் நாங்கள் இருவரும் முட்டி மோதிக்கொண்டதில்லை. பின்னர் ஒரு தமிழ் பூசகர் தென்னிந்தியாவில் இருந்து வந்தார். தமிழ் தான் அவருடைய மொழி என்றாலும் வேறு பல மொழிகளும் கதைப்பார். ஆங்கிலத்தைக் கூட தமிழ் போன்ற ஒரு உச்சரிப்பு மற்றும் நிறுத்தங்களுடன் தயக்கமில்லாமல் நீட்டாக கதைப்பார். நல்ல குரல். அருமையாகப் பாடுவார். எல்லோருக்கும் அவரைப் பிடித்துவிட்டது. அத்துடன் இந்தியர்களும் பெருமளவில் இந்த நாட்டிற்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். வந்தவர்கள் அப்படியே கோவிலுக்கும் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். பூசகருக்கு என்னைத் தெரியாது. ஆனால் நான் மனைவியுடன் போவதால், 'சார் வாங்கோ..............சௌக்கியமா.............' என்று நன்றாகப் பழகியவர் போலக் கேட்பார். ஓரிரு தடவைகள் மனைவியினால் போக முடியாத போது, பாலோ பழங்களோ திரவியங்களோ கொடுக்க நான் போயிருக்கின்றேன். பூசகர் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை. முதல் தடவை ஏமாற்றமாக இருந்தது. அதன் பின்னர் எதிர்பார்ப்பை மிகவும் குறைத்தே வைத்திருந்தேன். மனைவியும், பிள்ளைகளும் இன்னொரு நாட்டிற்கு ஒரு குடும்ப விசேடத்திற்கு போயிருந்தனர். என்னால் போக முடியாத நிலை. தை மாதத்தில் இருந்து சித்திரை நடுப்பகுதி வரை எனக்கு வேலை அதிகம். வேலையில் வேலை இல்லாவிட்டாலும், இந்த நான்கு மாதங்களில் விடுமுறை எடுப்பதை தவிர்க்குமாறு சொல்லியிருக்கின்றார்கள். மற்றைய மாதங்களில் முழுச் சுதந்திரமும் இருப்பதால், இது ஒன்றும் அநியாயமாகத் தெரியவில்லை. இதனால் குடும்ப விசேடத்தில் பல வருடங்களின் பின் காணும் சிலரின் 'என்ன, உங்களுக்கு இப்படி வயதாகிப் போட்டுதே.............' என்ற அழகியல் விமர்சனங்களையும் கேட்க முடியாமலும் போய்விட்டது. வரிசை மெதுமெதுவாக அசைந்தது. நான் கோவிலுக்குள் மண்டபத்துக்குள் வந்திருந்தேன். மண்டபத்தின் நடுவே கொடித்தம்பத்திற்கு அருகில் ஒரு சிவலிங்கத்தை வைத்திருந்தார்கள். அதன் அருகே பால் கலன்கள் பல இருந்தன. இன்று எல்லோருமே பால் கொண்டு வருவார்கள். நான் தனியாக இருப்பதால் பால் கொண்டு வரவில்லை. அடுத்த தடவை ஏதாவது ஒரு காரணம் சொல்லி மனைவியிடம் இரண்டு கலன்களாக கொடுத்து விடுகின்றேன் என்று மனதாரச் சொன்னேன். வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரும் சிவலிங்கத்திற்கு மூன்று தடவைகள் பாலால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் சிவலிங்கத்தை சுற்றிக் கும்பிடுவார்கள். சிலர் அதிக நேரம் எடுப்பார்கள். கூட்டமும் இப்ப மிக அதிகம். அதனால் தான் வரிசை நீண்ட பெரிய மலைப்பாம்பு போல அசைந்து கொண்டிருந்தது. இங்கு வந்து போவர்களுக்கு பல சடங்குகளும், சம்பிரதாயங்களும் நன்றாகவே தெரிந்திருக்கின்றது. மந்திரங்கள் கூட தெரிந்திருக்கின்றது. பூசகருடன் சேர்ந்து வடமொழியில் பலரும் சொல்லுகின்றனர். எனக்கு 'வேதம் புதிது' போன்ற சினிமா படங்களில் வந்த சில வரிகளை மட்டும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது. மற்றபடி சமஸ்கிருதத்தின் ஓசை நல்லாவே இருக்கின்றது என்ற ஒரு பொதுப்படையான அபிப்பிராயம் மட்டுமே இருக்கின்றது. இரவு முழுவதும் தொடர் பூசைகள், யாகங்கள் என்று ஒரே கூட்டமாக இருக்கும். பல பூசகர்களும் வந்திருந்தனர். வழமையான பூசகர் தான் இன்றும் பெரிய ஆள். மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அவரைச் சுற்றி மற்றைய பூசகர்கள் அமர்ந்து யாகம் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே குரலில் மந்திரங்களோ சுலோகங்களோ சொல்லிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சின்னக் கிண்ணத்தில் பாலை வார்த்து சிவலிங்கத்தின் உச்சியில் விட்டேன். அது சிவலிங்கத்தின் எல்லாப் பக்கங்களிலும் வழிந்து ஓடியது. பளிங்கு கறுப்பில் பால் வடிந்து கோடு கோடாக ஓடுவது அழகாக இருந்தது. குனிந்து மூன்றாவது தடவை கிண்ணத்தில் பாலை நிரப்பிக் கொண்டிருக்கும் போது, 'என்ன சார்................ அம்மா எங்கே................' என்றபடியே பூசகர் முன்னுக்கு நின்றார். அம்மா ஊரில் இல்லை என்று தட்டுத்தடுமாறி சொன்னேன். கையில் ஒரு மாலை வைத்திருந்தார். அதை என் கையில் திணித்தார். இதே போன்ற மாலைகளை வீட்டில் இருக்கும் பூஜை அறையில் நான் பார்த்திருக்கின்றேன்.
  2. உடைக்கிறாரா கொத்தனார்? தமிழ்கூறு நல்லுகம் தன் இயற்கை வாழிடங்களை தாண்டி, உலகெங் பரந்து விட்ட இந்த காலத்திலும் கூட, அது தனக்கென சில விழுமியங்களை, கூட்டு கொள்கைகளை இறுக பற்றி பிடித்துத் கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒன்றுதான் கலைப்படைப்புகளில் “கெட்டவார்த்தை” அல்லது “தூசணம்” என அழைக்கப்படும் அவமரியாதை வழக்கை தவிர்த்தல். ஆங்கிலபடங்களில் சர்வசாதராணமாக வரும் இவை தமிழ்படங்களில் மிக அரிதாகவே வரும். துள்ளிசை பாடல்களிலும் இதுதான் நிலமை. இதற்கு இதுவரை ஒரே விதிவிலக்காக இருந்தது என்றால் அது திண்டுகல் ரீட்டா வகையறாக்கள் மேடையில் ஆடும், “ஆடல் பாடல் நிகழ்வு” என அழைக்கபடும் “ரெக்கோர்ட் டான்ஸ்” மட்டுமே. அங்கேயும் பாடல்களில் ஆபாசம் இராது, நகர்வுகளிலும், வசனங்களிலும்தான். அதுவும் கூட பெரும் பாலும் இரெட்டை அர்த்தம் உள்ள வசனங்களாகவே இருக்கும். நேரடியாக கெட்டவார்த்தை பிரயோகம் அரிது. இதற்கு தணிக்கை மட்டும் காரணம் அல்ல. சுயதணிக்கை செய்யும் யூடியூப் பாடல் வீடியோ உட்பட்ட பலதில் கூட இந்த ஒழுங்கு கடைபிடிக்கவே படுகிறது. பீப் சாங் போல இடைக்கிடை சிலது விதிவிலக்காக வந்தாலும் அவை கடும் கண்டனத்துக்கு ஆளாவதே வழமை. ஆனால் இஸ்டாவும், டிக்டொக்கும் இந்த வழமையை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கிறவனா? என எண்ண தோன்றுகிறது. இந்த இரு தளங்களிலும் பெண்கள் சர்வசாதாரணமாக “ஆடல் பாடல்” ஆடி வருவது கொஞ்ச காலமாகவே நடப்பதுதான். இப்போ இது அடுத்த கட்டத்துக்கு போயுள்ளது. கெட்டவார்த்தை பேசியே யூடியூப்பிலும், இன்ஸ்டாவிலும் பிரபலமானவர் குட்டி மியா. மேற்குலகுக்கு ஒரு மியா கலிபா, எமக்கு ஒரு குட்டி மியா. ஆனால் கலிபா செயலில், குட்டி மியா சொல்லில். இதுதான் வித்தியாசம். இந்த குட்டிமியா ஆபாசமாக வீடியோ போட, அதை பார்த்து ஆபாசமாக பலர் கொமெண்ட்ஸ் போடுவார்கள். குட்டி மியா இந்த கொமெண்ட்சை வாசித்து அதை விட ஆபாசமாக பதில் கூறி இன்னொரு வீடியோ போடுவார், லைக்ஸ் அள்ளும். இப்போ என்னெவென்றால் -எவரோ ஒருத்தர் (ஒரு பிரபல இளவயது இசையமைப்பாளர் என்கிறார்கள் சிலர்) குட்டி மியாவுக்கு வந்த கெட்ட, கெட்ட, மகா கெட்ட கொமெண்ட்ஸை எல்லாம் பாடல் வரியாக்கி ஒரு பாடலை (ஏஐ மூலம் என்கிறார்கள்) உருவாக்கியுள்ளார். அந்த பாடல்தான் “தூத்துகுடி கொத்தனாரு”. சும்மா சொல்ல கூடாது, மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஒரு ஈர்ப்பு அந்த பாடலில் இருக்கிறது. பாடல் டாப்பு டக்கர் ஹிட்டு. சிந்தித்து பார்த்தால் ஆங்கில பாடல்களில் எமினெம்மும், இன்னும் பலரும் எப்போதோ சில தசாப்தங்கள் முன்பே செய்து விட்ட “புரட்சி”தான் இது. தமிழில் பீப் சாங் நேரம் இப்போ இருக்கும் இன்ஸ்டா கலாச்சாரம் இல்லை என்பதால் அதிகம் எடுபடவில்லை. பெரு ஊடகத்தில் எதிர்ப்பும் அதிகமாய் இருந்தது. இப்போ நிலமை அப்படி இல்லை. இன்ஸ்டா என்பதால் யாரை யாரும் எதிர்க்கவும் முடியவில்லை என நினைக்கிறேன். ரொம்ப சாதாரணமான ஒரு இன்ஸ்டா பாடல் - ராஜா, ரஹ்மான் பாடல் போல் ஹிட்டடிக்கிறது. தூத்துகுடி கொத்தனார் - தமிழ் உலகின் நீண்டதொரு நியமத்தை உடைத்து விட்டாரா? பிகு பாடலை கேட்பதாயின் - ஹெட்போன் போடவும்.
