Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87988
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    31956
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38754
    Posts
  4. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1223
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/20/25 in all areas

  1. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 62வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஆயுஷ் மாத்ரே புயல்வேகத்தில் 43 ஓட்டங்களை எடுத்தாலும் பிற ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் ஆடவந்த டெவால்ட் ப்ரெவிஸ் அதிரடியாக 42 ஓட்டங்களையும் ஷிவம் டுபே 39 ஓட்டங்களையும் எடுத்து இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ஓட்டங்களை எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யஷஸ்வி ஜெஸ்வாலும் வைபவ் சூர்யவன்ஷியும் மின்னல் வேகத்தில் ஆடி முறையே 36 ஓட்டங்களையும், 57 ஓட்டங்களையும் எடுத்து அடித்தளம் போட்டுக் கொடுத்ததால் பின்னர் ஆடவந்து சஞ்சு சாம்சனின் 41 ஓட்டங்களுடனும் துருவ் ஜுரேலின் மரண அடியான 12 பந்துகளில் 31 ஓட்டங்களுடனும் 17.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த மூவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல் இரு நிலைகளில் இருக்கும் இரட்டையர்கள் ஜோடி @நந்தன் க்கும் @புலவர் ஐயாவுக்கும் வெள்ளி திசை என்பதால் புள்ளிகள் அள்ளிக் கொட்டுகின்றன.
  2. எங்களையெல்லோ சவட்டி விட்டாங்கள்.
  3. ஒரு போட்டிக்கு ஒரு சிக்ஸ் அடிச்சா தல ரசிகக் குஞ்சுகள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று தல 17 பந்தில் 16 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்துவிட்டார்.
  4. 20 MAY, 2025 | 12:46 PM டி.பி.எஸ். ஜெயராஜ் ஐரோப்பாவில் வாழும் இலங்கை தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் மத்தியில் இன்றைய நாட்களில் பெரிதும் பேசப்படுபவராக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வு தலைவரான 'பொட்டு அம்மான்' என்ற சண்முகநாதன் சிவசங்கர் விளங்குகிறார். பெரிதும் அஞ்சப்பட்ட புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவர் போரின் இறுதிக்கட்டத்தில் 2009 மே மாதத்தில் இறந்துவிட்டார் என்ற போதிலும், ஐரோப்பாவில் இருக்கும் முன்னாள் விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒரு குழுவினர் பொட்டு அம்மான் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வெளியில் வந்து இயக்கத்துக்கு புத்துயிரளித்து இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார் என்றும் 'பொய்ச்செய்தியை' பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். “பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்” என்ற மாயைக்கு பின்னால் இருக்கும் குழுவே விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா உயிருடன் இருக்கிறார் என்ற பொய்ச்செய்திப் பிரசாரத்தில் ஏற்கெனவே ஈடுபட்டது என்று அறியவருகிறது. பிரபாகரனும் அவரது மனைவி மதிவதனியும் கூட உயிருடன் இருக்கிறார்கள் என்ற மாயையையும் இந்த குழுவே பிரசாரம் செய்தது. ஐரோப்பாவில் இருக்கும் மதிவதனியின் சகோதரர்கள் உட்பட பல்வேறு நபர்களும் தமிழ்நாட்டில் இருக்கும் விடுதலை புலிகளின் முக்கியமான ஆதரவாளர்களான பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் போன்றவர்களும் இந்த 'உயிருடன் இருக்கும்' புரளிக்கு ஆதரவளித்தார்கள். போலி துவாரகா, பிரபாகரன் மற்றும் மதிவதனியை கொண்டுவருவதற்கான நடவடிக்கை 'தலைவரின்' குடும்பத்தின் எளிதில் ஏமாற்றப்படக்கூடிய ஆதரவாளர்களிடம் இருந்து நிதி சேகரிப்பதற்கு ஐரோப்பாவில் இருக்கும் முன்னாள் புலிகளினால் முன்னெடுக்கப்படும் ஏமாற்று வேலையின் ஓர் அங்கமாகும். இதைப் பற்றி நான் 2023 மார்ச்சில் 'பிரபாவையும் குடும்பத்தையும் பயன்படுத்தி போலிச்செய்தி மோசடி' என்ற தலைப்பில் விரிவாக எழுதினேன். பெரும் ஆரவாரத்துடன் தொடங்கிய அந்த மோசடி வேலை பரிதாபத்துக்குரிய சிணுங்கலாக இப்போது தணிந்துபோய்விட்டது. துவாரகாவாக பாசாங்கு செய்தவர் அஞ்சி நடுங்கி தற்போது வெளியில் தலைகாட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. விடுதலை புலிகளின் பெருமளவு ஆதரவாளர்களை ஏமாற்றி அவர்களது யூரோக்களை, பிராங்குகளை, குரோனர்களை, ஸ்ரேர்லிங் பவுண்களை கறந்த மோசடிக்காரர்கள் பொன்முட்டையிடும் அந்த வாத்தை கைவிட்டுவிடத் தயாராக இல்லை. இப்போது அவர்கள் பொட்டு அம்மானை பிடித்திருக்கிறார்கள். அவர் உக்ரெயின் நாட்டில் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். பொட்டு அம்மானின் 'மீள்வருகைக்கும்' அதைத் தொடர்ந்து நிதி திரட்டலுக்குமான களம் அமைக்கப்படுகிறது. ஆனால், புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில விவேகமுள்ள, அக்கறையுடைய உறுப்பினர்கள் இவ்வாரம் பொட்டு அம்மானின் வாழ்வையும் மரணத்தையும் பற்றிய ஒரு நூலை வெளியிடுவதன் மூலம் இந்த பாசாங்கை அம்பலப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேவேளை, இந்த நிகழ்வுப் போக்குகளினால் குழப்பமடைந்த சில நபர்கள் உண்மை நிலையை எழுதுமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். இவ்வாறு வேண்டிக்கொண்டவர்களில் பலர் ஐரோப்பாவில் வளர்ந்த இளைஞர்களே. அவர்களில் சிலர் பொட்டு அம்மானை பற்றி அறியவும் விரும்புகிறார்கள். அதனால் இந்த பின்புலத்தில், இந்த கட்டுரை முன்னைய எனது எழுத்துக்கள் சிலவற்றின் உதவியுடன் பொட்டு அம்மான் மீது கவனம் செலுத்துகிறது. பொட்டு அம்மான் என்ற சண்முகநாதன் சிவசங்கர் விடுதலை புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக 2009ஆம் ஆண்டில் மரணமடையும் வரை 21 வருடங்கள் செயற்பட்டார். விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட நேரத்தில் பொட்டு அம்மான் நடப்பின்படி அந்த இயக்கத்தின் இரண்டாவது பெரிய தலைவராக இருந்தார். உரிமைப்படி மூப்பின் அடிப்படையில் பிரபாகரனுக்கு அடுத்த தலைவர் என்றால் அது பேபி சுப்பிரமணியமே. ஆனால், இரண்டாவது தலைவராக நடைமுறையில் பொட்டு அம்மானே செயற்பட்டார். பொட்டு அம்மான் இறந்துவிட்டதாக சட்டப்படியாக அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், அவரது சடலமோ அல்லது எச்சங்களோ ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால்தான் அவர் இறக்கவில்லை என்று சந்தேகங்கள் கிளம்பியிருக்கின்றன. பொட்டுவும் குடும்பமும் உயிருடன் இல்லை இந்த கட்டத்தில் நான் பொட்டு அம்மானின் மரணத்துடன் தொடர்புடைய விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்துக்கு நேர்ந்ததைப் போன்றே பொட்டு அம்மானும் அவரது குடும்பத்தினரும் கூட இறந்துவிட்டனர். பிரபாகரனும் மனைவி மதிவதனி, பிள்ளைகள் சார்ள்ஸ் அந்தனி, துவாரகா மற்றும் பாலச்சந்திரனும் போரின் இறுதிக்கட்டத்தில் மரணமடைந்தனர். அதேபோன்றே பொட்டு அம்மானும் அவரது மனைவி வத்சலா, மகன்களான பார்த்திபன், அருள்வேந்தன் மற்றும் கலைக்கண்ணன் ஆகியோரும் இன்று உயிருடன் இல்லை. பொட்டுவின் மூத்தமகன் பார்த்திபனும் இரண்டாவது மகன் அருள்வேந்தனும் விடுதலை புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இணைந்து ஆயுதப் பயற்சிகளை பெற்றனர். போர்க்களத்தில் முன்னரங்கத்தில் நின்று போராடிய