Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points87988Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்9Points19112Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்8Points38754Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்6Points31956Posts
Popular Content
Showing content with the highest reputation on 05/17/25 in all areas
-
மீன் சந்தையில், மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
2004இல “சந்தைக்கு வந்த கிளி” என்ற தலைப்பில் யாழில் எழுதியிருந்தேன். தேடிப் பார்த்தேன் கிளி அகப்படவில்லை. எனது கிராமம் நகரத்திலிருந்து இரண்டு மைல் தள்ளியே இருந்தது. எனது கிராமத்திலே ஒன்றுக்கு மூன்று கடைகள் இருந்ததால் எங்கள் தேவை அங்கேயே பூர்த்தியாகிவிடும். முக்கியமான பொருட்கள் வாங்குவதாயிருந்தால் அல்லது வங்கி, அஞ்சல் அலுவலகம், சினிமா இப்படி ஏதாவதற்குப் போக வேண்டிய தேவை இருந்தால் மட்டுமே நகரத்துக்குப் போவோம். மரக்கறி, மீன்வகைகள்கூட கிராமத்திற்கு வந்துவிடும். இதில் மீன் கொண்டுவருபவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கே வருவார்கள். அவர்கள் நகரச் சந்தையில் கொள்வனவு செய்து ஒவ்வொரு கிராமங்களாக விற்று வருவார்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் விற்கப்படாவிட்டால் மீன்கள் பழுதடைந்து விடும். அதானால் எல்லா வியாபாரிகளும் எப்பொழுதும் ஓட்டமும் நடையுமாகவே இருப்பார்கள். இதற்குள் வியாபாரிகளுக்குள் போட்டியிருப்பதால் நான் முந்தி நீ முந்தி என்று ஓடியோடியே வியாபாரம் செய்வார்கள். இதில் குறிப்பிடப் படவேண்டியது என்னவென்றால் எல்லா வியாபாரிகளும் பெண்களாகவே இருப்பார்கள். ஓலைப் பெட்டியில் மீன்களை வைத்து மூடியபடியே சுமந்து வருவார்கள். மீன்பெட்டியைக் கீழே வைத்து திறந்தவுடன் எல்லோரும் இன்றைக்கு என்ன மீன் என்று ஆவலாக எட்டிப் பார்ப்பார்கள். அதுவரைக்கும் இன்றைக்கு என்ன மீன் சமைக்கலாம் என்பது அவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸாகவே இருந்திருக்கும். நிட்சயமாக நண்டு, இறால், கணவாய் என்பது இவர்களிடம் இருக்காது. அவைகளை வாங்குவதாயின் சந்தைக்குத்தான் போக வேண்டும். சந்தையில் அன்றைக்கு என்ன மீன் வகைகள் மலிவோ அது அவர்கள் பெட்டியில் நிறைந்து இருக்கும். சந்தையிலுள்ள விலையைவிட எப்படியும் இரண்டு மூன்று மடங்கு அதிகமாகவே அவர்கள் விலை சொல்வார்கள். அவர்கள் கூறும் விலைக்கு யாருமே வாங்கமாட்டார்கள். எல்லா அம்மாமார்களும் பேரம் பேசித்தான் வாங்குவார்கள். எனது வீட்டுக்கு அருகேயிருக்கும் ஒழுங்கையிலுள்ள அரசமரத்தடிதான் இந்த மினி சந்தை. இல்லத்தரசிகள் அந்த மரத்தடி நிழலில் காத்திருந்து அந்த வழியாகப் போகும் மீன் வியாபாரிகளை மறித்து மீன் வாங்குவார்கள். மரத்தடியில் வாங்குபவர் தொகை குறைவாயிருந்தால் வியாபாரி நிற்கமாட்டார். அவர் அடுத்த கிராமத்திற்குப் போக துரிதம் காட்டுவார். நான் பலமுறை அம்மாவுடன் இந்த இடத்திற்குப் போயிருக்கின்றேன். அம்மா பேரம்பேசி மீன் வாங்குவதை ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு சனிக்கிழமை நண்டு வேணும் என்று அம்மாவைக் கேட்டேன். சந்தைக்கு யாரும் போனால் சொல்லிவிடுகிறேன் என்று அம்மா சொன்னா. ஆனால் சந்தைக்குப் யாரும் போவதாகத் தெரியவில்லை. எனவே நானே போய் வாங்கி வருவதாக அம்மாவிடம் சொன்னேன். அம்மா சிரித்துக் கொண்டே, „ என்னாலையே இஞ்சை இவளுகளிட்டை கதைச்சு மீன் வாங்கேலாமலிருக்கு... நீ.. என்னத்தை வாங்கப் போறாய்..? உன்னை ஏமாத்தி பழுதானதெல்லாத்தையும் தந்து விடுவாளுகள்.. பிறகு அடுத்த கிழமை பாப்பம் „ என்றா. ஆனாலும் நான் நம்பிக்கை தெரிவித்ததால், எனது விருப்பத்துக்கு குறுக்கே நிற்க விருப்பமில்லாமல் பணத்தைத் தந்து வழியனுப்பி வைத்தா. நகரத்து மீன் சந்தை ஈக்களாலும், ஆட்களாலும் நிறைந்தே இருந்தது. ஏலம் கூறுவது, கூவி விற்பது, பேரம் பேசுவது என்று சந்தை சத்தத்தில் மூழ்கியிருந்தது. கையில் பையுடன் உள்ளே நுழைகிறேன். தரையில் அமர்ந்து பெட்டியின் மூடிமேல் மீன்களை பரப்பி வைத்து பெண்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். நண்டு பரப்பி வைத்திருந்த பெட்டியின் முன்னால் போய் நின்றேன். "வா... ராசா.. நண்டு வேணுமே.. நல்ல நண்டு.. பொம்பிளை நண்டு .. மலிவா போட்டுத்தாரன்.. எத்தினை வேணும்..?" வியாபாரியின் கனிவான பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அன்பான வரவேற்பு. நண்டுப் பெட்டியின் முன்னால் குந்தினேன். ஒரு நண்டின் காலைப் பிடித்துத் தூக்கிப் பார்த்தேன். பாரமாகத்தானிருந்தது. " பாத்தியே.. நல்ல சதையிருக்கு.." சொல்லியபடியே என் கையில் இருந்த நண்டை வாங்கி மீண்டும் பெட்டியில் வைத்தார் வியாபாரி. " என்ன விலை?" விலையைச் சொன்னார். அம்மா பேரம் பேசி வாங்குவது நினைவுக்கு வந்தது. வியாபாரி சொன்ன விலையை மனதுக்குள் இரண்டால் வகுத்துக் கொண்டேன். இப்போ அவர் சொன்ன விலைக்கு பாதி விலை கேட்டேன். பெரிதாக இடி விழத் தொடங்கியது. இடிவிழுந்தால் அர்ச்சுனா.. அர்ச்சுனா.. என்று சொல்லிக் கொண்டு இரண்டு கைகளாலும் காதைப் பொத்த வேண்டும் என்று சொல்வார்கள். இங்கும் காதை இறுகப் பொத்திக் கொண்டு அசிங்கம்.. அசிங்கம் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. வியாபாரியின் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகள் இதுவரை நான் கேட்காத வார்த்தைகள். அத்தனையும் தமிழில்தான். தமிழில் இவ்வளவு கெட்ட வார்த்தைகளா? கேட்டதில் காது வெட்கப் பட்டது. ஆகவே எழுதுவது இயலாது. "...................... வந்திட்டார் bagஐயும் தூக்கிக் கொண்டு.................." பேச்சின் அதிர்ச்சியால், குந்தியிருந்த நான் இப்போ பின்னால் கைகளை ஊன்றி கால்களை நீட்டி தரையில் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன். சந்தையின் சத்தம் அடங்கியது போல இருந்தது. எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற பிரமை. கூனிக் குறுகியபடி மெதுவாக எழுந்து, காற்சட்டையில் ஒட்டியிருந்த மண்ணைக் கூடத் தட்ட முடியாதவயனாய் சந்தையை விட்டு வெளியே வந்தேன். " என்னாலையே இஞ்சை இவளுகளிட்டை கதைச்சு மீன் வாங்கேலாமலிருக்கு... நீ.. என்னத்தை வாங்கப் போறாய்..? ..." அம்மாவின் வார்த்தைகள் காதில் ஒலித்தன. ஓங்கி அழவேண்டும் போலிருந்தது. சந்தைக்கு வெளியேயும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவேயிருந்தது. தன்மானம் விடவில்லை அடக்கிக் கொண்டேன். பஸ் நிலையத்தில் எனது கிராமம் வழியாகப் போகும் 750 இலக்க பஸ் இற்குப் பின்புறமாக நின்று ஒரு பத்து வயதுச் சிறுவன் கேவிக் கேவி அழுது கொண்டிருந்ததை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.3 points
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஒரு டெஸ்ட் கிண்ணத்துக்கான கணிப்பு போட்டி, வெறும் 8 கேள்விகளுடன் 5 ஓவர் போட்டி போல அமைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான கேள்விகளை வெறும் 2 நிமிடத்தில் பதிந்து விடலாம். மேகி நூடில்ஸ் துரித உணவு போல, இது துரித கணிப்பு போட்டி. வெறும் இரெண்டே நிமிடத்தில் வெற்றியை தட்டிச்செல்லுங்கள். போட்டி முடிவு - ஜூன் மாதம் 10ம் திகதி ஐக்கியராச்சிய நேரம் 23:59. பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம். யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள் நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான இன்றைய 55வது ஐபில் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது! முடிவு: முடிவில்லை! இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவரும் “முடிவில்லை” என்று கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை!2 points
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழுக்குள் வர “கணனிக்குள்” நுளைந்தேன் அது கதவை மூடிவிட்டது.☹️ “ஐ பாட்” மூலமாக நுளைந்தேன் அது ஆனந்தமாக வரவேற்றது.🤩2 points
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
அண்மையில் பிரிதானியாவில் பீட்டர் சலவன் எனும் ஒருவர் 38 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். இப்போ 70 வயதை நெருங்கி உள்ள இவர், அவரின் இருபதுகளில் ஒரு 19 வயது பென்ணை, வன்புணர்ந்து, சித்திரவதை செய்து கொலைசெய்தார் என சிறைக்கு அனுப்பப்பட்டார். 38 வருடம் கடந்து டின் என் ஏ சாட்சி இதை செய்தது இன்னொருவர் என நிறுவியாதால் வெளியே வந்துள்ளார். நினைத்துப்பாருங்கள் இது எந்த பெரிய அநியாயம்? 38 வாழ்வின் முக்கியமான வருடங்களை சிறையில் அநியாயமாக வீணடித்துள்ளார். ஆனால்….. இவருக்கு மரண தண்டனை கொடுத்திருந்தால்? இப்போ அவரை மீள கொண்டுவந்திருக்கவா முடியும்? அல்லது ஆண்மை பறிப்பு போல மீட்க முடியாத தண்டனையை கொடுத்திருந்தால்? உலகின் முதல்தர குற்றவியல் நீதி அமைப்பு உள்ள இங்கிலாந்திலேயே இப்படியான தவறுகள் நடக்கும் போது, இந்தியா இலங்கையில் ? ஆகவேதான் இப்படியான தண்டனைகளை பெரும்பாலும் கொடுப்பதில்லை. இன்னும் பல காரணங்கள் உள்ளன. https://uk.news.yahoo.com/peter-sullivan-victim-longest-running-141720495.html?guccounter=1&guce_referrer=aHR0cHM6Ly93d3cuZ29vZ2xlLmNvbS8&guce_referrer_sig=AQAAAMrP_qR2PangmUiNQwTTlrAfP9x-Twx44jpSfe4VwxyNorqNopkznGLj8N8pFWH8ZtNqL5PCM2ovuQBKQHDhp0odXPju-dEuYCQid6StxlOb3oyzYi0cDf7g3ZOTqbn7V7o-YYeH6dpX9PRyjSYgi_RXV14sHoKAob5eRbjz_d1-2 points
-
வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு.
