Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    87990
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    19134
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20018
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/09/25 in Posts

  1. ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எதனால் உருவானது என்று சிந்தித்தீர்களா?
  2. வீட்டில முறித்திருப்பார்கள்.
  3. உண்மையிலையே இந்த உல்லாசப்பயணிகளை தாக்கிய தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்களா, இந்தியர்களா, முஸ்லிம்களா? எனக்கு இதுவே சந்தேகமாக தான் உள்ளது. தீவிரவாதிகள் அப்படி முட்டாள்களா என்ற சந்தேகமும் இருக்கிறது. யாருடைய ஆதாரத்திற்கு ஏதோ நடக்கிறது. ஆசியாவின் உக்ரைனாக உருவெடுத்திருக்கும் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். இவற்றை எல்லாம் விட அதிர்ச்சியாக உள்ளது யாழ்கள அங்கத்தவர்களின் வன்ம மனநிலை.
  4. அதனால்தான் பாஸ் சொல்லுறம்… வட இந்தியா பழையபடி மொகாலயா ஆகட்டும்… சேரர் வராட்டில் போகட்டும்… நாங்கள் அகண்ட சோழம் காண்போம்🤣. பிகு பகிடிக்கு இல்லை…நான் கார்கில் போர் நேரம் தமிழ் நாட்டில் இருந்தேன். போர் நடப்பதை டீவியில்தான் காண முடிந்தது. இது பட்டர் நாண் vs நெய் சப்பாத்தி சண்டை. இதில் நாம் தசை ஆட ஏதும் இல்லை. அதேபோல் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்ல. அவர்கள் தம்மை தமிழாராகவே உணர்வோர். எளிய சங்கிகள் கொழுப்பெடுத்து காஸ்மீரை ஆக்கிரமித்தால் அடிப்பாந்தானே. அதற்காக தமிழ் நாட்டு முஸ்லிம்களை யாரும் அந்நியப்படுத்த கூடாது. ராவல் பிண்டி ஸ்டேடியத்தை இன்று பகல் இந்தியா தாக்கியது. நான் யாழ்கள போட்டியில் வெல்ல போவதை தடுக்க இரு நாடுகளும் சதி செய்கிறன. 🤣 நீங்க வேற.. இந்திய எல்லைக்குள் 300 கிமி உள்ள நிண்டதையே பொசுக்கி போட்டாங்கள். இதுக்க லாகூர் போய்ட்டாலும்.
  5. இந்த இந்திய-பாக்கிஸ்தான் போரில் இந்தியாவின் மேல் மேற்கு நாடுகளில் மரியாதை பெரிதாக இல்லை என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக ஜேர்மனியில். அதை விட கிந்தியர்களின் தனிப்பட்ட யூரியூப் சோடிப்பு செய்திகளை பார்த்து கெக்கட்டம் விட்டு சிரிக்கின்றனர்.கிந்தியின் பெரிய ஊடகங்கள் கூட பொய்யான செய்திகளையே வெளியிடுகின்றன. சில வேளை அவர்கள் தான் வெடி குண்டுகளை வீசுகின்றார்களோ தெரியவில்லை 🤣. எமது வலி மிகுந்த இந்த மாதத்தில் மட்டுமல்ல என்றும் மனித அழிவுகளை நான் விரும்பவில்லை. ஆனால்..... அந்த இயற்கை இதே மாதத்தில் தான் கிந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும் பெரிய அழிவுகளை கொடுக்க விரும்புகின்றதோ என்னமோ.
  6. கிரிக்கட் ஓட்டங்களை பதிந்த மாதிரி போர் எண்ணிக்கைகளையும் பதியுங்க. எந்த எந்த நாட்டான் எத்தனை விழுந்தது?
  7. நீங்க 87-89 இல் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்ந்தீர்களா? ஒரு வேளை அமெரிக்கன் அல்லது இஸ்ரேல்காரன் முஸ்லீம் போல வேடம் அணிந்து தாக்கி இருப்பானோ? இரெட்டை கோபுரம் முதல் பின்விழைவு தமக்கு ஆப்பாக அமைத்த முட்டாள்தனமான பல தீவிரவாத தாக்குதல்கள் உண்டு.