அவர்கள் இருவரும் வெவ்வேறு சண்டைகளில் கொல்லப்பட்டனர். இருவரும் 2009 ஜனவரிக்கும் மேயிற்கும் இடைப்பட்ட மாதங்களிலலேயே கொல்லப்பட்டனர். திகதிகளை அறியக்கூடியதாக இல்லை. இளைய மகன் கலைக்கண்ணன் 2009 மே 13ஆம் திகதி கொல்லப்பட்டான். ஒன்பது வயதான அவன் தாயுடன் சேர்ந்து மறைந்திருந்த பதுங்குகுழியில் இருந்து வெளியேறி அருகாமைப் பதுங்குகுழியில் இருந்த நண்பர்களுக்காக தண்ணீர் எடுக்கச் சென்றான். அந்தவேளை ஹெலிகொப்டரில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவன் இரத்தம் சிந்திய நிலையில் தாயாரின் கரங்களிலேயே உயிர்விட்டான். பொட்டுவின் மனைவி வத்சலா 2009 மே 16ஆம் திகதி மரணமடைந்தார். ஆட்டிலறி ஷெல் வெடிப்பு ஒன்றிலேயே அவர் கொல்லப்பட்டார். அவரது சடலத்தை கணவர் தகனம் செய்ததாக கூறப்படுகிறது. பொட்டு 2009 மே 18ஆம் திகதி மரணமடைந்தார். வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட அங்கி அணிந்திருந்த அவர் அதை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. தான் தூள்தூளாகப் போவதை உறுதிசெய்வதற்காக பொட்டு தனது அங்கியில் மிகையான அளவுக்கு வெடிபொருட்களை நிரப்பியதாகவும் தற்கொலை செய்வதற்கு முன்னதாக தனது உதவியாளர்களையும் மெய்க்காவலர்களையும் வேறிடத்துக்கு செல்லுமாறு அனுப்பியதாகவும் கூறப்பட்டது. பலத்த வெடிச்சத்தத்தை கேட்டு திரும்பிவந்து பார்த்த அவர்கள் சிதறிய பொட்டுவின் உடலில் எஞ்சிக்கிடந்தவற்றை அழித்தனர். முன்னர் குறிப்பிட்டதை போன்று பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும் மூன்று பிள்ளைகள். தங்களது பிள்ளைகளுக்கு அவர்கள் இருவரும் பெயர்களைச் சூட்டியதிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. பிரபாகரன் - மதிவதனி தம்பதியரின் மூத்த மகனுக்கு பிரபாகரனின் சிறந்த நண்பனும் மூத்த இராணுவ தளபதியுமான - சாவகச்சேரி மீசாலையில் இறந்த சார்ள்ஸ் அந்தனியின் பெயர் சூட்டப்பட்டது. அவர்களின் மகளுக்கு துவாரகன் (மயூரன்) என்ற அவரின் மிகுந்த விருப்பத்துக்குரிய மெய்க்காவலரின் நினைவாக துவாரகா என்று பெயர் சூட்டப்பட்டது. இளையமகனுக்கு விடுதலை புலிகளில் இணைந்து சண்டையில் உயர்துறந்த மதிவதனியின் சொந்தச் சகோதரன் பாலச்சந்திரனின் பெயர் சூட்டப்பட்டது. பொட்டு அம்மானும் வத்சலாவும் தங்களது மூத்த மகனுக்கு பாரத்திபன் என்று பெயர் சூட்டினார்கள். 1987ஆம் ஆண்டில் உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த திலீபனின் உண்மையான பெயர் பார்த்திபன். அவர் சிறந்த ஒரு சதுரங்க விளையாட்டு விற்பன்னர். அதேபோன்றே பொட்டுவின் மகன் பார்த்திபனும் சதுரங்கத்தில் திறமையுடையவர். இரண்டாவது மகனுக்கு அவர்கள் கொழும்பில் தன்னைத்தானே வெடிக்கவைத்து இறந்த ஒரு கரும்புலியின் நினைவாக அருள்வேந்தன் என்று அவர்கள் பெயர் வைத்தனர். பொட்டுவின் பிரதி கேணல் சார்ள்ஸும் கூட விடுதலை புலிகள் தூய தமிழ்ப் பெயர்களை வைக்கும் இயக்கத்தை ஆரம்பித்தபோது தனக்கு அருள்வேந்தன் என்று இயக்கப்பெயரை வைத்துக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது. பொட்டு தம்பதியர் தங்களது இளையமகனுக்கு சண்டையில் இறந்த மேஜர் கண்ணனின் பெயரைச் சூட்டினர். கண்ணன் வத்சலாவின் தாய்மாமனும் கூட. 2000ஆம் ஆண்டில் பிறந்த கலைக்கண்ணனுக்கும் அவரது மூத்த சகோதரர்கள் பார்த்திபன், அருள்வேந்தன் ஆகியோருக்கு இடையில் நீண்ட வயது வித்தியாசம். அதேபோன்றே பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுக்கும் அவரது மூத்த சகோதரர்கள் சார்ள்ஸ் அந்தனி, துவாரகா ஆகியோருக்கும் இடையில் நீண்ட வயது வித்தியாசம். பாலச்சந்திரன் 1997ஆம் ஆண்டில் பிறந்தவர். பொட்டுவின் சகோதரி கெப்டன் அருந்ததி இரு மகன்களுக்கும் புறம்பாக பொட்டு குடும்பத்தின் இன்னொரு உறுப்பினரும் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து சண்டையில் இறந்தார். பொட்டுவின் இளைய சகோதரி காப்டன் அருந்ததி என்ற சிவரஞ்சனி சண்முகநாதனே அவராவார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் தச்சன்காடு பகுதியில் 1990 நவம்பரில் நடைபெற்ற மோதல்களில் அவர் கொல்லப்பட்டார். சிவரஞ்சனியின் இயக்கப்பெயர் அருந்ததியாக இருந்தபோதிலும், பொட்டுவின் சகோதரி என்பதால் தோழர்கள் அவரை 'பொட்டு' என்றே அழைத்தார்கள். பல வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்துவிட்ட பொட்டுவின் மூத்த சகோதரர் அண்மையில் காலமானார். அவரின் இளைய சகோதரரும் வத்சலாவின் ஒரு உடன்பிறப்பும் லண்டனில் வசிக்கிறார்கள். பொட்டு இரு தசாப்தங்களுக்கும் மேலாக விடுதலை புலிகளின் பலம் பொருந்திய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மிகவும் முக்கிய பொறுப்பில் செயற்பட்டார். அவர் 1962ஆம் ஆண்டில் பிறந்தார். 1981ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்த பொட்டு சுமார் 30 வருடங்கள் இயக்கத்துக்காக தன்னை அர்ப்பணித்தார். 1983 ஜூலை 23ஆம் திகதி விடுதலை புலிகள் திருநெல்வேலியில் இலங்கைப் படையினர் மீது தாக்குதல் நடத்தியபோது இயக்கத்தில் 23 முழுநேர உறுப்பினர்களும் ஏழு பகுதிநேர உதவியாளர்களும் மாத்திரமே இருந்தனர். பொட்டு இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் 30 பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரியாலை - நாயன்மார்கட்டு அவரது குடும்பம் யாழ்ப்பாணத்தில் நாயன்மார்கட்டில் வசித்தபோதிலும், அவர்கள் அயல் அரியாலையைச் சேர்ந்தவர்கள். சிறுவர் பராயத்தில் இருந்தே அரியாலையில் இருந்த தனது வயதையொத்த சிறுவர்களுடன் பொட்டு நெருங்கிப் பழகி நாயன்மார்கட்டையும் விட கூடுதலான நேரத்தை அரியாலையிலேயே கழித்தார். சிவசங்கரின் தந்தையார் சண்முகநாதன், சண்முகலிங்கம் என்றும் அறியப்பட்டிருந்தார். கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியில் பல வருடங்களாக ஒரு எழுதுவினைஞராக அவர் பணியாற்றினார். பிள்ளைகளின் கல்விக்காக குடும்பம் யாழ்ப்பாணத்திலேயே வசித்தது.1990 களின் பிற்பகுதி வரை பொட்டுவின் தந்தையார் மலையகத்திலேயே தொடர்ந்து வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. பொட்டுவைப் பற்றி இலங்கை அதிகாரிகளுக்கு பெரிதாக எதுவும் தெரியாத காரணத்தால் தந்தையாருக்கு ஆபத்து எதுவும் நேராது என்பதில் மகன் மிகுந்த நம்பிக்கை உடையவராக இருந்தார். பொட்டு மகேஸ்வரி வித்தியாலயம், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (ஸ்ரான்லி கல்லூரி) மன்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியைப் பெற்றார். மிகவும் உயரமான, அழகான தோற்றமுடைய பொட்டு அவரது நண்பர்கள் மத்தியில் பிரபலமானவராக விளங்கினார். கல்வியிலோ அல்லது விளையாட்டுகளிலோ அவர் சிறந்து விளங்கவில்லை. ஆனால், பெருமளவு கட்டுரைப் போட்டிகளில் அவர் பரிசுகளை வென்றார். விடுதலை புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தளபதியான பஷீர் காக்காவினாலும் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தளபதியான சந்தோசம் மாஸ்டரினாலுமே சிவசங்கர் இயக்கத்தில் சேர்க்கப்பட்டார். இது 1981ஆம் ஆண்டில் நடந்தது. முதலில் அவர் பகுதிநேர உதவியாளராகவே செயற்பட்டார். முழுநேர உறுப்பினராக மாறியதும் சிவசங்கருக்கு குமணண் என்ற இயக்கப்பெயரே கொடுக்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அவர் பொட்டு என்ற அறியப்படலானார். பாடசாலை நாட்களில் இருந்து அவரை நண்பர்கள் பொட்டு என்றே அழைத்தார்கள். பொட்டு