Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38756
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20012
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    3054
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/19/25 in Posts

  1. 🤣........ நந்தன் தனி மூர்த்தி ஆகிவிட்டார் அண்ணா.......
  2. எண்பது வயதைக் கடந்த முதியவர் ஒருவர் தம் மனைவியைத் தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் கையைப்பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஆனால், அவரோடு சென்ற அவரின் மனைவியோ அடிக்கடி அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நடக்காமல் நின்றுவிடுவதையும், அந்த முதியவர் அப்பெண்மணியின் கவனத்தைத் திருப்பித் தம்மோடு விடாமல் அழைத்துச் செல்வதையும் தொடர்ந்து கவனித்துவந்தார் அப்பகுதியைச் சேர்ந்த மனிதர் ஒருவர். அவர் ஒருநாள் அந்த முதியவரைப் பார்த்து, “பெரியவரே! உங்கள் மனைவி ஏன் உங்களோடு நடக்காமல் இடையிடையே நின்றுவிடுகிறார்? ஏன் அங்குமிங்கும் மிரண்டு பார்க்கிறார்?” என்று வினா எழுப்பினார். அதற்கு அந்த முதியவர், “தம்பி! என் மனைவி மறதிநோயால் (Alzheimer's disease) பாதிக்கப்பட்டிருக்கிறாள்; அதனால்தான் அவள் இப்படி நடந்துகொள்கிறாள்” என்று பதில் சொன்னார். அதைக்கேட்ட அந்த மனிதர், ”மறதிநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் மனைவிக்கு உங்களையும் அடையாளம் தெரியாதுதானே?” என்று கிண்டலாகக் கேட்கவே, அதனை ஆமோதித்த அந்த முதியவர், ”உண்மைதான்! என் மனைவி நான் அவள் கணவன் என்பதை மறந்து(ம்) பல ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று சொன்னார் சற்று வருத்தத்தோடு. வினாத் தொடுத்தவர் அத்தோடு நிறுத்தவில்லை. ”அப்படியானால் நீங்கள் உங்கள் மனைவியை நடுவழியில் விட்டுச்சென்றாலும் அவர் அதைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை; பின்பு ஏன் நீங்கள் செல்லுமிடமெல்லாம் அவரை விடாது அழைத்துச் செல்கின்றீர்கள்?” என்று நக்கலாகக் கேட்க, எரிச்சலூட்டும் அவ்வினாவைக்கூடச் சிறுபுன்னகையோடு எதிர்கொண்ட அந்த முதியவர், ”தம்பி! என் மனைவிக்கு வேண்டுமானால் என்னை அடையாளம் தெரியாமல் போயிருக்கலாம்; ஆனால், அவள்தான் என் மனைவி என்பதும், என் வாழ்க்கைக்கு இனிமை சேர்த்தவள் அவளே என்பதும் எனக்குத் தெரியுமே” என்று பதிலளித்தார். அதைக்கேட்டதும் வினாத்தொடுத்தவரின் முகம் தொங்கிப்போனது; தம்முடைய பண்பாடற்ற வினாவுக்காக முதியவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினார் அந்த மனிதர். நண்பர்களே, உறவுகள் நமக்குப் பயன்படும் நிலையில் இருக்கும்போது மட்டும் அவர்களிடம் அன்புகாட்டுவதும் இல்லையெனில் தூக்கியெறிந்துவிட்டுச் செல்வதும் மனிதத்தன்மையற்ற செயல்கள். பின்னாளில் அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களிடம் அன்பு காட்டுவதும், கைவிடாது அரவணைப்பதுமே உறவுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை; அதனைத் தம் செயலால் நிரூபித்திருக்கும் அந்த முதியவரைப் போற்றுவோம்!🙏 [About That Street (ATS) எனும் முகநூல் பக்கத்தில் நான் படித்த ஆங்கிலக் கதையின் தமிழாக்கம் இது.] Megala Ramamourty
  3. நலங்கிள்ளி என்று ஒரு மன்னன்..... 😂சங்க காலத்து மன்னன்..... கோவூர் கிழார் என்ற புலவர்😂 அவனை மட்டுமே பின்தொடர்ந்து..... அவன் புகழ் பாடி வந்தார்..... ஒருமுறை மந்திரி ஒருவர் கேட்ட கேள்விக்கு..... கிழார் , நான் நலங்கிள்ளி கூட்டத்துக் கலைஞன்....... பிறரைப் பாடிப் பரிசில் பெறுவதை விரும்பாதவன்........... அவனை மட்டுமே பாடுவேன். “அவன் தாள் வாழ்க”. என்று மட்டுமே பதில் கூறினார் அது போல இங்கே எங்கள் புலவர் முதல்வர் நந்தனாரையே பின்தொடர்வது அவருடைய புகழ் பாட என்பதே அன்றி வேறொன்றுமல்ல😇 வாழ்க முதல்வர் புகழ்
  4. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் எவரும் அரைச் சதங்கள் அடிக்காவிட்டாலும் வேகமாக அடித்தாடியதால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ஓட்டங்களை எடுத்தது. அவர்கள் அடித்த வேகத்திற்கு இன்னும் 20 - 30 ஓட்டங்கள் கூட எடுத்திருக்க வாய்ப்பிருந்தது, ஆனால் இறுக்கமான இறுதி ஓவர்களினால் அதிக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களான சாய் சுதர்சன், ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்கள் எடுத்த ஜொஸ் பட்லர் ஆகியோரின் மிகவேகமான ஆட்டத்தால் வெற்றி இலக்கை நோக்கி விரைவாக முன்னேறி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்களான எய்டன் மார்க்கம், ஆயுஷ் படோனி ஆகியோரின் மின்னல் வேக அரைச் சதங்களுடனும் அப்துல் சமட்டின் நான்கு சிக்ஸர்களின் உதவியுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ஐபிஎல் தொடரில் உள்நுழைந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வேகமான 74 ஓட்டங்களுடனும், ரியான் பராக்கின் 39 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியபோதும் 18 வது ஓவரில் இருவரும் விக்கெட்டைப் பறிகொடுத்தமையாலும், இறுதி ஓவரை ஆவேஷ் கான் ஹெட்மயரின் விக்கெட்டை எடுத்ததோடு ஓட்டங்களைக் கொடுக்காது மட்டுப்படுத்தியதாலும் இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்களையே எடுத்து வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2 ஓட்டங்களால் வெற்றியீட்டியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  5. ஞாயிறு 20 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS எதிர் RCB 05 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 18 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் பிரபா செம்பாட்டான் எப்போதும் தமிழன் அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 12 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் 11 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் ஈழப்பிரியன் வீரப் பையன்26 பிரபா செம்பாட்டான் கந்தப்பு தமிழ் சிறி குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் நிலாமதி சுவி சுவைப்பிரியன் வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் கிருபன் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  6. எமது விடிவிற்காக மரணித்தவர்கள் மாவீரர்கள், அவர்கள் அடிமையாக இருக்கவிரும்பவில்லை
  7. ஆஞ்சநேயருக்கு வடை மாலை. நாமக்கல்.