  8. அன்பானவர்களுக்கு , நான் இங்கு ஒரு விடயத்தை சொல்ல விரும்புகின்றேன் . ......... இந்த யாழ் அகவை 27 க்காக ஒரு கதை எழுதத் தொடங்கி அரைவாசி வரை எழுதியாச்சுது ....... ஆனால் அப்பொழுது இந்த அகவைக்கான திரி திறக்கப்படவில்லை . ........ அந்நேரம் நான் ஊருக்கு போகவேண்டிய தேவை ஏற்பட்டதினால் டிக்கட் எல்லாம் போட்டாகி விட்டது . ...... திரும்பி வர தாமதமாகலாம் அதனால் ஒரு அன்பரிடம் இந்த யாழ் அகவையில் எனது ஆக்கம் ஒன்று இருக்கவேண்டும் என்று விரும்புகின்றேன் ....... ஆகவே ஒரு கதையை உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன், அதை நீங்கள் இந்த திரி திறந்ததும் சேர்த்து விடுமாறு கூறியிருந்தேன் ........ ! அந்நேரம் எதிர்பாராவிதமாக எனக்கு சுகவீனம் ஏற்பட்டுவிட்டது ....... ஆஸ்பத்திரியும் அப்பாயின்மென்ட் என்றும் அலைந்ததனால் ஊருக்குப் போக முடியவில்லை . ........ டிக்கடை ரத்து செய்தாச்சுது . ........ இந்தப் பக்கமும் திறக்கப்பட்டு விட்டது ......... உடல்நிலை மோசமான நிலையிலும் இதில் பங்கு பற்ற வேண்டும் என்னும் ஆர்வத்தினால் (எங்கே செத்துக் கித்துப் போய் விடுவோமோ என்னும் யோசனையில் ) அரைவாசி எழுதிய அக்கதையை ஒதுக்கி விட்டு இரண்டு நாளில் "வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம் " என்ற இக் கதையை அவசரமாக எழுதி முடித்து இங்கு பதிவிட்டிருந்தேன் . ........ இதிலும் ஒரு விசேஷமாக பெண்களைத் தவிர்த்து முழுக்கதையையும் ஆண்கள் மூலமாகவே நகர்த்தியிருந்தேன் . ........... நான் கேட்டதும் மறுக்காமல் உதவிசெய்ய முன்வந்த அந்த அன்பருக்கு மிக நன்றி . ......... இனி நேரம் கிடைக்கும்பொழுது அந்தக் கதையை எழுதி முடிக்க வேண்டும் . .......... ! இக்கதையை வாசித்து ஊக்கப்படுத்திய அத்தனை உறவுகளுக்கும் மிக்க நன்றி . ....... ! 😁
  9. எனக்கு மகாபாரத்திலே பிடித்ததே போர்தான். சின்ன வயதில், முதன் முதலில் படித்த போதே, அந்த வெறி தொற்றிக்கொண்டது. பிறகு வெண்முரசு தொடங்கவே அதற்காக எவ்வளவு ஆர்வமாகக் காத்திருந்தேன். அவர் எழுத எழுத ஒவ்வொருநாளும் விடாமல் போர் அத்தியாயங்களை வாசித்தேன். வெண்முரசை நித்தம் வாசித்ததால், அவர் முடிக்கும் போதே முடித்துவிட்டேன். இடையில் பல அத்தியாயங்கள் வாசிக்காமல் விட்டதுண்டு. இப்போ புத்தகமாக வாங்கி வாசிக்க விருப்பம். திரும்பத் தொடங்கவேணும். விட்டதெல்லாவற்றையும் வாசிக்க வேண்டும்.
  10. முடிச்சிவிட்டீங்க போங்க 🤣 பாக்கிஸ்தானை இந்தியா முடிந்த வகையில் எல்லாம் கிரிகெட்டில் ஒதுக்கியது. பாக்கிஸ்தான் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தே ஐ பி எல்லை நிறுத்தி விட்டது. பிகு போட்டியில் நான் வென்றதாக அறிவிப்பதுதான் நியாயமான முடிவாக இருக்கும் என கருத்து கணிப்புகள் சொல்வதாக இந்தியன் செய்தி சேனல்கள் சொல்கிறன🤣. பிரேக்கிங் நியூஸ் - ரிபப்லிக் டீவி கோஷான் முதலாம் இடத்தில் இருக்கும் புள்ளி பட்டியல் வெளியானது.
  11. ஜென் நிலையைத் தேடி அவர் போகவில்லை . .......... ஜெயமோகனின் " வெண்முரசு " நாவல் படிக்க ஆரம்பித்ததில் இருந்து அந்த "ஜென் " நிலை அவருக்குள் ஊடுருவி விட்டது .......... ! 😂 கிருபன் சார் . .... இதுவரை எவ்வளவு படித்து முடித்திருக்கிறீர்கள் . ........ ! அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ......... ! 😂
  12. கிருபனுக்கு முதல் கந்தப்பு தான் கிரிக்கட் போட்டிகளை நடாத்தினார்.
