Leaderboard
-
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்11Points2954Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்9Points19125Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்9Points8907Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்8Points87990Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/15/25 in all areas
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
நாற்பது, ஐம்பதுகளின் இலங்கையின் இருந்த பிரதேச பாகுபாடுகள் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் சில யாழ்ப்பாணத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் இருந்து மலையகத் தமிழர்களை வீட்டு வேலைக்கும், கழிவுகளை அகற்றும் பணிகளுக்கும் அழைத்து வந்து அமர்த்திய நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணம் வறண்ட பிரதேசம். மலையகம் செழிப்பான பூமி என்று யாரும் பேசவில்லை. தாய் தந்தையை உறவுகளை மலையகத்திலேயே விட்டு விட்டு,சிறுமியையோ, சிறுவனையோ பிரித்து கூட்டிக் கொண்டு வந்து வேலை செய்ய விட்டு தன் பிள்ளைகளை படிக்க விட்ட போது யாருமே ‘குய்யோ முறையோ’ என்று கத்தவில்லை. தாயக விடுதலைக்காக கரும்புலியாகப் போனவனை, “இது எங்கள் போராட்டம் நீ வளமும், உன் வாழ்வும் உள்ள உன் மலையகத்துக்குப் போ” என்று சொல்ல பிரபாகரனே சொல்லவில்லை. புலிகள் அறிவித்தவுடன், “ஊரில் உழாத மாடு வன்னியில் எப்படி உழும்” என்று சொன்னவர்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்து வாழவில்லையா? புகையிலைத் தோட்டம், மிளகாய் தோட்டம் என்று வாழ்ந்தவன் இடம் பெயர்ந்து 10,000 கிலோ மீற்றர்கள் பறந்து வந்து சீமையிலே வாழ முடிந்தது என்றால்,தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்தவன் உள்ளூரில் இடம் பெயர்ந்து வாழ முடியாதா? சுமந்திரனை நீங்கள் தூற்றுங்கள். பாரளுமன்றத்தில் யாராவது பிரபாகரனுக்கு பிறந்தநாள் சொன்னால் போற்றுங்கள். அது உங்கள் விருப்பம். சுமந்திரன் சொன்னார் என்பதற்காக நல்லதை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம்? ஒன்று நிச்சயம் கால் மேல் கால் போட்டு மல்லாக்காகப் படுத்திருந்து வானத்தை நோக்கி துப்பிக் கொண்டிருப்பவர்களால் ஈழத் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.9 points
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே? பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி. ஆரும் பப்பா மரத்தில் ஏற்றி விட்டால்,கண்ணை மூடிக் கொண்டு ஏறும் ஆள்தான்… செலென்ஸ்கி. இப்ப… நாரி முறிய, கீழே விழுந்து கிடக்கிறார். சுய புத்தியும் தேவை. இந்த திரியில் கண்ட வசனங்கள் இவை. 😂 இவை அத்தனையும் முகக்கண்ணீடி முன் நின்று தமிழர்கள் தம்மை தாமே கேட்டிருக்க வேண்டியவை அல்லவா! கச்சிதமாய பொருந்துது எமக்கும். 😂6 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வடக்குக் கிழக்கில் மலையகத் தமிழர்கள் வந்து குடியமர்வது நண்மையான விடயம். இது எமது இனச்செறிவை எமது தாயகத்தில் அதிகரிக்கும். மலையகத்தில் அவர்கள் வாழ்ந்தபோதிலும், எப்போதுமே சிங்களவர்கள் மத்தியில் வாழ்கிறோம் என்கிற அச்சமும், அடிக்கொருதடவை சிங்களவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற இனவன்முறைகளுக்கு அவர்கள் முகம் கொடுப்பதும் நடக்கிறது. ஆகவே அவர்கள் வடக்குக் கிழக்கில் குடியேறுவது அவர்களுக்குப் பாதுகாப்பானது. அடுத்ததாக, வடக்குக் கிழக்கில் காணப்படும் பெருமளவிலான அரச காணிகளில் தொல்லியல் திணைக்களமும், வன ஜீவராசித் திணைக்களமும் கட்டம்போட்டு அபகரித்துவரும் நிலையில், இப்பகுதிகளில் மலையகத் தமிழர்கள் குடியேறுவது என்பது சிங்கள பெளத்த மயமாக்கலினைத் தடுக்க உதவும். 80 களின் ஆரம்பகாலத்தில் இது நடந்திருக்கிறது. தமிழர் தாயகத்தின் எல்லைகளில் பல மலையகத் தமிழர்களும், யாழ்ப்பாணத் தமிழர்களும் குடியேறினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே இப்போதும் இது நடப்பதென்பது எமக்கு நண்மையே. நிச்சயமாக நடக்க வேண்டும்.6 points
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இதன் பின்னால் உள்ள இராஜதந்திர முஸ்தீபை புரிந்து கொள்ளும் இயலுமை ஈழத்தமிழருக்கு இருந்திருதால்…. சிங்களவன் ஒன்பதுவாயில்களிலும் பிதுக்கி விட்டிருக்கும் அவல நிலையை அவர்கள் அடைந்திருக்க மாட்டார்கள்.3 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மலையக தமிழ் மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவதற்கான பிரதான காரணமாகவும், பெரு விருப்பமாகவும் நாங்கள் சொல்லும் காரணம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் மிகவும் சரிந்து இருக்கும் சனத்தொகையையும், தமிழ் மக்களின் சனப் பரம்பலையும் அதிகரிக்கலாம் என்பதே. அதன் மூலம் எங்களின் நிலத்தையும், இருப்பையும், அரசியல் பலத்தையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதே இதன் பின்னால் இருக்கும் நோக்கம். இவ்வாறு குடியேற்றப்படும் மலையக தமிழ் மக்களின் நிலை என்னவாகும் என்றே நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். மலையக மக்கள் இதை விரும்புகின்றார்களா என்ற இன்னொரு பிரதான கேள்வியும் இருக்கின்றது. இந்த மக்கள் குடியேற்றப்படும் அல்லது குடியேறும் இடங்களில் அங்கு ஏற்கனவே இருக்கும் சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதே நிஜம். மூன்று தலைமுறைகளாக அவர்கள் புதிய ஒரு இடத்தில் இருந்தாலும், அங்கு அவர்கள் சமனான மனிதர்களாக பார்க்கப்படுவதில்லை. பறை என்னும் இசை பற்றி சமீப காலங்களில் நிறையவே உரையாடப்படுகின்றன. தமிழர்களின் ஆதி இசைகளில் இதுவும் ஒன்று என்கின்றோம். கொண்டாடப்பட வேண்டும் என்கின்றோம். பறையும், இசையும், அந்த மனிதர்கள் பற்றியும் சினிமாக்கள், கதைகள் கூட வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த 50 வருடங்களாக, போராட்ட காலம் உட்பட, இந்த பறை வாசிப்பவர்கள் கோவிலுக்கு வெளியே அதே இடத்திலேயே நின்று வாசிக்கின்றார்கள் என்று நாம் சொல்லத் தவறுகின்றோம். கோவில்களில் ஒரு தவில் அல்லது நாதஸ்வரக் கலைஞக்கும், ஒரு பறையை வாசிப்பவருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும் வேறுபாடுகளை நாம் காணத் தவறுகின்றோம். இந்த வேறுபாடுகளின் பின்னால் இருப்பது சமூகக் காரணிகளே. அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், நிற்கும் தோரணை, பார்க்கும் பார்வை இப்படி எல்லாமே வேறுபட்டவை. குடியேற்றப்பட்டால் இதுவே தான் மலையக தமிழ் மக்களுக்கும் ஆகும். ஆங்கிலேயர்கள் அவர்களின் தேவைக்காக இலங்கை, மலேசியா, பிஜி, கரீபியன், பர்மா என்று உலகெங்கும் தொழிலார்களாக இந்த மக்களை குடியேற்றினார்கள். பின்னர் கைவிட்டார்கள். இவர்கள் குடியேறிய எந்த தேசத்தில் வளமாக இருக்கின்றார்கள். இலங்கையில் தான் மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மையே. பிஜியில் அரச அதிகாரம் கிடைத்தது, இந்த மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த ஒரே காரணத்தால். அதுவும் பிஜியின் மற்றைய சமூகத்தால் ஒரு இராணுவப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. மற்றபடி அங்கும் இந்த மக்கள் ஒரு வளமான வாழ்வை வாழவில்லை. ஆங்கிலேயர்கள் தங்களின் நோக்கத்துக்காக பெரும் சுயநலத்துடன் இந்த மக்களை குடியேற்றியது போலவே, நாங்களும் இந்த மக்களை இன்று மீண்டும் குடியேற்ற நினைக்கின்றோம் அல்லவா. மலையக மக்களுக்கு முதலில் தேவையானது அவர்கள் வாழும் இடத்திலேயே சொந்த வீடும், அதனுடன் சேர்ந்த சிறிய நிலமும். அவர்கள் வளமாவதுஅங்கிருந்தே ஆரம்பிக்கும். அடுத்ததாக உயர் கல்வி அல்லது முறையான தொழில் பயிற்சிகள். மலையக, கொழும்பு, வட கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் இந்த திசையில் நகர்வது தான் மலையக மக்களுக்கு நிரந்தரமான, கௌரவமான ஒரு வாழ்வைப் பெற்றுக்கொடுக்கும். அந்த நாட்களில் ஊரில் பீட்டர் அம்மா என்று நாங்கள் கூப்பிடும் ஒருவர் ஒரு சின்னக்கடை வைத்திருந்தார். பாண் பணிஸ் போன்றன விற்பார். வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியில், வல்வெட்டித்துறைச் சந்திக்கு அருகாமையில், பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் அவரின் கடை இருந்தது. எனக்கு அவர் அடிக்கடி பணிஸ் கொடுப்பார். அது நான் அவருக்கு செய்யும் வேலைக்கு கிடைக்கும் கூலி, வேறு சில வேளைகளில் அது ஒரு பண்டமாற்று. கதையாகவே எழுதலாம். என்னையே ஒரு பணிஸை எடு என்று சொல்லிவிடுவார். எல்லா பணிஸும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதைப் போலவே தான் இந்த தமிழ் அரசியல்வாதிகள், எல்லோரும் ஒன்றே. 'பணிஸ் அரசியல்வாதிகள்..........'................3 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மன்னிக்கவும் அண்ணா... உங்களுடைய இந்த கருத்து பண்பற்ற ஒன்றாக எனக்குப் படவில்லை . நனைகிற ஆடு... குளிர் காய்கிற ஓநாய் ... உண்மையில் மலையகத்து மக்களின் யதார்த்த லயத்து வாழ்க்கை நிலை, இற்றை திகதி வரைக்கும் எஸ்டேட்ட தோரை, கங்காணி, ஆராச்சி (கிராம சேவகர்) இப்படி வரிசையாக அந்த அப்பாவி மக்களை மனிதர்களாக கூட மதிக்காமல் நடத்தும் நடப்பு உங்களுக்கு தெரியுமா? இன்று அனைத்தையும் இழந்து நிட்கும் அந்த மக்களை பற்றி பேசுகிற ஒரு தலைப்பில் நீங்கள் ஓநாய் வேட்டையில் புளங்காகிதம் அடைகிறீர்கள். மலையகத்து மண் வளமாக இருக்கிறது... அந்த மலையகத்தை பெருந்தோட்டமாக உருவாக்கிய மக்கள் இன்றுவரை வளமாக இருக்கிறார்களா? சுமந்திரனை கழுவி ஊத்த மலையக மக்களின் கண்ணீர் வேண்டாமே. 🤲3 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
முதலில் நடக்கக் கூடிய விஷயங்களை பற்றிப் பேசுவோம் வடக்கிலேயே காணிகள் அற்ற..... வீடுகள் அற்ற..... பல குடும்பங்கள் வீடமைப்புத் திட்டங்கள் மூலம் அதனப் பெற்று வாழும் இடங்களை பாருங்கள். மழைக்காலம் வெளியே செல்ல முடியாத அளவில் வெள்ளம் .....சரியான வீதிகள் இல்லை..... மின்சாரம் இல்லை...... போக்குவரத்து சுத்தமாக இல்லை இப்படியான நிலையில் இருக்கும் போது----- இன்னும் குடியேற்றம் வீடமைப்பு என்று வாய்ச சவடால் விடுவது சுமோவிற்கும் மனோவிற்கும் புதிதல்ல ஏற்கனவே முஸ்லீம்கள் ஓட்டுமடத்தில் வாழும் நிலையைப் பாருங்கள் முதலில் அவர்களுக்கு ஒரு சுகாதாரமான வாழ்க்கை வாழ ஆவன செய்ய வக்கில்லாத சுமோ........ மலையகத்தில் இருந்து மக்களை வரச் சொல்வது எப்படியான ஒரு கயமைத் தனமானது என்று எல்லோருக்கும் விளங்கும் 😂3 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வில்லவன், மலையக தமிழ் மக்களின் நன்மைக்கும், பாதுகாப்பிற்கும், எதிர்காலத்துக்குமாக, மலையக மக்களின் சுயவிருப்புடன் அவர்கள் வடக்கு கிழக்கில் குடியேற்றப்பட்டு, கௌரவத்துடன் நடத்தப்படுவார்கள் என்றால், அதைவிட நல்லதொரு விடயம் இருக்கமுடியாது. ஆனால் எனக்கு எம் மக்கள் மீது நம்பிக்கை இல்லை. எம் மக்களின் சில பிடிவாதங்கள், கண்ணுக்குத் தெரியாத அமைப்புகள் என்பன மனிதர்களை அவர்களின் பிறப்புகளினால் வரும் அடையாளங்களை வைத்து வகைப்படுத்துகின்றன. ஒரு மனிதன் ஒடுக்கப்படுகின்றான் என்பது கண்ணீரை வரவழைக்கின்றது. மார்த்தாண்டம் என்னும் ஊர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா என்று தெரியாது. கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ளது. உலகிலேயே மிகவும் கறுப்பு என்றால் மார்த்தாண்டக் கறுப்பு என்று சொல்வார்கள். அங்கிருந்து ஒரு பையன் இங்கு வேலை செய்ய வந்தான். டாடா கன்சல்டிங். மிகப் பெரிய விசயம். அந்தச் சமூகத்திலிருந்து அப்படி ஒரு பையன் இங்கு வருவது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. அதுவும் டாடா கன்சல்டிங் போன்ற நிறுவனங்களில் இருந்து வருவது. ஆனாலும் அவனை இங்கிருந்த தமிழ்நாட்டவர்கள் முற்றாகவே, வெளிப்படையாகவே ஒதுக்கினார்கள். வேலையில் என்னை மீறி அந்தப் பையனை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இது தமிழ்நாட்டு மக்கள், ஆனால் நாங்கள் வேறு என்று நாங்கள் நினைக்கக்கூடும். இந்த விடயத்தில் யாழ்ப்பாண மக்களும் இவ்வாறானவர்களே. இது தான் என்னுடைய பயம். என்னுடைய வேறு பல சொந்த அனுபவங்களும் உள்ளன. சிலவற்றை நான் எழுதினாலும், அப்படி நடந்திருக்கும் என்று பலர் நம்பப் போவதில்லை. ஆனாலும் இந்த விடயம் அடங்கிய பின், கதைகளாக எழுதுவதாக உள்ளேன். இவ்வகையான சமூக புறக்கணிப்புகள் இருக்காது என்றால், அந்த மக்கள் இந்தக் குடியேற்றத்தை விரும்புகின்றார்கள் என்றால், இதை வரவேற்கும் முதல் ஆட்களில் ஒருவனாக, உங்களைப் போலவே நானும் இருப்பேன். இது நான் இங்கு இணைந்தவுடன் எழுதிய ஆக்கங்களில் ஒன்று. சொந்த அனுபவமே.2 points
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
