Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    1424
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33795
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15819
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    39307
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/25/25 in all areas

  1. இப்படி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிராமல், கனடாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடுக்காமல், மூட்டை முடிச்சுகளுடன் மீண்டும் இவர்கள் இந்தியாவிற்கே திரும்பிச் சென்றால் மகிழ்ச்சி. முக்கியமாக பஞ்சாபிகள் இவ்வாறான சிறந்த முடிவை ஒன்ராரியோவில் எடுத்தால் மிக்க மகிழ்ச்சி.
  2. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 43வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆயுஷ் மஹாத்ரேயையும் டெவால்ட் ப்ரெவிஸையும் தவிர மற்றைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் சோபிக்காததால் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களையே எடுத்தது. ஹர்ஷல் பட்டேல் 28 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்களும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இலக்கைத் துரத்துவதில் பின்னுக்கு நின்றாலும் இஷான் கிஷானின் 44 ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸின் 32 ஓட்டங்களும் 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைய உதவியது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் ஆறு புள்ளிகள் வித்தியாசத்தில் முதல்வர் நிலையை இறுக்கமாகத் தக்கவைத்துள்ளார்!
  3. புள்ளிகளில் முதல் ஜந்து பேரும் ஒரே அணியில். இது உண்மையிலேயே அதிசயம்தான். எப்டீங்க. கிளியுடனான கூட்டுத் தொடர்கிறது. ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள் சுவி நந்தன் இணைப்பாட்டம் மீண்டும்.
  4. ஒரு பாடைக்கு குறைந்தது 10000 ரூபா என்று பார்த்தாலும் 243 பாடைக்கும் ஏறத்தாள 2.3 மில்லியன் ரூபா தேவைப்படும். அதற்கு புலம் பெயர் நாடுகளில் திரள் நிதி வசூலிக்கப்பட்டால் அதற்கு பங்களிக்க நான் தயார். தமிழ் நாடு மக்களின் நன்மைகருதி முக்கியமாக பிரதான பாடைக்கு நான் பங்களிக்கத் தயார்.
  5. இது காகமும் இல்லை , கிளியும் இல்லை ......... இது காக்கிளி ......... (கால் கிளி , முக்கால்வாசி காகம் )....... ! 😂
  6. இதுக்கு பிறகு பதில் போடுவம் என்று பார்த்துக் கொண்டிருந்தன். இப்ப என்ன சொல்லுறியல். யார் யாரைத் தூக்கப் போகினம்.
  7. உலக கோப்பை போட்டியில் இந்தியா வெல்லும் என்று போட்டிருந்தாலும் விளையாடும் போது இந்திய தோல்வியை ரசிக்க மனம் துடிக்கும். இலங்கை அணியும் இப்படியே. அதுசரி தூக்கிறதுக்கு நான்கு பேர் தேவைதானே. மிகுதிப் பேர் நால்வரும் தூக்கப் போகிறீர்கள். உங்களில் ஒராள் இப்பவே எங்கள் ஆதரவாளர்களாகி விட்டார். கிளி பறந்தபடியால் இன்னுமொராளும் எங்கபக்கம் வரலாம்.
  8. இனி என்ன கீழ இருக்குற நாலு அணியும் அடுத்த பருவகாலத்துக்கு இப்பவே தயார் படுத்தத் தொடங்கலாம். அதே அணியையே அடுத்த வருசமும் இறக்கிற என்று தோனி சொல்லியிருக்கிறார் போல. வடிவேலு பகிடி மாதிரி, மாத்தி மாத்தி விளையாடலாம். சரியான அணியைக் கட்டமைக்க முயிற்சிக்கலாம். என்ன தேவை என்று அடையாளப்படுத்தலாம். மினி ஏலத்தில விடுபட்ட காய்களை வாங்கலாம். முக்கியமா, இங்க யாழ்களத்தில சேர்ந்தினம் என்றால், அவர்களுக்கு எல்லாம் விளங்கும். யாரை கலைக்க வேண்டும் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் பிரிச்சு மேயாத மேய்ச்சலா. கிருபன்தான் ஆவன செய்ய வேண்டும். 😁
  9. ஒரு மாதிரி அடிச்சுப் பிடிச்சு கிளியோட ஜோடி சேர்ந்தாச்சு. இனிப்பாருங்க காளிட ஆட்டத்த. ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்
  10. பழைய கூட்டணி சேர்ந்தாச்சு
  11. GMT நேரப்படி நாளை வெள்ளி 25 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR எதிர் PBKS 18 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் ஐந்து பேர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ஏராளன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் பஞ்சாப் கிங்ஸ் சுவி செம்பாட்டான் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  12. இது காகமா கிளியா என்று @ரசோதரன் கேட்டார். கிளி தானப்பா. கிளியைக் காட்டி காகம் என்று கிருபன் ஏமாற்றிவிட்டார்.
  13. டுபாய் நைக் ஜட்டி கதை தெரியாது கோசான். வடிவேலுவின்…. டுபாய், விவேகானந்தர் தெருவில் நடந்ததா… 🤣
  14. ஒரு கை குடுக்கிறீங்களா.நம்ம நாலு பேரும் எப்பிடி 19 பேரையும் தூக்கிறது.
  15. போட்டி awareness எவ்வளவு முக்கியம் என்று தற்போது விழுந்த விக்கட் சொல்லும். அனிகிட்டின் விக்கட் தேவையில்லாத ஆப்பு
  16. கனடாவின் சில விடயங்கள் எனக்கு இன்னும் புரியாத புதிர் தான். அவற்றுள் சில: பொருட்களின் விலைகள் அதிகம். இது அரசு போடும் விற்பனை வரி என்று நான் நினைத்திருந்தேன். அண்மையில் ஒரு பிபிசி கட்டுரையில் இன்னொரு முக்கிய காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்கள். கனடாவில், அமெரிக்காவை விட வர்த்தகப் போட்டி குறைவு எனவே, ஒரு சில வியாபாரிகளே மேலாண்மை (monopoly?) செய்து விலைகளையும் உயர்வாக வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். அமெரிக்காவில் இருப்பது போல, ஒன்ராறியோவில் பல உணவுப் பொருள் விற்கும் கடைகள் (Grocers) இல்லாமல் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அடுத்த அதிசயம், வீட்டுக் கடன் எடுக்கும் போது ARM எடுப்பது எங்கள் கனேடிய உறவுகளிடையே நான் அவதானித்திருக்கிறேன். மாதாந்த செலவு குறைவு என்பதால் கனடாவில் பிரபலம் என்பார்கள். "வட்டி அடுத்த அட்ஜஸ்ட்மென்ரில் கூடாது என்று என்ன நிச்சயம்?" என்று கேட்டால், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள். வீட்டுக் கடனில் அடுத்த 5 வருடத்தை திட்டமிடாத அதே ஆட்கள், "பெற்றோல் விலை 5 சதம் அதிகரிக்கப் போகிறதாம்" என்று செய்தி வந்ததும், வீதியை மறித்து பெற்றோல் நிரப்பும் நிலையங்களில் வாகன வரிசை கட்டுவதும் இன்னொரு புதிர்😂!