2 pointsசங்குடன் கூட்டணி வைத்ததற்கு... எதிர்ப்பு தெரிவித்த யாழ்.கள அரைகுறை அரசியல் ஆய்வாளர்களை வரிசையாக வரும்படி அழைக்கின்றோம். 🤪 சுமந்திரனுக்கு...சங்கு ஊதப் படுவது நிச்சயம். ஊ.... ஊ..... ஊ............ 😂 🤣2 points
-
விட்டமின் பி12 குறைந்தால் உடலில் என்ன நிகழும்? சைவ உணவாளர்கள் இதை எப்படி பெறுவது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 16 மே 2025, 04:05 GMT விட்டமின் பி12 உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. இதன் குறைபாட்டால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பொதுவாக சைவ உணவுகளில் இந்த விட்டமின் இருப்பதில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். விட்டமின் பி12 பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகள் என்ன? வாழ்வில் எந்தெந்த காலகட்டத்தில் விட்டமின் பி12-ன் தேவை அதிகமாக இருக்கிறது? விட்டமின் பி12 அதிகமாக உள்ள உணவுகள் என்னென்ன? சைவ உணவை உட்கொள்ளும் நபர்கள் எவ்வாறு தங்களுக்கான விட்டமின் பி12 வை பெற்றுக் கொள்ள இயலும்? அதற்கான பதில்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. விட்டமின் பி12 என்றால் என்ன? கோபாலமின் (Cobalamin) என்று அழைக்கப்படும் விட்டமின் பி12 என்பது விட்டமின் பி குடும்பத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கியமான விட்டமின். இது அதிகமாக விலங்கு சார் உணவுகளில் மட்டுமே காணப்படுகிறது. நீங்கள் சைவ உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டவர்களாக இருப்பீர்கள் எனில், உங்கள் உடலுக்குத் தேவையான விட்டமின் பி12-ஐ சப்ளிமெண்ட்கள் (supplements) மூலமே பெற்றுக் கொள்ள இயலும் அல்லது பி12 விட்டமினுடன் செறிவூட்டப்பட்ட உணவு உங்களுக்கு கைகொடுக்கலாம். உடல் ஆரோக்கியத்துக்கு விட்டமின் பி12-ன் பங்கு என்ன? "உடலில் உள்ள இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை சீராக வைக்கிறது விட்டமின் பி12. இரத்த சிவப்பு அணுக்கள் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும், உங்கள் உடலின் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதையும் உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது விட்டமின் பி12. இது மட்டுமின்றி, "டி.என்.ஏ. உருவாக்கத்துக்கும், சேதமடைந்த டி.என்.ஏவை சரி செய்வதற்கும் விட்டமின் பி12 அதிக அளவில் தேவைப்படுகிறது," என்று தெரிவிக்கிறார் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஊட்டச்சத்து துறையில் பணியாற்றும் மருத்துவர் மீனாட்சி பஜாஜ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விட்டமின் பி12 பற்றாக்குறையால் இளம் வயதினர் மற்றும் கர்ப்பிணிகள் அதிக அளவில் பாதிப்பை சந்திக்கின்றனர் எந்த வயதினருக்கு எவ்வளவு விட்டமின் பி12 தேவை? 2020-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் வெளியிட்ட அறிவிப்பின் படி, பிறந்த குழந்தை முதல் 3 வயதான குழந்தைகள் வரை, நாள் ஒன்றுக்கு 1.2 மைக்ரோ கிராம் விட்டமின் பி12 ஊட்டச்சத்தை உணவில் கொண்டிருக்க வேண்டும். ஆறு முதல் 18 வயதினருக்கு இந்த ஊட்டச்சத்து நாள் ஒன்றுக்கு 2.2 மைக்ரோ கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு விட்டமின் பி12-ன் தேவை அதிகமாக இருக்கலாம் என்று கூறுகிறார் மீனாட்சி. யார் விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள்? யார் விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று பிபிசி தமிழிடம் விளக்கினார் மருத்துவர் மீனாட்சி. பொதுவாகவே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் உண்ணாமல் 'வீகன்' உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள் விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிப்பைச் சந்திப்பார்கள். லாக்டோஸ் சகிப்புத்தன்மை குறைப்பாட்டால் பாதிக்கப்படும் நபர்களும் விட்டமின் பி12 பற்றாக்குறையால் அவதிப்பட நேரிடும். விட்டமின் பி12 என்பது நீரில் கரையக்கூடிய (Water Soluble) விட்டமின் ஆகும். இது எளிதில் உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. ஆனால் சில இணை நோய்களுக்காக மருந்துகளை உட்கொள்ளும் போது விட்டமின் பி12-ஐ உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையில் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாகவும் பி12 பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். இதுமட்டுமின்றி வயிற்றில் புற்றுநோய் இருக்கும் போதோ, ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலோ, அல்லது அல்சர் போன்ற நோய்களுக்காக மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தாலோ பி12-ஐ உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையில் பாதிப்பு ஏற்பட்டு, பி12 பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, வகை இரண்டு நீரிழிவு நோய்க்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நபர்களும் இத்தகைய விட்டமின் பி12 பற்றாக்குறைக்கு ஆளாக நேரிடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள் ஒன்றுக்கு ஒரு முட்டையை கட்டாயமாக எடுத்துக்கொண்டாலும் அவர்களுக்கு விட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படாது. பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? "நரம்பு மண்டலம் மற்றும் இரத்த சிவப்பு அணுக்களின் சீரான வளர்ச்சிக்கு உதவும் மிக முக்கியமான ஊட்டச்சத்தாக விட்டமின் பி12 இருப்பதால், இதன் பற்றாக்குறை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்," என்று எச்சரிக்கிறார் மருத்துவர் மீனாட்சி. "நான்கு முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பி12 குறைபாடு மற்றவர்களைக் காட்டிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது," என்று கூறுகிறார் அவர். ஃப்ராண்டியர்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள, 'மெட்டர்னல் விட்டமின் பி12 ஸ்டேட்டஸ் ட்யூரிங் பிரக்னன்சி அண்ட் இட்ஸ் அசோசியேசன் வித் அவுட்கம்ஸ் ஆஃப் பிரக்னன்சி அண்ட் ஹெல்த் ஆஃப் தி ஆஃப்ஸ்ப்ரிங்' என்ற ஆய்வறிக்கையில், இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில், விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 70 முதல் 74% ஆக உள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, கர்நாடகாவில் இந்த பற்றாக்குறையால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 51% ஆகவும் இருக்கிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "பி12 பற்றாக்குறையால் இரத்த சோகையில் பெர்னிசியஸ் அனீமியா (pernicious anemia) என்ற பிரச்னை ஏற்படும். நரம்பியல் சார்ந்த பிரச்னைகள், சமநிலையற்ற தன்மை, தலைசுற்றல், பலவீனம் அடைதல், மூச்சுப் பிரச்னைகள் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும், இதன் பற்றாக்குறை மிகவும் தீவிரமாக இருக்கும் போது, இரத்தத்தில் ஹோமோசிஸ்டெய்ன் (homocysteine) அளவு அதிகமாகும். அளவுக்கு அதிகமாக ஹோமோசிஸ்டெய்ன், ஹைப்பர்ஹோமோசிஸ்டெய்னீமியா (hyperhomocysteinemia) என்ற குறைபாடு ஏற்படும். இதனால் கார்டியோ வாஸ்குலர் என்ற இருதய நோய் ஏற்படக் கூடும்," என்றும் எச்சரிக்கை செய்கிறார் அவர். உணவு இல்லாமல் மருந்து மாத்திரைகள் மூலமாக பி12 பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கொள்ளும் மக்கள், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் அப்படி செய்யக் கூடாது. தொடர்ச்சியாக பி12 சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொள்வது இது போன்ற அபாயங்களில் இருந்து மக்களை காப்பாற்றும், என்றும் மீனாட்சி விளக்கம் அளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லாக்டோஸ் சகிப்புத்தன்மை குறைப்பாட்டால் பாதிக்கப்படும் நபர்களும் விட்டமின் பி12 பற்றாக்குறையால் அவதிப்பட நேரிடும் விட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகள் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றில் விட்டமின் பி12 கிடையாது. விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களில் விட்டமின் பி12 அதிகமாக காணப்படுகிறது. எந்தெந்த உணவுகளில் விட்டமின் பி12 அதிகமாக உள்ளது என்பதைப் பற்றி விளக்கிய மருத்துவர் மீனாட்சி, அதனை பின்வருமாறு பட்டியலிட்டார். சிலர் சைவமாக இருந்தாலும் அவர்கள் பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களை சேர்க்கும் போது எத்தகைய பிரச்னையும் இல்லை. அதேபோன்று, நாள் ஒன்றுக்கு ஒரு முட்டையை கட்டாயமாக எடுத்துக்கொண்டாலும் அவர்களுக்கு விட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படாது. ஆனால், மாமிச உணவுகளான, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மீன்களில், குறிப்பாக கானாங்கெளுத்தி, சாலமன், சூரை மீன்களில் விட்டமின் பி12 செறிவுடன் காணப்படுகிறது. மாட்டிறைச்சியில் குறிப்பாக அதன் ஈரலில் விட்டமின் பி12 அதிகமாக உள்ளது. எனவே, விட்டமின் பி12 பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரும்புபவர்கள் இந்த உணவை சீராக எடுத்துக் கொள்ள வேண்டும். வீகன் உணவு முறையைப் பின்பற்றுபவர்கள், செரல்கள் போன்ற செறிவூட்டப்பட்ட உணவுகளை உட்கொள்ளலாம். மாட்டுப்பால் இல்லாத இதர பால் வகைகளை (non-dairy milks) உட்கொள்ளலாம். மேலும், நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செயலிழக்கப்பட்ட ஈஸ்ட்டைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஃப்ளேக்ஸை உணவாக உட்கொள்ளலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் லாரா டில்ட், பிபிசிக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c780x9kpel8o2 points
-
விபுலானந்த அடிகளாரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை
விபுலானந்த அடிகளாரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை கிழக்கு உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் என்ற புகழையும் முத்தமிழ் வித்தகர் என்ற பெருமையினையும் கொண்ட சுவாமி விபுலானந்த அடிகளாரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை இன்று (17) மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது. சுவாமி விபுலானந்தர் நூற்றூண்டு சபையின் ஏற்பாட்டிலும் தொழிலதிபர் மு.செல்வராசாவின் முயற்சியினாலும் சுவாமி விபுலானந்தருக்கு முதலாவது கற்சிலையாக இதுதிறந்துவைக்கப்பட்டது. சுவாமி விபுலானந்தர் நூற்றூண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொழும்பு இராமகிருஸ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரீனா முரளிதரன், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என்.தனஞ்செயன், பிரதேச செயலாளர்கள், முன்னாள் அரசாங்க அதிபர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர். இதன்போது அதிதிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து சுவாமியின் திருவுருவச்சிலை திறந்துவைக்கப்பட்டதுடன் யாழ். மற்றும் யாழ் நூல் என்பனவும் திறந்து வைக்கப்பட்டதுடன் சுவாமி விபுலானந்தர் நினைவுக்கல் படிகமும் திறந்துவைக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmas8nypa00jtqpbshlx3eryf1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1 point
-
இலங்கையர்களுக்கு பிரித்தானியா விதித்த தடை .. மகிழ்ச்சியில் ஸ்டார்மர்
இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது தனது அரசாங்கம் தடைகளை விதித்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரித்தானிய (UK) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கடந்த கால அட்டூழியங்களுக்கு ஒப்புதல் மற்றும் பொறுப்புக்கூறல் தேவை என்று ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேலும், "ஆயுத மோதலில் கொல்லப்பட்ட மற்றும் பரவலான மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூரும், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மற்றும் பிறருடன் நாங்கள் இணைகின்றோம். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையின் 16 ஆண்டுகளைக் குறிக்கும் வேளையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு மண்டலங்கள் என்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மீது செல் தாக்குதல் நடத்தியது. ஆயுத மோதல் முழுவதும், இலங்கை சட்டவிரோதக் கொலைகள், கட்டாயக் காணாமல் ஆக்கப்படல், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளைச் செய்தது மற்றும் மோதலின் இறுதி மாதங்களில் அதன் இராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. கடுமையான தடை இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நால்வர் மீது எமது அரசாங்கம் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதித்தது. இந்த நடவடிக்கையில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், "நீதி மற்றும் அமைதியைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த புனிதமான நாள் நினைவூட்டுகிறது" என்று ஸ்டார்மர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை, கடந்த ஆண்டு பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், 2009 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், “15ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினத்தை” நினைவுகூரும் ஒரு செய்தியை வெளியிட்டார். அதில், "முள்ளிவாய்க்கால் என்பது காணாமல் போனவர்களை நினைவுகூருவதோடு, அட்டூழியங்கள் செய்தவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும் என்பதையும் நினைவூட்டுவதாக இருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இலங்கை தமிழர்கள் மேலும், "நமது நாடு முழுவதும் உள்ள தமிழ் சமூகங்கள் இந்த புனிதமான நாளைப் பற்றிச் சிந்திக்கும்போது, தமிழ் மக்களுக்கு நீடித்த அமைதி, நல்லிணக்கம் மற்றும் நீண்டகால அரசியல் தீர்வை நோக்கிச் செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை தொழிலாளர் கட்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது" எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில், பிரித்தானிய அரசாங்கம் இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூரியா, கடற்படைத்தளபதி வசந்த கரனாகொட மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி கருணா என அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்போருக்கு எதிராக தடைகளை விதித்தது. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த நால்வருக்கும் தடை விதித்தமை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. . https://tamilwin.com/1 point
-
மீன் சந்தையில், மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
சென்னைல மீன் மார்கெட்டுக்கு போய் மீன் வாங்க போறீங்களா அப்ப இந்த அஞ்சு ரூல்ஸ பாலோவ் பண்ணுங்க. ரூல் நம்பர் 1 ; என்ன மீன் வாங்கனும்ன்கிறத வீட்லயே முடிவுபண்ணிட்டு போங்க... இல்லன்னா அங்க போய் என்ன மீன் வாங்குறதுன்னு முழிச்சீங்கன்னா என்ன அப்படியே மீன் அல்லாத்தையும் வாங்குறமேரி நிக்கிற ஒன்னு வாங்குனா வாங்கு இல்ல இடத்த காலி பண்ணுன்னு மீன் விக்கிற அக்கா சவுண்டு விடும்.... ரூல் நம்பர் 2 ; மீன எடபோட்டு வாங்குற வரைக்கும் மீன கைல தொடக்கூடாது அப்படி மீறித் தொட்டா அந்த அக்காங்களுக்கு சண்டாலமா கோபம்வரும் பேண்டு சட்டயில்லாம் போட்டு ரீசண்டா கீரியே மீன எப்படி கைல தொடலாம்னு சண்டைக்கு வரும்... ரூல் நம்பர் 3 : எக்காரணம் கொண்டும் பேரம் பேசாதீங்க... அப்புறம் அந்த அக்காங்க மம்மி பாவம் தாத்தா பாவம்... ஆதாம் ஏவா பாவம் அளவுக்கு தர லோக்கலுக்கு இறங்கி திட்டுவாங்க... வேணும்னா எட போடும்போது ஒரு மீன சேத்து போடுங்கன்னு கேட்டா போடுவாங்க அதுக்காக ஒரு வஞ்சீரத்த வாங்கிட்டு இன்னொரு வஞ்சிரத்த ஃபிரியா போடுன்னு கேட்டுறாதீங்க அப்புறம் எத்தன லிக்குட் சோப் ஊத்தி கழுவினாலும் காது தீஞ்சது தீஞ்சதுதான்... தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே மீன் விக்கிற அக்கா நாவினால் சுட்ட வடு... ரூல் நம்பர் 4: நீங்க ரெகுலரா மீன் வாங்குற ஆளா இருந்தா ஒரே அக்காட்ட வாங்குற பழக்கத்த வச்சுக்குங்க... அப்படி ஒரே ஆள்ட்ட மீன் வந்குறதால மீன் விலை கம்மியாலாம் கிடைக்காது... ஓரளவு நல்ல மீன் கிடைக்கும் நீங்க தேர்ந்தெடுக்கிற மீன் சரியில்லன்னா அவங்களே ரிஜெக்ட் பண்ணி அய்யே நல்ல மீனா எயித்து போடுன்னு சொல்லுவாங்க... ரூல் நம்பர் 5 : மீன் வாங்கிட்டீங்கன்னா அப்புறம் நடுவுல வீட்டுக்கு வர்ற வழில சைக்கிள்ல, கூடையில மீன் வித்துட்டு போறவங்ககிட்ட மீன் விலைய கேட்டு கிராஸ் செக் பண்ணாதீங்க... அப்புறம் நாம அறுநூறு ரூபாய்க்கு வாங்குன மீன அவங்க நானுறுன்னு சொல்லி நமக்கு ஹார்ட்அட்டாக்கை வரவச்சிடுவாங்க... பொம்மையா முருகன்1 point
-
போக்காளி (நாவல்)
1 pointபோக்காளி (நாவல்) sudumanal எனது வாசிப்பு ஒரு போரின்போது மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு நாட்டுக்குள் மாறிமாறி இடம்பெயர்கிறார்கள். அயல் நாட்டுக்கு இடம்பெயர்கிறார்கள். தூர தேசங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இலங்கையிலும் போர் துரத்திய தமிழ் பேசும் மக்கள் இவ்வாறே ஆனார்கள். மேற்குலகுக்கு புலம்பெயர்ந்தோர் எல்லோரும்அரசியல் அகதிகளா பொருளாதார அகதிகளா என பலர் கேள்வி எழுப்புவதுண்டு. வெறும் பொருளாதாரக் காரணிகளால் போர்ப் பிரதேசத்திலிருந்து மேற்குலகுக்கு இடம் பெயர்பவர்களை அரசியல் அகதிகள் எனலாமா என்ற விவாதம் இங்கும்கூட நடைபெறுகிற ஒன்று. பொருளாதாரப் பிரச்சினை என்பதும் ஓர் அரசியல் பிரச்சினைதான் என்ற எதிர்வாதமொன்றும் வைக்கப்படுவதுண்டு. (எனக்கு இதில் உடன்பாடு உண்டு). இந் நாவல் இதற்கான ஒரு விடையை தருகிறதாக எனக்குப் படுகிறது. பொய்யாக ஒரு கதையைச் சொல்லி தாம் நேரடியாக இராணுவத்தாலோ புலிகளாலோ பாதிக்கப்படுவதாகக் கூறி சாதித்தாலொழிய அரசியல் தஞ்சம் கேள்விக்குள்ளாகிவிடும். அப்படியாக அகதி வாழ்வைத் தொடங்குபவர்கள் -தாம் விரும்பினாலும்கூட- தனி பொருளாதாரக் காரணிகளை நிவர்த்திக்கும் வேலையில் மட்டும் பயணிக்கவே முடியாமல் போகிறது. அது ஈழப் போராட்ட அரசியலை, அதன் சிந்தனை முறையை இழுத்துக்கொண்டுதான் பயணிக்கிறது. அது அவர்களின் புதிய வாழ்வியலையும் பாதிக்கிறது. நவமகனின் போக்காளி என்ற இந்த நாவல் அதை சிறப்பாக வெளிக் கொணர்கிறது. புலம்பெயர்ந்தபின் இவர்கள் அனுபவிக்கிற பிரச்சினைகள் புதிய வடிவங்களை எடுக்கின்றன. மேற்குலகுக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு மொழிவழி, கலாச்சாரவழி என ஆதரவுத் தளம் ஏதும் கிடைக்கவில்லை. ஓர் அந்நியமாதல் நிலவியது. ஆனால் பொருளாதார ரீதியிலும் பாதுகாப்பு ரீதியிலும் உத்தரவாதம் கிடைத்தது. அந்நியர்களாக, இந்த நாடுகளுக்கு புதியவர்களாக, காலநிலைக்கு புதியவர்களாக, பழக்க வழக்கங்களுக்கு புதியவர்களாக, முன்னுதாரணம் ஏதுமற்ற வாழ்வியலுள் புகுபவர்களாக வாழ்வு தொடங்குகிறது. இத்தோடு சேர்த்து நிறவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய புதிய பிரச்சினை சேர்ந்துகொள்கிறது. ஆனாலும் காலனிய மனோபாவத்துக்குப் பலியான மனநிலையில் நிறவாதத்தின் அரசியலை அதன் நுண் களங்களை புரிய முடியாதவர்களாகவும், அதுகுறித்த அறிவு விளக்கம் அற்றவர்களாகவும் கணிசமானோர் இருந்தனர், இருக்கின்றனர். மேற்கூறிய காரணிகளின் திரட்சி தோற்றுவித்த உள நசிவுகளை சுமந்து கொண்டு வாழும் நிலை அவர்களை பின்தொடர்ந்தபடியே இருக்கிறது. இந்தப் பின்னணியில் வாழ்வு அவர்கள் எண்ணியபடி இல்லாமல், ஊகித்தறியமுடியாத திருப்பங்களுடன் நகர்கிறது. புதிய புதிய பிரச்சினைகளையும் கலாச்சார ஒழுங்கமைவுகளையும் எதிர்கொண்டு அவர்கள் தனியர்களாய், பின் இணையர்களாய், பின் பிள்ளைகளோடு குடும்பங்களாய் ஆகின்றனர். இந்த வளர்ச்சி நெடுகிலுமே முன்னுதாரணமற்றதும் அவை குறித்த அனுபவமோ அறிவோ அற்றதுமான நிலை வாழ்வின் இறுதிவரை துரத்திக் கொணர்ந்து முதுமைக்குள் தள்ளி வீழ்த்திவிடும் வரையான கதையை போக்காளி நாவல் விபரிக்கிறது. சுமார் 30 வருட அகதி வாழ்வின் இந்தக் கதையை வாசிக்கும்போது அதேவகை அனுபவங்களை தரிசித்த அல்லது தரிசித்துக் கொண்டிருக்கும் நிலைமைகளின் பொதுத் தன்மையை இன்னொரு நாட்டில் இருக்கும் நான் உணர்ந்துகொண்டே இருந்தேன். வாசிப்பின்போது பழைய ‘நான்’ உடன் வாழ்ந்து கொண்டு இருந்தேன். பொருளாதார ரீதியில் ஒரு சாதாரண தொழிலாளியின் சம்பளத்தில், இன்னும் சொன்னால் வறுமைக் கோட்டின் மேலும் கீழுமாய் இயங்கும் ஒரு பொருளாதாரத்தில், வாழ்க்கை நடத்தும் நிலையில்தான் புகலிட வாழ்வு நகர்கிறது. ஒரு சுவிஸ் பிராங் அல்லது நோர்வேஜிய குரோணர் ஒரு இலங்கை ரூபாவுக்கு சமமாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். யுத்தம் இந்த எல்லைவரை வந்திருக்கவே இடமில்லை. அதைவிட இந்த அகதியர்களது குடும்பங்கள் இலங்கையில் என்ன நிலையில் இருந்திருப்பார்கள். இலங்கைக்கு எடுத்த எடுப்பிலெல்லாம் போய் வர பணவசதி இருக்குமா. சுருங்கச் சொன்னால் இந்த பணப் பரிவர்த்தனை (கரன்சி) மாற்றம் இல்லையெனின், போராட்ட வரலாறு இந்தப் பிரமாண்டத்தை அடைந்திருக்காது. அதேநேரம் இந்தப் பேரழிவையும் சாத்தியப்படுத்தியிருக்காது என்றுகூட யோசிக்க வைக்கிறது. இந்த நாவலின் நாயகன் குணா. நாவலாசிரியர் நவமகன் 1988 இலிருந்து தொடங்கி 2019 வரையான தனது புகலிட வாழ்வு அனுபவங்களை கட்டிச் சுமந்து நாவலில் ஏற்றியிருக்கிறார் என நினைக்கிறேன். புலம்பெயர்வது என்பது உடல் சார்ந்த -பௌதீக ரீதியிலான- பிரதேச மாற்றம் மட்டுமல்ல. உளம் சார்ந்த ‘நான்’ இனதும் மாற்றமும் போராட்டமும் ஆகிறது. ‘நான்’ என்பதே எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டதுதான். எனவே புலப்பெயர்வு என்பது அந்த ‘நான்’ இனைப் பிரிந்து -ஒரு வீட்டை கட்டுவது போல்- வாழ்வை கட்டுதலல்ல. அந்த ‘நான்’ இன் இடப்பெயர்வானது ஒரு தொலைதூரத்தில் எல்லாவழியிலும் அந்நியத்தை உணர்ந்தபடியும், புதிய புதிய சிக்கல்களை எதிர்கொண்ட படியும் எப்படி நகர்கிறது என்பதை ஆசரியர் நவமகன் குணாவினூடாகவும் அவரது மனைவி ஆதிரா ஊடாகவும் சொல்கிறார். எனவே அவர் விட்டுவந்த போராட்ட பூமியின் எண்ணங்களோடு அவரது பழைய ‘நான்’ இங்கும் வருகிறது. அந்த பழைய எண்ணங்களை புத்துருவாக்கம் செய்தபடி நகரும் ‘நான்’ க்கு இப்போ நேரடி சாட்சிகளோ அனுபவங்களோ கிடையாது. அந்தப் எண்ணப் பசிக்கு விடுதலைப் புலிகள் குறித்த மாயைகளும் உண்மைகளும் பிரச்சாரங்களும் தீனியாகின்றன. இந்த நான் அல்லது நான்களின் திரட்சியாக இந்த நாவல் சொல்வனமாகிறது. புகலிடத்தாரை போராட்டம் பாதிக்கிறது. போராட்டத்தை புகலிடத்தார் பாதிக்கின்றனர். அதன் அடிப்படையில் இரு வரலாறும் சமாந்தரமாகப் பயணிக்கின்றன இந் நாவலில். நாவலின் அத்தியாயங்களே ஆண்டுகளால்தான் குறிக்கப்படுகின்றன. 1988 இலிருந்து 2009 வரையான விடுதலைப் புலிகளின் போராட்ட களத்தின் தாக்குதல்களை, தனிநபர் கொலைகளை, வெற்றியை தோல்வியை, அவைகள் குணாவிடமும் அவனது நண்பர்களிடமும் ஏற்படுத்துகிற உற்சாகத்தை சோர்வை, குருட்டு நம்பிக்கைகளை, விசுவாசத்தை, நியாயப்படுத்தல்களை, மொக்குத்தனங்களை, மனிதாபிமானத்தை, சாகசங்களை, கொலைகளை கொண்டாடுவதை, அரசியற்ற சிந்தனை முறையை என பெரும் வெளியை இந் நாவல் பூராவும் காண முடியும். இந்த வழியிலேயே எழுச்சியும் வீழ்ச்சியுமான எண்ணங்கள் அவர்களது ‘நான்’களை கட்டமைத்தபடியே செல்கிறது. வெவ்வேறு இயக்கங்களுடன் சம்பந்தப்பட்ட மாறுபட்ட பாத்திரங்களினூடாக இக் கதைகளை சொல்லி நகர்த்துகிறார் நவமகன், தனது போக்காளி நாவலில்!. இந்தப் பொதுப் போக்கின் ஒரு வகைமாதிரியாக குணாவின் பாத்திரம் வருகிறது. மேற்குலக புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளை ஆதரித்த பலரினதும் ஒரு வகைமாதிரியான பொதுமகன் குணா. இதற்கு வெளியில் சிந்திக்கிற அரசியல் புரிதல் கொண்ட அழுத்தமான ஒரு பாத்திரம் விஸ்வா. விஸ்வாவும் குணாவின் நண்பனாக இருக்கிறான். அவனது தாக்கமும் குணாவின் மனிதநேய பண்புகளும் அவனது ‘நான்’ இனை பாதித்தபடியே இருக்கிறது. ஆனாலும் குணாவின் உணர்ச்சிவகை நிலைப்பாடுகளும், நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் அவனை சூழ்ந்தபடி நகர்வதுதான் அவனது வாழ்வு என்றாகிறது. 