Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்16Points87988Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்7Points38754Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்6Points20011Posts -
செம்பாட்டான்
கருத்துக்கள உறவுகள்5Points1223Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/08/25 in all areas
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக அடித்தாடி சிறந்த அடித்தளத்தைக் கொடுத்ததால், எய்டன் மார்க்கத்தின் 47 ஓட்டங்கள், மிச்சல் மார்ஷின் 81 ஓட்டங்கள் மற்றும் நிக்கொலஸ் பூரனின் ஆட்டமிழக்காமல் எடுத்த 87 ஓட்டங்களுடன் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் சவாலான வெற்றி இலக்கை நோக்கி வேகமாக அடித்தாடியதால் வெல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. சுனில் நாரயேனின் 30 ஓட்டங்கள், அய்ங்கியா ரஹானேயின் 61 ஓட்டங்கள், வெங்கடேஷ் ஐயரின் 45 ஓட்டங்கள், ரிங்கு சிங்கின் 38 ஓட்டங்கள் இலக்கை அண்மிக்க உதவின. எனினும் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்ததால் இறுதியில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 4 ஓட்டங்களால் வெற்றியீட்டியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பிரியன்ஷ் ஆர்யாவின் மின்னல் வேக சதத்துடனும், விக்கெட்டுகள் சரியச் சரிய பின்னர் வந்த ஷஷாங் சிங்கின் அதிரடியான ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்கள் மற்றும் மார்கோ ஜென்ஸெனின் வேகமான ஆட்டமிழக்காமல் எடுத்த 34 ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ரச்சின் ரவீந்திராவும், 69 ஓட்டங்கள் எடுத்த டெவொன் கொன்வேயும் சிறந்தச் அடித்தளத்தைக் கொடுத்த போதிலும் பின்னர் வந்த வீரர்களில் ஷிவம் டுபேயின் 42 ஓட்டங்களையும், வாணவேடிக்கை காட்டிய தோனியின் 27 ஓட்டங்களும் வெற்றி இலக்கை அடைய உதவவில்லை. இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:5 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தோனி கோழி தந்திட்டார். ஆமா ஆமா கண்ணுக்க ரொம்ப குத்துது போல. ஒரு 2-3 புள்ளி எடுக்க விடுறாங்கள் இல்லை. முதலமைச்சர் @suvy க்கு வாழ்த்துக்கள்.3 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
3 points
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தமுறை கடைசியாக வாற நாலு டீமும்தான் playoff இற்கு போகுமாம்!!😜3 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
3 points- மத்தேயு 6 : 3 - சோம.அழகு
2 pointsமத்தேயு 6 : 3 - சோம.அழகு “கயலு… உனக்கு சுண்டல் அவிச்சு வச்சிருக்கேன். அந்தச் சின்ன சம்படத்துல வடையும் வாங்கி வச்சிருக்கேன். பசிச்சா சாப்பிடு தங்கம். விளையாண்டு முடிச்சுட்டு எழில் அக்கா வீட்டுல இரு. நான் வந்து கூப்பிட்டுக்குறேன். சரியா?” – அவ்வளவு நேரம் தொடுத்த பூச்சரங்களையும் மாலைகளையும் கூடையினுள் எடுத்து வைத்து வழமையான மாலை வியாபரத்திற்குக் கிளம்பியவாறே தன் மகளிடம் வாஞ்சையாகக் கூறினாள் மலர். என்ன ஒரு பெயர் பொருத்தம்! “யம்மா… நானும் கூட வாரனே!” – கிட்டத்தட்டக் கெஞ்சினாள் கயல். இது வாராவாரம் நடக்கும் கதைதான். வார நாட்களில் கயலின் வீட்டுப் பாடத்தைக் காரணம் காட்டி உடன் அழைத்துச் செல்ல மறுத்துவிடுவாள் மலர். வார இறுதியில் சில சமயம் பிள்ளையின் ஆசைக்கு வளைந்து கொடுக்க வேண்டி வரும். “வேணாங்கண்ணு… படிக்குறதுனா படி; இல்லனா பக்கத்து வீட்டுக்குப் போய் விளையாடக் கூட செய். எதுக்குப் போட்டு அந்தக் கூட்டத்துல வந்து….?” “ம்மா… ப்ளீஸ் மா…” - மறுதலிக்கவே முடியாத ஒரு முகத்தை எங்கிருந்துதான் கொண்டு வருவாளோ? வேறு வழியில்லாமல் அந்த வெகு சில நாட்களில் இன்றும் ஒன்றாகிப் போனது. மிகவும் பொறுப்பாக ஒரு சிறிய கூடையைத் தானாக எடுத்து வந்து, “ம்ம்.. எனக்கும்” என்று மலரிடம் நீட்டினாள். “சொன்னா கேட்க மாட்டா… இந்தா.... ஆனா கொஞ்சந்தான் தருவேன்” என்றபடி வெறும் நான்கைந்து பூச்சரங்களை மட்டுமே அக்குட்டிக் கூடையினுள் இட்டாள். அம்மாவைப் போலவே கூடையை இடுப்புப் பக்கத்தில் வைத்துப் பிடித்தவள் தன் வயதிற்கே உரிய களிப்புடன் ஒவ்வொரு காலாக மாற்றி மாற்றி துள்ளிக் குதித்தவாறே தன் குதிரைவால் இடமும் வலமும் ஆட குதூகலமாகச் சென்றாள். தன் மகளைப் பார்த்துப் பார்த்துப் பூரிப்படைந்தவாறே மென்புன்னகையுடன் உடன் நடந்து வந்தாள் மலர். அந்தத் தெருமுனையில் வறுத்த கடலைப் பொட்டலங்களுடன் நின்று கொண்டிருந்த எழிலும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். மூவரும் கோவில் தெருவை நோக்கி நடந்தார்கள். கோயிலுக்கு வருபவர்கள், அதைச் சுற்றி இருக்கும் ஏராளமான கடைகளுக்கு வருபவர்கள் என மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மிக அகலமானதும் நீண்டதுமான ரத வீதி அது. எனவே ஆளுக்கு ஒரு புறமாக விற்பனை செய்து கொண்டிருப்பார்கள். “படிக்குற புள்ளைகள்லாம் என்னத்துக்கு என் கூட வாரீக?” என்று செல்லமாக அதட்டினாள் மலர். “சும்மா வா அக்கா” என்று சிரித்த எழில் இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படிப்பவள். “அம்மா! இப்பிடி ஏதாவது வெளிய வந்தாதான் உண்டு. நாங்க பாட்டுக்கு எங்க சோலிய பாக்கப் போறோம். உனக்கு என்ன எடைஞ்சலாம்?” – தனது அணியில் எழில் வந்துவிட்ட தைரியத்தில் கயலின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்தது. ஆளுக்கு ஒரு கடலைப் பொட்டலத்தைக் கையில் திணித்துத் தானும் ஒன்றைப் பிரித்துச் சாப்பிட்டவாறே நடந்தாள் எழில். கடைவீதியை வேடிக்கை பார்ப்பது பிடித்தமான பொழுதுபோக்கு கயலுக்கு. எல்லாவற்றையும் கண்கள் விரிய பார்ப்பளே தவிர ஒரு நாளும் அம்மாவிடம் எதையும் வாங்கித் தரச் சொல்லிக் கேட்கவே மாட்டாள். “நாங்கதான் படிக்கல. உங்களுக்கு இருக்குற ஒரே வேலை – படிக்குறது. அத மட்டும் பாக்குறதுதானே? அதுக்குத்தான கெடந்து இப்பிடி கஸ்டப்படுதோம் நாங்க” என்றள் மலர். வீட்டில் சில சமயம் பூ தொடுத்துக் கொண்டிருக்கும் போது கயல் படிப்பதை ஆசையாய்ப் பார்க்கையில் மலரின் கண்களே பூக்களாய் மாறிப் போகும். பத்தொன்பது வயதில் மணமாகி இருபது வயதிலேயே கயலுக்குத் தாயாகிவிட்டாள். நன்கு படிக்கும் ஆற்றல் பெற்றிருந்தாலும் கல்லூரியின் முதலாமாண்டோடு படிப்பைத் தூக்கிப் போட வேண்டிய குடும்பச் சூழல். இப்போது அவளது உலகம், உயிர், மூச்சுக்காற்று என எல்லாமே கயல்தான். ஆனாலும் உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேகத்திற்கு முற்றிலும் ஈடு கொடுக்கும் வகையில் அனைத்து உலக நடப்புகளையும் அறிந்து கொள்ள முயல்வாள். கற்றுக் கொள்ளும் ஆர்வம் மட்டும் மலரை விட்டுப் போகவே இல்லை. கோயிலில் அம்மன் சன்னதிக்கென்று தனி நுழைவுவாயில் உண்டு. கயல் உடன் வரும் நாட்களில் மட்டும் உள்ளே செல்வாள். ஐயருக்காகக் காத்திருக்கவும் மாட்டாள். அர்ச்சனையும் செய்ய மாட்டாள். வேண்டிக்கொள்ளுதல் என்பதும் அவளுக்குத் தெரியாது. சாமி கும்பிடுதல் என்பது அவளைப் பொறுத்த வரை சில நொடிகள் அக்கற்சிலையைக் கூர்ந்து நோக்கியவாறு மனதினுள் கயல் படித்துப் பெரிய ஆளாக வருவாள் என தனக்குள் வைராக்கியமாக சொல்லிக் கொள்வது. சொல்லிக் கொள்வது என்பதையும் தாண்டி அம்மனிடம் கயலைப் பெரிய கெட்டிக்காரியாகக் கொண்டு வரப்போவதாகச் சூளுரைப்பது போல இருக்கும். அதன் வீரியம் எப்படி இருக்குமென்றால் அவளது மனதிற்குக் காலமே செவி சாய்த்து அதை நிகழ்த்தித் தரும் முயற்சியில் அர்ப்பணிப்போடு ஈடுபடத் துவங்கும் அளவிற்கு இருக்கும். பின்னர் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அந்த இசைத்தூணில் கொட்டப்பட்டிருக்கும் குங்குமத்தை மோதிர விரலால் எடுத்து கயலின் நெற்றியில் இருக்கும் சிறிய கருப்புப் பொட்டிற்கு மேல் மெலிதான கோடாக இடுவாள். சட்டென்று யாரும் நெட்டி முறிக்கும் அழகைப் பெற்றுவிடும் அம்முகம். உடனே கண்களை இறுக மூடி புருவங்களையும் மூக்கையும் சுருக்கிச் சுளித்தும் விரித்தும் இரண்டு மூன்று முறை வேண்டுமென்றே விளையாடுவாள் கயல். குங்குமம் லேசாக கண்களுக்குக் கீழேயும் மூக்கின் மேலேயும் மகரந்தத்தைப் போல் சிதறிப் படியும். அதைத் துடைத்து விட்டவாறே மலரிடம் இருந்து பரிசாகக் கிடைக்கும் ஒரு முத்தத்திற்குத்தான் இந்தக் குறும்பெல்லாம். “ரொம்ப தூரம் போய்டாதீங்க… நான் பாக்குற தூரத்துலயே இருங்க ரெண்டு பேரும்” – ரத வீதியை அடைந்ததும் இரண்டு பேரையும் பார்த்துச் சொன்னாள் மலர். சரியென்றவாறே கூட்டத்தினுள் பிரிந்து சென்றனர். கோயில் ஒலிப்பெருக்கியில் உரத்துப் பாடிக் கொண்டிருந்த எஸ்.பி.பி, ஒவ்வொரு கடை வாசலிலும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மக்கள், வாகன இரைச்சல்கள் ஆகியவற்றுடன் “பூவு… பூவு… மல்லிப் பூவு… அக்கா பூ வாங்கிக்கோங்க”, “கடல… கடல… வறுத்த கடல… அண்ணா ஒரு பொட்டலம் அஞ்சு ரூபாதான்… வாங்கிக்கோங்கண்ணா” ஆகியவையும் போட்டி போட்டன. அவ்வளவு கூட்டத்திலும் வேக வேகமாகத் தன் கண்களால் துழாவி அவ்வப்போது இருவரின் இருப்பையும் உறுதி செய்தவாறே பூ விற்றுக் கொண்டிருந்தாள் மலர். கயலை உடன் அழைத்து வரும் போதெல்லாம் ஒரு வித பதற்றத்திலேயேதான் பொழுது கழியும் மலருக்கு. “சீக்கிரம் பூக்கள் விற்றுத்தீர்ந்து விடாதா?” என்றிருக்கும். கண்ணை விட்டு கயல் ஒரு நொடி மறைந்து விட்டாலும் மீதமிருக்கும் மொத்தப் பூக்களையும் சட்டை செய்யாமல் கயலைத் தேடிக் கண்டடைந்து வீட்டிற்குக் கூட்டி வந்துவிடுவாள். கூடையில் இருக்கும் பூக்களையும் அவர்கள் வரும் நேரத்தையும் பார்த்து அக்கம்பக்கத்தினர், “ஏங் கயலு? அம்மைய விட்டுத் தள்ளிப் போனியோ?” என்று விளையாட்டாகக் கேட்டுச் சிரிக்கும் அளவிற்கு அத்தனை பேருக்கும் கயலின் மீதான மலரது பேரன்பு பரிச்சயம். “ஏஞ் சிரிக்க மாட்டீங்க? வச்சுருக்குறது ஒத்த புள்ள… அதைக் காணாம ஒரு நிமிசம் உசுரே போயிருது. இன்னைக்கு யாவாரத்துல கொட்டுனது போதும். இந்தப் பூவையெல்லாம் ஆளுக்கு ஒண்ணா எடுத்து வச்சுக்கிடுங்க” என்பாள். அன்று சனிக்கிழமை ஆதலால் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. விற்பனையும் நன்றாக நடந்தது மூவருக்கும். கிட்டத்தட்ட எல்லாமே விற்றுத் தீரப் போகும் சமயம். கயலைக் காணவில்லை. லேசான பதற்றம் தொற்றிக் கொண்ட போதிலும் ‘வழக்கம் போல் எங்கேனும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பாள்’ என மனம் ஆசுவாசப்படுத்த முயன்றது. கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் அவ்வீதியை இரண்டு முறை கால்களால் அளந்து அலசி விட்டாள். கண்கள் இருப்பு கொள்ளவில்லை. சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டே இருந்ததில் இப்போது நிஜமாகவே பீதியடையத் தொடங்கினாள். “மலரக்கா… என்னாச்சு? ஏன் இப்பிடி அங்கயும் இங்கயுமா ஓடிகிட்டு இருக்க? உன்ன தேடிக் கண்டுபிடிக்குறதே பெரும்பாடா போச்சு. கயல எங்க?” – எழில் “அவளதான் காணும்னு தேடிட்டு இருக்கேன்” “பயப்படாத… இங்கதான் எங்கயாவது வாய் பார்த்துட்டு நிப்பா. அடுத்த தெருவுல போய் பாப்போமா?” “இல்ல… கண்டிப்பா இந்த ரத வீதிய விட்டு எங்கயும் போகக்கூடாதுன்னு அவளுக்குத் தெரியும்” – பரபரத்தாள் மலர். “சரி. வா… தேடுவோம்” என்று எழிலும் மீண்டும் ஒரு முறை அத்தெரு முழுக்க சல்லடை