Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46783
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19109
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/14/25 in all areas

  1. நானும் உண்மையென நினைக்கவில்லை . ........ இங்கு எத்தனைபேர் இது பொய் என்று கண்டுபிடிக்கினம் என்பதை கண்டுபிடிக்கப் பதிந்தேன் ......... நீங்களும் கந்தப்புவும் வெரி ஸ்மார்ட் ........ பாராட்டுக்கள் ........ ! 😂
  2. இன்று காலையில் சம்பளமாக கிடைத்தது ஐந்து ரூபாய் காசு. கோவை காவல் நிலையத்தில் இரவு ஒன்பது மணிக்கு காவல்துறை அதிகாரிகளுடன் நீதிக்காக பேசிய அந்த தருணத்தில், தன்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்ற உண்மை உரைத்த அந்த நொடியில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்களில் இருந்து துளிர்த்த கண்ணீர் எனக்குள் ஏற்படுத்திய வலியும் வேதனையும் கொஞ்சம் நஞ்சமல்ல. சட்டப் போராட்டம் என்பது அவ்வளது எளிதானதல்ல. காவல்துறை அதிகாரமிக்கது. ஆளும் கட்சியின் ஆளுமையின் கீழ் உள்ளது. அது என்ன குற்றம் செய்தாலும், அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது சாதாரணமல்ல. ஜெய் பீம் படம் பார்த்திருப்பீர்கள். ஆளும் கட்சியின் அசுர பலத்துக்கு முன்னால் யாரால் என்ன செய்ய முடியும்? இது ஒரு வகை என்றால் சிவில் வழக்குகள் இருக்கிறதே அது இதை விடக் கொடுமையானது. படிக்காதவர்கள் என்றால் சிவில் வழக்குகளின் கொடூரமென்பது கொலையை விட கொடுமையான தாக்கத்தை அவர்கள் வாழ்வில் உண்டாக்கும். ஒரு வி ஏ ஓ செய்யும் ஒரு தவறை சரி செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என நினைத்துப் பாருங்கள். எத்தனை ஊழல் கைதுகள், எத்தனை சஸ்பெண்டுகள் நடக்கின்றன. செய்திகளைப் படித்து விட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால் உண்மையில் பாதிக்கப்படுபவர்களின் மன நிலையும், அவர்கள் அனுபவிக்கும் துன்பமும், துயரமும் எதை வைத்து சரி செய்ய முடியும்? நான் இறந்து விட்டேன் என சொல்லி ஒரு வி ஏ ஓ பட்டாவில் இருந்து பெயரை நீக்கி விட்டான். ஜமா பந்தியில் என் அம்மா, என்னைத் தூக்கி கொண்டு போய் டி. ஆர். ஓவிடம் விட்டு இவனை இங்கேயே கொன்னு போடுங்க. இவன் பெயரில் சொத்து பத்திரம் இருக்கிறது, இந்தப் படுபாவி இவன் இறந்து விட்டான் என பட்டா கொடுத்திருக்கிறான் என்று கதறியது. இப்படியெல்லாம் சொத்தினால் துன்பத்தில் ஆழ்ந்தவன் நான். இதுவே பணம் இல்லாதவர்கள் எனில் என்ன நடக்கும் என நினைத்துப் பாருங்கள். நிலத்தின் மீது நடத்தப்படும் அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா? ஒரு சாதாரணன் இனி ஒரு வீடு வாங்க முடியுமா? இப்போது சம்பளம் 12000 ரூபாயிலிருந்து 25000 வரைக்கும்தான் கொடுக்கிறார்கள். விலைவாசி உயர்வு, வீடு வாடகை உயர்வு, போக்குவரத்து கட்டணம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இப்படி சம்பாதிக்கும் பணமெல்லாம் வயித்துபாட்டுக்கே சரியாக இருக்கும் போது வீடு வாங்க முடியுமா? கல்லில் கடவுளைக் காணும் ஒவ்வொருவரும் பூக்களுக்காகவும், பூசைக்காகவும், பார்ப்பான் தட்டுக்களில் போடும் காசினால் அந்தக் கடவுள் அவர்களுக்கு எதையும் தருவதில்லை. கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை மட்டும் அவை தரும். நம்பிக்கையோடு வாழ்க்கையை வாழ்ந்து விட போராடும் ஒவ்வொருவரும் தன் வாழ் நாள் வரையிலும் ஏதோ நடக்கும் என்ற ஒரே ஒரு எண்ணத்துடன் வாழ்வை வாழ்ந்து விடுகிறார்கள். முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்த வீடு, இனி உனக்கு சொந்தமில்லை என ஒருவர் சொல்லும் போது, அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் ஒரு சாதாரண குடும்பத்தால்? இப்படியான ஒரு பிரச்சினை வந்தது. இரண்டு நாட்கள் ஆகின. உண்மை என்ன என கண்டுபிடிக்க. அடிக்கடி போன் செய்து கொண்டே இருந்தார்கள். அவர்களின் நிலை அப்படி. அது என்ன, எப்படி சரி செய்ய வேண்டுமென சரியான விபரங்களுடன் அவர்களுக்குப் புரிய வைத்து, அது தொடர்பான பணிகளைச் செய்ய சொன்னேன். அவர்களுக்கு இதை எப்படி கையாளனும் என சொல்லிக் கொடுத்தேன். இனி அந்தப் பிரச்சினை தொடர்ந்து நடக்கும். சிவில் பிரச்சினை அல்லவா? ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதம். எல்லோருக்கும் அது எளிதில் புரிந்து விடாது. சிவில் வழக்குகள் என்பவை சரியான ஆதாரங்களுடன் நடத்தப்பட வேண்டியவை. அப்படி இருக்கலாம், இப்படி இருக்காலம் என்பதற்கெல்லாம் வேலையே இல்லை. ஆவண சாட்சியங்கள் வேண்டும். அது இல்லாமல் சிவில் வழக்குகள் சரியான தீர்வைத் தராது. பணம் எல்லா இடத்திலும் வேலை செய்யாது. அதிகார மீறலும் வேலை செய்யாது. புத்திசாலித்தனமும், நிதானமும் வேண்டும். இன்று காலையில் அவர்கள் எனக்கு கட்டணமாக பெரிய தொகை கொடுத்தார்கள். அது அவர்களுக்கு ரொம்பவும் பெரியது. "ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள்" என்றேன். திகைத்து நின்றார் அவர். சட்டைப் பாக்கெட்டுக்குள் இருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து டெஸ்கில் வைத்தார். திடீரென்று என் கையைத் தொட்டு வணங்கினார். "அய்யா, அதோ என் குருநாதர் அவரிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னேன். அவர் என் குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமியை வணங்கிவிட்டு சென்றார். கோதையிடம் "இதை எடுத்துக் கொண்டு போய் பத்திரமாக வை" எனச் சொன்னேன். படிக்காதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் தொண்டு செய்வதை விட வேறு என்ன பெரியதாய் செய்து விட முடியும்? என்னால் நடக்க முடியாது. என் உடலே எனக்கு எதிரி. என் உடலை வெற்றி கொள்வதில் தான் என் வாழ்க்கை அமைந்திருக்கிறது. இல்லையெனில் இந்தியா இன்னொரு சேகுவேராவைப் பார்த்திருக்கும். ஒரு சக மனிதன் - இல்லாதாவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதிகாரத்தினால், சதியால் வாழ்வை இழந்தவர்களுக்கும் ஆதரவாய் போராடிக் கொண்டிருப்பான். இதைப் படிக்கும் எவராவது ஒருவர் துன்பத்தில் உழலும் சக மனிதனுக்கு உதவினால் அதை விட பெரியது எனக்கு எதுவும் இல்லை. இதை விட இன்னும் ஒன்று இருக்கிறது. எவருக்கும் எந்த துன்பமும் தராமல் இருந்தாலே அதுவே கடவுளை விட பெரியது. கருணை உள்ளம் கடவுள் இல்லம் அல்லவா? வளமுடன் வாழ்க. https://thangavelmanickadevar.blogspot.com/2025/05/blog-post_6.html
  3. சீனாக்காரன் recycled plastic ல பத்து ரூபாய் இருபது என டம்மி டிரோன்களை பாக்குக்கு கொடுத்திருப்பான். அதை எதிர்க்க பலகோடி செலவழிச்சு பிரம்மோஸ்சை பஸ்பமாக்கி உள்ளார்கள் போலும்🤣.