2009 பேரிடியாய் தாக்கிய தோல்வியை ஒப்புக்கொள்வது என்பதை அவனது ‘நான்’ ஏற்க மறுத்து அவனை சிப்பிலியாட்டுகிறது. அந்த உளவியல் சிதைவு குடும்பத்தை சமாந்தரமாகவே பாதிக்கிறது. அவன் முன்னரைப் போல் இல்லை. எடுத்ததுக்கெல்லாம் கோபப்படுவதும், எரிஞ்சுவிழுவதும், ஒரு கட்டத்தில் (முதன்முறையாகவும் கடைசிமுறையாகவும்) தனது மனைவி மீது வன்முறை பிரயோகிக்குமளவுக்கு போவதும், எப்போதுமான பதைபதைப்பும் என மாறிக்கொண்டிருந்தான். அது குடும்பத்தை பாதிக்கத் தொடங்குகிறது. அந்நிய மண்ணில் பிறந்து, அதன் கலாச்சாரத்துள் வாழுகிற, அந்த கல்விமுறையுள் வாழ்க்கையை தொடங்குகிற தனது பிள்ளைகளை எதிர்கொள்வது சிக்கலாக மட்டுமல்ல, அதிர்ச்சி தருவனவாகவும்கூட அமைந்துவிடுகிறது. எமது கலாச்சார மனத்தையும் பிள்ளைவளர்ப்பு முறைமையையும் தலைக்குள் வைத்துக் கொண்டு, பிள்ளைகளை புரிந்துகொள்வது, அவர்களுடனான முரண்பாடுகளை தீர்ப்பது சிக்கலாக இருக்கிறது. பாலியல் ரீதியிலான, ஏன் காதல் குறித்தான மதிப்பீடுகளையெல்லாம் பிள்ளைகளில் ஏற்றிப் பார்த்து பதட்டப்படுகிற நிலை இருக்கிறது. கல்யாண விடயத்தில் சாதியை தாண்டி செயற்பட முடியாமல் அவதிப்படுகிறான். பிள்ளைகளோ இந்தப் புதிரை அவிழ்க்க முடியாதவர்களாக, அதேநேரம் பெற்றோர் மீதான அன்பை இழந்துவிடாதபடி இருக்கப் போராடும் மனமுள்ளவர்களாக இரண்டு கலாச்சார மனங்களுக்கு இடையில் நசிபவர்களாக அந்தரிக்கிறார்கள். இவற்றை அற்புதமாக நாவல் விபரிக்கிறது. இந்த புது அனுபவங்களை பெறாமல் புகலிட வாழ்வு அமைந்திருக்க வாய்ப்பே இல்லை. கள்ள விசாவில் ஜேர்மன் வந்து, பின் பிரான்ஸ் க்கு போய், அங்கிருந்து ஜேர்மனிக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, பின் டென்மார்க் ஊடாக நோர்வேயை சென்றடைகிற அகதிவழிப் பயணம் என்பது ஆபத்தான வழி கொண்டது. புகையிரத கழிவறையின் கூரைக்குள் மறைந்தபடி முடங்கிக் கிடந்து எல்லை கடப்பது, விமானத்தின் சக்கரத்தை அணைத்தபடி எல்லை கடப்பது, பவுசர்களுக்குள் ஒரு சிறு துவாரக் காற்றை பகிர்ந்து கும்பலாய் எல்லை கடப்பது, பாரவூர்தியின் கொன்ரைனருக்குள் குறுகியிருந்து எல்லை கடப்பது என்பது போன்ற பயங்கரமான சாகசமான பயணங்களை மேற்கொண்டு அகதிகள் வருவது நிகழ்கிறது. இந்தவகைப் பயணங்களில் இறந்துபோனவர்கள் கணிசமானோர். இதையெல்லாம் தாண்டி வந்து இறங்கி தஞ்சக் கோரிக்கையை கேட்டபின்னும் திருப்பி நாட்டுக்கு அனுப்பப்படலாம் என்ற அச்சம் எழுகிறது. இதை மேவிய இன்னொரு அச்சம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த நாவலின் நாயகன் குணா புகையிரத கழிவறைக் கூரைக்குள் ஒளித்து பயணித்த அனுபவத்தை இந்த நாவல் பதட்டத்துடன் வாசிக்க வைக்கிறது. தனியாக தொடங்கும் குணாவின் அகதிப் பயணம் பின் திருமணத்தோடு அவனைப் பிணைக்கிறது. பின் வாழ்வு குழந்தைகளுடன் குடும்பமாகப் பயணிக்கிறது. பிள்ளைகளோடு ஏற்படும் இடைவெளி தலைமுறை இடைவெளி என்ற எல்லையைத் தாண்டி நகர்கிறது. இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இருப்பது உலகப் பொதுமையானது. ஆனால் ஒரு அகதிக்கு இதனுடன் சேர்ந்து புதிய மொழி, புதிய கலாச்சாரம், முற்றாக வேறான சமூகம், பழக்கவழக்கங்கள், ஒழுங்குகள் என மேலதிக தடைகள் வருகின்றன. இவை இந்த சமூகத்துடன் மட்டுமல்ல, பிள்ளைகளுடனும் இணைவாக்கம் அடையவோ அவர்களை புரிந்துகொள்ளவோகூட விடாமல் படுத்துகிற கொடுமையை இந் நாவல் பரந்த அறிவுடன் சொல்லிச் செல்கிறது. முதலாளித்துவ வளர்ச்சி அடையாத, அதன் சமூகப் பெறுமதியை அறியாத சிந்தனையுடன் இலங்கையிலிருந்து வந்த ஓர் அகதியானவர் -வளர்ச்சியடைந்ததாகச் சொல்லப்படுகிற- முதலாளித்துவ சிந்தனை முறைக்குள் தன்னை பொருத்திக் கொள்வதில் சந்திக்க வேண்டியிருக்கிற இடர்ப்பாடுகள் உளநசிவுகள் இன்னொரு புறமாக திக்குமுக்காட வைக்கிறது. தாம் புலம்பெயர்ந்து வந்தபோது தமது தாய் தந்தையர் சகோதரம் நண்பர்கள் என்போரின் விம்பங்களை நினைவுச் சட்டகத்துள் தொங்கவிட்டுக் கொண்டு வருகிறார்கள். தனது குடும்ப நிலையை அந்த மனோரம்யமான மனநிலையை (சென்ரிமென்ரை) காவி வருகிறார்கள். தான் வாழ்ந்த சமூகத்தின் அசைவியக்கத்தை அப்படியே படம்பிடித்துக் கொண்டு வருகிறார்கள். இவைகள் எதையும் மாறா நிலையில் கற்பனை செய்துகொண்டு, அதனதன் இயங்கியலையும் இற்றைப்படுத்தல்களையும் கண்டுகொள்ள முடியாதவர்களாக மாறா எண்ணங்களுடன் வாழ்கிறார்கள். அதனால்தான் ஊருக்கு காலம் கழித்துச் சென்றுவிட்டு வந்து “அங்கை இப்பிடி மாறிப் போய்ச்சு அப்பிடி மாறிப் போய்ச்சு… நாங்களெல்லாம் முந்தி…” என ஒப்பீட்டு கதையாடல்களை தொடங்கி விடுகின்றனர். தாம் நாட்டைவிட்டு வெளியேறியபோது காவி வந்த கலாச்சார மதிப்பீடுகளை கட்டிக் காக்கும் ஒருவித பதற்றத்துடன் இருக்கிறார்கள். அதை கொண்டாட்டங்களில் பிரமாண்டத்தினூடாகக் கட்டிக் காக்க கலாச்சார மனம் வழிகாட்டுகிறது. இந்த நிலையில் அவர்களின் கண்முன்னே அவர்களது குழந்தைகள் வளர்ந்து, தமது கலாச்சார மதிப்பீடுகளை அச்சுறுத்துவதுபோல பிரமை கொள்கிறார்கள். இந் நாவலில் விஸ்வா தவிர நாவலின் நாயகனான குணா உட்பட மற்றைய எல்லோரும் இதை பிரதிபலிக்கிறார்கள். இதை நேர்த்தியாக நாவலில் பல இடங்களிலும் காண முடியும். ஒன்றைச் சொல்லியாக வேண்டும். நூலை வாசிக்கிறபோது புலம்பெயர் வாழ்வின் கதை என்றளவில் நாவல் தரும் அழகியலை மேவி, விடுதலைப் போராட்ட நிகழ்வுகளின் கதையாடல்கள் ஓர் ஆவணம் போல எழுகிறதான உணர்வு எனக்குப் பட்டது. அது செய்திகளாலும், உரையாடல்களாலும் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது தகவல்களின் மிகுதி காரணமாக இருக்கலாம். இந்த புலம்பெயர் வாழ்வில் நாற்பது ஆண்டுகளைக் கடந்திருக்கும் எனக்கு வாசிப்பு அனுபவம் இந்த பார்வையைக் கொடுக்கிறதாகவும்கூட இருக்கலாம். இதைத் தாண்டிய மாறுபட்ட வாசிப்புகள் நிச்சயமாக இருக்கவே செய்யும். மேற்குலகின் ஐரோப்பிய மையவாதமும், வெள்ளை மேலாதிக்க பெருமிதமும் சேர்ந்து -காலனிய காலத்திலிருந்து இன்றைய நவ காலனியம் வரையாக- நிறுவி வைத்திருக்கும் நிறவாதம் நாம் கடக்க முடியாத ஒன்று. அதுகுறித்த அனுபவங்கள் எனது வாசிப்பில் தவறிப் போயிருந்தது. நாட்டுக்கு நாடு இதன் அளவும் தாக்கமும் வேறுபட்டு இருக்கிறபோதும், ஐரோப்பிய மக்களின் பொது மனநிலையில் அதன் வெளிப்பாடுகள் நுண்மையாகவும் சில வேளைகளில் நேரடியாகவும் வெளிப்படுவது இன்றும்கூட நாம் காணும் அனுபவம். நாவலில் நான் அதை தரிசிக்கவில்லை. ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை இந்த எதிரம்சங்கள் நிராகரிப்பதில்லை. அந்த அச்சம் தேவையற்றது. நாவலின் உள்ளடக்க இயங்குதலையும், அது கொண்டலைக்கிற மனதையும் தாண்டி நாவல் இப்படியோர் முடிவை நோக்கி நகர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பட்டது. அந்த முடிவை ஒரு குறியீடாய்க் காணவும் முடியவில்லை. இது எனது வாசிப்பு அனுபவம் சார்ந்த கருத்து மட்டுமே. மேற்குலகுக்கு புலம்பெயர்ந்த அகதி வாழ்வினை அதன் தடங்களை ஒரு பெரும் விரிந்த பார்வையில் விரிந்த பரப்பில் முன்வைக்கிறது போக்காளி. நாவல்கள் வெறும் புனைவுகள் மட்டுமல்ல. வரலாற்றின் வேர்களினூடாக பயணிக்கும் ஆற்றல் கொண்டது. அந்தக் காலகட்டத்தின் ஒரு சமூகத்தை, அதன் மாற்றங்களை, அழிவுகளை, உருவாக்கங்களை, நிலைப்படுத்தலை என பலதையும் அது வரலாற்றினுள் சேர்த்துவிடுகிறது. மேற்குலகுக்கு புகலிடம் தேடி வந்த மூத்த தலைமுறையின் வாழ்வுப் பயணத்தை மிக விரிவாகவும், பல தளங்களுக்குள் உள் நுழைந்தும் சித்தரிக்கும் நாவல் போக்காளி. நவமகனின் பெரும் உழைப்பும், கடந்த காலத்தோடு மீண்டும் வாழ்ந்து எழுதலும் இன்றி இந் நாவல் 680 பக்கங்களில் விருட்சமாகி இருக்க வாய்ப்பில்லை. புகலிட இலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தை தேடிக்கொண்ட படைப்பு இது. வாழ்தல் என்பது புறத்தால் மட்டுமன்றி, அகத்தாலும் மேற்கொள்ளும் பயணம் என்பதை புரியாமல் அல்லது சக மனிதர்களுக்கு ஏற்றுக் கொள்ளாமல், புகலிடத்தாரை வெறும் காசு மரங்களாகப் பார்ப்போர் முக்கியமாக வாசிக்க வேண்டிய நூல்களில் இதுவுமொன்று!. ravindran.pa 09052025 போக்காளி (நாவல்) நவமகன் (ஆசிரியர்), நோர்வே. கருப்புப் பிரதிகள் (வெளியீடு) 680 பக்கங்கள் https://sudumanal.com/2025/05/09/போக்காளி-நாவல்/#more-71401 point
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
1 point
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
--- இது பெரிதாக பழக்கம் என்று சொல்ல முடியாது . ...... ஊர்ல செத்தவீடுகளுக்குப் போனால் வெத்திலை பாக்கு தட்டத்தோட இருக்கும் அதைப் போட்டுகொண்டு விரலில சுண்ணாம்பையும் கிள்ளிக்கொண்டு வந்து வாகா வேலிக்கரையில் கதிரையில் இருந்து கொண்டு வாய் சிவக்க சிவக்க சப்பி கதியாலுக்கை பொளிச் பொளிச் என்று துப்புறத்தில ஒரு சுகம் ....அனுபவிக்கனும் . .......! --- தலைமயிர் வெட்ட வசந்தா சலூனுக்கு போறனான் ( kks ரோட் , மனோகரா தியேட்டருக்கு அருகில் ) வெட்டி முடிய அருகிலேயே மாஸ்ட்டர் பீடா கடை இருக்கு அங்கு பீடா சூப்பராய் இருக்கும் அதில் ஒண்டு போடுவன் ....... பின்னாளில் அந்த ஐயா வருவதில்லை ........ ஆனால் சிவன்கோயில் முன்னால் ஓரு அண்ணா சுமார் 12.00 லிருந்து 2.00 மணிவரை பீடா வியாபாரம் செய்வார் அந்நேரம் அவ்வழியால் போய் வந்தால் ஒரு பீடா வாங்கி சாப்பிடுவன் ......... நல்ல வியாபாரம் நடக்கும் . ........பிரசித்தமான மூன்று கடை அருகில் உண்டு ....... தாமோதரவிலாஸ் , லக்ஸ்மி விலாஸ் , பரீக்ஷித்து விலாஸ் ....... அங்கு உண்டு விட்டு வருபவர்கள் இந்த பீடா வாங்கித் திண்டு கொண்டு போவார்கள் . .........! --- இங்கும் கல்யாணவீடு போன்ற விழாக்களில் போடுவதுண்டு . ........! --- மனிசி லா சப்பல் போனால் சாமிபடங்களுக்கு மாலை கட்டி வைக்க வெத்தலை வாங்கி வருவா ....... அது அப்பப்ப வீட்டில் இருக்கும் ...... கண்டால் எடுத்து சாப்பிடுவேன் . ........ பொதுவா எனக்கு வெத்திலை , பாக்கு , சுண்ணாம்பு அதுதான் பிடிக்கும் .......! மற்றும்படி நான் தேடி வாங்கிச் சாப்பிடுவதில்லை . ........!1 point- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Aiden Markram போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Lungi Ngidi போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) தென்னாபிரிக்கா1 point- அதனால் தான் கடவுளானாய் கரிகாலா...
