Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88788
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    8971
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7136
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    3034
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/25/25 in all areas

  1. உலக அரசியல் பூவியல் உளவியல் விஞ்ஞான அறிஞர்கள் யாழில் பந்தி பந்தியாக எழுதும் கருத்துக்களை கடந்த 20 வருசமாக வாசித்து வந்தும் உங்களால் எப்படித்தான் இப்படி எழுத முடிகிறதோ தெரியவில்லை. செப்டம்பர் 11/2001 தாக்குதலுக்கு முன்பு ராம்போக்களாக கோலிவூட் சினிமா தொடங்கி அமெரிக்க அரசியல் தலைவர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரேவேற்ற உலக முஸ்லிம்கள். எப்படி அதி தீவிர பயங்கரவாதிகள் ஆனார்கள்? 2014 இல் சிரியாவின் 6௦ வீத எண்ணையையும் ஈராக்கின் 4௦ வீத எண்ணையையும் விற்று ஒரு நாளுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக பணம் ஈட்டி உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பாக இருந்த ஐஸ்ஐஸ் இன்று எங்கே? அவர்கள் பணம் தலைவர்கள் எல்லோரும் எங்கே? அவர்கள் கொன்று குவித்தது மூன்று லடசத்திற்குக்கும் மேலான இசுலாமியர்களை. இன்று சிரியாவை கைப்பற்றிய தீவிரவாதிகள் திடீரெனெ இவ்வளவு ஆயுத பலத்துடன் எங்கிருந்து வந்தார்கள்? அமரிக்காவின் தேடல் பட்டியலில் முதலாம் இரண்டாம் இடத்தில இருந்தவர்களுக்கு இன்று அமரிக்க ஜனாதிபதி வாழ்த்து தெரிவிக்கிறார். மேற்குலகின் பிரச்சார மூளைசலவைக்கு உள்ளாகி உலகில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கிணற்று தவளைகள் போல் இருந்து கொண்டு பந்தி பந்தியாக யாழில் எழுதிக்கொண்டிருக்கும் உலக அரசியலை வாசித்தும் உங்களால் எப்படி இப்படி எழுத கேள்வி கேட்க முடிகிறது? வெறும் பத்து நாட்கள் முன்பு தலையில் முடடாக்கு அணியாது ஈரானின் தலைநகரில் திரிந்த்த ஆயிரக்கணக்கான பெண்களை பிடித்து எவ்வளவு சித்தரவதை செய்து கொல்கிறார்கள் என்பதை தயவு செய்து கீழ் இருக்கும் வீடியோவில் ஒருமுறை பார்த்தாவது உங்கள் நிலைபாடடை கொஞ்சம் மாற்றுங்கள். ஈரானில் யாழ்கள அறிஞர்கள் போல படித்து அறிவு பெறுவதற்கு பெண்களுக்கு 1979 இல் இருந்து தடை விதித்து வந்துள்ளார்கள் பெண்கள் புத்தகத்தை தொடடால் கையை வெட்டி எறிவார்கள் யூனிவர்சிட்டி என்பதே ஈரானில் இல்லை....... தலையை மூடாமல் பெண்கள் வெளியே வந்தால் வீதியிலே தலைவெட்டு அண்ணளவாக ஈழத்தில் தமிழகத்தில் இன்று இருக்கும் நிலைதான் சேலை இன்றி பெண்கள் வெளியில் வந்தால் வெட்ட படுவார்கள் பொட்டு வைக்காது வெளியில் வந்தால் கொல்லபடுவார்கள் எனும் அச்சத்தில்தான் இன்று ஈழத்திலும் இந்தியாவிலும் பெண்கள் சேலை கட்டி வருகிறார்கள் பொட்டு வைத்துக்கொண்டு வெளியில் வருகிறார்கள்
  2. அமெரிக்க மூத்திரம். இடிபாடுகளுக்குள் இருந்து சிலிர்த்துக் கொண்டு எழுந்து வரும் அக் குழந்தைக்கு கைளும் இல்லை; கால்களும் இல்லை நிலைத்த அதன் விழிகளுக்குள் உறையும் பொருள் அறிபவர் யாரும் இல்லை. அக் குழந்தைக்கு முன் நீங்கள்விரித்து வைக்கும் உலகம் இதுதான் : வற்றிய முலையுடன் சிதறிய பேரன்பு, மண்ணுடன் கலந்த கோதுமை மாவை பிரித்தெடுக்கச் சென்று பிணமான அரவணப்பு, தகர்ந்து சிதறிய கட்டிக்குவியலுட் சிக்கிய உடன்பிறந்த பொம்மைகள், சுற்றிச் சுற்றி திசை அழிந்த சுடுமணற்காற்று அன்றில் குளிர் உறையும் கூடாரம் அலையும் சிறு நிலம். அக்குழந்தைக்கு கந்தகக்காற்று வாக்களிக்கப்பட்டது. அதன் நிலம் பறிக்கப்பட்டது. பசியையும் தாகத்தையும் புறக்கணித்து கொடும் அதிர்வுகளும் கொலைவெறிப் பேச்சுக்களும் இல்லாத ஒரு பிரபஞ்சத்தைத் தேடி அது நடக்கிறது. நெடும் பாலைவனம் அதற்கு வழிவிடுகிறது. பெரும் பருந்தின் நிழலில் ஒட்டகங்களை வளர்க்கும் மன்னர்களின் கூடாரங்களுக்குள் தேநீர்க் கலசம் கொதிக்கிறது. பேரீச்சம் பழக் கூடை கனக்கிறது. இரந்துண்ணாக் குழந்தை. வழிநெடுகிலும் ஒட்டகங்களை மேய்க்கும் கறுத்துலர்ந்த மானுடர், முக்காடு இட்டு முகம் மூடிய பெண்கள். சாவீடுகளின் ஒப்பாரி. கொலைத் தொழிலை வரிந்து கொண்ட நெத்தன் யாகு கொக்கரிக்கிறான். பாரசீக நிலத்தின் கலாசாரச் காவலர்கள் யூரானியத்தைக் கொண்டு மலை முகடுகளுக்கிடையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். வண்ணக் கம்பளங்கள் மூடிய நகரத்தில் மரணவீடுகளும் சிதறுகின்றன. கணைகளின் மொழியொன்றே பழம்பெரும் தேசத்தில எஞ்சுகிறது. கணிதமும் கவிதையும் பிரபஞ்சமும் அறிந்தவனின் புதை மேட்டில் தடக்கிய குழந்தை சொல்கிறது: தந்தையே உனது கல்லறையின் மீது ஒவ்வொரு ஆண்டும் மரங்கள் இரு முறை மலர்களைச் சொரியும் என்றாய் உன் மீது பூச் சொரிவதற்கு எப் பிணம் தின்னியும் தருவொன்றையும் உயிருடன் விடமாட்டான். உன் மீது ஒலிவம் பழங்களைச் சொரிவதற்கு என்னிடமும் ஒரு மரம் கூட இல்லை. ஆனால், ஒரு நாள் உன் கல்லறை மீது பிணந் தின்னிகளின் மனித முகமூடி கழன்று விழும். பெண்களின் முக்காடுகளும் உருமறைப்புக்களும் உதிரும். சிதறிய நகரங்களின் மேல் உன் பிள்ளைகள் வண்ண வண்ணக் கம்பளங்களால் கூடாரம் அமைப்பர் எனக்குக் கைகளும் கால்களும் முளைக்கும் பசியும் தாகமும் எடுக்கும். நேத்தன் யாகுவின் கல்லறை மீது ஒவ்வொரு வருடமும் இரு முறை மானுடம் காறி உமிழும். சொல்லிய கணத்தில் பாரசீக முகட்டில் குண்டுகள் பெரும் துளைகளை இட்டன. அத்துளைகளில் அமெரிக்க மூத்திரம் நிரம்பியது. தேவ அபிரா 23-06-2025