👍 இதைத் தான் நானும் எழுத நினைத்தேன்: "நாங்கள்" 2002 இல் கூட்டுத் தலைமை பாலசிங்கத்தார் மூலமாக எச்சரிக்கை கொடுத்த பின்னரும் போராடியது வீரம்! அதையே முழுமையான சுதந்திர நாடாக 30 ஆண்டுகள் வரை இருந்த உக்ரைனின் ஒரு தலைவர் செய்தால் "கோமாளித் தனம்". இதைச் சொல்வோர் ஆமி சுடாத ஷொட் கண்ணோட ஜீப்பில் திரிந்த காலத்திலேயே ஐரோப்பாவுக்குப் பறந்த ஆட்கள். இன்னும் சிலர், உயிர் காக்க ரஷ்யாவூடாக தப்பி, அமெரிக்காவில் வந்து லேண்ட் ஆன ஆட்கள்! இன்னும் என்னவெல்லாம் கேட்க வேண்டுமெண்டு எங்களுக்குச் சபிச்சிருக்குதோ தெரியேல்ல🤔!2 points
-
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
இன்றிலிருந்து நிழலி புட்டு சாப்பிடுவதையே அறவோடு கைவிடுகின்றான்.2 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
கோசான் சார்! நீர்மூழ்கி கப்பல்ல கப்டனாய் வேலை செய்யுறார் எண்டு நான் நினைக்கிறன்.😂2 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
நடக்காத முடியாத விடயத்தை பேசு பொருளாக்கி தன்னை பிரபல்யமாக்குவதில் சுமந்திரனார் ஒரு நடிகர் திலகம். பிரதேசவாதம் பிரதேசவாதம் என யார் அலறுபவர்கள் யாரென்று பார்த்தால் எல்லாம் சுமந்திரன் போராளிகள் தான்.அன்றைய ஆயுத போராட்டத்தை அடியோடு வெறுக்கின்றேன் என கூறும் சுமந்திரன் தான் அந்த அவலத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றார்.2 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மலையகம் சிங்களவர்களது தாயகம். அதில் குடியேற்றப்பட்டவகள் எமது மலையக உறவுகள். எந்த மலையக கிராமத்திலும் அவர்களை குடியேற சிங்களவர்கள் அனுமதிப்பதில்லை. லைன் ஒற்றை அறைக்குள் பல சந்ததிகள் குடும்பம் நடத்த வேண்டிய கலாச்சார கேடான நிலை. மலை சரிவுகளில் லைன்கள். 1000 ரூபாய் வேதனம். வெளிநாடுகாள் சொல்லும் modern slavery தான் மலையகத்தில் நடப்பது. அந்த நரகத்தில் இருந்து அவர்களை மீட்டு நாம் அவர்களுக்கு ஒரு கெளரவமான வாழ்வை கொடுத்த படி, வடக்கில் எம் இனப்பரம்பலையும் பேண முடியாதா? முடியும். உங்கள் ஊருக்கே வருகிறேன், உங்கள் வீடு உள்ள பகுதியில் கூட ஒரு வீட்டில் ஆள் இருந்து கொண்டு, பக்கதில் இருக்கும் 4 வெளிநாட்டாரின் வீட்டை ஆள் இல்லாமல் பாதுகாக்கும் நிலை இல்லையா? ஊர்காவற்துறை, கரம்பன் போனால் நிலமை இன்னும் மோசம். வெற்று காணிகளை ஒரு அளவுக்கு மேல் கட்டி வைக்க முடியாது. உண்ணா சொத்து மண்ணா போகும். அதை இனத்தின் நலனுக்காவது பாவிக்கலாம். அளப்பவன் பெயர்தான் அரசியல்வாதி. ஆனால் நான் இங்கே அதன் பின்னால் உள்ள கருத்தின் அவசியத்தைதான் வலியுறுத்துகிறேன். ஆகவேதான் …”சும்மா” என்ற பீடிகை. ஓம். இதை நிழலியும் சொல்லி உள்ளார். ஆனால் அப்போதும், இப்போதும் யாழ்பாண “பொன்னம்பலங்கள்” இதை எதிர்க்கவே செய்தார்கள்.2 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் அண்மையில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களை திரு நிராஜ் டேவிட் அவர்கள் காணொளிகள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில காணொளிகளில் அவர் அங்கு தங்கியிருந்த நாட்களில் பயணித்த பலவிடங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றுள் ஒன்று யூத மக்கள் மீது இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இனக்கொலை தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை பாரிய நினைவாலயம் ஒன்றினுள் காட்சிப்படுத்தியிருந்தமை பதிவுசெய்யப்பட்டிருந்தது. தம்மீது நிகழ்த்தப்பட்ட இனக்கொலை தொடர்பாக தமது சந்ததிகள் தொடர்ச்சியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதும், இனிமேல் அவ்வாறனதொரு இனக்கொலை தமது இனம் மீது நடக்காது தவிர்ப்பது எந்தளவு முக்கியமானது என்பதையும் தம் இன மக்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இந்நினைவாலயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கொல்லப்பட்ட அறுபது இலட்சம் யூதர்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்திய காலணிகள், அவர்களால் அணியப்பட்ட கறுப்பும் வெள்ளையும் சேர்ந்த வரிரியிலான ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய உணவருந்தும் பாத்திரங்கள், அவர்களின் புகைப்படங்கள் என்பவற்றோடு அவர்களை வதைப்படுத்திக் கொன்றுபோட்ட பல நாசிப் படைத் தளபதிகளின் புகைப்படங்களும் அங்கு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றைத் தனது காணொளிகளில் காண்பித்த டேவிட் அவர்கள், எமதினத்திற்கு நடந்த அக்கிரமங்கள், அழிவுகள் குறித்து நாம் பேசுவதை எம்மில் ஒரு பகுதியினரே தடுத்து வருவதையும், சிங்கள இனத்தோடு நாம் ஒன்றித்து வாழ்வதை இவ்வாறான "பழங்கதைகள் பேசுதல்" எனும் முயற்சி தடுத்துவிடும் என்றும், அது இனவொற்றுமையினைக் குலைத்துவிடும் என்றும் காரணம் கூறிவருவதையும் குறிப்பிட்டு அங்கலாய்த்திருந்தார். யூதர்கள் தமக்கு நடந்த அழிவினைத் தொடர்ச்சியாகப் பேசியும், காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும் வரும் நிலையில், நாமோ எம்மீது நடத்தப்பட்ட அழிவுகளை வேண்டுமென்றே மறுத்தோ அல்லது மறைத்தோ வாழத் தலைப்படுதல் ஈற்றில் எமது இருப்பிற்கே முடிவாய் அமைந்துவிடும் என்பதும் அவரது ஆதங்கமாக இருந்தது. இக்காணொளிகளின் இறுதிப்பகுதியில் தமிழ் மக்களை நோக்ல்கி வேண்டுகோள் ஒன்றினை அவர் முன்வைத்தார். அதுதான் நாம் அனைவரும், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது ஒரு குழுவாகவோ எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒருவடிவில் கட்டாயம் ஆவணப்படுத்தியோ அல்லது காட்சிப்படுத்தியோ தீரவேண்டும் என்பது. அவரது காணொளிகளைப் பார்த்தபோது அவர் கூறுவது எனக்குச் சரியென்றே பட்டது. ஏனென்றால், எம்மீது நடத்தப்பட்ட அநீதிகளை நாமே பேசவோ அல்லது காட்சிப்படுத்தவோ மறுப்பின், வேறு யார்தான் இதைச் செய்யப்போகிறார் எனும் கேள்வி எனக்குள் வந்தது. ஆகவேதான் எம்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்கள் தொடர்பான எனது அனுபவங்களை இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறேன். இத்தளத்தில் இருக்கும் ஏனையவர்களும் தமது தனிப்பட்ட அனுபவங்களை இங்கு பகிருமாறும் வேண்டிக்கொள்கிறேன்.2 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
பின்னை என்ன? அவன் அவன் வீடு அவனுக்கே உரித்தானது. வெள்ளம் வந்தது... புயல் வந்தது... இனியும் வரப்போகுது..... எல்லாரும் மேட்டுப்பக்கம் போய் வேறை வீடுகளில் இருங்கோ எண்டால் எப்படி? இருக்கும் காணிகளை பங்கிட்டாலே அவர்களுக்கு ஒரு வளமான வாழ்வு அவர்களின் தாயகத்திலேயே (ஆம் மலையகம் அவர்களின் தாயகமே) கிடைக்கும் அவர்கள் விரும்பினால் வரலாம்.... வடக்கு மக்கள் உதவிகள் செய்யலாம் ஆனால் அவர்களை சும்மா பலிக்கடாவைப் போலப் பாவிக்க முடியாதல்லவா .... அனுராவை அசர வைக்கலாம் எண்ட நோக்கில் சுவும் மனோவும் வெளிக்கிட்டவை பிசுபிசுத்துப் போயிட்டுது இப்ப கப்சிப். முதல்ல மனோவை வந்து சுமந்திரண்டை காணியிலை இருக்கச் சொல்லுங்கள் 😁2 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இது விடயத்தில் எனக்கும் சிலபல அனுபவங்கள் உண்டு ரசோதரன் அண்ணை. எமது பகுதி மக்களுடைய புறக்கணிப்பை ஒரு விதமான மனப் பிறழ்வாகவே பார்க்க முடிகிறது ஆழ்மனத்தில் புரையோடியுள்ள இவ்வாறான கருதுகோள்களிலிருந்து அவர்கள் வெளிப்படுவதற்கு சில தலைமுறைகளோ இல்லை தன்னலத்திலிருந்து வெளிப்பட்டு வாழ்க்கையை நோக்கக்கூடிய மன முதிர்ச்சியோ தேவை. எவ்வளவோ படித்தும் அனுபவமிக்கவர்களாகவும் உள்ளோருமே தம் மனம் எனும் வட்டம் சிறு கிணற்றளவேயாய்ச் சமைத்துக் கொண்டு அதனுள்ளே தாவும் தவளைகளாய் வாழ்தல் யாழ்ப்பாணத்தில் மிக அதிகம்.1 point
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
எவ்வளவுதான் தான் கல்வி அறிவு இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் பட்டறிவு தான் கை கொடுக்கும்....😅 என்ற வசனம் சுமந்திரனின் கருத்திற்குப் பொருத்தமானது என்பதற்கான சில ஆதாரமான விஷயங்களை சொன்னால்...... இவர் கீழே மேலே நடுவிலே என்று ஆர்ப்பரிக்கின்றார்😂1 point
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
Pedo க்களை ஆதரித்து யாழில் கருத்து எழுதும், பெட்டியில் ஏறும் வயதில், மகள் வயது நடிகைகள் மீது ஜொல்லு வழிக்கும், பீடோ ஆதரவு மாமாக்களிடம் அரிப்பு பற்றிய தகவல்கள் அபரிமிதமாக இருப்பது வியப்பல்ல. ஆனால் எமது விடுதலை போராட்டத்தையும், இதே போல் “இந்தியாவின் துண்டுதலால், புலிகள் “அரிப்பு” எடுத்து நடத்தினார்கள் என எழுதுவோரும் உளர். தேசிய இனங்களின் சுயநிர்ணயத்துக்கான “வேட்கை” சகல இனவழி தேசிய இனங்களுக்கும் ஒன்றே. எமக்கு வந்தால் விடுதலை வேட்கை, உக்ரேனியனுக்கு வந்தால் அரிப்பு என்பது வடிவேல் ஜோக்1 point
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வடகிழக்கில் நடந்தது ஒரு ஆயுதப் போராட்டம்... பல வருடங்கள் இது தொடர்ந்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் ஒரு முடிவுக்கு வரும்.. வந்தது!! ஆனால் மலையகத்தில் நடப்பது வாழ்நாள் போர் 200 ஆண்டு காலம் ஆகியும் முடிவு இல்லாத வாழ்க்கை போர். ஒரு இனத்தை இன்னொரு இனம் அழிக்கும் போர். 200 ஆண்டு காலம் என்பது எத்தனை தலைமுறைகள்? அங்கேயே அந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்து அங்கேயே உழைத்த மக்களுக்கு உரிமை கிடைக்காது என்பது எப்படிப்பட்ட கொடுமை. மாட்டுக்கு கொம்பு முளைக்கும் முன்பே நம்மை முட்டாமல் இருக்க, அது பிறந்ததும் சூட்டுக்கோளால் கொம்பு முளைக்கும் இடத்தில் தீச்சு விடுவதும் அடுத்தது பருவத்துக்கு வரும் முன்னால் காய் அடித்து ஆண்மை நீக்கி வேலையில் கட்டி வசக்கிவிட்டால் வாழ்நாள் பூராவும் அதே வேலை வாங்கலாம். உரிமையை அபகரிப்பதும் காய அடிப்பதும் ஒன்றுதான். அந்த மக்கள் தொகையை அதிகமாகாமல் தமிழினம் பெருகாமல் பார்த்துக் கொள்வதும் ஒன்றுதான். பிரித்தானிய காலனித்துவவாதிகளால் பிழைப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை அவர்கள் அடைந்த வாழ்வியல் துயங்கள் அதற்கான காரணிகளான தேசிய புறக்கணிப்பு, அரசியல் புறக்கணிப்பு, குடியுரிமை பறிப்பு, நாடற்ற நிலை, நாடு கடத்தல், பதிவு குடியுரிமை, வசிப்பிட குடியுரிமை, திட்டமிட்ட கருத்தடை, கூடிசன குறைப்பு, நிலமற்ற நிலை, வீடற்ற நிலை, பொருளாதார ஒடுக்குமுறை, கல்வியொடுக்குமுறை, உள்ளூர் ஆட்சிக்குள் உள்வாங்காத ஒதுக்கு முறை, இம்மக்களின் வாழ்விடங்களை வணிக நிலம் ஆக்கி கம்பெனிக்காரர்களுக்கு நூறு ஆண்டு கால குத்தகைக்கு கொடுத்து விட்டமை, இம்மக்கள் வாழ்ந்த பல பெருந்தோட்டங்களை சுவைகரித்து சிங்கள மக்களுக்கு சிறு தோட்ட உடைமையாளர்களாக கொடுத்து விட்டமை, இதனால் வாழ்விடங்கள் இழந்து வசிப்பிட தொழிலாளர்களாக காலனித்துவவாதிகள் கட்டிப்போட்ட அதே 200 ஆண்டுகால வரிசை லயங்களில் வாழும் நிலை என பல்வேறு நெருக்கடிகளை இன்றும் அந்த மக்கள் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் இவர்கள் வாழும் நிலங்களை கிராமங்களாக கூட அங்கீகரிக்காமல், இம்மக்களை கிராம மக்களாக கூட ஏற்றுக் கொள்ளாமல், நாட்டு மக்கள் என்று தேசிய அந்தஸ்தை வழங்காமல் தோட்ட மக்கள் "வத்து கம்கரு" என்றே புறக்கணித்து வைத்திருக்கின்றமை என இத்தனை அரசியல் தேச வஞ்சனைகளுக்கும் முகம் கொடுத்து உரிமைக்குப் போராடாமல் மௌனித்து 200 ஆண்டுகளை வீணடித்துவிட்டு வந்தேறி குடிகளாக வருடங்களை எண்ணிக்கொண்டு வாழாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்துக்கு ஈழ நிலத்தின் பூர்வீக மைந்தர்கள் என்ன செய்யலாம்; இவர்களது வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையை எப்படி அனுகலாம்? ~ ஒப்பாரி கோச்சி புத்தகத்தை வாசித்து... என்னை பாதித்த வரிகளுடன் ...1 point
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
எல்லாவற்றையும் வாசிக்க நேரம் போதவில்லை இணைப்புக்கு நன்றி1 point
-
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
வீட்டில் நான்தான் சமையல் என்பதால் எனக்கு ஆபத்து இல்லை.1 point
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஒரு அருமையான கருத்தை……. சுமன் சொன்னார் என்பாதால் மட்டுமே எதிர்க்கும் அளவுக்கு….. சுமன்லவர்ஸுக்கு காதல் ஜுரம் முற்றி விட்டது என்பதை இந்த திரி காட்டி நிற்கிறது. போற போக்கில் சுமன் நாளைக்கு கருணா துரோகி எண்டு சொன்னால், இல்லை அவர் சொக்கதங்கம் எண்டு எழுதும் அளவுக்கு காதல் முற்றி விடும் போல உள்ளது.1 point
