Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    8917
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    88127
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19253
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7082
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/23/25 in all areas

  1. பாரபட்சமற்ற இனவாதம் நாடு : சிறிலங்கா காலம் : ஆனி, 2000 ப‌ல்கலைக்கழகத்தில் இறுதிப் பரீட்சைக்காக தயாராகிக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள். பல்கலைக்கழக விடுதியில் இருந்து சுமார் 5 நிமிடத்தில் நடந்து செல்லக்கூடிய, பல்கலைக்கழக குடிசார் (சிவில்) பீடத்தின் மண்டபங்களின் விறாந்தைகளில் தமிழ் மாணவர்கள் தனியாகவோ, குழுக்களாகவோ இருந்து படித்துக்கொண்டிருந்தோம். சிங்கள மாணவர்கள் அவ்வேளைகளில் அப்பகுதிக்கு வருவது மிகவும் குறைவு, காரணம் எமக்குத் தெரியாது. இரவு பத்து மணியை கடந்திருந்தது. அன்று மாலை சொய்சாபுர தொடர்மாடியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் அப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரும், சந்திரிக்கா அம்மையாரின் வலதுகரமாகச் செயற்பட்டு வந்தவ‌ரும், பிரபல இனவாதியுமான சி வி குணரத்ண கொல்லப்பட்டிருந்தது எமக்குத் தெரியும். வெள்ளவத்தைப் பகுதிக்கு இரவு உணவு வாங்கிவரச் சென்றிருந்த ஒரு சில தமிழ் மாணவர்கள் இரவு நெடுநேரமாகியும் விடுதி திரும்பாதது எமக்கு சற்றுக் கவலையைத் தந்திருந்தது. ஆகவே இவைபற்றிச் சிறிது நேரம் பேசிவிட்டு பழையபடி எமது பாடங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டோம். மிகவும் நிசப்தமான அந்த இரவு வேளையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு சத்தம் கேட்கத் தொடங்கியது. அது பலர் ஒன்றாக ஆத்திரப்பட்டுக் கத்திப் பேசும் சத்தம். அச்சத்தம் நேரம் ஆக ஆக, நாமிருந்த மண்டப‌ விறாந்தை நோக்கி நகர்ந்து வருவதை நாம் உணர்ந்துகொண்டோம். எம்மில் சிலருக்கு ஆச்சரியம், இன்னும் சிலருக்கு அச்சம். என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிட நாம் அமர்ந்திருந்த இருக்கைகளை விட்டெழுந்து மண்டப வாயிலை நோக்கிச் செல்லத் தொடங்கினோம்.
  2. இதில் வழக்கு போட்டவர் சுமன்னால் போன தேர்தலுக்கு உள்ளீர்க்கப்பட்ட “கிட்டு” என்கின்ற கிருஸ்ணவேணி என நினைக்கிறேன். நிழலிக்கும் தெரிந்தவர்தான் என நினைக்கிறேன். இந்த வழக்கை போட அவருக்கு முடியாது எனில் மாநகரசபை அல்லது பசுமை அமைப்புகள் போடலாம். இந்தியாவின் பசுமை தீப்பாயம் போல கொழும்பிலும் ஒரு அமைப்பு உள்ளது. ரிசார்ட் வில்பற்றில் போட்ட கள்ள ரோட்டில் அது தலையிட்டது. சுமனை குறை சொல்வதே பிறவி கடன் என இராமல் - இப்படி ஏதும் அல்லது மேன்மிறையீட்டுக்கு முயலாலம். சுமன் இதையாவது செய்தார்…. கஜன், சிறிகந்தா, மணி, தவராசா….எல்லாரும் லோயர்தானே? ஒரு துரும்ப்பைதன்னும் தூக்கி போட்டவையோ?
  3. நாம் மண்டப வாயிலை அடைந்தபோது, சத்தமாகக் கூக்குரலிட்டபடி வந்த கூட்டமும் அப்பகுதியினை அடைந்திருந்தது. சுமார் 40 அல்லது 50 பேர் அடங்கிய அந்தக் கூட்டத்தில் இருந்த முகங்களில் பெரும்பாலானவர்களை எனக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர்கள் என்னுடன் கூடவே கல்விகற்கும் இறுதியாண்டின் சிங்கள மாணவர்கள். அவர்கள் அனைவரது கைகளிலும் கட்டில்ச் சட்டங்கள், பொல்லுகள், கதிரைகளின் கால்கள் என்று ஏதாவதொரு ஆயுதம் காணப்பட்டது. முன்னால் வந்தவன் காலியைச் சேர்ந்தவன். மின்னியல்க் கற்கை நெறியில் பயின்றுவருபவன். பல்கலைக்கழகத்தில் நான் இருந்த நான்கரை ஆண்டுகளில் என்னுடன் பலமுறை பேசியிருக்கிறான். மிகவும் பரீட்சயமானவன். ஆகவே, என்னதான் நடக்கிறது என்று அறிய அவனுடன் பேச்சுக் கொடுத்தேன். "என்ன நடக்கிறது? ஏன் கைகளில் பொல்லுகளுடன் திரிகிறீர்கள்? யாரைத் தேடுகிறீர்கள்" என்று சிங்களத்தில் சகஜமாகக் கேட்டேன். அவனது முகம் கோபத்தில் அமிழ்ந்திருந்தது தெரிந்தது. எனது கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் மன நிலையில் அவன் இருக்கவில்லை. எனது கையை இறுகப் பிடித்துக்கொண்ட அவன், தன்னுடன் வந்திருப்பவர்களை நோக்கி "அப்பகுதியில் வேறு யாரும் தமிழ் மாணவர்கள் இருக்கிறார்களா என்று பார்" என்று சிங்களத்தில் கத்தினான். அப்போதுதான் அவனும் அவனது தோழர்களும் வந்திருப்பது எம்மைத் தேடித்தான் என்பது எனக்குப் புரிந்தது. ஆனாலும் "எதற்காக எனது கையைப் பிடித்திருக்கிறாய், எங்கே என்னை அழைத்துச் செல்கிறாய்?" என்று என்னை இழுத்துக்கொண்டு சென்ற அவனைப் பார்த்து மறுபடியும் கேட்டேன். "ஒன்றுமில்லை, பல்கலைக்கழகத்தின் முன்றலுக்கு எங்களுடன் வா, உன்னையும் உனது தமிழ் நண்பர்களையும் விசாரிக்க வேண்டும்" என்று ஒரு குற்றவாளியுடன் பேசுவது போலக் கூறினான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "மச்சான், என்னைத் தெரியவில்லையா உனக்கு?" என்று நான் அதிர்ச்சியுடன் கேடபோது, "தெரியாது" எனுமாப்போல் தலையை ஆட்டிவிட்டு என்னை தொடர்ந்தும் இழுத்துக்கொண்டு செல்ல, அவனின் நண்பர்களில் சிலர் இன்னும் நான்கு அல்லது ஐந்து தமிழ் மாணவர்களை இழுத்து வந்துகொண்டிருந்தார்கள். இத்தனை ஆண்டுகள் அவர்களுடன் கூடவே படித்துவந்த எம்மை, ஏதோ குற்றவாளிகளைப் பிடித்து விட்டதுபோல் அவர்கள் நடந்துகொண்டது எமக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கி விட்டது. என்னதான் ஒன்றாகப் படித்து, சிங்களத்தில் எவ்வளவுதான் பேசினாலும் இனவாதம் என்று வரும்போது எவருமே விதிவிலக்கல்ல என்பதும், தமிழர்கள் எல்லோருமே எதிரிகள்தான் என்று நடந்துகொள்வதும் அவர்களின் இயல்பு என்று எனக்குப் புரிந்தது. நான் பேசும் எதையும் அவன் செவிகொடுத்துக் கேட்கப்போவதில்லை. என்னை சக மனிதனாக நடத்தக்கூடிய மனநிலையிலும் அவனோ அவனுடன் கூடவிருந்தோரோ அன்று இருக்கவில்லை. புலிகளை உயிருடன் பிடித்துவிட்டோம் என்கிற பெருமிதத்தோடு பல்கலை வாயிலை நோக்கி எம்மை இழுத்துக்கொண்டு சென்றது எம்முடன் கூடவே படித்த சிங்கள மாணவர் கூட்டம்.
  4. 2016 இல் அச்சில் வந்த ஒரு புத்தகம், அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்குக் குடி பெயர்ந்த எழுத்தாளர் பில் பிறைசனுடையது (Bill Bryson) வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவர் தரும் தகவலின் படி பிரிட்டனில் 1800 களில் இருந்தே ஒரு சட்டம் நகர அமைப்புத் தொடர்பாக இருக்கிறதாம். எந்த வகையான நகர அபிவிருத்தியின் போதும் ஒரு பசுமை வலயம் (Green Belt) நகரைச் சூழப் பேணப் பட வேண்டும் என்ற சட்டம் அது. இதனால் தான் லண்டனில் இருந்து 20 - 30 கிமீ தூரத்திலும் பசுமையான வனங்களையும், வெளிகளையும் காண முடிகிறது என்கிறார். ஐரோப்பாவின் ஏனைய சில நகரங்களும் அப்படியாகத் தான் இருக்கின்றன போலும். மத்திய பேர்லினில் பரபரப்பான வீதியில் இருந்து விலகி அடர் மரங்கள் கொண்ட பிரதேசங்களுக்குள் இறங்கி நடந்து மீண்டும் இன்னொரு பர பரப்பான நகர மத்தியை அடையலாம். போலந்தின் வட கிழக்கில் பாதுகாக்கப் பட்ட ஒரு பிரதேசத்தில் இருக்கும் வனப் பகுதியை நாசிகள் தங்கள் பரிசோதனைகளுக்காக ஆரம்பித்தார்கள். போலந்து அரசு இன்னும் அந்த அடர் காட்டை (Black forest) வாகனங்கள் நுழைய முடியாத பிரதேசமாகப் பேணி வருகிறது. பழைய பூங்கா காக்கப் பட வேண்டிய நகர வனமாக (Urban forest) உருவாக வேண்டும். சுமந்திரன் காக்க முனைந்தார் என்பதற்காக இனி அனுர காவடிகள் வந்து மற்றப் பக்கம் சார்ந்து "ஆடுவார்கள்" என நினைக்கிறேன்😎.
