Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    14
    Points
    46783
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20010
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87988
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3052
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/21/25 in all areas

  1. புட்டின் :- ஹலோ! குட் ஈவினிங் மிஸ்டர் பிரசிடன்ட் ரம்ப்.🙂 ரம்ப் :- ஹாய் ஹலோ மச்சான் புட்டின்...😎 புட்டின் :-கண்டு கனகாலம் எப்பிடி சுகம்? ரம்ப் :- என்ரை சுகத்தை சீச்சி என் என் டெய்லி சொல்லிக்கொண்டு தானே இருக்குது...பாக்கேல்லையோ. புட்டின் :-நான் அந்தப்பக்கம் போறதுமில்லை...போய் விளங்கப்போறதுமில்லை ரம்ப் :- அது கிடக்கட்டும் உவன் செலென்ஸ்கிய என்ன செய்யலாம்.. புட்டின் :- அது நீ முதலே விட்ட பிழை மச்சான். ரம்ப் :- என்னப்பா சொல்லுறாய்.அவனை உன்ரை பொறுப்பிலையெல்லே விட்டனான் புட்டின் :- அவனை என்ர பொறுப்பிலை விட்டாய் மச்சான்.... ஆனால் உவங்கள் அதுதான் உன்ரை ஆக்கள் ஐரோப்பிய ஒன்றியம் எண்ட கூத்தாடியள் பெரிய கரைச்சல் குடுத்துக்கொண்டெல்லே இருக்கிறாங்கள். ரம்ப் :- அவங்கள விடு....அவங்கள அடக்க எனக்கு ஒரு செக்கண்ட் காணும் கண்டியோ புட்டின் :- மச்சான் அவங்கள அடக்க ஒரு செக்கண்ட்....எனக்கு அதுவே கூட.. ரம்ப் :- எனக்கு தெரியும் எனக்கு தெரியும் எங்கை வாறாய் எண்டு புட்டின் :- இப்ப நான் சொல்ல வாறது என்னெண்டால்... ரம்ப் :- செலென்ஸ்கி...அவன் ரொம்ப தொல்லை குடுக்கிறான்.ரெஞ்சன் ஆக்குறான்....கெப்பர் காட்டுறான் அவ்வளவு தானே...? புட்டின் :- சீச்சீ செலென்ஸ்கி எனக்கு பிள்ளையார்ர எலி மாதிரி.... ரம்ப் :- அப்ப பிள்ளையார் ஆரப்பா? புட்டின் :-ஜேர்மனி....ஜெர்மானியா ரம்ப் :- மச்சான் புட்டின் உந்த ஜேர்மனி விசயத்திலை நீயும் நானும் ஒண்டுக்கை ஒண்டு புட்டின் :- அவங்கள் என்ரை அடி மடியிலை கை வைச்சிட்டாங்கள் ரம்ப் :- ஓமோம் தெரியும்....தெரியும் புட்டின் :- மச்சான் ரம்ப் நீயும் அதுக்கு ஒரு குற்றவாளி....அதை நினைச்சு எனக்கு சரியான கவலை கண்டியோ.. ரம்ப் :- அது...அது... நீயும் அந்த ரைம்மில கொஞ்சம் ஓவராய் போனாய்.....நானும் என்ர சனத்துக்கு பில்டப் காட்டேணுமெல்லோ? புட்டின் :- சரி இப்ப விடு...இதைப்பற்றி பிறகு கதைப்பம்.. ரம்ப் :- அது சரி இப்ப என்ன கோதாரிக்கு ரெலிபோன் எடுத்தனி? புட்டின் :- ஜேர்மனி எண்டால் எனக்கு ரத்தம் கொதிக்குது ரம்ப் : என்ர உடம்பிலை ஜேர்மன் இரத்தம் தான் ஓடுது....எனக்கும் கொதிக்குது புட்டின் :எனக்கு ஆதரவாய் அங்கை அஞ்சாறு சனமாவது இருக்குது...உனக்கு? ரம்ப் : எனக்கும் இருக்குது பேரை சொல்லவா மிஸ்டர் புடின்? தொடரவோ தொந்தரவோ? 😂
  2. யாழ் மாநகரசபையில் பலம் கொண்ட சங்கு கூட்டணி, மான் மணிவண்ணன், மற்றும் சுயேட்சைக்குழு அர்ச்சுனா ஊசி மற்றும் சில நிராகரிப்பு (அதைவிட வேறு வேறு சபைகளுக்கான பல வேட்பு மனுக்கள் உட்பட) இவர்களின் நிராகரிப்பு தமிழரசு கட்சிக்கு ஒரு சிறிய உந்துகோலாக அமைந்து அவர்களின் வாக்குக்கள் அதிகரிக்கும் என சுமந்திரனும் அதேபோல NPP யும் தங்கள் பக்கம் ஒரு காற்று வீசும் எனவும் நினைக்கின்றனர் ஆகவே அர்ச்சுனா தனது ஆதரவாளர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு அளிக்கும்படி கூறியது தகமிழ் மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது
  3. இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம் இறை நம்பிக்கை என்பதே இளம் பிராயத்தில் இருந்து செய்யப்பட்ட மூளைச்சலவை என்பதும், அதனால் அதுவும் ஒரு குருட்டு நம்பிக்கை என்பதுமே பெரும்பான்மை இறை மறுப்பாளர்களின் கருத்தாக இருப்பினும் அவர்கள் அக்கருத்தை அத்துணை ஆணித்தரமாக சமூகத்தில் வெளிப்படுத்துவதில்லை. எந்த சமூகத்திலும் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கையுடையவராய் இருப்பதும், அம்மக்கட் பணியே தம் பணி எனக் கொண்டதும் அதற்குக் காரணமாய் இருக்கலாம். ஆனால் இறை நம்பிக்கை எல்லை கடந்து மூடநம்பிக்கையாய் உருவெடுக்கும்போது இறை மறுப்பாளர் மட்டுமல்லாமல் இறை நம்பிக்கை கொண்டோரிலும் பகுத்தறிவாளர் தமது எதிர்க் குரலை ஆங்காங்கே பதிவு செய்வது உண்டு. மூடநம்பிக்கைகள் அங்கிங்கெனாதபடி எங்கும், எந்த மதத்திலும் ஊடுருவி இருக்கக் காணலாம். தற்காலத்தில் கூட எங்காவது நடைபெற்றுச் செய்தியாகி விடுகிற நரபலியும், பெற்ற குழந்தையை நொடிப்பொழுதேனும் மண்ணில் புதைத்து எடுக்கிற கோரமும், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்து ரத்தம் வடிவதும் நாம் மண் சார்ந்ததாய்க் கொண்டாடும் நாட்டார் தெய்வங்களின் மீது ஏற்றப்பட்ட வன்முறை. தொன்மையான தமிழ் நாகரிகம் மற்றும் கிரேக்க நாகரிகக் காலந் தொட்டு இவை நிலவி வந்திருக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் இதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லையாயினும், குறுந்தொகை போன்ற அக இலக்கியங்களில் தோன்றும் கட்டுவிச்சிகளும் (குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த குறி சொல்பவள்) கணியன்களும் நம்பிக்கைகளுக்கான மெல்லிய ஆதாரங்கள். அவையனைத்தும் இறை நம்பிக்கை சார்ந்தே தோன்றின என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக, குறுந்தொகை 23 இல் " அகவன் மகளே! அகவன் மகளே! மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே! பாடுக பாட்டே; இன்னும் பாடுக பாட்டே! அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!" (குறுந்தொகை 23) என்று தலைவியின் தோழி குறி சொல்லும் கட்டுவிச்சியிடம் இப்பாடல் மூலமாகச் சொல்லும் செய்தியிலும், அது தரும் இலக்கிய இன்பத்திலும் மூழ்கித் திளைத்துப் பாடல் தெரிவிக்கும் மூடநம்பிக்கையை நாம் எளிதில் கடந்து விடுவதுண்டு. இங்கு ஒரு மண் சார்ந்த மூடநம்பிக்கையாக வெளிப்படுகிறதே தவிர இறை சார்ந்ததாய் வெளிப்படவில்லை. மேலும், இது இன்றளவும் தொடரும் நம்பிக்கையே ! இருப்பினும் இயற்கை குறித்தும் வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும் தோன்றிய பயத்தில் பிறந்த இறை நம்பிக்கை பெரும்பாலும் மூடநம்பிக்கையின்பால் இட்டுச்செல்லும் என்பது சமயம், காலம், தேசம் எனும் எல்லைகள் தாண்டியது. தலைவனின் பிரிவாற்றாமையினால் வாடி உடல் மெலிந்திரங்கும் தலைவியின் நிலை பற்றிக் கேட்க வேலன் வெறியாட்டில் குறி கேட்கச் செல்லும் தாயினைப் பற்றி குறுந்தொகை 111 இல் காணலாம். வேலனாக வெறியாடும் குறி சொல்லும் கலைஞன் தலைவியின் வருத்தம் சேயோன் ஆகிய முருகனின் செயல் என்று அளந்து விடுவதும், அதனைத் தாயானவள் நம்புவதும் "பெரும் வேடிக்கை" என்று கூறித் தோழியானவள், "அவ்வேடிக்கை காணத் தலைவன் வருவானாக !" என்று தலைவியிடம் கூறுகிறாள். அன்று சமூகத்தில் நிலவிய அந்தக் குருட்டு நம்பிக்கையைப் புலவர் தீன்மதி நாகனார், போகிற போக்கில், வேடிக்கை (பெருநகை) என்றது நமக்கான ஆறுதல். "மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் அதுவென உணரும் ஆயின் ஆயிடைக் கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன கேழிருந் துறுகற் கெழுமலை நாடன் வல்லே வருக தோழிநம் இல்லோர் பெருநகை காணிய சிறிதே". (குறுந்தொகை 111) பேய் பூதங்கள் பற்றிய பயமும் நம்பிக்கையும் கல் தோன்றி மண் தோன்றாக் காலந் தொட்டே வழங்கி வருவது போலும் ! சங்கப் புலவர்களில் பேயனார், பேய்மகள் இளவெயினி, பக்தி இலக்கியங்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்று சான்றோர் தம் பெயர்களே வழங்கி வந்தமை இதற்கான சான்று. "......................வானத்து வயங்குபன் மீனினும் வாழியர் பலஎன உருகெழு பேய்மகள்" (புறநானூறு 371) என்ற பாடலைப் பாடிய கல்லாடனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்திப் பேய் மகளிர் குரவைக் கூத்தாடுவதாகப் பதிவு செய்கிறார். இத்தனை மூட நம்பிக்கைகள் நிலவிய போதும் நரபலி போன்ற கொடூரமான பதிவுகள் சங்க இலக்கியங்களில் அநேகமாகக் காணப்படவில்லை எனலாம். எனவே அவை அறிவார்ந்த மக்களால் தமிழ்ச் சமூகத்தில் அப்பொழுதும் ஏற்கப்படவில்லை என்றே கொள்ளலாம். பண்டைய கிரேக்க நாகரிகத்தின் வழக்கத்துடன் இது குறித்து நோக்கத்தக்கது. அங்கே அவர்களது கடவுள்களை அமைதிப்படுத்த கொடூரக் கொலைகள் நிகழ்த்துவது அவர்களது இலக்கியங்களில் காணக் கிடைப்பது. எடுத்துக்காட்டாக, கி.