Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87988
    Posts
  2. சுப.சோமசுந்தரம்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    488
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38756
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20012
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/25/25 in all areas

  1. ஐபிஎல் 2025 இன் 05வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி பிரியன்ஷ் ஆர்யா, ஷஷாங் சிங், ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்கள் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் மின்னல் துடுப்பாட்டங்களால் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை நோக்கி சாய் சுதர்சன், ஜொஸ் பட்லர், சுப்மன் கில், ஷேர்ஃபான் ரதஃபோட் போன்றோரின் வேகமான ஆட்டங்களால் போயிருந்தும் இறுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 232 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 4 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. சில வருடங்களிற்கு முன்னர் "பத்து ரூபாய் கடை" என்று அழைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலை தான் இந்த "மாருதம் சாப்பாட்டுக் கடை." பொருட்களின் விலை ஏற்றத்துக்கு பின்னரும் மிகவும் மலிவாகவே சிற்றுண்டிகளினை விற்கிறார்கள். யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் உள்ள றவுண்ட போட்டுக்கு பக்கத்தில் உள்ளது இந்த "மாருதம் சாப்பாட்டுக் கடை." பொது மக்கள், மாணவர்கள் முதல் அரச, தனியார் நிறுவன அதிகாரிகள் வரை பலதரப்பட்ட மக்களும் வந்துபோகும் ஓர் இடம். 🥙பூந்தி லட்டு முதல் சமோசா வரை சிற்றுண்டிகள் தேநீர், சர்பத், நெல்லிகிரஸ் இட்லி, இடியப்பம், புட்டு, தோசை போன்றனவும் பரோட்டாவும், தற்போது இரவினில் மரக்கறி கொத்தும் கிடைக்கின்றது. கடை முதலாளியான நண்பர் ஜீவன் அண்ணாவிடம் "லாபத்தினை கொஞ்சம் கூட வைச்சு விற்கலாமே" எண்டு கேட்டதற்கு.. 🍳"இந்தக் கடைக்கு எல்லா தரப்பு மக்களும் வாறவை லாபத்தினை அதிகமாக்கினால் நம்பி வாற கஷ்டப்பட்ட சனம் பாவம் எண்டு சொன்னார்." 🥘அது மட்டும் இல்லை, புகையிலை பொருட்களை ஏன் நாம் விற்கவில்லை, என்று இந்தக் கடை நடத்துபவர்கள் காட்சிப்படுத்தியிருக்கும் காரணங்கள் அவர்கள் இந்த இளைய சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறையினையும் காட்டி நிற்கின்றது. 🍲இப்படி சமூக அக்கறையுடன் குறைந்த லாபத்தில் தொழில் செய்வோரை நாமும் எம் மக்களிற்கு அடையாளம் காட்டுவோம். 🍛உங்களுக்குத் தேவைப்படின் நேரடியாகவே கடைக்கு சென்று அங்குள்ள சிற்றுண்டிகளினை சாப்பிட்டுப் பார்த்தது பிடித்திருந்தால், முன்கூட்டியே ஓடர் செய்து பெற்றுக்கொள்ளலாம். தொடர்புகளுக்கு : 077 275 9799 வேலைக்கு ஆட்கள் தேவை என்றும் கடைக்கு வெளியே போட்டிருக்கிறார்கள். வேலை தேவைப்படுவோரும் தொடர்புகொள்ளவும்.. Copy post https://www.facebook.com/share/p/1H1Lgi63e7/
  3. Am an atheist - சோம.அழகு தமிழ் வகுப்புகள் செம்மையாக நடந்து கொண்டிருந்தன. என் வகுப்பைச் சற்று சுவாரஸ்யமாக்கும் பொருட்டு பாடதிட்டத்தைத் தாண்டி சில விஷயங்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரத் தொடங்கினேன். தமிழின் தொன்மையைப் பற்றி, அத்தொன்மையைப் பறைசாற்றும் விதமாகக் கிடைத்திருக்கும் கீழடி, ஆதிச்சநல்லூர் சான்றுகள் பற்றி, பழமையானதாகக் கருதப்படும் லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகள் மற்றும் கொரியன், ஆங்கிலம் போன்ற இன்ன பிற மொழிகளிலும் காணப்படும் தமிழ்ச்சொற்கள் பற்றி, பாவாணரின் சொல்லாராய்ச்சி மற்றும் வேர்ச்சொல் ஆராய்ச்சி பற்றி, தமிழர் நாகரிகம் பற்றி, பழைய சங்கப்பாடல்களில் மிக இயல்பாகத் தென்படும் அறிவியல் உண்மைகள் பற்றி…. என நீண்டது எங்கள் உரையாடல். சமீபமாக ஒவ்வொரு வகுப்பின் போதும் பாடப்புத்தகத்தில் ஒரு பாடம் நடத்தி முடிக்கும் வரை ‘எப்போதடா முடியும்?’ என வேறு வழியின்றி ரொம்ப கஷ்டப்பட்டுப் பொறுத்துக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர், பாடம் முடிந்த உடன் மீதமிருக்கும் நேரத்தில் மேற்கூறிய தலைப்புகள் குறித்து இன்னும் இன்னும் என்னைப் பேசச் சொல்லிக் கேட்பார்கள். பத்து பன்னிரெண்டு வயதிற்கே உரிய அவர்களது ஆர்வமும் ஆவலும் எனக்கான உந்துதலாக அமைந்தன. அவர்களிடம் ஒவ்வொரு விஷயம் குறித்தும் ஏராளமான கேள்விகள் இருந்தன. அதிர்ஷ்டவசமாக பெரும்பாலானவற்றிக்கு என்னிடம் பதிலும் இருந்தன. அல்லாதவற்றிற்கு மறு வாரம் விடை தேடிச் சொல்வேன். தமிழின் சிறப்புகள் குறித்துப் புதிய தகவல்களைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரது கண்களும் ஆச்சரியத்தில் விரியும். ஒரு முறை தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற சொற்கள் ஐந்தேனும் கண்டுபிடித்து வரும்படி வீட்டுப்பாடம் தந்திருந்தேன். கூகுள் யுகத்தில் இது ஒன்றும் கடினமான பணி அல்ல என்பதால் எல்லோரும் எழுதிக் கொண்டு வந்தார்கள். அதில் ஒருவள் ‘அவ்வை 🡪 Eve’ என எழுதியிருந்ததைப் பார்த்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்கவில்லை எனக்கு. இது பொதுவாக கூகுள் காட்டும் பட்டியல்களில் வராது. தான் எழுதியது தவறோ என தயங்கிக் கொண்டிருந்தவளை வெகுவாகப் பாராட்டி ஆதனும் அவ்வையும் தாம் Adam Eve என்று கூறவும் அது குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஆயத்தமாகும் பொருட்டு வேக வேகமாக புத்தகத்தை மூடினார்கள். சிரித்தவாறே சொல்லத் துவங்கினேன். சில வருடங்களுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய கட்டுரைகளை விரும்பிப் படித்தது மிகச் சரியாக அன்று நினைவிற்கு வந்து கைகொடுத்தது. Edward Seuss என்னும் ஆஸ்திரிய புவியியல் வல்லுநர், அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன் தெற்கில் இருந்த மிகப் பெரிய நிலப்பரப்பிற்கு (இன்றைய தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, அண்டார்டிகா ஆகியவற்றை உள்ளடக்கியது), ‘கோண்டுவானா’ எனப் பெயரிட்டது; அங்கு ‘லெமூர்’(தேவாங்கு) என்ற உயிரினம் இருந்ததால் உயிர் நூலார் அப்பகுதியை ‘லெமூரியா’ என அழைக்கத் துவங்கியது; மனித இனம் லெமூரியாவில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி Ernst Haeckel கூறியது; இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த லெமூரியா ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு கடற்கோளால்(சுனாமி) அழிந்ததில் தப்பிய பகுதிதான் குமரிக் கண்டம் என்று தமிழ் மொழி வல்லுநரும் வரலாற்று ஆய்வாளருமான கா. அப்பாதுரையார் கூறியது; மனித இனம் மொத்தமும் ஒரே பெற்றோரிலிருந்துதான் தோன்றியது என்றும் அந்த ஆதிப் பெற்றோர் அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றும் நிறுவிய பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் முனைவர் ஸ்பென்ஸர் வெல்ஸ், தமிழ்நாட்டிற்கும் வந்து மரபணு ஆராய்ச்சி செய்து இந்திய நிலப்பரப்பில் முதலில் வந்தது திராவிடர்கள் என்று கண்டுபிடித்தது; பைபிளிலும் திருக்குரானிலும் வரும் ஆதாம் ஏவாள் பூமியில் இருந்தததாகக் கூறப்படும் இடமான ‘செரந்தீப்’ என்பது இந்தியாவுடன் அப்போது இணைந்திருந்த இலங்கை என அறிஞர்கள் சுட்டுவது; இன்றும் குமரி மாவட்டத்தில் குறத்தியறை, தாழக்குடி மற்றும் முப்பந்தல் ஆகிய மூன்று இடங்களில் தாய் வழிபாட்டின் தொடர்ச்சியாக இருக்கும் அவ்வையாரம்மன் கோவில்கள்; அவை புலவர் ஔவையாருக்காகக் கட்டப்பட்டிருப்பதாகத் தவறாகக் கருதப்படுவது; சங்க கால ஔவை, ‘ஆத்திசூடி’ பாடிய ஔவை, ‘ஞானக் குறள்’ பாடிய ஔவை ஆகிய இம்மூவருக்கும் குமரிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாதது…. என ஞாபகமிருந்தவரை எல்லாவற்றையும் அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் கூறினேன். மிகுந்த ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். தாம் மிகப் பெரிய நாகரிக்கத்திற்குச் சொந்தக்காரர்கள் என்ற பெருமிதத்தை ஓரளவு அவர்களிடம் விதைத்து விட்ட திருப்தி! அவர்களின் அறிவுத் தேடலை விரிவுபடுத்தவும் வாசிப்பை அதிகரிக்கவும் என்னால் இயன்ற சிறு முயற்சி. அவ்வளவே! “இப்போது உங்கள் முறை. நீங்கள் வாசித்ததில் உங்களுக்குப் பிடித்தவை பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று அவர்களைத் தமிழில் உரையாட வைக்கும் முனைப்பில் கூறினேன். வரிசையாக ஒவ்வொருவராகக் கூறிக் கொண்டு வர ஒருவள், “விஷ்ணுவின் அவதாரங்கள் குறித்த புத்தகம் ஒன்றை வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது” என்றாள். “விஷ்ணுவின் முதல் அவதாரம்?” என்ற என் கேள்விக்கு, “மத்ஸ்ய அவதார்… that fish one” என்றாள். “இவ்விடத்தில் ஒரு ஒப்புமை உண்டு. மீன் உருவில் வந்த விஷ்ணு மனுவிடம் பிரளயம் ஒன்று வரப்போவதைக் குறித்து எச்சரிக்கவும் மனு பெரிய படகு ஒன்றைத் தயார் செய்து அதில் தனது குடும்பத்தினர், ரிஷிகளின் குடும்பத்தினர், ஒன்பது வகையான விதைகள், விலங்குகள் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு தப்பித்தார். பைபிளின் ‘நோவாவின் பேழை’ கதையும் கிட்டத்தட்ட இதுதான். நோவாவிற்கும் கடவுள் தான் ஏற்படுத்தப் போகும் பேரழிவைப் பற்றிக் கூறி கப்பல் ஒன்றில் நோவாவின் குடும்பம், அனைத்து உயிரினத்திலும் ஆண் ஒன்று பெண் ஒன்று, அனைவருக்கும் தேவையான உணவு எனத் தயார் செய்து கொண்டு தப்பிக்கும் வழிமுறையைச் சொல்வார். மனுவிற்கும் நோவாவிற்கும் அக்கட்டளைகள் மிகச் சரியாக ஏழு நாட்களுக்கு முன்பு தரப்படும். Noah, Navy போன்ற சொற்கள் ‘நாவாய்’ என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தவையே. இந்தப் பெருவெள்ளக் கதைகள் சுமேரிய மற்றும் பாபிலோனிய நாகரிகம், அமெரிக்காவின் மயன் இனத்தவர், ஆப்பிரிக்காவின் யொரூபா இனத்தவர் என அனைவரிடத்தும் உண்டு. ஆனால் கடல் கொண்ட இடம் என்பதற்கான சான்று ‘குமரிக் கண்டம்’ என நம்மிடம் ஆணித்தரமாக உண்டு” என்று சொல்லி முடிக்கவும்….. “Aunty! How do you know so much?” என்று கேட்டாள் அச்சிறுமி. “நிறைய எல்லாம் இல்லடா… ஏதோ கொஞ்சம் வாசிச்சதிலிருந்து சொன்னேன். நீங்களும் நிறைய வாசிங்க” என்று ஊக்கப்படுத்தினேன். “Aunty! Have you read the whole Bible?” என்று இன்னொரு சிறுவன் கேட்டான். “இல்லை” என்றேன் சிரித்தவாறே. “Then which holy book have you read completely?” – கேள்விகள் தொடர்ந்தன “எதையும் அல்ல. ஆனால் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்கப் பிடிக்கும். அதன் பொருட்டு எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். வெவ்வேறு கலாச்சாரங்களில் தென்படும் ஒற்றுமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முயற்சியில் கிடைத்த சில தகவல்கள் இவை. எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு துளி கடல்” என்று மறுமொழிந்தேன். “வேறென்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?” “கிருஷ்ண அவதாரத்திற்கும் மோசஸ்க்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இருவருமே கால்நடை மேய்ப்பாளர்களாக இருந்தனர். கம்சனைப் போன்ற அரசன்தான் பார்வோன். இரண்டு பேருமே தத்தமது ராஜ்யத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொல்ல ஆணையிட்டிருந்தனர். கிருஷ்ணன் மற்றும் மோசஸின் தாயார்கள் தத்தமது குழந்தைகளை ஆற்றில் விட்டனர். குந்திதேவி – மேரி மாதா, சிறுதொண்ட நாயனார் – ஆபிரகாம், சீதை – கிரேக்க புராணத்தில் வரும் Persephone…. என எனக்குத் தெரிந்த சில இவை” “Aunty! You talk about everything. Which religion do you belong to?” “Am an atheistடா” “Wow!” – ஒரே குரலில் சிலரது வியப்பு வெளிப்பட்டது. “சரி! அடுத்து யாரு பிடிச்ச புத்தகத்தைப் பற்றி சொல்லப் போறீங்க?” அடுத்ததாக ஒரு சிறுமி ஹாரி பாட்டரை களத்தில் இறக்க அதன் பிறகு முழுமையாக அவர்களின் பேச்சைக் கவனிக்கலானேன். வகுப்பு முடிந்து கலைந்து செல்கையில் “Aunty! Could you share more stories next week too? Both historical and mythological ones. Also we would like to know a bit more about etymology.” “கண்டிப்பா டா. நான் இன்னும் நிறைய வாசிக்கணும் அப்போ. அடுத்த வாரம் பார்ப்போம்” என்று கலைந்து சென்றோம். ************************** இப்ப என்னாச்சுன்னா மக்களே….. மறுநாள் மாலை எனக்கு ஒருங்கிணைப்பாளரிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. முந்தைய நாள் வகுப்பைப் பற்றி எதார்த்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் மெல்ல விஷயத்தைப் போட்டு உடைத்தார். “அது…. ஒண்ணுமில்ல… ஒரு complaint வந்துருக்கு” மனதினுள் வேகமாக ஒரு முறை ஓட்டிப் பார்த்தேன். சர்ச்சைக்குரிய கருத்துகள் எதுவுமே இடம் பெறவில்லையே! “என்னாச்சு சார்?” “நீங்க ஏதோ கடவுள் இல்லனு சொன்னதா…. ஒரு parent கொஞ்சம் hurt ஆகிட்டாங்க” ங்கே…. எதே?! “கடவுள் இருப்பைப் பற்றியோ மறுப்பைப் பற்றியோ பேசவே இல்லையே” என்றபடி வகுப்பில் நடந்தவற்றை ஒன்று