  4. வைக்கோவின் அர‌சிய‌ல் மீது என‌க்கு முர‌ன் இருக்கு ஆனால் அவ‌ர் பால்ராஜ் அண்ணா ப‌ற்றி சொன்ன‌து உண்மையில் வேத‌னையாய் இருந்த‌து தான் ஈழ‌த்துக்கு 1989க‌ளில் வ‌ந்த‌ போது த‌ன‌து பாதுகாவ‌ல‌ர் பால்ராஜ் அண்ணா என்று சொல்லி இருந்தார்................த‌ன்னை ப‌த்திர‌மாய் த‌மிழ் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் போது இந்திய‌ இராணுவ‌ம் ஒரே செல் தாக்குத‌லாம் , ஒரு க‌ட்ட‌த்தில் த‌ன்னை கீழ‌ ப‌டுக்க‌ விட்டு பால்ராஜ் அண்ணா த‌ன‌க்கு மேல‌ ப‌டுத்தவ‌ராம் த‌ன‌க்கு காய‌ங்க‌ள் ப‌ட்டு விட‌க் கூடாது என்று.............செல் அடி ஓய்ந்த‌ பிற‌க்கு இர‌ண்டு பேரும் பாதுகாப்பான‌ இட‌த்தில் இருந்து உடுப்பு மாத்தும் போது , பால்ராஜ் அண்ணாவின் உட‌ம்பில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் காய‌ங்க‌ளாம்......................எல்லாம் எதிரியின் குண்டுக‌ள் ப‌ட்ட‌ இட‌மாம்.............. ஆனையிற‌வு நாய‌க‌ன் பால்ராஜ் அண்ணா.................எதிரின்ட‌ கையால் சாகாம‌ ப‌டுத்த‌ ப‌டுக்கையில் உயிர் பிரிந்த‌து...............மாலை ம‌ரியாதையோட‌ உட‌லை அட‌க்க‌ம் செய்த‌து ம‌ன‌துக்கு ஆறுத‌ல் ஆன‌ந்த‌ புர‌த்தில் வீர‌ச்சாவு அடைந்த‌ த‌ள‌ப‌திக‌ளின் உட‌ல்க‌ளை எடுக்க‌ கூட‌ முடிய‌ வில்லை அவ‌ர்க‌ளுக்கு எல்லாம் பால்ராஜ் அண்ணா தான் வ‌ழி காட்டியா இருந்த‌வ‌ர்................. வார‌ கிழ‌மையோட‌ 17வ‌து ஆண்டு எம்மை விட்டு பிரிந்து................ வீர‌ வ‌ண‌க்க‌ம்🙏🙏🙏........................
  5. பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட‌ தமிழர்களின் ஒப்பற்ற தளபதி : டி.பி.எஸ்.ஜெயராஜ், டெயிலி மிரர் ஆங்கில இணையம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக யாழ்க்குடா நாட்டில் ஒப்பரேஷன் பவான் எனும் இராணுவ நடவடிக்கையினை இந்திய இராணுவம் ஆரம்பித்தது. இந்திய இராணுவத்திற்கெதிரான சண்டைக்கு தளபதி பசீலன் தலைமையிலான புலிகளின் அணியொன்று அவசர அவசரமாக யாழ்க்குடாநாட்டில் இறக்கப்பட்டது. இச்சண்டைகளில் தளபதி பசீலனுக்கு உதவித்தளபதியாக பால்ராஜ் களமாடினார். இச்சண்டைகளில் ஒன்றின்போதே முன்னேறிவந்த இந்திய இராணுவத் தாங்கியொன்றின் மீது சர்வசாதாரணமாக ஆர் பி ஜி உந்துகணைச் செலுத்தியினால் தாக்கி அதனைச் செயலிழக்கச் செய்தார் பால்ராஜ். கோப்பாய்ப் பகுதியில் மிகவும் மூர்க்கத்தனமாக புலிகளின் நிலைகள் நோக்கி முன்னேறி வந்துகொண்டிருந்த இராணுவத் தாங்கிமீது பால்ராஜ் அவர்கள் மிகுந்த துணிவுடன் முன்னால்ச் சென்று அதனைத் தாக்கி அழித்தது அவரது வீரத்தை வெகுவாகப் பறைசாற்றியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு அடுத்த நிலை இராணுவத் தலைவரும், பிரபாகரனின் பிரதான தளபதியுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இயற்பெயர் கந்தையா பாலசேகரன் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் அவர்கள் கொண்டிருந்த ஆகச்சிறந்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ்தான் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இராணுவத் திட்டமிடல்களில் அவருக்கிருந்த அசாத்திய புலமையும், சண்டைகளை முன்னின்று வழிநடத்தும் வல்லமையும் அவருக்கே தனித்துவமானவை. 1965 ஆம் ஆண்டு பிறந்த தளபதி பார்ராஜ் அவர்கள் 2008 ஆம் ஆண்டு வைகாசி 20 ஆம் திகதி, இற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் இருதய நோயினால் இயற்கை எய்தினார். அவரது அறுபதாவது பிறந்த தினம் இவ்வருடம் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி கொண்டாடப்படும். தளபதி பால்ராஜ் தொடர்பாக முன்னர் வந்த கட்டுரைகளை அடிப்படையாக வைத்து, புலிகளின் ஒப்பற்ற வீரனான அவரது வரலாற்றை மீட்டிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இராணுவ வட்டாரங்களில் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் வைத்து தளபதி பார்லார்ஜ் பாக்கப்படுகிறார். தலைவரைப் போலவே தடுப்புச் சமர்களிலும், வலிந்த தாக்குதல்ச் சம‌ர்களிலும் மிகவும் கைதேர்ந்தவராக அவர் வலம்வந்தார். தளபதி பால்ராஜின் இராணுவ வல்லமைகள் அவரது எதிரிகளான இலங்கை இராணுவத்தினராலும் வெகுவாகப் போற்றிப் புகழப்பட்டிருக்கிறது. இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவ‌ரை