Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    19112
    Posts
  2. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    12678
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87988
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20010
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/19/25 in all areas

  1. தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்றால் நியூசிலாந்து 3 வெற்றிகளுடனும் 2 வெற்றி தோல்வியுடன் 8 புள்ளிகள் கிடைக்கும். தென்னாபிரிக்கா இனிவரும் ஆரம்ப சுற்று போட்டிகளிலும் தோல்வியூற்றால் 8 புள்ளிகளுடன் இருக்கும். இரண்டு அணிகள் ஒரே புள்ளிகள் பெற்றால் எந்த அணி அதிக வென்றது என்ற கணக்கில் தென்னாபிரிக்கா ( 4 போட்டிகள்) இரு அணிகளுக்கும் இடையில் முதல் இடம் பிடிக்கும். அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 3 அணிகளினால் மட்டுமே தென்னாப்பிரிக்காவை விட ஆரம்ப சுற்று போட்டியில் முன்னிலை பெற முடியும். தென்னாப்பிரிக்கா ஆரம்ப சுற்று போட்டி முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் என்பதினால் தென்னாப்பிரிக்கா அரை இறுதிக்கு தெரிவான 2 அணியாகும். (ஏற்கனவே அரையிறுதிக்கு அவுஸ்திரேலியா தெரிவாகியுள்ளதற்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்). வினா 32 - அரை இறுதிக்கு தெரிவாகும் இரண்டாவது நாடு தென்னாப்பிரிக்கா அரை இறுதிக்கு செல்லும் 7 என போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 41 புள்ளிகள் 2) ரசோதரன் - 38 புள்ளிகள் 3) ஏராளன் - 36 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 36 புள்ளிகள் 5) புலவர் - 35 புள்ளிகள் 6) நியூபலன்ஸ் - 35 புள்ளிகள் 7) வீரப்பையன் - 35 புள்ளிகள் 8) சுவி - 34 புள்ளிகள் 9) கிருபன் - 34 புள்ளிகள் 10) கறுப்பி - 31 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 31 புள்ளிகள் 12) செம்பாட்டன் - 30 புள்ளிகள் 13) வாதவூரான் - 30 புள்ளிகள் 14) வசி - 28 புள்ளிகள் 15) வாத்தியார் - 26 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 20, 32(2/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 43)
  2. வினா 21 - இங்கிலாந்து 4 ஒட்டங்களால் இந்தியாவை தோற்கடித்துள்ளது செம்பாட்டன், ஈழப்பிரியன் ஆகியோர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 41 புள்ளிகள் 2) ரசோதரன் - 38 புள்ளிகள் 3) ஏராளன் - 36 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 36 புள்ளிகள் 5) புலவர் - 35 புள்ளிகள் 6) நியூபலன்ஸ் - 35 புள்ளிகள் 7) வீரப்பையன் - 35 புள்ளிகள் 8) சுவி - 34 புள்ளிகள் 9) கிருபன் - 34 புள்ளிகள் 10) ஈழப்பிரியன் - 33 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 32 புள்ளிகள் 12) கறுப்பி - 31 புள்ளிகள் 13) வாதவூரான் - 30 புள்ளிகள் 14) வசி - 28 புள்ளிகள் 15) வாத்தியார் - 26 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 21, 32(2/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 45)
  3. ஒவ்வொரு வைத்தியரும் ஒவ்வொரு உணவைப் பற்றி தத்தமது படிப்பின் ஊடாக பலதையும் சொல்லத்தான் செய்வார்கள் ........ஆனால் அவர்களைவிட தனக்குத் தனக்குத்தான் தன்னுடைய உடலின் ஒத்துக்கொள்ளக்கூடிய உணவுகள் ஒவ்வாமையான உணவுகள் சரியாகத் தெரியும் அவற்றைப் புரிந்து சாப்பிட்டு வந்தால் பலப்பல உபாதைகளைத் தவிர்க்க முடியும் . ......! என்ன வயது ஏற ஏற சாப்பிடும் உணவுகளின் அளவை குறைத்துக் கொண்டு வருவது சுகமானது, முக்கியமாய் இரவு உணவை குறைவாகவும் செரிமானம் ஆகக்கூடிய உணவை உட்கொண்டால் காலையில் சுகமாய் எழுந்திருக்கலாம் இது எனது அனுபவ உண்மை . ......! நீங்கள் ஒரு கிலோ பேரீச்சம் பழத்தை ஒரேயடியாய் உண்ணாமல் இரண்டு மூன்று தாராளமாய் சாப்பிடலாம் .......! இயற்கை ஒவ்வொரு தேசத்திற்கும் அந்தந்த தட்ப வெப்ப நிலைக்கேற்ப பழங்கள் கறிவகைகள் , புல் பூண்டுகள் என்று படைத்திருக்கு .......அந்தந்த நாடுகளில் வாழும் மனிதர்கள் , விலங்குகள் எல்லாம் அவற்றை சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர் . ...... ! போர், பஞ்சம் போன்ற புற சூழல்களால் இன்று மனித இனம் உலகம் முழுதும் பரந்து பட்டு இரந்துண்டு வாழ்ந்து கொண்டு இருக்கு . ..... ஆனால் இயற்கை ஆடுமாடுகள் இங்கு வாழ எங்கும் புல்லும் தண்ணியும் கொட்டி வைத்திருக்கு ...... அங்கு ஒட்டகங்கள் வாழ எங்கெங்கோ தூரம் தூரமாய் நீரூற்றும் ஈச்சம் சோலையையும் தெளித்து விட்டிருக்கு ....... அவைகள் சரியாகத்தான் வாழ்ந்து வருகின்றன . ..... எமக்கு மனம் என்ற ஒன்றைப் படைத்து விட்டதால் நாம்தான் அங்குமின்றி இங்குமின்றி எதிலும் திருப்தியின்றி அலைகிறோம் . ......!
  4. 1988 முதல் 1990 வரை தெற்கில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கவே இந்திய இராணுவம் வருகிறது, ஆகவே அவர்களை திருப்பியனுப்புங்கள் என்று கோரியே நடத்தப்பட்டது. ரணிலுக்கும் தலைவருக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட, இடைக்கால நிர்வாக சபை, சமாதானத்திற்கான யுத்த நிறுத்தம் என்று அனைத்தையும் சந்திரிக்காவோடும் தெற்கின் தீவிர இனவாதிகளுடனும் சேர்ந்து எதிர்த்ததே இதே அநுரவின் கட்சிதான். 13 ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இணைக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் மூலம் 2007 ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி பிரித்துப் போட்டதே அநுரவின் கட்சிதான். மகிந்தவின் போர்முயற்சிகளுக்கு தொடர்ச்சியான ஆதரவினை வழங்கி வந்து, தெற்கின் இனவாதத் தீயினை அணையாது வளர்த்து, தனது ஆதரவாளர்களில் பல்லாயிரக்கணக்கானவர்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கு உதவி புரிந்து, தமிழர்களின் விடுதலை நம்பிக்கையினை நிரந்தரமாகவே அழித்துவிட கங்கணம் கட்டிச் செயற்பட்டதும் அதே அநுரவின் கட்சிதான். போர்க்குற்றங்கள் நடக்கவில்லை, இனக்கொலை என்றே ஒன்று இல்லை, கொல்லப்பட்டதெல்லாம் பயங்கரவாதிகள் என்று இன்றும் நியாயம் கற்பிப்பதும், எமது இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம், சர்வதேச விசாரணை என்பதை ஏற்கமாட்டோம், வடக்குக் கிழக்கும் இணைய முடியாது, இருப்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினையே, இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை என்று இன்றும் கூறுவதும் அநுரவின் கட்சிதான். அவரது அரசு இன்று செய்வது ஊழல்வாதிகளை மக்கள் முன் காட்டி, அரசியலில் தமது எதிரிகளை பலவீனப்படுத்துவதும் , தாம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதை உறுதிசெய்துகொள்வதும்தான். அநுரவிற்குக் காவடி தூக்கும் தமிழ்த் தேசியவாதிகள் அவர் முன்வைக்கவிருக்கும் தமிழருக்கான தீர்வு என்னவென்பதை அவரிடம் எப்போது கேட்கப் போகிறார்கள்? வடக்குக் கிழக்கு இணைப்பு எனும் பேச்சிற்கே இடமில்லை என்று அவர் அடிமடியில் கை வைத்திருக்கும் நிலையில் அவரைத் தமிழர்கள் எதற்காக ஆதரிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்? தெற்கின் ஊழல்களுக்கும், பாதாள உலகக் குழுக்களுக்கும் தமிழர்களின் பிரச்சினைக்கும் இடையே இருக்கும் தொடர்புகள் என்ன? அல்லது தெற்கினை தூய்மைப்படுத்திவிட்ட உடனேயே தமிழருக்கான தீர்வைத் தரப்போகிறேன் என்று அநுர எங்காவது சொன்னாரா? இரத்திணச் சுருக்கம்!
  5. ஈழப்பிரியரே! டாக்குத்தரின் தெளிவுரைப்படி இனிமேல் வாழைப்பழத்தைக் கடியுங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.🏃 பெயர் சூட்டும்போது அறிவுபூர்வமாகவே நம் முன்னோர்கள் பெயரையும் சூட்டி உள்ளார்கள். இன்றைய அறிவுலகில் நாங்கள் வாழ்ந்தாலும் எம் முன்னோரின் அறிவுரைகளை ஆராய்ந்து அதன்படி நடக்கத் தவறிவிட்டோம். வாழைப்பழம்- தொடக்கமே வாழ்வைக் குறிக்கிறது.😌 பேரீச்சம்பழம்- தொடக்கமே பேயைக் குறிக்கிறது.🫣
  6. இந்தியாவை ரசியாவிடமிருந்து வாங்காதே என்று சொல்ல முதல் ரசியாவிடமிருந்து அமெரிக்காவும் ஐரோப்பாவும் நிற்பாட்டி முன்மாதிரியாக நடக்க வேண்டும்.
  7. நாலு அல்லவா? நீங்கள் பிலிப்பைன்ஸ் தாதி, யேமனிய சலவைக்காரி, இத்தாலி செக்கரெட்டரி, எல்லாரையும் சேர்த்து கணக்கு போடுகிறீர்களோ?
  8. முகநூல் செய்திகளை நம்பவேண்டாம். நல்லவரை கெட்டவராகவும், கேட்டவரை நல்லவராகவும் சிலர் எழுதுவார்கள்.
  9. சுகர் வருத்தம் இருந்தால் அல்லது அறிகுறி இருப்போர் தவிர்க்க வேண்டிய பழங்களில் முதன்மையானது பேரீச்சை பிளம்ஸ் போன்ற உலர்த்திய பழங்கள். சீனி உலரும் போது மேலும் அடர்தியாகும். அதேபோல் வாழை. கிலைசீமிக் இண்டெக்ஸ் மிக அதிகம். சாப்பிட்டவுடன் ரத்த குளுகோஸ் எகிறும்.
  10. ப்ரோ… அந்த இனவாதத்தை ஊட்டி வளர்த்த மேய்பன்களில் நீங்கள் நம்பும் ஜேவிபியும், அனுராவும் அடக்கம் ப்ரோ. ஜே ஆரும், சந்திரிகாவும், மகிந்தவும், ரணிலும் கொடுக்க இசைந்த, கொடுத்த மாகாண சபையை கூட தமிழருக்கு கொடுக்க கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக நின்று, அதற்காக ஒரு இரத்த களரியையே உருவாக்கியவர்கள் ஜேவிபி. நீதி மன்று போய் வடக்கு கிழக்கை பிரித்தவர்கள். சந்திரிக்காவோடு சேர்ந்து நோர்வே சமாதான முயற்சியை, PToMS ஐ குழப்ப முழு மூச்சாக முன்னின்றவர்கள். அனுர, டில்வின் இருந்த அதே தலைமைபீடத்தில் இருந்து சோமவன்ச, வீரவன்ச, முசமில் யுத்த நேரம் சொன்னவை உள்ளதே? அதுதான் எப்போதும் ஜேவிபியின் நிலைப்பாடு. மேற்கின் அழுத்தத்துக்கு பணிந்து முள்ளிவாய்க்கால் அவலத்தை நிறுத்த கூடாது, விரைந்து முடிக்கவும் என மகிந்தவுக்கு கெடு வைத்தவர் அனுர. நீங்கள் இவர்கள் இனவாதத்தை இலங்கையில் களைவார்கள் எண்டு இங்கே பேயோட்ட பார்கிறீர்கள்🤣 அனுர காவடி என்பது பொருத்தம் என்றாலும், நீங்களாகவே பதவி உயர்வு கேட்பதால்… அனுர தூக்கு காவடி … பிடித்திருக்கிறதா?