  17. கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருக்கும் மக்கள் வரி மூலம் வழங்கப்படும் மருத்துவ சேவையில் இது ஒரு இயல்பாக இருக்கிறது. கனடாவில், மாகாணங்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் அதிகாரங்களை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன் (இப்படிச் செய்திருக்கா விட்டால் நிலை இன்னும் மோசமாக இருந்திருக்கும்). கனடாவின் வயதானோரின் தொகை (ஏனைய மேற்கு நாடுகளில் நடப்பது போலவே) அதிகரித்து வருவதாலும், மருத்துவ சேவைகளின் செலவு அதிகரித்து வருவதாலும் இப்படியான நிலைமைகள் உருவாகியிருக்கின்றன. உண்மையில், எந்த நாடும் இலவசமான மருத்துவ சேவையை வழங்க முடியாது, யாரோ ஒருவரின் செலவில் தான் அது நடக்க வேண்டும் (இலங்கையில் அரசு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை/கடன் பெற்று இலவச சேவையை வழங்குகிறது). ஆனால், எந்த மருத்துவ சேவையிலும் சில விடயங்களைத் தவிர்க்க முடியாது. உதாரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவிற்கு ஒருவர் சென்றால் அவரது நோய்த்தீவிரத்தைப் பொறுத்துத் தான் முன்னுரிமை கிடைக்கும். எனவே, மூக்கில் இருந்து இரத்தம் வரும் ஒருவரை, நெஞ்சு வலியில் வரும் ஒருவரை விட காக்க வைத்துத் தான் உள்ளே எடுப்பர். இதை Triage என்பார்கள். இப்படி அலைக்கழியாமல் இருக்க ஒரு வழி, உயிர் ஆபத்தான நிலைகள் தவிர்ந்த சந்தர்ப்பங்களில் அம்புலன்சை அழைக்காமல், உடனடி முதலுதவி கிடைக்கக் கூடிய Urgent care சிகிச்சை நிலையங்களை நாட வேண்டும். எது உயிர் ஆபத்தான நிலை, எது சாதாரண உபாதை என்று புரிந்து கொள்ள, எங்கள் உடல் பற்றிய கொஞ்சம் புரிதல் எங்களுக்கு இருக்க வேண்டும். https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC7138369/ 👆2018 இல் வெளிவந்த ஒரு கட்டுரையின் படி, அமெரிக்காவை விட கனடா ஒரு பிரஜைக்கு மருத்துவத்திற்காக செலவிடும் தொகை பாதியாக இருக்கிறது. ஆனால், 1000 பேருக்கு இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை, தாதியரின் எண்ணிக்கை, 10,000 பேருக்கு இருக்கும் மருத்துவமனைக் கட்டில்களின் எண்ணிக்கை என பல அளவீடுகள் - health service metrics கனடாவிலும் அமெரிக்காவிலும் ஒரே எண்ணிக்கையாகத் தான் இருக்கின்றன.
  18. நான் எழுத நினைத்ததை நீங்களே எழுதிவிட்டீர்கள். பாகிஸ்தானில் அண்மையில் ரயில் ஒன்றின் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு பின்புலமாக இந்தியாவின் உளவு நிறுவனமும், அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட குழுவும் தான் காரணம் என்பது உலகிற்கும் பாகிஸ்தானியர்களுக்கும் மோடிக்கும் தெரியும். நீ எதை மற்றவர்களுக்கு செய்கின்றாயோ, அதுவே உனக்கு திரும்பி வரும்.
  19. அவர் வரும் போது 6 பரிமாற்றங்கள் இருந்தன. 120 சொச்ச ஓட்டங்கள் அடிச்சிட்டினம். ஒரு பந்துப் பரிமாற்றத்துக்கு 10 படி அடிச்சாலும் 180 ஓட்டங்களுக்கு கிட்ட அடிக்கலாம். ஒன்று ஒன்றா தட்டி ஓடி ஓடி விளையாட வேண்டிய நேரம். அவர் என்ன செய்தாரு. சும்மா தட்டி தட்டி நின்று 10 பந்துகளைத் தின்று 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவருக்குக் கூடவா அந்தப் போட்டி நிலைவரம் தெரியவில்லை. என்னங்க. நேற்று ஜீரல் அப்பிடி ஆரம்பிச்சாலும் பின்னர் அடிச்சு ஆடினார். ஜீரலைப் போட்டு உருட்டினீங்களே.
  20. அஜித், ஷாலினி, மகள் எல்லோரும் வந்திருக்கினம்!