பால்ராஜ் அவர்கள் மிகச்சிறந்த இராணுவத் திட்டமிடலாளன் என்பதோடு, மிகவும் திறமையான‌ வீரன் என்றும் கருதப்படுகிறார். திட்டமிடல் மற்றும் அதனைத் திறம்படச் செயற்படுத்துதல் என்பவற்றில் பால்ராஜ் அவர்களைத் தலைவரைக் காட்டிலும் உயர்வான தானத்தில் இலங்கை இராணுவம் வைத்திருந்தது என்றும் கருதப்படுகிறது. தளபதி பால்ராஜுடன் இலங்கை இராணுவம் நடத்திய சண்டைகளின் ஒன்றின்போது போர்முனையிலிருந்து இராணுவத் தலைமைப் பீடத்திற்கு அனுப்பப்பட்ட செய்திப் பரிவர்த்தனையினை புலிகளால் கேட்க முடிந்திருந்தது. அதன்படி போர்முனையில் சண்டையிட்டுக்கொண்டிருந்த இராணுவ அதிகாரிகள் களத்தில் தளபதி பால்ராஜ் இருக்கிறார் என்று தலைமையிடத்திற்கு அறியத் தந்தார்கள். அதற்கு தலைமையகத்திடமிருந்தது வந்த பதில் இவ்வாறு இருந்தது, "மிகுந்த க‌வனமாக இருங்கள். பிரபாகரனைக் காட்டிலும் பால்ராஜ் மிகவும் ஆபத்தானவர்" என்று கூறியது. பின்னாட்களில் இச்செய்தி குறித்து தலைவர் பிரபாகரன் அறிந்துகொண்டபோது மிகவும் மகிழ்ந்துபோனார். பால்ராஜுடன் இதுகுறித்து வேடிக்கையாகப் பேசிய தலைவர், " அவர்கள் உன்னைத்தான் முதலாவது எதிரியாகப் பார்க்கிறார்கள் போலத் தெரிகிறது, ஆகையால் நான் இனி அஞ்சத் தேவையில்லை" என்று கூறியிருக்கிறார். இதுபோன்ற , பெரிதும் வெளியே தெரிந்திராத சம்பவம் ஒன்று 2003 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது.நோர்வே மத்தியஸ்த்தத்தின் உதவியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான முயற்சிகள் நடந்துகொண்டிருந்த காலம். இருதய நோயினால் மிகுந்த அவஸ்த்தைக்குள்ளாகியிருந்த தளபதி பால்ராஜிற்கு உடன‌டியான மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிற்குச் செல்லவேண்டிய தேவை இருந்தது. கட்டுநாயக்கா அந்நேரத்தில் நாட்டின் சனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்கவே இருந்தார். பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பணியாற்றி வந்தார். நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்கள் அவ்வேளை நடைபெற்றுக் கொண்டிருந்தமையினால் பால்ராஜை கட்டுநாயக்கவூடாக சிங்கப்பூரிற்கு அழைத்துச் செல்லும் அனுமதியினை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது. நோய்வாய்ப்பட்டிருந்த தளபதி பால்ராஜ் தனது இரு மெய்ப்பாதுகாவலர்களோடும், நோர்வேயின் அதிகாரிகளோடும் கட்டுநாயக்கவூடாக சிங்கப்பூரிற்குப் பயணமானார். அவருக்கான சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து சில வாரகாலத்தின் பின்னர் அவர் மீளவும் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார். நாடுதிரும்பும் வழியில் கட்டுநாயக்க விமான நிலையத்தினை தளபதி பால்ராஜ் வந்தடைந்த போது இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லெப்டிணன்ட் கேணல், மேஜர் தர அதிகாரிகள் உட்பட இன்னும் பதினைந்து இராணுவத்தினர் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இராணுவத்தினர் இவ்வாறு பால்ராஜைச் சூழ்ந்துகொண்டது அவரைத் தாக்குவதற்காகத்தான் என்று எண்ணிய நோர்வே அதிகாரிகள் அச்சத்தினுள் உறைந்துபோயினர். ஆனால் நடந்ததோ வேறாக இருந்தது. வடக்கில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அந்த இராணுவ அதிகாரிகள், தளபதி பால்ராஜ் புரிந்த சாகசங்களை, வியத்தகு செயல்களை நன்கு அறிந்தே இருந்தனர். ஆகவே அவர்மீது மிகுந்த மரியாதையும், கெளரவமும் அவர்களுக்கு இருந்தது. அவரை மிகச்சிறந்த போர்வீரனாக அவர்கள் கண்டுணர்ந்திருந்தனர். ஆகவே தான் பால்ராஜ் அங்கு வருகிறார் என்று அவர்கள் அறிந்த்துகொண்டபோது, களத்தில் தமக்குச் சிம்மசொப்பணமாக விளங்கிய மிகச்சிறந்த வீரனை நேரடியாகக் கண்டுவிடும் ஆர்வத்தில் அவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவ்வதிகாரிகளில்ச் சிலர் பால்ராஜுடன் கைகுலுக்கிக் கொண்டதுடன், மகிழ்ச்சியாகவும் உரையாடினர். அதன்பின்னர் பால்ராஜ் பத்திரமாக இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றி ஏறி வன்னிக்குப் புறப்பட்டுச் சென்றார். அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடப்போகிறது என்று அஞ்சிய நோர்வே அதிகாரிக‌ள் இதனால் ஆறுதல் அடைந்தனர். https://youtu.be/iO8uYq9Fo4U?si=KZnRj8CS1FdFEPkS தொடரும்............
