Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    87988
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7044
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31956
    Posts
  4. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    15737
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/25/25 in all areas

  1. ஸ்ரீ அண்ணேய் சிலருக்கு எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் ஏற்று கொள்ள மாட்டினம் இங்கு சிலருக்கு பதிலே போடுவதில்லை புலிகள் தான் இவ்வளவு அழிவுக்கும் காரணம் எனும் மன நோயாளிகளுடன் தர்க்கம் பண்ணி பலனில்லை விட்டு விடுங்க ஓராமாய் நின்று குரைத்து கொள்ளட்டும் .
  2. நீங்கள் இருவரும் இப்போதுதான் முதன் முதலால காதலிக்க ஆரம்பிக்கிறீர்கள் என நான் கண்டுபிடித்துவிட்டேன்🤣. காதலித்துப் பார் காதலித்துப் பார்! உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்... உலகம் அர்த்தப்படும்... ராத்திரியின் நீளம் விளங்கும்.... உனக்கும் கவிதை வரும்... கையெழுத்து அழகாகும்..... தபால்காரன் தெய்வமாவான்... உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்... கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்... காதலித்துப்பார் ! தலையணை நனைப்பாய் மூன்று முறை பல்துலக்குவாய்... காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்... வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்... காக்கைகூட உன்னை கவனிக்காது ஆனால்... இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உணர்வாய்... வயிற்றுக்கும் தொண்டைக்கமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்... இந்த வானம் இந்த அந்தி இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம் காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய் காதலித்துப் பார்! இருதயம் அடிக்கடி இடம் மாறித் துடிக்கும்... நிசப்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்... உன் நரம்பே நாணேற்றி உனக்குள்ளே அம்புவிடும்... காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும்... ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும் உதடுகள் மட்டும் சகாராவாகும்... தாகங்கள் சமுத்திரமாகும்... பிறகு கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்... காதலித்துப் பார்! சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே... அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே... அதற்காகவேனும்... ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும் அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே.. அதற்காகவேனும்... வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே செத்துக் கொண்டே வாழவும் முடியுமே... அதற்காக வேணும்... காதலித்துப் பார்! கவிஞர் : வைரமுத்து
  3. போன வாரமளவில் ஒரு முகநூல் பதிவர் "பூதக் கண்ணாடியோடு" நினைவு தினம் தேடி அலைந்தார் என்று எழுதியிருந்தாரே? அவர் இன்னும் இருக்காரா சார்? 😂
  4. விசா கட்டணம் அறவிடப்படாத நாடுகள் இதோ! இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்கம் மேலும் 33 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது. இதற்கு முன்னர், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய 7 நாடுகளுக்கு விசா கட்டணத்தை அறவிடாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இந்தத் திட்டத்தால் அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 66 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படலாம். விசா கட்டணம் அறவிடப்படாத நாடுகளின் பட்டியல்: 1.United Kingdom of Great Britain and Northern Ireland 2.Federal Republic of Germany 3.Kingdom of the Netherlands 4.The Kingdom of Belgium 5.The Kingdom of Spain 6.The Commonwealth of Australia 7.Republic of Poland 8.The Republic of Kazakhstan 9.The Kingdom of Saudi Arabia 10.The United Arab Emirates 11.Federal Democratic Republic of Nepal 12.People's Republic of China 13.The Republic of India 14.The Republic of Indonesia 15.The Russian Federation 16.The Kingdom of Thailand 17.The Federation of Malaya 18.Japan * 19.Republic of France 20.United States of America 21.Canada 22.Czech Republic (Czechia) 23.Republic of Italy 24.Swiss Confederation (Switzerland) 25.Republic of Austria 26.State of Israel 27.Republic of Belarus 28.Islamic Republic of Iran 29.Kingdom of Sweden 30.Republic of Finland 31.Kingdom of Denmark 32.Republic of Korea 33.State of Qatar 34.Sultanate of Oman 35.Kingdom of Bahrain 36.New Zealand 37.State of Kuwait 38.Kingdom of Norway 39.Republic of Türkiye 40.Pakistan https://adaderanatamil.lk/news/cmdiu1leu01n9qp4k4gh5shwc
  5. 😎யாரது? 1+1=11 என்று உயர்கணிதம் படிப்பித்த பெருமாளா இப்ப 30-16=6 என்ற அதியுயர் கணிதத்தை விளக்கியிருப்பது? விளக்க முடியாத விடயங்களை இலகுவாக இங்கே குப்பை போலக் கொட்டி விட்டுக் கடந்து போக ஒரு சாட்டுத் தான் "இவரோட நாங்கள் டூ, எனவே பதில் சொல்ல மாட்டம்!" என்ற சளாப்பல்! "பதில் இல்லை, அதனால் சொல்லவில்லை" என்று சொன்னால் உங்கள் "கௌரவம்" என்ன ஆகிறது😂? இந்த 30-16-=6 தியரிக்கு, அது பற்றிய பதிலுக்கு சிரிப்புக் குறி இட்டிருப்பது ஒரு மொரட்டுவ எந்திரி என்றால் இலங்கையின் இலவசக் கல்வி எவ்வளவு வீணடிக்கப் பட்டிருக்கிறது என்று புரிகிறது😂!
  6. போதைப் பொருள் கடத்திய இந்த கனடா பிரஜை... சிங்களம் அல்லது முஸ்லீம் போலுள்ளது. அதுதான்... அவரின் பெயரை இருட்டடிப்பு செய்துள்ளார்கள். தமிழன் என்றால்... பெயர், ஊர், திருமணம் ஆனவர் என்றால் மனைவியின் பெயர், பிள்ளைகளின் பெயர், கனடா விலாசத்துடன், ஊர் விலாசத்தையும் சேர்த்தே பிரசுரித்து சுய இன்பம் காண்பார்கள், இந்த கிலிசு கெட்ட ஊடகங்கள்.
  7. எம். ஆர். ஐ. என்று வாசிக்க வேண்டியதை.... எம். ஜி. ஆர். என்று, அடிக்கடி மாறி வாசிக்கின்றேன். 😂 ஒருக்கால் கண் வைத்தியரிடம் போகவேணும் போலை கிடக்கு. 🤣
  8. யாழ் இணையமே ஒரு எம்.ஆர்.ஐ தானே ஐயா! உள்ள இழுத்தால் லேசில விடாதே! உயிராபத்தில்லை என்பது தான் ஒரே ஆறுதல்!!
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க்ரவுட்சயின்ஸ் நிகழ்ச்சி பதவி, பிபிசி உலக சேவை 9 ஜூன் 2025, 10:12 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் டேட்டிங் செயலிகள் முடிவில்லாத வாய்ப்புகளை வழங்கி, உறவுகளின் லேபிள்களும் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் இயற்கையாகவே ஒருதார மணம் செய்யும் தன்மை (மோனோகமி) கொண்டவர்களா என்கிற கேள்வி முன்பு எப்போதையும் விட பொருத்தமுள்ளதாகிறது. லண்டனில் வசிக்கும் ரோமானியரான அலினா 'பாலிஅமோரி' அனுபவம் பெற்ற பிறகு இதே எண்ணத்தில் தான் இருந்தார். பாலிஅமோரி என்பது சம்மந்தப்பட்டவர்களின் ஒப்புதலுடன் ஒரே நேரத்தில் பல நெருக்கமான உறவுகளில் இருப்பது. "நான் சமீபத்தில் பாலிஅமோரி பின்பற்றும் ஒருவரைச் சந்தித்தேன், அவர் எப்போதுமே அப்படித்தான் இருந்துள்ளார்" என விவரித்தவர், நாம் ஏன் ஒரு சமூகமாக ஒருதார மணம் தான் விதி என ஏற்றுக் கொண்டோம் எனக் கேள்வி எழுப்புகிறார். நம்முடைய பரிணாம வளர்ச்சி பாதை புரிந்து கொள்ள நமக்கு நெருக்கமான உயிரினங்களின் இனப்பெருக்க உத்திகளை ஆராய்வது உதவியாக இருக்கும். "கொரில்லாக்கள் பல தார மணம் செய்பவை, ஒரு ஆண் உயிரினம் பல பெண் உயிரினங்களுடன் இனச்சேர்க்கை மேற்கொள்ளும்" என பிரிட்டனில் உள்ள ப்ரிஸ்டால் பல்கலைக்கழகத்தில் பரிணாமத்தை ஆய்வு செய்யும் உயிரியலாளரான கிட் ஓபி தெரிவித்தார். "எனவே அந்தக் குழுவில் உள்ள சந்ததியினர் அனைவரும் தந்தை ஒருவராக இருப்பார், ஆனால் தாய் வேறு வேறாக இருப்பார்கள்" என்றார். ஆனால் இது ஒரு திறன்மிகு இனப்பெருக்க உத்தி இல்லை என்கிறார் ஓபி. ஏனென்றால் இது அதிக அளவிலான சிசுக் கொலைக்கு வழிவகுக்கும் எனக் கூறுகிறார். சிசுக்கொலை என்பது கொரில்லா வாழ்க்கையில் மிகவும் கொடூரமான ஒன்று எனக் கூறும் அவர், "ஒரு ஆண் கொரில்லா தனக்கு பிறக்காத குழந்தை கொரில்லாக்களை கொல்லும், இதன் மூலம் அதன் தாயுடன் விரைவாக இனப்பெருக்கம் மேற்கொள்ள முடியும். இத்தகைய பரிணாம உத்தியை நாம் பின்பற்ற முடியாது" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்கள் குரங்குகள் பல ஆண் குரங்குகளுடன் இனப்பெருக்கும் மேற்கொள்ளும். ஆனால் மனிதருக்கு நெருக்கமான குரங்கினங்களான