Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    3049
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    38754
    Posts
  3. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    16468
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19112
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/25/25 in all areas

  1. 7. சிரமத்திற்கு மன்னிக்கவும் -------------------------------------------- சிட்னியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸீக்கு திரும்பி வரும் விமானத்தின் புறப்படும் நேரம் காலை ஒன்பது மணி என்றிருந்தது. கிட்டத்தட்ட 14 மணி நேரங்கள் பயணம். இதை விட விமானத்தில் பறப்பதற்கு மோசமான ஒரு நேரத்தை கண்டுபிடிப்பது கடினம். காலைத் தூக்கம் முடிந்து, எழும்பி விமான நிலையம் வந்தால், அதற்குப் பின் பறக்கும் நீண்ட பயணத்தில் தூக்கம் எங்கே வரப் போகின்றது. ஆனாலும் விமானத்தில் விளக்குகளை அணைத்து இருட்டாக்கப் போகின்றார்கள். பலரும் கண்ணை ஒரு மறைப்பால் மறைத்து, மெல்லிய மற்றும் சற்றே கடுமையான சத்தங்களுடன் தூங்கப் போகின்றார்கள். விமானப் பணிப்பெண்கள் இடையிடையே வந்து போகப் போகின்றார்கள். நான் முழித்தே இருக்கப் போகின்றேன் என்பதும் விளங்கியது. எத்தனையோ வருடங்களின் முன் எமிரேட்ஸ் விமானத்தில் இலங்கைக்கு போய்க் கொண்டிருக்கும் போது, விமானத்தில் கடைசியாக படம் பார்த்திருக்கின்றேன். அதன் பின்னர், அந்தப் படத்தால், விமானத்தில் படம் பார்ப்பதில் ஒரு பலத்த ஒவ்வாமை ஏற்பட்டு, பயணம் முழுவதும் முன்னால் இருக்கும் கறுப்புத் திரையே பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்திருந்தேன். விமானப் பயணத்தில் கடைசியாகப் பார்த்த அந்தப் படம் 'தெறி'. சில நண்பர்கள் ஏற்கனவே அந்தப் படத்தை சிலாகித்து சொல்லியிருந்தார்கள். அந்த நண்பர்களின் வரலாறு தெரிந்த நான் தான் கவனமாக இருந்திருக்கவேண்டும். ஆடம்பரமான ஒரு கடைத் தொகுதிக்கும், மலிவு விலை கடைத் தொகுதிக்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்று சிலவற்றை சொல்லிக் கொள்ளலாம். பொருட்களின் தரத்தில் இருக்கும் வேறுபாடு என்பது மிகப் பொதுவாக சொல்லப்படும் ஒரு வித்தியாசம். உதாரணமாக, அதிக விலையில் விற்கும் இடங்களில் விற்கப்படுபவை சாயம் போகாத, கசங்காத, நீண்டகாலம் நிற்கும் உடுப்புகள் என்று சொல்வார்கள். இங்கு அமெரிக்காவில் தொழில்நுட்பத்துறையில், வேறு பல துறைகளிலும் கூட, அணியும் ஆடைகளுக்கு எந்த மதிப்புமே கிடையாது. ஏதோ ஒன்றை போட்டுக் கொண்டு அலுவலகம் போனால் போதும். ஆள் நூறு, ஆடை பூச்சியம். சாயம் இருந்தாலும் போடலாம், சாயம் இழந்தாலும் போடலாம். போடும் உடுப்பு சாயம் போய், கசங்கி, அத்துடன் தலையையும் இழுக்காமல் அலுவலகம் போனால், ஆள் ஒரு அறிவுஜீவி போல என்று முதல் தோற்றத்தில் நம்புகின்றவர்களும் உண்டு. ஆனால் எது உண்மையோ, அது போகப் போக வெளியே வந்துவிடும். குறைவாகக் கதைப்பதும், கதைத்துக் கொண்டே நடுநடுவே அடிக்கடி கூரையை நிமிர்ந்து பார்ப்பதும் அறிவுஜீவி என்னும் பிம்பத்தை மேலும் சில காலத்துக்கு நீட்ட உதவலாம். இன்னொரு பெரிய வித்தியாசம் என்று சொல்லப்படுபவது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் இருக்கும் வேறுபாடுகள் என்கின்றனர். மலிவு விலைக் கடைகள் ஒரு அரச திணைக்களம் போல செயல்படுவார்கள். தியானத்தில் இருப்பவர்கள் போலக் கூட அங்கே சிலர் இருப்பார்கள். லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். உலகில் உள்ள மோசமான விமான நிலையங்கள் என்ற பட்டியலில் இது இருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனாலும் சிட்னி விமான நிலையத்தில் பொதிகளைப் போடும் இடம் 'வேற லெவல்' என்றே சொல்லவேண்டும். சிட்னி விமான நிலையத்தின் அந்தப் பகுதிக்கு அரச திணைக்களங்களே பல மடங்கு பரவாயில்லை என்று சொல்லலாம். வரிசையில் காத்திருக்கும் ஒருவரின் அலுவல்கள் முடிவதற்கே பத்து அல்லது இருபது நிமிடங்கள் போய்விடுகின்றது. ஐந்து அல்லது ஆறு பேர்களே எங்களுக்கு முன்னால் நின்றார்கள். ஆனால் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் அங்கே போனது. இதுவே வேறொரு விமான நிலையம் என்றால் ஒரு பத்து நிமிடங்களில் முடித்திருப்பார்கள். லாஸ் ஏஞ்சலீஸில் பொதிகளை எங்கள் கண் முன்னாலேயே தூக்கித் தூக்கி எறிந்திருப்பார்கள். பொதியின் உள்ளே இருக்கும் மஞ்சள் தூளும், மிளகாய் தூளும் கலந்து, நல்ல கறித்தூள் கிடைப்பதற்கு கூட சாத்தியங்கள் உண்டு. விமான நிலையத்தில் முற்றிலும் எழுந்தமானமாகவே ஓரிருவரை முழுச் சோதனைக்கு தெரிவு செய்கின்றார்கள் என்கின்றனர். அப்படித் தெரிவு செய்யப்படுபவர்களைப் பார்த்தால் அவர்கள் சொல்லும் எழுந்தமானம் பொய்யென்றே தெரியும். ஒரு கூட்டத்தில் எவர் எவரையெல்லாம் தெரிவு செய்வார்கள் என்றே சொல்லிவிடலாம். என்னைத் தெரிவு செய்தார்கள். காலணியை ஆராய்ந்தார்கள். நான் சிட்னிக்கு ஒரே ஒரு காலணியை மட்டுமே எடுத்துப் போயிருந்தேன். அங்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கால்பந்தாட்ட மைதானத்தில் அதே காலணியுடனேயே அநேக நாட்களில் ஓடியும் இருக்கின்றேன். திரும்பி வரும் பயணத்திற்கு முந்திய நாளில் கூட, பெரிய மழை ஒன்றின் பின் வந்த சிறிய மழைக்குள் ஓடியிருந்தேன். காலணி கொஞ்சம் உப்பியே இருந்தது. பின்னர் கைப் பொதியை திறந்து பார்த்தார்கள். 'எல்லாமே சாக்லெட்................' என்றார்கள். 'இங்கிருந்து வேறு என்ன கொண்டு போவது என்று தெரியவில்லை......................' என்றேன். இறுதியாக 'சிரமத்துக்கு மன்னிக்கவும், சுகமாக போய் வீடு சேருங்கள்.............' என்று சொன்னார்கள். எத்தனை தடவை தான் சிரமத்துக்கு மன்னிப்பது. 9/11 அனர்த்தம் நிகழ்ந்த அடுத்த அடுத்த நாட்களில் ஒரு நாள். வேலையில் மதியம் சாப்பிட்டு விட்டு, வழமை போலவே நடந்து கொண்டிருந்தேன். வீதியைக் கடந்து அடுத்த பக்கம் வந்தால் கடற்கரைக்கு செல்லும் ஒரு குறுக்கு வீதி இருக்கின்றது. அந்தக் குறுக்கு வீதியில் கடற்கரைக்கு செல்லும் முன்பே ஒரு சிறிய மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின் கீழே இன்னொரு வீதி கடற்கரையை ஒட்டிச் செல்லுகின்றது. நான் அந்த மேம்பாலத்தில் நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று சில போலீஸ் வாகனங்கள் என்னை மறித்து எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து நின்றன. 'எங்கே போகின்றீகள்...............' 'கடற்கரைக்கு...................' 'ஏன்.........................' 'தினமும் மதியம் போவேன்..............' 'எங்கே வேலை செய்கின்றீர்கள்..............' அங்கிருந்து பார்க்கும் போதே நான் வேலை செய்யும் அந்த உயர்ந்த கட்டிடம் தெரியும். அதைக் காட்டினேன். அடையாள அட்டை ஏதாவது இருக்கின்றதா என்றார்கள். கொடுத்தேன். ஒருவர் அதை எடுத்துக் கொண்டு அவர்களின் ஒரு வாகனத்துக்குப் போனார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தார். சிரமத்திற்கு மன்னிக்கவும், நீங்கள் போகலாம் என்றார்கள். அங்கே அப்படியே நின்று கொண்டிருந்தேன். முன்னர் சிறிது காலம் திருகோணமலையில் தங்கியிருந்த போது, ஒரு நாள் அங்கே தெருவில் நாங்கள் பலர் நின்று கதைத்துக் கொண்டிருந்தோம். சற்றுத் தள்ளி வேறு சிலரும் கூட்டமாக நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இராணுவத்தினர் அவர்களின் மோட்டார் சைக்கிளை சடாரென்று நிற்பாட்டி விட்டு, அருகே கதைத்துக் கொண்டு நின்ற ஒருவரை ஏதோ கேட்டு விட்டு, இரு கன்னங்களிலும் அறைந்து விட்டுப் போனார்கள். கையாலாகாத நிலையின் ஒரு உச்சத்தில் நாங்கள் அங்கே நின்று கொண்டிருந்தோம். இங்கு நான் மேம்பாலத்தின் மேல் அப்படியே நிற்பதைப் பார்த்த ஒரு காவலர் திரும்பி வந்தார். 'ஆர் யு ஓகே...............' 'ம்............ ஒன்றுமில்லை.............' 'நான் மிகவும் வருந்துகின்றேன்............' என்றவர், யாரோ ஒருவர் அவர்களின் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் அழைத்து, மேம்பாலத்தின் மேலே ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நிற்கின்றார் என்று அவசரத் தகவல் தெரிவித்ததாலேயே தாங்கள் இங்கே வந்ததாகச் சொன்னார். இது என்ன புதிதா எங்களுக்கு. (தொடரும்.......................)
