Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87990
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38770
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20018
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    10209
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/04/25 in all areas

  1. Theivigan Panchalingam 9h · ஆஸ்திரேலியாவின் 48 ஆவது நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள லேபர் கட்சியின் பெருவெற்றியானது பல அதிசயங்களை நிகழ்த்தியிருந்தாலும், ஆளும் கட்சியின் இமாலய வெற்றியின் நட்சத்திர நாயகி அலி பிரான்ஸ் என்பவர்தான். லிபரல் கட்சியின் முதன்மை வேட்பாளர் பீற்றர் டட்டன் என்ற இரும்பு மனிதன் சுமார் 24 வருடங்களாகத் தக்கவைத்திருந்த அவரது சொந்தத் தொகுதியின் வெற்றியைத் தட்டிப்பறித்து, அவரை நாடாளுமன்றத்திலிருந்தே வெளியேற்றியிருக்கிறார் அலி பிரான்ஸ் என்ற 51 வயதுப் பெண்மணி. அதாவது, பிரதமர் பதவிக்கான வேட்பாளரோ - நடப்பு அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களோ - தங்களது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தால், அவர்கள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஆஸ்திரேலியத் தேர்தல் விதியின் பிரகாரம் தூக்கியெறியப்பட்டிருக்கிறார் பீற்றர் டட்டன். பீற்றர் டட்டனைத் தோற்கடித்துப் பெற்றுள்ள வெற்றியும் அரசியல் பயணமும் தனிப்பட்ட வாழ்க்கையும் அலி பிரான்ஸிற்கு இலகுவாக அமைந்துவிடவில்லை. தொடர்ச்சியான தோல்விகளும் தனிப்பட்ட வாழ்வில் பெரிய காயங்களும் சாவுகளும் நிறைந்த வாழ்வு அலி பிரான்ஸினுடையது. 2011 ஆம் ஆண்டு பிறிஸ்பன் அங்காடியொன்றில் பொருட்களை வாங்கிக்கொண்டு தனது மகனைப் பிறாமில் தள்ளிக்கொண்டு வெளியே வந்தபோது, அங்காடிக்கு வெளியே 88 வயது முதியவர் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, அலி பிரான்ஸ் மீது பாய, தான் அடியுண்டாலும் பரவாயில்லை, தனது மகனைக் காப்பாற்றிவிடவேண்டும் என்று மகனிருந்த பிறாமைத் தூரத் தள்ளிவிட்டார். வேகமாக வந்த கார் அலி பிரான்ஸ் மீது பாய்ந்து, அவரைச் சுவர் ஒன்றோடு சேர்த்து அறைந்தது. அவரது இடது காலின் நாடி அறுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். தக்க சமயத்தில் அங்கு ஓடிவந்த இருவர், தங்களது சேர்ட்டைக் கழற்றிக் கிழித்துக் காயத்துக்குக் கட்டுப்போட்டதால் உயிர் தப்பினார். மயிரிழையில் உயிர் தப்பிய அவரது மகன் ஸக், தொலைவில் பிராமோடு சென்று கவிழ்ந்து, நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்கு அடியில் சென்று அகப்பட்டுக்கொண்டார். விபத்தை நேரடியாகக் கண்ட தாயொருவர், தனது கைக்குழந்தையை நிலத்தில் கிடத்திவிட்டு, காருக்கு அடியிலிருந்து ஸக்கை இழுத்தெடுத்து காப்பாற்றினார். ஸக் எந்தக் காயமுமின்றி உயிர் தப்பிக்கொண்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அலி பிரான்ஸின் இடது கால் முற்றாக அகற்றப்பட்டது. அலி பிரான்ஸ் தென்னாபிரிக்காவில் பிறந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து, கல்வி கற்று, ஊடகவியலாளராகப் பணியாற்றியவர். அரசியல் என்பது அவரது தகப்பன் வழியாகவும் தொழில் வழியாகவும் அவருக்குள் ஊறிக்கிடந்தது. 2019 ஆம் ஆண்டு, முதல் கணவரிடமிருந்து விவகாரத்தானபோது, அலி பிரான்ஸ் நேரடி அரசியலுக்குள் நுழைய முடிவெடுத்தார். குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் பீற்றர் டட்டனின் டிக்ஸன் தொகுதியில் லேபர் கட்சி சார்பில் களமிறங்கினார். முதலாவது தேர்தலில் தோல்வியடைந்தார். 2022 ஆம் ஆண்டு தேர்தலிலும் டட்டனுக்கு எதிரான போட்டியில் டிக்ஸன் தொகுதியில் தோல்வியடைந்தார். பத்து வருடங்களுக்கு முன்னர் விபத்தில் காலைக் காவுகொண்டதோடு சற்று ஓய்வெடுத்த அவரது விதி, 2022 இல் மீண்டும் கலையாடத் தொடங்கியது. மூத்த மகன் ஹென்றியை புற்றுநோய் தாக்கியது. சம நேரத்தில் முன்னாள் கணவரும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டு அலி பிரான்ஸின் முன்னாள் கணவர் புற்றுநோயினால் காலமானார். கடந்த வருடம் மகன் ஹென்றியும் புற்றுநோயால் காலமானார். ஆறு மாத இடைவெளியில் முன்னாள் கணவரையும் மகனையும் இழந்த வலியும் விரக்தியும் தன்னைச் சூழ்ந்து கிடந்தாலும், 2025 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது தடவையாக பீற்றர் டட்டனை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு அலி பிரான்ஸ் உறுதியோடு எழுந்தார். ஒற்றைக் காலோடும் ஓர்மத்தோடும் டிக்ஸன் தொகுதியெங்கும் பிரச்சாரத்திற்காக ஏறி இறங்கினார். கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டு காலமாக தனது சொந்தத் தொகுதியில் கோலோச்சிக்கொண்டிருந்த லிபரல் கட்சியின் அதி சக்தி வாய்ந்த பீற்றர் டட்டனை வீழ்த்துவது என்பது லேசான காரியமல்ல என்பது லேபர் கட்சியனருக்கும் தெரிந்ததுதான். இம்முறைத் தேர்தல் என்பது லேபருக்கு அநேக இடங்களில் வெற்றியை ஈட்டிக்கொடுக்கும் என்பது