சிம்பன்சிக்கள் மற்றும் போனோபோஸ்களில் பெண்கள் வேறு விதமான பரிணாம உத்தியைப் பின்பற்றுகின்றன. பெண் குரங்குகள், பல ஆண் குரங்குகளுடன் இனப்பெருக்கும் மேற்கொள்ளும். இதன் மூலம் தந்தை யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டு குழந்தை கொரில்லாக்கள் தாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறையும். மனிதகுலமும் கிட்டத்தட்ட இதே போன்ற அமைப்பில் இருந்து தான் தொடங்கி இருக்கக்கூடும். ஆனால் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அனைத்தும் மாறின. இதற்கு காலநிலை மாற்றம் தான் காரணம் என்கிறார் ஓபி. "நம் மூதாதையர்கள் வாழ்ந்த ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வறட்சியால் பல இடங்கள் தரிசாக மாறின. ஆதி மனிதர்கள் தங்களை வேட்டை விலங்குகளிடமிருந்து பாதுகாத்து கொள்ள பெரிய குழுக்களில் இருக்க வேண்டியிருந்தது. இத்தகைய பெரிய சிக்கலான குழுக்களை சமாளிப்பதற்காக மூளை பெரிதாகியது, இதனால் பாலூட்டும் காலமும் அதிகரித்தது" என்றார். பெரிய குழுக்களில் அதிக ஆண்கள் இருப்பதால், தந்தை வழியை பின்பற்றாதிருப்பது கடினமானது. "அதே நேரத்தில் பெண்களுக்கு தங்களின் பிள்ளைகளை வளர்க்க ஆண்களின் துணை தேவைப்பட்டது. எனவே அவர்கள் ஒரு தார மணம் என்கிற முறைக்கு மாறினர்" மோனோகமி சிறந்த உத்தியா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெரிய மூளை கொண்ட மெதுவாக வளரும் ஆண் குழந்தைகளை வளர்க்க அதிக அளவிலான பெற்றோரின் ஈடுபாடு தேவைப்பட்டது. இந்த மாற்றம் என்பது மோனோகமி சிறந்தது என்பதனால் நிகழவில்லை, அது தான் ஒரே சாத்தியமான வாய்ப்பு என்பதால் தான் சாத்தியமானது என ஓபி கூறுகிறார். பெரிய மூளை கொண்ட மெதுவான வளரும் ஆண் குழந்தைகளை வளர்க்க அதிக அளவிலான பெற்றோரின் ஈடுபாடு தேவைப்பட்டது. இது ஒரு தாயால் சமாளிக்கக்கூடியதை விட மிகுதியானது. ஆதி மனிதர்கள் ஒரு தார மணம் செய்பவர்களாகப் பரிணமித்ததாக வரலாறு கூறினாலும், அதனை தேர்வு செய்தவர்கள் ஒருவருக்கு மட்டும் உண்மையாக இருக்க சிரமப்பட்டனர். "வாழ்நாள் முழுவதும் ஒருவருடனே வாழ்ந்து, ஏமாற்றாத உயிரினங்களும் உள்ளன. ஆனால் அவை மிகவும் அரிது" என்கிறார் முனைவர் ஓபி. மேலும் அவர், "நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர் கிப்பன் குரங்குகள் தான். கிப்பன்கள் மற்ற ஜோடிகளிடம் இருந்து தனித்து வசிப்பதால், காட்டில் தங்கள் பகுதிக்குள் யார் வருகிறார்கள், யார் வருவதில்லை போன்றவற்றை கட்டுப்படுத்துவது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எளிதாக இருந்தது." "ஆனால் மனிதர்கள் போன்ற அதிக ஆண்கள், அதிக பெண்கள் வாழும் குழுக்களில் நீங்கள் இருந்தால், அங்கு கட்டுப்படுத்துவது என்பது கடினம், உங்களின் துணை ஏமாற்றுகிறாரா இல்லையா என்று அறிவது கடினம்" என்கிறார். அந்த விதத்தில் பார்க்கையில் ஒரு தார மணம் என்பது இயற்கையான தேர்வு என்பதை விட பிழைக்கும் உத்தியாகவே உள்ளது. ஆனால் இதில் குறைகளும் உள்ளன. பந்தம் உருவாக்குவதன் பின்னணி என்ன? நாம் காதலில் விழுந்தாலோ அல்லது உண்மையாக இருந்தாலோ நம் மூளைகளில் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்தில் நரம்பியல் முனைவர் பட்ட மாணவரான சாரா ப்ளூமெந்தல், பிரேரி வோல்ஸ் என்கிற உயிரினத்தை ஆய்வு செய்து வருகிறார். இந்த சிறிய உயிரினங்கள், மனிதர்களைப் போல நீண்ட கால பிணைப்புகளை மேற்கொள்பவை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரேரி வோல்ஸின் மூளையில் அதிக அளவிலான ஆக்ஸிடாஸின் ரிசப்டர்கள் உள்ளன. அவர்களின் மற்ற வோல் உறவினர்களைப் போல அல்லாமல் பிரேரி வோல்ஸின் மூளையில் அதிக அளவிலான ஆக்ஸிடாஸின் ரிசப்டர்கள் உள்ளன. ஆக்ஸிடாஸின் "கட்டிள் ஹார்மோன்" (cuddle hormone) என்றும் அழைக்கப்படுகிறது. இவை தொடுதல் ஏற்படுகிற சமயங்களில் மூளையில் வெளியாகும் நியூரோகெமிக்கல் ஆகும். "நாம் பரிசோதனை முறையில் பிரேரி வோல்ஸ்களில் உள்ள ஆக்ஸிடாஸின் அளவை சீண்டினால் அவர்களால் வலுவான பந்தத்தை உருவாக்க முடியவில்லை. அவர்களின் துணைகளுடன் குறைவான நேரத்தையே செலவிடுகின்றனர்" என்றார் ப்ளூமெந்தல். பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதர்களிடமும் இதே போன்ற ஆக்ஸிடாஸின் அமைப்பு தான் உள்ளது, நம்முடைய மூளை பந்தம் மேற்கொள்வதை நேர்மறையாக அணுகுவதற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆனால் மற்றொரு கெமிக்கலான டோபமைன், அர்ப்பணிப்பு என்பதற்கு மாறாக புதுமையை நோக்கி நம்மை தள்ளுகிறது. பந்தத்தின் தொடக்க கட்டத்தில் நம்முடைய மூளையில் டோபமைன் நிரம்பி வழிகிறது, இது ஈர்ப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை தூண்டுகிறது. பந்தம் உருவான பிறகு டோபமைன் வடிவங்கள் மாறுகின்றன. பல கணவன்கள் கொண்ட பெண்கள் ஒரு தார மணத்திற்கான பரிணாம வாதம் இருந்தாலும், மனித கலாச்சாரங்கள் எப்போதுமே பல தரப்பட்ட உறவு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் முனைவர் கேட்டி ஸ்டார்க்வெதர், நேபாள், திபெதி தொடங்கி ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்கா என உலகம் முழுவது, 50-க்கும் மேற்பட்ட பாலியண்ட்ரி சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளார். பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது ஒரு தார மணத்திற்கான பரிணாம வாதம் இருந்தாலும், மனித கலாச்சாரங்கள் எப்போதுமே பல தரப்பட்ட உறவு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் முனைவர் கேட்டி ஸ்டார்க்வெதர், நேபாள், திபெதி தொடங்கி ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்கா என உலகம் முழுவது, 50-க்கும் மேற்பட்ட பாலியண்ட்ரி சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளார். பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது. பாலிஜினியை (ஒரு ஆண் பல மனைவிகள் வைத்திருப்பது) விட பாலியண்ட்ரி அரிதானது என்றாலும் அந்த கூற்றை நம்ப முடியாத ஒன்றாகப் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கிறார் ஸ்டார்க்வெதர். "பல பார்ட்னர்கள் வைத்திருப்பதன் மூலம் பெண்கள் பொருளாதார ரீதியாக பலன் அடையலாம். ஒருவரின் முதன்மையான கணவன் இறந்தாலோ அல்லது சில பூர்வகுடி வட அமெரிக்க குழுக்களிடம் இருப்பதைப் போன்று நீண்ட காலம் கணவன் காணாமல் போனாலோ மாற்று திட்டம் கையில் வைத்திருப்பது சிறந்தது தான்" என அவர் கூறுகிறார். சில சந்தர்ப்பங்களில், பல தார ஏற்பாடுகள் மரபணு நன்மைகளையும் வழங்கியுள்ளன. "மக்கள் அதிகமான நோய்வாய்ப்பட்டு அதனால் உயிரிழக்கும் சூழல்களில், நீங்கள் சற்று வேறு விதமான மரபணு அமைப்பு கொண்ட பல பிள்ளைகளைக் கொண்டிருந்தால் நீங்கள் நல்ல நிலையில் தான் இருப்பீர்கள்" என ஸ்டார்க்வெதர் விவரிக்கிறார். "அவர்கள் நடப்பு சூழலில் நன்றாகப் பொருந்திப் போவார்கள்" என்றும் தெரிவித்தார். ஆனால் பல தார முறையில் சவால்களும் இல்லாமல் இல்லை. பல உறவுகளைச் சமாளிப்பதற்கு, நேரம், உணர்வியல் சக்தி மற்றும் பேச்சுவார்த்தை தேவைப்படும். "நீங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி பல துணைகள் வைத்திருப்பது மிகவும் கடினமானது. பொருளாதார ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் சரி அது மிகவும் கடினம். ஒரு தார மணம் என்பது எண்ணிக்கை அளவில் மிகவும் பொதுவான திருமண வடிவமாக இருப்பதற்கு இது தான் முதன்மை காரணம் என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார் ஸ்டார்க்வெதர். பாலிஅமோரி அனுபவம் எப்படி உள்ளது? அலினாவுக்கு அவருடைய முந்தைய ரிலேஷன்ஷிப்பில் மோனோகமி வேலை செய்யவில்லை என்கிறார். தற்போது பாலிஅமோர் உறவில் இருக்கும் அவர் பல சிக்கலான உணர்வுகளைக் கடந்து வருகிறார். பொறாமை என்பது மிகவும் கடினமாகவும் வலுவாகவும் இருக்கும் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். "ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில், இந்த உணர்வுகளில் பெரும்பாலானவை நம்முடைய பார்ட்னர் நம்மிடம் நேர்மையாக இல்லை என்கிற உணர்வில் இருந்து தான் வருகின்றன. அவர் நேர்மையாக தான் இருக்கிறார் எனத் தெரிவது பொறாமை உணர்வை சமாளிக்க உதவுகிறது" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிலருக்கு பல தார முறை என்பது உணர்வியல் சுதந்திரம் மற்றும் பொருளாதார நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. பொறாமை என்பது பெரிய பிரச்னை இல்லை என அவரின் பார்ட்னர் கூறுகிறார். "பல ஆரோக்கியமான உறவுகளை சமாளிக்க தேவைப்படும் நேரம் மற்றும் முயற்சி பெரும் சுமையாக இருக்கலாம்" என்றார். அவர்கள் இருவருமே இது சரியானது தான் என்கின்றனர். முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிகள் எதுவும் இல்லை