  5. இந்தப்பேச்சு வார்த்தைகளால் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. சிலவேளைகளில் சீமான் மட்டும் ஒரு சில கருத்துக்களைச் சொல்லக்கூடும். கடந்த 16 ஆண்டுகளாக அறிவு ஜீவிகள் சொல்லி வந்த கருத்தையும் புறக்கணிக்காமல் அவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இந்தச்சந்திப்புக்கள் சொல்ல வரும் செய்தி. இந்தியாவை எமக்குத் தெரியும். இந்தியா ஒரு போதுமே தமிழ்ர்நலன்பற்றிச் சிந்தித்தது கிடையாது. தமிழக அரசியல் கட்சிகளும் மத்திய அரசிற்கு விரோதமான போக்கை ஒரு போதும் எடுக்க மாட்டார்கள். உண்மையான தமிழ்த்தேசியவாதிகளின் கைகளில் தமிழக ஆட்சி மலர்ந்தால் அவர்கள் மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் நெருக்கடி கொடுப்பார்கள்.தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக் கொண்டு மத்திய ஆட்சிக்கு முண்டு கொடுத்த திராவிடக்கட்சிகளைப்போல் இருக்க மாட்டார்கள். ஆகவே புத்தியீவிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுப் பரீட்சித்துப்பார்க்கப்பட்டுள்ளது.
  6. 23 Dec, 2025 | 12:50 PM சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை (23) கைது செய்துள்ளனர். "தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் நீர்நிலைகளுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் இலங்கையைச் சேர்ந்த கண்காணிப்புக் குழுவால் கைது செய்யப்பட்டு, அவர்களது படகுடன் தீவில் உள்ள கடற்படைத் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்" என தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (22), இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட மீனவர்களுக்கு சுமார் 450 டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு தங்கச்சிமடம், மாந்தோப்புவைச் சேர்ந்த ஜோதிபாஸுக்குச் சொந்தமானது என்றும், படகு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத நிலையில் டோக்கன் பெற்றதாகவும் தகவல்கள் உள்ளன. 12 மீனவர்களில் பிரபாத் (28), ஜேம்ஸ் ஹெய்டன் (29), ஆண்டனி (32) என்பவர்கள் அடங்கியுள்ளதாக என அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் குறித்து கவலை தெரிவித்து விடுவிக்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, மீனவர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை கூட்டம் நடத்தி அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது. 12 இந்திய மீனவர்கள் கைது | Virakesari.lk
  7. படத்தில் உள்ள மீன் பிடி வள்ளம் வேறை உலகில் தடை செய்யப்பட்ட இழுவை படகு வேறை செய்தி போடுபவங்களுக்கே விளக்கம் கிடையாது .
  8. வீரகேசரி இந்திய பத்திரிகை என்பதை அடிக்கடி நிரூபிக்கின்றது . பிடி பட்ட ரோலரை மறைத்து வியட்நாம் காரங்களின் மீன்பிடி வள்ளத்தை படம் காட்டுமளவுக்கு இந்திய பற்று . https://pixabay.com/photos/vietnam-phu-quoc-port-sea-boats-1262820/
  9. யாழ்நகரமே தப்பாகத்தான் இருக்கிறது ...... அதுக்காக இப்போ யாழ்நகரை அழிக்க வேண்டுமா? யாழ் நகரில் இருந்து வெறும் 4-5 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயே காணிகள் புல்லும் புதருமாக இருக்கிறது ஏன் மீண்டும் மீண்டும் அங்கேயே எல்லாவற்றையும் கொண்டு சென்று செருகுகிறார்கள் என்று புரியவில்லை. யாழ் வைத்தியசாலை சுற்று சூழல் ஒரு சாதாரண ஆஸ்பத்திரிக்கு உகந்த இடமாக கூட இல்லாமல் ஆக்கிக்கொண்டு இருகிறார்கள். ஆரிய குளத்தில் இருந்து வெறும் 2௦௦ மீட்டர் தூரத்தில் வைத்தியசாலை பின்புற வாசலுடன் ஓர் நீர்த்தேக்கம் தேங்கி நிற்கிறது அதன் துர்நாற்றம் அதை கடக்கும்போது தாங்க முடியவில்லை. ஆனா அருகிலேயே ஆஸ்பத்திரி ஊழியர்கள் பணி நடக்கிறது. இவாறானா செயல்கள் இவற்றையெல்லாம் துப்பரவு செய்யவேண்டிய கட்டாயம் இருந்தும் செய்யாமல் ஏன் இவாறான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இது யாழில் மட்டுமல்ல கொழும்பிலும் இதே நிலை இருக்கிறது கொம்பனித்தெரு அருகில் இப்படி இருக்கிறது. ஒரு தூர நோக்கு திடடம் இடல் என்பது அங்கே அறவே இல்லை. மிக நெரிசலான போக்குவரத்தை உருவாக்கியபின் அதுக்கு தீர்வு பல கோடி ரூபா அழிவாகத்தான் இருக்கும் ........ அதை கருத்தில் எடுத்தால் இப்போ எந்த செலவும் இல்லாமல் அதை சீர் செய்து கொள்ளலாம். பழைய பூங்கா மரங்கள் பற்றி அதை பற்றிய அறிவு உள்ளவர்கள்தான் சரியான முடிவை எடுக்க வேண்டும் அவை என்ன மரங்கள்? எவ்வளவு வருடங்கள் வாழ்கின்றன? இன்னமும் எவ்வளவு வருடம் வாழும்? போன்ற எந்த அறிவும் இல்லாமல் ஏகாந்தம்தாம் தான் எழுத முடியும். வெறும் உணர்ச்சியால் பிரியோசனமானதை எழுத முடியாது. எனக்கு தனிப்பட ஒவ்வரு மரத்துடனும் ஒரு கதை இருக்கிறது நான் அந்த மரங்களுக்கு கீழே வாழ்ந்திருக்கிறேன் தூங்கி இருக்கிறேன் அது என்னுடைய தனிப்படட உணர்வு மட்டுமே. மேலே ஒரு ஐயா சுமந்திரன் தமிழ் ஈழம் தந்தாலும் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள் என்று ஒரு கருத்தோவியம் வரைந்து உள்ளார் அது உண்மைதான். ஆறுஅறிவும் சரியாக வேலை செய்யும் ஒவ்வரு தமிழனும் அதை அப்படிதான் சொல்வான். ஏனென்னில் சுமந்திரன் தமிழ் ஈழம் கொண்டுவந்தால் அதுக்கு கீழே எல்லா தமிழனுக்கும் அழிவு இருக்கும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். இங்கு பலருக்கு சம்மந்தன் ஐயா தனது பதவியையும் கொழும்பில் உள்ள சொத்துக்களையும் கொத்தவிடம் இருந்து காப்பாற்ற பின்கதவால் கொண்டுவந்த பின்புதான் சுமந்திரனை தெரியும். எங்களுக்கு சுமந்திரனின் தாத்தாவையே தெரியும். எனவே நீங்கள் வர்ண வர்ண படங்கள் கீறியோ ........ அடுக்குமொழி வார்த்தைஜாலம் எழுதியோ நாங்கள் சுமந்திரனை பற்றி அறிந்துகொள்ள எதுவுமே இல்லை.
  10. விளக்கேற்றி வைக்கிறேன்.. படம்: சூதாட்டம்(1971) பாடியோர்: சுசீலா
  11. தொல்லை இல்லை இரண்டு ஊர்லையும் ஓட்டலாம்..
  12. பார்த்து... மொள்ளமாக..அடியுங்கோ! "மயிலிறகு" வேணுமென்டால் சொல்லுங்கோ, யால சரணாலயத்தில் என் நண்பர் தான் மிருக வைத்தியராக இருக்கிறார். எடுப்பிச்சுத் தரலாம்😎!
  13. அது…வந்து….அதாகப்பட்டது…நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்….
  14. உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா! தெற்கு உக்ரேன் பிராந்தியமான ஒடேசாவில் ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பரவலான மின்வெட்டு ஏற்பட்டு, பிராந்தியத்தின் கடல்சார் உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் துணைப் பிரதமர் ஒலெக்ஸி குலேபா, மொஸ்கோ இப்பகுதியில் “திட்டமிட்டு” தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறினார். மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்துவது, உக்ரேனின் கடல்சார் தளவாடங்களுக்கான அணுகலைத் தடுககும் மொஸ்கோவின் முயற்சி என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். டிசம்பர் மாத தொடக்கத்தில், கருங்கடலில் ரஷ்யாவின் நிழல் கடற்படை டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக உக்ரேனின் கடலுக்கான அணுகலைத் துண்டிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அச்சுறுத்தினார். “நிழல் கடற்படை” என்பது 2022 ஆம் ஆண்டு உக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பின்னர் விதிக்கப்பட்ட மேற்கத்திய தடைகளைத் தவிர்க்க ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான டேங்கர்களைக் குறிக்கும் ஒரு சொல். திங்கட்கிழமை (23) மாலை தாக்குதடல்கள் ஒடேசாவில் உள்ள துறைமுக உள்கட்டமைப்பைத் தாக்கி, ஒரு சிவிலியன் கப்பலை சேதப்படுத்தியதாக பிராந்திய ஆளுநர் கூறினார். இது நூற்றுக்கணக்கான தாக்குதல்களின் அண்மையது ஆகும் – இது இப்பகுதியில் பல நாட்களாக மின்சார விநியோகத்தை சீர்குலைத்து பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் 120,000 பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ஒரு பெரிய துறைமுகத்தில் தீ விபத்துக்கும் வாழிவகுத்தது. இது டஜன் கணக்கான மாவு மற்றும் தாவர எண்ணெய் கொள்கலன்களை அழித்தது. கடந்த வாரம், ஒடேசாவின் கிழக்கே உள்ள பிவ்டென்னி துறைமுகத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். இந்த வார தொடக்கத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் தனது மூன்று குழந்தைகளுடன் காரில் பயணித்த ஒரு பெண் கொல்லப்பட்டார். மேலும் உக்ரேன் மற்றும் மொல்டோவாவை இணைக்கும் ஒடேசா பிராந்தியத்தின் ஒரே பாலம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1457017