அதனால் தான் கடவுளானாய் கரிகாலா... https://www.facebook.com/share/v/16RVENek19/1 point- வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு.
1 pointசங்குடன் சேர்ந்து சங்குதான்.!அதைவிட உடல்நிலை காரணமாக தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் பதவியிருந்து விலகிய சத்தியமூர்த்தி பாரளுமன்றப் பதவியை வகிக்க எப்படி உடல்நிலை இடம் கொடுக்கும். கொஞ்சம் தள்ளியிரும் பிள்ளாய். என்று சத்தியலிங்கத்துக்கு சங்கூதுவிட்டு பாராளுமன்றம் போவதுதான் உள்ளதில் சிறந்தது.1 point- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
என்ன இது கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல உள்ளது. யார் யார் விளையாடுகிறார்கள்? எங்கே எப்போ என்ற ஒரு தகவலையும் காணேல.1 point- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அண்ணை, ஒவ்வொரு முறையும் உள்நுழைய ஈமெயில் கடவுச்சொல் போட மறக்காதே நான் ஒரு தடவை நுழைந்தால் தானாக ஏதாவது திருத்தத்துக்காக நின்றால் சரி. இல்லாவிட்டால் வருமானாலும் வீடு திறந்தே இருக்கும். பாஞ்ச் வரவு நல்வரவாகட்டும்.1 point- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உண்மைதான், ஆனால் இரண்டிலுமே ஒரே கடவுச்சொல்தான் சேமித்து வைத்துள்ளேன். கணனிக்கும், ஐபாட்டுக்கும் யாழுடன் ஜாதகப் பொருத்தத்தை பார்க்கவேண்டும்.🤔😁1 point- உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி
Ecstasy என்ற போதைபொருளினைதான் (MDMA என்றும் சொல்வார்கள்) இப்படி நேரடியாக மொழிபெயர்த்துள்ளார்கள் 🤣. அதையும் எக்ஸ்டசி என்றே எழுதியிருக்கலாம். (ecstasy என்ற ஆங்கில சொல்லின் அர்த்தம் பரவசம்). போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களை அள்ளுங்கள். பிகு பரிசில் என்ன? ஆறுதல் மட்டுமே🤣1 point- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT 13 மே 2025, 05:26 GMT புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி சற்று முன்பு தீர்ப்பு வழங்கினார். 9 பேர் மீதும் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபித்திருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அவர்களுக்கு என்ன தண்டனை என்ற விவரம் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இந்த பாலியல் வழக்கு காரணமாக, அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிமுக பின்புலம் இருப்பதாக தொடர்ந்து திமுக குற்றம் சாட்டி வந்தது, எனினும் அதை அதிமுக மறுத்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியது என்ன? பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தர மோகன் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு வழக்கறிஞர் சுந்தரமோகன், "கைதான 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வயதை காரணம் காட்டி குறைவான தண்டனை வழங்குமாறு குற்றவாளிகள் கேட்டுள்ளனர். அரசுத் தரப்பில் கடுமையான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது அரிதான வழக்கு. பெண்கள் தொடர்பான இந்த வழக்கில் நீதிமன்றம் கடும் தண்டனை வழங்க வேண்டும்" என தெரிவித்தார். இவ்வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 276 (2)(N) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய இரு முக்கியமான பிரிவுகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் நண்பகல் 12 மணிக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது. "உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெண்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்தார் சுந்தர மோகன். இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 பேரும் இறுதிவரை பிறழ்சாட்சிகளாக மாறவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன் தெரிவித்துள்ளார். வழக்கில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். விஞ்ஞானப்பூர்வமாக அடையாளம் காணுதல் உள்ளிட்ட பலவற்றுக்கு வழக்கில் தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்ததாக அவர் தெரிவித்தார். இதுவரை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேரை விசாரித்ததாக கூறினார். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரி, நீதிமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பிய பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வழக்கின் பின்னணி 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளி ஆக பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது. இவர்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது சகோதரரிடம் அது பற்றி கூறவே, தங்கையை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை சுற்றி வளைத்த அவரது சகோதரர் அவர்களை விசாரித்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர்கள் வைத்திருந்த செல்போன்களில் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் காணொளிகள் இருந்துள்ளன. இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டவுடன் திருநாவுக்கரசு, சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்படும் காணொளிகள், பொதுமக்கள் மத்தியில் பரவி வந்த நிலையில், இதில் அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளும் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டது. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,தீர்ப்பையொட்டி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள போலீஸார் வழக்கு கடந்து வந்த பாதை * பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்த நாள்: 2019 பிப்ரவரி 12 * முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நாள்: 2019 பிப்ரவரி 24. அதன் அடிப்படையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். * திருநாவுக்கரசு என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த அவர், ''தனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை'' என வீடியோ வெளியிட்டார். 2019 மார்ச் 5 அன்று அவர் கைது செய்யப்பட்டார். * திருநாவுக்கரசின் ஐஃபோனில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதுவே இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக, திருப்புமுனையாக அமைந்தது. * வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. * வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான சபரிராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப் டாப் இந்த வழக்கின் மிக முக்கியமான மற்றொரு ஆதார ஆவணமானது. * 2019 ஏப்ரல் 25 அன்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. செல்போன்கள், லேப்டாப் போன்றவற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன. * பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக கைதான சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக 2019 மே 24 அன்று முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. * சிபிஐ வசம் வழக்கு வந்தபின்பு, இந்த வழக்கில் அருளானந்தம், ஹெரன்பால் மற்றும் பாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு, அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளானது. * இந்த 3 குற்றவாளிகள் மீதும் 2021 பிப்ரவரி 22 அன்று இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிக்கை, கோவை மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. * வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது நபராக அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குற்றப்பத்திரிக்கை, 2021 ஆகஸ்ட் 16 அன்று, கூடுதல் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டது. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT * இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 48 பேர் மட்டுமே, சிபிஐ அதிகாரிகளால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர். * பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவானபோது, காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் முதல் விசாரணை அதிகாரியாக இருந்தார். சிபிசிஐடியிடம் மாற்றப்பட்ட பின்பு, எஸ்பி நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் விஜய் வைஷ்ணவி, ஆய்வாளர் பச்சையம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர். * இவ்வழக்கில் எலக்ட்ரானிக் பொருட்களே முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. ஐஃபோனில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து குற்றம் நடந்த தேதி, நேரம் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன. * வாட்ஸ்ஆப் குழுவை தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. * பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் புகார் கொடுக்க அச்சப்பட்டுள்ளனர். இவர்களை அச்சுறுத்துவதற்காக சில ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். விசாரணையின்போது அவை நீக்கப்பட்டன. * இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வழக்கு பதியப்பட்ட நாளிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் பிணை வழங்கப்படவில்லை. * பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஏழு பேர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியம் கூறினர். இவர்களிடம் நீதிமன்ற அறையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. படக்குறிப்பு,குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் * குற்றப்பத்திரிகைகளில் இவர்கள் மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 12 ஆவணங்கள் குறித்துத் தரப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து நீதிமன்றம் தானாக 11 ஆவணங்களை எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு விசாரைணயில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கியமான 30 பொருட்கள் ஆதார ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. * பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. * முதல் குற்றப்பத்திரிகை துவங்கி இறுதிவரை மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு, அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT * இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வருகிறார். இடையில் அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. * இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 9 குற்றவாளிகள் யார்? சபரி ராஜன் திருநாவுக்கரசு சதீஷ் வசந்தகுமார் மணிவண்ணன் ஹெரன்பால் பாபு அருளானந்தம் அருண்குமார் - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy6482jyjgo1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அநேகமா நாலாவது ஐடி மாறும் நிலை விரைவில் உருவாகும் என நினைக்கிறேன்🤣.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
சிதைத்தல் இல்லை அண்ணை, நான் சொன்னது செயற்பாடற்றதாக்குவது பற்றியே. சிறிய சத்திரசிகிச்சை மூலமாகவோ ஊசி மூலமாகவோ செய்யலாம் என நினைக்கிறேன்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு.