இட்டுத் தேடினாள். யாரிடமேனும் விசாரிக்கத் துவங்கும் அளவிற்குச் சூழல் கையை மீறிச் சென்றுவிட்டதாக நம்பும் திராணி அற்றவளாக மாறிப் போயிருந்தாள் மலர். ஒவ்வொரு நொடியும் கொடூரமாகக் கழிந்தது. “வர வேண்டாம்னு சொன்னா எங்க கேக்குறா… கழுத” என்று கோபம் கோபமாக வந்தது மலருக்கு. நேரம் ஆக ஆக அழுகை வரும் போல் இருந்தது. இருவருக்கும் என்னென்னவெல்லாமோ தோன்றியது. ஆனால் வாய்விட்டுச் சொல்ல விரும்பாமல் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது என மனதினுள் வேண்டிக்கொண்டிருந்தார்கள். “கோயில் வாசல்ல ட்ராஃபிக் போலீஸ் நிப்பாரு. அவர்கிட்ட சொல்லிப் பார்ப்போமா?” என்று கேட்டாள் எழில். நிலைமை மோசமடைந்து கொண்டிருப்பதை அவளது வார்த்தைகள் சட்டென வெளிச்சம் போட்டுக் காட்டியதைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. அதற்குப் பதில் கூறுவதற்குக் கூட பயந்து போனவளாக மருண்டு நின்றிருந்தாள் மலர். செய்வதறியாமல் இருவரும் தவித்துக் கொண்டிருந்தனர். கால்கள் நிலைகுத்தி நின்றன எனினும் கண்கள் ஓய்வொழிச்சல் இல்லாமல் கூட்டத்தினுள் ஊடுருவி அலைந்தபடியே இருந்தன. கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழிந்து விட்டது. திடீரென ஒரு இரு சக்கர வாகனத்திற்கும் சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்தவருக்கும் நடுவில் தென்பட்ட இடைவெளியில் பத்து வயதுப் பெண் குழந்தை ஒன்று அவ்வீதியில் இருந்த பெரிய ஓட்டல் ஒன்றின் உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது தெரிந்தது. மஞ்சள் பூ போட்ட சிகப்புச் சட்டை… கயலேதான்! “யக்கா… அங்க பாரு… கயலு!” கூட்டத்தைப் பிளந்து கயலை நோக்கிப் பாய்ந்து சென்றாள் மலர். கையில் ஒரு ஜிகிர்தண்டா கோப்பையுடன் சிரித்தவாறே அம்மாவைப் பார்த்ததும் ஓடி வந்தாள் கயல். “என்ன கயலு? எத்தன தடவ சொல்லிருக்கேன்? நீ பாட்டுக்கு எங்கயாவது போகாதன்னு” – பதற்றம் தணியாத குரலில் படபடத்தாள். “இங்கதாம்மா இருந்தேன். இந்த அண்ணாதான் வாங்கித் தந்தாங்க. சூப்பரா இருக்குமா. இந்தா நீ ஒரு வாய் சாப்பிட்டுப் பாரேன்” – கோப்பையைத் தூக்கிக் காண்பித்தாள். மகள் கிடைத்துவிட்ட ஆறுதலில் அந்த இளைஞனைப் பார்த்துப் புன்னகை புரிந்தவாறே நன்றி கூற வாய் எடுத்தாள். ஆனால் அவன் கைகளில் முளைத்திருந்த கண்கள் அவளைக் கொஞ்சம் உறுத்தின. “என்ன தம்பி பண்றீங்க?” “ஒண்ணும் இல்லையே” என்றவாறே தோள்களைக் குலுக்கினான். மலரது பார்வையில் கோபம் மெல்லமாக ஏறத் துவங்கியிருந்ததை அவளது நெரிந்த புருவங்கள் காட்டிக் கொடுத்தன. உடனே அவளைச் சமாதானப் படுத்தும் பொருட்டு, “அட! நெஜமாவே ஒண்ணும் இல்லீங்க. குழந்தை பூ வித்துட்டு இருந்தா. சும்மா பேசிட்டு இருந்தேன். ‘என்ன படிக்குற?’, ‘என்ன பாடம் பிடிக்கும்?’, ‘என்னவாகப் போற?’, ‘அம்மா என்ன பண்றாங்க?’… வழக்கமா கேக்குறதுதான். ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு தோணுச்சு… அதான்” “அதுக்கு எதுக்கு ஃபோன்ல படம் புடிக்கிறீங்க?” “என்னோட வலைதளத்துல போடுறதுக்கு” – இப்படிச் சொல்லும் போது அலைபேசியை அணைத்துச் சட்டைப் பையினுள் வைத்து விட்டிருந்தான். “அதான் எதுக்குன்னு கேக்கேன்” அவனிடம் சரியான பதில் இல்லை. அல்லது பளிச்சென உண்மையைப் போட்டு உடைக்க தைரியம் இல்லை. “அது… வந்து… நெறைய பேரு பாப்பாங்க” “பாத்து? ஆமா… நீங்க போடுற இந்த வீடியோவ எப்படி உண்மைன்னு நம்புவாங்க?” “அதுலாம் நம்புற மாதிரி பண்ணிடலாம்” – விளையாட்டாகச் சிரித்தான். “எப்படி? பிண்ணனியில ஒரு சோக பாட்டு இல்லேனா உத்வேகத்த கெளப்புற மாதிரியான பாட்ட சேர்த்தா?” – அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த எழில் கொஞ்சம் காட்டமாகக் கேட்டாள். “ஏதோ இந்தக் குழந்தைக்கு வாங்கிக் குடுக்கணும் போல இருந்துச்சு. அதுக்குப் போய் இவ்வளவு….” என்று பம்மினான். இதற்குள் அந்தச் சிறு சலசலப்புக்கு ஏற்ற சிறு கூட்டம் ஒன்று கூடிவிட்டது. அதில் ஒருவன் அந்த இளைஞனைப் பார்த்து, “டூட்! நீங்க… சமூக வலைதளத்துல… அந்த genz_idiots பக்கத்தோட…” என அடையாளம் கண்டு கொள்ள முனைய அவனுக்கு அது இன்னும் ஏந்தலாய் இருந்தது. அவனைப் பின் தொடரும் 2 மில்லியன் தலைகளும் அவனுக்காக அங்கு ஆஜர் ஆனதாகவே உணர்ந்தவன் தன் தொனியைச் சற்றே மாற்றினான். “நல்ல மனசோட உதவி பண்ண நெனச்சேன் பாருங்க. என்னைச் சொல்லணும். தெரியாம பண்ணிட்டேன். போதுமா? ஆள வுடுங்க. நல்லதுக்கே காலம் இல்ல” என்று எரிச்சலடைந்தான். “தம்பி! நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது. நான் உங்கிட்ட வந்து உதவியும் கேட்கல. நீங்க உதவி பண்ணனும்னு நெனச்சதயும் நான் தப்புன்னு சொல்லல. அத படம் புடிச்சு ஒளிபரப்பணும்ங்கிற ஈன புத்தியைத்தான் தப்புன்னு சொல்றேன்” – மலர் நிதானமாக சொல்ல முயன்றாலும் அந்த ஒரு வார்த்தையில் கோபம் கொப்பளிக்கத்தான் செய்தது. “ஈன புத்தியா? என்ன வாய்க்கு வந்தபடி பேசுற? Ungrateful bi**h” “ஏய்! இந்த புடுங்கித்தனத்தலாம் வேற யார்கிட்டயாவது காட்டு…. எங்களுக்கும் பேசத் தெரியும்… You imbecile ba****d” – எழிலும் பதிலுக்கு எகிறினாள். சண்டை முற்றத் துவங்க, யாரோ ஒருவர் அதைத் தன் கைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அதைக் கவனித்துவிட்ட அந்த இளைஞன் இணைய உலகில் தன் பிம்பம் கலைந்து விடுமோ என்று அஞ்சி, “ஹலோ! ஃபோன ஆஃப் பண்ணுங்க. யார கேட்டு ரெக்கார்டு பண்றீங்க? டெலீட் பண்ணுங்க. It’s an invasion of privacy” என்று குதித்தான். “ஹய்ய்ய்! உனக்கு வந்தா இரத்தம். எங்களுக்கு வந்தா மட்டும் தக்காளிச் சட்னியா? இல்லாதப்பட்டவங்கன்னா கேக்காம கொள்ளாம உன் இஷ்டத்துக்கு என்ன வேணா பண்ணுவியா? எங்க கூட பேசுறதயே ஏதோ தாராள மனசுக்காரன் மாதிரி எடுத்துப் போட்டுட்டு இருக்க?” என்று கடுகடுத்தாள் எழில். “நான் நல்லது பண்ணததான் வீடியோ எடுத்தேன். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு” “நல்லது பண்ணனும்னு நெனைக்குறவன் சத்தங்காட்டாம செஞ்சுட்டுப் போவான். இப்பிடி பெரும பீத்தீட்டு இருக்க மாட்டான். ஒரு 20 ரூபாய்க்கு ஜிகிர்தண்டா வாங்கி குடுத்தது நீ கட்டை விரல் பிச்சை எடுக்கத்தானே? நீ நோகாம சம்பாதிக்குறதுக்கு நாங்கதான் கெடைச்சோமா?” – தான் நினைப்பதை எவ்வாறு வார்த்தைகளில் வடிப்பது எனத் தெரியாமல் தவித்து நின்ற மலருக்கும் சேர்த்து எழிலே பேசினாள். “What nonsense? இதைப் பாத்து இன்னும் நெறைய பேருக்கு உதவணும்னு தோணும் இல்லையா?” “உதவி பண்ணனும்னு நினைக்குறதும் நீ பண்றதும் ஒன்னா? மனுசனா பொறந்த ஒவ்வொருத்தனும் தன்னால முடியும்னா கண்ணு முன்னால பசிச்சுக் கெடக்குறவனுக்குச் சாப்பாடு வாங்கிக் குடுக்கத்தான் செய்வான். நீதான் ஏதோ பெரிய சமூக சேவை செஞ்ச மாதிரி அனத்தீட்டு திரியுற” – அவ்வளவு பெரிய விஷயத்தை அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள் எழில். வசமாக மாட்டிக் கொண்டதாக உணர்ந்தவனிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. “வா எழிலு… போலாம்” என்று அவ்விடத்தை விட்டுக் கிளம்ப முயன்ற மலரின் கைப்பிடியிலிருந்து மெல்ல தன்னை விடுவித்துக் கொண்ட எழில், “இருக்கா… அதான் பேச்சு இவ்ளோ தூரம் வந்துட்டுல்ல… இரு, கொறையையும் பேசீட்டு வந்துருதேன்” என்றவாறு அவனை நோக்கித் திரும்பினாள். “நீ மலரு அக்காட்ட பேசிட்டு இருக்கும்போதுதான் உன் வீடியோல சிலத பாத்தேன். போன வாரம் ஒரு வீடியோ போட்டுருக்கியே? அவரு பிச்சைக்காரரா? சொல்லு?” என்று அவனைப் பார்த்துக் கத்தியவள், கூட்டத்தைப் பார்த்துச் சொன்னாள் – “நாலாவது தெருவுல இருக்க எங்க சித்தப்பா போன வாரம் மில்லு வேலை முடிஞ்சு களைப்பா இருக்குன்னு காட்சி மண்டபத்துல உட்கார்ந்து இருந்திருக்காங்க. இவன் ‘உங்கள ஆளையே மாத்துறோம்’னு சொல்லி சித்தப்பாவுக்கு முகச்சவரம் செய்து முடிவெட்டி குளிப்பாட்டி புதுத்துணி சாப்பாடுன்னு வாங்கி குடுத்து அனுப்பியிருக்கான். அவரும் ஏதோ ஷூட்டிங்னு நெனச்சுட்டு சிரிச்சுட்டே வந்துருக்கார். இப்போ பாத்தாதான் புரியுது”. மீண்டும் அவன் பக்கம் திரும்பி, “நேத்து கூட அந்த நாய்க்குட்டியையும் நீதான் வேணும்னு சாக்கடைக்குள்ள வீசிட்டு காப்பாத்துறாப்புல வீடியோ போட்டுருப்ப. இந்த லட்சணத்துல உன்ன நம்ப வேற செய்யணுமா?” என்றவள் ஒரு சிறிய இடைவெளி விட்டு தொடர்ந்தாள். “நீ பண்றது பேரு என்ன தெரியுமா? Pandering. Emotional Prostitution. You are just feeding your bloody ego” என்று முகத்திற் அறைந்தாற் போல் வார்த்தைகளை வீசினாள் எழில். அவற்றின் வெப்பம் பொறுக்க முடியாமல், சுற்றி நிற்பவர்களின் அருவருப்பான பார்வை தன் மீது நெளிவதைச் சகிக்க முடியாமல் நழுவப் பார்த்தான். இதற்குள் கூட்டத்தில் இருந்த ஒருவர் “சரி, விடும்மா! புள்ளைக்கு அவன் வாங்கிக் குடுத்ததுக்கு நன்றி சொல்லிட்டு அத அத்தோட விட்டுட்டுக் கலைஞ்சு போங்க” என பெரியதனமாகக் கூறவும், கோபம் பொத்துக் கொண்டு வந்தது எழிலுக்கு. “போன வருசம் அஞ்சு பேருக்கு அன்னதானம் பண்ணிட்டு அத அம்பது தெருவுக்கு போஸ்டர் அடிச்சு ஒட்டுன மகாபிரபுதானே நீங்க? நியாயம் சொல்ல வர்ற மூஞ்சியெல்லாம் பாரேன்” அதன் பிறகு ஒருவரும் வாயைத் திறக்கத் துணியவில்லை. “வீடியோவ டெலீட் பண்ணு” என்று மட்டும் சொன்னாள் மலர். அந்த இடத்தை விட்டுக் கிளம்பினால் போதும் என்ற மனநிலையில் அவசர அவசரமாக அலைபேசியைத் தட்டிக் கொண்டிருந்தான். சட்டென அவனிடம் இருந்து பிடுங்கி அந்தக் காணொளியை அழித்தாள் எழில். பின்னர் Recently deletedக்கும் சென்று அழித்துவிட்டுச் சொன்னாள், “இவ்வளவுக்கு அப்புறமும் இப்போ எடுத்தத மீட்டெடுத்து ஒளிபரப்புனேனா நீ மனுசனே இல்ல!” அலைபேசியைத் திரும்பப் பெற்றவன் தனது இருசக்கர வாகனத்தில் சிட்டாகப் பறந்தே விட்டான். மூவரும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். கடைத்தெருவின் அவ்வளவு சத்தமும் அவர்களது அமைதியில் அமிழ்ந்து போனது. ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை அவர்கள். என்ன பேசுவது என்று தெரியவில்லை. கயலுக்கு என்ன நடந்தது என்று சுத்தமாகப் புரியவில்லை. அவர்களின் கோபத்திற்குத் தான்தான் காரணமோ என்று அவள் வயதிற்கே உரிய யோசனையில் கொஞ்சம் பயந்து கூட போயிருந்தாள். அவர்களின் மௌனத்தில் கல் எறியும் பொருட்டு அருகில் வேகமாக வந்து நின்றது அவர்கள் தெருவில் வசிக்கும் இஸ்மாயிலின் சைக்கிள். சைக்கிளில் இருந்து இறங்கி அவர்களுக்கு நடைத்துணையாக சைக்கிளை உருட்டிக் கொண்டே வந்தவர் அந்த இறுக்கமான சூழலைத் தளர்த்த எண்ணி மெல்ல பேச்சை ஆரம்பித்தார். “எழிலு… ஏன்டா அவ்வளவு கோவம் உனக்கு?” “சும்மா இருங்க பெரியப்பா… அங்க என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரிஞ்சா இப்படிப் பேச மாட்டீங்க” என்று மலர் பதிலுரைத்தாள். “லாரில இருந்து மூட்டை எறக்கிட்டு அங்கனதான்டா இருந்தேன். முதலாளி இருந்தனால வர முடில. அதான் கேக்கேன்… அவன் ஏதோ இந்தக் காலத்து வழக்கத்துக்கு ஏத்தாப்புல… எல்லாரும் எங்கன பாத்தாலும் ஃபோனும் கையுமாத்தான் திரியுதாங்க. இப்போல்லாம் இது சகஜம்தான?” “என்ன பெரீப்பா நீங்களும்? அவன் செஞ்சது தப்பில்லையா? புள்ள ஏதோ பிச்சைக்கு நின்ன மாரியும் இவன் கொடை உள்ளத்தோட உதவுற மாரியும்… பெரிய வள்ளல்னு நெனப்பு. உணர்வுப்பூர்வமா உதவி பண்றவன், அவசர உதவி பண்றவன்… எல்லாவனுக்கும் அத ஆவணப்படுத்தியே ஆகணுமோ? அதெப்படி உதவி பண்ற இக்கட்டான நேரத்துலயும் வறட்டுத்தனமா பொறுமையா படம் பிடிக்க முடியுது? இது பேரு உதவிலாம் இல்ல. தன்னை எல்லோரிடமும் இரக்க குணமுள்ள நல்லவனாகக் காட்டிக் கொள்ள முனையும் அசட்டுத்தனம்” – எழில் “என்னமோ உலகத்துல ஒருத்தர் விடாம இதத்தான் பாத்துட்டு இருக்கப் போற மாதிரி… விட்டுத் தள்ளு கழுதைய!” என்று அவர்களை அதை உதாசீனப்படுத்த வைக்கும் எண்ணத்தில் கூறினார் இஸ்மாயில். “உலகத்துல ஏதோ ஒரு மூலையில கூட அவளைப் ‘பாவம்’ன்னு யாரும் பரிதாபப் பார்வை பார்த்துடக் கூடாதுன்னுதானே இப்பிடி ஓடி ஓடி ஓடா தேயுறேன்?” வழக்கமற்ற குரலில் கூறினாள் மலர். இதைச் சொல்கையில் அவள் குரல் தழுதழுத்திருந்ததா உடையத் துவங்கியிருந்ததா எனத் திருத்தமாகக் கூற இயலவில்லை. “இதுல இவ்ளோ உணர்ச்சிவசப்பட என்ன இருக்கு?” - இஸ்மாயில் “உணர்ச்சி வசப்படல பெரியப்பா. சரி - தப்பு பத்திதான் இங்க பேச்சே. இப்பவும் பெத்தவங்கள ‘அம்மா’, ‘அப்பா’ன்னுதானே கூப்பிடுறோம்? இரத்தல் இன்றைக்கும் பழிக்கக்கூடிய நாணக்கூடிய தொழிலாகத்தானே இருக்கு? சில விஷயங்கள் மாறாது; மாறவும் கூடாது. நாம ஒருத்தருக்கு உதவி பண்ணும் போது உதவி பெறுபவர் இரத்தல் தொழிலே செய்பவராயினும் அவர் கண்ணியத்தையும் தன்மானத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. நல்ல பெயர் எடுக்கணும்ங்கிறதுக்காக உலகின் கண்களில் ஒரு தனிமனிதரின் இயலாமையைச் சாதமாகப் பயன்படுத்தி அவரைக் கூனிக் குறுக வைக்கக் கூடாது. இதையெல்லாம் செய்யாமல் நல்ல பெயர் எடுத்து என்னத்துக்கு?” – தீர்க்கமாகப் பேசி முடித்தாள். எழில் பேசுவதையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு வந்தார் இஸ்மாயில். அவரது நரைத்துப் போன தாடிக்குள் இருந்து ஒரு புன்னகை, “யம்மாடி! எவ்ளோ வெவரமா பேசுதா?” என்ற ஆச்சரியத்துடன் வெளிப்பட்டது. வழியில் இருந்த தேவாலயத்தை அவர்கள் கடந்து செல்கையில் மிகச் சரியாக மத்தேயு 6 : 3 வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நன்றி 'திண்ணை' இணைய வார இதழ்.2 points- நானும் ஊர்க் காணியும்
2 pointsஒன்பது உடனே ரதி அக்காவுக்கு போன் செய்து, “கிறைண்டரின் ஒரு கப் எமது படுக்கை அறையில் உள்ள அலுமாரியுள் கிடந்தது அக்கா” என்றுவிட்டு எடுத்துக்கொண்டு போனவர்கள் பற்றி அவருக்குத் திட்டுகிறேன். நீங்கள் டென்ஷன் ஆகாதேங்கோ நிவேதா. பிச்சைக்காரக் கூட்டத்தைக் கொண்டுவந்து இருத்தியிருக்கிறியள் என்கிறா. எப்பிடிக் கதவைத் திறந்ததுகள். நீங்கள் பூட்டாமல் போட்டியளோ என்கிறா. முதல் வந்து இருந்த சனங்கள் எந்தப் பொருளையுமே எடுத்துக்கொண்டு போகேல்லை என்றுவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டு மீண்டும் அந்த அறைக்குள் சென்று எப்படித் திறந்து எடுத்திருப்பார்கள் என்று ஆராய எனக்குப் புரிய ஆரம்பிக்க, கதவுகளை கொண்டியை எல்லாம் பூட்டிவிட்டு வெளியே வந்து கதிரை ஒன்றை எடுத்துக்கொண்டு போய் கதவுக்கு அருகில் வைக்கிறேன். கதவுக்கு அண்மையில் ஒரு காற்றோட்டமாக இருப்பதற்காக ஒரு சிறிய யன்னல் உயரத்தில் உண்டு. இரண்டு பக்கமும் திறக்கும்படியான ஒரு அமைப்பு உள்ள யன்னல். கதிரையில் ஏறி நின்று அதைத் திறக்கப் பார்க்கிறேன் எனக்கு எட்டவில்லை. அந்தநேரம் பார்த்துக் கணவர் போன் செய்கிறார். ஆரும் இல்லாதபோது ஏன் தேவையில்லாத வேலை பார்க்கிறாய். விழுந்தாலும் தூக்க ஆட்கள் இல்லை என்று திட்டுகிறார். நான் என் கண்டுபிடிப்பைச் சொல்ல கணவருக்கு விளங்குகிறது. கடந்த தடவை கணவருடன் சென்றபோது மூன்று அறைகளுக்கு மாபிள் பதித்திருந்தோம். இந்த அறைக்கு மேலே திறாங்கு இருந்ததுதான். கீழே புதிதாக ஓட்டை போடவேண்டும். அதைப் போடக் கணவர் மறந்துவிட்டார். அவர்கள் எனியை வைத்து மேலே உள்ள சிறிய யன்னலை எப்படியோ திறந்து கம்பியை விட்டுத் திறாங்கையும் மேலே இழுத்துவிட்டு கதவைத் தள்ள கதவு திறந்திருக்கும். பொருட்களை எடுத்துவிட்டு மீண்டும் பூட்டைப் பொருத்தி வைத்து இழுக்கக் கதவு பூட்டியிருக்கும் என்று கணவர் சொல்ல நானும் அப்படியே செய்து பார்க்க, பூட்டிய கதவு திறந்து மீண்டும் பூட்டு அதேபோல் நன்றாகப் பூட்டுகிறது. சரி இப்படித்தான் எடுத்திருப்பார்கள் என்று தெரிந்துவிட்டது. ஆனால் ஆர் எடுத்திருப்பினம் என்று நானும் கணவரும் கதைத்துக் களைத்து, வீட்டுக்குள்ள சரி வெளியில hose பைப் மூன்று வைத்துவிட்டுச் சென்றது. அதைவிட 25 ஆயிரம் பெறுமதியான முள்ளுக் கம்பி ரோள். அதுகள் இருக்கோ பார் என்கிறார். சென்று பார்த்தபோது ஒரு 12 மீற்றர் நீளமான பைப்பும் முள்ளுக்கம்பிகளும் இல்லை. கணவரிடம் சொல்ல “எல்லாம் எங்கடை பிழை. கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பெறுமதியான பொருட்கள் எடுத்திருக்கினம். போலீசில சொன்னாலும் அவங்கள் வெளிநாடு எண்டதும் எங்களிட்டைக் காசு கறக்கப் பார்ப்பார்கள். இனி என்ன செய்யிறது. பேசாமல் விடு. உடன அந்த தச்சப் பெடியைக் கூப்பிட்டு ஓட்டை போட்டுத் திறாங்கைப் போடு” என்றவுடன் அவருக்கு போன் செய்கிறேன். அடுத்தநாள் புல்லுப் பிடுங்க இருவர் வருகின்றனர். அதைவிட இன்னும் சில மரங்களும் நடுவோம் என்று முன்னர் எனக்கு அடிக்கடி வேலை செய்பவர்கள் இருவரையும் வரும்படி சொல்கிறேன். ஊரெழுவில் இருக்கும் லங்கா பார்மில் கொஞ்ச மரக் கன்றுகளையும் வாங்கி அவர்கள் அழைத்த ஓட்டோவில் கன்றுகளை கொண்டுவந்து வீட்டில் இறக்கிவிட்டு இணுவிலுக்குச் செல்கிறேன். அடுத்தநாள் காலை எழுந்து எனக்கும் அன்ரிக்கும் இடியப்பம், சொதி, சம்பல், பருப்பு சமைத்துவிட்டு சாப்பாட்டுப் பெட்டியில் கொண்டு செல்கிறேன். போகும் போது கடலை வடைகளும் றோள்ஸ்களும் எல்லாருக்கும் வாங்கிச் செல்கிறேன். ஒன்பதரை ஆகியும் யாருமே வேலைக்கு வந்து சேரவில்லை. ரஜிதனுக்கு போன் செய்ய அவை பத்து மணிக்குத்தான் வருவினம் அக்கா என்கிறார். தோட்ட வேலைக்கும் 10 மணிக்குத்தான் போறவையோ என்கிறேன். அவை வந்திடுவினம் அக்கா. நான் 11 இக்கு வந்திடுவன் என்கிறார். நான் போனை வைக்கவும் நான் வேலைக்கு அழைத்தவர்கள் வந்துவிட கன்றுகளைக் கொண்டுசென்று அந்த அந்த இடங்களில் வைத்துவிட்டு எப்படி நடுவது என்று மீண்டும் அவர்களுக்கு அறிவுறுத்த “ என்னம்மா எங்களுக்குச் சொல்லுறியள். எங்கள் வேலையே இதுதானே என்கின்றனர். அவர்கள் கேட்ட மண்வெட்டிகள் இரண்டைக் கொண்டுவந்து கொடுத்தபடி “உங்கள் வேலை உதுதான். ஆனால் கடந்த ஆண்டு நீங்கள் பின்பக்கக் கரையில் ஊன்றிய எந்தக் கிளுவையும் முளைக்கவில்லை. பார்த்தபோது எல்லாக் கிளுவையும் பட்டுப்போய் இருந்தது. ஒன்றை இழுத்துப் பார்க்க சும்மா கையோடை வருது. ஏனெண்டால் நீங்கள் ஆழமாய் கிடங்கு எடுத்து நடவில்லை. அதுதான் திருப்பவும் சொல்லுறன். எந்த நேரமும் பக்கத்தில நிண்டு சொல்ல ஏலாது. ஒழுங்காக நடுங்கோ” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு பக்கத்திலேயே நிற்க, அவர்கள் நான்கு கன்றுகளை நட்டு முடிக்க இரண்டு பெண்டுகள் வருகிறார்கள். எத்தினை மணிக்கு வரச் சொன்னது. ஆடிப்பாடி வருகிறீர்கள் என்றுவிட்டு அவர்களுக்குப் புற்களைப் பிடுங்கவேண்டிய இடங்களைக் காட்டுகிறேன். 11.15 இக்கு ரஜிதன் வருகிறார். அக்கா இவைக்குச் சமைக்க வேண்டாமே என்கிறார். எல்லாருக்கும் கடையில வாங்கிக் கொடுப்பதாகத்தானே கதைத்தது. பிறகென்ன என்று கொஞ்சம் காரமாகச் சொல்லிவிட்டு, பெரிய hose பைப்பைக் காணவில்லை. எங்கே என்கிறேன். எனக்குத் தெரியாது அக்கா என்கிறார். நான் லண்டனில் நின்றபோது நீங்கள் கேற் வரை கொண்டுபோய் தண்ணீர் விட்டீர்களே? இல்லை அக்கா அது சின்னனாலதான் விட்டனான் என்கிறார். அவர் பொய் சொல்கிறார் என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தாலும் மேற்கொண்டு எதுவும் கதைக்காது அவர் சொன்னதை நம்பியதுபோல் அப்பால் சென்று மரங்கள் நடுபவர்களைப் பார்க்கிறேன். கன்றுகளை நட்டுவிட்டு வந்த ரங்கன் அம்மா ஒரு தேத்தண்ணி தாறியளே என்று கேட்க குசினிக்குச் சென்று எல்லாருக்கும் தேநீர் ஊற்றிவந்து ரோலஸ்சும் கொடுக்கிறேன். அம்மா பின்னால வேலை செய்யிறவையிலையும் ஒரு கண் வச்சிருங்கோ. ஒராள் பிடுங்க மற்றவ நிழலுக்குள்ள போய் நிக்கிறா என்று எனக்கு மட்டும் கேட்பதுபோல் சொல்கிறார். அதன்பின் அவர்கள் ஒரு பதினைந்து நிமிடத்தில் மீண்டும் வேலையை ஆரம்பிக்க இரண்டு பெண்டுகளும் எழும்பாது மரக் குற்றிமேல் இருக்க "என்ன வேலை செய்யிற நோக்கம் இல்லையா? எழும்புங்கோ" என்கிறேன். ஆடி அசைந்து அவர்கள் எழுந்து செல்ல சிறிதுநேரம் அவர்கள் வேலை செய்வதை நின்று பார்க்கிறேன். ரதியக்காவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வர அவவுடன் கதைத்தபடி முன்பக்கம் வர ரஜிதன் பின்பக்கமாகச் செல்கிறார். வேலை செய்ய வந்தவர்கள் பற்றிக் கூற வடிவா பாக்கவேணும் நிவேதா. சும்மா நேரத்தைக் கடத்துவினம் என்கிறா. எல்லாம் கதைத்து முடிய “ நிவேதா உங்களிட்டைக் கிடக்கிற கிறைண்டர் கப்பை எனக்குத் தாங்கோ. நான் ஒரு விலை போட்டு எடுக்கிறன்” என்கிறா. எனக்கு யோசனை ஓட அது எல்லாத்துக்கும் பொருந்தாதே அக்கா என்கிறேன். என்னட்டை இரண்டு பழைய கிறைண்டர் இருக்கு. ஏதாவது ஒன்றுக்குப் பொருந்தும் தானே என்கிறார். பார்ப்போம் அக்கா என்றபடி போனை வைக்க “அக்கா என்னவாம்” என்றபடி ரஜிதன் வருகிறார். கிறைண்டர் கப்பை அக்கா தனக்குத் தரட்டாம் என்றவுடன் “அப்ப அக்கா வீட்டினர் தான் எல்லாத்தையும் எடுத்தவையோ” என்கிறார். எனக்குத் தெரியேல்லை என்றுவிட்டு அப்பால் நகர்க்கிறேன். மதிய உணவு நேரம் வர முன்னரே ரங்கனிடம் உணவு வாங்கிவருமாறு கூற தான் சென்று வாங்குவதாக ரஜிதன் கூற அவரிடம் பணத்தைக் கொடுக்கிறேன். அவர் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு செல்ல பக்கத்தில் வந்த ரங்கன் “அம்மா குறை நினையாதேங்கோ, உவரைப் பார்த்ததால் சரியில்லைப் போலத் தெரியிது. உவரை இருத்திறதெண்டால் ஒண்டுக்கு இரண்டுதரம் யோசியுங்கோ என்கிறார். நானும் அதைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறன் என்றுவிட்டு பெண்களைப் பார்க்கிறேன். அவர்கள் ஆடிப்பாடிப் புற்களைப் பிடுங்க, நான் எதுவும் கூறாது பார்த்துவிட்டு சாப்பாடு வாங்கப் போயிருக்கிறார். வந்ததும் கூப்பிடுறன் என்றுவிட்டு உள்ளே செல்கிறேன். உணவுப் பொதிகள் வந்ததும் எல்லோரும் உண்ண ஆரம்பிக்க, அவர்களுக்கு தண்ணீர் கொண்டுசென்று கொடுத்துவிட்டு நான் உள்ளே சென்று உண்ண ஆரம்பிக்கிறேன். ரஜிதனை உண்ணச் சொல்ல தனக்கு ரோள்ஸ் சாப்பிட்டது பசிக்கவில்லை என்கிறார். உங்கள் உணவு பழுதாகப் போகிறதே என்கிறேன். "அக்கா நீங்கள் ஃபிரிஜ் வாங்கேல்லையோ" என்கிறார். "எனக்கு எதற்கு இப்ப ஃபிரிஜ். நான் வந்து இருக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்" என்கிறேன். “அக்கா என்னட்டை வீட்டில ஒரு ஃபிரிஜ் இருக்கு. அதைக் கொண்டுவரட்டோ? “அதுக்கென்ன கொண்டுவாரும், ஆனால் எனக்குத் தேவை இல்லை” “லாண்ட் மாஸ்டருக்கு 1500 வேணுமக்கா” “சரி அதை நான் தாறன்” உடனேயே வீட்டுக்குச் சென்று ஃபிரிஜ்சைக் கொண்டுவந்து குசினியில் வைக்கிறார். “அக்கா விரும்பினதெல்லாம் நீங்கள் வைக்கலாம்” “எனக்கு அதற்குள் வைக்க ஒன்றும் இல்லை” “உங்களுக்காகத்தான் கொண்டுவந்தனான்” “நான் முதலே சொன்னானதானே எனக்கு வேண்டாம் என்று, பிறகென்ன புதுக் கதை. உம்மடை வீட்டில இருந்தால் ஆரும் களவெடுத்துக்கொண்டு போயிடுவினம் என்றுதானே இங்கு கொண்டுவந்தனீர், பிறகென்ன