முன்னரே ஊகிக்கக்கூடியதாயிருந்தபோதும், பீற்றர் டட்டன் என்ற ஆஸ்திரேலியாவின் இரும்பு மனிதனை தோற்கடிப்பது என்பதெல்லாம் அவ்வளவு எளிதாகியிருக்கவில்லை. ஆனால், அலி பிரான்ஸ் ஆஸ்திரேலிய அரசியலில் தனது வெற்றியினால் மாத்திரமல்லாமல், எதிரிக்கு இழைத்த தோல்வியின் மூலமும் அழிக்கமுடியாத வெற்றித்தடத்தைப் பதித்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த ஒரு மணி நேரத்திலேயே டட்டனின் தோல்வி தொலைக்காட்சியில் மின்னத் தொடங்கியது. தேசிய நாயகியாக அலி பிரான்ஸின் பெயர் திரையெங்கும் பளிச்சிடத்தொடங்கியது. அலி பிரான்ஸ், ஆறு வருடப்போராட்டத்தினால் கிடைத்த சாதனை வெற்றியை இரு கைகளில் ஏந்திக்கொண்டு எதிர்வரும் ஒன்பதாம் திகதி கன்பரா நாடாளுமன்றத்திற்குள் நுழையப்போகிறார். ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் பிரதமர் பதவிக்காகப் போட்டியிட்டவர்கள் தங்களது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தது, இதுவரை மூன்று தடவைகளே இடம்பெற்றிருக்கின்றன. முதன் முதலாக 1929 இல் இடம்பெற்றது. அதன் பின்னர் 2007 இல் முன்னாள் பிரதமர் ஜோன் ஹவாடிற்கு ஏற்பட்ட படுதோல்வியுடன் அவர் அரசியலில் இருந்தே விலகினார். தற்போது பீற்றர் டட்டனுக்கு ஏற்பட்டுள்ளது. சாதனை நாயகிக்கு வாழ்த்துகள்
  2. ஆஸ்திரேலியாவில்... அஷ்வினி அம்பிகைபாகர், முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
  3. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் ராமனுல்லா குர்பாஸ், அன்கியா ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங் ஆகியோரின் கமியோ ஆட்டங்களினாலும், அண்ட்ரே ரஸல்ஸின் அதிரடிப் புயல்வேக 25 பந்துகளில் அடித்த 57 ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த ஆரம்பித்தாலும் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்ததால் துரத்துவதில் சறுக்கி 5 விக்கெட்டுகளை 71 ஓட்டங்களில் இழந்திருந்தது. எனினும் மோயின் அலியின் மூன்றாவது ஓவரில் ரியான் பராக் 5 சிக்ஸர்களை அடித்தபோது ஆட்டம் திசைமாறியது. ரியான் பராக் புயல்வேகத்தில் 95 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார். ஷிம்ரொன் ஹெட்மயர், ஷிவம் டுபேயின் அதிரடி ஆட்டங்களால் வெற்றிக்கோட்டுக்கு அண்மித்து, இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரே ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ப்ராப்சிம்ரன் சிங்கின் மின்னல்வேக 91 ஓட்டங்களுடனும், ஜொஷ் இங்கிலிஸ், ஷ்ரேயஸ் ஐயர், ஷஷாங் சிங் போன்றோரின் கமியோ ஓட்டங்களுடனுன் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பவிலியனுக்குத் திரும்பிக்கொண்டிருந்ததால் வெற்றி வாய்ப்பு கடினமாக இருந்தது. ஆயுஷ் படோனியும், அப்துல் சமட்டும் முறையே 74 ஓட்டங்களையும், 45 ஓட்டங்களையும் விளாசியும் இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  4. ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த அஷ்வினி அம்பிகைபாகர் (Ashvini Ambihaipahar) என்பவர் அவுஸ்திரேலிய (Australia) நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் பொதுத்தேர்தல் நேற்று (03) இடம்பெற்ற நிலையில், சிட்னி Barton தொகுதியில் ஆளும் தொழிற்கட்சியின் வேட்பாளராக களம் இறங்கிய ஆஸ் எனப்படும் அஸ்வினி 66 சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர், ஈழத்தமிழ் படைப்புலகில் பிரபலமான கவிஞர்களில் ஒருவரான நாவற்குழியைச் சேர்ந்த மறைந்த கவிஞர் அம்பி எனப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகரின் பேர்த்தியாவார். உள்ளுராட்சி தேர்தல் கடந்த 2022 இல் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற நிலையில் நேற்று நாடாளுமன்றத் தேர்தலிலும் அஷ்வினி வெற்றி பெற்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கனேடிய நீதியமைச்சரான ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற நிலையில் அவருக்கு மேலதிகமாக இன்னொரு ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினராக யுவனிதாவும் வெற்றிபெற்றிருந்தார். இந்த நிலையில், இப்போது அஷ்வினி அவுஸ்ரேலியாவில் வெற்றிபெற்றுள்ளார். கடந்த வருடம் ஏற்கனவே கடந்த வருடம் பிரித்தானியாவில் இடம்பெற்ற பொத்துதேர்தலில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த உமாகுமரன் (Uma Kumaran) நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். தற்போதைய நிலையில் மேற்குலக நாடுகளில் தாயக உணர்வு சார்ந்த நிலைப்பாட்டுடன் ஈழத்தமிழ் பூர்வீகத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் இடதுசாரி மற்றும் தாராளவாதக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முக்கிய விடயமாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/eelam-tamil-woman-elected-as-australian-mp-1746347480 @goshan_che அண்ணன் கவனத்திற்கு.
  5. அட இது நல்லாயிருக்கே. இலங்கையிலும் இப்படி சட்டத்மை அமுல் படுத்த வேண்டும்.