  11. எனது அரசியல் அபிலாசை மிகவும் சின்னது. ஈழத்தமிழர் - கெளரவமான, தமது அலுவல்களை தாமே நிர்வகிக்கும், அவர்களின் நில உரிமை பறிபோகாத, மொழி உரிமை பாதுகாக்கபட்ட, இன ஒதுக்கலுக்கு உள்ளாகாத வாழ்வை இலங்கை தீவில் வாழ வேண்டும் என விரும்புகிறேன். இதை தராத எந்த சிங்கள அரசும் எனக்கு ஒன்றே. தவிர போதை பொருள், சட்சம் ஒழுங்கு போன்ற அனைவருக்கும் பயந்தரக்கூடிய நடவடிக்கைகளை சிங்கள அரசுகள் எடுத்தால் அதை பாராட்டலாம். ஆனால் அப்படியே உச்சி குளிர்ந்து போய்…இது ஆரம்பம்…அடுத்தது தமிழருக்கு உரிமைதான் என காவடி எடுத்தல் ஆகாது. இதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். இவர்கள் போதைக்கு எதிராக செயல்படுகிறார்கள். சுக அரசில் மகிந்த தொழில்துறை அமைசராக பல நல்ல தொழிலாளலர் திட்டங்களை கொண்டு வந்தார். நாட்டை திறந்த பொருளாதாரம் ஆக்கி சுதந்திர வர்த்க வலையங்களை, ஆடை தொழில்சாலைகளை ஜே ஆர் கொண்டு வந்தார். கம் உதாவ - பிரேமதாச… இப்படி சிங்கள அரசுகள் முன்பும் நல்ல விடயங்கள் செய்துள்ளன. 2005 க்கு முதல் இருந்த அத்தனை அரசுகளும் போதை பொருளை நன்கு கட்டுப்படுத்தினர். ஆகவே இது பத்தோடு பதினொன்று. இதை போற்றலாம். ஆனால் நீங்கள் தூக்கும் காவடி… ஜஸ்ட் டூ மச்
  12. ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் வெற்றியைத் தீர்மானிக்கும் 5 விஷயங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 18 அக்டோபர் 2025 இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) பெர்த் நகரில் தொடங்குகிறது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் மறுபடியும் மோதுவதால் இத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடர்கள் சவால் நிறைந்தவையாக இருக்கும். ஆஸ்திரேலியாவின் பலமான வேகப்பந்துவீச்சு, அதிரடியான பேட்டர்கள், எப்போதும் இந்தியாவுக்கு பிரச்னையாக விளங்கும் டிராவிஸ் ஹெட் என இம்முறையும் இந்திய அணிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. அவற்றை சமாளித்து இந்தியா இந்தத் தொடரை வெல்வதில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய 5 விஷயங்கள் என்னென்ன? 1. ரோஹித் மற்றும் கோலியின் கம்பேக் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2025 ஐபிஎல் தொடரில் விளையாடிய கோலி மற்றும் ரோஹித் அதன்பிறகு எந்தத் தொடரிலும் பங்கேற்கவில்லை. விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் மறுபடியும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது இந்தத் தொடர் மீது வழக்கத்தை விட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2025 ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர்கள், அதன்பிறகு எந்தத் தொடரிலும் பங்கேற்கவில்லை. அதனால் அவர்களை மறுபடியும் இந்திய ஜெர்ஸியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதேசமயம் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சை அவர்கள் மண்ணில் சமாளிக்க இந்த இரண்டு சீனியர் வீரர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். பொதுவாகவே ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். அப்படியிருக்கும்போது பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹேசல்வுட் அடங்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு கூட்டணி மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். அந்த சவால்களை சமாளிக்க கோலி மற்றும் ரோஹித் இருவரின் அனுபவமும் முக்கியம். ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 50+ சராசரியில் இருவரும் ஆடியிருக்கிறார்கள். அதை அவர்கள் தொடரும்பட்சத்தில் இந்திய அணிக்கு நல்ல தொடக்கங்கள் கிடைக்கும். அதேசமயம் கடைசியாக அவர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய 2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருவரின் செயல்பாடும் எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை. கடைசி 4 போட்டிகளில் கோலி 85 ரன்கள் மட்டும் அடித்திருக்க, விளையாடிய 3 போட்டிகளிலும் சேர்த்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தார் ரோஹித். அந்த செயல்பாட்டை மறக்கடிக்கும் வகையில் கோலியும், ரோஹித்தும் விளையாடவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. 2. புதிய கேப்டன் ஷுப்மன் கில் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோலி, ரோஹித் என இரண்டு முன்னாள் கேப்டன்களுக்குத் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பு கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தொடரில் முதல் முறையாக ஷுப்மன் கில் தலைமையில் ஓர் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. 2027 உலகக் கோப்பையை நோக்கிய இந்தப் பயணத்தில் அவர் மீது நிச்சயம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதேசமயம் டெஸ்ட் கேப்டனாக அவரது பயணம் சிறப்பாகவே தொடங்கியிருக்கிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கில் தலைமையில் சமன் செய்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வென்றது. இந்த செயல்பாடுகள் அவருக்கு நம்பிக்கை தருவதாக இருக்கும். மறுபக்கம் கோலி, ரோஹித் என இரண்டு முன்னாள் கேப்டன்களுக்குத் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பும் கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஓர் இளம் கேப்டனுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையலாம். ஆனால், தான் இந்த வாய்ப்பை எதிர்பார்த்திருப்பதாக கூறியிருந்தார் கில். ஆஸ்திரேலியா போன்ற ஒரு பெரிய அணியை அவர்கள் மண்ணில் எதிர்கொள்வது சவாலாகவே இருக்கும். வீரர்களின் ஸ்லெட்ஜிங் மட்டுமல்லாமல், ரசிகர்களை சமாளிப்பதும்கூட ஒரு பெரிய சவால் தான். அதுபோன்ற தருணங்களில் கேப்டனாக கில் எடுக்கும் முடிவுகள் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இத்தொடருக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த அக்‌ஷர் படேல், "ஷுப்மன் கில் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறார். அவர் நெருக்கடியை தனக்குள் எடுத்துக்கொள்ளவேயில்லை. ஒரு தலைவருக்கான மிக முக்கிய குணம் அது" என்று கூறியிருந்தார். அதை இந்தத் தொடர் முழுவதும் கில் வெளிப்படுத்துவது அவசியம். 3. பும்ரா இல்லாத வேகப்பந்துவீச்சு குழு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பும்ரா இல்லாதது இந்திய பந்துவீச்சுக்கு சற்று பின்னடைவாகத்தான் இருக்கும். வேலைப்பளுவை சரியாகக் கையாள்வதற்காக ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முன்னணி பௌலரான பும்ரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலுமே விளையாடியிருந்தார். 2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடர் நாயகனான பும்ரா இல்லாதது இந்திய பந்துவீச்சுக்கு சற்று பின்னடைவாகத்தான் இருக்கும். அதனால் மற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பும் நெருக்கடியும் அதிகரிக்கும். அதிரடி காட்டும் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு எதிராக இந்த பௌலர்களுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது. முகமது சிராஜ் நிறைய போட்டிகளில் விளையாடியிருப்பதால் அவர் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்குவார். அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா மூவரில் இருவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பு அதிகம். அவர்களின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படும். குறிப்பாக ஹர்ஷித் ராணாவின் செயல்பாடுகள் மீது அனைவரின் கவனமும் இருக்கும். பயிற்சியாளர் கம்பீரின் தயவால் தான் அவர் எல்லா போட்டிகளிலும் ஆடுகிறார் என்று சமீபத்தில் பேசப்பட, அதை சில தினங்கள் முன் கடுமையாக விமர்சித்திருந்தார் கம்பீர். அப்படியிருக்கும்போது ஹர்ஷித் ராணாவின் ஒவ்வொரு அசைவுமே பேசுபொருளாக்கப்படும். இதுவும் அந்த இளம் வீரருக்குக் கூடுதல் நெருக்கடி கொடுப்பதாக அமையலாம். பிரசித், அர்ஷ்தீப் ஆகியோருக்கும் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவேண்டும் என்ற தேவை இருப்பதால், அதுவும் உளவியல் ரீதியாக அவர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தலாம். இந்த அனைத்து சவால்களையும் சமாளித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஜொலிக்கவேண்டும். 4. துணைக் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (5 இன்னிங்ஸ்களில் 243) எடுத்திருந்தது ஷ்ரேயாஸ் தான். 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக ஷ்ரேயாஸ் ஐயரை வெளியேற்றுவது பற்றித்தான் டீம் மீட்டிங்கில் விவாதித்தோம் என்று கூறியிருந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ். அந்த அளவுக்கு அவரது விக்கெட் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அந்த இறுதிப் போட்டியில் அவர் டக் அவுட் ஆனதில் இருந்துதான் இந்தியா பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் சீரான செயல்பாட்டை அவர் கொடுத்துக்கொண்டிருப்பதும், எந்தவித பந்துவீச்சையும் அவர் நன்றாக எதிர்கொள்வதும் அதற்கான முக்கியக் காரணங்கள். கடைசியாக விளையாடிய சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (5 இன்னிங்ஸ்களில் 243) எடுத்திருந்தது ஷ்ரேயாஸ் தான். அதனால் அவருக்கு ஆஸ்திரேலிய பௌலர்கள் சிறப்பு வியூகம் வகுப்பார்கள். அதனால் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இப்போது துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கும் ஷ்ரேயாஸ் மிடில் ஆர்டரில் இந்தியாவுக்கு நல்ல பங்களிப்பைக் கொடுத்தால் அது ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு நிச்சயம் தலைவலியாக அமையும். 5. நித்திஷ் குமார் ரெட்டியின் இன்னொரு அறிமுகம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தன் அறிமுக டெஸ்ட் தொடரில் இதே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டிருந்தார் நித்திஷ். மிகவும் முக்கியமான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடத்துக்கு நித்திஷ் ரெட்டியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறது இந்திய அணி. ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தால் அவதிப்படுவதால் நித்திஷை அனைத்து ஃபார்மட் வீரராக நிலைநிறுத்த விரும்புகிறார்கள். அதனால் இப்போது ஒருநாள் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காரணம் 2023 உலகக் கோப்பையின் பிற்பகுதியில் ஹர்திக் இல்லாததால் அந்த ஒரு இடத்தை நிரப்ப சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி என இரண்டு வீரர்களை இந்தியா பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படியொரு நிலை மறுபடியும் வராமல் இருக்க அதேபோல் இன்னொரு வீரரையும் வளர்த்தி வைத்திருப்பது அவசியமாகிறது. இந்த வாய்ப்பை நித்திஷ் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது இந்திய அணிக்கும் மிகவும் அவசியம். அந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடம் சரியாக நிரப்பப்பட்டால் அணியின் காம்பினேஷனில் தேவையான மாற்றங்களை செய்ய கேப்டனுக்கு அது உதவியாக இருக்கும். ஒருவேளை அவர்கள் ஒரு கூடுதல் ஸ்பின்னரை பயன்படுத்தவும் அது உதவலாம். அதனால் அவரது அறிமுகம் மீதும் அதிக கவனம் இருக்கும். தன் அறிமுக டெஸ்ட் தொடரில் இதே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டிருந்தார் நித்திஷ். இப்போது ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், இந்த ஒருநாள் அறிமுகத்திலும் அவர் ஜொலித்தால் அது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly4g8jzwqgo
  13. https://www.facebook.com/share/v/1DCBLvynAX/?mibextid=wwXIfr டாக்ரர் சுதன்சிவன் பேரிச்சம்பழம் பற்றி சொல்லும் போது நம்புவதா? விடுவதா? என்று முடிவு செய்ய முடியவில்லை. கடந்த 10 வருடமாக தேநீருடன் சீனிக்கு பதிலாக பேரிச்சம்பழம் ஒன்று கடிப்பேன். இனிமேல் என்ன செய்வது?
  14. பையன் சார், இந்த இந்திய மகளிர் அணியை கீரை விற்க அனுப்ப வேண்டும் என்று நீங்கள் இன்னமும் சொல்லவில்லை....................🤣. இவர்கள் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி தோற்பார்கள் என்று நான் நினைத்திருக்க, இவர்களோ வழி வழியே எல்லோரிடமும் அடிவாங்கிக் கட்டுகின்றார்கள்..............🫣.