  3. மாறாத ஒன்று புலத்தமிழர்கள் சிலரின் "போர்க்குணம்"😎 தான்! சிங்கார சுவிசில் இருந்து ஐரோப்பா முழுவதும் வகேஷன் போய் வரும் முகநூல் ஊடகவியலாளர் "இணுவையூர்"😂 மயூரன் விடு பட்ட செருப்புகளை பெருமையோடு பகிர்ந்திருக்கிறார். இது போன்ற விசிலடிச்சான் குஞ்சுகளின் முகநூல் போர்க்குணத்தால் மட்டும் தான் "விடுதலைப் போராட்டம் இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது" விளங்குதோ??😎
  4. தரமான குறிப்புகள் சிறுபான்மையாக இருக்கும்வரை லக்கும் தீனுக்கும் வலியத்தீன் என்பது அதுவே பெரும்பான்மையானதும் காபிர்களை மூட்டுமூட்டாக தறியுங்கள் உங்கள் கொடூரத்தை அவர்கள் காணட்டும் என்பது. முஸ்லீம்நாடுகளில் வாழமுடியாமல் ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய பசுபிக் நாடுகளுக்கு போய் அகதி அந்தஸ்த்து பெற்றுவிட்டு தங்களுடைய விளைநிலங்களை ஒன்றுக்கு நான்காக பெருக்கி அதை வைத்து குழந்தை அறுவடையையும் பெருக்கி அந்தந்த நாடுகளை இவர்கள் தப்பித்து வந்த இஸ்லாமிய நாடுபோல் மாற்றியே தீருவோம் என்று வீதியில் இரங்கி சூளுரைப்பது. இந்த மதவாதம் , அடிப்படைவாதம் என்று ஒரு மும்மீனை பொறுத்தவரை ஒன்றே இல்லை. எல்லா முஃமீன்களும் மத அடிப்படைவாதிகள் தான் இல்லாவிட்டால் அவர்கள் முஃமின்களாக இருக்க முடியாது. இஸ்லாத்தை முற்றிலுமாக திறந்தால் தான் அப்படி இருக்க முடியும். இன்றும் U .K யில் தெருவில் செல்லும் ஒரு சாதாரண முஸ்லிமிடம் சரியாச்சட்டம் கொண்டுவந்து முஸ்லீம் நாடாக அறிவிப்போமா என்று கேட்டுப்பாருங்கோ. உடனே சிலிர்த்துக்கொண்டு முதல் ஆளாக கையைதூக்குவினம். மத அடிப்படை என்பதே இஸ்லாத்தின் அத்திவாரம். Arebian Supremacy க்கு பிறந்த மதம் அது அப்படித்தான் இருக்கும்
  5. கலந்து கொள்ளாத சுமந்திரனை நானும் கண்டிக்கின்றேன் 😂 கலந்து கொண்டதிற்காக சாணக்கியன் சிவஞானத்திற்கு எனது கண்டணங்கள்
  6. இல்லை இது உண்மை, அரசாங்கம் AUD 1.2 Bn கடன் கொடுத்து தொடங்க சொல்லிவிட்டார்கள், earthworks போய்கிட்டிருக்கு, https://www.abc.net.au/news/2024-12-06/rare-earths-refinery-government-funding/104695754 இதயம் பலவீனமல்ல மூளைதான்😉
  7. இன்று இணையத்தில் படிக்க முடிந்த மற்றுமொரு கவிதையொன்று..🖐👇 Posted inPoetry Series தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள் Posted byBookday23/06/2025No CommentsPosted inPoetry Series தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள் வேடிக்கை மனிதர்கள் ****************************** ஆயுதங்கள் உங்கள் கைகளில் விரல்களாக முளைக்கத் தொடங்கிவிட்டன பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது உங்கள் தொழில்நுட்ப அதிநவீனத் தோட்டத்தில் நாங்கள் வெறும் செயற்கைப் புற்கள் உங்கள் சொற்களின் செய்நேர்த்தியில் எங்கள் சித்தாந்தங்கள் எல்லாம் அரதப் பழசாகிவிட்டன எங்கள் உடலுறுப்புகள் இனி உபயோகிக்கப் பட முடியாத உலோக பாகங்களாய் உதிர்ந்து கிடக்கின்றன எவ்வளவு நவீனமயப்படுத்தப்பட்டாலும் எங்கள் வயிறுகள் பசியின் பழைய மொழியை மறந்தபாடில்லை எங்கள் சஹாராத் தாகம் தணிக்க வற்ற வற்றக் குளித்த உங்கள் நீச்சல் குளங்களில் ஒரு சொட்டுத் தண்ணீரும் மிச்சமில்லை நாங்கள் தாகம் என்கிறோம் குடிக்கக் குருதி கொடுக்கிறீர்கள் நாங்கள் பசி என்கிறோம் ஒடுக்கு விழுந்த எங்கள் உணவுத் தட்டுகளில் பதுங்குகுழி தகர்க்கிற வெடிப் பொருள்களையும் இலக்கு மாறாத ஏவுகணைகளையும் பரிமாறுகிறீர்கள் போர் என்பது பங்குச் சந்தைகளில் விற்கப்படுகிற இன்னொரு சூதாட்டப் பத்திரம்! பெரு முதலாளிகளின் சதுரங்கத்தில் நிராதரவு அறிவுஜீவிகள் ராணியைவும் ராஜாவையும் காப்பாற்ற வெட்டுப்படப்போகிற வெறும் சிப்பாய்கள்! ஜனநாயகம் சர்வாதிகாரம் கேபிடலிசம் சோசலிசம் கம்யூனிசம் எல்லாச் சொற்களுமே உங்கள் அகராதிகளில் அர்த்தங்கள் மாற்றப்படுகின்றன எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்யமுடியாது எங்கள் அரிச்சுவடிகள் உங்கள் ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன எல்லைத் தகராறு வயல்களில் பூக்களை வளர்க்கப் போகிறீர்கள் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் உங்களின் பழைய சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் நாங்கள்! பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது நவீன கட்டுமானமான செயற்கை நுண்ணறிவு மாளிகையை எங்களுக்கான சிறைச்சாலைகளாக மாற்றி வருகிறீர்கள் கேலிக்குரிய முரண் என்னவெனில் எங்களுக்காக நீங்கள் ஏற்பாடு செய்யும் ‘நவீன அடிமை’ பெயர் சூட்டுவிழாவில் அலைமோதி அலைமோதி இடம்பிடிக்கப் போகும் ஆடியன்ஸ்களும் நாங்கள்! எழுதியவர் : – நா.வே.அருள் https://bookday.in/series-3-some-poems-from-canada-written-by-na-ve-arul/
  8. அடிப்படைவாத முஸ்லிம்கள் போல இந்து முல்லாக்கள், தமிழ் தலிபான்களை நாமும் உருவாக்கி விடகூடாது என்ற கருத்துக்கள் அந்த விவாதத்தை வென்றதை பார்க்க உங்கள் பழிவாங்கும் உணர்சி விடவில்லை போலும். எமது சமுதாயத்தை நாம் பார்த்து கொள்கிறோம். மதத்தின் பெயரால் சிறுமிகளை தாயாக்குவதும், அதை நபி (சல்) வாழ்வில் இருந்து ஆதாரம் காட்டி நியாயப்படுத்துவததும். மேற்கு நாட்டில் அநாதை வெள்ளை சிறுமிகளை, அண்ணன், தம்பி, மாமன், தகப்பன், மனைவியின் தகப்பன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண்களே நாசம் பண்ணுவதும் என உங்கள் உம்மாவிம் உள்ளே சீழ் கட்டி நாற்றம் எடுக்கிறது. இந்த நாத்தம் பிடித்த நிலைக்கு பிரதான காரணமாக உங்கள் காபீர்கள் முஸ்லிம்களை விட கீழானவர்கள் என்ற குரானிய போதனைகளே காரணம். இதை என்ன செய்வது என யோசியுங்கள். பிறகு மற்றவனுக்கு யோசனை கூறலாம்.