  13. 2002 இல் சமாதான ஒப்பந்தம் எழுதியிருக்கவிட்டால் புலிகள் தொடர்ந்தும் இருந்திருக்கக் கூடும். ஆனால் அவர்களுக்கு அந்த பிரேக் தேவைப்பட்டது. மக்களுக்கும் தான், தொடர்ந்து கொண்டிருந்த யுத்தமும் இழப்புக்களும் மக்களை சோர்வையடை செய்தது. அப்படி இயக்கம் இருந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி தக்கவைப்பதற்கு தேவையான ஆளணி அவர்களிடம் இருக்கவில்லை. கைவசமிருந்த நிலங்களை தக்கவைப்பதே பெரும் சிரமமாக இருந்த காலம். வன்னிப்பரப்பில் இருந்தும் கிழக்கில் இருந்தும் மட்டுமே புதியவர்களை இணைக்க முடிந்தது. 1995 இன் பின்னர் யாழ்குடாவிலிருந்து இணைந்தவர்கள் வெகு சிலரே. புலிகள் பலவீனமாக இருந்தாலும் ரணிலால் நிச்சயமாக வென்றிருக்க முடியாது. கோத்தாபய போல கெலியை எடுத்துக்கொண்டு போய் சண்டைக் களத்தில் இறங்கி இராணுவ தலைவர்களுடன் கலந்தாலோசிக்கும் வல்லமை கொண்ட பாதுகாப்பு அமைச்சர் ரணிலிடம் இருக்கவில்லை. அமுல் செய்ய முடியாத திட்டங்கள் என்று எவ்வாறு கூற முடியும்? இங்கேதான் பிழை விட்டார்கள். கிடைப்பதை வாங்கி அதிலிருந்து மேலும் பேரம் பேசியிருக்க முடியும். அதைவிட சர்வதேச ரீதியாக "இலங்கை அரசாங்கம் இந்த அரசியல் சாசனத்தை அமுல் படுத்த வேண்டும்" என்ற ரீதியில் அழுத்தம் கொடுத்திருக்கலாம். வளர்த்தால் குடும்பி, அடிச்சால் மொட்டை என்ற நிலைப்பாட்டால் யாருக்கு லாபம்? கோசான் சொன்னது போல அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்த்திருக்கலாம். உலக அரசியல், பொருளாதாரம், நாளுக்கு நாள் மாற்றமடைந்து கொண்டே வருகிறது. அதற்கேட்ப போராட்ட வடிவங்களும் மாற்றமடைய வேண்டும். ஏதாவது உலக நாடுகளுடன் ஒரு டீலை பேசுவது போல. இப்போ சேலன்ஸ்கி செய்வதும் இந்த டீல் அரசியல் தான். தலைவர் கொண்ட கொள்கையில் உறுதியானவர், எந்த டீலையுமே பேச விரும்பவில்லை. தமிழீழம், சுயஆட்ச்சி தவிர எதிலுமே அவருக்கு விருப்பம் இருக்கவில்லை. தமிழீழம் சிறந்ததா? - ஆம் தமிழர்களுக்கு என்று ஒரு தேசம் நல்லது. அது உடனடியாக சாத்தியமாகுமா? இல்லை. இந்த இலக்கை அடைய சில நெளிவு சுளிவுகளை சந்திக்கத்தான் வேண்டும். அரசியல் ரீதியாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உறவுகளை வளர்த்திருக்க வேண்டும். உள்நாட்டில் இதற்காத்தான் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்கள். ஆனால் அவர்களால் ஒரு சததுக்கும் பிரயோசனம் இருக்கவில்லை. அவர்களில் பலருக்கு சட்டப்புலமையோ அரசியல் அனுபவமோ இருக்கவில்லை. உதாரணத்துக்கு குதிரை கஜன். வெளிநாடுகளில் அரசியல் உறவுகளை எப்படி வளர்த்தார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது ஆனால் பாலசிங்கத்தார் மட்டுமே ஓரளவுக்கு வெளிநாட்டு அரசாங்கங்களுடன் தொடர்பில் இருந்தார், அதைவிட இந்தியாவை பகைத்துக்கொண்டு எந்த அரசாங்கமும் இலங்கையில் எதுவுமே செய்யாது. ராஜீவ் காந்தியை, அதுவும் தமிழ் நாட்டில் வைத்து கொலை செய்திருக்காவிட்டால் ஒருவேளை இந்தியா உதவியிருக்கக் கூடும். சிங்களவர்களுக்கு இந்தியாவை பிடிப்பதில்லை. ஆனால் தங்கள் தேவைகளுக்கு வளைத்துப் போடுவார்கள். நாங்கள் அப்படி செய்திருக்க முடியாதா?
  14. @vasee மும்பை இந்திய‌ன் அணிக்காக‌ விளையாடும் Tilak Varma இவ‌ரும் வ‌ய‌தை குறைச்சு கொடுத்த‌தாய் 2020ம் ஆண்டு விம‌ர்ச‌ன‌ம் எழுந்த‌து 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பையின் போது................. நான் நினைக்க‌ வில்லை Vaibhav வ‌ய‌து குறைச்சு கொடுத்து இருப்பார் என்று...................... இந்த‌ சிறுவ‌ன் 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ ஆசிய‌ கோப்பையில் போன‌ வ‌ருட‌ம் 13சிக்ஸ் அடிச்ச‌வ‌ர் ஒரு போட்டியில் ம‌ட்டும் ,இந்த‌ சிறுவ‌னை ப‌ற்றி மூன்று மாத‌த்துக்கு முத‌ல் யாழில் ஏராள‌ன் அண்ணாவும் நானும் விவாதிச்சு இருக்கிறோம்........................ அந்த‌ விளையாட்டோட‌ தான் ஜ‌பிஎல்லுக்கை வ‌ந்த‌வ‌ர் , ஆனால் ஆர‌ம்ப‌த்தில் விளையாடும் வாய்ப்பு ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து , இப்போது கிரிக்கேட் ர‌சிக‌ர்க‌ளுக்கு இந்த‌ சிறுவ‌ன் என்றால் எல்லாருக்கும் தெரியும்...................நான் பார்த்த‌ ம‌ட்டில் அவ‌ச‌ர‌ப் ப‌டுகிறார் நிதான‌மும் தேவை வ‌ய‌து கூட‌ கூட‌ கிரிக்கேட் உல‌கில் சூப்ப‌ர் கீரோவா வ‌ல‌ம் வ‌ருவார்............................... டென்மார்க்கில் அண்ணா👍............................