  2. ராஜினி கொலையாளிகளை அம்பலப்படுத்திய பேரினவாதம்…! Vhg செப்டம்பர் 22, 2025 ராஜினி திராணகம அல்லது ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) இலங்கையில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். ராஜினி இராஜசிங்கம் 1989ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர், கூடவே யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும். ராஜினி, வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தின் தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் பெப்ரவரி 23, 1954 இல் பிறந்தார். நிர்மலா, சுமதி, வாசுகி ஆகியோர் இவரின் சகோதரிகள் ஆவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்துக் கொண்ட ராஜினி, 1973 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புலத்தில் இணைந்தார். அக்காலப்பகுதியில் மாணவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார். இதன் போது அரசியல் ஈடுபாட்டைக் கொண்ட மாணவர் தலைவரான தயாபால திராணகமவை சந்தித்தார். தயாபால திராணகம பின்னாளில் களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இணைந்து கொண்டார். 1977 இல் திராணகமவை ராஜினி மணந்து கொண்டார். அவர்களுக்கு நர்மதா (1978) ஷரிகா (1980) என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 1986 முதல் தயாபால திராணகம தலைமறைவாக இருக்கிறார். பட்டப்படிப்பின் பின்னர், 1978இல் பயிற்சி மருத்துவராக யாழ்ப்பாண மருத்துவமனையில் இணைந்தார். பயிற்சியின் பின்னர், 1979இல் இலங்கையின் மத்திய மலை நாட்டின் அப்புதளைக்கு அருகில் உள்ள அல்துமுல்லை என்ற இடத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். 1980 இல் ராஜினி போர் நிறைந்த நிலமான யாழ்ப்பாணம் திரும்பி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவப் புலத்தில் உடற் கூறியல் விரிவுரையாளராக இணைந்தார். 1983 இல் பொதுநலவாய புலமைப் பரிசில் பெற்று உடற் கூறியலில் துறையில் பட்டப்பின் படிப்பை மேற்கொள்ள இங்கிலாந்து சென்றார். அங்கு சென்ற ராஜினி, 1982 இல் பயங்கரவாத தவிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான தனது சகோதரி நிர்மலாவின் விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1982 இல் விடுதலைப் புலிகளின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிய நிர்மலா இங்கிலாந்து வந்தார். இதன் பிறகு ராஜினி விடுதலைப் புலிகளோடு தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ராஜினி விடுதலைப் புலிகளின் இங்கிலாந்து கிளையில் இணைந்து மனித உரிமை அமைப்புகளுக்கு இலங்கையின் நடப்புகளை வெளிப்படுத்தி வந்தார். 1986 இல் பட்டப்பின் படிப்பை முடித்து தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை திரும்பிய ராஜினி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவுத் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் கணித விரிவுரையாளராக பணியாற்றிய ராஜன் ஹூலுடனும், சிறிதரன், தயா சோமசுந்தரம் என்பவர்களுடன் இணைந்து 1990 இல் வெளியிடப்பட்ட முறிந்த பனை (The Broken Palmyra) என்ற ஆங்கில நூலை எழுதினார். இவர்கள் நால்வரும் இணைந்து 1988 இல் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை தொடங்கினர். செப்டம்பர் 21, 1989 அன்று பணியில் இருந்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். முறிந்த பனை நூலின் ஏனைய ஆசிரியர்களும் ராஜினியின் சகோதரி நிர்மலாவும் இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்ததாக குற்றம் சாட்டியிருந்தனர். ஆயினும் விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டு இந்திய படையினராலும் வரதராஜப் பெருமாளாலும் திட்டமிட்டுப் பரப்பட்டதாகவும் ராஜினியும் மற்றும் நான்குபேரும் இணைந்து வெளியிட்ட முறிந்தபனை ஆவணத்தில் இந்தியப் படைகளின் கொலைகள் சுட்டிக்காட்டப்பட்டதால் அவர்களில் ஒரு பிரிவினரும், ஈபிஆர்எல்எப் அமைப்பினரும் இணைந்து இந்தக் கொலையைச் செய்ததாகவும் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற தொடரில் தினமுரசு ஆசிரியர் அற்புதன் குறிப்பிட்டுள்ளார். கார்த்திக்,தோமஸ் என்ற இரண்டு ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களே யாழ் மாவட்ட ஈபிஆர்எல்எப் பொறுப்பாளரின் உத்தரவின் பெயரில் அந்தக் கொலையை செய்ததாகவும் அதில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கார்த்திக் பின்னர் ஈபிடிபியில் இணைந்து செயற்பட்டதாகவும் அந்தத் தொடரில் தெரிவித்துள்ளார்.அற்புதன் ஈபிடிபி அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நாட்களும் தமிழ் தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் மீது சேறடிப்பதற்காக இச்சம்பவத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றது சிறிலங்கா சிங்கள பேரினவாத அரசு. பேரினவாதத்தின் ஏவலைத் தலைமேல் ஏற்று இயங்கும், “சொந்த நலன்களுக்காகவும், அற்பமான விருப்பு வெறுப்புகளுக்காகவும், குறுகிய பழிவாங்கல்களுக்காகவும் சேர்ந்த சிறு கும்பலொன்று ” அயர்ச்சி கொள்ளாமல், “ராஜினியை விடுதலைப் புலிகளே கொலை செய்தார்கள்” என்று ஒரு தலைமுறைக்கே பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால், இன்று இந்த சிறு கும்பலின் நவதூவாரங்களிலும் சுண்ணாம்பை வைத்து அடைத்தது போன்றதொரு வேலையைச் செய்துவிட்டது சிங்கள பேரினவாத அரசு. 1998 ஆம் ஆண்டில் வெளிவந்த தினமுரசு பத்திரிக்கை ஒன்றில் அற்புதன் என்பவர் , ராஜினி இராஜசிங்கத்தை இந்திய அமைதிப்படையும், ஈபிஆர்எல்எப் அமைப்பும் இணைந்து படுகொலை செய்ததை அம்பலப்படுத்தி எழுதிய, அந்தக் கட்டுரையை கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி வெளியான சிங்கள அரசின் அதிகாரபுர்வ பத்திரிகை, “சிலுமின”வில், 23 ஆம் பக்கத்தில் மொழிபெயர்த்து பிரசுரித்திருந்தார்கள். அதே பக்கத்தில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட சமயம், விடுதலைப் புலிகளின் தலைவர் யாழ் சுதுமலை அம்மன் கோயில் வளாகத்தில் ஆற்றிய உரை தொடர்பாகவும் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கின்றது. பல வருடங்களுக்குப் பிறகு சிறிலங்கா அரசு இந்த விவகாரத்தை ஏன் கையில் எடுக்க வேண்டும்? அதைப் புரிந்து கொள்ள இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்ட காலப்பகுதியின் அரசியல் நிகழ்வுகளைப் படிக்க வேண்டும். கொழும்பு துறை முகத்தை இந்தியாவுக்கு கொடுப்பது தொடர்பான பிரச்சினை நடந்து கொண்டிருந்த காலம் அது. சனாதிபதி கோட்டபாய துறைமுகத்தை இந்தியாவுக்கு கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார். அரசாங்க தரப்பின் பிறிதொரு தரப்பு அதை எதிர்த்து கொண்டிருந்த து. குறிப்பாக மகிந்த இராசபக்சவே எதிராக நின்றார். எதிர்ப்புகள் காரணமாகத் திட்டத்தை கைவிட்டார் கோட்டபாய. பதிலடியாக இந்தியா கொடுத்திருந்த கடன் ஒன்றை உடனடியாக திருப்பி தா எனக் கேட்டது. இந்திய அழுத்தத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே மேற்படி கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது. பத்திரிக்கை நிர்வாகத்திற்கு மகிந்தவின் புதல்வர் ஒருவர் நேரடி அறிவுறுத்தல் கொடுத்திருக்கின்றார். இலங்கையுடனான இராசதந்திர உறவுகளில் இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் இந்திய விரோத உணர்வாகும். சிங்கள மக்களின் இந்த மனப்பான்மையை மாற்றி அமைப்பதற்காகப் பலத்த முயற்சி செய்து வருகின்றது இந்தியா. அதிலொன்றாக இந்திய மொழி திரைப்படங்கள், தொடர் நாடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முயல்கின்றது. இதற்காக இந்திய மொழித்திரைப்படங்களை சிங்கள உபதலைப்புகளுடன் இருவெட்டுகளில் தெரு தெருவாக விற்கப்படுகின்றது. இருவெட்டு தயாரிக்கும் வேலைகள் இந்தியத் தூதரகத்தின் அனுசரணையுடன் புறக்கோட்டை மற்றும் தெகிவளை பிரதேசங்களில் இயங்கும் இரண்டு தொழில் இடங்களில் நடந்து வருகின்றது. தொடர் நாடகங்கள் சிலவும் மொழிபெயர்க்கப்பட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்தியா இப்படி முயற்சிகள் செய்து வரும் நிலையில், தம் மீது அழுத்தங்களைக் கொடுத்தால் இந்திய விரோதத்தை மக்கள் மத்தியில் வளர்த்து விடுவோம் என்ற செய்தியைச் சொல்லவே மேற்படி கட்டுரைகளை அரச பத்திரிக்கையில் பிரசுரித்திருந்தார்கள். இதற்குப் பதிலடியாகத் தான், லொகானி எனும் சிங்கள பாடகியின் பாடல், இந்திய நடிகரும், இந்திய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினரின் கணவருமான அமிதாப்பச்சன் மூலம் இந்தியாவில் பிரபலமாக்கப்பட்டது. இதனால் இந்தியா தொடர்பாகச் சிங்கள மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தில் ஒரு பாய்ச்சல் ஏற்பட்டதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்.... இந்தியாவுக்குச் சேதி சொல்லப் போய், நீண்டகாலம் பொத்தி வைத்துக் கொண்டிருந்த உண்மையை அவிழ்த்து விட்டு விட்டார்கள். மேற்படி கட்டுரையில் ராஜினி இராஜசிங்கம், இந்திய அமைதிப் படையின் கோரமுகங்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்த காரணத்தால், அவரை முடக்கும் நோக்கில் இந்திய அமைதிப் படையே ஈபிஆர்எல்எப் அமைப்பை ஏவி கொலை செய்தது என கூறப்படுகின்றது. அடுத்த கட்டுரையில் இந்திய -இலங்கை ஒப்பந்தம் என்ற பெயரில் விடுதலையை புலிகள் மற்றும் சிங்கள தரப்பின் விருப்பு இன்றி இந்திய அரசு தனது ஏதேசதிகாரத்தை நிலைநாட்டியது என்ற கருத்துச் சொல்லப்படுகின்றது. இந்த விடயத்தை அரச பத்திரிக்கை ஒன்றின் மூலம் அதுவும் இவ்வளவு காலம் கடந்து வெளியிடுவது இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல். உண்மை எவ்வளவு தாமதமாக வெளியே வந்தாலும் சுடும். ராஜினி இராஜசிங்கம் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பை உருவாக்கி இந்திய அமைதி படையினரின் அயோக்கிய செயல்களை வெளிப்படுத்தி வந்திருந்தார். மேலும், இது தொடர்பான விபரங்கள் அடங்கிய “முறிந்த பனை“ எனும் நூலை, ஆங்கில மொழியில் சக விரிவுரையாளர்களான தயா சோமசுந்தரம், ராஜன் ஊள், சிமாறிதரன் ஆகியோருடன் இணைந்து வெளியிட இருந்த தறுவாயில் படுகொலை செப்பப்பட்டிருந்தார். இந்நூலில் 1948 இல் மலையக தமிழர்களின் பிரசாவுரிமை பறிக்கப்பட்டதிலிருந்து சிங்கள பேரினவாத அரசு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள், 1987 இல் அமைதியை காக்கின்றோம் என்ற பெயரில் இந்தியப் படை தமிழ் பகுதிகளில் செய்த அட்டூழியங்கள் விவரமாக எழுதப்பட்டிருந்த து. குறிப்பாக இந்திய அமைதிப்படை யாழ் வைத்தியசாலையில் நடத்திய படுகொலைகள் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. பல்கலைக்கழக மட்டத்திலிருந்து இவ்வாறான விடயங்கள் ஆங்கில மொழியில் வெளிவருவது சர்வதேச கவனத்தைப் பெறும், அத்துடன் அமைதிப் படை என்ற பெயரில் இந்தியா செய்யும் கோரச் செயல்களை உலகின் முன் அம்பலப்படுத்தி விடும் என்ற பதற்றமே, ராஜினியின் படுகொலைக்குப் பிரதான காரணம் என்பதை, 22 வருடங்களுக்குப் பின்னர் சிறிலங்கா அரசே இன்று உறுதிப் படுத்தி இருக்கின்றது. தமிழ்ச் சூழலில் புதிதாக எழுத வருபவர்கள், முற்போக்கு , இடதுசாரி அரசியலில் காலடி எடுத்து வைக்கும் புதியவர்களை எல்லாம் அலேக்காக அள்ளிக் கொண்டு சென்று மூளைச் சலவை செய்ய இலக்கியம் - இடதுசாரியம் - முற்போக்கு அரசில் என இயங்கும் கும்பலொன்று இருக்கின்றது. இவர்களின் சூத்திரக் கயிறு சிறிலங்கா பேரினவாத அரசு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மெல்ல மெல்லவோ, அல்லது எந்த நாடகம் போட்டே தமிழர்கள் சுயமரியாதை, அந்தஸ்துடன் வாழ்வதற்கான உரிமையைக் கோருவதை மடைமாற்றுவது. இந்த இடுபணியை செய்ய கையிலெடுத்திருக்கும் பிரதான ஆயுதம் விமர்சனம் என்ற பெயரில் புலிகள் மீதும் விடுதலைப் போராட்டத்தின் மீதும் அவதூறு பரப்பி வருவது. புதியவர்கள் இவர்களது வலையில் விழுவது தவிர்க்க இயலாத நிர்ப்பந்தம். ஏனெனில், இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாப்பியத்தனத்தை மீறி இங்குத் தடம் பதிப்பது இலகுவான காரியம் அல்ல. ஒரு உதாரணம் இதை விளங்கப்படுத்தும். சில வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் வருடாந்த இலக்கிய சந்திப்பு நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வுகளிலிருந்து ஈழத்து சூழலின் முக்கிய எழுத்தாளர்களின் ஒருவரான தீபச்செல்வன் ஒதுக்கப்பட்டிருந்தார். இத்துணைக்கும் இலக்கிய சந்திப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் தான் எழுத்தாளர் தீபச்செல்வன் வசிக்கின்றார். காரணம், தீபச்செல்வன் தமிழின விடுதலையை மூச்சாக கொண்டு எழுதி வருபவர். நன்கு அறியப்பட்ட தீபச்செல்வனுக்கே இந்த நிலைமை என்றால்….? இந்த மாபியா கும்பலின் ஒரு தரப்பு தான் ராஜினி இராஜசிங்கத்தை “விடுதலைப் புலிகளே கொலை செய்தார்கள்“ என்பதைப் பிரச்சாரம் செய்து வருபவர்களும். தமிழ்ச் சூழலில் கலை, இலக்கிய, அரசியல் செயற்பாடுகளில் காலடி எடுத்து வைக்கும் புதியவர்களை எந்த கேள்வியுமின்றி புலி எதிர்ப்பை ( மறைமுகமாகத் தமிழின விடுதலை எதிர்ப்பு அரசியல் ) ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திப்பது தான் இவர்களது வேலை. இல்லையெனில் அங்கீகாரமும், வாய்ப்பும் இங்கு மறுக்கப்படும். இவர்கள் முன்வைக்கும் விமர்சனங்களில் எந்த நேர் விளைவுகளும் இருப்பதில்லை. வெறுமனே காழ்புணர்வு மாத்திரமே இருக்கும். ராஜினி இராஜசிங்கம் முறிந்த பனை புத்தகத்தை எழுதியதற்காக விடுதலைப் புலிகள் கொலை செய்ததாகச் சொன்னார்கள். ஆனால், புத்தகத்தை வாசித்தால் சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளும், இந்தியா அமைதிப் படை என்ற பெயரில் நடத்திய கொடூரங்களும் தான் அம்பலமாகி இருந்தது. விடுதலை இயக்கங்கள் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் , குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாக இருந்தாலும் கூட, அவர்களது இராணுவ செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியவை அல்ல. அவை சரி செய்து கொள்ளப் பட வேண்டிய கருத்துகளாகவே இருந்தது. முறிந்தபனை நூல், முதலில் ஆங்கிலத்தில் தான் வெளிவந்தது. கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் ராஜினி படுகொலை செய்யப்பட்ட பின்னர் தான் புத்தகம் வெளியே வந்திருக்கின்றது. தமிழ் மொழி பதிப்பு 1996 ஆம் ஆண்டு தான் வந்தது. ஆக, இங்கும் இந்த புத்தகம் விடுதலைப் புலிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது எனச் சொல்வது அர்த்தமில்லாதது. புத்தகத்தில் கட்டுரை எழுதுவதற்காக தகவல் திரட்டிய விரிவுரையாளர் ஒருவர் , தான் இந்தியப் படை அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டதைப் பதிவு செய்திருக்கின்றார். அச்செய்திகள் அப்போதைய பத்திரிக்கையிலும் வெளி வந்திருக்கின்றது. இந்திய அமைதிப் படை யாழ் வைத்தியசாலையில் நடத்திய படுகொலைகள் மிகமிலேச்சத்தனமானவை. இந்த விடயம் வெளியே அதிகமாக கதைக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டிய அவசியம் இந்தியாவுக்கே இருக்கின்றது. இன்றுவரை அதை அவர்கள் செய்கின்றார்கள். ராஜினி இறப்பதற்கு முன்பாக எழுதிய கடிதம் ஒன்றில் உள்ளூர் இராணுவ அதிகாரிகள் தன்னை பழிதீர்க்க முயல்வதாக எழுதி இருக்கின்றார். பொதுவாக விடுதலைப்புலிகள் தங்கள் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அவசியம் ஏற்படும் இடங்களில் மாத்திரமே மறுப்பு சொல்வார்கள். அதுவும் பிறர் மீது பழிகள் போடுவதில்லை. ஆனால், ராஜினி படுகொலை விவகாரத்தில் மறுப்பு சொல்லியதோடு, ஈபிஆர்எல்எப் ம், அவ்வமைப்பின் சார்பில் அப்போது வடகிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்து இந்திய அமைதி படையுடன் இணைந்து செயற்பட்ட வரதராஜபெருமாளும் தொடர்பு பட்டதைச் சொல்லி இருக்கின்றார்கள். வரதராஜபெருமாள், இந்திய அமைதிப்படையுடனும், தமிழ் தேசிய இராணுவம் என்ற பெயரில் தமிழ் இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டும் செய்த அட்டூழியங்களை ராஜினி அம்பலப்படுத்தி இருந்தார். படுகொலைக்குப் பின்னர், தியாகி திலீபனின் உடலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து பெறுவது தொடர்பாக ராஜினியுடன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கு காரணம் என வரதாராஜன் சொல்லி இருந்தார். ( தியாகி திலீபன் விரும்பியபடி விடுதலை புலிகளே அவரது உடலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கொடுத்தனர்) இப்படி எழும் கேள்விகளும், ராஜினியை கொலை செய்தவர்கள் யார் என்பதைச் சட்டத்தின் முன் நிரூபிக்க வாய்ப்பிருந்தும் செய்யாமையும், இந்த படுகொலையை விடுதலைப் புலிகள் மீது சுமத்தி தொடர்ந்து பிரச்சாரம் செய்வது மூலம் இந்திய தரப்பு தப்பித்து கொள்ள முயல்வதும். ராஜினியை புலிகள் கொன்றார்கள் என பிரச்சாரம் செய்து நினைவு கூர்ந்து வருபவர்கள் ஒருபோதும் அவர் முறிந்த பனை நூல் மூலம் சொல்லிய விடயங்கள் தொடர்பாகக் கதைக்க விழையாமையும் உண்மை என்ன என்பதைப் புடம் போட்டுக் காட்டுகின்றது. இன்று சிறிலங்கா பேரினவாத அரசே அந்த உண்மையை அம்பலப்படுத்தி உதவி இருக்கின்றது https://www.battinatham.com/2025/09/blog-post_480.html
  3. சுப்பராயிருக்கு ரசோ...கோபிக்கவில்லையென்றால் நான் இதற்கு எடுத்துக்கொண்ட உதாரணம் ஒடியல் கூழ்... அதற்குள் சுவைகூடிய ..கடலுணவுகள் இருக்கும்...எதை ருசித்துச் சாப்பிடுவது என்பது திண்டாட்டமாக இருக்கும்...அதுபோலத்தான் உங்கள் கதைகளும்..எதை ருசிப்பது என்பதில் திண்டாட்டம்.. தொடர்கதையை எதிர்பார்க்கின்றேன் முன்னமே சொல்லியிட்டன் ...லங்காஶ்ரீ ...யாரென்று பெயர் சொல்லாது.... நான் விளங்கினது ...ரசோவுக்குத்தான் ...ஏனென்றால் வல்வட்டித்துரை ..அடையாள அட்டைகாரனுக்கு திருமலையில் இந்தநேரம் என்ன வேலை.... உய்த்தறிதலுக்காக...என்னுடைய அடையாள அட்டையிலும் பிறந்த இடம் பொலிகண்டி... எந்த சோதனைச் சாவாடியிலும் நிற்பாட்டி வைத்து சாத்தலும் விழும் ...சோதனையும் நடக்கும் இதில் விசேச செய்தி என்னவென்றால் ..காதலியும் /மனைவியுமாகியவளீண் ... அடையாள அட்டையில் பிறந்த இடம் பொலிகண்டிதான்...அப்ப பெண்பிரசையுடன் போனால் சோதனை குறைவென்பது...என்னுடைய லைவ்வில் நடக்கவில்லை ...அதுதான் கனடாவருகையின் காரணம்..