  3. புதிய நாடு, நகரம், புதிய புரியாத மொழி, தெரியாத அனுபவமற்ற வேலை, புதிய உறவுகள், நண்பர்கள் என வாழ்க்கை திசை மாறி தன் வழியில் என்னை உள்வாங்கி வழி நடாத்துகிறது இல்லை துரத்துகிறது. அநேகமாக ஊர் நினைவுகள் அனைத்தும் மறந்து போய் விட்டநிலை இல்லை மரத்துப் போன நிலை. கடமைகளும் பொறுப்புகளும் சுமைகளும் சுய வாழ்வை கடந்து அழுத்த நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி வருடங்கள் பல பறந்து விட ... திருமண வயதென்பது நினைவிற்கு வருகின்றபோது அவள் நினைவு மீண்டும் பற்றிக் கொள்கிறது. விசாரித்ததில் எல்லாமே காலதாமதமாகியிருந்தது. சரி நம் வாழ்க்கை எம்மை ஓட்ட திருமணம் பிள்ளைகள் என காலம் தடம் பதித்து செல்ல .. நாம் எல்லோரும் நினைத்து கொண்டு இருக்கிறோம். நாம் நினைத்ததை நாம் விரும்பிய வாழ்வை இலக்கை அடைந்து வருவதாக. ஆனால் உண்மையில் வாழ்க்கை தான் எம்மை வழி நடாத்துகிறது. அதில் முட்டி மோதி அலக்கழிக்கப்பட்டு பிரிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டு வதைக்கப்பட்டு குட்டப்பட்டு வளைந்து நெளிந்து கொண்டே தான் வாழ்வை வாழ்ந்து முடிக்கிறோமே தவிர அது அவ்வளவு இலகுவானதில்லை. இலகுவாக வாழ்வு கிடைப்பதுமில்லை. இப்படித்தான் வாழ்வேன் என்பவர்கள் தோற்றுப் போக வாழ்வின் இயல்போடு வாழ்பவர்கள் வாழ முயல்பவர்களே ஓரளவேனும் வாழ்வை சந்தோஷமாக ஓடி முடிக்க முடிகிறது. கிடைக்காததை நினைந்து உருகுபவர்களும் கிடைத்ததை வைத்து வாழத்தெரியாதவர்களுமே இவ்வுலகில் அதிகம். ஒரு நாள் ஒரு திருமண இரவு விருந்தில் அவள் என்னை கண்டு கொண்டு ஓடி வந்தவள் அன்றே போல் என் கைகளை பிடித்துக் கொண்டாள்.... தொடரும் (அடுத்த கிழமையுடன் இவளை தொட சீ... தொடரமாட்டேன்)
  4. போட்டியில் வெற்றி பெற்ற பையனுக்கும், 2ஆம், 3ஆம் இடத்தை பிடித்த செம்பாட்டன், எப்போதும் தமிழனுக்கும் பாராட்டுகள். போட்டியை நடாத்திய கிருபனுக்கு வாழ்த்துகள். கிருபன் நடாத்திய போட்டிகளில் 3 போட்டிகளில் இதுவரை கலந்து கொண்டேன் . எல்லாப்போட்டிகளிலும் கடைசி போட்டியாளர்களில் ஒருவராக இணைந்திருந்தேன். சென்றவருடம் உலகக்கோப்பை T20 போட்டியிலும் ஐபிஎல் போட்டியிலும் வேறு அணிகள் வெல்லும் என தோன்றினாலும் எனக்கு பிடித்த அணிகளை முதலிடத்தில் தேர்வு செய்தேன். நான் விரும்பிய அவுஸ்திரேலியா, சென்னை சூப்பர் கிங் இரண்டும் முதல் 4 இடத்தில் வரவில்லை. ஆனால் நான் 3 ம் இடம். இம்முறை சாம்பியன் போட்டியில் நான் விரும்பாத இந்தியா அணியை முதல் இடத்துக்கு தெரிவு செய்தேன். இந்தியா வென்று விட்டது. ஆனால் நான் 6 ம் இடம். ( புள்ளிகள் அடிப்படையில் எனக்கும் முதல் இடத்தில் பிடித்த பையனுக்கும் ஒரே புள்ளி).
  5. சுற்றுலா, வேலை, நண்பர்கள் சந்திப்பு, கொண்டாட்டம் என்று வெளியே சில நாட்கள் நாம் போய் இருந்து விட்டு வந்தாலும், வீட்டுக்கு திரும்ப வந்து சொந்தக் கட்டிலில் நித்திரை கொள்வது எப்போதும் மகிழ்ச்சியையும், அமைதியையும் நிம்மதியையும் தரும். அது தான் வீட்டின் தனித்துவமான தன்மை. ஆனால் தனது வீட்டில், தனது கட்டிலில் படுத்திருக்கும் காஞ்சனாவுக்கு மட்டும் நித்திரையும் வரவில்லை. அமைதியும் கிடைக்கவில்லை. இருட்டில் விழித்தபடி இருந்தாள். “நல்ல பெடியன், எங்கடை ஊர். ஓரளவு தூரத்துச் சொந்தம். நல்ல குடும்பம் எண்டு என்ரை அம்மா சொல்லுறா. இந்தக் கலியாணத்தைக் கட்டு. நல்ல வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்” அவளது தந்தை சொன்ன போது அவள் பதில் சொல்லவில்லை. யேர்மனியில் பிறந்து வேறு ஒரு கலாச்சாரத்துக்குள் வாழும் தனக்கு நாட்டில் இருந்து வரும் மாப்பிள்ளை ஒத்து வருமா? என்ற கேள்வியுடனே சில நாட்கள் போனது. அவளது நண்பிகளே கேட்டார்கள், ”என்னது? முன்பின் தெரியாத ஒருவன். நேரில் கூட பார்க்கவுமில்லை. உங்களுக்கு எப்பிடி இது சாத்தியமாகிறது?” அவர்களது கேள்வியிலும் உண்மை இருந்தது. காஞ்சனாவுக்கு ஐந்து வயாதாக இருக்கும் போது நடந்த கார் விபத்தில் தாயை இழந்திருந்தாள். அதன் பிறகு அவளது தந்தையே அவளுக்கு எல்லாமுமாக இருந்தார். எத்தனை பேர் கேட்டும், தனக்கு இன்னுமொரு கலியாணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து தனக்காக வாழும் தந்தையை எப்போதும் அவள் உயரத்திலையே வைத்திருந்தாள். அவரது வார்த்தைக்கு அவள் மறு பேச்சு சொன்னதும் இல்லை. சீதனமாக ஒரு இலட்சம் யூரோ, நகை, ஊரில் அவர்களுக்கு இருந்த காணி, பூமி, சிறீலங்காவில் இருந்து கல்யாணத்துக்கு உறவினர்கள் யேர்மனிக்கு வந்து போவதற்கான பயணச் செலவுகள், கல்யாணச் செலவு… என்று ஏகப்பட்ட செலவுகளுடன் எங்கள் நாட்டுக் முறைப்படி கரை சேர்ந்தாள் காஞ்சனா. கல்யாணம் முடிந்து ஒரு மாதம்தான். விடுமுறை முடிந்து விட்டது. பிரச்சினையும் தொடங்கி விட்டது. அன்று வேலை முடிந்து வீட்டுக்கதவைத் திறந்த போதே வீட்டில் புயல் மையம் கொண்டிருந்ததை காஞ்சனா விளங்கிக் கொண்டாள். “நேரம் என்ன எண்டு தெரியுதோ?” “நீங்கள்தானே கையிலை Mobile வைச்சிருக்கிறீங்கள். Mobile இலை நேரம் என்ன display செய்யேல்லையோ?” “எனக்குத் தெரியுது? உனக்குத்தான் தெரியேல்லை. ஒரு பொம்பிளை வீட்டுக்கு வாற நேரமே இது? “ “இப்பத்தானப்பா வேலை முடிஞ்சுது” “இரவு ஒன்பது மணிக்கோ? எல்லாரும் office முடிஞ்சு ஐஞ்சு ஆறு மணிக்குள்ளை வீட்டை போயிடுவாங்கள். உனக்கு மட்டும் ஒன்பது பத்து மணியாகுது” “இண்டைக்கு வேலை கூட. அதை முடிக்காமல் வரேலாது. அப்பிடி வந்து மிச்ச வேலையைச் செய்ய நாளைக்குப் போனால், ஒவ்வொரு நாளும் போக வேணுமோ எண்டு புராணம் பாடத் தொடங்கீடுவிங்கள்” “மகள் home office தான் செய்யிறாள். எப்போதாவது மாதத்திலை ஒண்டு இரண்டு நாட்களுக்குத்தான் officeக்குப் போவாள் எண்டு சொல்லித்தானே கலியாணம் செய்து வைச்சவை. “உண்மை. ஆனால் என்ரை வேலை அப்பிடி. சில வேலைகளை office க்குப் போய்த்தான் செய்யோணும்” “எனக்கென்னவோ நீ வேலைக்காக office க்குப் போறதாத் தெரியேல்லை” “மாதவன், களைச்சுப் போய் வந்திருக்கிறன். நல்லமுறையிலை கதையுங்கோ. சிறீலங்காவிலை இருக்கிற ஊர் வாழ்க்கையை இங்கை உள்ள வாழ்க்கை முறையோடை ஒப்பிட்டுப் பார்க்காதையுங்கோ. அங்கை உள்ள சூழல் வேறை. இங்கை