Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    87990
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38770
    Posts
  3. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    11531
    Posts
  4. Eppothum Thamizhan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    2373
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/06/25 in all areas

  1. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 19வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடத் திணறி விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்ததனால் இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. மொஹமட் சிராஜ் 17 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி இரு விக்கெட்டுகளை 16 ஓட்டங்களில் இழந்திருந்தாலும், சுப்மன் கில்லின் அதிரடியுடன் ஆட்டமிழக்காமல் பெற்ற 61 ஓட்டங்களுடனும், பந்துகளை எல்லைக்கோட்டைத் தாண்டி பறக்கவைத்த வாஷிங்டன் சுந்தரின் 49 ஓட்டங்களுடனும் 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @suvy ஐயா தொடர்ந்தும் முதல்வராக நிலைக்கின்றார். கூடவே @நந்தன் உம் இரண்டாம் இடத்தில் சமமான புள்ளிகளுடன் நிற்கின்றார்.
  2. முதல்வர் சுவி ஐயாவுக்கு வாழ்த்துகள். புள்ளிகளிளைப் பெற்றுக்கொண்டிருக்கும் செம்பாட்டானுக்கும் நந்தனுக்கும் வாழ்த்துகள்.
  3. இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேஎல் ராஹுலின் அதிரடியான 77 ஓட்டங்களின் துணையுடன் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் விஜய் சங்கரைத் தவிர பிறர் நிலைத்து ஆடாததால் விஜய் சங்கரின் ஆட்டமிழக்காது எடுத்த 69 ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 158 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடியான 67 ஓட்டங்களுடனும் பிற வீரர்களின் வேகமான துடுப்பாட்டங்களாலும் 4 விக்கெட் இழப்பிற்கு203 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் பலர் விரைவாக விக்கெட்டுகளை இழந்ததால், நெஹால் வதேராவின் 62 ஓட்டங்களுடன் 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 155 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @suvy ஐயா சத்தமில்லாமல் முதல்வராக வந்துள்ளார். எனினும் @செம்பாட்டான் உம், @நந்தன் உன் சமமான புள்ளிகளில் முதல்வர் பதவியைக் குறிவைத்து நிற்கின்றனர்! @alvayan நாலாம் இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளார். இதில் சதிவேலை எதுவும் கிடையாது என்பதை புள்ளிவிபரத்துறை அறியத் தந்துள்ளது.😁
  4. பையன் தம்பி இது ஒரு கிரிக்கெட் விளையாட்டு சுற்று பல அணிகள் ஒன்றுடன் ஒன்று ஒருமுறை அல்லது இருமுறை மோதி இறுதியில் ஒரு அணி எப்படியும் வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளும் . இது எல்லோருக்கும் தெரியும் ஆனால் விளையாட்டு வீரர்கள் தங்களின் விருப்பப்படி இங்கே எந்த அணியிலும் விளையாடும் நிலை இல்லை.... அதுவும் பிரச்சனை இல்லை ... ஆனால் ஒரு அணி வென்றால் அந்த அணியைப் போற்றுவதும் உங்களுக்கு விரும்பிய அணியாக இருந்தால் ...அதை ஆகா ஓகோ என்று புகழ்வதும் .... அதே அணி தோல்வியைத் தழுவும் போது........ அந்த அணியையும் அதில் விளையாடிய வீரர்களையும் தப்பான வார்த்தைகளை பிரயோகித்து கருத்துக்களை வைப்பதையே ( உதாரணம் கேனையன்கள் ) எங்கள் முன்னாள் முதல்வர் சுட்டிக் காட்டியிருக்கின்றார் என்பது எனது கணிப்பு உங்கள் விமர்சனங்கள் எங்களுக்கு வேண்டும் உங்கள் அனுமானங்கள் மற்றும் முன் கூட்டிய கணிப்புக்கள் எங்களுக்கு உதவியாகவும் ஒரு முடிவிற்கு வரும் சந்தர்ப்பத்தையும் எங்களுக்குத் தருகின்றது தொடருங்கள் ..... யாரோ பெற்ற ஒரு பிள்ளைகள் விளையாடும் ஒரு அணியை சரியாக விளையாடவில்லை என்பதற்காக கடும் வார்த்தைகளால் சாட வேண்டாமே
  5. தனது காணியில் விளைந்த முருங்கைக் காய்களை, சந்தைக்கு கொண்டு செல்லும் பெண்.
  6. இன்றைக்கும் முட்டைதான்! SRH ஐயும் CSK ஐயும் நம்பினதுக்கு இது வேணும்தான்!
  7. ஆகா ரணிலுக்கு அதிஸ்டம் அடிக்கிற மாதிரி சுவிக்கும் அதிஸ்டம் அழைக்கிறது. முதல்வரே @suvy அவர்களே உங்கள் வெற்றியை எப்படி கொண்டாடுவதென்று திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள்.