என்கிறார் அலினா. மேலும் அவர், "அது உங்களை உரையாட வைக்கிறது, மற்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் அதை மேற்கொள்ள மாட்டீர்கள், அது தான் எங்கள் உறவை வலுவானதாக்குகிறது" என்றார். எனவே, நாம் இயற்கையில் ஒரு தார தன்மை கொண்டவர்களா எனக் கேள்வி எழுப்பினால் ஆம் மற்றும் இல்லை என்கிற இரண்டுமே தான் பதிலாக அமையும். வரலாறு மற்றும் கலாச்சாரங்கள் முழுவதுமே, மனிதர்களின் தங்களின் சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற பல வகையான உறவு முறைகளை உருவாக்கியுள்ளனர். சிலருக்கு பல தார முறை என்பது உணர்வியல் சுதந்திரம் மற்றும் பொருளாதார நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. ஆனால் பிறருக்கு, காதலைக் கடத்திச் செல்ல ஒரு தார மணம் என்பது எளிமையான மற்றும் சமாளிக்கக்கூடிய வழியாக உள்ளது. மனிதர்கள் நெகிழ்வாக இருக்க பரிணமித்துள்ளனர். இது நாம் உறவுகள் வைத்திருப்பது மற்றும் திருமணம் செய்து கொள்ளும் முறை ஆகியவற்றை உள்ளடக்கும் எனக் கூறும் ஸ்டார்க்வெதர் "நாம் உலகின் அனைத்து விதமான சுற்றுச்சூழலிலும் வாழ்கிறோம். அதற்கு நாம் கொண்டிருக்கும் நெகிழ்வுத்தன்மை மற்றும் அணுகுமுறையே காரணம்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39xe3mj21ro
  10. தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்! நடிகரும், மக்கள் நீதி மய்யம் (MNM) தலைவருமான கமல்ஹாசன் இன்று (25) மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகமானார். பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக கமல்ஹாசன், “நான் இன்று டெல்லியில் பதவியேற்று எனது பெயரைப் பதிவு செய்யப் போகிறேன். ஒரு இந்தியனாக எனக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையுடன் இந்தக் கடமையை நிறைவேற்றப் போகிறேன் என்று கூறினார். மூத்த நடிகர் கமல்ஹாசன் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டபோது சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்த கரகோஷம் சபையில் எழுந்தது. கமல்ஹாசன் மாநிலங்களவையில் நுழைந்தது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. ஏனெனில் அவர் முதல் முறையாக தேசிய சட்டமன்றப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். 69 வயதான அரசியல்வாதி ஜூன் 12 அன்று திமுக தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊழல், கிராமப்புற மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை எதிர்த்துப் போராடுவதை மையமாகக் கொண்டு 2017 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தனது கட்சியைத் தொடங்கினார். 2019 மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி சுமார் 4 சதவீத வாக்குகளைப் பெற்றது. பின்னர் அவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அங்கு கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440613
  11. கள்ளு அப்பம் புளிக்க வைக்கவும் பாவிக்கிறவை.அதோட கள்ளு உடம்புக்கு குளிர்ச்சி தரும் எண்டும் சொல்லுறவை.கள்ளு கெமிக்கல் சேர்க்காத இயற்கை தந்த மது பானம். அதை அளவோடு பருகினால் வாழ்க்கை முழுவதும் ஆனந்தம்...ஆனந்தம்.😍
  12. ஸ்ரீலங்கா போறேனு ஒரு நண்பர் கிட்ட சொல்லவும் எப்படானு ஆரமிச்சு எப்ப வருவனு அவளோ பரவசமா ஆனான். ஏன் இப்ப இவன் சந்திரமுகில ஜோதிகா ஒட்டியாணத்த பாத்த மாதிரி இவளோ பரவசமாகுறான் ஒரு வேல சரக்கு வாங்கியார சொல்லுவான் போலனு மைன்ட்ல யோசிக்கறப்பயே..... வரும் போது மறக்காம தொதல் அல்வா வாங்கிட்டு வானு சொன்னான். அதென்னடா இங்கலாம் கிடைக்காத அல்வா அங்க ஸ்பெசலா? இங்கயும் நிறைய இடத்துல கிடைக்குது ஆனா அந்த டேஸ்ட் இங்க எங்கயுமே வரல வேற லெவல் வேற லெவல்னு யூடியூபர் மாதிரி ரிவியூ தந்துட்ருந்தான். வாங்கிட்டு வரலனா வெளுத்துவிட்ருவேன் பாத்துக்கனு வேற கொஞ்சம் ஓவராதான் பண்ணான். சர்ரா சர்ரா டியூட்டி ப்ரீல சரக்கு வாங்கி வர சொல்லும் நண்பர்களுக்கு மத்தியில் அல்வா வாங்கி வர சொல்ற நண்பர்களை சம்பாதிச்சு வைச்சுருக்க என்னை நினைத்து எனக்கே பெருமையா இருந்தது. சினிமாலலாம் அப்படியே கிராபிக்ஸ்ல 40-50 அடிக்கு உயர்வாங்களே அப்படி உயரமா தெரிஞ்சேன். நா ஊருக்கு கிளம்பறத நியாவகம் வைச்சு கிளம்ப முன்னாடி போன் வேற செஞ்சு நியாவகப்படுத்தினான். பேற நியாவகம் இல்ல அதெங்க நியாவகம் இருக்க போகுதுனு இங்கேந்து கிளம்பற முன்னயே நண்பர்கள்கிட்ட மெசேஜ் போட்டு வைச்சேன்...எங்க கிடைக்குமோ மறக்காம வாங்கி குடுத்துடுங்க இல்லனா இங்க என்ன ஒருத்தன் விடமாட்டான்னு. நினைத்தது மாதிரியே அந்த விஷயம் சுத்தமா மறந்து போச்சு. ஆனா நா சொன்னத நியாவகம் வைத்து நண்பர்கள் மறக்காம ஆளாளுக்கு வாங்கி தந்து குடுத்தப்ப ரொம்பவே ஆச்சரியமாருந்தது. ❤️ யாழ்பானம் ஏர்போர்ட் செக்கிங்ல கூட ஏதோனு பைய பிரிச்சு காட்ட சொல்ல தொதல் அல்வானு சொன்னதுமே சார் தொதல் அல்வாவாம் சார்னு சல்யூட் அடிக்காத குறையாக விட்டு விட்டனர். தொதல் அல்வா நம்மூர் ராமநாதபுரம் பக்கம் கீழக்கரை ஸ்பசலாம். இலங்கைலயும் ஸ்பெசல்....சும்மா சொல்லக்கூடாது அவளோ தரம்😋நிஜமா அவளோ சுவை.. திருநெல்வேலி அல்வால தேங்காய்ப்பால் ஊத்தின மாதியே இருந்தது அதோட சுவை😋 எனக்கு மட்டும் இல்லாம வீட்ல நான் தந்த நண்பர்கள்னு எல்லாருக்குமே அவளோ பிடிச்சுது.நல்லாருக்குனு இப்ப வரை சொல்லிட்டே இருக்காங்க. இப்ப என்னைய விட கேட்டத நியாவகம் வைச்சிருந்து மறக்காம வாங்கி தந்து அனுப்பிய அந்த நண்பர்கள் உயரமாக தெரிகின்றனர். படித்ததில் பிடித்தது.
  13. எம்மீதான இனவழிப்பிற்கெதிராகச் சர்வதேசத்தில் எந்த நாடும் செயற்படுவதை எப்படி இந்தியா தடுத்து நிறுத்தியதோ அதனையே இன்று பலஸ்த்தீனர்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனவழிப்பினை பிரான்ஸ் அல்லது அதே நிலைப்பாட்டினையுடைய பிற நாடுகள் நிறுத்த முயன்றாலும் அமெரிக்கா முன்னின்று அவற்றையெல்லாம் தடுத்து வருகிறது. முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்ட நேரடியான தாக்குதல்கள் மூலமான படுகொலைகள், பட்டிணியினூடான படுகொலைகள் போன்று பலஸ்த்தீனத்தில் திட்டமிட்டே இஸ்ரேல் அழிக்கிறது. 2009 சிங்கள இனவாதத்தினைக் கையிலெடுத்து, தனது சந்ததியின் அரசியல் இருப்பிற்காக தமிழினவழிப்பினை மேற்கொண்ட மகிந்தவைப்போல, தனது அரசியல் ஆதாயத்திற்காக கடும்போக்கு யூதர்களைக் கூடவைத்துக்கொண்டு நெத்தன்யாகு பலஸ்த்தீன இனவழிப்பை நடத்தி வருகிறான். இன்று நடக்கும் இனவழிப்பினைத் தடுப்பதற்கு பிரான்ஸ் மட்டுமன்றி ஏனைய நாடுகளும் பலஸ்த்தீன தேசத்தை அங்கீகரிக்க முன்வர வேண்டும். இஸ்ரேலின் போரிற்கான அமெரிக்க ஆதரவினைத் தளர்த்த இன்னும் பல நாடுகள் பிரான்ஸைப் பிந்தொடர வேண்டும்.
  14. இங்கிலாந்து, ஜேர்மனி, ஒல்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, இத்தாலி, சுவிஸ், சுவீடன், பின்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற தமிழ் மக்கள் அதிகம் வசிக்கின்ற நாடுகளுக்கு விசா இல்லாமல் செய்திருப்பது பணத்தையும், நேரத்தையும் சேமிக்கக் கூடியதாக இருக்கும். இந்த இலவச விசா வழங்கும் திட்டம் ஒரு மாதத்திற்கு மட்டுமா, அல்லது அதற்கு மேலுமா என்ற தகவல் கிடைத்தால் அறியத்தரவும். இனி என்ன ... அடுத்த ஹொலிடேக்கு, பெட்டியை கட்ட வேண்டியதுதான். 😂 தகவலுக்கு நன்றி ஏராளன்.
  15. உலகப்புகழ் பெற்ற கீழக்கரை தொதல் அல்வா .......... ! 😀
  16. ஓட்ல்ட் ட்ரபோர்ட்டில் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இங்கிலாந்து அணி 433 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்துள்ளது. களத்தில் ஜோ ரூட் 121 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 36 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காம்ல் உள்ளனர். இங்கிலாந்து 75 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக பாவம் பாரத் அணி சகலவிக்கட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
  17. சாத்தான், நீங்கள் சிங்களவரைப் பற்றி எழுதியிருப்பவையெல்லாம் சரி! ஆனால், வயதுக் கணக்கு பிழையல்லவா? தமிழர் ஒருவரை அப்பாவியாகக் காட்ட, அரிவரியில் படித்த எண்கணிதத்தை அப்படியே மறந்து விடுவோம் என்கிறீர்களா? இந்த முட்டாள் தனங்களால் சிங்களவன் அலறி அடித்துப் பயந்து விடுவான் என்கிறீர்களா அல்லது, உங்களைப் போன்ற தமிழர்கள் "புதுக் கணக்கு" சிஸ்ரத்தைக் கண்டு பிடிப்பார்கள் என்கிறீர்களா😂? உங்களிடமே முட்டாள் தனத்தையும், வெறுமையையும் வைத்துக் கொண்டு ஏனையோரை "பூச்சியங்கள்" என்று சொல்வதற்கும் ஒரு தனித்துவமான devil may care மனநிலை வேண்டும்! உங்களிடம் அது மட்டும் நிறைய இருக்கிறது என நினைக்கிறேன்😎!