எனக்காக கொண்டு வந்தது என்ற கதை. உப்பிடியான கதையள் எனக்குப் பிடிக்காது என்றுவிட்டு எழுந்து வெளியே சென்றால் இன்னும் வேலையை ஆரம்பிக்காமல் திண்ணையில கதைத்துக்கொண்டு இருக்கினம் பெண்டுகள். வந்ததே பிந்தி. நான் சொல்லாட்டில் வேலை செய்ய மாட்டியளோ? சாப்பிட்டு முடிச்சு ஒரு மணித்தியாலமாப் போச்சு என்றவுடன் எழுந்து செல்கின்றனர். ரஜிதன், நான் தென்னைக்கு பொச்சுத் தாக்கிறவையை பார்த்திட்டு வாறன். உவையை ஒழுங்கா வேலை செய்யச் சொல்லுங்கோ என்றுவிட்டு சென்று அவர்களைக் கவனித்துவிட்டு வர பின்பக்கத்திலிருந்து வந்த ரஜிதன், அக்கா நீங்கள் இருக்க நிக்க விடாமல் வேலை வாங்கிறியளாம் என்றவுடன் “வாறது பத்து மணிக்கு. ரோஸ் சாப்பிட்டு தேத்தண்ணி குடிக்க அறை மணித்தியாலம், மத்தியானச் சாப்பாட்டுக்கு ஒரு மணித்தியாலம். உப்பிடித்தான் மற்ற இடங்களிலையும் வேலை செய்யிறவையாமோ? சம்பளத்தைக் குறைச்சுத் தரட்டோ என்று அவையைக் கேளுங்கோ என்று கோபமாகச் சொல்ல, சரி அக்கா விடுங்கோ என்றுவிட்டு நான் வேலைக்குப் போட்டுவாறன் அக்கா என்றுவிட்டுக் கிளம்ப நான் பின்னால் சென்று புல்லுப் பிடுங்குவதைக் கண்காணிக்கிறேன். இன்னும் கொஞ்ச இடத்துக்குப் புல் பிடுங்க இருக்கு. நான்கு மணியானதும் வீட்டுக்குச் செல்லக் கிளம்ப இன்னும் ஒரு மணிநேரத்தில இவ்வளவையும் பிடுங்கிவிட்டுப் போங்கோ என்று கண்டிப்புடன் சொல்ல வேண்டா வெறுப்பாக செய்கின்றனர். அவர்களுக்குத் தேனீரும் கடலைவடையும் கொடுக்க உண்டு விட்டு புல்லைப் பிடுங்க எழுகின்றனர். ஐந்து மணியானதும் கைகால்களைக் கழுவிக்கொண்டு வர நான் அவர்கள் சம்பளத்தைக் கொடுக்க நாளைக்கும் வாறதோ என்கின்றனர். நாளை வாறதெண்டால் ஒன்பது மணிக்கு நிக்கவேணும். இல்லை என்றால் வரவேண்டாம் என்கிறேன். மற்றவர்களின் வேலையும் முடிய இரண்டு மண்வெட்டிகளையும் புத்துவெட்டியையும் கழுவிக் கொண்டு வந்து தர, நான் உள்ளே எடுத்து குசினி மூலையில் வைத்துவிட்டு அவர்களுடனே கதவுகளைப் பூட்டிவிட்டு வெளியே வர, நான் ஸ்கூட்டியை எடுத்து வந்து கேற்றைப் பூட்டும் வரை என்னுடன் நின்று, நான் பிரதான பாதைக்கு வரும்வரை எனக்கு முன்னால் மெதுவாக ஸ்கூட்டியை ஒட்டிக்கொண்டுவந்து கவனமாப் போங்கோ என்று சொல்லிவிட்டு வேகமெடுக்கின்றனர்.2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுவி நந்தன் இணைப்பாட்டம் அருமையாக போய்க்கொண்டு இருக்கிறது. வாழ்த்துகள் இருவருக்கும்!2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அண்ணனுக்கு இன்று அதிர்ஷடமான நாள்.........👍 தோனிக்கு இன்றைக்கு இன்னுமொரு நாள்................🤣. கிரிக்கெட்டுடனும், எந்த வீரர்களுடனும் எந்த ஒட்டுறவும் இல்லாத எனக்கே சென்னை அணியைப் பார்க்கப் பார்க்க 'என்ன கொடுமையடா இது..................' என்று தோன்றியது.................🫣 சென்னை ரசிகர்கள் பாவம்................2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மூன்று டீமும் ப்ரவுண்ஸ் லீக்கில் கூட விளையாட லாயக்கில்லாததுகள்!2 points- தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
அதேதான் ஏன் எல்லா தலைவர்களும் கோழி கிறுக்கல் மாதிரி என்று தான் அவர் கேட்கிறார்? 😅2 points- கருத்து படங்கள்
2 points2 points- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
2 points- மத்தேயு 6 : 3 - சோம.அழகு
2 pointsநீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.2 points- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
1 point- தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
இதர செயல்களுக்கு ஸ்டாலினோ, தமிழக அரசோ ஆங்கிலத்தை பயன்படுத்துவதில்லை. அரச ஆணைகள் முதல் சகலதும் தமிழில்தான் உள்ளது. கையொப்பத்தை ஆங்கிலத்திலோ பூனை வடிவிலோ வைப்பதால் தமிழ் அழிந்து போகாது. கையொப்பத்தை தமிழில் வைப்பதால் தமிழை வளர்க்கவும் இயலாது.1 point- தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை மீதான வழக்கை தள்ளுபடி செய்தது கனடா உச்சநீதிமன்றம்
கனேடிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு; இனப்படுகொலை மறுப்பை முறியடிக்கும் முக்கிய மைல்கல் அடைவு - தேசிய கனேடியத் தமிழர் பேரவை வரவேற்பு 08 APR, 2025 | 03:06 PM (நா.தனுஜா) தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டம் தொடர்பான கனேடிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பானது, தமிழினப்படுகொலை இடம்பெறவில்லை என முன்வைக்கப்படும் மறுப்புக்களை முறியடிப்பதை இலக்காகக்கொண்டு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழர்களால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்டுள்ள மிகமுக்கிய மைல்கல் அடைவாகும் என தேசிய கனேடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தமிழினப்படுகொலை மறுப்பாளர்களால் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்துக்கு எதிராக கனேடிய உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, கடந்த வாரம் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் பிரகாரம் வருடாந்தம் மே மாதம் 12 - 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலம் ஒன்ராரியோ மாகாணத்தில் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாகப் பிரகடனப்படுத்தப்படும். தமிழினப்படுகொலை தொடர்பிலும், உலகில் இடம்பெற்ற ஏனைய படுகொலைகள் தொடர்பிலும் ஒன்ராரியோ மாகாணத்தைச்சேர்ந்தவர்கள் அந்த ஒருவாரகாலத்தில் அறிந்துகொள்வதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்துக்கு எதிராக தமிழினப்படுகொலை மறுப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு கடந்த வாரம் கனேடிய உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தேசிய கனேடியத் தமிழர் பேரவை, 'தமிழினப்படுகொலை இடம்பெறவில்லை என முன்வைக்கப்படும் மறுப்புக்களை முறியடிப்பதை இலக்காகக்கொண்டு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழர்களால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்டுள்ள மிகமுக்கிய மைல்கல் அடைவு இதுவாகும்' எனச் சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை இந்த உயர்நீதிமன்றத்தீர்ப்பு தொடர்பில் பல்வேறு தவறான தகவல்கள் பகிரப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ள அப்பேரவை, குறிப்பாக 'கனேடிய உயர்நீதிமன்றம் உண்மையை நிலைநாட்டியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை' எனும் தலைப்பில் வெளியாகியிருக்கும் கட்டுரையில், இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை கனேடிய உயர்நீதிமன்றம் நிராகரித்ததாக பொய்யான விடயம் உள்வாங்கப்பட்டிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளது. 'தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான கோரிக்கை கனேடிய உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை உயர்நீதிமன்றம் நிராகரித்ததாக குறித்த கட்டுரையில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சட்ட அடிப்படையில் தவறான கருத்து என்பதுடன் கனேடியத் தமிழர்களின் நீண்டகால முயற்சியின் விளைவாகக் குவிந்திருக்கும் அவதானத்தைக் கலைக்கும் செயலாகும்' எனவும் தேசிய கனேடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/2114801 point- யாழ். உடுப்பிட்டியில் மூன்று கன்றுகளை ஈன்ற பசு!
மாடு கன்றுகளுக்கும் வீட்டாருக்கும் பால் கொடுக்கணுமில்ல.1 point- இலங்கையின் சனத்தொகை விபரம் வெளியீடு : வடக்கில் குறந்தளவு சனத்தொகை!
காத்தான் குடியை பற்றித் தெரியாது. ஆனால் மாவட்ட ரீதியில் யாழ் மாவட்டம் சனத்தொகையில் மாபெரும் வீழ்சசியை கண்டுள்ளது. 1963 ல 612,596 ஆக இருந்தது. 1971 ல் 696,664 ஆக இருந்த யாழ் மாவட்ட சனத்தொகை 1981 ல் 830552 ஆக அதிகரித்தது. அதாவது 10 ஆண்டுகளில் 133,888 அதிகம். 34 ஆண்டுகளின் பின்னர் 2025 யாழ் மாவட்ட சனத்தொகை 594,333. கிளிநொச்சி மாவட்டம் 136,434. 1981 ல் மொத்த இலங்கையின் சனத்தொகையில் 5.59 வீதமாக இருந்த யாழ் மாவட்ட சனத்தொகை 2025 ம் ஆண்டு 2.7 வீதமாக குறைவடைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை 1963 ல் 196,189. 1971 ல் 256,721 ஆக இருந்த சனத்தொகை 1971 ல் 330,333 ஆக அதிகரித்து 2025 ல் 595,435 ஆக அதிகரித்துள்ளது. மாகாண ரீதியில பார்ததால் வட மாகாணத்தின் சனத்தொகை 1963 ல் 741,341. 1971 ல் இது 874626 ஆகவும் 1981 ல் 1109, 404 ஆக தொடர்ந்து அதிகரித்தது. 34 வருடத்தின் பின்னர் 2025 ல் வடமாகாணத்தின் குடித்தொகை 1149,240. வளர்சசி வீதம் கிட்டத்தட்ட பூச்சியம். கிழக்கு மாகாணத்தின் குடித்தொகை 1963 ல் 546,474. 1971 ல் 717,571. 1981 ல் 1081,481. 2025 ல் 1782,050. ( இந்த புள்ளிவிபரங்கள் அனைத்தும் ஶ்ரீலங்கா சனத்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரவியல் தினைக்களத்தின் (Department of census and statistics) இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டவை.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தனி ஒருவன்................. சென்னையை வெண்ணையாகக் கடைய ஒரு ஆள் போதும் போல..........1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்களை எல்லாம் சிறுவர்கள் என்று விளித்து, மனதில் ஒரு களிப்பை உண்டாக்கி, IPLஜ ஜிலு ஜிலு ஆக்கிவிட்டீர்கள்.1 point- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
புத்தன்… சரியாக சொன்னீர்கள். எந்த விடயத்தையும் சூட்டோடு செய்யாமல் ஆறப் போட்டதால் வந்த வினை.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நானும் அதையே யோசித்தேன். அவர் தானும் அடிக்கிறேன் பேர்வழி என்று நாலு அடித்தார். அடுத்த பந்து மட்டையிலேயே படவில்லை. பிறகு ஒன்று எடுத்து என்ன பிரயோசனம். ரிங்குவுக்கு எவ்வளவு அதிகமான பந்து குடுக்க முடியுமோ, குடுக்க வேணும். தனிய நின்று வென்டிருப்பான். உண்மையிலேயே அவர்கள் வெல்வதற்கு உரியவர்கள். அதிக விக்கட் இழப்பினால் பந்து எண்ணிக்கை காணாமல் போய்விட்டது.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
IPL போதை தலைக்கு ஏறி, இந்தக் களத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை. இரண்டு விறு விறுப்பான போட்டிகள் போதையை இன்னும் அதிகமாக்கிவிட்டன. இப்போதுதான் போட்டிகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- நானும் ஊர்க் காணியும்
1 pointவெளிநாட்டில் இருந்துகொண்டு சொந்த ஊரில் வீடு வாங்கினால் எந்தப் பயமும் இன்றி இருக்கலாம். நான் வேறு ஊரில் வாங்கியதுதான் பிரச்சனையே. இப்ப மூன்று ஆண்டுகளாக நிம்மதி இல்லா வாழ்வுதான். ஊரில் என்ன நடக்கிறதோ என்ற கவலை. இப்ப கமறா பார்ப்பதை நிறுத்தியதால் கொஞ்சம் நிம்மதி. உதுவும் நல்ல யோசனைதான். கன்றுகாலி நாட்டதுதான் இன்னும் பிரச்சனை. அது ஒன்றும்இல்லை என்றால் வீட்டைப் பூட்டிவிட்டு வந்துபோகலாம். எமது ஊரில் வீடு இருந்தாத்தான் அதுவும். இல்லை என்றால் உடைத்தும்விடுவார்கள்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointநிஜமாகவே ஒரு சுவையான காளான் குழம்பு . .......... கெதியாய் செய்யலாம் . ....... செய்து பாருங்கள் . ........! 👍1 point- தாயகத்திற்கு "ஹொலிடே" போவோர்... செய்யக் கூடியவையும், கூடாதவையும்.