வேறை. “நாங்கள் தமிழர்கள். எங்கை வாழ்ந்தாலும் எங்களின்ரை பண்பாடுகளை மாத்தேலாது. இரவு ஒன்பது பத்து மணிக்கு வீட்டுக்கு வாறதை என்னாலை ஒத்துக் கொள்ளேலாது” “முதலிலை நானும் மனித இனம் எண்டதை ஒத்துக் கொள்ளுங்கோ. எங்கடை கலாச்சாரம், பண்பாடுகள்... என்னை அடிமைப் படுத்தும் எண்டால் எனக்கு அது தேவையில்லை” “கலியாணம் பேசக்கை நீ நல்ல பிள்ளை, பண்பான பிள்ளை எண்டெல்லாம் எனக்குச் சொல்லிச்சினம். உடுப்பு, ஆளின்ரை நடை, செயல்பாடு எல்லாம் இஞ்சை வேறையாக் கிடக்கு” மனம் ஒரு நிலையில் இல்லாமல் கட்டிலில் நித்திரையின்றி தவித்துக் கொண்டிருந்த காஞ்சனா, அலைபேசியில் ஒலித்த “ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்“ பாடலைக் கேட்டு கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டாள். அந்தப் பாடலை தனது தந்தையின் தொலைபேசி அழைப்பாக அவள் அலைபேசியில் பதிவு செய்திருந்தாள். கட்டிலில் இருந்த படியே அலைபேசியைக் கையிலெடுத்து “சொல்லுங்கோ அப்பா” என்றாள். “மாதவன் ரெலிபோன் எடுத்தார்” “எடுப்பார் எண்டு எனக்குத் தெரியும்” “கதவைத் திறக்கேலாதாம் உனக்கு போன் எடுத்தால் answer இல்லையாம்” “அவராலை கதவைத் திறக்க ஏலாது. நான் கதவின்ரை பூட்டை முழுசா மாத்தீட்டன். Phoneஇலையும் அவரை block செய்திட்டன். எனக்கும் அவருக்கும் ஒத்து வரேல்லை. அவருக்கும் எனக்குமான கலியாண ஒப்பந்தம் முடிவுக்கு வருகுது. நான் lawyer ஓடை எல்லாம் கதைச்சிட்டன். நீங்கள் கலியாணம் என்று கேட்டபோதே நான் வேண்டாமெண்டு சொல்லியிருக்கோணும். அந்த நேரம் நான் உங்களின்ரை சொல்லை மதிச்சனே தவிர மற்றதையெல்லாம் சிந்திச்சுப் பாக்கேல்லை. இங்கை ஒவ்வொருநாளும் சண்டை. அவரின்ரை சந்தேகப் பார்வை, பேச்சு…… அப்பா, நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். மாதவனுக்கு சீதனமா ஊரிலை இருக்கிற சொத்துகள், பிறகு காசு, நகை எல்லாம் குடுத்தீங்கள். வேணுமெண்டால் ஒரு நட்ட ஈடாக மாதவனும் அவரின்ரை குடும்பமும் அதுகளை எடுத்துக் கொள்ளட்டும். என்னைக் கட்டினதாலை அவருக்கு யேர்மனி விசாவும் கிடைச்சிருக்கு. நல்ல வேலையையும் அவருக்கு ஏற்ற பொம்பிளையையும் அவர் தேடிக் கொள்ளட்டும். என்னைப் பொறுத்தவரை இனி அவர் எனக்கு வேண்டாம். மாதவனின்ரை சகல பொருட்களையும் கட்டி கராஜ்ஜுக்குள்ளை வைச்சிருக்கிறன். கராஜ் திறந்துதான் இருக்கு. எடுத்துக் கொண்டு போகச் சொல்லுங்கோ” அலைபேசியை வைத்து விட்டு காஞ்சனா கட்டிலில் படுத்தாள். நிம்மதியாக இருந்தது. இனி வீட்டுக் கட்டிலில் சுகமான தூக்கம் அவளுக்கு க் கிடைக்கலாம்.
  6. மிக்கநன்றி அண்ணா. மனிதர்களின் சக்தி அளவற்றது தானே, அண்ணா...............🤣. இங்கு பின்னர் ஒரு இலங்கை தமிழர்களின் கோவிலும் ஆரம்பித்தது. என்னுடைய வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம். என்னுடைய மனைவி அவர் எப்போதும் போகும் பழைய கோவிலுக்கே போய்க் கொண்டிருந்தார். நான் என் வழியில் அவர் பின்னால் போய்க் கொண்டிருந்தேன்.............🤣. நாங்கள் இலங்கை தமிழர்களின் கோவிலுக்கு போவதில்லை என்று ஒரு சமயம் பிரச்சனையை கிளப்பிவிட்டார்கள். முகத்துக்கு நேரே எவரும் எதுவும் சொல்லவில்லை, ஆனாலும் சிலர் ஒன்றாகக் கூடும் போது, தேவைப்பட்டால் இதையும் கதைத்துக் கொண்டார்கள். பின்னர் என்னவோ ஏதோ நடந்து, அவர்கள் இரண்டாக உடைந்தார்கள். இன்னொரு கோவிலை ஆரம்பித்தார்கள். அவர்களின் பூசகர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறினார். இன்னொரு பூசகர் வந்தார். கூட்டம் இரண்டாகியது. ஒரு கூட்டம் மறு கோவிலுக்கு போவதில்லை. இப்பொழுது அந்த இரண்டு கோவில்களும் மூடப்பட்டு விட்டன என்று சொல்கின்றனர். கடவுள்களை உருவாக்கி, பிரித்து, அழிக்கும் மனிதர்களின் சக்தி அளவற்றது தானே...........🤣.
  7. இதை தானே இந்த‌ திரியின் ஆர‌ம்ப‌த்தில் எழுதி இருந்தேன் இவ‌ர் ஒரு மாபியா....................நேற்றுக் கூட‌ ல‌ண்ட‌னில் இருந்து இவ‌ரின் அடி ஆள் ஒருத‌ர் யாழ்ப்பாண‌ யூடுப்ப‌ருக்கு கொலை மிர‌ட்ட‌ல் விட்டு இருந்தார்...................இவ‌ன் ஒரு த‌ர‌க‌ர் புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ளின் காசை வேண்டி க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு கொடுக்கும் த‌ர‌க‌ர்................இவனை எல்லாம் ச‌ம்முக‌ சேவ்வை செய்யும் புனித‌ர் என்று அழைக்க‌ வாய்ப்பே இல்லை........................இவ‌ன்ட‌ அம்மா நேற்று முக‌ம் காட்டாம‌ அழுது வீடியோ போட்டு இருந்தா யோலி வுலோக் யூடுப்பில்.................இவ‌னின் ம‌க‌ன் இப்ப‌டி எத்த‌னை பேரை அழ‌ வைச்சு இருப்பான்....................
  8. விசுகு அண்ணையின் எழுத்து நடை ஆழமான உணர்வுகளைக் கிளறுகிறது... ஓர் இசை நிகழ்வைப் போலவே தொடங்கிய காதல், காலத்தின் கொடூர இழப்புகளால் தொலைந்து போனது போல இருந்தாலும், அந்த பசுமையான நினைவுகள் மறையாமல் இருந்து, மீண்டும் அவள் வந்து கைகளை பிடித்த தருணம் ஒரு மறுபிறவி போல தோன்றுகிறது…. விசுகு அண்ணா, உங்கள் எழுத்துக்கள் வாசகர்களின் உள்ளத்தை ஆழமாக தொடும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன... காதல், பிரிவு, மீளும் சந்திப்பு — இவை அனைத்தும் ஒருவகை கவியழகு... உங்கள் எழுத்தின் உண்மைத் தொனி, அனுபவங்களின் நெஞ்சை உலுக்கும் விளக்கம், வாசகர்களின் உள்ளத்தில் நீங்கா முத்திரை பதிக்கிறது… “அவளை தொடுவானேன்…?” எனும் கேள்விக்கான விடை உங்கள் அடுத்த கட்டத்தில் இருப்பது உறுதி... காலம் நம்மை எங்கேயோ இழுத்துச் செல்லலாம், ஆனால் சில உறவுகள், சில நினைவுகள் ஒரு புதிய சந்திப்பை உருவாக்கிக்கொள்ளும்:.. இதைப்போல ஒரு கதை எனக்குள்ளும் புதைந்து போய்க்கிடக்கிறது.. பரணில் கிடக்கும் அந்த பழைய நாட்குறிப்பின் தூசி படிந்த பக்கங்கள் கண்களில் மங்கலாக தெரிகின்றன.. கண்ணில் இருந்து கசியும் ஈரத்தில் அந்த நாட்குறிப்பேடு கசங்கிப்போகாமல் இருக்க பத்திரமாக மூடி வைக்கிறேன் நீண்ட பெருமூச்சுடன்.. தொடருங்கள் விசுகு அண்ணா! – உங்கள் எழுத்துகள் இன்னும் பலரின் உள்ளங்களை வருடட்டும்... (எம் எதிர்பார்ப்பை கைவிடாமல், அடுத்த தொடரை விரைவாக வழங்குங்கள்..!)