  9. அவர் செயற்கை மழைக்கு யூரோப்பில் உலாவும் மேகங்களைத்தான் தள்ளிக்கொண்டு போவார் ...... நீங்கள் ஒரு ஐடியாவும் குடுக்காமல் "கம் " என்று இருக்கவும் . ......... மனுசன் நோபல் பரிசுக்கு வேற அலையுது . .......! ☹️
  10. நேற்று நடந்தது போல இன்னமும் அப்படியே மனதில் பதிந்திருக்கின்றது. 1988 சித்திரையாக இருக்கலாம். தனது அனுமதியின்றி எனது மைத்துனனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் அருகே இருந்து பார்த்துக்கொண்டமைக்காக எனது தகப்பனார் எனக்குத் தந்த தண்டனை. இரவு முழுதும் தூக்கம் துறந்து, உணவின்றி, களைப்புடன் வீடு வந்து உறங்கலாம் என்று எண்ணி வாசல்வந்து சேர்ந்தபோது, பூட்டிக்கிடந்தது கண்டு களைத்துப்போய் ஆங்கே இருந்துவிட்ட அந்தக் காலைப்பொழுது. அரைத்தூக்கத்தில் வாசலுக்கு வெளியே, படலையில் சாய்ந்து உறங்கத் தொடங்க, உள்ளிருந்து கேட்ட அகோரமான குரல், "பயங்கரவாதியே, இங்க ஏன் வந்தனீ? உள்ளுக்கை கால் வைச்சியெண்டால் வெட்டிக் கொல்லுவன்". கனவில் கேட்பதாக நினைத்து விழித்தபோது வீட்டின் முன் கதவில் தகப்பனார் கையில் கத்தியுடன். ஏன் , எதற்கென்றுகூடத் தெரியாது நான் தண்டிக்கப்பட்ட அப்பொழுது. அவரது கோபம் அடங்கும், ஒருவாறு வீட்டினுள் சென்றுவிடலாம் என்கிற நம்பிக்கையெல்லாம் சிறிது சிறிதாக அற்றுப்போய், கண்களில் கோபம் கொப்பளிக்க அவர் கையில்க் கிடந்த கத்தியைத் தவறாமல் எனக்கு நேரே பிடித்திருக்க, வேறு வழியின்றி தெல்லிப்பழை நோக்கி நடந்த அக்காலைப்பொழுது. கையில் பணமின்றி, நடப்பதற்கும் உடலில் பலமின்றி, மருதனார் மடத்தின் வீதியில் இருந்துகொண்டே வீதியில் செல்வோரிடம் பிச்சையாகப் பணம் கேட்டு, யாரோ ஒருவரின் புண்ணியத்தால் தெல்லிப்பழைவரை செல்ல முடிந்த அதே காலைப்பொழுது. அப்பம்மாவீட்டிற்குச் சென்று, "இனிமேல் அவருடன் வாழமுடியாது, நான் இங்கேயே உங்களுடன் இருக்கப்போகிறேன்" என்று அழுதழுது அவர்களிடம் மன்றாடிய காலைப்பொழுது. இற்றுடன் 37 வருடங்கள் கரைந்தோடிவிட்டன. நான் வீட்டிலிருந்து துரத்தப்பட்ட நாளில் இருந்து சுமார் இரு வாரங்களுக்கு தகப்பனார் என்னைத் தேடவில்லை. உயிருடன் இருக்கின்றேனா இல்லையா என்பது கூட அவருக்குப் பொருட்டாக இருந்திருக்காது என்பது திண்ணம். இதே காலப்பகுதியில் மட்டக்களப்பில் கன்னியாஸ்த்திரிகளினால் பராமரிக்கப்பட்டு வந்த மடம் ஒன்றில் எனது அக்கா படித்துக்கொண்டிருந்தாள். அது விடுமுறை காலமாதலால் யாழ்ப்பாணம் வந்திருந்தாள். வழமைபோல கோண்டாவிலில் நாம் வாழ்ந்த வீட்டிற்கு வந்து என்னைத் தேடியிருக்கிறாள். ரஞ்சித் எங்கே என்று தகப்பனாரிடம் கேட்டபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவனை அடித்து விரட்டிவிட்டேன் என்று மட்டுமே அவரால் கூற முடிந்தது. அவன் எங்கு போனான், உயிருடன் இருக்கிறானா என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.அக்கா என்னைத் தேடத் தொடங்கினாள். முதலில் உறவினர்கள், அம்மம்மாவின் பக்கத்திலிருந்து அவள் தேடினாள். பின்னர் அப்பாவின் உறவினர்களிடம் தேடினாள், தெல்லிப்பழையில் நான் இருப்பதைத் தெரிந்துகொண்டாள். அப்போது எனது தாயாரின் தங்கை, ஒரு கன்னியாஸ்த்திரி, மட்டக்களப்பில் படிப்பித்துவந்தார். இவரின் உதவியினாலேயே அக்கா மட்டக்களப்பின் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தாள். தகப்பனார் என்னை வீட்டை விட்டுத் துரத்தியதுபற்றி அக்கா எனது சித்தியிடம் தெரிவித்திருக்க வேண்டும். உடனடியாக செயலில் இறங்கிய அவர் எப்படியாவது என்னை எனது தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து மீட்டுவிடவேண்டும் என்று அங்கலாய்க்கத் தொடங்கினார். மட்டக்களப்பில் இருந்து வந்துசேர்ந்த அக்கா எனது நிலைபற்றி உறவினர்களிடம் பேசத் தொடங்கவே தகப்பனாரின் நிலை தர்மசங்கடமாகிப்போனது. மூத்த இரு பிள்ளைகளையும் மனைவி இறந்தவுடன் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான் என்பதை உறவினர்கள் பேசத் தொடங்கவே வேறு வழியின்றி என்னை வீட்டிற்குள் அனுமதித்தார். ஆனால் படிக்கவைக்க அவர் விரும்பவில்லை. "வீட்டில் நிண்டுகொண்டு வேலைகளைப் பார், உன்னைப் படிக்க வைக்க என்னிடம் பணமில்லை" என்று கையை விரித்துவிட்டார். எனக்கும் வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எங்காவது கூலிவேலைக்குச் சென்றுவிடலாம் என்பதே அப்போது எனக்கிருந்த ஒரே தெரிவு. ஆனால் எனக்கோ வயது 15.
  11. பையன் சார், தமிழ்நாட்டை பற்றிய உங்களின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் நான் இங்கே சொல்ல விரும்பிய விடயம் இதுவல்ல. இன்று இணையத்தில் உலாவும் காணொளிகள் எவ்வளவு போலியானவை, திட்டமிட்டு சோடிக்கப்பட்டு தயாரிக்கப்படுபவை என்றே சொல்ல நினைத்தேன். அதனால் இவற்றை மட்டும் ஆதாரங்களாகக் கொண்டு எதையும் நிறுவ முயலாமல் அல்லது புரிந்து கொள்ள முயலாமல், பல்வேறு தரப்புகளையும் நிகழ்வுகளையும் ஒன்றாகத் தொகுத்து ஒரு முடிவுக்கு வருவதே ஓரளவாவது சரியாக இருக்கும் என்று சொல்லவே வந்தேன். தமிழ்நாட்டு டாஸ்மாஸ்க் விடயம் ஒரு உதாரணம் மட்டுமே...................🤝.