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே? இந்த 26 ஆம் புலிகேசியை ஜனாதிபதி ஆக்கியதே உக்ரைனை அழிக்கத்தானே ........ அவர் அதை செவ்வனவே செய்து முடித்துள்ளார். அந்த வகையில் பாராட்டிடலாம். கடந்த 3 வருடமாக முழு பலத்தையும் பாவித்து முக்கிய மேற்கு ஆதிக்கம் ரசியாவுடன் மோதி தனது தோல்வியை ஒப்புக்கொண்டது என்பதுதான் இதில் முக்கிய செய்தி. ரசியாவையும் சீனாவையும் ஒரு வழிக்கு கொண்டுவர ஒரு கடடத்தில் ஈரானை அழித்து வெற்றிபெறலாம் என்று எண்ணினார்கள் அதற்கும் ஈரான் இஸ்ரேலுக்கு கொடுத்த அடியுடன் மூடி கட்டிக்கொண்டு கிளம்பி விடடார்கள். ஆனால் இந்த யுத்தத்தை உருவாக்கிய மேற்கு பணக்கார வர்க்கம் தனது இலக்கை அடைந்து வெற்றியை கண்டுள்ளார்கள். அவர்கள் இலக்கு ஆயுத விற்பனை .... உலகில் உணவு பற்றாக்குறையை உண்டுபண்ணுவது, (இரண்டிலும் வெற்றிதான்) அதன் மூலம் மோன்சடோ பேயர் ( Monsanto, Bayer ) என்ற இரண்டு மகா கம்பெனிகளும் உலகம் பூராக விவசாயத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவருவது. அவர்கள் எண்ணம் அமெரிக்காவிலேயே பெரும் வெற்றியை கண்டிருக்கிறது அமெரிக்க விவசாயிகள் பெரும் கடனில் மூழ்கி இனி இவர்களிடம் சரண் அடைவது என்பதை தவிர்த்து வேறு வழியின்றி பரம்பரை விவசாயிகள் விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். முன்புபோல் விவசாயிகளால் இனி லாபம் பார்க்க முடியாது ....... இந்த இரண்டு கொம்பனிகளின் கொத்தடிமைகளாக இருந்துகொண்டு அவர்களின் விதைகள் உரங்களை கொள்வனவு செய்து அவர்களுக்கு உழைக்கும் ஒரு துரதிர்ஷ்ட்ட நிலையில் நிற்கிறார்கள். சமகாலத்தில் சீனா தென்னமெரிக்க நாடுகளில் விவாசாயத்தை முன்னெடுத்து பெரும் வெற்றியை கண்டுள்ளது இது ஆப்ரிக்காவிட்ற்கும் விரிவாக்கம் செய்யப்படலாம் ஆனால் மேற்கின் அடிமைகளான நைஜீரியா ருவாண்டா தென் ஆப்ரிக்கா அதை முறியடிப்பார்கள். தென் அமெரிக்காவில் ஒரு கலகத்தை உண்டுபண்ணி அமெரிக்க இராணுவ தளங்களை நிறுவுவதன் மூலம் சீனவை விரட்டிடலாம் எனும் நோக்கில்தான் இப்போ வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்த தயாராகி வருகிறார்கள். மீடியாக்களின் உதவியுடன் இப்போ மூளைச்சலவை தொடங்கி வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது. இனி வெனிசுவேலா என்ற நாடே மேற்கை குறிப்பாக அமெரிக்காவை அழிக்கத்தான் தோன்றியது போன்ற பரப்புரையை இங்கிருக்கும் ஆடுகள் நம்ப தொடங்கும்போது அது நடக்கும் என எண்ணுகிறேன் அதன் மூலம் இரண்டு இலக்குகள் எடடபடும் ஒன்று வெனிசுவேலாவின் எண்ணெய் அவர்கள் சொத்தாக ஆகும் மற்றது தென்னமெரிக்காவில் ஒரு குழப்ப நிலையை உருவாக்கி விவசாயத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவது.1 point
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
60, 70 களில் புங்குடுதீவில் ஒரே snow அடிக்கும். அதனால்தான் அந்த ஊரவர்கள் பின்னர் பாரிஸ், இலண்டன், கனடா என வந்து காலூன்றியதை இலகுவாக்கியது. நீங்கள் வேற… விண்டர் டைம் வெய்யில் காயலாம் எண்டு இலங்கை போய்…ஊருக்கே போக முடியாமல்…வெல்லம்பிட்டியவில் வெள்ள நிவாரண அதிகாரியாக காலத்தை கடத்தி விட்டு நாடு திரும்பி உள்ளேன்😂 பலர் மாவீரர். இது யதார்த்தம் அல்ல. மையவாதம். இதைதான் இந்த திரியில் பலர் மறைமுகமாவும் கக்கி உள்ளார்கள். இந்த மையத்தை அடக்கும் வரை உய்ய வழியே இல்லை. அருச்சுனா போன்ற பொய்மான்களின் பின்னால் ஓடி கொண்டே இருக்க வேண்டியதுதான்.1 point
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி.1 point
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே?1 point
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 64 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 64 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை புத்தர், கேவத்தா (கேவாத்தா) வுக்கு கூறிய கேவத்தா சுத்தத்தில் (Kevatta (Kevaddha) Sutta), தெளிவாகக் தன் நிலைப்பாட்டை கூறியிருக்கிறார். புத்தர், தான் மறைக்கப்பட்ட, இரகசியமான மற்றும் மர்மமான, குறிப்பாக இயற்கைக்கு அப்பாற்பட்ட [அமானுஷ்ய] சக்தியின் அற்புதங்களையும் தொலைமனமுணர்தலையும் [டெலிபதியின்] அதிசயத்தையும் [the miracles of psychic power and miracle of telepathy.] விரும்பவில்லை, நிராகரிக்கிறேன் மற்றும் வெறுக்கிறேன் என்று தெளிவாகக் கூறுகிறார். அது மட்டும் அல்ல, புத்தர் இரக்க குணம் கொண்டவர், மனிதர்களிடையே அரிதாகவே காணப்பட்டார். அவரது அனுதாபம், அனைத்தும் தழுவியதாகவும் தன்னிச்சையாகவும் இருந்தது. புத்தரின் போதனையானது அனைத்து உயிர்களிடத்தும் உலகளாவிய அன்பு மற்றும் இரக்கத்தின் கருத்தாக்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. வத்தூபம சூத்தம் (மஜ்ஜிம நிகாயம் / Majjhima Nikaya 7) என்றால், ஒரு பொருளுக்குப் (வத்து) ஒப்பீடு (உபமா) என்பதாகும். சங்கத்தின் ஒரு உறுப்பினரான உத்திய சந்தி மிகவும் தற்பெருமை கொண்டவனாக இருந்தான். புத்தர் அவருக்கு இந்த உபதேசத்தை வழங்கினார். இதில் முக்கிய கருத்து என்னவென்றால்: தர்மத்தை உணர மனம் தூய்மையாக இருக்க வேண்டும். தற்பெருமை, ஆசை, கோபம் ஆகியவற்றை விடுதல் வேண்டும். புத்திசாலித்தனம் மட்டும் போதாது, நல்ல பண்புகளும் வேண்டும். நல்ல எண்ணங்களைக் கொண்டால் நல்ல வாழ்க்கை கிடைக்கும். என்பதாகும். அதேபோல, லக்ஷண சூத்தம் (Digha Nikaya 30) என்றால், லக்ஷண என்றால் அம்சங்கள் அல்லது தனிப்பட்ட இலட்சணங்கள் என்பதாகும். இந்த சூத்தத்தில், புத்தரின் 32 விசேஷ உடல் அம்சங்கள் பற்றிய விளக்கத்தைக் காணலாம். புத்தர் ஒரு மாபெரும் ஒளிவாய்ந்த தோற்றத்தைக் கொண்டிருந்தார். அவருடைய அழகிய மற்றும் விசேஷமான உடல் அமைப்பு பலரையும் கவர்ந்தது. துறவிகள், அரசர்கள், மற்றும் பொதுமக்கள் இது குறித்து கேட்டபோது, புத்தர் இந்த 32 இலட்சணங்கள் அவருடைய முந்தைய நல்ல கர்மங்களின் விளைவாக வந்தன என்று கூறினார். சுருக்கமாக, லக்ஷண சூத்தம் எதையும் அமானுஷ்யமாக பார்க்காமல், நல்ல செயல்களின் மூலம் உயர்ந்த நிலை பெறலாம் என்று உணர்த்துகிறது. புத்தர் ஒரு மாமேதாவியாக, மாபெரும் போதகராக ஆனது அவரது நல்ல மனநிலை, தர்ம வழி, மற்றும் கடந்த பிறவிகளில் செய்த கர்மங்களின் பலனாகும் என்கிறார். பௌத்தம் உலகின் மிகப்பெரிய மதங்களில் ஒன்றாகும் என்பதையும், 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மேலும் அவரின் உண்மையான போதனை வழியில், மனித வாழ்க்கை துன்பம் நிறைந்தது என்றும், தியானம், ஆன்மீகம் மற்றும் உடல் உழைப்பு மற்றும் நல்ல நடத்தை ஆகியவை ஞானம் அல்லது நிர்வாணத்தை அடைவதற்கான வழிகள் என்றும் பௌத்தர்கள் நம்புகிறார்கள். இதைத்தான் புத்தபிக்குகள் கடைபிடிக்கவேண்டும். ஒழுகவேண்டும். சாதாரண பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டும். அப்படி எத்தனை புத்த பிக்குகளை இலங்கையில் பர்மாவில் காண்கிறீர்கள்? அப்படியானால், அவரின் இலங்கைக்கான மூன்று வருகைகளிலிருந்தும் நீங்கள் என்ன நல்ல நடத்தைகளைக் கற்றுக் கொண்டீர்கள்? இது உண்மையான புத்தரின் வருகையா அல்லது வெவ்வேறு நோக்கங்களுக்காக இட்டுக்கட்டப்பட்டதா என்பதை தயவு செய்து சிந்தித்து முடிவு செய்யுங்கள்? இன்னும் ஒரு வரலாற்று உண்மையையும் நான் கூறவேண்டும். கடவுளைப் பற்றி அவர் [புத்தர்] அதிகமாக எதுவும் சொல்லவில்லை. அதோடு, தானே கடவுள் என்றும் அவர் ஒருபோதும் உரிமை பாராட்டவில்லை. பார்க்கப்போனால் தன் சீடர்களுக்கு அவர் இப்படி சொன்னதாக குறிப்பிடப்படுகிறது: “ஒருவேளை கடவுள் என்று ஒருவர் இருந்தாலும், அவருக்கு என்னுடைய அன்றாட வாழ்க்கை மீது அக்கறை இருக்குமென்று கற்பனை செய்யக்கூட முடியவில்லை, மனிதனுக்கு உதவி செய்ய விருப்பமுள்ள அல்லது அதற்குரிய சக்தியுள்ள எந்தக் கடவுளும் இல்லை.”நிச்சயமாகவே கடவுள் நம்பிக்கையை கற்பிக்கவுமில்லை, அது அவசியம் என்று சொல்லவும் இல்லை” என்கிறார். புத்த மதத்தை பின்பற்றுகிற சராசரி நபர்கள் இப்போது விக்கிரகங்களையும் நினைவுச் சின்னங்களையும், கடவுட்களையும் பேய்களையும், ஆவிகளையும் முன்னோர்களையும் வணங்குவதிலேயே மூழ்கிப்போயிருக்கிறார்கள்; அதோடு புத்தர் கற்பிக்காத அநேக சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிப்பதிலுமே மூழ்கிப்போயிருக்கிறார்கள். இலங்கையில் இயக்கர்கள், நாகர்கள், என்ற இரு குழுக்கள் இருந்ததாகவும், இயக்கர்கள் எலு மொழியையும் நாகர்கள் தமிழையும் பேசியதாகவும் எலு மொழி பாளியுடன் கலந்து சிங்கள மொழியாக மாறியதாகவும் ஒரு கருத்து உள்ளது. ஆனால் எலு, பாளியுடன் கலந்ததற்கும் அது சிங்களமாகப் பரிணாமம் அடைந்ததற்கும் எந்தவொரு தர்க்கரீதியான வரலாற்று ஆதாரங்களும் காணப்படவில்லை. 12ம் நூற்றாண்டுக் காலப் பகுதிவரை தமிழ் - சிங்களம் என்ற மொழி ரீதியான முரண்பாடு இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்களை யாரும் குறிப்பிட்டதில்லை. 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்டி அரசனால் சிறைப் பிடிக்கப்பட்ட Robert Knox என்ற ஆங்கிலேயர், அங்கிருந்து தப்பி வடக்கு நோக்கிச் சென்ற போது அனுராதபுரத்தை அடைந்தார். பின்னர் 1681இல Historical Relation of the Island of Ceylon என்ற நூலை அவர் வெளியிட்டார். இந்த நூலில், அனுராதபுரத்தை அடைந்த Robert Knox அந்த மக்களுக்குச் சிங்களம் விளங்கவில்லை என்றும், அவர்கள், தன்னை தலைவனிடம் தான் கூட்டிச் செல்லப்பட்ட போது, அவனுடன் உரையாடுவதற்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவி தேவைப்பட்டது என்றும் அங்கிருந்தவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் எழுதியிருந்தார். இலங்கையில் பௌத்த மதத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் அனுராதபுரத்திலேயே சிங்களமொழி பரந்தளவில் பேசப்படாது இருந்திருக்குமானால், இந்த மொழியின் பரந்துபட்ட வளர்ச்சி என்பது மிகவும் அண்மைக் காலத்துக்குரியது என்று புலனாகின்றது Part: 64 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Please note that In the Kevaddha Sutta (Digha Nikaya Sutta 11 in Maurice Walshe’s translation), The Buddha says, He dislikes, rejects and despises the miracles of psychic power and miracle of telepathy. The Buddha was possessed of a quality of compassion, seldom seen among men. His sympathy was all embracing and spontaneous. The Buddha’s teaching is based and built on a conception of universal love and compassion for all living beings. In the Vatthupama Sutta (Majjhima Nikaya 7) the Buddha says, “he abides pervading that all-encompassing world with a mind imbued with loving kindness, abundant, exalted immeasurable, without hostility, without ill will. He abides pervading one quarter with the mind imbued with compassion.” and “In the Lakkahan Sutta (Digha Nikaya sutta 30) it is stated, “the Tathagata rejects harsh speech, abstains from it, spoke what was blameless, pleasing to the ear, agreeable, reaching the heart, urbane, pleasing and attractive to the multitude.” Please note that Buddhism is one of the world's largest religions and originated 2,500 years ago in India. Buddhists believe that the human life is one of suffering, and that meditation, spiritual and physical labor, and good behavior are the ways to achieve enlightenment, or nirvana. If so, What good behaviors you have learnt from all three visits. Please think and decide Whether this would be a real Buddha's visits or fabricated one for different purposes ? நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 65 தொடரும் / Will follow துளி/DROP: 1941 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 64 https://www.facebook.com/groups/978753388866632/posts/32842378748744015/?1 point
-
கருத்து படங்கள்
1 point
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஏன் அழைக்கக் கூடாது? மலையகத் தமிழர் என்பது ஒரு தாழ்வான பெயர் என்று இருந்தால் தான் அப்படி அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். அது அவர்கள் பிறந்து வாழ்ந்த பிரதேசம் என்ற அர்த்தத்தில் சொன்னால் தவறு அதில் இல்லையே? வெளிநாட்டில் வளரும் எங்கள் அடுத்த சந்ததியை "பிரெஞ்சுக் காரன், ஜேர்மனியன், அமெரிக்கன் என்ற" தேசிய அடையாளங்களினால் அழைக்கலாம். அதே வேளை ஆசிய, தென்னாசிய, (சில சமயம்) தமிழ் என்ற வம்சாவளியைக் குறிப்பிட்டும் அடையாளப் படுத்துகிறார்கள் அல்லவா? 🤣 ஓம்.."அங்கே பார்! மேலே பார்! கீழே பார்!.. உரையாடலுக்கு மையமான கருத்தை மட்டும் பார்க்காதே! " இந்த ட்ராபிக் கான்ஸ்ரபிள் வேலையை முன்னர் தமிழக அரசியல் திரிகளில் மட்டும் பார்த்தோம், இப்போது எல்லா திரிகளிலும் இந்த வேலையைச் செய்வோர் இருக்கிறார்கள் போல😎!1 point
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
@goshan_che யின் குளிர்கால தூக்கம் (Winterschlaf) இடையில் சுமந்திரனால் குழம்பி விட்டதா. 😂 🤣1 point
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இங்கே பேசப்படுவது ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுதது தானே தவிர.... மேலும் மலையகத்தின் வளம் மற்றும் மண் சார்ந்த தெளிவுள்ளவர்கள் அவர்களை காய்ந்த நிலப்பரப்பு களில் குடியேற்ற நினைக்கவே மாட்டார்கள்.1 point
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