  15. மொறட்டுவை பொலீஸ் நிலையம் போகும் வழியில் அன்று மாலை நடந்த விடயங்களையும், வாகனத்தில் இருந்த தமிழ் மாணவர்கள் இழுத்துவரப்பட்ட விடயங்களையும் ஓரளவிற்கு அறிந்துகொண்டேன். பல்கலைக்கழக விடுதிகளில் இருந்தவர்கள், பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகளில் வாடகைக்குத் தங்கியிருந்த மாணவர்கள், பேரூந்துகளில் பல்கலைக் கழகத்திற்கு வந்திறங்கிய மாணவர்கள் என்று பலர் இழுத்துவரப்பட்டிருந்தார்கள். வெகுசிலரைத் தவிர அநேகமானோர் ஒன்றில் சற‌த்துடன் மட்டும் அல்லது சறமும் மேலங்கியும் அணிந்து காணப்பட்டார்கள். சுமார் 15 நிமிட பயணத்திற்குப் பின்னர் பொலீஸ் வாகனங்கள் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தைச் சென்றடைந்தன. வாகனங்கள் நிறுத்தப்பட்டதும் கீழே இறங்குமாறு பணிக்கப்பட்டோம். பின்னர் பொலீஸ் நிலையத்தின் முற்பக்கத்தில் இருந்த சிறிய அறையொன்றினுள் எம்மை நிற்கச் சொன்னார்கள். நள்ளிரவு வேளையாதலால் சில மாணவர்கள் தரையில் அமர்ந்து உற‌ங்க ஆரம்பித்தார்கள். எம்மை அறையினுள் நிற்கச் சொல்லிவிட்டுச் சென்ற பொலீஸ் அதிகாரி மீண்டும் அங்கே வந்தான். எம்மில் சிலர் உறங்குவதைக் கண்டுவிட்டு கத்தத் தொடங்கினான். வாயிலின் அருகில் நான் அமர்ந்திருந்தமையினால் என்னை நோக்கியே அவனது ஆத்திரம் திரும்பியிருந்தது. கோபம் கொண்டு காலால் என்னை உதைந்த அவன் பேசத் தொடங்கினான். "நீங்கள் எல்லாம் புலிகள், பிரபாகரன் உங்களை இங்கே அனுப்பியிருப்பது பொறியியல் கற்றுக்கொண்டு அங்கு சென்று தனக்கு உதவுவதற்காகத் தான். நாம் இங்கே எமது உயிரைக் கொடுத்து நாட்டைப் பாதுகாக்கிறோம். எமது அரசாங்கம், நாம் கட்டும் வரிப்பணத்தில் உங்களைப் படிப்பிக்கிறது. எமது சிங்கள மக்களுக்குச் செல்லவேண்டிய பணம் பயங்கரவாதிகளான உங்களுக்கு கல்விகற்கப் பாவிக்கப்படுகிறது. உங்களை இனிமேல் விடமாட்டோம், நீங்கள் இங்கிருந்து தப்பிக்க முடியாது" என்று சிறிதுநேரம் கர்ஜனை செய்துவிட்டு, "பிரபாகரனின் ஆட்சியில் உனக்கு என்ன பதவி தருவதாகக் கூறியிருக்கிறான்?" என்று என்னைப் பார்த்துக் கேட்டான். நிலைமையின் தீவிரம் உணராது, "தெரியவில்லை, என்னிடம் அவர் எதுவும் கூறவில்லை" என்று நான் பதிலளிக்கவும் மிகுந்த கோபம் கொண்ட அவன் என்னைத் தாக்கினான். எனக்குச் சிங்களம் தெரியும் என்று நினைத்து அவ‌னுடன் பேசியதன் பலனை நான் அங்கு அனுபவித்தேன். அவன் மட்டுமல்ல, அன்றிரவு அப்பொலீஸ் நிலையத்தில் இருந்த இன்னும் சில பொலீஸ் அதிகாரிகளும் தமது பங்கிற்கு தவறாது வந்து எம்மீது வசைமாறி பொழிந்துவிட்டுச் சென்றார்கள். ஒருசிலர் தாக்கினார்கள். ஏனென்று கேட்பாரின்றி சுமார் 60 தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறிய அறையொன்றினுள் தடுத்துவைக்கப்பட்டு போவோர் வருவோர் என்று வேறுபாடின்றி உடலாலும், மனதாலும் கடுமையான தாக்கத்திற்கு உள்ளானோம்.
  16. முஸ்லீம் மாணவன் அன்று எதற்காக அங்கு கொண்டுவரப்பட்டான் என்கிற காரணத்தை விளக்கிவிட்டு இப்பதிவினைத் தொடர்கிறேன். சிங்கள மாணவர்களின் இனவாதமும் காட்டிக்கொடுப்பும் தலைவிரித்தாடிய அன்றைய நாளுக்கு சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர்தான் ஆனையிறவு இராணுவ முகாமை புலிகள் வெற்றிகொண்டிருந்தார்கள். இக்காலத்தில் பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர்களால் நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் ஆனையிறவிற்கான வெற்றிவிழா என்கிற சந்தேகக் கண்ணோட்டத்திலேயே பல்கலைக்கழக மாணவர்களும் பெரும்பாலான சிங்கள விரிவுரையாளர்களும் பார்த்து வந்தார்கள். விரிவுரையாளர்களில் பி ஏ டி சில்வா எனப்படும் எந்திரவியல்த்துறைப் பேராசிரியர் குறிப்பிடும்படியானவர். புகழ்பெற்ற சிங்கள இனவாதியாக கருதப்பட்ட இவரது வகுப்புகளில் ஆனையிறவு தளத் தோல்வியைப் பற்றி இவர் அதிகம் பேசுவார். பொறியியல்த் துறையில் படிக்கும் தமிழ் மாணவர்களே பிரபாகரனுக்கு உதவுவதாகவும் அவர் வெளிப்படையாகவே சில வகுப்புகளில் கூறியிருந்தார். இவ்வாறு ஆனையிறவுப் படைத்தளத் தோல்வியின் பின்னர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கெதிரான சிங்களவர்களின் எதிர்ப்புணர்வு அதிகரித்துக் காணப்பட்டதுடன் எமது அனைத்து நடவடிக்கைகளும் மிகுந்த சந்தேகத்துடன் அவர்களால் நோக்கப்பட்டன. இதனால் கூட்டமாக அமர்ந்து பேசுவதையோ, பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் மத்தியில் தமிழில் உரையாடுவதையோ, பேரூந்துகளில் பயணிக்கும்போது தமிழில் உரையாடுவதையோ தவிர்க்கத் தொடங்கினோம். எம்மில் எவரது பிறந்த நாளின்போதும் மலிபன் சொக்கலேட் கிறீம் பிஸ்கெட்டும், ஐஸ் கீறீமும் கொண்டு பிறந்தநாளைச் சிறப்பிப்பது என்பது எமது வழக்கங்களில் ஒன்று. இவ்வாறான பிறந்தநாள் நிகழ்வுகள் பெரும்பாலும் பல்கலைக்கழக மைதானத்தில் இரவுவேளைகளில் நடக்கும். சிலவேளை பியர்ப் போத்தல்களும் அங்கு பரிமாறப்படும். ஆனால் அவ்வாறான கொண்டாட்டங்கள் கூட அக்காலத்தில் முற்றாக நிறுத்தப்பட்டுப் போனது. ஆனால், ஆனையிறவு போர் முடிந்து இரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சிங்களவர்கள் ஓரளவிற்கு ஆறுதலடைந்திருப்பார்கள், மனதைத் தேற்றிக்கொண்டிருப்பார்கள் என்கிற நப்பாசையில் அந்த முஸ்லீம் மாணவனும் இன்னும் சிலரும் அன்றிரவு பல்கலைக்கழக மைதானத்தில் தமது நண்பர்களில் ஒருவனின் பிறந்தநாளுக்காக‌ மதுபான கேளிக்கை ஒன்றினை ஆரம்பித்திருக்கிறார்கள். வழமைபோல தான் கொண்டுவந்திருந்த போதைப்பொருளை அம்மாணவன் அருந்தியிருக்கிறான். போதை தலைக்கேற, சத்தமாக தமிழில் சினிமாப் பாடல் ஒன்றினை அவனும் கூடவிருந்த சிலரும் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் பாடிய சத்தம் அப்பகுதியில் நின்றிருந்த சிங்கள மாணவர்களுக்குக் கேட்கவே, தமிழ் மாணவர்கள் ஆனையிறவு வெற்றியைக் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்று அவர்கள் எண்ணிவிட்டார்கள். கூடவே அன்று மாலை சொய்சாபுர தொடர்மாடி அருகில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தமது மதிப்பிற்குரிய பிரபல இனவாதி சி வி குணரத்ண இறந்த துயரமும் சேர்ந்துவிட, கும்பலாகச் சேர்ந்து மைதானம் நோக்கி வெறியுடன் ஓடி வந்திருக்கிறது சிங்கள மாணவர் கூட்டம். பாரிய கூட்டமொன்று தம்மை நோக்கி கத்தியபடி, கைகளில் பொல்லுகளுடன் ஓடிவருவதைக் கண்ட முஸ்லீம் மாணவனும் ஏனைய தமிழ் மாணவர்களும் அங்கிருந்து தப்பியோடத் தொடங்கியிருக்கிறார்கள். தம்மைக் கண்டு ஓடுவது தமிழ் மாணவர்கள்தான் என்றும், அவர்கள் அங்கு ஈடுபட்டது ஆனையிறவு வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில்த்தான் என்றும் நம்பிய துரத்திவந்த சிங்கள மாணவர் கூட்டம், அவர்களை மடக்கிப் பிடித்துக் கடுமையாகத் தாக்கத் தொடங்கியிருக்கிறது. தாக்கியபடியே, "உங்களின் பல்கலைக்கழக அடையாள அட்டைகளைக் காட்டுங்கள்" என்று கேட்கவும், முஸ்லீம் மாணவனிடம் அதற்கான பதிவுகள் இருக்கவில்லை. ஏனென்றால் அவன் இரகசியமாகவே பல்கலைக் கழக விடுதியில் தரித்திருந்து படித்துவந்தான். சுமார் இரு வருடங்களுக்கு முன்னரே அவனது பல்கலைக்கழக அடையாள அட்டை முற்றுப்பெற்றுவிட்டது. ஆகவே, இவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவன் இல்லை என்று கருதிய சிங்கள மாணவர் கூட்டம், "நீ யார், ஏன் இங்கு வந்தாய்? எதற்காக களியாட்டம் நடத்துகிறாய்? சி வி குணரத்ணவைக் கொன்றது நீதானே?" என்று கேட்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறது. அடியின் அகோரம் தாங்காது கதறிய முஸ்லீம் மாணவன், தப்பித்துக்கொள்வதற்காக, தாம் ஆனையிறவு வெற்றிக் கொண்டாட்டத்தையே நடத்தினோம் என்றும், சி வி குணரத்ணவைக் கொன்றது தாங்கள்தான் என்றும் கூறியிருக்கிறான். இதனையடுத்து உடனடியாக மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொண்ட சிங்கள மாணவர் கூட்டம், அமைச்சர் சி வி குணரதணவைக் கொலை செய்த புலிகளை, பல்கலைக்கழகத்தில் ஒளித்திருந்தவேளை பிடித்துவைத்திருக்கிறோம், உடனேயே வாருங்கள் என்று கூறியிருக்கிறது. அதற்குப் பின்னர் நடந்தவையே நான் மேலே விபரித்தது.