  8. 1. அம்மா 9 மாதம் சுமக்கிறார், அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார், இருவரும் சமம், ஏன் அப்பா பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 2. அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பம் நடத்துகிறார், அப்பா தனது சம்பளத்தை எல்லாம் குடும்பத்திற்காக செலவு செய்கிறார், இருவருமே சமமான உழைப்பு, இன்னும் அப்பா ஏன் பின் தங்குகிறார் என்று தெரியவில்லை. 3. அம்மா உனக்கு என்ன வேண்டுமானாலும் சமைப்பார், அப்பா உனக்கு என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருவார், அவர்களின் அன்பு சமமானது, ஆனால் தாயின் அன்பு மேன்மையாகக் காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்னால் இருக்கிறார் என்று தெரியவில்லை. 4. போனில் பேசினால் முதலில் அம்மாவிடம் பேச வேண்டும், கஷ்டத்தில் இருக்கும் போது அம்மா என்று அழுவாள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள், ஆனால் மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில் கொள்ளவில்லை என்று அப்பா ஒருபோதும் வருத்தப்படவில்லையா? குழந்தைகளின் அன்பைப் பெறுவதில் தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 5. அலமாரியில் கலர்புல் புடவைகள், நிறைய குழந்தைகளின் உடைகள் இருக்கும் ஆனால் அப்பாவின் உடைகள் மிகக் குறைவு, அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, இன்னும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. 6. அம்மாவுக்கு நிறைய தங்க ஆபரணங்கள் உள்ளன, ஆனால் தந்தைக்கு திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட ஒரே ஒரு மோதிரம் மட்டுமே உள்ளது. இன்னும் குறைந்த நகைகள் பற்றி அம்மா புகார் செய்யலாம் மற்றும் அப்பா இல்லை. அப்பா ஏன் பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 7. அப்பா தன் வாழ்நாள் முழுவதும் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள கடினமாக உழைக்கிறார், ஆனால் அங்கீகாரம் என்று வரும்போது, அவர் ஏன் எப்போதும் பின்தங்குகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. 8. இந்த மாதம் காலேஜ் டியூஷன் கட்ட வேண்டும் என்று அம்மா சொல்கிறார், பண்டிகைக்கு எனக்கு புடவை வாங்கித் தாருங்கள், ஆனால் அப்பா புது உடை பற்றி யோசிக்கவே இல்லை. இருவருக்கும் சமமான அன்பு இருக்கிறது, அப்பா ஏன் பின்தங்குகிறார் என்று இன்னும் தெரியவில்லை. 9. பெற்றோர்கள் வயதாகிவிட்டால், குழந்தைகள் சொல்கிறார்கள், அம்மா வீட்டு வேலைகளைக் கவனிக்க குறைந்தபட்சம் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவர்கள் அப்பாவுக்கு பயனில்லை. 10. குடும்பத்தின் முதுகெலும்பு என்பதால் அப்பா பின்னால் இருக்கிறார். மேலும் நமது முதுகெலும்பு நம் உடலுக்குப் பின்னால் உள்ளது. ஆனால் அவரால் நாம் தனித்து நிற்க முடியும். ஒரு வேளை, இதனால்தான் அவர் பின்வாங்குகிறார்...!!!! யார் எழுதியது என்று தெரியவில்லை, ஆனால் அருமை. அனைத்து தந்தையர்களுக்கும் சமர்ப்பணம்* Jay R Jayakumar
  9. இந்தியாவில் சொந்த மொழியில் விருப்பம் இல்லாதவர்கள் தமிழ்நாட்டவர்கள் என்று அங்கே இருந்த இலங்கையர் பொதுவாக தெரிவிக்கின்றனர்.
  10. விடுங்க தம்பி . ....... இது ஒரு ரசிப்புக்காக பங்கு பற்றுகிற போட்டிதானே ......... ஏனைய திரிகளை விட இதில்தான் பலரும் மகிழ்வாய் கலந்துரையாடி ஒருத்தரை ஒருத்தர் கலாய்த்துக் கொண்டு போக முடியுது . .........! சென்ற பல போட்டிகளில் நான்தான் அத்திவாரமாக இருந்திருக்கிறேன் . ......... இப் போட்டியிலும் பங்கு பற்ற வேண்டும் என்பதற்காக உடல்நிலை இன்னும் தேறாத நிலையில் பையனின் பதிவுக்கு எதிராகத்தான் போட்டிருந்தேன் . ....... அது இப்படி வேலை செய்வது எனக்கே ஆச்சரியமாக இருக்கு . ........ எனக்கு கோலியைப் பிடிக்கும் . ......அவர்ர பொங்களுர் ஒருநாளும் சம்பியனாய் வந்ததில்லை . ........ சரி .....இம்முறையாவது வரட்டும் என்று போட்டிருக்கிறேன் . ........ பார்ப்பம் . .......! மனக்கிலேசமில்லாமல் கலந்து போட்டியை சிறப்பிப்போம் .......! 😁
  11. தில‌க் வ‌ர்மா இர‌ண்டு போட்டியிலும் டெஸ்ட் மைச் விளையாடின‌வ‌ர்..............................
  12. உங்களது குறைகளை சுட்டி காட்டினால் தவறுகளை திருத்திக் கொள்ள முயல வேண்டுமே தவிர நீ சுத்தமா என்பதல்ல அதற்கான பதில். மேலும் தனது மொழி தவிர்ந்த வேறு மொழிகளில் கையெழுத்து வைப்பது தான் அறிவாளி என்பதற்கு அடையாளமுமல்ல....
