Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்21Points87990Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்10Points19134Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்8Points38770Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்8Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/16/25 in Posts
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 32வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்களில் எவரும் அரைச் சதத்தை அடிக்கவில்லை என்றாலும் வேகமாக அடித்தாடிய அபிஷேக் போரெல், கேஎல் ராஹுல், ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸ், அக்க்ஷர் பட்டேல் ஆகியோரின் பங்களிப்புடன் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்ஸன் காயம் காரணமாக வெளியேறியபோதும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா ஆகியோரின் அரைச் சதங்களுடன் வெற்றி இலக்கை நோக்கிப் முன்னேறியது. எனினும் மிச்சல் ஸ்ராக்கின் இறுக்கமான இறுதி ஓவரில் 9 ஓட்டங்களை எடுக்கவேண்டிய நிலையில் 8 ஓட்டங்களை எடுத்ததால் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களை எடுத்துப் போட்டி சமநிலையில் முடிந்தது. அதன் பின்னர் வெற்றி தோல்வி சுப்பர் ஓவர் மூலமாகத் தீர்மானிக்கப்பட்டது. முதலில் ஆடவந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் 5 பந்துகளின் இரண்டு விக்கெட்டுகளை ரண் அவுட் மூலம் பறிகொடுத்தமையால் 11 ஓட்டங்களுடன் அவர்களின் ஆட்டம் 5 பந்துகளில் முடிந்தது. பதிலுக்கு ஆடவந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேஎல் ராஹுலும், ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸும் 4 பந்துகளில் 13 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்ட உதவினர். முடிவு: போட்டி சமநிலையில் முடிந்திருந்ததால் சுப்பர் ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் முதல்வர் இடத்தைக் கைப்பற்றியுள்ளார். அத்துடன் பல நாட்களாக சுமைதாங்கியாக இருந்த @goshan_che இன் வலிக்கு நிவாரணம் வழங்க @சுவைப்பிரியன் இறுதி நிலைக்குச் சென்று எல்லோரையும் தாங்கிப் பிடிக்கின்றார்!3 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு மாதிரி மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கருக்கு தண்ணியைக் காட்டி விட்டு படைத்தளபதி நந்தனார் ஆட்சியைக் கைப்பற்றி விட்டாரா ...... 😂 அல்லது மன்னர் தனது பதவியைக் காப்பாற்ற....... பலமுறை படைத் தளபதியை ஒற்றனாக எதிரிகளிடம் அனுப்ப.... எதிரிகள் படைத்தளபதிக்கு ஆசை காட்டி..... மன்னருக்கு மோசம் செய்ய வைத்து விட்டார்களா.... 🤣 என்ற சந்தேகம் படை வீரர்கள்களிடம் காணப்படுகின்றது விரைவில் தனது படையணியைத் திரட்டி ஆட்சியைக் கைப்பற்ற மன்னர் கங்கணம் கட்டி ஒற்றைக் காலில் நிற்பதாக ஒரு செய்தி கூறுகின்றது 😅2 points
-
குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!
உங்களுக்கு அங்கிள் வயது என்பதால் அன்ரிமார்களைத்தான் ரசிக்க முடியும். இப்படியான படத்துக்குப் போனால் பலதையும் ஆற அமர்ந்து இரசிக்க முடிகிறது. அதற்காகத்தானோ இப்படியான படங்களை எடுக்கிறார்கள்.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தல (சுவி) அண்ணா பின்னால போறதுதான் தொண்டனுக்கு அழகு ❤️2 points
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய உதவிய, துணை நின்ற, பின் கதவால் ஆதரவு கொடுத்த அமெரிக்கா, ஐரோப்பியா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்து ஜேவிபி வரைக்கும் ஒரு போதும் நீதியான சர்வதேச விசாரணைக்கு முழுமையான ஆதரவு கொடுக்கப் போவதில்லை. கூட்டுக்களவாணிகள் எவரும் பங்காளிகளை காட்டிக் கொடுத்து தாமும் மாட்டுப்பட மாட்டார்கள். இலங்கையை தன் வழிக்கு கொண்டு வர மட்டுமே அதை வைத்து பூச்சாண்டி காட்டுவார்கள். அத்துடன், இத்தனை பேரழிவுகளை மக்கள் மீது நிகழ்த்தும் இஸ்ரேலின் அட்டூழியங்களை ஆசிர்வதித்துக் கொண்டு, புட்டினை மட்டும் கண்டிக்கும் இந்த உலக நாடுகளின் வெளிப்படையான இரட்டை வேடங்களை கண் முன்னே கண்டு கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்திலும் இப்படியான விசாரணைகள் மீது நம்பிக்கை வைக்க முடியுமா? தக்கண பிழைக்கும். மற்றவை அழிக்கப்படும் என்பதே இன்றைய நீதி.2 points
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
சில விசேட சூழ்நிலைகளில் இப்படி அதிகாரிகளால் ஆட்சி செய்யும் முறை நடந்திருக்கிறது. 20 ஆண்டுகள் முன்னர், பெல்ஜியத்தில் ஆட்சி பெரும்பான்மையில்லாமல் கவிழ்ந்து விட்டது. புதிதாக ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் பல மாதங்கள் "காபந்து பிரதமர்- caretaker PM" ஆட்சி செய்தார். அந்த வேளையில், குடிமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் ஏற்கனவே இயற்றப் பட்ட கொள்கைகளை அமல் படுத்தி அன்றாட நிர்வாகத்தை அரச அதிகாரிகள் நடத்தினார்கள். "ஏற்கனவே இயற்றப் பட்ட கொள்கைகள்/சட்டங்கள்" - இது தான் முக்கியமான பொயின்ற்: புதிதாக கொள்கைகளைச், சட்டங்களை அதிகாரிகள் இயற்றவில்லை. இருக்கும் சட்டங்களை அமல் படுத்தினர். கடஞ்சா தன் கருத்திற்கு இந்திய யாப்பை சாட்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த யாப்பிலேயே இருப்பதன் படி, நிர்வாக அதிகாரிகள் "கொள்கைகளை அமல்படுத்துவோர்" என்று தான் இருக்கிறது. "கொள்கைகளை இயற்றுவோர் - policy makers" அல்லது அரசியல் தலைமையின் கொள்கைகளை தடம்/வழி மாற்றுவோர் என்று குறிப்பிடவில்லை.2 points
-
கருத்து படங்கள்
2 pointsகருத்துப் படங்களை, ஆவலுடன் பார்த்து ரசிக்கும் நல் உள்ளங்களே... தமிழ் சிங்கள புத்தாண்டு, ஈஸ்ரர் விடுமுறை என்று இலங்கையில் இந்தக் கிழமை முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருப்பதால்... கருத்து ஓவியம் வரைபவர்கள், நீண்ட விடுமுறையில் சென்று விட்டார்கள் போலுள்ளது. அதனால்... நான் வழமையாக கருத்து ஓவியம் எடுக்கும் இணையத்தில் புதிய கருத்து ஓவியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதனை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் புரிதலுக்கு நன்றி. 🙂2 points
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
ஒரு ஜனநாயக நாட்டில் அதிகாரிகள் தான் எல்லாம் என்று இருக்கின்ற காரணத்தால் டொனால்ட் ரம்புக்கு தொல்லைகள் கொடுக்காமல் அவரை நிரந்தரமாக ஆட்சி செய்ய விடுங்கோ என்று அமெரிக்க மக்களிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் யாழ்களம் சார்பாக நாங்கள் ஒரு அன்பான வேண்டு கோள் விடுக்க வேண்டும்2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரஹானே கட்டாயமாக அவுட்டை ரிவியூ செய்திருக்கவேண்டும்! ரசல்ஐ எதுக்காக விளையாடுகிறார்களோ தெரியவில்லை! பந்தும் போடுவதில்லை. ஐந்து ஒவர்கள் இன்னமும் இருக்கும்போது முதல் பந்துக்கே இப்படியா அடிப்பது! மொயீன்அலியை கட்டாயமாக விளையாடும் அணியில் சேர்க்க வேண்டும். அவர்தான் KKR இற்கு லக்கி சாம்!! குய்ந்தோன் டீகோக்க்கும் கலைக்கப்பட வேண்டிய ஒருவர்! ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாசை விளையாடலாம்!2 points
-
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
கண்டன அறிக்கை : உண்மைகளும் பொய்களும் April 15, 2025 ஷோபாசக்தி என்மீதான ஒரு கண்டன அறிக்கை நேற்று இணையத்தில் ‘அதற்கமை பெண்ணியக் குழு’ என்றொரு அமைப்பால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் கண்டன அறிக்கை குறித்து எனது தரப்பைத் தெளிவுபடுத்தும் நோக்கமொன்றுக்காகவே இந்தப் பதிவை எழுதுகிறேன். எவரையும் அவதூறு செய்வதோ, குணச்சித்திரப் படுகொலை செய்வதோ, கடந்தகால உறவுகளின்போது நிகழ்ந்த தனிமனித அந்தரங்கங்களையோ, உணர்வுச் சிக்கல்களையோ, முரண்களையோ பொதுவெளியில் அறிக்கையிட்டு, கீழ்மையான கிசுகிசுப் பசி பிடித்து அலையும் சமூக வலைத்தளவாசிகளுக்கு மலிவுத் தீனி போடுவதோ எனது பதிவில் நிகழவே கூடாது என்ற கவனத்துடனும் பொறுப்புடனுமே இதை எழுதுகிறேன். கண்டன அறிக்கையில் 116 கையெழுத்துகள் என்பது பெருந்தொகைதான். ஆனால், இந்த அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் முக்கால்வாசிப் பேர்களை நான் முன்பின் அறிந்ததில்லை. அவர்களுக்கும் என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களில் பெரும்பாலானோர் கேரளா – டில்லி – வங்காளம் போன்ற இடங்ளைச் சேர்ந்தவர்களாகத் தெரிகிறார்கள். அறிக்கையில் கையொப்பமிட்டிருக்கும் மிகுதிக் கால்வாசிப் பேர்களில் பெரும்பாலானோரை எப்போதாவது இலக்கியக் கூட்டங்களில் அல்லது புத்தகச் சந்தையில் பார்த்திருப்பேன். அவ்வளவே அறிமுகம். அதேவேளையில், கண்டன அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் ஒருசிலர் என்னோடு இணைந்து பல வருடங்களாகக் கலை – அரசியல் செயற்பாட்டிலும், நெருங்கிய நட்பிலும் உறவிலும் தோழமையிலும் இருந்தவர்கள். இவர்களிடம் என்னுடைய அலைபேசி எண்ணும் மின்னஞ்சல் முகவரியும் இருக்கின்றன. இவர்களில் பலர் இந்த விநாடிவரை எனது முகநூல் நட்புப் பட்டியலிலும் இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் ஒரே ஒருவருக்குக்கூட கண்டன அறிக்கையில் கையெழுத்திட முன்பாக என்னிடம் எனது தரப்பு விளக்கத்தைக் கேட்டு அறிய வேண்டும் என்று தோன்றவில்லை. முதலாளித்துவ நீதிமன்றங்களில் கூட குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்கு விளக்கமளிக்கப் பல வாய்ப்புகளைக் கொடுத்த பின்பே தீர்ப்பிடுகிறார்கள். ‘அதற்கமை பெண்ணியக் குழு’வின் விசாரணை மன்றத்திலோ அவ்வாறான வாய்ப்புகள் ஏதும் கொடுக்கப்படாமல், நேரடியாகவே ‘குற்றவாளி’ எனத் தீர்ப்பிடும் நடைமுறை அமலில் இருக்கலாம். ஆனாலும், நான் எனது தரப்பைச் சொல்லித்தான் ஆகவேண்டும். எனது தரப்பை அறிந்துகொள்ளாது முன்னரும் ஒருமுறை ‘பாலியல் குற்றவாளி’ எனச் சமூக வலைத்தளங்களில் நான் அநீதியாகத் தீர்ப்பிடப்பட்டிருக்கிறேன். அந்த நிகழ்வை முதலில் இங்கே சுருக்கமாகக் குறித்துக் காட்டிவிடுகிறேன். ஏனெனில், அந்த நிகழ்வுக்கும் தற்போதைய கண்டன அறிக்கைக்கும் நெருங்கிய ஒற்றுமையிருக்கிறது. அந்தப் பாலியல் குற்றச்சாட்டு இன்றைக்குப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்மீது சுமத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த பதினைந்து வருடங்களாக என்மீது தொடர்ந்து அந்தக் குற்றத்தைச் சுமத்தினார்கள். தனிநபர்களோடு அரசியல் இயக்கங்களும் என்மீது அந்தக் குற்றத்தைச் சுமத்தின. ம.க.இ.க. மற்றும் சார்லஸ் ஆன்டனி போன்ற மே 17 இயக்கத்தின் அன்றைய முக்கிய செயற்பாட்டாளர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கி என்மீது குற்றம்சாட்டினார்கள். குற்றச்சாட்டும் மிகக் கடுமையானதுதான். பிரான்ஸ் தமிழச்சியிடம் நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் என்பது குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை நான் மறுத்தேன் (Link). அந்தக் குற்றச்சாட்டு திட்டமிடப்பட்ட கூட்டு அவதூறுக் குரல் என்றேன். ஆனாலும், அந்தப் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்து இன்றுவரை என்மீது பழி சுமத்தப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு அவ்வப்போது சற்றே தூசி தட்டப்பட்டுச் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. பிரான்ஸ் தமிழச்சி மறுபடியும் யூ – டியூப் நேர்காணல்களில் தோன்றுகிறார். என்னோடு சேர்த்து என்னுடைய தோழர்களில் பலர் அவதூறுகளால் தாக்கப்படுகிறார்கள். அதைத் தாண்டியும் சகட்டுமேனிக்குப் பலரின்மீது தமிழச்சியால் பாலியல் குற்றம் சுமத்தப்படுகிறது. இவை எல்லாற்றுக்கும் ஆரம்பம் என்மீதான தமிழச்சியின் அவதூறுகளுக்கு 2010-இல் நூற்றுக்கணக்கான நபர்களும் சில அரசியல் இயக்கங்களும் கூட்டாகக் களம் அமைத்துக் கொடுத்ததே. அதுதான் இப்போது மறுபடியும் இந்தக் கண்டன அறிக்கை மூலம் நிகழ்த்தப்படுகிறது. கடந்த வருடம் பாரிஸில் நடந்த 51-வது இலக்கியச் சந்திப்பில் ‘பாலியல் சுரண்டல்: எதிர்கொள்ளலும் பொறுப்புக்கூறலும்’ என்றொரு அமர்வு நிகழ்ந்தது. அந்த அமர்விலும் தமிழச்சி என்மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுக் குறித்த கேள்வி மறுபடியும் ஒருமுறை எழுப்பப்பட்டது. அமர்வை ஒருங்கிணைத்த விஜி அந்தக் கேள்விக்கு “தமிழச்சியின் குற்றச்சாட்டு ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்பது எங்களுக்குத் தெரியும்” எனப் பதிலளித்தார். அதாவது, நீண்ட