Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    87990
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    38770
    Posts
  3. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1223
    Posts
  4. மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    8557
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/30/25 in all areas

  1. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 26ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2025) 27ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்த யாழ் இணையம், உலகத் தமிழர்களின் எண்ணங்களையும், உள்ளங்களையும் இணைக்கும் தருணங்களை உருவாக்கி வருகிறது. பல கருத்தாளர்கள், படைப்பாளிகள், தொழில்நுட்பவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து தமிழ் மொழியின் வளத்தையும், கருத்துச்சுதந்திரத்தையும் பறைசாற்றும் தளமாக இது திகழ்கிறது. இவ்வாண்டும், முன்னைய ஆண்டுகள்போலவே யாழ் இணைய உறவுகள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து, தனிப்பட்ட ஆக்கங்களை பகிர்ந்து, விவாதங்களைப் பகிர்ந்ததற்காக அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றோம். தகவல் பரிமாற்றத்தில் விழிப்புணர்வு: ஈழத்திலும் உலகத்திலும் பரவி வரும் தவறான தகவல்கள் மற்றும் சதி முனைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நம்பகமான தகவல்களை பகிர வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம். கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டும், ஆனால் அவை உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். தமிழ் நலனுக்காக ஒருமைப்பாடு: தாயக மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடரும் நிலையில், உலகத் தமிழர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிக் கரங்களை நீட்டியதை இங்கு நினைவுப்படுத்த வேண்டியுள்ளது. சமூக நீதி, சமவுரிமை மற்றும் தமிழ்த் தேசிய சிந்தனையை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர வேண்டும். புதிய உறுப்பினர்கள் – புதிய தொடக்கம்: இப்புதிய ஆண்டில், மேலும் புதிய உறுப்பினர்களை யாழில் இணைக்கும் ஒரு முயற்சியை மேற்கொள்ள விரும்புகின்றோம். நீங்கள் இதுவரை இணைந்திராவிடில் இணைந்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடும்படி வேண்டுகின்றோம். அத்துடன் உறுப்பினர்கள் உங்கள் சுற்றத்திலுள்ளவர்களுக்கு யாழ் இணையத்தை அறிமுகப்படுத்தி, கருத்துக்களத்தில் அவர்களையும் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் மட்டுறுத்துனர்களுக்கும் யாழ் செழிப்புற வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கும் பாவனையாளர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் உங்கள் ஆலோசனைகளை எமக்கு தெரியப்படுத்துங்கள். இணைவோம் – வளர்வோம்: கடந்த காலங்களில் கூறியது போன்று, எமது மண்ணோடும், மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாக, துணையாக, ஒற்றுமையாய் பயணிப்போம். “நாமார்க்கும் குடியல்லோம்” நன்றி, யாழ் இணைய நிர்வாகம் திகதி: 30 மார்ச் 2025
  2. ஐந்து நான் மீண்டும் வந்து வேலைவெட்டி என்று ஆரம்பித்தாலும் காணியைப் பற்றிய சிந்தனையே எந்நாளும் இருந்துகொண்டிருந்தது. அவர்கள் அந்தக் கன்றுக்கு நீர் விட்டார்களா? இல்லையா என்னும் யோசனையே எப்போதும் குடைந்துகொண்டிருக்க, வாரம் ஒருதடவை அந்தப் பெண்ணுக்கு போன் செய்து கன்றுகள் பற்றி விசாரிப்பது தொடர்ந்தது. மூன்று மாதங்கள் செல்ல புற்கள் எல்லாம் மீண்டும் முளைக்கத் தொடங்கிவிட்டன என்கிறார். நான் என் மச்சாளிடம் இதுபற்றிக் கேட்க இரண்டு மூன்று மாதங்கள் நல்ல வெயில். மழையும் பெய்யவில்லை. யூலை ஓகஸ்ட் தான் இனி மழை. அதன்பின் தான் வேகமாக வளரும். இப்ப புல்லுப் பிடுங்கத் தேவை இல்லை என்கிறார். அதனால் நான் இன்னும் கொஞ்ச நாட்கள் செல்லட்டும் பிடுங்கலாம் என்கிறேன். அடுத்து ஒருமாதம் செல்ல வளவில் புற்களைப் புடுங்கவேண்டும். பாம்பு வந்துவிடும். சின்னப் பிள்ளையை வைத்திருக்கிறேன் என்று அந்தப் பெண் சொன்னதும் சரி