  13. எங்கள் மன்னர் தானைத் தலைவர் மாமன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் அவர்கள் 🤣 எதிரிகளைத் தன் கட்டுப்பாட்டில் தக்க வைத்து தன்னைப் போர்முனையில் முன்னணியில் நிலை நிறுத்தியுள்ளார் 🙏 மாமன்னர் வழியே தன் வழியென தளபதி நந்தனாரும் 😃 மன்னருக்குப் பாதுகாப்புக் கவசமாக அவரைப் பின் தொடர்கின்றார் 😂 வாழ்த்துக்கள்
  14. GMT நேரப்படி நாளை திங்கள் 07 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 20) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI எதிர் RCB 17 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் 06 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சுவி சுவைப்பிரியன் ரசோதரன் நுணாவிலான் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  15. இதுக்கெல்லாம் டென்ஷன் ஆனால் எப்படி! இன்னும் எத்தனையோ மேட்சுகள் இருக்கிறது! IPL இல் வெற்றி தோல்வியை கணிப்பதில் முக்கியமானது நாணய சுழற்சிதான்! இது முழுக்க முழுக்க அதிஷ்டம்தான்!
  16. இஷாந்த் ஷர்மாவிற்காக றபாடாவை விளையாடினால் குஜராத் playoff இற்கு செல்ல வாய்ப்பு இருக்குது! நடராஜன் டெல்லி கேபிடலுக்கு விளையாடுகிறார். நான்தான் மாறி எழுதிவிட்டேன்! சன்ரைசர்ஸ் பௌலிங் lineup தான் IPL இல் மிக கேவலமாக இருக்கிறது! ஏலம் எடுக்கும்போது என்னதான் செய்தார்களோ தெரியவில்லை!
  17. போன‌ ஜ‌பிஎல்ல‌ போல‌ இந்த‌ ஜ‌பிஎல்லையும் ந‌ல்லா விளையாடுவின‌ம் என்று தான் இவைய‌ தெரிவு செய்த‌து இனி இவை கீழ் ம‌ட்ட‌த்தில் தான் ந‌ண்பா புள்ளி ப‌ட்டிய‌லில் மேல‌ வ‌ர‌ வாய்ப்பு மிக‌ குறைவு நிதிஷ் ரெட்டி ஜ‌யோ கையோ ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது இவ‌ரின் விளையாட்டு அவுஸ்ரேலியா தொட‌க்க‌ வீர‌ர் அவ‌ரும் ச‌ரியாக‌ விளையாடுகிறார் இல்லை அடுத்த‌ விளையாட்டில் SRH அணி ப‌ல‌ மாற்ற‌ம் செய்ய‌னு இல்லை இதே வீர‌ர்க‌ளை வைச்சு தான் விளையாடுவோம் என்றால் தொட‌ர் தோல்வி அடைவின‌ம்☹️..................................
  18. பிரதமர் மோடி இலங்கையுடன் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டிருக்கிறார். இதில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமும் ஒன்றாகும். இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் சிங்கள ராணுவத்திற்கு பயிற்சி மற்றும் உதவிகளை வழங்க வழி செய்கிறது. இது தமிழ் மக்களுக்கு ஒரு தீங்கான ஒப்பந்தம் ஆகும். அதனால் வைகோகூட பிரதமர் மோடி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் மோடியை சந்தித்த எமது தலைவர்கள் ஒருவர்கூட இதற்கு எதிர்ப்போ அல்லது கண்டனமோ தெரிவிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. இது ஏன்? தோழர் பாலன்
  19. ஸ்டாலினும்,கனிமொழியும் சீதாவை சந்திக்கும் போது சீமானும் சந்திப்பது வரவேற்கத்தக்கதே.
  20. இந்தியா... சிங்கள அரசியல்வாதிகளை மதிக்கின்ற அளவிற்கு, தமிழ் அரசியல்வாதிகளை கால் தூசிற்கும் மதிப்பதில்லை. சும்மா... சம்பிரதாயத்துக்காக சந்தித்து, படம் எடுத்துவிட்டு போய் விடுவார்கள். பல வருடங்களாக இவர்கள் இந்தியாவை சந்தித்தும், இதனை உணர்ந்த மாதிரி தெரியவில்லை. இவர்களை இந்தியனை நம்பி மோசம் போனதைவிட சீனாகாரனை நம்பி இருந்தாலாவது, ஏதாவது பிரயோசனமாக இருந்திருக்கும். முட்டாள் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை படுகுழியில் தள்ளி விட்டார்கள். இதற்குள் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு... சுத்துமாத்து செய்து கொண்டு திரிகிறதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.