  18. எம்.ஆர்.ஐ எப்படி வேலை செய்கிறது என்று தெரியாதோரும், இந்த அறைகளுக்கு வெளியே சிவப்பு எழுத்தில் ஒட்டியிருக்கும் அறிவிப்பை வாசிக்க இயலாதோருக்கும் கூட எம்.ஆர்.ஐ எமன் தான்! ஆகவே, "ஆங்கிலம் ஒரு மொழியே ஒழிய அது அறிவல்ல" என்பதை மீள ஆராய வேண்டும்!
  19. நாடாளுமன்றத்திலும் "இந்தியன்" திரைப்படத்தை ஒளிபரப்பி அங்கிருக்கும் ஊழல்வாதிகளை வெருட்ட வேண்டும்.🤣
  20. என்ன இருந்தாலும் ஆயுத வியாபாரிகளுக்கு இன்னொரு சந்தை உருவாகி விட்டது.
  21. தம்மை தாமே “இரும்பு மனிதர்” என நினைத்து கொள்வோர்தான் எம் ஆர் ஐ களுக்கு பயப்படவேண்டும் ஐயா. ஏனையோருக்கு அவை நோய் அறிகுறிகளை கண்டு பிடித்து, நிவாரணம் தேட உதவும் கருகிவிகள்.
  22. அந்நாட்களில் ஆடிஅமாவாசை விரதம் பிடிப்பவர்கள் கீரிமலைக்குப் போகும் வழியில் பற்றைகளில் அந்தப் பருவத்தில் மட்டும் இந்தக் காய்கள் நிறையக் காய்த்திருக்கும் ........ வரும்போதுஅவற்றைப் பிடுங்கிக் கொண்டு வருவார்கள் . ......... இதனைப் பொரித்து விரதத்துக்கு சாப்பிடுமுன் முதலாவதாக இந்தக் காயின் பொரியலை சப்புவார்கள் . ......அவ்வளவு கசப்பு . ........ அது ஏன் என்றால் ஐயாவின் நினைவையும் கவலையையும் மறப்பதற்கு ( ஆச்சி சொன்னவ ) ........ சரி .....இது கிடைக்காத இடங்களில் என்ன செய்யலாம் . ........ பாவக்காயை பொரித்து (அதுவும் பேய் பாவக்காய் என்று ஒரு சிறிய குண்டுப் பாவக்காய் உண்டு, சாதாரண பாவைக்காயும் பரவாயில்லை ) அதை முதலில் சப்பிவிட்டு ஏனையவற்றைச் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம் . ........! நான் பிறந்த நாளில் இருந்து இந்த விரதம் பிடித்து வருகிறேன் . ....... மாவிட்டபுரத்தில் இருந்து கொல்லங்கலட்டியூடாக வெறுங்கால் நடையாக சின்னையா என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு செல்வார் . ......... பின் அவரோடு சைக்கிளில் ........ பின், நான் தனியாக சைக்கிளில் கீரிமலை சென்று கடலில் நீராடிவிட்டு வந்தது இன்றும் மனதில் பசுமையாக . .......!
  23. ஆட்சிமாற்றத்தைத் தவிர்த்த ஈரான் அடுத்து? – பகுதி 2 24 Jul 2025, 9:38 AM பாஸ்கர் செல்வராஜ் ஆட்சிமாற்றத்துக்கான போரில் அசையாமல் நி(வெ)ன்ற ஈரான் இதுவரையிலும் மின்சாரம், எண்ணெய், எரிவாயு கொண்டு உற்பத்தி செய்து இணையம் மூலம் இணைத்து இயக்கும் பொருள்கள் என்பதாக உலக உற்பத்தியும் அதற்குத் தேவையான டாலர் உலகப்பணமாகவும் அதனை மையப்படுத்திய உலக ஒழுங்கும் இருந்து வந்தது. அடுத்த மாற்று எரிபொருளில் உற்பத்தியாகி இயங்கும் மின்னணு மின்கல பொருள் உற்பத்திக்கான தொழில்நுட்ப மூலதன பொருள்களின் உற்பத்தியை சீனா அடைந்து ரசியா, ஈரான் போன்ற நாடுகள் டாலர் அல்லாத நாணயங்களில் மரபான எரிபொருளை விற்க முனைந்த நிலையில் டாலர்மைய உலக ஒழுங்கு உடைப்பைக் கண்டு வந்தது. டாலரின் பங்கு வணிகத்தில் குறைந்து வந்தது. இதனால் சந்தையில் டாலர் மூலதனம் மிகுந்திருந்த போது கொரோனா வந்தது. அந்தக் காலத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியைத் தவிர்க்க வெளியிடப்பட்ட டாலரும் சந்தைக்குள் நுழைந்ததால் சந்தை டாலர் மிகைமூலதனத்தால் நிரம்பி வழிந்தது. அது உலகம் முழுக்க பாய்ந்து சொத்துகளின் மதிப்பை உயர்த்தி உலக நாணயங்களின் மதிப்பை நீர்த்து மக்களின் வருமானத்தைக் குறைத்து பொருள்களின் விலைவாசியை உயர்த்தி அதனை வாங்கி நுகர்ந்த மக்களின் வாங்கும்திறனைக் குறைத்ததால் பொருள் விற்பனை சரிந்து வருகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மாற்று உற்பத்தியில் ஈடுபடும் மதிப்புமிக்க சீனர்களின் சொத்தை டாலர் மூலதனம் அடைய முயல்கிறது. இப்படி டாலர்மைய உற்பத்தி உடைப்பைத் தடுத்து மாற்று உற்பத்தியின் சொத்துகளை அடைவதற்கான பொருளாதாரத் தேவைக்கான அமெரிக்கர்களின் போர் அரசியலே உலக அரசியலாக நடந்து வருகிறது. ஈரானின் மீதான தாக்குதலின் நோக்கம் சீனர்களுடனான வணிகப்போர், மின்னணு தொழில்நுட்ப போர்கள் தோல்வியடைந்த நிலையில் முந்தைய சனநாயகக் கட்சியின் பைடன் நிர்வாகம் உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முனைந்து ரசியாவைத் தூண்டி எழுந்த போரின் வழியாக ரசியாவைத் துண்டாடி நிலைகுலைய வைத்து அவர்களின் வளத்தையும் சந்தையையும் கைப்பற்றி டாலர்மைய எரிபொருள் ஒழுங்கைக் காக்க முனைந்தது. ரசிய வீழ்ச்சியில் தனிமைப்படும் சீனாவை வீழ்த்தி அடுத்து அதன் சொத்தைக் கைப்பற்றுவது அந்நோக்கத்தின் நீட்சி. அந்த ஆட்சிமாற்ற சீர்குலைவு முயற்சியில் தோல்வியடைந்து ரசியாவின் ஐரோப்பிய சந்தையை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அடுத்து வந்த குடியரசுக் கட்சியின் டிரம்ப் நிர்வாகம் அந்தத் தோல்வியை ஒப்புக்கொண்டு ரசியர்களுடன் சேர்ந்து கொண்டு ஐரோப்பிய சந்தையைப் பகிர்ந்து கொண்டு ஈரானை விலக்கி சீனாவைத் தனிமைப்படுத்த முயன்றது. அதனை ஐரோப்பியர்கள் தடுத்துக் கொண்டு ரசியர்களும் ஒத்துழைக்க மறுத்த நிலையில் டாலர் அல்லாத நாணயத்தில் எரிபொருள் விற்கும் ஈரானின் பக்கம் திரும்பினார்கள். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அதன் எரிபொருளை ஐரோப்பிய, இந்திய சந்தைகளுக்கு டாலரில் ஏற்றுமதி செய்து ஐரோப்பிய, மேற்காசிய, இந்தியப் பொருளாதார மண்டலத்தை (IMEC) ஏற்படுத்தி சீன, ரசிய நாடுகளைத் தனிமைப்படுத்தும் நோக்கில் அதன் மீது தாக்குதலைத் தொடுத்து இருக்கிறார்கள். தாக்குதல் தந்திரங்கள், உத்திகள் நோக்கத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் வளத்தைக் காத்து நிற்கும் ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படையின் தலைமைகளையும் அணு ஆய்வு விஞ்ஞானிகளையும் கொன்று ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை அழித்தும் எதிர்த்தாக்குதல் தொடுக்க வழியின்றி ஏவுகணைகளை ஏவும் ஏவூர்திகளை அழித்தும் அதிர்ச்சியூட்டி நிலைகுலைய வைத்தார்கள். இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஈரானியர்கள் குழப்பமான அரசியல் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்புரட்சியில் ஈடுபடவில்லை. மாறாக உடனடியாக இழப்புகளை ஏற்று மாற்று ஏற்படுகளைச் செய்து இசுரேலின் மீதான தாக்குதலைத் தொடங்கியது ஈரான். முதல் ஆட்சிமாற்ற நோக்கம் தோல்வியடைந்த நிலையில் அடுத்த எதிர்த்து தாக்கும் ஏவுகணை வலிமையை இல்லாமல் செய்யும் வகையில் ஏவூர்திகள், ஏவுகணை உற்பத்தி நிலைகள், ஆயுத சேமிப்பு கிடங்குகள், இராணுவ கட்டுப்பாட்டு மையங்களின் மீது இசுரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. எரிபொருள் ஏற்றுமதி மையங்களைத் தாக்கி ஈரானின் பொருளாதாரத்தைத் தகர்க்கலாம் என்றாலும் பதிலுக்கு எவரும் எரிபொருளை ஏற்றுமதி செய்யாதவாறு அவர்கள் ஹெர்முஸ் நீரிணையை மூடினால் அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரம் தகர்க்கப்படும் என்பதால் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. ஈரானின் மீது தாக்குதல் நடத்தும் விமானங்களை வீழ்த்த முடியாத நிலையில் அவர்களின் ஆயுத உற்பத்தி மற்றும் விமான தளத்தோடு அந்தச் சிறிய நாட்டைத் தாங்கி நிற்கும் மதிப்புமிக்க மின்னணு, உயிரியல், இராணுவ உற்பத்தி மற்றும் ஆய்வுக்கூடங்கள், வைர பங்குச்சந்தை மையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ஹைபா துறைமுகம் போன்ற பொருளாதார நிலைகளைத் தாக்கியது ஈரான். ஈரானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் செயலற்று போனதால் எந்த எதிர்ப்பும் இன்றி இசுரேலிய போர் விமானங்கள் புகுந்து அந்நாட்டைத் தாக்கின. அதேபோல இசுரேலின் மூன்று அடுக்கு இரும்புக் கவிகை (iron dome), டேவிட் கவண் (David sling), தாட் (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளால் பாதுகாக்கப்பட்ட முக்கிய நிலைகளைத் தாக்கி இசுரேலிய வான்வெளி பாதுகாப்பை உடைக்கும் வல்லமையைக் காட்டியது ஈரான். இசுரேல் தாக்குதல் அளவைக் கூட்டுவதற்கு ஏற்ப மீவிரைவு ஏவுகணைகள் (hypersonic), அதிக சேதம் விளைவிக்கும் அரை டன் முதல் ஒன்றரை டன் வரை வெடிபொருள் நிரப்பிய ஏவுகணைகள் என ஒவ்வொன்றாக