ஆட்களை ஒழுங்கு செய்யுங்கோ என்றுவிட்டுப் பணம் அனுப்புகிறேன். நான்கு நாட்கள் இருவர் வந்து முழுப் புல்லையும் பிடுங்குவதற்கு 16000 ரூபாய் முடிய மனிசன் புறுபுறுக்க ஆரம்பிக்கிறார். அவைக்குக் கரண்ட் காசும் கட்டி வாடகையும் வாங்காமல் இப்ப வளவும் நீற்றாக்கிக் குடு என்கிறார். கண்டறியாத கண்டுகாலி. நாங்கள் போய் இருந்துகொண்டு உதுகளைச் செய்யலாம். சொல்லச் சொல்லக் கேட்காமல் நட்டுப்போட்டு வந்திருக்கிறாய் என்கிறார். இப்ப நட்டால்த்தானே நாங்கள் போய் இருக்கேக்குள்ள வளர்ந்திருக்கும் என்றுவிட்டு என் அலுவலைப் பார்க்கிறேன். அக்கா நீங்கள் கன்றுகளுக்குக் கட்டிய பாத்திகள் தண்ணீர் விட நீண்ட நேரம் எடுக்குது. நான் வேறை மாதிரிக் கட்டி விடட்டோ என்கிறா. நீங்கள் பாத்தி கட்டுவீங்களோ என்றதற்கு, தன் மாமியின் மகன் கட்டிவிடுவார் இரண்டு நாள் கூலி குடுக்கிரியளோ என்றதற்கு சரி என்கிறேன். எனக்கோ கன்றுகளுக்கு நீர் போனால் சரி என்ற நிலை. இன்னும் ஒரு மாதம் செல்ல, “உங்கள் கன்றுகளுக்கு நீர் இறைக்க மூன்று மணிநேரம் செல்கிறது” “நானும் ஒருமாதம் இறைத்தேன் தானே. ஒருமணித்தியாலம்தானே முடிந்தது. என்ன புதுக்கதை சொல்கிறீர்கள்? “எனக்கு பிள்ளையுடன் சரியான கரைச்சலாக கிடக்கு” “அப்ப ஒரே நாளில இறைக்காமல் பகுதி பகுதியாப் பிரிச்சு தண்ணியை விடுங்கோ” “நீங்கள் எப்ப வருவியள் அக்கா” “ஒவ்வொரு ஆண்டும் வர சரியான செலவு தங்கச்சி, ஏன் கேட்கிறீர்கள்? “இது பெரிய வளவாக் கிடக்கு அக்கா. எங்களுக்கு இதைப் பாராமரிக்கக் கஷ்டமா இருக்கு” “வளவில என்னத்தைப் பாராமரிக்கக் கிடக்கு? “மாமரக் குப்பையே கூட்டி அள்ள ஏலாமல் கிடக்கு” “அப்ப வளவு கூட்டவும் ஓராளைப் பிடிச்சுவிடட்டோ? பெரிய வளவு என்று தெரிந்துதானே வந்தீர்கள்? உங்களுக்கு ஒரு ஆண்டு வாடகை ஒப்பந்தம் செய்திருக்கிறன். அதுவரையும் நீங்கள் இருக்கத்தான் வேணும்” “சரி அக்கா. எவ்வளவு கெதியா வர ஏலுமோ வாங்கோ” சரியாக அவர்களுக்கு வாடகை ஒப்பந்தம் முடிய ஒருவாரத்துக்கு முன்னர் நானும் கணவரும் ஊருக்குச் செல்கிறோம். செல்லும்போது இங்கிருந்து ஒரு ஆப்பிள், பியேஸ், ஒலிவ் மூன்றின் கன்றுகளை யும் லகேச்சுக்குள் வைத்துக் கொண்டுபோகிறேன். இணுவிலில் போய் இறங்கி தங்கையின் வீட்டில் பயணப் பொதிகளை வைத்துவிட்டு எமது வீட்டுக்குச் சொல்கிறோம். கேற்றைத் திறந்து கமுகின் அழகைக் காண எண்ணினால் முன்பக்க வேலியோரம் நட்ட கமுகுகளில் அரைவாசித்தான் செழிப்பாக வளர்ந்திருக்க மிகுதி ஏனோதானோ என்று நிற்க ஐந்தாறு கமுகுகள் பட்டுப்போயும் இருக்க எனக்கு அழுகை வராத குறை. தண்ணீர் விட்டோம். தண்ணீர் விட்டோம் என்றார்கள். ஒழுங்காகத் தண்ணீர் வீட்டிருந்தால் ஏன் வாடுது என்று கணவனுக்குக் கூற, இது ஒன்றும் அவர்கள் காணி இல்லை. அவர்களுக்கு வீடு தேவை வந்து இருந்தார்கள். உன் கண்டுகாலிகளையும் கவனிக்க அவர்களுக்கு என்ன விசரா என்கிறார் மனிசன். அந்தப் பெண்ணிடம் கேட்க, நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இறைத்தது. இதுக்கு மிஞ்சி நாங்கள் ஒன்றும் செய்ய ஏலாது என்று சொல்கிறார். இனிக் கதைத்துப் பயன் இல்லை என்று அறிந்தபின் நானும் கணவரும் வளவைச் சுற்றிப் பார்க்கிறோம். தேக்குகள் மட்டும் செழிப்பாக வளர்ந்திருக்க எனது பூங்கன்றுகளும் சில பட்டுப்போய் நிற்கின்றன. புற்கள் எல்லாம் வளர்ந்து, தென்னை மரங்களின் கீழே தேங்காய்கள் விழுந்து பார்க்கவே கோபம் வருகிறது. என்ன தங்கச்சி தேங்காய் விக்கிற விலையில பொறுக்காமல் விட்டிருக்கிறியள் என்கிறேன். பிள்ளையோட கஸ்டம் அக்கா எனக்கு. இவரும் விடியப் போனால் பின்னேரம்தான் வருவார் என்கிறார். “எப்ப தங்கச்சி எழும்புறியள்” “வார கிழமை திறப்புத் தாறம்” “வாறகிழமை சரி. என்ன நாள் என்று சொல்லுங்கோ” என்கிறேன். அவர் சொன்ன நாளுக்கு முன்னராக அங்கு சென்று முதல் நாள் தங்குகிறோம். பஞ்சி பிடித்தவர்களே தவிர சொன்னதுபோல் அடுத்தநாள் வீட்டை விட்டுக் கிளம்ப, வீட்டைக் கழுவிச் சுத்தப்படுத்தி அங்கேயே தொடர்ந்து இருவாரம் தங்க, அளவிலா மகிழ்ச்சி ஏற்படுகிறது. காலையில் எழும்போதே அழகான குருவிகளின் ஓசை மனதை மயங்க வைக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்களின் கோழிகள் சிலது