  21. தோனியும் காலாவதி ஃபார்முலாவும்: சிஎஸ்கே அணியை ஆட்டிப் படைக்கும் பிரச்னைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 6 ஏப்ரல் 2025, 03:29 GMT "சேப்பாக்கத்துக்கு டி20 மேட்ச் பார்க்க வந்தோமா இல்லை, டெஸ்ட் மேட்ச் பார்க்க வந்தோமானு சந்தேகம் வந்துவிட்டது. ஹைலைட்ஸ் போட முடியாத அளவுக்கு சிஎஸ்கே மோசமாக பேட் செய்தார்கள், வெற்றிக்காக முயற்சிக்கவில்லை. தோனி ஓய்வு அறிவித்துவிட்டு இளம் வீரருக்கு வாய்ப்புத் தரலாம்" சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-டெல்லி கேபிடல்ஸ் ஆட்டம் நேற்று முடிந்த பின் ரசிகர் ஒருவர் இவ்வாறு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்த விதம் அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. சேப்பாக்கத்திலிருந்து போட்டி முடிந்து சென்ற ரசிகர்கள் அனைவரும் இந்த ஆட்டத்தைப் பார்க்கவா இவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினேன் என்று கடுமையான விமர்சனங்களை சாலையெங்கும் விதைத்துவிட்டு சென்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சொந்த மண்ணில் கோட்டை விட்ட சிஎஸ்கே சேப்பாக்கம் என்பது சிஎஸ்கே அணியின் கோட்டையாக ஐபிஎல் தொடரில் கருதப்பட்டது, இங்கு வந்து சிஎஸ்கே அணியை சாய்ப்பது என்பது அரிதாக இருந்தது. ஆனால், இந்த சீசனின் தொடக்கத்திலேயே 17 ஆண்டுகளுக்குப் பின் சிஎஸ்கேவை புரட்டி எடுத்து ஆர்சிபி வென்றது. நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 15 ஆண்டுகளுக்குப் பின் டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றுள்ளது. இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்ற சிஎஸ்கே அணி அதன் பின்னர் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. ஐபிஎல் தொடக்க சீசன்களில் "சேஸிங் கிங்" என்று வர்ணிக்கப்பட்ட சிஎஸ்கே அணி, கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பின் 180 ரன்களை சேஸ் செய்ததே கிடையாது என்ற மோசமான வரலாற்றை கொண்டுள்ளது. அதாவது, இலக்கைத் துரத்துகையில் அழுத்தத்தை சமாளித்துக் கொண்டு களத்தில் திறம்பட செயல்படும் பேட்டர்கள் மற்றும் பிக் ஹிட்டர்கள் யாரும் அணியில் இல்லை என்பதையே இது மறைமுகமாக உணர்த்துகிறது. 180 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால் சிஎஸ்கே அணியை வென்றுவிடலாம் என்ற தார்மீக நம்பிக்கையை எதிரணிக்கும் சிஎஸ்கே வழங்கியிருக்கிறது. ஒரு காலத்தில் அழுத்தம், நெருக்கடி மிகுந்த நேரத்தில் அமைதியாக செயல்படுவது, திடீரென மீண்டுவருவது, திட்டங்களை சரியாகச் செயல்படுத்துவது, சேஸிங்கில் மாஸ்டர்ஸ் என்றெல்லாம் சிஎஸ்கே புகழப்பட்டது. ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தைப் பார்த்த பின் சிஎஸ்கே அணி வெற்றிக்காக சிறிதுகூட முயற்சிக்கவில்லை என்று ரசிகர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். சிஎஸ்கே அணியின் எந்த பேட்டரிடமும் "இன்டென்ட்" என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய "வெற்றிக்கான திண்ணிய எண்ணம்" இல்லை என்பது நேற்றைய ஆட்டத்தில் புலப்பட்டது. பாம்பன் புதிய ரயில் பாலம் இன்று திறப்பு - அதன் சிறப்புகள் என்ன? கப்பலுக்கு எவ்வாறு வழிவிடும்?6 மணி நேரங்களுக்கு முன்னர் சரிந்த அமெரிக்க பங்குச் சந்தை – 'இப்போதே பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்' எச்சரிக்கும் சிறு வணிகங்கள்5 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தோனியும் காலாவதி ஃபார்முலாவும் சிஎஸ்கே அணி, இந்த ஐபிஎல் சீசனுக்காக வீரர்களைத் தேர்வு செய்தது என்பது புதிய பாட்டிலில் பழைய மது என்ற ரீதியில்தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த 2011-ஆம் ஆண்டு கடைபிடித்த அதே ஃபார்முலாவை இன்னும் கடைபிடிப்பது இன்றைய சூழலுக்கு சரிவராது. எந்த ஸ்கோராக இருந்தாலும் கடைசிவரை இழுத்தடிப்பது, மெதுவாக சேஸிங்கை நகர்த்துவது ஆகியவை காலாவதியான ஃபார்முலாக்கள். கடந்த இரு சீசன்களாக பல்வேறு அணிகளும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து புதிய அணியை உருவாக்கி வரும் போது, கண்ணை மூடிக் கொண்டு இந்த குறிப்பிட்ட