என்ற பெயரின் தோற்றுவாய் பொட்டு என்ற பெயரின் தோற்றுவாய் மிகவும் சுவாரஸ்யமானது. பொட்டு என்பது நெற்றியில் வைத்துக் கொள்வது. கோவில்களில் அல்லது சுப வைபவங்களில் பொட்டு வைப்பதற்கு சந்தனம் அல்லது குங்குமமே பயன்படுத்தப்படும். தமிழர் அரசியலில் தமிழ்த் தேசியவாதக் கொள்கையுடைய இலங்கை தமிழ் அரசு கட்சியினதும் பிறகு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் எழுச்சி போராட்டம் மற்றும் தியாகம் என்ற கோட்பாடுகளின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது. இதன் ஒரு தீவிரப்போக்கின் வெளிப்பாடாக இரத்தத் திலகமிடும் பழக்கம் வந்தது. தமிழ் அரசியல் தலைவர்களினால் உணர்ச்சிவசப்படுத்தப்பட்ட இளைஞர்கள் மேடைகளில் ஏறி தங்களது விரல்களை குத்தி அதில் இருந்து வெளிவரும் இரத்தத்தால் தலைவர்களின் நெற்றியில் பொட்டு வைத்து தங்களது இரத்தத்தையும் உயிரையும் தமிழ் இலட்சியத்துக்காக அர்ப்பணிப்பதாக சூளுரைப்பார்கள். இளம் சிவசங்கரும் ஒரு சந்தர்ப்பத்தில் உணர்சிவசப்பட்டவராக மேடையில் ஏறி பிளேட்டினால் தனது கையைக் கிழித்து தலைவர்களான அப்பாபிள்ளை அமிர்தலங்கம், வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆகியோரின் நெற்றிகளில் பொட்டு வைத்தார். தமிழர் அரசியலில் மிகவும் உணர்ச்சிவசமான பிரசாரங்களைக் கண்ட 1977 பொதுத்தேர்தலின் போதே இது நடந்தது. அப்போது தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தனித்தமிழ்நாட்டு கோரிக்கையை முன்வைத்து மக்களிடம் வாக்குக் கேட்டது. யோகேஸ்வரன் அந்த தேர்தலில் கூட்டணியின் யாழ்ப்பாணம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். சிவசங்கரின் இந்த உணர்ச்சிவசமான சைகை அவரது நண்பர்களினால் பெரும் வேடிக்கையாக நோக்கப்பட்டது. அதற்கு பிறகு அவர்கள் அவரை சீண்டிக் குறும்பு செய்து பொட்டு என்று அழைக்கத் தொடங்கினர். அந்தப் பெயர் அவருடன் ஒட்டிக்கொண்டது. விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்த பிறகு புதிய தோழர்களும் அவரை பொட்டு என்று அழைக்கத் தொடங்கினர். இயக்கத்தில் அவரின் மூப்புநிலை அதிகரிக்கவே பொட்டுவுடன் 'அம்மான்' என்ற விகுதியும் சேர்ந்து கொண்டது. விடுதலை புலிகள் மத்தியில் மூப்புநிலையில் இருந்தவர்களை 'அண்ணன்', 'மாஸ்டர்' அல்லது 'அம்மான்' என்று அழைப்பது ஒரு வழக்கமாக இருந்தது. பொட்டுவின் சர்வதேச வானொலி சமிக்ஞை 'பாபா ஒஸ்கார் ' (Papa Oscar) என்பதாகும். விடுதலை புலிகள் தலைநகர் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக குண்டுகளை வெடிக்கவைக்கத் தொடங்கிய பின்னரான வருடங்களில் விடுதலை புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் போன்ற இயக்கத்தின் மூத்த தலைவர்கள் சிலர் பொட்டு அம்மானை கிண்டலாக 'வெடியரசன்' என்று அழைத்தனர். உத்தர பிரதேசத்தில் முதல் பயிற்சி அணி 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக நாடுபூராவும் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத அட்டூழியமும் அதன் விளைவுகளும் தமிழர் அரசியலில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அன்று 'பொடியன்கள்' என்று அறியப்பட்ட தமிழ்ப் போராளிகளுக்கான ஆயுதப்பயிற்சியை வழங்கியதன் மூலம் இந்தியா துடிப்பான பாத்திரம் ஒன்றை வகித்தது. விடுதலை புலிகளின் முதலாவது அணியின் ஒரு உறுப்பினராக ஆயுதப் பயிற்சிக்காக வட இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்துக்கு சிவசங்கர் சென்றார். முதலாவது அணி பயிற்சி பெறுனர்களில் இயக்கத்தின் பழைய உறுப்பினர்களும் புதிதாக சேர்க்கப்பட்டவர்களும் கலந்திருந்தனர். இந்தியாவில் பயிற்சியைப் பெற்ற பிறகு குறுகிய காலம் பொட்டு பிரபாகரனின் மெய்க்காவலராக பணியாற்றினார். அந்த காலப்பகுதியில்தான் பொட்டு தனது தலைவரின் வெறிபிடித்த ஒரு சீடராக மாறினார். அடிமைத்தனமான அர்ப்பணிப்புடன தனது தலைவருக்கு பொட்டு சேவை செய்தார். பிரபாகரன் மீதான பொட்டுவின் விசுவாசம் தடுமாற்றம் இல்லாததும் கேள்விக்கு இடமின்றியதுமாகும். என்றாலும் பொட்டுவின் புலனாய்வு ஆற்றலே அவரை மேல்நிலைக்கு கொண்டுவந்தது. முன்னாள் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினுக்கு லவ்னெனிற்றி பேரியா போன்று பிரபாகரனுக்கு பொட்டு இருந்தார். சீட்டாட்டம் சீட்டாட்டத்தில் பொட்டுவின் நிபுணத்துவம் அவரது ஆற்றலுக்கும் திறமைக்குமான அடையாளமாக இருந்தது. சீட்டாட்டத்தில் அவர் மிகுந்த பிரியம் கொண்டவர். சீட்டாட்டத்துக்காக பொட்டுவை இரவில் நித்திரையில் இருந்துகூட எழுப்ப முடியும் என்று அவரின் முன்னாள் இயக்கச் சகா ஒருவர் என்னிடம் கூறினார். எந்த நேரத்திலும் சீட்டாடுவதற்கு பொட்டு தயாராயிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில், இராணுவத்தின் ரோந்து அணியொன்று நெருங்கி வந்துகொண்டிருந்த காரணத்தால் மறைவிடம் ஒன்றில் இருந்து விடுதலை புலிகள் தப்பியோட வேண்டியிருந்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரனேட்டுகள் அடங்கிய பையொன்றை தன்னுடன் எடுத்துச் செல்ல மறந்த பொட்டு சீடடுப்பக்கெட்டை எடுத்துச் செல்ல மறக்கவில்லை. அந்த நேரத்தில் அவர் புலனாய்வுத் தலைவராக இருக்கவில்லை. பொட்டு 'திறீ நோட் ஃபோர்' விளையாட்டில் வியத்தகு திறமைசாலி. ஒரு குறுகிய நேரத்திற்குள் தன்னுடன் சீட்டாடிக் கொண்டிருப்பவர்களிடம் எந்த வகையான சீட்டுக்கள் இருக்கின்றன என்பதை அவர் கண்டு பிடித்துவிடுவார். அதன் பிரகாரம் விளையாட்டில் அவர் தனது சீட்டுக்களை பயன்படுத்துவார். ஏமாற்றி வீம்பு பேசுவதிலும் எதிராளிகளை அம்பலப்படுத்துவதிலும் பொட்டு இயற்கைமீறிய திறமையைக் கொண்டிருந்தார். அவரது இந்த குணாதிசயம் புலனாய்வு தலைவராக திறமையுடன் செயற்படுவதற்கு உதவியது. 1985ஆம் ஆண்டில் பொட்டு கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பப்பட்டார். வெவ்வேறு காலப் பகுதிகளில் கிழக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பாக பஷீர் காக்கா, அருணா, குமரப்பா ஆகியோர் இருந்தபோது அவர்களின் முக்கியமான ஒரு தோழராக பொட்டு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் செயற்பட்டார். பொட்டு கிழக்கில் செயற்பட்ட காலப்பகுதி நிகழ்வுகள் நிறைந்ததாக இருந்தது. மட்டக்களப்பில்தான் பொட்டு வத்சலாவை சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்டார். வத்சலா மட்டக்களப்பு மாவட்டத்தில் கொம்மாதுறையைச் சேர்ந்தவர். அவரது பெற்றோரில் ஒருவர் மகழடித்தீவைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திச்சபை தலைவர் எஸ். சம்பந்தமூர்த்தியின் உறவினர்கள்.முன்னாள் கல்குடா பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகர், சம்பந்தமூர்த்தியின் மனைவியின் தந்தையார். மட்டக்களப்பில் செயற்பட்ட காலத்தில் பொட்டு அம்மான் தனது திறமையை நிரூபித்தார். மாங்கேணி முகாம், கறுத்தப்பாலம் சோதனை நிலை மற்றும் பொலன்னறுவை வீதியில் இராணுவ ரோந்துப் பிரிவு மீதான தாக்குதல்கள் போன்ற குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகளுக்கு பொட்டு தலைமை தாங்கினார். ஒரு தடவை காரைதீவில் இராணுவத்தினரின் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போது பொட்டு அகப்பட்டுக்கொண்டார். ஆனால், சாரம் அணிந்திருந்த அவர் படையினரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றார். யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்ற போதிலும், பொட்டு அம்மான் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் புவியியலை தனது பிறங்கையைப் போன்று அறிந்திருந்தார். படுவான்கரை என்று அறியப்பட்ட மட்டக்களப்பு வாவியின் மேற்குப் பகுதியில் நடமாடித் திரிந்தபோது அவர் மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக துவிச்சக்கர வண்டியையே பயன்படுத்தினார். பணத்தைப் பெறுவதற்காக தனவந்த நிலச்சுவாந்தார்களையும் வர்த்தகர்களையும் கடத்துவதில் பொட்டு ஈவிரக்கமற்றவராக நடந்துகொண்டார். அது விடயத்தில் அவர் பன்குடாவெளியில் அரிசி ஆலை மற்றும் நகைக்கடை உரிமையாளரான சின்னத்தம்பி (சம்பந்தமூர்த்தியின் தந்தையார்) உட்பட வத்சலாவின் உறவினர்களைக் கூட விட்டுவைக்கவில்லை. 