மு. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கணிக்கப்படும் ஹோமரின் 'தி இலியட்' எனும் கிரேக்கக் காவியம் கி.மு. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ட்ரோஜான் போர் பற்றியது; அதில் வரும் அகமேம்னன் (Agamemnon) எனும் மைசீனிய (Mycenae) நாட்டு அரசன் ஆர்டிமிசு (Artemis) எனும் தேவதையை அமைதிப்படுத்தத் தன் மகள் இஃபிஜீனியாவைத் (Iphigeneia) தன் கையாலையே பலி கொடுக்கும் கொடுமை அரங்கேறுகிறது. ட்ரோஜான் போருக்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைப்பதால், அப்போரினை அடிப்படையாய்க் கொண்ட கதையாகவே இருப்பினும் அத்தகைய வழக்கங்கள் அச்சமூகத்தில் நிலவியது சுட்டப் பெறுகிறது எனலாம். அதுபோலவே இப்ராஹீம் நபிகள் தமது மைந்தரான இஸ்மாயிலை இறைவனுக்குப் பலியிடத் துணிந்தபோது இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு, "ஆட்டினைப் பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றுக" எனப் பணிக்கப்பட்டார்; இந்நிகழ்வே பக்ரீத் விழாவாகக் கொண்டாடப்படுகிறது என்பதை அறிவோம். இந்நிகழ்வு விவிலியத்திலும் (பழைய ஏற்பாடு) பேசப்படுகிறது - சிறிய மாற்றத்துடன்; ஆபிரகாம் ஆகிய இப்ராஹிம் பலியிடத் துணிந்தது தமது மற்றொரு மகனாகிய ஈசாக்கை எனும் மாற்றத்துடன். அவலம் என்னவோ மாறவில்லை. இத்தகைய கொடிய கூத்துகளில் தமிழ்ச் சமூகம் தாமதமான போதிலும் சோடை போகவில்லை என்பதை ஏறக்குறைய கிபி 12ம் நூற்றாண்டைச் சார்ந்த பெரியபுராணம் பெருமிதத்துடன் (!!!) பதிவிடுகிறது. இதனைச் சற்று விரிவாகச் சொல்லுவதில் இக்கட்டுரை (வெட்கமின்றி) முழுமை பெறும் என்று நம்புகிறேன். நாம் பெரிய புராணத்தில் முதலில் கையிலெடுப்பது சிவனடியார் பரஞ்சோதியார் எனும் சிறுத்தொண்டர் நாயனார் புராணம். சிவனடியார் தொண்டே சிவத்தொண்டு என வாழும் சிறுத்தொண்டரின் பக்தித்திறம் சோதித்திட இறைவனே கயிலாயத்தினின்றும் இறங்கி சிவனடியார் வேடத்தில் 'வைரவர்' எனும் பெயருடன் சிறுத்தொண்டரின் ஊரான திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளுகின்றார். அன்று அமுது செய்விக்க (விருந்தளிக்க) சிவனடியார் எவரையும் காணாமல் வாடி நின்ற சிறுத்தொண்டர், சிவனடியாரான வைரவர் வரவறிந்து இறும்பூதெய்து கணபதீச்சரத்தில் திருவத்தியின் (அத்தி மரத்தின்) கீழ் அமர்ந்திருந்த வைரவரை அமுது செய்யத் தம் இல்லத்திற்கு அழைக்கின்றார். அப்போது தமது நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிறுத்தொண்டரால் தமக்கு அமுது படைக்க முடியுமா எனும் ஐயப்பாட்டை வெளிப்படுத்துகிறார் வைரவர். எந்த நிபந்தனையையும் தம்மால் நிறைவேற்ற முடியும் என்று உறுதியளித்துக் கேட்கிறார் சிறுத்தொண்டர். அந்த நிபந்தனைகளை எண்ணிப் பார்க்கவே நமது உடலும் உள்ளமும் பதறும்போது, அவற்றை மொழிவது மட்டுமின்றி அது நிறைவேற்றப்படும் காட்சியை வெகு சாதாரணமாக ரசனையுடன் சேக்கிழார் பாடிச் செல்வது பேரதிர்ச்சி, பேரவலம் ! அதனைக் கேட்டுச் சிறிதும் மனச்சலனமின்றி மகிழ்வோடு ஏற்று, தம் மனைவியிடம் பகிர்கின்றார் சிறுத்தொண்டர் : "வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர்தாம் உள்ளம் மகிழ அமுதுசெய இசைத்தார் குடிக்கு ஓர்சிறுவனும்ஆய்க் கொள்ளும் பிராயம் ஐந்து உள்ளால் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் பிள்ளைபிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்கப்பெறின் என்றார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 54) பொருள் : வள்ளலார் ஆகிய சிறுத்தொண்டர் தம் மனையாளாகிய திருவெண்காட்டு நங்கையை நோக்கி, "(தாய் தந்தைக்கு) ஒரே மகனாய்ப் பிறந்து எவ்வித உறுப்புக் குறைபாடுமின்றி உள்ள ஐந்து வயது சிறுவனைத் தாய் பிடித்துக் கொள்ள மகிழ்வோடு தந்தை அரிந்து (வெட்டி) சமைக்கப் பெற்றால் உள்ளம் மகிழ்ந்து திருவமுது செய்ய மாதவராகிய வைரவர் இசைந்தார்" என்றார். அடுத்து அக்கொடுமை அரங்கேறுகிறது. எந்த ஒரு உணர்ச்சியும் மிதமிஞ்சிப் போகும்போது மூளைச்சலவை முழுமை பெற்றது என்றே பொருள். கம்பனுக்கு நிகரான கவித்துவம் பெற்ற சேக்கிழார் முதல் சாமானிய இறைப்பற்றாளன் வரை யாரும் இதற்கு விதிவிலக்கில்லை : "இனிய மழலைக் கிண்கிண்கால் இரண்டும் மடியின் புடைஇடுக்கிக் கனிவாய் மைந்தன் கையிரண்டும் கையால் பிடிக்கக் காதலனும் நனிநீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகைசெய்யத் தனி மாமகனைத் தாதையார் கருவி கொடுதலை அரிவார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 63) பொருள் : இனிய மழலையை இசைக்கும் கிண்கிணியை அணிந்த கால்கள் இரண்டினையும் தாயானவள் (!) தன் மடியின் இடையே இடுக்கி, இனிமையான கனி போன்ற வாயுடைய மைந்தனின் கைகள் இரண்டையும் தன் கையால் பிடித்துக் கொள்ள காதற் கணவனும் (சிறுவனின் தந்தை) பெரிதும் உவகை கொண்டார் என ஒப்பற்ற அந்த மகனும் மகிழ்ந்து சிரிக்க, தந்தையானவர் கருவி கொண்டு மகனின் தலையை அரிகின்றார். அக்குரூரத்தை மேலும் வருணிக்கும் அளவு பக்தி முத்திப்போயிற்று : "அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது எனக்கழித்து மன்றத்து நீக்கச் சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு முளை திறத்திட்டுக் கறிக்கு வேண்டும் பலகாயம் அரைத்துக் கூட்டிக்கடிது அமைப்பார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 65) பொருள் : அறுத்த தலையின் இறைச்சி சிவனடியார்க்குப் படைக்கும் திரு அமுதுக்கு ஆகாது எனக் கழித்து அதனை ஒதுக்கும் பொருட்டு சந்தனத்தாரது (சிறுத்தொண்டரது) கையில் கொடுத்து மற்ற உடல் உறுப்புகளின் இறைச்சியைக் கொத்தி அறுத்து எலும்பினைச் சுற்றியுள்ள தசையினைத் திறந்து கறிக்காக இட்டு அக்கறிக்கு வேண்டிய பொருட்களை அரைத்துக் கூட்டி (அத்தாயானவள் !!!) விரைவாக உணவைத் தயாரிக்கிறாள். இறுதியில் இறைவன் சிறுத்தொண்டரையும் அவரது இல்லாள் திருவெண்காட்டு நங்கையையும் ஆட்கொண்டு அவர்களது மகவான சீராளனை மீண்டும் அருளினார் என்ற கதையெல்லாம் ஒரு புறம். சிவனடியார்களிடம், அதன் மூலமாக சிவபெருமானிடம், சிறுத்தொண்டர் கொண்ட நேயம் மற்றும் அர்ப்பணிப்புக்கான சோதனையில் அவர் வென்றிருக்கலாம். ஆனால் இத்தகைய எல்லை தாண்டிய உணர்வு கொண்டாடப்படும்போது, சமூகம் எல்லை தாண்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும். மூடநம்பிக்கையினால் நரபலிகள் நியாயப்படுத்தப்படும். சங்க இலக்கியங்களில் இவை குறிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நமக்குத் தெரிந்த அல்லது கேள்விப்பட்ட பழங்காலத்தில் போருக்குச் செல்லும் முன் போர்த் தெய்வங்களுக்கு (War Deities) நரபலி தரும் வழக்கம், பலியாகும் வீரன் அதனை வீரத்தின் அடையாளமாக மனமுவந்து ஏற்றுக் கொண்ட கொடூரம் பற்றிய நாட்டுப்புறக் கதைகள் நம் காதுகளில் ஈயமாகக் காய்ச்சி விடப்பட்டிருக்கின்றனவே ! இவை கல்லாத சாமானியரின் வழக்கங்கள் என்று ஒதுக்குவதற்கு இல்லை. பெரிய புராணத்தில் சுட்டப்பெறும் அடியார்களும், அவர்களைக் கொண்டாடும் சேக்கிழார் பெருமானாரும், இப்ராஹிம் அல்லது ஆபிரகாம் வரலாறு சொன்னவர்களும் அந்தந்தக் காலத்தின் சான்றோர் பெருமக்கள்தாமே ! இவர்களால் வழிநடத்தப்படும் சாமானியர் எப்படி சான்றோராய் வளர முடியும் ? மதம் எப்படியெல்லாம் மதி மயங்கச் செய்யும் என்பதற்கு மேலும் ஒரு சான்று பெரிய புராணத்தின் இயற்பகை நாயனார் புராணத்தில் காணக் கிடைக்கிறது. மீண்டும் பெரிய புராணந்தானா ? கம்பனில் சம்பூக வதம் போன்ற பிற்போக்குத்தனங்கள் உண்டே ! அது வடக்கில் இருந்து வந்த கதை என்று புறந்தள்ளப் படலாம். பெரிய புராணத்தைப் புறந் தள்ளுவதற்கில்லையே ! உலகின் இயற்கையைப் (நடைமுறையை) பகையாக்கிக் கொண்டமையால் இயற்பகை நாயனார் என்று வழங்கப்படுகிறார். பூம்புகார் நகரத்தின் வணிகர் குலத்தில் பெருஞ்செல்வந்தராய் வாழ்ந்தவர். தம்மை நாடி வந்த சிவனடியார் வேண்டியவை எவையாயினும் இல்லையெனக் கூறா இயல்புடையார். அவரது பக்தியின் திறன் உலகிற்குக் காட்டும் பொருட்டு திருச்சிற்றம்பலத்தில் ஆடும் சிவனார், அடியார் வேடம் பூண்டு நாயனார்தம் இல்லத்திற்கு வருகிறார். "முந்தை எம்பெருந் தவத்தினால் முனிவர் இங்கு எழுந்தருளியது" (இயற்கை நாயனார் புராணம்; பாடல் 5) "என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்றஅக் கைதவ மறையோர் கொன்றைவார் சடையர் அடியார்கள் குறித்து வேண்டிய குணம் எனக்கொண்ட ஒன்றும்நீர் எதிர்மாறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டுநும்பால் ஒன்று வேண்டி இன்றுநான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையல் ஆம்எனில் இயம்பல் ஆம்என்றான்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 6) பொருள் : முற்பிறவியில் யான் செய்த பெருந்தவத்தினால் முனிவர் தாம் இங்கு எழுந்தருளினீர்கள் என்று கூறிய இயற்பகையார் முன் கீழ்மைத்தன்மை உடைய மறையோராய் வேடமேற்று வந்த கொன்றை மலர் சூடிய சடையரான சிவபெருமான், "அடியார்கள் தாங்கள் உம்மிடம் வேண்டியவற்றை நீவிர் நற்குணம் பொருந்தியவை என ஏற்று (அவை நற்குணம் பொருந்தாமல் இருப்பினும்), மறுக்காமல் மகிழ்ந்து அளிக்கும் உண்மையினைக் கேட்டு உம்மிடம் ஒன்று வேண்டி இங்கு யான் வந்தேன். அதற்கு நீவிர் இசைவீர் எனில் யான் இயம்புவேன்" என்று கூறுகிறார். இங்கு முனிவர் பாதகம் ஏதோ இயற்ற வந்தார் என்பதைத் தற்குறிப்பாகச் சொல்ல நினைத்த சேக்கிழார் அவரைக் 'கைதவ மறையோர்' (கீழ்மைத் தன்மை கொண்ட மறையோர்) எனக் குறித்தமை தெளிவு. நடைபெறப் போகும் குற்றத்தைக் கொண்டாடுவதில் சேக்கிழார்க்குப் பங்கில்லை என்பது நமக்கான ஆறுதல். "என்ன அவ்வுரைகேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும்என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயமில்லை நீர்அருள் செயும் என்ன மன்னு காதல்உன் மனைவியை வேண்டி வந்தது இங்குஎன அந்தணர் எதிரே சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 7) பொருள் : முனிவர்தம் உரையைக் கேட்டு இயற்பகையார், "அஃது என்னிடத்தில் இருக்குமானால், அது எம்பிரான் (சிவனார்) அடியவர்க்கு உரிமையானது. எவ்வித ஐயமுமின்றி தயங்காது கேட்டு அருள் செய்க" என்கிறார். அதற்கு அம்மறையோர், "நின்பால் நிலை பெற்ற காதல் கொண்ட நும் மனைவியை எனக்கு வேண்டிப் பெற வந்தேன்" என்று சொல்ல, அதைக் கேட்டு முன்னைவிட மகிழ்ந்து இயற்பகை நாயனார் சொல்ல ஆரம்பித்தார். "இது எனக்குமுன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறுஎனக்கு" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் எட்டு) பொருள் : "என்னிடம் முன்பே உள்ள பொருளைத் தாங்கள் கேட்டது எனக்கான பேறு" என்கிறார் நாயனார். இந்தக் கருமத்தை எங்கே போய்ச் சொல்ல ? அது மகாபாரத யுகம் போல பெண் பலதார மணமுறை (polyandry) நிலவும் சமூகமல்ல. கற்பின் திறம் பேசும் சமூகத்தில் இத்தகைய வெட்கக்கேடு நிகழ்வது பக்தி முற்றி மனம் பேதலித்தமை அன்றி வேறென்ன ? மேலும் அவர்தம் இல்லாளும் கணவனின் இறைப்பணியில் தன் பங்கு ஈதென்று மாறுபாடின்றி ஏற்றுக் கொள்கிறாள். இக்கேவலம் இத்தோடு நிற்கவில்லை. இருவழி சுற்றத்தாரும் (கணவன், மனைவி தரப்பினர்) இந்த மதியீனத்திற்கு எதிராகக் கிளர்ந்து எழுகின்றனர். இயற்பகை நாயனார் அவர்களுடன் போரிட்டு அவர்களை வெட்டிச் சாய்ப்பதாய்க் கதை தொடர்கிறது. "சென்று அவர் தடுத்தபோதில் இயற்பகையார் முன் சீறி வன்துணை வாளே ஆகச் சாரிகை மாறி வந்து துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து வென்றுஅடு புலிஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 21) பொருள் : சுற்றத்தார் வந்து தடுக்கையில் இயற்பகையார் சினமுற்று முன்வந்து வாளையே பெருந்துணையாகக் கொண்டு சுற்றத்தினரை மாறி மாறிச் சுற்றி வந்து அவர்களது தோள்களையும் கால்களையும் தலைகளையும் வெட்டிச்சாய்த்து, எதனையும் கொல்லும் திறன் கொண்ட ஆண் புலியைப் போல் அப்போர் ஆட்டத்தில் ஈடுபட்டார். இறுதியில் இறையனார் இயற்பகையாருக்குக் காட்சி தந்து அவர்தம் துணையொடு வாழ்வாங்கு வாழவைத்து, அவர்தம் சுற்றத்தாரையும் உய்வித்த கதையெல்லாம் 'சுபம்' எனும் நிறைவுத் திரைக்கானது. நமது கட்டுரைக்கான நிறைவுத் திரையை இப்படி அமைப்போமா ? - எந்த மதமானாலும் நிறைவான வாழ்க்கைக்கு வழிகோலுவதாகத்தானே அமைய முடியும் ! குறைபட்ட இறையமைப்பு வாழ்வில் நிறை தருமா ?
  4. பம்மாத்து (Pretensions) - சுப.சோமசுந்தரம் உலகில் பம்மாத்து அல்லது பாசாங்கிற்கு எக்காலத்தும் பஞ்சம் இருந்ததில்லை. இவற்றில் நன்மை விளையும் பம்மாத்தும் உண்டு - பொய்மையும் வாய்மையிடத்த என்பது போல. யானறிந்து தமிழ்நாட்டிற்கு நன்மை விளைவித்த ஒரு தலைசிறந்த பம்மாத்து, நான் பெரிதும் போற்றும் அறிஞர் அண்ணா அவர்கள் திருமூலரை எடுத்தாண்டு "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பறைசாற்றியது. சமூகத்திற்காகப் போராடுவதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட திராவிடர் கழகத்தில் இயங்கிய அண்ணாவும் அவர்தம் தம்பிமார் சிலரும், மக்களுக்கான திட்டங்களை இயற்றுவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் மட்டுமே கைகூடும் என்ற உயரிய நோக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்துக் களம் கண்டனர். மக்களிடம் தேர்தல் வாக்குக்காக கையேந்தும்போது சமரசம் எனும் தீமைக்குள் வந்துதானே ஆக வேண்டும் ? கையேந்தாத பெரியார், "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்று முழங்கும் போது, கையேந்திய அண்ணா, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பம்மிக் கொண்டார். மக்களுக்காக அதே மக்களிடம் பம்மிக் கொண்டார். அவ்வாறு பம்முகிற ஒவ்வொரு தருணத்திலும், "ஆனால் எனக்குத் தெரியும் அந்த ஒரு தேவனும் கிடையாது" என்று அண்ணா தமக்குள் முணுமுணுத்திருப்பார் என்பதை அண்ணாவை அறிந்தவர் அறிவர். அந்தப் பம்மாத்தில் மக்களுக்கு நன்மைகள் விளைந்தன என்பதை அறிவார்ந்தோர் அறிவர். பெரியார் மற்றும் பெரும்பாலான திராவிட கழகத்தினரைத் தவிர்த்து ஏனைய திராவிட இயக்கங்களிலும், இடதுசாரி இயக்கங்களிலும் நமக்குத் தெரிந்த ஒரு பிம்மாத்து உண்டு; அதாவது, நமக்குப் பம்மாத்தாகத் தோன்றுகிற ஒன்று உண்டு. அது "நாங்கள் பார்ப்பனியத்தை எதிர்க்கிறோமே தவிர பார்ப்பனர்களை அல்ல" என்பதுவேயாம். பார்ப்பனியத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை எதிர்க்கும் பார்ப்பனர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கலாம். விதிவிலக்குகள் விதி யாது என்பதைச் சொல்பவைதாமே ! அவ்விதிவிலக்குகள் பார்ப்பனியத்தை உதறியவர்கள்; எனவே அவர்கள் பார்ப்பனர் அல்லர் என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே ?முடிவு செய்துவிட்டு நியாயங்களைத் தேடிக் கற்பிதம் செய்ய அறிவு ஜீவிகளுக்குச் சொல்லியா தர வேண்டும் ? பெரியார் வேறு எந்த சாதிக்காரர்களையும் விமர்சிக்கவில்லையே ! மேற்கூறியது போலவே திராவிட இயக்கத்தினர் மற்றும் இடதுசாரிகள், "நாங்கள் இந்திய எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பையே எதிர்க்கிறோம்" என்பதுவும். நீங்கள் வேறு எந்த மொழியையும் எதிர்க்கவில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே ! ஆனால் ராஜஸ்தானி, போஜ்புரி, மைதிலி, அவந்தி என்று எத்தனையோ மொழிகளைத் தின்று செரித்து விட்டு, அடுத்து மராத்தி, ஒரியா, பெங்காலி என்று காவு கொள்ளத் துடிக்கும் இந்தியை எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும் ? நமது பம்மாத்து ஜோடிகளில் அடுத்து வருபவை காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளும். தமிழ்நாட்டில் (தமிழகத்தில் என்று நம்மைப் பேச விடாமல், எழுத விடாமல் செய்த ஒரு கிராதகனை என்னவென்று சொல்வது !) இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்த அறுபதுகளில் ஒன்றிய அரசான காங்கிரஸ் பணிந்தது. "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் திகழும்" என்று அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரவாதம் அளித்ததன் பேரிலேயே போராட்டத் தீ அணைந்தது. இடதுசாரிகள் தங்களது அகில இந்திய மாநாடுகளில் மொழி பற்றிய விவாதங்களில், 'தமிழ்நாட்டு மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழி, மற்றபடி இந்தியே இணைப்பு மொழி' என்ற நிலைப்பாடு கொள்வது வழக்கம். "மக்கள் விரும்பும் வரை" என்பதன் பொருள் "நாங்கள் விரும்பவில்லை; என்றாவது ஒரு நாள் நீங்கள் ஏற்பீர்கள். அதுவரை நாங்கள் அடக்கி வாசிப்போம்" என்பதே !. இது ஒரு சூளுரை அல்லது கெக்கலிப்பு. தேசியம் எனும் நீரோடையில் கரைந்து போன கட்சிகளுக்கு இந்தப் பிரச்சினை எப்போதும் உண்டு. அந்நீரோடையில் மூழ்காமல் நீந்தக் கற்றுக் கொண்ட எங்களுக்கு என்ன பிரச்சினை ? காங்கிரஸ் தேசியத்தில் கரைந்தது என்றால், இடதுசாரிகள் ஒரு படி மேலே போய் உலகவியத்தில் கரைந்தவர்கள். நேற்றைய சோவியத் யூனியனில் பெரும்பான்மையின ரஷ்ய மொழியின் தாக்குதலினால் பல சிறுபான்மையின மொழிகள் தொலைந்து போனதை லாவகமாகக் கடந்து வந்தவர்கள் ஆயிற்றே ! அது நமக்குத் தான் ரணம்; வர்க்கப் போராட்டத்தில் அவர்களுக்கு அதெல்லாம் சாதா'ரணம்' தோழர் !தமிழ்நாட்டில் அன்றைக்குப் போராடிய மக்களிடம் காங்கிரசின் சமரசம் என்பது "உங்களுக்கு இனி இந்தி கிடையாது" என்பதாகத்தானே இருக்க முடியும் ? "நீ செத்த பின்பு பார்த்துக் கொள்கிறேன்" என்பது சமரசமா ? மும்மொழித் திட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடு விலக்களிக்கப்பட வேண்டும் என்பதுதானே இடதுசாரிகளின் மண்ணுக்கேற்ற மார்க்சியமாய் அமையும் ? அப்படி விலக்கு அளிக்கப்பட்டாலும் மதவாத , பாசிச பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அடாவடித்தனமாய் ஜம்மு - காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியதைப் போல பின்னர் வரும் அரசுகள் நடந்து கொள்ளா என்பதற்கு உத்திரவாதம் இல்லைதான். ஆனால் சொல்லும்போதே 'தற்காலிகமாக' என்று பொருள்படச் சொல்வது ஒரு பம்மாத்து வேலை. இப்போது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எதிராகத்தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்று பொருள். இப்போது ஒன்றியத்தில் உள்ள பாசிச பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழித் திட்டத்தை முன்வைத்து விட்டு, "மும்மொழித் திட்டம் என்றுதானே சொன்னோம் ? இந்தி படி என்று எங்கே சொன்னோம் ?" என்று சொல்வதுதான் உலக மகா பம்மாத்து. ஒரு திரைப்படத்தில் வருவது போல, "நீ எப்படியெல்லாம் டைப் டைப்பா முழியை மாத்துவே !" என்று எங்களுக்குத் தெரியாதா ? நான் கேரளாவில் வேலை கிடைத்துச் சென்றால், தேவை அடிப்படையில் அப்போது மலையாளம் தெரிந்து கொள்வேன். அதுவரை நான் என் மொழியையும், வெளியுலக இணைப்பு மற்றும் கணினி பயன்பாட்டிற்காக நமது அடிமை வரலாறு நமக்களித்த வரமான ஆங்கிலத்தையும் படிப்பேன். நீ உன் மொழியையும் ஆங்கிலத்தையும் படி. அப்போது மொழியில் கூட சமநீதி, சமூக நீதி எல்லாம் உருவாகுமே ! எனவே உலகீரே ! மக்கள் நலனுக்காக பம்மாத்து அரசியல் செய்ய வேண்டுமென்றால், அறிஞர் அண்ணா போன்றோரிடம் படித்துவிட்டு வாருங்கள். அப்புறம் பேசுவோம். பின் குறிப்பு : "ஒன்றே குலம் ஒருவனே தேவன்", "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பவற்றிற்கு மாற்றுச் சிந்தனையை ச.தமிழ்ச்செல்வன், தொ.பரமசிவன் ஆகியோரிடம் வாசித்த நினைவு. பழம் பாடல்களின் அவ்வரிகள் இன்று தமிழனின் பெருமையாகக் கொண்டாடப்படுவதை அவர்கள் மறுதலிக்கவில்லை. எனினும் அவர்கள் மாற்றுச் சிந்தனையைப் பதிவிடாமலும் விடவில்லை. அந்த அடிப்படையில் அக்காலச் சமூக, அரசியல் சூழல் கருதி மக்கள் நலனுக்காக திருமூலர், கணியன் பூங்குன்றனார் ஆகியோரின் பம்மாத்தாக அவ்வரிகளைப் பார்க்கலாமோ எனத் தோன்றுகிறது. இப்பார்வை நம் கற்பனையாகவே இருக்கலாம். பல நேரங்களில் கற்பனையும் ரசனைக்குரியதுதானே ! பேரரசுகள் மருத நிலங்களைச் சுற்றியே தோன்றியிருக்கும். நிலவுடமைச் சமூகங்களும் அங்கேதான் உருவாகி அமைந்திருக்க முடியும். அவர்களுக்கான உழைக்கும் வர்க்கத்தினர் குறிஞ்சி, முல்லை நிலங்களில் இருந்தே வந்திருப்பர் அல்லது கொண்டு வரப்பட்டிருப்பர். தன் நிலத்தில் தன் சாமியை விட்டு வந்திருப்பவன் கொண்ட ஏக்கம் தீர, "இங்குள்ள சாமியும் உன் சாமிதானய்யா" என்று அவனை ஆற்றுப்படுத்துவதே "ஒன்றே குலம் ஒருவனே தேவ"னாய் முகிழ்த்திருக்கலாம். அன்றைய தேவைக்கேற்ப, பன்முகத்தன்மையை உடைத்து ஓர்மையை உருவாக்கும் பம்மாத்தாக (அன்றைய பாசிசம் எனக் கொள்ளலாமா ?") இதனைப் பார்க்கலாமோ ! மேலும் அவனது நிலத்தில் சாமியின் அருகிலிருந்து பிடி மண் எடுத்து வந்து அவன் புலம்பெயர்ந்த இடத்தில் அதே சாமியை உருவாக்கும் வழக்கம் அப்போது உருவாகியிருக்கும் அல்லது உருவாக்கப்பட்டிருக்கும். அதேபோல் வந்த இடத்துடன் அவன் மனம் ஒன்றியிருக்கச் செய்ய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" !
  5. கனடாவென்று பொத்தாம் பொதுவாக போட்டுவிட்டு ...எலி ஓடித்தப்பலாம் என்று நினைக்குது போல.... புலி இங்கை பார்த்துகிட்டுத்தான் நிக்குது எலியைப் பிடிப்பதற்கு புலி எதற்கு? நான்கு பூனைகளை இப்பவிருந்தே பழக்கியெடுங்க.
  6. 🤣................ இதை வாசித்த பின் எல்லாமே பம்மாத்துகளாகவே தெரிகின்றது.............. நானே ஒரு பம்மாத்து போலவும் தோன்றுகின்றது..................🤣. தலைவர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், இலக்கியவாதிகள்,...................... இப்படி பம்மாத்து விட்டுக் கொண்டிருக்கும் வரிசை மிக நீண்டது. நீங்கள் சொல்லியிருப்பது போலவே மக்களிடம் சில சந்தர்ப்பங்களில் இவர்கள் கையேந்தி நிற்க வேண்டியிருப்பதால், உண்மைகளை பூசி மெழுகி பம்மாத்துக் காட்டுகின்றார்கள். ஆனால் எலான் மஸ்க் இன்று இங்கு காட்டிக் கொண்டிருக்கும் பம்மாத்தும், அதற்கு மக்கள் அவருக்கு காட்டிக் கொண்டிருக்கும் எதிர் விளைவுகளும் புதியதொன்றாக வரலாற்றில் நிற்கப் போகின்றது........ பெரியார் போன்ற வெகு சிலரை விட, மற்ற எல்லோருக்கும் மக்கள் ஆதரவு தேவை என்பதை மஸ்க் மறந்து போனார்............🤣. சமீபத்தில் நடந்த பம்மாத்துகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில மக்களை விஜய் அவரின் பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து நிவாரணம் வழங்கியது உச்சமான ஒன்று. விஜய் சொன்ன காரணம்: நான் அங்கு வந்தால் உங்களுடன் உட்கார்ந்து ஆறுதலாக பேசமுடியாது. நீங்கள் இங்கு வந்ததால், நாங்கள் மிகவும் சாவகசமாகப் பேசலாம்...............🫣. அண்ணாமலையின் சவுக்கடி இன்னொரு சிரிப்பு பம்மாத்து.................. ஈழத்திலும் பம்மாத்துக்கு குறைவில்லை. அர்ச்சுனா தினமும் பம்மாத்துக் காட்டுவார். சுமந்திரன், சிறிதரன், அவர்களின் ஆதரவாளர்கள் என்று பம்மாத்துக்கு எந்தக் குறைவும் இல்லை.............. என்ன, இவர்கள் வெறும் பம்மாத்துகள் என்று மக்களுக்கு தெரிந்து விட்டது தான் இந்தப் பம்மாத்துகளுக்கும், அண்ணா போன்றோரின் மக்கள் நலன் நோக்கிய பம்மாத்துகளுக்கும் இருக்கும் வித்தியாசம்...............
  7. அது சரி ரசோ சார்....உங்கடை வீட்டிலை என்ன விளையாட்டு விளையாடுறியள்..இரண்டு கை மணிக்கட்டிலை உடையுது...இரண்டு முழங்கால் சில்லுவெடிக்குது.....என்னதன் நடக்குது உங்கை...😆...பிரியன் சார் கிட்டத்தானே இருக்கிறியள்.. ஒருக்கா எட்டிப்பாருங்கோ..
  8. தெரியப்படுத்தினத்துக்கு நன்றி @Eppothum Thamizhan , இனிமேல் திருத்த முடியுமோ தெரியாது. போட்டியில் உங்கள் எல்லோருடனும் இருப்பதே மிக்க மகிழ்ச்சி.
  9. வழக்கு போட்டது சிங்கம்தானே. ஒண்டில் நாம் சமைத்து கொடுக்கணும் , முடியாட்டி அவங்களையாவது சமைச்சு சாப்பிட விடணும்.