  12. முதலீடுகள் இரண்டு வழிகளில் மட்டுமே வரும். ஒன்று சேமிப்பு. இரண்டாவது, போதிய சேமிப்பு இல்லாவிட்டால், கடன். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மிகக் குறைவாக சேமிப்பவர்கள் அமெரிக்கர்கள். சேமிப்பே கிடையாது. பிறகு முதலீடுகளுக்கு எங்கே போவது............. ஆனால் உலகமே அமெரிக்காவில் முதலிடுகின்றது. அமெரிக்காவிற்கு ஒவ்வொரு நாட்டுடனும் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. இலங்கையுடன் கூட. அது இலங்கை அமெரிக்காவில் இடும் முதலீடு. சீனா முதலிடுகின்றது, மெக்சிக்கோ முதலிடுகின்றது............. எல்லாமே கடன்களாக இந்த நாட்டுக்குள் வருகின்றன. அதுவே கட்டிடங்களாக, தொழில்நுட்பங்களாக, ஐபிஓக்களாக, எலான் மஸ்க்குகளாக மாறுகின்றன. இதை ஏன் வேறு ஒரு நாட்டில் உலகம் முதலிட முடியாதுள்ளது............ ரஷ்யாவில் முதலிட முடியாதா, சைனாவில் முதலிட முடியாதா.............. முடியாது என்பதே இன்றைய நிலவரம். இத்தனைக்கும் சைனாவிலோ அல்லது ரஷ்யாவிலோ அதன் தலைவர்கள் இறக்கும் வரை மாறுவதில்லை, அவர்களின் கொள்கைகளில் மாற்றம் இல்லை, அரச நிர்வாகத்தில் தனித்தனியான சுதந்திரம் உள்ள அமைப்புகளினால் ஏற்படும் கட்டுப்பாடுகள் அங்கு இல்லை. ஆனாலும் முதலிடுபவர்கள் எதிர்பார்க்கும் ஒரு நம்பகத்தன்மையும், வெளிப்படையும், சுதந்திரமான நிர்வாக அமைப்புகளும் அங்கு இல்லை. இந்த காரணங்களுக்காகவே டாலர் பெறுமதியாக இருக்கின்றது, அமெரிக்காவிற்கு கடன்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா எறியும் காசு அவர்களுடையது அல்ல. ஆனாலும் மற்றவர்களுக்கு அதை கொடுப்பதற்கு வேறு இடமும் இல்லை. அமெரிக்காவின் பிரச்சனை திருப்பிச் செலுத்தும் வட்டியின் அளவு. இது இப்படியே போய்க் கொண்டிருக்க முடியாது என்று சிந்திக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். அதனால் அரசாங்கம் இனி சேமிக்கப் போகின்றார்களாம்.
  13. 25 JUN, 2025 | 10:31 AM யாழ் - பளை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற கனரக வாகனத்தினை நிறுத்த பொலிஸார் ஆணிக்கட்டைகளை டயரில் வீசி மடக்கி பிடித்துள்ளனர். பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த காரணத்தினாலேயே பொலிஸார் டயரிற்கு ஆணிக்கட்டைகளை வீசியுள்ளனர். ஆணிகட்டைகள் டயரில் சிக்கியதால் கனரக வாகனத்தின் நான்கு சில்லுகளும் காற்று போன நிலையில் வாகனத்தை வீதியில் நிறுத்தி விட்டு சாரதியும் உதவியாளரும் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். அதன் பின்னர் பலத்த சிரமங்களின் மத்தியில் கனரக வாகனத்தினை மீட்ட பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். தப்பியோடிய நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/218385
  14. இது சிந்தனையில்லாத பேச்சு! நீங்கள் கடலுக்கடியில் தேடாமல் இணையத்தில் தேடி தகவல் சரி பார்க்கிறீர்கள்! இது இங்கே செல்லாது☺️!
  15. தெய்வமே, நீங்கள் கட்சி மாறி விட்டியள் போல இருக்கே😂? அல்லது சில யாழ் கள மெம்பர்சிடமிருந்து flip-flop-itis வியாதி உங்களுக்கும் மெய்நிகர் வழியாகத் தொற்றி விட்டதா😂?
  16. உண்மையாவா?இதை எதிர்பார்க்கவே இல்லை. உங்களுடன் சேர்ந்து நானும் கண்டிக்கிறேன்.
  17. ஒரு காலத்தில் இலங்கையில் உள்ள யூதர்களை வெளியேற்ற போராட்டங்கள் நடந்தாலும் நடக்கலாம். கிழக்கு மாகாணத்தில் அறுகம்பே என்ற இடத்தில் சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேல்காரர்கள் கோவில் குளம் எல்லாம் கட்டி நீண்டகால இருப்புக்கு ஆயத்தமாகிறார்கள். இஸ்ரேலிய புலனாய்வுப்பிரிவே கூடுதலாக இங்கே வந்து தங்குவதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் கூறுகின்றன.
  18. அமைச்சர் சந்திரசேகரத்தின் சப்பாத்தை கூட போடவிடாமல் அவரை துரத்தியடித்து அந்த சப்பாத்துகளை போட்டோ எடுத்து முகநூலில் அதை கொண்டாடி மகிழ்ந்த வீரம் போதும் இனி செம்மணி படுகொலைக்கு நீதி கிடைக்காவிட்டாலும் இனி பரவாயில்லை. 2004 இறுதியில் அல்லது 2005 ஆரம்பத்தில் மகிந்த பிரதமராக பதவியேற்று யாழ்பாணம் சென்ற போதும் இப்படி தான் ஒரு சிலரால் துரத்தி துரத்தி விரட்டப்பட்டார். புலம் பெயர் தமிழ் தேசிய ஊடகங்கள் அதை கொண்டாடி மகிழ்ந்தன.
  19. யாழ்கள அறிஞர்கள் ....... இந்திய இராணுவம் இலங்கை வந்தபோது அதை தமிழர்கள் வரவேற்ற விடியோவை போட்டு மனம்வருந்த போகிறார்கள்
  20. திலகநாதன் கிந்துஜன் 56m · சற்றுமுன் - செம்மணி அணையா விளக்கு போராட்ட இடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
  21. மம்தானியின் பலஸ்தீன விடுதலை ஆதரவு நிலை, இஸ்ரேல் மீதான விமர்சனம் வைக்கும் துணிவு ஆகியவை பாராட்டுக்குரியவை. ஆனால், அவரது இலவச வீட்டுத் திட்டம், இலவச குழந்தைகள் பராமரிப்பு சேவைகள் போன்ற பொருளாதாரக் கொள்கைகள் நியூ யோர்க் நகரில் சாத்தியமற்ற "ஆகாயக் கோட்டைகள்". அனேகமாக இந்த முறை நியூ யோர்க் நகர நிர்வாகம் சிவப்புக் கட்சியிடம் போய் விடும். சாத்தியமில்லாதவற்றைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தேர்தல்களைச் சந்திக்கும் நீலக் கட்சியினருக்கு இன்னொரு பாடம் கிடைக்கும் போல் தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
  22. இது போன்ற ஈரான் பெண்களுக்கு இருக்கும் சவால்களையும் அனுபவங்களையும் சிறுமை செய்யும் பிரச்சார வீடியோக்கள் பல இருக்கின்றன (அவற்றுள் பல கணணித் திரைக்குள் தலையைப் புதைத்துக் கொண்டு, மிச்ச எல்லாவற்றையும் மறந்து விட்ட இந்திய ஐ.ரி துறை சார்ந்தவர்களால் பரப்பப் படுகின்றன என்றும் அறிவேன்). இதைப் பார்க்கும் மாஷா அமினி போன்ற பெண்களின் குடும்பத்தினர் புண்ணில் புளி தடவியது போல மேலும் துன்புறுவர். ஆனால், இப்படியான பிரச்சார வீடியோக்களை முல்லாக்கள் ரீம் மட்டுமா வெளியிட்டிருக்கின்றன? ஈரானில் இருந்து சில ஆயிரம் மைல்கள் கடந்து இருக்கும் சிறி லங்காவில், உங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லையென்று நீங்கள் வெளியேறிய காலம் 90 கள்? அந்த நேரம் சிறி லங்கா "பூலோக சொர்க்கமாக இருக்கிறது" என்று கூறும் வீடியோக்கள் இன்னும் இணைய வெளியில் இருக்கின்றன. ஒன்றை சாம்பிளுக்கு கீழே இணைத்திருக்கிறேன். இதைப் பார்க்கையில், "பூலோக சொர்க்கத்தை" விட்டு வெளியேறிய உங்களுக்கு உருவாகும் மன அழுத்தத்திற்கு வருந்துகிறேன்😎!
  23. சரியாப்போச்சு. இனி நீங்கள் அமெரிக்காவின் 52 ஆவது மாநிலமாக வரப்போறியள் போல!!