  9. கோசான், நீங்கள் எழுதியது உண்மையிலேயே கூர்மையான பார்வை... தமிழ் கலாச்சாரம் அதன் சொந்த அடையாளங்களை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருந்த போதிலும், சமூக ஊடகங்கள் அதில் புதிய அலைகளை உருவாக்கிவிட்டன என்பதில் எனக்கும் உடன்பாடு... “தூத்துக்குடி கொத்தனார்” போன்ற பாடல்கள், மரியாதை குறைவான வார்த்தைகளை (அதுவும் எளிதில்) ஏற்றுக்கொள்ளும் சமூக நிலைமைக்கு அறிகுறி…. ஆங்கிலப் பாடல்களில் கெட்ட வார்த்தைகளை ஓரளவு ஏற்றுக்கொள்வது சரிதான்; ஆனால் தமிழ் மொழியில் இத்தகைய புதுமை (அல்லது புது வழக்கு) ஏற்படுவதே குறிப்பிடத்தக்க மாற்றம்... இன்ஸ்டா, யூடியூப் போன்ற தளங்கள் இந்த மாற்றத்தை வேகமாக தள்ளிச் செலுத்துகிறது... குட்டி மியா போன்று கெட்டவார்த்தைகளை பேசி இளம் தலைமுறையின் “விரும்பும்” கலைஞர்கள்??(இவர்கள் கலைஞர்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை), சமூக ஊடக ஆற்றலால் பெரும் செல்வாக்கைப் பெறுகிறார்கள்... இது ஒரு வகையில் கலாச்சார மாற்றமா, அல்லது தமிழ் மொழியின் மிதநிலை தன்மைக்கு அடித்துக் கொள்ளுதலா என்பதை யோசிக்கவேண்டும்... கடந்த இரண்டு நாட்களாக கிளிநொச்சி பகுதியை சேர்ந்த ஈழத்து குட்டிம்மா என புகழ்சூட்டக்கூடிய சாளினி என்கிற பெண்மணி பற்றி மிகப்பெரிய சர்ச்சை ஓடி இன்று அவர் இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார்.. Reference 🤣🤣( 1)https://www.facebook.com/share/v/1Bf3xijrPP/?mibextid=wwXIfr 2) https://youtube.com/@salini24?si=rY39fND-RaoCysKY) அப்புறம் அதே தளத்தில் சங்கவி என்கிற யூரியூப்பில் செய்தி சனல் நடத்துகிற பெண்பற்றியும் எழுதுகிறார்கள்.. எனினும் எனக்கு இந்த இரண்டாவது பெண்ணை பற்றி எழுதப்படுவதில் உடன்பாடு இல்லை என்பதுடன் இதை எழுதிய அதே தளம் பல நல்லவைகள் செய்தாலும் இந்தப்பெண் பற்றி எழுதியதற்கு(சாளினியை பற்றி அல்ல சங்கவி பற்றி எழுதியதற்கு) உரிய தண்டனை பெறவேண்டும்.. ஏனெனில் இந்த இரண்டாவது பெண் பொதுவெளியில் அப்படி எதுவும் பேசவோ எழுதவோ வீடியோ போடவோ இல்லை.. அவர்கள் சொல்வதுபோல் அந்த பெண் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தால்கூட பொதுவெளியில் இந்த உறவுகளில் சம்பந்தப்பட்ட யாரும் பேசாதவரை அது அவரின் தனிப்பட்ட பிரச்சினை என்று நினைக்கிறேன்.. நாம் எதை இழக்கிறோம், எதை பெறுகிறோம் என்பதை புரிந்து கொள்ளும் தருணத்தில் இருக்கிறோம்... இன்ஸ்டா பாடல்கள், “பீப்” கலாச்சாரம் — இவை அனைத்தும் தமிழின் இயல்பான நெறிகளை மாற்றக்கூடிய ஆற்றலுடன் இருக்கின்றன... இது ஒரு வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பதை வரலாறு தான் தீர்மானிக்க வேண்டும்... - பாலபத்திர ஓணாண்டி
  10. புத்தா, நீங்கள் தான் நித்தா கொள்கின்றீர்கள் என நினைக்கின்றேன். இலங்கை ஊடகங்கள் அனைத்தும் இந்த வல்லுறவு தொடர்பான செய்தியை கண்ணியமான முறையில் வெளியிட்டு வருகின்றன. அனுராதபுரத்தில் நிகழ்ந்த இந்த கொடுமையை எதிர்த்து வன்னி மருத்துவமனை மருத்துவர்கள் கூட வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றனர். பல ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தம் கரிசனைகளை வெளியிட்டுள்ளனர். இலங்கை முழுதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான விடயங்களின் மீது இச் சம்பவம் ஒரு குவியப்புள்ளியாக அமைந்து இருக்கு.
  11. " நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசியுமாம் " இதுக்குத்தான் காலாகாலத்தில் கலியாணத்தை செய்து துலையுங்கோ என்று பெற்றோர்கள் பொடியலைப் பார்த்துக் கத்துவது . ...... கோவிலுக்கோ , விழாக்களுக்கோ மனிசியோடு போகவில்லையென்றால் கோயில் மாடும் ஆண்களை மதிக்காது . ........ எப்போதும் அவள்தான் 1 (ஒன்று ) பின்னால் வரும் பூஜ்யங்கள்தான் புருசன்மார் . ........! 😂 நல்லாயிருக்கு கதை ரசோ .......!
  12. புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மூன்றாவது தலைமுறையினை எட்டிவிட்ட நிலையில், இளைய ஈழத்தலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றது. அந்தவகையில் பிரான்சின் மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி கவனத்தை பெற்றுள்ள சுஜீவன் முருகானந்தம் எனும் உயர்நிலை மாணவர் உலகத் தமிழர்களின் தேர்வு வாக்குக்கு அழைப்பு விடுத்துள்ளார். மன இறுக்க உளப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள 4-12 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களின் அக-மன நிலையினை உணர்ந்தறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கை வளையல் கருவியொன்றினை உருவாக்கியுள்ளார். இக்கருவியூடாக அச்சிறார்களுக்கு ஏற்படுகின்ற மன இறுக்க உளப் பாதிப்புக்களை உடனடியாகவே கைபேசி வழியாக எச்சரிக்கும் திறன் கொண்டதோடு ஏற்படுகின்ற பாதிப்புக்களை முறையாக ஆவணப்படுத்தும் திறன்கொண்டதாகவும் இக்கருவி உருவாக்கம் பெற்றுள்ளது. நாடளாவிய ரீதியில் இத்துறைசார்ந்து 81 பேர் இதனை உருவாக்கியிருந்த நிலையில், இவர்களில் 6 பேர் தேசிய அளவிலான இறுதித்தேர்வுக்கு சென்றுள்ளனர். ஒவ்வொருவரது உருவாக்க கருவியின் பயன்பாடு, அதன் அவசியம் குறித்தான ஆய்வுகளின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக இறுதிச்சுற்றில் கருவி தேர்வு செய்யப்படவுள்ளது. இதில் மூன்றாம் நிலையாக பொதுமக்களும் தங்களுக்கு தேவையான கருவியினை தேர்வு செய்ய முடியும். அந்தவகையில் இவர்களில் ஒருவராக சுஜீவன் முருகானந்தம் அவர்கள் “cœur léger ” எனும் பெயரில் தனது கருவியை உருவாக்கியுள்ளார். எதிர்வரும் மார்ச் 14 ம் திகதி வெள்ளிக்கிழமை ஐரோப்பிய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னராக குறித்த https://gpseo.fr/prix-entrepreneur/coeur-leger-le-bracelet-qui-aide-les-enfants-gerer-leurs-emotions இந்த இணையத்தளத்துக்கு தேர்வுக்கான வாக்களிப்பினை மேற்கொள்ள வேண்டும். மின்னஞ்சல் பதிவுடன் சுஜீவன் முருகானந்தம், உருவாக்கியுள்ள “cœur léger ” எனும் கருவியினை தேர்வு செய்யும்பட்சத்தில் ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். 1995 யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு பின்னராக கிளிநொச்சியில் தற்காலிகமாக வாழ்ந்து அங்கிருந்து 2000 ஆம் ஆண்டுகளில் 7 வயதில் பிரான்சில் கால்பதித்த இந்த மாணவரே சுஜீவன் முருகானந்தம் ஆவார். https://thinakkural.lk/article/315975
  13. அது ஊரில் வாழ்ந்த அப்பம்மா கூறியது ஊரில் இருந்து மாப்பிள்ளையை இறக்குமதி செய்வது..... சரியாகப்படவில்லை என்று நினைத்து..... இங்கேயே தெரியாத... அறிமுகம் இல்லாத.... மாப்பிள்ளைகளிடம் மாட்டுப்பட்டவர்களும் இருக்கின்றார்கள்
  14. மனதோடு மனம் நிகழ்த்தும் உ ரையாடல் தானே நீங்கள் எழுதுவதை நாங்கள் வாசிப்பது. ஒரு குறையும் இல்லை @ரசோதரன் அண்ணை 🙏. மேலும் அதைப்பற்றிக் கலந்துரையாட ஒரு வாய்ப்புத் தானே 😊.