  15. அப்பிடியும் வாறனான். ஆரேன் பதில் அளித்தால், அதை அமத்திப்போட்டு வரலாம். அப்பிடி இல்லாதபோதுதான் சுத்திவளைச்சு வரவேண்டிக் கிடக்கு. நீங்கள் சொலவதைப் பார்த்தால், எல்லோரும் ஏதோ ஒரு சுத்திவளைப்பில்தான் உள்ளீர்கள். ம்ம்ம். சுத்தி வளைப்பு நமக்கென்ன புதுசா. ☹️
  16. “போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து”. உங்கள் மனம் பொன்போன்றது. வாழ்த்துக்கள்!!😁🙌
  17. திருப்பெருந்துறையில் முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவி – சிந்து! written by admin October 19, 2025 மூன்றாவது கண் உள்@ர் அறிவுத்திறன் செயற்பாட்டு நண்பர்கள் குழுவின் ஓர் அங்கமாகிய முரசம் பேரிசை கலைகள் கற்கைகள் மன்றத்தினால் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழா ஆனது இவ் வருடமும் 11.10.2025ஆம் திகதி முன்னர் பெரியதுறை என அழைக்கப்பட்ட திருப்பெருந்துறையில் நடத்தப்பட்டது. இவ் விழாவில் முரசம் (பறை) மற்றும் சொர்ணாலி இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்களது கலைச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களுடன் அவர்களது ஆற்றுகைகளும் நிகழ்த்தப்படுகின்றமை வழமையாகும். அந்தவகையில் கடந்த வருடம் நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் வெகு விமரிசையாக கிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு நுண்கலைத்துறை மாணவன் செல்வன் டானியல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25.ற்கும் மேற்பட்ட பரம்பரை மற்றும் தொழில்முறை பறை மற்றும் சொர்ணாலி இசைக் கலைஞர்களை ஒன்றிணைத்து முன்றாவது கண் நண்பர்களால் இவ் விழா முன்னெடுக்கப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவியான செல்வி லாவண்யா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவானது கடந்த சனிக்கிழமை 11.10.2025ம் திகதி காலை 10.00 மணியளவில் மிகச்சிறப்பாக ஆரம்பமானது. இவ்விழாவிற்கு களுதாவளையைச் சேர்ந்த ச. திவ்யபுத்திரன், ச. விஜயபுத்திரன் எனும் இளங்கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பறை மற்றும் சொர்ணாலி இசைக்கருவிகளை இசைக்கும் பாரம்பரிய மற்றும் தொழில்முறை கலைஞர்களாவார்கள். இவர்களோடு பாரம்பரிய கலைகளிலும், பாரம்பரிய வைத்திய முறையிலும் தேர்ச்சி பெற்ற தேனூரான் என்னும் சிறப்புப் பெயருடைய தருமரெத்தினம் அவர்களும் கலந்துகொண்டார். இவ் விழாவிற்கு அழைக்கப்பட்ட கலைஞர்கள் மாலையிட்டு, எமது பண்பாட்டின் மற்றோர் அம்சமான கைத்தறி சால்வை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மேலும் கலைஞர்களது பரம்பரைக் கலைகள் தொடர்பான கருத்துகளும் ஆற்றுகைகளும் பரிமாறப்பட்டதோடு அங்கு வருகை தந்திருந்த எம் பாரம்பரிய கலைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முரசம் மற்றும் சொர்ணாலி இசையின் இசைப்பு முறைகளும் பயிற்றுவிக்கப்பட்டது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் எமது பாரம்பரிய கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் முகமாக சி. ஜெயசங்கர் எழுதிய “எங்களின் அறிவில் எங்களின் திறனில் தங்கி நிற்போம் நாங்கள்” எனும் பாடல் பாடப்பட்டு, தமிழர்களின் தொன்மையான வாத்தியமான பறை வாத்தியம் எங்களது வாழ்வியலோடு எவ்வாறு இணைந்திருந்தது என்றும் அது இன்று பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதோடு இன்று பறை, சொர்ணாலி வாத்தியங்களை எப்படி வாசிக்கிறார்கள் என்றும் அந்த வாத்திய வாசிப்புகளுக்கான தாளக்கட்டுகளுக்கான பயிற்சியும் அழைக்கப்பட்ட இரு கலைஞர்களால் வழங்கப்பட்டது. மேலும் முரசம் மற்றும் சொர்ணாலி இசைக்கலைஞர்கள் தங்கள் கருத்துகளில், இன்று தங்கள் சமூகத்தில் இளம் தலைமுறையினர் பறை இசைப்பதில் பெரிதும் நாட்டம் கொள்ளாத நிலையிலும் தங்கள் கலையை தாங்கள் செய்வதில் பெருமிதம் கொள்கிறோம் என்றும், தங்களுக்கு போதுமான வருமானத்தை தரக்கூடிய கலை வடிவம் இது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இந் நிகழ்வில் கலந்துகொண்ட பல்வேறு கலைகளுடனும் கலைச் செயற்பாடுகளுடனும் தொடர்புள்ள இளம் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் இன்று தென்னிந்திய சினிமாப் பாடல்களையும் மேற்கத்தேய வாத்தியங்களையும், இசைகளையும் பழகுவதிலும், நிகழ்த்துவதிலும் பெருமைகொள்ளும் நாங்கள் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், ஒரு தகவலை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் முதன்மையான முரசம் என்கின்ற பறை இசைக்கருவியை இசைக்கும் இசைக்கலைஞர்களை இன்னும் பழைய நிலையிலே தான் பார்க்கிறோம். அதாவது உதாரணத்திற்கு, அவர்கள் கதிரையில் இருந்தால் கூட “ஏன் நீங்கள் இப்போ கதிரையிலும் இருக்க ஆரம்பித்துவிட்டீங்களா?” என கேட்கின்ற நிலையில் தான் எம் சமூகத்தின் மனநிலை அமைந்திருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. இப்படி பல்வேறு வகையில் அவர்களைத் துன்புறுத்தி வைத்திருப்பதாகவே நம் சமூகக் கட்டமைப்பு காணப்படுகின்றது. ஆனால் இன்று பரம்பரைக் கலைஞர்கள் அல்லாத பலரும் பறை மற்றும் சொர்ணாலி வாத்தியங்களை இசைக்கின்றனர். அவர்கள் இக் கலைகளை பாரம்பரிய பரம்பரைக் கலைஞர்களிடமிருந்தே கற்றுக்கொண்டு தற்போது தொழில்முறைக் கலைஞர்களாக உருவெடுத்துள்ளனர். இதற்கு காரணமாக அமைந்தது யாதெனில், இக் கலைகளை இசைத்த பாரம்பரிய பரம்பரைக் கலைஞர்களுக்கும் அவர்களது சமூகத்திற்கும் சுற்றியுள்ள மற்றைய சமூகங்களால் இழைக்கப்பட்ட அநீதிகளும், அவ் அநீதிகளின் நிமித்தம் கலைஞர்கள் அடைந்த அவமானத்தினால் இக் கலையை கைவிட்டுவிட்டு ஒதுங்கி இருந்தமையே ஆகும். மேலும் பரம்பரைக் கலைஞர்கள் அல்லாத தொழில்முறைக் கலைஞர்கள் கோவில்களில் மாத்திரம் இக்கருவிகளை வாசிக்கின்றனரே தவிர இறந்த வீடுகளில் வாசிப்பதில்லை. இது ஏன் என எண்ணுகையில் தொழில்முறைக் கலைஞர்கள் இக் கருவிகளை இறந்த வீடுகளில் வாசிக்க விரும்புவதில்லை அல்லது இறந்த வீட்டில் வாசிப்பதை அவர்கள் இழிவாக நினைக்கிறார்கள் என்பதே புலனாகுகின்றது. இக் கலையோடு தொடர்புபட்ட ஒரு சம்பவமாக, களுதாவளை கோவிலில் பறை மற்றும் சொர்ணாலி இசைக்கும் பரம்பரைக் கலைஞர்களை ஆலயத்திற்குள் இருந்து வெளியேற்றிய சம்பவமும் உண்டு ஆனால் இன்றும் கொக்கட்டிச்சோலை கோவிலின் உள்ளே தொங்கவிடப்பட்டிருக்கும் பறையை கோவிலிற்கு வரும் பக்தர்கள் யாரேனும் வாசிக்கலாம் எனும் வழக்கமும் உண்டு. எதுவாயினும் இது தான் எழுதப்பட்ட விதி என்றோ, அது தான் வகுக்கப்பட்ட கோட்பாடு என்றோ கருத இயலாத அளவிற்கு இயற்கையும் காலமும் அதன் தன்மையை மாற்றி நிற்கும் இவ் நவீன தொழில்நுட்ப யுகத்தில் வாழும் மனிதர்கள் மட்டும் படிப்பறிவால் பகுத்தறிவு பெற்றோம் என பெருமைப்பட முடியாத படி வகுப்பு வாத பிரிவினைகளால் பிளவுண்டு, அருகில் வாழும் சக மனிதரை அதிகாரம் கொண்டு அடக்கி ஆள துடிக்கின்றோம். இத்தகைய எண்ணம் மேலோங்காமல், மனிதர்களாகிய நாம் வர்க்க பாகுபாடுகளை நீக்கி சமத்துவமாக வாழ்வதற்கும், எம் பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்கும், பரம்பரைக் கலைஞர்களை வாழ வைப்பதற்கும் நாம் இணைந்திருக்கும் இயற்கையும் யுகமும் மாறி நிற்பது ஒரு பொருட்டல்ல, மாறாக எம் மனித மனம் மாறவேண்டும். அந்தவகையில் எம் கலைகளை வளர்ப்பதற்கும் அதனை அடுத்த தலைமுறைக்கு கையளிப்பதற்கும் மனப்பாங்கு மாற்றமே இங்கு அடிப்படைத் தேவையாக அமைகின்றது. வி. சிந்து https://globaltamilnews.net/2025/221730/
  18. 39 குடும்பங்களுக்கு பணம் வங்கியில் இடப்பட்டுள்ளதாக விகடன் எழுதியுள்ளது.
  19. இவ்வாறான கற்பனைகளுக்காக, இந்தக் கற்பனைகளின் பிதாமகரான மூத்த உடகவியலாளர் நிலாந்தன் மாஸ்டர் பெயரில் ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் வழங்கப்படவேண்டும். மற்றுமொரு ‘லப்பாம் டப்பாம்’ ஊடகவியலாளர் தமிழரசுவின் பெயரில் விசேட புலைமைப் பரிசில் தரப்படவேண்டும்.
  20. வலிகாமத்தின் பல கோவிலடியில் 80 களில் ஒயில் கிழவன் எண்டு ஒருவர் இருப்பார். கோயில் மாறி கோயில் என அலைவார். பார்க்க பிச்சைகாரன் போல தோற்றம். உடலெங்கும் கழிவு எஞ்சின் ஆயிலை ஊற்றி கொண்டு, ரஸ்யா, ரீகன், சோவியத், வியாழமாற்றம், ரஜனி ஶ்ரீதேவி, டெலோ, புலி என உலக விடயங்களை ஒரு கோர்வை இல்லாமல் ஏதோ, ஏதோ பிசத்தி கொண்டிருப்பார். அடிக்கடி உடைந்த ஆங்கிலமும் வந்து விழும். சில சமயம் ஊர் வாலுகள் கல்லெடுத்து அடிக்கும். அவர்களை துரத்துவார். பிறகு அவர்களே பாவம் எண்டு கல்லடிப்பதை கூட விட்டு விட்டார்கள். ஆனாலும் ஒயில் கிழவன் ஒவ்வொரு கோவிலாக போய் விளங்காத தமிழில் பிசத்துவதை கைவிடவே இல்லை. மக்கள் எட்டி ஒரு பரிதாப பார்வையோடு நகர்ந்து போனாலும்…அவ கடமையே கண்ணாக இருப்பார். 87 ஆக்டோபர் இந்தியன் ஆமி நேரத்தின் பின் ஆளை காணவில்லை. “இந்தியன் சாக்காட்டி போட்டான்” என ஊரார் பேசி கொண்டார்கள். இன்னும் சிலரோ ஒயில் கிழவன் ஒரு இந்திய உளவாளி…வேலை முடிந்து ஊர் திரும்பிவிட்டார் என்றனர். நானும் ஒயில் கிழவன் செத்து போனார் என்றே எண்ணி இருந்தேன்… இன்றுவரை…..