  4. 1. ஆளில்லா விமானம் --------------------------------- அன்று ஒரு நீண்ட வார விடுமுறையின் நடுநாள். பலரும் அன்று விமானப் பயணமோ அல்லது எந்தப் பயணமுமோ செய்ய மாட்டார்கள் என்பதை அனுமானித்தேயிருந்தோம். ஆனாலும் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில், திருவிழா முடிந்து வெறுமனே காற்று வாங்கும் கோயில் போல, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரின் நடமாட்டமே இருந்தது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. தேர்த் திருவிழா போல எப்போதும் உள்ளேயும், வெளியேயும் கூட்டமும், இரைச்சல்கள் நிறைந்திருக்கும் இடம் இது. இந்த விமான நிலையத்தால் வந்து போகும் வெளிநாட்டவர்கள் நிறையவே குறைகள் சொல்லுவார்கள். அதனால் நான் சொல்லாமல் விடுகின்றேன், அத்துடன் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. எங்கள் கண்களுக்கு தெரிவது போல காகங்களின் இறகுகள் கறுப்பு அல்ல, அவை வண்ணங்கள் நிறைந்தவை என்று சமீபத்தில் ஒரு கட்டுரை வாசித்திருக்கின்றேன். வண்ணங்கள் எங்களின் கண்களுக்கு தெரியவில்லை என்பதே உண்மை என்கின்றார்கள். உள்ளவற்றில் குறைவான விலையில் உள்ள விமான பயணச் சீட்டை நாங்கள் வாங்கியிருந்தோம். ஆதலால் அவர்களே இருக்கைகளை தெரிவு செய்து கொடுப்பார்கள். கொடுத்தார்கள். மூன்று இருக்கைகள் ஒன்றாகவும், மற்றைய இருக்கை அந்த வரிசைக்கு பின் வரிசையிலும் இருந்தன. ஒரு பொல்லாப்பும் இல்லை. நான் பின் வரிசையில் இருக்கலாம், மற்ற மூவரும் ஒன்றாக இருங்கள் என்றேன். அப்படியான ஒரு முடிவையும் உடனேயே எடுக்கத் தேவையில்லை என்றது குடும்பம். இன்றைய உலகம் எந்த அவசர உடன்படிக்கைக்கும் தயாராக இல்லாதது. காத்துக் கொண்டிருக்கும் போது 'பயணிகள் கவனிக்கவும்.................' என்று ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது. பாலகுமாரனின் ஒரு நாவலின் தலைப்பு இது. அவரை விழுந்து விழுந்து வாசித்த ஒரு காலம் இருந்தது. அது பதின்ம வயதுகள். அன்று வாசித்த அவரின் கதைகள் பலவும் இன்றும் சாராம்சமாக ஞாபகத்தில் இருக்கின்றன. சாராம்சமாக இருப்பதால் எல்லாமே ஒரே ஒரு கதை தான் என்றும் தோன்றுகின்றது. பின்னர் பெரிய இடைவெளி. அந்த இடைவெளியில் அவர் ஒரு சித்தர் ஆக மாறியிருந்தார். எழுத்துச் சித்தரோ அல்லது அப்படி ஏதோ ஒன்று சொன்னார்கள். புஷ்பா தங்கத்துரை கூட ஒரு பக்தி இதழில் எழுதுவதாகவும் பார்த்திருந்தேன். நாங்கள் ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகள் வாழ்ந்து தான் முடிப்போம் போல. 'விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால்.............' என்று தொடர்ந்தது அறிவிப்பு. வீட்டுக்கு திரும்பி போகச் சொல்லப் போகின்றார்களா என்று படபடத்தோம். சில வாரங்களின் முன் கனடா போகும் பொழுதும் இதே டெல்டா விமான நிறுவனம் தான். அவர்கள் எங்கேயோ மழையோ புயலோ என்று அன்று எங்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஒரு நாள் பிந்தியே கனடா போயிருந்தோம். ஆஸ்திரேலியா பயணத்தை மிகக் குறுகியதாகவே திட்டமிட்டிருந்தோம். அதில் ஒரு நாள் அநியாயமாகப் போய் விடுமோ என்பதே படபடக்க வைத்தது. பிரபஞ்சத்தில் ஒளியின் வேகமே மிக அதிகமானது என்கின்றார்கள். ஆனால் மனதின் வேகம், எண்ணங்களின் வேகம் ஒளியின் வேகத்தை விட மிகவும் அதிகம் என்பதே என் அனுபவம். பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், விமானம் மேலே எழும்பும் போதும், அது கீழே இறங்கும் போதும், விமானத்தின் சமநிலையைப் பேணுவதற்காக எல்லோரும் ஒதுக்கப்பட்ட இருக்கைகளிலேயே இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் சொன்னார்கள். இருக்கைகள் அந்த ஒழுங்கிலேயே ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் சொன்னார்கள். மேலும் சில வரிசைகள் இதன் காரணமாக முற்றிலும் வெறுமனே இருக்கும் என்றார்கள். இது புதிது, நான் முன்பின் அறிந்திராதது. விமானம் கிடையாக பறக்க ஆரம்பித்த பின் எங்கேயும் இருக்கலாம் என்றார்கள். எங்கள் நால்வரில் யார் பின் வரிசையில் இருப்பது என்ற உடன்படிக்கை ஏறக்குறைய தேவை இல்லை என்றாகியது. அந்த வரிசையில் வேறு எவருமே இல்லை. எல்லாமே எங்களுக்கு மட்டும் தான் என்றாகியது. அந்த அதிகாலைப் பொழுதில் சிட்னி விமான நிலையத்தில் ஆட்களையும் பார்க்கவில்லை, கொண்டு போகும் பொருட்களையும் எவரும் பார்க்கவில்லை. ஒரே ஒரு அதிகாரி வெளியேறும் வாசலில் நின்றார். ஏதாவது தடைசெய்யப்பட்ட பொருட்கள் எடுத்துக் கொண்டு போகின்றீர்களா என்று கேட்டார். நாங்கள் நால்வரும் மொத்தமாக நான்கு பெரிய பொதிகளும், நான்கு சிறிய பொதிகளும் வைத்திருந்தோம். கனடா மில்லில் அரைக்கப்பட்ட மஞ்சள் தூள் மற்றும் சில பொருட்களும் இருந்தன. சிட்னி விமான நிலையத்தில் முன்னரும் பல விதமான அனுபவங்கள் எங்களுக்கு இருக்கின்றன. இருபது வருடங்கள் அல்லது அதற்கு முன்னர் முதல் தடவையாக அங்கு போயிருந்த போது, எங்கள் நால்வரையும் ஒரு அதிகாரி விசேடமாகப் பார்த்தார். எங்களின் கடவுச்சீட்டுகளின் மீதே அவருக்கு பெருத்த சந்தேகம் இருந்தது போல. அதன் பின்னரும் சில அனுபவங்கள். ஆஸ்திரேலியாவை மிகவும் சிரமப்பட்டே காப்பாற்றுகின்றார்கள் என்று தெரிந்தது. காற்றே புகாத இடத்தில் கூட இலங்கையர்களும், இந்தியர்களும், சீனர்களும் புகுந்து விடுவார்கள் என்ற தகவல் இவர்களுக்கு காலம் பிந்தியே தெரிய வரும். சிட்னிக்கும், லாஸ் ஏஞ்சலீஸூக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. சீதோசன நிலை முக்கியமான ஒன்று. பெரும்பாலும் குளிர் இல்லாத இடங்கள் இந்த இரு நகரங்களும். மேலும் சிட்னி அமெரிக்க நகர்களின் சாயலிலேயே அமைக்கப்பட்டும் இருக்கின்றது. உதாரணமாக சியாட்டில் நகரம். சிட்னி விமான நிலையத்தில் இருந்து சிட்னி முருகன் கோவில் இருக்கும் பகுதிக்கு போவதற்கு நேரடியாக ஒரு பெருந்தெரு இப்பொழுது இருக்கின்றது. இது முன்னர் இருக்கவில்லை. கட்டணம் உண்டு, ஆனால் ஒரு இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்களில் வீட்டுக்கு போய்விட்டோம். ' பெருந் தெருக்களை கட்டு, போய் வர கட்டணம் அறவிடு................' என்பது அண்ணன் காட்டிய வழி போல. வழி நெடுகிலும் பல புதிய உயர்ந்த குடியிருப்புகள் புதுதாகத் தோன்றியிருந்தன. ஏராளமானவை. பல வருடங்களின் முன் கனடாவில் நம்மவர்கள் இருக்கும் பகுதிகளில் இப்படி இருந்தன. ஆஸ்திரேலியாவில் இந்தக் குடியிருப்புகளில் யார் இருக்கின்றார்கள் என்று கேட்டேன். 'இந்தியர்கள்...........புதிதாக வந்தவர்கள்.........' என்று சொன்னார்கள். காற்றுப் புக முடியாத இடமென்றாலும், நல்ல இடமென்றால் நாங்கள் குடியேறி விடுவோம் என்பது சரிதானே. சிட்னி விமான நிலையத்தில் எங்களை ஏன் அதிகாரிகள் எந்தச் சோதனைகளும் இல்லாமலேயே வெளியே விட்டார்கள் என்பதும் புரிந்தது. அந்த அதிகாரிகள் வேறு யாருக்காகவோ காத்துக் கொண்டு நிற்கின்றார்கள் போல. (தொடரும்...............) ** செயற்கை நுண்ணறிவிடம் ஒரு படம் வரையச் சொன்னேன். அதன் பூகோள அறிவு கொஞ்சம் அப்படி இப்படித்தான் போல. அதன் தவறைச் சுட்டிக்காட்டினேன். அதன் பிறகு அதனிடம் இருந்து வந்தது இன்னும் கொடுமை............. அதனால் இதுவே போதும், மனிதர்கள் புரிந்து கொள்வார்கள் என்று அப்படியே இங்கு போட்டுள்ளேன்.
  5. என்னைத் தூங்க வைத்ததற்கு ரொம்ப நன்றி தம்பி. இருந்தாலும் முதலே சொல்லியிருந்தால் இவ்வளவு இழுபறி இருந்திருக்காதில்ல.
  6. இத் திரியில் எனது கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுதலாலேயே சில பதிவுகள் தணிக்கை செய்யப்படவில்லை. வாசகர்களுக்கும் கருத்துப் பகிர்பவர்களுக்கும் அதுவே அவதூறுத் தகவல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறேன்.