உங்கள் கருத்தை பார்த்தபின் சற்று மயக்கம் ஏற்படுகின்றது. ஆனால், இணையத்தில் தேடுதல் செய்தபோது பிரஜைகள் குழு தலைவர்கள், உறுப்பினர்கள் இந்திய அமைதிப்படை காலத்தில் கொலை செய்யப்பட்டமை பற்றிய தகவல்கள் உள்ளன. இங்கு ரஞ்சித் கூறும் சம்பவம் பற்றிய தகவலும் உள்ளது. அதில் ஒன்று அவர் ஈ பி ஆர் எல் எவ் இயக்கத்தினால் படுகொலை செய்யப்பட்டார் எனவும் அவர்கள் கடத்திய ஒரு தமிழ் பெண், மற்றும் ஒரு முஸ்லீம் பெண் விடயத்தில் மனித உரிமை ஆணைக்குழு கவனத்திற்கு அவர் கொண்டு சென்றதே கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என உள்ளது. தவிர இன்னோர் காரணத்திற்காக அதே பிரதேசத்து பிரஜைகள் குழு துணை தலைவரும் கொலை செய்யப்பட்டார் எனவும் தகவல் உள்ளது. மேலதிகமாக பின்னர் பல வருடங்களின் பின் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களும் இதே தேவாலயத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார் எனவும் தகவல் தெரிவிக்கின்றது. இந்திய அமைதிப்படை பிரஜைகள் குழுவை உருவாக்கினால் அதன் தலைவர்கள், உறுப்பினர்கள் ஏன் இந்திய அமைதிப்படை பாதுகாப்பும் கொடுத்து ஆயுதங்களும் வழங்கிய ஆயுத குழுக்களினால் படுகொலை செய்யப்பட வேண்டும்? நிதர்சனம் தொலைக்காட்சி 1986, 1987 ஆண்டுகளில் பிரபலம். யாழ் நகர் பகுதி மக்களுக்கு அது பார்க்கக்கூடியதாக அமைந்தது. நிதர்சனம் தொலைக்காட்சியை நான் அப்போது தவறாமல் பார்ப்பேன். அதன் தகவல்களின் அடிப்படையிலேயே பிரஜைகள் குழுவின் தோற்றம் பற்றிய கருத்தை கூறினேன்.1 point
-
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
கோத்தபாய கொர்நோவுக்கு எதிராக அந்த மந்திரித்த தண்ணியை இலங்கை ஆறுகளில் கலந்த முட்டாள்தனத்தை விமரிசித்த போது புலியை அடக்கின மனுஷன் கொர்னோவையும் வெல்வார் என்று இதே யாழில் கோத்தபாயவுக்கு புகழ் பாடியோருக்கு இப்பவும் உண்மையை சொன்னால் சுடும்தானே .😁1 point
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மலையக தமிழ் மக்களின் இழவு வீட்டில் ஒரு சதமும் செலவழிக்காமல் வாயால் வடை சுடுகிறார் சுமத்திரன் அவருக்கு இங்கு கொஞ்சம் தார தப்பட்டையுடன் பொழிப்புரை ஆற்றுகினம் அரசியல் சூனியங்கள் . இங்கு உண்மையான கரிசனை மலையக மக்களின் மேல் இல்லை சுமத்திரன் எப்படியாவது என்ன பொய் சொல்லியும் தேர்தலில் ஒரு முறையாவது வென்று விடனும் அதுதான் இங்குள்ள சுமத்திர விசுவாசிகளுக்கு முக்கியம் .1 point
-
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
ஒரு யாழ்பாணத்து இந்து சாமியாரின் பேட்டி பார்த்தேன் அவர் சொன்னார் அநுரகுமார திசாநாயக்க ஒரு அவதாரம் . ஆகவே மிதிப்பு தொடரும் 😂1 point
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் தமிழர்கள் சன தொகை குறைந்துவிட்டது என்று மூக்கால் அழுதவர்கள் ஆனால் அந்த மக்கள் இராவணன் பூமியான வடக்குக்கு வந்து வாழ முடியாது.1 point
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இன்னும் ஒரு point விட்டு விட்டீர்கள் ... அப்படியே மலையக தமிழர்களோடு சேர்த்து கொஞ்ச சிங்களவனும், முஸ்லீமும் கூடவே குடியபெயர்ந்து வடக்கு கிழக்குக்கு வருவார்களாம் அது உங்களுக்கு ஓகேயா என்றும் கூட கேள்வி கேட்கிறார்கள்... யாழ்ப்பாணத்தின் வாசல் நாவற்குழியில் 6௦ சிங்கள குடும்பங்களும் , மிகப்பெரிய விகாரையும், இப்போது அவர்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதற்கான விண்ணப்பமும் இருப்பதை கண்டுகொள்ள மாட்டார்கள்.1 point
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
சும்மா ஒரு பேச்சுக்கு மனோவும், சுமனும் சொன்னதுக்கே….. யாப்பணீஸ் இந்த திரியில் படுறபாட்டை பார்த்து சிரிப்புத்தாளவில்லை😂. வாழ்வாதாரம் இல்லையாம்…மலையகம் அவர்களின் தாயகமாம்…அதாம்….இதாம்…😂 கரவு புத்தியை எப்படி எல்லாம் பெயிண்ட் அடித்து மறைக்க வேண்டி கிடக்கு 😂. இன்னும் ஒருவர் பிரதேசவாதம் எல்லாரிடமும் இருப்பதுதானாம்😂… நீங்கள் வெளிநாட்டில் வந்து தட்டு தூக்கி, 20 வருடத்தில் தொழிலதிபர்கள் ஆக முடியும் என்றால் ஏன் இந்த மக்கள் வடக்குக்கு வந்து வாழ முடியாது? நீங்கள் இரந்த போது வெளிநாட்டு அரசும் மக்களும் உங்களுக்கு தந்த அனுசரணையில் 10% நீங்கள் இவர்களுக்கு கொடுத்தாலே போதும். பிகு வடக்கை தமிழ் மாகாணமாக வைத்திருக்க இதுவே கடைசி உத்தி. ஆனால் தான், தனக்கு என்று மட்டுமே சிந்திக்கும் சுண்ணாம்பு மூளைகளுக்கு இது விளங்காது. ஆகவே இந்த பஸ்சும்…மிஸ்1 point
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
பிரஜைகள் குழு இந்திய இராணுவ காலத்தில் உருவாக்கப்பட்டதாக கருதுகிறேன் (சரியாக நினைவில்லை), இந்த பிரஜைகள் குழு பெரிதும் அந்தந்த ஊரில் உள்ள பிரபலமானவர்களை கொண்டது என கருதுகிறேன், 90 களில் இலங்கை இராணுவத்துடன் போர் ஆரம்பித்த போது இலங்கை இராணுவம் கிழக்கில் இடங்களை புலிகளிடமிருந்து கைப்பற்றி வந்த போது இந்த பிரஜைகள் குழுவினர் முஸ்லீம் மக்களுக்கு இணையாக வாள்களுடன் தமிழ் மக்களுக்கெதிரான வன்முறையில் கிழக்கில் ஈடுபட்டதாக கேள்விப்பட்ட நினைவுள்ளது (நீண்டகாலமானதால் நினைவில்லை). வடமராட்சியில் ஒரு பிரபலமான ஒரு ஆசிரியர் ஒரு ஊரின் பிரஜைகள் குழு தலைவராக இருந்தார், அவர் இந்திய இராணுவத்துடன் நல்ல உறவு நிலையில் இருந்தார், இந்திய இராணுவ வெளியேற்றம் உறுதி செய்யப்பட்டிருந்த வேளை 1989 இறுதியில் அல்லது 1990 ஆரம்பத்தில் (சரியாக நினைவில்லை) ஈரோஸ் அமைப்பு புலிகளுடன் உடன்பாடு ஏற்படுத்த முயற்சி செய்தனர் (கடுமையான முரண்பாடு ஏற்பட்டிருந்தது அக்காலகட்டத்தில்) அப்போது அவரது வீட்டில் வைத்தே அந்த உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தை இந்திய இராணுவ கெடுபிடிகளுக்கிடையே இடம்பெற்றிருந்தது, அப்போது அந்த பிரஜைகள் குழு தலைவரை 4 வருடத்திற்கு முன்னர் கடற்புலிகளின் பொறுப்பாளர் சூசை (அவர் அப்போது வடமாராட்சி பொறுப்பாளராக இருந்த போது) அவரை எச்சரித்திருந்தாக கதைத்தார்கள் (அது ஒரு டெலோ விவகாரம் என நினைக்கிறேன் மறந்துவிட்டேன்), பின்னாளில் இந்திய இராணுவம் படுகொலை பற்றி புத்தகம் ஒன்றும் எழுதியதாக கேள்விப்படேன். மக்கள் பிரச்சினையினை பேசுவதற்காக பிரஜைகள் குழுவினரை புலிகள் தான் உருவாக்கினார்கள் என நினைகிறேன், ஆனால் அவர்களது ஆதரவாளர்கள் என்றில்லாமல் மக்களிடம் பிரபலமானவர்களை உள்ளடக்கியிருந்தார்கள் என நினைக்கிறேன்.1 point
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
சுமந்திரனின் வடையை அடிபட்டு தின்பவர்கள்… அரசியல் வறட்சி உள்ள சுத்த ஞானசூனியங்களாக மட்டுமே இருக்க முடியும். 😂1 point
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
குருவானவர் சந்திரா பெர்ணான்டோ அவர்களின் படுகொலை காலம் : ஆனி, 1988 இடம் : மட்டக்களப்பு , மரியண்ணை பேராலயம் நான் மட்டக்களப்பில் தங்கி வசிக்கத் தொடங்கியிருந்த காலம். மரியாள் ஆண்கள் விடுதியில் இன்னும் 40 மாணவர்களுடன் தங்கி பாடசாலை சென்று வந்தேன். விடுதி கத்தோலிக்க பாதிரிகளால் நடத்தப்பட்டு வந்தமையினால் பெரும்பாலான மாணவர்கள் கத்தோலிக்கர்கள், ஓரிருவரைத் தவிர. ஆகவே ஒவ்வொரு காலையும் தவறாது 6 மணிக்கு அருகில் அமைந்திருந்த புனித மரியண்ணை தேவாலயத்திற்கு காலைத் திருப்பலிக்காகச் செல்வது எமது நாளாந்தக் கடமைகளில் முதலாவது. சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் திருப்பலியினை ஒவ்வொரு நாளும் அத்தேவாலயத்தின் பங்குத் தந்தையான, குருவானவர் சந்திரா பெர்ணான்டோவே நடத்துவார். அவரது கனிவான முகவும், மென்மையான குரலும், அவர் திருப்பலியினை நடத்திச் செல்லும் விதமும் ஈர்ப்பினை உருவாக்கும். நாம் மிக்கேல் கல்லூரியின் மாணவர்கள் என்பதை அறிந்த அவர் எம்முடன் சிலவேளைகளில் பேசுவதுண்டு. எமது விடுதி நடத்துனரும், குருவானவர் சந்திராவும் நண்பர்கள் ஆதலால் திருப்பலி முடிந்தபின்னர் சிலவேளைகளில் அவர்கள் பேசும்வரை நாம் காத்திருப்போம். வார விடுமுறை நாளான சனி காலையில் அவரது திருப்பலி முடிந்தவுடன், சிசிலியா பெண்கள் பாடசாலையில் நடைபெறும் கத்தோலிக்க வகுப்புகளுக்கு நாம் செல்வோம். அங்கு தவறாது குருவானவர் சந்திராவும் கலந்துகொள்வார். சிலவேளைகளில் வகுப்புகளுக்கு வந்து மாணவர்களுடன் பேசுவதும் நடக்கும். இவ்வாறு மாணவர்களாலும், ஆசிரியர்கள், பெற்றோர்களாலும் நன்கு அறியப்பட்ட ஒருவர் சந்திரா அவர்கள். புலிகள் தொடர்பாக மென்மையான போக்கினைக் கொண்டிருந்தவர் என்று அறியப்பட்ட சந்திரா அவர்கள், அக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவந்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவந்தவர். மட்டக்களப்பில் இயங்கிய பிரஜைகள் குழுவின் தலைவராகவும் அக்காலத்தில் பணியாற்றியவர். இராணுவத்தினராலும், துணைராணுவக் குழுவினராலும் கைதுசெய்யப்பட்ட பல இளைஞர்களை மீட்கும் காரியங்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார். ஆகவே கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல் மட்டகளப்பு வாழ் தமிழர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு மனிதராக அவர் வலம்வந்தார். இவ்வாறான ஒரு நாள், ஆனி மாதம் 6 ஆம் திகதி மாலை வேளையில், விடுதி மாணவர்கள் சிலருடன் எமது விடுதிக்கு முன்னால் இருந்த வெற்றுக் காணியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். விடுதி நடத்துனரான ஸ்டீபன், ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை படிப்பதை வாடிக்கையாகக் கொண்டவர். ஆகவே அவர் படிக்கும் வீரகேசரிப் பத்திரிக்கையினை வழக்கமாக போல் என்று அழைக்கப்படும் ஒரு மாணவனே மட்டக்களப்பு நகருக்குச் சென்று வாங்கிவருவான். அன்று வழமை போல போல் நகருக்கு பத்திரிக்கை வாங்கச் சென்றான்.சென்ற சிறிது நேரத்திலேயே அதிர்ச்சி மேலிட்டவனாக திரும்பி வந்தான். "பாதர் சந்திராவைச் சுட்டுப் போட்டாங்கள். கோயிலுக்குள்ள நிறைய ஆக்கள் நிக்கிறாங்கள்" என்று படபடக்கக் கூறினான். மரியாள் பேராலயம், எமது விடுதியில் இருந்து பார்க்கும் தூரத்திலேயே இருக்கிறது. ஓடிச்சென்றால் இரு நிமிடங்களில் ஆலயத்தை அடைந்துவிட முடியும். ஆகவே அவன் கூறியவுடன் மைதானத்தில் நின்ற அனைவரும் தேவாலயம் நோக்கி ஓடினோம். தேவாலயம் பூட்டிக் கிடந்தது. ஆனால் அதன் அருகில் இருக்கும் குருவானவர் சந்திரா பெர்ணான்டோவின் அலுவலகம் சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஒருவாறு சனக்கூட்டத்தினுள் நுழைந்து, அவரது அறையினுள்ச் சென்றோம். எனக்கு நன்கு பரிச்சயமான ஒருவரை, நாம் மதிக்கும் ஒருவரை, இரத்த வெள்ளத்தில் நான் முதன் முதலாகப் பார்த்தது அங்கேதான். குருவானவர் தனது கதிரையில் அமர்ந்தபடி கொல்லப்பட்டிருந்தார். அவரது உடல் கதிரையில் இருந்து பின்புறமாகச் சரிந்திருக்க, நெற்றியின் அருகிலிருந்து குருதி வழிந்தோடி அவரது ஆசனம் இருந்த அறையின் பகுதியை நனைத்திருந்தது. அவர் சுடப்பட்டு வெகுநேரமாக இருக்கமுடியாது, ஏனென்றால் குருதி இன்னமும் காயாது அப்படியே கிடந்தது. அவர் அணிந்திருந்த வெண்ணிற ஆடை குருதியில் நனைந்திருக்க அவர் அங்கு கிடந்த காட்சி பார்த்த அனைவரையும் மிகுந்த துன்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருந்தது. எவ்வளவு நேரம் அங்கிருந்தோம் என்று நினைவில் இல்லை. அதிர்ச்சியும், பயமும் எம்மை ஆட்கொள்ள மெதுமெதுவாக விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இதனை யார் செய்திருப்பார்கள் என்கிற கேள்வியே எம்மிடம் அன்று இருந்தது. குருவானவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவரைச் சந்திக்கவென்று இருவர் வந்ததை தேவாலயத்தில் தோட்டவேலைகளில் ஈடுபட்டு வரும் ஒருவர் பார்த்திருக்கிறார். குருவானவருடன் வந்த இருவரும் முரண்பாட்டுடன் சத்தமாகப் பேசுவது கேட்டிருக்கிறது. அதன்பின்னரே அவர்கள் குருவானவின் நெற்றியில், மிக அருகில் நின்று சுட்டிருக்கிறார்கள். மரியாள் பேராலயம் அமைந்திருந்த பகுதி இந்திய ராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியாகும். இப்பகுதியில் அமைந்திருந்த ஒவ்வொரு இந்திய இராணுவ முகாமின் முன்னாலும் தவறாது தமிழ் துணை ராணுவக் குழுவினரின் பிரசன்னமும் அக்காலத்தில் இடம்பெற்றிருக்கும். குருவானவர் கொல்லப்பட்டு சில நாட்கள் கடந்தபின்னர் அவரைக் கொன்றது இந்திய ராணுவத்துடன் மட்டக்களப்பு நகரில் இயங்கிவந்த புளோட் மற்றும் ஈ பி ஆர் எல் எப் துணை ராணுவக் குழுவினரே என்று பேசிக்கொண்டார்கள். குருவானவரைக் கொன்றவர்கள் மிக நிதானமாகவே அப்பகுதியில் இருந்து வெளியேறிச் சென்றிருக்கிறார்கள். தாம் அகப்பட்டுவிடுவோம் என்றோ, அருகில் அமைந்திருக்கும் இந்திய ராணுவ முகாமில் தடுக்கப்படுவோம் என்றோ அவர்கள் கலவரம் அடைந்திருந்ததாகத் தெரியவில்லை. இந்திய இராணுவத்தினதும், துணை ராணுவக் குழுக்களினதும் மனிதவுரிமை மீறல்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிவந்த குருவானவர் சந்திராவின் குரலை அடக்கவேண்டிய தேவை இந்திய இராணுவத்திற்கும் இருந்தமையினால், அவர்களின் பூரண ஆசீர்வாதத்துடனேயே சந்திரா துணை ராணுவக் குழு உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குருவானவர் சந்திராவின் இறுதிக் கிரியைகள் மட்டக்களப்பில் நடைபெற்றன. மிகப்பெருந்திரளான மக்கள் மத வேறுபாடின்றி அதில் கலந்துகொண்டார்கள். நானும் அந்த இறுதிநிகழ்வில் கலந்துகொண்டேன்.1 point