  21. இந்த கேள்விகளுக்கு எந்த பதிலும் அவர்களிடம் இல்லை. கோரஸ் பாடுபவர்களிடம் கொள்கை விளக்கம் கேட்கும் நம்மில்தான் பிழை.
  22. இனவாதத்தை பொறுத்தவரை….. தமிழருக்கு எதுவும் கொடுக்க கூடாது என்ற நிலைப்பாட்டில்…..மகிந்தவுக்கும் அனுரவுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை. இப்படி சிந்தித்த ஒரே சிங்கள தலைவர் டாக்டர் விக்ரமபாகு கருணாரட்ன மட்டுமே. ஆனால் அவரை சிங்களவர்கள் ஒரு மாநகரசபை உறுப்பினராகா கூட ஆக்கவில்லை. இதுதான் மாறாத சிங்கள பேரினவாதம். இது மாறிவிட்டது…. அல்லது அனுர மாற்ற முயல்கிறார் என்பதற்கு ஒரு குண்டு மணி அளவு கூட ஆதாரம் இல்லை. நீங்கள் சும்மா கற்பனையில் அடித்து விடும் கதைகள் மட்டுமே.
  23. ஆயிரம்களையே வாழ்வில் காணாத காண முடியாத மக்களுக்கு லட்சங்களை காண்பது என்பதும் அதற்கு மாற்றாக இறந்தவர் கூட சிறிதாக தெரிவதும் ஏற்கக்கூடாத ஆனால் பரிதாபகரமாக உண்மை தான்.
  24. பொய்களையும் புனைவுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டதாக சுட்டப்படும் மகாவம்சம் யுநெஸ்கோவால்(UNESCO) 2023இல் அனைத்துலக பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. வேதனைக்குரியது அதனாலதான் எனது மூன்ர்றவது விரிவான கட்டுரை இப்ப தொடர்ந்துகொண்டு இருக்கிறது தமிழிலும் ஆங்கிலத்திலும் [1] மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / 44 parts / ஏற்கனவே பதியப்பட்டுள்ளது [2] "The truth & false in Mahavamsa and the historical & scientific evidences" / 32 Parts / ஏற்கனவே பதியப்பட்டுள்ளது [3] "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English /144 - 146 parts / 34 பகுதி மட்டும் இன்றுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது , மற்றவை தொடரும் / இது மேலும், விரிவாக்கப்பட்ட, ஓழுங்குமுறையில் அமைந்த கட்டுரையாகும் நன்றி
  25. ஆண்கள்… பேரீச்சம்பழம் சாப்பிட்டால், இடுப்பில் நல்ல பலம் வரும் என்று சொல்கிறார்கள். 💪 அரபுக்காரர் எல்லாரும் ஐந்து பெண்டாட்டியை வைத்து சமாளிப்பதன் இரகசியம் பேரீச்சம்பழம் தான். ❤️ நாங்கள் தான்…. சின்ன 🧅 வெங்காயம் 🧄 போதும் என்று, எமது வாழ்க்கையை வீணடித்து விட்டோம். 🤣
  26. Paranji Sankar · ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார். சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. "என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே" என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார். வண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. "இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார். போகும் வழியில் "பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிகிட்டு போனார் முதலாளி. தச்சர் வீடு வந்ததும் "தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா" என்று முதலாளி சொன்னார். "வீட்டுக்குள் வாங்க முதலாளி" என்று அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார். தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை. தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார். தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். காலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார். தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார். வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், "இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது" என்றார். "அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன். வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது. காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்? நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு போவேன் . ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்". தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார். நண்பர்களே.. நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள். பிரச்சனைகள் உங்களை கண்டு அஞ்சி ஓடும்... Voir la traduction
  27. இப்போ ஊடகவியலாளர்கள் யுரியுப்காரர்களாகவும் வந்துவிட்டார்கள் தானே கற்பனைகளை மேலும் நன்றாக வளர்க்க ஊக்குவிப்புகள் செய்துவருகின்றார்கள்.
  28. தனித்து விடப்படும் முதியவர்கள் - நிலாந்தன் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார். பெரிய வீடு; வசதியான குடும்பம்; ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் அல்லது கட்டணத்தோடு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களில் இணைக்கலாம்.போதியளவு பணம் இருந்தாலும் பராமரிக்க ஆளில்லாமல் தவிக்கும் முதியோரை கட்டணம் பெற்றுக்கொண்டு பராமரிக்கும் இல்லங்களில் சேர்க்கலாம். எனவே அந்த முதிய பெண்ணை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் இணைத்தால் என்ன என்று நண்பரிடம் கேட்டேன். அதற்கு நண்பர் சொன்னார்,”குறிப்பிட்ட மூதாட்டிக்கு 80 வயதுக்கு மேலாகிறது. இனி அவர் தனது வீட்டிலிருந்து வேரைப் பிடுங்கிக்கொண்டு வேறொரு இடத்துக்கு வரத் தயாராக இல்லை. எல்லாவிதமான அசௌகரியங்கள், பற்றாக்குறைகளோடும் தான் பிறந்து, வளர்ந்து, திருமணம்செய்து சந்தோஷமாக வாழ்ந்த அந்த வீட்டிலேயே இருந்து இறந்து போகத்தான் விரும்புவார் என்று தோன்றுகிறது. அவரை இந்த வயதில் வேரை அறுத்துக் வெளியே எடுப்பது சாத்தியமா?” என்று. அது சாத்தியமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அவருடைய “குவாலிட்டி ஒஃப் லைஃப் “- வாழ்க்கைத் தரம் உயர்வானதா? என்பதுதான் இங்கு பிரச்சனை. அவரைப் போன்ற பல முதியவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு வெளியே வரத் தயாராக இல்லை. தாங்கள் பிறந்து வளர்ந்த அந்த வீட்டுக்குள் எல்லா விதமான பற்றாக்குறைகளோடும் ஆபத்துக்குகளோடும் சீவிப்பதில் அவர்கள் மன நிறைவடைகிறார்கள். இங்கே அடிப்படைக் கேள்வி ஒன்று எழுதுகிறது.”குவாலிட்டி ஒஃப் லைஃப் ” என்பது மனதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதா? அல்லது உடலால் நவீன மருத்துவத் தராதரங்களுக்கு ஏற்ப பராமரிக்கப்படுகிறவர்களாக இருப்பதா? எனக்குத் தெரிந்த பல முதியவர்கள் குறிப்பாக 80 வயதுக்கு மேலானவர்கள் தாம் பிறந்து வளர்ந்த வீட்டிலேயே இருந்து சாவதைத்தான் தமது வாழ்க்கை தரத்தில் உயர்ந்த நிலை என்று கருதுவதாகத் தெரிகிறது. ஆனால் பராமரிப்பின்றி தனிமையில் உழல்வதை விடவும் முதியோர் இல்லங்களில் சக வயதினரோடு இருப்பது சந்தோஷமானது என்று கருதும் முதியோரும் உண்டு. ஓர் ஆசிரியை வெளிநாட்டுக்குப் போகும்போது தன் தகப்பனை அரசு முதியோர் இல்லத்தில் இணைத்துவிட்டுச் சென்றார். நாடு திரும்பியதும் தகப்பனை வீட்டுக்கு அழைத்து வரச் சென்ற போது தகப்பன் மறுத்துவிட்டார். இங்கே எனது வயதொத்தவர்களோடு சந்தோஷமாக இருக்கிறேன். இது எனக்கு விருப்பமாக இருக்கிறது. என்று கூறி அந்த முதியவர் அங்கேயே தங்கி விட்டார். ஆனால் இது மிகச் சிறிய தொகை. பைபிளில் கூறப்படுவது போல “பிள்ளைகள் இருக்கவும் மலடுகளாய்போன பெற்றோரின்” தொகை அதிகமுடைய ஒரு சமூகம் இது. போர் பிள்ளைகளைத் தின்றுவிட்டது. புலப்பெயர்ச்சி பிள்ளைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரித்துவிட்டது. பெற்றோர் பிள்ளைகளுக்கு இறுதிக் கிரியைகளைச் செய்யும் ஒருகாலம் வந்தபோது பிள்ளைகள் தூர தேசத்திலாவது உயிர் பிழைத்திருக்கட்டும் என்று பெற்றோரே அனுப்பி வைத்தார்கள். எனவே முதியோர் தனித்துவிடப்படுதல் என்பது போரின் நேரடி விளைவுதான். தவிர குடும்பங்களில் விழுமியங்கள் சீரழிந்ததன் விளைவுந்தான். இங்கு மூன்று உதாரணங்களைக் கூறலாம். முதலாவது உதாரணம், வன்னியில் நடந்தது. அங்குள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றுக்கு பழைய மாணவர்கள் சிலர் இணைந்து ஒரு சிற்றுண்டிச் சாலையைக் கட்டிக் கொடுத்தார்கள். அந்த சிற்றுண்டிச் சாலையை தமது பள்ளிக் காலத்தில் தமது வகுப்பு தோழர்களாக இருந்து பின்னர் போரில் நாட்டுக்காக தங்கள் உயிரைக் கொடுத்த தியாகிகளுக்கு அர்ப்பணித்திருந்தார்கள். அப்பழைய மாணவர்களில் ஒருவர் என்னைச் சந்தித்தார். அவரிடம் நான் கேட்டேன்“அந்த சிற்றுண்டிச் சாலையைத் திறக்கும் வைபவத்திற்கு குறிப்பிட்ட தியாகிகளின் பெற்றோரை அழைத்தீர்களா?” என்று. அப்பொழுதுதான் ஒரு விடயம் தெரியவந்தது. அந்தத் தியாகிகளில் ஒருவருடைய பெற்றோர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அந்தத் தியாகி ஒரு சிறந்த உதைப்பந்தாட்ட வீரர். அவரைத் தவிர ஏனைய சகோதரர்கள் ஏற்கனவே புலம்பெயர்ந்து விட்டார்கள். அவர்தான் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். கடைசிக் கட்டப் போரில் கட்டாய ஆட் சேர்ப்பின்போது அவர் போருக்குள் இணைக்கப்பட்டார். போர்க்களத்தில் உயர்நீத்தார். தாயும் போரில் கொல்லப்பட்டு விட்டார். தனித்து விடப்பட்ட தந்தையை புலம்பெயர்ந்து வாழும் ஒரு பிள்ளை உறவினர் ஒருவருக்கூடாக முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார். மேற்படி தகவல்களைச் சேகரித்த பழைய மாணவர்கள் அந்த முதியோர் இல்லத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால் அவர் விடுமுறையில் சென்று விட்டதாக முதியோர் இல்லத்தில் கூறப்பட்டது. விசாரித்தபோது தெரிந்தது, வெளிநாட்டில் வாழும் ஒரு பிள்ளை தாயகத்துக்கு வந்திருந்தபடியால் தகப்பனைப் பார்ப்பதற்காக முதியோர் இல்லத்தில் இருந்து அவரை தான் இருக்கும் இடத்துக்கு எடுத்திருக்கிறார். பழைய மாணவர்களில் ஒருவர் அந்தப் பிள்ளையின் கைபேசி இலக்கத்தை எடுத்து அவரோடு கதைத்திருக்கிறார். அவரையும் முதியவரையும் சந்திப்பதற்காக வரப்போவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அதன்பின் அந்தப் பிள்ளை தொடர்பு எடுக்கவில்லை மட்டுமல்ல, தகப்பனைக் கொண்டுவந்து இல்லத்தில் சேர்த்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டார். இரண்டாவது உதாரணம், ஒரு பேராசிரியர். பல மாதங்களுக்கு முன்பு அவர் இறந்தபொழுது அவருடைய உடலை யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு கொடுக்குமாறு கேட்டிருந்தார். அவரும் அவருடைய மனைவியும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில்தான் வசித்து வந்தார்கள். யாழ்ப்பாணத்தின் உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் பீடாதிபதியாக இருந்தவர் அவர். மூன்றாவது உதாரணம், ஓர் அரசியல் செயற்பாட்டாளர். ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய மொழிபெயர்ப்பாளர்.