  15. வேறு பல நாடுகளில் வரும் பிரச்சனைகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன், நீங்கள் சொல்லியிருப்பதைப் போலவே............... ஆனால் இங்கே லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் நாங்கள் சிலர் மட்டுமே இருந்து கொண்டு, இங்கேயும் அதே பிரச்சனை வந்தது என்னும் போது, முதலில் நம்ப முடியாமல் இருந்தது, பின்னர் கொஞ்சம் அதிர்ச்சி ஆகவும் இருந்தது........😌 இடையில் சில விடயங்களை தவற விட்டிருந்தேன் என்று பின்னர் தெரிந்து கொண்டேன், வில்லவன். நீங்கள் சொன்ன பின் தான் முடிவிலும் ஒரு நிறைவு இல்லை புரிகின்றது. மனதில் இருந்தது சரியாக வெளியில் வரவில்லை என்று நினைக்கின்றேன். பொதுவாகவே எதையும் எழுத ஆரம்பித்தால் ஒரே மூச்சில் எழுதிவிடுவேன். இதை அவசரம் அவசரமாக எழுதும் போது, எண்ணமும் சொல்லும் வேறு வேறாகிப் போய்விட்டது........ ஐயர் குண்டாக இருக்க வேண்டும் என்று நினைத்து, அதை செயற்கை நுண்ணறிவுக்கு சொன்ன நான், முதலில் கதை முழுவதையும் எனக்கு சொல்லியிருக்க வேண்டும்..........🤣. மிக்கநன்றி வில்லவன். உங்களின் ஓவியங்கள், எழுத்து, வாசிப்பு எல்லாமே மிகக் கூர்மையானவை..........❤️.
  16. குருநாகலிருந்து வந்த அமைப்பாளர் ...கிழக்கு மாகாண சந்திரசேகரா போல...இனி மெல்ல மெல்ல மட்டக்களப்பையும் அதிரடி என போட வேண்டிய தலையங்கம் மாத்தி அராஜ‌கம் என் வந்திட்டுது
  17. சிலர் சிவலிங்கத்தை கும்பிடுவதை வினோதமாக பார்த்துக் கொண்டிருப்பேன். முன்னுக்கிருக்கும் நந்தியின் காதுகள் இரண்டுக்கும் ஊடாக இலக்கு பார்ப்பது போல லிங்கத்தைப் பார்ப்பார்கள். நீங்களும் அப்படி பார்க்கிறீர்களோ?
  18. இந்த வார இறுதிக்குள் வரும் பதில்களைத்தான் தரவேற்றமுடியும். பின்னர் நான் ஆபிரிக்காவில் விடுமுறையில் நிற்பேன் என்பதால் 24 வரை எதுவும் செய்யமுடியாது! பலர் பங்குபற்றினால்தான் எனது நேரத்தைச் செலவிடமுடியும்!
  19. கவிதை என்பது ஒரு மொழியல்ல, அது ஒரு உணர்வு என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஓணாண்டியார்…!
  20. இதில் கொஞ்ச அன்பை இவர்கள் கிருஸ்ணாமூலம் உதவிசெய்த அந்த கஸ்ரப்பட்ட மக்களுக்கு நேரபோய் காட்டி இருக்கலாம்.. இவர்கள் கண்ணீர்விடுமளவுக்கு ஒன்றும் இல்லை.. இவர் ஒரு இடை இணைப்பாளர் அவ்வளவே.. ****
  21. எழுத்தாளர் சாரு இந்த வாரம் இந்த நிகழ்வு பற்றி இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். இளையராஜாவின் மீதான சாருவின் பார்வை முன்னரே தெரிந்தவர்களுக்கு 'இசையும் சமூகமும்' என்னும் கட்டுரையால் அதிர்ச்சி ஏதும் ஏற்படாது. அவரின் தளத்தில் பல கட்டுரைகள் இதே பார்வையுடன் இருக்கின்றன. 'ஸிம்ஃபனி' என்னும் கட்டுரை மிகச் சிறியது, ஆனால் முக்கியமானது. லிடியன் நாதஸ்வரம் என்ற 20 வயதுகள் ஆன தமிழ் இளைஞர், இசைக் கலைஞர் அடுத்த வருடம் சர்வதேச இசை நாள் அன்று தான் ஒரு ஸிம்ஃபனி அரங்கேற்றப் போவதாகச் சொல்லியிருக்கின்றார். இணையத்தில் போய்க் கொண்டிருக்கும் லிடியன் - இளையராஜா உரசல்களின் பின்னணி இதுவே. இசையும் சமூகமும்: https://charuonline.com/blog/?p=15463 ஸிம்ஃபனி: https://charuonline.com/blog/?p=15461
  22. இதே போன்ற முயற்சிகளில் இந்த துறையில் இப்பொழுது தான் பிரபலமானாலும், இலக்கிய உலகில் இது போல காலத்துக்கு காலம் நடந்து கொண்டேயிருக்கின்றது.சில ஈழப் பின்புலம் உள்ள எழுத்தாளர்கள் உட்பட சிலர் மிகவும் வெளிப்படையாகவும், பல இடங்களில் வேண்டும் என்றே திணித்து எழுதுவது போன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான சொற்களும், விவரணைகளும் இருந்தாலே அது ஒரு உச்சமான இலக்கியம் என்றும் ஒவ்வொரு காலத்திலும் ஒரு பிரிவினரால் கருதப்படுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் வெறும் வார்த்தை ஜாலங்கள், அது எந்த வகை என்றாலும், டி ராஜேந்தர் வகை என்றாலும், அராத்து வகை என்றாலும், தூத்துக்குடி கொத்தனார் வகை என்றாலும், காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போய்விடும். ஒரு உடனடி மனக் கிளர்ச்சியை மட்டுமே கொடுக்கும் எந்த படைப்பும் நீண்ட காலம் தங்கி நிற்பதும் இல்லை. ஒரு மனிதனின் அடிமனதில் போய் தங்கி நிற்பதுக்கு எதுவும் இல்லாத எந்த வகையான படைப்பும் மறைந்து விடும் என்பதே என் அனுபவம்.
  23. 🤣............... மிக்க நன்றி சுவி ஐயா. 'கணவனே கண் கண்ட தெய்வம்..........' என்று சொல்லும் ஒரு வழக்கு இருந்தது.............. ஆனால் உண்மையில் யார் தான் கண் கண்ட தெய்வம் என்று கொஞ்சம் வேடிக்கையாக எழுத முயற்சி செய்திருந்தேன்............
  24. பிரச்சனைகள் எதனையும் சுமூகமாக தீர்க்காமல் உள்ளூராட்சிகள் அனைத்தையும் எப்படி கைப்பற்றுவீர்கள்? உதாரணத்துக்கு : மீனவர் பிரச்சனை
  25. ஓம்… ஏசி..ஏசி நானும் அவர் பாட்டோடுதான் வாழ்கிறேன்🤣. தமிழ் திரையிசையை பொறுத்தவரை 75-90 பிறந்தவர்கள் மிக அதிஸ்டசாலிகள். எங்கள் தாலாட்டை ராஜாவும், ரொமான்ஸ்சை ரஹ்மானும் பாடி நின்றார்கள். இவர்கள் இருவரும், தாயகபாடல்களும்தான் எம் வாழ்க்கைக்கே பிண்ணனி இசை. அதிலும் நான் “மேயாத மான்” முதல் “தூத்துகுடி கொத்தனாரு” வரை இசையை ரசிப்பவன் (ஹெட்போன் போட்டு கொண்டு கேட்கவும்🤣🔞). ஆகவே நான் ராஜா வெறுபாளன் அல்ல, சின்னதாயி மகனின் சின்னதனமே எனக்கு பிடிக்காதது. ரஜேந்தர், சங்கர் கணேஷ், சிற்பி இவர்களின் படைப்புகள் அற்புதம். பலர் இதை ராஜா பாட்டு என்றே நினைப்பார்கள். அதே போல் ராஜா, ரஹ்மான் ஏனோ தானோ என போட்ட பாடல்களும் உண்டு.
  26. இன்னும் கனிமங்களுக்கான கையெழுத்து வைக்கப் படவில்லை. 5 அம்ச திட்டங்களுக்கு உக்ரைன் சம்மதித்ததாக தெரிகின்றது. அதில் கனிமவளமும் ஒன்று.
  27. நம்ம வடிவேல் சிஷ்யனா இருப்பான் போல, அப்படியே அலேக்கா டென்மார்க்கை தூக்கி மலேக்கா அமெரிக்கா பக்கத்தில வச்சிட்டால் போச்சு
  28. ரஹ்மான், ராஜாவை நான் ஒப்பிடவில்லை. ஆனால் ராஜா நிச்சயம் விருதுகளுக்கு பின்னால் ஓடும், அதற்காக அரசியல் சாயம் கூட பூசி கொள்ளும் ஒருவர். எல்லோரும் ஆஸ்கார் நாயகன், ஆஸ்கார் அது, இது என அலப்பறை பண்ணி கொண்டிருக்க சத்தமில்லாமல் 2 ஆஸ்காரை ரஹ்மான் எடுத்து வந்தார். என்னை பொறுத்தவரை ரஹ்மான் ஆஸ்கார் எடுத்தது ராஜாவின் கர்வத்தின் மீது விழுந்த மரண அடி என்றே நினைக்கிறேன். தன்னோடு கோவித்து கொண்டு, மணிரத்னமும், பாலச்சந்தரும் சேர்ந்து, அறிமுகபடுத்திய தனக்கு வேலை பார்த்த பையன். ஆஸ்காரை தனக்கு முன் எடுத்துவிட்டான் என்பதை அவர் இன்று வரை ஏற்றுகொள்ள முடியாமல் அவதிபடுகிறார். இனி ஆஸ்கார் எடுத்தும் பயனில்லை (ரஹ்மானுக்கு பிறகு எனவே வரலாறு பதியும்). ஆகவே நானும் ரெளடிதான் என பத்மவிபூசண், சிம்பொனி என எதை எதையோ எல்லாம் முயல்கிறார். இது எதுவுமே தேவையில்லை - அவருக்கான இடம் அபப்டியேதான் இருக்கிறது.