1987 அக்டோபரில் இந்திய இராணுவத்துடன் போர் மூண்டபோது பொட்டு அம்மான் மட்டக்களப்பில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டு தமிழ்நாட்டில் இருந்து விநியோகங்கள் இடையூறின்றி வந்து சேருகின்றனவா என்பதை மேற்பார்வை செய்வதற்காக தென்னிந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பதில் யாழ்ப்பாண தளபதி பிறகு யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவந்ததும் பொட்டு இந்திய இராணுவத்துக்கு எதிரான கெரில்லா தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்தில் இம்ரான், பாண்டியன் மற்றும் மதி ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்ததை அடுத்து அவர் ஒரு குறுகிய காலத்துக்கு பதில் யாழ்ப்பாணத் தளபதியாக செயற்பட்டார். இந்திய இராணுவத்தினருடனான சண்டையொன்றில் பொட்டு வயிற்றில் ஏற்பட்ட காயத்துக்கு வன்னியில் சிகிச்சை பெற்றார். பிரபாகரனும் அப்போது வன்னிக்கு நகர்ந்திருந்தார் . அதற்கு பிறகு மேலதிக மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக பொட்டு இரகசியமாக தமிழ்நாட்டுக்கு சென்றார். இலங்கை மண்ணில் இந்திய இராணுவத்துடனான மோதல்களில் காயமடைந்த விடுதலை புலிகள் தமிழ்நாட்டில் இரகசியமாகச் சிகிச்சை பெறக்கூடியதாக இருந்தது உண்மையில் ஒரு விசித்திரமாகும். வத்சலாவும் தமிழ்நாட்டுக்கு சென்றார். அங்குள்ள இந்துக்கோவில் ஒன்றில் இருவரும் வைபவரீதியாக தாலிகட்டித் திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக அவர்கள் மட்டக்களப்பில் பதிவுத் திருமணமே செய்திருந்தனர். புலனாய்வு தலைவர் முழுமையாக குணமடைந்து பொட்டு இலங்கை திரும்பிய பிறகு விடுதலை புலிகளின் புலனாய்வுப் பிரிவை நிருவகிக்கும் பொறுப்பு 1988 பிற்பகுதியில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பிரிவு புலிகளின் பாதுகாப்பு புலனாய்வுச் சேவை (Tiger Organization Security Intelligence Service or TOSIS) என்று அழைக்கப்பட்டது. அந்த பிரிவின் தலைவராக இருந்த வசந்தன் 1987 இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு விடுதலை புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறிவிட்டார். புலனாய்வுப் பிரிவை பொறுப்பேற்ற பிறகு பொட்டு அம்மான் அதை முற்றாக மாற்றியமைத்து 21 வருடங்களாக தலைவராக இருந்தார். வருடங்கள் கடந்தோட அவர் மிகவும் அஞ்சப்படுகிற ஒருவர் என்ற 'புகழைப்' பெற்றார். இயக்கத்திற்குள்ளும் அவரின் அந்தஸ்து வளர்ந்தது. அதற்கு பிறகுதான் அவர் பொட்டு அம்மான் என்று அழைக்கப்படலானார். விடுதலை புலிகளின் தலைவரை சென்றடைய வேண்டிய விடயங்கள் பொட்டுவின் ஊடாகவே தெரியப்படுத்தப்படுகின்ற அளவுக்கு அவரது நிலை படிப்படியாக உயர்ந்தது. ஒரு வாரத்தில் பொட்டு பிரபாகரனை குறைந்த பட்சம் நான்கு அல்லது ஐந்து தடவைகள் சந்திப்பார். விடுதலை புலிகளின் மூத்த தலைவர்களினால் சந்திக்க முடியாதவராக பிரபாகரன் மாறிய ஒரு காலகட்டம் வந்தது. ஆனால், எந்த நேரத்திலும் பொட்டுவினால் பிரபாகரனைச் சந்திக்க முடியும். ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு விடுதலை புலிகளின் தலைவரை சந்திக்கக்கூடிய ஒரேயொரு இயக்கத் தலைவராகவும் பொட்டு விளங்கினார். மற்றவர்கள் எல்லோரும் தங்களின் ஆயுதங்களை கையளித்த பின்னரே பிரபாகரனைச் சந்திப்பதற்கு அரிதாக அனுமதிக்கப்பட்டனர். சகல வல்லமையும் கொண்ட பொட்டு பிரபாகரனுக்கு பாரிய அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்டதால் அந்த நிலைமை ஏற்பட்டது. 'உள்ளேயிருக்கக்கூடிய எதிரிகள்' பற்றிய அச்சம் விடுதலை புலிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து பிரபாகரன் பெருமளவுக்கு அன்னியப்பட்டவராக மாறும் நிலையை தோற்றுவித்தது. பொட்டு அம்மான் சசகல வல்லமையும் பொருந்தியவராக மாறினார். ஒரு கட்டத்தில் தலைவரின் அன்றாட நடவடிக்கைகளை 'கட்டுப்படுத்துபவராக' அவர் விளங்கினார். https://www.virakesari.lk/article/215215
  5. நான் உங்க‌ளுக்கு முத‌லே சொன்னான் அடிச்சு சொல்லுகிறேன் நாளைக்கு மும்பை வெல்லுவின‌ம் என‌ பும்ராவின் மாஜிக்கில் டெல்லி அணி தோப்பின‌ம்................நாளைக்கு மும்பையின் நாள் நாளை ந‌ம‌தே வெற்றியும் ந‌ம‌தே🙏👍 அப்ப‌டி மும்பை தோத்தா ஜ‌பிஎல் முடியும் வ‌ரை இதுக்கை நான் குப்பை கொட்ட‌ மாட்டேன்😛 இது என் ஜ‌க்காம்மா மேல் ச‌த்திய‌ம்🙏👍...............................................
  6. பியர் குடிப்பதற்கு சொல்லும் சாட்டு அது. சிறுநீர் பிரிய வேறு எத்தனையோ பானங்கள் உண்டு. சுத்தமான பச்சை தண்ணீரே போதும். சிலர் கவலையை மறக்க குடிப்பதாக சொல்வார்கள். அப்படி குடிக்கும் போது கவலை இன்னும் கூடி.. மதுவிற்கு அடிமையாகி.. சொத்து, சுகம், குடும்பம், உயிர் போன்றவற்றை இழந்து போனவர்களே அதிகம்.
  7. ரசனிகாந்த்... தனது கையால், சோறு சாப்பிட்டார்.😂
  8. அது ரூபாய் இல்லை பவுண்டுகள் பிரித்தானியா நாணயம் .....தயவுசெய்து வடிவாக ஆறுதலாக வாசியுங்கள் 🤣🤣. இப்படி கோஷன் கொடுத்தால் நானும் ஊருக்கு போவேன் குமாரசாமி தமிழ் சிறி. கவி. அருணாச்சலம. ......நிறைய பேர போவார்கள் 🤪🙏
  9. லண்டன் 🇬🇧" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t96/1/16/1f1ec_1f1e7.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> மாநகரின் மத்தியில் 150 மாணவர்கள் ஒன்று திரண்டு ஆற்றிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடனம் லண்டன் 🇬🇧 மாநகரின் மத்தியில் 1...3,410 个心情 · 421 次分享 | லண்டன் 🇬🇧 மாநகரின் மத்தியில் 150...லண்டன் 🇬🇧 மாநகரின் மத்தியில் 150 மாணவர்கள் ஒன்று திரண்டு ஆற்றிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடனம்
  10. அப்பிடி என்றால், பையன் தாய் சொல்லை மீறலாம் எங்கிறீர்கள்.🤣 இங்கின தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதாகட்டும்.😁
  11. 👍................ நீங்கள் ஜக்கம்மா என்று எழுதுவதை இங்கே முன்னரும் பார்த்திருக்கின்றேன், பையன் சார். வேறு எவரும் எழுதியதாக நினைவு இல்லை. ஆதலால் ஜக்கம்மாவின் அருள் உங்களுக்கே.................🤣. நான் சிறுவனாக இருந்த போது, எங்களூர் தியேட்டரில் 'ஜக்கம்மா' படம் வந்தது. அப்பொழுது அதில் நடித்திருந்த நடிகர் ஜெய்சங்கர் தமிழ் ஜேம்ஸ் பாண்ட். பின்னர் வீரபாண்டிய கட்டப் பொம்மன் ஜக்கம்மாவை தெய்வமாகக் கொண்டிருந்தார் என்று வாசித்திருக்கின்றேன். அவர் வழி வந்த குடுகுடுப்பைக்காரர்களும், முகம் பார்த்து பலன் சொல்பவர்களும் இன்றும் ஜக்கம்மா என்று சொல்லியே பலன் சொல்ல ஆரம்பிக்கின்றனர். வீரப்பையனும் ஜக்கம்மாவின் ஒரு புதல்வன் போல..................👍.