  10. ஒரு சபையின்வேட்பு மனு தவிர மிகுதி பத்தும் யாழ் மாநகர சபை உட்பட நிராகரிப்பு அதேபோல இன்னும் பல கட்சிகளும் குழுக்களும் இந்த நிலை தான் அதிக கவனமின்மை தான் காரணம் என நினைக்கிறேன் தேர்தல் முறையில் மாற்றங்கள் வந்தபோதே இவர்கள் அவதானமாக இருந்திருக்க வேண்டும் சில கட்சிகளும் குழுக்களும் தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தல்களை கவனத்தில் எடுக்கவில்லை இந்த நிலையில் தமிழ் தேசிய முன்னணியை ஆதரிக்கும் நிலை சிறப்பானது
  11. ஒன்று எனக்குச் சொந்தமா ஒரு வீடு இருந்தது. என் கணவருக்கு தோட்டக்காணியும் உண்டு. 2012 வரை அந்த நாட்டுக்குப் போய் வாழமுடியும் என்ற எண்ணம் பலருக்குமே இருக்கவில்லைத்தானே. அதனால அந்த வீட்டை விற்பம் விற்பம் என்று என் கணவர் ஒரே கரைச்சல். அம்மாவும் அப்பாவும் கஸ்ரப்பட்டுக் கட்டின வீட்டை விற்க எனக்கு விருப்பமும் இல்லை. ஆனால் கணவர் கரைச்சல் கொடுத்ததுக்கும் ஒரு காரணம் இருந்தது. அம்மாவின் தங்கை ஒருத்தி. அவவுக்கு அக்காவின் பிள்ளைகள் இனி இங்கு வந்து இருக்கப் போவதில்லை. தன் பிள்ளைகளுக்குத் தான் அக்காவின் வீடுகளும் வந்து சேரும் என்ற பேராசை. புலிகள் முன்னர் சில வீடுகளில் வசித்தபோது தொலைபேசி வசதிகள் இல்லாத காலத்தில் “புலிகள் உன் வீட்டைத் தரும்படி கேட்டார்கள். நான் என் நகையை விற்று ஐம்பதாயிரம் கொடுத்து வீட்டை மீட்டுள்ளேன்” என்று என சித்தியிடம் இருந்து ஒரு கடிதம் வர, உடனே நான் என்னைக் கேட்காது நீங்கள் ஏன் பணம் கொடுத்தீர்கள். வீட்டைப் புலிகளிடம் கொடுத்துவிட்டு உங்கள் பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு கடிதத்தை எழுதிவிட்டு அப்பா அம்மாவுடன் கதைக்க, அப்பா “அவசரப்படாதை நான் விசாரிக்கிறேன்” என்று கூறி விசாரித்தால் அப்படி ஒரு விடயம் நடக்கவே இல்லை என்று தெரியவர, அம்மாவுக்கு அப்பதான் தான் தன் தங்கையின் நாடகம் புரிகிறது. மற்றப்பக்கம் கணவரின் மூத்த சகோதரர் குடும்பம் எங்கள் வீட்டில் இடப்பெயர்வின்போது சில ஆண்டுகள் குடும்பத்துடன் வந்து வசித்தனர். அம்மாவின் தங்கைக்கோ அட இந்த வீட்டை நாம் எடுக்கலாம் என்று பார்த்தால் இவர்கள் ஆட்டையைப் போட்டுவிடுவார்கள் போல என எண்ணி என் அம்மாவுக்கு போன் செய்து உங்கள் மருமகன் வீட்டைத் தமயனுக்குக் கொடுக்கப் போறாராம் என்று உசுப்பேற்ற, அம்மா எனக்கு போன் செய்து நாங்கள் கஷ்டப்பட்டுக் கட்டிய வீட்டை உன் மச்சான் குடும்பத்துக்கா கொடுக்கப் போகிறாய் என்று ஒரே கரைச்சல். அவர்களுக்குச் சொந்தவீடு இருக்குத்தானே. இப்ப பிரச்சனை முடிஞ்சுதுதானே. உன் மச்சானை வீட்டைவிட்டு எழுப்பு என்று அம்மா தொணதொணக்க எனக்கு இரு பக்கத்தாலும் தலைவலி வர நானும் பேசாமல் வீட்டை விற்றுவிட முடிவுசெய்து புரோக்கர்களிடம் கூறி ஆட்களை ஒழுங்கு செய்யச் சொன்னேன். அந்த நேரம் வீட்டின் பெறுமதி 90 இலட்சம் என்று புரோக்கர் கூற எனக்கோ வீட்டை வைத்திருப்போம் என்ற எண்ணம் தலை தூக்கத்தொடங்க, மீண்டும் கணவரிடம் வீட்டை வைத்திருப்போம் என்கிறேன். கணவரோ நாங்கள் அங்கை போய் இருக்கப் போவதில்லை. விசர்க் கதை கதைக்காமல் வில் என்கிறார். போகும் நேரம் எங்கே நிற்பது என்கிறேன். என் தங்கை வீடு இருக்குத்தானே. நான் தானே அவளுக்கு வீடு கட்டிக் குடுத்தனான். ஐந்து அறைகள் உள்ள வீட்டில ஒருமாதம் தங்க ஒரு அறை தரமாட்டாளா என்கிறார். ஏன் உங்கடை காணியை மட்டும் விக்காமல் என் வீட்டை விக்கச் சொல்கிறீர்கள் என்றதற்கு வெறும் காணி கிடந்தால் ஒரு காலத்தில போய் இருக்கப்போறம் எண்டால் பிறகு நிலமைக்கு ஏற்றமாதிரி சின்ன வீடு ஒன்றைக் காட்டிக் கொள்ளலாம் என்று ஆசை காட்ட நானும் சரி என்று சொல்கிறேன். மனிசன் ஒன்றை நினைத்தால் முடிக்கும் மட்டும் விடாப்பிடியாய் நிப்பார். அதனால ஒரு யோசனை வர எல்லாச் சகோதரர்களுடனும் வீட்டை விற்பது பற்றிக் கூறி யாராவது வாங்கப்போகிறீர்களா என்று கேட்க, ஒரு வீட்டையே பாதுகாக்க ஏலாமல்க் கிடக்கு. இதுக்குள்ள உதை வாங்கி என்ன என்கின்றனர். ஒரு தங்கை மட்டும் கணவருடன் கதைத்துவிட்டுச் சொல்வதாகக் கூற மனம் நிம்மதி அடைகிறது. தங்கை ஒரு வாரத்தின் பின்னர் தம்மிடம் இவ்வளவு காசு இப்ப இல்லை. நாற்பத்தைந்து இலட்சம் என்றால் நான் உடனே வாங்க முடியும் என்கிறாள். கணவருக்கு புரோக்கர் சொன்ன விலையைச் சொல்லாமல் ஐம்பது இலட்சம்தான் வீட்டின் பெறுமதி என்று கூறுகிறேன். அப்போது நாம் கடை நடத்திக்கொண்டு இருந்தபடியாலும் கணவருக்கு தொலைபேசியில் கதைக்க நேரம் இல்லை என்பதனாலும் கணவர் தன் தங்கையிடமோ தங்கையிடமோ தமையனிடமோ காணிவிலை குறித்து விசாரிக்க நேரம் இருக்கவே இல்லை. இவ்வளவு குறைவாக இருக்கு. வேறு இரண்டு மூன்று பேரிடம் சொல்லி விக்கப்பார் என்கிறார். இது நாங்கள் வளர்ந்த வீடு. வேறை ஆருக்கு விற்றாலும் மீண்டும் போக முடியாது. தங்கைக்குக் கொடுத்தால் நாம் போகும் நேரம் போய் நிக்கலாம் என்று கணவரின் மண்டையைக் கழுவிக் காதும் காதும் வைத்ததுபோல் கணவரின் சகோதரர்கள் காதுக்கு விடயம் போகாமல் வீட்டைத் தங்கைக்குக் எழுதியாச்சு. அதன் பின்னர் கணவர் மட்டும் 2015 இல் நாட்டுக்குச் சென்றபோது நாட்டிலும் மனிதர்களிடமும் பல மாற்றங்கள். கணவருக்கே தங்கை வீட்டில் தங்கி இருந்தது மகிழ்வைத் தரவில்லை. நான் விற்ற தங்கையின் வீட்டில் அம்மாவின் திருமணமாகாத தங்கை – தலைமை ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் - தன் வீட்டைத் தங்கையின் ஒரு மகளுக்குக் கொடுத்துவிட்டு எம் வீட்டில் இருந்தார். அவரைத்தான் அந்த வீட்டுக்குப் பொறுப்பாகத் தங்கை தங்கும்படி கூறியிருந்தாள். அவர் தனியாக இருப்பதனால் உதவிக்காக இராமநாதன் அக்கடமியில் கல்வி கற்கும் வெளி மாநிலப் பிள்ளைகள் சிலரை குறைந்த வாடகையில் வீட்டில் வைத்திருந்தார். எனவே கணவர் பெண்கள் மட்டும் இருக்கும் வீட்டில் நான் இல்லாது அங்கு சென்று தங்க மானமின்றிப்போக கணவருக்கு அந்த விடுமுறை மகிழ்வாக இருக்கவில்லை. நாடு திரும்பிய கணவர் எமக்கு என்று ஒரு வீடு இருக்கவேணும். ஆற்றையன் வீடு ஆற்றையன் வீடுதான் என்று புலம்ப, கூட இருந்த மகளும் “எங்கள் வீட்டை விக்காமல் இருந்திருந்தால் நாங்கள் இணுவிலுக்குப் போற நேரம் நிம்மதியா நிண்டிருக்கலாம்” என்று கூற மனிசன் ஒண்டுமே கூறவில்லை. சரி பிரச்சனை இல்லை. அப்பாவின் காணி இருக்குத்தானே. அதில ஒரு வீட்டைக் கட்டுவம் என்று ஆறுதலுக்காய்க் கூறினாலும் நாட்டில போய் வாழக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும்பட நாட்டில் போய் இருக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.
  12. குரங்குகள் பயிர் நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க, பயிர் செய்யப்பட்ட நிலங்களை சுற்றி சிறுத்தையின் சிறுநீரைத் தெளிப்பது குறித்து விவசாயத் துறை கவனம் செலுத்தியுள்ளது. விவசாய நிலங்களுக்குள் குரங்குகள் நுழைவதைத் தடுக்க சிறுத்தை சிறுநீரை விரட்டியாகப் பயன்படுத்தலாம் என்று விவசாய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வாசனை குரங்குகள் மற்றும் பபூன்கள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்கிறது என்றும், சிறுத்தை போன்ற வேட்டையாடும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்த சூழ்நிலையால், சிறுத்தையின் சிறுநீர் போன்ற ரசாயனத்தை செயற்கையாக உற்பத்தி செய்து,இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சாகுபடி நிலங்களில் தெளிப்பதன் மூலம், எலிகள் மற்றும் குரங்குகளின் வரவை குறைக்க முடியும் என்றும், இதுபோன்ற செயற்கை ரசாயனங்கள் உலகெங்கிலும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அந்த அதிகாரி கூறினார். மேலும், வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள கிராமங்களுக்குள் குரங்குகள் நுழைவதைத் தடுக்க, வனத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான எல்லையில் நாய்களை நிறுத்துவது விவசாயத் துறை கவனம் செலுத்தியுள்ளது. https://madawalaenews.com/16778.html
  13. ஊரில அப்படித் தானே. நான் காதல் செய்வதைப் பார்த்து சிலரும் வெளிக்கிட்டு இடைஇடையே தடம்புரண்டு போனார்கள். கடேசிவரை போனது நான் தான். ஒரு விதத்தில் பெருமையாகவும் இருக்கிறது.