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அவர்களும் தமிழர்கள்தானே. அவர்களுக்கு நேர்ந்த அனர்த்தங்களைப் பார்த்து நாங்கள் வாருங்கள் என்றழைப்பதுதானே முறை. வருவதும் வராமல் இருப்பதும் அவர்களது விருப்பம். அது தவிர சிங்களவர்கள் தங்கள் இடங்களில் அவர்களை குடியேற அழைப்பது அவர்களது பிரச்சினை. நான் கொழும்பில் இருந்த போது அவதானித்தேன், மலையகத்தில் இருந்த தமிழர்கள் பஸ் ஓட்டுனர்களாக, வியாபாரிகளாக, பல தொழில்கள் செய்பவர்களாக, மூன்று மொழி பேசும் ஆற்றலுடையவர்களாக இருந்தார்கள். கொழும்பும் சிங்களப் பகுதிதான். இன்னுமொன்று ஊரில் பார்த்தேன் பல வீடுகள் இடிந்து பாழடைந்து, காணிகள், காடுகள் போல் இருந்தன. சமீபத்தில் கூட சாவகச்சேரி உபய பாராளுமன்ற உறுப்பினர் சபையில் உரையாற்றும் போது சொன்னார், “ யாழ்ப்பாணத்துக்கு நிதி ஒண்டும் வேண்டாம். உங்களுக்குத் தேவை எண்டால் நாங்கள் தருகிறோம்” என்று. இன்று மீனவர்கள் போராட்டத்தில் கூட,” உங்களுக்கு நாங்கள் அரிசி, பருப்பெல்லாம் தாறம்” என்று, நீங்கள் என்னவென்றால் அங்கே வாழ்வாதாரப் பிரச்சினை என்று சொல்கிறீர்கள். புரியவில்லை. ஒரு தடவை நான் பயணித்த வாகனத்தை ஓட்டி வந்தவர் அப்புத்தளையைச் சேர்ந்தவர். அவர் என்னிடம் கேட்டார், “ நாகர்கோவில் திருவிழாவுக்கு, வெளிநாட்டில் இருந்து வந்த ஆக்களைக் கூட்டிக் கொண்டு போனன். நல்ல சனம். சனங்கள் போறதுக்கு ஒரு பாதை திரும்ப வாறதுக்கு ஒரு பாதை எண்டு பிரிச்சு , பொலீஸ் ரேப் கட்டி தடுப்புகள் போட்டிருந்தார்கள். கொஞ்ச நேரம்தான் இரண்டு பக்கங்களாலேயும் சனம் போக வரத் தொடங்கிட்டிது. பொலீஸும் எவ்வளவோ சொல்லிப் பாத்தும் அவையள் தங்கட இஸ்டத்துக்கு போய் வந்து கொண்டிருந்திச்சினம். ஏன் அப்பிடி?” பதில் நான் சொல்லவில்லை. ஆக நாங்கள் வருந்தி அழைத்தாலும்…. அந்த நாள் முதல் இந்த நாள்வரை நாங்கள் மாறவில்லை.1 point
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அண்ணா, பிரதேசவாதமும், பிரதேச மேட்டிமைவாதமும் வேறுபட்டவை. உலகெங்கும் பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்கென்ற சில அடையாளங்களுடனேயே வாழ்கின்றார்கள். அது இனம், மொழி,மதம், பிரதேசம் என்று பல வகைகளில் இருக்கலாம். குலம், கோத்திரம் என்று கூட இந்த அடையாளங்கள் இருப்பதுண்டு. தங்களின் அடையாளங்களுக்கு விசுவாசமாகவும், தங்களின் அடையாளங்களை முன்னிறுத்தியும் மனிதர்கள் வாழத் தலைப்படுகின்றார்கள். ஆனால் தங்களை நிகர்த்த அடையாளங்கள் இல்லாதவர்கள் கீழானவர்கள், இழிவானவர்கள், திறமையற்றவர்கள், வீரம் அற்றவர்கள் என்பது போன்ற ஒப்பீடுகளும், கணிப்புகளும் மேட்டிமைவாதம் என்னும் வகையிலேயே வருகின்றது. பிறப்பினாலேயே தங்களை மேலானவர்கள் என்று நினைத்துக் கொள்வது மட்டும் இல்லாமல், அப்படியே நடந்து கொள்வதும் மேட்டுமைவாதமே. இந்த பிரதேச மேட்டுமைவாதமே இலங்கையில் சில பிரதேச மக்களிடம் இருக்கின்றன என்று தான் நான் சொல்ல முயன்றிருந்தேன். உதாரணம்: யாழ்ப்பாண தமிழ் மக்கள், கண்டி சிங்கள மக்கள். இவர்கள் இருவரும் இந்த விடயத்தில் வெளிப்படுத்தும் மேட்டுமைவாதத்தை இலங்கையில் வேறு எவரும் வெளிப்படுத்துவதில்லை என்பதே என் அனுபவம். பிறப்பினாலேயே ஒருவர் சிறந்தவர் ஆகி விடுகின்றார் என்றால், இங்கே எதற்குமே பொருள் இல்லை என்று ஆகிவிடுகின்றது அல்லவா.1 point
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
பாசத்தோடு அவர்களை அழைத்தால் மட்டும் போதாது, எந்தவித பொருளாதார கல்வி வேலைவாய்ப்பு வதிவிடங்கள் இல்லாத மக்களுக்கு இதெல்லாம் ஏற்படுத்தி தர சுமந்திரன் ஐயா தயாராவும் இருக்கணும். இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியே தேயிலை ஏற்றுமதிதான், தேயிலை தோட்ட தொழிலை மலையக தமிழரை தவிர இலங்கயில் வேறு எந்த பிரிவினரும் தேடி சென்று செய்யபோவதில்லை தேடி போனாலும் அவர்களால் அரைவயிறு கஞ்சியுடன் அடுத்து மாற்று துணியும், நாள்முழுக்க உழைத்துவிட்டு வீட்டுக்கு போனால் கால்நீட்டிக்கூட படுக்க முடியாத அளவிற்கு லயன் வீட்டு வாழ்க்கையுடனுமோ வாழ முடியாது. அப்படி எவரும் இலகுவாக செய்யமுடியாத ஆனால் இலங்கைக்கு காசை கொட்டும் ஒரு தொழிலை செய்யும் மக்கள் கூட்டத்தை வேறு இடங்களில் குடியேற விட்டுவிட்டு முதுகில் கூடையை கட்டிக்கொண்டு தேயிலை கொழுந்து பறிக்க சிங்களவன் தயாரா இருப்பான்னா நினைக்கிறீங்க? எக்காரணம் கொண்டும் அந்த மக்களை அந்த நிலத்தைவிட்டும் நகர தொழிலை விட்டும் சிங்களவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டான். வேண்டுமென்றால் ஒரு சில குடும்பங்கள் இடம் பெயரலாம். நிலசரிவில் பாதிக்கப்பட்டு வசிப்பிடம் இல்லாமல் நிப்பது மலையக தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர் முஸ்லீம்களும் அடங்கும். மலையக மக்கள் ஏறக்குறைய இருநூறு வருடங்களாய் வாழ்ந்த புவிசார்பை விட்டு நீங்கமறுத்தால், அங்கு பாதிக்கப்பட்ட சிங்களவரும் முஸ்லீம்களும் மலையக மக்கள் தமிழர்பகுதியில் குடியேறலாம் என்றால் நாங்கள் மட்டும் ஏன் அங்கு குடியேற கூடாது என்று கேள்வி எழுப்புவார்கள், அவர்களுக்கு சிங்கள அரசுகளும் எதிர்கட்சி அமைப்புகளும் முடிந்தவரை உதவி செய்தே ஆவார்கள், ஆனால் தமிழர்களுக்கு அதனை எதிர்பார்க்க முடியாது. அப்போது நிலமை சும்மாபோன தேரை சுமந்திரன் சொரிஞ்சுவிட்டு நடு ரோட்டில இழுத்து விட்டமாதிரி ஆகும் நிலமை.சுமந்திரன் கற்றறிவில் மேலானவரா இருக்கலாம், ஆனால் பட்டறிவில் சுத்த ஞான சூனியம். அதற்கப்பால் வடகிழக்கு மண்ணில் அவர்கள் குடியேறுவதில் எந்த தவறும் இல்லை, ஆனால் குடியேறவிட்டுவிட்டு இவங்கள் ஏசி காரில் தங்கட அலுவல்களை பாத்துக்கொண்டு திரிவார்கள், வாக்களித்த தமிழர்களைபற்றியே நினைக்காத இந்த தத்தி தலைவர்கள் வாழ்வோடு தினமும் போராடும் அந்த மக்கள் தம் காலில் நிக்கும்வரை துணையாக நிப்பார்கள் என்றா நினைக்கிறோம்? அடுத்து பார்க்கவேண்டிய விடயம், ஏற்கனவே கிளிநொச்சி வன்னி, யாழ்ப்பாணத்தில் மலையக மக்கள் வாழ்ந்தார்கள்தான், அவர்களை வடகிழக்கு சமூகம், தோட்ட வேலைக்கும், தேத்தண்ணி கடையில் கிளாஸ் கழுவுற வேலைக்கும், பண்ணைகளை கவனிக்கவும், மேலே ரசோதரன் குறிப்பிட்டதுபோல் மனித மல வண்டிகளை தள்ளுற வேலைகளுக்கும், லொறியில் இருந்து சாமான் இறக்குற வேலைக்கும் அமர்த்தி இன்று மலையக மக்கள் அரசிடம் இருந்து பெறும் மாத வருவாயில் பாதிகூட வருஷ வருவாயாக கொடுக்காது, ஒரு வேட்டி சேலை, ஒரு சில ஆயிரம் அவர்களின் இரத்தத்தை உறிஞ்சியதுக்கு கூலியாக கொடுத்து போதாக்குறைக்கு வீட்டுக்கு வெளியே நிக்க வைத்தும் , வயசு முதிர்ந்தவர்கள் பெண்களாக அவர்கள் இருந்தாலும் மரியாதையே துளியும் கொடுக்காமல் ஒருமையில் வாடா போடி என்று அழைத்தும் அவமானபடுத்தியும் மனித குலத்தில் என்னமோ அவர்கள் இவர்களுக்கு சேவகம் செய்ய பிறந்தவர்கள் போல் நடத்தும் அடிமைதன வாழ்வை வடக்கு கிழக்கில் பெறுவதைவிட சொந்த நிலத்தில் தமக்கு தெரிந்த தொழிலை செய்து வாழ்வதே அவர்களுக்கு சுய கெளரவம். வடக்கு கிழக்கில் குடியேறிய மலையக மக்கள் இன்றுவரை தமது சொந்த உழைப்பில் கல்வி பொருளாதாரத்தில் முன்னேறி வெற்றிபெற்ற தமிழர்களாக வாழ்ந்த ஒரு குடும்பத்தை கண்டதுண்டா? அதற்கு பிளடி வடகிழக்கு தமிழன் அவர்களை அனுமதித்ததுண்டா? மலையமக்கள் தொழிலை பார்க்கும் இடத்திற்கு செல்லகூடிய வகையில் பாதுகாப்பான இடங்களில் குடியேறுவதே சிறப்பானதாக இருக்கும். மறுபார்வையில் மலையக எம் தமிழ்மக்கள் தமது இடத்தைவிட்டு லட்சங்களில் வெளியேறினால் தமிழர்கள் வாழ்ந்த அப்பிரதேசம் முற்றுமுழுதாக சிங்கள முஸ்லீம்களால் நிரப்பபட்டுவிடும், வடக்க்கு கிழக்கில் எம் நிலங்களை பறிகொடுத்தது போதாதென்று இலங்கை முழுவதும் தமிழர் இருப்பை முற்றுமுழுதாய் கைவிட்டு போகவேண்டுமா? நாலு நல்ல வார்த்தையா பேசி பழகு சுமந்து.1 point
-
கெய்ஷா - ஜெயமோகன்
1 pointகெய்ஷா - ஜெயமோகன் அவளை ஒரு கெய்ஷா என்றுதான் கூட்டிவந்தார்கள். நான் அவள் பெயரை கேட்டேன். “கெய்ஷாக்களுக்கு தனியாகப்பெயர் தேவையில்லை. இந்த இரவுக்காக ஒரு பெயர் உங்களுக்குத்தேவை என்றால் சூட்டிக்கொள்ளலாம்” என்றான் வழிகாட்டி. “தேவையில்லை, கெய்ஷா என்ற சொல்லே ஒருபெயர்போலத்தான் இருக்கிறது” என்றேன். “ஒரு கெய்ஷாவின் பெயரைப் பின்தொடர்ந்து சென்று நீங்கள் எதையும் அறிந்துகொள்ளமுடியாது” என்றான். அந்த எண்ணம் எனக்கு இருக்கவுமில்லை கெய்ஷாக்கள் பழைய ஜப்பானிய அரசாட்சிக் காலத்தில் பிரபுக்களை உபசரிப்பதற்காக உருவாக்கப்பட்ட உயர்குடித் தாசிகள். கெய்ஷா என்றால் கலைபயின்றவள், அளிப்பவள் என்று பொருள். ஆணை மகிழ்விக்கும் கலையை ஆயிரம் வருடங்களாக கற்றுத் தேர்ந்தவர்கள். காமத்தை கலைகளாக விரித்து விரித்துச் செல்லும்போதும் அனைத்து முனைகளிலும் ஆணின் அகங்காரத்தையும் நிறைவு செய்யப்பயின்றவர்கள். நமது குலப்பெண்கள் ஆணின் அகங்காரத்தை அலட்சியம் செய்வதற்கு ஓரிரு வருடங்களிலேயே பழகிவிடுகிறார்கள். கெய்ஷாக்களின் காமக்கலைகளைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. கையில் பணத்துடன் ஜப்பானுக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் அந்தக் கனவு விதைக்கப்பட்டிருக்கும். அங்கு உயர்மட்டச் சுற்றுலா பயணிகளிடம் உள்ளூர் வழிகாட்டிகள் ஜப்பானியத் தேநீர் பண்பாடு, காகிதப் பொம்மைக் கலை, ஜென் பௌத்தம், ஹைகூ கவிதை, ஷிண்டோ மதம் என்று வழக்கமான சுற்றுலாக்கவர்ச்சிகளைப் பற்றி சொல்லிச்செல்கையில் மிக இயல்பாக வழுக்கி கெய்ஷாக்களுக்குள் செல்வார்கள். கேட்பவன் தன் தனி ஆர்வத்தை கண்களில் காட்டாமல் இருக்க முயன்றாலும் அவர்கள் அதை எப்போதும் அடையாளம் கண்டுகொள்வார்கள். பல வழக்கமான சொற்றொடர்களுக்குப் பிறகு “இப்போது இருக்கிறார்களா கெய்ஷாக்கள்?” என்று அவன் கேட்கால் இருக்க மாட்டான். “இருக்கிறார்கள், ஆனால் மிக அபூர்வமாகவே…” என்று வழிகாட்டி பதில் சொல்வான். மீண்டும் பல சொற்றொடர்களில் சுற்றியபின் வேறெங்கோ நோக்கியபடி “ஒரு கெய்ஷாவை சந்திக்க முடியுமா?” என்று பயணி வரலாற்றுப்பண்பாட்டு ஆர்வத்துடன் கேட்பான். “கடினம்” என்பான் வழிகாட்டி. மீண்டும் சொற்றொடர்கள். மீண்டும் விழிச்சந்திப்புகள். அதன் பிறகு “எத்தனை செலவானாலும் பரவாயில்லை” என்று பயணி சொல்லியாக வேண்டும் கவலையுடன் “சற்று செலவேறியதுதான். என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். விசாரித்துப்பார்க்கிறேன். ஒரு நாள் ஆகும். ஆனால் முழுமையாக உறுதி தரமுடியாது, மன்னிக்கவும்” என்று வழிகாட்டி சொல்வான். அவன் திரும்பிவரும்வரை நான் காத்திருந்தேன் அந்த ஒரு முழுநாளும் அற்புதமானது. இணையத்திலும் வழிகாட்டி நூல்களிலும் சென்று கெய்ஷாக்களைப்பற்றி தேடி தெரிந்து கொள்ளலாம். திரும்பத் திரும்ப ஒரே விதமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் குறைவான தகவல்களிலிருந்து கற்பனைகளை விரித்தெடுக்கலாம். காமக்கலைகள்! காமத்தை எப்படி ஒரு கலையாக்க முடியும்? என்னதான் செய்தாலும் அடிப்படையில் அது அனைத்து விலங்குகளும் செய்யும் ஒரு செயல். சரியாகச் சொல்லப்போனால் மிருகத்தனமானது. அதிலிருக்கும் இன்பமே மிருகத்தனத்தின் களிப்புதான். மனிதர்கள் மனிதத்தன்மை என்று அவர்களுக்கு குழந்தையிலிருந்து கற்பிக்கப்பட்ட அத்தனையும் உதறிவிட்டு வெறும் மிருகங்களாக இருக்கும் அந்த சில நிமிடங்களுக்காகத்தான் அதன்மேல் அத்தனை பற்றுக் கொண்டிருக்கிறார்களா? உண்பதிலும் காமத்திலும்தான் வாய் அத்தனைமுக்கியத்துவம் பெற முடியும். ஏனென்றால் மனிதன் அப்போது விலங்கு ஆனால் அந்த எளிய மிருகச் செயல்பாட்டின் மீதுதான் உலகத்தின் அத்தனை கவிதைகளையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அத்தனை கலைகளையும் அதைச் சார்ந்தேதான் நிகழ்த்துகிறார்கள். நினைத்துத் தீராத அத்தனை மெல்லுணர்வுகளையும் அதன் மீதுதான் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அனைத்தையும் கடந்து சென்று அந்த சில அப்பட்டமான நிமிடங்களை அடைய வேண்டும். எழுந்தவுடன் கழற்றி வைத்த ஆடைகளை அணியும் பரபரப்புடன் அத்தனை சொற்களையும் எடுத்து மேலே போட்டுக்கொள்ள வேண்டும். கெய்ஷாக்கள் கலை என்பது எதை? அணிவிப்பதையா? கழற்றுவதையா? ஜப்பானிய தேநீர் கலையை நான் பலமுறை கண்டிருக்கிறேன். உண்மையில் அவர்கள் அப்படித்தான் வழக்கமாகத் தேநீர் அருந்துகிறார்கள் என்றால் அது தேநீரே அல்ல. அல்லது அவர்கள் மனநோயாளிகள். மிக சொகுசான, மிக அரியதான ஒன்றை அருந்துவதான பாவனை மட்டும்தான் அது. பல நூற்றாண்டுகளாக அவர்கள் பழகி வைத்திருக்கும் ஒரு நாடகம், நாட்டியம் என்று சொல்ல வேண்டும். பீங்கான் குடுவையை எடுத்து நீர் நிரப்பி அனலில் வைப்பது தொடங்கி கிண்ணங்களை எடுத்து பரப்புவது, நிமிர்த்து வைப்பது, கால் மடித்து அமர்வது, உடல் வளைத்து