  12. 2ம‌ணித்தியால‌த்துக்கு முத‌லே உங்க‌ளுக்கு ம‌ற்ற‌ ப‌க்க‌த்தில் எழுதி இருந்தேன் வாசிக்க‌ வில்லையா அவ‌ர்க‌ள் தெரிவு செய்த‌ அணிய‌ பெரிய‌ப்பு வெளியிட‌ முத‌லே எழுதி விட்டேன்👍😁..........................
  13. அட பரவாயில்லையே. நல்ல தெரிவா எல்லோ கிடக்கு. அவர்களுடன் நாமளும். ஆனா அந்த இரண்டு பேரும் எல்லோ என்னோடநிற்கினம்.
  14. GMT நேரப்படி நாளை புதன் 21 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 63) புதன் 21 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI எதிர் DC 21 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் சுவி நுணாவிலான் இப்போட்டியில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று அடுத்த Playoff கட்டத்திற்கு போவதோடு 21 யாழ் களப் போட்டியாளர்களுக்கும் புள்ளிகள் பெற்றுத் தருமா அல்லது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்று Playoff கட்டத்திற்கு போகும் வாய்ப்பை தக்கவைப்பதோடு யாழ்களப் போட்டியாளர்கள் இருவருக்கு புள்ளிகளைப் பெற்றுத் தருமா?
  15. மனம் பிரழ்வு அடைந்த, வக்கிர புத்தியுள்ளவர்கள் நீதிபதி பதவியை வகித்தால் இப்படித்தான் தீர்ப்பு வாசிப்பார்கள். இந்த தீர்ப்பு குறிப்பிட்ட நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்தேயொழிய முழு இந்திய மக்களின் கருத்து அல்ல. வள்ளலார், அரவிந்தர், இராம கிருஷ்ணர், மகா யோகிகள், ரிஷிகள் வாழ்ந்த புண்ணிய பூமியில் மனிதநேயம் இல்லாத, வெறுப்பை, துவேசத்தை உமிழ்கின்ற நீதியும், நீதிபதிகளும் நவீன இந்தியா எங்கு செல்கின்றது என்பதை கட்டியம் கூறுகின்றது. உங்களுக்கு உங்கள் சோழியை பார்க்கவே முடியவில்லை என்றால் என்ன ******* அயல் நாடு இலங்கையின் ஒரு பகுதி மக்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்து, ஆயுதங்களும் கொடுத்து வன்முறை கலாச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டீர்கள்? அமைதியான இலங்கை திருநாட்டை சீர்குலைத்துவிட்டு இப்போது உங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உங்களுக்கும் எதுவித சம்மந்தமுமே இல்லாமல் தீர்ப்பு சொன்னால் எப்படி?
  16. ஏராளன், ஜேர்மனியில் எல்லோருமே பியர் பிரியர்கள்தான். பிள்ளை பெற்ற பெண்களுக்கு... தாய்ப்பால் சுரக்கவும் ஒரு வகையான பியர் குடிக்கச் சொல்லி வைத்தியரே சொல்வார். இங்கு 800 வகையான பியர் உண்டு. கட்டுப்பாடு இல்லாமல் எல்லாம் கிடைத்தும்... அதனை அளவுடன் பாவிப்பார்கள். தெருவில் விழுந்து கிடந்து உருளுவதில்லை, மற்றவர்களுடன் வீண் சண்டைக்குப் போவதில்லை, சுவரில் ஒண்டுக்கு அடிப்பதில்லை... என்று நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். 😂 நான் முன்பு பியர் குடிப்பேன். இப்போது இல்லை. மேலுள்ள சம்பவத்தில்... கடற்கரை வெய்யிலில் மூன்று மணித்தியாலம் மண்ணில் புதையுண்டு இருந்தவருக்கு பியர் கொடுத்தது புத்திசாலித்தனமான செயலாக எனக்குத் தெரியவில்லை. 🤣
  17. அத்துடன் இந்திய நீதிபதிகளும்... கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைப்பார்கள். இவர்களுக்கு எப்படி, எதற்காக அந்தப் பணம் கொடுக்கப் பட்டது என்பதை ஆளும் வர்க்கம் சொல்லவே மாட்டாது. டெல்லி நீதிபதி வீட்டில் எரிந்த நிலையில் 15 கோடி பணம்.. எப்படி வந்தது? நீதிபதி எழுப்பும் சந்தேகம்! Read more at: https://tamil.oneindia.com/news/chennai/how-15-crore-burnt-at-judges-residence-justice-yashwant-varma-faces-inquiry-explainer-690485.html
  18. இந்திய நீதிமன்றங்களும் நீதிபதிகளும் வெறும் புத்தக பூச்சிகள். இவ்வாறான இந்தியாவில் இருந்து உலகெங்கும் மாடு மேய்க்க அலைந்து திரிந்து விசா பெறும் இந்தியர்களையும் இந்த கிந்தியா திருப்பி எடுக்க வேண்டும் அல்லவா....
  19. ஆனா உங்களுக்கு நந்தன் புலவர் கூட்டணியப் பத்தித் தெரியேல போல. RRஜ அப்படியே தூக்கி வைத்துடுவினம். அதோட நானும் நீங்களும் சென்னையைத் தெரிவு செய்தோமா..... எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பாத்தால்..... பாவம் சென்னை என்டுதான் வருது.
  20. மேற்கத்தைய நாடுகள் எவையும் ஒட்டு மொத்தமாக ஈழதமிழரை திருப்பி அனுப்பவில்லை. 1951 ஆம் ஆண்டு அகதிகள் சாசனத்தின் படி பல்லாயிரகணக்காணோருக்கு அகதி அந்தஸ்தும், ஐரோப்பிய மனித உரிமை சாசன அடிப்படையில் இன்னும் பல்லாயிரம் பேருக்கும் வதிவிட உரிமை கொடுத்துள்ளன. ஆனால் இந்தியா அப்படி அல்ல - அது அகதிகள் சாசனத்தின் ஒப்பந்ததாரி இல்லை. எந்த இலங்கை அகதிக்கும் அங்கே நிரந்தர உரிமை இல்லை. உதவி கூட தமிழ்நாடு அரசுகள் மனமிரங்கி கொடுப்பதுதான். அதற்கு நாம் எப்போதும் நன்றியாக இருக்க வேண்டும். தமிழருக்குத்தான் இந்த நிலை. ஒரு இந்து, அல்லது சீக்கிய, அல்லது ஜைன வங்காளியோ, பஞ்சாபியோ, சிந்தியோ பாக்கிஸ்தானில், ஆப்கானிஸ்தானில், பங்களாதேசில் இருந்து வந்து கேட்டால் CAA குடியுரிமையே கொடுக்கும். இதுதான் ஒன்றிய இந்தியாவின் குணம். யாரிடம் கடவுளிடமா? 😂 மேன்முறையீடு செய்ய முடியாது, ஆனால் உச்சநீதிமன்றையே மீள் பரிசீலனை (மறு சீராய்வு) செய்ய சொல்லி கேட்கலாம். அதற்கும் அனுமதி கிடைப்பது குதிரைகொம்பு. கிடைத்தாலும், தீர்ப்பு மாறாது. இந்த வழக்கை போட்டதே பிழை. நீதிமன்றம் இருக்கும் சட்டத்தைதான் வியாக்கியானம் செய்யும். இந்த விடயம் இந்திய சட்டத்தில் மாறுதலை கொண்டு வருவதன் மூலம் மட்டுமே சாதிக்கபட கூடியது. தர்க்கம் நியாயமானதே. ஆனால் இந்த வெறுப்பு நிலையை இந்தியா விரும்பினால் அப்படியே விருப்பு நிலையாக மாற்றலாம்.