  14. இவருக்கு புகுந்து விளையாடுமளவுக்கு செல்வாக்கு இல்லை ...அதுவும் தேர்தல் திணைக்களத்துடன்... தமிழ்தேசிய விரோத கருத்து விடயத்தில் மட்டும் இவரை சிங்களவர்கள் இவரை அரவணைப்பினம் இவரும் சின்ன பிள்ளைமாதிரி துள்ளிகுதித்து கொண்டு அறிக்கை விடுவார் விசயம் தெரிந்திருக்கும் பேசாமல் இருந்திருப்பார் ....சின்ன வயசில நாங்கள் சில நேரம் ..கிடங்கு இருப்பது தெரிந்தாலும் நண்பர்கள் போய் விழுவாங்கள் என் தெரிந்தாலும் சொல்லாமல் இருந்து விட்டு விழுந்த பின்பு சிரிப்பது போல ...
  15. 🤣................. ஒரு நண்பன், அவன் இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கின்றான். அவன் முன்னர் அடிக்கடி சொல்வான்: நல்ல விதமாகவோ அல்லது அப்படி இப்படியோ எப்படி என்றாலும் என்னைப் பற்றியே வகுப்பில் கதைத்தார்கள் என்றால் எனக்கு சந்தோசம் தான்..................🤣. ரஜனியின் 'எஜமான்' படத்தை அவன் பல தடவைகள் பார்த்தவன் போல...............
  16. தம்பி அந்த குதிரைக்கு தான் வீடு வளவெல்லாம் விற்று பணத்தைக் கட்டியுள்ளேன். நம்பின குதிரையின் கையைக் காலை முறித்து போடாதேங்க.
  17. எனக்கு இது சந்தோசம்... என்னுடைய முழிவிருப்பு சி.எஸ்.கே ...வசி அரை இறுதிக்கு..வராது என்று சொன்னாலும் கூட ..என்னுடைய ரீம்தான் சம்பியன் என்ப்தை 100 வீதம் நம்புகின்றேன்....ஒரே ஒரு நெருடலிந்த பதிரான விளையாடுவதுதான்...இப்ப அவரின் பந்துவீச்சு எடுபடாது..என்பதைவசீ சொன்னதை சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்கின்றேன்..😆 என்ன இப்பவும் குழந்தைப் பிள்ளை மாதிரி
  18. மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராதவை விலாங்கு மீன்கள். மெல்லிய, வழுவழுப்பான மற்றும் நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை. அத்தகைய விலாங்கு மீன்களில், ஒரு புதிய இனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விலாங்கு மீன் அதிகம் பேசுபொருள் ஆவதற்குக் காரணம் அதன் பெயர். அதற்கு அரியோசோமா தமிழிகம் (Ariosoma tamilicum) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை அடையாளப்படுத்தும் விதமாக விலாங்கு மீனுக்கு பெயர் சூட்டியது ஏன்? சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இந்தப் புதிய வகை விலாங்கு மீன் குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன? இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) கீழ் செயல்படும் தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் (NBFGR) ஆய்வாளர்கள், இதுவரை அறியப்படாத காங்கிரிடே (Congridae)) என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வகை விலாங்கு மீனை அடையாளம் கண்டுள்ளனர். இந்தப் புதிய விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்திற்காக மட்டுமின்றி, அதற்கு தமிழ் கலாசாரத்தை அடையாளப்படுத்தும் வகையில் பெயர் சூட்டியிருப்பதால் பொது மக்கள் மத்தியில் சிறப்புக் கவனம் பெற்றுள்ளது. அரியோசோமா தமிழிகம் என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த விலாங்கு மீன், உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ் மற்றும் அதன் தொன்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாகச் சூட்டப்பட்டுள்ளது என்று தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் செயல் இயக்குநர் முனைவர் டி.டி.அஜித் குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தமிழிகம் விலாங்கு மீனை முதலில் கண்டுபிடித்த மீனவர்கள் படக்குறிப்பு,புதிதாதக் கண்டுபிடிக்கப்பட்ட விலாங்கு மீனுக்கு தமிழ்நாட்டின் பெயரைச் சூட்டுமாறு மீனவர்கள் கோரியதாகத் தெரிவித்தார் முனைவர் டி.டி. அஜித் குமார். இந்தப் புதிய கடல்வாழ் உயிரினத்தைக் கண்டுபிடிப்பதில் ஆய்வாளர்களைப் போலவே, தூத்துக்குடி மீனவர்களுக்கும் முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரிவித்தார் தமிழிகம் விலாங்கு மீன் குறித்த ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரான முனைவர். கோடீஸ்வரன். "தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருவதால் மீனவர்களுடன் தொடர்பிலேயே இருப்போம். அவர்களும் புதிதாக, தாங்கள் இதுவரை கண்டிராத தோற்றங்களைக் கொண்ட கடல் உயிரினங்களைக் கண்டால் உடனே எங்களுக்குப் புகைப்படம் எடுத்து அனுப்புவார்கள். அதே போலத்தான் தமிழிகம் விலாங்கு மீனும் எங்கள் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது. மீனவர்களின் வலையில் சிக்கிய இந்த விலாங்கு மீனின் தோற்றம் இதுவரை காணாத வகையில் வித்தியாசமாக இருந்ததால், மீனவர்கள் அதை எங்களிடம் பகிர்ந்தனர்," என்று விவரித்தார் கோடீஸ்வரன். "தமிழிகம் விலாங்கு மீன் இனத்தைக் கண்டுபிடிப்பதில் எங்களுக்கு உதவிய மீனவர்கள் அதற்குத் தமிழ்நாட்டின் பெயரை வைக்குமாறு கோரினர். பின்னர் உலகின் பழமையான மொழியான தமிழின் பெயரை அதற்கு வைக்குமாறும் சில மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை அடையாளப்படுத்தும் விதமாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. பின்னர் இது சர்வதேச ஆய்வறிக்கை விமர்சகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது," என்று முனைவர் அஜித் குமார் கூறினார். தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, லட்சத்தீவு உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் புதிய கடல்வாழ் உயிரினங்களைக் கண்டுபிடிக்கும் நோக்குடன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்போது அரியோசோமா இனத்தைச் சேர்ந்த காங்கிரிடே விலாங்கு மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டது. "இந்த விலாங்கு மீனின் தோற்றத்தில் இருந்த தனித்தன்மையைப் வெறும் கண்களால் பார்க்கும்போதே கண்டறிய முடிந்தது. அதை மேலும் ஆய்வு செய்ததில், அதுவொரு புதிய இனம் என்பது உறுதி செய்யப்பட்டது," என்று இந்த ஆய்வுக் குழுவின் முன்னணி ஆய்வாளரான முனைவர். கோடீஸ்வரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இதேபோல், முன்னமே தூத்துக்குடியில் இருந்து, இதே காங்கிரிடே அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு விலாங்கு மீன் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. "அதற்கு தங்கள் ஊரின் பெயரை வைக்குமாறு மீனவர்கள் கேட்டனர். ஆகையால் அந்த விலாங்கு மீனுக்கு அரியோசோமா தூத்துக்குடியன்ஸ் (Ariosoma Thoothukudiense) எனப் பெயர் வைக்கப்பட்டது" என்று கூறினார் கோடீஸ்வரன். புதிய கடல்வாழ் உயிரினங்களுக்கான தேடல் படக்குறிப்பு,தூத்துக்குடியன்ஸ் விலாங்கு மீனுக்கும் இந்த தமிழிகம் விலாங்கு மீனுக்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பதாகக் கூறுகிறார் முனைவர் கோடீஸ்வரன் அரியோசோமா தமிழிகத்தின் தோற்றதிலேயே தனித்துவம் தெரிந்தாலும், அது ஒரு தனி இனமா என்பதை உறுதி செய்யப் பல்வேறு பகுப்பாய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். உருவவியல் பகுப்பாய்வு, மரபணு மூலக்கூறு பகுப்பாய்வு, அதன் உடலமைப்பு மற்றும் எலும்புக்கூடு ஆகியவற்றை ரேடியோகிராஃபி மூலம் ஆய்வு செய்வது எனப் பல்வேறு செயல்முறைகளின் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் விளைவாகவே இந்த விலாங்கு மீன் இதுவரை கண்டிராத ஒரு தனி இனம் என்பதை உறுதி செய்ததாகவும் விவரித்தார் கடல் உயிரின ஆய்வாளர் கோடீஸ்வரன். இதன் ஆய்வு முடிவு, சர்வதேச ஆய்விதழான ஸூடாக்ஸாவில் (Zootaxa) ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப்பட்டன. அதன்படி, இந்த விலாங்கு மீன் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் முன்புற கண் விளிம்பில் ஒரு வெண்மை நிறப் பட்டை மற்றும் கீழ் தாடைக்கு அருகே வயிற்றுப் பகுதியில் கருமை நிறத் திட்டுகள் உள்ளன. கூடுதலாக அதன் மேல் தாடையின் பாதி வரை இருக்கக்கூடிய நீண்ட பற்களைக் கொண்டுள்ளன. தூத்துக்குடியன்ஸ் விலாங்கு மீனும் தமிழிகம் விலாங்கு மீனும் ஒரே அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும், இவற்றுக்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளதாக கோடீஸ்வரன் குறிப்பிட்டார். குறிப்பாக, "தமிழிகம் விலாங்கு மீனுக்கு 118 முதல் 123 முதுகெலும்புகள் வரை இருக்கும். ஆனால் தூத்துக்குடியன்ஸுக்கு 160 முதல் 164 முதுகெலும்புகள் வரை இருக்கும்," என்கிறார் அவர். முனைவர் அஜித் குமாரின் கூற்றுப்படி, தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, இதுவரை இந்திய கடல் பகுதிகளில் 14 வகையான விலாங்கு மீன்களைக் கண்டுபிடித்துள்ளனர். அதிகம் அறியப்படாத கடல்வாழ் உயிரினங்கள் மீது