  24. உளி தாங்கும் கற்கள்தானே மண்மீது சிலையாகும் வலி தாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும்
  25. உங்களுக்கு இந்த தெளிவு, இங்கே பந்தி பந்தியாக எழுதுவோருக்கு புரியவில்லை என்பது தான் ஆச்சரியம். உண்மையில், ஈரான் அதன் முதல் படி கேந்திர இலக்குகளை அடைந்து உள்ளது. பேச்சுவார்த்தை நடந்தால், அணுத்துறை பற்றி மட்டும்.
  26. மேற்குலகமே ஈழ தமிழர்கள் தாகம் ஈரானியர்கள் 👍
  27. நூற்று நூறு / உண்மை இவ‌ரால் தான் இந்தியா அணி ப‌ல‌ வெற்றிய‌ பெற்ற‌து.............................
  28. அமெரிக்க இஸ்ரேல் - ஈரான் போர் எதற்காக நடக்கின்றது? மனித உரிமைகளுக்காகவா அல்லது ஆயுத பலத்திற்காகவா? ஒவ்வொரு இனத்திற்கும் மதத்திற்கும் அது சார்ந்த நடைமுறைகள் இருக்கும். அதற்காக மனித உரிமைகள் எனும் பெயரில் மேற்குலகு ஓநாய் ஊளையிடத்தேவையில்லை.இதுதான் நாடு.இதுதான் சட்டம். விரும்பினால் இருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள் எனும் சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். இதற்கு மேல் என்ன சுதந்திரம் வேண்டும்? மேற்குலகை போல் அவிழ்த்து விட்டு ஆடும் கலாச்சாரத்தை ஏற்கவில்லை என்றால் அது அவர்கள் தனிமனித சுதந்திரம் தானே? அமெரிக்காவினது ஆயுதங்களை களைந்துவிட்டால் அதன் பலம் தெரியும்.🤣
  29. நல்ல கருத்து! நம்பிக்கைகளுக்கு வலு உள்ளது, சிலர் தமது நம்பிக்கைக்காக மற்றவர்களின் உயிர்களையே எடுக்கிறார்கள், பொதுவாக சாவிற்கு அடுத்தபடியாக மக்கள் வெறுக்கும் விடயம், தமது நிலைப்பாடு தவறு என உணரும் நிலை, இதற்கு காரணமாக கூறப்படுவது எமது கல்வி முறை, தவறாக இருப்பதில் தவறில்லை எனும் உனர்வினை சாதாரண மனிதர்களிடம் ஏற்படுத்துவது கடினம். Bigger loser win என்பது தற்கால நவீன வியாபாரத்தின் மாதிரி, அதனாலேயே அவர்கள் நஸ்டத்தினை உடனடியாக வெட்டி விடுகிறார்கள், தனது முடிவு தவறென தெரிந்தவுடன் அதிலிருந்து எந்தவித மனக்கிலேசமும் இல்லாமல் வெளியே வருபவர்களால்தான் சரியான முடிவினை இறுதியில் எடுக்க முடியும், தான் எடுத்த தவறான முடிவினை நியாயப்படுத்த அதனை பிடித்து தொங்கி கொண்டிருப்பது ஒரு சூதாடியின் மனநிலை, பெரும்பாலும் படித்தவர்களிடம் (மரபு சார்) இந்த வியாதி உள்ளது.
  30. 1979 இற்கு முன் மேற்கு நாடுகளை போல, இன்றைய துருக்கி, மலேசியா போல சுதந்திரமாக வாழ்ந்த ஈரானிய பெண்களை. ஈராக் ஒரு போதும் முல்லாக்கள் கையில் இருக்கவில்லை. ஷியா முல்லாக்களை ஓட விரட்டிய பாஆத் அரசியலை முன்னெடுத்தவர் சதாம். அமெரிக்கா தலையிட்ட பின் IKR என அழைக்கபடும் குர்தீஷ் பகுதியில் பெண்கள் நல்ல நிலையிலும், இதர அரபு ஸுன்னி மக்கள் வாழும் இடங்களில் சுமாராகவும் முல்லாக்கள் கட்டுப்படுத்தும் ஷியா மக்களின் இடங்களில் மோசமான நிலையிலும் உள்ளார்கள். ஆப்கானிஸ்தான் - நிச்சயமாக பெண்கள், குழந்தைகள் கல்வி, இதர உரிமைகள் 1996-2001, தற்போது உள்ள தலிபான் ஆட்சியை விட, அமெரிக்கா அங்கே நிண்ட போது, மிக, மிக மேம்பட்டே இருந்தது. இங்கே பெண்கள் ஒடுக்கப்பட காரணம் - முல்லாக்களும், தலிபான்களும், ஐ எஸ் சும் - அவர்களை இப்படி நடக்க தூண்டும் குரானின், ஹதீஸ்களின் வழிகாட்டலுமே ஒழிய, அமேரிக்கா அல்ல. நிச்சயமாக ஒரு தேர்தல் ஜனநாயக நாட்டில், எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு, நெதன்யாஹுவை எதிர்த்து பெரும் ஆர்பாட்டம் செய்யும் அளவுக்கு சுதந்திரமாக வாழ்கிறார்கள்.
  31. இந்த பழமைவாத துருப்பிடித்த சிந்தனைக்கு மாற்றீடான சிந்தனைகளை உக்குவிக்கும் நிலைக்கு சமூகம் வளர வேண்டும் ஆனால் மத அடிப்படைவாதிகள் அதனை கேள்விக்கெ இடமளிப்பதில்லை, கேள்வி கேட்டால் அதற்Kஉ ஏதாவது காராம் என கூறி கொல்லுகின்ற நிலை காணப்படுகிறது, மத அடிப்படைவாத ஆட்சியினை இதனாலேயே பலர் வெறுக்கின்றனர், இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பி ஜே பி க்கு பெரியளவில் எதிர்ப்பு உள்ளது, தமிழ் சமூகம் மாற்றம் வேண்டி நிற்கும் சமூகம், மாற்றம் தான் ஒரு நிரந்தரமான வலிமையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும், மாற்றங்களை அங்கீகரிக்காமல் அனைத்தையும் மதத்தின் பெயரால் பழமைவாத சிந்தனையுடன் இருந்தால் மதம் வேணுமென்றால் நிலைத்திருக்கும் ஆனால் அதனை பின்பற்றத்தான் மக்கள் இருக்கமாட்டார்கள்.
  32. காட்டில் உலவும் கம்பீரம் ........... ! 😂
  33. டிரம்ப் ஐயா டிரில் பேபி டிரில் என கூறியுள்ளார். வெய்யில் அகோரம் என்றால் ஏசிக்குள் உட்காரவேண்டியதுதானே ஐயா. மத்திய கிழக்கு நாடுகளில் சவூதி, டுபாய்க்காரர் வாழும் வாழ்க்கையை அமெரிக்கர்கள் வாழ முடியாதா? அனைத்துலக வியாபார மையம் மத்திய கிழக்கு நோக்கி நகரும்போது அங்குள்ள வெப்ப தட்பத்தை அமெரிக்கர்கள் உணர்ந்தால் நல்லதுதானே.
  34. நேற்றிலிருந்து 4 நாட்களுக்கு முழு அமெரிக்காவும் மிகவும் வெப்பநிலையாக உள்ளது. கனடாவும் இதே காலநிலையாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். எமது ஏரியாவில் நேற்று 160000 குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை. இரவு 12-1 மணி போல நின்ற மின்சாரம் 12 மணிநேரம் கழித்து தான் மீண்டும் வந்தது. இப்போதும் எமது பகுதியில் பல வீதி சமிக்கைகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை. நேற்றைய நாளைவிட இன்று அதிக வெப்பமாக உள்ளது. 100 காட்டுகிறது37-38.ஆனாலும் இதைவிட கூடுதலாக இருக்கும் என்றே சொல்கிறார்கள். இன்னும் 2நாட்கள் இதே காலநிலை.
  35. உடையார் அண்ண‌ ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்தி இருக்கு போர் நிறுத்த‌த்தையும் மீறி இஸ்ரேலும் ஈரான் த‌லைந‌க‌ர‌த்தை தாக்குவோம் என‌ சொல்லி இருக்கின‌ம்.................முழு ம‌ன‌தோட‌ இந்த‌ போர் நிறுத்த‌ம் ந‌ட‌ந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை அண்ணா...............................