பதினைந்து வருடங்கள் நான் பொய்ப் பழியைச் சுமந்து அலைந்ததன் பின்னாக, முதற்தடவையாக ஒரு பொது அரங்கில் என்மீதான குற்றச்சாட்டுப் பொய்யானது எனச் சொல்லப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதுவரை காலமும் தமிழச்சியின் இந்தப் பொய்க் குற்றச்சாட்டைத் தோன்றியபோதெல்லாம் தங்களது கையிலெடுத்து என்மீது அவதூறை வீசியெறிந்தவர்களும் தற்போதைய இந்தக் கண்டன அறிக்கையில் கையழுத்திட்டிருப்பவர்களுமான மோகனதர்ஷினி, பாரதி சிவராஜா, அஞ்சனா போன்றோர் தங்களது அந்த அவதூறுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்களா என்ன! இல்லை. இப்போதும் அந்த அவதூறுகள் முகநூலில் கிடக்கின்றன. இந்தப் பொறுப்பின்மையின் இன்னொரு வடிவம்தான் இப்போதைய கண்டன அறிக்கை. இந்தக் கண்டன அறிக்கையைத் தயாரித்தவர்கள் யார் என அறிக்கையில் விபரமில்லை. இதில் கையொப்பமிட்டிருக்கும் அனைவருமே இணைந்து இந்த அறிக்கையைத் தயாரிக்கவில்லை. ஏனெனில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கண்டன அறிக்கையே மின்னஞ்சலில் பலருக்கும் அனுப்பப்பட்டுக் கையெழுத்துகள் கோரப்பட்டன. லீனா மணிமேகலையின் மின்னஞ்சல் மூலமாக எனது தோழமைகள் சிலருக்கும் இந்தக் கண்டன அறிக்கை அனுப்பப்பட்டுக் கையெழுத்துக் கோரப்பட்டிருந்தது. எனவே, கையெழுத்திட்டவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து இந்த அறிக்கையைத் தயாரிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அறிக்கையின் உண்மைத்தன்மையைத் தீர விசாரித்துத் தெரிந்துகொள்ளாமல் Solidarity என்ற அடிப்படையில் பெரும்பாலான கையெழுத்துகள் பதிவாகியிருக்கின்றன. பகிரங்கமான ஓர் அரசியல் நிகழ்வுக்கு எதிராக, அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக இந்தமுறையில் ஒரு கூட்டுக் கண்டன அறிக்கை வெளியாவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதுதான் நடைமுறை. ஆனால், உறவிலிருந்த இரு நபர்களுக்கு இடையேயான அந்தரங்கப் பிரச்சினைகளையும் உணர்வுச் சிக்கல்களையும் ஒருதரப்பின் மீதான Solidarity என்ற அடிப்படையில் மட்டுமே அணுகிக் கையெழுத்திடுவது ஒருபோதும் சரியாக இருக்காது. ‘ஷோபாசக்தியால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை ஆழமாகவும் விரிவாகவும் பரிசீலித்தோம்’ எனக் கண்டன அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பரிசீலனையாளர்கள் யார்? அவ்வாறு பரிசீலித்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் யார்? இந்த விபரங்களை மறைத்து வைப்பதன் மூலம் கண்டன அறிக்கையைத் தயாரித்த பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். Solidarity கையொப்பங்களின் பின்னே அவர்கள் மறைந்து நிற்கிறார்கள். ஆனாலும், இந்த அறிக்கையை முன்னின்று உருவாக்கியவர்கள் எவர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களின் சாரம் ஏற்கனவே சிவா மாலதியால் முகநூலில் (13 டிசம்பர் 2024) வைக்கப்பட்டது. அதைப் போன்றே கடந்த இரண்டு வருடங்களாகவே இந்தக் குற்றச்சாட்டுகள் அரசல்புரசலாகவும் கவிதையாகவும் லீனா மணிமேகலையால் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகளை இணைத்து உருப்பெருக்கி எழுதப்பட்டிருப்பதே இந்தக் கண்டன அறிக்கை. சிவா மாலதி கடந்த டிசம்பர் மாதத்தில் எந்தச் சூழ்நிலையில், என்னமாதிரியான குற்றச்சாட்டை என்மீது வைத்தார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. 51-வது இலக்கியச் சந்திப்பில் ‘இமிழ்’ தொகுப்பு வெளியீடு, யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ‘இமிழ்’ வெளியீட்டு நிகழ்வுக்கு எழுத்தாளர் கிரிசாந் பேசுவதற்கு அழைக்கப்பட்டது தொடர்பான விவாதங்களில் ‘இமிழ்’ தொகுப்பின் பதிப்பாசிரியர்களில் ஒருவன் என்ற முறையில் எனது நிலைப்பாட்டை ‘இமிழ் – வால்டேயரை நினைவுபடுத்தல்’ என்ற தலைப்பில் கட்டுரையாக (Link) எழுதியிருந்தேன். கிரிசாந் எழுதிய கட்டுரைகள் மீது எதிர்க் கருத்து இருப்பதற்காக அவரைச் சமூகப் புறக்கணிப்புச் செய்யுமாறு (சிவா மாலதி போன்றோர்) கோருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருந்தேன். கடந்த டிசம்பர் மாதத்தில் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, கிரிசாந்தின் கவிதை நூல் வெளியீடு யாழ் நூலக மண்டபத்தில் நிகழ்ந்தது. ஒரு பார்வையாளனாக நானும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டேன். இதை விமர்சித்து சிவா மாலதி ‘பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டலும் சோபாசக்தியும்’ என்றொரு முகநூல் பதிவை எழுதியிருந்தார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது மூலமாகப் பாலியல் குற்றவாளிகளை நான் காப்பாற்ற முயற்சிக்கிறேன் என்று சொன்னார். அவரது அர்த்தமற்ற வாதத்திற்குப் பலம் சேர்ப்பதற்காக என்மீதான பொய்களையும் தனது பதிவில் இணைத்திருந்தார். அந்தப் பதிவில், என்னால் பல பெண்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் என்னால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள் என்றும் சிவா மாலதி குறிப்பிட்டார். தற்கொலைக்கு முயன்றாக ஒரு பெண்ணின் அடையாளத்தைக் குறிப்பிட்டே எழுதியிருந்தார். சிவா மாலதி குறிப்பிடும் அந்தப் பெண் யார் என்பதை என்னைப் போலவே பலராலும் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், எனக்கும் இங்கே குறிப்பிடப்படும் அந்தத் தோழிக்கும் இருந்தது இரகசிய உறவல்ல. அது பகிரங்கமாகவே இருந்தது. சிவா மாலதி இந்தக் குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்பும் பின்பும் கூட அந்தத் தோழி என்னுடன் நல்ல நட்பிலேயே இருந்தார். சிவா மாலதியின் இந்தக் குற்றச்சாட்டு வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பின்பு, என்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்தத் தோழி என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைப் புத்தக சந்தைக்கு வந்திருந்தார். இருவரும் நீண்ட நேரமாகப் பல விஷயங்களைப் பேசிக்கொண்டாலும், சிவா மாலதியின் பதிவு குறித்து நான் எதுவும் அவரிடம் சொல்லவில்லை. ஏனெனில், அந்தப் பொய்ச் செய்தியைச் சொல்லி அந்தத் தோழியைப் பதற்றப்படுத்த நான் விரும்பவில்லை. அன்று தில்லையின் ‘தாயைத்தின்னி’ நாவலை நான் புத்தக சந்தையில் வெளியிடுவதாக இருந்தது. நீங்களும் வாருங்கள் என அந்தத் தோழியையும் என்னுடன் அழைத்துச் சென்றேன். நானும் அவரும் சேர்ந்திருந்தே ‘தாயைத்தின்னி’ நாவலை மிகுந்த மகிழ்ச்சியோடு வெளியிட்டோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (29 டிசம்பர் 2024) இப்போதும் தில்லையின் முகநூலில் இருக்கின்றன. என்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வது சாத்தியமா? இந்தத் தற்கொலைப் பொய் தற்போது வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலும் வெளியாகியுள்ளது. சிவா மாலதியின் இந்தப் பதிவைத் தனது முகநூலில் பகிர்ந்துகொண்ட (14 டிசம்பர் 2024) லீனா மணிமேகலை ‘இத்தனை வருடங்களாக நான் எனது கண்களைக் கட்டிக்கொண்டு இருந்துவிட்டேன். கனடா வந்ததும்தான் என் கண்கள் திறக்கப்பட்டு ஷோபாசக்தி பெண்களை வேட்டையாடுபவர் எனத் தெரிந்துகொண்டேன்’ என எழுதினார். லீனா மணிமேகலை போன்ற கூரிய புத்திசாலித்தனமும் மிகுந்த தைரியமும் கொண்ட ஒருவரின் கண்கள் பதின்மூன்று வருடங்களாகக் கட்டப்பட்டிருந்தன என்றால் அது வருந்தத்தக்கதுதான். ஆனால், அவரது கண்கள் கட்டப்பட்டிருக்கவில்லை. 2009 முதல் லீனா மணிமேகலைக்கும் எனக்கும் இருந்த உறவு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நாங்கள் பிரிந்து இருவருமே வெவ்வேறு உறவுகளுக்குப் போய்விட்ட பின்பும்கூட இருவரும் நட்பாகவே இருந்தோம். சேர்ந்து வேலைகள் செய்திருக்கிறோம். 2021-இல் அவரது ‘Black July’ குறும்படத்திற்கு நான்தான் பிரதியெழுதிக் குரல் நடிப்பும் செய்திருந்தேன். 18 மே 2021-இல் அவர் படித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக வகுப்பில் நடந்த Zoom meeting-லும் கலந்துகொண்டு நான் உரையாற்றினேன். ‘கோவிட்’ கெடுபிடிக் காலத்திற்குப் பின்பாக 2022 -இல் நான் இந்தியாவுக்குச் சென்றபோது, புதியதொரு உறவில் நுழைந்தேன். அப்போதிலிருந்துதான் லீனா மணிமேகலை என்மீது ‘பெண்களை வேட்டையாடுபவன்’ என்ற குற்றத்தைச் சுமத்த ஆரம்பித்தார். இதை அவர் இந்தக் கண்டன அறிக்கை சொல்வதுபோன்று பரிசீலனை – ஆய்வு செய்தெல்லாம் அறிக்கையிடவில்லை. முதலில், என்னுடன் உறவிலிருக்கும் தோழியின் முகநூலின் ‘கொமென்ட்’ பகுதியில் நுழைந்து என்னைக் குறித்த பொய்களை எழுதினார். அதை எனது தோழி அழித்தவுடன் ‘இதை உன்னால் அழித்துவிட முடியும். ஆனால், ஷோபாவைப் பொதுவெளியில் அம்பலப்படுத்த எனக்கு ஒரு நிமிடம் ஆகாது’ என்று மேசேஜ் அனுப்பினார். பின்பு எனது நெருங்கிய நண்பர்கள் வட்டத்திற்கு இதேபோன்று ‘பெண்களை வேட்டையாடுபவன்’ மின்னஞ்சல்களை அனுப்பினார். பின்பு ‘அந்தோணிதாசன்’ என என்னை விளித்துச் சாபமிடும் கவிதையும் எழுதினார். ஏற்கனவே என்னில் கோபமுற்றிருந்த சிவா மாலதி போன்றவர்களும் இவரோடு சேர்ந்துகொள்ள, இப்போது அவை எல்லாமே புனைவுகளாகவும் பொய்களுமாகச் சேர்ந்து மூன்றரைப் பக்கங்களில் கண்டன அறிக்கையாகப் பரிணமித்திருக்கிறது. நான் பல பெண்களோடு உறவில் இருந்தேன் என்பது உண்மை. என்னுடைய 23 வயதிலிருந்தே எனக்குத் தொடராகக் காதல்கள் இருந்தன. திருமணம், குழந்தைகள், ஒழுக்கவாதம், கலாசாரம் போன்ற எல்லைகளுக்குள் வாழ விரும்புவர்களுக்கு என்னுடைய வாழ்க்கைமுறையும் தேர்வுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால், நான் மிக இளம் வயதிலேயே திருமணம் – குழந்தைகள் என்ற நிறுவன முறைக்கு வெளியே வாழும் ‘சுதந்திரக் காதல்’ வாழ்க்கைமுறையை வரித்துக்கொண்டவன். என்னுடைய அரசியல் கல்வியாலும் இளமையிலேயே அனார்க்கிஸத்தின் மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பாலும் நான் இந்த வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவன். இதைப் பகிரங்கமாகவே பொதுவில் பலமுறை அறிவித்திருப்பவன். ‘எதுவரை’ இதழில் 2010 -இல் வெளியாகிய என்னுடைய நேர்காணலில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருந்தேன். ”காதல், பாலுறவு போன்றவை உட்பட எனக்கு எவ்விதமான ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளும் கலாசாரத் தளைகளும் கிடையாது. இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு அவர்களது தனிப்பட்ட தேர்வு. இதில் மதம், சட்டம், கலாசாரம் போன்றவற்றிற்கு எந்த வேலையும் கிடையாது.” எனது வாழ்க்கைமுறை பகிரங்கமானது. எனக்கு இருந்த காதல் உறவுகளும் பகிரங்கமானவை. இந்தக் கண்டன அறிக்கையில் ‘திருமணம், குடும்பமாக சேர்ந்து வாழ்தல் போன்ற பொய்யான வாக்குறுதிகள் என்னால் கொடுக்கப்பட்டது’ எனச் சொல்லப்பட்டிருப்பதை நான் முற்றிலும் மறுக்கிறேன். நான் எவருக்கும் அவ்வாறு வாக்குறுதி கொடுத்ததில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதேபோன்று என்னுடன் உறவிலிருந்த யாருமே அவ்வாறு என்னிடம் வாக்குறுதி கேட்டதில்லை என்பதும் உண்மையே. பாலியல் வன்முறை, பொருளாதாரரீதியாகச் சுரண்டியது, அதிகாரத்தை உபயோகித்துப் பாலியல் துர்ப்பிரயோகம் செய்தது போன்ற எந்தக் குற்றச்சாட்டுகளும் கண்டன அறிக்கையில் கிடையாது. பின்பு என்னதான் குற்றச்சாட்டு? காதல் உறவில் இருந்தவர்களை மேலாதிக்கம் செய்தேன், நம்பிக்கைத் துரோகம் செய்தேன், அவர்களுடன் திடீரெனத் தொடர்புகளைத் துண்டித்தேன் என்பவையே சாரமான குற்றச்சாட்டுகள். இந்தக் குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். எவரொருவர் மீதும் நான் மேலாதிக்கமோ பாலியல் சுரண்டலோ செய்ததில்லை. நம்பிக்கைத் துரோகம் சுட்டுப் போட்டாலும் – உண்மையாகவே துப்பாக்கியால் சுட்டாலும் – செய்வது என் இயல்பில்லை. உறவிலிருந்து பிரிந்த பின்பும் பலருடனும் நட்புரீதியான தொடர்புகளையும் சந்திப்புகளையும் இப்போதுவரை நான் வைத்திருக்கிறேன். பொத்தாம் பொதுவாக அவருக்கு அப்படி நடந்தது, இவருக்கு இப்படி நடந்தது எனக் கண்டன அறிக்கை சொல்கிறது. இப்படி யாரும் எவர்மீது வேண்டுமானாலும் எளிதாகக் குற்றம் சொல்லலாம். தனியொரு முகநூல் வம்பரும் இப்படிச் சொல்லலாம், 116 கையெழுத்துகள் சேர்ந்தும் சொல்லலாம். எண்ணிக்கை அல்ல உண்மையைத் தீர்மானிப்பது. இவ்வாறான ஒரு பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டை முன்வைக்கும்போது, சில குறிப்பான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரைச் சொல்லாமல் இருப்பதில் நியாயம் இருக்கலாம். எனினும், எனது வாழ்க்கை எப்படிப் பகிரங்கமானதோ அவ்வாறே எனது காதல் உறவுகளும் பகிரங்கமானவையே, எல்லோருக்கும் தெரிந்தவையே என்றிருக்கும்போது இங்கே அந்தப் பெயர்களைக் குறிப்பிட்டிருக்க முடியும். அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் என்னால் ஆதாரபூர்வமாகக் காலவரிசைப்படி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து எது உண்மையென நிரூபணம் செய்திருக்க முடியும். அந்த வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இதை ஓர் எடுத்துக்காட்டோடு விளக்குகிறேன். 