  6. ஒருவர் நகைகளைக் கேட்டால் பிரச்சனை வரும் என்கிறார் இன்னொருவர் திரும்பக் கேட்பவர்கள் சிறைக்குப் போக வேண்டும் என்கிறார் நான் பாவப்பட்ட மக்கள் சிறைக்குச் செல்லாமல் பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் தங்கள் நகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள என்ன செய்யலாம் எனக் கூறினேன். இதை விளங்காமல் பலரும் பல மாதிரி விளக்கம் தருகின்றார்கள் நிழலி கூறியது போல 2002 இல் எனக்கு நேரடியாக மிரட்டல் வந்தது அடுத்த முறை இந்தப்பாதையால் நீங்கள் யாழ் செல்வதாக இருந்தால் உங்கள் பெயர் எங்கள் பட்டியலில் நிதி உதவி அளிப்பவர் என இருக்க வேண்டும் என்றார்கள் . நானும் சரி எனக் கூறிவிட்டு கடந்து சென்று விட்டேன். பின்னர் எங்களிடம் நிதி சேகரிக்க வந்த அந்த நல்ல மனிதர் 2009 க்குப் பின்னர் கேரளாவில் பல கோடி வியாபாரம் செய்து வருகின்றார். அதில் எனது பங்கும் இருக்கும் ஆனால் கேட்டாலும் திரும்பாத தரமாட்டார்😂
  7. GMT நேரப்படி நாளை திங்கள் 05 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH எதிர் DC 17 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் 06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஈழப்பிரியன் சுவி செம்பாட்டான் ஏராளன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  8. வாழ்த்துக்கள் முதல்வரே.
  9. புலிகள் கொள்ளையர்கள் அல்ல. ஆனால் இந்த தங்கம் வாங்கும் விடயத்தில் சில இடங்களில் கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாமல் நடந்து கொண்ட சம்பவங்கள் ஏராளம் உள்ளன. எம் அயலில் கணவனை இளம் வயதில் இழந்த, அக் கணவனின் ஓய்வூதியத்தில் 2 பெண் பிள்ளைகளை வளர்த்து கொண்டிருந்த என் உறவுகார பெண்மணியை கடுமையாக திட்டி, அப் பெண் பிள்ளை போட்டிருந்த சின்னஞ்சிறு தோட்டை கழற்றிக் கொடுக்க சொல்லு வற்புறுத்தி வாங்கிச் சென்றார்கள். 90 இன் ஆரம்பத்தில் பாண்டியந்தாழ்வு பகுதியில் இது நிகழ்ந்தது. இவ்வாறு மிரட்டி பணம் பெறுவதை சமாதான கால கட்டத்தில் வேறு விதமாக செய்தனர். இங்கு கனடாவில் நிதி அளிக்க மறுத்த பலர் ஊருக்கு போகும் போது A9 வீதியில் புளியங்குளம் பகுதியில் இருந்த புலிகளின் முதலாவது சோதனைச் சாவடியில் வைத்தே கைது செய்து மிரட்டி கனடாவில் உள்ள குடும்ப அங்கத்தவர் காசு கொடுத்த பின் விடுவிக்கப்பட்டனர். என் நெருங்கிய நண்பனின் அப்பாவுக்கும் இது நடந்தது.
  10. அவங்களும் தோற்கிறதுக்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தாங்கள்! கடைசி மட்டும் முடியேல்லை!
  11. அடேய் கொள்ளை அடிக்கிறது நீங்களடா🤣. மீன் கொள்ளையர்கள் மீது கரந்தடி தாக்குதல் நடத்திய இலங்கை கடல்காப்பு போராளிகளுக்கு வாழ்த்து.
  12. தேர்தலில் 80 வயதுக்காரர் போட்டியாளர்கள் என்றால் இளைஞர்கள் வாக்கு போடுவார்களா?? 🤪😂. வயோதிபர்கள். வாக்கையும். போடாட்டுமென்று விலகி இருக்கிறார்கள் ஒரு இருபது வயது பெண்ணை களமிறங்கிப். பாருங்கள் இளைஞர்கள் வாக்குப் பலத்தை அறிய முடியும் இவர் சசி வர்ணத்தின். ஊர்காரி ....சசி எட்டிக்கூட. பார்க்கவில்லை ஒரு வாழ்த்துகூட. சொல்லவில்லை நம்ம சுமத்திரனுக்கு அப்பு வைக்கும் பிளான். போல் இருக்கிறது ....அமுல் செய்தால் அர்ச்சுனாக்கள் எண்ணிக்கை கூடும் பிறகு நீங்கள் அழுவீர்கள் 🤣
  13. உலகம் உக்ரேனுக்கு ஒரு முடிவை கொடுத்தது போலவாக இருக்குமோ?? அல்லது அன்றாடும் இறக்கும் பலஸ்தீனியர்களுக்கு கொடுக்கும் முடிவாக இருக்குமோ?
  14. அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பனீஸ் உடன் அஷ்வினி அம்பிகைபாகர். பிரிட்டன், கனடாவைத் தொடர்ந்து அவுஸ்ரேலியாவிலும் ஈழத்தமிழர் ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
  15. சென்னை மன்னர்களின் ஆட்டத்தை ஒரு மாதிரி அடக்கியாச்சு ராஜஸ்தான் அரச பரம்பரையும் ஆட்டம் ஆடி அடங்கி விட்டது அடுத்து அடுத்து ஹைதராபாத்..... கொல்கத்தா..... அடங்க..... ஒரு நெருப்பு அலை வரும் அந்த அலையில் டெல்லியும் லக்னோவும் கருகிவிட பஞ்சாப்பும் குஜராத்தும் மும்பாயும்..... பெங்களூருக்கு எதிராக...... தனித்து நிற்கும்.... எனக் காண்டம் கதை சொல்கின்றது 😇
  16. அவுசில் தேர்தல்களில் வாக்கு போடாவிட்டால் தண்டப் பணம் கட்ட வேண்டுமாமே? வெளிநாடுகளில் இருந்தால்க் கூட கணனி ஊடாக வாக்குகளை செலுத்தலாம் என்கிறார்கள். இப்படியான முறையை அமெரிக்காவிலும் கொண்டு வரவேண்டும். இங்கு வாக்களிப்பு நிலையத்தில் இளையோர்களைக் காண்பது அரிது.
  17. தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், யூனியன் கல்லூரிக் கீதத்தை எழுதியவரும் ஆன கவிஞர் அம்பி அம்பிகைபாகர் அவர்களின் பேத்தி அஷ்வினி அம்பிகைபாகர் அவுஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் பார்டன் தொகுதியில் ஆளும் தொழிற்கட்சி சார்பாக வெற்றி பெற்று பாராளுமன்ற அங்கத்தவர் ஆகத் தெரிவாகி உள்ளார்.