அனுப்பி அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. முதலில் எண்பது விழுக்காடு ஏவுகணைகளைத் தடுத்த இசுரேல் பின்னர் ஐம்பது 50-60 விழுக்காடு மட்டுமே தடுக்க முடிந்தது. ஒரு வாரத்திற்கு மேல் தொடர்ந்த தாக்குதலில் இசுரேலின் இரண்டாவது இலக்கான ஈரானின் ஏவுகணை வலிமையை உடைக்கும் முயற்சியும் தோல்வி அடைந்து ஏவுகணை எதிர்ப்பும் பலமிழந்து பெருமளவு சேதத்தை எதிர்கொண்ட நிலையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் இல்லையேல் தாக்குதல் பலத்தைக் கூட்ட அமெரிக்கா நேரடியாகப் போரில் இறங்க வேண்டும் என்ற நிலை. இறுதியில் வெற்றி யாருக்கு? போர் நிறுத்தம் அறிவிப்பதற்கு முன்பாக பாதுகாப்பற்று நிற்கும் ஈரானிய வான்வெளியைப் பயன்படுத்தி அதன் அணு ஆயுத கட்டமைப்புகளை அழித்து மூன்றாவது நோக்கத்தையேனும் அடையும் சாத்தியம் இருந்தது. மற்ற நேரங்களில் அதிக எடைகொண்ட வெடிக்குண்டுகளைத் தாங்கிச் செல்லும் பி-2 போர்விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் வாய்ப்புண்டு. வலிமையான கிரானைட் பாறைகளாலான மலையின்கீழ் தொண்ணூறு மீட்டருக்கும் கீழ் இருக்கும் யுரேனிய செறிவூட்டும் நிலையத்தைத் தகர்க்க அணு குண்டுகளால் மட்டுமே முடியும். அவ்வாறான அளவில் சிறிய போர்த்தந்திர குண்டை (strategic bomb) அமெரிக்கா பயன்படுத்தினால் உலகக் கண்டனங்களை எதிர்கொள்வதோடு மற்றவர்கள் பயன்படுத்தவும் வழிசெய்ததாகிவிடும். பதுங்குகுழிகளைத் தகர்க்கும் ஜிபியூ குண்டுகளைப் பயன்படுத்தினால் சுரங்கத்தைத் தகர்த்து செறிவூட்டும் நிலையத்தைச் செயலற்றதாக்க முடியும் என்று சொல்ல முடியாத குழப்ப நிலை. இறுதியில் நுழைவு வாயில்கள் சுரங்கத்துக்கான காற்றோட்ட திறப்புகள் உள்ள இடத்தில் குறிபார்த்து ஒன்றிற்கும் மேற்பட்ட குண்டுகளை வீசினால் குகை தாகர்ந்துவிடும் வாய்ப்பு இருப்பதாகக் கண்டறிந்து பன்னிரண்டு குண்டுகள் வீசப்பட்டது. எதிர்பார்த்த விளைவுகள் ஏற்பட்டதற்கான அறிகுறியான அணுக்கசிவு, பாறைகள் நொறுங்கி விழுந்த பள்ளம் என எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில் அமெரிக்கா தாக்குதல் வெற்றி என அறிவித்து ஈரானுடன் பேசி போர் நிறுத்தம் அறிவித்தது. இசுரேல் நிறுத்தினால் நாங்களும் நிறுத்திக் கொள்கிறோம்; அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது அடையாளப்பூர்வமான தாக்குதல் நடத்துவோம் என்று பேசி வைத்துக்கொண்டு அவ்வாறே ஈரான் தாக்குதலும் நடத்தி போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. தெரிந்த தாக்குதலைத் தடுத்து நிறுத்தி சேதம் இல்லை என்று ட்ரம்ப் அறிவித்தார். ஆனாலும் அங்கிருந்த பெரிய அலைக்கொடியைச் (antenna) சேதப்படுத்தி அமெரிக்கர்களின் எறிகணை எதிர்ப்பின் போதாமையை அம்பலப்படுத்தி தனது எறிகணை வலிமையையை ஈரான் காட்டி இருக்கிறது. இறுதியில் ஆட்சி மாற்றம், ஏவுகணை வலிமையைத் தகர்த்தல், அணுவாயுத திட்டத்தை அழித்தல் ஆகிய மூன்று நோக்கங்களிலும் வெற்றியடையாமல் பின்வாங்கிய அமெரிக்க-இசுரேலிய நாடுகளின் ஈரானுடனான குறுகியகால போர் தோல்வியில் முடிவடைந்து இருக்கிறது. பெருமிழப்புகளைச் சந்தித்தாலும் எதிரிகள் தமது இலக்குகளை அடைய விடாமல் தடுத்து நிலைத்து நின்றதன் மூலம் ஈரான் இந்தப் போரில் வெற்றிபெற்று இருக்கிறது. தோல்வியை அடுத்த மாற்றங்கள் ஈரான்-இசுரேலிய மோதலின் மையம் இந்தப் பகுதியின் எரிபொருளை ஏற்றுமதி செய்தும், ஆசிய-ஐரோப்பிய வணிகத்தின் மையமாக விளங்கியும் அதன் பலனை யார் அறுவடை செய்வது என்பதுதான். இரண்டு நாடுகளின் அமைவிடம் அதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. இந்த இலக்கை எட்ட, இசுரேல் ஈரானை நிலைகுலைக்க வைக்க முயல்வதைப்போல, ஈரான் தன்னைத் தக்கவைத்துக் கொண்டு தனது எதிர்த்தாக்குதலின் மூலம் எதிரியின் அரசியல் பொருளாதார நிலைத்தன்மையை உடைத்து நிலைகுலைய வைப்பதாகவே இருக்கமுடியும். இசுரேலின் பொருளாதார இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு நெதன்யாகுவின் அரசு நிலைக்கவும் அவர் சிறைக்குச் செல்வதைத் தவிர்க்கவும் போர்களின் வழியாகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஈரானின் நேரடியான ஏவுகணைத் தாக்குதல்கள் அதனை வேகப்படுத்தி இருக்கின்றன. உயிருக்குப் பயந்து இரயில், மகிழுந்து நிறுத்தங்களில் படுக்கையை விரித்து படுக்கவைத்த ஈரானின் தாக்குதல் யூத மக்களின் மனதில் பாதுகாப்பின்மையை விதைத்து இருக்கிறது. அதனால் போர் நின்றால் அங்கே அரசியல் போராட்டம் வெடித்து அந்த அரசு நிலைக்கும் வாய்ப்பில்லை எனும் நிலையில் ஈரானின் போர்க்கள உத்தி போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதாகவே இருக்க முடியும். தாக்குதலை மேலும் அதிகப்படுத்தி அமெரிக்கர்களை உள்ளே கொண்டுவந்து அவர்களை மேற்காசியாவில் இருந்து வெளியேற்றி இருநாடுகளையும் ஒருசேர வெல்லும் வல்லமை ஈரானிடம் இல்லை. அப்படியான முடிவு போரை நீட்டித்து இசுரேலைக் காத்து ஈரானின் இழப்பை மேலும் கூட்டுவதாகவே இருக்கும். அவ்வாறான தவறைச் செய்யாமல் போர் நிறுத்த முடிவெடுத்து தற்காத்தல், தாக்குதல் ஆகிய இரண்டிலும் வெற்றிபெற்று இருக்கிறது ஈரான். ஆயுத வலிமை கொண்டு நடத்தப்படும் போரரசியல் உழைத்து உருவாக்கிய உற்பத்தி பொருள் செல்வத்தைக் காப்பது (defensive) உழைக்காமல் மற்றவர்களின் உற்பத்தி செல்வத்தைக் கைப்பற்றுவது (offensive) ஆகிய இரண்டு நோக்கங்களைக் கொண்டது. சீன, ரசிய, ஈரானிய போர்களில் அமெரிக்காவின் தோல்வி அவர்களின் தகவல்தொடர்பு, நிதிய, போர்க் கருவிகளினாலான ஆயுதங்கள் கொள்ளையில் ஈடுபட்டு வெற்றிபெறும் வலிமையை இழந்து விட்டத்தையும் மற்ற நாடுகள் உற்பத்தியைத் தற்காத்துக் கொள்ளும் வலிமையைப் பெருக்கிக் கொண்டதையும் காட்டுகிறது. நேரடி, மறைமுகப் போர்களில் ஈடுபட்டு டிரில்லியன் கணக்கில் செலவுசெய்து தோற்றுவிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் இனி சீன, ரசிய, ஈரானிய நாடுகளுடன் நேரடி போர்களில் ஈடுபட்டு மடிவது அல்லது தனது இடத்தை விட்டுக்கொடுத்து மற்றவர்களுடன் உலகைப் பகிர்ந்து கொண்டு இணையாக பல்துருவ உலகில் வாழ்வது ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் தெரிவு செய்யவேண்டும். போரில் வென்று உடைந்துவிட்ட டாலர்மைய ஒற்றைத்துருவ உலகை மீட்பது இனி சாத்தியமே இல்லை. ஓரிரு ஆண்டுகளில் புதிய உற்பத்தியைப் பெருக்கி அதற்கான உலக சந்தையைக் கைப்பற்றுவதும் சாத்தியமில்லை. இனி பேச்சுவார்த்தையின் மூலம் வரிவிதிப்பு போரைப் பயன்படுத்தி உருட்டி மிரட்டி இழப்பைக் குறைத்து பலனைக் கூட்ட மட்டுமே முடியும். எனவே புதிய பல்துருவ உலகமே எதார்த்தமானது. அதன் தொடக்கம் அனைத்து உற்பத்தி வலிமை மிக்க நாடுகளும் சமமாக பொதுவாக அவரவர் நாணயங்களில் வணிகம் செய்வது என்பதாக மாறிவிட்டது. இதன் முழுமை போர்கள் மற்றும் போராட்டத்தின் ஊடாக எல்லோர்க்கும் பொதுவான மதிப்பு விதியை உருவாக்கிக் கொள்வதாக இருக்கும். அப்படியான விதியின் அடிப்படையிலான உலக ஒழுங்கு முழுமையாக நடைமுறைக்கு வரும் நாள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய ஏகாதிபத்திய காலகட்டத்தின் இறுதியை அறிவிக்கும் நாளாகவும் அதனுள் கருவாகி உருவாகி வளர்ந்து நிற்கும் சோசலிச சமூகம் உறுதியாக சோசலிச மாற்றத்தை நோக்கி நகர்ந்து விட்டதை உறுதி செய்யும் நாளாகவும் இருக்கும் https://minnambalam.com/iran-wins-war-for-regime-change/
  24. இப்போது யாழ்களத்திலும் நுளையப் பயமாக இருக்கிறது. அங்கும் ஒன்றுரண்டு எம் ஆர் ஐ இயந்திரங்கள் இருப்பதுபோல் தெரிகிறது.🫨
  25. என்னைய்யா வர்த்தக விமானி என்பது காற்றாடி இயந்திரத்தில் பூச்சி மருந்து அடிக்கும் வேலை என கூறினீர்கள். எனக்கு அதை வாசிக்க வெள்ளை ஆடை அணிந்துகொண்டு நுளம்பு புகை அடிப்பவர்தான் நினைவில் வந்தார். இதற்கு மேல் விமானத்துறை பற்றி சிறப்பாக யாராவது விபரிக்க முடியுமா? எதிர்கால சந்ததியிடம் யாராவது விமானி ஆக விருப்பமா என்று கேட்டால் பய பிள்ளைகள் பின்னங்கால்கள் பிடரியில அடிக்க திரும்பி பார்க்காமல் ஓட்டம் தான் எடுப்பாங்கள் போல.