  6. சென்னைல மீன் மார்கெட்டுக்கு போய் மீன் வாங்க போறீங்களா அப்ப இந்த அஞ்சு ரூல்ஸ பாலோவ் பண்ணுங்க. ரூல் நம்பர் 1 ; என்ன மீன் வாங்கனும்ன்கிறத வீட்லயே முடிவுபண்ணிட்டு போங்க... இல்லன்னா அங்க போய் என்ன மீன் வாங்குறதுன்னு முழிச்சீங்கன்னா என்ன அப்படியே மீன் அல்லாத்தையும் வாங்குறமேரி நிக்கிற ஒன்னு வாங்குனா வாங்கு இல்ல இடத்த காலி பண்ணுன்னு மீன் விக்கிற அக்கா சவுண்டு விடும்.... ரூல் நம்பர் 2 ; மீன எடபோட்டு வாங்குற வரைக்கும் மீன கைல தொடக்கூடாது அப்படி மீறித் தொட்டா அந்த அக்காங்களுக்கு சண்டாலமா கோபம்வரும் பேண்டு சட்டயில்லாம் போட்டு ரீசண்டா கீரியே மீன எப்படி கைல தொடலாம்னு சண்டைக்கு வரும்... ரூல் நம்பர் 3 : எக்காரணம் கொண்டும் பேரம் பேசாதீங்க... அப்புறம் அந்த அக்காங்க மம்மி பாவம் தாத்தா பாவம்... ஆதாம் ஏவா பாவம் அளவுக்கு தர லோக்கலுக்கு இறங்கி திட்டுவாங்க... வேணும்னா எட போடும்போது ஒரு மீன சேத்து போடுங்கன்னு கேட்டா போடுவாங்க அதுக்காக ஒரு வஞ்சீரத்த வாங்கிட்டு இன்னொரு வஞ்சிரத்த ஃபிரியா போடுன்னு கேட்டுறாதீங்க அப்புறம் எத்தன லிக்குட் சோப் ஊத்தி கழுவினாலும் காது தீஞ்சது தீஞ்சதுதான்... தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே மீன் விக்கிற அக்கா நாவினால் சுட்ட வடு... ரூல் நம்பர் 4: நீங்க ரெகுலரா மீன் வாங்குற ஆளா இருந்தா ஒரே அக்காட்ட வாங்குற பழக்கத்த வச்சுக்குங்க... அப்படி ஒரே ஆள்ட்ட மீன் வந்குறதால மீன் விலை கம்மியாலாம் கிடைக்காது... ஓரளவு நல்ல மீன் கிடைக்கும் நீங்க தேர்ந்தெடுக்கிற மீன் சரியில்லன்னா அவங்களே ரிஜெக்ட் பண்ணி அய்யே நல்ல மீனா எயித்து போடுன்னு சொல்லுவாங்க... ரூல் நம்பர் 5 : மீன் வாங்கிட்டீங்கன்னா அப்புறம் நடுவுல வீட்டுக்கு வர்ற வழில சைக்கிள்ல, கூடையில மீன் வித்துட்டு போறவங்ககிட்ட மீன் விலைய கேட்டு கிராஸ் செக் பண்ணாதீங்க... அப்புறம் நாம அறுநூறு ரூபாய்க்கு வாங்குன மீன அவங்க நானுறுன்னு சொல்லி நமக்கு ஹார்ட்அட்டாக்கை வரவச்சிடுவாங்க... பொம்மையா முருகன்
  7. ஓ... அப்பிடியா. உங்கடை கதையைக் கேட்டா நீங்கள் 90களின் பையன் போல. 1996க்கு முன் எவ்வளவோ நடந்திருக்கு. இப்போ அப்போதிருந்த வீரர்கள் இருந்தால், தூள் கிளப்புவினம். அவர்கள் எந்த காலத்திலும் எந்த இடத்திலும் எப்படிப்பட்ட மைதானத்திலும் விளையாடக்கூடிய வீரர்கள். கிரிக்கெட்டில் Golden era என்று சொல்ல முடியும். இப்போது இருக்கும் வீரர்கள் அப்படி என்று சொல்ல முடியவில்லை. கிரிக்கெட் என்றால் என்ன என்று அறிந்தது அந்தக் காலகட்டத்தில் தான். இலக்கங்களையோ, தரவுகளையோ வைத்து ஒரு வீரையோ அல்லது ஒரு அணியையோ அனுமானிக்க கூடாது என்பது அன்றைய காலகட்டத்தில் நான் அறிந்தது, படித்தது
  8. எல்லாம் தேர்தல் அரசியலுக்காக நடத்தப்பட்ட நாடகங்கள். இது எல்லா நாடுகளுக்கும் தெரிந்த விடயம். கிந்தியா கண்னை மூடிக்கொண்டு பால் குடிக்கும் நாடு. அதன் கள்ள கருமாந்திர நரி வேலைகள் யாவரும் அறிந்ததே.
  9. அது ஒரு அதிர்ச்சிகரமான போட்டி. இப்பிடி, ஏதாவது ஒன்று, ஒவ்வொரு உலகக் கிண்ணத் தொடரிலும் நடைபெறும். பல உலகக் கிண்ணத்தில் இலங்கையும் அப்பிடித்தான். 1996 வரையும், இலங்கை 4 போட்டிகளைத்தான் வென்றிருந்தது. பாக்கிஸ்தான் வென்ற 1992ல், இலங்கை ஒரு போட்டியிலும் வெல்லவில்லை. 1996ல் எல்லாம் மாறியது. ஒரு போட்டியையும் தோற்காமல், கோப்பையைத் தூக்கியது.