தாயகத்திற்கு "ஹொலிடே" போவோர்... செய்யக் கூடியவையும், கூடாதவையும். ✅தாயகத்திற்கு ஹொலிடே போவோருக்கான ✅✅"செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும் பட்டியல்" (Dos and Don'ts list)✅✅ ✅வட- கோடைக்காலம் வருகின்றது, ஐரோப்பா, அமேரிக்கா, கனடா வாழ் புலம்பெயர் தமிழர் பலர் தாயகம் விஜயம் செய்யும் நேரம். உங்கள் உறவுகளின் மோசமான கல்வி நிலைக்கு நீங்கள் காரணம் ஆகாதீர்கள். நீங்கள் செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. தயவுசெய்து கவனமெடுங்கள். இன்றைய மோசமான கல்வி நிலைக்கு நீங்களும் முக்கிய ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வருவதை அவதானியுங்கள். ✅செய்ய வேண்டியவை (Do's) 1. உங்கள் நாடுகளில் சாதாரணமாக உள்ள கஷ்டங்களை அவர்களுக்கு புரியும் மாதிரி சொல்லுங்கள். 2.இரண்டு ஷிப்ட் வேலை, மூன்று ஷிப்ட் வேலை செய்வோரின் அவலங்களை விளக்கிச் சொல்லுங்கள். 3.கடும்பனியில் வேலைக்கு போகும் கஷ்டத்தை, நடைபாதையில் ஸ்னோ வளிக்கும் கஷ்டத்தை புரியவையுங்கள். 4. Refugee claim அடிக்கமுடியாத உண்மை நிலையை விளங்கப்படுத்துங்கள். 5. students Visa என்றால் படிப்பதற்கு 3-5 மடங்கு tuition fee கட்டவேண்டும் என்பதை விளங்கப்படுத்துங்கள். இதனால் அவர்களின் உறவினர்களுக்கு எவ்வளவு கஷ்டம் என்பதை புரியவையுங்கள். 6. முடியுமானால் Kindle reader வாங்கி கொடுங்கள். வாசிப்பதற்கு e-book தரவிறக்கி கொடுக்க மறக்காதீர்கள். 7. முடியுமானால் கணினி, அத்துடன் படிப்பதற்கு தேவையான offline e-lessons தரவிறக்கி கொடுங்கள். Web Address : a. நூலகம் : https://noolaham.school/ b. e-books: http://www.e-thaksalawa.moe.gov.lk/web/ta/ c. https://tamilkalvi.online d. https://aki.coach/ e. http://www.edudept.np.gov.lk/eLessonPortel/index.html 8. முக்கியமாக பெற்றோருக்கு தொலைபேசி, கணினி சம்பந்தமான தொழில்நுட்பத்தில் பயிற்சி கொடுங்கள். எப்படி சிறுவர்களை கண்காணிப்பது என்று உங்களுக்கு தெரிந்ததை சொல்லி கொடுங்கள். ❌செய்யக்கூடாதவை (Don'ts) 1. புலம் பெயர் நாடுகளில் பாலாறு தேனாறு ஓடுகின்றது என்று புளுகாதீர்கள். 2. மாணவர்களுக்கு smartphone வாங்கி கொடுக்கவேண்டாம் 3. மாணவர்களுக்கு Motorbike வாங்கிக்கொடுக்கவேண்டாம். 4. பகட்டாக உடுத்தவோ, ஆடம்பரமாக நடக்கவோ வேண்டாம். 5.உங்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு Game consoles கொண்டுபோகாதீர்கள். 6. Duty free liquor வாங்கிப்போகாதீர்கள். (edited) Kumaravelu Ganesan1 point- தாயகத்திற்கு "ஹொலிடே" போவோர்... செய்யக் கூடியவையும், கூடாதவையும்.
உங்களுக்கு தெரிந்த செய்யக் கூடியவைகளையும், கூடாதவைகளையும் கீழே பதியவும். பலருக்கு உதவலாம். You Tube காரருக்கு பணம் அனுப்ப வேண்டாம். நீங்கள் கஸ்ரப் பட்டவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால்... உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் பணத்தை அனுப்பி, அந்தப் பணம் அல்லது உதவி சம்பந்தப் பட்டவர்களுக்கு போய் சேர்ந்து விட்டதா என உறுதிப்படுத்தவும்.1 point- ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
1 pointகோலி புதிய மைல் கல்: பரபரப்பான மும்பை - பெங்களூரு ஆட்டத்தில் திருப்பம் தந்த 3 ஓவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 20-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்களில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் எனும் மிகப்பெரிய ஸ்கோரை துரத்திய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியின் மூலம் விராட் கோலி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த போட்டியில் திருப்புமுனையாக அமைந்த 3 ஓவர்களில் என்ன நடந்தது? கோலி அதிவேக அரைசதம் ஆர்சிபி அணி தொடக்கத்திலேயே பில் சால்ட் விக்கெட்டை இழந்தாலும், சால்ட் களத்தில் இல்லாத குறை தெரியாமல் ரசிகர்களை கோலி கவனித்துக்கொண்டார். பும்ரா ஓவரில் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட கோலி, வில் ஜேக்ஸ் ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார். மும்பை பந்துவீச்சை தெறிக்கவிட்ட கோலி 18 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து, அடுத்த 11 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்து 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின் இந்த ஆட்டத்தில்தான் கோலி அதிக வேகமாக 30 பந்துகளுக்குள் அரைசதம் அடித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார், ஜிதேஷ் பங்களிப்பு ஆர்சிபி ஸ்கோர் உயர்ந்ததில் ஜிதேஷ் சர்மா, கேப்டன் பட்டிதாரின் பங்களிப்பு முக்கியமானது. 5-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 69 ரன்கள் சேர்த்தனர். 19 பந்துகளைச் சந்தித்த ஜிதேஷ் சர்மா 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பட்டிதார் மும்பை பந்துவீச்சாளர்களில் ஜேக்ஸ், ஹர்திக், போல்ட், தீபக் சஹர் பந்துவீச்சை உரித்தெடுத்துவிட்டார். இவர்களின் பந்துவீச்சில் சிக்ஸர், பவுண்டரி என பட்டிதார் பறக்கவிட்டு 25 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து கேப்டனுக்குரிய பொறுப்புடன் பேட் செய்தார். இருவரின் ஆட்டம் ஆர்சிபி பெரிய ஸ்கோரை எட்டகாரணமாக இருந்தது. ஏனென்றால் இதற்கு முந்தைய 6 ஆட்டங்களிலும் 190வரை ஸ்கோர் செய்தும் ஆர்சிபியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பதால், 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் ஸ்கோர் செய்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ரா வருகை தாக்கம் ஏற்படுத்தியதா? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா வருகை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி, சிக்ஸருக்கு பறக்கவிட்டு, கிங் கோலி என்பதை நிரூபித்தார். 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்த பும்ரா விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை, விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES திக் திக் ஆட்டம் ஐபிஎல் டி20 போட்டியில் "ரைவலரி வாரம்" என்று அடையாளப்படுத்தப்பட்டு போட்டிகள் நடக்கைகயில் முதல் ஆட்டமே ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்தது. ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, நமன்திர் களத்தில் இருக்கும்வரை வெற்றி யாருக்கு என்பது உறுதியில்லாமல் இருந்தது, ஆட்டம் மும்பை அணி பக்கமோ அல்லது ஆர்சிபி பக்கமோ சாயலாம் என்ற ரீதியில் இருந்தது. ஆனால், புவனேஷ்வர் வீசிய 18வது ஓவர், ஹேசல்வுட் வீசிய 19வது ஓவர், க்ருணால் பாண்டியா வீசிய 20-வது ஓவர் ஆகியவை வெற்றியை ஆர்சிபி பக்கம் மாற்றியது. இந்த 3 ஓவர்கள்தான் ஆர்சிபிஅணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக மாறின. மும்பை அணியின் முயற்சியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை தடுமாறியது. வெற்றிக்கு 8 ஓவர்களில் 122 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா கூட்டணி ஆட்டத்தின் போக்கையே மாற்றி, 34 பந்துகளில் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தினர். 4வது விககெட்டுக்கு188 ரன்களுடன் மும்பை வலுவாகஇருந்தது, ஆனால், கடைசி 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது, அதிலும் க்ருணால் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது மும்பை அணி. பட மூலாதாரம்,GETTY IMAGES சென்டினல்: அணுக முடியாத இந்திய பழங்குடியினரைப் பார்க்க முயன்று கைதான அமெரிக்கர் – யார் இந்த மக்கள்?4 மணி நேரங்களுக்கு முன்னர் கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 போராடிய மும்பை அணி மும்பை அணியின் கரங்களில் இருந்த வெற்றியை ஆர்சிபியின் ஹேசல்வுட், புவனேஷ்வர், க்ருணால் பாண்டியா சேர்ந்து பறித்துவிட்டார்கள் என்றுதான் கூற முடியும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா களத்தில் இருந்திருந்தால், நிச்சயம் மும்பை அணி வெற்றி பெற்றிருக்கும். ஏனென்றால், நேற்று ஹர்திக் பாண்டியா "வின்டேஜ் வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள்" போல் விளாசினார், அவரின் பேட்டிலிருந்து சிதறிய ஷாட்கள் ஒவ்வொன்றும் மின்னல் வேகத்தில் பவுண்டரி, சிக்ஸரை அடைந்தன, ராட்சதனைப் போல் பேட் செய்த ஹர்திக் கண்களில் வெற்றி தீப்பொறி பறந்தது. 15 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் என 42 ரன்களில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். கிரிக்இன்போ கணிப்பின்படி, 47 பந்துகளில் மும்பை வெற்றிக்கு 123 ரன்கள் தேவை என்றபோது அதன் வெற்றி சதவீதம் 1.89 என இருந்தது. ஆனால், திலக் வர்மா 18-வது ஓவரில் ஆட்டமிழந்தபோது மும்பை வெற்றி சதவீதம் 48.42 சதவீதமாக உயர்திருந்து வெற்றிக்கு அருகேதான் இருந்தது. கடந்த ஆட்டத்தில் ரிட்டயர் அவுட் மூலம் திலக் வர்மாவை மும்பை அணி அழைத்துக்கொண்ட நிலையில் இந்த ஆட்டத்தில் திலக் வெளுத்து வாங்கினார். 29 பந்துகளில் 4 சிக்ஸர், 4பவுண்டரி என 56 ரன்கள் சேர்த்தார். ஹர்திக், திலக் வர்மா கூட்டணிதான் ஆட்டத்தின் போக்கை மாற்றி, ஸ்வரஸ்யத்தைச் சேர்த்தது. மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற 'லைக்கா' நாய் எவ்வாறு இறந்தது?22 மார்ச் 2025 குடிநீர் பாட்டிலை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கழுவ வேண்டும்?7 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஹேசல்வுட், சூயஷ் கட்டுக்கோப்பு மும்பை அணியின் வெற்றியை பறித்ததில் ஹேசல்வுட்டின் துல்லியமான லென்த் பந்துவீச்சும், சூயஷ் சர்மாவின் சுழற்பந்துவீச்சும் முக்கியக் காரணம். சூயஷ் விக்கெட் ஏதும் வீழ்த்தாவிட்டாலும் அவரின் 4 ஓவர்களில் மும்பை பேட்டர்கள் 32 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஹேசல்வுட் பந்துவீச்சில் ரிக்கெல்டன் விக்கெட்டை வீழ்த்தி 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். சூர்யகுமார் அடித்த ஷாட்களில் இரு கேட்சுகளை நேற்று ஆர்சிபி அணியினர் தவறவிட்டனர். முதல் கேட்சை சூயஷ் சர்மாவும், 2வது கேட்சை யாஷ்தயாலும், விக்கெட் கீப்பர் சர்மாவும் பிடிக்க முயன்று மோதிக்கொண்டு கேட்சைவிட்டனர். ஆனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தாத சூர்யகுமார் 12வது ஓவரில் யாஷ் தயாலிடம் விக்கெட்டை இழந்தார். சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'23 மார்ச் 2025 காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு7 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றியைத் தீர்மானித்த கடைசி 3 ஓவர்கள் கடைசி 18 பந்துகளில் மும்பை வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா இருந்தனர். புவனேஷ்வர் வீசிய 18-வது ஓவரில் ஹர்திக் புவுண்டரி அடிக்கவே, அதே ஓவரில் திலக் வர்மா ஆப்சைடில் சென்ற பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்று சால்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த நமன்திர் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி பதற்றத்தைக் குறைத்தார் 19-வது ஓவரை ஹேசல்வுட் வீசினார். மும்பை வெற்றிக்கு 12 பந்துகளி்ல் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஹேசல்வுட் வீசிய முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா மிட்விக்கெட்டில் அடித்த ஷாட்டை லிவிங்ஸ்டோன் கேட்ச் பிடிக்கவே ஆட்டத்தில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அடுத்துவந்த சான்ட்னர் சிக்ஸர் விளாசி ஆட்டத்தை நெருக்கமாகக் கொண்ட சென்றார். கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. க்ருணால் பாண்டியா பந்துவீசினார். களத்தில் சான்ட்னர், நமன்திர் இருவரும் இருந்தனர். க்ருணால் வீசிய முதல் பந்து சிக்ஸருக்கு செல்லும் என எதி்பார்த்தபோது, லாங் ஆப் திசையில் உயரமான பீல்டர் டிம் டேவிட் அற்புதமான கேட்சைப் பிடித்தார். அடுத்துவந்த தீபக் சஹர் வந்தவுடன் சிக்ஸருக்கு பந்தை விரட்டமுயன்றார். ஆனால், பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடித்த சால்ட், பவுண்டரி கோட்டுக்குள் செல்ல முயன்றபோது டிம் டேவிட்டிடம் பந்தை தூக்கிவீசினார். தொடர்ந்து இருவிக்கெட்டுகளை மும்பை இழந்தது. அதன்பின் நமன்திர் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். 