விடாமல் ஒப்பித்தேன். சட்டென விஷயம் முழுவதும் புரிந்து கொண்டவராக “ஓ! ஓகே! ஓகே! விடுங்க பாத்துக்கலாம்” என்றபடி நடந்ததை விளக்கினார். வகுப்பில் உள்ள ஒரு குழந்தை வீட்டினரிடம் “கடவுள்ன்னு ஒண்ணு உண்டா?” என்று கேட்டிருக்கிறது. அநேகமாக ‘atheist’ஐ கூகுள் செய்திருக்க வேண்டும். அல்லது தானாக யோசித்திருக்க வேண்டும். அந்தப் பெற்றோர் அந்த ஒற்றைக் கேள்வியின் காரணத்தை அறிய முயன்று ஆராய்ச்சியின் முடிவாக அவர்கள் கண்டுகொண்டது – நான் ‘கடவுள் மறுப்பு’ பிரசங்கம் செய்திருக்கிறேன். எனக்குச் சிரிப்புதான் வந்தது. அக்குழந்தையைக் குறை சொல்லவே முடியாது. யோசிக்கும் திறன் பெற்ற எந்த உயிரினத்திற்கும் இயல்பாக எழும் கேள்வியைத்தான் கேட்டிருக்கிறான்/ள். “ஒரு குழந்தை கேட்ட கேள்விக்கு என் தனிப்பட்ட தெரிவைக் கூறினேன். இதுக்கெல்லாமா offend ஆவாங்க? வகுப்பில் வரலாறு மற்றும் நாகரிகம் சார்ந்த எவ்வளவோ கருத்துகள் தகவல்கள் பரிமாறப்பட்டன. அந்த ஒரு வார்த்தைக்கு இந்தப் பாடா?” “குழந்தைகளின் சிந்தனைத் திறன் சரியாகத்தான் இருக்கிறது. அதைச் சரியாகக் கையாளுபவர்களால் ஆன சூழல் பெரும்பாலும் அவர்களுக்கு அமைவதில்லை. இனிமேல் நான் பாத்துக்குறேன். உங்களைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் என்ன நடந்தது என்று ஒரு வார்த்தை சம்பிரதாயமாகக் கேட்டேன்” – நிதானமாகப் பேசிய அவர் தீவிரமான கடவுள் நம்பிக்கையுள்ளவர். ஆனால் பகுத்தறிவாதிகளையும் மதிக்கும் பக்குவம் வாய்க்கப் பெற்றவர் – “வக்கீலு… ஆனா நல்லவரு” என்ற பாபநாசம் பட வசனத்தோடு நோக்கற்பாலது. ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார் ஒருங்கிணைப்பாளர். ஒரு வகுப்பில் முதல் திருக்குறளைச் சொல்லி அதற்குப் பொருள் விளக்கம் அளிக்கையில் ‘ஆதி பகவன்’ என்பது சிவபெருமானைக் குறிப்பதாக ஆசிரியர் ஒருவர் கூறியிருக்கிறார். கிறிஸ்தவ குடும்பத்தைச் சார்ந்த அவ்வகுப்புக் குழந்தை ஒன்றின் பெற்றோருக்கு மனம் புண்பட்டு, சொல்லாமல் கொள்ளாமல் வகுப்பை விட்டு நிறுத்திவிட்டார்களாம். சில பல மாதங்களுக்குப் பிறகுதான் வேறொருவர் மூலம் தெரிய வந்ததாம். பரிமேலழகரின் வழித் தோன்றலான அந்த ஆசிரியர் பரிமேலழகரையே ஒரு எட்டு முந்திச் சென்று கொடுத்த விளக்கம் ஒரு பறக்கோடி என்றால் பிள்ளையைப் பள்ளியிலிருந்து நிறுத்தியது இன்னொரு பறக்கோடி. போகிற போக்கைப் பார்த்தால் தேம்பாவனி, சீறாப்புராணம், தேவாரம் போன்றவற்றையும் சமயம் சார்ந்தவை என்ற ஒரே காரணத்திற்காகப் புறக்கணித்துவிடுவார்கள் போலும். ஜெய் அல்லா! கந்தனுக்கு ஸ்தோத்திரம்! பொசுக் பொசுக்கென்று புண்பட்டுவிடுகிறார்கள் மனிதர்கள். மாற்றுக் கருத்துக்கு இடமே அளித்துவிடத் துணியாத ஒரு அற்புதமான தலைமுறையை வளர்த்தெடுக்கிறார்கள். நல்லவேளை! ஜியார்டானோ புருனோ, கலீலியோ போன்றோரின் காலங்களில் நான் பிறக்கவில்லை! ********************* இதை அப்பாவிடம் பகிர்ந்த போது, “It happens. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே” என்றார்கள். “ஆனாலும் அமெரிக்காவில் இதை நான் எதிர்பார்க்கல” என்றதற்கு, “அமெரிக்காவில் இருப்பவர்களுக்கெல்லாம் அந்த உலகம் மனதை விசாலமாக்கிப் பக்குவப்படுத்தி….” என்ற எனது பொதுப்புத்தியை “வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்” என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லிச் சிரித்தார்கள் அப்பா. தாம் இத்தாலியில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் உடன் பணிபுரிந்த எலெயனோரா அவர்களின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார். அர்ஜெண்டினாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் ஆய்வுப் படிப்பை முடித்து இத்தாலியில் வசிக்கும் அவர், “அமெரிக்காவைப் பொறுத்த வரை, உலகெங்கிலும் என்று கூட வைத்துக் கொள்ளலாம்… நீங்கள் வேறு மதத்தைச் சார்ந்தவர் என்பதைக் கூட ஏற்றுக் கொள்வார்கள். நாத்திகவாதி என்பதைத்தான் மிகப்பெரிய குற்றமாகப் பார்ப்பார்கள்” என்றார்களாம் அப்போதே. அதாவது தனது மூட நம்பிக்கைகள் இல்லாவிட்டாலும் அதற்கு ஒப்பான வேறு ஏதோவொரு கட்டமைப்பில் சக மனிதன் இயங்குவது வரை எம்மனிதனுக்கும் பிரச்சனை இல்லை. அவ்வாறாக எதுவுமே இன்றி ஒருவர் அடிப்படை அறிவுடன் வலம் வந்தால் பிறருக்கு மனம் புண்பட்டு சீழ் வைத்து நமநமத்துவிடும். அதானே? அமெரிக்கர்களே இப்படி என்றால் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் பரந்துபட்டதொரு பார்வையை எதிர்ப்பார்த்த என் மடமையைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். பிறகு நிதானமாக அத்தருணத்தை மீண்டும் மனதில் ஓட்டிப் பார்த்தேன். “Aunty! Which religion do you belong to?” ஏதாவதொரு மதத்தைச் சொல்லியிருக்கலாமோ? எப்படி முடியும்? உதாரணமாக, ஒரு கற்பனையான சூழல் – அரசியல் கலந்துரையாடல் நிகழ்கிறது. எதேச்சதிக்காரத்தையும் சர்வாதிகாரத்தையும் ஆதரித்து பேச வந்தவர்கள் பெரும்பாலானோர் அதைத் தூக்கிப் பிடிக்கும் கட்சியின் பெயரை வெளிப்படையாகப் போட்டுக் கொள்ள நாணி ‘விமர்சகர்’, ‘ஆய்வாளர்’, ‘செயற்பாட்டாளர்’ என வித விதமான முகமூடிகளை அணிந்து கொள்வர். இப்போது நான் பசப்பியவாறே கழுவுற நீரில் நழுவுற மீனாகப் பேசிக் கொண்டிருந்தால், ஃபாசிசத்தையே கொள்கையாகக் கொண்ட கட்சியின் சாயத்தையோ பாயாசம் கிண்டும் தற்குறி கட்சியின் சாயத்தையோ (இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பது ஒரு புறம் இருக்கட்டும்!) யாரேனும் என் மீது பூச எத்தனிப்பார்கள். அவசர அவசரமாக பதற்றத்தோடு அதை மறுதலிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பதில் முதலிலேயே ஒழுங்கு மரியாதையாக கருப்புச் சாயத்தைப் பெருமிதத்துடன் பூசி எனது அடையாளத்தை வெளிப்படுத்துவது உசிதம் அல்லவோ? இதே சூழல்தானே அதுவும். பொதுவாக பகுத்தறிவாளர்கள் யாரிடமும் போய்த் தாமாக அறிவித்துக் கொண்டு திரிவதில்லை. நானும் முடிந்த வரை வெகுசனத்தில் கரைந்து போகவே முயல்வேன். ஆனால் இப்படி நேருக்கு நேர் ஒரு கேள்வியை எதிர்கொள்ளும் போது சும்மானாங்காட்டி ஏதோ ஒன்றைச் சொல்லி வைக்க மனம் ஒப்பவில்லை. “நீங்கள் வலதுசாரியா?”, “முதலாளித்துவத்தை ஆதரிப்பீர்களா?”, “அடிமைத்தனம் சரிதானே?”, “மூடத்தனங்களை ஏற்றுக் கொள்வீர்களா?”, “சாமி கும்பிடுவீர்களா?” – இவற்றுக்கு எப்படி “எப்போதாவது” என்று பதில் கூற முடியும்? வளைந்து நெளிந்து குழைந்து என் ஆளுமையை விட்டுக்கொடுத்து என்னை இழக்க வேண்டிய அவசியம்தான் என்ன? NO, THANK YOU! மனம் சங்கெடுத்து முழங்கியது – “Am an atheist”.