  21. பிரிகேடியர் பால்ராஜ் எனும் முதுபெரும் தளபதி பற்றித் தெரிய கீழே படியுங்கள். படிக்கும் போதே சிலிர்த்துப் போவீர்கள்💪🏻🐅 குடாரப்பு தரையிறக்கம் 26.03.2000 தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை நாள்..! ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர். குடாரப்பு தரையிறக்கச் சமர் ஈழப்போராட்டவரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய இராணுவத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது. சவால்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கெரிலாப் போராளிகளுக்கான பொதுவிதி. ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்குமுனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது. 26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள். வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகப்பலமான கடற்கரையை மேவிச்சென்று குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வினியோகப்பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம். தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி சகலவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக்கடற்படைப் பலத்தோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் டாங்கிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும். மிக ஆபத்தான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணி ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரப் பயணத்தில் தரையிறங்கவேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு 8.30 க்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறாப் பீரங்கிப் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் தாக்குற்படகுகள் சண்டை செய்தன. கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு வினியோகப் படகுகளும் வெற்றிகரமாகக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றி பதினொரு ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்திருந்தனர். தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் கேணல் பால்ராஜ் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத்தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் சாவடைந்த) லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமைதாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர் புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு வினியோகத்தைக்கூடச் செய்யமுடியாத நிலை. கடலில் மிகக்கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை அறிந்தபோது முதலில் திகைத்தாலும், அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான். புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான போர்த்தளபதிகள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான். வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே, கடல்வழியான தொடர்ச்சியான வினியோகம் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக வினியோகத்தை ஏற்படுத்தவேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது. இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு வினியோகத்தை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகப்பலமான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக்கொண்டனர் புலிகள். அதுவரை சரியான வினியோகமில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக்கொண்டது. அணிகள் சீராக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினார். கவசவாகனங்கள், ஆட்லறிகள், படையணிகள் என்று சகலதும் பயன்படுத்தினான். மிகமிக மூர்க்கமாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான். கவசப்படைக்குரிய பல வாகனங்கள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான ஆட்லறிச்சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பநம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவானங்கள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒருதென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத்தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராஜின் தலைமையிலான புலியணியினர். தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிகஇலகுவாக, மிகக்குறைந்த இழப்புடன் ஆனையிறவுப்பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி அனைவரும் தங்கள்தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய ஆட்லறிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத அவசரத்தில் விட்டுவிட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப்பாதை வழியாக ஓடித்தப்பினர். முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடிநாதமாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான். சிங்களப்படையே அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து இராணும் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால் புலிகள் மிகவெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி ஒருமாதத்துக்கும் மேலாக மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர். #பளை ஆட்லறித்தளத் தகர்ப்பு 26.03.2000 அன்று இரவு விடுதலைப்புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் இரகசியமாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர். அப்போது ஆனையிறவு எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப்புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன. குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்லறித்தளத்தை அழிப்பதுதான். பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்லறித்தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்தநேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொருபேர் இருந்தார்கள். குறிப்பிட்ட ஆட்லறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் தற்போது அணியை வழிநடத்திவரும் வர்மனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தான். எனவே அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த முடிந்தது. ஆட்லறித்தளத்தின் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்தநிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர்தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாஜினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்துவிட்டாள். சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல்வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத்தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. ஆட்லறித்தளத்தைப் பாதுகாத்துநின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் சண்டை தொடங்கிய மறுநிமிடமே ஓட்டடமெடுத்துவிட்டனர். ஆட்லறித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து. ஆட்லறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்லறிகள் இருந்தன. ஓடிய எதிரி பலத்தைத்திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கயழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும் போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக்கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு ஆட்லறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். ஆட்லறிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அவ் ஆட்லறித்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது. தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் இரகசியமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாக தளம் திரும்பினர். பளை ஆட்லறித்தள அழிப்பு ஆனையிறவு மீட்புப்போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்பட்டது. #தாக்குதலின் பின்னணி குடாரப்புத் தரையிறக்கம் – ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள். குடாரப்புத் தரையிறக்க மோதல் – குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர். கண்டி வீதியில் நிலை கொள்ளல் – குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு, கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பளை ஆட்லெறித் தள உள்நுழைவு – கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்லெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி, கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 ஆட்லெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர். தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு – வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர். இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் – தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தி – இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது. உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் – வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர். காமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்படல் – இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தோற்கடிக்க எட்டுற்கு மேற்பட்ட தடைவைகள் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி அவர்தம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை – இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது. “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” Rj Prasath Santhulaki
  22. பதவி இல்லாத அரசியல்வாதி தான் தனது மகன்களுக்கு பல இலட்சங்கள் பணம் (இலங்கை ரூபாவில் கோடி) கட்டி தனியார் கலவிநிலையத்தில் ஆங்கிலம் மூலம் படிக்க வைக்கும் வசதி கொண்ட அரசியல்வாதி
  23. ஆனா ஊனா சீமானின் பெய‌ரை இழுப்ப‌து உங்க‌ளுக்கு கைவ‌ந்த‌ க‌ல..............அவ‌ரும் த‌ட‌ம் புர‌ன்டால் அவ‌ரையும் மூர்க்க‌ த‌ன‌மாய் எதிர்ப்பேன்💪.....................
  24. இந்த சிவஞானம் மூத்த அரசியல்வாதியா? அப்படி தெரியவில்லையே? மக்களால், கட்சியால் தெரிவு செய்யப்பட்டவர் சிறிதரன். அவரின் பதவியை முடக்கி வைத்துக்கொண்டு, பிடுங்கியெடுத்த பதவியை வைத்துக்கொண்டு ஆசைகாட்டும் சுமந்திரனின் பதவிக்காக தலையாட்டுகிறார். இவர்கள் எல்லாம் தன்னம்பிக்கையற்றவர்கள், மற்றவர்களை புகழ்ந்து, சார்ந்து வாழ்பவர்கள். இப்படியானவர்கள் இருக்குமட்டும், அவர்கள் தலையாட்டுவதில் அடிபொறுக்கிகள் தலைவராவர்.
  25. நீங்கள் வேற இங்கு யாழ் களத்தில் வாசித்து விட்டார்கள் ..அது தான் இந்த தீர்ப்பு ... ..இலங்கை தமிழர்கள் பாகிஸ்தான் போகலாம்” தானே ... ....என்று முடிவு செய்து விட்டார்கள் பாகிஸ்தான் நம்மை எற்க்குமா??? இல்லாவிட்டால் துருக்கி போகலாம் 🤣🤣🤣
  26. குற்றவுணர்வோ மனச்சாட்சி உறுத்தலோ வெட்கமோ இல்லாதவர் நிலாந்தன் மாஸ்டர்!
  27. ஓம்... நான் சிலோனுக்கு போன முட்டம் அவவ சந்திக்கப்போனனான். நானும் அவவும் ஜேர்மனியில ஒரே ஊர் எண்டது பரம ரகசியம். 😎
  28. திருப்பியும் உங்களோட இணையப் போறம் எண்டு சொல்லாத வரைக்கும் சந்தோசம். 😂
  29. சுயவிமர்சனம் அற்ற விமர்சனம் என்பது அண்ணாந்து பார்த்து துப்புவது போன்றதாகும், அதற்காக புலிகள்/ கடும் தமிழ் தேசிய வாதிகள் விமர்சனத்துக்கு அப்பால் பட்டவர்கள் அல்ல. தமிழ்க்கவி அவர்கள் காட்டய ஆள் சேர்ப்பில் முன்னறின்று செயற்பட்டவர் மட்டுமன்றி அதனை நியாயப்படுத்தியவரும் ஆவார். எனக்கு என்னவே தமிழ்க்கவி அவர்கள் தற்போதும் வேறுஒருவரின் நிழ்ச்சி நிரலுக்கு தான் செயற்படுகின்றார் போல் உள்ளது, காலம் தான் பதில் செல்லும்.
  30. நாளைக்கு இரட்டையர் ஜோடியை சவட்டுறம்😃
  31. அந்தக்கால ATM ம் அதோட PIN ம் .....
  32. இப்படி ஒட்டு மொத்த கிரிகெட்டையும் இந்தியா புறக்கணித்தால் விளையாட்டு தப்பும்🤣. அவர்கள் தங்கள் தரக்குறைவா ஐ பி எல் லில் மாறி மாறி விளாசி இன்பம் அடையட்டும்🤣.
  33. ஒருத்தன் போனா. இன்னொருத்தன் வாறான். நமக்கு புள்ளி கிடைக்கக் கூடாது என்பதில் எவ்வளவு ஆர்வமா இருக்காங்க. ஏன் இப்பிடி.
  34. க.தில்லைவிநாயகம் அவர்களே, நினைவுகளைப் பகிர்தல் ஒருவகை. அதனைக்காணாது உணர்தல் என்பது அந்த மண்மீது, அந்த மண்ணின் உரித்தாளர்கள் கொள்ளும் பாசஉணர்வும், அந்த மண்மணத்தின் நுகர்வின் நினைவுகளின் கலப்பால் விளைவதும் ஒரு பிரித்தறிய முடியாத உணர்வு. உங்கள் ஆக்கம் மீண்டுமொருதடவை 2009 மே18க்கு முந்திய இறுதிநாட்களை எம்முள்ளே அழுத்திச் செல்கிறது. இதுபோன்ற படைப்புகள் அல்ல உண்மைகள் தொடர்ந்து எழுதப்பட வேண்டும்.உறவே தொடரட்டும் உங்கள் பணி. நன்றியும் பாராட்டும் உரித்தாகுக. இந்த ஆக்கத்தை உள்சென்று உணரும்போது உள்ளம் கலங்கிக் கவிழ்கிறது.
  35. மீட்டப்பட வேண்டியது எம்மினத்தின் வலிகள் சொல்லும் வரலாற்றின் பக்கங்கள். ஊட்டப்பட வேண்டியதுஉயிர்ப்புடன் இனம் எழவேண்டும் என்ற உண்மைகள் வணக்கம் மந்தாகினி (மாதினி ) (ஆங்கில எழுத்து படி ) Maathine வரவு நல் வரவாகுக ..தொடர்ந்து இணைந்து இருந்து ஆக்கங்களைத் தாருங்கள்.