  17. குறைந்தது 60 தமிழ் மாணவர்கள் வரையில் அந்த முஸ்லீம் மாணவனால் அடையாளம் காணப்பட்டோம். வெகு சில தமிழ் மாணவர்களே அந்த அடையாள அணிவகுப்பில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள். அடையாளம் காணப்பட்ட எம்மை கட்டுப்பாட்டு அறையினுள்ளிருந்து வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொலீஸ் வாகனங்களுக்குள் ஏற்றுவதற்காக பொலீஸார் இழுத்து வந்தபொழுது அங்கு சுற்றியிருந்த சிங்கள மாணவர்களும் பொதுமக்களும் வெற்றிக்களிப்பில் அகமகிழ்ந்து ஆர்ப்பரித்தார்கள். கட்டுப்பாட்டு அறையினுள் நடந்தது நாம் புலிகளா இல்லையா என்கிற விசாரணை என்றும், எம்மை பொலீஸார் வாகனங்களில் ஏற்றியதன் மூலம் நாம் புலிகள் என்று நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் எம் முன்னாலேயே பேசினார்கள். அறுபது புலிகளைக் கைதுசெய்துவிட்ட மகிழ்ச்சியும் , "இவ்வளவு நாளும் எமக்குத் தெரியாமல் இத்தனை புலிகளும் இங்கு கல்விபயின்று வந்திருக்கிறார்களே?" என்கிற எரிச்சலும் ஒன்றுசேர அவர்கள் ஆத்திரம் பொங்கக் கூச்சலிட்டார்கள். நாம் மெதுமெதுவாக பொலீஸ் வாகனங்களில் ஏறத் தொடங்கினோம். பல்கலைக்கழகத்தில் இருந்து மொறட்டுவைப் பொலீஸ் நிலையம் செல்லும் வழியில் எனக்கருகில் இருந்த சக தமிழ் மாணவர்களுடன் பேச்சுக் கொடுத்தேன். எப்படி, எங்கே வைத்து, யார் உங்களைப் பிடித்து வந்தார்கள் என்கிற கேள்விகளும், விடைகளும் எமக்கிடையே பரிமாறப்பட்டன. கூடவே முஸ்லீம் மாணவன் எப்படி இதற்குள் சிக்கினான், அவனுக்கு என்ன நடந்தது? அவன் எதற்காக அடையாளம் காட்டும்படி வற்புறுத்தப்பட்டான்? என்கிற எனது கேள்விகளுக்கும் அந்தச் சிறிய பயணத்தில் விடை கிடைத்தது.
  18. காவலர்களின் கட்டுப்பாட்டு அறையினுள், மொறட்டுவை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, சில பொலீஸார், பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பல சிங்கள மாணவர்கள், குற்றவாளிகளைப்போல் இழுத்துவரப்பட்ட பல தமிழ் மாணவர்கள் மற்றும் ஒற்றை முஸ்லீம் மாணவன் ஆகியோர் அப்போது நின்றிருந்தோம். அந்த முஸ்லீம் மாணவன் பற்றிக் கூறவேண்டும். எமக்கு ஓரிரு வயது அதிகமாக இருக்கலாம். புத்தளத்தைச் சேர்ந்தவன். சுரங்கப் பொறியியல்த் துறையில் படித்துக்கொண்டிருப்பவன். இறுதியாண்டுப் பரீட்சைகளில் கடந்த‌ இரு வருடங்களில் தேறாது போனதால் பல்கலைக் கழகத்தில் சில தமிழ் மாணவர்களுடன் கூடத் தங்கிப் படித்துக்கொண்டிருப்பவன். ஆனால் நான் அவனுடன் ஒருமுறையேனும் பேசியது கிடையாது, தேவையும் இருக்கவில்லை. போதைப்பாவனைக்கு அடிமையானவன் என்று அறியப்பட்ட அவனிடம் இருந்து ஒருசில தமிழ் மாணவர்களைத் தவிர பெரும்பாலான தமிழ் மாணவர்கள் விலகியே இருந்தார்கள். அந்த முஸ்லீம் மாணவன், பொறுப்பதிகாரி பீரிஸின் முன்னால் அச்சத்துடன் நடுங்கியபடி நின்றிருந்தான். அவன் எதற்காக அங்கு வந்தான், ஏன் விசாரிக்கப்படுகிறான் என்கிற தெளிவு எமக்கு அப்போது இருக்கவில்லை. அவனது முகம் இரத்தத்தில் தோய்ந்திருந்தது. மேற்சட்டை முற்றாக கிழிக்கப்பட்டு உடலில் இரத்தக் காயங்கள். அவன் அழுதுகொண்டிருந்தது அந்த அறைமுழுதும் எதிரொலித்தது. அவன் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறான் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அதன் பின்னர் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் அவன் எதற்காக இழுத்துவரப்பட்டிருக்கிறான் என்பதை எமக்குப் புரியவைத்தது. கும்பல் கும்பலாக அங்கு இழுத்துவரப்பட்ட தமிழ் மாணவர்களை ஒவ்வொருவராக அந்த முஸ்லீம் மாணவனின் முன்னால் வரச் செய்து, "இவனை உனக்குத் தெரியுமா?" என்று விசாரிக்கத் தொடங்கினான் பீரிஸ். முதலில் பலரைத் தெரியாது என்று அவன் கூறவே பீரிஸ் அவனைக் கடுமையாக அறையத் தொடங்கினான். அதன்பின்னர் அவன் தனக்கு முன்னால் நிறுத்தப்பட்ட அனைத்து மாணவர்களையும் தனக்குத் தெரியும் என்று கூறித் தலையாட்ட ஆரம்பித்தான். எனது முறை வந்தது. என்னைத் தெரியாது என்றே சொல்வான் என்று நான் எதிர்பார்த்திருக்க, எனது முகத்தை நேரே பார்த்துவிட்டு, "இவனையும் எனக்குத் தெரியும்" என்று சிங்களத்தில் பீரிஸைப் பார்த்து அவன் கூறவும், "என்னை உனக்கு எப்படித் தெரியும், நான் உன்னுடன் பேசியதுகூடக் கிடையாதே?" என்று அவனைப் பார்த்துக் கேட்டேன். இதனைக் கேட்டதும் பீரிஸ் என்னை நோக்கி அடிக்க வந்ததுடன் சிங்களத்தில் "கட்ட வாபங் கரியா (வாயை மூடுடா....)" என்று கத்திக்கொண்டே ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தமிழ் மாணவர்கள் நின்ற பகுதி நோக்கித் தள்ளிவிட்டான். ஒருபுறம் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டான் என்கிற கோபம் வந்தபோதிலும்கூட‌, மறுபுறம், நான் மட்டுமல்ல, இன்னும் பல‌ தமிழ் மாணவர்களும் என்னுடன் அகப்பட்டிருக்கிறார்கள் என்கிற நிம்மதி எனக்கு ஏற்பட்டது, ஆகவே மெளனமாக அங்கு நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டு நின்றுகொண்டேன்.
  19. பல்கலைக்கழக வாயிலை நாம் அடைந்தபோது எம்மை அச்சம் பற்றிக்கொண்டது. வாயிலின் உள்ளே அமைந்திருந்த வீதியில் பொலீஸாரின் இரு வாகனங்கள் நின்றிருந்தன. அப்பகுதியெங்கும் சிங்கள மாணவர்களும், பல்கலைக்கழகத்தைச் சுற்றி அமைந்திருந்த குடியிருப்புக்களைச் சேர்ந்த சிங்கள மக்களும் சூழ்ந்திருந்தார்கள். குறைந்தது 200 அல்லது 300 பேராவது இருக்கலாம். எம்மைக் கண்டவுடன் அவர்கள் ஆத்திரப்பட்டார்கள். சிங்களத்தில் வைய்யத் தொடங்கினார்கள். "பறத் தமிழர்கள்", "புலிப் பயங்கரவாதிகள்" என்று சிங்கள தூசண அடைமொழிகளுடன் அவர்களின் சொற்கள் வந்து வீழ்ந்தன. அவர்களை நோக்கிப் பார்க்கும் திராணி எமக்கு இருக்கவில்லை. பார்த்தால் ஏதாவது செய்வார்கள் என்கிற அச்சம். ஆகவே எம்மை இழுத்துச் சென்ற சிங்கள மாணவர்களின் பின்னால், தலைகுனிந்தபடி அமைதியாக நடந்து சென்றுகொண்டிருந்தோம். எம்மை இழுத்துச் சென்றவர்கள் பல்கலைக்கழக வாயிலில் அமைந்திருந்த காவலாளர்களின் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றார்கள். அறையினுள்ளே இன்னும் பல தமிழ் மாணவர்கள். பலர் வெறும் சறம் மாத்திரம் அணிந்திருந்தார்கள். தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி இழுத்து வந்திருக்கிறார்கள். இறுதியாண்டு, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு என்று பல தரங்களில் படித்துக்கொண்டிருந்த வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள். எல்லோரது முகத்திலும் "இனி என்ன நடக்கப்போகிறதோ" என்கிற அச்சம் குடிகொண்டிருந்தது. கட்டுப்பாட்டு அறையின் மத்தியில் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தின் பிரதான பொலீஸ் பொறுப்பதிகாரி (ஓ. ஐ.சி), பீரிஸ் கோபம் கொப்பளிக்க, சிவந்த கண்களுடன் நின்றுகொண்டு சிங்களத்தில் கத்திக்கொண்டிருந்தான். ஏற்கனவே அச்சத்தின் உறைந்துபோன எங்களுக்கு அவன் கூறுவதில் முழுவதையும் கிரகித்துப் புரிந்துகொள்ளும் பக்குவம் இருக்கவில்லை. எங்களை சிங்கள மாணவர்கள் உள்ளே இழுத்து வருவதைக் கண்டதும், அந்தச் சிங்கள மாணவர்களிடம், "முங் கெளத? (இவர்கள் யார்?)" என்று கேட்டான். "முங் தெமள, கம்பஸ்ஸெக்கே பிட்டிப்பஸ்ஸே இந்தலா அள்ளங் ஆவா (இவர்கள் தமிழர்கள், பல்கலைக்கழகத்தின் பின்னாலிருந்து பிடித்து வந்தோம்)" என்று அந்த மாணவன் பதிலளித்தான்.