  4. செவ்வந்தியில் செவ்வந்தி --------------------------------------- எங்கள் வீட்டு செவ்வந்தியில் செவ்வந்திப் பூ ஒன்று வந்துள்ளது என்று ஒருவர் இன்னொருவரிடம் சொன்னார் 'செவ்வந்தியில் செவ்வந்திப் பூவா..........' என்று ஆச்சரியப்பட்ட அடுத்தவரிடம் இது பரமரகசியம் எங்கும் பகிரக்கூடாது என்று சத்தியமும் கேட்கப்பட்டது அடுத்த அடுத்த நாளும் இருவரும் செவ்வந்தியும் பூவும் என்று இரகசியமாக பேசிக் கொண்டனர் மூன்றாவது நாளில் மூன்றாவது நபர் ஒருவர் செவ்வந்தி செவ்வந்தி என்றார் இவரைப் பார்த்து இப்படியே பலருக்கும் இது தெரிந்திருந்தது இவருக்கு தெரிய வர அவருடன் உறவு முறிந்தது பூ காய்ந்து செடி காய்ந்து மண்ணோடு மண்ணாக கலந்து போனது எப்போதும் போலவே முறிந்த உறவும் முறிந்தே கிடக்கின்றது ஒரு ரகசியம் என்று எவராவது ஆரம்பித்தாலே நான் காதுகளை மூடிக் கொள்கின்றேன்.
  5. உங்கள் பின்னூட்டத்தை முழுவதுமாகப் படியெடுத்து சோம.அழகுவிற்கு அனுப்பி விட்டேன். நன்றி.
  6. பிற‌த‌ர் ஒரு கிழ‌மை பொறுத்து பாருங்கோ புள்ளிப் ப‌ட்டிய‌லில் எங்கை நிக்கிறேன் என்று இப்ப‌ 5 போட்டி தான் ந‌ட‌ந்து முடிந்து இருக்கு.............இன்னும் 67 போட்டி இருக்கு , அதோட‌ குறுக்கு ம‌றுக்கு கேள்விக‌ள் ப‌ல‌ இருக்கு ஏதாவ‌து ஒரு போட்டியில் அதிக‌ ர‌ன்ஸ் அடிக்கும் அணி...................கூட்டி க‌ழிச்சு பார்த்தால் க‌ட‌சியில் நான் சொல்வ‌து ச‌ரியா வரும்....................
  7. இவர்களுக்கு கட்டளை இட்ட சரத் பொன்சேகா, கோத்தபய அடுத்த பட்டியலில் வர வேண்டும். அலி சப்ரி, சரத் வீரசேகர அளவுக்கு துள்ளுகிறார். கரி ஆனந்தசங்கரி மேற்படி செயலை பாராட்டியதாக அறிந்தேன்.
  8. சோம அழகு அவர்களின் தமிழ் சேவை பாராட்டுதலுக்குரியது! ஆனால், சிறார்களின் தமிழின் மீதான ஆர்வத்தை போலி விஞ்ஞானத்தை முன்வைத்து உருவாக்குவது நல்ல விடயமாகத் தெரியவில்லை. எபிரேயத்தில் இருக்கும் "ஆதாம், ஈவ்" போன்ற சொற்கள் தமிழில் இருந்து தான் அங்கே சென்றன என்பதும், ஆதாமும் ஏவாளும் வாழ்ந்த இடம் "செரண்டிப்" என பைபிளில் இருக்கிறது (பைபிளில் செராபிம்- Seraphim என்ற தேவதைப் பெயர் தான் இருக்கிறதேயொழிய செரண்டிப் என்ற பெயர் எங்கேயும் இல்லை) அது இலங்கை/இந்தியாவின் தென்முனை என்பதும் கோராவில் எந்த ஆதாரங்களுமில்லாமல் பரப்பப் பட்டுக் கொண்டிருக்கும் போலி விஞ்ஞானக் கருத்துக்கள். குமரிக் கண்டமும் அப்படியானது தான். இதை பற்றி இங்கே பல ஆண்டுகள் முன்பே விவாதித்திருக்கிறோம். இப்படியான போலி விஞ்ஞானத்தின் பால் அடுத்த தலைமுறையை ஈர்க்க எந்த தமிழ் ஆசிரியரும் உதவக் கூடாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்!
  9. சிறுமி…. கண்டோஸ் எடுத்து இருந்தால், அதனை பெற்றோருக்கு தெரியப் படுத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து…. கட்டி வைத்து, சிறுநீர் கழிக்கும் வரை… வயரால் தாக்கும் உரிமையை கடைக்காரருக்கு யார் கொடுத்தது. சிறுமி மீது தாக்குதல் நடத்திய கடைக்காரர் மீது பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  10. கிடைக்கும் உணவைப் பகிர்ந்து உண் ..........! 😍
  11. வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். வாழும்வரை போராடு....... 01. யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருக்கும் அந்தப் பிரமாண்டமான கோட்டை போத்துக்கேயரால் முற்றிலும் மனித வலுவைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. அது பகலில் மிகவும் அழகாகவும் இரவில் மிக மிகப் பயங்கரமாகவும் தோற்றம் தரும். அந்த மாலை நேரத்தில் சூரியன் தன் பொற் கதிர்களைத் தெறிக்கவிட்டு மறைவதையும், அதே நேரத்தில் வெண்ணிலவு மேலெழும்புவதையும் சில காலங்களில் தரிசிக்க முடியும். அன்றும் அதுபோன்றதொரு நாள் அருகில் இருக்கும் முனியப்பர் கோவிலின் மாலைப் பூசையின் மணியோசை அந்த அமைதியை ஊடறுத்துக் கொண்டு கேட்கின்றது. அந்தக் கோட்டை மதிலின் கட்டில் இராகவன் அமர்ந்திருக்கிறான். கீழே புற்தரையில் சந்துரு சப்பாணி கட்டி சக்கப்பனிய உட்கார்ந்திருக்கிறான். இருவரின் கைகளும் அனிச்சயாய் கோவிலை நோக்கிக் கும்புடுகின்றன. கீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. அப் பெண்ணின் இடையழகும் கூடவே அசையும் பேரழகுகளும் பார்க்க ரசனையாக இருக்கின்றன . இராகவன் அவர்களைப் பார்த்தபடி சந்துருவிடம், என்னடா சந்துரு இனி என்ன செய்வதாய் உத்தேசம் என்று வினவுகிறான். --- அதுதாண்டா இராகவ் நானும் யோசிக்கிறேன். நாமிருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே பாடசாலையிலும் ஒரே வகுப்பிலுமாகப் படித்து பின் கல்லூரியிலும் சேர்ந்து படித்து அதுவும் சென்ற வாரத்துடன் முடிந்து விட்டது. --- ஓமடா சந்துரு, நாங்கள் கடந்து வந்த காலத்தை நினைத்தால் இனிமையாகவும் மலைப்பாகவும் இருக்குதடா. எங்களைப்போல் இவ்வளவு வகுப்புகள் சேர்ந்து படித்த பள்ளித் தோழர்கள் குறைவு என்னடா. --- உண்மைதான் இராகவ், இனி மேற்கொண்டு படிப்பதாய் இருந்தாலும் உனக்கு வசதியிருக்கு. உன் அப்பா தாமோதரம் கஸ்தூரியார் வீதியில் பெரிய நகைக்கடை வைத்திருக்கிறார். இனி நீ அந்தக் கடையைக் கூட உங்க அப்பாவுக்கு உதவியாய் பார்த்துக் கொள்ளலாம். நான் இனித்தான் என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும். சந்துரு நீ சொல்வது உண்மையென்றாலும் கூட, எனக்கு அப்பாவின் கடையைப் பார்த்துக் கொண்டு வேலை செய்வதில் கொஞ்சமும் ஈடுபாடில்லை. மேற்கொண்டு படிப்பதென்றாலும் உன்னளவுக்கு எனக்கு படிப்பு வராது என்றும் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முடிவு செய்து விட்டேன், நான் ஜவுளி வியாபாரம் செய்வதென்று. நீ விரும்பினால் நாமிருவரும் சேர்ந்துகூட இந்த வியாபாரம் செய்யலாம். இப்ப நான் உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். --- என்னடா இராகவ் புதிர் போடுகின்றாய். என்னவென்று சொல்லடா.........! வாருங்கள் போராடலாம் ......... 💪 .