2010-இல், பிரான்ஸ் தமிழச்சியின் பெயரைக் குறிப்பிடாமல் ‘ஒரு பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்’ எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லியிருந்தால் அந்தக் குற்றச்சாட்டின் தன்மையை நான் எவ்வாறு புரிந்துகொண்டிருக்க முடியும்? அந்தக் குற்றச்சாட்டை எப்படி ஆதாரத்தோடு என்னால் மறுத்திருக்க முடியும்? இந்தக் கண்டன அறிக்கையும் இவ்விதமே கற்பனைக் குற்றச்சாட்டுகளோடு வெளியாகிப் பொறுப்புக்கூறுமாறு என்னிடம் கேட்கிறது. பெயரற்ற பெண்கள் – கற்பனைக் குற்றச்சாட்டுகள் என்றிருந்தால் என்னால் எவ்வாறு எனது தரப்பைச் சொல்ல முடியும். பொத்தாம் பொதுவாக ‘மறுக்கிறேன்’ என்றுதான் சுருக்கமாகச் சொல்ல முடியும். எனினும், கண்டன அறிக்கையை மிகக் கவனமாகப் படித்து, முடிந்தவரை நான் பொறுப்புடன் என்னுடைய மறுப்பை இங்கே விளக்கமாக எழுதியிருக்கிறேன். கண்டன அறிக்கையின் பொய்களின் அணிவகுப்பில் அடுத்த குற்றச்சாட்டு ‘திருநங்கை செயற்பாட்டாளரை பாலியல் ரீதியாக சுரண்டியதோடு மட்டுமல்லாமல், தான் திரைக்கதை எழுதி நடித்த ரூபாவிலும்(Roobha) அந்த உறவில் நடந்தவற்றையெல்லாம் பயன்படுத்தி காட்சிகளாக்கியுள்ளார்’ என்பது. இந்தப் பாரதூரமான குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன். ‘ரூபா’ திரைப்படம் 2016-இல் கனடாவில் தயாரிக்கப்பட்டது. ஆனால், அந்தத் திரைப்படத்தின் கதை ‘செங்கடல்’ திரைப்படம் முடிந்த கையோடு லீனா மணிமேகலைக்காக என்னால் 2011- இல் ‘சிட்டு’ என்ற தலைப்பில் திரைக்கதையாக எழுதிக் கொடுக்கப்பட்டது. எனினும், முயற்சி மேற்கொண்டு நகரவில்லை. இதே கதை கனடாச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு, ‘ரூபா ‘என்கிற கதையாக என்னால் எழுதப்பட்டு, ‘ரூபா’ திரைப்பட இயக்குனரிடம் என்னால் கொடுக்கப்பட்டது. ‘ரூபா’ திரைக்கதை என்னுடைய உறவில் நடந்த உண்மைக்கதை என்பதில் சற்றும் உண்மையில்லை. குயர் சமூகத்தோடு எனக்கு நீண்டகாலமாகத் தொடர்பும் தோழமையும் இருக்கின்றன. நான் அவர்களோடு நிறைய உரையாடி அவர்களது வாழ்பனுபவம் குறித்து அறிந்திருக்கிறேன். கூவாகத்திற்குச் சென்று கள ஆய்வு செய்து லீனா மணிமேகலைக்காக ‘ரதிலீலா’ என்று இன்னொரு திரைக்கதையையும் எழுதிக் கொடுத்திருக்கிறேன். குயர் சமூகத்தவர்களுக்கு இலங்கை – இந்தியாவில் உரிமைகள் மறுக்கப்படும்போது, அவர்கள் அய்ரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோர என்னவகையான சட்ட வழிகள் இருக்கின்றன எனச் சொல்லியிருக்கிறேன். பிரான்ஸில் தஞ்சம் கோரிய சிலருக்கு ‘கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமி’யின் உறுப்பினர் என்ற முறையில் சாட்சியச் சான்றிதழ் கொடுத்திருக்கிறேன். ஆனால், இதையெல்லாம் நான் பாலியல் சுரண்டலுக்காகச் செய்தேன் என்று கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது எனக்கு இழைக்கப்படும் அநீதி அல்லாமல் வேறில்லை. பத்து வருடங்கள் காதலித்துத் திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்டு, உறவில் ஏற்படும் சிக்கல்களாலும் முரண்பாடுகளால் விவாகரத்து வாங்கிப் பிரிந்துவிடுபவர்கள் உண்டு. அதற்கான உரிமை தார்மீகரீதியாக மட்டுமல்லாமல் சட்டப்படியும் அவர்களுக்குண்டு. அதுபோலவே காதலர்களுக்கும் பிரிந்து செல்வதற்கான உரிமை உண்டு. சிலவேளைகளில் இந்தப் பிரிவு நட்புணர்வுடன் சுமூகமாக நடக்கும். சிலவேளைகளில் முரண்பாடுகளால் எழுந்த கசப்புகளோடும் பழிவாங்கும் வன்மத்தோடும் இந்தப் பிரிவுகள் நிகழும். அங்கே நிச்சயமாக உணர்வுரீதியான பாதிப்புகளும் உளக்கொந்தளிப்புகளும் இருக்கும். ஆனால், இருவருக்கு இடையேயான இந்த உறவுச் சிக்கலை ‘பாலியல் சுரண்டல்’ எனச் சொல்லிப் பழிதீர்க்க நினைப்பது அருவருப்பானது. அதைப் பெண்ணியச் சாயம் பூசிய கண்டன அறிக்கையாக வெளியிடுவது தவறான முன்னுதாரணம். கண்டனத்திற்கு உரிய செயல். இத்தகைய பொய் அறிக்கைகளை உலாவவிடுவது என்பது எதிர்காலத்தில் உண்மைகளின், ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் அறிக்கைகளையும் சமூகம் சந்தேகத்தோடு அணுகத் தூண்டும் பொறுப்பற்ற செயல். கண்டன அறிக்கையில் குறிப்பிடப்படும் இன்னொரு விஷயம் “மிரட்டுதலும் மெளனிக்கச்செய்வதும் – ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம், நீங்கள் என்ன கலாசார காவலர்களா (cultural Policing) என்று கேட்கிறார்” என்பது. இந்தக் கண்டன அறிக்கையைத் தயாரித்தவர்கள், கையொப்பமிட்டவர்கள் இதை நிரூபிக்கத் தயாரா? ஏன் இந்தப் பொய்கள்! இது உண்மை என்றால் யாரை மிரட்டினேன் என இங்கு பகிரங்கமாகச் சொல்வதில் என்ன சிக்கல் உங்களுக்கு? கலாசாரக் காவலரா எனக் கேட்டு எங்கு எழுதினேன்? யாரை மிரட்டினேன்? ஆளும் சொல்லாமல் பேரும் சொல்லாமல் ‘ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம் கலாசாரக் காவலரா எனக் கேட்கிறார்’ எனக் கண்டன அறிக்கையில் புகார் சொல்லப்படுகிறது. என்னுடைய புகார் என்னவென்றால், அப்படி என்னால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்களின் சார்பில் இந்த நிமிடம்வரை எவரொருவரும் என்னிடம் பேசவில்லை என்பதுதானே. அடுத்த குற்றச்சாட்டு ‘அவருடைய சக அறிவுஜீவி கூட்டாளிகளை விட்டு அதையொட்டி கட்டுரை எழுத வைப்பது, அறிக்கை விடச் செய்வது என்று தனது செல்வாக்கை ஊடகமாக்கி, பாதிப்புக்குட்பபடுத்தப்பட்ட பெண்களையும் அவர்களுக்காக பேச வந்தவர்களையும் பிற்போக்காளர்களாக அடையாளப்படுத்தி குணக்கொலை (character assassination) செய்திருக்கிறார்’ என்பது. எனது அறிவுஜீவி கூட்டாளிகளை எப்போது எவர்மீது நான் ஏவிவிட்டேன்? இதற்காவது உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? சேறடிக்க வேண்டுமென்று இறங்கிவிட்டால் எந்த எல்லைக்கும் இறங்கிச் சேறு வீசிவிடுவீர்களா? எனது ‘அடியாள் எழுத்தாளர்கள்’ என ஒரு பட்டியல் அவ்வப்போது முகநூல் வம்பர்களால் வெளியிடப்படுவதுண்டு. இந்தப் பட்டியலில் உள்ள எழுத்தாளர்கள் ஒவ்வொரும் தங்களது எழுத்துத் திறனால் தங்களை இலக்கிய உலகில் நிறுவிக்கொண்டவர்கள். தங்களுக்கு எனத் தனித்துவமான பார்வைகளைக் கொண்டவர்கள். இலக்கியத்திற்கு எந்த மதிப்புமளிக்காத சமூகச் சூழலிலிருந்து தங்களது உழைப்பாலும் திறனாலும் எழுந்துவரும் இளம் எழுத்தாளர்களை இவ்வாறு கொச்சைப்படுத்துவது நாணயமற்றது. கண்டன அறிக்கையில் நகைச்சுவை அம்சங்களுக்கும் இடம் இருக்கக்கூடாது என்றில்லை. ஆனால், அது அசட்டு நகைச்சுவையாக இருப்பது இரசிக்கத்தக்கதல்ல. ‘தனது வயதையும், உடல் நலம் சார்ந்த பராமரிப்புக்கான தேவையையும் கூறி பெண்களிடம் கழிவிரக்கம் தேடுகின்றமை’ என்பதும் என்மீதான ஒரு குற்றச்சாட்டாம். இதை மறுப்பதென்றால் நான் மிகுந்த உடல் நலத்தோடு இருக்கிறேன் என்று மருத்துவச் சான்றிதழ் பெற்று இங்கே சமர்ப்பித்தால்தான் முடியும். வேண்டுமென்றால் அதையும் பொறுப்பாகச் செய்துவிடுகிறேன். ‘பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்ணொருவர் கூறுகையில் ஷோபாசக்தி குடிக்கு அடிமையாக இருப்பதுடன் தன்னையும் அப்பழக்கத்திற்கு ஆளாக்கிவிட முனைந்தார் என்பதாலேயே அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதைக் குறிப்பிட்டார்’ என்றொரு கண்டனக் குற்றச்சாட்டு. இதெல்லாம் ‘குமுதம்’ கிசுகிசுவுக்கு நிகரான கண்டனம். இந்தக் கண்டனத்திற்கு என்ன பொறுப்புக் கூறுவது என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. ஒரு குடி அடிமையால் முப்பது வருடங்களாக இலக்கியத்திலும் சினிமாவிலும் இடையறாது இயங்க முடியுமா? ஒரேயொரு கிட்னியோடு முப்பது வருடங்களுக்கும் மேலாக முழுமையான தேக ஆரோக்கியத்தோடு இருக்க முடியுமா? என்றெல்லாம் நீங்களாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியதுதான். கற்பனைக் குற்றச்சாட்டுகளுடன் கண்டன அறிக்கை வெளிவந்துவிட்டது. இனி என்ன நடக்கும்? என்மீது அரசியல்ரீதியாக நெடுங்காலமாகவே பகைமை பாராட்டிவரும் பெருமக்கள் இந்தப் பொய் அறிக்கையைப் பரப்பிச் செல்வார்கள். பாலியல் கிசுகிசுகளுக்காகவே காத்துக்கிடக்கும் முகநூல் வம்பர்கள் இதைக் காவிச் செல்வார்கள். கண்டன அறிக்கையை ஆதரிக்கிறேன் எனப் பொய் ஆதாரங்களும் பொய்ச் சாட்சியங்களும் இனி அணிவகுக்கும். அதேவேளையில் தீர ஆராய்ந்து தெளிந்து நடப்பவர்கள் இந்த அறிக்கையிலுள்ள பொய்களையும் அறிக்கையின் உண்மையான நோக்கத்தையும் தெரிந்துகொள்வார்கள். இந்த மறுப்புப் பதிவை எழுதி முடிக்கும் இந்தத் தருணத்தில் எனக்குத் தயக்கமோ வருத்தமோ ஏதுமில்லை. மாறாக, கடந்த இரண்டு வருடங்களாகவே என்மீது அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரப்பப்பட்டுக்கொண்டிருந்த அவதூறுகளுக்கு ஒட்டமொத்தமாகப் பதில் சொல்லி முடித்திருக்கும் மனநிறைவே என்னிடம் இருக்கிறது. கடைசியாக ஒன்று… இந்த அறிக்கையின் நோக்கம் என்னைப் பொறுப்புக்கூற வைப்பதுதான் என்றால், நான் பொறுப்பாக மறுப்புக்கூறி அந்த நோக்கத்தை இங்கே நிறைவேற்றி வைத்துவிட்டேன். ஆனால், அறிக்கையின் மைய நோக்கம் அதுவல்லவே. அது என்னவென்று அறிக்கை அறிவிக்கிறது: “ஷோபாசக்திக்குத் தளங்களை ஏற்படுத்திக் கொடுத்து, விருதுகளையும் அங்கீகாரத்தினையும் வழங்கிய ‘முற்போக்கு’ இயக்கங்கள், காந்தியவாதிகள், பதிப்பாளர்கள், அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்கிறது கண்டன அறிக்கை. என்னைத் தனிமைப்படுத்திச் சமூகப் புறக்கணிப்புச் செய்வது, என்னோடு தோழமை பாராட்டும் இயக்கங்களிலிருந்து என்னைப் பிரித்துவைப்பது, என்னைக் குறித்து எழுதும் ஊடகவியலாளர்களைத் தடுப்பது, எனது பதிப்பக வாய்ப்புகளைக் கெடுப்பது, என்னைத் தேடி வந்துகொண்டேயிருக்கும் சர்வதேச அளவிலான சினிமா வாய்ப்புகளுக்கு வேட்டு வைப்பது என்பவைதான் கண்டன அறிக்கையின் மைய நோக்கம். இதையெல்லாம் செய்யுமளவுக்குக் கற்பனைகளுக்கும் பொய்களுக்கும் சக்தி இருக்குமானால், முப்பது வருடங்களாக எந்த அதிகார சக்திகளுக்கும் ஆயுதங்களுக்கும் அஞ்சாமலும் பணியாமலும் எழுதிவரும் எனது எழுத்திலுள்ள நேர்மைக்கும் உண்மைக்கும் அதைவிட அதிக சக்தியுண்டு என்பதே எனது நன்நம்பிக்கை. -ஷோபாசக்தி 15.04.2025 https://www.shobasakthi.com/shobasakthi/2025/04/15/கண்டன-அறிக்கை-உண்மைகளும/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR43YTEm6EiiMBVsbEpDyij4Tlsosd_5QlFrRgQlWlYv-yjzXDyREzvslMgcxQ_aem_XMWxW8ugOe8AUcND3d66aA2 points
-
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
ஓணாண்டியை யாராவது டாக் பண்ணி விடவும். அவரின் சங்கத்துக்கு ஒரு கேஸ் வந்துள்ளது 🤣2 points
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
2 pointsபிள்ளையானுக்கு சட்டத்தரணியாக... உதய கம்மன்பில. தமிழ் மக்களுக்கு எவ்வளவோ எதிர்ப்பான ஒரு இனவாதி உதய கம்மன்பில, பிள்ளையானுக்காக வாதாட வருகின்றார் என்றால்... பிள்ளையான் எவ்வளவு சீரழிவை தமிழனுக்கு ஏற்படுத்தி இருப்பார் என்று ஊகிக்கலாம்.2 points
-