  7. அண்ணாத்துரை - பான்மதியாள் ராமசந்திரன் - ரேவதியாள் / அம்பிகை & ராதை / முன்னாள் முதல்வரும் அடக்கம் கருணாநிதி - ? உத்தமர் ஸ்டாலின் - செய்தி வாசிப்பாளர் உதயநிதி - நிவேத நடிகை & 9 தார நடிகை கார்த்திக் சிதம்பரம் / சரவணா செல்வரத்னம் - நட்பு (சினேக) நடிகை சீமான் / கன்னட நடிகர் - விசயலட்சுமி விசய் - கீர்த்தனம் & 3 சா நடிகை சி.வி சண்முகம் - அமல மில்க் நடிகை ராஜகண்ணப்பர் - சுகன்யம் நடிகை திருமா / பூவை/புதுவை முதல்வர் - மீனம் .... இதெல்லாம் ஊகங்களே..! இன்னும் பல ஊகங்கள் தியாகராஜபாகவதர் காலத்தில் இருந்தே உண்டு பாகவதரின் அந்தபுரத்தை பற்றி எழுத போக .. உத்தமரான பாகவதர் லட்சுமிகாந்தனின் எழவுக்கு ஏற்பாடு செய்துவிட்டார் என்று தாத்தா காலத்திலேயே கதைப்பார்கள் . சந்தி சிரிக்காத வரைக்கும் எல்லாரும் ராமர்கள்தான் அப்படித்தான் நம்ப வேண்டும். சினிமாவுக்கும் அரசியலுக்கும் பெரிய தொடர்ப்பு உண்டு? அதிகார துஷ்பிரயோகம் ( வருமானவரி தொந்தரவு மற்றும் பல பல ) / காடையர்கள் தொந்தரவில் இருந்து தப்பிக்க ./ சம்பாதித்த சொத்துக்களை பாதுக்காக்க.. டிஸ்கி : பல் ( பணம் ) இருக்குறவன் பக்கோடோ சாப்பிடுறான் .. இல்லாதவன் கோசிப்பு கதைக்குறான் விடுங்கப்பா தான் இன்னாருடைய ஆள் என்று ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகிறார்கள் அவ்வளவுதான் ..
  8. இது மிகவும் தவறான வதந்தி ஆகும். இதை நீங்களும் குமாரசாமி அண்ணையும் தெரிந்து கொண்டே மீள, மீள பரப்புகிறீர்கள். இன்னொரு திரியில் உங்கள் இருவருக்கும் செந்தாமரை மனைவியும், கருணாநிதி மனைவியும் வேறு வேறு ஆட்கள் என ஐயத்துக்கு அப்பலானா தரவுகள் மூலம் நான் நிரூபித்து இனி இப்படி எழுத வேண்டாம் எனவும் கேட்டு கொண்டேன். அங்கே நழுவி ஓடி விட்டு - அதே அழுக்கை இங்கே மீள காவி வருகிறீர்கள். இதில் நீங்கள் கருணாநிதியை நக்கல் அடிப்பதாக எண்ணினாலும், உண்மையில் அநியாயமாக வசவுக்கு உள்ளாக்குவது, கணவன், குடும்பம், வளர்ந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என வாழும் ஒரு அப்பாவி பெண்ணை. உங்களுக்கு இப்படி எழுத. வெட்கமாக இல்லையா? நீங்களும் ஒரு பெண்பிள்ளையின் தந்தை அல்லவா? உங்களதோ, எனதோ மனைவியை பற்றி இப்படி ஒரு பச்சை அபாண்டத்தை யாரும் எழுதினால் நம் மனநிலை எப்படி இருக்கும்?
  9. 6. பண்ணையாரும் பலரும் ----------------------------------------- 'அமெரிக்கா உங்களுக்குப் பிடித்திருக்கின்றதா.............' என்று கேட்டார் அவர். மிகவும் தயக்கத்துடனேயே கேட்டார். நான் யார் என்று அவருக்கு கைகொடுத்து அறிமுகப்படுத்திய பின்பே கேட்டார். அவர் யார் என்ற விபரங்கள் முன்னமே எனக்கு ஓரளவு சொல்லப்பட்டிருந்தது. இதே கேள்வியை சில சில மாற்றங்களுடன் என்னிடம், தயக்கத்துடன், ஆரம்பிக்கும் நாலாவது மனிதர் இவர். சிட்னியில் ஒரு பல்கலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றார். 'பிடித்தது, பிடிக்கவில்லை என்றில்லை.............. பழகிவிட்டது. பிள்ளைகளும் அங்கேயே பிறந்து, வளர்ந்து விட்டார்கள்............' என்றேன். அவர் சில பெயர்களைச் சொல்லி, அவர்களின் காணொளிகளை டிக்டாக்கில் பார்த்தது உண்டா என்று கேட்டார். டிக்டாக்கில் இதுவரை நானறிந்து ஒரு காணொளி தன்னும் நான் பார்த்ததில்லை. அதை அப்படியே சொல்லுவது மரியாதை இல்லை என்று நினைத்து, நான் அவை எதுவும் பார்த்ததில்லை என்றேன். அவர்கள் எல்லோரும் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகாவும் இருப்பவர்கள் என்றார். அவர் சொல்லிய பல்கலைக் கழகங்களின் பெயர்களை அறிந்திருக்கின்றேன், ஆனால் இந்த டிக்டாக்கில் வரும் பேராசிரியர்களில் எவரையும் நான் கேள்விப்பட்டது இல்லை. அமெரிக்கா செய்து கொண்டிருப்பது சுத்தமான அயோக்கியத்தனம் என்பதே அவருடைய உரையாடலின் சாரம். இதற்கு முன்னர் அமெரிக்கா பிடித்திருக்கின்றதா என்று கேட்ட மற்ற மூவரும் கூட அதே சாரத்தையே சொல்லியிருந்தார்கள். மற்ற மூவரும் அமெரிக்கா அழிந்து விடும் என்றும் சொல்லியிருந்தார்கள். ஆனால் அமெரிக்கா அழிந்தால் அது உலகத்திற்கு பெரும் பாதிப்பாக முடியும் என்று இவர் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய தமிழ் வழக்கு மலையக மக்களின் தமிழ் போன்று இருந்தது. இடையிடையே வந்து போகும் சுத்தமான முழு ஆங்கில வசனங்கள் அவர் நிச்சயம் ஆங்கில வழியில் கல்வி கற்ற ஒருவர் என்பதைக் காட்டியது. ரஷ்யாவின் நியாயங்களைச் சொன்னார். சீனாவின் முன்னேற்றங்களை வரிசைப்படுத்தினார். இந்தியா வல்லரசாகும் என்றார். நான் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக 25 வருடங்களின் முன்னேயே விண்ணப்பித்து இருந்தேன் என்று இடையில் சொன்னேன். அந்தச் சூழ்நிலையை இலகுவாக்க இப்படிச் சொல்வது எனக்கு ஒரு தேவையாக இருந்தது. நாங்கள் உண்மையிலேயே ஒரு காலத்தில் விண்ணப்பித்தும் இருந்தோம். அதன் பின்னர் அவர் கொஞ்சம் தணிந்தார் என்று தான் சொல்லவேண்டும். அவர் மலேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் படிக்க வந்து, மீண்டும் மலேசியா போய், பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியா வந்து, நிரந்தரமாகக் குடியேறியதாகச் சொன்னார். பூர்வீகம் யாழ்ப்பாணம். 'புயலிலே ஒரு தோணி' வாசித்திருக்கின்றீர்களா என்று கேட்டேன். அது என்ன என்பது போல பார்த்தார். நல்ல ஒரு தமிழ் நாவல், கதையின் பெரும் பகுதி மலேசியாவிலேயே இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நடக்கின்றது என்றேன். இப்பொழுது அவர் பார்வையில் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. இந்த ஊர் நூலகத்திலேயே அந்த நாவல் உள்ளது என்றேன். அமெரிக்கா மீதும், அதிபர் ட்ரம்பின் அதிரடியான நடவடிக்கைகளின் மீதும் கடுமையான ஒரு பார்வை உலகெங்கும் எம் மக்கள் எல்லோரிடமும் இருக்கின்றது போல. கனடாவிலும் நான் இதே போன்ற கடுமையான எதிர்வினைகளைக் கேட்டிருக்கின்றேன். இதில் உள்ள ஒரு முரண்பாடு என்னவென்றால், எனக்கு தெரிந்து இன்று எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் பலரும் அமெரிக்க தேர்தலின் முன்னர் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாகவும், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகவும் கருத்துகள் சொல்லிக் கொண்டிருந்தவர்களே. இவர்கள் என்ன மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிந்தார்களோ தெரியவில்லை, ஆனால் இன்றைய அமெரிக்க அதிபரால் மிகவும் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரிந்தது. நான் தனிப்பட்ட ரீதியில் ஏமாற்றப்படவில்லை. அவர் பதவியேற்ற அன்றே நான்கு வருடங்களிற்கும் தயாராகவே இருந்தேன். பொதுவாக பலவீனமானவர்களே மிகவும் பலசாலி போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியானவர்களை மக்கள் ஏன் தலைவர்களாக தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதன் அடிப்படையே அது தான் போல. கூட்டமாக அன்றாடம் தலைப்பு செய்திகளை உண்டாக்குகின்றார்கள். வெற்றி, வெற்றி என்று முழங்குகின்றார்கள். பின்னர் அந்தச் செய்தி அப்படியே கைவிடப்படுகின்றது. அடுத்த நாள் வரப் போகின்ற புதியதொரு தலைப்பு செய்திக்கு தயாராகின்றார்கள். சிட்னியின் அந்த புறநகர்ப் பகுதியில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் புதிதாக, கடந்த ஐந்து வருடங்களுக்குள், கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் குடியிருப்பவர்களில் நூறு வீதமானவர்களும் இந்திய மக்கள் போன்றே தெரிகின்றது. இவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்குள் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வந்தவர்கள் போல. அங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொள்வதற்கு அரசாங்கம் கொடுக்கும் அனுமதி தனித்தனி வீடுகளை ஒரு தெருவிலும், தெருவின் அடுத்த பக்கத்தில் அல்லது அடுத்த தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டவும் அனுமதிக்கின்றது. இது அங்கே வீடுகளில் குடியிருப்பவர்களுக்கும், அடுக்குமாடிக் குடியிருப்பவர்களுக்குமிடையே உரசல்களை உண்டாக்குகின்றது. புதிய குடியிருப்புகளுக்கு ஏற்ப மற்ற புதிய உட்கட்டமைப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை. பிரதான வீதிகள், பாடசாலைகள், வணிக வளாகங்கள், நூலகங்கள், பூங்காக்கள் என்று எந்த வசதிகளும் இந்த பெருக்கத்துக்கு ஈடாக புதிதாக உருவாக்கப்படவில்லை. இதுவும் ஏற்கனவே அங்கே இருப்பவர்களுக்கும், புதிதாக குடிவருபவர்களுக்குமிடையே பிணக்குகளை உண்டாக்குகின்றது. சட்டம், ஒழுங்கு, நாகரிகம் கெட்டுப் போகின்றது என்று புதியவர்களை குற்றம் சாட்டுகின்றார்கள். பல வருடங்களின் முன், லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள் சில இலங்கை தமிழர்களுடன் சேர்ந்து எம்மவர்களின் வீடுகளில் திருடுகின்றார்கள் என்ற அபிப்பிராயம் எம்மவர்களிடையே இருந்தது. எந்த வீடுகளில் என்ன விழா எப்போது நடக்கின்றது என்ற தகவலையே எம்மவர்களில் சிலரே அவர்களுக்கு கொடுக்கின்றார்கள் என்றனர். விழாக்களில் அணிவதற்காக வங்கிகளிலிருந்து வெளியே வரும் நகைகளை திருடுவதே அவர்களின் இலக்கு என்றனர். பின்னர் இலங்கையிலிருந்து வேறு வழிகளில் சிட்னி வந்த இளைஞர்கள் மீது வேறு விதமான குற்றங்களைச் சொன்னார்கள். சில இடங்களுக்கு பாதுகாப்பாக போய் வரவே முடியாதிருந்ததாகச் சொன்னார்கள். இன்று புதிதாக குடிவரும் இந்தியர்கள் மீது எல்லோரினதும் கவனங்கள் திரும்பியிருக்கின்றன. இந்தப் புதிய அபரிதமான குடிவரவால் வீடுகளின் விலைகள் ஏறிக் கொண்டு போவதைப் பற்றி பேச்சும் இருக்கின்றது. பல தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இந்திய மாணவர்களின் ஆதிக்கம் பற்றிய ஆதங்கமும் இருக்கின்றது. எதிர்காலத்தில் எங்களின் பிள்ளைகளுக்கு சரியான வேலைகள் கூட கிடைக்காமல் போய் விடக் கூடும் என்று ஒருவர் சொன்னார். இப்படி பல காரணங்களாலும் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு எதிராக போராட்டங்கள் மெதுமெதுவாக ஆரம்பித்துள்ளன. எம்மக்களின் பலரும் இதற்கு ஆதரவாக உள்ளனர். ஆஸ்திரேலியாவையும், சிட்னியையும், எம்மக்களையும் ஒரு கணம் மறந்து விட்டு, அமெரிக்காவையும், அதிபர் ட்ரம்பையும், அவரின் ஆதரவாளர்களையும் நினையுங்கள். இந்த விடயத்தில் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றதா?