சிலவீரர்கள் சிஎஸ்கே அணியில் இருப்பார்கள் என்று சொல்லிவிடும் அளவிலான அணியாகவே சிஎஸ்கே உள்ளது. சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் உள்ள பேட்டர்களிடம் அச்சப்படாமல் ஆடக்கூடிய மனப்போக்கு இல்லை. ஒரு ரன், 2 ரன்கள் சேர்ப்பது, சாஃப்ட் டிஸ்மிஸல் ஆவது என பழைய பாணியிலேயே இன்னும் ஆட்டம் நகர்கிறது. இந்தியா - இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழ்நாடு மீனவர்கள் பற்றி மோதி கூறியது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை: முட்டை கேட்ட பள்ளி மாணவர் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்தது யார்? முழு பின்னணி5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "ஆங்கர் ரோல்" செய்ய பேட்டர்கள் இல்லை சிஎஸ்கே அணியின் நடுவரிசை பார்ப்பதற்கு வேண்டுமானால் 9வது வரிசை வரை பேட்டர்கள் இருப்பதாக தெரியலாம். ஆனால் அணி சிக்கலான நேரத்தில் இருக்கும் போது ஆங்கர் ரோல் எடுத்து விளையாட ஒரு சிறந்த பேட்டர், பிக் ஹிட்டர் யாருமில்லை. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் விஜய் சங்கர் ஆங்கர் ரோல் எடுக்க முயற்சி செய்து, ஒட்டுமொத்த கப்பலையும் கடலில் மூழ்கடித்துவிட்டார். விஜய் சங்கர் நேற்று அடித்த 54 பந்துகளில் 69 ரன்கள் என்பது காகிதத்தில் வேண்டுமென்றால் கவுரவமாக இருக்கலாம் ஆனால், ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்கிறேன் என டி20 ஆட்டத்தை டெஸ்ட் போட்டியாக மாற்றிவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES பிக் ஹிட்டர்கள் இருக்கிறார்களா? சிஎஸ்கே அணியில் இக்கட்டான சூழலில் பெரிய ஷாட்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்யும் பிக் ஹிட்டர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்றால் ஷிவம் துபே பெயரை மட்டும்தான் ரசிகர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சிஎஸ்கே அணியால், இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட பின்புதான் ஷிவம் துபே பிக் ஹிட்டராக அறியப்பட்டார். ஷிவம் துபே பிக் ஹிட்டராக அறியப்படுகிறாரே தவிர, இன்னும் முழுமையாக அவர் அந்த ரோலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. பிக் ஹிட்டர்கள் என்பவர்கள் ஆட்டத்தை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய ஸ்கோரை அடித்து, திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியவர்கள். அவ்வாறு, தடாலடியாக சிக்ஸர், பவுண்டரிகளை விளாசும் வீரர்களை சிஎஸ்கே இன்னும் அணியில் அடையாளப்படுத்தவில்லை. நடுவரிசையில் ஜடேஜா, ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகியோர் இந்த சீசனில் கைகொடுக்கத் தவறிவிட்டனர். இலங்கையில் இந்திய பிரதமர் மோதி - இன்று என்ன நடந்தது?5 ஏப்ரல் 2025 இணையை கவர 'மது' குடிக்கும் ஆண் ஈக்கள் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு5 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இளைஞர்களுக்கு மறுக்கப்படும் வாய்ப்பு சர்வதேச கிரிக்கெட்டில், இந்திய அணிக்கு கேப்டனாக பல இளம் வீரர்களை வளர்த்துவிட்ட தோனி, இன்று சிஎஸ்கே அணியில் அதனைச் செய்ய தவறிவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒவ்வொரு ஐபிஎல் சீசன் ஏலத்திலும் இளம் வீரர்கள், அன்கேப்டு வீரர்கள் பலரையும் வாங்கும் சிஎஸ்கே அணி அவர்களில் பலரை வாய்ப்பே வழங்காமல் வெளியேற்றியுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் தமிழக வீரர் ஆந்த்ரே சித்தார்த், விக்கெட் கீப்பர் வனிஷ் பேடி, ஆல்ரவுண்டர்களாக அன்சுல் கம்போஜ், ராமகிருஷ்ணா, வேகப்பந்துவீச்சில் குர்ஜப்நீத் சிங், ஷேக் ரஷீத் என இளம் வீரர்கள் இருந்தும் இதுவரை யாருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு தரப்படவில்லை. ஓர் அணியில் இளம் வீரர்கள்தான் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவர்கள், பயமில்லாதவர்கள், பாதுகாப்பானவர்கள். ஆனால், இந்த வெற்றி ஃபார்முலா தெரிந்திருந்தும் சிஎஸ்கே இந்த விஷயத்தை வெளிப்படையாக கையாள்வதில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் உள்ள