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை “கலாசாரமானது ஆதிக்கத்தன்மையுடையதாக இருக்கும்போது, அது வன்முறையானதாக இருப்பது மட்டுமன்றி அனைத்து உறவுகளையும் அதிகாரத்திற்கான போரட்டங்களாகவும் கட்டமைக்கும்” - பெல் ஹூக்ஸ் The Will to Change: Men, Masculinity, and Love “நாம் ஆற்றல் மிக்கவர்கள். ஏனெனில் வன்முறையிலிருந்து வெளியேறி தொடர்ந்து வாழ்வதென்பதே நமது ஆற்றலுக்கு சாட்சிதான். இதன் மொத்த சாராம்சமும் முற்றுமுழுதாக நமது ஆற்றலையும் வளர்ச்சியையும் பற்றியது” - ஓட்ரி லோர்ட் https://www.blackpast.org/african-american-history/1982-audre-lorde-learning-60s/ பெண்ணிய அக்கறையாளர்கள் இணைந்து தயாரித்த கண்டனக் கூட்டறிக்கையை உங்கள் கவனத்திற்கு வைக்கிறோம். எழுத்தாளர் நடிகர் ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடவடிக்கைகளால் பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பல பெண்கள் மற்றும் குயர் சமூகத்தினரின் வாக்குமூலங்களை ஆழமாகவும் விரிவாகவும் பரிசீலித்ததின் அடிப்படையில், அவர்களுக்கான எங்களின் முழுமையான ஆதரவையும், ஆணதிகார துஷ்பிரயோகத்திற்கான எதிர்ப்பையும் பரவலாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் பொறுப்பேற்று அதற்கமைந்த பெண்கள் கூட்டமைப்பொன்றினை உருவாக்கியுள்ளோம். பெண்களின் குரல்கள் எழும்போதெல்லாம் காக்கப்படும் கள்ள மெளனங்கள் நம்மை மேலும் மேலும் பலவீனமாக்குவதை அனுமதிக்க முடியாதென்பதாலும் கலை இலக்கிய அரசியல் வெளிகளுக்குத் துணிந்து செயலாற்ற வரும் பெண்களுக்கும் பால்பல்வகையினருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அதிமுக்கியமான தேவை என்பதாலும் இந்த கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கிறோம். பாலியல் சுரண்டலானது ஆண் பாலினத்திற்கு வழங்கப்பட்ட சலுகையாக இயல்பாக்கப்பட்டிருப்பதும், வரலாறு நெடுகிலும் வன்முறையை அனுபவிப்பதே பெண் பாலினத்திற்கும், பால்பல்வகைமையினர்களுக்கும் விதிக்கப்பட்ட நியமமாக இருப்பதும் கண்கூடு. இதை வெற்று மெளனத்தால் கடப்பது, ஒடுக்குமுறைகளிலேயே அதிமுதன்மையான நிறுவனமான ஆணாதிக்கத்தின் அடிமைச் சங்கிலிகளை இன்னும் இறுக்கி கொள்வதற்கு சமமானது தான் என்பதால் நாங்கள் அதை உடைத்து நொறுக்குவதில் உறுதியாக இருக்கிறோம். எழுதும் ஆண் தன் ஆதிக்கப்பால்நிலை (cis gender) அடையாளத்தை, அது தரும் அதிகாரத்தை, பாலியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக பெண்களைச் சுரண்டுவதற்கும், பெண்களுக்கும், பால்பல்வகைமையினர் (queer) மற்றும் திருநர்களுக்கும் எதிரான வன்முறைகளுக்குப் பயன்படுத்துவதும், அதை அறிவுப்பித்து, கலைமனப்பிறழ்வு, மீறல், கட்டுடைத்தல் என்று முட்டுக் கொடுப்பதும் தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. சுயமரியாதை சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, தாங்கள் சார்ந்த குடும்பம் - சாதி- மத அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளைத் தாண்டி அரசியல், கலை, இலக்கியம் என்று அறிவுத் துறைகளைத் தேர்ந்தெடுத்து வரும் பெண்களும் திருநங்கைகளும் அதே சுரண்டலால் பாதிக்கப்படும்போது சமூக ரீதியாக எந்த பாதுகாப்புமற்ற சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். திரும்புவதற்கு இடமில்லாமல் அநாதரவாகின்றார்கள். கனவுகளைக் காவு கொடுத்துவிட்டு தங்கள் கூண்டுகளுக்கே திரும்ப நேர்கின்றனர். தமிழில் தேர்ந்த எழுத்தாளர் என்று தன் தொடர்ச்சியான படைப்புகளால் அடையாளம் காணப்படுபவர் ஷோபாசக்தி. பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய, பெண்ணியக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுவராகவும் தன்னை முன்னிறுத்திக்கொண்டவர். ஆனால் அவர் மேல் பாலியல் சுரண்டல் புகார்களை பல பெண்களும் குயர் சமூகத்தினரும் எழுப்பியுள்ளனர். இந்தியாவிலும், கனடாவிலும் ஐரோப்பாவிலும் பல பெண்களுக்கு பொய் வாக்குறுதிகள் தந்து உறவில் ஈடுபடுத்திவிட்டுப் பின், அதில் இரண்டு பெண்களைத் தற்கொலை முயற்சிக்கு தள்ளுமளவு மனச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். இவ்வறிக்கை பாதிக்கப்பட்டவர்களின் தீவிர பங்கேற்புடனும், ஷோபாசக்தியால் தங்களுக்கு இழைக்கப்பட்ட துஷ்பிரயோகத்தின் அனுபவங்களை வெளிப்படையாகவும் தனிப்பட்ட முறையிலும் வெளிப்படுத்திய பல பெண்களுடனும் ‘குயர்’ சமூகத்தினருடனும் இடம்பெற்ற தொடர்ச்சியான உரையாடல்களின் விளைவாகவும் உருவாக்கப்பட்டதாகும். ஷோபாசக்தியால் பாதிக்கப்பட்ட நபர்களுடனான இந்த உரையாடல்களில் வெளிப்பட்ட துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலின் வடிவங்கள்/போக்குகள்: ஷோபாசக்தி தன்னையொத்த கண்ணோட்டம் கொண்ட பெண்களைச் (பெண்ணிலைவாதிகள், மார்க்சியவாதிகள், சாதி மறுப்பாளர்கள், ‘குயர்’ சமூக கூட்டாளிகள்) சுரண்ட தனது அரசியல், கலை சார்ந்த பார்வைகளை பயன்படுத்துகின்றமை. ஷோபாசக்தி பொதுவெளியில் அறியப்பட்ட பெண்ணிலைவாதிகள், கலைஞர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுடனான தனது தொடர்புகள் மற்றும்/அல்லது உறவுகளைப் பயன்படுத்தி தனது துஷ்பிரயோக மற்றும் சுரண்டல் நடத்தைகள் குறித்த சந்தேகங்கள் எழாதவாறான சூழலை உருவாக்குகின்றமை. ஷோபாசக்தி தான் அகதியாக இருந்த வரலாற்றையும், ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருந்த அடையாளத்தையும், தன்மீது அனுதாபத்தினை ஏற்படுத்துவதற்கும், அதன்மூலம் பெண்களை ஏமாற்றித் தன்வசப்படுத்துவதற்கும் பயன்படுத்துகின்றமை. ஷோபாசக்தி சர்வதேச தொடர்புகளையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, குடியுரிமை தொடர்பான சட்டச்சிக்கல்களைக் கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் ‘குயர்’ சமூகத்தினருக்கு புகலிடக் கோரிக்கைகள்/குடியுரிமைகள் விடயத்தில் உதவுவதாக நம்பிக்கை ஏற்படுத்தியதோடு தனது அந்தஸ்தையும் அனுபவங்களையும் பயன்படுத்தி நீண்டகால வதிவுரிமைப் பாதுகாப்பிற்கான பொய் நம்பிக்கைகளை விதைத்தமை. ஷோபாசக்தி தன்மீது உணர்வு ரீதியாக நெருக்கமாகி, சார்ந்திருக்க வேண்டிய நிலையை (co-dependency) உந்துகிற வகையில் தனது வயதையும், உடல் நலம் சார்ந்த பராமரிப்புக்கான தேவையையும் கூறி பெண்களிடம் கழிவிரக்கம் தேடுகின்றமை. ஷோபாசக்தி திருமணம், குடும்பமாக சேர்ந்து வாழ்தல் போன்ற பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, உணர்வுரீதியாகவும் உடல்ரீதியாகவும் நெருங்கி வாழத் தொடங்கியப் பெண்களிடம் ஆரம்பக்கட்டத்தில் அளவுக்கதிகமாக அன்பை கொட்டுவதைப்(love bombing) போல காட்டி அவ்வப்போது தனிமைப்படுத்திப் பின் ஒரேயடியாக புறக்கணித்து அவர்களை முற்றிலும் பலவீனப்படுத்திப் பயன்படுத்திக்கொண்டமை. ஷோபாசக்தி அவரை விட்டு விலக முடிவெடுக்கும் பெண்களுக்கு அமையும் வேறு உறவுகளைக் குழப்பும் வகையில், அவர்களின் வாழ்வை அத்துமீறிப் பின்தொடர்வதோடு (stalking) அவர்கள் மீதான தனது 'உடைமை உணர்வையும்’(territorializing) தக்கவைத்துக் கொள்கின்றமை. ஷோபாசக்தி தனது அரசியல், இலக்கிய சகபாடிகளைத் திரட்டி பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ‘குயர்’ சமூகத்தினரின் பாடுகளையும் அனுபவங்களையும் கீழ்மைப்படுத்தி, 'கலைஞனின் பிறழ்வு இயல்பானது' எனக் கற்பிதங்களைப் பரப்பி தனது வக்கிரங்களை நியாயப்படுத்துகின்றமை. ஷோபாசக்தி தனது விசுவாசமிக்க ஆதரவாளர்களைக்கொண்டு பெண்களையும் ‘குயர்’ சமூகத்தினரையும் ஏளனப்படுத்தியும் அச்சுறுத்தியும் மலினப்படுத்தியும் வாயடைக்கச் செய்கின்றமை. இதன்மூலம் பாதிப்புக்குட்படுத்தப்பட்டவர்களின் சுயத்தை உடைத்து அவர்களை கழிவிரக்கத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்துகின்றமை. ஷோபாசக்தி ஒரே சமயத்தில், பல்வேறு நாடுகளில், நகரங்களில் பல பெண்களிடம் அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக, நிலைத்த துணைக்கான - நீடித்த பந்தத்துக்கான உத்தரவாதத்தைப் பொய்யாக அளித்து, உறவு வைத்துக் கொண்டு ஏமாற்றி பித்தலாட்டம் செய்து வஞ்சித்தமை. பாதிப்புக்குட்படுத்தப்பட்டவர்களால் வெளிப்படுத்தப்பட்ட அனுபவங்கள்: பாலியல் சுரண்டல் இடம்பெறும் வகையில் சூழலை உருவாக்குவது: ஷோபாசக்தி பாலியல் ரீதியாக சுரண்டிய பெண்களில் பெரும்பாலானோர், அவருக்கு எப்போதும் நற்சான்றிதழ் தரும் அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்கள் நிறைந்த சபைகளிலும் இடங்களிலும் தான் அவரை சந்தித்ததாகவும், அவர்கள் அவரிடம் காட்டும் அதே மரியாதையுடனும் அக்கறையுடனும் தம்மையும் நடத்துவார்கள் என்று நம்பியதாகவும் தங்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். அவரோடான உறவை ஊக்குவித்த மேன்மக்களை அணுகி உறவில் நடக்கும் முறைகேடுகளை பேச முற்பட்ட போதெல்லாம், ஷோபாசக்தி போரினால் பாதிக்கப்பட்டவர் - அகதி, பல கஷ்டங்களை அனுபவித்தவர் என அவர்மீது அனுதாபம் கொள்ளும்வகையில் பேசியதுடன், கலைஞனின் அதீதம் புரிந்துகொள்ளப்படவேண்டியது என வாதாடியதன் மூலமும் மெளனிக்கப்பட்டிருக்கிறார்கள். அவருடைய வெறித்தனமான நடத்தை (obsession) தொடர்பில் பெண்கள் சந்தேகப்பட்டு அவரின் சகாக்களிடம் பேசுகையில், எழுத்தாளனதும் கலைஞனதும் பிறழ்வுகள், அதீதப் போக்குகள் இயற்கையானவை என அப்பெண்களிடம் சொல்லப்பட்டு இவரின் துஷ்பிரயோக நடத்தைகள் நியாயப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதன்மூலமாக அந்த உறவினை அவராக முறித்துக்கொள்ளும்வரை, சுரண்டல் என்று உணர்ந்தும் அப்பெண்கள் அந்த உறவில் தொடர்ந்து நிலைத்திருப்பதனை அவரின் கூட்டாளிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். எழுதிவைக்கப்பட்டது போலவே ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளை ஒரேமாதிரி ‘திடீரென’ முறித்துக்கொள்ளும் போது, தனது ‘ஆளுமையாலும், புகழாலும், மேதைமையாலும்’ ஈர்க்கப்பட்டு அப்பெண்கள், திருமணம் குடும்பம் எனக்கேட்டு தன்னை ‘நிறுவனமயப்படுத்த’(institutionalise) முற்படுவதாக பொய்சொல்லி, ஷோபாசக்தி தன் சுரண்டலை ஒவ்வொரு தடவையும் நியாயப்படுத்தியிருக்கிறார். கட்டுப்படுத்துவதும்(Controlling) தன்னுடைமை(Ownership) என அதீத உரிமை எடுப்பதும்: பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்களின் அனுபவங்களின்படி ஷோபாசக்தி தன்னுடன் உறவிலிருந்த பெண்கள்மீது அதீத உடமையுணர்வை (possessive) வெளிப்படுத்தி வந்திருக்கிறார். அவருடன் நீண்டகால உறவிலிருந்த ஒரு பெண்ணிடம், அவர் கழிவறை போகும் போதுகூட ‘என்னை விட்டுவிட்டு அப்படியே வெளியே போய்விடுவாயா?’ என்று கேட்டு அழும் அளவிற்கு வெறித்தனமான (obsessive) ஒட்டுதலுடன் இருந்திருக்கிறார். தன்னுடன் உறவிலிருந்த பெண்கள் தங்களது வாழ்க்கையில் கவனம் செலுத்துகையில் குறிப்பாக அவர்கள் மற்றுமொரு உறவிற்குச் செல்லுகையில், ஷோபாசக்தி திடீரென அறிவிக்காமல் அவர்களது வீடுகளுக்குச் செல்லுதல், பொதுவெளிகளில் எதிர்பாராவிதத்தில் சந்திக்கும் இடங்களில்கூட அப்பெண்களின் துணைவர்களுக்கு சந்தேகம்வரச் செய்வதனை நோக்கமாக கொண்டு, அவருடனான உறவு இன்னும் முடியவில்லை என்பதுபோல நிரூபிக்க முயற்சித்தல் ஆகிய நடத்தைகளைக் கொண்டிருந்திருக்கிறார். இதன் காரணமாக இவருடன் உறவிலிருந்த பெண்களை உறவிற்குப் பின்னரும் ஏதோ ஒருவிதத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் எப்போதாவது வாய்ப்புக்கிடைக்கும்போது பாலியல் சுரண்டலில் ஈடுபடுவதற்கு ஏதுவான சூழலினைப் பேணியிருந்திருக்கிறார். அனுதாபத்தை ஏற்படுத்தி நச்சு சார்புநிலையை உருவாக்குதல்: ஷோபாசக்தி அளவுக்கு மீறிய சுயஅபிமானக் (narcissist) கூறுகள் நிறைந்த நடத்தைகளை அவருடன் பழகிய பெண்கள் எல்லோரோடும் வெளிப்படுத்தியிருக்கிறார். உறவுகளின் ஆரம்பத்திலிருந்தே அளவுக்கதிகமாக அப்பெண்களை நேசிப்பதாக நடிப்பதில் தொடங்கி, பிறக்காத கற்பனைப் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பது வரை எதிர்காலத்திற்கான பொய்யான உத்தரவாதத்தினை வழங்கி நம்பிக்கையைக் கட்டியெழுப்பி திட்டமிட்டு பாலியல் சுரண்டலை நடத்தியிருக்கிறார். ஐரோப்பாவில் பால்நிலைசார் அகதியாக புகலிடம் பெற்றுத் தருவதாக வாக்குத்தந்து குயர் உறவுகளைப் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். உறவிலிருக்கும் பெண்கள்மீது இவர் வைத்திருந்த கட்டுப்பாடு (control); மிகையான அன்பைக் கொட்டுவது(love bombing); அதன்பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு அப்பெண்களை கண்டு கொள்ளாமல் விடுவதன் மூலம் (neglect) தன்னை நினைத்து ஏங்கச் செய்வது; இவ்வாறான ஒரு வன் (abusive) உறவு ஏற்படுத்தும் பதட்டங்களை உருவாக்கி, அப் பெண்களைவிட்டு இவர் விலகும்போது, இலகுவில் அவரைவிட்டு விலகமுடியாத நிலையினையும், அதன் காரணமாக ஆழ்ந்த மனச்சிதைவையும் ஏற்படுத்தியிருந்திருக்கிறார். தான் கடந்த காலத்தில் அகதியாக இருந்த கதைகளை சொல்லியும் தன் நோய்களைச் சுட்டியும், தன்னைப் பார்த்துக்கொள்ள யாருமே இல்லை என்று பச்சாதாபத்தை ஏற்படுத்தியும், தான் செத்தால் கொள்ளி போட வேண்டும் என்று கேட்டும், தன் மேல் அனுதாபத்தை ஏற்படுத்தி, உணர்வுகளைச் சுரண்டி, ஒரு நச்சான சார்பு நிலையை உறவுகளில் உருவாக்கியிருக்கிறார். பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்ணொருவர் கூறுகையில் ஷோபாசக்தி குடிக்கு அடிமையாக இருப்பதுடன் தன்னையும் அப்பழக்கத்திற்கு ஆளாக்கிவிட முனைந்தார் என்பதாலேயே அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதைக் குறிப்பிட்டார். ஆக இவருடன் உறவில் இருந்த பெண்களோ, குயர் சமூகத்தினரோ இவர் பரப்பிய பொய்யான பிம்பத்தைப் போன்று இவரின் ஆளுமைமீது மோகம் கொண்டு இணைந்து வாழ விரும்பியிருக்கவில்லை. மாறாக இவர் அவர்கள்மீது காட்டிய வெறித்தனமான பிடித்தம், எதிர்காலம் குறித்து ஷோபாசக்தி ஏற்படுத்திய நம்பிக்கை, முற்போக்கு சித்தாந்தங்களைப் பேசி உருவாக்கிய பாதுகாப்புணர்வு என்பவற்றின் காரணமாகவே அவர்மீது ஆழமான நேசத்தினை வளர்த்திருந்தனர். விளிம்புநிலை திருநங்கைகளை சுரண்டுதல்: ஷோபாசக்தி வெளிநாட்டில் பால்நிலைசார் அகதியாக புகலிடம் பெற்றுத் தருவதாக கூறி திருநங்கை செயற்பாட்டாளரை பாலியல் ரீதியாக சுரண்டியதோடு மட்டுமல்லாமல், தான் திரைக்கதை எழுதி நடித்த ரூபாவிலும்(Roobha) அந்த உறவில் நடந்தவற்றையெல்லாம் பயன்படுத்தி காட்சிகளாக்கியுள்ளார். பாதிப்புக்குட்படுத்தப்பட்ட அத்திருநங்கை, “ரூபா” திரைப்படத்தைப் பார்த்தபோது தனக்கேற்பட்ட உணர்வுகள் தொடர்பில் கூறுகையில், அந்தப் படத்தில் வெளிப்பட்ட திருநங்கை வெறுப்பே (transphobia) திருநர்கள் தொடர்பில் ஷோபாசக்தி யின் உண்மையான நிலைப்பாடு எனவும், தன்னை அவர் மற்ற ஆண்களைப் போல மனிதத்தன்மையற்ற முறையில் தனது பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளவே பயன்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். பொதுச் சமூகத்தில் திருநங்கைகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது இயல்பானதாயிருக்கின்றதாயினும் திருநர் கூட்டாளியாக (trans ally) தன்னைக் காட்டிக்கொண்ட இவரிடம் அத்தகைய கீழ்மையான செயலைத் தான் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் கூறி வருந்தினார். பெண்களையும் ‘குயர்’ சமூகத்தினரையும் இழிவுபடுத்துதல்: ஷோபாசக்தி தான் உறவிலிருந்த பெண்களுடன் உறவினை எதேச்சதிகாரமாக முறித்துக்கொண்டது தொடர்பில் பிறர் வினவும்போது அப்பெண்கள் தன் மீது உடைமை உணர்வுடன் (possessive) இருப்பதாகவும், சில பெண்கள் தனது அம்மா மற்றும் தங்கையுடன் பேசுவதைக்கூட விரும்புவதில்லை எனும் அளவிற்கு தன்னை சொந்தம் கொண்டாடுவதாகவும், உறவென்றான பிறகு தன்னைத் திருமணம் செய்ய அவர்கள் வற்புறுத்துவதாகவும் கூறி அதனாலேயே தான் அந்த உறவினை முறித்துக்கொண்டதாக சாட்டு சொல்லி நியாயப்படுத்தி வந்த ஷோபாசக்தி, தனது ஆளுமையினைக் கேடயமாக்கி தன்னைத்தானே தொடர்ந்து பாதுகாத்தும் வந்திருக்கிறார். மற்ற இளைய எழுத்தாளர்கள் மீது பாலியல் புகார்கள் வைக்கப்பட்டபோதும், ஷோபாசக்தி தன் இலக்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு அரண்கொடுக்கும் நடவடிக்கைகளை திட்டமிட்டவகையில் மேற்கொண்டுவந்திருக்கின்றார். அவர்களோடு இணைந்து பாலியல் சுரண்டலாளர்களை ஆராதிக்கும் ஒரு கலைக்குழுவை உருவாக்குவது போன்ற செயல்பாடுகள், தன் அழுக்கை மறைத்துக் கொள்வதற்கான பிரயத்தனங்கள் என்றே புரிந்துக்கொள்ள முடிகிறது. மிரட்டுதலும் மெளனிக்கச்செய்வதும்: ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம், நீங்கள் என்ன கலாசார காவலர்களா (cultural Policing) என்று கேட்டதுடன் அவருடைய சக அறிவுஜீவி கூட்டாளிகளை விட்டு அதையொட்டி கட்டுரை எழுத வைப்பது, அறிக்கை விடச் செய்வது என்று தனது செல்வாக்கை ஊடகமாக்கி, பாதிப்புக்குட்பபடுத்தப்பட்ட பெண்களையும் அவர்களுக்காக பேச வந்தவர்களையும் பிற்போக்காளர்களாக அடையாளப்படுத்தி குணக்கொலை (character assassination) செய்திருக்கிறார். இந்தியாவிலும், கனடாவிலும் ஐரோப்பாவிலும் பல பெண்களையும் ‘குயர்’ சமூகத்தினரையும் தனது ஒரே பாணியிலான மூளைச் சலவைக் கதைகளினூடாகச் சுரண்டி அதில் இரண்டு பெண்களைத் தற்கொலைக்கு தள்ளுமளவு மனச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். தற்கொலை முயற்சியினை மேற்கொண்ட பெண்களையும் ஷோபாசக்தி யும் அவரது குழாமும் விட்டுவைக்கவில்லை. “ஆளுமை இருக்கும் பெண்கள் இந்த அனுபவத்திலிருந்து மீண்டு இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தமது வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள், ஆளுமை குறைந்த அல்லது ஆளுமையற்ற பெண்களே இதுதொடர்பில் சதா புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது தற்கொலை முயற்சி செய்கிறார்கள்” என அப்பெண்களை அவர்கள் குற்றம் சுமத்துவதானது (victim blaming) பாதிக்கப்பட்டவர்களை மனிதத்தன்மை நீக்கம் செய்வதல்லாமல் (dehumanising) வேறேது? பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்கள், பாதிக்கப்பட்டவர்களாக உணரக்கூடாது் - அவ்வாறு உணர்வது இழிவானது, பாதிக்கப்பட்டாலும் அதை சத்தம் போடாமல் கடந்து போவது தான் ‘பின் நவீன சிந்தனை’ எனப் பேசி, ஷோபாசக்தி யின் ‘எழுத்துலக, கலையுலக, அரசியிலுலக’ சகாக்கள், பாலியல் சுரண்டலினை சாதாரணமயப்படுத்தி வந்திருக்கின்றார்கள். அதுதவிர அன்பு செய்த அளவிற்கு ஏமாற்றத்தையும் துரோகத்தையும் ஒரு மனவடுவாக உணர்வதும் அதைத் தாங்கிக்கொள்ளமுடியாதளவிற்கு மனச்சிதைவினை ஏற்படுத்தியவனை விட்டுவிட்டு தற்கொலை முயற்சி செய்யும் பெண்களைக்கூட குற்றஞ்சுமத்தி, ஆளுமையான பெண்கள் இவ்வாறான சுரண்டல்களைக் கடந்துபோய்விடுவார்கள் என்பதாகப்பேசி நேர்மறையான தீர்ப்பு (positive judgement) மூலமாக அவர்களின் குரலை ஒடுக்கியிருக்கிறார்கள். ஆண் கலைஞர்களது பிறழ்வுகள் எத்தகையதாயினும் மனநோயாகவோ அல்லது மன அழுத்தமாகவோ கருதப்படுவது பால்நிலை பாரபட்சமும் இரட்டை நிலைப்பாடுமல்லாது வேறேது? இருபதிற்கும் மேற்பட்ட பெண்களிடம் ஒரே நாடகத்தை மீண்டும் மீண்டும் ஆடி பாலியல் ரீதியாக சுரண்டுவதற்கான அனுமதியை(license) 'எழுத்தாளர்', 'கலைஞர்' என்ற பெயரில் ஆண்களுக்கு வழங்குவதை எந்த சித்தாந்தம் வழிமொழிகிறது? ஆக பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதுடன் அதிலிருந்து தமக்குத்தாமே தண்டனை விலக்கும் பொறுப்புக் கூறலிலிருந்து விலக்கும் பெற்றுக் கொள்வதற்காக, பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஷோபாசக்தி போன்றோராலும் அவர்களது குழாமினாலும் உருவாக்கப்பட்டு பரவவிடப்பட்ட கருத்தியல் கட்டுக்கதையே கலைஞர்களின் ‘பிறழ்'வாகும். பொதுவாக பாலியல் சுரண்டல்காரர்களின் உத்திகளில் பல பொதுவான போக்குகளை அவதானிக்க முடியும். அவை ஒரேமாதிரியானவை. அதிலொன்றுதான் பெண்களையும் திருநங்கைகளையும் பாலியல் பண்டங்களாக நடத்தும் போக்கு. தன்னைவிட இளவயது பெண்களிடம் உறவிலிருக்கும் போது, அதையும் பெருமையாக, 'I am having a young lover' எனப் பெருமை பாடியும், அவர் குடிக்குமிடங்களில் தன்னோடு உறவிலிருந்து பெண்களைப் பற்றி பிதற்றியும் தனது ஈகோவிற்கும் ஆணாதிக்கச் சிந்தனைக்கும் தீனியளித்து வந்த ஷோபாசக்தி சமூகத்தில் தன்னை முற்போக்கானவராகவும், அநீதிக்கெதிரான ஒடுக்குமுறைக்கான குரலாகவும் காட்டிக் கொண்டாலும், அவர் பார்வையில் பெண்கள் வெறும் பாலியல் பண்டங்களே! இந்தப் புகார்களுக்கெல்லாம் ஆதாரம் என்ன, அந்தப் பெண்கள் ஏன் அப்போதே பேசவில்லை, ஏன் போலீஸுக்குப் போகவில்லை, ஏன் தற்காப்பு கலைகள் பயிலவில்லை, அவர்களும் மனம் ஒத்து தானே அவரிடம் பழகினார்கள், என்று கேட்பதற்கான எந்த அருகதையும், பேசத்துணியும் பெண்களையெல்லாம் வார்த்தைகளாலும் பார்வைகளாலும், தங்கள் தீர்ப்புகளாலும் வன்முறை செய்யக் காத்திருப்பவர்களுக்கு இல்லை என்பதையும், ஆண்மைய சமூகத்தில் நிலவும் அதிகார ஏற்றத்தாழ்களில் ஒப்புதல்(consent) எப்படி திரிவுபடுத்தப்படுகின்றது என்ற புரிதல் இல்லாதது போல பாசாங்கு செய்பவர்கள் சுரண்டலுக்குப் பல்லக்கு தூக்குகிறவர்கள் என்பதையும் இங்கு நினைவுறுத்துகிறோம். இந்தச் சமுகம் பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்கள் பேசுவதை மதிக்கக்கூடிய, நம்பக்கூடிய மன உயரங்களை அடையும்போது இந்த அறிக்கைகள் எழுதும் பொறுப்பிலிருந்தும் எம்மை நாம் விடுவித்துக்கொள்வோம். சமூக அழுத்தங்களையும் மீறி குரலெழுப்பிய பெண்கள் மற்றும் குயர் சமூகத்தினரின் வாக்குமூலங்களைக் கேட்டறிந்த பின்னும், அதற்கான எந்தவொரு பொறுப்புக் கூறலையும் கோராத அதேவேளை, ஷோபாசக்திக்கும் அவரது பாலியல் சுரண்டல் நடவடிக்கைகளை முன்னுதாரணமாகக் கொண்டு அவரைப் பின்பற்றும் இளம் எழுத்தாளர்களுக்கும் தளங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களுக்கு விருதுகளையும் அங்கீகாரத்தினையும் வழங்கிய ‘முற்போக்கு' இயக்கங்கள், காந்தியவாதிகள், பதிப்பாளர்கள், அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஷோபாசக்தி, பல பெண்களையும் குயர் மக்களையும் உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும், மோசமாகப் பாதிப்படையச் செய்த தனது நடத்தைகளுக்குப் பொறுப்புக்கூறுவதுடன், இனி இத்தகைய நடத்தைகளில் ஈடுபடுவதை அறவே நிறுத்திக் கொள்ள வேண்டும். ஷோபாசக்தி, தான் எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தைகளில் ஈடுபடமாட்டார் என்பதை தன்னுடன் தொடர்புள்ள கலை இலக்கியச் சமூகத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும் . ஷோபாசக்தியைப் பொறுப்புக்கூறச் செய்வதற்குப் பதிலாக, அவரது முறையற்ற நடத்தையினைச் சாத்தியப்படுத்திய அவரது அனைத்து நட்புசக்திகளிடமும் தமது செயற்பாடுகள் குறித்துச் சிந்திக்குமாறு வலியுறுத்துகிறோம். ஷோபாசக்தியுடன் இயங்கும் அனைத்து அமைப்புக்களையும், தெரிந்தும் தெரியாமலும் அவரது இத்தகைய செயற்பாடுகளுக்கு உடந்தையாயிருந்தமைக்காக பொறுப்புக் கூற வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஷோபாசக்தியால் பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்களையும் குயர் சமூகத்தினரையும் கருத்தில் கொள்ளாத அமைப்புக்களிடமும் நபர்களிடமும் (கலைஞர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள்) இப்பெண்கள் மற்றும் குயர் சமூகத்தினரை நீண்டகாலமாக நச்சுச் சூழலில் நீடிக்கச் செய்தமை தொடர்பிலும், அதன் விளைவாக அவர்கள் பங்களிப்புச் செய்து கொண்டிருந்த துறைக்கும், இயக்கங்களுக்கும் ஏற்படுத்திய தீங்கு தொடர்பிலும் சிந்திக்குமாறு வலியுறுத்துகிறோம். அநீதியின் மீதான மெளனமும், பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்குரல்வளைகளின் மீது அலட்சியமாக நடந்து செல்லும் போக்கும் சுரண்டலுக்கும் வன்முறைக்கும் துணை நிற்கும் அநீதியான சூழலில், எதிர்ப்பு ஒன்று தான் மனிதத்தின் மனசாட்சியாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கை அதன் எதிரொலி. In Solidarity Ambai (Writer/Mumbai, India) Ajitha K (Feminist Activist, President - Anweshi/Kozhikode, Kerala) Ajitha (Youth Leader/Vallamai, Jaffna, Sri Lanka) Amala (Advocate/Delhi, India) Anandhi Suresh (Feminist Activist, Switzerland) Ananya ( Researcher and Artist/Delhi, India) Angel Queentus (LGBTQ+ Activist/Sri Lanka) Anjana (Feminist Activist/Britain) Anitha Vinayagam (Women and Queer Rights Activist and Entrepreneur/Chennai, India) Ardra Sivan V (Member - Dravidian Political Society/Trivandrum/India) Arpita Banerjee (Performing Artist and Writer/Mumbai) Asha Achi Joseph (Film Director - Women in Cinema Collective/Kerala, India) Asha Latha (Poet and Translator/Kerala, India) Barathy Sivaraja (Marxist Feminist/Britain) Bina Paul (Film Editor - Women in Cinema Collective/Kerala, India) Bisliya Bhutto (Social Activist/Puttalam, Sri Lanka) Chandra Nalliah (Feminist Activist/Canada) Chinmayi Sriprada (Singer, Voice Actor and Entrepreneur/India) Dhamayanthi (Writer and Filmmaker/ Chennai, India) J Devika (Feminist Scholar and Writer/Kerala, India) Deedi Damodaran (Screenwriter-Women in Cinema Collective/Kerala, India) Deepalakshmi (Techie-Writer-Feminist/Chennai, India) Dhivya Marunthaiah (Political Activist/India) Divya Bharathi (Independent Filmmaker and Advocate/Madurai, India) Divya Gopinath (Actor-Women in Cinema Collective/Kerala, India) Gargi Harithakam (Queer Feminist Activist - Vanaja Collective/ Kerala, India) Glady Angel (Theatre Artist/Canada) Geetha Narayanan (Development Consultant and Researcher/Chennai, India) Harikeerthana (Feminist Activist/Australia) Hemalatha (Feminist Activist/Vallamai, Jaffna, Sri Lanka) Iris Koala (Poet and Translator/Kerala, India) Ithayarani (Feminist Activist/Vizhuthu,Trinco, Sri Lanka) Jamal Hairunnisha (National Co-ordinator, Shakthi Abhiyan/Chennai, India) Jothilakshmi (Advocate/Chennai, India) Juwairiya Mohideen (Feminist Activist/Puttalam, Sri Lanka) Kaitlin Emmanuel (Writer and Researcher/Toronto, Canada) Kala Sriranjan (Writer/London, Britain) Kalpradah (Filmmaker-Lyricist-Screenwriter/Chennai, India) Kamaleshwary L(Activist/Colombo, Sri Lanka) Kanthimathi (Advocate and Social worker/Chennai, India) Kavitha Krishnan (Feminist Activist and Writer/Delhi, India) Kavitha Muralidharan (Journalist/Chennai, India) Kounthini R (Feminist Activist-Vallamai/Jaffna, Sri Lanka) Kutti Revathi(Poet, Filmmaker/Chennai, India) Lareena Abdul Haq (Senior Lecturer-University of Sri Lanka/ Belihuloya, Sri Lanka) Leena Manimekalai (Poet and Filmmaker/India, Canada) Leena Yadav (Filmmaker/Mumbai, India) Leeny Elango (Poet, Researcher and Activist/Chennai, India) Luxmy Sivasamboo (Feminist Activist, France) Dr. Marie Drath (Literary Scholar and Activist/Switzerland) Malathi Maithri (Poet, Publisher-Anangu/Pondicherry, India) Meera Sanghamitra (Activist, All India Feminist Alliance, India) Menaka (Feminist Activist/Switzerland) Mekha Rajan (Actor - Film and Theatre/Chennai/India) Mohana Dharshini (Political Activist/Sri Lanka) Moumita Alam (Poet and Essayist/West Bengal, India) Nalini Ratnarajah (Women’s Human Rights Defender/ Batticaloa, Sri Lanka) Nedra Rodrigo (Writer - Translator - Activist/Canada) Negha (Actor and Activist/Chennai, India) Neeruja (Feminist Activist - Thozhamai V/Jaffna, Sri Lanka) Nithika S (Political Activist - Semmugam/Jaffna, Sri Lanka) Nishtha Jain (Independent Filmmaker/Mumbai, India) Nivedita Louis (Co-Founder - Her Stories/Chennai, India) Nivetha Krishnan (Feminist, Entrepreneur/Chennai, India) Niventhini S (Feminist Activist - Vallamai/Jaffna, Sri Lanka) Niyanthini Kadirgramar (PhD Candidate/USA) Padma Prabha (Feminist Activist/Davos, Switzerland) Ponni A (Independent Feminist Historian/Sri Lanka) Ponni Brinda (Feminist Researcher Consultant/India) Poorani (Co-Founder - Penn Collective/Chennai, India) Pranjali (Researcher/Delhi, India) Pritha Mahanti (Independent Writer and Editor/West Bengal, India) Priya Kanniah (Activist, Entrepreneur/Chennai, India) Priya Tharmaseelan (Photographer/Canada) Priyatharshini Vincentperis (Independent Journalist/Canada) Ramya Sampathkumar (Member-Dravidian Political Society/Bangalore/India) Ratneswari (Feminist Activist-Aanaikkottai Women’s Organisation/Sri Lanka) Rachel Walter (Political Activist/India) Rajany Rajeshwary (Consultant -Thozhamai V/Jaffna, Sri Lanka) Ranjani Krishnankumar (Writer and Entrepreneur/Chennai, India) Revathy (Film Director and Actor - Women in Cinema Collective/India) Rima Kallingal (Film Producer and Actor - Women in Cinema Collective/Kerala, India) Sabaritha (Social Worker/Chennai, India) Sathiya R (Student/Trinco, Sri Lanka) Selvi ( Co-ordinator - Manithi/ Chennai, India) Shabnam Hashmi (Social Activist, Founder - ANHAD/New Delhi, India) Shamini V (Feminist Activist, Thozhamai V/Jaffna, Sri Lanka) Sharmila Sagara (Professor - Anant National University/Gujarat, India) Sheeva Dubey (National Alliance For People’s Movements/Pune, India) Shobhitha Krishnamoorthy (Writer/Chennai, India) Shreen Abdul Saroor (Co-Founder, Women’s Action Network/Sri Lanka) Shydhah Zara Nizamudeen (Human Rights Activists/Mount Lavinia, Sri Lanka) Siva Malathy (Feminist Activist/Sri Lanka) Sreejaya Radhakrishnan (Screenwriter/Mumbai, India) Subanya Sivajothy (Writer and Librarian/Toronto, Canada) Subhathra Devi ( Vice President - Rajiv Gandhi Panjayati Raj Sangathan/Chennai, India) Sutha Selvarajah (HIV Peer Educator/Vavuniya, Sri Lanka) Sumathy Karupy (Writer & Filmmaker/Toronto, Canada) Suganthi (Feminist Activist, Vallamai/Sri Lanka) Dr. Tadchaigeni Panchalingam (Health Educator/USA) Tamil Arts Collective, Canada Tamil Feminist Collective, Canada Tamilini (Artist/Canada) Tangella Madhavi (Independent Filmmaker/Kolkata, India) Tharmika (Lawyer/ Sri Lanka Dr. Tanuja Thurairajah (Feminist Geographer and Human Rights Enthusiast/Sri Lanka, Switzerland) Uma Shanika (Feminist Activist/Germany) Uma Makheswari K (Tamil Professor/Pollachi, India) Usha P.E (Feminist Activist/Trivandrum/Kerala, India) Utpala (Activist/Allahabad, India) Vanaja Kanthiah (Feminist Activist/ Paris, France) Vasuki (Social Activist/Toronto, Canada) Vigy Nalliah (Feminist Activist/France) Viji Murugaiyah (Community Organiser/Toronto, Canada) Vinta Nanda (Filmmaker, Writer and Editor of The Daily Eye/Mumbai, India)zs Vinothini Balasubramaniam (Journalist, Social Activist/Colombo, Sri Lanka) Vijayalakshmi T (Professor, Writer and Activist/Kerala, India) Vithursha Kamaleswaran (Feminist Activist, Sri Lanka) Yalini (Writer/Canada) https://adhocfeministcollective.blogspot.com/2025/04/blog-post.html?fbclid=IwY2xjawJrym5leHRuA2FlbQIxMAABHrO5zkyAg8Lqvk5qeMB-GE5wQXRyh4WIx9tIWN_Zgq-d8qZvSWzp1LNNFV9v_aem_tFqfG9aOf5jZuHyAXIE3Ag1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1 point
-
விடுமுறையே இல்லாமல் தாய் வேலை செய்கிறாள்
1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது அல்லவோ போட்டி. நேற்று அப்பிடி ஒரு போட்டி என்றால், இன்று இப்படி. முதலாவது சுப்பர் ஓவர். டெல்லி வென்றது. நமக்கு முட்டை வரக்கூடாது என்று எவ்வளவு கஸ்டப்பட்டு வெல்லுறாங்கள். நம்மேல அவ்வளவு அன்பா.1 point
-
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி
இது போலீசாரின் காட்டுமிராண்டித் தனமான செயல். பாதிக்கப்பட்ட சிறுவர்களை மேலும் துன்புறுத்திய போலீஸ் மீது மனித உரிமை அமைப்புகளிடம் முறைப்பாடு செய்வதன் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தான் ஒரு தடவை விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட விடயத்தையே பாராளுமன்றம் வரை கொண்டு சென்று மூக்கால் அழுத சிறிதரன் குறைந்தபட்சம் கண்டன அறிக்கை ஒன்றையாவது உடனடியாக வெளியிட வேண்டும்.1 point
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
புலவர்... இங்கு சுமந்திரனுக்கு முட்டுக் கொடுப்பதற்காக... ஜஸ்ரின் கோமாவில் இருந்து வந்தவர் போல், நடிக்கின்றார். இப்படி இவர் நடிப்பது, இது முதல் முறையும் அல்ல. நன்றாக தெரிந்து கொண்டே... பித்தலாட்டம் செய்வது அவரது குணாதிசயம். அதனால் அவருக்கு பதில் எழுதி விளங்கப் படுத்துவது, நேர வீண் விரயம் என்பதால், இங்கு ஒரு சிலருக்கு , நான் பதில் எழுதி மினைக்கெடுவதில்லை. ஆர்வம் இருந்தால்... 2015´ம் ஆண்டு வந்த செய்திகளை புரட்டிப் பார்க்கட்டும்.1 point
-
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
பாலியல் குற்றவாளி, பாலியல் குற்றம் சாட்டப் பட்டவர் ஆகியோரின் பக்கம் பலகாலம் advocate ஆக இருந்து விட்டு, திடீரென்று குற்றஞ் சாட்டுவோரின் பக்கம் பாய்வதும் "பெரிய பாய்ச்சல்" தான்😎!1 point
-
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி
நசுக்கிடாக்கள்ளன் பார்சிறி இதை நசுக்கி அமுக்கிடலாம் எண்டு பார்த்தா சுமந்திரன் குறுக்கமறுக்க ஓடி காரியத்தை கெடுத்திட்டாராம் எண்டு ஊரில பேசிக்கொள்கிறார்கள்..1 point
-
கருத்து படங்கள்
1 pointஇதுக்கெல்லாம் வருத்தப்பட்டு உடம்பை கெடுத்துக்க வேண்டாம் . ........ விரும்பினால் வெளிநாட்டுக் கருத்தோவியம் கூட போடலாம் தப்பில்லை .......! 😂1 point
-
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி
சுமந்திரன் நடவடிக்கையாவது எடுத்துள்ளார்… மிக்சர் மாமா பார் சிறி…. ஆழ்ந்த உறக்கத்தில் 🤣1 point
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
இப்போ பங்களாதேசில் நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலமையில் அமைந்ததுள்ள இடைக்கால அரசும் இப்படி பட்ட ஒரு technocratic அரசாங்கம் என சொல்லலாம். இதோடு தொடர்புடைய ஒரு விடயம். பிரித்தானிய அரச சேவையில் இதை - purdah என்பார்கள். நமக்கு நன்கு தெரிந்த “மூடியநிலை” என்ற அர்த்தம் தரும் “பர்தா” என்ற அரேபிய சொல்லில் இருந்து வருகிறது. தேர்தல் அறிவித்த நாள்- அடுத்த அரசு பதவி ஏற்கும் நாள் வரையான காலம் - பேர்டா காலம். இந்த காலத்தில் ஆளும் கட்சியோ, அதிகாரிகளோ எந்த புது திட்ட அறிவிப்பையும் வெளியிடக்கூடாது. புது நல திட்டங்களை தொடங்க கூடாது. ஏதாவது புதிதாக செய்ய போவதாயின் அதை தமது தேர்தல் அறிக்கையில்தான் ஆளும் கட்சி சொல்ல வேண்டும். இதே நடைமுறை இந்தியாவிலும் உண்டு. தேர்தல் அறிவிக்க முன் மாநில, மத்திய அரசுகள் அவசர அவசரமாக நல திட்டங்களை அறிவிப்பதும், எதிர் கட்சிகள் புலம்புவதும் எப்போதும் நடக்கும். இதுவும் கூட திட்டங்கள் பற்றிய முடிவுகளை எடுப்பது அரசியல்வாதிகளே/கட்சிகளே என ஐயம் திரிபற காட்டி நிற்கிறது.1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரகானே ஏன் நடப்புச் செய்தார் என்று தெரியேல. விக்கட்டுக்கு வெளியால விழுந்த பந்து. அந்த ஆட்டமிழப்பு, எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. மொயின் அலி இப்போ பழைய ஆள் இல்லை. கனகாலமா, சிறப்பா விளையாடுவதும் இல்லை. அதோட நான்கு வெளிநாட்டு வீரர்களைத்தான் தெரிவு செய்யலாம். மொயின் வந்தாலும் எந்த இடத்தில விளையாட விடுவது. ரசலுக்காகத்தான் அவரைக் கொண்டு வரலாம். ஆனால் அணி ரசலை நம்புவது போல்தான் உள்ளது. சுனில் இருக்கிறபடியால், சுழல் பந்துக்கும் மொயின் தேவையில்லை. அவரின் தெரிவு அணி ஒழுங்கில் சிக்கலைத்தான் கொண்டுவரும். அதிர்ஷ்ட தேவதை அவர் என்ற வகையில கொண்டு வந்தாலும், எப்படி அணியில் பொருந்துவார் என்பதுதான் கேள்வி.1 point
-
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
ஷோபாசக்தி பற்றி கண்டண அறிக்கையை முன்னின்று தயாரித்தவர் அவருடன் உறவில் இருந்த பெண்ணியவாதி லீனா மணிமேகலை என்றுதான் தெரிகின்றது. சீமான் மீது விஜயலட்சுமி வழக்குப் போட்டதுபோல் ஏன் பாதிக்கப்பட்டதாகக் கூறுபவர்கள் வழக்கைப் போடமுயலவில்லை? கேஸ் நிற்காது என்பதனால்தான் இருக்கும்😜 கையெழுத்து வைத்தவர்கள் கேட்டவரின் “ முகத்திற்காக” வைத்திருக்கலாம்! ஷோபாசக்திக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவரின் நீண்ட பதிலில் தெளிவாகத்தான் இருக்கின்றது.. அவருக்கு பல்லிருக்கு பக்கோடா சாப்பிடுகின்றார்.. பக்கோடா மொறுமொறு இல்லாவிட்டால் வேறு பிராண்ட்டுக்குப் போகின்றார்!!1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஜேர்மனியில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உள்ள புலி ஒன்று, மூன்று முட்டைகளை இட்ட அதிசயம். 😮 இதனை நம்பாதவர்கள், இரத்தம் கக்கி சாவார்கள். 😂1 point
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point
- நானும் ஊர்க் காணியும்
1 pointஒன்று வரி செலுத்துங்கள், இல்லையேல் உடலை வருத்துங்கள். எப்படியென்றாலும் உங்கள் உடல் உழைத்தாலேயே வரியும் செலுத்த முடியும். புல் பிடுங்குவது ஒரு பொழுது போக்கு, உடற்பயிற்சி. ஒரு உழவாரம் வாங்குங்கள், முதலில் ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் முப்பது நிமிடம் செருக்குங்கள், பின் நீங்களாகவே உங்களையறியாமல் நேரம் போவது தெரியாமல் செருக்குவீர்கள். அல்லது அயலில் யாராவது மாடு வைத்திருந்தால் செருக்கி எடுக்கும்படி சொல்லுங்கள். அதுவும் இல்லையென்றால், உழுது விட்டு புல்லை வேரோடு அரித்து எடுத்து எரித்து விடுங்கள்.1 point- டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய சிங்கப்பூர் ஊழியர்!