  8. தண்டனையே குற்றம் “மனித உரிமை மீறல் இனப்படுகொலை என்ற தீர்மானத்தை ஐநா சபையில் நிறைவேற்றுவோம்” என்ற தலையங்கத்தைப் பத்தாவது வருசமா திருப்பியும் சலிக்காம வாசிக்க, “ நான் ஒரு பெட்டிசன் அனுப்பிறன் அதில ஒரு கையெழுத்துப் போட்டு அனுப்பிவிடும்” எண்டு எனக்குப் பெரிய பள்ளிக்கூடத்தில படிப்பிச்சவர் ஒருத்தர் கோல் எடுத்தார். சஜித் பிரேமதாசான்டை இங்கிலீசில இருந்ததை வாசிக்க சிரமப்பட்டிட்டு பேசாமக் கையெழுத்துப் போடுவம் எண்டிருக்கத் திருப்பி கோல் எடுத்து, “ அவர் மகனுக்கு சும்மா அடிச்சுப் போட்டார், இதை விடேலாது நான் கோட்டுக்குப் போப்போறன், மனித உரிமை மீறல் ” எண்டு கடுமையாச் சொன்னார். இருக்கிறதில எது உரிமை எது மீறல் எண்டு முடிவெடுக்கேலாமல் யோசிச்சபடி ஆசுபத்தரீல நடந்து போக, பக்கத்தில வந்த இன்னொரு பரியாரியார், “நான் அவங்களைக் கலைச்சு விட்டிட்டன் , உவங்கள் சரிவரமாட்டாங்கள், எங்களை மாதிரி இப்பத்தைகள் இல்லை” எண்டு மருத்துவத்தையும் பாடமாக்கித் தள்ளீடுவம் எண்டு நம்பி வந்த பெடிபெட்டைகளை பேசிக்கொண்டு வந்தார். இதுகள் படிச்ச பள்ளிக்கூடம் தான் பிழை எண்டு முடிவுக்கு வந்தவர் அதிலேம் வாத்திமார் அடிச்சுத் திருத்தாததால தான் எல்லாம் இப்பிடித் திரியுது எண்ட புறுபுறுத்தபடி போனார். இதையும் கடந்து கிளினிக்குக்குப் போக அங்க ஒரு அம்மா மகனோட உள்ள வந்தா. அவன் தான் வீட்டுக்கு காவலோ தெரியேல்லை கூட்டுக்க நிக்கறதுக்களுக்கு கழுத்தில கட்டிறதை காதில இருந்து கால் வரை தொங்க விட்டபடி பெடியன் வந்திருந்தான். வந்தவனுக்கு ஏதும் வருத்தமோ தெரியாது பாவம் தலை மயிரெல்லாம் கறள் கட்டினமாதிரிக் கலரில இருந்துச்சுது. பதினைஞ்சு வயசு பள்ளிக்கூடத்துக்கு போறேல்லையாம் , ஆனால் பக்கத்தில எங்கயோ “ கூடப் போனதில” அடி வாங்கீட்டானாம் எண்டு உடைஞ்ச கையோட வந்தவனைப் பாக்க விளங்கிச்சுது உடைஞ்சது கை மட்டுமில்லை கன பிணைப்புக்கள் எண்டு. “ ஏன்டா பள்ளிக்கூடம் போறேல்லை ” எண்டு கேக்க அம்மா “அவன் குளப்படி எண்டு சேர் அடிச்சதாலை நிண்டிட்டான்” எண்டு பெருமைப்பட்டுச் சொன்னா. அடிச்ச அடிவாங்கின கதையெல்லாம் கேட்டு முடிய மணி ரெண்டாக, மனிசி மத்தியானம் பள்ளிக்கூடம் முடிய ஏத்த வரச் சொன்னது ஞாபகம் வர ,நேரம் போட்டுது எண்டு போட்டு அவசரமாக் காரை எடுத்துக் கொண்டுபோய் சிக்னலில நிக்க பின்னால வந்து நிண்ட மூண்டு சில்லும் , கொக்கு மாதிரி எப்பவுமே ஒண்டைத் தூக்கிக் கொண்டு நிக்கிற ரெண்டு சில்லும் “கோன் அடிச்சுது “, தான் இதுக்கெல்லாம் நிக்கேலாதாம் “என்னை விடு போப்போறன்” எண்ட மாதிரி . இவனுக்காக எப்பிடிக் காரைத்தூக்கிக் கொஞ்சம் அரக்கிப் ரோட்டுக் கரையில நிப்பாட்டிற எண்டு யோசிக்கப் பச்சை விழுந்திச்சுது. முன்னுக்கு நிண்ட நான் டக்கெண்டு எடுக்க ரெண்டு பக்கத்தாலேம் பாதுகாப்புக்கு போற பொலிஸ்காரன் மாதிரி வந்த ரெண்டு சில்லுக்காரன் நான் slowவாய்ப் போறனாம் எண்டு முறாய்ப்பா முறுக்கிக் கொண்டு போக அதைக் கவனிக்காத மாதிரி நான் ஓடிக்கொண்டு போனன். போற வழியில பிரபல பாடசாலையில படிக்கிறது, படிப்பிக்க விட்டது எல்லாம் பள்ளிக்கூடம் விட்டோன்ன தமன்னாவைப் பாக்கப் போன கூட்டம் மாதிரி பாஞ்சு வந்து நாலைஞ்செண்டு நடு ரோட்டால அணிவகுத்துப் போக ரோட்டின்டை கரைப் பக்கமா மண்ணுக்கால காரை விட்டன். ஒரு மாதிரி கஸ்டப்பட்டு நேரம் போகுதெண்டு அரக்கப் பறக்க வந்தா, அண்டைக்கெண்டு பாத்து போக்குவரத்தை சீராக்கிறம் எண்டு வந்து நிண்ட சீருடைக்காரார் எல்லாச் சந்தீலேம் நான் கிட்ட வரவும் என்னை மறிச்சிட்டு மற்றவயை விடவும் சரியா இருந்திச்சுது. எங்க காணேல்லை எண்டு Mrs அடிச்ச கோலை, வேணும் எண்டு “ miss” பண்ணீட்டு ஒரு மாதிரிப் போய்ப் பள்ளிக்கூட வாசலில நிக்க, வந்து ஏறினவை எல்லாரும் கதவைச் சாத்தின சாத்து காரோட சேத்து எனக்குத் தான் எண்டு விளங்கிச்சுது. ஏறின உடனயே என்னை ஒண்டும் கேக்காம பின்னால திரும்பி, “எத்தினை marks, எத்தினை மணிக்குக் கிளாஸ், எங்க தொப்பியைக் காணேல்லை” எண்ட வழமையான கேள்வி-நேரம் நடக்க “ரோட்டை” மட்டும் பாத்தபடி காரை ஓடிக்கொண்டு போனன். ஆளை விட்டாக் காணும் எண்டு பின்னுக்கு பாஞ்சு ஏறினதுகளை பாத்து மனிசி, “இதுகளை ஒண்டும் செய்யேலாது, இங்கபார் சாப்பாடு அப்பிடியே இருக்கு, அப்போத வெறும் socks ஓடித் திரியுது, சட்டையில மை , home work செய்யேல்லையாம் எண்டு complain , நாங்கள் எல்லாம் எங்கடை அம்மா சொன்னா எல்லாம் உடன செய்வம், எண்டு பஞ்ச புராணத்தைத் தொடங்க , “சரிசரி, விடும் பாவம்” எண்டு நான் சொல்ல, “கடைசியா நீங்களும் ஒண்டும் சொல்லாதேங்கோ நான் தான் எல்லாம் பாக்கோணும்” எண்டு புறுபுறுத்தபடி மனிசி வீடு வர வீட்டுக்குள்ள போக, நான் எங்க சோத்துக்கரண்டியைக் காணேல்லை சாப்பாட்டு மேசையில தேடிக்கொண்டிருந்தன். பின்னேரம் patient பாத்துக் கொண்டிருக்க உள்ள வந்த ஒருத்தர் மகனை இருத்தி வைச்சிட்டு “ அவனுக்கு கையில நோகுதாம், எழுதவே ஏலாது எண்டு சொல்லிறான்” எண்டு தொடங்கினார். நானும் அங்க நோகுதா