  29. கிழித்து தொங்கவிட்ட உள்ளூர் வாச்மன் | kunsarumraviyarum
  30. தமிழ் நாட்டு அரசியல் எப்போது சாம்பாராகவே இருக்கும் அதில் எது இல்லை எது இருந்தது என்பது சாப்பிட்ட பின்னரே தெரியும் ஐ மீன் தேர்தல் முடிந்த பின்னரே யார் யாருடன் உண்மையில் கூட்டணி வைத்துள்ளார்கள் என்பது தெரிய வரும்
  31. இளசுக்கு தாழ்வுசிக்கல், அதை மறைக்க வெளிப்படுத்தும் உயர்வுச்சிக்கல் நடவடிக்கைகள், அவரின் வாய் இவற்றால்தான் பிரச்சினை வருபதாக நான் எண்ணுகிறேன். வித்யாகர்வம் தனக்கு இருப்பதாக காட்டி கொள்ள வேண்டும் என்றே நடப்பதாகவும் நான் நினைப்பதுண்டு. உங்களிடம் பழகியதில் இவை இருப்பதாக தெரியவில்லை.
  32. இதென்ன விவேக்கின் உண்டியலில் விழுவது எல்லாம் அம்மனுக்கே சொந்தம் எண்ட பகிடிமாதிரி… கோவில் கார்பார்க்கும் கோவில்தானே எண்டுறியள்🤣. சட்டப்படி கோவிலில் இந்து முறை படி நடந்தால் மட்டுமே அது திருமணம். கோவில் கார்பார்க்கில், ஆட்டோஸ்டாண்டில், தெப்பகுளத்தில், கோவிலின் பின்புறம் உள்ள பற்றைக்குள் நடப்பவை திருமணமாகாது🤣. இது விஜி அண்ணியின் ஏறுக்குமாறான கதைதான். இதை கோர்ட் விசாரிக்க வேண்டும். அதற்கு வழக்கை முடக்க கூடாது. நாங்கள் எழுதத்தான் இலாயக்கு, விளக்கம், கணக்கு-வழக்கு எல்லாம் உங்க டிப்பார்ட்மெண்ட்🤣
  33. தமிழருக்கெதிராக திட்டமிட்டு வளர்த்தது, இப்போ தன் இனத்தையே மேயுது.
  34. ஆறு மாதங்கள் ஓடிவிட பாடசாலை விடுமுறையில் ஊர் திரும்புகிறேன். பண்ணைப் பாலத்தில் மீன் வாசம் நாசியில் படும் எல்லோருக்கும் ருசி கண்ட பூனை எனக்கோ அவள் வாசம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தீயாய் சுடுகிறது. ஊர் வந்து சேரும் வரை அதே நினைவு அதே கனவு. ஆனால் ஊரும் நண்பர்களும் நகைச்சுவை நடிகராக சென்று கொழும்பால் திரும்பும் என்னை சுப்பர்ஸ்டாராக வரவேற்கிறார்கள். அப்பொழுது தான் நானும் பார்த்தேன் சென்றபோதிருந்ததை விட நான் முழுவதுமாக மாறியிருப்பதை. இந்த வட்டம் மற்றும் பிரபலத்தால் அவளை பார்ப்பது தடங்கல் பட சிறிது சிறிதாக சில செய்திகள் என்னை வந்தடைகின்றன. தொட்டது நான் மட்டுமல்ல ருசி கண்டது நான் மட்டுமல்ல என்பதை அந்த வயதில் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தபோது அது ஒரு வித ஈர்ப்பு, நட்பு என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் காதல் பற்றியோ கல்யாணம் பற்றியோ ஏன் எங்கள் எதிர் காலம் பற்றியோ கூட பேசிக்கொண்டதில்லை. என்னை கட்டிக் கொள்வாயா என்று அவளோ கட்டிக் கொள்வேன் என்று நானோ எந்த உறுதியும் எடுத்துக் கொண்டதில்லை. ஆனாலும் என் மனதின் ஒரு மூலையில் அவள் என்னை படுத்திக் கொண்டே இருந்தாள். சந்திக்க வேண்டும் என்ற என் விருப்பம் தள்ளி தள்ளி போக கடைசியாக அவள் குடும்பம் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டனர் என்பதுடன் முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. மீண்டும் காலம் என்னை பிரான்ஸ் கொண்டு வந்து போட்டது. தொடர்பு முற்றாக அழிந்து போனது. தொடரும்....
  35. எங்கட பையன் முதல்வரானது மிகவும் மகிழ்ச்சி ஒவ்வொரு போட்டியையு; நடத்துவதற்கு கிருபன் ஜியை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாது போட்டியில்கலந்து கொள்வதில் தூங்குமூஞ்சியாக இருக்கும் என்போன்றவர்களை தொடர்ந்து அன்பு அழைப்புகள் விடுத்து கலந்து கொள்ள வைப்பது மட்டுமன்றி போட்டியைத் தொய்வில்லாது கலகலப்பாக வைத்திருப்பதற்கும் சேர்து பாராட்டுகள். கிரிக்கட் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் வீரப்பையன் இந்த முதல்வர்பதவிக்கு முற்றிலும் பொருத்தமானவர்தான். நான் நினைக்கிறேன் இதுதான் முதல்முறை யாக அவர் முதல்வர் பதவியை அலங்கரிக்கிறார் என்று நினைக்கிறேன்.வழமையாக கடைசி நாலு இடத்தில் நிற்கும் நான் முதல் நான்கிற்கு வந்ததது என்னால் நம்ப முடியாத நிகழ்வு. வேலைப்பளுவுக்கு மத்தியில் போட்டியை திறம்பட நடத்திய கிருபன் ஜீக்கு நன்றியும் பாரட்டும் உரித்தாகட்டும்.
  36. வில்லவன், நீங்கள் சொல்வது சரி. ஆனாலும் காஞ்சனாவுக்கு வாழ்நாள் முழுதும் அமைய இருந்த ஒரு அடக்குமுறையான வாழ்க்கையில் இருந்து விடுதலை கிடைத்திருக்கிறது அல்லவா? ஆக இருவருக்கும் ஒரு சுகமான முடிவு. Suvy, காஞ்சனாவின் நிலமை நன்றாகத்தான் இருக்கிறது. அவள் தன் விருப்பம்போல் வாழலாம்.
  37. ட்றம்பின் வரி மிரட்டலுக்கான தாக்கம் இன்று அமெரிக்க பங்குச் சந்தையில் எதிரொலித்துள்ளது. இதில் மஸ்கின் டெஸ்லா கார் நிறுவனம் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்றைய வீழ்ச்சியுடன் கடந்த 3 மாதங்களில் டெஸ்லா நிறுவனம் 800 பில்லியன் டொலருக்கும் (மில்லியன் அல்ல) அதிகமான பங்குச் சந்தை முதலீட்டினை இழந்துள்ளது. டெஸ்லாவின் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணமாக மஸ்க் - ட்றம்ப் கூட்டு மற்றும் தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவான மஸ்கின் அண்மைய கருத்துக்கள் குறிப்பிடப்படுகிறது. இப்படியே சென்றால் டெஸ்லா நிறுவன முதலீட்டாலர்கள் மஸ்கை நிறுவனத்தை விட்டு வெளியேறுமாறு கேட்கலாம். ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே இறுமாப்புடன் ஆட்டம் போட்ட இவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் உலகம் தக்க பதில் கொடுக்கிறது.
  38. முதலாமிடம் பெற்ற @வீரப் பையன்26 இரண்டாமிடம் பெற்ற @செம்பாட்டான்மூன்றாம் இடம்பெற்ற @Eppothum Thamizhanசகோதரர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்ட 24 போட்டியாளர்களுக்கும் போட்டியை திறம்பட நடத்திய கிருபன் அண்ணைக்கும் எனது வாழ்த்துகள். ஐபிஎல் போட்டியிலயாவது அதிட்டம் அடிக்குமோ பார்ப்பம்! 😃
  39. இதை சிறப்பாக நடத்திய கிருபனுக்கும், போட்டியில் வெற்றியீட்டிய பையனுக்கும், திரியை கலகலப்பாக கொண்டு சென்ற சக யாழ்கள உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். வேலைப்பளு காரணமாக என்னால் இதில் கலகலப்பூட்ட , ஒன்றிணைய முடியவில்லை. இடைக்கிடை பார்ப்பதுண்டு. வெறும் குருட்டு luck இல் முன்னுக்கு வந்துவிட்டேன். இந்த கிரிக்கெட்டில் இப்ப என்ன நடக்குத்தென்று தெரியாது, யார் யார் விளையாடுகிறார்கள் என்றும் தெரியாது. எல்லோரும் கேட்டதுக்கு இணங்க, பங்கு பற்றுவதற்காக, அங்கே இங்கே சுட்டு சும்மா போட்டேன். ஆரம்பத்தில் ஓரிரு கேள்விகளுக்கு தெரிந்த பெயர்களை தெரிவு செய்துவிட்டு பார்த்தால் அவர்கள் team இலேயே இல்லை, பிறகு மாத்தவேண்டி வந்துவிட்டது. ஆச்சரியமாக எனக்கும் 42 புள்ளிகள். வரும்காலத்தில் இப்பிடி பங்குபற்றுவது easy ஆக இருக்கும்போல
  40. அப்ப நாங்கள் எல்லாம் என்ன தக்காளி தொக்கா🤣… நீங்கள் paper correction கேட்டதால நான் 4ம் இடத்தில் இருந்து 12 க்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளேன்🤣… ஏற்கனவே மழையால் பயிரெல்லாம் அழிஞ்சு போச்சு…🤣 உங்க paper correction ல கொள்ளிய வைக்க…🤣. பிகு போட்டியை கலகலப்பாக கொண்டு போன அனைவருக்கும் நன்றி. செம்பாட்டான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக கலக்கினார். எனக்கு ஐபில் அறவே பிடியாது. 1st class ஐ விட தரம் குறைந்த (டோனியை எந்த 1st class அணி எடுக்கும் 2025 இல்) போட்டி அது. அதை பார்ப்பதால் - சர்வதேச ஆட்டம் பார்க்கும் ஈர்ப்பு கூட குறைகிறது. ஆகவே அந்த போட்டியில் நான் இல்லை. வாய்ப்பை பயன்படுத்தி கிருபன் ஜி அதிலும் என் பெரிய வீட்டை எடுக்க வாழ்த்து🤣. WTC finals SA v AUS - 10க்கும் குறைவான கேள்விகளோடு ஒரு போட்டி வைக்கலாம் என நினைக்கிறேன். 4ம் நாள் போட்டியை நேரில் பார்க்கவும் டிக்கெட் புக்பண்ணி விட்டேன். யாழிலும் ஒரு மினி போட்டிக்கு ஆர்வம் இருந்தால் - செய்யலாம். நன்றி. வணக்கம்.