சன்ரைசர்ஸ், மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, குஜராத் அணிகள் அன்கேப்டு வீரர்கள் பலருக்கும் வாய்ப்பளித்து அவர்களின் திறமையை பயன்படுத்திக் கொண்டன. ஆனால், சிஎஸ்கே அணி வழக்கமான ஃபார்முலாவுடன் அனுபவமான சர்வதேச வீரர்களைத் தேர்வு செய்கிறேன் என்ற ரீதியில் வீரர்களை தேர்வு செய்வதும், குறிப்பிட்ட வீரர்களை தக்க வைப்பதும் தோல்விக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லை ருதுராஜ், கான்வே ஜோடி சிறப்பான தொடக்கத்தை கடந்த சீசனில் வழங்கி 849 ரன்கள் குவித்து சிறந்த தொடக்க ஜோடியாக பெயரெடுத்தது. இவர்கள் இருவரும் பவர்ப்ளேயில் மட்டும் 619 ரன்களை சிஎஸ்கேவுக்கு சேர்த்துள்ளனர். ஆனால் இந்த சீசனில் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது. இந்த சீசனில் சிஎஸ்கேயின் பவர்ப்ளே ரன்ரேட் 10 அணிகளின் ரன்ரேட்டில் கடைசி இடத்தில் ஓவருக்கு 7 ரன் ரேட்டில் இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரராக ரவீந்திராவையும், திரிபாதியையும் களமிறக்கியது பலனளிக்கவில்லை. இந்த சீசனில் நேற்றைய ஆட்டத்தில் முதன் முறையாக ஆடும் லெவனில் வாய்ப்புப் பெற்ற கான்வே தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். அவருடன், முந்தைய சீசனில் கலக்கிய கேப்டன் ருதுராஜ் அல்லாமல் ரச்சின் ரவீந்திராவே தொடக்க வீரராக தொடர்ந்தார். சிஎஸ்கே அணியின் இந்த முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. பிரபாகரன் உடல் எங்கே? புலிகள் இயக்கத்தில் என்ன நடந்தது? பிபிசி தமிழுக்கு கருணா அம்மான், பிள்ளையான் பேட்டி5 ஏப்ரல் 2025 திலக் வர்மா 'ரிட்டயர்ட் அவுட்' : புதிய சாதனை படைத்தும் சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்டியா5 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஃபார்மில் இல்லாத வீரர்கள் சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் ஏலத்தில் 5 வீரர்களைத் தக்க வைத்து 10 அன்கேப்டு வீரர்கள், 6 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 20 பேரை வாங்கியது. புதிதாக சிஎஸ்கே அணிக்குள் வந்தவர்களில் பல வீரர்கள் கடந்த சீசன்களாகவே ஃபார்மில் இல்லாதவர்கள், உள்நாட்டுப் போட்டிகளிலும் பெரிதாக ரன் சேர்க்காதவர்கள். சாம் கரன், நேதன் எல்லீஸ், ஓவர்டன், திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், முகேஷ் சவுத்ரி ஆகியோரின் கடந்த சீசன்களின் ஃபார்மை ஆய்வு செய்தால் ஏன் இப்படிப்பட்ட வீர்ரகளை தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வி எழும். சாம்கரனுக்கு இங்கிலாந்து அணியிலேயே வாய்ப்பு இல்லை, நேதன் எல்லீஸ் ஆஸ்திரேலிய அணியின் பேக்அப் பந்துவீச்சாளர், ஓவர்டன் இங்கிலாந்து அணியில் சமீபத்தில்தான் அறிமுகமாகியுள்ளார். திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், முகேஷ் சவுத்ரி ஆகியோரின் உள்நாட்டுப் போட்டியில் ஆடிய விதம், ஃபார்ம் ஆகியவற்றை ஆய்வு செய்தால் படுமோசமாக இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES கோட்டையில் அடிவாங்குவது சரியல்ல சிஎஸ்கேயின் கோட்டையாக இருந்தது சேப்பாக்கம் மைதானம். இங்கு சிஎஸ்கே அணியை வெளியில் இருந்து ஓர் அணி வந்து தோற்கடிப்பது சுலபமல்ல. ஆனால், இந்த முறை 2008க்குப் பின் ஆர்சிபி வென்றுவிட்டது, 2010க்குப் பின் டெல்லி அணியும் சிஎஸ்கேவைபுரட்டி எடுத்துவிட்டது. இந்தத் தோல்விகள் அனைத்தும், சிஎஸ்கே அணியில் ஏதோ தீவிரமான தவறு இருக்கிறது என்பதையும், அணியில் ஒட்டுமொத்த மாற்றம் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. பழைய ஃபார்முலா இனியும் கைகொடுக்காது சிஎஸ்கே அணியின் கடந்த கால ஃபார்முலா என்பது, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் 6 அல்லது 7 லீக் ஆட்டங்களை வென்றுவிடலாம். அதன்பின் வெளி மைதானங்களில் ஏதேனும் சில போட்டிகளில் வென்று ப்ளே ஆஃப் சென்றுவிடலாம். அதன்பின் அரையிறுதி, இறுதிப்போட்டிக்குள் நுழையும் ஃபார்முலாவையே சிஎஸ்கே பின்பற்றி வந்தது. ஆனால், இந்த பழைய ஃபார்முலா இனிமேல் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்காது, அதற்குரிய சூழலையையும் எதிரணிகள் வழங்காது