  36. ஈரான் இன்று காலை இஸ்ரேலுக்கு ந‌ல்ல‌ தாக்குத‌ல் கொடுத்து , போர் நிறுத்த‌த்துக்கு ஓம் என‌ சொல்லி இருக்கின‌ம் இஸ்ரேல் வாழ் நாளில் ம‌ற‌க்க‌ முடியாத‌ அடிய‌ ஈரானிட‌ம் இருந்து வேண்டி க‌ட்டி இருக்கின‌ம் , வான்பாதுகாப்பு க‌ருவி இல்லாம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல‌ ஈரான் அழித்து இருக்கும்..................ஈரான் இந்த‌ தாக்குத‌ல‌ ஆர‌ம்பிக்க‌ வில்லை , கொடிய‌ மிருக‌ம் நெத்த‌னியாகு ஆர‌ம்பிச்சார் ஈரான் முடிச்சு வைத்து விட்ட‌து🙏👍................................
  37. உண்மையாவா... 😂 இதையும், அமெரிக்காதான் சொல்லியிருக்கும். 🤣 அப்ப ... நோபல் பரிசு, நிச்சயம் கிடைக்கும். 😂 🤣
  38. கடந்த 10 ஆம் திகதி காலை. ஆறு மணியிருக்கலாம், கொழும்பிலிருந்து அக்கா தொலைபேசியில் எனக்குக் குறுந்தகவல் அனுப்பியிருந்தாள். சிஸ்ட்டர் அன்ரா இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதே அச்செய்தி. மனதில் "அடக் கடவுளே" என்று ஒரு கவலை, சோகம். எப்பொழுதும் எங்களுடன் இருப்பார்கள் என்று நாம் சிலரை நம்பியிருப்போம். அவ்வாறானவர்களில் இழப்பு என்பது உடனடியாக எமக்கு எந்த உணர்வையும் தந்துவிடாதவை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் இழப்பின் பாரிய தாக்கம் எம்மை வருத்தத் தொடங்கும், அவர்கள் இல்லாத வெளியினை உணரத் தொடங்குவோம். அப்படித்தான் சிஸ்ட்டர் அன்ராவும் எனக்கு. அவரது மரண‌ச் செய்தி கேட்டவுடன் யாழ்ப்பாணம் செல்வதா, இல்லையா என்று மனம் சிந்திக்கத் தொடங்க, மாமா தொலைபேசியில் வந்தார்."ரஞ்சித், நானும் மாமியும் போறம், உன்னால வர ஏலாது எண்டு நெய்க்கிறன், நீ இருந்துகொள், நாங்கள் போட்டு வாறம்" என்று கூறினார். அப்போதாவது நான் போயிருக்கலாம், ஆனால் முயலவில்லை, அதற்கும் காரணங்கள் இருந்தன. 2023 இல் அன்ரா உயிருடன் இருந்தபோது அவருடன் பேசிவிட்டு வந்துவிட்டேன், அவரை மகிழ்வுடன் சந்தித்துவிட்டேன், இனிமேல் அவர் இறந்தபின்னர் சென்று என்னத்தைச் செய்ய? என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டு இருந்துவிட்டேன். அவரது இறுதிச் சடங்குகளில் பங்குகொண்டவர்களின் பேச்சினை ஒளிப்படம் மூலம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. எத்தனையோ பேருக்கு அவர் உதவியிருக்கிறார். வன்னியில் அவருடன் மனநல சேவையில் பணியாற்றிய பெண்மணி தனது பேச்சின்போது கண்கள் கலங்கப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது மனம் கரைந்துபோனது. எத்தனையோ பேரின் வாழ்வை நல்வழிப்படுத்தி, ஒளியேற்றி, உருவகம் கொடுத்து வழிநடத்தி, தனது கல்வியறிவையும், திற‌மைகளையும் தனது சமூகத்திற்குக் கொடுத்து, இறுதிவரை தொண்டாற்றிய ஒரு ஆளுமை அமைதியாகிப் போனது. எனது வாழ்நாளில் பல ஆளுமைகளைக் கண்டிருக்கிறேன். இவர்களால் எனது வாழ்வு மாற்றப்பட்டு, வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆளுமைகளில் முதன்மையானவர் எனது சிஸ்ட்டர் அன்ரா. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!
  39. பாடசாலைகளில் இணைத்துவிடும் பணி முடிவடையவே, என்னையும் அக்காவையும் எங்காவது பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க வேண்டும் என்று அன்ரா தேடத் தொடங்கினார். இவ்வாறு சில நாட்கள் தேடியதன் பின்னர் "வெள்ளவத்தை புகையிரத நிலைய வீதியில் இருக்கும் விசாலமான காணியொன்றில் சிறிது சிறிதாகக் கட்டப்பட்ட வீடுகள் ஒன்றில் வயோதிப மாது ஒருவரின் வீட்டில் இடமிருக்கிறது, அங்குசென்று கேட்டுப்பாருங்கள்" என்று இன்னொரு கன்னியாஸ்த்திரி தனக்குத் தெரிந்தவர்கள் ஊடாக ஒரு விலாசத்தை எடுத்துத் தந்தார். ஆனால் அவ்வயோதிப மாதினால் இயங்குவது கடிணம் ஆதலால், அவருக்குத் தேவையான பணிகளைச் செய்துகொண்டு, ஆயிரம் ரூபாய்கள் வாடகையாகத் தந்தால் தங்கலாம் என்று கூறப்பட்டது. ஒரு நாள் மாலை வேளையில் அவரைச் சந்திக்கச் சென்றோம். மிகவும் குறுகிய, ஒற்றை அறையைக் கொண்ட குடில் போன்றதொரு வீடு. வீட்டின் முன்கதவினால் உள்ளே நுழையும்போது தலையைக் குனிந்தே செல்லவேண்டும். ஐந்து மீட்டருக்கு இரண்டு மீட்டர் என்ற அளவில் விருந்தினர் மண்டபம். அதன்பின்னால் ஒரு கட்டில் மட்டுமே போடக்கூடிய அறை. அதற்கடுத்தாற்போல் ஒருவர் மட்டுமே நின்று சமைக்கக் கூடிய சமயலறை, அதன் பின்னால் கழிவறையும், குளியல் அறையும். மிகவும் இடவசதி குறைந்த வீடு. ஆனால் வேறு இடங்களும் எமது வசதிக்கு ஏற்றாற்போல்க் கிடைக்கவில்லை. வெகு விரைவில் கனடா போவதற்காகக் காத்திருந்த அந்த வயோதிப மாது கேட்ட ஆயிரம் ரூபாய்கள் மற்றைய இடங்களைக் காட்டிலும் மிகவும் குறைவானது. ஆகவே சிஸ்ட்டர் அன்ரா அதனையே தெரிவு செய்ய, நாமும் ஏற்றுக்கொண்டோம். அந்த வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்கினோம். அக்கா அந்த வயோதிப மாது தங்கிய அறையில் நிலத்தில் பாய் ஒன்றினைப் போட்டுப் படுத்துக்கொள்ள, நானோ வெளியில், விருந்தினர் அறையில் பாயில்ப் படுத்துக்கொள்வேன். காலை எழுந்தவுடன், அம்மாது தனது காலைக்கடன்களைக் கழித்து வெளியே வரும்வரை காத்திருந்து, அவசர அவசரமாக எனது கடன்களை முடித்து, விருந்தினர் அறையிலேயே உடைமாற்றி பாடசாலைக்குச் சென்று வருவேன். எனக்கும் , அந்த வயோதிப மாதிற்கும் அக்காவே சமைக்கத் தொடங்கினாள். காலையில் பெரும்பாலும் பாணுடன் அஸ்ட்ரா மாஜரீன். மத்தியானத்தில் முருகன் கடையில் எடுக்கும் மரக்கறிச் சாப்பாட்டை நானும் அக்கவும் பகிர்ந்துகொள்வோம். சாப்பாட்டுப் பாசலில் பெரும்பகுதியை எனக்குத் தந்துவிட்டு அக்கா அரைவயிறு, கால்வயிறு என்று இருந்துவிடுவாள், பாவம். இரவில் ஏதாவது செய்வாள், முட்டையை அவித்து, உப்பும் மிளகும் சேர்த்துக் குழைத்து, பாணிற்குள் வைத்து வெட்டித் தருவாள், எனக்கு அதுவே அமிர்தமாக இருக்கும். அதேபோல அப்பெண்மணி கேட்கும் உணவுகளை அக்கா செய்துகொடுப்பாள். எங்களைக் கொழும்பிற்குப் பாதுகாப்பாகக் கூட்டிவந்து, பாடசாலைகள் தேடி, கெஞ்சி மன்றாடி, அனுமதியெடுத்து, எமது செலவுகளுக்கு ஒழுங்குகள் செய்து, நாம் தங்குவதற்கும் இடம்தேடிக்கொடுத்து, நாம் இனிமேல் பாதுகாப்பாக இருப்போம் என்கிற நம்பிக்கையுடன் மீளவும் யாழ்ப்பாணம் திரும்பினார் அன்ரா.