  18. பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை.. இலங்கையிலிருந்து 1990களிலிருந்து தான் தமிழர்கள் அதிகளவாக புலம்பெயர ஆரம்பித்தார்கள் ஐரோப்பா,கனடாவை நோக்கி.. நான் ஐரோப்பா வந்தது 2002ல், வெற்றிகரமாக 23 ஆண்டுகள் ஐரோப்பாவில் பல நாடுகளில் காலம் தள்ளியாச்சு.. சரி நான் சொல்ல வந்த விசயம்.. புலம் பெயர்ந்து வந்த முதலாவது தலைமுறையில் 50-60% வீதமானவர்கள் இப்போது ஓய்வூதியம் பெறும் வயதில் இருக்கிறார்கள்.. இவர்களைப் பற்றிய ஒரு சில தகவல்கள்.. 🔗புதிதாக வந்த நாட்டில் மொழி தெரியாமல், கல்வி தகமை அதிகம் தேவையில்லாத தொழில்கள் (துப்பரவு,உணவகம்) மூலம் தங்கள் வாழ்க்கையை தொடங்கியவர்கள். முதலாவது தலமுறையில் இங்கு முதல் வந்தவர்கள் 90% ஆண்கள் தான். (ஒவ்வொரு நாடுகளிலும் குறிப்பிட்ட சிலரே மொழி படித்து, மேற்கொண்டு படித்து வேறு வேலைகளுக்குள் சென்றவர்கள்) மேலும் சிலர் ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு சொந்த தொழில் தொடங்கி அதில் ஈடுபட்டார்கள். ஆனால் இன்றும் பலர் ஆரம்பத்தில் என்ன வேலையில் இருந்தார்களோ இன்று வரை அதே தொழிலில் தான் இருக்கிறார்கள். 🔗பல பேர் வந்து அகதி அந்தஸ்து கிடைத்தபின் மனைவிமாரை இலங்கையிலிருந்து கூப்பிட்டார்கள். 🔗பல பேர் சகோதரர்களை, ஒரு சிலர் மனைவிமாரை பல லட்சங்கள் கட்டி இலங்கையிலிருந்து கூப்பிட்டார்கள். 🔗பின் மனைவிமாரின் சகோதரங்களையும் கூப்பிட உதவி செய்தார்கள். 🔗வெளிநாடு வராத நாட்டிலிருக்கும் பெற்றோர்,சகோதரங்கள், சகோதரங்களின் பிள்ளைகள் என எல்லோருக்கும் உதவி செய்தார்கள். இப்படி தனது இளமைக்காலம் முழுவதும் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர்கள் தான் இந்த பெரும்பாலான முதலாம் தலைமுறையினர்.. இவர்களில் பெரும்பாலானோரை இன்றுவரை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவர்களின் உறவுகள் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரி இலங்கையிலிருக்கும் உறவுகள் தான் இவர்களை பயன் படுத்துகிறார்கள் என்றால், இங்கு பிறந்து, நன்றாக கல்வி கற்று, பெற்றோரை விட நல்ல வேலையில், நல்ல சம்பளத்தில் இருக்கும் சொந்த பிள்ளைகளும் இதை தான் செய்கிறார்கள்.. 🔗 இங்கு பிறந்தவர்கள் தங்களது முதல் வீடு வாங்குவதற்க்கு வங்கிக்கு கட்ட வேண்டிய 10-15% வீத முன் பணத்தை பெற்றோரிடம் தான் எதிர் பார்க்கிறார்கள்.(பெற்றோர் எந்த உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த முயற்சியில் தான் வீடு வாங்கியிருப்பார்கள்) 🔗தங்களின் ஆடம்பர கல்யாணத்திற்க்கும் பெற்றோர்களை தான் எதிர்பார்க்கிறார்கள்.. 🔗அவர்களை வளர்துவிட்டது காணது என்று அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் இவர்கள் தான் கவனித்துக்கொள்கிறார்கள்.. இப்படி சொல்வதற்க்கு ஏராளம் இருக்கின்றது.. ஒரு சில பிள்ளைகள் இதற்கு விதிவிலக்காகவும் இருக்கிறார்கள்.. இப்ப சொல்லுங்கள் இந்த முதலாம் தலைமுறையினர் பாவப்பட்டவர்கள் தானே??😔 https://www.facebook.com/share/p/18ohX1u8m1/?mibextid=wwXIfr
  19. இங்கே சந்திரிகா எப்படி பட்ட ஏமாற்றுகாரி, சிங்களவர் எப்படி எம்மை ஏமாற்றினர், என கட்டுரைகள் இணைத்த, கருத்து எழுதிய நுணா, புலவர் கவனத்துக்கு. இதை நான் மறுக்கவில்லை. ஒரு பள்ளி மாணவனாக சூப்பர் திட்டம் ஒன்றை நீலனும் பீரிசும் முன் வைத்து விட்டார்கள் என குதித்த பல பெருசுகளுக்கு - இதை மிக விரைவில் பெளத்த பீடம் அடித்து நூக்கும் என கூறினேன். அப்படியே நடந்தது. ஆனால் இதை எப்படி சிங்களம் எந்த ஒரு நியாயமான தீர்வையும் எமக்கு தாரது என்பதை காட்டும் உதாரணமாக அல்லவா புலிகள் பாவித்திருக்க வேண்டும். ஒரு தீர்வு திட்டத்தை முன்வைக்க பங்களித்தார் என்பது மட்டுமே அவரை கொல்லும் அளவுக்கு மோசமான செயலா? குறிப்பாக அதே தீர்வை நாம் மூன்று வருடங்களின் பின் ஏற்புடையது என சொல்லிய போது. நீலன் 1995 இல் இருந்த நிலைப்பாட்டுக்கு நாம் 2003 இல் வந்தோம் எனில், அந்த நிலைப்பாட்டுக்காக, 1999 இல் நீலனை நாம் கொலை செய்தது பிழை என்பதை, 2003 இலாவது ஒத்துகொள்ள வேண்டாமா? அட்லீஸ்ட் 2025 இலாவது? பிகு நீலனின் அப்பா டட்லியோடு போனார், அம்மா இட்லி போட்டார் என்பதெல்லாம் “சேப்பில்லை, சேப்பிலை” - தீர்வு திட்ட தயாரிப்பில் ஈடுபட்டார் என்பதை தவிர நீலன் மீது சுமத்தப்படும் ஏனைய குற்றசாட்டுகள் என்ன?