  21. உங்களுக்கு இன்னும் மொயின் மோகம் போகேல போல. போன போட்டியில மொயினப் பாத்தனீங்கள் தானே. அவற்ற காலமெல்லாம் முடிஞ்சு கனகாலமாச்சு. உங்களுக்குப் பிடிச்ச சென்னை அணியச் சொல்லுங்க பாப்பம். 12 பெயர வரிசையா. 😆
  22. சென்னைக்கு யாரும் ஆறு கடக்கக் கூடாது என்று ஒரு தடை போட்டிருக்கிறார்கள் . ....... விதிவிலக்கு தோனிக்கு மட்டும் .......கடைசி ஓவரில் வந்து ஓரிரு ஆறு அடித்து விட்டு சுபம் போட்டு விடுவார்கள் . ........! 😂
  23. சிவநேசதுரை சந்திரகாந்தன் நாட்டின் தேசிய வீரன், டான் பிரியஸாத் சமூக சேவகர், கஜ்ஜா குறிப்பிடப்படவில்லை. இந்த சந்திர காந்தன் பிணையில் வந்தால், அவரும் மேலே அனுப்பிவைக்கப்படுவார். இன்னும் ஒரு சிங்களப்பாடகரையும் குறிப்பிடுகிறார்கள். ஒரு வேலையாளை ஒழித்துக்கட்ட இன்னொரு வேலையாள் அமர்த்தப்படுகிறார். அமர்த்துபவர்கள் ஒழியுமட்டும் இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
  24. "கிளீன் ஸ்ரீலங்கவுக்கு" வந்த சோதனை. 😂
  25. ஜயகோ. எதுக்கும் மனதைத் திடப்படுத்தி வையுங்க. பழைய பன்னீர்ச்செல்வமா திரும்பி வருவாரா. இல்லை என்றுதான் நினைக்கிறன்.
  26. அது சரிதான். ஆனால் அந்த நேரத்தில குருனாலும் மற்றைய சுழளர்களும் நன்றாக வீசிக்கொண்டிருந்தனர். அது காரணமாக இருக்கலாம். பாவம் இந்த முறை மன்னிச்சு விட்டுடுவம்.
  27. எனது அபிப்பிராயம் துருவ் ஜுரல்தான் ராஜஸ்தானின் தோல்விக்கு காரணம் என கருதுகிறேன் (யாருடைய தலையாவது உருட்டத்தானே வேணும்🤣), 8.75 ஓட்ட விகிதம் உள்ள நிலையில் களத்திற்கு வந்தவர் தடுப்பாட்டத்தில் இறங்கினார். ஓவருக்கு குறைந்தது 6 ஓட்டங்களை இலகுவாக எடுக்கும் நிலையில் கூட அதனை எட்டவில்லை, ஜுரல் தோனியினை போல விளையாடுபவர் என இணையத்தில் அவர் மேல் இரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் (தேவையில்லாமல் அதிக ரன் ரேட்டிற்கு உயர்த்திவிட்டு பின்னர் 6 கள் அடித்து கதாநாயகனாக ஆட்டத்தினை முடிப்பது). அதனால் அவருடன் கூட்டணியில் இருந்த நிதிஸ் ரானாவிற்கு அழுத்தம் ஏற்பட்டு தனது தவறான ஆட்ட தெரிவின் மூலம் தேவையற்று ஆட்டமிழக்கும் நிலை உருவானது. விக்கெட் விழுந்ததனால் மேலும் அழுத்தம் அதிகரித்து விக்கெட்டினை காக்கும் முயற்சியில் மேலும் ஓட்ட விகிதம் அதிகரித்தது. நல்ல தொடக்கத்தினால் ஏற்பட்ட சாதாரணமாக விரட்ட வேண்டிய இலக்கை கடினமாக்கியவர் ஜுரல். இதே போலவே முந்தய போட்டிகளிலும் செய்தார், சாம்சன் அணிக்குள் மீண்டும் வந்தால் ஜுரலை நீக்கி விடலாம் என கருதுகிறேன். நிச்சயமாக ட்ராவிட் ஜுரலுடன் கதைப்பார் என கருதுகிறேன். SRH தரமான அணி, சென்னை அணி பல அணி வீரர்கள் போர்மிற்கு வர உதவுகின்ற அணி இன்று கைதராபாத்திற்கும் அந்த உதவியினை செய்வார்கள் என கைதராபாத் ஏன் எதிர்பார்க்கக்கூடாது?🤣
  28. அரகலயவில் ஊர்வலமாக வந்த பசில் காகம் .....இது என்ன மாய்மாலம் செய்யுமோ ..
  29. இவரின் பேரும் போப்புக்கு பரிந்துரைக்கப்பட்டதாக அறிகிறேன். எவ்வளவு தூரம் உண்மை என தெரியவில்லை.
  30. அடுத்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுக்க வேணுமல்லோ....🤣 அனுராதபுரத்தில் டோழர் கோஸ்டி துறைமுகம் கட்ட போயினம் என சொன்னாலும் நாங்கள் நம்புவோமல்ல
  31. 'கிளிக்கு றெக்கை முளைச்சிட்டுது.........................' 🤣..................... சிவாஜி போல ரத்தம் கக்கிக் கொண்டு இருக்கின்றன இந்த இரண்டு அணிகளும்............ டி-20 இல் சிக்ஸரும் அடிக்கலாம், அதில் எந்த தப்புமே இல்லை என்று சென்னை அணிக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கின்றார்களாம்...........................
  32. மரதன் ஓட்டப் போட்டியில் ஆரம்பத்தில் யார் முன்னுக்கு நிற்கிறார்கள் என்பது பிரச்சனை இல்லை. கடைசியில் யார் முன்னுக்கு வருகிறார்கள் என்பதே வெற்றி. இதே கோட்பாட்டோடு @goshan_che மெதுவாக முன்னேறிக் கொண்டே வருகிறார். வழமையான போட்டிகளில் @Ahasthiyan முன்னணியில் நிற்பார். இந்த தடவை ஒரேயடியாக கீழே நிற்கிறார். தம்பி கிளியைத் தூக்கியாச்செல்லோ!
  33. சரி என்னுடைய கருத்தும் அது தான் தமிழ் நாட்டில் சீமான் தலைமையில் அவரது கட்சசி வளர்ந்தே வருகின்றது . அடுத்த சட்டசபைத் தேர்தலில் (2026) சீமானின் நா த க 12 விழுக்காடு வாக்குகளுக்கு மேலே👍 பெற்று உங்கள் பந்தயத்திற்கு நான் ரெடி தோற்றால் அதாவது சீமான் 12 விழுக்காடு வாக்குக்களை பெறாவிட்டால் நான் இந்தக் களத்தில் நீங்கள் சொல்லும் ஒத்தை யூரோவை நன்கொடையாக அளிக்கின்றேன். 🙏
  34. பொட்டுவைத்திருந்தால் போதும் அடி விழும்...இன்று பொட்டு,விபூதி,குல்லா போட்டவன் எல்லாம் சிறிலங்கன்ஸ் என அடிச்சு துவசம் பணிணைனவையளே கூவிக்கொண்டு திரியினம் ... மோடி ஜீ இது கிரிக்கட் விளையாட்டு அல்ல.... பங்காளதேஷ் மீண்டும் பாகிஸ்தானுடன் இணையப்போகின்றதாம் என முஸ்லீம் ஆய்வாளர்கள் கருத்து சொல்லுயினம்...மோடி ஜீ தடுப்பாரா?உங்களுக்கு உதவிகள் தேவை என்றால் டோழர் அனுராவிடம் கேளுங்கோ...