இங்க நோகுதா எண்டு கேக்க அவன் அப்பாவைப் பாக்க அவர் தலையும் இவன்டை தலையும் ஒண்டா ஆடிச்சுது ஓமெண்டு . என்னடா இண்டைக்கு வந்த முதலாவது patientஏ இப்பிடி இருக்கு, ஒரு பிரச்சினையேம் காணேல்லை எண்டு போட்டு , ஒண்டுமில்லை சும்மா நோ தான் எண்டு சொல்ல முதல், “எனக்கு X-ray எடுக்கோணும்” எண்டு அப்பா ஓடர் போட நான் தேவேல்லை எண்ட, “இல்லை வாத்தியார் அடிச்சிட்டார் என்டை மகனுக்கு , அவருக்கு நான் ஆரெண்டு காட்டிறன், எல்லா இடமும் கடிதம் போட்டிருக்கிறன், உங்கடை report ஒண்டும் வேணும்” எண்டு என்னையும் சட்டத்தில சாட்சியா சேக்கப் பாத்தார். என்னத்தை எழுதிறது எண்டு தெரியாம எதையோ கிறிக்கிக் குடுக்க, வெளீல போய் உந்த டாக்குத்தர் சரியில்லை நான் கொழும்பில போய்க் காட்டப்போறன் எண்டிட்டுப் போனார். ஒரு நாள் இரவு திடீரெண்டு நட்பின் அழைப்பொண்டு “ உடன வந்தா எங்க patient பாப்பீங்களா, மகனுக்கு முதுகில அடிச்சிட்டார் மாஸ்டர், அவன் நோகுதெண்டு இப்ப அழுறான்”எண்டு சொல்லத்தொடங்கி பிறகு நோவை விட்டிட்டு , “என்டை பிள்ளையை எப்பிடி அடிப்பார், நான் உடனயே principalக்கும் சொல்லீட்டன்” எண்டு கதை சொல்லி முடிக்க பிள்ளை நோ மறந்து நித்திரையாகீட்டுது எண்டு நெக்கிறன். இவதான் வழக்காம வேற ஆராவது சொல்லேக்க அடிச்சது சரியெண்டு வக்காளத்துவாங்கிறவ , ஆனாலும் தன்டை மோனுக்கு எண்டோன்ன வாத்திபிழை அவன் நல்லபெடியன் சரியான அமைதி எண்டு அவனைப் பத்தின பட்டோலையை நீட்டியே வாசிச்சா. 88 எண்டு நெக்கிறன் சுண்டுக்குளிச் சந்தீல இந்தியன் ஆமி எங்கடை பள்ளிக்கூட Principalஇலும் பாக்க strict ஆ இருந்த காலம். நாங்கள் கொஞ்சப் பேர் பள்ளிக்கூடத்துக்கு வேளைக்கு வந்து மூலை வகுப்பில நிண்டு “ Recky” எடுக்கிறனாங்கள்; அவங்களை இல்லை சுண்டுக்குளிப் பெட்டைகளை. ஒரு பக்கம் prefects க்கும், ஒரு பக்கம் வாத்திமாருக்கும் sentry போட்டுத்தான் Recky எடுக்கிறது. எல்லாரும் வரிசையா வாங்கில ஏறி நிண்டு பாக்கிறது. அவங்கடை புண்ணியத்தில சுண்டுக்குளிச் சந்தீல எல்லாப் பெட்டைகளும் இறங்கி வரிசையா நடந்தும் சைக்கிளை உருட்டிக் கொண்டும் போறதால கனநேரம் கண்ணுக்கு குளிரச்சி . பூக்களை ரசிக்கேக்க குளவிக் கூட்டுக்க கல் எறிஞ்ச மாதிரி ஆரோ ஒருத்தன் எறிஞ்ச கல்லு பொம்பிளை ஆமிக்கோ இல்லை ரீச்சருக்குப் பட்டிச்சோ தெரியேல்லை அடுத்த நாள் வகுப்பு முழுப்பேரையும் கூப்பிட்டு “ ஆர் செய்தது எண்டு சொல்லித் தாங்கோ எண்டு ஒரு கருணா இருக்க மாட்டானா எண்டு தனத்தார் தேட, கடைசிவரை முள்ளிவாய்க்காலில ஒண்டா ஒருந்த மாதிரி நாங்க நிக்க, காட்டிக்குடுக்காட்டிப் பிரச்சினை வரும் எண்ட தனத்தாரின்டை வெருட்டு எடுபடாமப் போக, நாலு பிரம்பு முறிஞ்சும் எல்லாரும் சிரிச்சுக்கொண்டு வகுப்புக்கு வந்தம். அடுத்த பாடம் இங்கலீஸ் படிப்பிக்க வந்த Alex Master , நடந்ததை கேட்க சரி இந்தாளும் வெளுக்கப் போகுதாக்கும் எண்டு நெக்க “ , I like you spirit “ எண்டு சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு. வாத்தி அடிச்சது “செய் குளப்படீக்காய்” இருந்த காலம். போன முறை செய்யாத குளப்படிக்கு அடிவாங்கினவன் இந்தமுறை தன்டை குளப்படிக்கு வேறொருத்தன் அடிவாங்க விளங்கினான் வாத்தி அடிக்கிறது ஆளுக்கில்லை சிவபருமானுக்கு பாண்டியன் குடுத்த மாதிரித் தான் இந்த அடியும் முழு வகுப்புக்குத்தான் எண்டு. Friend க்காய் வாங்கின அடி ஒரு கடி மாங்காயில் அடங்கிப் போக வாத்தீன்டை பிரம்படி இனிப்பாய் மாறிச்சுது. அதோட அடிச்ச வாத்தி அண்டே மறந்தாலும் அதைக் கேள்விப்பட்டா அம்மா அந்தக்கிழமை முழுக்க கலைச்சுக் கலைச்சு இன்னும் வெழுப்பா எண்டதால கன அடிகள் வீட்டுக்குப் போகாமல் வகுப்புக்குள்ளயே சமரசப்பட்டிச்சுது. அடிச்சவாத்தி அடுத்தநாளும் முன்னுக்குக் கூப்பிட சரி இண்டைக்கும் அடிதான் எண்டு வாத்தியையும் திட்டிக் கொண்டு கையைத் தடவித்தடவிப் போக , “புத்தகத்தை எடுத்து அடுத்த பாடத்தை வாசி” எண்டு சொல்லி முன்னால நிக்கவிட நான் சிறுக்க வாத்தியார் உயர்ந்து நிண்டார். இப்ப அடிக்கடி நடக்கிற “ மீண்டும் பள்ளிக்கூடம் போறம்” எண்ட நிகழ்வெல்லாத்திலேம் படிச்சதோ படிப்பிச்சதோ ஒருத்தருக்கும் ஞாபகமிருக்காது ஆனால் அடி வாங்கினவனுக்கும் அடிச்ச வாத்திக்குத்தன் தான் ஞாபகமும் கூட, demandம் கூட. வீடோ, பள்ளியோ கண்டிப்பும் தண்டிப்பும் மாணவருக்கு காவலாய் இருந்த காலம் அது. இப்ப என்னெண்டாத் தண்டனைகள் கண்டிக்கபட்டு, பெற்றவர் இன்று பொலிசாகி, சமூக வலைத்தளங்கள் நீதிபதியாகிப் போய், கடைசியில் தண்டனைகள் குற்றங்களாக்கப் பட்டு நிக்கிற காலம் இது. அடிச்துக்கெல்லாம் காரணம் சரியா இல்லாட்டியும் அடி வாங்கின நான் சரியாகீட்டன் ஏனெண்டால் அடி கூட தடுப்பூசி மாதிரித்தான் வருத்தம் வர முதலே போட்டால் தான் நல்லம், வருத்தம் வராது வந்தாப்பிறகு ஊசி போட்டுப் பிரியோசனமிருக்காது. இவை யாவும் நிஜமே Dr. T. Gobyshanger யாழ்ப்பாணம்
  9. எங்களை அழித்தவர்களுக்கு எப்போது தேவையோ அப்போது தமிழீழம் பிறக்கும்.