1 pointசுமந்திரன்... பாராளுமன்றத்துக்குள் பின்கதவால் நுழைய, முயற்சி பண்ணி சத்தியமூர்த்திக்கும், சிறிதரனுக்கும் ஆசை காட்டிப் பார்த்தும், எவரும் இவரின் சுத்துமாத்து நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் நழுவிய பின்... இனி அடுத்த தேர்தல் மட்டும் பொறுத்து இருக்க ஏலாது என்று இவரே மாகாணசபை முதலைமைச்சர் வேட்பாளர் என்று தனக்குத்தானே மகுடம் சூடிக் கொண்டு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போகின்றாராம். ஆபிரஹாம் சுமந்திரனின் இந்த மூஞ்சைக்கு எவனும் வாக்குப் போடுவானா? தமிழரசு கட்சி இதோடு... வடக்கில் துடைத்து எறியப் படுவது நிச்சயம்.1 point- சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
சுமந்திரன் முதலொரு தடவை ஆர்னோல்ட்க்கு எதிராக மணிவண்ணனை பாவித்தார். இப்போ, இவரை சிறிதரனுக்கு எதிராக இறக்கி குடைச்சல் கொடுக்க விழைகிறார். பாராளுமன்றத்தேர்தலின்போது பரப்புரைகளில், கொலைகாரர், ஆயுதக்காரர் என்று சுமந்திரன் இவர்களை விமர்ச்சித்திருந்தார். டக்கிளசுக்கும் தூது விட்டவர் சுமந்திரன். இவர் தனது நன்மைக்காக எந்த மட்டத்திற்கும் இறங்குவார். கொள்கை, நேர்மை இல்லாதவர். நான் ஆயுதப்போரை ஆதரிக்கவில்லை என்றவர், இப்போ யாரோடு கூட்டுச்சேர்ந்துள்ளார். கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு குழி பறிக்கும் ஓநாய் இவர்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்ப என்ன மாதிரி? அப்பிடியே மண்ணைப் போட்டு மூடி விடுவமா?1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதிகாரபூர்மாக கேகேஆர் இன்னும் வெளியேறவில்லை. கே கே ஆர் அடுத்த சுற்றுக்கு செல்வது மிக மிக கடினம். ஆனால் பஞ்சாப், டெல்லி அணிகள் விளையாடுவதை பொறுத்து கே கே ஆருக்கு சந்தர்ப்பம் இருக்கிறது. பஞ்சாப் இனி ராஜஸ்தான்,மும்பாய், டெல்லி அணிகளுடன் விளையாடவேண்டும்.இந்த 3 போட்டிகளில் தோற்கும் என்றால் 15 புள்ளிகளுடன் நிற்கும். டெல்லி இனி குஜராத், மும்பாய் , பஞ்சாப்புடன் விளையாட வேண்டும், இதில் டெல்லி குஜாரத், மும்பையுடன் தோற்று பஞ்சாப்பினை வென்றால் டெல்லியும் 15 புள்ளிகள் பெறும். கே கே ஆர் பங்களூரு, SRH இனை வென்றால் 15 புள்ளிகள். மூன்று அணிகளும் KKR, பஞ்சாப், டெல்லி 15 புள்ளிகளுடன் இருக்கும். ஓட்ட விகிதத்துடன் KkR 4 வது அணியாக GT,RCB,MI உடன் தெரிவாகும்.ஆனால் LSG மிகுதி இருக்கும் 3 போட்டிகளில் குறந்தது ஒரு போட்டியில் தோற்க்க வேண்டும். இல்லாவிட்டால் LSG 16 புள்ளிகள் பெற்று விடும். ஆகவே இன்றைய போட்டி கேகேஆர் க்கு மிக முக்கிய போட்டி.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இனிவரும் போட்டிகளில்கணிப்புகள் மாறுபடலாம். பல வெளிநாட்டு வீரர்கள் திரும்பிவரமாட்டினம். இந்தப் போர் சற்று மன்வந்திருந்தால் பல புதிய முகங்களுக்கு அணிகளில் வாய்ப்புக்கிடைத்திருக்கும் இளம்வீரர்கள் தங்கள் திறமையைக்காட் டி இருப்பார்கள். பல நல்ல வீரர்களை அடையாளம் காட்டியிருக்கும்1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
அவரை நினைக்க தான் பயமாக உள்ளது தீயவற்றையே ஆதரித்து கொண்டு வருகின்றார். இங்கே வரும் பெரிய பாதிப்பு அவர் அட்டுழியம் செய்த குற்றவாளிகள் ஆதரிக்கும் நிலைபாடு எடுத்தால் வெளிநாட்டு ஈழ தமிழர்களும் அவருக்காக அதை சரி என்பார்கள் ☹️1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இதைத்தானே பிரதேச, சமூக முரண்பாடுகளை தோற்றுவிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் இந்திய அரசின் நடவடிக்கைகள் என்று நான் மேலே எழுதியிருந்தேன். இது எப்படி நியாயம் ஆகும்.............. காத்தான்குடியையும், அக்குறணையையும் மட்டும் பிரித்து ஒரு தன்னாட்சி பிரதேசமாக அறிவித்தால், அந்த இரு ஊர் மக்களும் அதை வரவேற்பார்கள் தான், ஆனால் அது நியாயமா................ 'யதார்த்தம்' என்ற சொல் எப்போதும் சில மலையாளப் படங்களை நினைவூட்டுகின்றது. அடூரின், அரவிந்தனின் மற்றும் இவர் போன்றவர்களின் படங்கள். சில வேளைகளில் அந்தப் படங்களை பார்ப்பது போலவே இருக்கின்றது உங்களின் எழுத்துகள்................. நமக்குத்தான் ஏதோ புரியவில்லையோ என்று சந்தேகம் வருகின்றது.................🤣.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவர்களைத் தாண்டி முன்னால் போக முடியாது போல இருக்குதே......... வீதியை மறித்துக்கொண்டு இரண்டு வாகனங்கள் போவது போல போய்க் கொண்டிருக்கின்றார்கள்............🤣.1 point- சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
அண்ணை, இனிமேல் அவ்வாறு செய்வது கடினம்(ஏற்கனவே இறுக்கிவிட்டார்கள்). தரமாக வீதிகள், கட்டடங்கள் அமைக்காவிடில் மக்களே இப்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு 1954 அழைத்து முறையிடுகிறார்கள். அங்கு முறையிடப்பட்டால் வேலை இழக்கப்படும் அபாயமும் உள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு https://tamil.ciaboc.gov.lk/1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஆங்கேலேயர்கள் வெளியேறிய பின், காஷ்மீரின் பகுதிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி இந்தியாவுடனும், மறு பகுதி பாகிஸ்தானிடனும் இணைக்கப்பட்டது சரியல்ல என்பதே என் பார்வையாக இருக்கின்றது. அந்தக் காலப்பகுதிகளில் இப்படியான ஒரு தீர்வு வெவ்வேறு காரணங்களுக்காக உலகின் வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு நாட்டை இரண்டாகப் பிரித்து தனித்தனியேயான இரு நாடுகளாக ஆக்கிவிடுதல். ஆனால் காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு வேறு இரு நாடுகளுடன் அவை இணைக்கப்பட்டன. அந்த நாட்டையும், மக்களையும் சுதந்திரமான ஒரு நாடாகவே விட்டிருக்க வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். பெரும்பாலான பகுதிகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை ஆகவும், ஒரு பகுதியில் இந்துக்கள் பெரும்பான்மை ஆகவும், இன்னொரு சிறிய பகுதியில் பௌத்த மக்கள் பெரும்பான்மை ஆகவும் இருப்பது ஒரு பிரச்சனை அல்ல. அவர்கள் ஒரு நாடாகவும், அதற்குள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களாகவும் தங்கள் நிர்வாகத்தை உருவாக்க ஐநாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் உதவியிருக்கலாம். இன்றைய பாஜக அரசின் பிரச்சாரங்களும், செய்கைகளும் முழு இந்தியாவையுமே ஒரு ஒற்றைப்படைத் தன்மையை நோக்கியே செலுத்துகின்றது. இந்த இந்திய அரசும், அதன் பின் நிற்பவர்களும் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை காவி அடையாளத்தை போர்த்தவே முனைகின்றார்கள். மிகச் சாதரணமாக திருவள்ளுவருக்கே காவி உடையை அணிவித்து விடுகின்றார்கள் இவர்கள். உலகத் திருமறை என்று ஐயன் எழுதியது பலவும் அப்படியே வீணாகிப் போகும் இவர்களின் செயலால். வரலாற்றில் அது ஒரு இந்து அரசாக இருந்தது, பின்னர் முகலாயர்களே அதை ஒரு பெரும்பான்மை இஸ்லாமிய பிரதேசமாக மாற்றினார்கள், இப்போதும் மீண்டும் அதை நாங்கள் வென்றெடுப்போம் என்ற முனைப்பு தவறு என்றும் சொல்கின்றேன். அவர்களின் அரசியலை அந்த மக்களே தீர்மானிக்கவேண்டும். அங்கு நடைபெறும் இந்திய ராணுவ அடக்குமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. இவர்களின் அடக்குமுறைகளுக்கு நாங்களும் ஒரு வாழும் சாட்சிகள். எவ்வளவு தான் தொழில்நுட்பமும், தொடர்பாடலும் முன்னேறினாலும், இவர்களால் என் ஊரில் நடத்தப்பட்டவையே என் ஊருக்கு வெளியே தெரியாத நிலைதான் இன்றும் நீடிக்கின்றது. அங்கிருந்தே இவர்கள் காஷ்மீரில் செய்யும் கொடுமைகளை நான் ஊகித்துக் கொள்கின்றேன். 2019ம் ஆண்டில் அந்த மக்கள் மீது முழுத் தடை ஒன்றை இந்திய அரசு அமுல்படுத்தியது எல்லோருக்கும் தெரிந்ததே. அது அப்பட்டமான உரிமைகள் மீறலும், அடக்கி ஒடுக்கப்படுவதும் தானே. இலங்கை அரசு எங்களுக்கு செய்தது போன்றதே இதுவும். வெறும் கண்டனங்களை மட்டும் உலகம் எழுப்பும், பாதிக்கப்படும் மக்களுக்கு கைகொடுக்க எவரும் வருவதில்லை. ஒரு மாநிலமாக இருந்த காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக இன்று பிரிக்கப்பட்டுவிட்டது. எங்களின் வடக்கு, கிழக்கை பிரித்ததும், பிரதேச/சமூக முரண்பாடுகளை தூண்டி விட்டதும், இதுவும் அடிப்படையில் ஒரே செயல்கள்.1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அண்ண யார் எதையும் சொன்னால் நம்பும் பழக்கம் ஈழத்து இளைஞர்களிடம் இல்லை , எம் முன்னேர்கள் சிலர் அந்தக் காலத்தில் இந்தியா அவுட்டு விட்ட பொய்களை உண்மையேன நம்பி இருக்கலாம்..........................பெரும்பாலான ஈழ தமிழர்கள் அறிவில் சிறந்தவர்கள்.......................நாங்கள் மின்சாரம் இல்லாத ஈழ மண்ணில் வளந்த பிள்ளைகள்.......................கடும் போர்.............விமான தாகுதல்கள் இவைகளுக்கு மத்தியில் தான் வளந்தோம்....................நாங்கள் சினிமா கூத்தாடிகளை தலையில் தூக்கி வைச்சு கொண்டாடினது கிடையாது.................எங்கட போராட்டத்தை நாங்களா நேசித்து வரலாறுகளை படித்து தெரிந்து கொண்டோம் பல ஆயிரம் உயிர் தியாகங்களை செய்து எம் போராட்டம் மெது மெதுவாய் வளந்து நின்ற போது தான் நீங்கள் ஆதரிக்கும் ஹிந்தியா எம் போராட்டத்தையும் எம் உறவுகளையும் சிறு வட்ட்டத்துக்கை வைச்சு அழித்தவை......................சும்மா ஜெய் ஹிந் என்று வீர வசனம் இணையத்தில் எழுதும் கூ முட்டைகள் நாங்கள் கிடையாது............................இந்தியர்களின் அறிவை போன கிழமை நடந்த பாக்கிஸ்தான் போரில் பார்த்து விட்டோம்......................உலகில் அதிகம் படிக்காத புரிதல் இல்லா கூ முட்டைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா...........................சினிமா மோகத்துக்குள் மூழ்கி இருந்தால் உலக அறிவு உண்மை தன்மை பொய்கள் இவை அணைத்தும் எங்கை தெரியப் போகுது😁😛...........................1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்திய - பாகிஸ்தான் போர் அபாயத்தால் தடைப்பட்ட ஐபில் போட்டிகள் மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்கின்றன! GMT நேரப்படி நாளை சனி 17 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 58) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB எதிர் KKR 13 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் 10 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி பிரபா செம்பாட்டான் ரசோதரன் நுணாவிலான் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் அகஸ்தியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் கந்தப்பு வாதவூரான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?1 point- சிரிக்கலாம் வாங்க
1 point👉 https://www.facebook.com/100076314756096/videos/1035897674674669 👈 நல்ல காலம்.... ஒருவரும் பார்க்கவில்லை. 😂 🤣1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
Slow release medicine என கேள்விபட்டிருப்பீர்கள். அதைபோல்ல ஸ்லோ ரிலீஸ் முறையில் உண்மையை தம் நாட்டு மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பருக்கும் இந்திய ஊடகங்கள்👇😂. இது கூட தென்னிந்தியாவில்தான், பானி-பூரி பெல்ட்டில்…மோடி ஜி அடித்து நிமித்தி விட்டார் என்றே இன்னும் நம்புகிறார்கள்🤣. எதிர்பார்த்ததை விட ஆழம்.. இந்தியா - பாகிஸ்தான் போரில்.. சீனா ஆடிய சீக்ரெட் ஆட்டம்.. ஷாக் பின்னணி Shyamsundar IUpdated: Friday, May 16, 2025, 10:53 [IST] பாகிஸ்தான் ராணுவத்திடம் சீனாவின் ஜே ரக போர் விமானங்கள், PL-15 வகை ஏவுகணைகள் என்று பல உள்ளன. பாகிஸ்தானின் 80 சதவிகித போர் உபகரணங்கள் சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டது. இதெல்லாம் இந்திய ராணுவத்திற்கு தெரிந்ததுதான். இதில் அதிர்ச்சி தரும் தகவல் இந்தியா பாகிஸ்தான் போரில் Chinese PL-15 வகை ஏவுகணைகளை சீனர்களே இயக்கியதாக கூறப்படுகிறது. அதாவது சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டெக்னீஷியன்களை களமிறக்கி பணிகளை செய்துள்ளனர். அதாவது இந்தியாவிற்கு எதிராக ஏவப்பட்ட ஏவுகணைகளை பாகிஸ்தானில் இருந்து இயக்கத்து சீனர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனாவின் சாட்டிலைட் இமேஜ்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. அதேபோல் சீனா சார்பாக பாகிஸ்தானுக்கு நிறைய உளவு தகவல்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. அதாவது சீனா ஆயுதங்களை அனுப்பி, அதை இயக்க சாட்டிலைட்டை இமேஜ்களை அனுப்பி.. அதை சரியாக பயன்படுத்த உளவு தகவல்களை அனுப்பி கூடுதலாக இடத்தி எல்லாமே இயக்க ஆட்களையும் அனுப்பியதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. அதாவது இந்தியா பாகிஸ்தான் போரில் எதிர்பார்த்ததை விட ஆழமாக சீனா தலையிட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிப்பதாக தகவல்கள் வருகின்றன. சீனா நிழல் யுத்தம் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த போரை வைத்து சீனா போர் பயிற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வருகின்றன. அதாவது சில ஆயுதங்களை சீனா சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த போர் விவகாரத்தில் உலக நாடுகளின் தீவிரமான சப்போர்ட் பாகிஸ்தானுக்கு இருந்தது. உதாரணமாக துருக்கி , சீனா ஆகியவை பாகிஸ்தானை நேரடியாக ஆதரித்தது. ராணுவ ரீதியாக அரசியல் ரீதியாக பாகிஸ்தானை சப்போர்ட் செய்தது. வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது. இதிலேயே பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா ஆதரவு இருப்பது உறுதியானது. பாகிஸ்தான் தனது தாக்குதலில் சீன ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட நிலையில், சீன ட்ரோன்களுடன் சேர்த்து துருக்கி ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியது. 36 இடங்களைக் குறிவைத்து சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தியப் பாதுகாப்புப் படை கைனடிக் (kinetic) மற்றும் நான் கைனடிக் (non-kinetic) முறையில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவை துருக்கி மற்றும் சீனாவின் டிரோன்கள், என்று இந்திய ராணுவம் தெரிவித்தது. இந்த டிரோன்களை பாகிஸ்தானிடம் தந்து சீனா சோதனை செய்ததாகவும், சீனாவின் சில ஏவுகணைகளையும் சீனா பாகிஸ்தான் வழியாக சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது. எக்ஸ் பக்கம் இந்த போருக்கு சில நாட்களுக்கு முன்பே பாகிஸ்தானில் எக்ஸ் பக்கம் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு காரணம் சீனா என்கிறார்கள். அதாவது இந்தியாவிற்கு எதிராக போடப்பட்ட போஸ்டுகள் எல்லாம் பாகிஸ்தான் வழியாக சீனர்கள் செய்த போஸ்ட் என்று கூறப்படுகிறது. அதாவது இந்தியாவின் இமேஜை அழிக்க சீனர்கள் களமிறக்கப்பட்டு ஆன்லைன் போரை சீனா நிழல் யுத்தமாக நடத்தி இருக்கலாம். எதிர்காலத்தில் போர் வந்தால் ஆன்லைனில் எப்படி narrative உருவாக்குவது என்பதை பாகிஸ்தான் வழியாக சீனா இந்த முறை கற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த போரை எதிர்கால போருக்கான பயிற்சியாக மேற்கொண்டு இருக்கலாம் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. https://tamil.oneindia.com/news/chennai/role-of-china-in-the-india-vs-pakistan-war-might-be-deeper-than-we-think-704557.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards#google_vignette1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நான் ஆதாரபூர்வமாக, அல்லது லொஜிக்கலாக வாதாடும் எவரையும் கடந்து செல்ல விரும்புவதில்லை. ஆனால் கவுண்டமணி வாழைப்பழ ஜோக் போல எழுதுபவர்களோடு விவாதித்தால் அயர்ச்சிதான் மிஞ்சும்.1 point- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