வந்து போகின்றன. காலை எழுந்தவுடன் தேநீர் அருந்தாமல் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் வெட்டிப்போட்டு உடன் துருவிய தேங்காய்ப் பாலும் விட்டு பழஞ்சோற்றுக் கஞ்சி அமிர்தமாக இருக்கிறது. அதைக் குடித்தவுடன் அடிக்கடி பசிக்கும் எனக்கே நீண்டநேரம் பசியே எடுக்கவில்லை. காலையிலேயே புலுனி கூட்டம் முற்றத்தில் வந்து இரை பொறுக்க நாமும் தானியங்கள் போடுகிறேன். மாமரத்தில் அணில்கள் ஓடி விளையாட, அட இத்தனை காலம் இவற்றையெல்லாம் இழந்து நான்கு சுவருக்குள் அடைபட்டு குளிரிலும் விறைத்துப் போனோமே என்று எண்ணம் எழுகிறது. வீட்டின் வெளியே மாமர நிழலில் மூன்று கற்களை வைத்து எண்ணைச் சட்டியில் சந்தையில் வாங்கிவந்த மீன்களைப் பொரித்துத் தருகிறார் மனிசன். சுடச்சுட அதை உண்டு முட்களை வெளியே எறிந்துகொண்டிருக்க ............... சோறு கறி சமைக்கவேண்டிய தேவை குறைந்துபோக நெஞ்சு நிறைந்துபோகிறது. ஒருவரைக் கூப்பிட்டு செவ்விளநீர் இறக்கி வைத்து ஒரு நாளைக்கு இவ்விரண்டு குடிக்கிறோம். கன்றுகளுக்கு சொட்டுநீர் பாசனம் செய்வோம் என்று கூற, உனக்கு ஏதும் சிலவளிக்காட்டில் நித்திரை வராது என்கிறார் மனிசன். கன்றுகள் முக்கியம். ஒருக்காச் செய்துவிட்டால் பிறகு தண்ணி விடும் பிரச்சனை இல்லை என்று மனிசனைச் சம்மதிக்கச் செய்து சிலரிடம் விசாரித்தால் ஒருவரின் தொலைபேசி இலக்கம் தருகின்றனர். வந்து வளவைச் சுற்றிப் பார்த்துவிட்டு, நீங்கள் ஏற்கனவே பெரிய பைப் தாட்டிருக்கிறபடியால் ஒன்றரை இலட்சத்துள் செய்து தரலாம் என்கிறார். ஏற்கனவே நாம் 2 குதிரை வலுக்கொண்ட மோட்டரையே போட்டிருந்தோம். அதன் வேகம் கூட என்று இன்னொரு மோட்டரைப் போட்டு அதில் இணைப்போம் என்கிறார். சரி என்று இரண்டாவது மோட்டரை 1.5 வழுவுள்ளதாக வாங்கி இணைத்து சொட்டுநீர்ப் பாசனம் ஒழுங்காக இயங்க வைக்கிறார். இரண்டு மோட்டார்கள் இருப்பதனால் சரியான பாதுகாப்பு வேண்டும் என்று பெலப்பான சுவருடன் ஒரு அறையைக் கட்டி அதனுள் இரு மோட்டார்களையும் வைத்து விசேட பூட்டு முறையையும் வடிவமைக்கிறார் கணவர். பின்னர் காணிக்குள் கமரா பூட்டுவோம் என்று மனிசன் தொடங்கி அதற்கு 8 கமரா பூட்ட 136000. அதன்பின் சிறிது நிம்மதி ஏற்பட இருவாரம் இந்தியா சென்று வருகிறோம். வளவில் இருந்த கற்களை அடுக்கி மனிசன் பார்பிக்கியூ கிறில் செய்து இங்கிருந்து கொண்டுசென்ற துருப்பிடிக்காத கம்பிகளையும் வைத்து அப்பப்ப உண்டு மகிழ்கிறோம். அதன் பின் மீண்டும் ஆட்களைத் தேடும் படலம் ஆரம்பிக்க வீட்டுக்குள் டாய்லெட் உள்ள அறைகள் வேண்டும் என்கின்றனர் சிலர். எமக்காகக் கட்டியதை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது என்கிறேன். வெளியேயும் நவீன களிப்பறையும் உண்டு என்பதால் அதற்கு ஏற்றவர்களைத் தேட, யாரும் கிடைக்காமல் நாம் கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்னதாக ஒரு குடும்பம் வந்து பார்க்கின்றனர். தாய், மகள், மகளின் கணவர், பெண்ணின் தம்பி மற்றும் மகளின் பிள்ளை ஐந்துபேர். தந்தை இறந்துவிட்டதாகச் சொல்கின்றனர். என்று கமராவில் நாங்கள் கதைப்பது எல்லாம் கேட்குமோ என்கிறார் அவர்களுடன் வந்த ஒரு 12 வயதுப் பெடி. சத்தம் எமக்குக் கேட்காது என்கிறேன் நான். இவர்களைக்கூட்டி வந்தவர் எமக்கு எலெக்றிக் வேலை செய்து தந்தவர் தான். அதனால் அவர்களுக்கு மாதம் 3000 வாடகையில் வீட்டைக் கொடுத்து மின் கட்டணத்தையும் கட்டும்படி சொல்கிறோம். அவர்களின் அடையாள அட்டையையும் படம் எடுத்து லோயரிடமும் கொடுத்து ஒப்பந்தம் கைச்சாத்தாகிறது.
  3. நிர்வாகி மோகனுக்கும் துணை நிர்வாகிகளுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ஆண்டுகள் 26 கழிந்து 27 இல் அடியெடுத்து வைக்கும் யாழ் இணையமே பலதும் பத்தும் பகிர்ந்து, கள உறவுகளின் மகிழ்வில் கலந்து ,துயரில் ஆறுதல் கூறி கருத்துக்களால் மோதி, கேலி செய்தும் சிரித்து மகிழ்ந்தும் செய்திகள் பகிர்ந்தும், வார்த்தைகளால் அடித்தும் கலகலப்பாக கலந்து கொள்ளும் யாழ் இணைய உறவுகளே தொடர்ந்தும் யாழ் வெற்றிநடைபோடவேண்டும். இன்னும்பல ஆண்டுகள் உறுதியுடன் செயற்படவேண்டும்.மனம் சோராது தொடர்ந்து நிர்வாகிக்க வாழ்த்துகிறேன் .