  40. கத்தோலிக்கப் பாடசாலைகள் கையை விரித்துவிட, மீதமாயிருந்த ஒரே ஆண்கள் தமிழ்ப் பாடசாலை பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மட்டும்தான். ஆனால் அங்கோ வடக்குக் கிழக்கில் இருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த பல தமிழ் மாணவர்கள் அண்மையில் இணைந்திருந்தமையினால், அங்கும் அனுமதி கிடைப்பது கடிணம் என்றே எமக்குத் தோன்றியது. ஆனாலும் மனம் தளராத அன்ரா, இன்னொரு காலைப்பொழுதில் என்னை அழைத்துக்கொண்டு அங்கு சென்றார். அங்கு அதிபராக இருந்தவர் மட்டக்களப்பைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்று நினைவு. அக்காலை வேளையில் மிகவும் சுருசுருப்பாக பாடசாலைப் பணிகள் நடந்துகொண்டிருக்க, அதிபர் தனது அறைக்கு வரும்வரை அமைதியாகக் காத்திருந்தோம். சிறிது நேரத்தின் பின்னர் அறைக்கு வந்த அதிபரை நாம் சந்தித்தோம். முதலில் என்னைப்பற்றி வினவிய அதிபர், கல்லூரியில் இணைவதற்கு எனக்குத் தகமை இருக்கின்றதா என்று பரிசோதித்தார். சாதாரணதரப் பெறுபேறுகள் முதற்கொண்டு பல விடயங்கள் குறித்துக் கேட்டார். இறுதியில், "சிஸ்ட்டர், எனது வகுப்புக்களில் மாணவர்கள் நிரம்பி வழிகிறார்கள். அவர்களைப் பராமரிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிறோம், அப்படியிருக்க உங்கள் பெறாமகனை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது?" என்று உண்மையான வருத்தத்துடன் வினவினார். "அவனுக்கொரு மூலையில் இருக்கவிட்டாலும், இருப்பான், வாங்கு மேசை கூட வேண்டாம், அவன் சமாளிப்பான்" என்று கூறவும், "சரி, உங்கள் விருப்பம்" என்று ஒரு வகுப்பில் இணைத்துவிட்டார். ஆனாலும் நாமும் பணம் கட்டவேண்டி இருந்தது. ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்கள் என்று நினைவு. பீட்டர்ஸ் கல்லூரியில் கேட்ட 15,000 ரூபாய்களுடன் ஒப்பிடும்பொழுது மிகக்குறைவான பணம். சிஸ்ட்டர் அன்ரா கட்டினார், எங்கிருந்து பணம் வந்திருக்குமோ? எனக்குத் தெரியாது. சரி, பாடசாலை கிடைத்துவிட்டது. இனிமேல் என்னைத் தங்கவைக்க இடம் தேடவேண்டும். அதற்கும் பணம் வேண்டும். யார் தருவார்? இப்படி பல சிந்தனைகள் அன்ராவின் மனதில். அவுஸ்த்திரேலியாவில் வாழ்ந்துவந்த எனது மாமாக்கள் (அன்ராவின் இளைய சகோதரர்கள்) இருவரிடமும் உதவி கேட்டார். ஒருவர் உதவ முன்வந்தார். மற்றையவர் உதவும் நிலையில் இல்லை என்று கூறப்பட்டது.
  41. கொழும்பை வந்தடைந்ததும் பம்பலப்பிட்டி, லொறிஸ் வீதியில் அமைந்திருக்கும் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் சில நாட்கள் சிஸ்ட்டர் அன்ராவுடன் தங்கியிருந்தோம்.எங்களை எப்படியாவது நல்ல பாடசாலைகளில் சேர்த்துவிடவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நான் 11 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும்போதே மட்டக்களப்பில் போர் ஆரம்பித்திருந்தது. அக்கா உயர்தரப் பரீட்சைக்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தாள். கன்னியாஸ்த்திரிகள் மடம் அமைந்திருந்த பகுதியில் உள்ள தமிழ் மொழிப் பாடசாலையான புனித மரியாள் மகாவித்தியாலயத்தில் அக்காவைச் சேர்த்துவிட்டார். எனக்குப் பாடசாலை கிடைப்பது கடிணமாகவிருந்தது. 1979 ஆம் ஆண்டில் இருந்து 1982 ஆம் ஆண்டுவரை நான் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரியில் எனது சிறுபராயத்தைக் கழித்திருந்தேன். ஆகவே அங்கு சென்று, பழைய மாணவனான எனக்கு அனுமதி தருகிறார்களா என்று பார்க்கலாம் என்று ஒரு காலைப்பொழுதில் என்னையும் அழைத்துக்கொண்டு அக்கல்லூரிக்குச் சென்றார் சிஸ்ட்டர் அன்ரா. நான் படித்த காலத்தில் இருந்ததைக் காட்டிலும் கல்லூரி மிகவும் மாறிப்போயிருந்தது. விசாலமானதாகவும், நவீனமானதாகவும் காணப்பட்டதாக ஒரு பிரமை. கல்லூரி அதிபராகவிருந்த பாதிரியார் ஒருவருடன் என்னை கல்லூரியில் இணைக்க முடியுமா என்று இரைஞ்சுவது போலக் கேட்டுக்கொண்டு நின்றார் அன்ரா. ஆனால் அதிபருக்கோ அதில் சிறிது விருப்பமும் இருக்கவில்லை. கத்தோலிக்கப் பாடசாலையான அக்கல்லூரிக்கு இணையும் மாணவர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள். ஆகவே இணையும்போது பாடசாலை வளர்ச்சி நிதிக்கென்று பாடசாலை நிர்வாகம் கேட்கும் பணத்திற்கு அதிகமாகக் கொடுத்து இணைந்துகொள்பவர்கள். அப்படியிருக்கும்போது கன்னியாஸ்த்திரி ஒருவர் கூட்டிவந்திருக்கும் ஏழ்மையான மாணவனை கல்லூரியில் ஏற்றுக்கொள்ள அவருக்கு மனம் வரவில்லை. "மன்னிக்க வேண்டும் சிஸ்ட்டர், தமிழ் மொழி வகுப்புக்களில் இடமில்லை, எல்லா வகுப்புக்களும் நிரம்பி வழிகின்றன, நீங்கள் வேறு பாடசாலை பாருங்கள்" என்று கூறினார். "பாதர், அவனுக்குத் தேவையான மேசையையும், கதிரையினையும் நானே வாங்கித் தருகிறேன், ஏதோ ஒரு மூலையில் அவனையும் இருக்க விடுங்கள்" என்று வேண்டத் தொடங்கினார். எனக்கு முன்னாலேயே எனது அன்ரா அப்பாதிரியாரிடம் இரைஞ்சிக் கேட்பதைப் பார்த்தபோது மிகுந்த கவலையாக இருந்தது. ஆனால் அந்தப் பாதிரியாரோ விடாப்பிடியாகவே மறுத்துவிட்டார். "உங்களுக்கென்று தனியான தமிழ்ப் பாடசாலைகள் இருக்கின்றனவே, அங்கு சென்று கேட்டுப்பாருங்கள்" என்று கையை விரிக்க மிகுந்த ஏமாற்றத்துடன் அன்ராவின் மடம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். சரி, இனி என்ன செய்யலாம்? கல்கிஸ்ஸையில் இருக்கும் தோமஸ் கல்லூரியில் கேட்டுப்பார்க்கலாம் அல்லது ஜோசப் கல்லூரியில் கேட்டுப்பார்க்கலாம் என்று தனக்குத் தெரிந்த கன்னியாஸ்த்திரிகள், பாதிரிகள் ஊடாக அவர் முயன்று பார்த்தார். இவை எல்லாமே பெருந்தொகைப் பணத்தை பெற்றுக்கொண்டே அனுமதியளிப்பார்கள், பணமின்றி எவருமே உள்ளே வர முடியாது, உங்களின் பெறாமகன் எவ்வளவுதான் கெட்டிக்காரனாக இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதே அனைவரினதும் பதிலாக இருந்தது.