  35. ராஜஸ்தான் மிக இலகுவாக வெல்லவேண்டிய மூன்று போட்டிகளை தோற்றதற்கு காரணம் நல்ல பினிஷெர்ஸ் இல்லாததே! பராக், ஜுரேல்,ஹெட்மேயருக்கும், பட்லருக்கும் அதுதான் வித்தியாசம்! கோலிக்கு அடுத்தபடியாக பெஸ்ட் சேசர் படலர்தான்!! ஜுரேலை ஏலத்தில் குறைந்த விலைக்கே எடுத்திருக்கலாம்! ஜுரேல் ஆரம்பத்தில் மெதுவாக ஆடியதும் தோல்விக்கு ஒரு காரணம்! 34 பந்துகளில் 13 பந்துகளுக்கு ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை! KKR வெங்கடேஷை 23 கோடிக்கு எடுத்து பில் சோல்ட்ட கோட்டை விட்ட மாதிரி!
  36. இந்தப் போலி தமிழின இனத்துவேசிக்கு...இந்த கர்தினால் பட்டமே ..தேவையற்றது
  37. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 42வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் விராட் கோலியும் டேவ்தட் படிக்கலும் வேகமாக அடித்தாடி எடுத்த அரைச் சதங்களுடனும் பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புயல்வேகத்தில் 49 ஓட்டங்களை எடுத்து சவாலான வெற்றி இலக்கை அடையக் கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தினர். பின்னர் வந்த வீரர்களின் விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 18 ஓவர்கள் முடிவில் வெற்றிபெற 18 ஓட்டங்களே தேவைப்பட்டிருந்தது. எனினும் 19வது ஓவரில் ஜொஷ் ஹேஸல்வூட் இரு விக்கெட்டுகளையும், 20 ஓவரில் யஷ் தயால் ஒரு விக்கெட்டையும், இன்னொரு விக்கெட்டை ரண் அவுட் மூலமாகவும் அதிக ஓட்டங்களைக் கொடுக்காது எடுத்ததனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிவாய்ப்பு கைநழுவியது. இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 11 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: அப்ப @செம்பாட்டான் வருடாவருடம் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கின்றவராக்கும்! இந்த வருஷம்தான் பார்க்க ஆரம்பித்தேன் என்று சொன்னமாதிரி இருந்தது 🤪
  38. எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் . ........ ! 😂
  39. அதன் நவீனமயப்படுத்தலை யார் எப்படி பார்த்து உறுதிப்படுத்துவதாம் ? பாட்டி எப்போதும்போல் முகட்டை பார்த்துக்கொண்டிருக்கிறார். இவர்கள்? ஹா ஹா அவர்களும் அதேதான், எப்போதும்போல். மரண வீடாக இருந்தாலும் இதுதான் நடக்கிறது.
  40. 🤣 குறிகாட்டுவான் பெயர் பொருத்தம் அந்தமாதிரி. அது சரி குறிகாட்டுவான் புங்குடுதீவுதானே? முதலில் செய்யும் ஜட்டியை கதிர்காம கந்தனுக்கு காணிக்கையா அனுப்புங்கோடாப்பா. அந்தாள் வருச கணக்க்கா வெயிட்டிங்🤣🤣🤣
  41. காணொளி: 👉 https://www.facebook.com/reel/9840218522704246 👈 👆 குறிகாட்டுவானில்... ஜட்டி தொழிற்சாலை வரப்போகுதாம். 😅 இன்றே வாங்கிப் பாவியுங்கள்... குறிக்கட்டுவான் ஜட்டிகள். 🤣 @குமாரசாமி , @goshan_che , @suvy , @ஈழப்பிரியன் , @alvayan , @satan , @nunavilan , @Kandiah57 , @putthan, @நிழலி , @உடையார், @புலவர் , @ஏராளன் , @கிருபன் , @விசுகு , @பாலபத்ர ஓணாண்டி, @பெருமாள், @புங்கையூரன், (குறிகாட்டுவான் படகுத்துறை | kurikadduvan jetty)
  42. தெரிவு - சோம.அழகு காலைப் பொழுதின் பரபரப்பைச் சற்றே பின்னுக்குத் தள்ளி அமைதி நிறைந்த சில மணித்துளைகளையேனும் தனக்கானதாக்கிக் கொள்ளும் கலை மிக இயல்பாகக் கைவரும் உவளுக்கு. மாடத்தில் உவளுக்கென காத்திருக்கும் இளவெயிலிடம், இளஞ்சூட்டிலான பால் கோப்பையுடன், தனக்குப் பிடித்த எழுத்தை வாசிக்கவோ பகிரவோ இல்லை எனில் உவளால் அந்நாளையே துவக்க இயலாது. அப்படித்தான் அன்றும், சக்தி என்பான்! குலசாமி என்பான்! தாயே துணை என்பான்! மனைவியே தெய்வம் என்பான்! மகளே உலகம் என்பான்! கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டு என்பான்…! என்ற தோழர் மதியின் கவிதையுடன் கதிரவனும் தகிக்கத் தொடங்கியிருந்தது. இதை வாசித்ததும்தான் உவளுக்குத் திடீரென நினைவிற்கு வந்தது. தேநீர் மேசையில் நீட்டியிருந்த கால்களைச் சட்டென மடக்கிக் கீழே தொங்க விட்டுச் சிறு பதற்றத்திற்குள்ளானாள். இந்த மாதம் உவளுக்கு மாதவிடாய் வரவில்லை. அவசர அவசரமாக அலைபேசியை எடுத்து