  10. உலக சதுரங்கப் போட்டியில் இணுவில் சிறுமிக்கும் இடம்! நிதி அனுசரணைக்கு தந்தை கோரிக்கை இணுவில் பகுதியை சேர்ந்த தர்சன் கஜிசனா என்ற சிறுமி, 8 வயதுக்குக்கு உட்பட்டோருக்கான உலக சதுரங்க சம்பியன்ஷிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். இது தொடர்பில் அவருடைய தந்தை நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது: எட்டு வயதுக்குட்பட்ட உலக சதுரங்க சம்பியன்ஷிப் போட்டிக்கு எனது மகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் அல்பேனியாவில் நடைபெற்ற மேற்காசிய இளையோர்களுக்கான தொடரிலும் எனது மகள் விளையாடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், நிதி அனுசரணை இல்லாத காரணத்தால் அதில் எனது மகள் கலந்துகொள்ளவில்லை. கடந்த வருடம் தேசிய ரீதியாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் முதலிடத்தை பெற்று, இலங்கையின் 8 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் உத்தியோகபூர்வ வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாடசாலைகள் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு சர்வதேச வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார். மேலும் கடந்த டிசெம்பர் மாதம் உலகளவிலான ரப்பிட் செஸ் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தில் காணப்பட்டார். எனவே தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்கு நிதி தேவையாகவுள்ளது. நிதி அனுசரணையாளர்கள் ஆதரவு வழங்கும் பட்சத்தில் எனது மகள் மேலும் பல போட்டிகளில் பங்குபற்றி எமது மண்ணுக்கு பெருமை சேர்ப்பார் - என்றார். https://newuthayan.com/article/உலக_சதுரங்கப்_போட்டியில்_இணுவில்_சிறுமிக்கும்_இடம்!_நிதி_அனுசரணைக்கு_தந்தை_கோரிக்கை
  11. எங்க அவரை காணவில்லை .........நான் வருவர். வருவர். என்று பார்த்தபடி அவருக்கு வேறு உழைப்பு கிடைத்து விட்டது போலும்”
  12. https://www.espncricinfo.com/series/wills-world-cup-1995-96-60981/kenya-vs-west-indies-20th-match-65175/full-scorecard கென்யா ஒருமுறை மேற்கிந்திய தீவுகளையே 1996 உலகக்கோப்பை பந்தயத்தில் வென்றிருக்கிறது!
  13. இந்த மட்டக் களப்பு சிறையுடைப்பின் போது இன்னொரு கத்தோலிக்க குரு, சிங்கராயர் போல அல்லாமல் தப்பிச் சென்றார். (பெயர் மதுர நாயகம் என நினைக்கிறேன்). அவரைத் தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே அவர் திருச்சபையில் இருந்து விலகி மணவாழ்க்கையினுள் நுழைந்தார் என நினைவிருக்கிறது. வண. சிங்கராயர் அவ்வளவு இலகுவாக தன் குரு நிலையை விட்டு விடவில்லை. அவரை குரு நிலை நீக்கம் செய்த பின்னரும், யாழ் ஆயர் இல்லத்தின் மதிலுக்கு வெளியே (கோவில் வீதி?) இருந்த தெருவில் ஒரு வீட்டில் தனியே வாழ்ந்து வந்தார். அவருடைய அண்ணன் வீட்டிற்கு தனது உடல் நிலை பாதிக்கப் பட்ட கடைசிக் காலத்திலும் அவர் சென்று வாழவில்லை. "பிடிவாதக் காரன்" என்று அவரது அண்ணன் - எங்கள் தந்தையின் நண்பர்- அடிக்கடி திட்டுவதைக் கேட்டிருக்கிறேன்.
  14. ஒரு தரம் ஆனையிறவு உப்பளத்துக்கு விஜயம் செய்யுங்கள். மலையகத்துக்கு செல்லுங்கள். நாட்டுக்காக உழைப்பவர்கள் படும் துன்பத்தில் பங்கெடுங்கள்.
  15. சிவில் வழக்கு மூன்று நான்கு தலைமுறை செத்துப் போனாலும் அது ஒரு முடிவுக்கு வராது ........ வழக்கு போட்டவர்களும் சரி முதல் வழக்கை நடத்திய புறக்கிராசிமார் மற்றும் நீதிபதியாயிருந்தவர் யாவரும் பரலோகம் போயிருப்பார்கள் ....... வழக்கு காகிதங்கள் மட்டும் எங்கெங்கோ குறை உயிரில் வாழ்ந்து கொண்டிருக்கும் . ........ !
  16. இந்திய இராணுவம் 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை நாடுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினூடாக இந்திய அமைதிப்படைப் படை எனும் பெயரில் பெருமளவு இந்திய இராணுவத்தினர் இலங்கையின் வடக்குக் கிழக்கிற்குள் வந்திறங்கியபோது அதுவரை இருந்த போர்ச்சூழலில் சற்றுத் தொய்வு ஏற்பட்டது. ஆனால் நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்த சமாதான நடவடிக்கைகள் ஐப்பசி மாதமளவில் முற்றாகத் தோல்வியடையவே இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான முழுமையான போர் ஆரம்பமானது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக இந்திய இராணுவம் ஒப்பரேஷன் பவான் எனும் இராணுவ நடவடிக்கையினை ஆரம்பித்தது. தளபதிகள் பசீலன் மற்றும் பால்ராஜ் தலைமையிலான புலிகளின் அணியொன்று இந்திய இராணுவத்துடனான சண்டைகளுக்காக புலிகளால் யாழ்க்குடநாட்டிற்கு அனுப்பப்பட்டது. இவ்வாறான சமர்களில் ஒன்றான கோப்பாய்ச் சமரில், தமது நிலைகளை நோக்கி முன்னேறிவந்த இந்திய இராணுவத்தின் தாங்கியொன்றின்மீது தான் வைத்திருந்த ஆர் பி ஜி உந்துகணைச் செலுத்தியினால் தாக்கி அழித்தார் பால்ராஜ். பால்ராஜின் துணிகரமான இச்செயல் போராளிகளிடையே மிகுந்த மகிழ்வையும், நம்பிக்கையினையும் ஏற்படுத்தியிருந்தது. புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்குமிடையிலான போர் வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் பரவலாயிற்று. தலைவர் பிரபாகரனும், உதவித்தலைவர் மாத்தையாவும் வன்னிக்கு தமது நிலைகளை மாற்றிக்கொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மிக அடர்ந்த காட்டுப்பகுதியான நித்திகைக்குளத்தில் தலைவர் பிரபாகரன் தனது முகாமை அமைத்துக்கொண்டார். தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கும் லெப்டிணன்ட் கேணல் நவமே பொறுப்பாகவிருந்தார். இக்காலத்தில் தளபதி நவத்தின் உதவித்தளபதியாக பால்ராஜ் செயற்படத் தொடங்கினார். இக்காலத்திலேயே தலைவர் பிரபாகரனுடன் பால்ராஜ் அவர்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்கள் உருவாகத் தொடங்கின. தளபதி பால்ராஜின் தன்னடக்கமும், அசாத்தியமான போரிடும் ஆற்றலும் தலைவர் பிரபாகரனை மிகவும் கவர்ந்திருந்தன. 1988 ஆம் ஆண்டு நித்திகைக்குளத்தில் தங்கியிருந்த தலைவரைக் கைப்பற்ற இந்திய இராணுவம் முன்னெடுத்த பாரிய இராணுவ நடவடிக்கையான ஒப்பரேஷன் செக்மேட்டிற்கெதிராக, தளபதி பால்ராஜ் அவர்கள் நடத்திய நேரடியான எதிர்ச்சமர் இந்திய இராணுவத்தின் நடவடிக்கையினை முற்றாகத் தோல்வியடையச் செய்திருந்தது. இச்சமரின்போது இந்திய இராணுவத்தின் கூர்க்கா ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த பல வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய இராணுவத்தினருக்கெதிரான சண்டைகளில் சுமார் மூன்று தடவைகள் பால்ராஜ் அவர்கள் காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறியதையடுத்து தலைவர் பிரபாகரன் தனது கட்டளையகத்தை மீளவும் யாழ்க்குடா நட்டிற்கே மாற்றிக்கொண்டார். அக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பினுள் சில கொள்கைகள் எடுக்கப்பட்டன. அதாவது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து இயக்கத்தில் இணைந்துகொள்ளும் போராளிகள் அப்பிரதேசத்தில் உருவாகும் தலைமைப் பொறுப்புகளுக்கு தம்மை ஈடுபடுத்தலாம் என்பதே அது. தொடரும்............