  10. விஜய் மீது இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள்” - சீமான் ரம்ஜான் பண்டிகையொட்டி, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 7ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து இஸ்லாமியர்களோடு நோன்பு கஞ்சி அருந்தியதோடு தொழுகையிலும் ஈடுபட்டார். இந்த சூழ்நிலையில், தவெக தலைவர் விஜய்யிடம் இஸ்லாமியர்கள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ரஸ்வி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, ‘தமிழ்நாட்டிலிருந்து விஜய் என்ற ஒரு முக்கிய நபர் இருக்கிறார் அவர் தவெக என்ற கட்சியை உருவாக்கியுள்ளார். இப்போது, அவர் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு மாற விரும்புகிறார். திரைப்படத் துறையில் இருந்த காலத்தில், அவர் தனது பல படங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்தார். பல்வேறு வழிகளில் முஸ்லிம்களை அவதூறு செய்ய முயன்றார். இப்போது, அவர் ஒரு அரசியல் முகத்தை முன்வைத்து முஸ்லிம் சமூகத்திற்குள் நுழைய முயற்சிக்கிறார் சமீபத்தில் அவர் ஒரு இஃப்தார் விருந்தை நடத்தி, சூதாட்டக்காரர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் பிற சமூக விரோத சக்திகளை அழைத்தார், இது தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தை எரிச்சலடையச் செய்துள்ளது. தமிழ்நாட்டு முஸ்லிம்கள் நடிகர் விஜய்யுடன் கைகுலுக்கவோ, சந்திக்கவோ அல்லது அனுதாபம் கொள்ளவோ கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தங்கள் முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும், நடிகர் விஜயை நம்ப முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். இது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், விஜய் இஃப்தார் நோன்பில் பங்கேற்றதில் உள்நோக்கம் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், விஜய்க்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் கண்டனம் தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதலளித்த சீமான், “எனக்கு தம்பி விஜய்யை பற்றி தெரியும். அது மாதிரி உள்நோக்கம் வைத்துகொண்டு செய்யும் ஆள் அவர் கிடையாது. அவர் எதார்த்தமான ஆள். இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பார்கள், அதனால் அவர் போயிருப்பார். விஜய்யை பற்றி உங்களுக்கு தெரியாதா? எனக்கே தனிப்பட்ட முறையில் தம்பியை தெரியும். கவனத்தை தன் பக்கம் இழுப்பதற்காக எங்கிருந்தோ பேசுகிறார்கள். இந்த மாதிரி குற்றச்சாட்டை எல்லாம் தம்பி விஜய் மீது வைக்காதீர்கள்” என்று கூறினார். nakkheeran“விஜய் மீது இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள்”...ரம்ஜான் பண்டிகையொட்டி, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 7ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து இஸ்லாமியர்களோடு நோன...
  11. இந்தக் கதை எனது ‘நெஞ்சில் நின்றவை’ பதிவுகளில் வெளிவந்ததுதான். கோபிசங்கர் எழுதியிருக்கும் ‘தண்டனையே குற்றம்’ https://yarl.com/forum3/topic/301723-தண்டனையே-குற்றம்-t-gobyshanger/ இந்த நினைவை எனக்கு மீண்டும் நினைவூட்டியிருக்கிறது 1968, ஒன்பதாவது வகுப்பு. இரசாயனவியல் ஆசிரியரான பொன்னம்பலம் மாஸ்ரர்தான் எங்களது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அதுவும் ஒரு சில மாதங்களே. திடீரென அவருக்கு இடமாற்றம் வந்ததால் நல்லதொரு ஆசிரியரை இழக்கும் நிலை எங்களுக்கு. அவருக்கு பிரியாவிடை வைப்பதற்கு மேல் வகுப்பு மாணவர்கள் முடிவு செய்து 9, 10, 11, 12 விஞ்ஞான வகுப்பு மாணவர்களிடம் தலைக்கு இரண்டு ரூபா (அப்போதெல்லாம் இரண்டு ரூபா என்பது பெரிய காசு) வாங்கிக் கொண்டார்கள். இந்த பிரியாவிடை விடயத்திற்கு பொறுப்பாக இருந்தது 12வது படித்துக் கொண்டிருந்த மாணவர் தலைவன் ரவி. அவன் நாட்டில் ஒரு சட்டத்தரணியாகி, பருத்தித்துறை நகரபிதாவாக இருந்து சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டான். ரவியின் தம்பி சபா எனது வகுப்பில்தான் படித்துக் கொண்டிருந்தான். ஆதலால் இந்த பிரியாவிடை விடயம் எங்களது வகுப்பிலும் தடல் புடலாகப் பேசப்பட்டது. பிரியாவிடை நிகழ்ச்சிக்கு சில வாரங்களுக்கு முன்னால் அதிபர் தங்கராஜா மாஸ்ரரிடமிருந்து நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மாணவர்களிடம் ஒரு குழப்பமான சூழ்நிலை. இதில் முன்ணணியில் செயற்பட்டு வந்த ரவி, சபா இருவருக்கும் தன்மானப் பிரச்சினை. பாடசாலை பிரியாவிடை செய்வதால் மாணவர்கள் தனியாக பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தத் தேவையில்லை என்பது அதிபரின் வாதம். மாணவர்களிடம் நிதி வசூலித்த பின்னால் நிறுத்த முடியாது என்பது மாணவர் தலைவரது கருத்து. இவர்களுக்கு நடுவில் பாவம் மாணவர்களாகிய நாங்கள். பிரியாவிடை நிகழ்ச்சியை மாணவர்கள்தான் நடத்த வேண்டும் என்பதில் ரவி பிடிவாதமாக இருந்தான். அவனுக்குப் பின்னால் சில ஆசிரியர்களும் இருந்தார்கள் என சாடைமாடையாக சிலர் பேசிக் கொண்டார்கள். அதிபர் தங்கராஜா மாஸ்ரரோ அமைதியாக இருந்தார். மாணவர்களிடம் வசூலித்த பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென அதிபரிடமிருந்து இறுதி அறிவிப்பு வந்தது. எனக்கு மனதுக்குள் சந்தோசம். பிரியாவிடைக்கு அம்மாவிடமிருந்து பணம் வாங்கியாயிற்று. பணம் திருப்பித் தரப்பட்டால் அதை எனது வேறு தேவைக்குப் பயன் படுத்தலாமென கணக்குப் போட்டுக் கொண்டேன். நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட விசயம் அம்மாவுக்கு எங்கே தெரியப் போகிறது? கணக்குகள் எப்பொழுதும் சரிவராது. நான் போட்ட கணக்கும் தப்பாகப் போயிற்று. ஒருநாள் மாணவர் தலைவரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. “அதிபர் தங்கராஜா மாஸ்ரர் எங்களது நிகழ்ச்சியை மறுப்பதால் கச்சேரியிலுள்ள கல்வித் திணைக்களத்தில் இது விடயமாக முறைப்பாடு செய்ய உள்ளோம் ஆகவே நாளை காலை எட்டு மணிக்கு விஞ்ஞான வகுப்பு மாணவர்கள் பாடசாலை முன்னால் கூடவும். போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரும் போக்குவரத்துக்கான செலவாக ஒரு ரூபா கொண்டு வரவும்” அநேகமான மாணவர்கள் ரவியின் பின்னால் நின்றார்கள். போதாதற்கு சபா எனது வகுப்பிலிருந்து எல்லோருக்கும் உரு ஏத்திக் கொண்டிருந்தான். ஆகவே இவர்களது பேச்சுக்கு எடுபடுவது தவிர வேறு மார்க்கம் எனக்கிருக்கவில்லை. முதலில் அம்மா இந்த விடயத்துக்கு ஒத்துவரவில்லை. ஆனாலும் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் பங்கு கொள்வதை அறிந்த பின்னரே ஒரு ரூபா தந்தார், அதுவும் மனமேயில்லாமல். கச்சேரிக்கான பயணம் பாட்டுக்கள் துள்ளளுடன் மகிழ்வாக இருந்தது. கச்சேரி வாசலில் எங்கள் வண்டிகள் மறிக்கப்பட்டன. வாசலிலேயே நாங்கள் கொண்டு போன புகார் வாங்கப்பட்டது. “உடனடியாக எல்லோரும் பாடசாலை திரும்ப வேண்டும்” என கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டோம். தங்கராஜா மாஸ்ரருக்கு கச்சேரியிலும் அதிக செல்வாக்கு இருந்தது பின்னர்தான் தெரியவந்தது. எது எப்படியோ எனது முதல் போராட்டம் மூன்று ரூபாக்கள் நட்டத்துடன் தோற்றுப் போனது. அடுத்தநாள் வகுப்பறை கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது. ‘நேற்று பாடசாலைக்கு வரரத மாணவர்கள் அதற்கான காரணத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் இருந்து எழுத்து மூலமாகப் பெற்று அதிபரிடம் சமர்ப்பித்து அதன் பின்னரே வகுப்பறைக்கு வரவும்’ பாண்டிய மன்னனின் பிரம்படியை விட தங்கராஜா மாஸ்ரரின் பிரம்படி எப்படியிருக்குமென்று அந்த சிவனுக்கே தெரியும். நெருப்பில் சுட்டு நுனி கறுத்திருந்த பிரம்பு நினைவில் வந்து கலக்கியது. எல்லோரையும்விட அதிகமாகக் கலங்கிப் போயிருந்தது ரவியும், சபாவும்தான். எல்லோரும் ரவியின் வீட்டில் கூடினோம். தனது மகனால்தான் இவ்வளவும் என்பதை அறிந்து ரவியின் தந்தை எங்களுக்கு உதவ வந்தார். அவர் தங்கராஜா மாஸ்ரரை அவரது இல்லத்தில் சந்தித்து எங்களுக்காக கதைத்துப் பார்த்தார். பாடசாலைக்கு வரமுடியாமற் போனதற்கான காரணத்தை எழுத்து மூலமாக ஒவ்வொரு மாணவரும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் தங்கராஜா மாஸ்ரர் உறுதியாக இருந்தார். சரி ஏதாவது ஒரு காரணத்தை எழுதி கொண்டுபொய்க் கொடுங்கள். பிரச்சினை வராது என்று ரவியின் தந்தை உறுதி தந்தார். இது விசயமாக வீட்டில் கேட்டால் அங்கேயும் பூசை நடக்குமென்பதால் நாங்களே கடிதங்களைத் தயாரித்துக் கொண்டோம். எனது அம்மம்மா காலமாகிவிட்டார் என்று எனக்கான காரணத்தைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிக் கொண்டேன். அடுத்தநாள் கடிதங்களுடன் மண்டபத்தில் கூடினோம். மண்டபதின் ஒரு வாசலினூடகத்தான் அதிபரின் அறைக்குச் செல்ல வேண்டும். நான்கு நான்கு பேராக உள்ளே அழைத்தார்கள். துணிவுள்ளவர்கள் (இல்லையென்றாலும் இருப்பதாகக் காட்டிக் கொண்டு) முன்னுக்குப் போனார்கள். உள்ளே போனவர்கள் பிறிதொரு வாசலினூடக அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தார்கள். எனது முறை வந்தது உள்ளே போனேன். என்னுடன் சங்கர், முகுந்தன், நடராஜா ஆகியோரும் உள்ளே வந்தார்கள். முறிந்து சிதறிய பிரம்புத் துகள்கள் நிலத்தில் இருந்து பயமுறுத்தின. தங்கராஜா மாஸ்ரரைப் பார்க்கும் துணிவில்லை. முகத்தை எவ்வளவு பாவமாக வைத்திருக்க முடியுமோ அப்படி வைத்திருந்தேன். கிளாக்கர் வந்து எங்களிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டார். என்ன எழுதியிருக்கு? சிங்கம் கர்ஜித்தது. நாலு பேருக்கும் அம்மம்மா செத்துப் போச்சாம் கிளாக்கர் ஏளனமாகச் சொல்லி விட்டு கடிதங்களை மேசையில் வைத்தார். பரீட்சையில்தான் பார்த்து எழுதுவார்கள் என்று சொல்வார்கள். கடிதத்தில் உள்ள காரணத்தையும் பார்த்து எழுதியதை அன்றுதான் பார்த்தேன். தங்கராஜா மாஸ்ரர் கிளாக்கரை நோக்கி கண் அசைத்தார். சுவரைப் பார்த்தபடி நால்வரும் நிறுத்தப் பட்டோம். குனிந்து கால் பெருவிரலை கைகளினால் பிடிக்கும் வண்ணம் பணிக்கப்பட்டோம். நாலுபேருக்கும் ஒரே அம்மம்மாவா? வேறை வேறையா? தங்கராஜா மாஸ்ரர் கேட்பது கேட்டது. அதுக்குப் பிறகு எதுவுமே நினைவில்லை. சுளீர், சுளீர் என்று பிற்பக்கத்தில் பிரம்பின் இரண்டு இழுவைகள். தண்ணீரில் இருந்து வெளியில் போட்ட மீன் கூட என்னளவுக்குத் துள்ளியிருக்காது. வகுப்பறைக்கு வந்தால் எனக்கு நாலு, எனக்கு மூன்று , எனக்கு இரண்டு என்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள். பேசும் நிலையில் நானில்லை. மூன்று ரூபா கொடுத்து இரண்டு சுளீர் வாங்கிய கெட்டித்தனத்தைப் பற்றி பேச என்னயிருக்கிறது?
  12. அப்போ போர் நடக்கவில்லை. அதற்கு பின் ஏற்பட்ட போரால் மக்கள் இடம் பெயர்ந்தனர். கொல்லப்பட்டனர். ஆகவே சனத்தொகை குறைந்தது. போர்க்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் ஒரு காரணம்.
  13. நந்தனார் வெற்றிகளைக் குவிக்கிறார்...மேலும்பல வெற்றிகளைக் காண வாழ்த்துக்கள்.
  14. வழமையாக முட்டைக் கோப்பி குடிப்பவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். முதலமைச்சர் @நந்தன் க்கு வாழ்த்துக்கள்.
  15. மும்மூர்த்திகளும் சுகமா?