நாள்காட்டியில் நாட்களைக் கணக்கிட்டாள். பத்து நாட்கள் தள்ளிப் போயிருந்தது. இது முற்றிலும் வழக்கமற்ற ஒன்று. உவன் எழுந்துவிட்டதைக் கூட பொருட்படுத்தாத அளவிற்கு மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஈர முகத்தைத் துடைத்தவாறே உவள் அருகில் வந்து அமர்ந்தான். “காபி எடுத்துட்டு வரேன்” என்றாவறே அடுப்படிக்குச் சென்றாள். கூறாமை நோக்கக் குறிப்பறியும் உவனிடம் இருந்து தற்காலிகமாகத் தப்பிச் சென்றாள். காபி கொண்டு வந்தவளிடம், “என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றான். “ஒண்ணுமில்லையே” என்று சமாளிக்க முயன்றவளை “வழக்கமான புன்னகையைக் காணோமே” என்று மடக்கினான். நெஞ்சம் கடுத்தது காட்டும் தன் முகத்தில் செயற்கையாக முகமலர்ச்சியைக் கொண்டு வர முனைந்தவளிடம் “Good try! ஆனா ஒட்டவே இல்ல. இப்ப என்னன்னு சொல்லப் போறியா? இல்லையா?” என்று காபியின் ஒரு மிடறை உள்ளிறக்கியவாறே கேட்டான். சொன்னாள். “வாவ்” என்று விளையாட்டாகச் சிரித்தான். உவளது இதயத்துடிப்பை அது இன்னும் அதிகரித்தது. மேலும் பேச்சைத் தொடர விரும்பாமல் காலை உணவைத் தயார் செய்யச் சென்றாள். “பாத்து… மெதுவா நட” என்று அக்கறையான தொனியில் உவன் கிண்டலாகக் கூற செல்லமான கோபத்துடன் உவனைத் திரும்பிப் பார்த்தாள். அடுப்படி அலமாரியில் கொஞ்சம் உயரத்தில் இருந்த சட்டியை எட்டி எடுக்க முற்பட்ட உவளிடம், “தள்ளு… நான் எடுத்துத் தர்றேன். இந்த நேரத்துல இப்பிடில்லாம் எக்கக் கூடாது” என்று கண்களைச் சிமிட்டியவாறே சட்டியை எடுத்துக் கொடுத்தான். உவளும் பதிலுக்கு விளையாட்டாக உவனது வயிற்றில் லேசாகக் குத்தினாள். இதற்குள் உவர்களது மூன்று வயது மகள் “அம்மா…” என்று கண்களைக் கசக்கியவாறே படுக்கையில் இருந்து எழுந்து வந்தாள். தூங்கி விழித்ததில் காலைக் கதிரொளியினால் அக்குட்டிக் கண்கள் இன்னும் கூசிக் கொண்டிருந்தன போலும். சுருங்கியிருந்த கண்கள் மெல்ல மெல்ல வெளிச்சத்திற்குப் பழகிக் கொண்டிருந்தன. ஓடிச் சென்று மகளை வாரி அணைத்தவள், “நல்ல தூங்குனியாடா ராஜாத்தீ? முகம் கழுவிக்கிறீங்களா, தங்கம்? அப்புறம் பால் குடிக்கலாம்” என்றவாறே கொஞ்சியபடி குழந்தையைத் தூக்கினாள். “ஹே! இந்த மாதிரி நேரத்துல வெயிட்லாம் தூக்கக் கூடாது” என்று மீண்டும் உவளைச் சீண்டினான். “ப்பா..” என்று அழுவதைப் போல் முகத்தைச் சுளித்தவாறே சிரித்தாள். “ஓ! அதான் கொஞ்ச நாளா முகம் பளிச்சுன்னு இருக்கா? அப்பவே சந்தேகப்பட்டேன்” என்று வம்பிழுத்தான். “சும்மாதான் இருங்களேன் ப்பா” என்றவாறே குழந்தைக்குப் பல் தேய்த்துவிட அழைத்துச் சென்றாள். அனைவரும் குளித்துக் கிளம்பி காலை சிற்றுண்டி நடந்து கொண்டிருந்தது. “நல்லா சாப்பிடுடா… இப்போதான் நல்லா சாப்பிடணும். தெம்பு வேணுமில்ல?” – உதட்டின் ஓரம் நெளிந்த சிரிப்பை அடக்கி உவளிடம் சொன்னான். இருந்த அவசரத்தில் குழந்தைக்கு ஊட்டிவிட்டபடியே உவனை லேசாக முறைத்தாள். குழந்தையைப் பள்ளியில் விட்ட பின் உவளை நூலகத்தில் விடும் வழியில் வழக்கத்திற்கு மாறாக வேண்டுமென்றே நல்ல குத்துப்பாட்டாக மகிழுந்தினுள் ஒலிக்க விட்டு குஷியான மனநிலையில் ஆடியபடியே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். நூலகம் வரை உவன் மீது படர்ந்திருந்த உவளது உக்கிரமான பார்வையைக் கண்டு கொள்ளாதது போலவே பாடல் வரிகளை உரத்துப் பாடித் தன் மகிழ்ச்சியான மனநிலையை வெளிப்படுத்தினான். “பாத்து… பத்திரம். எதுவும்னா கூப்பிடு” உவனது வார்த்தைகள் காதில் விழுந்தாலும் ஒன்றும் சொல்லாமல் இறங்கிச் சென்று விட்டாள். அன்று மதியம் பள்ளி முடிந்து குழந்தையை அழைத்துக் கொண்டு வீடு வந்தவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. குழந்தைக்கு விளையாட்டு காட்டியவாறே சோறூட்ட முயன்றாள். முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது. பல வகையான யோசனைகள் உவளை இயங்கவே விடவில்லை. இத்தலைமுறையினருக்கே உண்டான கூகுள் வியாதி உவளையும் அன்று பீடித்தது. என்னவெல்லாமோ தேடினாள். பப்பாளி பழச் சாறு, அன்னாசிப் பழச் சாறு எனத் தொடங்கி தாம் வசிக்கும் மாகாணத்தில் பன்னிரண்டு வாரத்திற்குள் கருக்கலைப்பு செய்து