  20. இதற்கு இடையிடையே… அனுர நன்றகா செய்கிறார்… இன்னும் செய்வார்… இனவாதத்தை அப்படி உடனே களைய முடியாது…. இது போன்ற காவடி சிந்துகளையும் சந்திலே பாடி விட வேண்டும்…. மிக முக்கியமாக வேறு யாரேனும் தமிழர் வடக்குக்கு வந்து வாழ நினைத்தாலே அவர்கள் மீது வள் வள் என பாய்ந்து….beware of the dog but be more aware of the owner என்பதையும் நிலைநாட்ட வேண்டும்…. ஜெயவே வா…. புது சரணாய்…
  21. உங்களுக்கு என்ன பிரச்சனை 😂 வழக்குத் தோல்வி....... சுமந்திரனின் அசட்டையீனம் அல்ல அவர் வேண்டுமென்றே சரியான முறையில் அந்த வழக்கையே தோல்வி அடைய வைத்து அரச பக்கம் கட்டிட வேலைகளை தொடர எதிர்மறையாக அனுமதி வாங்கிக் கொடுத்துள்ளார் சில கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில்....... நீங்கள் எழுதும் நளினங்கள் எங்களுக்கு விளங்கும்😇
  22. தற்குறி என்றால் கை எழுத்து வைக்க தெரியாத படிப்பு இல்லாதவர் கைவிரல் அடையாளம் இடுபவர் தானே ஓவியர் மட்டுமல்ல யாழ்களத்தில் தற்குறிகளே யாரும் இல்லை தவத்திரு வேலன் சுவாமிகள் என்று சொல்லுங்கோ 😂 பார் சிறி ஆசிரியராக இருந்து யுத்தம் முடிவடைந்த பின்பு கேடீஸ்வரர் ஆனவர் தள்ளாடி விழுந்தாலும் அடுத்த செக்கனிலே எழுந்துவிடுவார்
  23. பார் சிறி விழுந்து போனார் எண்டு யாழ்களத்தின் 1ம், 2ம் குடி-மகன்கள் கவலைபடுகிறார்கள். விட்டுத்தள்ளுங்கள்😂 நடிகர் செந்தாமரை தொட்டு பல விடயங்களில் பொய் என தெரிந்தும் அதை மீள மீள பகிர்ந்து நிர்வாகத்திடம் குட்டு வாங்கிய “பொய்யர் திலகம்” தான் எங்கள் தமிழ் சிறி அண்ணா 😂. எனவே பார் சிறி தள்ளாடி விழுந்த கதையையும் நம்ப முதல் யோசிக்க வேண்டித்தான் உள்ளது. புராண காலே இந்தாங், தையிட்டி கம சிங்கள மாத்ரு பூமியக் ஹட்டியட்ட வார்த்தா வெலா தியன்னே…. தெமலயா பழயாங்ளா இந்தியாவட்ட… ஒயவாகே முஸ்லீம் லா பழயாங்களா அரேபியாவட்ட…
  24. எண்ணி 17 பேர் 😂. மாபெரும் கண்ட. ஆர்பாட்டமாம்😂.
  25. தையிட்டியில் பொலிஸார் நடந்துகொண்ட விதம், நாடு பிளவுபட்டுள்ளதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது ; பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடரப்படவேண்டும் - மணிவண்ணன் 22 Dec, 2025 | 05:13 PM தையிட்டியில் பொலிஸார் நடந்துகொண்ட விதம், நாடு இரண்டாக பிளவுபட்டுள்ளது என்பதை பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தையிட்டி விகாரை முன்பாக நடைபெற்ற அமைதி வழிப் போராட்டத்தின்போது, பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்தி அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தியிருந்தனர். மதகுருவான வேலன் சுவாமிகளை மிலேச்சத்தனமாக தாக்கி, அவரை காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அதேவேளை மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனையும் தள்ளி வீழ்த்தியுள்ளனர். அத்துடன், வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட நால்வரை அடித்து இழுத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றி அராஜகம் செய்துள்ளனர். இந்த பொலிஸாரின் அராஜகத்தை தமிழ் மக்கள் கூட்டணி மிக வன்மையாக கண்டிக்கிறது. பொலிஸாரின் இந்த செயற்பாடானது நாடு இரண்டாக பிளவுபட்டு உள்ளமையையே காட்டி நிற்கிறது. எத்தனை ஆட்சிகள் மாறினாலும், சிங்கள பௌத்த தீவிரவாதப் போக்கில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்தமை தொடர்பிலான பிரச்சினையின்போது பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்தார். அதற்கு எதிராக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தனர். ஆனால், வேலன் சுவாமிகளை மிலேச்சத்தனமாக தாக்கி கைது செய்துள்ளனர். வேலன் சுவாமிகள் ஒரு பௌத்த பிக்குவாக இல்லாமைதான் இதற்கு காரணம். வேலன் சுவாமிகளிடம் நடந்துகொண்டதைப் போன்று, ஒரு பௌத்த பிக்குவிடம் பொலிஸாரினால் நடந்துகொள்ள முடியுமா? வேலன் சுவாமிகள், வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் தம் மீது பொலிஸார் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக வழக்கு தொடரவேண்டும் என எதிர்பார்க்கிறேன். அவர்கள் அவ்வாறு பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடர விரும்பின், சட்டத்தரணி என்ற ரீதியில் நாமும் எமது கட்சியும் பக்கபலமாக அவர்களுக்காக நிற்போம் என இவ்விடத்தில் உறுதியாகக் கூறுகிறேன். அதேவேளை வலி. வடக்கு பிரதேச சபையிடமும் அன்பான கோரிக்கை ஒன்றினை விடுக்கிறேன். உங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் சாதாரண குடிமகன் ஒரு கட்டடத்தை அமைக்கும்போது, பிரதேச சபையின் அனுமதி பெறாவிடின், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கின்றீர்கள். அதேபோன்று தையிட்டி விகாரையில் இடம்பெறும் சட்ட விரோத கட்டடங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோருகிறேன் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/234130
  26. அத தெரண கருத்துப்படம்.
  27. கருத்தோவியம் ஓவியரின் சிந்தனை. அது வெவ்வேறு கோணங்களில் பார்க்கப்பட முடியும். காவியுடையுடன் நியாயம் கேட்ட நிராயுதபாணியான வேலவன் சுவாமி எங்களுக்கு கோமாளியாக தெரிகின்றார். முன்பு ஆயுதம் ஏந்தி நியாயம் கேட்ட பிரபாகரன் பயங்கரவாதியாக தெரிந்தார். விகாராதிபதிக்கு புரோமோசன் கிடைத்துள்ளது. எனவே இங்கு விகாராதிபதியே போராளி என இனம் காண்போம். அரசாங்கம் செய்வது சட்டவிரோதமான செயல். இலங்கை நீதிமன்றம் கட்டாயம் சரியான நீதியை கொடுத்துவிட்டுத்தான் அடுத்த வேலையை பார்க்கும் என எதிர்பார்ப்போம்.
  28. நிதானமான, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பதில்👍. உங்கள் கடமையைச் செய்திருக்கிறீர்கள், ஆனால் பலனை எதிர்பார்த்து ஏமாறாதீகள் என்று எச்சரிக்க வேண்டியது என் கடமை😂! பொய்ச் செய்திகளிலும், சில சமயங்களில் "எந்த செய்தியும்" இல்லாமலே ஏனைய தமிழ் அரசியல் வாதிகளை - அவர்களை தாயக மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருந்த வேளையில்- கேவலமாகத் திட்டியபடி இருந்த இருவர் தான் உங்களுக்கு நாகரீகம் கற்பிக்க முயல்கிறார்கள் என்பதைக் கவனித்தால் பலனை எதிர்பார்க்க மாட்டீர்கள்.
  29. தமிழ்சிறி, உங்களுக்கு பதில் எழுதி நிறைய நாளாயிட்டுது. நேற்றைய உங்களின் கருத்துக்குப் பதில் எழுதாமலே என் அடுத்த வேலைக்குப் போகத்தான் முதலில் நினைத்தேன். ஆனால் என்னைப் பார்த்து நீங்கள் பரிதாபப்பட்ட பொழுது, அதுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுத்து, சரி… கொஞ்சம் நின்று எழுதிட்டுப் போகலாமென்று இதை எழுதுகிறேன்.. தையிட்டியில இருக்கின்ற புத்த விகாரைக்கு எதிரான போராட்டம் என்ற செய்தியில், “பொலிஸ் வருவார்கள், போராட்டம் செய்பவர்களை அகற்றுவார்கள், இல்லை கைதுசெய்வார்கள்” என்பதோடு நான் நிறுத்திவிட்டேன் ஏராளன் இணைத்த செய்தி அப்படயான செய்திதான். ஆனால் நீங்கள் இணைத்த செய்தி அப்படியில்லை. அதிலே என்ன சொல்லப்படுகிறதென்றால், “இதன்போது வேலன் சுவாமிகள், ஒரு பிரதேச சபை தவிசாளர் உட்பட நாலு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்கள். இதன் காரணமா போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் நடுவில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டது ” என்று. மேலும், “அங்கே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொலிஸாரால கீழே தள்ளி விழுத்தப்பட்டார்” என்றும் சொல்லப்பட்டிருந்தது. நீங்கள் அடிக்கடி சொல்லும் அந்த ‘வக்கிரம்’ என்று ஒன்று இருக்கே… அதை இந்த இடத்தில் நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். நீங்கள் போட்டிருந்த செய்தியில், நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுவாமிகள் பின் தள்ளப்படுறார், சிறீதரன் முன்னுக்கு வருகிறார். ஆனால் சிறீதரன் எம்பி தள்ளப்பட்டு கீழே விழுந்தார் என்று எந்த வீடியோவிலேயும் நான் காணவில்லை. ஆனால் நீங்கள் போட்ட செய்தி அதையே முன்னிலைப் படுத்தி நிற்கின்றது. இதற்கு ஆதாரமான உண்மை இருந்தால், தரவிட்டு காட்டுங்கள். கண்டிப்பா நன்றி சொல்வேன். தன் கட்சிக்குள்ளே நடக்கின்ற பிரச்சினையைக்கூட பாராளுமன்றத்துக்கு கொண்டு போய் நீதி கேட்கின்ற ஆள் சிறீதரன் எம்பி. அப்படிப்பட்டவர், ஒரு பொலிஸ் தள்ளி கீழே விழுந்து விட்டால், பாராளுமன்றத்தை உண்டு இல்லை என்று ஆக்காமல் விடுவாரா? அதனாலே இங்கே அவரைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் பார்வையில், தமிழ் மக்களுக்கு சிறீதரனால் எந்த நலனும் கிடைக்கப் போவதில்லை. தமிழ் மக்களுக்கக அவர் எதுவும் செய்யப் போவதும் இல்லை நேற்றைய விட இன்றைக்கு உங்களிடம் கொஞ்சம் தெளிவு வந்திருப்பதைதையும் நான் கவனிக்கிறேன். “மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை, மக்கள் போராட்டம் சம்பந்தப்பட்ட நிகழ்வில்… சிங்கள காவல்துறை கீழ தள்ளி விழுத்துது // – இதுதான் செய்தி”என்று சிவப்பு வர்ணத்தில நீங்கள் நேற்று குறிப்பிட்டிருந்தது, இன்று “பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி” என்று வந்திருக்கின்றது. சுவாமி முன்னுக்கு வந்திருக்கிறார். நேற்று வீழ்ந்து எழுந்த எம்பியை இன்றைக்குக் காணோம். ஆனாலும் வேலன் சுவாமிகள் ஒன்றும் லேசுப்பட்ட ஆள் கிடையாது. பொலிஸ் அவரை வாகனத்தில ஏற்றும்போது, அவர் பொலிஸைப் பார்த்து ஏக வசனத்தில சொன்ன வார்த்தையைக் கேட்டு அந்த பொலீஸ்காரனே கொஞ்சம் மிரண்டு போனான். இலங்கையில் பிக்குகள் மேல் பொலிஸ் தாக்குதல் நடந்திருக்கிற கதைகளும், சம்பவங்களும் ஏற்கனவே இருக்கின்றன. இணையத்தில் தேடினால் கண்டிப்பாகக் கிடைக்கும். கிடைத்தால் உங்கள் நண்பர் குமாரசாமியாரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! மீண்டும் ஒரு நல்ல கருத்தாடலில் சந்திப்போம்.