  4. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. ஐபிஎல் 2025 இன் 10வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களையே எடுத்தது. அனிகெற் வேர்மா மாத்திரம் 74 ஓட்டங்களை சிறந்த அடிவீதத்தில் எடுத்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த அடித்தளத்தைக் வேகமாக அடித்தாடிக் கொடுத்ததால், ஃபஃப் டுபிளெஸிஸின் 50 ஓட்டங்களோடு 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஏழு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்குப் புள்ளிகள் இல்லை! -- ஐபிஎல் 2025 இன் 11வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிதிஸ் ராணாவின் மின்னல் வேக அடியில் எடுத்த 81 ஓட்டங்களுடன் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை எடுத்தது. பிற வீரர்களில் ரயான் பராக் 37 ஓட்டங்களை எடுத்து ஒத்துழைப்புக் கொடுத்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரச்சின் ரவீந்திரா முட்டையுடன் வெளியேறியதாலும் ருதுராஜ் கைக்வாட்டின் 63 ஓட்டங்களைத் தவிர பிறர் சோபிக்காததாலும் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய இரு போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @செம்பாட்டான் வெள்ளி திசையில் வீறு நடைகொண்டு முன்னேறுகின்றார். @suvy மீண்டும் துணை முதல்வராக அமைந்துள்ளார்.. இறுதிப் படிகளில் ஐவர் அப்படியே அமர்ந்துள்ளனர்!
  5. என் அப்பாவிற்கு வயதாகிவிட்டது. நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவரது கைரேகைகள் சுவர்களில் பதிந்தன. என் மனைவி இதை வெறுத்தார், சுவர்கள் அழுக்காகி வருவதாக அடிக்கடி புகார் கூறுவார்.. ஒரு நாள், என் அப்பாவுக்கு தலைவலி இருந்தது, அதனால் அவர் தலையில் சிறிது எண்ணெய் தடவினார்.. அதனால், நடந்து செல்லும்போது சுவர்களில் எண்ணெய் கறைகள் உருவாகின. இதைப் பார்த்து என் மனைவி என்னைப் பார்த்து கத்தினாள்.. நான் என் அப்பாவைக் கத்தினேன், அவரிடம் முரட்டுத்தனமாகப் பேசினேன், நடக்கும்போது சுவர்களைத் தொடாதே என்று அறிவுறுத்தினேன்.. அவர் காயமடைந்ததாகத் தோன்றியது.. என் நடத்தையைப் பார்த்து நானும் வெட்கப்பட்டேன், ஆனால் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. என் அப்பா நடந்து செல்லும்போது சுவரைப் பிடிப்பதை நிறுத்தினார். ஒரு நாள் அவர் சமநிலையை இழந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு உடைந்து போனார்.. இடுப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் படுக்கையில் விழுந்து சிறிது நேரத்தில் எங்களை விட்டு பிரிந்து சென்றார். என் இதயத்தில் மிகுந்த குற்ற உணர்ச்சியை உணர்ந்தேன். அவருடைய வெளிப்பாடுகளை ஒருபோதும் மறக்கவும், சிறிது நேரத்திலேயே அவரது மறைவை மன்னிக்கவும் முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, எங்கள் வீட்டிற்கு வண்ணம் தீட்ட விரும்பினோம். ஓவியர்கள் வந்தபோது, அவரது தாத்தாவை மிகவும் நேசித்த என் மகன், ஓவியர்கள் என் தந்தையின் கைரேகைகளை சுத்தம் செய்து அந்தப் பகுதிகளை வரைய அனுமதிக்கவில்லை. ஓவியர்கள் மிகவும் நல்லவர்களாகவும், புதுமையானவர்களாகவும் இருந்தனர். அவர்கள் என் தந்தையின் கைரேகைகளை அகற்ற மாட்டோம் என்றும், இந்த அடையாளங்களைச் சுற்றி ஒரு அழகான வட்டத்தை வரைந்து ஒரு தனித்துவமான வடிவமைப்பை உருவாக்குவோம் என்றும் அவருக்கு உறுதியளித்தனர்.. அதன் பிறகு இது தொடர்ந்தது. அந்த அச்சுகள் எங்கள் வீட்டின் ஒரு பகுதியாக மாறியது. எங்கள் வீட்டிற்கு வருகை தரும் ஒவ்வொருவரும், சுவரில் உள்ள தனித்துவமான வடிவமைப்பைப் பாராட்டினர்.. காலப்போக்கில், நானும் வயதாகி விட்டேன்.. இப்போது நடக்க சுவரின் ஆதரவு எனக்கும் தேவைப்பட்டது. ஒரு நாள் நடக்கும்போது, என் தந்தையிடம் நான் சொன்ன வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டேன், ஆதரவின்றி நடக்க முயற்சித்தேன்.. என் மகன் இதைப் பார்த்தான். உடனே என் அருகில் வந்து, நடந்து செல்லும்போது சுவர்களைத் தாங்கிப் பிடிக்கச் சொன்னான். நான் ஆதரவு இல்லாமல் விழுந்திருப்பேனோ என்று கவலைப்பட்டான். என் மகன் என்னைப் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என் பேத்தி உடனடியாக முன்னோக்கி வந்து அன்பாக, அவள் தோளில் என் கையை வைக்கச் சொன்னாள். நான் கிட்டத்தட்ட அமைதியாக அழ ஆரம்பித்தேன். நான் என் தந்தைக்கு அதையே செய்திருந்தால், அவர் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்.. என் பேத்தி என்னை அழைத்துச் சென்று சோபாவில் உட்கார வைத்தாள்.. பின்னர் அவள் தனது ஓவியப் புத்தகத்தை எடுத்து எனக்குக் காட்டினாள்.. அவளுடைய ஆசிரியர் அவள் வரைந்ததைப் பாராட்டி, அவளுடைய சிறந்த கருத்துக்களைக் கூறினார். அந்த ஓவியம் சுவர்களில் எனது தந்தையின் கைரேகையைக் கொண்டிருந்தது. அவள் கருத்து - "ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெரியவர்களை அதே வழியில் நேசிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." நான் என் அறைக்குத் திரும்பி வந்து, என் மறைந்த தந்தையிடம் மன்னிப்பு கேட்டு, அதிகமாக அழுதேன்.. காலப்போக்கில் நாமும் வயதாகிவிடுவோம்.. நம் வீட்டில் பெரியவர்கள் இன்னும் இருந்தால், அவர்களைக் கவனித்துக்கொள்வோம். நம் குழந்தைகளுக்கும் நம் முன்மாதிரியாக அதையே செய்யக் கற்றுக் கொடுப்போம். (ஒரு அழகான செய்தியின் தமிழ் மொழிபெயர்ப்பு) இந்தக் கதை என் இதயத்தைத் தொட்டது. மேலும், வயதாகி வரும் என் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களுடன் பகிர்ந்து கொள்வதாக உணர்ந்தேன். மிகவும் நெகிழ்ச்சியானது.. நம்மில் பெரும்பாலோர் எப்போதாவது நம் வயதான பெற்றோருடன் இதே போன்ற தவறுகளைச் செய்திருக்கலாம். படித்ததில் பிடித்தது.