  17. கொக்குத்தொடுவாய் கந்தையா பாலசேகரன் எனும் இயறற்பெயரைக் கொண்ட தளபதி பால்ராஜ், 1965 ஆம் ஆண்டு கார்த்திகை 27 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராமமான கொக்குத்தொடுவாயில் பிறந்தார். நான்கு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்பிள்ளையும் கொண்ட அந்தக் குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக அவர் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயிலும் பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையில் உயர்தரக் கல்வியையும் அவர் பயின்றார். குடும்பத்தில் கல்வியில் சிறந்தவராக விளங்கிய பாலசேகரன் அவர்கள், சாதாரணதர பரீட்சையில் அதிவிசேட சித்திகளைப் பெற்றிருந்தார். அவர் கல்வியில் காட்டிய திறமையினால் பல்கலைக்கழகம் புகுவார் என்று அவரது பெற்றோரான கந்தையாவும் தாயாரான கண்ணகியும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் பாலசேகரன் தமிழ் போராளி அமைப்பு ஒன்றில் இணைந்துகொண்டார். 1984 ஆம் ஆண்டிலேயே புலிகளுடன் பாலசேகரன் இணைந்துகொண்டார். புலிகளின் ஒன்பதாவது அணியில் இடம்பெற்ற அவர் தமிழ்நாட்டில் இராணுவப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார். புலிகள் இயக்கத்தில் அவர் இணைந்துகொண்டதன் பின்னர் அவருக்கு பால்ராஜ் என்று பெயர் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் தனது ஆயுதப் பயிற்சியை நிறைவுசெய்த பால்ராஜ் நாடு திரும்பினார். புலிகளின் வன்னி நடவடிக்கைகளுக்கு அக்காலத்தில் பொறுப்பாகவிருந்த கோபாலசாமி மகேந்திரராஜா எனும் இயற்பெயரைக் கொண்ட மாத்தையாவினால் புலிகள் இயக்கத்திற்குள் உள்வாங்கப்பட்ட பால்ராஜ், மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இணைக்கப்பட்டார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தாக்குதல் நடவடிக்கைகளில் புலிகளால் ஈடுபடுத்தப்பட்டார். பால்ராஜ் அவர்களது முதலாவது குறிப்பிடத்தக்க தாக்குதல் முயற்சி 1986 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இடம்பெற்றது. கிளிநொச்சி இராணுவ முகாமைச் சுற்றிவளைக்க மாத்தையாவினால் எடுக்கப்பட்ட முயற்சியானது தோல்வியடைந்தபோதிலும், தனக்கு வழங்கப்பட்ட பணியான கரடிப்போக்குச் சந்தியைக் கைப்பற்றும் தாக்குதலை பால்ராஜ் சிறப்பாகவே செய்துமுடித்தார். 1987 ஆம் ஆண்டு மாத்தையா தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக பதவியேற்று யாழ்க்குடாவிற்குச் சென்றார். அங்கிருந்துகொண்டு வன்னியின அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்குமான பொறுப்பினை அவர் பார்த்து வந்தார் . அதேவேளை வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான தளபதிகளாக ஜெயம், சுசீலன் மற்றும் பசீலன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பசீலனின் துணைத்தளபதியாக பொறுப்பெடுத்துக்கொண்ட பால்ராஜ் அவர்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலேயே தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார். இக்காலப்பகுதியில் பசீலனினாலும், பால்ராஜினாலும் மிகவும் கச்சிதமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 14 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.அதன்பின்னர் பால்ராஜ் அவர்கள் மணலாறுப் பிரதேசத்திற்கு நன்கு பரீட்சயமானவர் என்கிற அடிப்படையில் அப்பகுதியிலேயே களம் அமைத்துச் செயற்பட்டு வரலானார். தொடரும்............
  18. நாமலும்... இப்பவே இனவாதம் கக்க வெளிக்கிட்டுது. தொடர்ந்து பிக்குகளும் ஊளையிட தொடங்குவார்கள். கனடா அமைச்சரவையில்... இரண்டு தமிழர்கள் உள்ளார்கள். அதுகும் இதுகளுக்கு... வயித்து எரிச்சலாய் இருக்கும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன... எந்தக் காலத்திலும், ஆட்சிக்கு வராமல் இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது.
  19. சனல் 4 நீங்கள் இனப்படுகொலை செய்துள்ளீர்கள் என ஆதாரபூர்வமாக உலகுக்கு நிரூபித்து காட்டி உள்ளது. துணிவுள்ள முஸ்லிமாக இருந்தால் பலஸ்தீனத்தில் நடப்பது இனப்படுகொலை இல்லை என சொல்லுங்கள் பார்க்கலாம்.