  20. தந்தை செல்வா காலம் தொடக்கம் ஈழத்தமிழரின் பிரச்சனையை தீர்க்க யாருமே தயாரில்லை என்பது நிரூபண உண்மை. தந்தை செல்வாவும் அமிர்தலிங்கமும் பெரியார்,எம்ஜிஆர்,நேரு என பலரை சந்தித்து உதவி/உரிமை கோரினர். எதுவுமே நடக்கவில்லை. எல்லாமே ஏமாற்ற கதைகளாகவே இருந்திருக்கின்றது. அரசியல் போராட்டங்கள் தோல்வியில் போக ஆயுத போரட்டம் உதித்தது. ஆயுத போராட்டத்தை தொடங்கியவர்களில் விடுதலைப்புலிகள் செவ்வனே அதை செய்தனர். ஆயுத போராட்டத்தில் தோற்றுப்போன அரசியலை தேடியவர்களுக்காக விடுதலைப்புலிகள் அரசியலையும் சேர்த்து செய்தனர்.அதிலும் புலி எதிர்ப்பாளர்க்கு திருப்தியில்லை. குறை சொல்ல ஆயிரம் காரணங்களை சொல்லலாம் அப்படி சொல்பவர்கள் நிறை சொல்ல காரணங்களை தேட காரணங்களை தேடமாட்டார்கள். குற்ற பத்திரிகையாக நீலன்,சந்திரிக்கா,கதிர்காமர்,ராஜீவ் என பல கதைகளை சொல்லிக்கொண்டே போகின்றனர். சரி யுத்தங்கள் முடிந்து இவ்வளவு காலங்கள் போய் விட்டதே ஏதாவது முன்னேற்றமா என கேட்டால் புலிகள் குற்றங்கள் செய்து விட்டார்கள் என மட்டுமே கூறுகின்றார்கள். ஆனால் சிங்களம் ஏன் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க மறுக்கின்றது என்பதை மட்டும் பேச மறுக்கின்றார்கள். புலிகளுக்கான நிதி/தங்கம் சேகரிப்பில் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல மோசடிகள் உண்டு. இதை தலைவர் நேரடியாக நின்று செய்யவில்லை. இதை செய்தவர்கள் அங்கத்தவர்களும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களும். ஊரில் போராளிகள் ஈடுபட்டாலும் போராட்டம் என வந்து விட்டால்......இன்ப துன்பம் பரிவுகள் இருக்காது என நினைக்கின்றேன்.
  21. முதல்வர் சேர்த்து வைத்திருக்கும் சொத்து இந்தப் போட்டி முடியும் வரை அவரைக் காக்கும் . அவருடை சொத்துக்கள் இன்னும் பல மடங்காகும் வாய்ப்புக்களும் இருக்கின்றன.😂 எதற்கும் முதல்வருக்கு ஒரு வாழ்த்தைப் போட்டு வைப்போம் 😅 முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள்😇
  22. அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து புள்ளிகள் அடிக்கினம். கிளி ஜோசியம் கிளிஞ்சு தொங்குது. நாம அதுக்கிடையில அல்லாடுறம். இன்றைக்கு எமக்கு புள்ளிகள் கிடைக்க வேண்றும் என்று RRஉம் எவ்வளவு கஷ்டப்பட்டாங்க. இப்ப யாரோட ஜோடி சேர்ந்தா நமக்கு நல்லது.
  23. நோர்வேயின் பங்களிப்புடன் செய்யப்பட்ட சுனாமிக் கட்டடைமப்பை ஜேவிபியுடன் சேர்ந்து சந்திரிகா முடக்கினார். சந்திரிக்காவின் தீர்வுப்பொதியை ரணில் பாராளுமன்றத்தில் கொளுத்தினார். புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இடைக்காலவரைபை விவாதத்துக்கு எடுக்க முன்னரே ரணில்அரசாங்கததைக்கலைத்து பேச்சுவார்ததையைக் குழப்பினார். இதேபோல் பண்டா செல்வா ஒப்பந்தம் டட்லி செல்வா ஒப்பந்தம் இலங்கை இந்திய ஒப்பந்தம் எவற்றையுமே மாறிமாறி சிங்களத்தலைவர்கள் குழப்பினர். இந்த சிங்கள அரசாங்கத்தோடு 3 ஆம்தரப்பு அழுத்தம் இன்றி பேச்சுவார்த்தை நடத்தி எந்த ஒரு குறைந்த பட்ச தீர்வையும் பெறமுடியாது.போர்க்குற்ற விசாரணை இன அழிப்புக்கு எதிரான 3ஆம்தரப்பின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிகள் அதை விட 3 ஆம்தரப்புக்கு அனகூலமான பூகோள அரசியல்~சூழ்நிலைகள் இந்த அழுத்தைக் கொடுப்பதற்கு உதவும். அதற்கு முதல் தமிழர்கள் எல்லோரும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்த குரலில் பேசவேண்டும்.
  24. யாரையாவது போட்டு மிதியுங்க. அப்பதானே நாம ஆறுதலடையலாம். இந்தப் போட்டி முடியுமட்டும் குடும்ப உறுப்பினர்கள் உங்களிடம் அவதானமாகவே இருப்பார்கள் என எண்ணுகிறேன்.
  25. மேலே உள்ளவர் இரண்டு பரம்பரைக்கு சேர்த்து வைத்துவிட்டார்.
  26. அதுவும் அவரோட சேர்ந்து. மச்சகாரன்தான். முதல் மூன்று பேருக்கும் இன்று புள்ளிகளே இல்லை. அதைப் பார்த்தீர்களா.
  27. அணிகள் எல்லாம் இப்போ தங்கள் உறுதியான விளையாட்டைக் காட்டுகிறார்கள். போட்டித் தொடர் முடிவுக்கட்டத்தை நெருங்கும் போது, இவ்வாறு விளையாடுவது பார்க்க நன்றாக இருக்கிறது. சில வீரர்களை எதற்காக எடுத்தார்களோ அவர்கள் அவ்வாறு எதிர்பார்த்த மாதிரி விளையாடுவது சிறப்பு. இரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். நமக்குத்தான் சில புள்ளிகள் கிடைக்கமாட்டேன் என்கிறது.