  6. எப்பிடி பாத்தாலும் இனி இஞ்சை இருக்கேலாது எண்டு சொன்னால் கேக்கிறியள் இல்லையப்பா....😂 வாங்கோ வாங்கோ கனடாவுக்கு வாங்கோ.. வாங்கோ வாங்கோ லண்டனுக்கு வாங்கோ.. வாங்கோ வாங்கோ அவுஸ்ரேலியாவுக்கு வாங்கோ.. வாங்கோ வாங்கோ நியூஸ்லாந்துக்கு வாங்கோ.. வாங்கோ வாங்கோ அமெரிக்காவுக்கு வாங்கோ.. இப்படிக்கு ஜப்னா போய்😎
  7. நான் நினைக்கின்றேன் இதன் காரணம் மொழிவரட்சி. மொழி ஆளுமை குறைபாடு. ஆங்கிலம் பேசும்போது பலர் யூ நோ யூ நோ என்று கூறுவார்கள். வசனத்தை முடிக்கும்போது யூ நோ என்று முடிப்பார்கள். இதுவும் ஒருவித மொழி ஆளுமை குறைபாடே. குறிப்பிட்ட மொழிகளில் நிறைய தரமான புத்தகங்கள் வாசித்தால் மொழி ஆளுமையை விருத்தி செய்யலாம் என்று கூறுவார்கள்.
  8. எல்லாம் உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் தான். இன்னும் கொஞ்ச காலம் முன்னாலேயே இருப்பேன் போல. தொடரந்து மூன்று போட்டி தோக்காத வரையும் சரி. அந்த சுமைதாங்கிகளையும் கொஞ்சம் கை தூக்கிவிடுங்க.
  9. எனக்கு இதை வாசிக்கும்போது இந்தக்கவிதை👇 ஞாபகம் வருகிறது.. நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன் ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன சட்டையை தொளதொள வென்றோ இறுக்கமாகவோ போடுகிறாய் தலைமுடியை நீளமாகவோ குறுகவோ தரிக்கிறாய் உன்னிடமிருந்து பறந்து சென்ற இருபது வயது என்னும் மயில் உன் மகளின் தோள் மீது தோகை விரித்தாடுவதை தொலைவிலிருந்து பார்க்கிறாய் காலியான கிளைகளில் மெல்ல நிரம்புகின்றன அஸ்தமனங்கள், சூரியோதயங்கள் மற்றும் அன்பின் பதட்டம்! - தேவதச்சன் 🌺
  10. ஏன் அண்ணை ஜேர்மனியை விட்டு விட்டீர்கள் ??? எங்கை போனாலும் இறக்கும். திகதியை ஒருவர் மாற்ற முடியாது
  11. நான் சாம்பியன் கிண்ணப்போட்டியில் ஓவர்டன் சகலதுறை வீரர் என்றும் இவர் விளையாடிய ஒரே ஒரு டெஸ்ட்போட்டியில் 97 ஒட்டங்களை பெற்றவர், சென்னை சூப்பர்கிங் இவரை ஏலத்தில் எடுத்திருக்கிறது என்று சொன்னேன். நல்ல வீரர் என்று சொல்லவில்லை. பந்து வீச்சில் T20 அண்மைக்காலங்களில் இவர் சிறப்பாக விளையாடவில்லை ஆனால் துடுப்பாட்டத்தில் கிடைக்கிற பந்தில் வேகமாக ஓட்டங்கள் பெறுகிறார் இம்முறை செம்பாட்டானும் வீரப்பையனும் ஒரே அணியை தெரிவு செய்திருக்கிறார்கள். செம்பாட்டனின் வெள்ளி திசை பலனால் வீரப்பையன் 6 புள்ளிகள் பெறுகிறாரா? அல்லது வீரப்பையனின் அட்டமத்து சனியால் செம்பாட்டனுக்கு இம்முறை புள்ளிகள் கிடைக்காமல் போகுமா?
  12. கணணியில் ஒன்றுமில்லை! எல்லாம் கூகிள் கிளவுட்டில்தான்! அது எல்லாம் 2, 3 பூட்டுப் போட்டுப் பத்திரமாக இருக்கு😎
  13. தொடர்ந்தும் முதல்வராக இருக்கும் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள். கிருபனின் கணனியை கெக் பண்ணுறம். செம்பாட்டானின் பதிவுகளை மாத்திறம்.
  14. நானும் அதையேதான் அன்றும் சொன்னேன். சனத்த உசுப்பேத்துற விளையாட்டுத்தான் இப்போ நடக்குது. தோக்கப் போகுது என்று தெரிந்தால் 9வதா வாறது. வெல்லப் போகுது என்றால். 5வதா வாறது. வந்து வென்று கொடுத்தார் என்று நாலு கிழமைக்கு ஓட்டலாம். போன போட்டியில் CSK தோற்றது. ஆனால் கதை முழுக்க மின்னல் வேகத்தில் விக்கட்டை தகர்த்ததும் (0.16 செக்கனாம்), 30 ஓட்டங்கள் அடித்ததும்தான் பேச்சு. என்னமாதிரியான மனநிலை இது. இதனாற்தான் நான் ஜபில் பார்ப்பதில்லை. இப்போ என்னையும் பார்க்க வைச்சிட்டீங்களே.