  10. 2. மணல் தெய்வம் ---------------------------- 'மண் அப்புச்சாமிக்கு என்ன பெயர்?' அப்படி ஒரு கடவுள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மண்ணுக்கு என்று ஒரு கடவுள் எங்கள் வழக்கத்தில் இருக்கின்றதா? உலகில் எந்த நாகரிகத்திலும் அப்படி ஒரு தெய்வம் இருக்கின்றதா என்று யோசிக்க வைத்தது மகளின் அந்தக் கேள்வி. நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்பன ஐந்து பூதங்கள் எனப்படுபவை. பூமியெங்கும் பல நாகரிகங்களிலும் இவைக்கு தனித்தனியே கடவுள்கள் இருந்தார்கள். அவற்றில் பல கடவுள்கள் அழிந்து போய் விட்டாலும், சில கடவுள்கள் மனிதர்களிடம் இருந்து தப்பி இப்போதும் பூமியில் அழியாமல் இருக்கின்றார்கள். ஆனாலும் தனியே மண்ணுக்கு என்று ஒருவர் எங்கேயும் இருந்ததில்லை என்றே தோன்றியது. 'மண்ணுக்கு என்று ஒரு அப்புச்சாமி இல்லை. ஆனால்...............' சுற்றிவர மண்ணும், மண் குவியல்களும் அன்றி வேறுதுவுமில்லை. மேலே தெளிந்த நீல வானம். குளிர்காலப் பருவத்தை முடித்துக் கொண்ட சூரியன் இதமாக கிழக்கில் இருந்து எரிந்து கொண்டிருந்தது. ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு இடம் இருப்பதை நான் முன்னர் தெரிந்திருக்கவில்லை. பெரும் மணல் வெளியும், அதன் இடை இடையே நெருக்கமாக சில நூறு அடிகள் உயரம் கொண்ட மண் குன்றுகளும் அந்தப் பிரதேசத்தை மூடி இருந்தன. மண் சரிவுகளில் சறுக்கும், ஓட்டகத்தில் ஏறி ஓடும், மணல் பிரதேச வாகனங்களில் பறக்கும் விளையாட்டுகளும், பொழுதுபோக்குகளுக்குமான இடம் அது. 'ஆனால் பூமாதேவி என்று ஒரு அப்புச்சாமி இருக்கின்றார். அம்மன் போல. அவர் தான் பூமி முழுவதற்கும் கடவுள், பூமிக்கு பொறுப்பு.............' என்றேன். 'நீங்கள் அவரையா இப்போது கும்பிட்டீர்கள்.........' என்று சிரித்தனர் ஒன்றாகச் சேர்ந்து. கொடுக்கப்பட்ட அந்த நீண்ட மட்டையின் மீது இருந்தோ அல்லது நின்றோ சரிவுகளில் சறுக்கிக் கொண்டு கீழே வந்து விடலாம். மட்டையின் மீது இருந்து கொண்டே சறுக்குவது இலகு. மட்டையில் நின்று கொண்டே சரிவுகளில் சறுக்கி வந்தால் முகம் குப்புற விழ வேண்டி வந்தாலும் வரும். எப்படியோ உருண்டு பிரண்டாவது கீழே வந்து விடலாம். ஆனால் மீண்டும் சரிவுகளில் ஏறும் போது மணல் தெய்வத்தின் துணை இருந்தால் நலம். நான் இரண்டு முழங்கால்களையும் குத்திட்டு, மட்டையை மணலில் குத்தி கைகளால் பிடித்துக் கொண்டே, தலையைத் தாழ்த்தி, மூச்சு விடும் போது பார்த்திருக்கின்றார்கள். காவோலை மண்டியிட்டு மூச்சு விட குருத்தோலைகள் கலகலத்தன. சிட்னியில் இறங்கிய அன்றே நெல்சன் குடாவுக்கு போவதற்கு ஆயத்தாகிவிட்டார்கள். என்னை விட்டால் வீட்டுக்கு அருகில் இருக்கும் வியட்நாம் வெதுப்பகத்தில், அது இப்பவும் அங்கே இருந்தால், பாணை வாங்கி சம்பல் அல்லது பழங்கறிகளுடன் சாப்பிட்டு விட்டு, அந்த ஊரில் இருக்கும் வாசிகசாலைக்குள் ஓடிப் போய் விடுவேன் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும். முன்னர் சில தடவைகள் அப்படி நடந்தும் இருக்கின்றது. -நெல்சன் குடா சிட்னியிலிருந்து வட கிழக்கு திசையில் ஒரு இரண்டு மணி நேர பயணத்தில் இருக்கின்றது. கலிபோர்னியாவில் இருக்கும் கடற்கரை சுற்றுலா நகரங்கள் போன்றே இதுவும் இருக்கின்றது. கோடை காலத்தில் கூட்டம் கூட்டமாக பயணிகள் வருவார்கள் என்றனர். அங்கே கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருக்கும் எண்ணற்ற விடுதிகளே அதற்குச் சான்று. அங்கிருக்கும் மணல் மேடுகள் பூமியின் தென்கோளத்தில் இரண்டாவது பெரியவை என்று அங்கே எழுதியிருந்தார்கள். அதிகமாகப் போனால் சில நூறு அடிகளே வரும் இவையா தென்கோளத்தில் இரண்டாவது பெரியவை என்று ஆச்சரியமாக இருந்தது. வடகோளத்தில் அரபுப் பாலைவனங்களிலோ அல்லது ஆபிரிக்கப் பாலைவனங்களிலோ ஆயிரம் அடிகளில் மண் மேடுகள் இருக்கும் என்றே நினைக்கின்றேன். இந்தியாவில் கூட ராஜஸ்தானில் இருக்கலாம். பூமியின் வடகோளமும், தென்கோளமும் மிகவும் மாறுபட்டவை. தென் கோளத்தில் நீர்ப்பரப்பு மிக அதிகம், நிலப்பரப்பு மிகக் குறைவு. வட கோளத்தில் நிலப்பரப்பு தென் கோள நிலப்பரப்பை விட இரண்டு மடங்கு அதிகம். அதனாலேயே தென் கோளத்தின் வெப்பநிலை சீராகவும், வடகோளத்தின் வெப்பநிலை பருவகாலங்களுடன் பெருமளவு மாறுபட்டுக் கொண்டும் இருக்கின்றது. திமிங்கிலம் பார்ப்பது, ஓங்கில் (டால்பின்) மீன்கள் பார்ப்பது என்றும் பெரிய படகுகளில் ஆட்களை கடலுக்குள் ஏற்றிக் கொண்டு போகின்றார்கள். சில தடவைகள் கலிஃபோர்னியா கடலுக்குள் இப்படி போயும் இருக்கின்றோம். இப்படிப் போனதில் ஒரு தடவையாவது ஒரு திமிங்கிலமோ அல்லது ஓங்கில் மீனோ கண்ணில் பட்டிருக்கவில்லை. ஆனால், அப்பொழுது நான் வேலை பார்த்த இடம் கடற்கரைக்கு மிக அருகில் இருந்தது, ஒரு நாள் மதியம் கடற்கரையில் நடக்கும் போது ஓங்கில் மீன்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தன. எப்பவோ குடுத்த காசுகளுக்கு அப்பொழுது எனக்காக வந்திருக்கின்றன போல. நெல்சன் குடாவிலும் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் கட்டணங்கள், விலைகளும் அதிகம். அந்தக் கடற்பகுதியில் எத்தனை ஓங்கில்கள் இருக்கின்றன, எத்தனை குட்டிகள் போட்டன என்ற தகவல்களும், இன்னும் மேலதிக கதைகளும் அந்தப் படகுப் பயணத்தில் சொன்னார்கள். ஆனால் எந்த மீனும் மேற்கடலுக்கு வரவேயில்லை. கலிபோர்னியா கடலில் கேட்காத கதைகளா அல்லது கொடுக்காத காசா, சரி இதுவும் போகட்டும் என்று இருந்தோம். திடீரென்று வேறோரு பகுதியில் ஓங்கில் மீன்கள் நடமாடுவதாக அங்கே படகை செலுத்தினார்கள். அங்கே பெரிதும் சிறிதுமாக பல ஓங்கில் மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. பெரியவை கடுமையான சாம்பல் நிறத்திலும், குட்டிகள் மெல்லிய சாம்பல் நிறத்திலும் இருந்தன. முக்கியமான ஒரு விடயம் சொன்னார்கள். இந்த ஓங்கில் மீன்களின் கூட்டத்தில் பெரிய மீன்களில் ஆண் மீன்களே கிடையாது என்றும், அம்மா - பெரியம்மா - சித்தி - மாமி மீன்கள் மட்டுமே குட்டிகளை வளர்க்கின்றன என்றும் சொன்னார்கள். ஆண்கள் தனியே போய் விடுமாம். ஓங்கில் மீன்கள் புத்திசாலிகள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம் தானே. அங்கிருந்த ஒரு வெளிச்ச வீட்டிற்கு போயிருந்தோம். 1800ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் என்று நினைக்கின்றேன், சரியாக ஞாபகம் இல்லை, அந்த வெளிச்ச வீடு அங்கிருக்கும் ஒரு சிறிய மலையில் அமைக்கப்பட்டது. அதற்கு முன்னர் அந்த குடாப் பகுதிக்கு இரவுகளில் வரும் பல கப்பல்கள் விபத்துக்குள்ளாகி பலர் இறந்து போயிருக்கின்றனர். தனி ஒருவராக ஒருவர் அந்த வெளிச்ச வீட்டை பல ஆண்டுகள் பராமரித்து இருக்கின்றார். சில மண்ணெண்ணை லாந்தர்களை இரவுகளில் ஏற்றி அந்த வெளிச்ச வீட்டை இயக்கியிருக்கின்றார். அவர் தினமும் லாந்தர்களை ஏற்றினார் என்றே அங்கே எழுதி வைத்திருக்கின்றார்கள். அந்த லாந்தர்கள் சில அங்கே பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஒரு மனிதர் போல எத்தனை தெய்வங்கள் வந்து போன பூமி இது. (தொடரும்..........................)
  11. ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க September 21, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு செவ்வாய்கிழமையுடன் (23/9) சரியாக ஒரு வருடம் நிறைவடைகிறது. 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவர் நேரடியாக முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீதம் + 1 வாக்குகளை பெறாவிட்டாலும், இலங்கையில் இடதுசாரி அரசியல் இயக்கத்தின் தலைவர் ஒருவர் ஜனநாயக தேர்தலின் மூலம் முதற்தடவையாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த சந்தர்ப்பமாக அது இலங்கை அரசியலில் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. அதேவேளை, தெற்காசியாவில் நேபாளத்துக்கு அடுத்ததாக ஆயுதக் கிளர்ச்சியொன்றை நடத்திய இடதுசாரி அரசியல் இயக்கம் ஒன்று தேர்தலின் மூலம் அதிகாரத்துக்கு வந்த இரண்டாவது நாடாகவும் திசநாயக்கவின் அந்த வெற்றி இலங்கையை வரலாற்றில் பதிவு செய்திருக்கிறது. முன்னென்றும் இல்லாத வகையில் இலங்கையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சியை (2022 அறகலய) தொடர்ந்து முற்றிலும் மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதியாக வந்த திசநாயக்கவிடமும் அவரது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமும் மக்கள் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தார்கள். தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக அதன் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைவர்கள் தாங்கள் உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான ஆசனங்களை தந்தால் போதும் என்று வெளிப்படையாகவே கேட்டபோதிலும் கூட, நாட்டு மக்கள் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலத்தை வழங்கினார்கள். அதுவும் குறிப்பாக ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தாங்கள் மட்டுப்பாடில்லாத அதிகாரத்தை மக்களிடம் இருந்து கேட்கவில்லை என்றும் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மைப் பலத்தை தந்தால் போதுமானது என்றும் கூறினார். “புதிய அரசியல் கலாசாரத்தையும் முறைமை மாற்றத்தையும்” கொண்டுவரப்போவதாக தேசிய மக்கள் சக்தி தேர்தல்களின்போது வழங்கிய வாக்குறுதியை மக்கள் எந்தளவுக்கு நம்பினார்களோ தெரியவில்லை. ஆனால், பழைய பாரம்பரிய அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மீது தங்களுக்கு இருந்த கடுமையான வெறுப்பையும் ஆத்திரத்தையும் தேர்தல்களில் அவர்கள் தெளிவாக வெளிப்படுத்தினார்கள். இத்தகையதொரு பின்புலத்திலேயே, ஜனாதிபதி திசநாயக்கவின் ஒரு வருடகால ஆட்சியின் செயற்பாடுகளை நோக்க வேண்டும். கடந்த வருடம் இரு தேசிய தேர்தல்களிலும் நாட்டு மக்களுக்கு தாங்கள் வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளின் நடைமுறைச் சாத்தியமற்ற தன்மையை ஜனாதிபதியும் அரசாங்க தலைவர்களும் இப்போது ஒரு வருடம் கடந்த நிலையில் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்பலாம். பொருளாதார இடர்பாடுகளில் இருந்து விடுபடுவதற்கு விரைவான நிவாரணங்களை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த சனத்தொகையில் அதிகப் பெரும்பான்மையானவர்களுக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்தது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால் அந்த உடன்படிக்கையை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்போவதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது. ஆனால், அதே உடன்படிக்கையின் நிபந்தனைகளை எந்த விதமான மாற்றமும் இன்றி பின்பற்றுவதை தவிர, புதிய அரசாங்கத்துக்கு வேறுவழி இருக்கவில்லை. உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து நேர்மறையான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்ற போதிலும், சமுதாயத்தின் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரங்களில் உருப்படியான எந்த மாற்றத்தையும் காணமுடியவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகளையே தொடர்ந்து முன்னெடுக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் சொந்த பொருளாதாரக் கொள்கைகளை எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறது என்பது எவருக்கும் தெரியவில்லை. முன்னைய ஆட்சியாளர்களை மக்கள் வெறுத்து ஒதுக்கிய காரணங்களை நன்கு உணர்ந்தவர்களாக ஜனாதிபதி திசநாயக்கவும் அரசாங்க தலைவர்களும் தங்களது நிருவாகம் ஊழலுக்குள் சிக்கிவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுகிறா்கள். கடந்த கால ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதிலும் அரசாங்கம் முனைப்புடன் செயற்படுகிறது. மற்றைய முனைகளில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒரு மந்தநிலை காணப்படுகிறது. பதவிக்காலத்தின் முதல் வருடத்தில் ஒரு அரசாங்கத்திடமிருந்து நாம் எதிர்பார்பார்க்கக்கூடியவற்றுக்கு ஒரு மட்டுப்பாடு இருக்கிறது என்ற போதிலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு வருடகால செயற்பாடுகள் அதன் எதிர்காலத் திசைமார்க்கத்தை மதிப்பிடுவதற்கு ஓரளவுக்கேனும் போதுமானது என்பது நிச்சயம். ஜே.வி.பி.யின் கடந்தகால அரசியல் குறித்த பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், ஜனநாயக தேர்தல்களின் மூலமாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த பிறகு அந்த கட்சி தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறைகளையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பழைய பாரம்பரிய அதிகார வர்க்க அரசியல் கட்சிகளின் அரசாங்கங்களுக்கு சேவை செய்த அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு முறைமை மாற்றத்தைக் கொண்டு வருவது என்பது நடைமுறையில் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பதை ஜே.