கொள்வது சட்டப்படி பிரச்சனை இல்லை என்பது வரை கன்னா பின்னாவென தேடினாள். திடீரென, “அய்யோ! என்ன செய்து கொண்டிருக்கிறேன்? உவன் எவ்வளவு ஆசையாக இருக்கிறான் இன்னொரு குழந்தைக்கு? நான் ஏன் இப்படி….? ச்சை” என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். தன்னை நினைத்து கொஞ்சம் அருவருப்பு கூட மேலிட்டது. “உடன்பிறப்புன்னு கூட ஒண்ணு இருந்தா நாள பின்ன ஒண்ணுக்கொன்னு ஒத்தாசையா ஆதரவா இருக்கும்ல” – இதைச் சொல்பவர்கள் அனைவரும் தங்களது உடன்பிறப்புக்களுடன் ஒட்டும் உறவுமாகவா இருக்கிறார்கள்? எனவே வருங்காலத்தில் இதற்குப் பெரிய அர்த்தம் ஒன்றும் இருக்கப்போவதில்லை. நல்ல உடன்பிறப்பு அமைவது உறுதியல்லவே! ஆனால் நமது தெரிவு நல்லதொரு கேண்மையை நிச்சயம் கொண்டு வரும். அது உடன்பிறப்பின் இடத்தை மிக அழகாகச் சமன் செய்துவிடும் வாய்ப்புகள் அதிகம். தனக்குள் முன்னும் பின்னுமாக முட்டி மோதிக் கொண்டிருந்த எண்ணவோட்டங்களினால் பொழுது மாலையைச் சூடிக் கொண்டதை உவள் உணரவே இல்லை. உவனால் எழுந்த கதவு தட்டலின் ஒலிதான் உவளை உசுப்பியது. கதவைத் திறந்ததும், “தூங்கிட்டு இருந்தியா?” என்று கேட்டான். இல்லை என்பதாகத் தலை ஆட்டினாள். “நல்லா ஓய்வெடுக்க வேண்டியதுதான? அதான் உடம்புக்கு நல்லது” – மறுபடியும் துவக்கினான். “ப்ச்” என்றபடியே திரும்பிச் சென்று தேநீர் தயாரிக்கலானாள். உவன் உடை மாற்றிக் கொண்டு வரவும் தேநீர் கோப்பையை உவன் கைகளில் தந்தாள். “நீ பால் குடிச்சியா? இங்க வா… வந்து உக்காரு. நான் போட்டுத் தரேன்” – இப்போது உவளுக்கு நிஜமாகவே உதறத் துவங்கியது. அதை மறைத்துக் கொண்டு, “இப்போ எதுக்கு திடீர்னு இவ்ளோ அக்கறை?” என்றாள். “திடீர்னு ஒண்ணும் இல்லையே. எப்பவும் உள்ளதுதான்” என்றான். “ஒருவேளை…” – அதற்கு மேல் தொடர சரியான வார்த்தைகளின்றி உணர்ச்சிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். “ஹ்ம்ம்?” என்று கோப்பையிலிருந்து பார்வையை அகற்றி நிமிர்ந்து பார்த்தான். “உங்களுக்கு நிஜமாவே இப்போ இன்னொரு குழந்தை வேணுமா?” – என்னத்தைப் போட்டு பூசி மெழுகி…? பளிச்செனக் கேட்டு விட்டாள். “இருந்தா நல்லாதான் இருக்கும். ஏன்? உனக்கு வேண்டாமா?” “‘இப்போதைக்கு’ வேண்டாம்” – ‘இப்போ’வில் உவள் தந்த அழுத்தம் உவனைச் சென்றடைந்ததா என உவனது கண்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தாள். “ஹ்ம்ம்ம்… சரிடா” என்று மிகச் சாதாரணமாகச் சொல்லி முடித்துவிட்டான். மேற்கொண்டு அதைப் பற்றி உவன் பேச விரும்பவில்லையா அல்லது பேச ஒன்றும் இல்லை என்று விட்டுவிட்டானா என உவளுக்குப் புரியவில்லை. “ஒருவேளை நான் இப்போ உண்டாயிருந்தா என்ன பண்றது?” – தயங்கியபடியே கேட்டாள். “அத நீதான் சொல்லணும்” – தேநீரைக் காலி செய்தபடியே மிகவும் நிதானமாகச் சொன்னான். எப்படி இவனால் இவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடிகிறது? “அது வந்து…. இப்போதான் பாப்பா அவளோட வேலைய கொஞ்சம் தன்னால செய்யப் பழகுற பருவத்துக்கு வந்துருக்குறா… அதுக்குள்ள இன்னும் ரெண்டு மூணு வருஷம் மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்க கொஞ்சம்….. அதுவும் நான் இன்னும் வேலைக்கும் போகல…” - ஆங்காங்கே நிறுத்தியும் வார்த்தைகளை விழுங்கியும் கூறினாள். “அததான் சொன்னேன்… உன் முடிவுதான்னு. ஒருவேளை நீ இப்போ மாசமாயிருந்து, கலைக்குறது உன் உடம்புக்கு நல்லதில்ல, அதனால இப்போ பெத்துக்குறத தவிர வேற வழி இல்லன்னு மருத்துவர் சொல்லும் அளவிற்கான சூழல் இருந்தாலும் கவலைப்படாத. உன்னையும் ரெண்டு பிள்ளைகளையும் நான் பாத்துக்குறேன். உனக்கு பிடிச்சதைச் செய்ய எந்தத் தடையும் இல்லாம ஏற்பாடு பண்ணித் தரேன். மருத்துவப் பரிசோதனைகள் அப்படி சொல்லாத பட்சத்துல எனக்கு இன்னொரு குழந்தை வேணும்னு ஆசை இருக்குங்குறதுக்காகவெல்லாம் நீ பெத்துக்கணும்னு அவசியம் இல்லை. உன் உடம்புதான் முக்கியம்.” என அதீத புரிதலுடன் பேசினான். “நீங்க வேற காலைல இருந்து ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க… அதான்” “அடேய்! அது சும்மா உங்கிட்ட ஒரண்ட இழுத்துட்டு இருந்தேன். அதெல்லாம் பெருசு