  12. ஒரே ஒரு இழையில் தொங்கியபடி ஒரு சிலந்தி இருந்தது. எங்கிருந்தோ யாரோ சொன்னார்கள், சிலந்தி இருப்பது கூட்டுக்கு நடுவில் அல்லவா? சிலந்தியும் ஊடுபாவாக கூடு கட்டத் துவங்கிற்று. போதாக்குறைக்கு உலக வலைப்பின்னலிலும். ... இப்போதெல்லாம் அது கட்டிவிட்ட கூட்டிலிருந்து தப்பிவிடத் தான் எத்தனிக்கிறது ஆனால் சிக்கலுக்கு மேல் சிக்கலாகி இழைகளே அதை நெரிக்கின்றன அதன் கூக்குரலோ வலைப்பின்னல்களில் எதிரொலித்தாலும் யாருக்கும் கேட்பதாயில்லை. சுற்றும் முற்றும் பார்த்தால் தன்னைப் போலவே பல சிலந்திகள்... சிலதோ ஏதோ ஒரு உத்வேகத்தோடு, கழுத்தை நெரித்தாலும் - மேலும் மேலும் வலைகளைப் பின்னுவதும் தெரிகிறது. இப்போது சிலந்திக்குச் சிரிப்பும் வருகிறது வலையைப் பின்னப்போய் வாழ்க்கையை இழந்து விட்டேனே.
  13. அந்தப்பிள்ளை ஆட்டுக்கு குழை, விறகுக்கு கொப்பு அடுக்குப்படுத்தி தறிக்க சொல்லிச்சு. தறிக்கிறவர்கள் கூலி, விறகு வியாபாரம். எல்லோரும் சேர்ந்து அம்மணியின் தலையில மிளகாய் அரைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொத்துக்களை யாரும் அனுபவிப்பதை விரும்புவதில்லை, அதனாலேயே என்னவோ, பாடுபட்டு வீட்டைப்பராமரிப்பவர்களை திடுதிப்பென்று வந்து எழுப்பிவிடுகிறார்கள் சில புலம்பெயர்ந்தோர். எல்லாவற்றிற்கும் அனுபவம் வேண்டும். தங்கச்சியின் கணவரோடு ஆலோசித்து செய்திருக்கலாம். பலாக்கன்று வாங்கி நடலாம், அது வளர்ந்து வர எவ்வளவு காலம் எடுக்கும்? இன்னும் என்ன என்னத்தை கொண்டு போய்ச்சேர்க்கப்போகிறார்களோ? பயமாய் கிடக்கு.
  14. அந்த தார்மீகத்தை ஒத்துக்கிறேன்...அப்படி 100 அடித்துவிட்டால் இந்திய ரீம் இன்னுமொரு நல்ல வீரனை தேடியலைய வேண்டிவருமே அதுதான் கவலை உங்களுக்கும் செம்பாட்டனுக்கும் அருச்சுனா..என்.பி பி போல டீல் ஏதும் இருக்குதோ
  15. முதல்வருக்கு வாழ்த்துக்கள்... என்ன பிரியன் சார் ..இதைதான் சொல்லுரதோ...குருட்டு லக்கு..மாட்டன் மாட்டன் என்றிருந்த மனுசனை.வரிந்து இழுத்துவந்து போட்டியிலை பன்ங்குபெறவைத்தால் ..மனுசன்..ரணிலின் லெவெலில் நிக்குது😁
  16. கனடாவுக்கு 45 லட்சம் என்பது ரொம்ப கம்மியாக உள்ளதே?
  17. அடுத்த தடவை இந்த கடைக்கு போய் சாப்பிட்டு பார்ப்போம்...🧡 மாற்று கருத்துவைக்க வேணுமே என்று என்ட கை துடிக்கும் பொழுது ....🤣 பாரம்பரிய உணவான வடை,போண்டா,சூசியம் போன்றவற்றை குறிப்பிடாமல் 🤣....சமோஷா,பூந்திலட்டு போன்ற வட இந்திய உணவுகளை ஏன் விற்பனை செய்கின்றனர் .🤣
  18. GMT நேரப்படி நாளை புதன் 26 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RR எதிர் KKR 09 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 14 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் வீரப் பையன்26 நிலாமதி சுவி செம்பாட்டான் வாதவூரான் தமிழ் சிறி குமாரசாமி கோஷான் சே அகஸ்தியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு ஏராளன் ரசோதரன் நுணாவிலான் கிருபன் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  19. அப்பவே கேட்டேன். யார் கேக்கிறா. அது சரி, எங்கே அந்த கானா வரி மான் முதலுதவி என்று ஏதோ சொன்னீங்கள். நலம் நலம் அறிய ஆவல் நான் இங்கு சுகமே நீங்க அங்கு சுகமா
  20. 19 பேர்கள் குஜராத்துக்காக நின்றிருக்கின்றார்கள்.............. நாங்க தனிமரம் கிடையாது........... நாங்க ஒரு தோப்பு..................🤣.
  21. இவ்லோகத்திலே என்ன நடந்துகொண்டு இருக்கின்றது என்பது அடியேனுக்குப் புரியவில்லை. ஞான் தெரிவில், முதல் ஜந்துமே சரியாக. இப்பிடியே போனால் இந்த பிஞ்சு மனசு தாங்குமா. ஆனால் சுகம்மா இருக்கு இப்பொழுது எல்லோரும் வரிசை கட்டி வரலாம். அங்க இங்க பட்டுடும். கவனமாப் பாத்து வாங்க. ஒரு மாற்றத்துக்கு பஞ்சாப் என்ன செய்தவை என்று சொல்லிப் பாருங்க. மனதுக்கு இனிமையா இருக்கும். 🥰 உங்களுக்கு சசாங்க் சிங்கப் பற்றி தெரியேல போல. போன வருட ஜபில்லில் என்ன செய்தார் என்று பார்த்தா எல்லாம் புரியும்.
  22. ஶ்ரீதர் வண்ணப்படங்கள் எடுத்து நொந்து போய் இருந்த நேரம், கறுப்பு வெள்ளையில் அலைகள் படத்தை எடுத்து வெளியிட்டார். விஷ்ணுவர்த்தன் (நடிகை பாரதியின் கணவர்), சந்திரகலா நடித்திருந்தார்கள். இருவரும் எங்களுக்குப் புதுமுகங்கள். இந்தப் பாடலைப் பாடிய ஜெயச்சந்திரனின் குரலும் புதிதுதான். பாடலும் அமைதியாக இருக்கும், பாடல் காட்சியில் ஆர்பபாட்டம் எதுவுமின்றி விஸ்ணுவர்த்தனும் அமைதியாக நடித்திருப்பார். எனக்குப் பிடித்த படங்களில் அலைகள் படமும் ஒன்று. இன்று ஶ்ரீதர்,விஸ்ணுவர்ததன், சந்திரகலா,ஜெயச்சந்திரன் ஆகியோர் எங்களிடமில்லை. ஆனலும் இப்பொழுதும் எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
  23. குல்தீப்பின் வீச்சு எப்பிடி. ஒரு தொழில் முறை நேத்தியான சுழல்பந்து வீச்சாளரால் என்ன செய்ய முடியும் என்பது மீண்டும் நிருபனமாகியுள்ளது. 250 அடிக்க வேண்டிய ஆட்டம் ஒன்பது பேர் ஒரே புள்ளியுடன் இருக்கினம். முதல்வருக்கு துணைமுதல்வரை நியமிக்க அதிகாரம் இருப்பதாக கிருபனின் யாப்பு எண் 2.1.2 சொல்லுது. உபிசியாக. என்ன ரகசியப் பேச்சுவார்த்தையா. 😅😂