வி.பி.யின் தலைவர்கள் தற்போது தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். தங்களது கொள்கைகளின் பிரகாரம் அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கும் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்பில் சீற்றமடைந்த ஜே.வி.பி.யின் முக்கிய அமைச்சர்கள் அண்மைக்காலங்களில் வெளியிட்ட கருத்துக்கள் அவர்களின் அந்த புரிதலின் வெளிப்பாடேயாகும். அடுத்த சுனாமி உயர்மட்ட அதிகாரிகளையே தாக்கும் என்று கூட ஒரு அமைச்சர் கூறினார். பழைய அரசு இயந்திரத்தைப் பொறுப்பேற்று நிருவகிப்பதையே ஒரு வருடகாலமாக தேசிய மக்கள் சக்தி செய்து வருகிறது. இரு வாரங்களுக்கு முன்னர் நேபாளத்தில் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சி, முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவந்த மாபெரும் வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியதிகாரத்துக்கு வந்த பிறகு முன்னெடுத்த அரசியலமைப்புச் சீர்திருத்த மற்றும் ஜனநாயக பரீட்சார்த்தங்களின் தோல்வியை உலகிற்கு அம்பலப்படுத்தியது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக கடந்த நூற்றாண்டில் இரு தசாப்தகால இடைவெளியில் இரு ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னெடுத்த ஒரு இடதுசாரி அரசியல் இயக்கம் என்ற வகையில் ஜே.வி.பி. நேபாள நிகழ்வுகளை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இலங்கையை பொறுத்தவரை, புதிய அரசியல் கலாசாரம் என்பது ஊழல், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப ஆதிக்க அரசியல் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவதுடன் மாத்திரம் நின்று விடுவதல்ல. இனத்துவ உறவுகளிலும் முன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த தேசிய இனப்பிரச்சினைக்கு காணப்பட வேண்டிய அரசியல் தீர்வுக்கான அணுகுமுறையிலும் ஏற்படவேண்டிய முக்கியமான மாற்றத்தை பிரதிபலிப்பதாக அந்த புதிய அரசியல் கலாசாரம் அமைய வேண்டும். முன்னைய ஆட்சியாளர்களைப் போலன்றி ஜனாதிபதி திசநாயக்க சிறுபான்மைச் சமூகங்களுக்கு குறிப்பாக வடபகுதி தமிழர்களுக்கு நேசக்கரத்தை நீட்டுவதில் கூடுதல் அக்கறை காட்டுகிறார். பதவியேற்ற ஒரு வருடகாலத்தில் அடிக்கடி யாழ்ப்பாணத்துக்கு அவர் விஜயங்களை மேற்கொண்டிருக்கிறார். சகல சமூகங்களையும் சமத்துவமாக நடத்துவதே தங்களது கொள்கை என்றும் ஓயாது பிரகடனம் செய்கிறார். ஆனால், கடந்த காலத்தில் அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட இனப்பாகுபாட்டுக் கொள்கைளினாலும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளினாலும் பாதிக்கப்பட்டு வந்திருக்கும் சிறுபான்மைச் சமூகங்கள் முகங்கொடுக்கும் பிரத்தியேகமான பிரச்சினைகளுக்கு ஒரு இடைக்காலத் தீர்வுகளையேனும் காண்பதில் அக்கறை காட்டாமல் சகலரையும் சமத்துவமாக நடத்துவதாக பிரகடனம் செய்வதில் அர்த்தமில்லை என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம். ஜே.வி.பி.யை பொறுத்தவரை, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு குறிப்பாக அதிகாரப் பரவலாக்கத்தை செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்த ஒரு கசப்பான கடந்த காலத்தைக் அது கொண்டிருக்கிறது. ஆட்சியதிகாரத்துக்கு வந்த பின்னராவது அந்த கடந்த காலத்தில் இருந்து வேறுபட்ட ஒரு போக்கை கடைப்பிடிப்பதில் தங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை ஜே. வி.பி. தலைவர்கள் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. ஜனாதிபதி திசநாயக்க போன்றவர்களை இனவாதிகள் என்று கூறுவதை விடவும் இனவாதத்தின் கைதிகள் என்று அழைப்பதே பொருத்தமாகும். அந்த இனவாதச் சிறைக்குள் இருந்து அவர்கள் வெளியில் வரவேண்டும். இனத்துவ உறவுகளும் தேசிய இனப்பிரச்சினையும் இதுகாலவரையில் சிங்கள அரசியல் சமுதாயத்தினாலும் தமிழ் அரசியல் சமுதாயத்தினாலும் கையாளப்பட்ட நடைமுறைகள் காரணமாக இலங்கையின் இனப்பிளவு தொடர்ந்தும் ஆழமானதாகவே இருந்துவருகிறது. இனத்துவ உறவுகளுடன் தொடர்புடைய விவகாரங்களில் வடக்கும் தெற்கும் இரு வேறு உலகங்கள் போன்றே காணப்படுகின்றன. அத்தகைய கவலைக்குரிய நிலைவரத்தை மாற்றியமைப்பதற்கு சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மாத்திரமல்ல, பெரும்பான்மைச் சமூகத்தையும் பழைய சிந்தனைப் போக்கில் இருந்து விடுபட வைக்கக்கூடிய மார்க்கத்தில் பயணம் செய்வதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் இனிமேலாவது தயாராக வேண்டும். https://arangamnews.com/?p=12333
  12. அந்த வாசகங்களின் உண்மை இப்ப தான் புரிகின்றது ...வயசு போக போக😅
  13. உண்மை தான் இதை அறிந்து தான் என்னவோ இலங்கை தமிழ் யுரியுப்பர்கள் இப்பவே இராவணன் இலங்கை தமிழ் மன்னன் என்றும் மறுபக்கம் தெய்வங்கள் ஸ்ரீ இராமபிரான் சீதை அம்மன் , சமேத லக்ஷ்மன் என்றும் ஸ்ரீ இராமபிரான் சீதை அம்மனை மீண்டும் இணைத்து வைத்த கடவுள் அனுமான் என்றும் காவிதிரிய ஆரம்பித்துவிட்டனர்.
  14. காந்தியடிகளின் வேதாரண்ய சத்தியா கிரக போராட்டத்தின் போது உப்பு காய்ச்சி சகோதரிகள் இருவரும் சிறை சென்றார்கள் ..? இது புது தகவல் தெரியாதை ஒன்றை ஒத்து கொள்ள வேண்டும் . அப்படியே அடியேனும் திராவிட பொய் பித்தலாட்டங்களை அம்பலபடுத்துவதில் முன்னிற்பதோடு தமிழ் தேசிய அரசியலை (இப்போது சீமான் ;) இதை விட திறமாக முன்னொடுப்பவர் வந்தால் அவரின் பின் எடுத்து செல்ல கெலியில் வருவேன்!! இதை எல்லாம் சாட்சி வைத்து விட்டு செய்வார்களா என்ன ? சாட்சிகள் நிலவரம் .. மாணவன் உதயகுமார், அன்றைய ஆட்டோ சங்கர் ? பழனி பாபா ? சாதிக் பாட்ஷா ? வாசன் ஐ கேர்- M. ஆருன்? கொடநாடு ஓம் பகதூர் & கனகராஜ்? நம்மையும் போட மாட்டார்கள் என என்ன நிச்சயம்.
  15. 100 வருடங்களை தாண்டிய வீரகேசரி…. டெல்ஃப்ட் தீவு என்று நெடுந்தீவை எழுதும் கொடுமையை என்னவென்று சொல்வது.
  16. இங்கே பல பேர் எனக்கு பல வேடங்கள் தந்துள்ளார்கள்… அதில் திமுக 200 ரூபாய் உ பி என்பதும் எப்போதோ நடந்து விட்ட பட்டாபிஷேகம்தான் தோழர் ஆகவே கவலை வேண்டாம். நீங்கள் சொன்னதில் ஸ்டாலின் பற்றியதையும், கருணாநிதி பற்றியதையும் மட்டும் நான் கேள்வி கேட்க ஒரே காரணம், இதில் சம்பந்தபட்ட இரு பெண்களும் பொதுவெளியில் வந்து, அப்படி எதுவுமே இல்லை என மறுத்துள்ளார்கள். ஏனையவற்றில் இப்படியான ஆதாரத்தை என்னால் தரமுடியவில்லை. சம்பந்தபட்ட பெண்களே இல்லை என மறுத்த போது, அரசியலுக்காக அதை மீள, மீள காவுவது - காவுபவர் மிக மட்டமானவர் என்பதையே காட்டுவதாக நான் கருதுகிறேன் தோழர். தனியொருவன் படத்தில் வரும் வசனம் போலத்தான் இதுவும். உண்மைக்குதான் ஆதாரம் தேவை. பொய்க்கு அல்ல. நான் உண்மையை எழுதுவதால் - ஆதாரம் இல்லாமல் எழுத முடிவதில்லை. நீங்கள் எழுதும் ஒவ்வொரு கிசு கிசு வையும் என்னால் ஆதாரத்துடன் பொய் என நிறுவமுடியவில்லை. அப்படி நிறுவ முடிந்தவற்றை பற்றி மட்டும் எழுதுகிறேன். நீங்கள் கண்டமேனிக்கு உங்கள் மனதில் வரும் வக்கிர எண்ணங்களை எல்லாம் எழுத ஆதாரம் தேவையில்லை என்பதையும் ஏற்கிரேன். ஆகவே நீங்கள் ஆதாரம், தரவு எதை பற்றியும் கவலைபடாமல் எழுதலாம். பிகு அரசியல்வாதிகள் மட்டும், அல்ல அயோக்கியர்கள் எங்கும் நிறைந்துள்ளார்கள். யாழ்களத்திலும். இதில் எம் ஜி ஆர் - அம்பிகா, ராதா, அவர்களின் தாய் சரசுக்கு அரச நிலம் வாங்கி கொடுத்தது, அதே போல் ரஜனிக்கு ராகவேந்திரா மண்டப நிலம் வாங்கி கொடுத்தது என சிலதை அண்மையில் திருநாவுக்கரசர் வெளிப்படையாக பேட்டியில் கூறி உள்ளார். ஆனால் இதன் பின்னால் பாலியல் இலஞ்சம் இருந்தது என்பது உங்கள் ஊகமே. அப்போ ரஜனியிடமும் எம் ஜி ஆர் பாலியல் இலஞ்சம் பெற்றாரா? ஆகவே நாம் ஆதாரபூர்வமாக நிறுவ முடியாத எதையும், ஏதோ கண்ணால் கண்ட சாட்சி போல் அடித்து விடக்கூடாது தோழர். அப்படி எழுதுவது அருவருக்கத்தக்கது.
  17. ❤️............... மிக்க நன்றி பாஞ்ச் ஐயா. யாழில் உங்களின் எழுத்து ஒரு தனிரகம், அவற்றை நான் ரசித்து வாசிப்பேன்..........👍.
  18. ராஜினி திராணகம திடீரென்று "மனித உரிமை ஆர்வலராக" தலையில் சுமக்கப் படுவதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை! அதே நேரம், சிங்களப் பேரினவாத அரசும் உண்மைகளை வெளிக்கொணர முயலும் நல்ல தரப்பாக நம்ப வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்கள் "பெயின்ற் அடிக்கும்"😂 குழுவினர். அமரர் ராஜினியைச் சுட்ட ஒற்றை நபர் (கட்டையான, சிவந்த ஒருவர்) யாரென்று யாருக்கும் தெரியாது - அற்புதனுக்கும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சுடப் பட்ட அந்த நாளிலும், அதற்கு முந்தைய நாட்களிலும் நிகழ்ந்த சம்பவங்களின், உரையாடல்களின் சாட்சிகளை வைத்துத் தான் முறிந்த பனையின் எழுத்தாளர்கள் புலிகளே சுட்டதாகச் சொல்கிறார்கள். முறிந்த பனையை இங்கே இணைத்து உரையாட இயலாது, ஆனால் அதில் இருக்கும் தகவல்கள் அற்புதனின் தொடரில் இருக்கும் தகவல்களை விட மிக நுணுக்கமாக (granular) இருப்பதாக நான் உணர்கிறேன். அத்தனை நுணுக்கமான சாட்சிகளையும், உரையாடல்களையும் யாரும் கற்பனையில் உருவாக்கி விட முடியாது. மிக முக்கியமான இன்னொரு விடயம், இந்திய இராணுவத்தையும் ஒட்டுக் குழுக்களையும் துகிலுரிந்த முறிந்த பனையை புலிகள் தடை செய்தனர், அமரர் ராஜினியின் உருவப் படத்தைக் கூட பல்கலைக் கழகத்தில் நினைவுச் சுவரில் மாட்ட அனுமதிக்காமல் புலிகள் தடுத்திருந்தனர். 2012 இற்குப் பின்னர் தான் அவரது உருவப் படம் பல்கலை மருத்துவ பீடத்தில் காட்சிப் படுத்தப் பட்டது. கோமாவில் இருப்போர் இன்னும் "ஆழமான" கோமாவிற்குப் போய் ஒளிந்து கொள்ளட்டும்😎!
  19. 🤣.................. அல்வாயனின் பதிவைப் பார்த்த பின், ஈழப்பிரியன் அண்ணாவிற்கு நித்திரை நன்றாகவே வந்திருக்கும் என்று நினைக்கின்றேன்................🤣. அந்த அடையாள அட்டையால் 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.............' என்று அன்று இரண்டு கன்னங்களையும் காட்டிக் கொண்டே பல இடங்களில் நிற்க வேண்டி இருந்தது. இரண்டு கன்னங்களையும் காட்டியதற்காக பரலோகம் போகும் போது, பிதா என்னை அதிகமாக ஆசீர்வதிப்பார்............. வல்வெட்டித்துறை, பொலிகண்டி, கம்பர்மலை, தொண்டைமனாறு, இவை எல்லாம் ஒரே கணக்கிலேயே வரும்............ இவர்களில் எவரும் தப்பவே முடியாது அந்த நாட்களில். 'பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை..............' என்ற நடைப்பயணம் சில வருடங்களின் முன் நடந்த போது, மீண்டும் பொலிகண்டியா என்று மெல்லிய சிரிப்பு வந்தது.
  20. பதிவுகள் அனைத்தும் திருமணம் தாண்டிய உறவுமுறை மற்றும் சொத்து பரிமற்றம் குறித்ததே .... திண்ணை கதை - 2 ஈழ போரட்டத்திற்கு பல கோடி கொட்டி கொடுத்த அன்றைய முதல்வர் திரு .ராமசந்திரன் மீதும் குதிரை லேகியம் உட்பட பல விமர்சனம் உண்டு. அன்றைய சகோதர நடிகைகளுக்கு பல கோடி பெறுமதி கொண்ட ARS (Ambiga - Radha - Sarasamma )கார்டன் 99 வருட குத்தகைக்கு அரசு நிலத்தை தாரைவார்த்தார் . பட்டா பத்திரம் பதிவு அனைத்தும் ஆதாரபூர்வமானவை . அன்றைய பொதுபணி அமைச்சர் திருநாவுகரசர் சாட்சி . இத்தனைக்கும் அக்காவும் சரி தங்கையும் சரி ஒரே ஒரு படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தது கிடையாது. அவர்களின் கலைசேவையை பாராட்டி கொடுத்தாராம்.. என்ன மாதிரியான சேவை ( ? ) அட போங்கப்பா.. திண்ணை கதை - 3 இப்போது கலியுக வள்ளல் என்று அழைக்கபடும் விஜயராஜ் (விஜயகாந்த்) தூரத்து இடி முழக்கம் நடிகை பிரமிளாக்கு செங்குன்றத்தில் பெட்ரோல் பங்க் வாங்கி கொடுத்தார். பட்டா / பதிவு / ஆவணங்கள் சாட்சி திண்ணை கதை - 4 அது போக தற்போது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரின் கதை நாறிபோனது உங்களுக்கு தெரிந்ததே. தெரிந்தது மூன்று தெரியாதது 9 ற்கும் மேல் என்று சொல்கிறார்கள். டிஸ்கி : அவர்களும் மனிதர்கள்தான் வானத்தில் இருந்து குதிக்கவில்லை அவர்களுக்கும் மறுபக்கம் உண்டு அதிகாரம் இருப்பதால் அடை காக்கபடுகிறது அவ்வளவே.. கலாய்பதோ அல்லது வாதம் செய்வதோ கட்சி சார்பின்றி அல்லது சமமாக இருக்க வேண்டும் யாழ் களம் சொல்வது என்ன ..? தமிழக கட்சி விவகாரங்களில் ஒதுங்கி இருப்பது / ஒன்றுபட்ட ஆதரவை கோருவது . ஆனால் தாங்கள் குறிப்பிட்ட கட்சி என்றால் வாதத்திற்கு ஓடி வருவதும் மற்றுமொரு கட்சி தலைவர் என்றால் பாய்ந்து பிடிங்குவதும் சரியான அணுகுமுறையாக தோன்றவில்லை.. மனதில் பட்டதை சொன்னேன் நன்றி..