என்ன ஒரு நேர்த்தி, பாதணியால் உரசுவதுபோல் இருக்கு ......... ஆனால் எளிமையாயும் இருக்கு .......... !1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நந்தன் நம்முடைய ஆள் என்பதை பொதுஜனம் மறக்கக் கூடாது . .......... ! 😂1 point- நானும் ஊர்க் காணியும்
1 pointமுப்பது ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்துகொண்டு நாற்பது ஆண்டுகளாகக் குடும்பத்துக்கு உழைத்துக் களைத்து அங்கு போய் நிம்மதியாக இருப்போம் என்றால் எல்லாரும் என்னை புல் பிடுங்கச் சொல்கிறீர்கள், மண்வெட்டி பிடிக்கச் சொல்கிறீர்கள். என்ன நியாயம் இது 😃 இலங்கையில் இப்பொழுது இந்தியன் இயந்திரங்கள் இறக்குமதி செய்திருக்கின்றனர் என்று கேள்விப்பட்டேன். சைனாவின் பொருட்களும் இருக்கலாம். இம்முறை செல்லும்போது விசாரிக்கவேண்டும். இங்கிருந்து கொண்டுபோகநிறையச் செலவு. இந்தியாவிலும் நிறைய இலகுவான முறையில் இயங்கும் இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். நாம் சென்று அல்லது ஓடர் செய்வது என்றால் அதிக வரி செலுத்தவேண்டி வரும் .1 point- "மே 2009 கொடூரங்களை நாங்கள் நினைவில் கொள்கின்றோம்" - பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன்
1 point"மே 2009 கொடூரங்களைநாங்கள் நினைவில் கொள்கின்றோம், நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் - நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது"- பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் Published By: RAJEEBAN 16 APR, 2025 | 10:24 AM முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் - நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நாங்கள் தமிழ் புதுவருடத்தினை கொண்டாடும் இந்த தருணத்தில் பிரிட்டனிலும்; உலகெங்கிலும் உள்ள தமிழர்களிற்கு எனர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் - இது புதிய ஆரம்பங்கள் பிரதிபலிப்புகள் மற்றும் நம்பிக்கைகளிற்கான தருணம்.மேலும் இங்கிலாந்து முழுவதிலும் உள்ள தமிழ் சமூகத்திற்காக பரப்புரை செய்வதற்கான எனது அர்ப்பணிப்பை மீண்டும் புதுப்பிப்பதற்கான ஒரு தருணம். தமிழ் பாரம்பரியத்தின் முதல் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்,தமிழ் புத்தாண்டு தனிப்பட்ட அர்த்தத்தை கொண்டுள்ளது. எங்களது சமூகம் ஒரு பெருமை மிக்க சமூகம்,வலிமை மற்றும் மீள் எழுச்சியின் கதை. பல குடும்பங்களை போல எனது பெற்றோர்கள் பாதுகாப்பை தேடி இலங்கையிலிருந்து தப்பிவெளியேறினார்கள்,வலிமை தியாகம் மற்றும் உறுதியுடன்,புதிய நாட்டில் வாழ்க்கையை உருவாக்கிய அவர்களின் கதை,பிரிட்டனின் கதையின் ஒரு பகுதியாகும். இன்று அவர்களின் மகளாக உங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர்களின் நம்பிக்கையையும் உங்களின் நம்பிக்கையும் நான் நாடாளுமன்றத்தில் சுமக்கின்றேன். கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டது முதல் அரசாங்கத்தில் எங்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நான் பாடுபட்டிருக்கின்றேன். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் எனது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக,இலங்கையில் போர்குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக மாக்னி;ட்ஸ்கி பாணி தடைகளை விதிக்கவேண்டும் என நான் அழைப்பு விடுத்தேன். அன்றிலிருந்து இந்த விடயம் தொடர்பில் செயற்படுவதை நான் நிறுத்தவில்லை. 15 துயரமான வருடங்களிற்கு பின்னர் தொழில்கட்சி இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு காரணமான இலங்கை இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு எதிராக மார்ச் மாதம் பிரிட்டிஸ் அரசாங்கம் தடைகளை விதித்தது.இது நீதிக்கான நீண்டகாலமாக காத்திருந்த பல குடும்பங்களிற்கு மிக முக்கியமானதொரு தருணம். ஆனால் நீதி என்பது ஒரு முறை மாத்திரம் நடக்கும் நிகழ்வல்ல,நாம் தொடர்ந்து செயற்படவேண்டும்,ஐநாவின் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைக்கு ஏற்ப இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என நான் அழைப்பு விடுத்துள்ளேன். மாவீரர் தினத்தன்று வெளிவிவகார குழுவின் அமர்வில் இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்கு நேரடியாக கொண்டுசென்றேன்.நீதி உண்மை பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நான் உறுதியாக நம்புவதனால் நான் இதனை செய்தேன். இவை அருவமான கொள்கைகள் இல்லை,தமிழ் குடும்பங்களை பொறுத்தவரை இவை ஆழமானவை தனிப்பட்டவை. மே 2009 கொடுரங்களை நாங்கள் நினைவில் கொள்கின்றோம்,மருத்துவமனைகள் மீது எறிகணை தாக்குதல்கள்,'பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்டவைகள் . காணமல்போன ஆயிரக்கணக்கானோர். மனித குலத்தின் மிகமோசமானவற்றை எதிர்கொண்டு தப்பிய தலைமுறை இன்னமும் சுமக்கும் அதிர்ச்சிகள் காயங்கள். நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் - நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது. பிரிட்டனில் நான், ஆயிரம்நாட்களிற்கு மேல் டியாகோ கார்சியாவில் சிக்குண்டிருந்த தமிழர்கள் உட்பட தமிழ் அகதிகளிற்காக குரல்கொடுத்துள்ளேன். முன்னைய கென்சவேர்ட்டிவ் அரசாங்கத்தின் கீழ் அவர்கள் முட்டுக்கட்டை நிலையில் விடப்பட்டனர். ஆனால் தொடர்ச்சியான பரப்புரைகளின் பின்னர் அவர்களிற்கு பிரிட்டனில் பாதுகாப்பான புகலிடம்வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/2120941 point- கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
1 pointஇரண்டுமே சாக்கடை. ஓரு சாக்கடை நீரை பூட்டினாலும் மற்ற சாக்கடையில் அழுக்கு நீர் தேவையான அளவு இருக்கும். அழுக்கு நீர் பற்றாக்குறையாக இருக்கும் போது இரண்டு சாக்கடைகளுக்கும் இடையிலான கதவை அடிக்கடி திறந்து பின்னர் பூட்டுவது வழமை.1 point- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
அப்போது அதுதான் உண்மை என்று கட்டிவைத்து அடித்து சொன்னாலும் யாரும் நம்ப போவதில்லை ரஜனி தினகரணமே யை தாம்தான் சுட்டொம் இப்படி திடடம் வகுத்து இன்னார்தான் இந்த துப்பாக்கியால்தான் சுட்டொம் என்று அவர்களே எழுதிய போதுகூட இன்னமும் 90 வீதமானவர்கள் நம்புவதில்லை. அது புலிகள்தான் சுடடார்கள் என்று இந்த யாழ்களத்திலேயே 5-6 திரி ஓடி இருக்கிறது. இனியும் அது முடியாது ...... தற்போதைய யாழ்களத்துக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்றே எண்ணுகிறேன் அது நிறைவேற வேண்டும் என்றால் சின்னத்திரை நாடகங்கள்போல ரஜனி திரி இனியும் திறக்கப்படும் என்றே நம்புகிறேன்1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ட்றம்பரின் ஊழித்தாண்டவம்
1 pointஅமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல, மேற்கு நாடுகளில் பிறந்து வாழும் மக்களுக்கும், வந்தேறி வாழும் மக்களுக்கும் கூட அறியாமை தான் பெரும் பிரச்சினை. அந்த அறியாமையில், "வரலாறு அறியாமை" என்ற பகுதி தான் ட்ரம்ப் மீண்டும் வரக் காரணம். ஆனால், கோசான் ஒரு தடவை சொன்னது போன்ற "பெரும் சேதமுடனான வெற்றி-pyrrhic victory" ட்ரம்ப் விடயத்தில் எங்களுக்குக் கிடைக்க வேண்டுமென விரும்புகிறேன்: வாக்குப் போட்ட முஸ்லிம் அமெரிக்கர்களின் பலஸ்தீன கூட்டாளிகளுக்கு ஏற்கனவே இந்த "வெற்றிக் கனி" கிடைத்து விட்டது. அதே போல, பச்சை மட்டையில் காத்திருக்கும் இந்தியர்களுக்கும் வெற்றிக் கனி நெருங்கி வருகிறது. சிறிலங்கன் அமெரிக்கன் ட்ரம்ப் விசிறிகளுக்கும் நிச்சயம் சில விடயங்கள் நடக்கும், ஆவலுடன் எதிர் பார்த்திருக்கிறேன்😎!1 point- யாழில் வீதியோரத்தில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு
1 pointஉண்மையாவா?1 point- யாழில் வீதியோரத்தில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு
1 pointஆசை தோசை அப்பளம் வடை...... இப்ப இந்த மொடேர்ண் வாழ்க்கையில 95தான் வயோதிப வயசாம். ஆகவே 👈👉👆👇 🙂1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் @suvy சுவிக்கு வாழ்த்துக்கள்.1 point- 10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
இதன் படி பார்த்தால் "மாநில அரசு" என்பது எங்கள் ஊர் மாநகர/நகர சபை போல "வாய்க்கால் தூரும்" அமைப்புகள் போல படுகிறதே? இன்னொரு சந்தேகம்: இந்த "வாய்க்கால் தூரும்" தமிழ் நாட்டு அரசின் தலைமையை யார் ஏற்றாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றாமல் ஈழத்தமிழர் பற்றியகொள்கைகளும் மாறாதே? பிறகேன் மொக்குத் தனமாக நடந்து கொள்ளும் ஒரு சாக்கடை தமிழக அரசியல் வாதியை எங்கள் ஆட்கள் முட்டுக் கொடுத்துத் தாங்குகிறார்கள்😂?1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 31வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும்தான் 20 ஓட்டங்களுக்கு மேல் வேகமாக அடித்தாடி எடுத்திருந்தனர். எனினும் எல்லோரும் விக்கெட்டுகளை விரைவாகப் பறிகொடுத்தமையால் 15.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களும் குறைந்த இலக்கை அடைய நிலைத்து ஆடாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் வெல்லும் வாய்ப்பு இருந்தும் சகல விக்கெட்டுகளையும் 15.1 ஓவர்களிலேயே 95 ஓட்டங்களுக்கு இழந்து வாய்ப்பைத் தவறவிட்டனர். 95 ஓட்டங்கள் தொடரின் மிகக் குறைந்த ஓட்டங்களாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. யுவேந்திரா சாஹல் 4 விக்கெட்டுகளையும் மார்கோ ஜன்சென் 3 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர். முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த @செம்பாட்டான் க்கும் @ஈழப்பிரியன் க்கும் மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:1 point- மலரும் நினைவுகள் ..