பண்ணாத” என்று உவளுக்குச் சாதகமாக ஆறுதலளித்தான். தனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டங்களை எடுத்துரைப்பது அத்தனை எளிதல்ல என உணர்ந்தாள். இன்னொரு குழந்தை பெற்றும் கொள்ளும் எண்ணம் உவளுக்குப் பெரிதாக இல்லை. அதிலும் இப்போதைக்குக் கண்டிப்பாக இல்லை. இருந்திருந்து இப்போதுதான் சிறிது மூச்சு விட நேரம் கிடைத்தாற்போல் இருக்கிறது. பிள்ளை பெறுவதைப் பற்றி நினைத்தாலே…. வயிற்றைத் தள்ளிக் கொண்டு மூச்சு வாங்கியபடியே ஒன்பது மாதத்தையும் கழித்தது; நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, குமட்டல், குறுக்கு வலி; சுறுசுறுப்பு என்ற சொல்லே மறந்தாற்போல் எப்போதும் மந்தமாகவே இருந்தது; தூங்கித் தூங்கி விழுந்தாலும் சரியான தூக்கம் இன்மையால் அவதிப்பட்டது; பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம்; அகச்சுரப்பிகள், இசைமங்கள்(hormones) என எதுவுமே தன் கட்டுக்குள் இல்லாது தாறுமாறாக இயங்கியது; கர்ப்பப்பை கட்டிகளினால் ஏற்பட்ட அளவிற்கு அதிகமான இரத்தப்போக்கு; அதீத சோர்வு; தன் உடலைக் கவனிக்கக் கூட நேரம் இல்லாமல் போனது; தற்போது வரை குழந்தையின் பின்னாலேயே ஓடிக் கொண்டிருப்பது; கருவுற்றதில் இருந்து தற்போது வரை உடல்நிலையாலோ நேரமின்மையாலோ வாசிக்கவும் படிக்கவும் இயலாமல் போனது - என எல்லாமே ஒரு கணம் அகக்கண்ணில் வந்து பயமுறுத்தின. தன் ஆசைக்கும், நீளமான நாக்குகள் பலவற்றைக் கொண்ட ஊர் வாயை அடைக்கவும் என கண்மணியாக ஒரு பிள்ளை பெத்தாயிற்று. இவளை நன்கு படிக்க வைத்து ஆளாக்கினாலே போதும்தான். தான் வேலைக்குச் சென்று ஓரளவு சொந்தக் காலில் ஊன்றி நின்று தனக்கான அடையாளத்தை உருவாக்கிய பின், பொருளாதாரச் சூழலோடு உடலும் மனதும் தயாரான பின் உவனது ஆசைக்காக வேண்டுமானால் பின்னர் இன்னொன்று பெற்றுக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லை என நினைத்தாள். அதை விடுத்துச் சும்மா சும்மா குட்டி போட்டுக் கொண்டு அம்மா மற்றும் தங்கையின் உதவியை நாடுவது கொஞ்சம் வெக்கங்கெட்டத்தனமாகவே தோன்றியது உவளுக்கு. வழக்கம்போல் மனக்குழப்பத்தின் போது தன்னுடனேயே பேசுவதைப் போன்ற உணர்வைத் தரும் தங்கையை நாடினாள். அவள் இன்னும் ஒருபடி மேலே சென்று ஒரு தெளிவான மனநிலையை எட்டவும் உதவுவாள். “வாந்தி, தலைசுத்தல் மாதிரி ஏதாவது இருக்கா?” எனக் கேட்டாள் தங்கை. “மொதல்ல உண்டாயிருந்தப்பவே அதெல்லாம் பெருசா இல்லையே. குமட்டல் மட்டும்தான இருந்துச்சு? நேத்து ராத்திரி சாப்பிட்டு முடிச்சவுடனே அப்போ மாதிரியே குமட்டுச்சு” “Pseudocyesis, maybe” “அப்பிடீன்னா?” “Phantom pregnancyயா கூட இருக்கலாம். சோர்வா இருக்கா?” “இல்ல. ஆனா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு pregnancyயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதெல்லாம் வச்சு சொல்ல முடியாதுல்ல?” அதன் பிறகு உவளது மனக்கலக்கம் குறித்து எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டுத் தங்கை சொன்னாள் – “இங்க பாரு. இப்போ மறுபடியும் நீ உண்டானா அது எங்களுக்கு சந்தோஷமான விஷயம்தான். சந்தோஷம் மட்டும்தான் எங்களுடையது. உன் வலியை எங்களால வாங்கிக்க முடியாது. உனக்கான எல்லா உதவியை மட்டும்தான் நாங்க செய்ய முடியும். மேலும் குழந்தைங்குறது ரொம்பப் பெரிய பொறுப்பு. அதுக்கு நீ தயாரான்னு யோசிச்சுக்கோ. உன்னை மட்டும் வச்சி யோசி. இதுல சரி தப்புன்னு ஒண்ணுமே கிடையாது. நீ உன்னையும் உன் வளர்ச்சியையும் தேர்ந்தெடுக்குறது சுயநலம் கிடையாது. ஒரு பொண்ணோட உடம்பும் மனசும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவளைத் தவிர சுற்றியிருக்கும் வேறு ‘யாருக்கும்’ கருத்து சொல்லவோ முடிவு எடுக்கவோ உரிமை கிடையாது… கணவனே ஆயினும் கிடையாது! உன் விஷயத்துல அத்தானே உன் பக்கம்தான் நிக்குறாங்க. தைரியமா முடிவு எடு. புரிஞ்சுப்பாங்க” எல்லோருக்கும் எப்படி இவ்வளவு லேசான விஷயமாகத் தோன்றுகிறது இது? இருவரும் உவளது மூளைக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்களைத் தான் கூறிக்கொண்டிருந்தார்கள். அதை மனதிற்குக் கடத்துவதுதானே பெரும்பாடு! Pregnancy