நோர்வியின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின்போது பெரும்பாலான எல்லாப் பேச்சுவார்த்தைகளிலும் அவருடைய முகம் உண்டு. அவருக்கு ஒரே பிள்ளை. அவரும் புலம்பெயர்ந்து விட்டார். 2009க்கு பின் அவரை தன்னுடன் வந்து இருக்குமாறு பிள்ளை அழைத்திருக்கிறார். ஆனால் இந்த முதியவர் தாயகத்தை விட்டு வெளியேபோக விரும்பவில்லை. எனவே அவருடைய பிள்ளை அவரை மாதாந்தம் பெருந்தொகை பணத்தை அறவிடும் தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்து விட்டார். அந்த மொழிபெயர்ப்பாளர் அந்த முதியோர் இல்லத்தில்தான் உயர்நீத்தார். நான்காவது உதாரணம்,சில மாதங்களுக்கு முன் நடந்தது. புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வசிக்கும் எனது நண்பர்,ஒர் அரசியற் செயற்பாட்டாளர், அண்மையில் தனது தகப்பனாரைப் பராமரிப்பதற்கு யாரையாவது ஒழுங்கு செய்ய முடியுமா என்று கேட்டார். இந்த விடயத்தில் முதியோர் இல்லத்துக்குப் போக விரும்பாத முதியவர்களைப் பராமரிப்பதற்கு ஊரில் யாராவது உதவியாளரைக் கண்டுபிடித்தால் அது நல்லது. இரண்டாவது தெரிவு,மானிப்பாயில் உள்ள மருத்துவர் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் முதியோரைப் பராமரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு உண்டு. அங்கு பயிற்றப்பட்ட தாதியர்கள் உண்டு. அவர்களைச் சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தலாம். மூன்றாவது தெரிவு,செக்யூரிட்டி நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு வீட்டுக்கு ஒரு செக்யூரிட்டியை வேலைக்கு அமர்த்தலாம். இந்த ஏற்பாடு எல்லா முதியவர்களுக்கும் பொருந்தாது. தன்னுடைய அலுவல்களைத் தானே கவனிக்கக்கூடிய அளவுக்குத் தெம்பாக உள்ள முதியவர்களுக்குத்தான் பொருந்தும். நான்காவது ஏற்பாடு,வீட்டில் கண்காணிப்புக் கமராவைப் பொருத்துவது. இதுவும் தானாக இயங்கும் முதியவர்களுக்குத்தான் பொருந்தும். ஆனால் கமரா சரிவர இயங்கவில்லை என்றாலோ அல்லது கமராவின் கண்காணிப்பு வீச்சுக்கு வெளியே முதியவர் போய்விட்டாலோ அதன் பின் அவருடைய நடமாட்டங்களைக் கவனிக்க முடியாது. இதில் கமராவைத் தொடர்ச்சியாக அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கும். யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் அவ்வாறு கமரா பொருத்தப்பட்டிருந்தது. பிள்ளைகள் முதியோரின் நடமாட்டத்தைக் கமரா மூலம் கண்காணிக்க முடிந்தது. ஆனால் ஒருநாள் முதியவரைக் காணவில்லை. இரண்டாம் நாளும் காணவில்லை. பிள்ளைகள் அயலவர்களோடு தொடர்புகொண்ட பொழுது அயலவர்கள் வீட்டு வளவில் கமராவின் கண்காணிப்பு வீச்சுக்கு வெளியே முதியவர் விழுந்து கிடக்கக் கண்டுபிடித்தார்கள். ஆனால் கண்டுபிடித்தபொழுது முதியவருக்கு உயிர் இருக்கவில்லை. அவர் இறந்து இரண்டு நாட்களாகி விட்டது. இந்த ஏற்பாடுகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யும்படி எனது நண்பரிடம் சொன்னேன். தனித்து விடப்பட்ட முதியவர்களுக்காகக் காசு செலவழிக்கத் தயாராக இருப்பவர்களுக்குத்தான் இந்தத் தெரிவுகள். இல்லையென்றால் ஏதாவது முதியோர் இல்லத்துக்குத்தான் போக வேண்டும். Geriatrician என்று அழைக்கப்படுகின்ற முதியோர் துறைசார் மருத்துவர்கள் தமிழில் மிகக்குறைவு. அதுமட்டுமல்ல முதியோரைப் பராமரிப்பதற்கான பயிற்றப்பட்ட தாதியர்களும் தமிழ்பகுதிகளில் குறைவு. இக்கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்ட மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் முதியோர் பராமரிப்புக்கென்று பயிற்சிகளை வழங்கும்(Institute of Medical Sciences) “மருத்துவ விஞ்ஞான நிறுவனம்” என்ற நிறுவனம் உண்டு. 2013இலிருந்து முதியோரைப் பராமரிப்பதற்குரிய தொழில்சார் பயிற்சிகளை வழங்கிவருகிறது. இங்கு வழங்கப்படும் தொழில்சார் பயிற்சியானது இலங்கைத் தீவின் தேசிய தொழில்சார் தகமை மட்டத்தில் நான்காவது மட்டத்துக்குரியது. ஐந்தாவது தொழிற்சார் தகமை மட்டும்தான் டிப்ளமோ. அப்படிப் பார்த்தால் தமிழ்ப்பகுதிகளில் இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் முதியோரைப் பராமரிக்கும் தாதியர்கள் அனைவருமே குறைந்தபட்சம் டிப்ளோமா தரத்துக்குரிய தொழில் தகமையைக்கூட கொண்டிருக்கவில்லை.ஆனால் மேற்கத்திய நாடுகளில் அது நான்கு ஆண்டுகாலப் பட்டப்படிப்பாகவும் காணப்படுகிறது. வடக்கில் மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் மட்டும்தான் அவ்வாறான கற்கை நெறி உண்டு. அதேசமயம் முதியோரியல் துறைக்குரிய மருத்துவ நிபுணர்களின் தொகையும் குறைவு. ஆனால் தமிழர் தாயகத்தில் வடக்கில் மட்டும் 60வயது கடந்த முதியோர் மொத்தம் இரண்டு இலட்சத்து 29ஆயிரத்து867பேருக்கு மேல் உண்டு. இதில் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஒரு லட்சத்து 54ஆயிரத்து 626 முதியோர் உண்டு. வடக்கில் மட்டும் மொத்தம் 28 முதியோர் இல்லங்கள் உண்டு. இவற்றுள் ஆகப் பெரியது கைதடியில் உள்ள அரச முதியோர் இல்லந்தான். அங்கே 200க்கும் குறையாத முதியோர் உண்டு. அதாவது வடக்கில் மட்டும் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 20 விகிதம் முதியவர்கள். எனக்குத் தெரிந்து புலம் பெயர்ந்துபோன பிள்ளைகளில் ஒரு பகுதியினர் தமது முதிய பெற்றோரைப் பராமரிப்பதற்காக ஊரில் குறிப்பிட்ட காலத்துக்கு வந்து தங்கி நிற்கிறார்கள். அதிகம் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோருக்கு தொடர்ச்சியாக யாராவது ஒரு பிள்ளை வீட்டில் நிற்கின்றது. அது ஒரு கொடுப்பினை. ஆனால் எல்லாருக்கும் இல்லை. எனவே தமிழ் மக்கள் இதுதொடர்பில் வேகமாக முடிவெடுக்க வேண்டும். தாயகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் சேர்ந்து இதுதொடர்பாக பொருத்தமான முடிவுகளை எடுக்கலாம். இதுவிடயத்தில் பின்வரும் விடயப்பரப்புகளின் மீது கவனத்தைக் குவிக்கவேண்டும். முதலாவதாக எத்தனை முதியவர்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாக சரியான புள்ளி விபரங்களைச் சேகரிப்பது. இரண்டாவது, முதியோரை பராமரிப்பதற்கான நிறுவனங்களைக் கட்டியெழுப்புவது. மூன்றாவது,பராமரிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் கற்கை நெறிகளை குறைந்தபட்சம் தனியார் கல்விக் கட்டமைப்புகளுக்கு ஊடாகத் தொடங்குவது.இது ஒரு தேசியக் கடமை. முதியோர் இல்லங்களைக் கட்டியெழுப்புவது என்பது தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் தேச நிர்மாணத்தின் ஒரு பகுதிதான். முதியோரைப் பராமரிப்பதற்கு மட்டுமல்ல கைவிடப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள், விதவைகள்,மாற்றுத் திறனாளிகள்,மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், போதைப்பொருள் பாவனையாளர்கள் போன்ற எல்லாத் தரப்பினரையும் பராமரிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இவையாவும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கட்டமைப்புகள்தான். இனப்பிரச்சனைக்குத் தீர்வு வரும்வரையிலும் இந்தக் கட்டமைப்புகளை ஒத்தி வைக்க முடியாது. பராமரிக்கப்பட வேண்டிய பிரிவினர் பராமரிக்கப்படாமல் அனாதைகளாக விடப்படுவது என்பது ஒரு தேசிய அவமானம். எனவே தேசத்தைக் கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக மேற்கண்ட நிறுவனங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். நான் இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும்போது எங்கேயோ ஒரு தொலை கிராமத்தில் யாரோ ஒரு முதியவர் உதவிக்கு ஆளில்லாமல் இறந்து போயிருக்கலாம். https://www.nillanthan.com/7852/
  29. "dry fruits (உலர் பழங்கள்) - நல்லதா? என்னென்ன சத்துக்கள் உள்ளன? யார் சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது? "Dry fruits - are they good? What nutrients are present and how much? Who can eat? Who should not eat? How much can we eat?" | Dr Arunkumar அண்ணை, இரத்தச் சக்கரை கட்டுப்பாட்டில் இருந்தால் 1 பேரீச்சம்பழம் உண்பது பிரச்சனை இருக்காது.
  30. துரை, அதற்குள் சென்று வர அதிக செலவு ஆகுமே. சிறீ லங்கன் எயார்லைன்ஸ் வணிக வகுப்பு சீட்டு என்றால் உள்ளே போகலாம் என நினைக்கின்றேன். அது அல்லாதவர்கள் உள்ளே செல்லலாமா? பல விமான நிலையங்களில் கட்டணம் செலுத்தியும் உள்ளே செல்ல முடியாது. அதற்குரிய விமான நிறுவன பயணச்சீட்டு அல்லது பிரத்தியேக கிரடிட் மட்டை தேவைப்படும் என நினைக்கின்றேன். நீங்கள் இலங்கையில் உள்ளே சென்று பயன்படுத்திய அனுபவம் கிடைத்தால் கூறுங்கள் கேட்போம்.
  31. தனிப்பட்டு உங்கள் மீதும் இல்லை அனுர மீதும் வெறுப்பு இல்லை. ஆனால் இனப்பிரசனை விடயத்தில் அனுரா மாத்தி யோசிக்கிறார் என பச்சை உருட்டை உருட்டும்…கருத்துக்கள் மீது நிச்சயம் வெறுப்பு உண்டு. ஜேவிபி பற்றி நிக்சன் எழுதியதை வாசிக்கவும்.
  32. நிக்சனுக்கு வயசு போட்டுது 🤣. அத்தனை வடக்கு-கிழக்கு தமிழர் பிரதிநிதிகளும் ஒரே குடையில் வந்து, மக்களும் 80% ஆதரித்து, இன்னுமொரு வட்டுகோட்டை தீர்மானம் நிறைவேற்றினாலும் ——— சிங்களவர் மட்டும் அல்ல…. இந்தியாவோ…. வேறு எவருமோ இதை இன்றைய நிலையில் ஆதரிக்க போவதில்லை. நாம் சிறுவராக இருந்த போது எத்தனையோ விடயங்களை எமது பெற்றாரிடம் மிகவும் ஆணித்தரமாக கேட்டிருப்போம்….ஆனால் அவர்கள் தருவதில்லை என முடிவு எடுத்தால் அவ்வளவுதான். நாம் கேட்பதை எம்மால் அடித்து பறிக்க முடியாது. அடங்கி விடுவோம். இங்கேயும் அதுவே நிலமை. தமிழர் ….கேட்கலாம்… எவ்வளவும் கேட்கலாலம்…. ஆனால் பலன்? கேளுங்க, கேளுங்க….கேட்டுகிட்டே இருங்க என்பது மட்டுமே. சில சமயம் யோசித்தால்… எப்படி, இப்படி ஒட்டு மொத்த இனமும் யதார்தத்தை புரிந்து கொள்ளாத கற்பனைவாதிகளாக இருக்கிறார்கள் என வியப்பாக இருக்கும். ஆனால் அனுரவின் உண்மை முகத்தை சும்மா டர்….என கிழித்துள்ளார் நிக்சன். அனுர செவ்வந்தியை பிடிக்கிறார், செண்பகத்கை பிடிக்கிறார், இராமராஜனை பிடிக்கிறார் என காவடி தூக்குபவட்கள் கவனத்துக்கு. இங்கே குறிப்பிடப்படும் முன்னாள் மண்டையன் குழுவினர் மீது எனக்கு எந்த நல்ல அபிப்பிராயமும் இல்லை. ஆனால் 13 ஐ முழுமையாக அமல் படுத்த கேட்பதே இப்போ எடுத்து போட கூடிய ஒரே துரும்பு. காலம் அப்படியே நின்று விடாது. ஒரு நூறு வருடத்தில் இந்த மாகாணசபையை ஒரு பெடரல் மாநிலமாக, ஒரு சுயநிர்ணய கொன்பெடரல் தேசமாக நாம் மாற்றி அமைக்கலாம், சூழமைவும் கெட்டித்தனமும் இருந்தால். ஆனால் நிக்சன் சொல்வது போல், இப்போ 13 ஐ காலால் உகைத்து விட்டு மணந்தால் சுயநிர்ணயதேவன் இல்லையேல் மரணதேவன் என நாம் இருந்தால்….. நமக்கு மாவட்ட சபை கூட தரக்கூடாது என்ற ஜேவிபி உட்பட்ட அத்தனை இனவாதிகளிம் வேலையும் மிக இலகுவாக, விரைவாக முடிந்து விடும்.