  41. யாழ்பாணத்திலில் வாங்கின அடியை எப்படி இந்த சுத்துமாத்து மறக்கமுடியும் . உருப்படாத ஜென்மம்
  42. 'வெறும் 30 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு' - விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர்,சிராஜ் பதவி,பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் 'வான்வழி தவிர்த்து, சென்னையிலிருந்து- பெங்களூருக்கு 30 நிமிடத்தில் அல்லது சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு மணிநேரத்தில் பயணிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?' ஹைப்பர்லூப் எனும் தொழில்நுட்பத்தைக் குறித்து பேசும் போதெல்லாம், இத்தகைய உதாரணங்களே முன்வைக்கப்படும். ரயில் பயணத்திற்கு ஆகும் செலவை விட சற்று கூடுதலாக, அதேசமயம் விமானத்தை விட வேகமாக (சுமார் 1000 கிமீ வேகத்தில்) நிலத்தில் செல்லக்கூடிய ஒரு பயண அமைப்பாக ஹைப்பர்லூப் விவரிக்கப்படுகிறது. ஹைப்பர்லூப் (Hyperloop) என்ற பெயரில் ஒரு தொழில்நுட்பத்தை 2013இல் முன்மொழிந்தார் ஈலோன் மஸ்க். இதுதொடர்பாக 'ஹைப்பர்லூப் ஆல்பா' என்ற பெயரில் ஒரு 58 பக்க ஆய்வறிக்கையையும் அவர் வெளியிட்டார். அவரது ஹைப்பர்லூப் திட்டத்தின் மூலம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ வரையிலான தூரத்தை (563 கிமீ) வெறும் 35 நிமிடங்களில் கடக்க முடியும் என்றும், இந்த திட்டத்திற்கு 6 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் (இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 52,266 கோடிகள்) என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இதயம் வேகமாக முதுமை அடையுமா? டீப்சீக் ஏஐ: செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவுக்கு நிகராக இந்தியா வளர முடியுமா? 'நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்' - இயர்போன், ஹெட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். உலகில் நடைமுறையில் இருக்கும் ரயில், சாலை, நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்தைக் காட்டிலும், இந்த ஹைப்பர்லூப் மூலம் அதிவேகமாகவும் குறைவான செலவிலும் மக்களையும் பொருட்களையும் கொண்டுசெல்ல முடியும் என்று மஸ்கின் ஆய்வறிக்கை கூறியது. இந்த ஹைப்பர்லூப் ஒரு ஓபன்சோர்ஸ் தொழில்நுட்பம் என்றும், இதில் பங்களிக்க பலரும் முன்வரவேண்டும் என்றும் அப்போது ஈலோன் மஸ்க் வேண்டுகோள் விடுத்திருந்தார். 12 வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது, உலகின் மிகச் சில நிறுவனங்களே இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் இதுவரை ஆர்வம் காட்டியுள்ளன. காரணம், இந்தத் திட்டத்தில் இருக்கும் சவால்கள். பட மூலாதாரம்,Boringcompany ஹைப்பர்லூப் என்றால் என்ன? இந்திய ரயில்வே அமைச்சகத்தின் நிதி உதவியோடு, 410 மீட்டர் தொலைவுக்கு ஒரு ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை நிறுவியுள்ளது, ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம். செங்கல்பட்டு மாவட்டத்தின் தையூர் எனும் கிராமத்தில் உள்ள ஐஐடி மெட்ராஸின் டிஸ்கவரி வளாகத்தில் இந்த பாதை நிறுவப்பட்டுள்ளது. எஃகு குழாய்களைக் கொண்டு, முழுவதுமாக சீல் செய்யப்பட்ட ஒரு வலையமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் குறைந்த அழுத்தச் சூழலில் பாட்களை (Pods- பயணிகள் அமர்வதற்கான, ரயில் கோச்கள் போன்ற ஒரு வசதி) அதிவேகமாகச் செலுத்துவதே இதன் முக்கிய அம்சம். "ஹைப்பர்லூப் ஒரு நவீன போக்குவரத்து அமைப்பாகும், அங்கு அதிவேக பாட்கள், காற்றின் உராய்வு இல்லாத குறைந்த அழுத்த குழாய்கள் வழியாக பயணிக்கின்றன. அதாவது வெற்றிடச் சுரங்கப்பாதையில் (Vaccum tunnel), விமானத்தின் வேகத்தில் நகரும் ஒரு ரயில் போல" என்கிறார் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியரும் ஹைப்பர்லூப் குழுவுக்கான ஆலோசகருமான சத்ய சக்கரவர்த்தி. "இதில் சக்கரங்களுக்கு பதிலாக, மேக்னடிக் லெவிட்டேஷன் (மாக்லேவ்- Maglev) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாட்கள் மிதக்கின்றன. பின்னர் அவை மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. இதனால் அதிவேகமாக, குறைந்த ஆற்றலுடன், குறைந்தபட்ச உராய்வு விசையுடன் ஹைப்பர்லூப்பை இயக்க முடியும்" என்றும் சத்ய சக்கரவர்த்தி கூறுகிறார். திருப்பதி கோவில் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை கோரிய தேவஸ்தானம் - மத்திய அரசு கூறியது என்ன?9 மார்ச் 2025 தூங்குவதற்காகவே சுற்றுலா செல்வது குறித்து உங்களுக்கு தெரியுமா?7 மார்ச் 2025 பட மூலாதாரம்,IIT-Madras படக்குறிப்பு,இந்திய ரயில்வே அமைச்சகத்தின் நிதி உதவியோடு, ஐஐடி மெட்ராஸ் நிறுவியுள்ள 410 மீட்டர் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை இந்த மேக்னடிக் லெவிட்டேஷன், அதாவது காந்த சக்தியைக் கொண்டு பாட்களை பாதையிலிருந்து சற்று மேலே மிதக்க வைத்து, பிறகு அதை அதிவேகமாக செலுத்தும் மாக்லேவ் தொழில்நுட்பம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். உதாரணமாக சீனாவின் 'ஷாங்காய் மாக்லேவ்' ரயில், உலகின் 'அதிவேக ரயில் சேவைகளில்' ஒன்று. இது மணிக்கு 300 கிமீ வேகத்தை எட்டக்கூடியது. ஆனால், ஹைப்பர்லூப் மூலம் மணிக்கு 1000 கிமீ என்ற வேகத்தைக் கூட எட்டமுடியும் என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி. இருப்பினும், மாக்லேவ் ரயில்கள் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் பயணிக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, அவை பொதுப் போக்குவரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டால், நிச்சயம் அதில் அதிகமான மக்கள் பயணிக்க முடியும்" என்கிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சீனாவின் 'ஷாங்காய் மாக்லேவ்' ரயில் ஹைப்பர்லூப் திட்டத்தில் இருக்கும் சவால்கள் என்ன? நீண்ட தூரத்திற்கு சீல் செய்யப்பட்ட 'வெற்றிடக் குழாய் அமைப்பை' உருவாக்குவது அல்லது அதற்கான பிரத்யேக மாக்லேவ் பாதைகளை நிறுவுவது பொருளாதார ரீதியில் மிகவும் சவாலான ஒன்று. "நகர அமைப்புகள் அல்லது இயற்கையை சீர்குலைக்காமல் ஹைப்பர்லூப்பிற்கு ஏற்ற நிலத்தைக் கண்டுபிடிப்பதும், கையகப்படுத்துவதும் எளிதல்ல. இதற்கு தீர்வு, ஏற்கனவே இருக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளுக்கு அருகிலேயே ஹைப்பர்லூப் பாதைகளை உருவாக்குவது தான்," என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி. ஹைப்பர்லூப்பில் இருக்கும் மற்றொரு சவால், அதன் அதீத வேகத்தைக் கருத்தில் கொள்ளும்போது, பயணிகள் பாதுகாப்புக்கு என எவ்வித விதிமுறைகளும், மத்திய அல்லது மாநில அரசுகளால் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. "ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் நமக்கு மட்டுமல்ல உலகிற்கே புதிது. அது இன்னும் எங்கும் நடைமுறைக்கு வரவில்லை. இந்தியாவில் அப்படி வர தயாராக இருக்கும்போது, அதற்கு என புதிய விதிகளை அரசு கொண்டுவரும்" என்கிறார் அவர். ஈரோடு மலையாளிகள் பழங்குடி பட்டியலில் சேர்க்கப்படாதது ஏன்? பல்லாண்டுக் கால போராட்டத்திற்கு தீர்வு என்ன?8 மார்ச் 2025 'மரத்திற்கு பின்னே யானை நின்றாலும் தெரியாது' - இவர்கள் ஆபத்தான காட்டுவழிப் பயணம் மேற்கொள்வது யாருக்காக?9 மார்ச் 2025 பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் ஹைப்பர்லூப் என்பது காற்றுப் புகாத, சீலிடப்பட்ட குழாய்கள் வழியாக அதிவேகத்தில் செல்லும் ஒரு போக்குவரத்து அமைப்பு எனும்போது, அவசர காலத்தில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் எழுவது இயற்கையே. "அதிக வேகத்தில் பாட் நகர்ந்தாலும், ஏதாவது தவறு கண்டறியப்பட்டால் அவற்றின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்படும். எனவே அது மோதுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குழாயின் உள்ளே அவசரகால வெளியேற்ற அமைப்புகளும் நிறுவப்படும். மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் மூலம் சிக்கல்கள் கண்டறியப்பட்டு, அவை ஆபத்தாக மாறுவதற்கு முன்பே தீர்க்கப்படும்" என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி. சீலிடப்பட்ட குழாய்கள் வழியாக செல்வதால், பெருமழை, வெள்ளம் போன்றவற்றால் ஹைப்பர்லூப் போக்குவரத்து பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு என்று அவர் கூறுகிறார். "இங்கே 1000 கி.