கவனம் செலுத்தி வரும் இந்த ஆய்வுக் குழு, இந்திய கடல் பகுதிகளில் வாழும் உயிரினங்களிலேயே அதிகமாக ஆய்வு செய்யப்படாத விலாங்கு மீன்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். விலாங்கு மீன்கள் எண்ணிக்கையில் மிகுதிய இருந்தபோதிலும், "இந்திய மக்கள் அதை ஓர் விருப்ப உணவாகக் கருதாத காரணத்தால், அதன் மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை. அதனால், ஆய்வுகளும் அவை குறித்துப் பெரியளவில் நடைபெறவில்லை. நீளமான, பாம்பு போன்ற உடலமைப்பு, வழுவழுப்பான தோல், அவற்றின் நடத்தைகள், உயிரியல், சூழலியல் முக்கியத்துவம் பற்றி விரிவாக ஆராய வேண்டிய தேவை அதிகமுள்ளது," என்று கூறுகிறார் முனைவர். அஜித் குமார். பதுங்கியிருந்து இரையை வேட்டையாடும் விலாங்கு மீன் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மாலத்தீவு கடல் பகுதியில் படம் பிடிக்கப்பட்ட அஞ்சாலை என்றழைக்கப்படும் விலாங்கு மீன் வகை (கோப்புப் படம்) மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராத, மெல்லிய, நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை விலாங்கு மீன்கள். இந்த உடலமைப்பு, மிகவும் குறுகலான இடங்களுக்குள் நுழையவும், வழுக்கிக் கொண்டு எளிதில் நழுவிச் செல்லவும் ஏதுவாக இருக்கிறது. விலாங்கு மீன்கள் கடல் வாழ் உயிரினங்களில் மிகவும் ரகசியமானவையாகக் கருதப்படுகின்றன. இவை பெரும்பாலும் கடலின் ஆழத்தில், பாறை இடுக்குகளில், குகைகளில் வாழும் பழக்கம் கொண்டவை. மீன்களில் பெரும்பாலானவை குழுக்களாகக் கூடி வாழ்பவையாக இருக்கின்றன. ஆனால், விலாங்கு மீன்கள் ஒரே இடத்தில் பல இருந்தாலும், தனித்தனியாக வாழக் கூடியவை என்றும் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே இவை ஒன்று சேரும் எனவும் குறிப்பிட்டார் கோடீஸ்வரன். வேட்டையாடி உயிரினமான விலாங்கு மீன், சிறிய மீன்கள், ஓட்டுமீன்கள், மெல்லுடலிகள் எனப் பல வகையான இரைகளைச் சாப்பிடுகின்றன. அவை பதுங்கியிருந்து தாக்கும் வேட்டை பாணியைக் கொண்டவை. பெரும்பாலும், பாறை இடுக்கு போன்ற தனது மறைவிடத்தில் காத்திருந்து, தனக்கு அருகில் வரும் இரைகளைத் தாக்கி உண்கின்றன. இருப்பினும், இவற்றின் இனப்பெருக்க நடத்தைகள் ஆய்வாளர்களுக்கு இன்னும் மர்மமாக இருப்பதாகவும், அதுகுறித்து விரிவான ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார் முனைவர். கோடீஸ்வரன். விலாங்கு மீன்கள் கடலின் ஆழத்தில் வாழ்வதால், அவற்றை ஆய்வு செய்வதில் பல சவால்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலேயே அவை குறித்த ஆய்வுகள் குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார். பட மூலாதாரம்,Dr. Kodeeswaran P படக்குறிப்பு,அரியோசோனா தமிழிகம் என்று பெயரிடப்பட்ட புதிய வகை விலாங்கு மீன் குறிப்பாக அவற்றின் இனப்பெருக்க செயல்முறை இன்னமும் பல ஆய்வாளர்களுக்கு மர்மமாகவே இருந்து வருகிறது. கடல் பரப்பின் மேற்புறத்தில் முட்டையிடும் மற்ற மீன்களைப் போலன்றி, இவை ஆழ்கடலில் முட்டையிடுகின்றன. "விலாங்கு மீன்கள் ஆழமான கடல் நீரில் இனப்பெருக்கம் செய்வதாகவும் அவற்றின் லார்வாக்கள் கடலின் நடுப்பகுதிக்குச் சென்று, அங்கு வளர்வதாகவும் நம்பப்படுகிறது. ஆனால், அதுகுறித்த தெளிவான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை," என்று கூறினார் கோடீஸ்வரன். இந்த நிலையில், அரியோசோமா தமிழிகத்தின் கண்டுபிடிப்பு, இந்திய கடல் பரப்பிலுள்ள பரந்த, பன்முகத் தன்மை கொண்ட விலாங்கு மீன்களின் வாழ்வியலைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக அமையக்கூடும் என்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஒப்பீட்டளவில் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்ட உயிரினமாக இருந்தாலும், கடலின் சூழலியல் அமைப்புகளில் வேட்டையாடியாகச் செயல்படும் விலாங்குகள் கடல் சுற்றுச்சூழலின் சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்பு அதிகம் அறியப்படாத மீன் இனங்கள் வழங்கக்கூடிய பொருளாதார நன்மைகள் குறித்தும் கவனத்தை ஈர்த்துள்ளது. மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது விலாங்குகள் மீன்பிடித் தொழிலில் ஒப்பீட்டளவில் குறைவாகப் பயன்படுத்தப்படுவதால், அவற்றைச் சுற்றி நிலையான வணிக மீன்பிடி நடைமுறைகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இது உள்ளூர்ப் பொருளாதாரங்கள் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு முயற்சிகள் இரண்டுக்கும் பயனளிக்கக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விலாங்கு மீனுக்கு 'தமிழிகம்' என பெயர் சூட்டியது ஏன்? - BBC News தமிழ்
  19. நல்ல முடிவு ...நீங்கள் வாதாடி வெற்றியடைந்தால் உங்களுடை கட்சியின் வாக்குகள் குறவைடையும்..ஏனைய கட்சிகள் வெற்றியடைந்து விடும்...😅
  20. என்ன வசி உங்களை நல்ல மனிதன் என்று எண்ணினேன் இப்போ என்னடா என்றால் கிருபன் கதவை இழுத்து சாத்திய பின்பு தான் விளையாட்டு சூட்சுமங்களை மெதுவாக அவிழ்த்து விடுகிறீர்கள். சும்மா போங்கப்பா.
  21. இவாறான ரஷியன் ப்ரோபஹாண்டா வீடியோக்களை யாழில் பதிவு செய்யாதீர்கள். தீண்டாமை அடிப்படை அறிவுகளை தீண்டும் செயல்கள் இவை. என்ன நடக்கிறதோ அதை உள்ளது உள்ளபடி பிபிசி சின்ன் போன்ற செய்தி ஊடகங்கள் எங்களுக்கு காட்டுகிறார்கள் தவிர யாழ்கள அரசியல் ஆலோசகர்கள் சரியாகவும் நேர்த்தியாகவும் நடந்த நடக்கப்போகும் விடயங்களை கூறுகிறார்கள். முதலில் இதில் எந்த மூலமும் இல்லை இது யாழ்கள விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. அதை சரி பார்த்து உரியவர்கள் இந்த திரியை நீக்கிவிடவும். நேற்று ஸ்திரேலிய வீரர்கள் வெற்றிகரமாக காசாவில் செய்த தாக்குதலில் இரண்டு காமாஸ் பயங்கரவாதிகள் ஒழித்து இருந்த ஹோஸ்பிடல்கள் தரைமடடம் ஆக்கப்பட்டு இருக்கிறது அதில் 316 காமாஸ் பயங்கரவ்திக்கள் 2 ஆறுமாத பயங்கரவாதிகள் உடபட கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
  22. 🤣............ 'ஒரு மண்ணும் ஒழுங்காகத் தெரியாது..................' என்பதற்கான சொல் தான் சகலகலாவல்லவன் போல ....... மெல்லிய, வாடிய, வளர்ச்சி குறைந்த ஒரு எலிஃபண்ட் என்று அனுமானத்தை மாற்ற முடியுமா...........🤣. இங்கு நாட்டு நிலைமை அவ்வளவு நல்லா இல்லை. ரியல் மாட்ரிட் விளையாட்டுக் கழகத்தின் சின்னத்தை பச்சை குத்தியிருந்த ஒருவரை நாடு கடத்திவிட்டார்கள். அவர் ஏதோ ஒரு ஆயுதக் குழுவினரைச் சேர்ந்தவர் என்று, அது தான் அந்த பச்சையாம் என்று........🫣 எலிக்கு சோடியாக நான் வழமையானதை எழுதாமல், பதிலாக எலிஃபண்ட் உள்ளே வந்த கதை இதுதான்...............🤣
  23. நீங்கள் எப்பிடி இருப்பீர்கள் என ஒரு அனுமானம் இருந்தது, இப்படி எலிஃபன்ட் என கூறி தலைகீழாக மாற்றிவிட்டீர்கள்.🤣
  24. 'எல்லோர் சார்பிலும் நான் மன்னிப்புக் கேட்கின்றேன்..............' என்பது இந்த உலகில் இருக்கும் பெரிய பம்மாத்துகளில் ஒன்று................🤣.
  25. ❤️........................ குறைபட்ட இறையமைப்புகள் வாழ்க்கைகளில் நிறைவைக் கொடுப்பதேயில்லை, மாறாக அவை பல வாழ்க்கைகளை கெடுத்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், உலகெங்கும் இந்த குறைபட்ட இறையமைப்புகள் குறிப்பிட்ட சில பிரிவினர்களுக்கு அதிகாரங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் அவை ஊக்குவிக்கப்பட்டு, அதனூடாக இவை மனிதர்களிடையே அடுக்குகளையும், அழிவுகளையும் உண்டாக்குகின்றன. நரபலி, பலதாரங்கள் என்பன இன்று நாகரிக சமூகங்களால் ஒதுக்கப்பட்டவையாகிவிட்டன. இவை எந்த இறையமைப்பினதும் புதிய அறைகூவல்களால் ஒதுக்கப்படவில்லை, மாறாக மனிதர்களின் பொதுப்புத்தியில் ஏற்பட்ட மாற்றங்களால் மட்டுமே இவை இல்லாமல் ஆக்கப்பட்டன. இந்த வாரம் கூட தலைகளில் தேங்காய்களை அடித்து உடைக்கும் ஒரு திருவிழாவை தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தேன்.....................🫣.
  26. இலங்கையில் பதவியில் இருந்த மேயர்மாரை விட. தங்கம் எவ்வளவோ திறம். அவாவின் சிரிப்புக்கு கேட்காமல் இலங்கை அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யும் தேவைக்கு அதிகமாகவும். செய்யும் அவா. சிரித்து காரியங்களை சாதித்து விடுவார் யாழ்ப்பாணம் ஒரு விலைமதிப்புயற்ற முதல்வரை தேர்தலுக்கு முதலே இழந்து விட்டது…… கவலையளிக்கிறது
  27. எல்லாரும் வக்கீல் தொழில் செய்யாமல் விட்டு.... சட்ட திட்டங்களை மறந்து போனார்கள் போலுள்ளது. ஜனாதிபதி வக்கீல் என்ற பட்டம் எடுத்த, சுமந்திரனின் தமிழரசு கட்சியும் கிளிநொச்சியில், "புட்டுக் கொண்டு" போட்டுது. 😂
  28. அண்ணை இது உண்மை தான் ஏன் பொய் எனகிறீர்கள். ??