  36. முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த... போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் கண்ணீர் கலந்த, நினைவு அஞ்சலிகள்
  37. முள்ளிவாய்க்காலில் தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய தலைவர், போராளிகளுக்கும், உயிர்நீத்த பொதுமக்களுக்கும் வீர வணக்கங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்🙏
  38. மண் நம்மைவிட புத்திசாலி ........ ! 😁
  39. இந்திய இராணுவம் 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை நாடுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினூடாக இந்திய அமைதிப்படைப் படை எனும் பெயரில் பெருமளவு இந்திய இராணுவத்தினர் இலங்கையின் வடக்குக் கிழக்கிற்குள் வந்திறங்கியபோது அதுவரை இருந்த போர்ச்சூழலில் சற்றுத் தொய்வு ஏற்பட்டது. ஆனால் நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்த சமாதான நடவடிக்கைகள் ஐப்பசி மாதமளவில் முற்றாகத் தோல்வியடையவே இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான முழுமையான போர் ஆரம்பமானது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக இந்திய இராணுவம் ஒப்பரேஷன் பவான் எனும் இராணுவ நடவடிக்கையினை ஆரம்பித்தது. தளபதிகள் பசீலன் மற்றும் பால்ராஜ் தலைமையிலான புலிகளின் அணியொன்று இந்திய இராணுவத்துடனான சண்டைகளுக்காக புலிகளால் யாழ்க்குடநாட்டிற்கு அனுப்பப்பட்டது. இவ்வாறான சமர்களில் ஒன்றான கோப்பாய்ச் சமரில், தமது நிலைகளை நோக்கி முன்னேறிவந்த இந்திய இராணுவத்தின் தாங்கியொன்றின்மீது தான் வைத்திருந்த ஆர் பி ஜி உந்துகணைச் செலுத்தியினால் தாக்கி அழித்தார் பால்ராஜ். பால்ராஜின் துணிகரமான இச்செயல் போராளிகளிடையே மிகுந்த மகிழ்வையும், நம்பிக்கையினையும் ஏற்படுத்தியிருந்தது. புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்குமிடையிலான போர் வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் பரவலாயிற்று. தலைவர் பிரபாகரனும், உதவித்தலைவர் மாத்தையாவும் வன்னிக்கு தமது நிலைகளை மாற்றிக்கொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மிக அடர்ந்த காட்டுப்பகுதியான நித்திகைக்குளத்தில் தலைவர் பிரபாகரன் தனது முகாமை அமைத்துக்கொண்டார். தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கும் லெப்டிணன்ட் கேணல் நவமே பொறுப்பாகவிருந்தார். இக்காலத்தில் தளபதி நவத்தின் உதவித்தளபதியாக பால்ராஜ் செயற்படத் தொடங்கினார். இக்காலத்திலேயே தலைவர் பிரபாகரனுடன் பால்ராஜ் அவர்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்கள் உருவாகத் தொடங்கின. தளபதி பால்ராஜின் தன்னடக்கமும், அசாத்தியமான போரிடும் ஆற்றலும் தலைவர் பிரபாகரனை மிகவும் கவர்ந்திருந்தன. 1988 ஆம் ஆண்டு நித்திகைக்குளத்தில் தங்கியிருந்த தலைவரைக் கைப்பற்ற இந்திய இராணுவம் முன்னெடுத்த பாரிய இராணுவ நடவடிக்கையான ஒப்பரேஷன் செக்மேட்டிற்கெதிராக, தளபதி பால்ராஜ் அவர்கள் நடத்திய நேரடியான எதிர்ச்சமர் இந்திய இராணுவத்தின் நடவடிக்கையினை முற்றாகத் தோல்வியடையச் செய்திருந்தது. இச்சமரின்போது இந்திய இராணுவத்தின் கூர்க்கா ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த பல வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய இராணுவத்தினருக்கெதிரான சண்டைகளில் சுமார் மூன்று தடவைகள் பால்ராஜ் அவர்கள் காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறியதையடுத்து தலைவர் பிரபாகரன் தனது கட்டளையகத்தை மீளவும் யாழ்க்குடா நட்டிற்கே மாற்றிக்கொண்டார். அக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பினுள் சில கொள்கைகள் எடுக்கப்பட்டன. அதாவது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து இயக்கத்தில் இணைந்துகொள்ளும் போராளிகள் அப்பிரதேசத்தில் உருவாகும் தலைமைப் பொறுப்புகளுக்கு தம்மை ஈடுபடுத்தலாம் என்பதே அது. தொடரும்............
  40. ரஞ்சித் அவர்களே காலத்தேவைகருதியதும், நாம் அறியாத பகுதிகளையும், உரையாடல்களையும் உள்ளடக்கியதாக உள்ளன. இது எமது இளைய தலைமுறை படித்தறிய வேண்டிய விடயமுமாகும். உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுகள். தமிழ்த்தலைவர்களில் பெரும்பகுதியானோர் இனத்துக்கான பேரம்பேசல்களில் ஈடுபடுவதில்லைத்தானே. அவர்கள் தமக்கான பெட்டிகளுக்கான பேரம்பேசல்களில் இருப்பதால் இனமாவது நிலமாவது....... தேவையேற்பட்டால் அவர்கள் பெயரைக்கூட மாற்றிக்கொண்டு வாழ்ந்துவிடுவர். அப்படியான சுயநலமிகளிட நீங்கள் எதிர்பார்க்கலாமா?
  41. இந்திய மத்திய அரசு ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகங்களில் இதுவும் ஒன்று. அதற்கு அவர்கள் காரணமாக முன்வைத்த 'இலங்கை எங்களின் நட்பு நாடு...............' என்னும் காரணம் மிகவும் பொய்யான ஒன்று. 1993ம் ஆண்டில் சில குடும்பங்கள் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியிருந்தன. அவர்களை வவுனியாவில் ஒரு மண்டபத்தில் கொண்டு வந்து விட்டிருந்தார்கள். சில பாத்திரங்கள், ஆளுக்கொரு போர்வை, அவர்களின் கைகளில் ஆயிரம் ரூபாவோ என்னவோ. இது மட்டுமே அவர்களிடம் இருந்தது. அடுத்த அடுத்த நாட்களில் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். எந்த அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கு உதவவில்லை. அன்றைய வவுனியா இன்று போல இல்லை. அன்று வவுனியா நகரிலிருந்து மகாறம்பைக்குளம் தாண்டிய பின் முற்று முழுதாக காடாக இருந்தது. அவர்களில் சிலர் மகாறம்பைக்குளத்தில் இருந்து சில மைல்கள் உள்ளே இருக்கும் சாந்தசோலையில் குடிசை போட்டுத் தங்கினார்கள். குட்டிக் குட்டி குடிசைகள். மொத்தமுமே எட்டு அடிகள் x எட்டு அடிகள் அளவான ஒரு குடிசை. இது தான் ஒரு குடும்பத்தின் வாழ்விடம். வவுனியா நகர் வந்து போக சைக்கிள் வசதி கூட அவர்களிடம் இருக்கவில்லை. தொழில் இல்லை. எதுவுமே இல்லை. எவ்வளவோ முயற்சித்தார்கள் அந்த மனிதர்கள். பின்னர் மீண்டும் மன்னார் ஊடாக கடல் கடந்து மண்டபம் போய்ச் சேர்ந்தார்கள். தமிழ்நாட்டில் அரசு வழங்கும் சிறு குடியிருப்புகள், சில இலவசங்கள் மற்றும் அங்கங்கே கிடைக்கும் சில வேலைகள், உதாரணம்: நாமக்கல் பகுதிகளில் கோழிப்பண்ணைகளில் கிடைக்கும் வேலைகள், என்று எம் மக்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது. பெரும்பாலானவர்கள் இலங்கை திரும்பும் எண்ணத்தில் இல்லை. அங்கேயே பிறந்து வளர்ந்த இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகளுக்கு இலங்கையுடன் எந்த விதமான உணர்வுப் பிணைப்பும் இல்லை. இவர்கள் அந்தச் சூழலில், அதே குடியிருப்புகளில் அமுங்கிப் போகாமால், அந்த நாட்டில், அந்த சமூகத்தில் எப்படி தங்களை நிலைநிறுத்திக் கொள்ளப் போகின்றார்கள் என்பது அவர்கள் முன் இருக்கும் சிக்கல்.