  15. என்னதான் வெளில திட்டினாலும் இந்தியா இந்தப்போரில் வெல்லவேணும் எண்டு எட்டி எட்டி நியூஸ் எல்லாம் பாத்துக்கொண்டிருக்கிறன்.. தானாடாவிட்டாலும் தன் தசை ஆடுமாம்… பாகிஸ்தனுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்.. ஆனா இந்தியா.. அதுவும் தமிழ்நாடு எங்கள் வாழ்வோடு பிரிக்கமுடியாதது.. மற்றது அடிப்படைவாத சோனி உலகத்தில் எந்த மூலையிலும் வெல்லக்கூடாது.. உலக அமைதிக்கே கேடு அவர்கள்.. அதுவும் ஒரு பைத்தியக்கார மதவெறியர்களிடம் அணுகுண்டு இருப்பது மனிதகுலத்துக்கே ஆபத்தானது.. மேற்குலக நாடுகள் மட்டும் பலமானதாக இல்லை என்றால் இந்த சோனி நாடுகள் முஸ்லீம் அல்லாத நம்மை எல்லாம் காபீர்கள் என்று எப்பவோ கொன்று புதைத்து அங்கு புல்பூண்டு முளைத்திருக்கும்.. புலிகள் இதில் கெட்டிக்காரர்கள்.. ஜெய்கிந்..😆
  16. இதை எழுதுவதால் பல விமர்சனங்கள் வரும், ஆனாலும் அந்த சமயம் நடந்த விடயங்கள் எனது கண் முன்னாலேயே நடந்ததால் எழுதுகிறேன் 2002 O/L படித்துக்கொண்டிருந்தேன். யுத்த நிறுத்தம் ஆரம்பித்து புலிகளின் அரசியல் துறை நெல்லியடியில், மகாவித்தியாலய வீதியில் அலுவலகம் அமைத்திருந்தார்கள். நான் உயர்தரம் படிக்கத்த தொடங்கிய காலத்திலேயே (2003) தனியார் கல்வி நிலையங்களுக்கு இளம்பரிதி, பாப்பா, அமிதாப், லோரன்ஸ் போன்றவர்கள் வந்து கூட்டம் வைப்பார்கள். "இந்த சமாதானம் சர்வதேசத்துக்கு நாங்கள் காட்டும் போக்கு. எங்களைப் பலப்படுத்தவே இந்த நேரத்தை நாங்கள் பாவிக்கிறோம். இதன் பின்னர் இறுதிச்சண்டை வரப்போகுது அதுக்கு நீங்கள் வந்து எங்களுடன் இணையுங்கோ, அதுக்கு முதல் எரிமலைக்கு வந்து மக்கள் பயிற்சி எடுத்து ஆயத்தமாக இருக்க வேணும்" என்ற தொனியிலேயே அந்தக் கூட்டங்கள் இருந்தது. வன்னியிலோ நிலைமை வேறாக இருந்தது. இயக்க உயர் தளபதிகளின் குடும்பங்களுக்கு எப்போதுமே இருந்திராத சந்தர்ப்பங்கள் வாய்த்திருந்தன. பலருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன, தொலைபேசி, மின்சாரம், தொலைக்காட்சி போன்ற வசதிகள் கிடைத்தது. புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்களால் பல பரிசுகளும் கிடைத்தது. மிக நீண்ட வருடங்கள் கடுமையான யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்கு மூச்சு விட சந்தர்ப்பம் கிடைத்தது. தலைவர் வைக்கும் கிழமை கூட்டங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நின்று போனது. தலைவருக்கும், வரும் புலம்பெயர் முக்கியஸ்தர்களுடனும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனும் செலவிடவே நேரம் போதவில்லை. இந்த கால கட்டத்தில் தான் KP இடம் இருந்து வெளிநாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு காஸ்ட்ரோவிடம் கொடுக்கப்பட்டது. அவர்களால் ஒரு கிரேனைட் ஐக்கூட வன்னிக்குள் கொண்டு சென்று இறக்க முடியவில்லை. கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்தும் எல்லாமே மூழ்கடிக்கப்பட்டன. பலர் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் வலையில் சிக்கினார்கள். வெளிநாடுகளை வெட்டி ஓடிக்கொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்துக்கு இது எப்படி போகப்போகிறது என தெரிந்திருந்தது. ஒரு கட்ட சமாதானப் பேச்சு வார்த்தையில் அவர் சமஸ்டிக்கு ஓம் என்று போட்டு வந்த பின்னரே அவருக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. தமிழ்ச்செல்வனால் பாலசிங்கத்தார் போல செயற்பட முடியவில்லை. இதே காலத்தில் கருணாவின் பிரிவும் தொடங்கி இயக்கத்தை கூறு போட்டது. பல சண்டைகளில் துணிந்து முன்னேறி