1 pointபழைய சோறு இப்படி சட்டிக்குள் அம்மாவோ அக்காவோ குழைக்க ஆளுக்கு ஒரு திரனை கையில் அல்லது பூவரசம் இலையில் வாங்கி சாப்பிட அந்தமாதிரி இருக்கும் . ........! 😂1 point- ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
உறவே, தாயகத்தில் என்ன நிலையோ எனக்கு முழுவதும் தெரியாது. ஆனால், புலம் வாழ் தீவிர தேசியர்களிடையே எல்லாம் இன்னும் தாயகத்தில் 30 வருடங்கள் முன்பு போலவே இருக்கிறது: காசுக்கும் (அல்லது அது இருப்பது போன்ற பகட்டிற்கும்) முதல் மரியாதை, ஆண்-பெண் சமத்துவமின்மை, சாதி, சில சூழ்நிலைகளில் சிறு பான்மை மதங்கள் மீதான சகிப்புத் தன்மையின்மை, வந்த இடத்தின் முற்போக்கான பழக்கங்களை வெறுத்தல் (இதனால் சிலர் homophobic, transphobic ஆகவும் மாறி ட்ரம்ப் போன்றவர்களை ஆதரித்தல்!)- இப்படியானவர்கள் புலத்தில் தீவிர தமிழ் தேசியம் பேசுவதே ஒரு status symbol என்று நான் ஐயம் கொள்கிறேன்.1 point- 10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கேரளாவில் படிப்பறிவு வீதம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே (சம்ஸ்தானங்கள்) அதிகம். சுதந்திரத்துக்கு முந்தைய மெட்டிராஸ் பிரசெடென்சியில், இன்றைய கேரள பகுதிகள் இலங்கை போல வழமான இடமாகவும், அதிகாரிகள், ஆசிரியர்களை உருவாக்கும் இடமாகவும், இன்றைய தமிழ்நாட்டின், குறிப்பாக மத்திய, தென் தமிழ்நாட்டின் பகுதிகள் கூலி தொழிலாளர்க்ளை உருவாக்கும் இடமாகவும் இருந்தன. இலங்கைக்கு பிரிட்டிஷ் காலத்தில் வந்த மலையாளிகள் - ஆசிரியர்கள், கங்காணிகள், குறைந்தது டீ க்கடை போடுபவர்களாக வந்தனர் - ஆனால் தமிழர் தொழிலாளராகவே வந்தனர். இது கேரவாவிற்கு உள்ள நூற்றாண்டு கால early advantage. இதனால் கல்வி, பெண்கல்வி, சிசுக்கொலை என தமிழ் நாட்டை பீடித்துள்ள பலது கேரளாவில் இருக்கவில்லை. தமிழ்நாட்டை அதன் பிற்போக்குதனத்தில் இருந்து விடுவிக்க போராடியது போல் கேரளாவில் தேவைபடவில்லை. ஆகவே அங்கு கல்வியில், சுகாதாரத்தில், மாநில அரசின் கவனம் குவிவது இலகுவாகியது. பிற்போக்குதனத்தில் சுதந்திர்ந்த்தின் பின்னான தமிழ்நாடு ஆந்திரா, ஒரிசாவை போலவே இருந்தது. கேரளா அப்படி அல்ல. எண்ணிகை. கேரளாவில் சனத்தொகை தமிழ் நாட்டின் பாதி. கல்வியறிவு வித்தியாசம், 93% உம் 80% உம். இன்னும் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று கேரள கம்யூனிச, காங்கிரஸ் அரசுகள் போல ஆரம்பம் முதலே தமிழ்நாட்டு அரசுகள் செயல்படவில்லை. காமராஜர், 60 களின் பின் திராவிட கட்சிகள்தான் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தன. ராஜாஜி குலக்கல்வி வேண்டும் என்றார். அதே போல் கேரள கட்சிகள் அளவுக்கு, திராவிட கட்சிகள் இந்த விடயத்தில் தீவிர முனைப்பு காட்டவில்லை என்பதும் உண்மை. ஆனால் தனியே எழுத படிக்க தெரிந்த கேரளாவை விட தமிழ்நாட்டிலும், கர்னாநடகாவிலும் கல்வியில், தொழில் கல்வியில், ஐ.டி. யில் சிறப்பு தேர்ச்சி உள்ளதும் உண்மை. உயர் கல்வியில் தமிழ்நாடு முன்னேதான் நிற்கிறது. சுந்தர் பிச்சைகள், சிவன்கள் தமிழ்நாட்டில் வருவது போல் கேரளாவில் இல்லை. அதே போல் industrialization தொழில்மயமாதலில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் என நினைக்கிறேன். கச்சதீவு ஒரு மேட்டரே இல்லை. அது தமிழக அரசியல்வாதிகள் மாறி மாறி உதைக்கும் புட்போல். இதை நாமும் தூக்கி கொண்டு திரிவதுதான் எல்லாத்தையும் வெண்ட பகிடி. தமிழக மீனவர் இலங்கை நேவியிடம் அடி வாங்குவது கச்சதீவிலோ அதன் அருகிலோ அல்ல, நெடுந்தீவுக்கு அருகிலும், வல்வெட்டிதுறைக்கு அருகிலும். கச்சதீவு இந்தியாவிடம் இருந்தாலும் இது இப்படித்தான் இருக்கும்.1 point- நம்ம பரிமளம்
1 pointஈழத்திலும் சரி... தமிழகத்திலும் சரி... "பரிமளம்" என்ற பெயரில் இருப்பவர்கள் எல்லாம், புருசன்காரனுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றார்கள். 🤣 @ராசவன்னியன் , @சுப.சோமசுந்தரம், @புரட்சிகர தமிழ்தேசியன் 😂1 point- கருத்து படங்கள்
1 point1 point- சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!
U turn - டிரம்ப் ? கொக்கா? தலிவா உன்னிடம் இன்னும் அதிகம் ஏதிர்பார்க்கின்றோம் 😂😃1 point- நானும் ஊர்க் காணியும்
1 pointஇந்தப் படம் அருமை...இதிலை ஒரு காவியத்தலைவியின் சாயலும் அடிக்குது.....நான் நினைத்தது சரிதானே கவி அய்யா கதைஞரர் ...அம்மா ..உண்மையை சுவைபட கிராமிய ரீதியில் சொல்கின்றீர்கள்.1 point- மூன்று கோழிக்குஞ்சுகள்
1 pointமூன்று கோழிக்குஞ்சுகள் -------------------------------------- 'பாடசாலை நாட்களில் உனக்கு எத்தனை பெண் நண்பிகள் இருந்தார்கள்?' 'அப்படி ஒருவருமே இருக்கவில்லை............' கொஞ்சம் திடுக்கிட்ட அவன் என்னைக் கூர்ந்து பார்த்தான். 'ஏன்.......... உன்னுடைய வகுப்பில் பெண் பிள்ளைகள் எவரும் படிக்கவில்லையா............' 'இல்லை.......நான் ஒரு ஆண்கள் பள்ளியில் படித்தேன்.' 'அது என்ன ஆண்கள் பள்ளி என்றால்...........' 'ஆண்கள் பள்ளி என்றால் அங்கே ஆண்பிள்ளைகள் மட்டுமே படிப்பார்கள். பெண்கள் இருக்கமாட்டார்கள்...........' அப்படியான பாடசாலைகளும் உலகில் இருக்கின்றனவா என்று கேட்டுவிட்டு, அவன் இதுவரை கேட்டிராத ஒரு புது நகைச்சுவைக்கு சிரிப்பது போல சத்தமாகச் சிரித்தான். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த எல்லோரும் திரும்பி எங்களையே பார்த்தனர். எனக்குத் தான் அது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அவன் அதைப் பொருட்படுத்தவே இல்லை. அவன் சிரித்து முடித்து விட்டு, 'பெண்கள் பாடசாலை என்றும் உங்கள் நாட்டில் இருக்கின்றதா............' என்று கேட்டான். இன்னும் அதிகமாகச் சிரிப்பானோ, நிலத்தில் விழுந்து உருளப் போகிறானோ என்ற தயக்கத்தில் பதில் சொல்லாமல் இருந்தேன். ஆனால் அவன் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 'ஆ................. பெண்கள் பாடசாலைகளும் இருக்கின்றன...........' இந்த தடவை அவன் சிரிக்கவில்லை. அவன் கடுமையாக யோசிப்பது தெரிந்தது. நான் அவனுடன் வேலை செய்ய ஆரம்பித்து ஆறு மாதங்களே ஆகியிருந்தன. அவன் கடுமையாக யோசிக்கின்றான் என்பதை என்னால் கண்டுபிடித்துவிடமுடியும். அவன் வேலையில் அடிக்கடி யோசிப்பான். அவன் அவனுடைய நாட்டிலிருக்கும் பல்கலையில் மிகச் சிறப்பான சித்தி பெற்று, பின்னர் மேற்படிப்பிற்காக அமெரிக்கா வந்தவன். அப்படியே இங்கேயே தங்கிவிட்டான். எங்களுடன் வேலை செய்த பலரும் அவன் கொஞ்சம் மந்தமானவன் என்றே நினைத்திருந்தனர். ஆனால் உண்மையில் அவன் ஒரு அதிபுத்திசாலி. ஓரளவு உயரமான அவன் மெல்லிதாக இருந்தான். முதுகு கொஞ்சம் வளைந்து இருந்தது. அதனால் அவனது தோற்றத்தில் ஒரு பலவீனம் தெரிந்தது. அந்தப் பலவீனத் தோற்றத்தை வைத்தே அவனைப் பற்றிய கணிப்புகள் உருவாகி இருந்தன. அவன் தனக்கு தன் நாட்டில் பாடசாலை நாட்களில் ஒரு பெண் நண்பி இருந்ததாகச் சொன்னான். அவர் தான் இன்று உன்னுடைய மனைவியா என்ற என் கேள்வியை காதில் வாங்காதது போல யன்னல்களுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். சிறிய மௌனத்தின் பின், தான் ஒரு கோழிக்குஞ்சு வளர்த்தேன் என்று ஆரம்பித்தான். 'ஒரேயொரு கோழிக் குஞ்சா, ஏன் கூட்டமாக வளர்ப்பது தானே.....' என்று நான் ஆச்சரியப்பட்டேன். அவனுடைய நாட்டில் செல்லப் பிராணியாக ஒன்றே ஒன்றைத்தான் வளர்க்கலாமாம். அவனுடைய பெற்றோர்கள் ஒரு உயர் தொடர்மாடிக் குடியிருப்பில் 25 வது தளத்தில் இருக்கும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். அந்த நாட்களில் அவனுடைய நாட்டில் ஒரு குடும்பத்துக்கு ஒரேயொரு பிள்ளை, ஒரேயொரு செல்லப்பிராணி என்று அந்த அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் கொஞ்சம் சிக்கனமானவை. 25 வது தளத்தில், ஒரு பூட்டிய வீட்டுக்குள் ஒரு கோழிக்குஞ்சு நாள் முழுக்க, அதன் வாழ்க்கை முழுக்க என்ன செய்யும். அவன் பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் கோழிக்குஞ்சை கையில் கொண்டு கீழே வந்துவிடுவான். கோழிக்குஞ்சு அங்கே தரையில் மேயும், சுற்றுத்திரியும். பின்னர் அவனின் பெற்றோர்கள் வேலையால் வரும் நேரத்தில் நால்வரும் ஒன்றாக வீட்டிற்குள் போவார்கள். அவனுடைய பெண் நண்பி பின்னர் ஒரு நாள் அவன் வகுப்பில் இருந்த சிறந்த விளையாட்டு வீரனின் தோழியாக ஆகினார் என்று நான் முன்னர் கேட்ட கேள்விக்கு இப்பொழுது பதில் சொன்னான். நான் ஏற்கனவே அந்தப் பெண்ணை மறந்து விட்டு, அவனின் ஒற்றைக் கோழிக்குஞ்சை பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தேன். 'உன்னுடைய கோழிக்குஞ்சு ஆணா அல்லது பெண்ணா........' என்று கேட்டேன். 'குஞ்சாக இருக்கும் போது எப்படித் தெரியும்..................' நாலு நாட்களிலேயே ஒரு குஞ்சு பேட்டுக்குஞ்சா அல்லது சேவல்க்குஞ்சா என்று தெரிந்துவிடும். ஆனால் ஒரேயொரு குஞ்சை 25 வது மாடியில் வளர்ப்பவர்களுக்கு இந்த அனுபவம் கைவர எத்தனை வருடங்கள் தேவைப்படும் என்று தெரியவில்லை. 'அது வளர்ந்திருக்கும் தானே...............' 'நீ பெண்களுடன் ஒரே வகுப்பில் படிக்கவே இல்லையா................' என்று கேட்டான். கோழிக்குஞ்சுக்கு என்ன ஆகியிருக்கும் என்ற என் நினைப்பை ஓரமாக தள்ளிவிட்டு, பெண்களுடன் ஒரே வகுப்பில் இருந்திருக்கின்றேனா என்று கணக்குப் பார்க்க ஆரம்பித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கின்றேன். ஆனால் அதை எல்லாம் கணக்கில் சேர்க்கமுடியாது. கோழிக்குஞ்சு என்ன குஞ்சு என்று தெரியாமல் அதை வளர்ப்பது போல அந்த சின்ன வகுப்புகள். பின்னர் 11 ம், 12 ம் வகுப்புகளில் தனியார் கல்வி நிலையங்களில் பெண் பிள்ளைகள் இருந்திருக்கின்றார்கள். சமீபத்தில் அவர்களில் ஒருவரை இன்னொரு நாட்டில் ஒரு குடும்ப விழாவில் சந்தித்தேன். அவர் என்னைத் தெரியவே தெரியாது, நாங்கள் ஒன்றாகப் படிக்கவேயில்லை என்று பலர் முன்னிலையில் சொன்னார். இனிமேல் எவரையும் என்னுடன் ஒரே வகுப்பில் படித்ததாக சொல்லுவதில்லை என்ற முடிவை அன்று எடுத்திருந்தேன். பல்கலை வகுப்புகளில் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் முன் வரிசைகளில் இருப்பார்கள். நானும், என் நண்பன் ஒருவனும் எப்போதும் கடைசி வரிசை. அது பருத்தித்துறையும், காலியும் போல. ஒன்றுக்கு இன்னொன்று என்னவென்றே தெரியாது. 'இல்லை..................... நான் பெண்களுடன் படிக்கவேயில்லை..............' அவன் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டான். வெள்ளைச் சோற்றின் மேல் அவித்த பச்சைக் கீரையும், ஏதோ ஒரு அவித்த மாமிசமும் அன்று கொண்டு வந்திருந்தான். அநேக நாட்களில் அப்படித்தான் வெறும் அவியல்களாக மட்டுமே கொண்டுவருவான். 'ஒரு நாள் கோழிக்குஞ்சும், நானும் கீழே போயிருந்த பொழுது, சிறிது நேரத்தில் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது................' அது அப்படியே பெரிய மழையாக கொட்ட ஆரம்பித்தது என்றான். அவன் ஒரு வீட்டின் முன்னால் போய் ஒதுங்கி நின்றிருக்கின்றான். மழை விட்டதும், அவனின் கோழிக்குஞ்சை தேடி ஓடினான். 'மழையில் கோழிக்குஞ்சுகள் என்ன செய்யும்...............' என்று கேட்டான் அவன். 'அவைகள் மழை படாத இடமாக ஒதுங்கும்..............' 'ம்ம்............ நான் எல்லா இடமும் தேடினேன்...............' மீண்டும் யன்னலுக்கு வெளியே பார்த்தான். அவனின் கண்களில் விழுந்த வெளிச்சத்தில் கண்கள் ஈரத்துடன் பளபளத்தன.1 point - நானும் ஊர்க் காணியும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.