  16. இப்போ மார்க்கெட்ல புதுவிதமான இன்னொரு ஏமாற்று வியாபார யுக்திய தொடங்கி இருக்காங்க மக்களே. அது என்ன வியாபாரம்னா டிஷ்யூ பேப்பர் மேக்கிங் அப்படிங்குற புதிய விதமான வியாபாரம். இதுக்கு முன்னாடி பாக்கு மட்ட பிளேட், பேப்பர் கப்பு தயாரிப்பு, பேப்பர் பிளேட் தயாரிப்பு அப்படின்னு சொல்லி ஒன்னுக்குமே ஆகாத ஒரு இரும்பு சாமான நம்ம தலையில கட்டிக்கிட்டு 10 லட்ச ரூபா வாங்கிக்கிட்டு போயிருவாங்க. மாசம் நீங்க 5 லட்ச ரூபாய் வரைக்கும் பேப்பர் கப்பு தயாரிச்சு நீங்க வெளியே கொடுக்கலாம் அப்படின்னு சொல்லி நம்ம தலையில வச்சு கட்டிருவாங்க. ஆனா நடந்தது என்னன்னா நீங்க பேப்பர் கப், தட்டம் எல்லாம் தயாரிச்சிகிட்டு அதை நீங்களே வச்சிக்க வேண்டியது எவனும் வாங்க இருக்க மாட்டான். ஆனால் இவங்க மிஷின் தலையில் வைத்து கட்டிக்கிட்டு போயிடுவாங்க. மிஷின விக்கிறது வரைக்கும் தேனு மாதிரி பேசுவானுங்க மிஷின் வித்ததுக்கு அப்புறம் அவங்க கிட்ட இருந்து எந்த விதமான ரெஸ்பான்ஸ் இருக்காது. இப்ப புதுசா டிஷ்யூ பேப்பர் மேக்கிங் அப்படின்னு சொல்லி புதுசா இன்னொரு வியாபாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். நீங்கள் மெஷின், ரா மெட்டீரியல் வாங்குவதற்கு 6 இலட்சம் கொடுத்தீங்கன்னா மாசம் 3 லட்ச ரூபா லாபம் மட்டும் பாக்கலாம்னு. இந்த அளவுக்கு லாபம் பாக்குறத எதுக்கு அவனுக நம்ம தலையில வச்சு கட்டணும் இவனுங்க எல்லாம் நம்மள வாழ வைக்கிறதுக்காக இல்ல, முடிஞ்ச அளவு நம்ம கிட்ட இருந்து பணத்தை பு~டுங்கிட்டு ஓடுறதுக்கு தான் இருக்கிறானுங்க. தயவு செய்து இந்த மாதிரி எந்த மாதிரி வியாபாரம் போய் மாட்டி விடாதீங்க நண்பர்களே. மேலும் யாராவது இந்த மாதிரி பேப்பர் கப் தயாரிப்பு டிஷ்யூ பேப்பர் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றிகரமாக இருக்கிறீர்களா அல்லது ஏமாந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா என்று சொன்னால் கொஞ்சம் நன்றாக இருக்கும். கள்ள ஆட்டம்
  17. சிறப்பான கருத்தைச் சொல்லும் அருமையான கதை . ......... ! 😁
  18. வாக்குப்போடுவது மக்கள். யார் என்ன சொன்னாலும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
  19. இவரின் கூற்றை கேட்டால் சிரிப்பாக வருகிறது. நியூசிலாந்து பள்ளிவாசலில் நடைபெற்ற தாக்குதலுக்கு இலங்கை தமிழர் கத்தோலிக்க தேவாலயத்தில் பழிவாங்கப்பட்டனராம். முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போட இவரால் மட்டுந்தான் முடியும். தாக்குதல் நடத்தியவர்கள் சொல்லாத காரணத்தை இவர் ஏன் வலிந்து திணிக்கிறார்? அப்போ இவரும் சூத்திரதாரியே! கோத்தாவை ஆட்சிக்கு கொண்டுவரவும் கர்தினால் முன்னின்றவர். கள்ளனிடமே திறப்பை கொடுத்தவர் தான் அவர். கோத்தபாயவாலும் ஏமாற்றப்பட்டார் மல்கம்! ஆடு நனையுதென்று இந்த ஓநாய் இவ்வளவு காலமுமில்லாமல் இப்போ அழுகுது. அனுராவின் அறிக்கை இன்னும் வரவில்லை, குண்டுத்தாக்குதலுக்கான காரணமும் அவர்களால் வெளிப்படுத்தவில்லை. இவர் ஏன் அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படவில்லை, நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்கல் என்று விசாரணையை திசை திருப்புகிறார்? நியூசிலாந்துக்கும் இலங்கைத்தமிழருக்கும் கத்தோலிக்கருக்கும் என்ன தொடர்பு? இவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும், தாங்களாகவே வாயை கொடுத்து பொறியில் மாட்டப்போகிறார்கள். ஒருத்தர் முந்திக்கொண்டு ஆஜர் ஆகிறார். இவர் விசாரணையை திசை திருப்புகிறார், தாக்குதலுக்கு முன், தாக்குதலாரிகள் பேசிய காணொளி ஒன்று பின்னாளில் வெளிவந்தது. அதில் அவர்கள் சொல்லாத காரணத்தை சரத் வீரசேகர சொல்கிறார். ஆகவே இதைப்பற்றி விமர்சனம் செய்யும் யாவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படவேண்டும்.
  20. அதுவரை எமக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தர விரும்ப மாட்டார்கள். ஆனாலும் நாங்க முயற்சி செய்யாமல் இருக்கலாமா? தமிழர்கள் என்ன தமிழீழமா கேட்கிறார்கள்? ஒரு சிங்களவன் எப்படி என்ன உரிமையுடன் வாழ்கிறானோ அதே உரிமையுடன் தமிழனும் வாழ வேண்டுமென்று தானே கேட்கிறான்.
  21. Fixing என்று இல்லை. ஒரு வித, கொடுக்கல் வாங்கல் என்ற தொனியில்தான் எழுதியிருக்கிறார். ஊகம்தான். ஆகா. அந்தக் குரங்குப் படமே மிச்சக் கதையைச் சொல்லுது. சாராம்சத்துக்கு நன்றி.
  22. Mark Xnge Sam நான் கொங்கு மண்டல பகுதியைச் சேர்ந்தவன் சில வருடங்களுக்கு முன் ஏறத்தாழ 2016, 17 என்று இருக்கும் அந்த காலகட்டத்தில் நூல் பிரிக்கிற மெஷின் என்று ஒரு வியாபாரம் இந்த பகுதியில் நடந்து வந்தது அதை பிரிக்கிற மெஷின் 15 ஆயிரம் வரையிலும் விற்றார்கள் ஒரு முறை பிரித்து கொடுத்தால் இவ்வளவு ஒரு கிலோ இவ்வளவு லாபம் பார்க்கலாம் என்று. அப்போது சக்க போடு போட்டது. ஆனால் பிரித்துக் கொடுத்தால் வாங்குபவர்கள் யாரும் இல்லை பனியன் வேஸ்ட் யில் இருந்து நூல் பிரித்து தர அவர்கள் சொல்லும் rate நாம் கொடுக்கும் போது மற்றவர்கள் வாங்கும் ரேட்டும் பயங்கர வித்தியாசம் அதன் மூலம் என்னைப் போன்ற ஏராளமான நபர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ############### ############ Aburaja Muhamed காரணம் அரசின் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கும் பாலிசி தான். பிளாஸ்டிக் பைகளை தயாரிப்பவர்கள் விட்டுவிடுவார்கள் அதை உபயோகப்படுத்துவர்களையும் அதை விற்பவர்களையும் தண்டனைக்கு உட்படுத்துவார்கள். பேப்பர் கப்பும் தடை செய்யப்பட்டது ஆனால் அதை தயாரித்து இன்னும் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிறிய அளவில் தயாரித்து அதை மார்க்கெட் செய்வது மிகப் பெரிய சவால். பாக்கு மட்டை தட்டு வியாபாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களையும் விற்பவர்களையும் கண்டுக்காமல் இருந்தவரை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இப்பொழுது அரசு பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவே பாக்கு மட்டை மிஷின் போட்டவர்கள் நஷ்டம் அடைந்து விட்டார்கள். பேப்பர் கப் இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது தடையை மீறி கொடுப்பது கொடுத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது. எப்பொழுது வருமானம் தேவையோ அப்பொழுது உற்பத்தியாளர்களையும் விற்பவர்களையும் தேடி தேடி அதிகாரிகள் செல்வார்கள். டிஷ்ஷு பேப்பர் உற்பத்தியில் பெரிய கம்பெனிகளுடன் போட்டி போட வேண்டியிருக்கும் அது சாதாரண வேலை இல்லை ஏனென்றால் மாஸ் ப்ரொடக்ஷனில் செலவுகள் குறையும் ஆனால் அதே பொருள் சிறிய அளவில் உற்பத்தி செய்யும் பொழுது செலவு கூடும். ############### ############ Ramadoss Govindasamy இப்போது மற்றும் ஒரு ஏமாற்று வேலை... பென்சில் பேக்கிங், பேனா பேக்கிங் மாதம் 30000 ரூபாய் வரை சம்பளம். முதலில் பதிவு செய்ய 650 ரூபாய், இதில் 600 ரூபாய்திருப்பி தரப்படும். ஆதார் கார்டு போட்டோ அனுப்பவும், கூரியர் சர்வீஸில் பேக்கிங் மெட்டீரியல்ஸ் அனுப்பப்படும். அதனுடன் 15000 ரூபாய் அட்வான்ஸ் தரப்படும்என விளம்பரம். ஏமாறாதே ஏமாறாதே ஏமாற்றாதே ஏமாற்றாதே.