  20. அவர் தனக்கு தேவையானதை வைத்துக் கொண்டு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் .......... அது ஏழ்மையல்ல .......... இன்றைய உலகில் பொருளாதாரத்தை வைத்து அளவீடு செய்வது சரியல்ல . ......... அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் . ....... ! 🙏
  21. பாகிஸ்தான்... வெடி மருந்து நிரப்பப் படாத டம்மி ட்ரான்களை நூற்றுக்கணக்கில் இந்தியாவை நோக்கி செலுத்த... அதனை பிரம்மோசை வைத்து இந்தியா அழித்ததாம். ஒரு பிரம்மோசின்... செய்கூலி, சேதாரம் எல்லாம் பல கோடிகளை தண்டுமாம். எறும்பை கொல்ல .... பீரங்கியை பாவித்த கதையாய் போச்சுது இந்தியாவில் நிலைமை. 😂
  22. எப்பொழுதும் எளிமையாகவும் அமைதியாகவும் இருப்பார். 🙏
  23. நேற்று ஒரு பாகிஸ்தான் ஆளின் விபரிப்பை வாசித்தேன். அவரது தியரிப்படி இந்தியா முதலில் அணு ஆயுதத்தை ஏற்றி செல்ல கூடிய பிரம்மோசில் அணு ஆயுதத்தை ஏற்றாமல், வழமையான வெடிபொருளை நிரப்பி அனுப்பியாதம். இதில் வருவது அணு ஆயுதமா இல்லையா என தெரியாத நிலையில் - இந்த வெருட்டுக்கு பதில் சொல்ல… இந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏவப்படும் வலையமைப்பை பாக்கிஸ்தான் ஜாம் பண்ணியதாம். இவைதான் அணு ஆயுதத்தை காவி செல்ல கூடிய இந்திய ஏவுகணைகள். இதை ஜாம் பண்ணி முடக்கி விட்டால் இந்தியாவிடம் அணுகுண்டு இருந்தாலும் அதை பிரயோகிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் - ஜெய்சங்கரும், தோவால் வாசிங்டனுக்கு போனை போட்டார்களாம். பாகிஸ்தான் ஆளின் விபரிப்பு. கஞ்சா கப்ஸா கதையாகவும் இருக்கலாம். தனக்கு இந்திய இராஜதந்திரிகளிடம் தொடர்பும் இருப்பதாக அவர் முன்பே யாழில் எழுதி இருக்கிறார். ஒரு குண்டு மணி அளவு கூட இந்த தாக்குதல்தாரிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க ஆதாரம் காட்டவில்லை. சகல வெளிநாட்டு ஊடகங்களும் இதை கேட்டன. ஆனால் இந்தியா எந்த ஆதாரத்தையும் கொடுக்காமல் தன்னிச்சையாக தாக்கியது.
  24. https://finance.yahoo.com/quote/AM.PA/ https://finance.yahoo.com/quote/300696.SZ/ சீன நிறுவனத்தின் பங்குகளின் விலை 20% உயர்ந்துள்ளது ஆனால் ரபேலின் பங்கு விலையில் பெரிதாக மாற்றம் நிகழவில்லை என கருதுகிறேன் அல்லது நான் தவறாக Dassault Aviation (Rafael) பங்கு சுட்டியினை கருதிவிட்டேனா?
  25. நீங்கள் மாத்தி யோசிக்கேக்க நானும் மாத்தி யோசிக்கிறன். சிங்களவர் இடத்தில் தமிழர்களும் தமிழர்கள் இடத்தில் சிங்களவர்களும் இருந்தால் என்னென்ன கூத்துக்கள் நடக்கும்?
  26. விமானம் வீழ்ந்த பின்பு அவற்றின் பங்குச்சந்தை வெகுவாக சரிய சீன விமான கம்பனியின் பங்குச்சந்தை வெகுவாக கூடியுள்ளதாக சொல்கிறார்கள்.
  27. இன்று இப்படம் பார்த்தேன். படம் நன்றாக உள்ளது. கடைசியில் ரமேஷ் திலக் சொல்லும் வரிகள் என்னை இளக்கி கவர்ந்தது. “யார் சொன்னா நீ அகதி என்று?” 😔
  28. Web series போன்ற ஒன்றில் தொடராக எடுக்கப்பட வேண்டியது பால்ராஜ் எனும் காவிய நாயகனின் போராட்ட வாழ்க்கை. சொல்வதற்கும், வியப்பதற்கும், உருகுவதற்கும், போற்றுவதற்கும் என சொல்வதற்கு ஏராளம் இருக்கின்றது அவர் வாழ்வில்.
  29. நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன் ..........! 😍
  30. பிகு பிரிட்டனில் friends of Israel என எம்பிகள் கூட்டு, கட்சி தாண்டி உள்ளது. அதேபோல் ஒன்றை கனடாவில் ஸ்தாபிக்க முயலலாம்.
  31. என்னுடைய வண சிங்கராயர் + மன்னார் கொனெக்சன், குரொஸ் கொனெக்சந்தான் என்பது கிட்டதட்ட நிருபணமாகி விட்டது. சவாககச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில் காயம் அடைந்த போராளிகள் சீலன், குண்டப்பா, புலேந்தி அம்மானை காப்பாற்ற மருந்து வாங்கிய வகையில் வண பிதா ஆ சிங்கராயர் யாழில் கைதாகியுள்ளார். புலிகளுக்கு உறுதுணையாக இருந்த மரு ஜெயகுலராஜா பற்றிய குறிப்பில் இருந்து 👇 (27-10-1982 )ஆம் திகதி அன்று நடைபெற்ற சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் சீலன், புலேந்திரன், ரகு (குண்டப்பா) ஆகிய போராளிகள் காயமடைந்தனர். முப்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ். குடாநாட்டில் காயமடைந்த இவர்கள் மூவரையும் காப்பாற்றுவது இலகுவான விடயமல்ல. மேலதிக சிகிச்சைக்காக தமிழகத்துக்கு அனுப்பும்வரை தேவையான வைத்தியத்தை மேற்கொள்ள வேண்டும். இப்பணியில் டாக்டர் ஜெயகுலராஜா, அவரது சகோதரர் போதகர் ஜெயதிலகராஜா, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மு. நித்தியானந்தன் அவரின் துணைவியாக விளங்கிய நிர்மலா ஆகியோர் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டனர். போராளிகள் காயமடைந்ததால் அதற்குத் தேவையான மருந்துகளைப் பெற முயற்சிப்பர் எனக் கருதிய உளவுத்துறையினர் மருந்தகங்களை கண்காணித்தனர். குறிப்பிட்ட வகை மருந்துகளை கொள்வனவு செய்தவர் யார் என ஆராய்ந்தனர். அந்த வகையில் வண. பிதா சிங்கராயர் கைதானார். அதன் தொடர்ச்சியாக வண. பிதா சின்னராசாவும் மேற்குறிப்பிட்ட அனைவரும் கைதாகினர். https://www.battinatham.com/2024/06/blog-post_671.html?m=1
  32. உங்கள் நினைவு சரியானது. மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பிப் போக மறுத்தவர். ஈபிஆர்எலெவ் அமெரிக்க அலன் தம்பதியரை கடத்திய பின்னர் வைத்த கோரிக்கைகளில் ஒன்று இவரை விடுதலை செய்யவேண்டும் என்பது. அந்நேரத்தில் சிறையில் இருந்தபடி, அலன் தம்பதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கடத்தல்காரர்களுக்கு இவர் வேண்டுகோள் விடுத்தார். இவரது வேண்டுகோள் அடங்கிய குரல் பதிவை இலங்கை வானொலி பலமுறை ஒலிபரப்பியது. இவர் பின்னர் இயற்கை மரணமடைந்ததாக ஊடகங்களில் வாசித்தேன்.