அடித்து நொறுக்கும் ஜெயந்தன் படையணி பல பாகங்களாக உடைந்தது. பால்றாஜ் அண்ணையையும் புற்றுநோய் கொண்டு போனது. யாழ்மாவட்டத்தில் இருந்த போராளிகளும் கொஞ்சம் கொஞ்சமாக இராணுவத்தை இலக்கு வைக்கத் தொடங்கினார்கள். கிளைமோர், கிரேனைட், பிஸ்டல் என பல விடயங்களை உயர்தர மாணவர்களை கொண்டே செய்வித்தார்கள். ஹாட்லி காம்ப் கூட இப்படியான விதத்திலே அடித்து உடைக்கப்பட்டது. தேவையே இல்லாத ஆணியான மாவிலாறை மூடி அவர்களுக்கு கொஞ்சமும் வசதியற்ற தொப்பிகல காட்டிலே சண்டையை ஆரம்பித்து ஆரம்பத்திலேயே பின்வாங்கத் தொடங்கினார்கள். மாவிலாறில் தொடங்கி முள்ளி வாய்க்காலில் முடியுமட்டும் இது நிக்கவில்லை. பல அரசியல் கொலைகள், தெற்குப் பகுதி தற்கொலைத் தாக்குதல்கள் குறிப்பாக 2006 இல் கதிர்காமரின் சினைப்பர் சூடு போன்றவை சர்வதேசத்திடம் இருந்து வந்திருக்க கூடிய கொஞ்ச நஞ்ச ஆதரவையும் இல்லாமல் ஆகிவிட்டிருந்தது. இயக்கமோ, சர்வதேசம் உதவும், ஏதாவது ஒரு நாடு தலையிடும் என நம்பியிருந்தார்கள். ஆனால் கிடைத்த சந்தர்ப்பங்களில் உறுதியான சர்தேச உறவுகளை வளர்க்க தவறி விட்டார்கள். ஆயுத ரீதியில் தங்களை கட்டமைத்தது போல அரசியல் ரீதியில் வளர்க்கவே இல்லை. இருபது வயது இளைஜன் பத்து வயசு பிள்ளையின் உள வளர்ச்சியுடன் இருப்பது போன்ற நிலை. 9/11 பின்னர் மாறி விட்ட பூகோள அரசியல் ஆயுத நிலைமைகளை தலைவர் சரியாக எடை போட்டிருக்கவில்லை. தொழில் நுட்ப ரீதியில் அவர்களின் வளர்ச்சி இலங்கை அரசின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதிக் காலங்களில் கட்டாய ஆட் சேர்ப்பு, வரிகள் போன்ற காரணங்களால் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு போனார்கள். மகிந்தவிடம் மிகப்பெரும் தொகை பணத்தை வாங்கி ரணிலை புறக்கணித்தார்கள். ரணில் வெண்டிருந்தால் இயக்கம் இப்பவும் இருக்கும்.
  17. இச் சிறுமி ராமநாதன் மகளீர் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளை அங்குள்ள கணித ஆசிரியரால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார். அங்குள்ள கணித ஆசிரியர் (பெயர்: சங்கரன்) தன் ஆணுறுப்பை இச் சிறுமிக்கு காட்டியது தொடக்கம் மேலும் பல வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார். இச் சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோருக்கு கூற, அவர்கள் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர். அந்த பெண் அதிபரோ இச் சிறுமிக்கு நிகழ்ந்த அநியாயத்திற்கு குரல் கொடுக்காமல் கணித ஆசிரியரை பாதுகாக்க முனைந்ததுடன், இச் சிறுமியையே குற்றவாளியாக்க முனைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு கல்வி கற்றால், பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அஞ்சிய பெற்றோர், அப் பிள்ளையை கொட்டாஞ்சேனையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கும் இச் சிறுமிக்கு முன்னைய பாடசாலையில் நிகழ்ந்த பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் தொடர்பான தகவல் பரவியதால் மனரீதியாக கடும் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்திருக்கின்றார். இதற்கிடையில் கொட்டாஞ்சேனையில் உள்ள ராஜேஸ்வரி தனியார் ரியூசன் சென்ரரிற்கும் இம் மாணவி ரியூசன் கிளாஸ்களுக்காக சென்று கொண்டு இருந்திருக்கின்றார். இவ் தனியார் ரியூசன் சென்ரரின் அதிபர் / நடாத்துபவரான நாராயணபிள்ளை சிவானந்த ராஜா இவ் மாணவியை கேலி பண்ணியதுடன், இனி இங்கு வரக்கூடாது என திட்டி அனுப்பியுள்ளார். இதனால் மனம் உடைந்த இச் சிறுமி தற்கொலை செய்துள்ளார். இந்த சிறுமியை திட்டி வெளியே அனுப்பிய நாராயணபிள்ளை சிவானந்த ராஜா கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் சார்பாக தேர்தலில் நின்று தோற்றவர். இன்றும் இவர் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மீது கடும் அழுத்தங்களை பிரயோகின்றார் என அறிய முடிகின்றது. தகவல்களை தொகுத்தது: நிழலி