  30. காவி உடைதரித்த வேலன் சுவாமிகள் தமிழன் என்பதால் கைதும் அடி பிடிகளும்.இதுவே ஒரு பௌத்த பிக்கு என்றால் நடக்குமா? இதே காவி உடை தரித்த இனவாத சிங்கள பிக்கு என்றால் எம்மவர்களுக்கு கவிதை வருமா? சித்திரம் வருமா? கட்டுரைகள் வருமா? கட்டுமான கருத்துக்கள் வருமா? சிங்களம் என்றால் பக்குவம் பவுத்திரம் பாக்கியம் மௌனம்.
  31. பாரம்பரியங்கள் சில காலத்திற்கு காலம் மாறும். ஆனால் பழமையானவைகள் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டும். அதை அழிக்கவே கூடாது.இது பற்றி மேலைத்தேய வன,மர பாதுகாப்பு நிறுவனங்களிடம் இவர்கள் பாடம் படிக்க வேண்டும். நவீனங்கள் இன்றைய உலகிற்கு அவசியமானது. அது பழமைகளை அழித்துதான் உருவாக்கப்பட வேண்டும் என்பது எம்மை நாமே குழிக்குள் தள்ளுவதற்கு சமம். மற்றும் படி..... சுமந்திரன் நல்லதொரு வழக்கறிஞர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஈழத்தமிழர் பிரச்சனையில் அதை காட்டியிருந்தால் போற்றப்பட்டிருப்பார். இன்றுவரை அந்த விடயத்தில் சாத்தியம் எதுவுமே தெரியவில்லை. படித்த மேதாவிகள் என காட்டிக்கொள்பவர்களே பல விட்டுக்கொடுப்புகளுக்கு முன்னுதாரணமாக இல்லாமல் இருக்கும் போது.... அதே அவர்கள் பாமரன்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என நினைப்பதும் ஒரு வித மேட்டுக்குடித்தனம்.
  32. கலியாண புரோக்கருக்கு கொடுக்கிற காசை விட, இந்த விளம்பரச் செலவு குறைவு. 😂
  33. நகரத்தை அண்மித்துள்ள பழைய பூங்காவில் உள்ள நூறாண்டு கால மரங்களை அழித்து... காங்கிரீட் காடாக்குவது பிழை.
  34. வேடன்;வாகீசன்;முருகப்பெருமான் - நிலாந்தன் சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த வேடனின் Rap – ரப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவின. இப்பொழுது வாகீசனின் பாடல். வேடன் யாழ்ப்பாணத்து தாய்க்கும் மலையாளத்து தகப்பனுக்கும் பிறந்தவர். வாகீசன் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். இருவருமே குறுகியகால இடைவெளிக்குள் தமிழ் சமூகவலைத் தளங்களில் லட்சக்கணக்கானவர்களைக் கவர்ந்திருக்கிறார்கள். வேடன் 2020ல் இருந்து பாடுகிறார். அவர் வாகீசனிடம் இருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று, அவர் அதிகம் ஒடுக்கப்படும் சமூகங்களின், மக்களின் குரலாக ஒலிப்பதுதான். அவருடைய முதலாவது முயற்சி “குரலவற்றவர்களின் குரல்” என்ற தலைப்பின் கீழ்தான் வெளிவந்தது. அவர் ஈழத் தமிழர்களின் அரசியலில் தொடங்கி சிரியா,பாலஸ்தீனம் என்று உலகளாவிய அரசியலைப் பேசும் பாடல்களைப் பாடியுள்ளார். அவருடைய முக்கியத்துவமே அவ்வாறான போராடும் மக்களின் குரலாக ஒலிப்பதுதான்.கரிய தேகம்;சீவப்படாத தலைமுடி; கழுத்தில் பெரிய உலோக மாலை; சில மேடைகளில் மேல் சட்டை இல்லாமலேயே காணப்படுகிறார். தனது உடல் மொழி, பாடல் வரிகள்,உச்சரிப்பு போன்ற எல்லாவற்றிலும் அவர் தன்னை ஒரு கட்டுடைப்பாளனாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிக்காட்டுகிறார். எனினும் அவர் மீது பாலியல் வகைப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்டு. அவரால் பாதிக்கப்பட்டதாக கூறி பெண்கள் சிலர் நீதிமன்றங்களை நாடியிருந்தார்கள். அவை தமது புகழை மங்கச் செய்வதற்காக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்று வேடன் தரப்பு கூறுகிறது. வாகீசன் வேடனை விடவும் வயது குறைந்தவர். எங்கே வேடனிடமிருந்து வித்தியாசப்படுகிறார் என்றால்,அவர் நேரடியாக புரட்சிகரமான விடயங்களைப் பாடுவதில்லை. ஜனரஞ்சகமான விடயங்களைத்தான் பாடுகிறார். ஆனால் அதிகம் பிரபல்யமடைந்த அவருடைய முருகன் பாடல் “காக்கும் வடிவேல்” முருக பக்திப் பாடல் மட்டுமல்ல அங்கே அரசியல் உண்டு. அந்தப் பாடலுக்கு மதப்பரிமாணம் மட்டுமல்ல. அரசியல் பரிமாணமும் உண்டு. அங்கே முருகன் மீட்பின் கடவுளாக, போராடும் மக்களின் தலைவனாக, போராடி தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை கட்டமைத்த தலைவனாகக் காட்டப்படுகிறார். அதில் மறைமுகமாக அரசியல் உண்டு. வேடனைப்போல வாகீசன் வெளிப்படையாக,நேரடியாக அரசியலைப் பாட முடியாத அரசியல் சூழலுக்குள் வாழ்பவர். வாகீசனின் முருகன் பாடலில் பாரம்பரிய இசைக் கூறுகளும் உண்டு. அது ஒரு ஹைபிரிட் பாடல். ரப் பாடலாகவும் இருக்கிறது. அதேசமயம் சாஸ்திரிய சங்கீதத்தின் கூறுகளும் உண்டு. அதன் கலப்பு வடிவம்தான் அதற்குள்ள கவர்ச்சி. வாகீசனைத் தூக்கிய பாடல் அது. அந்தப் பாடலில் உள்ள ஹைபிரிட்தனம்தான் அந்தப் பாடலைப் பரவலாக்கியது. இப்பொழுதும் அந்தப் பாடலுக்கு ஆடும் பெரும்பாலான தென்னிந்திய நடனக் கலைஞர்கள் அப்பாடலில் உள்ள மரபு இசை வகைப்பட்ட பகுதிக்குத்தான் ஆடுகிறார்கள். ரப் இசைக்கு அல்ல. ஒரு சமையல் நிகழ்ச்சியின் ஊடாக அதிகம் பிரபல்யமான அவருடைய தனித்துவம் எதுவென்றால், அசல் யாழ்ப்பாணத்து தமிழில் அவர் கதைப்பது. அதில் ஒருவித அப்பாவித்தனமான ஆர்வம் இருக்கும். அதேசமயம் வேரை விட்டுக் கொடுக்காத தனித்துவமும் இருக்கும். தமிழ்நாட்டில் வசிக்கும் அல்லது தமிழ்நாட்டுக்கு அடிக்கடி சென்றுவரும் ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் தமிழகத்தில் உரையாடும்போது அல்லது தமிழகத்தவரோடு உரையாடும்போது ஒரு தமிழ்நாட்டுக்காரரை போலவே பெரும்பாலும் உரையாடுவார்கள். முதலாவதாக தங்களுடைய தமிழ் அவர்களுக்கு விளங்க வேண்டும் என்ற கரிசனை. இரண்டாவதாக தன்னுடைய ஈழத்தமிழ் அடையாளம் காரணமாக வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கும் தற்காப்பு உத்தி போன்ற பல காரணங்களினாலும் அவ்வாறு தமிழ்நாட்டு தமிழைக் கதைப்பதுண்டு.”டூரிஸ்ட் பாமிலி” திரைப் படத்தில் வருவதுபோல. ஆனால் வாகீசன் ஒரு ஜனரஞ்சக மேடையில் யாழ்ப்பாணத்துத் தமிழை பேசுகிறார். அந்தத் தமிழில் எழுதப்பட்ட வரிகளை இசைக்கிறார். அவருக்கு கிடைக்கும் பிரபல்யத்துக்கு அவருடைய தமிழும் ஒரு காரணம். அதைவிட முக்கிய காரணம் அவரைத் தூக்கிய பாடல் ஒரு முருக பக்திப் பாடலாக இருப்பது. அதில் அரசியல் வாடையும் இருப்பது. அந்தப் பாடலுக்குள்ள மதப் பரிமாணமும் அது திடீரென்று பெற்ற எழுச்சிக்கும் பிரபல்யத்துக்கும் ஒரு காரணம். அதற்கு இந்தியாவின் இப்போதுள்ள அரசியல் சூழல் மிகவும் அனுகூலமானது. கடவுளர்கள் ஏற்கனவே ரப் இசைக்குள் வந்துவிட்டார்கள். கிறிஸ்தவ ரப் பாடல்கள் ஏற்கனவே வந்து விட்டன. சிவன்,ஹனுமான் போன்ற கடவுளர்க்கும் ரப் பாடல்கள் உண்டு. தமிழ் பக்தி இலக்கிய மரபில்,அருணகிரிநாதரின் திருப்புகழில் ரப் சாயல் உண்டு. முருக பக்தி மரபில் ஏற்கனவே சுசீலா ராமன் என்ற பெண் இசையமைப்பாளர் தமிழ் முருக பக்திப் பாடல்களை ஆடலுக்கு ஏற்ப மீள உருவாக்கிப் பாடியிருக்கிறார். சுசீலா ராமன் இந்திய வேரிலிருந்து வந்த பிரத்தானிய இசையமைப்பாளர். பல்வேறு இசைப் பாரம்பரியங்களையும் கலந்து பரிசோதனை செய்தவர். ஏற்கனவே உள்ள முருக பக்தி பாடல்களை துள்ளிசையாக ரீமேக் செய்தவர். அவரும் தன் பாடலுக்கு ஒத்திசைவான கோலத்தோடு மேடையில் தோன்றுவார். அடங்காத சுருள் முடி. எப்பொழுதும் ஆடத் தயாரான நெகிழும் உடல். சுசீலா மேடையில் பரவசமாகி தன்னை மறந்து துள்ளிக்குதித்துப் பாடுவார். அவருடைய பாடல்கள் இப்பொழுது நமது உள்ளூர் கோவில்களில் ஒலிக்க விடப்படுகின்றன. கோவில் மேடைகளிலும் ஏனைய இசை மேடைகளிலும் நமது உள்ளூர் பாடகர்கள் அவற்றைப் பாடக் கேட்கலாம். புதிய தொழில்நுட்பமும் அந்தத் தொழில்நுட்பத்தின் கைதியாக உள்ள புதிய தலைமுறையும் ரசனைகளிலும் பாடல்களிலும் பக்தியை வெளிப்படுத்தும் விதத்திலும் மாற்றத்தை விரும்புகின்றது. இது ரசனை மாற்றத்தை, புதிய தொழில்நுட்ப வருகைகளால் ஏற்பட்டிருக்கும் லயமாற்றத்தை காட்டுவது. ஒரு தலைமுறை பக்திப் பாடல்களையும் ரப் இசையில் கேட்க விரும்புகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் ஈழத்து உச்சரிப்பில் ரப் பாடலைக் கேட்கும் ரசிகர்களின் தொகை அதிகரிக்கின்றது.