  21. 🤣................ எதை எதையோ எல்லாம் பாடசாலையிலும், பின்னரும் படித்து மனனம் செய்த பின், இப்போதெல்லாம் இப்படியான சில வரிகள் தான் சட்டென்று ஞாபகத்திற்கு வருகின்றது...............
  22. இதெல்லாம் பெரிய விடயமே இல்லை, இன்னும் கொஞ்ச நாள் அதிகம் தங்கியிருந்தால் ஓரளவாவது அவுஸ்ரேலியா வாழ் எமது மக்களின் ரெய்லராவது பார்த்திருக்கலாம் உங்களது நல்ல காலம் தப்பிவிட்டீர்கள்.
  23. திருமண வாழ்வு என்பது ஆணும் பெண்ணும் அன்பை பகிர்ந்து இணையர்களாக வாழ்வது. தன்னை பாலியல் வன் கொடுமை செய்தவனிடம் ஒரு பெண் அன்பை பகிர்ந்து வாழ்நாள் முழுவதும் எப்படி வாழ்வது கந்தையா? எப்படி இதை சரியான தீர்பபு என்று கூறுவீர்கள்? அவளுக்கு அது தண்டனையல்லவா!
  24. உன் கண் உன்னை ஏமாற்றினால் .......! 😂
  25. "ஒடியல் கூழ்" அருமையான உவமானம் அல்வாயன் . ...... ரசிக்கையில் மண்வாசனை நாசியில் உரசிச் சென்றது ......! 😇
  26. தகவலுக்கு நன்றிகள் பல. எனக்கு இது தெரியாது அவர் தான் இணைத்தது உண்மை என்றும் இணைத்து இருக்க வாய்ப்புகள் உண்டு .....ஆனால் இப்போது பொய் என்று தெரிந்த பின்னர் அதை அது பொய் என்று எற்றுக்கொண்டு வாபஸ் பெற வேண்டும் இது யாழ் களத்தின். வளர்ச்சிக்கும். அவரது வளர்ச்சிகும். அவசியமாகும் 🙏
  27. ரசோதரன் கதை. உறவுகள் ஆகா ஓகோ என்று அடித்துப் பிடித்து ரசிக்கிறார்கள். நானும் ரசிப்போமே என்று கதையைப் பார்த்தேன், அம்மாடியோ கதை அப்படி நீளம். அளந்து பார்த்து இறங்கிப் போவதற்குள் சிட்னியில் இருந்து லொஸ்சேஞ்சல் போய்விடலாம் என்று தோன்றியது. என்றாலும் ஆவல் விடவில்லை, கோழிப் பொரியல் வாங்கி துண்டு துண்டாக தக்காழிக் குழம்பில் தொட்டு உண்பதுபோல் உறவுகளின் ஊட்டத்தையும் தொட்டுத் தொட்டு கதையை உண்டேன். ஆனந்தம் ஆனந்தம், அதுவே சுவையை அப்படி ஊட்டியது. “டேய் கஞ்சப் பயலே வறுத்த முழுக் கோழியை வாங்கித்தாடா” நாக்கு வாட்டி எடுத்தது. தாள் சில்லறையாகி சில்லறையும் தீர்ந்தது, முழுக்கோழி வாங்க நான் எங்கே போவேன்? பணிசெய்து பணம் உழைக்க முதுமை விடுமா???🥵
  28. முன்பு ஒரு இந்திய நீதிபதி பாலியல் வன்கொடுமை செய்தவனை அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி தீர்ப்பு வழங்கினாராம் ☹️
  29. நல்ல முடிவு தொடருங்கள். இனி இஸ்ரேல் இலங்கையை ஆக்கிரமிக்க போகின்றது என்று புரளியை தமிழ் யுரியுப்பர்கள் மூலம் இன்னும் தீவிரமாக தமிழர்களிடம் பரவவிடுவார்கள்.
  30. இனித்தான் இலங்கைக்கு நல்ல காலம் பிறக்கப்போகுது! நான்கால் வகுத்து மூன்றால் பெருகும் மக்கள் கதறும் காட்சியைக் காண அவா!
  31. இந்த அறை யாருக்கு விழுந்ததென்று தெரியாமல் எனக்கு நித்திரையே வராது.
  32. காத்தன்குடி வான் பரப்பில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் முஸ்லீம் மக்கள் மகிழ்ச்சி
  33. யோகர் சுவாமிகளின் சிந்தனை எட்டி பார்க்கிறது😅 உண்மை... போராட்டங்கள் ,உயிர்பலிகள் ...அந்த வெளிச்சவீடு வாய் இருந்தால் பல கதைகள் சொல்லியிருக்கும்
  34. இவர் தள்ளுவதன் பலத்தால் அந்த யானை ஏறவில்லை. தன் பின் தனது எஜமான் நிற்கிறார் என்ற நம்பிக்கையை நம்பி தானாகவே மேலேறுகின்றது. இதே போல் தான் இன விடுதலை தலைவர்களும் அவர் தம் மக்களும்.
  35. இந்த உலகின் முக்கிய பிரச்சனையான/பழைய பிரச்சனையான பலஸ்தீன பிரச்சனையை சர்வதேச முக்கிய நாடுகள் முடித்து வைக்க வேண்டும்.இல்லையேல் அமைதி பூங்கா போன்ற நாடுகளிலும் குண்டுகளை வைத்து சீரழிப்பார்கள். ஆகாயத்திலிருந்து குண்டுகளை போட்டு அடக்க அவர்கள் ஜேர்மனியர்களும் அல்ல ஜப்பானியர்களும் அல்ல.எதுவுமே இல்லாதவர்கள்.எதையும் செய்வார்கள்.
  36. உண்மையிலேயே இந்தப் பாட்டை இப்பொழுதுதான் கேட்கிறேன். எம்ஜிஆர் கால் முறிந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஓய்வில் இருந்த போது சரோஜாதேவி எல்லோருடனும் சேர்ந்து நடித்தார் என்ற செய்தி இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் வந்த படமாக இருக்கும். பாலாஜியுடன் அவரது ஆட்டம் நன்றாக இருக்கிறது. நீண்ட நாட்களாகிவிட்டது இந்தப் பாடலைக் கேட்டு. எஸ்.சி. கிருண்ணன் பாடியது. மருதகாசியின் அற்புதமான பாடல் வரிகள். கவலையோடு இருக்கும் போது மனதுக்கு ஒத்தடம் தரும் பாடல். நன்றி Newbalance
  37. தமிழ் சிறி, வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புவது யாழ் கள விதிகளுக்கு மட்டுமல்ல, பொதுவான ஊடக தர்மத்துக்கும், ஊடக விதிகளுகும் முரணாணது.
  38. மேலே சிறி அண்ணாவிடம் கேட்டது உங்களுக்கும் சேர்த்தே. அந்த திரியில் பல ஆதாரங்களோடு உங்கள் இருவருக்கும் இது பச்சை பொய் என விளக்கி எழுதினேன். அதன் பின்னும் ஏன் ஒரு குடும்ப பெண்ணை பற்றி பொதுவெளியில் இப்படி அசிங்கமாக எழுதுகிறீர்கள்? ஆதாரம் (இதன் அடியில் - sources என மேலதிக ஆதாரங்களும் குறிப்பிட படுகிறன). தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. Post Link | Archive Link Post Link Post Link சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு கொடுத்த Zoo மீது ABVP சங்கிகள் தாக்குதல் என்ற செய்தி உண்மையா? Fact Check/Verification ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து, ராசாத்தி அம்மாளின் இளவயது படம் குறித்து தேடினோம். இத்தேடலில் ஏசியா நெட் நியூஸ் தமிழ் இணையத்தளம் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில் கருணாநிதி, ராசாத்தி அம்மாள், மற்றும் கனிமொழி (சிறுமியாக) இருக்கும் பழைய படம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. இப்படத்தில் இருக்கும் இளவயது ராசாத்தியம்மாளின் முகத்தோற்றத்தை வைரலாகும் படத்திலிருக்கும் பெண்மணி முகத்தோற்றத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், வைரலாகும் படத்திலிருக்கும் பெண் ராசாத்தி அம்மாள் அல்ல என உறுதியானது. இதனையடுத்து வைரலாகும் அப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் சர்ச் செய்து பார்க்கையில் “‘நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்’னு யாரும் சொல்லிடக்கூடாது!– நடிகை கெளசல்யா” என்று தலைப்பிட்டு ஏப்ரல் 21, 2018 அன்று விகடன் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. இப்பதிவுடன் கட்டுரை ஒன்றின் லிங்கும் தரப்பட்டிருந்தது. அக்கட்டுரையை வாசித்தபின் வைரலாகும் படத்திலிருக்கும் பெண்ணின் பெயர் கௌசல்யா என்பதும், அவர் நடிகர் செந்தாமரையின் மனைவி என்பதும் தெரிய வந்தது. சிறுவயதில் நாடக நடிகராக இருந்த கௌசல்யா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாகவும் அறிய முடிந்தது. தொடர்ந்து ‘கௌசல்யா செந்தாமரை’ என்று குறிப்பிட்டு கூகுளில் தேடும்போது இவர் குறித்த பல நேர்காணல்கள் நமக்கு கிடைத்தது. அதில் ஒன்றாக கௌசல்யாவும் அவரது மகளும் பிஹைண்ட்வுட்ஸ் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியின் சிறுபகுதி அந்த ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதில் செந்தாமரை மற்றும் கௌசல்யா தம்பதியின் மகள், “என் அப்பாவுக்கு 4 பசங்க, 2 பொண்டாட்டி. என் அப்பாவின் முதல் மனைவியின் பெயர் லட்சுமி, அவர்களுக்கு 3 பசங்க. இரண்டாவது மனைவி சாட்சாத் இவங்கதான் வேறு யாரும் கிடையாது. எங்க அப்பாவுக்கு எக்ஸ்ராலாம் கிடையவே கிடையாது. எங்க அப்பா ரொம்ப நல்ல மனுஷன். அவங்களுக்கு பிறந்த ஒரே பொண்ணு நான். ஆக, என் அப்பாவுக்கு 4 பசங்க, 2 பொண்டாட்டி. தயவு செஞ்சு போடுங்க. ஏன்னா எடிட்ல நீங்க கட் பண்ணிடுவீங்க. இந்த விஷயம் மக்களுக்கு போய் சேரணும்னு நான் நினைக்கிறேன்” என்று பேசி இருப்பதை காண முடிந்தது. கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் படத்திலிருப்பது ராசாத்தி அம்மாள் அல்ல; அது நடிகை கௌசல்யா செந்தாமரை என தெளிவாகின்றது. அதேபோல் மறைந்த நடிகர் செந்தாமரைக்கு லட்சுமி, கௌசல்யா என இரண்டு மனைவிகள் மட்டுமே இருந்துள்ளனர் எனவும் அறிய முடிகின்றது. Also Read: ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் உண்மையானதா? Conclusion ராசாத்தி அம்மாள் மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி பரப்பப்படும் படம் தவறானதாகும். அப்படத்தில் செந்தாமரையுடன் இருப்பவர் தொலைக்காட்சி நடிகை கௌசல்யா செந்தாமரை ஆவார். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Sources Report from Asianet News Tamil, dated October 29, 2019 X post from Vikatan, dated April 21, 2018 Report from Vikatan, dated April 21, 2018 Facebook post from Behindwoods, dated January 15, 2025 Self Analysis https://newschecker.in/ta/fact-check-ta/rasathi-senthamarai-wife-false பிகு எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு.