  24. நான் அங்கு நின்ற ஆறு மாதகாலத்தில் நடந்தவற்றை மேலோட்டமாக முன்னர் எழுதியிருந்தேன். அதனால் எழுதாமல் விட்ட சிலதை இப்ப எழுதினாலத்தான் ஒரு தொடர்ச்சி வரும் என்பதனால் எழுதுகிறேன். வீடு எல்லாம் எழுதி முடிந்து கணவரும் சென்ற பிறகு ஒரு வாரம் செல்ல, அடுத்தநாள் காலை வாங்கிய வீட்டுக்குச் செல்கிறேன். தாயும் அந்தச் சகோதரியும் நிற்கின்றனர். நான் வளவைச் சுற்றிப் பார்க்கிறேன். நாம் வாங்கும்போது இருந்ததைவிட வளவு குப்பையாக இருப்பதுபோல் எனக்குத் தெரிகிறது. வீட்டுடன் சேர்ந்து ஒரு பக்கத்தில் இரண்டு தூண்கள் எழுப்பி ஓடு போட்டபடி ஒரு இடம். அதைக் கடந்துதான் வெளியே உள்ள டொயிலெட்டுக்குப் போகவேண்டும். அந்தத் தூண்களில் இரண்டு மறி ஆடுகள் கட்டப்பட்டிருக்கு. மூன்று குட்டிகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்க ஆசையாக இருந்தாலும் ஆடுகள் கட்டியிருந்த இடம் பார்க்க அருவருப்பைத் தருகின்றது. ஆடுகள் முந்தி இருக்கேல்லையே. எப்ப வாங்கியது என்கிறேன். கன நாட்களாக வளர்க்கிறோம். நீங்கள் வீடு பார்க்க வந்தபோது வெளியே உள்ள வளவில மேயவிட்டனான். அம்மாவுக்கு ஆட்டுப் பால் தான் கொடுக்கிறது என்கிறார் சகோதரி. நாம் முதல்முதல் வந்தபோது ஒவ்வொன்றாகப் பார்க்கவில்லை. பார்க்கத் தோன்றவுமில்லை. நாம் வந்து பார்த்த முதல் நாள் இரு மருங்கும் செவ்வரத்தம் கன்றுகள் சடைத்து நின்றன. இப்போது பார்த்தால் அவை எல்லாம் ஆடுகள் கடித்து மொட்டையாகத் தடிகள் மட்டும் நிற்கின்றன. ஏன் தங்கச்சி ஆடுகடிக்க விட்டீர்கள் என்றதற்கு சின்னக் குட்டிகள் தானே இன்னும் கட்டத் தொடங்கேல்லை என்கிறார். வீட்டுக்குள்ளே சென்று பார்க்கலாமா என்கிறேன். ஓம் போய் பாருங்கோ என்று கூற ஒவ்வொரு அறையாகப் பார்த்துக்கொண்டு வர மூன்றாவது அறையில் இரண்டு கதவுகள் தெரிகின்றன. வெளிப் பக்கம் ஒன்று. உள்ளே இருந்து திறப்பதற்கானது அடுத்தது. நான் மின்விளக்கைப் போட்ட உடன் அறையில் அங்காங்கே ஆட்டுப் பிழுக்கைகள் தெரிய என்ன தங்கச்சி இது என்கிறேன். சின்னக் குட்டி எண்டதால அவை உள்ளேயும் வந்து படுக்கிறவை என்று சாதாரணமாகக் கூற, வீடு பழுதாப் போயிற்றுது உங்கள் வேலையால் என்று நான் கோபமாய்க் கூறுகிறேன். இன்னும் மூன்று மாதத்தில நாங்கள் போயிடுவம் என்கிறார் சகோதரி. இனிமேல் ஆடுகளை உள்ளே விடவேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறினாலும் அவர்கள் அதைக் கடைபிடிக்கப் போவதில்லை என்பது எனக்கு தெரிய, எதுவும் பேசாது வெளியேறுகிறேன். அதன்பின் ஒரு வாரம் தென்னைகள் தறித்து வளவைச் சுத்தம் செய்து முடிய பின்னர் உயிர் வேலிகளைத் தறித்துவிட்டு தகரவேலி அடைத்துவிட்டு, இருந்த கிழுவைகளை பின்பக்க தகர வேலியின் உள்ளே அரை அடி தள்ளி ஊன்றும்படி சொல்ல முன்னர் தென்னை தறிக்க வந்த இருவருமே அந்த வேலையையும் செய்கின்றனர். தென்னைகள் எவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளாகத் தண்ணீரே விடவில்லை. மழைத் தண்ணீர் மட்டும்தான். அதனால் செழிப்பற்று இருக்கு. புற்கள் மட்டும் பெரிதாக வளர்ந்திருக்கு. பலதும் முட்கள் உள்ள செடிகளாகவும் இருக்கு. அதனால் வேலைக்கு வந்த இருவருமே இரண்டு நாட்கள் பெரிய புற்களைச் செதுக்கி முடிக்கின்றனர். வீட்டின் ஒரு பக்கம் கிட்டத்தட்ட நான்கு பரப்பு நிலம் தோட்டம் செய்யக்கூடிய நிலையில் இருக்கு. ஆனால் ஒருமிளகாய்க் கன்று கூட அவர்கள் நட்டிருக்கவில்லை. அந்த நிலத்தை உழவு இயந்திரத்தினால் உழுதுவிடு என்று கணவர் கூற 6000 ரூபாய்க்கு ஒருவரைக் கூப்பிட்டு உழுதால் மண் சம நிலைக்கு வரவில்லை. அவரிடமே சிறிய மண்ணைச் சமப்படுத்தும் இயந்திரம் இருக்கிறதா என்று கேட்க தன்னிடம் இல்லை என்று வேறு ஒருவரை ஒழுங்குசெய்து தருகிறார். அவருக்கு 4000. அதில் ஏதாவது பயிர் வைப்போமா என்று கணவருடன் கதைத்தால் அது நாங்கள் போய் இருக்கும்போது வைக்கலாம் என்கிறார். பின்பக்கம் முழுதும் வாழைகள். அதுவும் பாராமரிக்கப்படாமல் இருக்கு. அவர்கள் வீட்டை விட்டு எழும்பும் மட்டும் பேசாமல் இரு என்கிறார் மனிசன். வீட்டின் பின்பக்கம் ஒரு பெரிய பலாமாரம். வலது பக்கத்தில் இன்னொரு பெரிய பலாவும் மாமரமும். நான் ஊஞ்சல் ஆடியபடி அந்த சகோதரியுடன் கதைத்துக்கொண்டு இருக்கிறேன். “இந்தப் பலாமரத்தையும் தறியுங்கோ அன்ரி” “ஏன் நல்ல வடிவாத்தானே இருக்கு மரம்” “இல்லை அன்ரி. மரம் உள்ளால கோறையாப் போச்சு. வீட்டுக்குமேல சரிஞ்ச விழுந்தால் உங்களுக்குத்தான் வீண்செலவு” “மரத்தைப் பார்த்தால் அப்பிடித் தெரியேல்லையே” “மரம் ஒரு காய் கூட இப்ப ஐந்தாறு வருஷமாக் காய்க்கவுமில்லை” நான் இறங்கிப் போய் மரத்தைச் சுற்றிப் பார்க்கிறேன். "பெரிதாக கோறையானமாதிரித் தெரியவில்லையே” “உங்களுக்கு வெளியில தெரியாது. உள்ளுக்குள்ள சரியாப் பழுதாக்கி இருக்கும். நான் சொன்னதைச் சொல்லீற்றன். உங்கடை வீடு. உங்கடை விருப்பம்” அடுத்தநாள் தென்னை தறித்தவர்களைக் கூப்பிடுகிறேன். என் நண்பரின் அம்மா வீட்டில் வேலை பார்ப்பவர்கள் என்பதால் அவர்கள் மேல் கடும் நம்பிக்கை. “இந்தப் பிலாமரம் கோறை பத்திக் கிடக்கு என்று அந்தப் பிள்ளை சொல்லுறா. ஒருக்காப் பாருங்கோ தம்பியவை” “ஓமம்மா. வெட்டுறதுதான் நல்லது” “கனகாலமா காய்கவும் இல்லையாம். சரி அப்ப வெட்டுங்கோ” “மரத்தை எங்கையம்மா போடுறது” “வெட்டுங்கோ முதல்ல பிறகு ஆரன் விறகுக்குக் கேட்டால் குடுப்பம்” “நான் பெரிய துண்டுகளைக் கொண்டு போகட்டே” “எப்பிடிக் கொண்டு போவியள்” “லான்ட்மாஸ்டர் கொண்டுவந்து ஏத்துவம்” “கொண்டுபோய் என்ன செய்வியள்? லாண்ட்மாஸ்டர் பிடிக்கிற காசுக்கு அங்கினையே விறகுகள் வாங்கிப்போடலாமே” “இப்ப விறகு சரியான விலையம்மா” “பிலாவிலையளையும் சின்னக் கொப்புகளையும் நான் எடுக்கிறன் அன்ரி. பிலாவிலை ஆடுகளுக்கு நல்ல சத்து, நல்லாப் பால் சுரக்கும்” எனக்கு உள்ளுக்குள் சரியான மகிழ்ச்சி. தானாகவே வளவு சுத்தமாகுதே என்று. பலாமரம் வெட்டி முடிந்து அவர்கள் மரங்களைத் துண்டுபோட்டு லாண்ட்மாஸ்டரில் ஏற்றிக்கொண்டு இருக்கும் போது என் ஓட்டோ வருகிறது. “ஏனக்கா உதை வெட்டினனீங்கள்? ஓட்டோக்காரர் கேட்கிறார். கோறையாயிற்றுது என்று இவ சொன்னா. அதோடை காய்கிகிறதும் இல்லையாம். என்கிறேன். அவர் சென்று மரங்களைப் பார்த்துவிட்டு வந்து அவசரப்பட்டிட்டியள் அக்கா என்கிறார். எனக்கும் ஏதோ ஒருமாதிரி இருந்தாலும் மரம் வெட்டியாச்சு இனி ஒண்டும் செய்ய ஏலாது என்று மனதைத் தேற்றிக்கொள்கிறன். ஓட்டோவில் செல்லும்போது அவங்கள் பலாமரத்தைக் கொண்டுபோய் நல்லவிலைக்கு விப்பாங்கள். அதுதான் அவங்களும் சேர்ந்து வெட்டியிருக்கிறாங்கள் என்கிறார். சரி விடுங்கோ. காய்க்காத மரத்தை வச்சிருந்து என்ன பலன் என்கிறேன். மேலால கொஞ்சத்தை வெட்டியிருந்தாலே காய்க்குமே அக்கா. சரி வெட்டியாச்சு. இனிக்கதைச்சுப் பிரயோசனம் இல்லை. வாற கிழமையே ஒரு பலக் கன்றை நடுவம் என்று கூறுகிறேன்.