  33. chatgpt பதில்கள் . ✅ 1. அர்மேனிய இனப்படுகொலை (Armenian Genocide) – 1915-1923 பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: பெரும்பாலான நாடுகள் 2000களுக்குப் பிறகு மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஏற்றன. இனப்படுகொலை செய்தது: ஒட்டோமன் எமிரேட் (துருக்கி) மரணங்கள்: 1.2–1.5 மில்லியன் அர்மேனியர்கள் நடப்பு நிலை: துருக்கி இன்னும் இது இனப்படுகொலை என்பதை மறுக்கிறது. ✅ 2. ஹொலோடோமோர் (Holodomor) – 1932-1933 பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: 2006–2020களில் மேற்கு நாடுகள் ஏற்றன. இனப்படுகொலை செய்தது: சோவியத் ஒன்றியம் (உக்ரைனியர்களுக்கு எதிராக) மரணங்கள்: 3–7 மில்லியன் நடப்பு நிலை: ரஷ்யா மறுக்கிறது; உக்ரைன் அதை இனப்படுகொலையாக அறிவித்துள்ளது. ✅ 3. ஹெரெரோ மற்றும் நாமா இனப்படுகொலை (1904–1908, நமீபியா) பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: ஜெர்மனி 2021ல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. இனப்படுகொலை செய்தது: கெய்சர் ஜெர்மன் எமையர் (German Empire) மரணங்கள்: ~80,000 ஹெரெரோ மற்றும் நாமா மக்கள் நடப்பு நிலை: இப்போதும் நஷ்ட ஈடு குறித்து விவாதம் நடக்கிறது. ✅ 4. ரூவாண்டா இனப்படுகொலை (1994) பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: ஒரே ஆண்டிலேயே பலர் ஏற்றனர், ஆனால் மேற்கு நாடுகள் தாமதமாகவே பதிலளித்தன. இனப்படுகொலை செய்தது: ஹூதூ எக்ஸ்ட்ரீமிஸ்ட் அரசு மரணங்கள்: ~800,000 துட்சி மக்கள் நடப்பு நிலை: ஐ.நா. உட்பட உலகம் இனப்படுகொலையாக ஏற்றது. ✅ 5. சுதான் – தர்ஃபூர் இனப்படுகொலை (2003–தொடர்பது) பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: 2000களில், ஐ.நா. மற்றும் பல மனித உரிமை அமைப்புகள் இனப்படுகொலை செய்தது: சுதான் அரசு, ஜஞ்ஜவீட் படைகள் மரணங்கள்: ~300,000+ நடப்பு நிலை: சில நாடுகள் மட்டும் இனப்படுகொலையாக அறிவித்துள்ளன. இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொரு சம்பவமும் காலத்திற்குப் பின் மட்டுமே பொதுவாக ஏற்கப்பட்டது. இது போல ஏராளமான "ஏற்றுக்கொள்ளப்படாத" அல்லது விவாதிக்கப்படும் சம்பவங்களும் உள்ளன (உதா: தமிழீழ யுத்தம், சீனாவின் ஜின்ஜியாங் நிலைமைகள், ரொஹிங்க்யா மேன்முறைகள்). இங்கு யாரும் துள்ளி குதிக்கவும் இல்லை அழவும் இல்லை தமிழர்களின் ஒவ்வொரு நகர்வுக்கும் அழுது தொலைப்பது சிலரின் வாடிக்கை .
  34. அசர்பைஜான் இனப்படுகொலைகள் நூறு வருடங்களின் பின்னர் தான் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  35. தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும், அங்கீகாரமும் கிடைக்ககூடாதென்பதுதான் நானாக்களின் டிசைன்!
  36. இன்று சலூனுக்கு சென்று வந்தேன். அங்கே கனடாவில் வசிக்கும் தம்பி ஒருவர் தந்தையின் மரணத்திற்கு வந்து கடமைகளைச் செய்துவிட்டு நாளை கீரிமலையில் தெர்ப்பைச் சூடு, சலூன் வைத்திருப்பவரோடு நல்ல நட்பு. அப்ப காதில விழுந்தது இங்க எழுத்தில போடுறன்! தாய், தந்தை இருவரும் 3 மாத இடைவெளியில் இறந்துவிட்டார்கள். இவருக்கு ஒரு அண்ணா பிரான்சில் இருந்து வந்து அவரும் பெற்றோருக்கான கடமைகளைச் செய்தவர். கொழும்பு, யாழில் வீடுகள், வங்கியில் நிலையான வைப்புகள், லொக்கரிலும் நகைகள் என்று தந்தையார் சேமித்து வைத்துள்ளார். அண்ணன் பேராசையில் நிற்கிறார். தந்தை உயிரோடு இருக்கையில் தம்பிக்கு உரியவற்றை எழுதி வைக்க கேட்க தம்பி இப்ப ஒன்றும் அவசரம் இல்லை என மறுத்துவிட்டார். இப்போது அண்ணனின் பேராசையால் பெரிய குழப்பத்தில் இருக்கிறார். கொழும்பு வீடு அண்ணனுக்கு, யாழில் உள்ள வீட்டிலும் பங்கு கேட்கிறாராம்!
  37. கோவில் திருவிழாக்களில்... லட்சக் கணக்கான ரூபாய்க்கு வெடி கொளுத்தி... காசை கரியாக்குபவர்களும், திருவிழாவிற்கு யானையை கூட்டி வந்து... அதை மிரள வைத்து... சாமி கும்பிட வந்த மக்களுக்கு, யானையால் மிதி வாங்கிக் கொடுத்து அவர்களை அங்கவீனர்களாக்குபவர்களும் இந்தச் சிறுமிக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். இந்த விடயத்தில்... கோவில் நிர்வாகங்கள் அவர்களுடன் பேசி நல்ல ஒரு முடிவிற்கு வர வேண்டும்.
  38. ஒற்றுமை, ஒருங்கிணைவு என்றால் என்ன விலை என கேட்கும் எம் இனத்தில் இது சாத்தியமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.