  28. ஜனாதிபதி பாய் டின் (Bai Dinh) விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்; ஜனாதிபதிக்கு வியட்நாம் மக்களின் அமோக வரவேற்பு Published By: VISHNU 04 MAY, 2025 | 09:16 PM வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை (04) தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பௌத்த விகாரைகளில் ஒன்றான பாய் டின் (Bai Dinh) விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார். இலங்கை மற்றும் வியட்நாம் தேசியக் கொடிகளை ஏந்திய வியட்நாம் மக்களால் ஜனாதிபதிக்கு அதன் நுழைவாயிலில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. விகாரை வளாகத்தை சுற்றிப் பார்த்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை காண வீதியின் இருபுறமும் ஏராளமானோர் கூடியிருந்தனர், மேலும் அவர்கள் இரு நாடுகளின் தேசியக் கொடிகளையும் அசைத்து தமது மரியாதையை செலுத்தினர். ஜனாதிபதி, விகாரையில் வழிபாடு நடத்திய பிறகு, தேரர்கள் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியை ஆசிர்வதித்தனர். பின்னர், ஜனாதிபதி விகாரை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா போதியை வழிபட்டதுடன், இந்த போதி, 2023 ஆம் ஆண்டு பாய் டின் (Bai Dinh) விகாரை வளாகத்தில் நடுவதற்காக இலங்கையிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட அநுராதபுரம் ஸ்ரீ மகா போதியின் ஒரு கிளையாகும். இலங்கை மத்திய கலாசார நிதியத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போதியை சுற்றி நிர்மாணிக்கப்பட்ட மதிலையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திறந்து வைத்தார். பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விகாரை வளாகத்தில் சால் மரக்கன்றை நட்டார். இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகையையும் பார்வையிட்டார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விகாராதிபதி தேரருக்கு நினைவுப் பரிசும் வழங்கிவைக்கப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/213674
  29. ரிங்கு களத்தடுப்பில் அபாரம். அவர் சேமித்த ஓட்டங்கள்தான் இன்று வெற்றிக்குக் காரணம். கடைசியில் அவர்தான் ஓட்டமிழப்பும் செய்தார்.
  30. KKR வெற்றி! ஹார்ட் அற்றாக் வராத குறை!
  31. எதிர் கட்சிகள் வலியுறுத்தி, ஆளும் கட்சி அமைசரவை (மட்டும் தோற்றத்தில்) முடிவு. (உண்மையில் மாறி அல்லவா நடந்து இருக்க வேண்டும்). (பிஜேபி சாதி வரி கனளக்கெடுப்புக்கு அதன் வரலாற்றில் எதிர்ப்பு, காந்தியை குற்றம் சொல்லி.) (மற்ற திரியில் சொன்னதின், இந்தியாவை பொறுத்தவரை, இன்னொரு ஓரளவு வெளிப்படை உதாரணம்.) அதாவது அதிகாரிகள் / அதிகார பீடம் கொள்கை, முடிவுகளில் செல்வாக்கு செலுத்தலாம் சிறு மாற்றத்தில் இருந்து நிராகரிப்பு வரை. ஆனால் , ஒரு கேள்வி இருக்கிறது, அமைச்சரவை ஆலோசனையை (இது அமைச்சர் / மந்திரியால் நிராகரிக்கப்படலாம்) ஏற்றுக்கொண்டதா? இல்லை, முடிவு உதவியாக வழங்கப்பட்டதா என்று? (அதாவது அமைச்சரவை உதவியை நிகராரிக முடியாது). அப்படி ஆலோசனையை ஏற்றுக்கொண்டு இருந்தால், ஏன் பிஜேபி அப்படி நிலைப்பாட்டை (தலைகீழாக) மாற்றியது என்ற கேள்வி வருகிறது? (ஆனல், பிஜேபி சாதி வரி கனளக்கெடுப்புக்கு அதன் வரலாற்றில் எதிர்ப்பு, காந்தியை குற்றம் சொல்லி.) அதே போல, எல்லா கொள்கைகை, முடிவுகளில் மந்திரிகள், அதிகாரிகள் / அதிகார பீடம் முரண்பாடுகள், கருத்து வேறுபாடு இருக்காது. (ஆயினும், பிஜேபி அறிவித இந்த முடிவின் அடிப்படை சாதியால் பின்தங்கி இருப்போரின் தொகை கூட, அவர்களும் பொருளாதார வளர்த்திக்குள் உல் வாங்கப்பட்ட வேண்டும் என்பது. இதை அரசியல் ஆக கூடாது என்று. இதை வெளியில் ஆங்காங்கே சொல்வதை முதலே தொடங்கி விட்டது. அதாவது தேசிய நலன். கட்சி கொள்கை, அரசாங்கத்தில் கைவிடப்பட்டு, தேசிய நலன் சார்ந்த முடிவு.) இந்த முடிவை, அதிகார பீடம் செல்வாக்கு செலுத்தாமல், பிஜேபி அதுவாகவே முடிவு எடுத்து இருக்கும் என்று சிலர் சொன்னால், அவ்வளவு மட்டுந்தான் அவர்களின் புரிதல் ஆழம், பொத்தம் பொதுவான புரிதல். அனால் இவர்கள் இதை தவிர்ப்பதற்கு சொல்லுவது, சதிக்கத்தை, அரைகுறை. வேறு சில அடைமொழிகளும் கொண்டு சொல்லுவது.
  32. நிச்சயமாக! உங்கள் கற்பனைகள் கூட ஜதார்த்தத்தை தொட்டு செல்வதாகவே இருப்பதை உங்கள் முன்னைய ஆக்கங்களில் பார்த்துள்ளேன்.
  33. தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப் பட்டமைக்கு, அவுஸ்திரேயாவில் வாழும் சிங்களவருக்கு ஒரே வயித்தெரிச்ச்சலாக இருந்திருக்குமே.... 😂 எரியட்டும் , எரியட்டும்... நல்லாய் எரியட்டும். 🤣
  34. நானும் உங்களைப் போலவே தமிழ் ஈழம் கிடைக்கும் என்று பேதை த்தனமாக ஆரம்பத்தில் நம்பினேன். சற்று maturity வந்த பின்னர் உலக நாடுகளை அரசியல் ராஜதந்திர ரீதியில் வெல்லாமல் அது சாத்தியமல்ல என்பதை புரிந்து கொண்டாலும் எம்மவர்கள் இராணுவபலத்தை துரும்பு சீட்டாக வைத்து உலகளவில் அரசியல் பலத்தை அபைத்துலக நல்லுறவையும் தமிழர் சார்பில் உருவாக்குவார்கள் என நம்ப தொடங்கினேன். உலக சூழல் இந்த விடயத்தில் எமக்கு சாதகமாக இல்லை என்பது இயல்பாக புரிய ஆரம்பித்தது. நாம் இருவரும் சாதாரண குடிமக்களாதலால் அப்படி நம்பியதில் தவறே இல்லை.