என்பதுதான் நிதர்சனம். சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுகளங்கள் மாற்றப்பட்டு, தன்மை மாறியுள்ளதால், எந்த நேரத்தில் ஆடுகளம் எப்படி செயல்படும் என்பது கணிக்க முடியாததாகியுள்ளது. ஆனால், இன்னும் சிஎஸ்கே அணி பழைய ஃபார்முலாவை கையில் வைத்திருப்பது வெற்றிக்கு உதவாது. அது மட்டுமல்லாமல், சிஎஸ்கேஅணியில் எந்தெந்த வீரர்கள் வழக்கமாக களமிறங்குவார்கள் எனத் தெரிந்து அதற்கேற்றபடி தனித்தனியாக திட்டத்துடன் எதிரணியினர் களமிறங்கி விக்கெட்டை வீழ்த்துகிறார்கள். ஆதலால், சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிகளை அள்ளிவிடலாம் என்று சிஎஸ்கே நினைப்பது கடந்த காலம். சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 வளரிளம் ஆண் குழந்தைகளை சரியாக வளர்க்கிறோமா? 'அடோலசென்ஸ்' வெப் சீரிஸ் கூறும் செய்தி என்ன?4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தோனி பற்றி ரசிகர்கள் கருத்து சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்தவர், ஜாம்பவான் என்பதை ஒப்புக்கொண்டாலும், வயது மூப்பு என்பது அவரையும் அறியாமல் பேட்டிங்கில் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்துகிறது. பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனியை பார்த்த ரசிகர்கள் நேற்று ஆடிய தோனியின் பேட்டிங்கை கண்கொண்டு பார்க்க முடியாமல் மனம் குமுறினர். இதனால் போட்டி முடிந்தவுடன் "தோனி ரிட்டயர்மென்ட்" என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரண்டாகியது. தோனி நேற்றைய ஆட்டத்தில் 19 பந்துகளைச் சந்தித்த பின்புதான் முதல் பவுண்டரியே அடித்தார். ஆட்டத்தின் சூழல் தெரிந்தும், தன்மை அறிந்தும் பிஞ்ச் ஹிட்டர் போல் அதிரடியாக ஆட முயலாமல் ஆமை வேகத்தில் பேட் செய்து தோல்வி கிட்டத்தட்ட உறுதியான பிறகே கடைசி ஓவரில் சிக்ஸ, பவுண்டரி அடித்து ரசிகர்களை தோனி வெறுப்பேற்றினார். தோனி ஓய்வு பற்றி ஃபிளமிங் கூறியது என்ன? தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் "தோனியிடம் ஓய்வு குறித்து பேசுவது என் வேலையல்ல. எனக்கு அது குறித்து ஏதும் தெரியாது. அவர் அணியில் இருக்கும்வரை அவருடன் சேர்ந்து பணியாற்றுவதை விரும்புகிறேன். தோனி இன்னும் வலிமையாக இருக்கிறார், நான் கூட இதுவரை தோனியிடம் ஓய்வு குறித்து கேட்டதில்லை, நீங்கள்தான் (ஊடகங்கள்) கேட்கிறீர்கள்" எனத் தெரிவித்தார். ஏமாற்றம் தந்த தோனி: சிஎஸ்கே அணியின் 'ஹாட்ரிக்' தோல்வி உணர்த்துவது என்ன? போராட்டமின்றி சரணடைவதா? சிஎஸ்கே தோல்வியால் கொந்தளிக்கும் ரசிகர்கள் சிஎஸ்கே-வில் தோனி நீடிப்பது அணிக்கு பலமா? பலவீனமா? சிஎஸ்கே மீண்டும் தோல்வி: பேட்டிங்கில் தோனி எப்போதும் தாமதமாக களமிறங்குவது ஏன்? பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கேவுக்கு எச்சரிக்கை மணி கிரிக்இன்போ தளத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அளித்த பேட்டியில் " டாப் ஆர்டர் ஃபயர் ஆகாமல் துபேயும் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால் சிஎஸ்கே அணி அவ்வளவுதான். சிஎஸ்கே அணியில் உள்ள பேட்டர்கள் வெற்றிக்காக முயற்சி கூட செய்வதில்லை, இதுபோன்ற அணுகுமுறை எனக்கு வியப்பாக இருக்கிறது. ஒருமுறை அல்ல இருமுறை சிஎஸ்கே இந்த சீசனில் மோசமாக ஆடி விரைவாக விக்கெட்டுகளை இழந்துள்ளது நல்ல அறிகுறியல்ல. சிஎஸ்கே அணி இந்த சீசனில் இதுவரை 17 வீரர்களை மாற்றிப் பயன்படுத்தியும் எந்த பலனும் இல்லை. இதற்கு முன் 2015ல் 14 வீரர்கள், 2021-ல் 16 வீரர்களை மாற்றியது" எனத் தெரிவித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89g7gejv2lo
  22. ராஜீவ் காந்தி மீது... தாக்குதலை மேற்கொண்டமைக்காக இன்று வரை உறுதியாக இருக்கும் விஜேமுனிக்கு நன்றி.
  23. கிழக்கில்… நாலு பாராளுமன்ற உறுப்பினர்களை எடுத்துத் தந்த சாணக்கியன், மோடிக்குப் பக்கத்தில் நிற்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால்… சுமந்திரன் தானும் தோற்று, தமிழரசு கட்சி தோற்பதற்கும் காரணமான ஆளுக்கு, இந்தச் சந்திப்பிற்கு போவதற்கே அருகதை இல்லை. வெட்கம் இல்லாமல் போய் பல்லை காட்டிக் கொண்டு நிற்கிது.