Kit வாங்கிப் பரிசோதித்துப் பார்க்கும் மனத்திடம் சுத்தமாக இல்லை. இரண்டு நாட்களாக உழன்று கொண்டே வந்தவள் மிகவும் தயங்கியபடியே அலுவலகத்தில் இருக்கும் உவனை அலைபேசியில் அழைத்தாள். “ப்பா!” “ம்ம். சொல்லுடா…” – மறு முனையில் பரபரப்பான சூழ்நிலையிலும் அழைப்பிற்குப் பதில் தந்தான் உவன். “கொஞ்சம் வரும்போது பப்பாளி வாங்கிட்டு வர்றீங்களா?” “ஹ்ம்ம். சரி டா. நான் கடைக்குப் போய்ட்டு வீடியோ கால் பண்றேன். எதுன்னு நீயே பாத்துச் சொல்லு” – எவ்விதத் தடுமாற்றமும் இன்றி மிக இயல்பாகக் கூறினான். அது உவளுக்கு இன்னும் வயிற்றைப் பிசைந்து கொண்டு வந்தது. மேசையில் பப்பாளி இருந்த பையைத் திறந்து கூடப் பார்க்காமல் ஒரு நாள் முழுவதும் கழிந்தது. ஏதோ ஒரு தைரியத்தில் வாங்கி வரச் சொல்லிவிட்டாள். ஆனால் அதன் அருகே செல்வதற்கு மனம் கொஞ்சமும் ஒத்துழைக்காமல் வெதிர் எடுத்தது. ஏதோ கொலை பாதகம் செய்யத் துணிந்து விட்டதைப் போல் மருண்டாள். “ஒருவேளை கர்ப்பப்பை கட்டிகளின் வளர்ச்சியால் சில வருடம் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள இயலாமல் போய்விடுமோ? ஒருவேளை இப்போது தவறான முடிவை எடுக்கிறோமோ? ஒருவேளை இப்போது குழந்தை பெற்றுக் கொண்டால் குழந்தைகளும் அடுப்படியும்தான் வாழ்க்கை இப்படியே கழிந்து தேக்க நிலையை அடைந்து விட்டால்?” - எல்லாமே தன் கையில்தான் என்பதுதான் ‘ஒருவேளை’களாக உருவெடுத்து உவளைப் பாரமாக அழுத்தியது. ‘இப்போது குழந்தை வேண்டாம்’ என்ற ஆழ்மனதின் பரிதவிப்பை வெளிப்படையாகத் தன்னிடமே கூடச் சொல்ல முடியாமல் தவித்தாள். ஒரு மாதிரி மூச்சு முட்டிக் கொண்டு வந்ததில் உவளுக்கும் சேர்த்து அந்த அறையே பெருமூச்செறிந்தது. ‘பப்பாளியை இன்று உட்கொண்டுவிடுவோமா?’ , ‘மருத்துவரிடம் செல்லலாமா?’ – இவ்விரு கேள்விகளுக்கும் இடையில் நசுங்கி வாடி வதங்கியவாறே மறுநாள் காலை சமைத்துக் கொண்டிருந்தாள். திடீரென…. கால்களுக்கு இடையில் பிசுபிசுப்பாக உணர்ந்தாள். அடுப்பை அப்படியே அணைத்துவிட்டு குளியலறைக்கு ஓடினாள். ஓடி வந்த வேகத்தில் கரண்டைக் கால் வரை வழிந்தது இரத்தம். அப்படியே அங்கிருந்த முக்காலியில் அமர்ந்துவிட்டாள். இரண்டு நிமிடங்கள் உலகமே உறைந்து போய்விட்ட மாதிரி இருந்தது. என்ன நிகழ்கிறது என மூளை மனதிற்குப் புரிய வைக்க முயன்று கொண்டிருந்தது. “ஐயோ! உவன் ஆசையில் மண் விழுந்துவிட்டதே!” என்ற வருத்தம் கலந்த ஏமாற்றம்; “எவ்வளவு கொடூரமாக வறட்டுத்தனமாக சுயநலமாக இருக்க முடிந்தது என்னால்?” என பொதுபுத்தியினால் விளைந்த பயம்; ஆண்டாண்டு காலமாக வழிவழியாகப் பெண்களுக்கு மரபுவழியே கடத்தப்பட்ட ‘பிறர்நலம்’ என்னும் பண்பில் இருந்து விலகியதால் “எப்பேர்பட்ட முடிவை எடுக்கத் தெரிந்தேன்?” என்ற குற்றவுணர்வு; “நல்லவேளை! ஒன்றும் செய்யாமல் தானாக வந்துவிட்டது” என்ற ஆசுவாசம்; “எனக்குப் பிடித்தவற்றையெல்லாம் தங்கு தடையின்றி செய்யலாம். இனி வானமே எல்லை” என்ற மகிழ்ச்சி – அனைத்து உணர்வுகளும் ஒரே பிடியாக ஒன்றாக அழுத்தியதில் என்னவென்று உணர்வது என்றறியாமல் திகைத்தாள். அத்திகைப்பு கண்ணீராக வெளிப்பட்டது உவளுக்கே வியப்பைத் தந்தது. “இப்போது ஏன் அழுகிறோம்?” என்று கூட புரியவில்லை. குளித்து முடித்து வெளியே வந்தவள் மேசை மேல் பிரிக்காமல் இருந்த பப்பாளியைப் பார்த்தாள். முந்தைய நாள் வரையிலும் அதைத் தன் மனதினுடைய குரூரத்தின் உருவகமாகக் கருதி வந்தவள் தற்போது அவ்வாறாகக் கருத வைத்த பொதுபுத்தியையும், தன் தெரிவு என்ற எண்ணமே துளிர் விட விடாமல் சமூகம் தன்னுள் சாமர்த்தியமாக விதைத்துவிட்டிருந்த அர்த்தமற்ற குற்றவுணர்வையும் மட்டும் குப்பையில் போட்டு விட்டு பப்பாளியைத் தூக்கிப் பழக் கூடையினுள் இட்டாள். நன்றி 'திண்ணை' இணைய வார இதழ்.
  43. பிறந்த நாள் வாழ்த்துகள் நிலாமதி அக்கா. நான் யாழில் இணைந்தவுடன் என்னை தனிமடலில் வரவேற்ற பாசக்கார உறவு நிலாமதி அக்கா!
  44. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி . ........ !
  45. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா, வளத்துடன் வாழ்க.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.