வணங்குவது என்று அதன் அத்தனை அசைவுகளும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வகுக்கப்பட்டுவிட்டவை. ஜப்பானிய தேநீர் விருந்தில் தேநீரே தேவையில்லை. கெய்ஷாக்களின் காமவிருந்தில் கடைசியில் காமமே தேவையில்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று நினைத்தபோது என் விடுதி அறையில் படுத்திருந்தபடி சிரித்துக் கொண்டேன். காமம் என்று இருக்கும் வரைக்கும் ஒரு கலையென அது ஆகமுடியாது கலை என்பது ஒரு பொருளின் மேல் ஒரு வார்த்தையின்மேல் அல்லது செயலின்மேல் மேலும் மேலும் அர்த்தங்களை ஏற்றி வைப்பது. படிமங்கள் தான் கலை. ஒரு நாற்காலியை, மேசை விரிப்பை, மலர்க்கிண்ணத்தை எதை வேண்டுமானாலும் முடிவின்றி விரியும் அர்த்தம் கொண்டதாக ஆக்கும் போதுதான் அது கலை. காமத்தை அப்படி ஆக்கிவிட முடியுமா? எத்தனை அர்த்தங்களை ஏற்றினாலும் அது கடைசியில் இயற்கை அளித்த ஒற்றை அர்த்தத்தில்தானே வந்து நிற்கும்? அதைக் கலையாக்குவதற்காகத்தானே அத்தனை வருடங்களாக கவிதையையும் கதைகளையும் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். காதல் என்னும் வார்த்தையாக அதை மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் காலம் தேவை. ஒன்றுடன் ஒன்று இணைந்த நூற்றுக்கணக்கான உணர்வுகளைத் தொடுத்து காமத்தைச் சுற்றி அமைத்து அதை அமரகாதலாக ஆக்குவதற்கு அதுவரைக்கும் மனித இனம் உருவாக்கிய அனைத்து நுண்கலைகளும் தேவை. கூடவே காமம் என்றால் என்னவென்றறியாத இளமை. காமம் சற்றே சலித்துப்போன நாற்பது வயதான பயணிக்கு சிலமணி நேரங்கள் உடன் தங்கிப்போகும் ஒரு பெண் காமத்தை எப்படி கலையாக ஆக்க முடியும்? அவள் கெய்ஷா உடையில் வருவாளென்று நான் நினைத்திருந்தேன். நூல்களில் கெய்ஷாக்களின் பல்வேறு உடைகள் வரையப்பட்டிருந்தன. இடுப்பில் மெத்தைபோல எதையோ கட்டிக்கொண்டவர்கள். கால்வரைவழியும் பெரிய கிமோனாக்கள். பழைய பாணி ஜப்பானிய ஓவியங்களில் வெளிறிய வண்ணங்களில் வரைந்து மேலும் வெளிற வைப்பதற்காக லேசாக நீர் தெளித்து ஒற்றி எடுக்கப்பட்ட ஓவியங்கள். கண்ணாடியில் ஒளிஊடுருவும் தன்மையுடன் ஆடைகள். வந்தவள் சிறுமியோ என்று தோற்றமளிக்கும் சிறிய உடல் கொண்ட இளம்பெண். நவீன மேலை நாட்டுக் குட்டைப்பாவாடை அணிந்திருந்தாள். ஒரு பதின்பருவத்து சிறுவனைப்போல் இருந்தாள். சிறிய கண்கள் இரண்டு நீர்த்துளிகள் போல. சிமிழ் போன்ற மிகச்சிறிய உதடுகள். மாசுமருவற்ற மஞ்சள் நிறம். தோல்நிறத்தில் மஞ்சளுக்கு நிகரானது பிறிதொன்றில்லை. வெள்ளையர் தோல்கள் சுருக்கங்களும் புள்ளிகளும் நிறைந்தவை கரியதோல்கள் ஒளியற்றவை .மாநிறத்தோல் மட்டுமே இந்தியாவில் அழகு கொண்டது. ஆனால் மஞ்சள்நிறத்தோல் தோலா உலோகமா என்றஅறியாத அளவுக்கு மெருகுகொண்டது அவள் என்னை உடல் வளைத்து முறைப்படி வணங்கி முகமன் சொன்னாள். நான் அவளை வரவேற்றதும் பணிவுடன் நாற்காலியில் அமர்ந்து தன் கைப்பையை மேஜைமேல் வைத்தாள். வழிகாட்டி என்னிடம் தனியாக வந்து குனிந்து “புகழ்பெற்ற கெய்ஷா குடும்பத்தைச் சேர்ந்தவள். அரசகுலத்தைச் சேர்ந்தவர்களுடன் மட்டுமே உறவு வைத்திருக்கிறாள். இந்தியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வந்திருக்கிறார் என்றேன். அதை நம்பி வந்திருக்கிறாள். அந்த வார்த்தையை நீங்கள் வாய்தவறாமல் கொண்டு செல்லுங்கள்” என்றான். “நான் உண்மையிலேயே அரசகுடும்பத்தைச் சார்ந்தவன் தான்” என்றேன். அவன் கண்கள் ஐயத்துடன் சற்று மாற ”அப்படியானால் நன்று” என்றான். “இவள் கெய்ஷாவா? உண்மையிலேயே?” என்றேன். “ஆம், கெய்ஷாக்கள் என்பவர்கள் சில குடும்பங்களில் தொன்மையான மரபாக வருபவர்கள். காதற்கலையை அவர்கள் தங்கள் பாட்டிகளிடமிருந்து முறையாகக் கற்றுக் கொள்கிறார்கள். அந்தக் கலைதான் அவளைக் கெய்ஷாவாக்குகிறது. மற்றபடி அவளும் பிறரைப்போல இந்தக் காலத்தில் வாழ்பவள் தான். இந்தப்பெண் இங்கே டோக்கியோவில் ஒரு கல்லூரியில் படிக்கிறாள். படித்து முடித்தபின் எதாவது நிறுவனத்தில் வேலைக்குச் செல்வாள். குழந்தைகளை பெற்றுக் கொள்வாள். பிறரைப் போல் தான் அவள் வாழ்வு இருக்கும். ” நான் “அதுவும் நன்று தான்” என்றேன். அவன் புன்னகையுடன் “அவர்கள் இரவில் மட்டும் தான் கெய்ஷாக்கள்” என்றான். நான் “நன்று” என்று சொல்லி அவன் தோளில் தட்டினேன். “இதற்கான பணத்தை நீங்கள் எனது வங்கிக் கணக்கில் செலுத்தலாம். அதை நான் உங்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறேன். பத்து நிமிடத்தில் நீங்கள் அதை செலுத்த முடியும்” என்றான். “சரி” என்றேன். “அவளிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே செலுத்திவிடலாம். நீங்கள் செலுத்தின தகவலை அவளுக்கு நான் அனுப்பின பிறகுதான் அவள் கெய்ஷாவாக மாறுவாள்” என்றான். அவன் சொல்வதை நான் புரிந்து கொண்டு மீண்டும் “சரி” என்றேன். “சற்றுப்பெரிய தொகை” என்று அவன் சொன்னான். “சரி நண்பா…” என்று அவன் தோளில் மீண்டும் தட்டினேன் அவன் மும்முறை வணங்கி வெளியே சென்று கதவை மூடினான். நான் திரும்பி வரும்போது அவள் கண்ணாடித் திரையிடப்பட்ட பெரிய சாளரத்தின் அருகே நாற்காலியில் பள்ளிக்கூடப்பெண் போல கால்களை மடித்துக் கொண்டு கைகளைக் கட்டி அமர்ந்திருந்தாள் நான் வந்த போது இயல்பான பணிவுடன் எழுந்து நின்று புன்னகை செய்தாள். நான் அவள் அருகே அமர்ந்தேன். முதலில் என்ன பேசுவதென்று தெரியவில்லை. பின்னர் சொற்களை தெரிவுசெய்தேன் “நான் கெய்ஷா என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆகவே தான் உன்னை வரச்சொன்னேன்” என்றேன். “கெய்ஷா என்றால் இரவில் வாழ்பவள் என்று பொருள்” என்றாள். “அப்படியா? விக்கிப்பீடியாவில் அப்படி இல்லையே” என்றேன். “ஜப்பானிய சொற்களை எழுதும் முறையால் அர்த்தம் கொள்ளச்செய்யமுடியும். நாங்கள் கெய்கோ என்போம்” என்றாள். ”ஆம், அதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன். “இரவுகளில் மட்டும் ஒரு ஆளுமையை அணிந்து கொண்டு காலையில் கழற்றிவிடுபவர்கள் கெய்ஷாக்கள். உண்மையில் பகலில் சூரியன் எழுவதற்கு முன்பே அவர்கள் இறந்து விடுகிறார்கள்” என்றாள். நான் அவளைப்பார்த்துக் கொண்டிருந்தேன். கெய்ஷாப் பண்பாடு பற்றி ஒரு பேருரை ஆற்றப்போகிறாளா என்று சலிப்பு ஏற்பட்டது. “ஆகவே இரவில்பார்த்த கெய்கோவை பகலில்தேடக்கூடாது” என்றாள். அதைச் சொல்லத்தானா என நினைத்துக்கொண்டு “நான் நாளை மாலை இங்கிருந்து இந்தியா கிளம்புகிறேன்” என்றேன். “கெய்ஷாக்கள் இரவில் அணியும் அனைத்தையும் பகலில் துறந்துவிடுவதனால் இரவில் செய்யும் எந்த பாவமும் அவர்களைத் தொடர்ந்து வருவதில்லை. தொல்பழங்காலத்தில் அரசர்களுக்காக கெய்ஷாக்கள் கொலைகளையும் செய்திருக்கிறார்கள்” என்றாள். நான் சிரித்தபடி, “எனது தொழில் போட்டியாளர்களால் நீ இங்கு அனுப்பப்படவில்லை அல்லவா?” என்றேன். அவளும் சிரித்துக் கொண்டு, “பெரும்பாலும் இல்லை” என்றாள். “ அய்யோ! பயமாக இருக்கிறதே. . ” என்று நான் நடித்தேன். இருவரும் சிரித்த போது சற்று அணுகினோம். இருவர் அணுகிவருவதற்கு நடிப்பு சிறந்த வழிமுறை பின்னர் எளிய அறிமுகச்சொற்களை பேசிக்கொண்டோம். என்னைப்பற்றிச் சொன்னேன். நான் ஒரு நாளிதழின் ஆசிரியன், எட்டுநூல்களை எழுதியிருக்கிறேன் என்றதும் மெல்லிய புருவங்கள் வளைய வியப்புடன் “அப்படியா?” என்றாள். “என் சொந்தப் பத்திரிகை. என் தாத்தா தொடங்கியது” என்றேன். பத்திரிகையின் பெயரை அவள் கேட்டிருக்கவில்லை. “இந்தியாவின் சுதந்திரப் போராட்டகாலத்து நாளிதழ்” என்றேன். அவள் என் நூல்களைப்பற்றிக் கேட்டாள். ஆறுநூல்கள் அரசியல். இரண்டுநூல்கள் பயணம். “நாவல் எழுதும் எண்ணம் உண்டு” என்றேன். அவள் சிரித்தபடி “இதழாளர்கள் நாவல் எழுதுவதுதான் இப்போது பொதுப்போக்கு. பதிப்பாளர் விரும்புவார்கள்” என்றாள். நான் புருவத்தைச் சுருக்கி “ஏன்?” என்றேன். “மற்ற இதழாளர்கள் பாராட்டி மதிப்புரை எழுதுவார்கள்” என்றாள். சுரீலென்று கோபம்வந்தாலும் உடனே அதைக்கடந்து சிரித்துவிட்டேன். “உண்மை, ஆனால் என் நாவல் மற்ற பத்திரிகையாளர்களை விமர்சிப்பதாகவே இருக்கும். எல்லாரும் வசைபாடுவார்கள்” என்றபின் “நீ படிப்பாயா?” என்றேன். “எனக்கு இளமையிலேயே இலக்கியம் கற்பித்திருக்கிறார்கள்” என்றாள். அவள் மது அருந்துவாளா என்று கேட்டேன். ஒயின் மட்டும் என்றாள். நானும் அதையே விரும்புவதாகச் சொன்னேன். அவளே ஒயினைப் பரிமாறினாள். “ஒயின் பரிமாறுவதில் கெய்ஷா முறை என ஒன்றும் இல்லையா?” என்றேன். “கெய்ஷா சடங்குகள் விரிவானவை. ஆனால் கெய்ஷாமுறை என்பது அச்சடங்குகள் அல்ல” என்றாள். நான் “கெய்ஷாக்களுக்கு காமத்தில் நுட்பமான பல கலைகள் தெரியும் என்கிறார்களே” என்றேன். “ஜப்பானிய தேநீர் விருந்து போல அது ஒரு பெரிய நடிப்பாக இருக்கும். அலங்கார உடைகளும் முறைப்படுத்தப்பட்ட உடல் அசைவுகளும் சடங்குகளும் எல்லாம் இருக்கும் என்று நினைத்தேன்” அவள் சிரித்தபடி, “அத்தனைக்கும் பிறகு நீங்கள் காமத்தில் ஈடுபட்டதாக வெறுமே கற்பனை செய்து கொண்டு வீடு செல்ல வேண்டும் என்று சொன்னால் இவ்வளவு பணத்தை அளிப்பீர்களா?” என்றாள். “பணத்தை அளித்த குறுஞ்செய்தி வந்துவிட்டதா?” என்று நான் கேட்டேன். அவள் முகம் சற்று மாறி “ஆமாம்” என்றாள். அதை மாற்றும்பொருட்டு நான் “காமத்தில் நீ புதிதாக எனக்கு எதைக் கற்றுத்தரப்போகிறாய்?” என்றேன். “உண்மையில் உங்களுக்கு என்ன தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போதெல்லாம் இணையத்தில் இல்லாததே இல்லை. எனது பாட்டி ஒருமுறை இணையத்தில் இந்த படங்களை மட்டும் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார். இப்படியெல்லாமா இப்படியெல்லாமா என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். நாற்பது ஆண்டுகாலம் கெய்ஷாவாக வாழ்ந்த அனுபவம் உடையவள்” என்றாள். நான் சிரித்து “ஆம். மனித உடலில் இனி என்ன செய்வதற்கு உண்டென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றேன். “உனக்குத் தெரியுமா? தூக்கு போட்டுக் கொண்டு உறவு கொள்ளும் முறை ஒன்று உண்டு” அவள் கண்கள் இடுங்கச் சிரித்தபடி ”தூக்குப்போட்டபடியா?” என்றாள். “ஆம். கழுத்தில் சுருக்கை மாட்டிக் கொண்டு பெண்ணுடன் குலாவுவார்கள். உச்சகட்டம் நெருங்கும்போது காலின் கீழ் இருக்கும் முக்காலியை உதைத்துவிடுவார்கள். கழுத்து இறுகி, மூச்சு நின்று மூளைக்கு ரத்தம் போவது குறையும் தருணத்தில் பலவகையான மாயக்காட்சிகள் தோன்றும். அப்போது காமத்தின் உச்சகணம் நிகழவேண்டும். மிகச் சரியான தருணத்தில் கயிறை அழுத்திக் கீழே விழவைத்து சுருக்கை விடுவித்து ஆக்சிஜனை கொடுத்து உயிரை மீட்டுவிடுவார்கள். காலம், இடம் எல்லாம் அழிந்து காமத்தின் உச்சம் மட்டுமே நிறைந்த ஒன்று அந்தக்கணம் என்கிறார்கள்” “பாவம், அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அப்படி தேடிச்செல்லத் தொடங்கினால் சாவுவரை செல்லமுடியும், அவ்வளவுதான்” என்று அவள் சொன்னாள். நான் “இப்படி செய்யப்பட்ட முயற்சியில் ஒருவர் இறந்து அதை போலீசார் புலன் விசாரணை செய்த போது தான் இப்படி ஒரு இணையக் குழுமம் இருப்பதே தெரியவந்தது” என்றேன். ““பலவகையான பைத்தியங்கள் இருக்கிறார்கள். உறவின்போது கேவலமாக வசை பாடிக் கொள்வது, கொடூரமாக வதைத்துக் கொள்வது, பலவகையான மாத்திரைகளை உண்பது, மூளைக்குள் அதிர்வுகளை அளிக்கும் ரசாயனங்களை உடலில் செலுத்திக் கொள்வது. உச்சகட்டம் நிகழும் போது சரியான தருணத்தில் தலையில் உடலிலும் மின்சார அதிர்ச்சி அளிக்கும் ஒரு முறை கூட உள்ளது. என்ன செய்தாலும் அதற்கு அடுத்த கட்டம் ஒன்று தேவைப்படுகிறது” என்றேன். அவள் சொல்லவேண்டியதை எல்லாம் நான் சொல்கிறேன் என்று பட்டது. “நாம் இதை ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று நான் கேட்டேன். “நீங்கள் தான் இதை பேச விரும்புகிறீர்கள். இதைச் சுற்றி ஒரு மர்மத்தை கட்டமைக்க விரும்புகிறீர்கள்” என்று அவள் சொன்னாள். “இருக்கலாம்… இதுசாதாரணமாக முடியக்கூடாது என ஆசைப்படுகிறேன்” என்றேன். அவள் “இங்கும் அதெல்லாம் இருந்தது. பழைய காலத்தில் ஜப்பனிய அரசர்கள் தங்கள் உறவுகொள்ளும் பெண்ணின் கழுத்தை பட்டு நூலால் இறுக்கியபடியே அதைச் செய்வார்கள். மூச்சு திணறி அவள் இறக்கும் அந்த கடைசித்துடிப்பு அவருடைய உச்ச கணமாக இணையும்போது அது மிகப்பெரிய இன்பத்தை அளிக்கிறது என்பார்கள்” என்றாள். நான் சிரித்தபடி “ஆம் , அடுத்தபடி சாவு அல்லது கொலை என்பதுவரை சென்றுவிட்டார்கள்” என்றேன். “உண்மையில் உடல் சார்ந்த எல்லாமே எனக்கும் சலித்துவிட்டன. விசித்திரம் என்பது எதுவரை என்று தெரிந்துவிட்டது. கற்பனையில் எதாவது புதிதாக நடக்குமா என்று பார்க்கிறேன். இந்த நிகழ்காலத்திலிருந்து முன்னோ, பின்னோ சென்று கொண்டிருக்கிறேன். விண்வெளியில் காமம் கொண்டாடலாம். அல்லது செவ்வாய் கிரகத்தில், அல்லது சோழர் காலத்தில் ஒரு பரத்தையுடன், அல்லது ஒரு கெய்ஷாவுடன்” என்றேன். அவள் சிரித்து, “இதை முன்னரே சொல்லியிருந்தால் என் வீட்டுக்கு வரச்சொல்லியிருப்பேன். அங்கு இருநூறாண்டு பழைமையான அறைகள் இரண்டு உள்ளன. என் பாட்டி அணிந்த பழைய கெய்ஷா உடைகளும் நகைகளும் கூட இருக்கின்றன” என்றாள். “பரவாயில்லை