5வது பந்தில் நமன்திர் லெக்திசையில் யாஷ் தயாலிடம் கேட்ச் கொடுக்கவே மும்பையின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த 3 ஓவர்கள்தான் வெற்றி யார் பக்கம் என்பதை தீர்மானித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES வேற லெவலில் ஆர்சிபி கடைசியாக 2015ம் ஆண்டு வான்ஹடே மைதானத்தில் மும்பை அணியை 39 ரன்களில் ஆர்சிபி வென்றிருந்தது. அதன்பின் சரியாக 10 ஆண்டுகளுக்குப்பின் இதே வான்ஹடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை நேற்று ஆர்சிபி அணி வீழ்த்தியுள்ளது. இதற்கு முன் 6 முறை மும்பையுடன் மோதியும் ஒருமுறைகூட ஆர்சிபி வெல்லவில்லை. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி சேர்த்த ஸ்கோரும் மும்பை அணிக்கு எதிராகச் சேர்த்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும். ஏற்கெனவே சென்னையில் சிஎஸ்கே அணியை 17ஆண்டுகளுக்குப்பின் வெற்றி கண்டு வரலாறு படைத்த ஆர்சிபி, இப்போது மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகவும் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்த கேப்டன் ரஜத்பட்டிதாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இவர் 32 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இது தவிர விராட் கோலியின் 42 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்த அற்புதமான ஆட்டம், தேவ்தத் படிக்கலின் (37) கேமியோ, கடைசி நேரத்தில் மும்பை பந்துவீச்சை வெளுத்துவாங்கி 19 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்த ஜிதேஷ் சர்மா ஆகியோரும் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக்காரணமாகும். மின்சாரம், கார் எதுவுமே வேண்டாம் என இந்த தீவு மக்கள் தவிர்ப்பது ஏன்?6 ஏப்ரல் 2025 டிரம்பின் வரி விதிப்பு இந்திய ஐடி துறையை பாதிக்குமா? ஆனந்த் ஸ்ரீநிவாசன் விளக்கம்5 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES "பந்துவீச்சாளர்கள்தான் ஆட்டநாயகர்கள்" வெற்றிக்குப்பின் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பேசுகையில் " அற்புதமான ஆட்டம், வெற்றிக்கு கடினமாக உழைத்தோம். பந்துவீச்சாளர்கள்தான் உண்மையான ஆட்டநாயகர்கள், அவர்களுக்கு என் விருதை சமர்ப்பிக்கிறேன். அவர்களின் துணிச்சலை வெளிப்படுத்தி கடைசி 3 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றினர். இந்த மைதானத்தில் ரன்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை, அதைசெய்துள்ளோம். வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தினர். க்ருணால் பாண்டியா வீசிய கடைசி ஓவர் ஆட்டத்தை திருப்பியது. சூயஷ் சர்மா எங்களின் துருப்புச்சீட்டு,விக்கெட் டேக்கிங் பந்துவீச்சாளர். அவர் விக்கெட் எடுக்காவிட்டாலும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த வெற்றி பந்துவீச்சாளர்களுக்குரியது" எனத் தெரிவித்தார். ஏமாற்றம் தந்த தோனி: சிஎஸ்கே அணியின் 'ஹாட்ரிக்' தோல்வி உணர்த்துவது என்ன? போராட்டமின்றி சரணடைவதா? சிஎஸ்கே தோல்வியால் கொந்தளிக்கும் ரசிகர்கள் கொல்கத்தா அணியை துவம்சம் செய்த அஸ்வனி குமாரை மும்பை கண்டுபிடித்ததன் பின்னணி சிஎஸ்கே மீண்டும் தோல்வி: பேட்டிங்கில் தோனி எப்போதும் தாமதமாக களமிறங்குவது ஏன்? பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் ரோஹித்தை துரத்தும் துயரம் முந்தைய ஆட்டத்தில் விளையாடாத ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் மீண்டு வந்தாலும் அவரது ஆட்டத்தில் பழைய வேகத்தை காண முடியவில்லை. ஐபிஎல் பவர்பிளே ஓவர்களில் அவரது ஆட்டம் மோசமாகவே இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. 2023-ம் ஆண்டுக்குப் பிறகு பவர் பிளே ஓவர்களில் (குறைந்தது 200 பந்துகளை சந்தித்த பேட்டர்கள்) ரோஹித்தின் சராசரி ரன் 24.59 ஆக இருக்கிறது. அந்த வகையில் விரித்திமான் சாஹா மட்டுமே ரோஹித்தை விட குறைந்த சராசரியை வைத்திருக்கிறார். அதுவே, 2024-ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டால் குறைந்தது 180 பந்துகளை சந்தித்த பேட்டர்களில் ரோஹித்தின் 27.90 என்ற சராசரியே மிகவும் குறைவாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோலி விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை நேற்று கடந்தார். டி20 ஃபார்மெட்டில்13 ஆயிரம் ரன்களைக் கடந்த 5வது வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். 386 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை அதிவேகமாக எட்டிய 2வது வீரராக கோலி இருக்கிறார். கிறிஸ் கெயில் 381 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgkgmrlyjn8o1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கடைசி 14 போட்டிகளில் ஒரே ஒரு கேள்வி மட்டும் சரி எடுத்திருக்கிறேன். எனது ராசிப்படி நான் தெரிவு செய்யாத LSG, PBKS ஆகிய அணிகள் இன்று வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கின்றன.1 point- அப்பா ஏன் பின்தங்குகின்றார்.
1 point1. அம்மா 9 மாதம் சுமக்கிறார், அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார், இருவரும் சமம், ஏன் அப்பா பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 2. அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பம் நடத்துகிறார், அப்பா தனது சம்பளத்தை எல்லாம் குடும்பத்திற்காக செலவு செய்கிறார், இருவருமே சமமான உழைப்பு, இன்னும் அப்பா ஏன் பின் தங்குகிறார் என்று தெரியவில்லை. 3. அம்மா உனக்கு என்ன வேண்டுமானாலும் சமைப்பார், அப்பா உனக்கு என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருவார், அவர்களின் அன்பு சமமானது, ஆனால் தாயின் அன்பு மேன்மையாகக் காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்னால் இருக்கிறார் என்று தெரியவில்லை. 4. போனில் பேசினால் முதலில் அம்மாவிடம் பேச வேண்டும், கஷ்டத்தில் இருக்கும் போது அம்மா என்று அழுவாள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள், ஆனால் மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில் கொள்ளவில்லை என்று அப்பா ஒருபோதும் வருத்தப்படவில்லையா? குழந்தைகளின் அன்பைப் பெறுவதில் தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 5. அலமாரியில் கலர்புல் புடவைகள், நிறைய குழந்தைகளின் உடைகள் இருக்கும் ஆனால் அப்பாவின் உடைகள் மிகக் குறைவு, அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, இன்னும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. 6. அம்மாவுக்கு நிறைய தங்க ஆபரணங்கள் உள்ளன, ஆனால் தந்தைக்கு திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட ஒரே ஒரு மோதிரம் மட்டுமே உள்ளது. இன்னும் குறைந்த நகைகள் பற்றி அம்மா புகார் செய்யலாம் மற்றும் அப்பா இல்லை. அப்பா ஏன் பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 7. அப்பா தன் வாழ்நாள் முழுவதும் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள கடினமாக உழைக்கிறார், ஆனால் அங்கீகாரம் என்று வரும்போது, அவர் ஏன் எப்போதும் பின்தங்குகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. 8. இந்த மாதம் காலேஜ் டியூஷன் கட்ட வேண்டும் என்று அம்மா சொல்கிறார், பண்டிகைக்கு எனக்கு புடவை வாங்கித் தாருங்கள், ஆனால் அப்பா புது உடை பற்றி யோசிக்கவே இல்லை. இருவருக்கும் சமமான அன்பு இருக்கிறது, அப்பா ஏன் பின்தங்குகிறார் என்று இன்னும் தெரியவில்லை. 9. பெற்றோர்கள் வயதாகிவிட்டால், குழந்தைகள் சொல்கிறார்கள், அம்மா வீட்டு வேலைகளைக் கவனிக்க குறைந்தபட்சம் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவர்கள் அப்பாவுக்கு பயனில்லை. 10. குடும்பத்தின் முதுகெலும்பு என்பதால் அப்பா பின்னால் இருக்கிறார். மேலும் நமது முதுகெலும்பு நம் உடலுக்குப் பின்னால் உள்ளது. ஆனால் அவரால் நாம் தனித்து நிற்க முடியும். ஒரு வேளை, இதனால்தான் அவர் பின்வாங்குகிறார்...!!!! யார் எழுதியது என்று தெரியவில்லை, ஆனால் அருமை. அனைத்து தந்தையர்களுக்கும் சமர்ப்பணம்* Jay R Jayakumar1 point- அப்பா ஏன் பின்தங்குகின்றார்.
1 point- அப்பா ஏன் பின்தங்குகின்றார்.
1 pointஎன்ன, அப்பாவைப்பற்றியுயே தேடிதேடிப்படிக்கிறீர்கள் போலுள்ளதே! அப்பா, தன் அன்பையும் தேவையையும் கவலைகளையும் களைப்பையும் ஒருபோதும் வெளியில் காட்டுவதில்லை பொருட்படுத்துவதுமில்லை. காரணம், குடும்பத்தின் தேவைகள், கவலைகள், ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பதால். அதனால் அவருக்கு ஏதும் குறைகள் இருப்பதாக அல்லது அவைகள் பிறரின் கண்ணுக்கு தெரிவதில்லை. அங்கேயும் ஒரு ஆன்மா, பிறர் தன் தேவைகள், குறைகள், கவலைகள் மற்றவரால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும், கவனிக்கப்படவேண்டுமென மௌனமாக ஏங்குகிறது.1 point- அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை அர்த்தமற்றது – ஈரான்!
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை அர்த்தமற்றது – ஈரான்! இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை “அர்த்தமற்றது” என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) விவரித்துள்ளார். கடந்த மாதம் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனிக்கு அனுப்பிய கடிதத்தில், தெஹ்ரான் அணு ஆயுதங்களை வாங்குவதைத் தடுக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்புவதாக ட்ரம்ப் கூறியதை அடுத்து ஈரான் வெளிவிகார அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. கடந்த வாரம் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அல்லது குண்டுவீச்சுக்கு உட்பட வேண்டும் என்ற எச்சரித்திருந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (06) இது குறித்து பதிலளித்துள்ள அப்பாஸ் அரக்சி, “பேச்சுவார்த்தைகளை நீங்கள் விரும்பினால், அச்சுறுத்துவதன் பயன் என்ன?”, பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுப்பதில் வொஷிங்டனின் நேர்மையையும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், ஐ.நா. சாசனத்தை மீறி, தொடர்ந்து பலத்தைப் பயன்படுத்துவதை அச்சுறுத்தும் மற்றும் முரண்பாடான நிலைப்பாடுகளை ஏற்கும் ஒரு தரப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றவை என்று ஈரானிய வெளிவிகார அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, ட்ரம்பின் போர் அச்சுறுத்தலுக்கு சனிக்கிழமை பதிலளித்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைவர் ஹொசைன் சலாமி, நாடு போருக்கு “தயாராக” இருப்பதாகக் கூறினார். 2018 ஆம் ஆண்டில், ஜனாதிபதியாக தனது முதல் பதவிக் காலத்தில், ஈரானுக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தமான கூட்டு விரிவான செயல் திட்டத்தை ட்ரம்ப் இரத்து செய்தார். இதன் மூலம் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஈடாக அந்நாட்டின் மீதான தடைகளைத் தளர்த்த முடிந்தது. எனினும், ஈரான் அணுசக்தி தளங்களை ஆய்வு செய்யும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் கூற்றுப்படி, ஈரான் ஒப்பந்தத்தின் கீழ் அதன் உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. https://athavannews.com/2025/14276921 point- தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
மோடி தமிழில் மருத்துவத்தை ஊக்குவித்தல் அல்லது சீமான் மருத்துவத்தை தமிழில் ஊக்குவித்தல் மருத்துவம் கற்றவர் தமிழ் நாட்டிலேயே தனது கடமையைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஆனால் தமிழ் நாட்டு நிலைமேயே வேறு ஆங்கிலத்தில் மருத்துவம் படிக்க நினைப்பவர்கள் ஆங்கில மொழி பேசும் நாட்டில் தங்களின் மருத்துவத் தொழிலை தொடர நினைப்பவர்களாகத்தான் இருக்கும். தமிழ் மொழியில் மருத்துவம் படிப்பவர்களுக்கு ஆங்கிலம் அல்லது வேறு மொழி பேசும் நாட்டில் வேலை வாய்ப்புக்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும் . இதில் எனக்கு நிறைய அனுபவங்கள் உள்ளது கனடா நாட்டில் இருந்து ஐரோப்பா வந்து மருத்துவம் படித்தவர்கள் மீண்டும் கனடாவிற்கு சென்று அங்கே மருத்துவத் தொழிலை செய்ய விரும்பும் நேரத்தில் கனடா அரசாங்கம் அவர்களுக்கு உடன் அனுமதி அளிக்காது . அவர்கள் கனேடிய அரசாங்கம் வைக்கும் ஒரு தேர்வில் தோற்றி வெற்றியடைய வேண்டும்- இல்லையேல் போராட்டம் தான் இதே முறை தான் பிரித்தானியாவிலும்..... தமிழ் நாட்டு மாணவர்கள் மருத்துவம் கற்க ஆரம்பிக்கும்போதே எந்த நாட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்ற முடிவிற்கும் வந்து விடுகின்றார்களாம்1 point- நானும் ஊர்க் காணியும்