  25. சிறிலங்காவிலும் இம்முறையை பின்பற்றலாம்.
  26. 'என் மகனிடம் தோனி சொன்னது இதுதான்' - சிஎஸ்கே அணியை மிரட்டிய விக்னேஷ் புத்தூரின் தந்தை நெகிழ்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டிக்குப் பின்னர் விக்னேஷுடன் பேசிய தோனி கட்டுரை தகவல் எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை பதவி, பிபிசி தமிழ் 24 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர் "தோனி எனது மகனைப் பாராட்டியதைப் பார்த்துவிட்டு எனக்கு தூக்கம் வரவில்லை" என்று கூறுகிறார், மும்பை இந்தியன்ஸ் வீரர் விக்னேஷ் புத்தூரின் தந்தை சுனில் குமார். ஆட்டோ ஓட்டுநரின் மகனான விக்னேஷ் புத்தூர் மும்பை அணியின் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கி பலரின் பார்வையை ஈர்த்தார். சென்னை - மும்பை என இரு பெரும் சாம்பியன் அணிகள் மோதும் போட்டிகள் பொதுவாக "எல்கிளாசிகோ" அதாவது பெரும் எதிர்பார்ப்புக்குரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் இருதரப்பிலும் ஜாம்பவான் வீரர்கள் பலர் இருந்த நிலையில், இவர்கள் அனைவருக்கும் மத்தியிலும் 24 வயது இளைஞர் விக்னேஷ் தனது அழுத்தமான தடத்தை பதிவு செய்துள்ளார். பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 53 ரன்களை அடித்திருந்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்னேஷின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மெதுவாக வந்த பந்தை ஸ்ரெயிட் டிரைவ் ஆட முயல, பந்து பேட்டின் முனையில் பட்டதால் கேட்சாக மாறியது. அடுத்து ஷிவம் துபே, இதே போன்று ஃபுல்டாஸ் ஆக வந்த பந்தை சிக்ஸ் ஆக மாற்ற முயன்று ஆட்டமிழந்தார். இதிலிருந்து மீள்வதற்குள் தீபக் ஹூடாவின் விக்கெட்டையும் விக்னேஷ் வீழ்த்தியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மந்திரப் பந்து வீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் விக்னேஷ் 'தோனி பாராட்டியதைப் பார்த்து தூக்கம் வரவில்லை' பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,தந்தை சுனில் குமார் மற்றும் தாயார் பிந்துவுடன் விக்னேஷ் நேற்றைய போட்டியில் மும்பை அணி தோற்ற போதிலும், அறிமுக போட்டியிலேயே 4 ஓவர்களில் 32 ரன்களை வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியில் வளரும் நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் விக்னேஷ் புத்தூர். விக்னேஷின் இந்த ஆட்டம் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பிபிசி தமிழிடம் பேசிய அவரது தந்தை சுனில் குமார், போட்டிக்குப் பின்னர் தனது மகனை தோனி பாராட்டுவதைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் தனக்கு தூக்கம் வரவில்லை என்று கூறினார். "தோனி சார் எனது மகனை வெகுவாக பாராட்டினார். பெற்றோருக்கு வாழ்த்துக்களை கூறுமாறு தோனி எனது மகனிடம் கூறினார். இரவு 12 மணியளவில் போட்டி முடிவடைந்ததும், எனது மகன் எனக்கு போன் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்" என்கிறார் சுனில். தோனி தன்னைப் பாராட்டிய புகைப்படத்தை தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் பதிவிட்டுள்ளார். கேரளாவில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் சுனில் குமார், நேற்றும் வழக்கம் போல தனது ஆட்டோவை ஓட்டச் சென்றுவிட்டார். மாலை 5 மணியளவில் உறவினருக்கு போன் செய்த விக்னேஷ், இன்று தான் விளையாட வாய்ப்பிருக்கலாம் என கூறியிருக்கிறார். "உறுதியாகத் தெரியாவிட்டாலும், தன்னை நன்கு பயிற்சி எடுக்கச் சொன்னதால் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது" என விக்னேஷ் கூறியிருக்கிறார். இதனால், ஆட்டோ ஓட்டும் பணியை முன்னமே முடித்துக் கொண்டு டிவி முன் அமர்ந்திருந்ததாக சுனில் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விக்னேஷின் வருகையால் சைனா மேன் வகை பந்து வீச்சில் மேலும் ஒருவர் 'மேலும் ஒரு சைனா மேன் பவுலர்' 10 வயதில் வீதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியிருக்கிறார் விக்னேஷ் அவரிடம் தனித்தன்மை இருப்பதைப் பார்த்து விட்டு, மலப்புரத்தில் அகாடமி நடத்தி வரும் விஜய்குமார் பயிற்சிக்கு சேர்த்துக் கொண்டுள்ளார். விக்னேஷ்-க்கு இளம் வயதில் பயிற்சி அளித்த விஜய்குமார் பிபிசி தமிழிடம் பேசிய போது,"நேற்று மாலை வரை இந்தியாவுக்கு சர்வதேச தரத்திலான ஒரே ஒரு சைனா மேன் பவுலராக குல்தீப் யாதவ் மட்டுமே இருந்தார். ஆனால் நேற்று ஐபிஎல் போட்டிக்குப் பிறகு விக்னேஷும் அந்த பட்டியலில் இணைந்து கொண்டார்" எனக் கூறினார் "கனவு போட்டியான இதில் பிரமாண்டத்தை நினைத்து அச்சப்படாமல் விக்னேஷ் செயல்பட்டார். ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பேட்டர்கள் இருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விக்னேஷ், துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தார்." என கூறும் விஜய்குமார், சைனா மேன் ஸ்டைல் பந்து வீச்சை துல்லியமாக வீசுவதுதான் விக்னேஷின் சிறப்பு எனக் கூறுகிறார். 10 வயதில் தம்மிடம் பயிற்சிக்காக வந்தபோது, மிதவேகம், ரைட் ஆர்ம் ஸ்பின் என பல பந்து வீச்சுக்களை முயற்சி செய்து பார்த்து விக்னேஷுக்கான தேர்வை இறுதி செய்ததாகக் கூறும் விஜய்குமார், ''தொடக்கத்தில் விக்கெட் கீப்பராகவும் அவருக்கு பயிற்சி அளித்தோம்'' என்று கூறினார். உறுதுணையாக இருந்த பயிற்சி அரங்கங்கள் Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற பின்னர் கேரள கிரிக்கெட் அகாடமியின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மாநில அணிக்காக அண்டர் 14, அண்டர் 19, அண்டர் 23 பிரிவுகளில் விளையாடியிருக்கிறார் விக்னேஷ். மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவரான விக்னேஷ், யாரிடமும் பேச மாட்டார் எனக் கூறும் விஜய்குமார், ஆனால் சிறந்த கிரிக்கெட் திறமை அவரிடம் இருப்பதாகக் கூறுகிறார். "விக்னேஷ் பயிற்சியைத் தொடங்கிய 2010, 2011 கால கட்டத்திற்கு முன்பு வரை கேரளாவில் கிரிக்கெட் பயிற்சிக்கான உள்ளரங்கங்கள் ஏதும் இல்லை. பின்னர் கேரள கிரிக்கெட் அகாடமியின் மூலம் மாவட்டம் தோறும் கிரிக்கெட் பயிற்சிக்கான உள்ளரங்கங்கள் உருவாக்கப்பட்டன. கேரளாவைப் பொறுத்தவரையிலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை இடைவிடாத மழை பெய்யும். இதனால் விளையாட்டு வீரர்களை பயிற்சியை கைவிட வேண்டியது வரும். இந்த இடைவெளிக்குப் பின்னர் பேட்டர்கள் தங்கள் ஃபுட் மூவ்மெண்ட்டை சரி செய்வதற்கும், பவுலர்கள் சரியான ஆக்ஷன் வேகம் மற்றும் துல்லியத்தைப் பெறுவதற்கும் திணறுவார்கள், உள்ளரங்கங்கள் கிடைத்த பின்பு இந்த பிரச்னை தீர்ந்தது. குறிப்பாக விக்னேஷின் வசிப்பிடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கிரிக்கெட் உள்ளரங்கம் கிடைத்தது" என பயிற்சியாளர் விஜய்குமார் நினைவு கூர்கிறார். சைனா மேன் பவுலிங் என்றால் என்ன? பட மூலாதாரம்,VIGNESH PUTHUR / INSTAGRAM படக்குறிப்பு, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் முடித்திருக்கிறார் விக்னேஷ் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தனது மணிக்கட்டை சுழற்றி பந்து வீசுவது சைனாமேன் பந்து வீச்சு என அழைக்கப்படுகிறது. பந்தின் சுழற்சிக்கு இடக்கையின் மணிக்கட்டில் கொடுக்கப்படும் மாறுபாடே காரணமாகிறது. 1920களில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட சைனாமேன் பவுலிங் எனப்படும் இந்த வார்த்தை ராய் கில்னர் என்ற பந்து வீச்சாளரை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் குல்தீப் யாதவ் மிக அரிதான சைனா மேன் பவுலராக அறியப்படுகிறார். தற்போது விக்னேஷ் புத்தூரையும் சைனாமேன் பவுலராக பலரும் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர். விளையாட்டு , கல்வி என அனைத்திலும் ஒரே பாதையில் பயணிக்கும் தனது மகன், முதுகலை ஆங்கில இலக்கிய படிப்பை முடித்திருப்பதாக சுனில் கூறுகிறார் இளங்கலை பட்டத்தில் நல்ல மதிப்பெண்களுடன் தனது மகன் தேர்ச்சியடைந்ததாக குறிப்பிடுகிறார் சுனில். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8j0ddx30g1o
  27. வடிவேலு பேக்கறி வாங்கின கதை வெளியிலை போனது போலை, சில கதைகள் எப்பிடி போகுது யாராலை போகுது எண்டு தெரியாது, ஆனால் முதலுக்கு சேதம் தான் 😁. ஒண்டுமே இல்லாத விசயங்கள் எத்தினையோ பேரைப் பிரிப்பதில் நம் ஊரவர்களுக்கு ஒரு வாலாயம். கை எல்லாம் சரியாகிட்டுதோ அண்ணை?