  18. ஆசியாவை மதம் சார்ந்து பிரிவினை செய்து எல்லை கோடுகளை வகுத்த பிரித்தானியா அமெரிக்கா கூட்டு இன்று அதன் நன்மைகளை பெறகின்றது .."தியட்டர் ஒவ் ஒப்பரேசன்" 70 வருடங்களின் பின்பு தெற்காசிய பிராந்தியத்தில் தொடங்கப்பட்டுவிட்டது.... அமேரிக்கா நேரடியாக சீனாவுடன் மோதாமல் இந்தியாவினூடாக,பாகிஸ்தானுடாக போரை நடத்தும்... இந்தியா பாகிஸ்தானை விட ஒர் படி மேலதான் ... ஜெய்ஹிந் ....வெற்றி யடைந்தால் சுன்னத்து செய்ய வேண்டிய அவசியமில்லை, பாகிஸ்தான் ஜிந்தாபாத் ...வெற்றியடைந்தால் சுன்னத்து செய்ய வேணும் .... வீணாக ஏன் உடம்பின் ஒர் பாகத்தை வெட்டி ஏறியவேணும்
  19. முடிபு 1) நீலன் தயாரித்த தீர்வுத்திட்டம் 1995, நீலனின் கொலை 1999, சமாதானப் பேச்சுவார்த்தை 2001 2) தீர்வுத் திட்டத்தை தயாரித்த காரணத்தால் நீலன் படுகொலை செய்யப்பட்டார் 3) சில வருடங்களில் அதே போன்ற தீர்வுக்கு புலிகளின் பாலசிங்கத்தார் தலைமையிலான குழு இணங்கியது. 4) நீலனை கொலை செய்ததால் தமிழர்களுக்கு நன்மையை விட தீமையே அதிகம்
  20. தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டெரிய வைக்கிறார்கள். இந்தியா தனது அயல்நாடுகளில் எந்த ஒரு நாட்டுடனாவது நல்ல உறவை பேணுகிறதா? அயல்நாடுகளில் உள்நாட்டு கலவரம், பயங்கரவாத தாக்குதல், அரசியல் தலையீடு என சண்டித்தனம் செய்யும் ஒரு நாட்டின் மீது பொதுவாக மக்களுக்கு இயல்பாக வரும் வெறுப்பை இல்லை என கூறுவது பொய்யாகும். ஆனால் உங்களுக்கு ஏற்படும் மனவலி புரிகிறது உயிர் இழப்பினை யாரும் விரும்பமாட்டார்கள்தான் அதே குற்ற உணர்ச்சி எமக்கும் உள்ளது ஆனால் அதில் ஒரு எள்ளவு குற்றவுணர்ச்சி இந்திய வல்லாதிக்கத்திற்கு இருந்திருந்தால் இந்தியாவின் அயல்நாடுகளின் பல இலட்சக்கணக்கான் உயிர்கள் இழக்கப்பட்டிருக்காது. இது பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பான உணர்வு.
  21. இது தான் இவான்ட‌ கிரிக்கேட் விப‌ர‌ம்................இவ‌ருக்கு 14வ‌ய‌து இவாக்கு 22வ‌ய‌து........................ சின்ன‌ன் சிறுசுக‌ள் ந‌ல்லா இருக்க‌ட்டும் த‌லைவ‌ரே🙏🥰❤️....................................
  22. போட்டியில் வெற்றி பெற்ற செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் 😂 இப்படிக்கு இயங்குமாரன் 😜
  23. அழுக்கை மூடி மறைத்தால் அது சுத்தம் இது தான் ஜேவிபியின் கிளீன் ஸ்ரீலங்கை கொள்கை. இடமாற்றம் செய்பட்ட அந்த ஆசிரியர் தங்களுக்கும் வேண்டாம் என்று மாணவர்கள் பெற்றோர்கள் ஆர்பாட்டம் செய்தார்களாம். உண்மையாக பயம் வரும் தானே
  24. இந்த‌ப் ப‌ட‌த்தில் இருக்கும் பிள்ளை இந்தியா ம‌க‌ளிர் அணிக்காக‌ விளையாடுகிற‌வா சின்ன‌ வ‌ய‌து தான் இவாக்கும் ஆனால் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து போடுவா..................ந‌ல்லா பில்டிங்கும் செய்வா.................................
  25. மே மாதம், எங்களுக்கு பெரு வலி தந்த மாதம். இப்போ... அந்த வலி தந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு... வலி கொடுக்கின்ற மாதமும் மே மாதம் தான். இலங்கையிலும் உலங்கு வானூர்தி விபத்தில், 6 சிங்களப் படையினர் கொல்லப் பட்டார்கள். காலம்... விசித்திரமானது. பழி வாங்க காத்திருக்கும்.