  35. தினம் ஒரு தமிழ்ப் பாடல் - சுப.சோமசுந்தரம் என் இளம் பிராயத்தில் என் ஆச்சி (பாட்டி) அடுத்த வீட்டு ஆச்சியிடம் என் சேட்டைகள் குறித்து அங்கலாய்த்தாள், “ஒம் பேரன் என்னா சேட்டை பண்ணுதாங்கே !”. நிஜத்தில் நான் இவளுக்குத்தான் பேரன். என்னை அவள் பேரன் ஆக்கியது அவர்களது நட்பின், உறவின் நெருக்கத்தைக் காட்டுவது. சில காலம் கழித்துத் தமிழாசிரியர், கம்பனின் யுத்த காண்டத்தில் “குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின் வந்த அகனமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம் புகலருங் கானம் தந்து புதல்வராற் பொலிந்தான் நுந்தை" என இராமன் வீடணனுக்குச் சொன்னதை எடுத்துரைத்த போது சத்தியமாக என் ஆச்சிதான் நினைவுக்கு வந்தாள். தயரதனின் நான்கு புதல்வரோடு குகனை ஐந்தாவதாக, சுக்ரீவனை (குன்று சூழ்வான் மகன்) ஆறாவதாக, அன்பினால் எதிரிக் கோட்டையிலிருந்து வந்த வீடணனை ஏழாவதாக வரிசைப்படுத்துகிறான் இராமன். அத்தோடு நின்றானில்லை. “அரிய கானக வாழ்வை எமக்குத் தந்து மென்மேலும் புதல்வர்களால் பொலிவு பெற்றான் உன் தந்தை (நுந்தை)" என்கிறான். வீடணனை உடன்பிறப்பாய் ஏற்ற இராமன் தன் தந்தையை 'உன் தந்தை' எனச் சொல்லி உடன்பிறப்பு எனும் உறவை உடனே உறுதிப்படுத்துகிறான். தன் பேரனை 'உன் பேரன்' எனத் தோழியிடம் சொன்ன என் ஆச்சி கம்பனை அறிந்தாளில்லை. கம்பன் அவளை அறிந்திருக்கிறான் என்பதை உணர்ந்து வியந்துதான் போனேன்.
  36. சந்திரிக்கா செம்மணி கொலைகள், பொருளாதார தடைகள் என தமிழ் மக்களை வாட்டி வதைத்தவர். இவர் ஒரு தீர்வு பொதியை தருவார் என தமிழ் மக்கள் எப்படி நம்புவது??
  37. சுப.சோமசுந்தரம் அவர்களே…. உங்களது சிறு இலக்கிய உறு பொருள் நன்றாக உள்ளது. தொடர்ந்து பதியுங்கள். வாசிக்க ஆவலாக உள்ளோம். 👍🏽
  38. யாருக்கு தெரியும் ???? நான் தமிழ் ஈழம் கிடைக்கும் என்று நம்பினேன் எனக்கு தெரிந்த பலரும் நம்பினார்கள் பல நாடுகள் சேர்த்து போர் செய்வார்கள் என்று நம்பவில்லை தெரியாது இலங்கை தனியாக புலிகளுடன். போராடி இருந்தால் நாடு பிரிந்து இருக்குமா ?? அல்லது இல்லையா?? இப்படி பல நாடுகளுடன். போராடும் சந்தர்ப்பம். வரும் என்று எவருக்கும் தெரியாது தெரிந்து இருந்தால் ஆயுதத்தில். கை வைத்திருக்க. மாட்டார்கள் இல்லை தான்
  39. அடுத்த யாழ் அகவைக்கு இதை வைத்து ஒரு கதை எழுத போகிறேன். நான் மறந்தாலும் நீங்கள் நினைவூட்டுங்கள்.
  40. அது மட்டுமில்ல லாபாய் லாபாய்....லாபட்ட லாபாய் என்கிற மதிரி ..கடசி ஒவரில் 28 ரன் கொடுத்தாரே ..அதுவல்லோ கண் கொள்ளாக் காட்சி
  41. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 52வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஜாகப் பெதலினதும் விராட் கோலியினதும் வேகமான அரைச் சதங்களுடனும், பின்னர் வந்து மரண அடி கொடுத்து 14 பந்துகளில் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்கள் எடுத்த ரொமாரியோ ஷெப்பேர்ட்டினது ஆட்டத்துடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ஓட்டங்களை அள்ளிக் குவிக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 17 வயதேயான வீரர் ஆயுஷ் மாத்ரேயின் புயல்வேக 94 ஓட்டங்களுடனும், கூட இணைப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்கள் எடுத்த ரவீந்திரா ஜடேயாவினது பங்களிப்புடனும் வெற்றி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறினர். எனினும் ஆயுஷ் மாத்ரே 16.2 ஓவரில் ஆட்டமிழக்க அடுத்த பந்தில் டெவால்ட் ப்ரெவிஸும் ஆட்டமிழக்க போட்டி திசை மாறியது. 18வது ஓவரை சுயாஷ் ஷர்மா இறுக்கமாகப் போட்டு ஆறு ஓட்டங்கள் மாத்திரமே கொடுத்தார். இறுதி ஓவரில் வெற்றிபெற 15 ஓட்டங்கள் இருந்த நிலையில் மூன்றாவது பந்தில் தோனி அவுட்டாகி வெளியேறினாலும், அடுத்த பந்து ஷிவம் டுபேயால் சிக்ஸருக்குப் போனதும், அது உயரம் காரணமாக நோபோல் ஆனதும் வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் பக்கம் திசை மாற்றியது. மூன்று பந்துகளில் ஆறு ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் யஷ் தயாலின் இறுக்கமான பந்துவீச்சால் மூன்று ஓட்டங்களே எடுக்கமுடிந்தது. இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்களையே எடுத்தனர். முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டே இரண்டு ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  42. எங்களைப் போல் பலரும் இந்தப் போரை, ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். 😂 ஆனால் இவர்கள்தான்… பம்மிக் கொண்டு நிற்கிறார்கள். 🤣