  26. நான் பொதுவாகவே கூறினேன். மற்றும்படி உங்கள் தயக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
  27. இந்து கோவிலுக்கான போர் என்றபடியால் புலம்பெயர் ஈழதமிழ் பிரமுகர்களும் போர்களத்தில் இறங்கும் சாத்திய கூறுகள் உண்டு என்று பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்
  28. யாரையும் திருத்துவதற்கு நாம் படைக்கப்படவில்லை பிறர் திருந்தும் படி நம் வாழ்க்கையை வாழ்ந்து காட்டினால் போதும்...
  29. ATPL = Airline Transport Pilot Licence என்பதுதான் சரி என்று எண்ணுகிறேன். (Airline transport என்பது Air Transport இல் ஒரு பகுதியை மட்டும் குறிப்பது) ஆம் குறைந்தது 1500 மணித்தியாலங்கள்.
  30. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Usha Ravikumar ·tneodoSprsl479305tg2740g a1g752tfui80i5uut784atcl85i21um1h2g · ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், "ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும்கொடுக்க முடியவில்லை" என்று முறையிட்டனர். இதைக்கேட்ட பரமஹம்சர் சொன்னார். "இன்றைக்குக் கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்புகள் உள்ளே வராது" அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன. " "உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது, பரமஹம்சர் சொன்னார் "எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்களும் வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி முன்னேறாமலேயே இருந்து விடுவார்கள்".......!
  31. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருவாட்டில் மேம்பட்ட புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகியவை உள்ளன. கட்டுரை தகவல் அன்பு வாகினி பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் கருவாடு, தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இது பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மீனை சூரிய ஒளியில் காயவைத்து கருவாடு ஆக்கும் முறை இருந்ததை சங்க இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன. உலகளாவிய மீன் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தி 16.5 மில்லியன் மெட்ரிக் டன். இதில் 75% நன்னீர் மீன்பிடிப்பு, 25% கடல் மீன்பிடிப்பு. புதிதாகப் பிடித்த மீனைவிட நீண்ட காலம் பாதுகாக்கப்படக் கூடிய கருவாடு எனப்படும் உணவு வகை கடலோர மக்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களின் பொருளாதாரத்திற்கும் ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. கருவாட்டில் மேம்பட்ட புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால் நம் உடல்நலத்தைக் காக்கும் ஒரு 'சூப்பர் ஃபுட்' ஆகவும் இது கருதப்படுகிறது. கருவாட்டில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் சிறிய அளவில் உட்கொண்டாலே நமக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்துவிடும். ஆனால், கருவாட்டின் ஊட்டச்சத்து முக்கியத்துவம், உணவுப் பாதுகாப்பில் அதன் பங்கு, சிறிய மீன்களின் சிறப்புகள், மருத்துவர்களின் எச்சரிக்கைகள், நவீன தீர்வுகள் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதுகுறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம். கருவாட்டின் ஊட்டச்சத்து எவ்வளவு மதிப்பு வாய்ந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நூறு கிராம் கருவாட்டில் 60-80% வரை புரதம் உள்ளது தமிழர்களின் பாரம்பரிய சமையல் முறையில், கருவாடு பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. கருவாட்டுக் குழம்பு, கருவாட்டுப் பொடி சாம்பார், கருவாட்டு வறுவல் போன்றவை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பிரபலமான உணவு வகைகள். குறிப்பாக கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் கருவாடு அன்றாட உணவில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கருவாடு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு சக்தி வாய்ந்த உணவு. 100 கிராம் கருவாட்டில் 60-80% வரை புரதம் உள்ளது. இது இறைச்சி, முட்டையைவிட அதிகமான அளவு. இந்த மேம்பட்ட புரதம் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது. இது எளிதில் செரிமானமாகி, தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. சிறிய மீன்களான நெத்திலி, கெளுத்தி, பாறை போன்றவற்றில் கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இவை எலும்புகளின் வலிமைக்கும், ரத்த சோகையைத் தடுப்பதற்கும் அவசியம். சிறிய மீன்களின் முழு உடலையும் (எலும்புகள் உள்பட) உண்ண முடியும் என்பதால், இவை பெரிய மீன்களைவிட 2-3 மடங்கு அதிக கால்சியம், 5-10 மடங்கு அதிக இரும்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக இந்திய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (NIN) ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது குறிப்பாக வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருவாட்டில் வைட்டமின் டி, ஏ, பி12 போன்ற முக்கியமான வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன மேலும், ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை, இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், குழந்தைகளின் கற்றல் திறன், நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகின்றன. இவை ரத்த அழுத்தம், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. கருவாட்டில் வைட்டமின் டி, ஏ, பி12 போன்ற முக்கியமான வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. வைட்டமின் டி எலும்புகளின் வலிமைக்கு அவசியமானது. வைட்டமின் ஏ கண்பார்வை, நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது. வைட்டமின் பி12 நரம்பு மண்டலம், ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு மிகவும் அவசியம். துத்தநாகம், செலீனியம் போன்ற தாது உப்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) சமீபத்திய ஆய்வுகளும், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள நாடுகளில் கருவாட்டைப் பயன்படுத்தி அதைக் குறைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. கருவாட்டை எவ்வாறு பாதுகாப்பான முறையில் உணவுத் திட்டங்களில் ஒருங்கிணைக்கலாம் என்பதற்கான நடைமுறைப் பரிந்துரைகளையும் அந்த அமைப்பு வழங்குகிறது. எந்த கருவாட்டில் என்ன ஊட்டச்சத்து அதிகம் உள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நெத்திலி, கெளுத்தி, பாறை, வாளை, சூரை போன்ற மீன் வகைகள் கருவாடு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன உலகம் முழுவதும், குறிப்பாக வளரும் நாடுகளில், உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு பெரிய சவாலாக உள்ளது. இந்த சவாலைச் சமாளிக்க சிறிய மீன்கள் ஒரு முக்கியத் தீர்வாக மாறியுள்ளன. சிறிய மீன்கள் விலை குறைவாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் அவற்றை 'ஊட்டச்சத்து சூப்பர் ஸ்டார்ஸ்' என்று உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அழைக்கிறது. வங்கதேசம், கம்போடியா போன்ற நாடுகளில் சிறிய மீன்கள் உள்ளூர் மக்களின் அன்றாட ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இந்தியாவில் ஒடிசா மாநிலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவை (ICDS ) திட்டத்தில் சிறுமீன் கருவாட்டை குழந்தைகளின் உணவில் சேர்த்து, ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் குறைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றிகரமான முடிவுகளை வெளியிட்டுள்ளது. கருவாடு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மீன் வகைகளும் முக்கியமானவை. நெத்திலி, கெளுத்தி, பாறை, வாளை, சூரை போன்றவை பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு மீன் வகையும் தனித்துவமான ஊட்டச்சத்துச் சிறப்புகளைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, நெத்திலி, கால்சியம் அதிகம் கொண்டது. கெளுத்தி, ஓமேகா-3 கொழுப்பு அமிலங்களை அதிகம் கொண்டது. பாறை புரதத்தை அதிக அளவில் கொண்டது. கருவாடு தயாரிக்கும் முறைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதை வெயிலில் 3-5 நாட்கள் காய வைப்பது, கருவாடு தயாரிக்கும் முறைகளில் ஒன்று. கருவாடு தயாரிப்பதற்கு, கடலில் பிடித்த மீன்களைக் கழுவிச் சுத்தம் செய்து வெயிலில் 3-5 நாட்கள் காய வைக்கப்படும். மாதக்கணக்கில் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக இதில் 20% முதல் 30% வரை உப்பு சேர்த்து காயவைக்கப்படுகிறது. புகை போடுவதன் மூலம் கருவாடு தயாரிப்பது மற்றொரு பாரம்பரிய முறை. குறிப்பாக தூத்துக்குடி, மண்டபம் போன்ற பகுதிகளில் இந்த முறை பிரபலமாக உள்ளது. இதில், விறகுகளை எரிப்பதில் வெளியாகும் புகையில் மீன்களைக் காய வைக்கின்றனர். இது கருவாட்டிற்குத் தனித்துவமான சுவையைக் கொடுப்பதோடு, நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் அதைப் பாதுகாக்கவும் உதவுகிறது. நொதித்தல் மூலம் கருவாடு தயாரிப்பது, மற்றொரு சுவையான முறை. இதில் உப்புடன் சேர்த்து மீன்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நொதிக்க வைக்கப்படுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் 'மாசி' எனப்படும் கருவாட்டு பொடி தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். இந்த நடைமுறையில் புரதங்கள் பகுதியளவு ஹைட்ரோலைஸ் ஆகி செரிமானத்தை எளிதாக்குகின்றன. மருத்துவர்கள் கருவாட்டைத் தவிர்க்கச் சொல்வது ஏன்? கருவாட்டுக்கு ஊட்டச்சத்து நன்மைகள் பல இருக்கும் போதிலும், சில சுகாதார சவால்களும் அதில் உள்ளன. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் கருவாட்டில் உப்பு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக, 100 கிராம் கருவாட்டில் 5-10 கிராம் உப்பு இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் 20-30% உப்பு சேர்க்கப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இதைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம். அதோடு கருவாடு தயாரிப்பு சுகாதாரமின்றி இருந்தால், அதில் நுண்ணுயிர்த் தொற்று அபாயம் இருக்கவும் வாய்ப்புள்ளது. சுத்தமற்ற சூழலில் காயவைப்பது, பூச்சிகள், மண் கலப்படம் போன்றவற்றுக்கான சாத்தியம் உள்ளது. சில வேளைகளில் கெட்டுப்போன மீனை கருவாடு தயாரிக்க சிலர் பயன்படுத்துவதால், உணவுப் பாதுகாப்பில் மிகப்பெரிய சவால் உள்ளது. புகை போடுவதன் மூலம் தயாரிக்கப்படும் கருவாட்டில் பாலிசைக்ளிக் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) உருவாகலாம். இவை புற்றுநோய்க்கான காரணிகளாக இருக்கலாம். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள், அதிகம் புகை போடப்பட்ட உணவு வகைகளை உட்கொள்வது சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் எனக் காட்டுகின்றன. கருவாட்டில் கன உலோகங்கள் கூடுதல் அளவில் சேர்ந்துவிடும் அபாயமும் உள்ளது. குறிப்பாக கடல் மாசுபாடு அதிகமுள்ள பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களில் பாதரசம், காட்மியம் போன்ற கன உலோகங்கள் அதிக அளவில் இருக்கலாம். இவை நீண்ட காலத்திற்கு உடலில் சேர்ந்து நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இந்தக் காரணங்களாலேயே, கருவாட்டு உணவு வகைகளை மருத்துவர்கள் தவிர்க்குமாறு வலியுறுத்துகிறார்கள். இருப்பினும், இந்த சவால்கள் அனைத்தையும் சரியான உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் முறைகளின் வாயிலாகச் சரிசெய்ய முடியும். குறைந்த உப்பு, சுகாதாரமான உற்பத்தி முறைகள், நவீனப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தரமான கருவாடு மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். பாதுகாப்பான கருவாடு தயாரிப்பு முறைகள் என்ன? இந்தப் பிரச்னைகளுக்கு சூரிய ஒளியில் (solar dryer) காய வைக்கப்படும் மீன் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இந்த முறையில் குறைந்த உப்பு (5 சதவிகிதத்திற்கும் குறைவாக) பயன்படுத்தப்படுகிறது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதால் பாக்டீரியா தொற்று ஏற்படுவதில்லை. இயற்கையான ஊட்டச்சத்துகள் பாதுகாக்கப்படுகின்றன. இப்படிச் செய்வது வெப்பப்படுத்துவதால் இழக்கப்படும் வைட்டமின் ஏ, ஒமேகா-3 போன்ற ஊட்டச்சத்துகளைப் பாதுகாக்கிறது. பூச்சிகள், தூசி மற்றும் பிற மாசுபடுத்திகளில் இருந்து மீனைப் பாதுகாக்கிறது. இதனால் கருவாட்டின் சுகாதாரம் மேம்படுகிறது. இத்தகைய முறையில் கருவாடு தயாரிக்க குறைந்த நேரமே போதுமானது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஓர் அம்சம். கருவாட்டின் பொருளாதார, சமூகப் பங்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறு மீன்களில் தயாரிக்கப்படும் கருவாடுகள் அதிக ஊட்டச்சத்து கொண்டவை கருவாடு தயாரிப்பும் விற்பனையும் கடல்சார் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக சிறு குறு மீனவர்கள், மகளிர் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் கடற்கரை சமூகங்களுக்கு இது வாழ்வாதார ஆதாரமாக உள்ளது. 70% கடலோர மீனவப் பெண்கள் மீனை காய வைத்தல், வகைப் பிரித்தல், விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளனர். கருவாடு உற்பத்தியின் பொருளாதார முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள சில புள்ளிவிவரங்கள் உதவுகின்றன. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 50,000 டன் கருவாடு உற்பத்தி செய்யப்படுகிறது. இது ரூ.500 கோடிக்கும் மேல் மதிப்பு கொண்டது. கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (MPEDA) தரவுகள்படி, இந்தியாவின் மொத்த கருவாடு ஏற்றுமதியில் தமிழ்நாடு 25% பங்களிக்கிறது. இந்தியாவின் கருவாடு உள்நாட்டில் மட்டுமின்றி, குறிப்பிடத்தக்க ஏற்றுமதி சாத்தியத்தையும் கொண்டுள்ளது. காயவைத்த மீன்கள், அது சார்ந்த பொருட்கள் இலங்கை, வங்கதேசம், நேபாளம், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நைஜீரியா, கானா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நவீன தொழில்நுட்பங்கள், புதுமுறை தீர்வுகள் கருவாடு உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு பல நன்மைகளை வழங்குகிறது. இது கருவாட்டின் தரம், பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்துகிறது. சூரிய உலர்த்திகள் (Solar dryers) மிகவும் பயனுள்ள தொழில்நுட்பமாக உள்ளன. இவை பாரம்பரிய வெயில் உலர்த்தும் முறையைவிட மேம்பட்டவை. சூரிய உலர்த்தியின் மூடப்பட்ட கட்டமைப்பால் பூச்சிகள், தூசிகளில் இருந்து மீன் பாதுகாக்கப்படுகிறது. இந்த முறையில் வெப்பநிலை, காற்றோட்டம் கட்டுப்படுத்தப்படுவதால், காய வைக்கும் நேரம் குறைகிறது, ஊட்டச்சத்துகள் பாதுகாக்கப்படுகின்றன. சூரிய உலர்த்தியில் மீன் காய வைக்கப்படும்போது, உப்பின் அளவை கணிசமாகக் குறைக்க முடியும். இதற்கு 5% உப்பு மட்டுமே போதுமானது. உப்பின் அளவை 5 சதவிதமாகக் குறைப்பதன் மூலம், ஆரோக்கியம் தொடர்பான அபாயங்களைக் குறைக்க முடியும். சில நவீன முறைகளில், உப்புக்குப் பதிலாக பிற பாதுகாப்புப் பொருட்கள் (சிட்ரிக் அமிலம், ரோஸ்மேரி சாறு போன்றவை) பயன்படுத்தப்படுகின்றன, அவை உப்பின் பாதுகாப்புப் பண்புகளைப் போலவே செயல்படுகின்றன. காற்றில்லா முறையில் உறையில் அடைக்கும் (Vaccum packaging) தொழில்நுட்பம் கருவாட்டின் பயன்படுத்தத்தக்க காலத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இது பாக்டீரிய வளர்ச்சியைத் தடுத்து, பல மாதங்களுக்கு கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. உணவுத் திட்டங்களில் கருவாட்டை ஒருங்கிணைத்தல் பட மூலாதாரம்,GETTY IMAGES கருவாட்டின் ஊட்டச்சத்து நன்மைகளை அதிகமான மக்கள் பெறவும், ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் குறைக்கவும், அரசு, சமூகத் திட்டங்களில் இதை ஒருங்கிணைப்பது அவசியம். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவை (ICDS), மதிய உணவுத் திட்டங்களில் கருவாட்டை சேர்ப்பது ஒரு சிறந்த முன்முயற்சி. ஒடிசா மாநிலம் இதில் முன்னோடியாக உள்ளது. அங்கு குழந்தைகளுக்கு மீன் பொடி வழங்கப்படுகிறது. இதே மாதிரியை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம். பள்ளி ஊட்டச்சத்துத் திட்டங்களில் கருவாட்டைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கருவாட்டுப் பொடியை சாம்பார் அல்லது குழம்புகளில் சேர்ப்பதன் மூலம் குழந்தைகளின் புரதம், தாதுப்பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கர்ப்பிணி, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துத் திட்டங்களில் கருவாட்டைச் சேர்ப்பது மற்றொரு நல்ல வாய்ப்பு. கருவாட்டில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம் அவர்களுக்கு மிகவும் அவசியம். குறைந்த உப்புகொண்ட கருவாட்டுப் பொடியை அவர்களுக்கான உணவில் சேர்த்துக் கொடுக்கலாம். கருவாடு தமிழர்களின் பாரம்பரிய ஊட்டச்சத்து மூலப்பொருளாகும். இதன் மேம்பட்ட புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அனைவருக்கும், குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். - கட்டுரையாளர் உணவுத் தொழில்நுட்ப வல்லுநராக இருக்கிறார். இதில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் அவரது சொந்தக் கருத்துகளே. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1wpvr9lq0xo
  32. 1- ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மகிழ்ச்சி சந்தோசம் திருப்பி மற்றும் சந்ததி பற்றிய தூர நோக்கு இருக்கும். எனது சந்ததி விருத்தி சார்ந்த பயமே அவனை தடுக்க காரணம் 2- அது பரதேசி வாழ்க்கை அல்ல அது வேறு ஓர் வாழ்க்கை பரிமானம். எமது அடுத்த அடுத்த தலைமுறை அதற்குள் தான் பயணிக்கும். என்னால் முடிந்த வரை ஒரு தலைமுறையை தள்ளிவிட்டு உள்ளேன். அவ்வளவு தான்.