இது ஒரு பாவனை தானே, நீ இப்போது இருநூறாண்டு முன்பிருக்கும் ஒரு கெய்ஷா. நான் இருநூறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இங்கு வியாபாரம் செய்யவந்த ஒரு கடல்வணிகன்” அவள் ”நீங்கள் அரச குலத்தார் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றேன். அவள் சிரித்தபடி “சரி அதுவும் ஒரு பாவனை தானே…” என்றாள். நான் உரக்க சிரித்துவிட்டேன். சிரிக்கச் சிரிக்க இருவரும் இயல்பான மனநிலைகொண்டோம். ஒயினும் இணைய ஒரு மெல்லிய மிதப்பு எங்களை ஆட்கொண்டது “இப்போது என்ன செய்ய வேண்டும்? நான் ஒரு கெய்ஷாவாக நடிக்க வேண்டும் அல்லவா?” என்றாள். “ஆம். கெய்ஷாவால் உபரிசிக்கப்படும் வணிகனாக நானும் நடிக்கிறேன்” என்றேன். அவள் எழுந்து பழைய ஜப்பானியய நடனஅசைவுகளுடன் ஜப்பானிய மொழியில் ஏதோ சொன்னாள். நான் சிரித்தபடி மெத்தையில் விழுந்துவிட்டேன். அவள் நிறுத்தி இடையில் கைவைத்து “ஏன்?” என்றாள். “கடந்து போனவை இந்த நிகழ்காலத்தில் அவை எல்லாம் கேலிப்பொருளாகத்தான் இருக்கும். இன்று டோக்கியோவின் தெருவில் ஒரு சாமுராயைப்பார்த்தால் மக்கள் அவருக்கு காசுகளை வீச ஆரம்பிப்பார்கள். அவர் தன் கடானாவால் முதுகைச் சொறிந்துகாட்டினால் அது அதற்கான கருவி என்று நம்புவார்கள்” அவள் சிரித்தபடி பாய்ந்து மெத்தையில் விழுந்து என் தோள்களைக் கட்டிக் கொண்டாள். உதடுகளில் உதடு பதித்து ஆழ்ந்து முத்தமிட்டாள். பின்பு என் மேல் கால் போட்டு ஏறி அமர்ந்து தோள்களைப்பற்றி என் கண்களுக்குள் நோக்கியபடி “எதற்கு பாவனை? எந்த பாவனையும் கிழித்து பார்க்கக்கூடிய புத்திசாலி நீங்கள். ” என்றாள். “ஆம் அதுதான் என்னுடைய பிரச்னை” என்றேன். அவள் “கிழித்து கிழித்து எங்கே செல்கிறோம். கடைசியில் கசப்பும் துயரமும் தான் இருக்கும். ” என்றாள். “யாருக்குமா?” என்று நான் கேட்டேன். “யாராக இருந்தாலும். கிழித்து சென்றால் விஷம்தான் மிஞ்சும்” என்று அவள் சொன்னாள் ஒருவரை ஒருவர் கண்களுக்குள் நோக்கிக் கொண்டோம். நான் அவளை சுழற்றி கீழே படுக்க வைத்து அவள் மேல் படர்ந்து. அவள் உதடுகளை முத்தமிட்டேன். மிகச்சிறிய உதடுகள். “மிகச்சிறியவை. எனக்கு இவை போதாது” என்றேன். “கற்பனையில் வளர்த்துக்கொள்ளுங்கள் அப்படித்தானே காமத்தில் செய்யவேண்டும்” என்றாள் அவள். சிரித்தபடி இருவரும் முத்தமிட்டுக் கொண்டோம். “நான் கெய்ஷா அல்ல, ஒர் எளிய பெண் என்று பாவனைசெய்வோம். நீங்களும் ஒரு எளிய பெண்ணை விரும்பி வந்த ஒருவர். இங்கு இப்படி உடலால் இணைந்திருப்பது நமக்குப் பிடித்திருக்கிறது. இதற்கப்பால் ஒன்றும் தேவையில்லை, என்ன சொல்கிறீர்கள்?” என்று அவள் சொன்னாள். நான் அவள் காதில் “கெய்ஷாவின் காமக்கலை என்கிறார்களே? அது உண்மையில் என்ன?” என்றேன். “இதுதான்” என்று அவள் சொன்னாள். “அன்றைய அரசர்கள் அடுக்கடுக்காக ஏராளமான பட்டு ஆடைகளையும் நகைகளையும் அணிந்திருப்பார்கள். உடைவாளையும் மணிமுடியையும் விலக்கவே மாட்டார்கள். பேசுவது எல்லாமே முறைமை சார்ந்த சொற்களைத்தான். அவர்களைச் சுற்றியிருக்கும் அத்தனை பேருமே அடிமைகளும், ஊழியர்களும், அவர்களுக்குச் சமானமான நிலை கொண்ட பிற அரசர்களும் தான். ஒவ்வொருவரிடமும் எப்படி பேசவேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வகுக்கப்பட்ட நெறிகள் இருந்தன. ” அவள் தொடர்ந்தாள். “அவர்கள் வாழ்வதில்லை, நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய காவியத்திற்குள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பேசுவதும் செய்வதும் உடனடியாக கவிஞர்களால் பதிவு செய்யப்பட்டு நூல்களாக வெளிவருகின்றன என்பதை அவர்கள் அறிவார்கள். காதலுக்கும் காமத்துக்கும் அவர்கள் செல்வது கூட பலவகையான வசனங்களை மனப்பாடம் செய்து பயின்று, பலவகையான நடிப்புகளைப்பழகிக்கொண்டுதான். மனைவிகளும் காதலிகளும்கூட அவர்களுக்கு அடிமைகள். அடிமைப்பெண்கள் அவர்களுக்கு பழக்கப்பட்ட விலங்குகள். செயற்கையான நாடக நடிப்பில் இருந்து தொடங்குவார்கள். அதன் மறு எல்லைக்குச் சென்று விலங்கு போல அந்தப்பெண்ணை கிழித்து கொன்று காமம் அடைவார்கள். ” “கெய்ஷாக்களிடம் வரும்போதும் அவர்கள் அந்த பாவனைகள் அனைத்தையும் கொண்டுதான் வருவார்கள். கெய்ஷா அவர்களின் அவர்களை அஞ்சாமலும் அவர்களின் ஆணைகளுக்குப் பணியாமலும் அதேசமயம் அவர்களை கோபம்கொள்ளச்செய்யாமலும் இருக்கும் திறமைகொண்டவள். அவர்கள் அணிந்துவரும் பாவனைகள் அனைத்தையும் களைந்து வெறும் மனிதனாக ஆக்கிவிடுவாள். அதன் பின் அவளுடன் உறவு கொள்ளும் போது அவர்கள் எளிய விலங்குகளாக இருப்பார்கள். அந்தச் சுதந்திரத்தை அவர்கள் வேறெங்கும் அனுபவித்திருக்க மாட்டார்கள். அப்படி ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களின் உண்மை உருவத்தை மீட்டு எடுக்கும் கலையைத்தான் கெய்ஷாக்கலை என்கிறார்கள். ” ”எனக்குள்ளிருந்து என் உண்மை உருவத்தை மீட்டெடு பார்ப்போம் என்று” நான் குறும்பாக சிரித்தபடி சொன்னேன். “கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறேன். காலைக்குள் முழுமையாக வெளியே எடுத்து வைத்துவிடுவேன் போதுமா?” என்று அவள் சொல்லி “என்ன கேள்வி” என்று செல்லமாக என்னை அடித்தாள். என் மூக்கைப்பிடித்து இழுத்து “என்னவேண்டும் உங்களுக்கு?” என்றாள் “நான் எங்கும் ஆடையின்றி நிற்கவே விரும்புவேன். ஆனால் ஆடையின்றி நிற்பதே கூட ஒரு பாவனைதான் என்று ஆகிவிடுகிறது” என்று நான் சொன்னேன். “ஆமாம். இங்கே வடக்கு பகுதிகளில் வெந்நீர் ஊற்றுக்கள் உண்டு. ஆன்சென் என்பார்கள் அங்கு ரெய்க்கோன் எனப்படும் நிர்வாணமாக அனைவரும் சேர்ந்து குளிக்கும் குளியல்மையங்கள் இருக்கின்றன. அங்கு சென்று பார்த்தால் தெரியும் நிர்வாணமென்பதே ஒரு ஆடை மாதிரி. நிர்வாணத்தாலேயே நம் நிர்வாணத்தை மறைத்துக்கொள்ளமுடியும்” “ஆடையில்லாமை என்பதுமட்டும்தான் அது. அதற்கு அப்பால் ஏதாவது நிர்வாணம் உண்டா என்ன?” என்று நான் கேட்டேன். ”ஆமாம் அது புத்தர் சொன்ன நிர்வாணம்” என்றாள். “அடப்பாவி அதையா இப்போது எனக்கு அளிக்கப்போகிறாய்? அதற்கா அவ்வளவு பணம் வாங்கிக் கொண்டாய்?” என்று நான் செல்லமாக அலறினேன். “சரியான முட்டாள்” என்றபடி என் தோளை ஓங்கி அறைந்தாள். “அடிக்கிறாய்…” என்று சிணுங்கினேன். ”கெய்ஷாக்கள் அடிப்பதும் உண்டு. வசைபாடுவதும் உண்டு. மன்னர்களுக்கு அது பிடிக்கும். அவர்களை வேறுயார் அடிக்கமுடியும்?” என்றாள். ”இப்போது என்னை என்ன செய்யப்போகிறாய்?” என்றேன். “உங்களை கொஞ்சப்போகிறேன். நீங்கள் ஒரு ஆண். கொஞ்சி கொஞ்சி உங்களை ஒரு கைக்குழந்தையாக்குவேன். என் மடியில் போட்டுக் கொள்வேன். ” என்றாள். நான் அவள் காதில் “பால் கொடுப்பாயா…?” என்றேன். “சீ” என்று அவள் என் தலையில் கொட்டினாள். நுணுக்கமான கொஞ்சல்கள், பாவனைகள், பரிமாறுதல்கள் வழியாக எங்கள் உடல்களை ஒன்றை ஒன்று அறியச் செய்தோம். பின்னர் பேச்சு நின்றது. பின்னர் பார்வைகளும் இல்லாமல் ஆயின. உடல்கள் மட்டும் ஒன்றை ஒன்று அறிந்தன. பிற எந்தக் காமத்தையும் போலத்தான் அது என்று ஒரு தருணமும், அது மிக விசேஷமானது என்று இன்னொரு தருணமும் தோன்றிக்கொண்டிருந்தது. எல்லாக் காம உறவைப்பற்றியும் அப்படித்தானே தோன்றும் என்றும் நினைத்துக் கொண்டேன். அவள் என் உடலுடன் ஒட்டிக் கொண்டு தன் முகத்தை என் தோளில் புதைத்து படுத்துக் கொண்டாள். மஞ்சள் இனத்தவருக்கே உரிய கரிய பளபளப்பு கொண்ட தலைமுடி. சிறிய காது. சற்றே உந்திய கன்ன எலும்புகள். மெலிந்த அவள் தோள்களை கைகளால் வருடிக் கொண்டு படுத்திருந்தேன். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சொல்லவா?” என்று கண்களை மூடியபடி சொன்னாள். “சொல்” என்றேன். “இதுவும் பிற எந்தக் காமத்தையும் போலத்தானே இதற்கா இவ்வளவு பெரிய தொகை…?” என்றாள். “பொய்” என்று நான் அவளை தட்டினேன். “இந்த தருணத்தில் பணத்தை பற்றி நினைக்கும் அளவுக்கு நான் கீழ்மையானவன் அல்ல” என்றேன். “நான் அப்படி சொல்லவில்லை. கெய்ஷா என்ற வார்த்தை அதைப்பற்றிய கதைகள் இதெல்லாம் உங்களுக்கு ஏமாற்றுவேலை என்று தோன்றிவிட்டது. அல்லவா?” என்றாள். “இல்லை இந்த ஒரு தருணத்தை அழகாக்க அவை எப்படியோ உதவியிருக்கின்றன. ” என்றேன். “என்ன சொன்னாலும் இது சாதாரணமானதுதான், அதை மறைக்கமுடியாது” என்றாள் அவள். “இல்லை” என்றபடி நான் அவள் கழுத்தில் முத்தமிட்டேன். அவள் என் காதில் ”நான் ஒன்று சொல்லவா. . ?” என்றாள். “சொல்” என்றேன். “நான் கெய்ஷா இல்லை” என்றாள். “தெரியும்” என்று நான் சொன்னேன். “எப்படி?” என்றாள். “நீ உள்ளே வந்த போதே தெரியும். அல்லது அவன் உன்னை அழைக்க செல்லும்போதே தெரியும்” என்றேன். அவள் பெருமூச்சு விட்டாள். ”நன்றி” என்றாள். “ஏன்?” என்றேன். “நான் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என்ற குற்ற உணர்வில் இருந்தேன். இப்போது அது இல்லை” என்றாள். நான் “என்னை அவ்வளவு எளிதாக யாரும் ஏமாற்ற முடியாது பல ஏமாற்றங்களையும் பார்த்து வருந்தி அழுது பழகியபடித்தான் தொழிலில் வேரூன்றினேன். ஊடகத்தொழில் இன்று அரசுடன் செய்யும்போர் போல” என்றேன். “அப்படியானால் சரி” என்று அவள் சொன்னாள். “நீ என்ன படிக்கிறாய்?” என்று நான் கேட்டேன். “இலக்கியம்” என்றாள். “எந்த மொழி?” என்றேன். “ஜப்பானிய மொழி. ஆங்கில இலக்கியமும் இணைந்து தான் இங்கே பாடத்திட்டம்” என்றாள். நான் “இலக்கியத்தில் எனக்கும் ஈடுபாடு உண்டு. ஒரு இலக்கியப் பேராசிரியனாகத்தான் என்னை சின்ன வயதில் கற்பனை செய்து கொண்டேன். ” என்றேன் ”நீங்கள் இலக்கியம் படித்தீர்களா?” என்றாள். “இல்லை நான் வணிகவியல் தான் படித்தேன். பெரிய இலக்கியவாதி ஆகிவிடவேண்டும் என்ற கனவு இருந்தது. கூடவே புகழ் பெற்ற பேராசிரியராக வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அதன்பின்னர்தான் இதழியல். அது என் குலத்தொழில்” என்றேன். “பேராசிரியராக இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்களா?” என்று அவள் கேட்டாள். ”இப்பொழுது நான் மகிழ்ச்சியாக இல்லை என்று யார் சொன்னது. இதழாளர்கள் இதழாளர்த்தொல்லை இல்லாத பிரமுகர்கள். அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கமுடியும். ” என்றேன். அவள் சிரித்தபடி ”அது சரிதான்” என்றபடி என்னை மீண்டும் அணைத்துக் கொண்டாள். அவள் மார்புகள் மிகச்சிறிதாக, இல்லையென்றே சொல்லத்தக்கவையாக இருந்தன. இடைக்குக்கீழே கூட சிறுவர்களுக்குரியவை போல வளராமல் இருந்தது. என் எண்ணத்தை புரிந்துகொண்டு அவள் ”உங்கள் ஊர்பெண்கள் கைகளும் இடைகளும் மிகப்பெரியவை அல்லவா?” என்றாள். “ஆம் இடுப்பும் மார்புகளும் கூடப்பெரியவை தான்” என்றேன். “ஆகவே தான் மாறுதலுக்காக கிழக்கு நோக்கி வருகிறார்கள் போல…” என்றாள். “இங்கிருந்து யாரும் அங்கே வருவதில்லையே” என்றேன். “ஆம் பயந்து கொள்கிறார்கள் என நினைக்கிறேன்” என்று சொல்லி அவள் சிரித்தாள். இருவரும் மீண்டும் கொஞ்சம் உடல்குலவினோம். நான் அவளிடம் “யசுநாரி கவபத்தாவின் தூங்கும் அழகிகளின் இல்லம் நினைவுக்கு வந்தது” என்றேன். “நினைத்தேன். கெய்ஷாக்களைப்பற்றி அவருடைய பனிபூமி என்ற நாவலில் படித்திருப்பீர்கள். ” என்றாள். “ஆம் நீ இங்கு வருவதற்கு முன் அந்த நாவலைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ” என்றேன். என் கழுத்தை வளைத்து “இதற்குப் பிறகு ஏன் தூங்கும் அழகியை நினைத்தீர்கள்?” என்றாள். “அதில் வயதான ஒருவர் தன் உடலில் வற்றிக் கொண்டிருக்கும் உயிர்ச் சக்தியை மீட்டெடுத்து ஆயுளைக் கூட்டுவதற்காக இளம்பெண்களுடன் படுத்துக் கொள்ளும் வசதி செய்யும் ஒரு ரகசிய விடுதிக்கு வருகிறார் அல்லவா…?” என்றேன் “ஆம், வயதான எகுச்சி” என்று விழிகளில் சிரிப்பு எஞ்சியிருக்க அவள் சொன்னாள். ”மயக்கமருந்து கொடுக்கப்பட்ட பெண்களை அவருடன் படுக்கவைக்கிறார்கள். இரு நிர்வாணப் பெண்களின் நடுவே எகுச்சி படுத்திருக்கிறார். அவர் உடலில் அவர்களின் உயிர் வந்து சேர்ந்து ஆண்மை அதிகரிக்கும் என்று நம்புகிறார். ஆனால் அதில் ஒரு பெண் மயக்கமருந்து மிகையாகி இறந்துவிட்டிருப்பாள். அன்று இரவு முழுக்க பிணத்துடன் தான் படுத்திருந்தார். ” என்றேன் அவள் முகம் சிறுத்தது. தலை குனிந்து கைவிரல்களால் என் விலாவில் வருடிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கி குனிந்து “என்ன?” என்றேன். “ஒன்றுமில்லை” என்றாள். தலையாட்டியபோது முடிக்கற்றை சரிந்து விழிகளை மறைக்க அள்ளிப்பின்னுக்குப் போட்டுக்கொண்டாள். “இல்லை, உன் மனம் மாறிவிட்டது” என்றேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்” என்றே என் கண்களைப்பார்த்து, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரிகிறது” என்றாள். “நான் சாதாரணமாக நினைவுக்கு வந்த கதையைத்தானே சொன்னேன்” என்றேன். ஏன் அந்தக் கதை நினைவுக்கு வருகிறது?” என்றாள். “ஏன்?” என்று நான் அவளைக் கேட்டேன். அவள் அழுத்தமான குரலில் “பிணத்துடன் தூங்குதல்…” என்றாள். அவள் என்ன உத்தேசிக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு நான் அவளை இறுக அணைத்து “இல்லை, நான் அப்படி எதையும் உத்தேசிக்கவில்லை” என்றேன். “பரவாயில்லை” என்று அவள் சொன்னாள். “இல்லை