  33. 13 ஐ கேட்டு தீர்வின் தரத்தை குறைக்கும், சில தமிழ்த்தேசியக் கட்சிகள் --- ---- ---- ----- தமிழரசுக் கட்சி மதில் மேல் பூனை 2017 இல் மாகாண சபைத் தேர்தலை நிறுத்தியது யார்? ஜேபிவியும் 2017 இல் இருந்து13 கைவிடலாம் என்ற நிலைப்பாட்டில் ----- ---- ----- இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு அன்று கடும் எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி, 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக ஜனநாயக அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்ட நாள் முதல், மாகாண சபை தேர்தல்களிலும் போட்டியிட்டு ஆசனங்களை கைப்பற்றி வந்தது. 13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கைத்தீவை பிளவுபடுத்தும் எனவும் தமிழ் ஈழம் அமையும் என்று கோசம் எழுப்பி அன்று எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் மாகாண சபைகள் முறையை நன்றாக அனுபவித்து அதனைத் தங்கள் கட்சி அரசியல் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொண்டது. 2009 ஆண்டு மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில், மாகாண சபைகள் தேவையில்லை. குறிப்பாக 13 ஆவது திருத்தச் சட்டம் அவசியம் இல்லை என்ற தொனியல் ஜேவிபி குறிப்பாக அதன் முன்னாள் தலைவர் அமரர் சோமவன்ச அமரசிங்க மற்றும் பொதுச் செயலாளர் ரில்வின் ரில்வா ஆகியோர் அவ்வப்போது கூறியிருந்தனர். 2017 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் ஆட்சியின்போது மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டன. ஜேவிபி, தேசிய மக்கள் சக்தியாக தன்னை மாற்றிக் கொண்டு, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஒருபோதும் கோரியதில்லை. அதாவது, 2017 இல் மாகாண சபைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்ட நாள் முதல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர் எதிர்க்கட்சியாக இருந்த காலங்களில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஜேவிபி ஒருபோதும் கேட்டதும் இல்லை ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுமில்லை. ஆகவே --- 1988 ஆம் ஆண்டு 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்த மன நிலை தற்போதும் ஜேவிபிக்கு உள்ளது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்தாலும், அடிப்படையில் ஜேவிபி என்ற மன நிலை அதுவும் தமிழ் மக்கள் சார்ந்த விவகாரங்களில் அந்த மன நிலை இருப்பதையே சமீபகால அணுகுமுறைகள் காண்பிக்கின்றன. இப் பின்னணியில் முன்னாள் ஆயுத இயக்கங்களான ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ, ஆகியவை மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என தொடர்ந்து கோருவதுடன் கூட்டங்களையும் யாழ்ப்பாணத்தில் நடத்தி வருகின்றன. இந்த முன்னாள் இயக்கங்கள் 1988 ஆம் ஆண்டே மாகாண சபை முறைமையை இனப் பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொண்டிருந்தன. ஆனாலும் விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக போராடியதால், தமது நிலைப்பாட்டை மாற்றி மாகாண சபை முறைமை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது எனவும் ஆனாலும் ஆரம்ப புள்ளியாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கற்பிதம் செய்தன. ஆனால் -- மிகச் சமீப நாட்களில் மாகாண சபைத் தேர்தல் முறைமை பற்றி அதிகமாக இந்த முன்னாள் இயக்கங்கள் உரையாட ஆரம்பித்துள்ளன. இந்த முன்னாள் இயக்கங்கள் --- 2022 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியிருந்தன. யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தியது. அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோருடன் தொடர்ச்சியாக உரையாடி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரி அக் கடிதத்தை அனுப்பியிருந்தன. ஆனால் -- அக் கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்குகொள்ளவில்லை. அவர்கள் அதனை கடுமையாக எதிர்த்திருந்தனர். தமிழரசுக் கட்சி சில திருத்தங்களுடன் மோடிக்கு கடிதம் அனுப்பி செயற்பாட்டில் பங்குபற்றியிருந்தது. ஆகவே, இங்கு புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், 13 ஆவது திருத்தச் சட்டத்தையோ மாகாண சபை முறைமையையோ சிங்கள அரசியல் தலைவர்கள் எவரும் விரும்பில்லை என்பதுதான். ஏனெனில் --- 2009 இற்குப் பின்னரான சூழலில் இனப்பிரச்சினை என ஒன்று இல்லை என்பதும், ஆயுதப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அதனை சமாளிக்க அதுவும் இந்தியாவைச் சமாளிக்க இந்த 13 என்பதையும் மாகாண சபை முறைமைகள் என்பதையும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அவ்வப்போது ஆட்சியில் இருந்து சிங்கள தலைவர்கள் நடத்திக் காண்பித்திருந்தனர். ஆனால், போர் முடிவுக்கு வந்த பின்னரான சூழலில் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து தீர்மானம் நிறைவேற்றியபோது, 13 ஐ அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் 13 இருந்தது. ஆனால், மகிந்த ராஜபக்சவோ 2015 ஆட்சிக்கு வந்த ரணில் - மைத்திரி அரசாங்கமோ அதனை கவனத்தில் எடுக்கவில்லை. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, 2013 இல் முதன் முறையாக வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்திருந்தது. ஆனால், முதலமைச்சர் நிதியம் உள்ளிட்ட மாகாணங்களுக்குரிய பல அதிகாரங்களை செயற்படுத்த கொழும்பு நிர்வாகம் அனுமதித்திருக்கவிலலை. வடக்கு கிழக்கு தனித் தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்ட பின்னர், 2007 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூட அதிகாரங்கள் இல்லை என்றே குறை கூறியிருந்தார். இணைந்த வடக்கு கிழக்கில் முதன் முதலாக முதலமைச்சராக பதவி வகித்திருந்த வரதராஜப்பெருமாளும் போதிய அதிகாரங்கள் இல்லை எனவும் அதிகாரங்கள் தெளிவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார். இப் பின்புலத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென முன்னாள் ஆயுத இயங்கள் மீண்டும் கோருகின்றன. ஆனால் --- இதுவரைக்கும் கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் கட்சிகளோ, முஸ்லிம் கட்சிகளோ மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வற்புறுத்தவில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு அவசியம் இல்லை. 2009 இற்குப் பின்னரான சூழலில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து குறைந்தது 15 இற்கும் மேற்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசினால் ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீளப் பெறப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கல் தொடருகின்றது. இராணுவ முகாம்களின் எண்ணிக்கையும் இராணுவத்தின் எண்ணிக்கைகளும் குறைக்கப்படவில்லை. இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினாலும், அதனை உரிய முறையில் செயற்படுத்த முடியாது. ஆகவே, தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒருமித்த குரலில் அரசியல் விடுதலைக்கான கோரிக்கைகளை அழுத்தம் திருத்தமாக முன்வைக்க வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி என்பதை உயர்வான அரசியல் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட 13 ஐ கோரும் போதும், தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழ் நிர்வாக அதிகாரங்களை மாத்திரம் வழங்கினால் போதும் என்ற மன ஓட்டம் சிங்கள அரசியல் தலைவர்களிடம் வந்துவிடும். இப்போது கூட அவ்வாறான மன நிலையில் இருந்து கொண்டுதான் 2017 இன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த ரணில், கோட்டாபய ஆகியோர் விரும்பயிருக்கவில்லை. அதனையே அநுரகுமார திஸாநாயக்கவும் பின்பற்றுகிறார். 13 ஐ அமுல்படுத்தி இருக்கின்ற அதிகாரங்கள் ஊடாக வடக்கில் கிழக்கில் எதனையும் சாதிக்க முடியும் என சில தமிழ்த்தேசியக் கட்சிகள் குறிப்பாக முன்னாள் ஆயுத இயக்கங்கள், தங்கள் அரசியல் வறுமையை பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றன என்ற முடிவுக்கு வரலாம். ஆனால் -- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அந்த நிலைப்பாட்டில் இல்லை. தமிழரசுக் கட்சி மதில் பூனை போன்று உள்ளது. ஆகவே --- இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை என்று கோரும் நிலையில், எதுவுமே இல்லாத மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவது ஏற்புடைய அரசியல் அல்ல. அதுவும் உள்ளக பொறிமுறை என ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், மாகாண சபை கோரிக்கைகள் தமிழ்த்தரப்பை மேலும் பலவீனப்படுத்தும். வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு தான் பொருத்தமானது என்பதை இந்தியா விரும்பாது என இந்த முன்னாள் தமிழ் ஆயுத இயக்கங்களுக்குத் தெரியும். ஆனால் --- தொடர்ச்சியாகவும் வலுவானதாகவும் கோரிக்கைகளை ஒருமித்த குரலில் முன்வைக்கும் போது அதற்குச் செவிசாய்க்கும் நிலை உருவாகும். 1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத்துடன் சிங்கள அரசியல் தலைவர்கள் ஆரம்பித்த இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பை அவர்கள் 2009 இற்குப் பின்னரான சூழலில் மிக இலகுவாக வலுப்படுத்தி வருகின்றனர். நியாயப்படுத்தியும் வருகின்றனர். உலகமும் அதனை ஏற்கிறது. ஆனால், மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று கேட்டு தங்கள் அரசியல் விடுதலைக் கோரிக்கையின் உயர் தரத்தை தாங்களே தரம் தாழ்த்துவது பொருத்தமான அரசியல் உத்தி அல்ல. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/share/17AyiaTkxM/?mibextid=wwXIfr
  34. விஜய் ஆட்கள் சொல்கின்ற படி என்றால் உங்கள் பிறந்த நாள் விழாவில் இறந்தவர்கள் காயப்பட்டவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை . மண்டபக்காரரும் அவரது பாதுகாவலர்களுமே குற்றவாளிகள். விஜய் கூட்ட நெரிசலை விரும்பாதவர் என்று சொல்லபடுகின்றது அதனால் தான் முன்பு அவரது கூட்டம் ஒன்றில் மர தூண்களுக்கு கிரீஸ் தடவி வைத்திருந்தார் இரசிகர்கள் அவரை நெருங்காத படி. ஆனால் குறுகி காலத்தில் கட்சி ஆரம்பித்து மக்கள் கூட்டத்தை கட்டி ஆள்வதற்கு முதலமைச்சராகி விட வேண்டும் என்ற பேராசை மட்டும் உள்ளது. மக்கள் கூட்டத்தை விரும்பாதவர் மக்களுக்கு முதலமைச்சராகலாமா விஜய் நாமக்கல்லில் இருந்து கருவூருக்கு வருவதைத் அரசு தடை செய்திருந்தால் இருக்கின்றதே விஜை கட்சியின் வளர்ச்சியினால் கலக்கம் பொறாமை கொண்ட ஆளும் கட்சி செய்த சதி சர்வாதிகார செயல் விஜய் கருவூருக்கு வருவதை தடைசெய்தது. 👆 இத தான் நிச்சயமாக நடந்திருக்கும்
  35. புரிகிறது. மேலோட்டமாகத்தான் சொல்ல முடியும். ஆனால் அழுத்தமாகச் சொன்னால் சரிதானே. உங்கள் எழுத்து அழுத்தமாகவே உள்ளது. இன்று ஒரு நிகழ்வு பார்த்தேன். விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் பாடல் போட்டி. தாய்க்கான பாடல்கள். ஒரு பையனை எடுத்த வளர்க்கும் பெற்றோர். மிக உருக்கமாகவே இருந்தது. எப்பெடியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள். எனக்கு உடனே மனதில தோன்றியது உங்களின் இந்த "தன்னறம்"
  36. அப்போ கஜேஸ் ஏன் போன மாகாணசபை தேர்தலை புறக்கணித்தனர்? அதனால் அவர்கள் ஈட்டிய அரசியல் இலாபம்தான் என்ன? பொன்னம்பலம் குடும்பத்தின் வாரிசு அரசியலுக்காகவும் கஜனின் ஒற்றை எம்பி கதிரைக்காகவும் நடத்தபடும் கம்பெனிதான் காங்கிரஸ். வாரிசு அரசியலை ஒழிப்பதாயின் முதலில் எமது நாட்டில், எமது ஊரில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
  37. அவராவது தன்னுடைய கட்சியில் உள்ளவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகப் போட்டியிடுவோம் என்று சொல்கிறார்.அதில் பிழையில்லை.ஆனால் சுரேஸ் சுமத்திரன் போன்ற மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மாகாணசபைத் தேர்தலிலாவது ஏதாவது பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக போட்டியிடுகிறார்கள். முன்ளணி போட்டியிட்டால் தங்கள் வெற்றி வாய்ப்பினை பாதிக்கும் அஞ்சுவதாலேயே இப்படிப் புலம்புகிறார்கள்.13 இல் அதிகாரம் இல்லை என்று சம்பந்தரே திருவாய் மலர்திருக்கிறார். ஆனால் தேர்தல்களில் அவரது கட்சி போட்டியிட்டது.