  28. சத்தியமான வார்த்தைகள். ஒரு பக்கம் அரசர்கள் பெற்ற வெற்றிகள் வரலாற்றில் நிலை பெற்றாலும், எல்லா வெற்றிகளும், கோரமான யுத்தத்தின் விளைவுகளே. அதிலும் அப்பாவி மக்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டு இருப்பர். அய்யா, உங்களைப் போன்றவரின் தமிழ் அறிவோடு ஒப்பிடும் போது என்னைப் போன்றவர்கள் சிறு துமி. கிட்டடியில் அது சம்பந்தமாக எழுதி இருந்தபடியால் சுட்டினேன். மற்றபடி உங்கள் பாராட்டுக்குப் பொருத்தமானவன் அல்ல.
  29. நான் டெல்லியைத் தெரிவு செய்ததற்கு காரணம், அவர்களின் பிரபல்யமான பந்து வீச்சாளர்கள். ஸ்டார்க் (Starc) , அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, நடராஜன். இவர்களுடன் ராகுல்,faf du Plessis. ஆனால் ராகுலும் நடராஜனும் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. லக்னோவில் சிறந்த துடுப்பாட்டாளர்கள் இருந்தாலும் அவர்களின் சிறந்த 4 வேகப்பந்து வீச்சாளர்கள் காயப்பட்டு இருக்கிறார்கள்.
  30. எனது பேரப்பிள்ளைகளும் வடகரோலினா,கலிபோர்ணியாவில் உள்ள இரு பள்ளிகளிலும் தமிழ் படிக்கிறார்கள்.
  31. இது நடந்தது தமிழ்நாட்டில் அல்ல; அமெரிக்காவில் வாரத்தில் சுமார் ஒரு மணி நேரம் இயங்கும் ஒரு தமிழ்ப் பள்ளியில். ஆசிரியர் நான் அல்லன்; என் மகள் சோம.அழகு.
  32. இப்ப பாருங்க தெரியுதா என்று.
  33. தமிழில் பேசினால் தண்டம் அறவிடும் தமிழ்நாட்டு பள்ளியில் இப்படியும் ஆசிரியர்கள் மாணவர்களா? பாராட்டுக்கள் பேராசிரியரே.
  34. அது. இனி ரசோதரனும் மும்முரமா இருப்பார். கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. கோசானையும் இறக்கினா இன்னும் கழைகட்டும். எங்கே ஆள் @goshan_che
  35. முடிந்தாப் பிறகா. அதுக்கு திறக்காமலே இருக்கலாம். வாயைச் சொன்னேன். 😁 நன்றீங்க. ஏதோ வந்திட்டம். எங்க போய் முடியுமோ.
  36. நான் இப்ப‌ வாய் திற‌க்க‌ மாட்டேன் நாளைக்கு விளையாட்டு முடிந்த‌ பின் தான் வாய் திற‌ப்பேன்.................என்ர‌ நாற‌வாயால் எது சொன்னாலும் அது வினையா என‌க்கே அமையுது லொள்😁.......................................
  37. திருப்பியும் திருப்பியும் சொல்லுறன் உங்களுக்கு "தம்பி பாப்பா" கிடைத்து விட்டதாய் நினைச்சு சந்தோசப்பட வேண்டாம் கந்தையர் 😎
  38. உண்மையில் லண்டன் தமிழ் உறவுகள் போராட்டம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் 🙏
  39. சென்ற வருடமும்…. இதே போல அதி உயரமான ஒரு தேர் சரிந்து விழுந்தது. மீண்டும் அதே தவறை செய்ய கோவில் நிர்வாகமும், காவல் துறையும் எப்படி அனுமதித்தது? மக்களின் உயிரைப் பற்றி சம்பந்தப் பட்டவர்கள் அக்கறை எடுக்காமல் இருப்பது ஏன்? ஆர்வக்கோளாறில்…. உயரமாக கட்டும் போது, அது குறிப்பிட்ட உயரத்தை மீறும் போது அடிப்பாகம் அதிக எடையுடன் இல்லாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில், காற்றுக்கு கூட சரிந்து விழும் அபாயம் உள்ளது என்பதை பாடசாலை மாணவனுக்கும் தெரிந்த விடயம். இதற்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கொடுத்தால்தான்… வருகின்ற வருடமும் இந்தத் தவறை செய்ய மாட்டார்கள். இல்லாவிடில்…. இது தொடர்கதைதான்.
  40. டொக்ரருக்கு பைத்தியம் என்று சொன்னார்களே. பிறகு எப்படி இப்படி? காரிய விசர் வகையுள் டொக்ரர் வருகின்றாரோ?
  41. பெரும்பாலும் உரையாசிரியர்கள் வில்லவன் அவர்கள் எழுதியது போலவே உரை சொல்கிறார்கள் என்பதைக் கண்டேன். சிலர் இப்பொருள் வேறுபாட்டைச் சுட்டவும் தவறவில்லை.
  42. பாராட்டுக்கள். இந்த நிகழ்வுக்கு உதவி தூதுவராலயத்திலிருந்தும் பிரமுகர்களைக் கூப்பிட்டிருக்க வேண்டும்.
  43. "போட்டோ சொப்" செய்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? 🤣 பிள்ளையை இடிக்கப் போகுது. அந்த ரயிலை பிடித்து... தண்டவாளத்தில் விடுங்கப்பா. 😂 அப்பாடா.... ரயிலை, வேறை பக்கத்தாலை அனுப்பியாச்சு. 😂 🤣
  44. நல்லதொரு திறமை மிக்க பாடகி . அமைந்த வாழ்கை சரியில்லைபோலும். நிறைய பிரச்சினைகளை சந்தித்து விட்டார். மகள் வந்து சாடசி சொல்கிறார் . அப்படி ஒன்றுமில்லை என , யாரையோ காப்பற்ற முயல்கிறார் போலும். .
  45. அ.முத்துலிங்கத்துக்கு விருது jeyamohanFebruary 6, 2025 அ.முத்துலிங்கம் அவர்களுக்கு கனடாவின் டொரெண்டோ பல்கலைக் கழகம் வழங்கும் மதிப்புமிக்க விருந்தான ARBOR AWARD வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் பண்பாட்டுக்கும் பல்கலையின் கல்விப்பணிக்கும் அளித்த பங்களிப்புக்காக அளிக்கப்படும் விருது இது. அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் https://www.jeyamohan.in/211914/
  46. சகலகலா வல்லவன் தில்லை எதை எடுத்தாலும் நன்றாக எழுதுகிறார். பாராட்டுக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.