Beltஆல அடிக்காதீங்க அண்ணா.. ட்ரெஸ்ச கழட்டிறேன் அண்ணா"னு.. ஒரு பொண்ணு அலறின வீடியோ முகம் மறைக்கப்பட்டு வெளி வந்தது. மனசை நொறுங்க வைத்த அந்தக் கொடூரத்தை செய்த ஓநாய்கள்... சாகும்வரை சமூகத்திற்குள் வரக் கூடாது... ஜெயிலுக்குள்ளே சாகட்டும்... Ranjith Priyan1 point- அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!
ஓவராய் போகேல்லை. சொல்ல வேண்டியதை சொல்லவேண்டிய விதத்திலை சொல்ல தெரியேல்லை ☹️1 point- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
”பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு… கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து” : தலைவர்கள் வரவேற்பு! 13 May 2025, 8:10 PM பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் இன்று (மே 13) உத்தரவிட்டது. இதனை கட்சி பேதமின்றி தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மனதார வரவேற்று, நீதிமன்ற தீர்ப்பை பாராட்டி வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று நினைத்தாலும் மனம் பதைபதைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம். குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை அன்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.கழகம், மக்களின் துணையோடு முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க காரணம். விசிக தலைவர் திருமாவளவன் : பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு என்பது கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து. விசிக மனப்பூர்வமாக வரவேற்கிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு 9 பேரும் குற்றவாளிகள் என்ற தீர்ப்பு ஆறுதலை தருவதாக இருக்கிறது. இந்தியாவில் இப்படி ஒரு கூட்டு பாலியல் குற்றம் நடந்திருக்காது என்ற அளவிற்கு மோசமான சம்பவம் பொள்ளாச்சியில் நடந்தது. சட்டத்தின் படி அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டால் தான் கூட்டுப் பாலியலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு அச்சம் ஏற்படும். தவெக தலைவர் விஜய் : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். ராணுவத்தில் நம் பெண்கள் வீர தீரத்துடன் சாதித்ததைக் கொண்டாடும் இக்காலத்தில், மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு, பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்வித சமரசமுமின்றி உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கில் புலன்விசாரணை நடத்திய சிபிஐ, நீதிமன்றத்தில் விசாரணையை கையாண்ட அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் பணிகள் பாராட்டத்தக்கவை. இந்த வழக்கில் 48 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் கூட பிறழ்சாட்சியாக மாறாமல் கடைசி வரை தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது பாராட்டப்பட வேண்டியதாகும். இந்த வழக்கில் அழிக்கப்பட்ட மின்னணு ஆவணங்களை மீட்டெடுத்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் தடுத்த அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது நீதிகிடைத்திருக்கிறது என்றாலும் இது தாமதிக்கப்பட்ட நீதிதான். 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் போதிய எண்ணிக்கையில் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாததுதான். இந்த வழக்கை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் கூட சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு மிகவும் தாமதமாகத் தான் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.85 லட்சம் இழப்பீடு போதுமானது அல்ல. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ரூ. 8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை மட்டும் தான் இழப்பீடு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குற்றவாளிகளிடம் சிக்கி பல ஆண்டுகள் கொடுமையை அனுபவித்த அவர்கள், அதன்பின் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உலகமே பாராட்டக்கூடிய ஒரு அதிரடி தீர்ப்பைக் கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்து இருப்பதைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்க ஒரு விஷயம். அதுமட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பும் நீதிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை தீர்ப்பைக் கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்த வழக்கை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு இனி வருங்காலங்களில் இளைஞர்கள் இது போன்ற தவறுகளை செய்யாமல் கண்ணியதோடு இருக்க வேண்டும் என்பதற்கு இந்த தீர்ப்பு சான்றாக இருக்கிறது. கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம். தமாக தலைவர் ஜி.கே.வாசன் : பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை செயல் மிருகத்தனமானது. தமிழகத்தையே தலைக்குனிய வைத்த சம்பவம். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க தீர்ப்பு. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்ற ரீதியிலே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தவறான கண்ணோட்டத்தோடு பெண்களை பார்ப்பவர்களுக்கும், சிந்திப்பவர்களுக்கும் இத்தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் இழப்பீடு அறிவித்து இருப்பதையும், குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையை வழங்கியிருப்பதையும் தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்கிறது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் : பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. நாம் அனைவராலும் போற்றி வணங்கப்பட வேண்டிய பெண்களிடம் ஈவு இரக்கமின்றி மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்ட மிருகக் குணம் படைத்தவர்களுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில், அதற்கு இணையாக தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருப்பதை இனியாவது உணரவேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் : 2019-ல் தமிழகத்தையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. 2019 பிப்ரவரியில் அம்பலத்திற்கு வந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் வலுவான போராட்டங்களை நடத்திய பின்புலத்தில் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவினர் அதில் சம்பந்தப்பட்டிருந்ததும் துவக்க கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இது தாமதத்தையும், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அச்சத்தையும் உருவாக்கி இருந்தது. இதற்கு எதிரான போராட்டங்கள் பெரும் வீச்சோடு நடந்த பின்னரே 16 மாத காலத்திற்குப் பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கூட்டு பாலியல் வன்கொடுமை, தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் 9 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்து இருக்கிறார். அதிமுக நிர்வாகி அருளானந்தம் என்பவரும் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவர். இந்த தீர்ப்பு பாலின வன்முறைக்கு எதிரான போராட்டங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி. பாதிக்கப்படும் பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடியதுமாகும். இந்த வழக்குகளில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டது பாராட்டத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கின் இறுதிக் கட்டம் வரை உறுதியாக நின்று, சவால்களை எதிர்கொண்டு உறுதியாக சாட்சியம் அளித்தது என்பதும் போற்றுதலுக்குரியதாகும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி அக்குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளித்திட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் : கடந்த 2019 பிப்ரவரி மாதம் நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்தாக்குதல் மத்திய புலனாய்வு துறை விசாரணை அதிகாரியின் விசாரணையும், சாட்சியங்களையும், ஆவணங்களையும் நீதிமன்ற விசாரணையில் நிலைநாட்டி, குற்றத்தை உறுதி செய்த முறை பாராட்டத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை, குற்றவாளிகளின் மனிதத் தன்மையற்ற ஈனச் செயலை நீதிமன்றத்தில் நிலைநாட்டியதை போற்றிப் பாராட்டுகிறோம். குற்றவாளிகள் மீது முன்வைக்கப்பட்ட 76 குற்றச்சாட்டுகளில் 66 குற்றங்களை உறுதி செய்து, நிலைநாட்டிய விசாரணை அதிகாரிகள், சாட்சியளித்தவர்கள், இவைகளை தக்க முறையில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, குற்றங்களை நிரூபித்த மத்திய புலனாய்வு துறை வழக்கறிஞர் ஆகியோருக்கு நன்றி பாராட்டி வாழ்த்துகிறோம். பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் கோவை மகளிர் நீதிமன்றம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ 85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியிருப்பது, போராடும் பெண்களுக்கு வாளும், கேடயமுமாக உதவி சிறப்புப் பெறும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் : பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகவும் வரவேற்பிற்குரியது. பெண்கள் பாதுகாப்பை உருக்குலைக்கும் குற்றவாளிகள் நீதியின் பிடியில் இருந்து என்றும் தப்பிக்க முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. பாதிக்கப்படும் பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு இது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போக்சோ வழக்குகளும் தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், குற்றமிழைக்க முற்படும் கயவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இத்தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். நீதியை நிலைநாட்ட போராடிய அனைவருக்கும், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய மாண்புமிகு நீதிமன்றத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை : தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேல், துணிச்சலாகப் போராடி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தந்துள்ள பாதிக்கப்பட்ட சகோதரிகள் அனைவருக்கும், இந்தத் தீர்ப்பு ஓரளவாவது மன ஆறுதல் அளிப்பதாக அமையும் என்று நம்புகிறேன். இந்த வழக்கில் நியாயம் கிடைக்கப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிரான வழக்குகளில், தாமதமின்றிச் செயல்படவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறைக்கும், விரைவாக நியாயம் கிடைக்கவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். https://minnambalam.com/tn-political-leaders-welcome-pollachi-case-verdict/1 point- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
பொள்ளாச்சி சம்பவத்தில் 09 பேருக்கு ஆயுள்தண்டனை! கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8 க்கும் மேற்பட்ட பெண்களை காணொளி எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை பொள்ளாச்சி பொலிஸார் முதலில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு மாநில அரசின் குற்றபுலனாய்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த 25 தொடக்கம் 28 வயதுக்கிடைப்பட்ட 05பேர் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு மேலும் 04பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் குறித்த வழக்கு மீதான விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்ட 8 பெண்களும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக சாட்சி அளித்தனர். வழக்கின் ஒவ்வொரு விசாரணையின்போதும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்து நிகழ்நிலை மூலமாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று (13) அறிவிக்கப்படும் என கடந்த 28ம் திகதி நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில் , இந்த வழக்கில் கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் கைதான 9 பேரும் குற்றாவாளிகள் என கோவை மகளீர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ள நிலையில் அவர்களுக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். https://athavannews.com/2025/14317491 point- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