  42. 1990, பேச்சுக்கள் முறிவடைந்து புலிகளுடன் பிரேமதாசா யுத்தத்தினை ஆரம்பித்திருந்த காலம். மட்டக்களப்பின் பலவிடங்களிலும் படுகொலைகள். என்னுடன் கூடப்படித்த பல மாணவர்கள் கொல்லப்பட்டார்கள், அல்லது காணாமலாக்கப்பட்டார்கள். அடிக்கடி நடந்த சுற்றிவளைப்புக்கள், தலையாட்டிகளுக்கு முன்னால் நடந்த அணிவகுப்புக்கள் என்று நகரே அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்த கொடிய ஊழிக்காலம் அது. இரவுகளில் கேட்கும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள், மரண ஓலங்கள் என்று தூக்கமின்றி விடுதியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பொழுதுகள் கழித்த இரவுகள். எமது விடுதியை இராணுவம் சுற்றிவளைத்தபோது, பாதிரியர்களாக இருந்த விடுதி பராமரிப்பாளர்களுடன் பேசிக்கொண்டே மாணவர்களை நோட்டம் விட்ட சிங்கள இராணுவக் கப்டன். உயர்தரம் படித்துக்கொண்டிருந்த விடுதி மாணவர்களை அழைத்துச் செல்லப்போகிறேன் என்று அவன் அடம்பிடிக்க, பாதிரியார்களோ அவனிடம் கெஞ்சி மன்றாடி அம்மாணவர்களை விடுவித்துக்கொண்ட பொழுதுகள் என்று உயிர் வாழ்தலுக்கான நிச்சயம் இன்றி கடந்துபோன நாட்கள். சில மாதங்களாக மட்டக்களப்பு நகரிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் வீதிகள் முற்றாக மூடப்பட்டு, அகோரமான படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வந்தன. மரணங்களை நாள்தோறும் கண்முன்னே கொண்டுவந்து காட்டிய மூன்று, நீண்ட, கொடிய மாதங்கள். ஒருவாறு மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான புகையிரதச் சேவை வாழைச்சேனையிலிருந்து நடைபெறத் தொடங்கியது. ஆனால், வாழைச்சேனைவரை பஸ்ஸில்த்தான் பயணிக்கவேண்டும். மட்டக்களப்பிற்கும் வாழைச்சேனைக்கும் இடையிலான வீதியின் பகுதியில் அமைந்திருக்கும் முஸ்லீம் பிரதேசங்களில் பஸ்ஸை மறித்து, ஆண்களை இறக்கி வெட்டத் தொடங்கியிருந்தார்கள் முஸ்லீம் ஊர்காவற்படையினர். என்னையும் அக்காவையும் எப்படியாவது பாதுகாப்பாக மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்குக் கூட்டிவந்துவிட வேண்டும் என்று சிஸ்ட்டர் அன்ரா உறுதி பூண்டார். இதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று, அங்கிருந்து மட்டக்களப்பிற்கு அவர் வந்தார். அக்காவிற்கும் சிஸ்ட்டர் அன்ராவிற்கும் இருக்கக் கிடைத்த ஆசனத்தில், அவர்களின் கால்களுக்குக் கீழே நாள் ஒளிந்துகொள்ள , எங்களைப்போலவே இன்னும் பலரை ஏற்றிக்கொண்டு அந்தப் பஸ் தனது பயணத்தை ஆரம்பித்தது. முஸ்லீம்களால் நடத்தப்படும் படுகொலைகளில் இருந்து பயணிகளைக் காக்கவென செஞ்சிலுவைச் சங்கமோ அல்லது அதுபோன்றதொரு அமைப்போ பஸ்ஸின் முன்னால்ச் செல்ல, மெதுமெதுவாக பஸ் பின்னால் தொடர்ந்து சென்றது. சிலவிடங்கள் பஸ்ஸை மறித்து உள்ளே வர முயன்ற காடையர்களை முன்னால்ச் சென்ற வாகனத்தில் இருந்த அதிகாரிகள் தடுத்துவிட்டனர். வாழைச்சேனையில் புகையிரதத்தில் ஏறும்வரை பஸ்ஸில் இருந்த அனைவரும் உயிர் பிழைப்போம் என்கிற நம்பிக்கையில் இருக்கவில்லை என்றே கூறலாம்.
  43. பாடசாலையில் கணிதபாடம் எனக்குப் புரியவில்லை. சின்னையா டீச்சர் சொல்லித் தந்த கணிதம் எனது மூளைக்குள் இறங்கவில்லை. மிகவும் கடிணப்பட்டேன். ஒரு வார விடுமுறை நாளில் என்னைப் பார்க்க விடுதிக்கு வந்த சிஸ்ட்டர் அன்ராவிடம் இதுகுறித்துக் கூறினேன். சிசிலியா பெண்கள் பாடசாலையில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த அவர், எனக்கு உதவ முன்வந்தார். தாண்டவன்வெளியில் இருந்த அவரது மடத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னை வரச்சொன்னார். தனது வேலைப்பழுவிற்கு நடுவிலும் எனக்குக் கணிதம் சொல்லித் தந்தார். காலையில் 8 மணிக்கு அங்கு சென்றுவிடும் எனக்கு காலையுணவு, மதிய உணவு என்றெல்லாம் தந்து கணிதம் படிப்பித்தார். எனக்கும் கணிதம் சிறிது சிறிதாகப் பிடிக்கத் தொடங்கியது. அவரிடம் கணிதம் கற்ற சில மாதங்களிலேயே பாடசால்யில் என்னால் ஓரளவிற்கு கணிதம் செய்ய முடிந்தது. கூடவே பேரின்பராஜா சேரும் வந்து சேர்ந்துவிட, கணித பாடம் பிடித்துப் போயிற்று. நான் மட்டக்களப்பில் வசிக்கத் தொடங்கிய முதலாவது வருடத்தில் சிஸ்ட்டர் அன்ரா யாழ்ப்பாணத்திற்கு மாற்றாலாகிச் சென்றார். கவலை என்னை முழுமையாக ஆட்கொள்ள, அவரை வழியனுப்பி வைத்தேன். அக்கா அப்போதும் மட்டக்களப்பிலேயே படித்துவந்தாள். ஆனாலும் சிஸ்ட்டர் அன்ரா போனது மனதை வெகுவாக வாட்டியிருந்தது. சில நாட்கள் அழுதேன், ஆனாலும் வேறு வழியில்லை. வந்தாயிற்று, படித்தே ஆகவேண்டும்.
  44. நான் இப்படித்தான் செய்வதுண்டு .சமைத்து இறக்கும்போது நெத்தலியை இரண்டாக்கி பொரித்து போடடால் சுவை இன்னும் தூக்கலாய் இருக்கும்.
  45. நிஜமாகவே ஒரு சுவையான காளான் குழம்பு . .......... கெதியாய் செய்யலாம் . ....... செய்து பாருங்கள் . ........! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.