  23. என்ன பகிடியா. ???? புட்டின். ரஷ்யாவை ஆள வேண்டும் என்று புட்டின் தீர்மானிக்கிறாரா?? அல்லது ரஷ்யா மக்கள் தீர்மானிக்கிறார்களா ???
  24. நீங்கள் சொல்வது சரி சென்னை அணியின் மத்திய பகுதி பலவீனமான பகுதி, ஓட்ட விகிதம் 100 இற்கும் குறைவானதென கேள்விப்பட்டேன் (ஓட்ட சராசரி நினைவில்லை) இதுவரை சென்னை அணியின் ஒட்டு மொத்த ஓட்ட சராசரி 116 என்பதாக நினைவில் உள்ளது, ஆனாலும் திருப்பாதி அணியின் மேல்பகுதியில் ஒரு பலவீனமான நபராக தொடர்ந்தும் இருப்பதால் இந்த போட்டியில் தொடருவாரா என்பது சந்தேகம் அதே போல் சங்கரும் அடுத்த போட்டியில் தொடுருவார என கருதவில்லை. குத்து மதிப்பாக 2/3 நபர்கள் சென்னை அணியினை தேர்வு செய்திருப்பார்கள்.🤣 மிகுதி 1/3 குஜராத் அணி (தமிழ்நாட்டு வீரர்கள் அதிகம் விளையாடும் அணி) 🤣
  25. சென்னை அணி பவர் பிளேயின் முக்கியமான 6 வது ஓவரை அஸ்வின், ஓவர்டன் என ஏற்கன்வே பலதடவை அடிவாங்கும் பந்துவீச்சாளர்களிடம் மீண்டும் மீண்டும் கொடுப்பது (குறிப்பிட்ட ஓவரில் குறைந்தது 20 ஓட்டங்களை கொடுப்பார்கள்). திரிப்பாதி போர்மில் இல்லை என்றாலும் விடாப்பிடியாக ஆட வைப்பது, மத்திய பகுதியில் போர்மில் இல்லாத வீரர்களை தொடர்ந்து பேணும்போது, சென்னை அணியில் வான்ஸ் பேடி போல சிறந்த இளையோர் அணியில் இருக்கும் போது அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தொடர்வது, இவர் பஞ்சாப் பிரியான்ஸ் ஆர்யாவினை விட உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர் என கூறுகிறார்கள் அவரை விட இவர் அடித்தாட கூடியவர் என கூறப்படுகிறது. இதனை பார்த்தாலும் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என புரிவதில்லைதான். ஆனால் அந்த லக்னோ போட்டியில் பந்த் போர்மில் இல்லாமல் இருந்தவர் ஓரளவாக சென்னை அணியுடன் விளையாடியமையால் அரை சதத்தினை எட்டியிருந்தார் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் தனது போர்மிற்கு வந்து விடுவார். பந்த் மிக சிறப்பாக அணியினை வழிநடத்தி வந்திருந்தார் அந்த போட்டியில் குழப்பமாக முடிவுகள் எடுத்திருந்தார் என்பது உண்மைதான் ஆனால் அது மட்ச் பிக்சிங் என்பது கொஞ்சம் ஓவரான விடயம்.
  26. அனைவரும் புட்டினின் ஆதவளார்கள் என்று ரஷ்ய செய்திகள் இந்திய யுரியுப்பர்கள் சொல்வதை நீங்கள் நம்பிவிட்டீர்கள். 99.90 வீதமானவர்கள் மட்டுமே புட்டினின் ஆதவளார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் புட்டினுக்கு தேர்தலில் 87.28 வீதமானவர்கள் தானே வாக்களித்தார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் மிகுதி 12.62 வீதமானவர்களும் எங்கள் தலைவர் வென்றுவிடுவார் என்று வாக்களிக்க சென்றுவிடாமல் வீட்டிலேயே இருந்துவிட்டனர்.
  27. Ed Sheeran - Perfect
  28. வழக்குக்குத் தொடர்பில்லாத தீர்ப்பாக இருக்கலாம். உடனே நடைமுறைக்குக் கொண்டு வருவதில் சிக்கல் இருக்கலாம். ஆனாலும் சரியான நிலைப்பாடு எது என்பது மக்கள் சமூகத்தில் மீண்டும் மீண்டும் பேசப்படத்தானே வேண்டும் ? குறிப்பாக, தமிழினத்திற்கான நல்லதொரு கனவு. கனவு மெய்ப்பட வேண்டும்.
  29. தமிழ்நாட்டு விடயத்தில் மட்டும் ஒரு ரஷ்யன் சொல்வதெல்லாம் உண்மையாகி விடுகின்றது 🤣
  30. இலங்கை போனால் இப்படி ஒரு சைக்கிளிலேயே ஊரில் ஓடித் திரிவேன்.
  31. இதெல்லாம் சும்மா ஜாலிக்காகத் தானே. வாங்க சேர்ந்தே கலாய்ப்பம். நந்தனின் நர்த்தனம் தொடர்கிறது. அவரை இனி யாராள் தொட முடியும்.
  32. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 34வது போட்டி மழை காரணமாகத் தாமதமாகியதால் 14 ஓவர்கள் போட்டியாகக் குறைக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களில் ரிம் டேவிட்டின் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 50 ஓட்டங்களைத் தவிர மற்றையவர்கள் விரைவாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்களும் அடித்தாட முற்பட்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும் வெற்றி இலக்கை அடையக்கூடிய ஓட்டவிகிதம் குறைவாக இருந்தமையால் ஆட்டமிழக்கால் 33 ஓட்டங்கள் எடுத்த நெஹால் வதேராவின் பங்களிப்புடன் 12.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 98 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதலாவது இடத்தை @நந்தன் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் பாதுகாப்பாகத் தக்கவைத்துள்ளார். @goshan_che மீண்டும் தனக்குப் பிரியமான இடத்திற்கு நகர்ந்துள்ளார்!
  33. குளப்படி செய்த என்று அடிவாங்கவில்லை! வீட்டுப்பாடம் செய்யாததற்கு வேண்டி இருக்கிறேன்.
  34. மன்னிக்கவும் மறுப்பு அறிக்கைக்கு.... மொறுமொறு குறைந்துவிட்டால் வேறு பிராண்ட் ஒன்று வந்து விடுகிறது அல்லது வந்து விழுகிறது என்று வரவேண்டும். எனக்கு என்ன சந்தேகம் என்றால் குளிக்காத இந்த மனுசனுடன் எப்படி இவர்கள்?? அப்படியானால் யார் இவர்கள்????