1 pointஎட்டு ரதி அக்கா வீட்டுக்குப் போகிறேன். அவரின் முகத்தைப் பார்த்தாலே கடுகு போட்டால் வெடிக்கும் போல இருக்கு. அவருக்கு என்ன பிரச்சனையோ என எண்ணியபடி அவருக்காகக் கொண்டுபோன Nescafe போத்தலையும் சொக்ளற் பிஸ்கற் அடங்கிய பையையும் நீட்டுகிறேன். அதன் பின்தான் இருங்கோ என்கிறார். “ரஜிதன் என்னவாம்” “அவர் எனக்கும் சேர்த்து தான் சமைக்கப் போறன் எண்டவர். நான் வேண்டாம் எண்டிட்டன்” “அவன் மூண்டு நேரமும் சாப்பிடுறதில்லை. ஒருநேரச் சாப்பாடுதான். “ஏனக்கா ஆள் வேலை செய்யிது தானே” “ஓ மாதம் 40 ஆயிரம்தான் குடுக்கிறாங்கள்” “சம்பளம் பத்தாட்டில் வேற வேலையும் செய்யப்போறதுதானே? வெளிநாட்டில ஓராள் இரண்டு மூன்று வேலைகள் கூடச் செய்கிறார்கள்” “ஆளை வீட்டில இருத்துற முடிவில இருக்கிறியளோ” “இன்னும் நான் முடிவு செய்யேல்லை அக்கா. எதுக்கும் ஒரு கிழமை பாக்கிறன். கட்டியிருந்த கொடியைக் கூடக் காணேல்லை” “முந்தி இருந்ததுகள் அறுத்துக்கொண்டு போட்டுதுகளே? “ஆர் அறுத்தது எண்டு தெரியேல்லை” “ஏன் நீங்கள் கமராவில பாக்க ஏலாதே” இந்த நாள் நடந்தது எண்டால் சுத்திப் பார்க்கலாம். எப்ப அறுத்தவை எண்டு தெரியாமல் உந்த நயிலோன் கயிறுக்காக இருந்து இரண்டு மாதக் கமராவைப் பார்க்க ஏலுமே. மாமரத்தில கட்டியிருந்த ஊஞ்சால் கயிறும் இல்லை” “கள்ளச் சனங்கள். நாங்கள் போய் பாற்கேக்குள்ளையும் கயிறு இருக்கேல்லை” “அந்தப் பெடியும் விஷயம் தெரியாமல் கமறாவுக்குப் போடுற வயரை எடுத்துக் கொடி கட்டி வச்சிருக்கு” “அவன் பாவம். அவனுக்குத் தெரியாதுதானே, நீங்கள் எல்லாத்தையும் வடிவாச் சொல்லிக் குடுத்தால் அப்பிடியே செய்வன். அவனுக்கொரு எலெற்றிக் கேற்றில் வாங்கிக் குடுங்கோ. அவன் இப்ப வச்சிருக்கிறது நான் குடுத்தது” “நான் நாளை வரேக்குள்ள உரும்பிராயில் உள்ள கடையில் வாங்கிவந்து குடுக்கிறன்” “சரி அக்கா நாளை வாறன்” என்றபடி என் வீட்டுக்குச் செல்கிறேன். சமையல் வாசனை வீதிவரை வருகிறது. அக்கா சாப்பிடுங்கோவன் என்கிறார். நான் முதலே எனக்குச் சாப்பாடு வேண்டாம் எண்டு சொன்னான்தானே. இடியப்பத்தை எறியிறதோ? என்றுவிட்டு நான் என் கன்றுகளுடன் ஐக்கியமாகிவிடுகிறேன். திரும்ப வரும்போது “அக்கா நல்ல புல்லு இருக்கக்கா விளவில. என்ர மாட்டைக் கொண்டுவந்து கட்டட்டே அக்கா” “ஏற்கனவே 2 தென்னங்கன்றுகளைக் கடிச்சுவச்சிருக்கு. மாட்டை உள்ளுக்குள்ள கொண்டுவர ஏலாது” “அப்ப புல்லுகளை உப்பிடியே வளர விடப் போறியளோ” “இல்லை. ஆரும் இருந்தால் சொல்லும். மருந்தை வாங்கி அடிப்பம்” “இப்ப மருந்தை அடிக்க ஏலாது அக்கா. மழை நல்லாப் பெய்தால்தான் மருந்து வேரில சுவறும்” “சரி அப்ப உமக்கு ஆரையும் புல்லுப் பிடுங்குகிற ஆட்களைத் தெரிந்தால் கூட்டிவாரும். நானும் ரதி அக்காட்டை கேட்டுப் பாக்கிறன்” “இல்லை அக்கா நானே இரண்டு பேரைக் கூட்டிவாறன்” சரி என்று நான் கிணற்றைப் பார்க்கப் போனால் கிணற்றின் மேலே கட்டியிருந்த உழண்டியை மட்டுமல்லாமல் கயிற்றையும் வாளியையும் கூடக் கிணற்றடியில் காணவில்லை. நான் திரும்பி வீட்டின் வாசலைப் பார்க்க ரஜிதன் என்னைப் பார்த்தபடி நிற்பது தெரிய, “எங்க உழண்டியும் கயிறும் வாளியும்? கழற்றி வைத்திருக்கோ? “எனக்குத் தெரியாது அக்கா. நான் வரேக்குள்ள ஒண்டும் இருக்கேல்லை. இருந்த சனங்கள் கொண்டு போட்டுதுகள் போல” “இன்னும் என்னென்ன காணேல்லை எண்டு போகப் போகத்தான் தெரியும். எழிய சனங்கள். கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லை” அதன் பின்னர் அவரைப்பற்றி விசாரித்தபின் நான் என் ஓட்டோவை அழைக்கிறேன். ஓட்டோவில் சென்றுகொண்டிருக்கும்போது ஸ்கூட்டிக்கு பற்றி கொழுவ வேண்டும். யாரையாவது தெரியுமா என்று கேட்க, தானே பூட்டிவிடுவதாகக் கூறுகிறார். வீட்டுக்குச் சென்று பற்றியைக் கொழுவியபின் அவரே ஸ்டார்ட் செய்து பார்த்துவிட்டு நீங்கள் நாளை இதிலேயே போகலாம் என்கிறார். அவர் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல நான் 1000 ரூபாய்களைக் கொடுக்கிறேன். அடுத்தநாள் மச்சாளிடம் மிளகாய்த் தூளையும் கடையில் பலசரக்குப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தபின் நான் சமைப்பதற்கு ஆயத்தங்களைச் செய்கிறேன். தேநீர் ஒன்று போட்டுக் குடிப்போம் என்று கேற்றிலை எடுத்துக் கழுவி நீரை ஊற்றும்போது பார்த்தால் எமது கேற்றில் போலவே இருக்கிறது. அட அக்காவும் எமது கேற்றில் போலவே வாங்கியிருக்கிறா என்று எண்ணியபடி தேனீரை ஊற்றிக்கொண்டு வெளியே வந்து அமர்கிறேன். கேற்றில் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்திருக்கலாம். நாளைக்குக் கட்டாயம் வாங்கிக்கொண்டுவந்து அக்காட கேற்றிலைக் குடுத்திடவேணும் என எண்ணிக்கொள்கிறேன். நான் கடந்த தடவை வாங்கியது உள்ள கிடக்குத்தான். அது விலைகூடியது. அது நாம் வந்து இருக்கும்போது மட்டும் பாவிக்கலாம். இவர் பெடிபிள்ளைக்கு வேறு ஒன்றை வாங்கிக் குடுப்பம் எனவும் எண்ணிக்கொள்கிறேன். புலுனிக் கூட்டம் ஒன்று சத்தமிட்டபடி பறந்துவந்து கீழே எதையோ பொறுக்குகின்றன. தேங்காய்ப் பாலுக்காக தேங்காயை எடுத்துக்கொண்டு வந்தால் எப்படி உரிப்பது என யோசனை ஓடுகிறது. மனிசனை நித்திரையால் எழுப்பிக் கேட்க, அந்தப் பெடியன் வரும்வரை பொறு என்கிறார். ரஜிதன் வந்ததும் நான் சமைக்கப்போறன். தேங்காய் உரிக்கத்தான் உங்களைப் பார்த்துக்கொண்டு நிக்கிறன் என்றவுடன் உரித்துத் தந்துவிட்டு நான் சமைக்கட்டோ அக்கா என்கிறார். நானே சமைக்கிறேன் என்றுவிட்டு எமது அடுத்த அறையைத் திறந்து கடுகு சீரகம் போன்றன போட்டு வைக்கும் வட்டமான சில்வர் பாத்திரத்தை எடுத்துவந்து கழுவிவிட்டு துடைத்து எல்லாவற்றையும் போட்டு முடிய அவரின் திருவுபலகையை எடுத்து வைத்து தேங்காய் துருவி முடிக்கிறேன். எமக்காக வைத்திருந்த இரண்டாவது அறையுள் அனைத்துப் பொருட்களையும் வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றிருந்தோம். அந்த அறையைத் திறந்து வைத்திருந்த காஸ்சிலிண்டர், அடுப்பு என்பனவற்றைக் கொண்டுவந்து சமையலறையில் வைத்துப் பொருத்தி விடுங்கோ தம்பி என்றால் “அக்கா நான் மண்ணெண்ணை அடுப்புத்தான் பாவிக்கிறனான். இதுபற்றித் தெரியாது என்று சொல்கிறார். அன்ரிக்கு போன் செய்து எப்படிப் பூட்டுவது என்று கேட்டுப் பூட்டி முடிய, கடந்தமுறை நானும் கணவரும் சென்றிருந்தபோது வாங்கிவந்த கிறைண்டறை எடுத்து தேங்காய்ப் பூவைப் போட்டு அடிப்போம் என்று அறைக்குள் சென்று தேடுகிறேன். அதைக் காணவில்லை. ரஜிதனும் வந்து அறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டு இவ்வளவு சாமான்கள் வைச்சிருக்கிறியளோ என்கிறார். எல்லாம் வச்சிருக்கத்தானே வேணும். பக்கத்து வீட்டுக்கு கடன் வாங்கப் போறதோ என்றபடி தேட என்ன அக்கா தேடுகிறீர்கள் என்று கேட்க கிறைண்டர் வாங்கி வச்சனான் காணேல்லை என்கிறேன். என்னுடன் சேர்ந்து அவரும் தேடிவிட்டு “ஒரு இடமும் காணேல்லையே அக்கா. வடிவா யோசிச்சுப் பாருங்கோ. நீங்கள் வாங்கினதுதானோ என்கிறார். நாம் இந்தியாவில் இருந்து இரண்டை வாங்கிவந்து ஒன்றை அங்கு வைத்துவிட்டு மற்றதை லண்டனுக்குக் கொண்டுவந்ததாக நினைவுவர அதை அவருக்குச் சொல்கிறேன். சிலவேளை ஒண்டுதான் வாங்கினீர்களோ? அண்ணனிட்டை ஒருக்காகக் கேளுங்கோ என்கிறார். சரி இப்ப உதைத் தேடாமல் கையால பிழிவம் என்றபடி சமையலை ஆரம்பிக்கிறேன். சமைத்து முடிய அவரையும் உண்ணவைத்து உண்டுமுடிய நாளை புற்களைப் பிடுங்க இருவர் வருகிறார்கள் என்று சொல்லிவிட்டு அவைக்கு நாளை சமைத்து கொடுப்போம் அக்கா என்கிறார். என் னால் முடியாது என்று கூற தானே சமைக்கிறன் அக்கா என்கிறார். கடையில வாங்கிக் குடுப்பம் என்றதற்கு சாப்பாடு குடுக்காட்டில் அவை வரமாட்டினம் அக்கா என்கிறார். அப்ப அவையை வரவேண்டாம் எண்டு சொல்லுங்கோ. கடைசச் சாப்பாடு சாப்பிட உடன்படுறவையைக் கூப்பிடுவம் என்றவுடன், நான் இன்னொருக்காக கதைக்கிறான் என்றுவிட்டு அவர் வெளியே செல்ல, நான் எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட்டு என் அறையைத் திறந்துகொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தபடி கணவருக்கு போன் செய்கிறேன். நாங்கள் இரண்டு கிறைண்டர்கள் தான் வாங்கி ஒன்றை உங்கே வைத்துவிட்டு மற்றதை இங்கு கொண்டுவந்தோம் என்கிறார் கணவர். மீண்டும் அறையைத் திறந்து மேசைக்குக் கீழே எல்லாம் பார்த்தால் கிரைண்டர் இல்லை. கணவருக்கு போன் செய்ய கணவர் ஒவ்வொன்றாகச் சொல்கிறார். “சாச்சபிள் டோச் லைட் இரண்டும் கிடக்கோ பார்” என்று கூறத் தேடிப் பார்த்தால் காணவில்லை. “ஐக்கியாவில் வாங்கிய கத்தி செட் இருக்கோ பார்” அதையும் காணேல்லை. “டாய்லெட் கதவைத் திற” அதுக்குள்ள மூன்று மண்வெட்டிகள், ஒரு புத்துவெட்டி, ஒரு அலவாங்கு, சுவருக்கு துளையிடும் கருவி எல்லாம் இருக்கோ பார். அவையெல்லாம் இருக்கு. நாங்கள் வடிவா டாய்லெட் திறப்பையும் பூட்டி எங்கள் அறையுள் வைத்ததனால் அதெல்லாம் அப்படியே இருக்கு என்கிறேன். “உந்த அறை திறந்து கிடந்ததா? “இல்லையே” அப்ப எப்பிடிக் காணாமல் போயிருக்கும் பொருட்கள் என்று கேட்க எனக்கு எப்பிடித் தெரியும் என்றுவிட்டு முன்பு இருந்தவர்களைக் கூட்டி வந்த எம்மூரவரிடம் விடயத்தைச் சொல்லி போலீசுக்குப் போகப்போகிறேன் என்கிறேன். நான் ஒருக்கா அவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன். ஆனால் அவை கதவை எப்பிடி அக்கா திறந்து எடுக்க முடியும் என்கிறார். அந்த நேரம் பார்த்து ரதி அக்கா போன் செய்கிறார். நான் கவலையுடன் எமது பொருட்கள் களவு போனது பற்றிக் கூறுகிறேன். ஆர் உவையைக் கொண்டுவந்து இருத்தினாரோ அவரைத்தான் கேளுங்கோ. உவையை நம்பி இருக்க விட்டதுக்கு உங்களுக்கு இந்த வேலை செய்யிறதே என்கிறா. சரி அக்கா நான் பிறகு வாறன் என்றுவிட்டு ரஜிதன் வேலைக்குச் சென்றபின்னர் மீண்டும் எமது அறைகள் இரண்டிலும் தேடுகிறேன். எங்கள் படுக்கை அறையுள் ஒரு சிறிய பொருட்கள் வைக்கும் அலுமாரியும் உண்டு. அதைத் திறந்து பார்க்க அங்கு கிறைண்டரின் மூன்று அரைக்கும் கப்புகளில் ஒன்றுமட்டும் கிடக்கிறது.1 point- தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