  26. தொடருங்கள். நீலம் சிறிய புத்தகம். ஆனால் கனக்க தத்துவங்கள். சிலவேளை வாசிக்க சிரமமாக அல்லது சலிப்பாக இருக்கலாம். நீலம் வெகுவாக சிலாகிக்கப் பட்ட புத்தகம் கூட. ரசிகர்களின் விருப்பமான, fan favorite, புத்தகம்.
  27. நான் எனது முப்பதாவது வயதில் போர் இருக்கக் கூடாது ஒரு உயிர் கூட போரினால் இழக்கக் கூடாது என்று இருந்தவன் தான். அப்புறம் எம் மீது என்ன ஆயுதம் பாவிக்கப்படுகிறதோ அதை தான் நாமும் எடுத்து ஓர் அளவேனும் இழப்பை தடுக்க முடியும் என்று நம்பினேன். முள்ளிவாய்க்காலின் பின்னர் எம்மை அழித்தவன் அழிக்க உதவியவன் எல்லோரும் அழிந்தபோது இயற்கை அழிவுகள் உட்பட மகிழ்ந்தவன்.. இன்று அறுபது வயதான நிலையில் உக்ரைன் மற்றும் பாலஸ்தீன அழிவுகளை பார்த்தபின் மீண்டும் ஒருவர் கூட போரினால் அழியக் கூடாது என்ற நிலைக்கு வர முயல்கிறேன். காலம் எல்லாவற்றையும் மாற்றும் தீர்மானிக்கும்......
  28. ஆ .....தெய்வமே நீங்கள் கிருபரைவிட கில்லாடியாய் இருக்கிறீர்கள் ........ நான் வாசிக்கத் தொடங்கி "நீலம் 8" ல் நிக்கிறேன் அதன் பின் கனகாலம் வாசிக்கவில்லை . ........... இனி ஆரம்பிக்க வேண்டும் . ....... !
  29. பிழை பிடிக்கிறதிலை எங்கடை ஆட்கள் விண்ணர். அப்ப... இவர்கள் போராடி இருக்க வேண்டியதுதானே. சேர்ந்து... கை கொடுக்கக் தெரியாது, கிழவிகள் மாதிரி... நொட்டையும், சொட்டையும் சொல்ல வந்து விடுவார்கள். கந்தையா... அண்ணை, வெள்ளிக்கிழமை.. இனி என்ரை வாயை கிளறாதேங்கோ. எனக்கு கெட்ட கோவம் வருகுது.
  30. இருக்கும்,....ஆனால் யாழ் களத்தில் பலரும் போராடியது பிழை சரியான முறையில் போராடவில்லை என்கிறார்கள் ....இவர்கள் சொல்கிறபடி யார் போராடுவது??????
  31. Tata ipl App இல் ( The official IPL App) பஞ்சாப் 16 , டெல்லி 14 புள்ளிகளுடன் இருக்கிறது.
  32. ஆனால் ஐபிஎல் வெப்தளத்தில் புள்ளிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
  33. ஜெய்ஷ் இ முகமது என்ற பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் பற்றிய ஒரு கட்டுரை இந்திய ஊடகங்களில் வந்திருந்தது. அந்தக் கட்டுரையை வாசித்த பின், இந்தியா எந்த வகையிலும் ஒரு போருக்கு தயாரான, ஆளுமை உள்ள நாடாகத் தெரியவில்லை. யாராவது இலங்கை போன்ற இளைத்தவர்கள் கிடைத்தால் மட்டுமே இந்தியாவால் மார்தட்டிக் கொள்ள முடியும் போல. மற்றபடி இந்திய அரசுக்கோ, ஊடகங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இது இன்னுமொரு சினிமாவே. இவர்கள் இப்படியே இருந்தால், யாராவது வந்து இவர்களை நொறுக்கித் தள்ளப் போகின்றார்கள்................🫣.
  34. கிட்டதட்ட சகல, பெரிய, சிறிய மீடியாக்கள், யூடியூப்பர் எல்லாரும் இதேதான் நிலை. ஒரு நாடே மங்குனிகளாக இருக்கிறார்கள்🤣.