9 பேரும் குற்றவாளிகள் - யாருக்கு என்ன தண்டனை? பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு முழு விவரம் பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 13 மே 2025, 05:26 GMT புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 9 பேரும் குற்றவாளிகள் என்று இன்று காலை 10.45 மணியளவில் தீர்ப்பளித்த நீதிபதி நந்தினி தேவி, தண்டனை விவரத்தை நண்பகல் 12 மணிக்குப் பிறகு அறிவித்தார். அதன்படி, 9 பேருக்குமே சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இந்த பாலியல் வழக்கு காரணமாக, அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிமுக பின்புலம் இருப்பதாக தொடர்ந்து திமுக குற்றம் சாட்டி வந்தது, எனினும் அதை அதிமுக மறுத்தது. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT தீர்ப்பின் முழு விவரம் தீர்ப்பின் விவரங்கள் குறித்து பேசிய அரசு வழக்கறிஞர் சுரேந்திரமோகன், "குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 376 D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 376 (2)(N) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, மற்ற பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள், 7 ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என தனித்தனியாகவும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது." என்றார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். "சிபிஐ முயற்சி வீண் போகவில்லை. நியாயமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. வழக்கின் தன்மையை பொறுத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். வாய்மொழி சாட்சிகள், மின்னணு சாட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். விசாரணையில் சேகரிக்கப்பட்ட பெரும்பாலான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம். குற்றவாளிகள் மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. பலமான சாட்சிகள் உள்ளன, மேல்முறையீடு சென்றாலும் இந்த தண்டனை நிலைநிறுத்தப்படும் என நான் நம்புகிறேன்" என அவர் தெரிவித்தார். "இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 பேரும் இறுதிவரை பிறழ்சாட்சிகளாக மாறவில்லை. வழக்கில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் மீட்கப்பட்டன. விஞ்ஞானப்பூர்வமாக அடையாளம் காணுதல் உள்ளிட்ட பலவற்றுக்கு வழக்கில் தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்தது. வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேர் விசாரிக்கப்பட்டனர்" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,அரசு தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் யாருக்கு என்ன தண்டனை? முதல் குற்றவாளி சபரி ராஜனுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம், 4 ஆயுள் தண்டனை. இரண்டாவது குற்றவாளி திருநாவுக்கரசுக்கு ரூ.30,500 அபராதம், 5 ஆயுள் தண்டனை. மூன்றாவது குற்றவாளி சதீஷூக்கு ரூ.18,500 அபராதம், 3 ஆயுள் தண்டனை. நான்காவது குற்றவாளி வசந்தகுமாருக்கு ரூ.13,500 அபராதம், 2 ஆயுள் தண்டனை ஐந்தாவது குற்றவாளி மணிவண்ணனுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம், 5 ஆயுள் தண்டனை ஆறாவது குற்றவாளி பாபுவுக்கு ரூ.10,500 அபராதம், ஒரு ஆயுள் தண்டனை ஏழாவது குற்றவாளி ஹேரன்பாலுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம், 3 ஆயுள் தண்டனை எட்டாவது குற்றவாளி அருளானந்தத்துக்கு ரூ.5500 அபராதம், ஒரு ஆயுள் தண்டனை ஒன்பதாவது குற்றவாளி அருண்குமாருக்கு ரூ.5500 அபராதம், ஒரு ஆயுள் தண்டனை 'நிச்சயம் மேல் முறையீடு செல்வோம்' தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்ட பின் பிபிசி தமிழிடம் பேசிய குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் பாண்டியராஜன், ''தீர்ப்பின் நகல் இன்னும் கைக்குக் கிடைக்கவில்லை. சில திருத்தங்கள் செய்து கொண்டிருப்பதால் தீர்ப்பு நகல் கிடைத்து, அதைப் படித்துப் பார்த்த பின்பே, எங்களுடைய எந்தெந்த வாதங்கள் ஏற்கப்பட்டிருக்கின்றன என்பதை முழுமையாக அறிய முடியும். அரசு தரப்பு முன் வைத்த 76 குற்றச்சாட்டுகளில் 10 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. தீர்ப்பு பற்றித் தெரிந்த பின், 60 நாட்களில் மேல் முறையீடு செல்வதற்கு வாய்ப்புள்ளது. நாங்கள் கண்டிப்பாக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யவுள்ளோம்.'' என்றார். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரி, நீதிமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பிய பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மத்திய இணையமைச்சர் எல் முருகன் பேட்டி தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் உள்ள பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், சட்டம் தன் கடமையை செய்துள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என கூறினார். வழக்கின் பின்னணி 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளியாக பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது. இவர்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது சகோதரரிடம் அது பற்றி கூறவே, தங்கையை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை சுற்றி வளைத்த அவரது சகோதரர் அவர்களை விசாரித்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர்கள் வைத்திருந்த செல்போன்களில் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் காணொளிகள் இருந்துள்ளன. இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டவுடன் திருநாவுக்கரசு, சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்படும் காணொளிகள், பொதுமக்கள் மத்தியில் பரவி வந்த நிலையில், இதில் அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளும் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டது. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,தீர்ப்பையொட்டி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள போலீஸார் வழக்கு கடந்து வந்த பாதை * பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்த நாள்: 2019 பிப்ரவரி 12 * முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நாள்: 2019 பிப்ரவரி 24. அதன் அடிப்படையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். * திருநாவுக்கரசு என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த அவர், ''தனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை'' என வீடியோ வெளியிட்டார். 2019 மார்ச் 5 அன்று அவர் கைது செய்யப்பட்டார். * திருநாவுக்கரசின் ஐஃபோனில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதுவே இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக, திருப்புமுனையாக அமைந்தது. * வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. * வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான சபரிராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப் டாப் இந்த வழக்கின் மிக முக்கியமான மற்றொரு ஆதார ஆவணமானது. * 2019 ஏப்ரல் 25 அன்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. செல்போன்கள், லேப்டாப் போன்றவற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன. * பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக கைதான சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக 2019 மே 24 அன்று முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. * சிபிஐ வசம் வழக்கு வந்தபின்பு, இந்த வழக்கில் அருளானந்தம், ஹெரன்பால் மற்றும் பாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு, அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளானது. * இந்த 3 குற்றவாளிகள் மீதும் 2021 பிப்ரவரி 22 அன்று இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிக்கை, கோவை மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. * வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது நபராக அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குற்றப்பத்திரிக்கை, 2021 ஆகஸ்ட் 16 அன்று, கூடுதல் குற்றப்பத்திரிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT * இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 48 பேர் மட்டுமே, சிபிஐ அதிகாரிகளால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர். * பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவானபோது, காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் முதல் விசாரணை அதிகாரியாக இருந்தார். சிபிசிஐடியிடம் மாற்றப்பட்ட பின்பு, எஸ்பி நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் விஜய் வைஷ்ணவி, ஆய்வாளர் பச்சையம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர். * இவ்வழக்கில் எலக்ட்ரானிக் பொருட்களே முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. ஐஃபோனில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து குற்றம் நடந்த தேதி, நேரம் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன. * வாட்ஸ்ஆப் குழுவை தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. * பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் புகார் கொடுக்க அச்சப்பட்டுள்ளனர். இவர்களை அச்சுறுத்துவதற்காக சில ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். விசாரணையின்போது அவை நீக்கப்பட்டன. * இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வழக்கு பதியப்பட்ட நாளிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் பிணை வழங்கப்படவில்லை. * பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஏழு பேர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியம் கூறினர். இவர்களிடம் நீதிமன்ற அறையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. படக்குறிப்பு,குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் * குற்றப்பத்திரிக்கைகளில் இவர்கள் மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 12 ஆவணங்கள் குறித்துத் தரப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து நீதிமன்றம் தானாக 11 ஆவணங்களை எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு விசாரைணயில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கியமான 30 பொருட்கள் ஆதார ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. * பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. * முதல் குற்றப்பத்திரிகை துவங்கி இறுதிவரை மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு, அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT * இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வருகிறார். இடையில் அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. * இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy6482jyjgo1 point- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு... - முழு விவரம் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே அதிரவைத்தது. இளம் பெண்கள், திருமணமான பெண்கள் என்று பலரை ஆசை வார்த்தை சொல்லி பழகி, பிறகு வீடியோ எடுத்து மிரட்டி, அடித்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்டது ஒரு வக்கிர கும்பல். “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க.” என்று கதறிய ஒரு பெண்ணின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2/2 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 1/2 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 2/2 இந்த வக்கிர கும்பலின் செல்போன்களில் இதுபோல ஏராளமான வீடியோக்கள் கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அருளானந்தம், ஹேரோன் பால், பாபு ஆகியோர் அதிமுக பிரமுகர்கள். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் காவல்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்தது. பொள்ளாச்சி சின்னப்பம்பட்டியில் பாலியலுக்காக பயன்படுத்தப்பட்ட திருநாவுக்கரசின் பண்ணை வீடு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. 3/3 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 1/3 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 2/3 பொள்ளாச்சி பாலியல் வழக்கு இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை காவல்துறை வெளியிட்டது சர்ச்சையானது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கேட்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சொல்லியும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பொள்ளாச்சி பாலியல் வழக்கு முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 3 குற்ற பத்திரிகைகள்: சிபிஐ தரப்பில் சுமார் 3 குற்ற பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு சார்பில் 50க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள், பாதிக்கப்பட்ட 8 பெண்களின் நேரடி வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2/2 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 1/2 கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு அளித்தார். இதற்காக காலை 5.30 மணியளவில் குற்றவாளிகள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் இருந்து புறப்பட்டு, கோவை நீதிமன்றத்துக்கு 8.30 மணியளவில் அழைத்து வரப்பட்டனர். 4/4 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 1/4 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 2/4 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 3/4 பொள்ளாச்சி பாலியல் வழக்கு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பூட்டிய அறையில் வாசித்தார். அதில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில், கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்ததை, வரவேற்கும் விதமாக, நீதிமன்ற வளாகத்தில் அனைந்திந்திய மாதர் சங்கம் கோஷமிட்டு வரவேற்றனர். `சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்’ - கோரிக்கை சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், அருளானந்தம், மணிவண்ணன், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளார். அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத்தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு பாதுகாக்கப்பட்டதால், 8 பேரில் ஒருவர் கூட பிறழ் சாட்டசியாக மாறவில்லை. குறைந்தபட்ச தண்டனை என்றாலே 20 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை வழங்கப்படும். இதில் பெண்கள் தொடர்ச்சியாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால், உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளோம். வயது, ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என எதிர்த்தரப்பு சார்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. 12 மணிக்கு தண்டனை விபரம் வழங்கப்படவுள்ளது." என்றார். 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்புத்துள்ளது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவு. 1) திருநாவுக்கரசு - 5 ஆயுள் தண்டனை 2) சபரி ராஜன் - 4 ஆயுள் தண்டனை 3) சதிஷ் - 3 ஆயுள் தண்டனை 4) வசந்தகுமார் - 2 ஆயுள் தண்டனை 5) மணிவண்ணன் - 5 ஆயுள் தண்டனை 6) பாபு - 1 ஆயுள் தண்டனை 7) ஹெரோன் பால் - 3 ஆயுள் தண்டனை 8) அருளானந்தம் - 1 ஆயுள் தண்டனை 9) அருண்குமார் - 1 ஆயுள் தண்டனை பொள்ளாச்சி பாலியல் வழக்கு: முழு தண்டனை விவரம்! - Vikatan1 point- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
அந்த மனு, இந்த மனு என தண்டனை குறைக்காமல், மேல்முறையீட்டில் விடுதலை செய்யாமல் - வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழிக்குமாறு உறுதி செய்ய வேண்டும். வெளியில் வரும் போது தொங்கி போய் இருக்க வேண்டும். தலை.1 point- 10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
தமிழ்நாட்டின் கிராம பக்கங்களுக்கு போனால் வளர்ச்சி தெரியும்.😃 இந்த செய்தியை வாசிக்கும் போது பிரமாண்ட இயக்குனர் சங்கரின் திரைப்படம் பார்த்த பீலிங் வருவது எனக்கு மட்டும் தானா? அதை விட இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக இயற்கை வளம் உள்ளதாக கூறுகின்றார்கள். ஒரு ஆங்கில அறிஞர் தமிழ்நாடு தனித்து ஆட்சி செய்து ஆளக்கூடிய வளங்கள் எல்லாம் உள்ளது என எழுதியதாக வாசித்த ஞாபகம்.1 point - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.