  43. @sachidhananthanarayanan2270 2 hours ago (edited) "சிந்து நதியின் மிசை நிலவினிலே, காஷ்மீர் நாட்டிளம் பெண்களுடனே, சுந்தர உருது பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்!" "மன்னார் நீரிணை நிலனிலே சிங்கள நாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தமிழினில் பாட்டிசைத்தே தோணிகள் ஓட்டி விளயாடி வருவோம்!" பிரம்மபுத்திரா நதி நிலவினிலே வங்கதேசத்திளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்தே தோணிகளோட்டி விளயாடி வருவோம்!" "ஐராவதி நதி நிலவினிலே ஆந்திர நாட்டிளம் பெண்களுடனே, இன்புறு செந்தமிழ்ப் பாட்டிசைத்தே தோணிகளோட்டிவிளையாடி வருவோம்!" அடைந்து முடிந்தது அகண்ட இந்தியா = தோணிகள் ஓட்டி நீங்கள் விளையாட, உங்கள் அகண்ட இடையில் பாக்கி சீனா நுழைந்துவிட போகின்றார்கள் கவனம்🤣
  44. நன்னிக்கு நன்றி. உங்கள் கருத்தும் நியாயப்படுத்தலும் ஏற்றுகொள்ளவே முடியாதது. ஆனால் பல தரவுகளை தந்துள்ளீர்கள். அதற்குதான் நன்றி. இந்த தரவுகளின் அடிப்படையில்: பாலா அண்ணை “ஏற்புடையது” என கூறிய தீர்வைத்தான் நீலன் தயாரிக்க உதவினார். அதை சந்திரிக்கா நீர்த்து போகவைத்தார் எனில் அதற்கு நீலன் பொறுப்பாக முடியுமா? நியாயமான தீர்வை அவர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை எனிலும், அதை முன் வைக்கவாவது தன் உழைப்பை கொடுக்கலாம், புலிகளின் பலத்தை ஒரு காரணியாக வைத்து ஒரு நியாயமான தீர்வை பெறலாம் என முயற்சிப்பது, எமக்கு விருப்பம் இல்லாத நகர்வாய் இருக்கலாம் - ஆனால் அது மரண தண்டைக்குரிய குற்றம் அல்ல. குறிப்பாக இன்னொரு மாவீரரை பலி கொடுத்து. இந்த ஆரம்ப வரைபு கொடுத்த தீர்வை ஒத்த ஒரு தீர்வைதான் புலிகள் ஆஸ்லோ பிரகடனம் மூலம் கோரி நின்றனர். நீலனோடு அதே நிலைப்பாட்டில் 1995 இருந்த சிவசிதம்பரம், சம்பந்தர், மாவை இதர ஆட்களை நீலன் கொல்லப்பட்டு இரு வருடங்களுக்குள் புலிகள் அரவணைத்தனர். இதே காலகட்டாதில் புலிகளை எதிர்த்து யாழ் மேயர் ஆகி, கடும் விமர்சனங்களை வைத்த ரவிராஜை பின்னாளில் மாமனிதர் ஆக்கினர். நீலன் மீது கட்டுரையாளர் கூட “இலங்கையின் அரசுக்கு மறைமுகமாக உதவினார்” என்பதை தவிர வேறு எந்த தமிழர்/புலிகள் விரோத நடவடிக்கை குற்றசாட்டையும் வைக்க முடியவில்லை. நீலன் அமெரிக்காவில் அதிகாரத்தில் உள்ள பலரின் உற்ற நண்பர். அனைவருக்கும் தெரிந்த உண்மை, புலிகளுக்கும் தெரிந்திருந்தது. நீலன் சி ஐ ஏ என பரவலாக சந்தேகிக்கப்பட்டது. நிச்சயம் இதுவும் புலிகளுக்கு தெரியும். அவர் இலங்கை வந்து இப்படி பட்ட அரசியலில் ஈடுபட்டதும் இதற்கே எனவும் பலர் சந்தேகித்தனர். இப்படி பட்ட அமெரிக்காவின் இலங்கை நண்பரை கொல்லுவது, கிட்டதட்ட அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவரை கொல்லுவது போன்றது. இது புலிகளால் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என்றே கருதப்பட்டிருக்கும். இவ்வளவு நடந்த பின்னும், நமக்கு ஏன் அமெரிக்கா நம்மை தடை நீக்கவில்லை, உதவி வழங்கும் மாநாட்டுக்கு அழைக்கவில்லை, முள்ளிவாய்க்காலை தடுக்கவில்லை என்பது புரியவில்லை என்பது ஒரு துன்பியல்.
  45. மக்கள் தான் புலிகள் புலிகள் தான் மக்கள் என்ற சம்பவங்கள் இருக்க..... விடுதலைப்புலிகள் மிரட்டி கொள்ளையடித்தார்கள் என உரிமை கோர வெளிக்கிடும் போது.... இன்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வெறும் வாயை அசை போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு அவலும் பஞ்சாமிர்தமும் தானாக வாயில் விழுந்த மாதிரி இருக்கும்.
  46. ரஞ்சித், ஜஸ்டின் இன்னும் பல பெரதெனிய காய்கள் (மன்னிக்கவும் பேச்சு வழக்கில்) சாட்சியாக உள்ளார்கள்.எனது மச்சானுக்கு பேரும் பிரபாகரன் தான். இதே பல்கலைகளகத்தில் படித்தவர் . வடக்கு கிழக்கில் எந்த ஒரு தாக்குதல் நடந்தாலும் அறை கதவை திறந்து சாத்துவது அவரை தான் இந்த ஜே வி பி குண்டர்களால் . ஒரே காரணம் இந்த காடையர்கள் சொல்வது அவரது பெயரும் பிரபாகரன் என்பதாகும். சில நோய்கள் அவரை சூழ்ந்து கொண்டாலும் அதே கண்டி மாவட்டத்தில் அதி உயர் பதவி வகிப்பதோடு எனக்கு அடிக்கடி சொல்வது " என்னை ஒரு முறை தான் கொல்ல முடியும்" என்று.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.