  24. முதல்வரே @suvy அவர்களே உங்கள் வெற்க்கு வாழ்த்துக்கள் நான் என்னமோ நினைத்து அட்வான்ஸ் வாழ்த்து தெரிவித்து வாழ்த்த என்னமோ நடக்குது ..என்றாலும் துணைமுதல்வரானதுக்கு வாழ்த்துகள் செம்பாட்டான் வெளிவிவகார நிதியமைச்சர் நந்தனுக்கும் வாழ்த்துகள்
  25. இன்று ஒரு போட்டி மட்டுமே நடைபெறும். முதலாவது போட்டி செவ்வாய்க்கிழமைக்கு பிற்போடப்பட்டிருக்கிறது கொல்கத்தா நகரில் நடக்கும் ராமா நவமி நிகழ்வுக்காக பலர் கூடவுள்ளதற்காக பாதுகாப்பு காரணமாக இன்று நடைபெறவுள்ள போட்டி செவ்வாய் அன்று பிற்போடப்பட்டுள்ளது.
  26. போட்டாரே கிருபன் ஒரு போடு. இது CSKக்கு விழுந்த அடியைப் பார்த்ததால் வந்த வினை. இது மாதிரி மேலும் மேலும் எதிர்பார்க்திறம்
  27. முதல்வர் சுவி ஐயாவுக்கு வாழ்த்துகள்.விடாது புள்ளிகளிளைப் பெற்றுக்கொண்டிருக்கும் செம்பாட்டானுக்கும் நந்தனுக்கும் வாழ்த்துகள். ஈயடிச்சான் கொப்பி அடிக்கக்கூடாது இடைக்கிடை சில மாற்றங்களையும் செய்ய வேண்டும்.கோஷானும்தான் கொப்பியடிச்சவர். அவருடைய நிலமையைப்பாருங்கள் . அவர் பழைய போட்டியைப் பார்த்துக் கொப்படிச்சிருப்பாரோ??
  28. இயற்கையை நீ அழித்தால் இயற்கை உன்னை அழிக்கும் இது தான் இன்றைய உலக நிகழ்வுகள்.
  29. அதேதான். நாம பேசிக்கொண்ட மாதிரியே..... அப்பிடியே. அப்படி ஒரு அடி. இதேதான். பையனுடன் சும்மா ராவிப் பாக்கிறது. அதுவும் அவர் செம கடுப்பில் இருக்கும் போது.... கரிச்சுக்கொட்டுவாரே. இன்றைக்கு சென்னை அணி முழுவதையும் கலைத்துவிட்டார். அவர் சொன்ன மாதிரி செய்தால், அணியே இருக்காது. நல்ல வேளை CSK காரர் ஒருத்தரும் இங்கே இல்லை என்று நினைக்கிறேன். 😁
  30. இந்தப் படம் அருமை...இதிலை ஒரு காவியத்தலைவியின் சாயலும் அடிக்குது.....நான் நினைத்தது சரிதானே கவி அய்யா கதைஞரர் ...அம்மா ..உண்மையை சுவைபட கிராமிய ரீதியில் சொல்கின்றீர்கள்.
  31. https://www.facebook.com/groups/348412688674840/permalink/2904661413049942/
  32. மனிதப் பாலில் இருக்கும் புரதத்தின் வகை மட்டுமே ஏனைய பாலூட்டிகளினுடையதை விட வேறு, ஆனால், இருக்கும் மொத்தப் புரதத்தின் செறிவு பசுப்பாலில் மனிதப் பாலை விட அதிகம்! இந்த அடிப்படை "பொடியை" மட்டும் பில்ட் செய்யும் பொடி பில்டர்களுக்குத் தெரியாது, ஆனால் மருத்துவருக்குமா தெரியவில்லை? இதே போல இன்னொரு அநியாயமும் நடக்கிறது. பசு கன்று போட்டு முதல் இரு நாட்களில் வரும் பால், கொழுப்பு மிக அதிகமாக இருப்பதால் சுவையாக இருக்கும். ஊரில் கடும்புப் பால் (colostrum) என்பார்கள். காய்ச்சினால் கட்டியாக வரும். உண்மையில், இந்த முதல் 48 மணி நேரப் பாலை கன்று குடிக்க அனுமதிக்க வேண்டும். இந்த 48 மணி நேரத்தினுள் தான் பசுவில் இருந்து கன்றுக்கு நோயெதிர்ப்பு சக்தி கடும்புப் பாலினூடாகக் கடத்தப் படும். இதைக் குடித்தால் கன்று தொற்றுக்கள் இல்லாமல் வளரும். ஆனால், ஊரில் கன்றுக்குக் கொஞ்சமாகக் கொடுத்து விட்டு கடும்புப் பாலை மனிதர்கள் கறந்து காய்ச்சிக் குடிப்பார்கள். கன்று நோய் வாய்ப்பாட்டு அல்லல் படும்!
  33. பாவம் குழந்தை அதற்கு பத்து வயதாகும் பொது தாய்க்கு 76 வயதாகும் ...இனியும் தம்பியோ தங்கையோ வராமல் இருக்க வேண்டும்.😃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.