நான் உண்மையிலேயே அப்படி எதையும் எண்ணவில்லை” என்றேன். “இங்கு ஒரு சொல் உண்டு. விபச்சாரியுடன் உறவு கொள்வது பிணத்துடன் உறவு கொள்வது போல…” என்றாள். “நம்பு நான் அப்படி உத்தேசிக்கவில்லை” என்று அவளை இறுக அணைத்தேன். “சத்தியம்” என முத்தமிட்டேன். “நீங்கள் எண்ணவில்லை. ஆனால் உங்கள் உள்ளம் உணர்ந்தது” என்றாள். “இல்லை உண்மையிலேயே இல்லை” என்று அவள் கைகளைப்பற்றிச் சொன்னேன். “நான் எங்குவேண்டுமானாலும் சத்தியம் செய்கிறேன் உண்மையிலேயே இல்லை. இந்த இரவில் உன்னுடன் மிக நெருக்கமாகத்தான் உணர்ந்தேன். இவ்வளவு நெருக்கமாக எந்தப்பெண்ணிடமும் நான் உணர்ந்ததே இல்லை. ” என்றபோது என்குரல் சற்று உடைந்தது. “இதை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. ஒரு வாடிக்கையாளன் விபச்சாரியை எந்த வகையிலும் சமாதானப்படுத்தவேண்டிய அவசியமில்லை” என்றாள். “நான் உண்மையில் அப்படி எண்ணவில்லை நான் இதற்குமேல் எப்படி சொல்லவேண்டும்…?” என்று என்னை மீறி எழுந்த உணர்ச்சியுடன் சொன்னேன். அவள் “நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை மறந்து விடுங்கள்” என்றாள். “இல்லை நீ அப்படி நினைக்கிறாய் என்பது எனக்கு பதட்டத்தை உருவாக்குகிறது. நான் அப்படி நினைக்கவே இல்லை. ” என்றேன் அவள் அதைக்கேளாதவளாக குனிந்தே இருந்தாள். கரிய பளபளக்கும் முடியால் முகம் மூடியிருந்தது. சட்டென்று ஒரு விசும்பல் ஒலி. வேறெங்கோ எவரோ அழுவதுபோல அதைக்கேட்டேன். அவள் என் மார்பில் முகம் புதைத்து விசும்பி அழத்தொடங்கினாள். மேலும் சற்று நேரம் கழிந்து தான் அவள் அழுகிறாள் என்பதே புரிந்தது. அவளை விலக்கி “அழுகிறாயா? ஏன்?” என்றேன். புரண்டு தலையணையில் முகம் புதைத்து உடல்குலுங்க அழத்தொடங்கினாள். நான் அவளை திருப்பி “சொல் ஏன் அழுகிறாய் நான் என்ன தவறாக சொல்லிவிட்டேன் தவறாக சொல்லியிருந்தாலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றேன். “மன்னிப்பா? நீங்களா? நான்தான் மன்னிப்புகோரவேண்டும். நான் சரியாக நடந்து கொள்ளவில்லை” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றேன். கண்ணீர்த்துளிகள் நின்ற இமைகளுடன் “அவ்வளவு பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதிதான் எனக்கு வரும். ஆனாலும் என் கடமை. அவர்கள் என்னிடம் சொன்ன எதையும் நான் செய்யவில்லை” “இல்லை” என்று ஏதோ சொல்லப்போனேன். “நான் கெய்ஷாவாக நடிக்கவில்லை. உங்களை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை” என்றாள். “இல்லை அப்படி அல்ல” என்று நான் அவள் தோளைப்பற்றி உலுக்கி சொன்னேன். அவள் அழுகை சட்டென்று மேலும் வலுத்தது. உடலை நன்றாக குறுக்கிக் கொண்டு சிறுகுழந்தை போல அழுதாள். நான் அவள் தோளைத் திருப்பி முகத்தை பார்த்து ”இதற்கு மேல் நான் என்ன சொல்லவேண்டும். நான் உண்மையில் எதையும் நினைக்கவில்லை” என்றேன். “ஆம் பிணம்தான். அப்படித்தான் நான் எல்லாரிடமும் இருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அப்படி இருக்கவில்லை. மற்ற அனைவரும் பிணமென்று என்னை நினைக்க வேண்டும் என்றே உண்மை நினைப்பேன்.ஆனால் நீங்கள் அப்படி நினைப்பது என்னைப் புண்படுத்துகிறது” முகத்தை துடைத்து கூந்தலை அள்ளி பின்னால் குவித்து கழற்றிவைத்த கிளிப்பை டீபாயிலிருந்து எடுத்து அணிந்துகொண்டாள். மெல்ல அமைதியானாள் “நீங்கள் என்னை பெண் என்று நினைக்கவேண்டும் என்று நினைத்தேன், நீங்கள் என்னை பிணம் என்று நினைக்கிறீர்கள்…” என்றாள். “இல்லை இல்லை…. ” என்று அவள் கன்னங்களிலும் இதழ்களிலும் முத்தமிட்டுச் சொன்னேன். “நான் மிகமிக ஏழை. நாங்கள் ஒன்பது பேர் ஒரே அறையில் வசிக்கிறோம். என் மூன்று இளையவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது படிப்பை முடித்து ஒர் ஆசிரியர் வேலைக்கு சென்றால் இதிலிருந்தெல்லாம் மீள முடியும் என்று நினைத்தேன்” என்று அவள் சொன்னாள் “நாங்கள் கெய்ஷா குடும்பம் அல்ல. எனது மூதாதையர்கள் கிராமத்தில் விவசாயம் செய்தார்கள். அங்கிருந்து பிழைப்பு தேடி டோக்கியோவுக்கு வந்தோம். இங்கே எல்லாமே விலை உயர்ந்தவை. உடலை நன்றகா விரித்து படுத்துக் கொள்வதற்கான ஒர் இடத்திற்காக மாதம் முழுக்க வேர்வை சிந்த வேண்டும்” நான் அவள் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். அழுதபோதிருந்ததை விட இப்போது மேலும் துயர்கொண்டிருந்தது அவள்முகம். சிறிய தந்தச்சிமிழ் போன்ற முகம். “அப்பா இருந்த வரைக்கும் நாங்கள் உழைத்து தான் வாழ்ந்தோம். அப்பா இறந்து அம்மாவுக்கும் குதிகால் வலி வந்து நிற்க முடியாமல் ஆனபோது அக்காவுக்கும் எனக்கும் வேறு வழி தெரியவில்லை. அப்போதுதான் இவர்களின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் எனக்கு கொடுப்பது மிகச்சிறிய தொகைதான். அதற்கு அவ்வளவு அவமானம்…” கண்களைத் துடைத்துக் கொண்டு “இதையெல்லாம் நான் சொல்லக்கூடாது. சொன்னேன் என்று தெரிந்தால் அவர்கள் என்னைத் தண்டிப்பார்கள்” என்றாள். “இல்லை நான் யாரிடமும் சொல்லப்போவதில்லை. ” என்றேன். அவள் பெருமூச்சுடன் “இதை நான் ஏன் சொல்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. யாரிடமும் இதைச் சொன்னதில்லை இந்தக் கெய்ஷாவின் வீட்டுக்கு நீங்கள் வந்தீர்கள் என்றால் ஐந்து நிமிடம் அங்கே இருக்க உங்களால் முடியாது. ஒரே அறையில் எட்டு பேர் வாழும்போது அது பன்றித் தொழுவம் போல் ஆகிவிடுகிறது.” என்றாள். ”என்னை மன்னித்துவிடு” என்று சொல்லி அவள் இடையை வளைத்து “நான் இதெல்லாம் ஓரளவுக்கு இப்படித்தான் என்று ஊகித்திருந்தேன். ஆனால் எங்கோ எனக்கு ஒர் அகங்காரம் இருந்திருக்கிறது. உன் தோரணையைப் பார்த்தபோது உன்னை உடைத்து உன்னை அழவைக்க வேண்டும் என்று அது ஆசைப்பட்டிருக்கிறது. நீ மனமுடைந்து அழுவதைப் பார்த்தபோது எனக்கு எவ்வளவு நிறைவு வருகிறது என்று கவனித்தேன். அப்போதுதான் என்னைப்பற்றி நானே தெரிந்து கொண்டேன். என்னையே நான் வெறுத்தேன்” என்றேன். அவள் என்னை அணைத்துக் கொண்டு ”பரவாயில்லை ஆண்களின் இயல்பு தானே அது? வலிக்க வைக்காத ஆண் என்று உலகத்தில் யாரும் இல்லை என்று என் அம்மா சொல்வார்கள்” என்றாள். பின்பு என் கண்களைப்பார்த்து ”ஒன்று மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்” என்றாள். “சொல்” என்றேன். “நான் பிணமில்லை” என்றாள். ”நான் அப்படி சொல்லவில்லை” என்றபடி நான் அவளை முத்தமிடத்தொடங்கினேன். என் கைகளில் அவள் உருகித் திரவமாக ஆகப்போகிறவள் போல குழைந்தாள். “நான் பெண். . நான் பெண். . ” என்று முனகிக் கொண்டிருந்தாள். அம்முறை முற்றிலும் புதிய ஒரு பெண்ணுடன் இருந்தேன். முதல் பெண்ணிடம் போல. பூமியில் மனிதர்களே இல்லாத போது தனித்து விடப்பட்ட இருவரைப்போல. அடுத்த கணம் இறந்து விடப்போகிறவர்களைப்போல. பின்பு தழுவியபடி படுத்திருக்கும்போது அவள் இமைகளில் கண்ணீர் படிந்திருந்தது. மூடிய இமைகளின் விளிம்பில் மயிர் வெண்ணிறப்பீங்கான்மேல் மயிற்பீலி விளிம்பு போல படிந்திருந்தது. அதை என் கைகளால் தொட்டு வருடியபோது அதிலிருந்த ஈரம் தெரியவந்தது. “மீண்டும் அழுதாயா?” என்றேன். “இல்லை” என்றாள். “கண்ணீர் இருக்கிறது” என்றேன். “அழுதால்தான் கண்ணீர் வருமா…?” என்றாள். இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன. “இல்லை” என்றபின் அவளை மீண்டும் அணைத்துக் கொண்டு அவள் காதில் “நானும் அழுதேன்” என்றேன். ”உண்மையாகவா…?” என்றாள். “ஆம், நான் அழுதே நிறைய வருடங்கள் ஆகிறது” என்றேன். என் காதில் என் உடலுக்குள் இருந்தே பேசுவதுபோல “எத்தனை வருடங்கள். . ?” ஒரு கணம் தாளமுடியாத அழுத்தத்தில் திளைத்து மெல்ல விடுபட்டு “இருபது வருடங்கள்” என்றேன். “உங்கள் மனைவி இருக்கிறார்களா. . ?” என்று கேட்டாள். “பிரிந்து போய்விட்டாள்” என்றேன். “மன்னிக்கவேண்டும் நான் அதைக் கேட்டிருக்ககூடாது” என்றாள். “இல்லை, பரவாயில்லை, நீ அறியவிரும்புவதைக்கேள்” என்று நான் சொன்னேன். “வேண்டாம், உங்களுக்கு அது துயரளிக்கிறது” என்றாள். “இல்லை நான் எவரிடமும் சொன்னதில்லை. உன்னிடம் சொல்லியாக வேண்டும்” என்றேன். “வேண்டாமே. நாம் ஓர் உயரத்தில் இருக்கிறோம். அதிலிருந்து ஏன் கீழிறங்க வேண்டும்?” என்றாள். “இது கீழிறங்கல் அல்ல. இந்தச் சுமைகளை இறக்காவிட்டால் நான் எப்போதும் மண்ணில் தான் நின்று கொண்டிருப்பேன்” என்றேன். “சொல்லுங்கள்” என்று என்னை அணைத்து என் தலைமயிரை வருடத்தொடங்கினாள். நான் என் அப்பாவின் பங்குதாரரின் மகளை இளமையிலேயே மணக்கவேண்டியிருந்தது. ஒரு ஆடம்பரமான அசட்டு நாடகம் போல நடந்த எங்கள் திருமணம். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் வளர்ந்து வந்த மனக்கசப்புகள். சிறுமைசெய்யப்பட்டபோது நான் அடைந்த வன்முறை வெறி. நான் வணிகத்தில் வெற்றி பெறும் தோறும் என் மனைவி அடைந்த ஏமாற்றம். அவள் தன் அடிமையாகவே என்னை வைத்திருக்க வேண்டுமென்று அவள் எடுத்த முயற்சிகள். இறுதியில் ஒரு குழந்தையுடன் அவள் பிரிந்து சென்றது. அதற்குப்பிந்தைய ஆழ்ந்த மனக்கசப்பு “பெண்கள்மீதான கடும் கசப்பாலேயே நான் காமத்தில் திளைத்தேன்” என்றேன். “ஆம், பலர் அப்படித்தான்” என்றாள். “நான் செய்தவை எல்லாம் அவளுக்கு எதிரானவை. எதற்கு எதிராக செயல்பட்டாலும் சரி எதிர்மறைச்செயல்பாடு கடைசியில் ஏமாற்றத்தை மட்டுமே எஞ்சவைக்கிறது” அவள் என்னை மென்மையாக முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள். ஒருவார்த்தை கூட சொல்லக்கூடாது என்று அறிந்திருந்தாள். நான் பெருமூச்சுவிட்டு மெல்ல கண்களை மூடி தளர்ந்தேன். என் இமைகள் நனைந்திருந்ததை அவள் தன் விரல்களால் தொட்டு “ஈரம்” என்றாள். “ஆம்” என்றேன். “தூங்குங்கள்” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்றபடி அவள் தோளில் முகம் புதைத்துக்கொண்டேன் உறக்கம் வந்து என் எண்ணங்களை நனைந்து படியச் செய்வதற்கு முன்பு “நீ என்னுடன் இரு” என்றேன். என் உதடுகள் அவள் தோளில் கசங்கியமையால் குரல் போதையிலென ஒலித்தது. “சரி” என்று அவள் சொன்னாள். “என்னிடம் பணம் இருக்கிறது. உனக்கு வேண்டியதை எல்லாம் நான் தருகிறேன். நீ என்னுடன் இருந்தால் போதும்” அவள் என் கனவுக்குள் என “சரி” என்றாள். என் உள்ளம் உருகிக்கொண்டிருந்தது. கண்ணீர் அவள் தோள்களில் கழுத்தில் விழுந்தது. மூக்கை உறிஞ்சிக்கொண்டேன். அடைத்த தொண்டையைச் செருமி “நீ என்னுடன் இருக்கவேண்டும்…” என்றேன். “ம்” என்றபோது அவள்குரலும் அடைத்திருந்ததை உணர்ந்தேன். முத்தமிட்டபோது அவள் கண்ணீர் என் முகத்தில் படிந்தது “நான் இன்னொரு மனித உயிருடன் இத்தனை நெருக்கமாக ஆவேன் என்று நம்பவே இல்லை. எனக்கு யாருமில்லை. நீ என்னுடன் இருந்தே ஆகவேண்டும்” என்றேன். அவள் மூச்சொலிபோல் “இருப்பேன்” என்றாள். ”இறுதி வரை…?” என்ரேன். ”இறுதி வரை” என்றாள். அவளது அணைப்பில் முத்தங்களுடன் நான் துயின்றேன். காலையில் எழுந்தபோது எனது ஆடைகள் அருகே குறுமேடைமேல் மடித்து வைக்கப்பட்டிருந்தன. கைக்குட்டைகள் குறுந்துவாலைகள் எல்லாமே சீராக அடுக்கப்பட்டிருந்தன. காலைச்செய்தித்தாள் காத்திருந்தது. ஒரு பெண் வந்து போனதற்கு தடயமே இல்லாமல் சீராக இருந்தது அறை. https://www.jeyamohan.in/90446/?fbclid=IwdGRleAOivjtleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEefOHACDTwVR1IGZdDI3iMUUkyBDa8hiTuE9UMQXfxasmb_3FtnaEbMELEwjM_aem_N0Q_r5uLV3bqeex1S7GMiw1 point
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அன்று இனக்கலவரத்தினால் அடியுண்டு சிதறுண்ட மக்களை காந்தீயம் என்கிற அமைப்பு வரவேற்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து குடியமர்த்தினர். ஆனாலும் கணிசமான மக்கள் மீண்டும் தமது பழைய இடங்களுக்கு சென்றனர். ஒரு இடத்தில வாழ்ந்து பழக்கப்பட்டவர்களை திடீரென வேறொரு இடத்திற்கு மாற்றுவது அவர்களின் இயல்பான வாழ்வை பாதிக்கும், அதோடு ஆண்டாண்டு காலமாக நாட்டுக்காக உழைத்து ஓடாகிப்போன அவர்களுக்கு வேண்டிய நிவாரணத்தை கொடுத்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டியது அரசின் கடமை. இவர்களை நாம் வரவேற்பது பிரச்சனையல்ல, அவர்கள் எமது தயவில் வாழ வேண்டிய நிலையிலும் சங்கடத்திலும் வாழ்வதிலும் பார்க்க அவர்களுக்குரிய நஷ்ட ஈடு கொடுக்கப்படவேண்டும், வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும், அதற்கு அவர்கள் உரித்துடையவர்கள். அவர்களுக்கு சேரவேண்டிய உரிமைகளை தடுத்து, தடங்கல்களை ஏற்படுத்தி அரசின் கடமைப்பாட்டிலிருந்து வலிய விலக்கிக்கொள்வதாக அமையும். அவர்கள் பெற வேண்டிய நிவாரணங்களை நஷ்ட ஈட்டைப்பெற முழு உரித்துமுடையவர்கள் அது அவர்களது உரிமை. அதை தடுத்து பரோபஹாரம் செய்கிறோம் எனும் பெயரில் ஏதிலிகளாக்காமல் இருந்தால் சரி. அதன் பின் அரசும் தனது கடமையிலிருந்து அவர்களை கைகழுவி விடும். பிறகு அவர்களுக்கு எந்த ஆதரவுமில்லாமல் போய்விடும். தமிழரசியல் வாதிகள் தமது மக்களையே அவர்களின் தேவைகளையே கவனிப்பதில்லை இதில் இவர்களை அழைத்து வாழ வைத்து விடுவார்கள். மனோ கணேசன் தனது கடமையிலிருந்து இலகுவாக தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்.1 point