  38. நான் ஒரு விடயத்தில் மட்டும் அவர்களின் நடவடிக்கையை போற்றி உள்ளேன். ஆனா தமிழர் உரிமைக்கு ஜேவிபி ஏனையோரை விட அல்லது நிகரான ஆபத்து என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எனது நிலைப்பாடு - மாற்றான் தோட்டம் முழுவதும் நாற்றம் எடுத்தாலும் அதில் ஒரு மல்லிகை இருப்பின் மணக்கும். நீங்கள் அனுர காவடி. இரெண்டும் ஒன்றல்ல.
  39. சிறப்பான ஆய்வு. ஆனால், எமது மூளைக்குள் புகுந்துள்ள ஆரியமாயையில் இருந்துவிடுபடுதல் என்பது சாத்தியமா(?)தெரியவில்லை. இதுபோன்ற ஆய்வுநிலையிலிருந்து சிந்திக்கும் நிலையில் தமிழினம் இருக்கிறதா? அடுத்த தலைமுறையில் கடவுளை வணங்கும் தொகை குறைந்து வருவதால் ஆரியமாயையில் இருந்து விடுபடக்கூடும். அதேவேளை தமிழுக்கும் சைவத்துக்கும் இடையேயான உறவுநிலை கரணியமாக எமது பண்பாட்டோடு கலந்துள்ள கோவில் வழிபாடுகள் மக்களின் ஒன்றிணைவுக்கான தளமாக உள்ளமையையும் மறுக்கமுடியாது. அங்கு நடைபெறும் உரைகள் ஊடாக ஒரு குறிப்பிட்டு வீதத்தினர்ஆரியமாயையுள் கட்டுண்டு இருக்கவே செய்வர்.அதனைவிடக் கொடுமை அம்மன்கோவிலென்று போனால் ஐயப்பன் வரை உறையும் இடமாக உள்ளது. பல்பொருள் அங்காடிகள்போல் எந்துநாட்டு, எந்தக் கடவுளையும் வழிபடும் இடமாக புலத்திலே உள்ள கோவில்களின்நிலை. இராவணன் மீதான தெளிவான புரிதலை வளத்தெடுப்பதன் ஊடாக ஒரு தேடலை ஏற்படுத்த முடியும். ஒரு சில இளையோரிடம் இராவணன் மீதான ஈர்ப்பும் இல்லாமலில்லை. தமிழர்கள் தோற்றுப்போய் நிற்கின்ற இடமாக இருப்பது கருத்தியல் தளமே. பொய்களையும் புனைவுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டதாக சுட்டப்படும் மகாவம்சம் யுநெஸ்கோவால்(UNESCO) 2023இல் அனைத்துலக பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. தங்கள் நேரத்துக்கும் ஆக்கத்திற்கும் பாராட்டும் நன்றியும் உரித்தாகுக.
  40. இனி வ‌ரும் போட்டிக‌ளில் நான் இல‌ங்கை அணிய‌ தெரிவு செய்ய‌ல‌ இந்தியா இனி வ‌ரும் போட்டிக‌ளில் வென்றால் நான் தெரிவு செய்த‌ 4அணிக‌ளும் சிமி பின‌லுக்கு போகும்..............................
  41. குற்றவாளிகள், பாலியல் விடயங்களில் ஈடுபடுவோர், அரசியல்வாதிகள் இந்த மூவரும் தமக்கு தேவைப்படின் இனபேதம் பார்ப்பார்கள். தேவைப்படின் இணைந்தும் செயல்படுவார்கள். அன்றும் இன்றும். முன்பும் கொழும்பின் பல குடு காங்சிகள் மூவின பிரதிநிதிதுவத்தை கொண்டிருந்தன.
  42. உங்கள் எழுத்துக்கு நன்றிகள்.நேரம் கிடைக்கும் போது வாசிக்கலாம் என்று உள்ளேன்
  43. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு படம் ரத்ததிலகம்
  44. https://www.facebook.com/reel/2313664882399779
  45. இப்ப என்ன சொல்ல வாறீங்கள்😂? ஒரு உதாரணத்திற்கு, "அமெரிக்காவில் அடிமைகளை வைத்திருப்பது சட்டமாக இருந்தது" ஓம் இருந்தது. 1860 இல் அது சட்ட விரோதமாகி விட்டது, ஆனாலும் 1920 வரை ஏதோ ஒரு விதத்தில் நடைமுறையில் இருந்தது. காரணம் என்ன? உங்களைப் போல "எல்லோரும் செய்தால் அது நோர்மல், நான் ஏன் செய்யக் கூடாது?" என்ற "புத்திசாலித்தனமான பேர்வழிகள்" இருந்தது தான் காரணம். இது போன்ற கள்ள வேலைகள், முடிச்சவிக்கி வேலைகளைச் செய்யாமல் இருப்போர் வக்கில்லாமல், வாய்ப்பில்லாமல் செய்யாமல் விடுவதில்லை. அவர்களுக்குள் இருக்கும் அறத்திசை காட்டி செய்யாமல் தடுத்து விடுகிறது. இப்படியாக உள்ளக அறம் உடைய மக்கள் அதிகமாக இருக்கும் நாடுகள் ஊழல் குறைந்த நாடுகளாக இருக்கின்றன. அப்படியில்லாமல் உங்களைப் போல "அறமாவது மண்ணாங்கட்டியாவது" என்போர் அதிகமாக வாழும் நாடுகள் ஊழலில் தேங்கிப் போய் முன்னேற இயலாமல் தவிக்கின்றன.
  46. செம்மணிப் புதைகுழிகளில் உறங்கமறுங்கும் கிரிஷாந்திகளின் குரல்கள் இளங்கோ அண்மையில் கனடாவில் நடந்த தேவகாந்தனின் 'கனவுச்சிறை' ஆங்கில நூலின் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அப்போது இதை தமிழிலிருந்து ஆங்கிலமாக்கிய நேத்ரா ரொட்ரிகோ, தனது ஓர் அனுபவத்தைச் சொன்னார். அவர் இளம்பெண்ணாக இருந்தபோது கொழும்பிலிருந்து பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு புத்தகங்களைப் படிக்கப் போவார். எப்போது அங்கே போனாலும் இராணுவத்தின் டிரக்கும் இராணுவத்தினரும் நின்றுகொண்டிருப்பார்கள் என்றார். ஒரு பெண்ணாக அதுவும் தமிழ் பெண்ணாக, சிங்கள இராணுவத்தின் மீது பயத்தோடும் பதற்றங்களோடும் அன்றைய இளம் நேத்ரா சென்று கொண்டிருந்ததை அவர் விபரித்திருந்தார். இராணுவத்தினர் ஒரு பெண் மீது செய்யும் சேட்டைகளையும் தாண்டிச் சென்ற அந்த நாட்களினது வடுக்களையும் மீண்டும் நினைவுபடுத்தினார் நேத்ரா. நான் நேத்ராவின் நனவிடைதோய்தலில், இன்னொரு காலத்தில், இன்னொரு நிலப்பரப்பில் இப்படி இராணுவக் காவலரணைத் யாழ்ப்பாணத்தில் செம்மணியில் தாண்டிக் கொண்டிருந்த கிரிஷாந்தியை நினைத்துக் கொண்டேன். தனது பதின்வயதில் உயர்தர பரிட்சையான இரசாயனவியல் பாடத்தின் தேர்வை எழுதிவிட்டு 96ம் ஆண்டில் கிரிஷாந்தி செம்மணி காவலரணைத் தாண்டிக் கொண்டிருந்திருப்பார். அன்று பரிட்சையை மதியம் எழுதிமுடித்துவிட்டு, முதல் நாள் இறந்துவிட்ட தன் தோழியின் மரணவீட்டுக்குப் போய்விட்டு கிரிஷாந்தி தனித்து அந்தத் தெருவால் வந்தபடி இருந்திருப்பார். அவரது பாடசாலைத் தோழி, அதற்கு முதல்நாள் (இராணுவ வாகனத்தால்) அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். அந்தத் தோழியின் மரணமும் சந்தேகத்துக்குரிய வகையில் இராணுவத்தினால் நிகழ்த்தப்பட்டதாக ஓர் கதையிருக்கின்றது. கிரிஷாந்தியை, காவலரணில் இருந்த இராணுவ கோப்ரலான ராஜபக்சே மறித்து பதுங்குகுழிக்குள் அடைத்து வைக்கின்றார். தனது மகள் நேரத்துக்கு வராது பதறிய கிரிஷாந்தியின் தாயார் இராசம்மா, மகள் இராணுவத்தால்தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதை அறிந்து, அவரது தனது இளைய மகனான பிரணவனுடனும், அயலவரான கிருபாமூர்த்தியுடனும் அந்தக் காவலரணுக்குச் செல்கின்றார். இராசம்மா இதற்கு 10 வருடங்களுக்கு முன் தனது கணவரைப் புற்றுநோயிற்கு இழந்தவர். தனியொருவராக தனது இரண்டு பெண் பிள்ளைகளையும், ஒரு ஆண் பிள்ளையும் வளர்த்து வந்தவர். கிரிசாந்திக்கு மூத்த சகோதரியான பிரஷாந்தியும், இளைய சகோதரனான பிரணவனும் இருந்தார்கள். இராசம்மா மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் இலங்கையில் கல்விகற்று, 50களின் இறுதியில் இந்தியாவுக்கு சென்று பொருளாதாரத்தில் இளங்கலைமாணி பட்டத்தையும் பெற்று வந்து, ஒரு பாடசாலையில் உப அதிபராகப் பணிபுரிந்தவர். இராசம்மா, அவரின் இளைய மகன் பிரணவன், அயலவர் குமாரசாமி ஆகிய மூவரும் இராணுவத்திடம் கிரிஷாந்தி எங்கே என்று வினாவுகின்றனர். அவர்களோ அப்படியொருவரை தாங்கள் கைது செய்யவில்லை என்று மறுக்கின்றார்கள். அதை நம்பித் திரும்பிப் போகின்றவர்கள், இராசம்மாவின் பிடிவாதத்தால் மீண்டும் காவலரணுக்குத் திரும்பி கிரிஷாந்தி எங்கே என்று வினாவுகின்றனர். இப்போது இராசம்மா, தனது மகளை விடுதலை செய்யாதவரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றார். ஒரு தாயின் மனது, இந்த இரவை தன் மகள் இராணுவ முகாமிற்குள் கழித்து விட்டால் இனி என்றென்றைக்கும் மீள மாட்டாளென நம்பியிருக்கலாம். இராசம்மாவுக்கு சிங்களமும் நன்கு தெரியும். ஆகவே அவர் சிங்களத்தில் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார். எப்போது துப்பாக்கியோடும், அதிகாரத்தோடும் இருக்கும் எந்த தரப்பாயினும் இப்படி ஒருவர் அடங்காது நியாயம் கேட்பது கோபத்தை வரவழைக்கத்தானே செய்யும். அதுவும் இராணுவம் என்றால் சொல்லவும் வேண்டுமா? அந்த முகாமில் இருந்த இராணுவத்தினர் இந்த மூன்று பேரையும் இன்னொரு பதுங்குகுழியில் கொண்டு போய் அடைத்து வைக்கின்றது. பிறகு நடந்தவற்றை நான் விரிவாகச் சொல்லப் போவதில்லை. ஒருபுறத்தில் கிரிஷாந்தி கூட்டு வன்புணர்வுக்கு ஆளானபோது, இவர்கள் மூன்று பேரும் அருகிலேயே வைத்து கொல்லப்படுகின்றார்கள். கிரிஷாந்தி உள்ளிட்ட இந்த நான்கு பேரும் கொல்லப்பட்ட முறை மிகக் கோரமானது. இற்றைக்கு இது நடந்து 30 வருடங்களாகி விட்டது. ஆனால் இதைச் சாட்சியமாகச் சொன்னவர்களின் வாக்குமூலங்களை வாசிக்கும்போது மனம் பதறுகின்றது. அதை தொகுத்து நூலாக்கி 