  39. Thava Arumugam · Suivre rpdetsooSnm3m82uh95911ah0ali1m 2u29mahh3017m65itg19901f20c50 · ஊருக்குப் போய் கலியாணம் கட்டின நம்ம பயல் ஒருத்தன் மனைவி வந்ததும் அவள் ஆங்கிலம் படிக்க ஆசைப்படுறாள் என்று ஆங்கில வகுப்பிற்கு அனுப்பி வைத்தான். கொஞ்சநாள் கழிய ஒருநாள் மனுசன் வேலையால களைத்து விழுந்து வர வீட்டம்மா தான் படிச்ச ஆங்கிலத்தை மனுசனுக்கு கதைத்துக்காட்டி பேர்வாங்கனும் என்றிட்டு அவன் வீட்டவர அவள் : Welcome home, Are you tired darling? அவன் : Today I am so tired ... அவள் : Ok...Rest in Peace !!! கிழிஞ்சுது போ😂"
  40. 3. புலம் பெயர்ந்த இலக்கியம் --------------------------------------------- காத்திரமான, நீண்ட காலத்தில் நிலைத்து நிற்கப் போகும் பல உண்மைகளும், விடயங்களும், ஆக்கங்களும், மனிதர்களும் அவர்கள் அல்லது அவைகளின் ஆரம்ப காலங்களில் கவனிக்காமல் விடப்படுவது அல்லது உதாசீனப்படுத்தப்படுவது வழமையே. எங்கள் இனத்தில் இந்தப் போக்கு இன்னும் கொஞ்சம் அதிகமோ என்று இடையிடையே தோன்றுவதுண்டு. ஆனால் பூமி சூரியனைச் சுற்றுகின்றது என்று சொன்னதற்காக கலீலியோ கலிலி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, அப்படியே இறந்து போனார் என்பது போன்ற நிகழ்வுகளால், உலகில் ஒருவர் இன்னொருவருக்கு குறைவில்லை போல என்று சமாதானம் அடைவதும் உண்டு. சில சமூகங்கள் கால நதியில் வேகமாக நீந்தி முன்னே போய்விட்டன. வேறு சில பழம் பெருமைகள் பேசிக் கொண்டே சிறிது பின்தங்கிவிட்டன. மலை வேம்பு என்னும் மரத்தை, அதை ஒரு விருட்சம் என்றே சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன், பத்து பன்னிரண்டு வயதாக இருக்கும் போதே முதன் முதலில் பார்த்தேன் என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னரேயே ஊர் வேப்ப மரங்களில் நுனி வரை ஏறி வேப்பம் பூ பிடுங்கும் வேலையில் சிறப்பு தேர்ச்சி அடைந்து இருந்தேன். எங்கள் ஊரில் வேப்பம் மரங்களின் உச்சியில் இருந்து பார்க்கும் போது நீலக் கடல் தொடுவானம் வரை எல்லையில்லாமல் தெரியும். இவையெல்லாம் ரசித்துப் பார்க்க வேண்டிய விடயங்கள் என்று நான் அன்று அறிந்திருக்கவில்லை. வேப்பம் பூ பிடுங்கி, மரச் சொந்தக்காரருக்கு ஒரு பங்கைக் கொடுத்து விட்டு, மிகுதியை சில வீடுகளுக்கு விற்போம். வடகம் செய்வதற்காக வாங்குவார்கள். கடலின் அழகை ரசிப்பதை விட, அதிக வேப்பம் பூ சேர்ப்பதிலேயே கவனம் இருந்தது. ஆனால் மலை வேம்பு பூக்கவில்லை, அதனால் அந்த விருட்சத்தின் மீது ஏறும் தேவை ஏற்படவில்லை. மலை வேம்பு ஊர் வேப்பம் மரத்தை விட கடுமையான நிறம் கொண்டதாகவும், உறுதியானதாகவும் தெரிந்தது. அந்தக் காலங்களில் திருகோணமலை சல்லியில் இருந்து ஒரு உதைபந்தாட்ட அணியினர் எங்களூருக்கு போட்டிகளுக்கு வந்திருந்தார்கள். அவர்களின் அணி மிகவும் திறமையானது, ஆனால் அவர்களின் விளையாட்டில் முரட்டுத்தனம் சிறிது அதிகமாக இருந்தது போலத் தெரிந்தது. அதனாலும், மலை என்னும் பெயராலும், மலை வேம்பு திருகோணமலையிலேயே அதிகமாக இருக்கின்றது என்று நானாகவே முடிவெடுத்து வைத்திருந்தேன். பல வருடங்களின் பின்னர் திருகோணமலையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். அங்கு ஒரு மலை வேம்பையும் நான் காணவில்லை. ஆனால் சிட்னியில் ஒரு மலை வேம்பைக் கண்டேன். பல வருடங்களின் முன்னே ஒரு நாள் வெறுமனே சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு சிட்னியின் புறநகர்ப் பகுதியான அந்த சிற்றூரில் நடந்து கொண்டிருந்தேன். அந்த விருட்சம் அங்கே நின்று கொண்டிருந்தது. இது எனக்குத் தெரிந்த மரமே என்று அதன் அருகில் போனேன். அது அதுவே தான். அப்படியே பார்த்து கொண்டு அதனுடன் இருந்த ஒரு சிறிய ஒற்றை தள கட்டிடத்தினுள் போனேன், நூலகம் என்று எழுதியிருந்ததால். நூலகத்தின் நடுவே நூலகப் பணியாளர்களுக்கான இடம் இருந்தது. வலதுகைப் பக்கமாக பல வரிசைகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இடதுகைப் பக்கமாக பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இருந்தன. அதனுடன் நூலகத்துக்கு வருபவர்கள் இருந்து வாசிப்பதற்கு வசதியாக கதிரைகளும், மேசைகளும் சில நிரல்களில் அங்கே இருந்தன. மிகவும் வசதியான இருக்கைகள் கொண்ட கதிரைகள் மற்றும் அகண்ட மேசைகள். இவை எல்லாவற்றின் பின்னும், சுவர் ஓரமாக இந்திய மொழிகளில் புத்தகங்களும், சஞ்சிகைகளும் அடுக்கியிருந்தார்கள். தமிழ் என்று ஒரு பிரிவும் இருந்தது. அதிகமாகப் போனால் ஆனந்த விகடனும், குமுதமும், சில அவசர நாவல்களும் அங்கே இருக்கும் போல என்று அவ்வளவாக நம்பிக்கை இல்லாமலேயே அருகில் சென்றேன். முதலில் கண்ணில் பட்டது அசோகமித்திரனின் '18 வது அட்சக்கோடு' நாவல். அந்த திகைப்பு மாறும் முன்னேயே அந்த தமிழ் பகுதியில் இருந்த பல நாவல்களும், கதைகளும் இன்னும் இன்னும் திகைப்பைக் கொடுத்தன. பாரதியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகன், சாரு, எஸ் ரா, ஷோபா சக்தி, அ. முத்துலிங்கம்............ என்று தமிழ் இலக்கியத்தின் உச்சங்கள் என்று சொல்லப்படுபவர்களின் நாவல்களும், கதைகளும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றை எல்லாம் யார் அங்கே கொண்டு வந்தது, அதைவிட முக்கியமாக இவற்றையெல்லாம் யார் அங்கே வாசிக்கின்றார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. எட்டோ அல்லது பத்துக் கோடி தமிழ் மக்களில் மொத்தமாகவே ஒரு ஆயிரம் பேர்கள் தான் இவற்றையெல்லாம் வாசிக்கின்றார்கள் என்று பொதுவாகச் சொல்வார்கள். அப்படியாயின் ஆஸ்திரேலியாவில் இருக்கும் அந்த சிற்றூர் வாசிகசாலையில் இந்தப் புத்தகங்கள் எதற்காக. எங்களை நாங்களே குறைவாக மதிப்பிட்டிருக்கின்றோம் போல. மௌனமாக இருப்பவர்களின் குரல்கள் கணக்கில் சேருவதில்லை போல. ஆனால் அந்த நாவல்களும், கதைகளும் அங்கே வாசிக்கப்படுகின்றன என்பது திண்ணம். நான் அங்கே நிற்கும் நாட்களில் பெரும்பாலான நாட்களில் ஒரு சில மணி நேரமாவது அங்கே போவேன். சில நாட்களில் பகல் பொழுதின் பெரும் பகுதியை அங்கேயே செலவழித்திருக்கின்றேன். அந்தப் புத்தகங்கள் இடம் மாறிக் கொண்டே இருக்கின்றன.சில புத்தகங்கள் இல்லாமல் போகின்றன, மீண்டும் தோன்றுகின்றன. சிலவற்றில் சில பக்கங்களில் அடிக்கோடுகள் போடப்பட்டிருக்கின்றன. புத்தகங்கள் வாசிக்கும் ஒரு தமிழ் சமுதாயம் அங்கே இருக்கின்றது. நெல்சன் குடாவிலிருந்து திரும்பி வந்த பின் அடுத்த நாள் காலையிலேயே வாசிகசாலைக்கு கிளம்பினேன். அது அங்கே இன்னமும் அப்படியே இருக்கின்றது என்று வீட்டுக்காரர்கள் சொன்னார்கள். இரண்டு இரண்டு வீட்டுக் காணிகளை இணைத்து வரிசை வரிசையாக மாடிக் குடியிருப்புகள் தோன்றிக் கொண்டிருக்கும் அந்த ஊரில் வாசிகசாலையை அப்படியே விட்டு விடுவார்களா என்ற பயம் மனதில் இருந்தது. வாசலில் நின்ற மலை வேம்பு அங்கே இல்லை. அதற்குப் பதிலாக சவுக்கு மரம் ஒன்றை புதிதாக வைத்துள்ளார்கள். ஏதோ ஒரு கடும் மழையிலோ அல்லது காற்றிலோ அந்த விருட்சம் தளர்ந்து போயிருக்கலாம். கூரையின் மேல் அது விழ முன் அதை அப்புறப்படுத்தியிருப்பார்கள். நீ முந்தினால் நீ, நான் முந்தினால் நான் என்று காலம் போய்க் கொண்டிருக்கின்றது, மரமானாலும் மனிதர்களானாலும். மற்றபடி நூலகம் தோற்றத்தில் அப்படியே இருந்தது. அதே நடு, வலக்கை, இடக்கை பிரிவுகள். ஆனால் இடைக்கைப் பக்கம் இருக்கும் இருக்கைகள் எல்லாம் இந்திய மக்களால் நிரம்பி இருந்தது. சில ஆண்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார்கள். பலரிடம் மடிக்கணினி இருந்தது. அவர்கள் அந்தக் கணினிகளில் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். அங்கு இலவச இணைய வசதி கிடைக்கின்றது என்று பின்னர் அறிந்துகொண்டேன். தமிழ் பகுதி அதே இடத்தில் இருந்தது. ஆனால் அங்கே இருந்த நாவல்களும், கதைகளும் மாறியிருந்தன. தமிழின் ஆகச் சிறந்த நாவல் அல்லது நாவல்கள் எது என்றால் பலருக்கும் பல தெரிவுகள் இருக்கும். மிகவும் மதிக்கப்படும் சில விமர்சகர்களால் தமிழின் ஆகச் சிறந்த நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது ப. சிங்காரம் அவர்கள் எழுதிய 'புயலிலே ஒரு தோணி' என்னும் நாவல். இந்த நாவல் இன்று வரை தமிழில் ஒரு சாதனையாகவே கருதப்படுகின்றது. அது அங்கே இருந்தது. புலம் பெயர்ந்தவகளுக்கும், இந்த நாவலுக்கும் நெருங்கிய ஒரு தொடர்பு உண்டு. தமிழில் முதன்முதலாக எழுதப்பட்ட புலம்பெயர் நாவல் அல்லது கதை இதுவே. இந்த நாவலை 60ம் ஆண்டுகளில் எழுதிய சிங்காரம் அவர்கள், அதை 70ம் ஆண்டுகளிலேயே வெளியிட முடிந்தது. பத்து ஆண்டுகளாக பதிப்பகங்களாலும், நிறுவனங்களாலும் இவரது எழுத்து நிராகரிக்கப்பட்டது. 'ஒன்றுமே விளங்கவில்லை................' என்று தூக்கி எறிந்துவிட்டனர். சிங்காரம் அவர்கள் அப்படியே ஒதுங்கி தனியாகிப் போனார். அதன் பின்னர் அவர் எதுவுமே எழுதவில்லை. 90ம் ஆண்டுகளில் தனியே இறந்த பொழுது கூட எவருக்கும் தகவல் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கிடைத்த ஒரு கதிரையில் அவரது நாவலுடன் அமர்ந்தேன். அட்டையில் அவரது படம். அப்படித்தான் நினைக்கின்றேன். இணையத்தில் கிடைத்த திருட்டுப் பதிப்பில் இந்த நாவலை முன்னர் வாசித்திருக்கின்றேன், ஆனால் அதில் அவரது படம் இருக்கவில்லை. முன் தலை முழுவதும் தலைமுடி இல்லை. காதுகளில் நீண்ட முடி வளர்ந்திருந்தது. அது அவருக்கு ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மலை வேம்பும் ஊர் வேப்ப மரம் போலவே பூக்கும், காய்க்கும் என்று பின்னர் தேடி அறிந்துகொண்டேன். இனி அந்த விருட்சத்தை எங்கே தேட. (தொடரும்.................. )
  41. பயணத்தில் வந்த இரண்டு கதைகளுமே சிறப்பு. நீங்கள் மண் குவியல் பற்றிக் குறிப்பிட்ட பொழுது எனக்கு நினைவுக்கு வந்தது, வல்லிபுரக் கோவில் மண் குவியல்தான். அன்று ஏழு பெரிய மண்குவியல்களைத் தாண்டித்தான் கோவிலில் இருந்து கடற்கரைக்கு (கடல் தீர்த்தம்) போக முடியும். இப்பொழுது அங்கே அவை இருக்காது. கள்ள மணல் அள்ளி மணல் மலையையே அழித்திருப்பார்கள். இப்பொழுது இங்கே என்ன நடக்கப் போகிறதோ?
  42. படம் என்ன படம் . ..... அது என்ன செய்யும் உண்மையான அழகைக் காட்டும் . ......அது எங்களுக்குப் பிடிக்காது ......... அது கிடக்கட்டும் விடுங்கோ ............மிகவும் ரசனையான எழுத்து உங்களுடையது . ..... அதில் குறைவில்லாமல் தொடருங்கள் . .......! 😃
  43. முழு விமானநிலையத்துக்கும் (ரேமினல்ஸ்)வண்டிகள் உள்புக ஒரேஒரு பாதை. முதலில் உள்ள ரேமினல்கள் கொஞ்சம் கூடுதலான வாகனங்கள் நின்றால் பின்னால் வரும் வாகனங்கள் உள்நுழையவே முடியாது. 2015 இல் கொழும்பில் இருந்து சிட்னி கொழும்பு எயர்ஏசியாவில் மிகக் குறைந்த விலையில் எடுத்திருந்தோம். இரவு 11 மணிக்கு விமானம். அங்கே போனபின் அவுஸ் விசா எங்கே என்றார்கள். அமெரிக்கா புத்தகத்துக்கு விசா தேவையில்லையே. இப்போது புதிய சட்டம் எலக்ரோனிக் விசா எடுக்க வேண்டும்.உடனேயே எடுக்கலாம்.எடுத்ததும் லைனில் நிற்காமல் நேராக இங்கே வாருங்கள் என்றார்கள். போனை நோண்டினால் சரியாக வேலை செய்யவில்லை. பிள்ளைகளுக்கு விபரத்தைச் சொல்லி எடுத்து அனுப்பியிருந்தனர். விமானம் புறப்படும் நேரம் வந்தும் புறப்படுவது போல தெரியவில்லை.இயந்திர பிரச்சனை என்றார்கள்.கடைசியில் இரண்டு மணிபோல கொழும்பு கில்டன் கோட்டலில் சாப்பாட்டு வவுச்சருடன் தூங்கினோம். அடுத்த நாள் இரவு விமானநிலையத்துக்கு பேரூந்தில் கொண்டு போய் விட்டார்கள். அடுத்த நாளும் இதே பிரச்சனை.சனம் கூயா மாயா என்று கத்தி குளறி எதுவும் ஆகவில்லை. மீண்டும் கொட்டல். அடுத்த நாளே ஒரு மாதிரி புறப்பட்டோம். அந்த விமானத்தில் பச்சைத் தண்ணீராலும் பணம் கொடுத்தாலே கிடைக்கும். எந்த ஒரு தமிழனும் விரும்பி பறக்காத விமானத்தில் ரிக்கட் எடுத்த போதே இப்படி ஏதாவது நடக்கலாம் என எண்ணினோம் என்று நையாண்டி பண்ணினார்கள். 2 சொட்டை வாங்கி ஊத்திப் போட்டு நீட்டி நிமிர்ந்து மற்ற சீற்றிலும் படுக்க வேண்டியது தானே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.