  42. (குறுங்கதை) குற்றமே தண்டனை --------------------------------- நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது சேகர் எங்கள் வீட்டிற்கு வந்தான். ஒரு நாள் ஐயா சேகரை கூட்டி வந்தார். சேகருக்கும் எனக்கும் ஒரே வயது. மலையகத்தைச் சேர்ந்தவன். யாழில் ஒரு வீட்டில் வேலைக்காக அனுப்பப்பட்டிருக்கின்றான். அந்த வீட்டுக்காரர்களின் கொடுமை தாங்க முடியாமல், தப்பி ஓடிக்கொண்டிருந்த சேகரை ஐயா யாழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் வைத்துக் கண்டதாகச் சொன்னார். நாங்கள் அப்போது ஏழு பிள்ளைகள். எட்டாவது தம்பி இன்னும் பிறக்கவில்லை. சேகர் தற்காலிகமாக எட்டாவது பிள்ளை ஆகினான். சேகரை சேகரின் ஊர், தாய் தந்தையர் விவரம் அறிந்த பின், அவனின் வீட்டாரை எச்சரித்து, அங்கு கொண்டு போய் விடுவதாக ஐயா அம்மாவிற்கு ஒரு தகவலாக மட்டுமே ஒரு இரவில் சொல்லிக் கொண்டிருந்தார். அம்மா மிகுந்த இரக்கமுள்ளவர். ஆனாலும் ஏற்கனவே ஏழு குஞ்சுகளுக்கு தினமும் இரை தேடும் ஒரு தாய்ப்பபறவையின் நிலையிலேயே அம்மா இருந்தார். அம்மாவின் தவிப்புகள் எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஐயாவிற்கு எட்டாவது நிரந்தரப் பிள்ளை ஒன்றிற்கான திட்டம் இருந்ததும் அம்மாவிற்கு அப்போது தெரிந்தே இருக்காது. சேகரை பள்ளிக்கூடம் அனுப்பவில்லை. இது அநியாயம், அக்கிரமம் என்று உடனேயே முடிவெடுத்துவிடாதீர்கள். என்னையே அப்பொழுது தான் பள்ளிக்கூடம் அனுப்ப ஆரம்பித்திருந்தனர், அதுவும் அக்கம்பக்கம் இருந்தவர்களுக்குப் பயந்து. இரண்டாம் வகுப்பு எனக்கு அரிவரியே, முதலாம் வகுப்பின் பிற்பகுதியில் தான் நானே பாடசாலையை ஆரம்பித்திருந்தேன். நான் பள்ளிக்கூடம் விட்டு வந்தால், சேகரும் நானும் எப்போதும் ஒன்றாகவே விளையாடுவோம். சேகர் உடல் மிகவும் உறுதியானவன். வேகமானவனும் கூட. ஒருநாள் ஒரு தென்னந்தோப்பிற்கு எங்களிவரையும் கூட்டிச்சென்றனர். நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள். தென்னை மரங்களில் பாம்பு கீறும் வேலையை எங்களிருவருக்கும் கொடுத்தனர். கறுப்பு மையால் வளைச்சு வளைச்சு தென்னை மரத்தில் பாம்பு கீறவேண்டும். பாம்பின் தலைப்பக்கம் கொஞ்சம் பெரிதாக இருக்க வேண்டும், வால் பக்கம் மெல்லிதாக இருக்கவேண்டும். தேரையின் கண்ணுக்கு அது பாம்பாகத் தெரிய வேண்டும், அது தான் நிபந்தனை. தேரை தென்னையில் ஏறி, குரும்பைகளை மேய்ந்தால், தேங்காய்கள் ஒல்லித்தேங்காய்கள் ஆகிவிடும் என்பது ஐயாவினதும் அவர்களினதும் நம்பிக்கை. நான் இன்றுவரை இந்த பாம்பு - தேரை - ஒல்லித்தேங்காய் விசயத்தை எங்கும் தேடி உறுதிபபடுத்தவில்லை. பாம்பை விட வேறு ஏதாவது என்னைக் கீறச் சொல்லியிருந்தால், அது அதுவாக வந்தே இருக்காது. சித்திரம் அவ்வளவு மட்டுமட்டு. தேரையைத் தூக்கும் ஒரு பருந்தோ அல்லது ஒரு கழுகோ கீறி இருந்தால், அங்கிருந்த தேரைகள் நிச்சயமாக என் சித்திரத்தின் மேலால் தென்னைகளில் ஏறி ஒரு உயரத்தில் வாழ்ந்திருக்கும். ஒவ்வொரு பாம்புடனும் A, B, C, D இப்படி ஒரு எழுத்தையும் தென்னையின் மற்ற பக்கத்தில் போடலாமே என்று எனக்கு ஒரு யோசனை திடீரெனத் தோன்றியது. அப்பொழுது தான் நான் இரண்டாம் வகுப்பில் ஆங்கிலப்பாடம் படிக்க ஆரம்பித்திருந்தேன். நான் அதை சேகருக்கும் சொன்னேன். அவனும் அதை ஏற்றுக்கொண்டான். ஆனால் அவனுக்கு ஆங்கில எழுத்துகள் தெரியாது, தமிழ் எழுத்துகளும் தெரியாது. பாம்புகளைக் கீறி முடித்த பின், இருவருமாகச் சேர்ந்து A, B, C, D போடுவதாக முடிவெடுத்தோம். பாம்புகளை கீறிக்கொண்டிருக்கும் போது, சேகர் அடிக்கடி என்னிடம் வந்தான். இடையிடையே சின்னச் சின்ன ஓய்வு எடுப்பது போன்று. ஒவ்வொரு தடவையும் A என்றால் எப்படி இருக்கும், B என்றால் எப்படி இருக்கும் என்று கேட்டான். எழுதிக்காட்டினேன். பாவமாக இருந்தது, சேகரையும் எப்படியும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும், அம்மாவிடம் மட்டுமே பேசலாம், அம்மாவையே கேட்போம் என்று நினைத்தபடியே என்னுடைய தென்னை மரங்களில் பாம்புகளைக் கீறி முடித்தேன். சேகர் எப்பவோ கீறி முடித்திருக்கவேண்டும். அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பக்கத்தை நோக்கி நடந்தேன். அவனுடைய தென்னை மரங்களையும், பாம்புகளையும் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டேன். ஒவ்வொரு பாம்பின் வாலுக்கு கீழும் ஒரு ஆங்கில எழுத்து எழுதப்பட்டிருந்தது. ஓடி ஓடிப் பார்த்தேன். 26 எழுத்துகளும் 26 பாம்புகளின் வால்களில் எழுதப்பட்டிருந்தது. அப்படியே முட்டி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு அங்கேயே நின்றேன். எனக்கு தெரிந்த முழு ஆங்கிலத்தையும் அவனுக்கு சொல்லிக் கொடுத்திருந்தேன், ஆனால் இவன் என்னை ஏமாற்றி விட்டானே என்று. கோபமும் அழுகையும் கரையை உடைக்கக் காத்திருந்தன. வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் சேகர் என்னிடம் எதுவும் கதைக்கவில்லை, நானும் தான். வீட்டிற்கு வந்த பின்னர், இருவரும் குளிப்பதற்காக கிணற்றடிக்குப் போனோம். பெரிய வட்டக் கிணறு. எப்போதும் ஆறு அடிகளுக்கு தண்ணீர் நிற்கும். மாறி மாறித் தண்ணீர் இறைத்துக் குளிப்பது எங்கள் வழக்கம். சேகர் முன்னால் நின்று தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். ஒரு கணம் தயங்கி விட்டு, அப்படியே சேகரைப் பிடித்துத் தள்ளி விட்டிட்டேன். 'அய்யோ' என்ற அவனின் குரல் முடிவதற்குள் பெரிய சத்தத்துடன் சேகர் தண்ணீருக்குள் போய்விட்டான். அம்மாவும், வேறு ஆட்களும் ஓடிவந்தனர். பக்கத்து வீட்டு அண்ணன் ஒருவர் மிக இலகுவாக கிணற்றுக்குள் காலை கீழே விட்டுப் பாய்ந்து, சேகரை தண்ணீருக்குள் இருந்து தூக்கி எடுத்தார். சேகர் தானே தவறி கிணற்றுக்குள் விழுந்ததாகவே சொன்னான். எனக்குப் பக்கத்திலேயே ஒட்டிக்கொண்டே இருந்தான். இரவாகியது. ஐயாவிற்கும் அம்மாவிற்கும் ஒரே வாய்த்தர்க்கம். அம்மா ஒரே விசயத்தையே ஐயாவிடம் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார், சேகருக்கு எதுவும் ஆகியிருந்தால் நாங்கள் இந்த உலகத்திற்கு என்ன பதில் சொல்வது என்று. நானும் சேகரும் அப்படியே நித்திரை ஆகிவிட்டோம். காலை எழும்பி அவசரம் அவசரமாக நான் பள்ளிக்கூடத்திற்கு போவதற்கு ஆயத்தமானேன். சேகரும் எழும்பி விட்டிருந்தான். பள்ளிக்கு கிளம்பும் போது, வாசலில் நின்று திரும்பிப் பார்த்தேன், சேகர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். அன்று வகுப்பில் இதே நினைவு மட்டுமே. சேகர் எப்படியும் வீட்டில் என்னை மாட்டி விட்டுவிடுவான் என்று மனம் சொல்லிக்கொண்டேயிருந்தது. பள்ளிக்கூடம் முடிந்து பயத்துடன் வீட்டிற்குள் மெதுவாக நுழைந்தேன். சேகரைக் காணவில்லை. அவனை எங்கும் காணவில்லை. மெதுவாக அம்மாவிடம் போய் சேகர் எங்கே என்று கேட்டேன். சேகரைக் கூட்டிக்கொண்டு ஐயா மஸ்கெலியாவிற்கு போயிருப்பதாக அம்மா சொன்னார். மஸ்கெலியாவில் சேகரின் தாய் தந்தை இருப்பதாகவும் அம்மா சொன்னார். சேகர் அழுதுகொண்டே போனதாகவும் அம்மா சொன்னார், சொல்லும் போதே அம்மாவின் குரலிலும் ஒரு அழுகை தெரிந்தது. நான் அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தேன். தொண்டை அடைத்த பின், கண்ணீர் ஓட இருந்தேன். மஸ்கெலியாவிலிருந்து ஐயா மட்டும் திரும்பி வந்தார். அதன் பின் சேகர் பற்றி எங்கள் வீட்டில் எவரும் கதைக்கவில்லை. நானும் ஐயாவையோ அம்மாவையோ எதுவும் கேட்டதும் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.