மீ வேகம் ஒருசில வினாடிகளில் எட்டப்படாது. உள்ளே பயணிப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு, படிப்படியாக அந்த வேகம் எட்டப்படும். அதேபோல நிறுத்தும் போது ஒரு குறிப்பிட்ட முறையில் வேகம் குறைக்கப்படும். இதனால் உள்ளே இருக்கும் பயணிகள் அதன் அதிர்வுகளை உணர மாட்டார்கள்" என்றும் அவர் கூறுகிறார். மற்றொரு முக்கியமான கேள்வி, ஹைப்பர்லூப் நடைமுறைக்கு வந்தால், அதில் பயணிப்பதற்கான கட்டணம் எவ்வளவு இருக்கும்? சாமானிய மக்களால் பயணிக்க முடியுமா? "நிச்சயமாக முடியும். கட்டணம் குறித்த முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால், ரயில் பயணத்திற்கு இணையான கட்டணத்தை நிர்ணயிப்பதே இலக்கு" என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி. சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் எவ்வாறு தொடங்கியது? அது ஏன் அவசியம்?8 மார்ச் 2025 பெண்கள் இதுவரை எத்தனை நாடுகளில் ஆட்சிக்கு தலைமையேற்றுள்ளனர்?8 மார்ச் 2025 உலகில் இதற்கு முன் செய்யப்பட்ட ஹைப்பர்லூப் சோதனைகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வில்லியம் ஹீத் என்ற ஓவியரால், 1829இல் வரையப்பட்ட ஓவியம் ஹைப்பர்லூப் என்ற பெயரில் ஒரு தொழில்நுட்பத்தை முதலில் முன்மொழிந்தவர் ஈலோன் மஸ்க் தான் என்றாலும், ஒரு குழாய் வழியாக மக்கள் பயணிப்பது என்ற யோசனை மிகவும் பழமையானது. வில்லியம் ஹீத் என்ற ஓவியரால், 1829-இல் வரையப்பட்ட ஓவியம் ஒன்று, வங்கத்தில் இருந்து (இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டிருந்த போது) லண்டனுக்கு ஹைப்பர்லூப் போன்ற ஒரு அமைப்பில் மக்கள் பயணம் செய்வதைச் சித்தரித்தது. ஆனால் அது, எதிர்காலத்தில் இத்தகைய போக்குவரத்து அமைப்புகள் இருக்கலாம் என்ற யோசனையை பகடி செய்து, கற்பனையின் அடிப்படையில் வரையப்பட்ட ஒரு ஓவியமே. 2013இல் ஈலோன் மஸ்க் வெளியிட்ட 'ஹைப்பர்லூப் ஆல்பா' ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அவரது 'தி போரிங் கம்பெனி' என்ற நிறுவனம் ஹைப்பர்லூப் சோதனையில் ஈடுபட்டது. இதற்காக 2016இல், கலிபோர்னியாவில் அந்நிறுவனம் 1287 மீட்டருக்கு ஒரு சோதனை ட்ராக்கையும் வடிவமைத்தது. சில சோதனைகள் நடைபெற்று, ஹைப்பர்லூப் பாட்கள் மணிக்கு 463 கிமீ என்ற வேகத்தை எட்டின என்று அந்நிறுவனத்தின் இணையதளம் கூறுகிறது. ஆனால், தற்போது வரை அதன் ஹைப்பர்லூப் நடைமுறைக்கு வரவில்லை. நகரங்களில் ஹைப்பர்லூப் அமைப்பை கொண்டுவருவதற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அதன் இணையதளம் கூறுகிறது. இந்திய விடுதலைக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் இங்கே அமலில் இருந்த 'முண்டச்சி வரி' பற்றி தெரியுமா?8 மார்ச் 2025 இளையராஜா இன்று வெளியிடும் சிம்ஃபொனியின் பின்னணி என்ன? 5 கேள்விகளும் பதில்களும்8 மார்ச் 2025 பட மூலாதாரம்,Virginhyperloop படக்குறிப்பு,'ஹைப்பர்லூப் ஒன்' நிறுவனத்தின் ஹைப்பர்லூப் பாட் அதிகபட்சமாக மணிக்கு 172 கிமீ என்ற வேகத்தையே எட்டியது இந்தியாவில் ஹைப்பர்லூப் எப்போது சாத்தியம்? 2020இல் 'ஹைப்பர்லூப் ஒன்' எனும் நிறுவனம் (2022 வரை விர்ஜின் ஹைப்பர்லூப் என்ற பெயரில் இயங்கியது), தனது இரு ஊழியர்களை பயணிகளாகக் கொண்டு, உலகின் முதல் ஹைப்பர்லூப் சோதனையை நடத்தியது. அமெரிக்காவின், நெவெடா பாலைவனத்தில் இதற்காக அமைக்கப்பட்ட பிரேத்யேக 500 மீட்டர் நீள பாதையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் 'ஹைப்பர்லூப் ஒன்' நிறுவனத்தின் ஹைப்பர்லூப் பாட் அதிகபட்சமாக மணிக்கு 172 கிமீ என்ற வேகத்தையே எட்டியது. ஆனாலும், ஹைப்பர்லூப் போக்குவரத்து, உலகின் அதிவேக மாக்லேவ் ரயில்களை விட 10 மடங்கு அதிக செயல்திறன் கொண்டது என அந்த நிறுவனம் கூறியது. அதன் பின்னர் 2022இல் பயணிகளுக்காக அல்லாமல், ஹைப்பர்லூப் மூலம் பொருட்களை (Cargo) கொண்டுசெல்வதில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக அந்நிறுவனம் அறிவித்தது. பிறகு, 2023 டிசம்பரில் பல்வேறு காரணங்களுக்காக 'ஹைப்பர்லூப் ஒன்' நிறுவனம் மூடப்பட்டது. ஹைப்பர்லூப் போக்குவரத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதில் பல சிக்கல்கள் இருக்கும் நிலையில், அதை இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து மெட்ராஸ் ஐஐடி-யின் குழு சாதித்தால், உலக அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் அது அவ்வளவு எளிதல்ல என்பதையும் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி ஒப்புக்கொள்கிறார். "இன்னும் சோதனை கட்டத்தில் தான் இருக்கிறோம். எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்தியா தனது முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து அமைப்பைப் பெறும்," என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c93k0wll19po
  43. SK Vlog என்கிற அறமும், மனித நாகரீகமும் கிஞ்சித்துமில்லாத ஒரு மனப்பிறழ்வடைந்த ஆணை யூடியூப்பில் 197K தமிழர்கள் follow பண்ணுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் சராசரியாக 25k பார்வை கிடைக்கிறது. அதன் அர்த்தம் ஆகக்குறைந்தது ஐயாயிரம் பேராவது இந்த வகை ‘வக்கிரக’ வீடியோக்களை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். அதிலும் சராசரியாக ஆயிரம் பேர் இதெல்லாம் பிரமாதம் என்று லைக் இடுகிறார்கள். ஆதலால், இங்கு மனப்பிறழ்வு ஒருவருக்கல்ல! நம்முடைய பாதிச் சமூகம் இப்படித்தானிருக்கிறது. இவருடைய அத்தனை வீடியோக்களின் கென்டன்ட், வறியவர்களுக்கு உதவி செய்தல். இப்படி உதவி செய்வதன் மூலம் இலகுவாக பரபல்யம் அடைதல். அந்த பிரபல்யத்தால் தலைக்குள் ஏறும் கனத்தில் இப்படி அயோக்கிய அதிகாரம் பண்ணுதல். இதுதான் இவர்களுடைய பிழைப்பு. இந்த உதவிகளுக்குரிய மொத்த பணத்தையும் லட்சக் கணக்கில் வெளிநாட்டிலிருக்கும் தமிழர்களே தாரைவார்க்கிறார்கள். அப்படி அனுப்பும் பெருந்தகைகள் கணக்குக் கேட்பதுமில்லை, அது எப்படி வறியவர்களின் தன்மானத்தையும், சுயகெளரவத்தையும் அழித்தொழிக்கிறது என்பது மட்டில் அக்கறைகொள்வதுமில்லை. ஆக இந்த அயோக்கிய யூடியூப்பர் போன்றவர்களின் பிரபல்யம் என்பதும், அதனால் வெளிப்படும் அடாவடித்தனம், அயோக்கியத்தனம் என்பதும் ஆயிரக்கணக்கான தமிழர்களால் கொடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான சமூகப் பொறுப்பற்ற, accountability to affected victims என்கிற ஒன்று கிஞ்சித்தும் இல்லாத புலம்பெயர் தமிழ் தனவந்தர்களால் கொடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு அறிவு மயிர் வரும்வரை, இந்த நச்சுப் புழுக்களை இங்கிருந்து ஒருபோதும் நசுக்கித்தள்ள முடியாது. நன்றி - https://www.facebook.com/share/p/1ZifUXekXu/?mibextid=wwXIfr டிப்பர்ல பாவம் அப்பாவிகள் எவன் எவனோல்லாம் அடிபட்டு சாகிறான்... இவனும் அதே ரோட்ல தான் போய் வாறான்... ஒரு கேடு வருதில்லையே..👇 https://www.facebook.com/share/v/168fX8nFdu/?mibextid=wwXIfr

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.