  33. விசுகர் ஏற்கனவே தன் பிள்ளைகளின் ஒவ்வொரு படிமுறை வளர்ச்சியையும் பற்றிப் பெருமைப் படும் ஒரு தந்தை தான். அவர் மட்டுமா? நாம் எல்லோரும் அப்படித் தான். ஆனால், அதைப் பற்றியா இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்? இதை ஏன் பத்திரிகையில், அல்லது இணைய செய்தித் தளத்தில் போட வேண்டிய தேவை வருகிறது எனப் பேசிக் கொண்டிருக்கிறோம். தனிப் பட்ட விருப்பு, வெறுப்பு என்று கடந்து போகலாம். ஆனால், இது கருத்துக் களம், எனவே வாழ்த்தும் சொல்லி விட்டு, "இது பெரிய செய்தி அல்ல" என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறோம். மற்றபடி , அனுஜன் எந்தக் குற்றமும் செய்யவில்லை, அவரை யாரும் கண்டிக்கவும் இல்லை. அவர் படிப்படியாக முன்னேறி, அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து, அமெரிக்க Naval Academy இல் பயிற்சி விமானியாகி, விண்கலத்தைச் செலுத்தும் விண்வெளி வீரராகவும் வரக் கூடும். அது செய்தியாகும்! அப்படி வளர வேண்டுமென்பது தான் எங்கள் வாழ்த்தும்.
  34. மகன் ஆசைப்படுகின்றானே என அப்போது நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள் என வைப்போம். உங்கள் மகன் வர்த்தக விமானி ஆகும் போது மகிழ்ச்சி அடைவீர்களா இல்லையா? உங்கள் மகன் ஐரோப்பிய விமான நிறுவனம் ஒன்றில் விமானியாக வேலை பார்த்தால் பெருமைப்படுவீர்களா இல்லையா? விமானிகளுக்கு பிள்ளைகள், குடும்பம் இல்லை பரதேசி வாழ்க்கை வாழ்கின்றார்களா என்பது எனக்கு தெரியவில்லை.
  35. “செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!” செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே! பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே! விலங்குக்கும் சில பண்பாடு உண்டே விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே விளக்கம் இல்லாத மதபோதனை எனோ களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை! வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  36. பெற்ற மகனும் கட்டிய மனைவியும் நடக்கப்போவது தெரியாமல் நிம்மதியாக தூங்க, பாதகன் சொல்லிக்கொள்ளாமலேயே பிரிந்து சென்றான். அவன் உடலை மறைத்த நயவஞ்சக சீடர், அவர் ஞானம் எய்திவிட்டார் என்கிற பொய்யுரைக்க அந்தப் பொய்யில் மதத்தை தோற்றுவித்து வயிறு வளர்த்தனர் அவர்தம் சீடர். அதன் உண்மையை புரிந்துகொண்ட சிங்களம் தன் பங்குக்கு புத்தனை வைத்து கொலை, கொள்ளையடிக்கிறது. புத்தன் தான் கடவுளல்ல, தான் ஒரு ஞானி என்பதை வெளிப்படுத்தாமல் மறைத்ததும் நயவஞ்சகமே!
  37. அனைத்துப்புதைகுழிகளையும் தோண்டட்டும் ஆனால் முடிவில் செம்ணி உட்பட அனைத்தும் புலிகளால் செய்யபட்ட கொலைகள் என்று முடிக்காமல் விட்டால் சரி. அத்துடன் சர்வதேச நடுநிலையாளர்கள் முன்னிலையில் தோண்டுவது சிறந்தது. அந்தக்குழுவில் இந்தியர் இருக்கக் கூடாது. அவர்களால் செய்யப்பட்ட கொலைகளுக்காகவும் தமிழர் விரோத மன நிலையிலும் எல்லாவற்றிற்கும் புலிகள் மீதே பழி போடுவார்கள்.
  38. சமூகவலைத்தள உலகம் பகுதியில் பகிரப்பட்ட நா.த.க கட்சி சார்பான காணோளி நீக்கப்பட்டது. யாழ் களத்தில் கட்சி சார்பான, கட்சி கூட்டங்களின் மற்றும் பிரச்சார ரீதியிலான எந்த ஒரு காணோளியும் இணைக்கப்படுதல் கள விதிகளை மீறும் செயல் என்பதை கவனத்தில் எடுக்கவும்.
  39. சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற பல தனி மனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும், அநாவசியமான கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன. மேலும், கருத்தாடற்பண்பைக் கடைப்பிடிக்காத கள உறுப்பினர் மீது இறுக்கமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  40. "என் இனமே என் சனமே” (செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை) மேல் வானம் தாழ்வாகத் தொங்கியது, அதுவும் துக்கம் அனுசரிப்பது போல. சிவப்பு பூமியின் அடியில், நீண்ட நேரம் அலறல்கள், பிரார்த்தனைகள் மற்றும் கனவுகளுடன் மங்கின. முப்பத்தி மூன்றாவது மண்டை ஓடு மெதுவாகத் தோண்டி எடுக்கப்பட்டதால், இந்த வாரம் அமைதி மீண்டும் உடைந்தது. அதன் அருகில் - ஒரு சிறு குழந்தையின் பள்ளிப் பை, காலத்தால் மங்கிப்போனது, ஆனால் அதன் இருப்பு பல கதைகளைச் சொல்லப்போகுது. மறக்கப்பட்ட ஒரு தாலாட்டை உச்சரிப்பது போல, தமிழ் எழுத்துக்கள் அதன் குறுக்கே நடனமாடின. அந்தக் செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அருகே, கூடியிருந்த பார்வையாளர்களிடையே, ஐம்பது அகவை மதிக்கத்தக்க அனந்தி என்ற பெண், 1996 ஆம் ஆண்டு ஒரு சோதனைச் சாவடியில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போன தனது தம்பி சிவகுமாரின் புகைப்படத்தை கையில் ஏந்தி நின்றாள். "கண்ணா, நீ அழுதாயா? உன்னைப் பேச அனுமதித்தார்களா? நீ இறந்தபோது நீ தனியாக இருந்தாயா?" இப்படியான அவளின் மனஉளைச்சலுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை, அவள் பதில்களை எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் இன்று, ஏதோ மாற்றம் ஏற்பட்டது. குழந்தையின் எலும்புகளுக்கு அருகில் ஒரு சிறிய கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. அவளுடைய இதயம் பதைபதைத்தது. அவள் கண்கள் கலங்கின. ஒருகாலத்தில் தம்பி அந்தக் கண்ணாடியை, பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தைக்கு வாங்க உதவியிருந்தார் என்பது, அவளுக்குத் திடீரென நினைவில் வந்தது. 1948-இல் சுதந்திரம் வந்தபின் தொடங்கியது – ‘சிங்களமொழி மட்டும்’, கல்வித் தரப்படுத்தல், நில ஆக்கிரமிப்பு, மற்றும் சிறைகள் இல்லாத கொலைகள்! அதன் உச்சியில் – 1996: கிருஷாந்தி குமாரசுவாமி. ஒரு பள்ளிச்சிறுமி. செம்மணி இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது. தாயார், சகோதரர், உறவினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது வரை முறையான விசாரணை அல்லது அதற்கு ஏற்ற நீதி இல்லை. எதோ ஆரம்பித்தார்கள். தீர்ப்பளித்தார்கள். கிடங்கில் போட்டார்கள். புண்ணிய புத்த பூமியில் புத்தரின் முறையான போதனையைக் கேட்க ஒருவரும் இல்லை. அங்கொன்று இங்கொன்றாக பலர் பரந்து இருக்கிறார்கள். ஆனால், மௌனமாக? ஏன் புத்த சிலைகள் கூட ஆக்கிரமிப்பில் தான் ஈடுபடுகிறது! அவர்களின் உடல்கள் செம்மணியில்த் தான் புதைக்கப்பட்டன. அவள் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தன. இன்று, தடயவியல் நிபுணர் எச்சங்களின் மீது மண்டியிட்டு எதோ தேடுகிறார். அவருடன், கூட இருந்த தொல்பொருள் பேராசிரியர் மண் வடிவங்களை ஆய்வு செய்கிறார். மேலும் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அறிவியலைப் பயன்படுத்தி திகிலை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவ்வளவு மட்டும் தான். அது மட்டும் தான் அவர்களால் முடியும் ! இவை சாதாரண மரணங்கள் அல்ல. இவை போரில் உயிரிழந்தவை அல்ல. இவர்கள் பொதுமக்கள் - பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், கடைக்காரர்கள் - கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள். மீட்கப்பட்ட எலும்புகள், பழிவாங்கலைப் பற்றி கிசுகிசுக்கவில்லை ஆனால் அவை சாட்சியைக் கோருகின்றன. அவை நீதியைக் கேட்கின்றன. ஆனந்திக்கு அவை தன்னிடம் கேட்பது போலவே இருந்தது! அவள் செம்மணியில் கூடியது துக்கம் பின்பற்ற மட்டுமல்ல, உண்மை அறிந்து நினைவு கூருவதற்காகவும். மண்ணில் உள்ள எலும்புகள் வெறும் அட்டூழியத்தின் சான்றுகள் மட்டுமல்ல - அவை தமிழ் தேசத்தின் ஆன்மாவின் துண்டுகள் என்பதை எடுத்துக் காட்டவுமே! அவள் அந்தக் கண்ணாடியைப் பற்றி சொல்ல நினைத்தாள், ஆனால் கேட்கத்தான் அதிகாரிகள் இல்லை. அங்கு இருந்த படை வீரர்களும் அரச அதிகாரிகளும் அவளை, அகழாய்வு செய்பவர்களிடமோ, அதை மேற்பார்வையிடம் நீதிபதியிடமோ செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால், அவளை காவல் நிலையத்தில் வந்து சொல்லும்படி கட்டளையிட்டனர். காவல் நிலையத்தில் எத்தனை முறைப்பாடுகள், சான்றுகள் தூங்கிக் கிடக்கின்றன என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அது அவளின் அனுபவம் கூட. அவள் அன்று இரவே மக்களுக்கு தன் இணையத் தளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்தாள். என் இனமே என் சனமே … நம்மை அழிக்க முயன்றவர்கள், நம்மை மறக்கச் சொல்லுகிறார்கள். ஆனால், இந்தக் குழந்தைகளின் எலும்புகள் பேசுகின்றன. கண்ணாடியும் பாடசாலைப் பையும் சத்தமில்லா சாட்சிகள்! சம தருமம் இல்லா நீதியின் முகத்தை, நீதி மன்றமில்லாத இராணுவ கெடுபிடியை, இன அழிப்பின் பிசாசை, இந்த செம்மண் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது! நாம் அழக்கூடாது. நாம் பேச வேண்டும். நாம் பதிவு செய்ய வேண்டும். செம்மண் நாம் உறங்கும் இடமல்ல — நம் சத்தியத்துக்கான மன்றம்! அங்கு புதைந்துள்ள ஒவ்வொரு எலும்பும், “நீதி” என்றொரு குரல்! நீதி ஒரு நாள் பிறக்கும். அந்த நாளுக்காக — நாம் மறவாமலிருப்பதே நாம் செய்யும் பெரிய போராட்டம்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.