'வன்மம்' என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் இலங்கையில் வெளிவந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களைப் புரட்டும்போதும் கைவிரல்கள் படபடக்கின்றன. அன்று இந்த விடயம் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டபோது, இராணுவ/பொலிஸ் குழுவொன்றின் விரைவான விசாரணையினாலாயே இது ஒரு முக்கிய மனிதவுரிமை மீறல் சம்பவமாகப் பொதுவெளிக்கு தெரிய வந்தது. மேலும் எதற்கும் பயப்பிடாது சாட்சி சொல்ல வந்த பொதுமக்களினதும், குற்றஞ்சாட்டப்பட்ட ராஜபக்சே உள்ளிட்டவர்களிலிருந்து அரச சாட்சியாக மாறிய ச நஸார், சமரசிங்க போன்றவர்களின் சாட்சியங்களும் முக்கியமானவை. நஸாரின் சாட்சியங்களில், அவருக்கு கிரிசாந்தியின் கூட்டுப் பாலியல் வன்புணர்வில் பங்கிருக்கின்றதா இல்லையா என்று சற்றுக் குழப்பம் இருந்தாலும், அவர் அரசசாட்சியாக மாறியது இந்த வழக்கின் முக்கியமான திருப்பமாகும். அது போலவே சமரசிங்க என்று ஒரு பொலிஸ்காரர் அன்று கோப்பாயில் பணிபுரிந்து கொண்டிருந்தவர். அவர் ஒர் அரிய மனிதாபிமானியாகவே இக்கொடும் நிகழ்வில் புலப்படுகின்றார். அவரே கிரிஷாந்தி உள்ளிட்ட நால்வரின் விடுதலைக்கு அவருக்கு இயன்றமுறையில் முயற்சித்திருந்தவர். கிரிஷாந்தியைப் மதியத்தில் கைதுசெய்து காவலரணில் வைத்து விட்டு, ராஜபக்‌ஷே, சமரசிங்கவை கிரிஷாந்திக்கு விடுதலைப் புலிகளோடு தொடர்பிருக்கா என விசாரிப்பதற்காய் அங்கே வரச் சொல்கின்றார். சமரசிங்கவிற்கு தமிழ் தெரியும் என்பதால் பதுங்குகுழிக்குள் இருந்த கிரிஷாந்தியை அவர் விசாரிக்கின்றார். கிரிஷாந்தி அதை மறுப்பதுடன், எதற்காக என்னை இங்கே தடுத்து வைத்திருக்கின்றீர்கள் எனக் கேட்கின்றார். அதுவே சமரசிங்க முதலும் கடைசியுமாகக் கிரிஷாந்தியை உயிருடன் சந்திப்பது. இப்படி கிரிஷாந்தியை விசாரித்துவிட்டு பகல் 3.00 மணிக்குத் திரும்புகின்ற சமரசிங்க, மூன்று பேர் அதே காவலரண்களுக்குள் நுழைவதைக் காண்கின்றார் (இதை சமரசிங்க நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும்போது நினைவுகொள்கின்றார்). அதன் பின்னர் கோப்பாயுக்கு திரும்புகின்ற சமரசிங்க மனம் அமைதி கொள்ளாது, மாலையில் இன்னொரு பொலிஸ்காரரை சைக்கிளில் அழைத்துக் கொண்டு, கிரிஷாந்தியை கைதுசெய்யப்பட்ட காவலரணுக்குச் சென்று கிரிஷாந்தி உள்ளிட்ட மற்றவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்யக் கேட்டிருக்கின்றார். அது வாக்குவாதமாக மாறி கோபத்தில் சமரசிங்கவையும், அவரது நண்பரையும் அங்கிருந்து ராஜபக்‌ஷே உடனே திருப்பிப் போகச் சொல்கின்றார். இந்த நிகழ்வில் குற்றஞ்சாட்டப்பட்டு, அரச தரப்புவாதியாக மாறி நஸாரின் சாட்சியம் இன்னும் கோரமானது. கிரிஷாந்தி தடுத்து வைக்கப்பட்ட காவலரணுக்கு அருகில் காவலில் இருந்தவர் நஸார். ராஜபக்‌ஷே தனது இராணுவ நண்பர்களிடம் கிரிஷாந்தியின் உடல் மீது வன்புணர்வை நடத்த அனுமதி கொடுத்தபின், நஸாரும் செல்கின்றார். தான் தமிழில் பேசியதால் முனகிக்கொண்டிருந்த கிரிஷாந்தி தன்னிடம் தண்ணீரும் கேட்கவும் தான் கொடுத்ததாகவும், அப்போது யாரோ கெட்டவார்த்தைகளால் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்று கேட்டபோது தான் அந்த இடத்திலிருந்து நகர்ந்ததாகவும் சொல்கின்றார். அப்படித் திரும்பிப் போகும்போது 75 மீட்டர் தொலைவில் கிரிஷாந்தியின் தாயார் இராசம்மா பேச்சு மூச்சின்றி இறந்து கிடந்திருக்கின்றார். இலங்கை இராணுவம் இவர்கள் அனைவரையும் சுருக்குக் கயிறை இரண்டுபக்கமும் போட்டு இழுத்தே கொன்றிருக்கின்றது. இந்தக் கொலைகள் நடக்கும்போது துப்பாக்கியோடு காவல் இருந்ததாக நஸார் சொல்கின்றார். பின்னர் இராணுவத்தினர் மண்வெட்டிகளோடு அந்த உடல்களைப் புதைக்கச் சென்றதையும் கண்டதாகச் சாட்சியில் சொல்லியிருக்கின்றார். கிரிஷாந்தியின் வழக்கு பிற வழக்குகள் போல இல்லாது, அதிகளவு அழுத்தத்தால் இரண்டு வருடங்களில் முடிந்திருக்கின்றது. இந்த நான்கு பேரும் அன்று கொலைசெய்யப்பட்ட உடனேயே ஓர் பெரும் எதிர்ப்பு எல்லாத் தரப்புக்களிலும் இருந்து வந்ததாலேயே, உரியவர்கள் கைதுசெய்யப்பட்டு, புதைக்கப்பட்ட இந்த உடல்கள் 40 நாட்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டு மீளத்தோண்டி எடுக்கப்பட்டன. அந்த மீளக் கண்டுபிடித்தல் தமிழ் மக்களை மட்டுமில்லை, மனிதாபிமானமுள்ள சிங்களவர்களையும் தட்டியெழுப்பியது. ஆகவே இரண்டு ஆண்டுகளில் விசாரணை நடந்து தீர்ப்பும் கொடுக்கப்பட்டது. வழக்கு நடந்த சில நாட்களிலேயே, 9 குற்றவாளிகளில் முதல் குற்றவாளியான ராஜபக்‌ஷே நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடி சில வாரங்களின் பின் வேறொரு நிகழ்வால் கைதுசெய்யப்பட்டது எல்லாம், இலங்கை நீதிமன்றங்களின் வழமையாக நடக்கக்கூடிய நிகழ்வுகள் எனச் சொல்லலாம். இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளில் முடிந்தாலும், இவ்வாறு இதேகாலகட்டத்தில் வன்னியில் குமாரபுரத்தில் பால்பண்ணைக்கு அருகில் தமிழ்ப்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்புணர்வின் தீர்ப்பை வழங்க 20 ஆண்டுகள் எடுத்திருக்கின்றது என்று இதே 'வன்மம்' நூலில் நாம் அறிய முடிகின்றது. ஆகவே நீதி என்பது எல்லோர்க்கும் சமம் இல்லை என்பதையும் நாம் கண்டுகொள்ள முடியும். கிரிஷாந்தியின் கொலைவழக்கில் எட்டுப் பேருக்கு குற்றத்தைச் செய்தற்காக தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போதுதான் ராஜபக்‌ஷே இன்னொரு பேரவலமான உண்மையையும் நீதிமன்றத்தில் அறிவித்தார். நீங்கள் என்னை இந்த நான்கு பேரைக் கொன்று புதைத்ததற்காக குற்றஞ்சாட்டுகின்றீர்கள். நானறியவே இதே செம்மணிப் பகுதியில் 300-400 தமிழர்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன எனச் சொன்னார். அப்படிச் சொன்னதோடு மட்டுமில்லாது என்னால் அவற்றையெல்லாம் அடையாளம் காட்டமுடியும் என்றும் அறிவித்தார். அதில் ஒரு சம்பவமாக, தனது அதிகாரியாருவொருவர் ஒரு திருமணமான தமிழ் தம்பதியைக் கூட்டிக்கொண்டு வந்து, அந்தக் கணவனின் முன்னேயே அந்தப் பெண்ணை வன்புணர்ந்தவர்; பிறகு அவர்கள் இருவரையும் மண்வெட்டியால் அடித்துக் கொன்றுவிட்டு செம்மணியில் புதைத்தவர்; அதற்குச் சாட்சியாக நானே அந்த அதிகாரிக்கு மண்வெட்டியைக் கொடுத்தேன் என்று இன்னொரு அதிர்ச்சியான நிகழ்வைச் சொன்னார். அதேபோன்று ஒருநாளில் 22 இற்கு மேற்பட்ட ஆண்களை அரியாலையில் கைதுசெய்து சித்திரவதை செய்து புதைத்தோம் என்றிருக்கின்றார். அதில் ஒரு சிலரின் பெயர்களை, அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை 'வன்மம்' நூலை வாசிக்கும் ஒருவர் அறியமுடியும். அதன்பின்னர் இவ்வாறு பல உண்மைகளை வெளியுலகிற்குச் சொன்ன ராஜபக்‌ஷேவிற்கு மரண அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டதும், அவரின் மனைவி தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டதுமென பலதும் இலங்கையில் நடந்திருக்கின்றது. அன்றைய சந்திரிக்காவின் காலத்தில் ராஜபக்சேவின் வாக்குமூலத்தை வைத்து செம்மணி புதைகுழிகள் மீண்டும் தோண்டப்பட்டத் தொடங்கியதும், பின்னர் இடைநிறுவில் நிறுத்தப்பட்டதுமென்பதும் கடந்தகால வரலாறு. இப்போது மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பின் செம்மணி மீண்டும் தோண்டப்படுகின்றது. இதுவரை இருநூறிற்கும் மேலான எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டிருக்கின்றன. நாம் எவ்வாறு கொல்லப்பட்டோம் என்று சொல்லாது, அமைதியாக உறங்கப் போவதில்லையென எலும்புக்கூடுகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை சாட்சியங்களாக நம்முன்னே எழுந்தபடி இருக்கின்றனர். *** ('வன்மம்' - ஆங்கிலத்தில் பகவதாஸ் சிறிகந்ததாஸால், கிரிசாந்தியின் கொலையின் நீதிமன்ற வழக்கின் முழுப்பிரதியை முன்வைத்து எழுதப்பட்ட நூலாகும். இது விண்மணி என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டு அண்மையில் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது) -நன்றி: 'அம்ருதா' - ஐப்பசி, 2005- https://www.elankodse.com/post/செம்மணி?fbclid=IwdGRleANbZCtleHRuA2FlbQIxMQABHqD8R1qc8XcySqXQ3BbP5I0JfN3oEdFRgig2klNF_H6m2pD6F82a_zgMlZ8f_aem_C-KH0QyGDMcXrTF6CnuFNg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.