  35. சுத்த பைத்தியக்காரத்தனமான கதை இது. அணிசேராமை என்பது நேரு உருவாக்கிய கொள்கை. திறந்த பொருளாதாரம் என்பது ராவும், மன்மோகனும் சேர்ந்து உருவாக்கியது. கஸ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் - மோடியும் அமித்ஷாவும். பாகிஸ்தானை கையாளும் விதம் - மோடி வந்த பின், முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் எப்படி மாறுபாடாக உள்ளது. ஆனால் இரெண்டு ஆட்சியிலும் அதிகாரிகள் ஒரே ஆட்கள்தான். இந்தியா தன் அண்டை நாடுகள் மீதான போக்கை 1990 களின் மத்தியில் குஜ்ரால் வெளிநாட்டமைச்சராக இருந்த போது மாற்றியது. அதன் பெயரே Gujral doctrine. நிலமை இதுதான். ஒரு ஜனநாயக நாட்டில், அதிகாரிகள்தான் எல்லாம் என்றால் ஆட்சியில் அரசியல்வாதிகள் எதுக்கு.
  36. நீங்கள் கூறிய அந்த அரசியல்வாதி வந்தால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பச்சை மட்டை மூலம் சட்டங்களை அமுல்படுத்துவார். அதை கண்டு வியப்பு அடைய போகும் மேற்கு நாடுகளும் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பச்சை மட்டை யை கையில் எடுக்க, அண்ணன் உலக நாடுகளுக்கு எல்லாம் பச்சை மட்டை ஏற்றுமதி செய்து தமிழ் நாட்டு பொருளாதாரத்தை உயர்ததுவார். ஏற்கனவே நெய்தல் படை அமைத்து விடுவாரோ என்ற அச்சத்தில் இலங்கை கடற்படை அதிர்சசி அடைந்துள்ளதாம். 😂
  37. இதன் படி பார்த்தால் "மாநில அரசு" என்பது எங்கள் ஊர் மாநகர/நகர சபை போல "வாய்க்கால் தூரும்" அமைப்புகள் போல படுகிறதே? இன்னொரு சந்தேகம்: இந்த "வாய்க்கால் தூரும்" தமிழ் நாட்டு அரசின் தலைமையை யார் ஏற்றாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றாமல் ஈழத்தமிழர் பற்றியகொள்கைகளும் மாறாதே? பிறகேன் மொக்குத் தனமாக நடந்து கொள்ளும் ஒரு சாக்கடை தமிழக அரசியல் வாதியை எங்கள் ஆட்கள் முட்டுக் கொடுத்துத் தாங்குகிறார்கள்😂?
  38. கச்சதீவு தமிழர் பிரதேசங்களுக்கு நடுவில் தானே இருக்கின்றது.இரு பக்க தமிழர்கள் தானே அங்கு ஒன்று கூடினார்கள். பண்டமாற்று மற்றும் உறவு பரிமாற்றங்களை செய்தார்கள். இதற்கு கருணாநிதி அவர்கள் ஏன் பதை பதைத்தார் துடி துடித்தார்? 😎
  39. கேரளாவில் படிப்பறிவு வீதம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே (சம்ஸ்தானங்கள்) அதிகம். சுதந்திரத்துக்கு முந்தைய மெட்டிராஸ் பிரசெடென்சியில், இன்றைய கேரள பகுதிகள் இலங்கை போல வழமான இடமாகவும், அதிகாரிகள், ஆசிரியர்களை உருவாக்கும் இடமாகவும், இன்றைய தமிழ்நாட்டின், குறிப்பாக மத்திய, தென் தமிழ்நாட்டின் பகுதிகள் கூலி தொழிலாளர்க்ளை உருவாக்கும் இடமாகவும் இருந்தன. இலங்கைக்கு பிரிட்டிஷ் காலத்தில் வந்த மலையாளிகள் - ஆசிரியர்கள், கங்காணிகள், குறைந்தது டீ க்கடை போடுபவர்களாக வந்தனர் - ஆனால் தமிழர் தொழிலாளராகவே வந்தனர். இது கேரவாவிற்கு உள்ள நூற்றாண்டு கால early advantage. இதனால் கல்வி, பெண்கல்வி, சிசுக்கொலை என தமிழ் நாட்டை பீடித்துள்ள பலது கேரளாவில் இருக்கவில்லை. தமிழ்நாட்டை அதன் பிற்போக்குதனத்தில் இருந்து விடுவிக்க போராடியது போல் கேரளாவில் தேவைபடவில்லை. ஆகவே அங்கு கல்வியில், சுகாதாரத்தில், மாநில அரசின் கவனம் குவிவது இலகுவாகியது. பிற்போக்குதனத்தில் சுதந்திர்ந்த்தின் பின்னான தமிழ்நாடு ஆந்திரா, ஒரிசாவை போலவே இருந்தது. கேரளா அப்படி அல்ல. எண்ணிகை. கேரளாவில் சனத்தொகை தமிழ் நாட்டின் பாதி. கல்வியறிவு வித்தியாசம், 93% உம் 80% உம். இன்னும் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று கேரள கம்யூனிச, காங்கிரஸ் அரசுகள் போல ஆரம்பம் முதலே தமிழ்நாட்டு அரசுகள் செயல்படவில்லை. காமராஜர், 60 களின் பின் திராவிட கட்சிகள்தான் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தன. ராஜாஜி குலக்கல்வி வேண்டும் என்றார். அதே போல் கேரள கட்சிகள் அளவுக்கு, திராவிட கட்சிகள் இந்த விடயத்தில் தீவிர முனைப்பு காட்டவில்லை என்பதும் உண்மை. ஆனால் தனியே எழுத படிக்க தெரிந்த கேரளாவை விட தமிழ்நாட்டிலும், கர்னாநடகாவிலும் கல்வியில், தொழில் கல்வியில், ஐ.டி. யில் சிறப்பு தேர்ச்சி உள்ளதும் உண்மை. உயர் கல்வியில் தமிழ்நாடு முன்னேதான் நிற்கிறது. சுந்தர் பிச்சைகள், சிவன்கள் தமிழ்நாட்டில் வருவது போல் கேரளாவில் இல்லை. அதே போல் industrialization தொழில்மயமாதலில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் என நினைக்கிறேன். கச்சதீவு ஒரு மேட்டரே இல்லை. அது தமிழக அரசியல்வாதிகள் மாறி மாறி உதைக்கும் புட்போல். இதை நாமும் தூக்கி கொண்டு திரிவதுதான் எல்லாத்தையும் வெண்ட பகிடி. தமிழக மீனவர் இலங்கை நேவியிடம் அடி வாங்குவது கச்சதீவிலோ அதன் அருகிலோ அல்ல, நெடுந்தீவுக்கு அருகிலும், வல்வெட்டிதுறைக்கு அருகிலும். கச்சதீவு இந்தியாவிடம் இருந்தாலும் இது இப்படித்தான் இருக்கும்.
  40. அந்த கடல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இரு தரப்புகள் இலங்கையும், இந்திய மத்திய அரசும் மட்டுமே. இது சம்பந்தமான ஆவணங்களை பிறிதொரு திரியில் தந்துள்ளேன். நாட்டின் எல்லையை விட்டுகொடுப்பது, சுருக்குவது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் அதிகாரம். இது நடந்த போது கருணாநிதி அதை எதிர்க்கவில்லை, ஆதரவாக நடந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டே ஒழிய - கச்சதீவையோ, இச்ச தீவையோ சுவீகரிக்கும் அல்லது விட்டு கொடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.
  41. மீண்டும் மீண்டும் ட்ரம்ப்தான் ஆட்சிக்கு வர வேண்டும்👍
  42. என்னா வெயில் - நாவல் பழ யூஸ் ..
  43. இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை; ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும், புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம் என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக் கல்லினும் வலிதாகக் கருதினை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.