  29. ஸ்ரீலங்காவுக்கும், தமிழ் ஈழத்துக்கும் வெவ்வேறு சட்டம் வழமையானதுதானே. 😂 தங்கத்தின்... யாழ்ப்பாண மேயர் கனவும் எல்லோ இதாலை, நழுவி போய் விட்டது. 🤣
  30. அர்ஜுனா யார் எண்டு கேட்ட சின்ன பிள்ளையும் சொல்லும்..சும்மா அதிருதில்ல... 🤣 யாழ்ப்பாண சட்டம் வேறு கொழும்பு சட்டம் வேறு....அது தான் தங்கம் பிழை விட்டிட்டா...🤣
  31. 2018 இருந்து 2025 வரை பிள்ளைகள் பெறவில்லை என்பதால் தான் எனது நண்பர் ஒருவர் ஒரு வருடத்தில் இரண்டு பிள்ளைகள் பெற்று உள்ளார் அதாவது தையிலும். மார்கழியிலும். ....
  32. 😭 வாக்கு போட்ட சொந்த நாட்டு மக்களிடமும் பக்கத்து நாட்டு புதிய பிரதமரிடமும் பைத்தியம் என்ற பட்டத்தை மிகவும் குறுகியகாலத்தில் பெற்று கொண்ட பாட்டாளிகளின் தலைவன்
  33. வாக்கு போட்டவார்கள்.....இந்த மனிதனுக்கு ஏன் வாக்கு போட்டோம். என்று அழுகிறார்கள். நீங்கள் என்னடா என்றால் தேனும். பாலும் ஓடுகிறது என்கிறீர்கள் முத்திய. ஆட்சிக்கும். இன்றைய ஆட்சிக்கும். என்ன வித்தியாசம் உண்டு” ?? பக்கத்து நாடு கனடாவை உலகில்…………… மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகிய கனடாவை தன்னுடைய நாட்டின் 51 ஆவது மாநிலம் என்கிறார் இதை இவர் எப்படி செல்லலாம்?? இது தான் அமெரிக்காவின் அபிவிருத்தியா ?? இன்றைய அமெரிக்கா அதிபர் வரி விதிப்பதைத் தவிர எதையும் பெரிதாக இவரின் ஆட்சி காலத்தில் செய்யப் போவதில்லை உலகில் ஒவ்வொரு நாடும் ஏதோ ஒருவகையில் மற்றைய நாடுகளில் தங்கியிருக்கிறது பெரிய நாடு சிறிய நாடு பணக்காரரா நாடு. ஏழை நாடு என்ற வித்தியாசம் அற்ற முறையில் ஒன்று ஒன்றில் தங்கியுள்ளது இவரின் ஒவ்வொரு செயலுக்கும் மறுதாக்கமுண்டு மேலும் நீங்கள் சொன்ன அனைத்தும் இன்று நடைபெறவில்லையா?? தொடர்கிறது தானே?? முன்னரை விட. மோசம் என்று சொல்லலாம் இவர்களின் பிரச்சனையால் ஜேர்மனியில் கார்களை எரிக்க வேண்டுமா ??? என்ன ??
  34. யூரியுப்பர்கள் யூரியூப்பர்களாகவே இருக்கட்டும்.😎 இதற்குள் ஈழமக்களுக்கான உதவிகளுக்கும்,அவர்களுக்கான மறுமலர்ச்சி உதவிகளாகட்டும் யூரியூப்பர்களை சம்பந்தப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.🙂 அந்த யூரியூப்பர்கள் வழமை போல் சுற்றுலா இடங்களை காட்டுவதும்,உணவு விடுதிகளில் வயிறு புடைக்க உண்வதையும், தங்கள் தனிப்பட்ட விடயங்களை காணொளியாக பகிர்வதையும் தொடர்ந்து செய்யட்டும்.🤣
  35. சிங்கள தேசிய இனமாக இருந்தால் மட்டுமே பாராளுமன்றில் சபாநாயகர் அழுதபடி அறிக்கை சமர்பிப்பார்...ஏனைய தேசிய இனங்களின் படுகொலைகள் பயங்கரவாதிகள் என்ற குற்றசாட்டுடன் பாராளுமன்றில் கூரையில் தூக்கி வீசப்பட்டுவிடும்... உள்ளக பொறிமுறையுடாக தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படும் என்ற‌ அறிக்கையை நம்பவைப்பதற்கு இந்த நாடகம்(பட்டலந்த விவகாரம்)
  36. பிள்ளை நனையாமல் காப்பாற்றுவதென்றால் இப்படி பறக்கணும் ......... ! 😂
  37. ஏனப்பா வேற ஆரும் கிடைக்கேல்லையே? நான் மற்றப்பக்கம் பார்க்க......நீங்கள் இந்தப்பக்கம் பார்க்க🤣
  38. நான் நினைக்கிறேன் இவ‌ரின் வாக‌ன‌த்தில் வைத்து இருந்து இருக்கிறார்................யாழ்ப்பாண‌த்தில் இருக்கும் வால் வெட்டு கும்ப‌லுட‌ன் இவ‌ருக்கு தொட‌ர்வு இருக்கு................. புரித‌ல் இல்லாத‌ எம் ஈழ‌த்து உற‌வுக‌ள் இந்த‌ ர‌வுடிய‌ போய் க‌ட‌வுள் என்று சொல்லுகின‌ம் ஒரு கேடு கெட்ட‌ ஊத்தையை போய் க‌ட‌வுள் என்று சொல்வ‌து அசிங்க‌த்தின் விட‌ அசிங்க‌மா பார்க்கிறேன் த‌மிழ் சிறி அண்ணா..............இவ‌ன் ஏப்பிர‌ல் 2ம்திக‌தியும் வெளியில் வ‌ர‌ போவ‌து கிடையாது இவ‌ன் முறைகேடு செய்த‌ ப‌ண‌த்தை இவ‌ன் காணொளி பிடிச்சு போட்ட‌ ம‌க்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொடுக்க‌னும் ச‌மூக‌ சேர்வை செய்ய‌ இவ‌ர் த‌குதியான‌ ந‌ப‌ர் கிடையாது ந‌ல்ல‌ புரித‌ல் ந‌ல்ல‌ நேர்மை உள்ள‌ பெண் பிள்ளைக‌ள் இப்ப‌டியான‌ சேவ்வையை முன் வ‌ந்து செய்ய‌னும்..................இவ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் அடுத்த‌வ‌ர்க‌ளின் கானிய‌ த‌ன் பெய‌ரில் எழுதி வைச்சு இருக்கிறான் சொல்ல‌ நிறைய‌ இருக்கு இவ‌னுக்கு சொம்பு தூக்க‌ சில‌ த‌றுத‌லைக‌ள் இருக்கு................கால‌ப் போக்கில் அவ‌ர்க‌ளும் காணாம‌ போவின‌ம் த‌மிழ் சிறி அண்ணா...................................
  39. ஏன் அப்படிச்சொல்கிறீர்கள்? சாத்தான் அந்த தம்பி இலங்கையில் நின்று கூட எவ்வளவு அக்கறையாக கதைக்குது. நீங்கள் என்னடா என்றால் வெட்டாமல் ஓயமாட்டீர்கள் போல. நன்றி நீர்வேலியான்.
  40. தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனையிட்ட போது 1009 மதுபான போத்தல்கள், ஒரு துப்பாக்கி, இரண்டு ஆப்பிள் ரக தொலைபேசிகளை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
  41. பம்மாத்து இப்போதும் தொடர்கிறது.
  42. "அறிவின் வடிவாகவே இருக்கும் வாலறிவன் இறைவனைக் குறித்து அறிய முனையும் குறைவுற்ற இறையமைப்பு குறித்த நெடிய அற்புதமான பதிவு பேராசிரியர் சோமசுந்தரனார் இட்ட பதிவு. "மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு" என்பார் அறிவர் தந்தை பெரியார். இறைவனைஇ வாலறிவன்இ முற்றறிவன் என்று அறிவின் வடிவமாக வணங்கிய மரபு தமிழர் பக்தி மரபு. மூன்றாம் நூற்றாண்டின் இறைப்பெருமாட்டி காரைக்கால் அம்மையார் இறைவனை இவ்வாறு காண்கிறார். அறிபவனும்இ அறிவிப்பவனும்இ அறிவாய் இருந்து அறிகின்றவனும்இ அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே. அவனே ஐம்பூதங்களாகவும் விளங்குகின்றான் என்கின்றார். அறிவானும் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளும் தானே அவன் (அற்புதத் திருவந்தாதி 20) சிவபெருமான்இ யார் எந்தக் கோலத்தில்இ எந்த உருவில் வணங்கினாலும்இ எத்தகைய தவத்தில் ஈடுபட்டாலும்இ அவர்அவர்க்கும் அவரவர் விரும்பிய கோலத்தில் வந்து அருள் புரிவார் என்கின்றார். எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்து அவ்வுருவே ஆம் (33) மனிதம் போற்றும் அன்பு வடிவே இறைவன் வடிவும் வழிபாடும் என்பதுவும் நம் மரபுதான். பக்தி இயக்க இலக்கிய காலங்கள்இ "காதலால் காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமேஇ தொல்லுலகுக்கு ஆதியாய் நின்ற அரன்"இ என்ற காரைக்கால் அம்மையார்இ 'அன்பே சிவம்' என்ற திருமூலர்இ 'யாவராயினும் அன்பர் அன்றி அறியொணா மலர்ச் சோதியான்' என்ற மாணிக்கவாசகர்இ "(பூங்)காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி(ந்த) மனத்தால்" மக்கள் தொண்டு செய்து இறைவனை உணர்க என்று பாடிய திருஞானசம்பந்தர்இ "(உயிரினங்களைஇ இறைவன் வாழும்)பாத்திரம் சிவம் என்று பணிதீராகில் மாத்திரைக்குள்(நொடிப் பொழுதில்) அருள்வார் (திரு)மாற் பேரரே" என்று அருளிய திருநாவுக்கரசர் என்று கிபி ஏழாம் நூற்றாண்டுவரைஇ குறைவற்ற இறையமைப்புடனேயே பெரும்பாலும் திகழ்ந்தது எனலாம். எட்டாம் நூற்றாண்டில்இ வன்தொண்டர் ஆரூரர் என்னும் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர்தொகையில்தான் சிறுத்தொண்டர் மற்றும் இயற்பகை போன்ற இயற்கைக்கு முரணான அடாத செய்கைகளைப் பக்தியின் பெயரால் போற்றுவதும்இ துதிப்பதுமான போக்குகளுக்கு துவக்கம் எனலாம்.
  43. கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே ........! 😍
  44. ஜெயசந்திரனின் குரலில் பிரபல்யமான பாடல்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.