  15. யாரின் முக‌த்தில் முழிச்சுப் போட்டு போட்டி ப‌திவு ப‌திஞ்சேன் என்று ச‌த்திய‌மாய் தெரியாது😁 ச‌ர்வ‌தேச‌ கிரிக்கேட் போட்டிகளில் நூற்றுக்கு 90 வித‌ம் சரியா க‌ணிப்பேன் உற‌வே இந்த‌ ஜ‌பிஎல் இப்ப‌டி ஆப்பு வைக்கும் என்று நான் நினைத்து கூட‌ பார்க்க‌ல‌ SHR , CSK , MI இந்த‌ மூன்று அணிக‌ளால் தான் பின்ன‌டைவு................சில‌ தோல்விகளுக்கு க‌ப்ட‌ன் மார்க‌ள் விட்ட‌ பிழை..................ல‌க்னோ க‌ப்ட‌ன் விட்ட‌ சிறு பிழையால் இர‌ண்டு புள்ளி ப‌றி போன‌து..............இன்னும் நிறைய‌ போட்டிக‌ள் இருக்கு தானே பாப்போம் இந்த‌ கோதாரி பிடிப்பாங்க‌ள் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌டுகின‌மோ என்ற‌ ச‌ந்தேக‌ம் என‌க்குள்ளும் எழ‌ தொட‌ங்கிட்டு பாப்போம் இனி வ‌ரும் போட்டிக‌ளை🙏👍..........................................
  16. பையனைக் கொப்பி பண்ணிப் போட்டு (பஞ்சியிலைதான்)நானும்நாலு புள்ளியிலை தான்நிக்கிறன்
  17. யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂 வாழ்க வளமுடன்.
  18. பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி அக்கா, வளத்துடன் வாழ்க.
  19. யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து.
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி
  21. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி 💐
  22. பிரியன்சார் ..பதவிஆசை எனக்கு இல்லையென்பதை..பவ்வியமாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.....(இழுந்தும் மீசையில் மண்படவில்லை என்ற மாதிரி)>..
  23. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி அக்கா
  24. பிறந்த நாள் வாழ்த்துகள் யாயினி.
  25. அல்வாயனுக்கு ஒரு வாழ்த்து சொல்லுவம் என்றால் செம்பாட்டான் விடுறமாதிரி தெரியலையே.
  26. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி.வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
  27. நானும் இதனை வாசித்தேன்..ஏனோ ஆழ்மனதில் ஒரு வலி..
  28. 163 அடிப்பினமா. எனது பயணம் தொடருமா. நான் சொல்லேல. குல்டிப் போன்ற வீரர் சோடை போவதில்லை. இலக்கங்கள் மட்டும் ஒரு வீரரை அடையாளப் படுத்தாது. மிச்சலும் சேர்ந்து புடுங்கி எறிந்து விட்டினம். இனி துடுப்பர்களின் வேலை. பார்ப்போம்.
  29. நான்குபேர் ஆட்டமிழந்து விட்டினம். இப்போ நிற்கின்ற இருவரும் போட்டுப் பிளக்கினம். டெல்லி இப்ப ஒருத்தரத் தூக்கினால்...... வேற ஒன்டிலையும் உந்த வெள்ளியும் சனியும் வேலை செய்யுதில்லையே. எங்கேயாவது ஏதாவது செய்யலாமோ.
  30. SRH இனை தெரிவு செய்து போட்டேன். டெல்லியை தெரிவு செய்தவர் செம்பாட்டன். SRH இனை தெரிவு செய்தவர் வீரப்பையன். செம்பட்டனுக்கு வெள்ளி திசை. அதுதான் தொட்டதெல்லாம் பொன். பையனுக்கு அட்டமத்தில சனி. அதுதான் 4 புள்ளிக்கு மேல புள்ளிகள் இல்லை போல இருக்குது.
  31. அத்துடன் திலக் வர்மா, கார்திக் பாண்டியா முறையே 36 பந்துக்கு 39 ஒட்டங்கள், 17 பந்துக்கு 11 ஒட்டங்கள் என மெதுவாக விளையாடியதும் ஒரு காரணம் . பிரதீஷ் கிருஷ்ணாவின் 4 ஓவருக்கு வெறும் 18 ஓட்டங்கள் வழங்கி 2 முக்கிய விக்கெட்டுக்கள் ( சூரியகுமார் யாதவ், திலக் வர்மா) எடுத்ததும் காரணம். சாயி சுதர்சனின் அபார ஆட்டமும் காரணம். …..
  32. அந்தக் கு ற ள் .. அப்போது கொரோனாக் காலம் என்றபடியால் தொண்டையில் இருந்து வரவில்லை..சரியா புத்தரே😁
  33. நாளை ஞாயிறு 30 மார்ச் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC எதிர் SRH 07 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 16 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அல்வாயன் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வசீ ஈழப்பிரியன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா கந்தப்பு வாதவூரான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RR எதிர் CSK 06 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 17 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் சுவி செம்பாட்டான் வாதவூரான் நந்தன் புலவர் அகஸ்தியன் சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே இந்தப் போட்டியில் எவர் புள்ளிகளைப் பெறுவார்கள்?
  34. யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறைக்கு வருமானம் புலம் பெயர்ந்த உறவுகளின் வருகை,சிங்கள மக்களின் வருகை மற்றும் தற்பொழுது இந்திய மக்களின் வருகையூடாக கிடைக்கின்றது ... இன்னும் 10 வருடங்களின் பின்பு புலம் பெயர் மக்களின் வருகை குறைந்து விடும்... இந்திய மக்களின் வருகை நிரந்தர மற்றது ...சிங்கள அரசியல்வாதிகள்,மற்றும் காலநிலையுடன் சம்பந்தப்பட்டது... ஆனால் சிங்கள மக்களின் வருகை நிரந்தரமானது...விகாரைகளை கட்டி அதை புனிதப்படுத்தி சிங்கள மக்களை வரப்பண்ணுவதில் அரசாங்கத்துக்கு பெரும் பங்கு உண்டு.. நயினா தீவு எம் கண் முன்னே சாட்சியாக இருக்கின்றது ..74 ஆம் ஆண்டு இருந்த நயினாதீவும் 2024 ஆண்டு இருக்கும் நயீனாதிவுக்கும் வித்தியாசம் உண்டு..