ஆமாம் அதனை நானும் ஒத்துக் கொள்கிறேன்,...மோடி தமிழ் மொழியில் கையெழுத்து வைக்க கூடாது என்று சொல்லி இருப்பாராயின். ...தமிழர்கள் என்ன சொல்லி இருப்பார்கள் ??? இப்ப சொல்வதற்கு. நேர் எதிராக கருத்துகள் சொல்லி இருப்பார்கள் தமிழ் எங்கள் தாய் மொழி நாங்கள் தமிழில் தான் கையெழுத்து வைப்போம் மோடி தமிழ் மொழியை அளிக்கிறார். தமிழ் மொழி உலகத்தில் முதல் மொழி தமிழ் பழைமையானது தமிழ் முதல் தோண்றிய மொழி ...........இப்படி நிறைய சொல்லி இருப்பார்கள் அரசியல்வாதிகள் அரசியல் செய்வது இயல்பானது மோடி தமிழனை கொண்டு நாங்கள் தமிழில் கையெழுத்து இடமாட்டோம். என்று சொல்ல வைத்தது அரசியல் ....அது ஒரு சிறந்த அரசியல் இதோ மோடி தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் பல்கலைகழகத்தில் தமிழ் மொழியில் மருத்துவம் படிப்பிக்கும்படி தமிழ்நாடு அரசை கேட்டு உள்ளார் படிபிக்கலாம். இல்லையா?? ஏன் ஆங்கிலத்தில் படிபிக்க. வேண்டும் ?? அல்லது தமிழ் மொழியில் தமிழ்நாட்டில் மருத்துவம் படிப்பிக்கிறார்களா. ???1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மாமன்னரும் அவரின் பாதுகாப்புக்கு கவசமாக வலம் வரும் படைத் தளபதியும் முன்னேறி வரும் நிலையில் மன்னரைப் பாடிப் புகழ புலவர்களும் பின் தொடர்வது மாமன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கனின் பெருமையை காட்டி நிற்கின்றது 😂 இங்கே மன்னரின் படையணியில் இருந்து ஒரு வீரனைக் காணவில்லை என்று நாங்கள் தெடிக் கொண்டிருக்கின்றோம் 😂1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளை செவ்வாய் 08 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 21) செவ்வாய் 08 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR எதிர் LSG 19 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் சுவி செம்பாட்டான் ரசோதரன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS எதிர் CSK இருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 21 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் நந்தன் இந்தப் போட்டியில் எவர் புள்ளிகளைப் பெறுவார்கள்?1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இங்கு ஆடுகளத்தில் பெரும் தலைகள் எல்லாம் காணாமல் போயிட்டினம்...............☹️. என்னப்பா நீங்கள்................ இதையெல்லாம் மனசில் வைத்துக் கொள்வதா............ தோனியைப் பாருங்கள்........... அவரைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை அவர் கேட்க ஆரம்பித்தால், இதுவரை அவர் தன்னைத்தானே நாலு தடவைகள் சுட்டிருக்க வேண்டும்.................🤣. தோணியே கவிழ்ந்தாலும்/கவிழ்த்தாலும், தோனி தோனி தான்.................... அதே தான் நீங்களும்......... சும்மா வந்து நடுவில் நில்லுங்க................🫱🫲.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 20வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களான விராட் கோலி, டேவ்டத் படிக்கல் ஆகியோரின் மின்னல் வேக அரைச் சதங்களுடனும், ஜிதேஷ் ஷர்மாவின் ஆட்டமிழக்காமல் எடுத்த 40 ஓட்ட விளாசலுடனும் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை அடைய ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடமுனைந்தாலும் வீரர்கள் நிலைத்து நிற்காமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். திலக் வர்மாவும், ஹார்டிக் பாண்டியாவும் வெற்றியை நோக்கி வேகமாக அடித்தாடி செல்ல முனைந்தபோது விக்கெட்டுகளை இழந்தமையால் பின்னர் வந்தவர்களும் வேகமாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ஓட்டங்களை எடுத்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெங்களூரு நல்லா சாத்துது!! ஓட்டங்களைப் பார்த்தா இன்றும் முட்டை தான். முட்டை முட்டையா தின்று வாயு பறியுது. எத்தனை மணிக்கு தம்பி பசி வரும்? 222 மிகவும் கடினமான எண்ணிக்கை. அடிப்பார்களா மும்பை?1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
1,.பதில்கள் எழுதாமல் விடலாம் 2,.வாசிக்கமால். விடலாம் 3,...கிழித்து குப்பைத் தொட்டியில் போடலாம் 4,....இந்தி மொழியில் பதில்கள் போடலாம் 5,...தமிழ் மொழியில் பதில் போடலாமா. ??? இப்படி தான் செய்ய வேண்டும் என்று ஏதாவது சட்டம் உண்டா ??? உங்கள் தாய் மொழியில் கையெழுத்து வையுங்கள் என்று நாட்டின் பிரதமர் சொல்லக்கூடாது என்று ஏதாவது சட்டம் உண்டா ?? இல்லை இதுக்கெல்லாம் சட்டம்கள். இல்லை அதேபோன்று செல்ல வேண்டும் என்றும் சட்டம் இல்லை மோடி சிறந்த புத்திசாலி தமிழனை கொண்டே நாங்கள் தமிழ் மொழியில் கையெழுத்து வைக்க மாட்டோம். என்று செல்ல வைத்து விட்டார் .....நீங்கள் தாராளமாக தமிழ் தவிர்ந்து மற்றைய மொழிகளில் கையெழுத்து வைக்கலாம் அந்த மொழிகள் மேலும் மேலும் வளர்ச்சி அடையும்1 point- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
முன்பு தமிழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் எரித்து நாசமாக்கிய சிவப்பு புரச்சியாளர்கள் போன வருடம் ஆட்சிக்கு வரும்வரை கடுமையான இந்திய எதிர்ப்பை தான் கடைபிடித்தனர்1 point- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
நான் நினைக்கிறேன் இனி நாங்கள் உந்த சும் கோஸ்டிகள்,அர்ஜுனா கோஸ்டிகள்,என்.பி.பி தவ்வல்களின் அரசியல் சுத்துமாத்துக்களை கதைப்பதில் பிரயோசனமில்லை எண்டு....எமது அரசியல் ,சிங்களவர்களின் அரசியல் எல்லாம் கை நழுவி போய் சிறிலங்காவின் அரசியல் என்ற நிலைக்கு வந்துவிட்டது.சிறிலங்கா தேசியத்தை ஆட்டிப்படைக்க ஏனைய நாடுகள் முன்வந்து விட்டன ... . ..சிங்கள அரசியல் வாதிகள் தமிழர் பகுதிகளில் விகாரைகளை கட்டுவார்கள் , அதை ஏதிர்ப்பது மட்டுமே உள்நாட்டு அரசியல் ...அபிவிருத்தி என விளம்பர படுத்துவார்கள் ஆனால் .பணம் இருக்காது ...1 point- "புதிய ஆரம்பம்"
1 point"புதிய ஆரம்பம்" யாழ் குடாநாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்ட சனத் தொகையை கொண்ட வேளாளர்கள் எந்த போட்டியுமின்றி விவசாயக் காணிகளின் உரிமையாளர்களாக இருந்ததுடன் அவர்கள் குடாநாட்டின் வர்த்தக, நிர்வாக மற்றும் அரசியலில் பிரத்தியேக ஏகபோக பதவிகளையும் வகித்தனர். என்றாலும் பிரித்தானியர் வருகையுடன் மேலாதிக்கச் சாதியின் அதிகாரம் மெல்ல மெல்ல உடையத் தொடங்கியது. அதனால் 20 ஆம் நூற்றாண்டில் பள்ளர், நளவர் என்ற இரு விவசாய ஊழிய சாதிகள் மீதே குறிப்பாக வேளாளர்கள் தம் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தனர். இவ்விரு சாதிகளினதும் ஒன்றிணைந்த சனத் தொகை குடாநாட்டின் மொத்தத் சனத்தொகையின் 18 வீதம் ஆகும். ஆயினும் அதே நூற்றாண்டில் வேளாளர்களுக்கும் பள்ளர், நளவர்களுக்கும் இடையில் இருந்த உறவின் தன்மை அடிமை நிர்பந்தத்திலிருந்து பொருளாதார நிர்பந்தமாக மாற்றம் பெற்றது. உதாரணமாக 1950பதுகளில் தாழ்த்தப்பட்டோரில் பலர் பனங்கூடல்களாகவோ அல்லது தரிசு நிலமான கட்டாந்தரையாகவோ இருந்த வேளாளருக்குரிய காணிகளில் வாழ்ந்து வந்தனர். வேளாளர்களுக்கு உழைப்பையும் தொண்டூழியத்தையும் வழங்கத் தவறினால் காணிகளில் இருந்து வெளியேற்றப்படும் ஆபத்தில் வாழ்ந்தனர். பொருளாதாரக் கட்டுப்பாடுகள், முறைசாரா அரசியல் கட்டுப்பாட்டோடு இணைந்திருந்தது. தங்களது வாழ்நிலையை உயர்த்துவதற்கு தாழ்த்தப்பட்டோர் முயன்றபோது வேளாளரின் காடையர் குழுக்கள் அவர்களின் குடிசைகளுக்குத் தீவைத்தும், கிணறுகளில் நஞ்சைக் கலந்தும் கொடுமைகளை இழைத்தனர். அப்படியான சூழல் காலம் செல்லச் செல்ல மாற்றம் அடைந்து கொண்டு வந்தது. என்றாலும் இன்றும் சாதிய பாகுபாடுகள் நிகழ்ந்து வருவதும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் சாதியின் அடிப்படையில் மீன்பிடித்தல், கள் இறக்குதல், குப்பை அகற்றுதல், சுத்தம் செய்தல், கூலி வேலைகள் போன்ற பணிகளைச் செய்வதும் தொடர்கிறது. இந்த யாழ்ப்பாண சூழலில் தான், நெல் வயல்களின் அமைதிக்கும் பனை மரங்களின் ஓசைகளுக்கும் மத்தியில் காவியா என்ற இளம் பெண் வாழ்ந்து வந்தாள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்த காவியாவின் நாட்கள், வாழ்வதற்கான போராட்டத்தால் நிரம்பி நிறைந்தது. அவளது பெற்றோர் முழு நேரம் வயல்களில் உழைத்தும் சொற்ப வருமானம் மட்டுமே ஈட்டினார்கள், அதே சமயம் காவியா தங்கள் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு முன்னேற்ற வாழ்க்கையைக் கனவு கண்டாள். அது தனக்கும் தன் சமூகத்துக்கும் ஒரு 'புதிய ஆரம்பம்' தரும் என்று திடமாக நம்பினாள். பாகுபாடு மற்றும் கஷ்டங்களை தன் சமூகமும், தன் குடும்பமும் எதிர்கொண்ட போதிலும், காவியா அந்த தலைவிதியை மாற்றுவதற்கான கடுமையான உறுதியுடன் இருந்தாள். அதற்கு கல்வியே அவளுடைய நம்பிக்கையின் விளக்காக இருந்தது. "வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே" கல்வியின் முன்னுரிமை பற்றி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், 'நான்கு பிரிவுகளில் கீழ்க்குலத்தில் பிறந்த ஒருவன் கற்றிருந்தால் மேல்குலத்தில் பிறந்தவனும் அவனிடம் அடக்கமாவான்' என்ற பொன்னான வாசகம் அவள் மனதில் ஒரு தெம்பைக் கொடுத்தது. அதுமட்டும் அல்ல, "மேற்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு" என்ற திருவள்ளுவரின் 'உயர் குடியில் (ஜாதியில்) ஒருவர் பிறந்து படிக்கா விட்டால், கீழ்க்குடியில் பிறந்து படித்துப் பட்டம் பெற்ற வரை விட ஒருபடி தாழ்வே' என்ற அறிவுரை அவளை மகிழ்ச்சியில் மேலும் ஆழ்த்தியது. ஒவ்வொரு நாளும், அவள் தனது கிராம பள்ளியை அடைய தூசி நிறைந்த மண் பாதைகளில் வெறுங்காலுடன் நடந்தாள். அவளுடைய அறிவுப் பசி மற்றும் அவளுடைய அர்ப்பணிப்பு இவைகளைப் பெரிதாக எடுக்கவில்லை. அவள் தனக்கு கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் அலசி ஆராய்ந்தாள். அவள் மனதில் பதிந்த, எப்படியும் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற அவா, அவளுக்குள் ஏற்படுத்திய தைரியம், வெற்றியின் கதைகளை திறந்து அவளது அபிலாஷைகளைத் தூண்டத் துணையாகத் நின்றது. "காட்சியின் தெளிந்தனம் ஆயினும், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” 2300 ஆண்டுகளுக்கு முன்பு கணியன் பூங்குன்றனார் அழகுறக் கூறிய 'சமூகத்தைச் சரிவரப் புரிந்து கொண்டால் பெரியோரை மதித்தலும் செய்யோம். சிறியோரை இகழ்தலும் செய்யோம். அவரவர் ஒழுக்கம் ஒன்றையே யாமும் கருதுவோம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவுகளைப் பார்க்க மாட்டோம்' பொதுவுடமைக் கருத்தை அவள் முணுமுணுக்காத நாள் ஒன்றும் இல்லை. ஒரு நாள், காவியாவின் திறனை உணர்ந்த, ஒரு நல்ல உள்ளம் கொண்ட அவளின் வகுப்பு ஆசிரியை, அவள் மேல் விசேட கவனம் செலுத்த தொடங்கினார். இந்த ஆசிரியையின் வழிகாட்டலாலும் அவர் கொடுத்த ஊக்கத்தாலும், காவியா தனது படிப்பில், எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் மிகவும் சிறந்து விளங்கினாள். அதனால் அவளது கல்வித் திறமை, ஒளிமயமான எதிர்காலத்திற்கான பயணச் சீட்டாக அமைந்தது. தளராத உறுதியுடன் மற்றும் அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக, காவியா கொழும்பில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பிரிவுக்கு, முழு உதவித்தொகையைப் பெற்று படிக்கச் சென்றாள். தன் கிராமத்தையும், தன் வீட்டின் பரிச்சயத்தையும் விட்டுவிட்டு, இந்தப் புதிய அத்தியாயத்தை கொஞ்சம் நடுக்கத்துடனும், ஆனால் உற்சாகத்துடனும் ஏற்றுக்கொண்டாள். பல்கலைக்கழக வாழ்க்கையில் பல சவால்கள் அங்கும் சந்திக்க நேரிட்டாலும் காவியா, அவ்வற்றை எல்லாம் தாண்டி, அவள் இதயத்தில், நெடுஞ்செழியன், திருவள்ளுவர் மற்றும் கணியன் பூங்குன்றனார் விதைத்த விதைகளின் வேர்களில் இருந்து வலிமையைப் பெற்றுக் கொண்டு நிமிர்ந்து நின்றாள். அவளுடைய நெகிழ்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் விரைவில் அவளது பேராசிரியர்கள் மற்றும் சகாக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. "புதிய ஆரம்பம்" ஒன்று அவளைக் மறைத்துக் கொண்டு இருந்த சாதி என்ற முகில்களைக் கிழித்துக்கொண்டு முதல் அடியை எடுத்து வைத்தது. என்றாலும் பொன்னம்பலம் இராமநாதன், செல்லப்பா சுந்தரலிங்கம் போன்ற படித்த தலைவர்களின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்களை அவள் மறக்கவில்லை. எனவே தனது புதிய ஆரம்பத்தின் ஒவ்வொரு அடியையும் கவனமாக தந்திரமாக எடுத்து வைத்தாள். ஆகவே தன்னைத் திடப்படுத்தவும், தன்னை சூழ்ந்து இருப்பவர்களை தயார் படுத்தவும், பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில், காவியா சமூக செயல்பாட்டின் மீதான தனது ஆர்வத்தை தனக்குள் பெருக்கினாள். எனவே ஓரங்கட்டப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்து, அனைவருக்கும் சமத்துவம் மற்றும் கல்விக்காக குரல் கொடுக்கத் தொடங்கினாள். இது இலங்கை முழுவதும், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாடு வரை சாதி மற்றும் சமூகப் பொருளாதார நிலைகளின் தடைகளைத் தாண்டிப் பரவி, பலரைத் அது தூண்டியது. உயர்தரத்தில் மருத்துவ பட்டம் பெற்ற பிறகு, காவியா ஒரு புதிய நோக்கத்துடன் தனது யாழ்ப்பாணத்துக்கு திரும்பினாள். அவள் தனது கடமை நேரம் தவிர, நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியுடன் பின்தங்கிய குழந்தைகளுக்காக ஒரு பயிற்சி கல்லூரி நிறுவி, அந்த குழந்தைகளுக்கு மேல் அதிகமான கற்றலுக்கான உதவி வழங்கி, அவர்களின் அறியாமையின் சங்கிலிகளை உடைத்து அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான திறவுகோலை வழங்கும் 'புதிய ஆரம்பத்தை' ஏற்படுத்தினாள். இது, இந்த அவளுடைய கதை யாழ்ப்பாணத்தின் குடாநாட்டில் மட்டும் இன்றி, இலங்கை முழுவதும் எதிரொலித்து, எண்ணற்ற இளம் உள்ளங்களின் இதயங்களில் நம்பிக்கையின் தீப்பொறிகளைப் பற்றவைத்தது. காவியாவின் விடாமுயற்சி மற்றும் வெற்றியின் கதை சமூக மாற்றத்தின் கலங்கரை விளக்கமாக மாறி, "புதிய ஆரம்பம்" இலங்கையில், குறிப்பாக தமிழர் சமூகத்தில் தோன்றியது. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது "புதிய ஆரம்பம்" மட்டுமே!. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025