  35. புதிய பாப்பரசர் தன்னை பதின்னாலாவது லியோ என்று அழைப்பதில் பிரச்னை இல்லை, அமெரிக்காவின் இரண்டாம் த்ரம்ப் வத்திக்கானை அமெரிக்காவுடன் இணைப்பாரா இல்லையா அல்லது ஏதாவது பிசகு இருக்கா என்று இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் அதுவரைக்கும் தெரிவான பாப்பரசர் உலக சமாதானத்தை நிலை நிறுத்த தன்னுடைய ஆளுமையை பிரயோகிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்🙏
  36. இந்தியா என்றாலே 2009க்கு பிற‌க்கும் அத‌ற்க்கு முத‌லும் ப‌ல‌ருக்கு பிடிக்காத‌ நாடு இந்திய‌ ம‌க்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ஆனால் ஆட்சியாள‌ர்க‌ள் ச‌ரி இல்லை , இதை தான் என்னால் சொல்ல‌ முடியும்...................த‌னிப்ப‌ட்ட‌ முறையில் என‌க்கு கூட‌ இந்தியா நாட்டை பிடிக்காது..........................எல்லாம் 2009க்கு பின் ராஜிவ் ப‌டை செய்த‌ அட்டூழிய‌ங்க‌ள் என‌க்கு தெரியாது , ஆனால் அவ‌ர் செய்த‌து அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌ வாத‌ம் 30க்கு குறைவான‌ இந்திய‌ர்க‌ள் பாக்கிஸ்தான் தீவிர‌வாதிக‌ளால் சுட்டு கொன்ற‌துக்கு இப்ப‌டி துடிக்கும் இந்திய‌ அர‌சு அமைதிப் ப‌டை என்ர‌ பெய‌ரில் வ‌ந்து செய்த‌ கொடுமைக‌ளை எம் முன்னோர்க‌ள் எங்க‌ளுக்கு சொன்ன‌ போது எங்க‌ளுக்கு எப்ப‌டி இருந்து இருக்கும்.......................................
  37. ஐபிஎல் 2025இன் இன்று தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸுக்குமான 58வது போட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி மிகவேகமாக 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நிறுத்தப்பட்டது. பிரியன்ஷ் ஆர்யா 70 ஓட்டங்களை 34 பந்துகளில் அடித்து ஆட்டமிழந்தார். ப்ராப்சிம்ரன் சிங் 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தொழில்நுட்பக் காரணங்களுக்காக போட்டி நிறுத்தப்பட்டது எனக் கூறப்பட்டாலும், இந்திய-பாகிஸ்தான் போர் அபாயம் காரணமாகவே நிறுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது. முடிவு: முடிவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கின்றது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் இல்லை):
  38. அமத்தி வாசிங்க அண்ணை, ஏற்கனவே த.வி.பு மீதான தடைக்கு புலம்பெயர் ஆதரவாளர்களின் இந்திய எதிர்ப்பையும் காரணமாக குறிப்பிட்டவர்கள்.
  39. இயக்கத்திற்கு சந்திரிகாவுடன் ஒத்துவரவில்லை. சந்திரிக்காவை கேலி செய்து சில இயக்கப்பாட்டுகளும் வந்தன. ஆனால் இதுவரை கிடைத்த தீர்வுத் திட்டங்களில் சந்திரிக்கா முன் மொழிந்த திட்டமே சிறந்தது.
  40. Cricinfo சொல்லுது நடக்கும் என்று. பார்ப்போம் என்ன என்று.
  41. சொத்துக்கள் வைத்திருக்கும் ஈழதமிழர்கள் மகிழ்ச்சி இழப்பதிற்கு காரணம் ஷோ காட்டுவதற்காக ஓவர் கடன்.
  42. கனடாவில் ஓய்வு பெற்ற பின் மனுஷன் மாதிரி வாழ இன்றைய காலத்தில் கணவனுக்கும் மனைவுக்கும் சேர்த்து மாதம் $4000 வேண்டும். ஓய்வு பெற முன் வீட்டுக்கு முழுப் பணமும் செலுத்தி முடித்து இருக்க வேண்டும். ஓய்வூதியம் தலா ஒருவருக்கு $2000 வர வேண்டும் என்றால் ஓரளவுக்கு நல்ல வேலையில் இருந்து இருக்க வேண்டும். இது பலருக்கு இங்கே இல்லை. இதில் பிள்ளைகளும் இவர்களை இன்னும் நம்பி வாழ்ந்தால் என்னாவது?
  43. இது தான் நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். வாசிப்பில்லை, உழைப்பில்லை, படிப்பை ஒழுங்காக முடிப்பதில்லை, வெளி நாடு போகும் திட்டம் தவிர வேறெந்த மாற்றுத் திட்டமும் இல்லை என்று ஒரு குறிப்பிடத் தக்க அளவு மக்கள் தொகை உருவாகியிருக்கிறது. இவர்களை இன்ஸ்ரா, முகநூல், யூ ரியூப் என்று தொலைபேசித் திரை மூலம் வசியம் செய்து வைத்திருக்கும் வேலையை அர்ச்சுனா செய்திருக்கிறார். புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழர்களும் இதற்கு உடந்தை. நெதர்லாந்து, சுவிஸ் ஆகிய நாடுகளில் வசிக்கும் 60 தாண்டிய அன்ரிமாரிடம் இருந்து மட்டும் அர்ச்சுனாவுக்கு தேர்தல் நேரம் சென்ற பணம் சில கோடி ரூபாய்கள் என்கிறார்கள். இந்தப் பண வரவைக் கண்ட பின்னர் தான், அர்ச்சுனாவின் பால்ய நண்பனான மயூரன் அர்ச்சுனாவை வெட்டி விட்டு தான் தலைமை வேட்பாளராக வர ஒரு முயற்சி செய்து, பிடிபட்டு வெட்டி விடப் பட்டார் என்றும் ஒரு கதை உலவுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.