  35. புவியியல் துறை தலைவா எந்த ஆண்டு வருமென்றாவது சொல்லுங்கோ அந்த ஆண்டு நான் சிறிலங்காவுக்கு வராமல் இருக்கலாம்....
  36. ஐபிஎல் 2025 இன் 09வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சனின் அரைச் சதத்துடனுன் சுப்மன் கில், ஜொஸ் பட்லரின் அதிரடியான ஆட்டங்களாலும் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் சூரியகுமார் யாதவைத் தவிர பிறர் ஆட்டத்தில் சோபிக்காததால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஏழு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  37. நன்றாக எழுதியுளீர்கள் அண்ணா.
  38. சு.ப. தமிழ்செல்வன் தலைவரை சந்தித்துவிட்டு அதிகாலை இருப்பிடம் திரும்பினார். அந்நேர பொழுதுகளில் இரவு, பகலாக உளவு விமானங்கள் 24 மணிநேரமும் பறந்து தகவல் சேமித்தன. வழமையில் போர் விமானங்கள் புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் நுழையும்போது போராளிகளால் எச்சரிக்கை தகவல் அனுப்பபடும். விமானத்தின் பிரசன்னம் அறிந்தவுடன் சு.ப. தமிழ்செல்வன் முகாமில் உள்ள பதுங்குகுழிக்குள் அங்குள்ளவர்கள் செல்கின்றார்கள். பதுங்குகுழி வாயிலில் குண்டு வீழ்ந்து வெடிக்கின்றது. மிகவும் மெதுவாகவும், தாழ்வாகவும் பறந்து வந்த கிபீர் விமானம் ஒன்று இலக்கை தாக்கிவிட்டு வெளியேறுகின்றது. சம்பவம் நடந்ததும் அந்தப்பகுதிக்கு எவரும் செல்லமுடியாதபடி தெருப்பகுதி தடை செய்யப்படுகின்றது. அவ்விடத்துக்கு உடனடியாகவே புலனாய்வு பொறுப்பாளர் பொட்டம்மான் வந்ததாக கூறப்படுகின்றது. இது இந்த சம்பவம் நடைபெற்றபோது குறிப்பிட்ட விமானம் குண்டு வீசுவதை நேரில் கண்டவர் எனக்கு கூறிய தகவல் ஆகும். மெய்ப்பொருள் காண்பது அவரவரை பொறுத்தது.
  39. யாராவது ஒருவர் போட்டு தாக்குவார் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். பார்த்தா 20 பந்துப் பரிமாற்றமும் போட்டு முடிந்தது.
  40. வளர்க்கின்ற நாய்க்கும்... விடுப்பு பார்க்கின்ற ஆசை இருக்கும்தானே... 🤣
  41. உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி ........! 😘
  42. கதவைத் திறந்துகொண்டு இண்டர்வியு ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ். ‘பிளீஸ் கம் இன்’ என்றார் ஒருவர். போனான்.... ‘சிட் டவுன்’.. உட்கார்ந்தான். அது ஒரு பெரிய ஹால். வலப்பக்கக் கோடியில் பெரிய திரை. சீலிங்கிலிருந்து டிஜிட்டல் புரஜக்டர் தொங்கியது. கீழே உயர்ந்த கார்ப்பெட். நாற்காலிகள் ஒவ்வொன்றும் அக்பர் சக்கரவர்த்தியின் அரியாசனம் போல் இருந்தன. ஸ்பிளிட் ஏஸிக்கள் ஓசையின்றி ஓடிக் கொண்டிருந்தன. இடப் பக்கச் சுவரின் ஓரம் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று உறுத்தலாக இருந்தது. ஒரு நீள்வட்ட மேசையின் எதிர்ப் புறத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ரமேஷ் வருவதைப் பார்த்ததும் இடது கோடியில் இருந்தவரைப் பார்த்து கொஞ்சம் பவ்யமாக மற்ற மூவரும் ‘ஐயா, நீங்க கேக்கறீங்களா?’ என்பது போல் வளைந்தார்கள். அதற்கு அவர் ‘இட்ஸ் ஓக்கே.. நீங்க ஆரம்பியுங்க’ என்பது போல் ஜாடை காட்டிவிட்டு கொஞ்சம் தளர்ந்து உட்கார்ந்து கொண்டார். வலக் கோடியில் இருப்பவர் ஆரம்பித்தார். ‘எப்படி இருக்கு இந்த அட்மாஸ்பியர்?’ என்றார். ‘இது ஒரு நல்ல கான்ஃபரன்ஸ் ஹால். புரஜக்டர், ஸ்க்ரீன், வொய்ட் போர்ட், மார்க்கர், சவுண்ட் புரூஃபிங், வசதியான நாற்காலி, உயர்ந்த கார்ப்பெட். மனசுக்கு இதமான அட்மாஸ்பியர்’ என்றான் ரமேஷ். ‘இவ்வளவு நல்ல அட்மாஸ்பியர்ல அந்த கசக்கிப் போட்ட காகிதம் உறுத்தலா இல்லையா? அதை ஏன் சொல்லல்லை?’ ‘கவனிச்சேன் சார் அதை. அந்தக் காகிதம் அதோ உட்கார்ந்திருக்காரே அவரோட ஸ்க்ரிப்ளிங் பேடோட முதல் பக்கம். கிழிக்கிறப்போ கொஞ்சம் கோணலா கிழிச்சிருக்காரு. பேடிலே முக்கோணமா கொஞ்சம் பாக்கி இருக்கு அந்தப் பக்கத்தில். நான் பாட்டுக்க சுத்தமா இருக்கிற இந்த ரூம்ல யாரோ ஒரு மடையன் குப்பை போட்டிருக்கான்னு சொன்னா அவர் மனசு புண்படும்ன்னுதான் சொல்லல்லை’ நாலு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘சரி, வெளியில ஒரு அம்மா தரையை துடைச்சிக்கிட்டு இருக்கும், அதைக் கூப்பிட்டு குப்பையை எடுத்துப் போடச் சொல்லுங்க’ என்றார் வலது. ‘அந்தம்மா பேர் என்ன சார்?’ மறுபடியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். ‘இட்ஸ் ஓக்கே. உங்க யாருக்கும் அந்தம்மா பேரு தெரியாதுன்னு நினைக்கிறேன்’ என்றவன் எழுந்து நடந்து போய் கதவைத் திறந்து வெளியில் உட்கார்ந்திருந்த பியூனிடம் ‘அந்தம்மா பேர் என்ன?’ என்று கேட்டான். பியூன் சொன்னான். ‘பவானி, இங்கே வாம்மா’ என்று கூப்பிட்டான். சுத்தம் செய்யச் சொன்னான். மறுபடி வந்து நின்றான். ‘சிட் டவுன். ஏன் நிக்கறீங்க?’ உட்கார்ந்தான். ‘எல்லா விஷயத்தையும் நல்லா கவனிக்கிறீங்க. வேலைக்காரர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது எவ்வளவு முக்கியம்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இன்னும் ஒரே ஒரு கேள்வி. அதுக்கும் சரியா பதில் சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கு நூறு மார்க்’ ‘கேளுங்க சார்’ ‘எங்க நாலு பேர்ல ஒருத்தர் தொழிற்சாலை முதன்மை அதிகாரி, ஒருத்தர் பர்ஸான்னல் டிப்பார்ட்மெண்ட் ஹெட், ஒருத்தர் ஃபைனான்ஸ் ஹெட், ஒருத்தர் உங்க பாஸ். யார் யார் என்னென்னன்னு சொல்லல்லைன்னா கூட பரவாயில்லை. தொழிற்சாலை ஹெட் யாருன்னு மட்டும் சொல்லுங்க பார்ப்போம்?’ ‘நான் வரும்போது நீங்க மூணு பேரும் இடது கோடியில் இருக்கிறவர் கிட்டே ரொம்ப பவ்யமா நடந்துகிட்டீங்க. அது என்னை கன்ஃப்யூஸ் பண்ணத்தானே ஒழிய அவர் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்களும் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்கதான் பாஸ். நான் சரியா பதில் சொல்லச் சொல்ல உங்க முகத்தில் பெருமை தாங்கல்லை. எப்படிப்பட்ட ஆளை செலக்ட் பண்ணியிருக்கேன் பார் என்கிற பெருமை தெரியுது. மீதம் ரெண்டு பேர் அமைதியா இருக்காங்க. அவங்கள்ள ஒருத்தர்தான் ஃபேக்டரி ஹெட். நீங்க எல்லாருமே ஒரு ஸ்க்ரிப்ளிங் பேட் வச்சி ஏதோ நோட் பண்ணிக்கிட்டே இருக்கீங்க. அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் இதுவரை எதுவுமே எழுதிக்கல்லை. அவர் ஃபைனான்ஸ் ஹெட்டா இருப்பார். சம்பளம் பேசும்போதுதான் எழுதுவார். ஆகவே ரெண்டாவதா இருக்கிறவர்தான் ஃபேக்டரி ஹெட். இடது கோடியில் இருக்கிறவர் பர்ஸான்னல் மேனேஜர். அவர்தான் இந்த நாடகத்துக்கெல்லாம் டைரக்டர். ‘ஸ்ப்ளெண்டிட்.. உங்க ஆப்ஸர்வேஷன் பவர் பிரமாதம். ஒரு மெய்ண்ட்டனன்ஸ் ஆளுக்கு இருக்க வேண்டிய தகுதி அது. வெய்ட் பண்ணுங்க. வீ வில் லெட் யு நோ’ ‘சார், புது விதமான இண்ட்டர்வியூ சார். வழக்கமா வந்ததும் ஃபைலை வாங்கிப் பார்க்கிறது. டெல் அஸ் சம்திங் அபௌட் யூ மிஸ்டர் ரமேஷ்ங்கிறது. இதெல்லாம் எதுவுமே இல்லை. டக்குன்னு ஆரம்பிச்சிட்டீங்க. எனக்கும் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. சூப்பர் சார்’ ‘தேங்க் யூ. பட், பேரென்ன சொன்னீங்க, ரமேஷா? நீங்க சுந்தரேசன் இல்லையா?’ ‘அவர் வெளியில வெய்ட் பண்றார் சார்’ ‘பின்னே நீங்க?’ ‘நான் கேன்டீன்ல புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கேன். கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு எத்தனை செட் டீ ஸ்னாக்ஸ் அனுப்பணும்ன்னு பார்த்துகிட்டு வரச் சொன்னாரு சூப்பரவைசர். எட்டிப் பாத்தேன், உள்ளே கூப்பிட்டீங்க, உக்காரச் சொன்னீங்க, கேள்வி எல்லாம் கேட்டீங்க. ஜாலியா இருந்திச்சு சார்’....
  43. எங்கள் தலைவர் தங்கத் தலைவர் தானைத் தலைவர் 😂 யாழ் களத்தின் முடி சூடா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் ❤️ சில காலம் துணை முதல்வர் பதவியை தானே கேட்டு வாங்கியுள்ளார். இன்றைய முதல்வர் செம்பாட்டான் மக்களின் நலன்களுக்கு மதிப்பளிக்கின்றாரா என ஒட்டுப் பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளார் 😅 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
  44. இது உண்மை தான் இன்று இந்த இரண்டு அணிகளையும் விட அதிர்ஷம் உள்ளவர் எங்கள் முதல்வர் செம்பாட்டான் தான்😅 முதல்வர் செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் 😂
  45. ஏழை நாடுகளை காப்பரேட் கம்பனிகள் விழுங்குகின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.