சமூக வலைத் தளங்களில் அலையும் ஒரு தலைமுறையின் இசை,அரசியல்,அறிவியல் தொடர்பான பார்வைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே “சரிகமப” நிகழ்ச்சியில் ஈழத்துப் பாடகர்கள் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள்.அதில் வணிக உள்நோக்கங்கள் இருக்கலாம். ஆனாலும் பாக்கு நீரிணையின் இரண்டு பக்கமும் உள்ள இரண்டு தமிழ்ச் சமூகங்களுக்கும் இடையிலான பிணைப்பு கடந்த 16 ஆண்டுகளாக அதிகம் சோதனைக்கு உள்ளாகியிருக்கும் ஓர் அரசியல், பண்பாட்டுப் பின்புலத்தில், ஈழத்துப் பாடகர்கள் தமிழக மேடைகளை நோக்கிச் செல்வது பிணைப்புகளைப் பலப்படுத்தும். சரிகமப மேடை என்பது அதிகபட்சம் ஜனரஞ்சக வணிக சினிமாவின் நீட்சியும் அகற்சியுந்தான். அங்கே மரபுகளை உடைத்துக் கொண்டு வெளியே வருவது குறைவு. ஆனால் ரப் இசை எப்பொழுதும் மரபுகளை உடைப்பதற்கான அதிகரித்த வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. அதன் தொடக்கமே புரட்சிகரமானது. மேற்கில் அது எதிர்ப்பின் வடிவமாகத்தான் எழுச்சி பெற்றது. பாதிக்கப்பட்டவர்கள்,ஒடுக்கப்பட்டவர்கள்,நசுக்கப்பட்டவர்கள் தங்கள் குரலை வெளிக்காட்டும் இசை வடிவமாக அது மேலெழுந்தது. அங்கே இசை அல்லது தாள லயத்துடன் உச்சரிக்கப்படும் வரிகள் எதிர்ப்பின் கருவிகளாக மேல் எழுகின்றன. ஈழத் தமிழ் வேரில் பிறந்த வேடனும் வாகீசனும் இந்திய உபகண்டப் பரப்பை நோக்கி, பெருந் தமிழ்ப் பரப்பை நோக்கிப் பாடுகிறார்கள். சரிகமப மேடையில் ஈழத்துப் பாடகர்கள் பாடுகிறார்கள். ”டூரிஸ்ட் பமிலி” திரைப்படம் ஈழத் தமிழர்களை நோக்கிக் கேட்கிறது “உங்களை யார் அகதி என்று சொன்னது?” என்று. இவை யாவும் கடந்த 16ஆண்டுகளாக மெலிந்து போயிருக்கும் தமிழக-ஈழத் தமிழ்ப் பிணைப்புக்களை மீளக்கட்டி எழுப்புவதற்கான நம்பிக்கைகளைப் புதுப்பிக்கின்றன;பலப்படுத்துகின்றன. https://www.nillanthan.com/8018/
  35. அமெரிக்க - இந்திய போட்டிக்குள் இலங்கை! - ------------- *சஜித் ஜனாதிபதியாக இருந்தாலும் உதவிகள் கிடைத்திருக்கும்... *டில்லியின் திட்டத்திற்குள் அநுர வரவில்லையானால்...? *ஸ்ராலினுக்கு நோகாமல் நடத்தப்படட பேச்சு *ஜெயலலிதாவின் இன அழிப்புத் தீர்மானத்தை திமுக எதிர்க்கவில்லை அல்லவா? -- ---- ------- இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பு முறைமை (System) பிழையாகத் தெரிவது தமிழர்களுக்குத் தான். அதில் உண்மை உண்டு. ஆனால், புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கைத்தீவு என்ற ஒரு நாடு (அரசு) அமெரிக்க, இந்திய, சீன அரசுகளுக்கு அவசியமானது. அந்த அடிப்படையில் ஏட்டிக்குப் போட்டியாக ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பில் எவர் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த நாடுகள் நான் முந்தி நீ முந்தி என்று உதவியளிக்கும். 2009 இல் கூட இதுதான் நடந்தது. அதாவது, கட்சி அரசியல் குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் சாணக்கியம், ரணில் விக்கிரமசிங்கவின் உலக அரசியல் அறிவு, சஜித் பிரேமதாசாவின் அரசியல் நுட்பம் என்ற கோணங்களில் இந்த நாடுகள் உதவியளிப்பதில்லை. மேலும் அழுத்திச் சொல்வதானால், அநுரகுமார திஸாநாயக்கவின் இடத்தில் இப்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் உதவிகள் கிடைத்திருக்கும். ஆகவே -- டித்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வெளிநாடுகள் உதவியளிப்பதை அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் நுட்பம் அல்லது ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தியின் அரசியல் காய்நகர்த்தல் என்றெல்லாம் மிகைப்படுத்திப் பேசுவதை அமைச்சர்கள் நிறுத்த வேண்டும். ஆனால், அவ்வப்போது பதவியில் இருக்கும் ஆட்சியாளர்கள் சமகால புவிசார் அரசியல் போட்டிச் சூழலை இனம்காணக்கூடிய ஆற்றல் உள்ளவர்களாக இருப்பது அவசியம். குறிப்பாக -- மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய புவிசார் அரசியல் பின்னணிகளை சரியாகப் பயன்படுத்தினார். அதாவது, விடுதலைப் புலிகளை அழிக்க அமெரிக்கா தான் பொருத்தமான நாடு என்பதை மகிந்த தெரிந்து கொண்டார். இதனால் 2009 இல் போர் இல்லாதொழிக்கப்பட்டது. 2015 இல் உருவான புவிசார் அரசியல் பின்னணிகளை மையப்படுத்தி ரணில் மேற்கொண்ட நகர்வு ஜெனீவாவில் ஈழத்தமிழர் விவகாரத்தை மீள் நல்லிணக்கம் என்ற சொல்லாடலுக்குள் கொண்டு வந்தது. இனப்பிரச்சினை விவகாரத்தை வெறுமனே மனித உரிமைகள் விவகாரமாக அது மடைமாற்றியது. 2020 கோட்டாபய எடுத்த நகர்வும் 2022 இல் ரணில் ஜனாதிபதியாக வந்த போது மேற்கொண்ட நகர்வுகளும், அமெரிக்க - இந்திய அரசுகளை சமாந்தரமாக கையாளும் அணுகுமுறைக்கு வழி வகுத்தது. அதேநேரம் -- சீனாவுக்குரிய இடமும் இலங்கையில் சுதந்திரமாக உண்டு. இந்த அரசியல் தேவை, சிறிமா - ஜேஆர் காலம் முதல் உண்டு. இது அமெரிக்க இந்திய அரசுகளுக்கு புரியாத புதிரும் அல்ல. இதையே தற்போது அநுரகுமார திஸாநாயக்கவும் கையாளுகிறார். ஆகவே இது ஒன்றும் பெரிய இராஜதந்திரம் அல்ல. குறிப்பாக இலங்கையின் சிஸ்ரம் (System) என்பது எப்போதும் அமெரிக்கச் சார்புத் தன்மை கொண்டது தான்.. அதன் பின்னர் தான் இந்திய, சீன உறவு என்பது. ஆனாலும், ஈழத்தமிழர் விவகாரங்களில் மாத்திரம் அமெரிக்கா இன்றுவரை கூட இந்திய மத்திய அரசு எடுக்கும் நிலைப்பாட்டோடு ஒத்துழைக்கிறது. குறிப்பாக -- சீனா - ரசியாவை மையப்படுத்தி அமெரிக்க - இந்திய அரசுகளிடையே பனிப்போர் நிலவினாலும், தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டோடு அமெரிக்கா ஒத்துழைக்கிறது. அதாவது மோடி இருந்தால் என்ன ராகுல் காந்தி இருந்தால் என்ன 13 ஆவது திருத்தச் சட்டமே தீர்வு என்பது இந்திய அரசின் நிலைப்பாடு என்பது அமெரிக்காவுக்குத் புரியும். வடக்கு கிழக்கில் உள்ள இயங்கைத் துறைமுகங்களை பங்கு போடுவதிலும் அமெரிக்க - இந்திய அரசுகள் ஒரு புள்ளியில் நிற்கின்றன. இதனை அநுரகுமார திஸாநாயக்க நன்கு விளங்கிக் கொண்டு காய்நகர்த்துகிறார். அநுர புரிந்துகொண்டார் என்பதை விடவும் வடக்கு கிழக்கு தமிழர்களை கையாளும் இராணுவப் பொறிமுறை (Military Mechanism) அநுரவுக்கு அறிவுறுத்தியுள்ளதன் பிரகாரம், அநுரவின் தற்போதைய அணுகுமுறையை அவதானிக்க முடியும். அதேநேரம்-- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அமெரிக்க பின்புலம் கொண்ட கட்சி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் அதேநேரம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை கஜேந்திரகுமார் எதிர்ப்பதில்லை. ஏனெனில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு ம் அவசியமான ஒன்று. இது கஜேந்திரகுமாருக்கும் நன்கு தெரியும். இப்போது இவர்கள் தமிழ் நாட்டுக்குச் சென்றிருப்பது கூட அமெரிக்க - இந்திய அரசுகளின் புவிசார் தேவையின் அடிப்படைகளை மையம் கொண்டதாகக் கூட இருக்கலாம். தற்போது குழப்பமடைந்துள்ள உலக அரசியல் ஒழுங்கு நிலையில் அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளுக்கு இலங்கை போன்ற சிறிய நாடுகள் தேவைப்படுகின்றன. அந்த அடிப்படையில் இந்தோ - பசுபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இந்தியாவுடன் அமெரிக்கா முரண்பாட்டில் உடன்பாடாக பயணிக்க வேண்டிய அவசியம் உண்டு. இந்தியாவின் ரசிய - சீன கூட்டு அமெரிக்காவுக்கு ஒத்துவராத சூழலிலும், இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவுடன் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து நிற்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு உண்டு. ஆகவே, இலங்கையை மையப்படுத்தி அமெரிக்க - இந்திய உறவு இருக்க வேண்டுமானால், முதலில் வடக்கு கிழக்கில் அமைதி நிலவ வேண்டும். இதனால் புலிகள் இயக்கமும் அழிக்கப்பட்டது. ஆனாலும் -- 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் அந்த அமைதி நிலவாத ஒரு பின்னணியில், இலங்கை ஒற்றை ஆட்சி அரசு என்ற கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சி ஏற்கனவே அமெரிக்க இந்திய அரசுகளின் கொள்கைக்கு ஏற்ப இணங்கிச் செல்லக் கூடிய பக்குவத்துக்குள் நுழைந்துவிட்டது . கஜேந்திரகுமார் சற்று வித்தியாசமாக செயற்பட்டு வருவதால், அமெரிக்க - இந்திய நலன் சார்ந்து செயற்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் அவ்வப்போது வழங்கப்பட்டன. ஆனாலும் தோ்தல் அரசியலை மையமாக் கொண்டு தூய தமிழ்த் தேசியம் பேசுவது போன்ற தோற்றத்தை கஜேந்திரகுமார் காண்பித்து வருகிறார். இதன் பின்னணியில் கஜேந்திரகுமாருக்கும் அவரது கட்சிக்கும் நோகாமல் நகர்த்தப்படும் அரசியல் தான், இந்த தமிழ் நாட்டுப் பயண ஏற்பாடு. சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் இந்த அணுகுமுறைக்குள் கஜேந்திரகுமார் சென்றிருக்கத் தான் வேண்டும். ஆகவே -- அமெரிக்க இந்திய அரசுகள் தமது புவிசார் அரசியல் போட்டிக்குள் ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பை தங்கள் பிடிக்குள் வைத்திருக்கும் நோக்கில் இந்த காய் நகர்த்தல்களை செய்கிறார்கள் என்பது புரிகிறது. தமிழ் நாட்டில் ஸ்ராலின் ஆட்சியில் இருந்தால் என்ன விஜய் ஆட்சிக்கு வந்தால் என்ன, ஈழத்தமிழர் விவகாரத்தில் 13 என்ற இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்றுத் தான் ஆக வேண்டும். இவை எல்லாவற்றையும் உள்வாக்கியே கஜேந்திரகுமார் சென்னைக்குச் சென்றிருக்கிறார். அதேநேரம் -- அமெரிக்க - இந்திய அரசுகள் தயாரிக்கும் தமிழர் விவகார ஏற்பாடுகளுக்கு அநுரகுமார திஸாநாயக்கவும் ஒரு கட்டத்தில் அடங்கிச் செல்லவில்லை என்றால், அவரது ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டமும் அமெரிக்க - இந்திய அரசுகளிடம் இல்லாமில்லை. பாகிஸ்தான் - பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் தமக்கு ஏற்றமாதிரியான அரசியலைத்தான் அமெரிக்க - இந்திய அரசுகள் தற்போது கையாண்டு வருகின்றன. அதேநேரம் -- ரசிய - சீன கூட்டை இந்தியா வளர்த்து வருகின்றது என அமெரிக்கா ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மையமாக் கொண்டு அநுர அரசாங்கம் கையாளும் அணுகுமுறை, ரணில் என்ற தற்காப்பு அரசியல் சாணக்கியனால் மடைமாற்றப்படக் கூடிய ஆபத்துகளும் இல்லாமலில்லை. ஆகவே -- சரியான உத்தியுடன் வகுப்படாத அரசியல் வியூகத்துடன் தொடர்ந்தும் பயணிப்பதால், கையாளப்படும் சக்தியாக மாத்திரமே தமிழ்த்தரப்பு கையாளப்பட்டு வருகிறது. பொறிமுறை ஒன்றின் கீழ் தமிழ்த்தரப்பு ஒருமித்த குரலில் 2009 ஆம் ஆண்டிலிருந்து கட்சி அரசியலுக்கு அப்பால், உரிய முறைப்படி இயங்கியிருந்தால், தற்போதைய புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் ஒரு அரசு அற்ற சமூகமாக குறைந்தபட்ச அரசியல் லாபங்களை பெற்றிருக்கலாம். இப்போது கூட சஜித்,ரணில், அநுர என்று உள்ளக அரசியல் முரண்பாடுகள் ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டங்கள் சிங்கள அரசியல் பரப்பில் ஆழமாக வேரூன்றி வருகின்றன. அது சாத்தியமா இல்லையா என்பது வேறு. ஆனால் அந்த அரசியல் பின்னணிகளைக் கூட தமக்குச் சாதகமாக மாற்றும் நுட்பங்கள் எதுவும் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் இல்லையே! வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சி முறையில் ஈழத்தமிழர்களின் சுயநிரிணய உரிமை அங்கீகரிக்கப்படாது. ஏனெனில் சமஸ்டிக் கோட்பாடு பல வகைப்பட்டது. அமெரிக்காவின் உள்ள முழுமையான சம்ஸ்டி ஆட்சியை முறை கஜேந்திரகுமார் கோருகிறாரா அல்லது இந்திய சமஸ்டி முறைமையை கேட்கிறாரா? எதுவானலும் -- “ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை“ என்ற கோட்பாட்டில் இருந்து கஜேந்திரகுமார் விலகிவிட்டார் என்பதும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணையை தவிர்த்துள்ளார் என்பதும் இங்கே பட்டவர்த்தனம். இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை நடந்தால், சுயநிர்ணய உரிமை என்பது அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழும். ஆகவே “முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்” என்ற ஆழமான சர்வதேசக் கருத்தியலை கஜேந்திரகுமார் ஏற்றுள்ளார் என்பது இங்கே பகிரங்கமான உண்மை. குறிப்பாக -- தமிழக சட்ட சபையில் செல்வி ஜெயலலிதா நிறைவேற்றிய இன அழிப்புத் தீர்மானத்தை முன்கொண்டு சொல்ல வேண்டும் என கஜேந்திரகுமார் ஸ்ராலினிடம் கேட்கவில்லை. கட்சி வேறாக இருந்தாலும் தீர்மானம் என்பது தமிழக அரசினுடையது. அத் தீர்மாதை அப்போது ஸ்ராலின் எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0XuH6gpXsJhGgEjPcLdTfwb9gPDv5o4sFxA7PNHT4rfSnL5hgxd21uvQqUKXqzngjl/?
  36. பலருக்கு பிரஜைகள் குழு என்றால் என்ன என்று இப்போது விளங்குமா என தெரியவில்லை. நான் நினைக்கின்றேன் பிரஜைகள் குழு 1986/7 ம் ஆண்டளவில் விடுதலை புலிகள் அமைப்பினால் தோற்றுவிக்கப்பட்டது. குறிப்பாக உளவாளிகள் நடமாட்டம், கிராமங்களிற்கு வரும் வெளியார் பற்றிய தகவல் இவர்களினால் பெறப்பட்டு ஒரு விழிப்புணர்வு குழுவாக செயற்பட்டது. காலப்போக்கில் பிரஜைகள் குழுவின் செயற்பாடுகள் விஸ்தாரணம் பெற்றது என நினைக்கின்றேன். எனது தகவல் சிலவேளைகளில் தவறாகவும் அமையலாம் ஏன் என்றால் நான் நீண்ட காலத்தின் பின் பழைய நினைவுகளை கிரகிக்கின்றேன். பிரஜைகள் குழு பற்றிய விரிவான விளக்கம் தெரிந்தவர்கள்/ஏக காலத்தில் அப்போது ஊரில் வாழ்ந்தவர்கள் உங்கள் கருத்தை பகருங்கள். இந்திய அமைதிப்படை காலத்தில் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவது வழமையாக நடைபெற்றது. பிரஜைகள் குழு தலைவர்களும் முக்கியமாக குறி வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். வலிகாமம் பிரதேசத்து பிரஜைகள் குழு தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நினைவு சாதுவாக உள்ளது. அவர் பெயர் நினைவில்லை. பிரஜைகள் குழுவில் அங்கத்தவம் பெற்ற சிலர் பின்னர் இலங்கை தேர்தல்களிலும் நின்று வென்றார்கள் எனும் நினைவும் வருகின்றது. விடுதலை புலிகள் அமைப்பின் ஆதவாளர்கள் அல்லாத ஒருவர் பிரஜைகள் குழு உறுப்பினராகவோ தலைவராகவோ விளங்க முடியாது என நினைக்கின்றேன். இவை எனது பழைய நினைவு மீட்டல்கள் மட்டுமே. எனது தகவல் தவறாகவும் அமையக்கூடும்.
  37. குருவானவர் சந்திரா பெர்ணான்டோ அவர்களின் படுகொலை காலம் : ஆனி, 1988 இடம் : மட்டக்களப்பு , மரியண்ணை பேராலயம் நான் மட்டக்களப்பில் தங்கி வசிக்கத் தொடங்கியிருந்த காலம். மரியாள் ஆண்கள் விடுதியில் இன்னும் 40 மாணவர்களுடன் தங்கி பாடசாலை சென்று வந்தேன். விடுதி கத்தோலிக்க பாதிரிகளால் நடத்தப்பட்டு வந்தமையினால் பெரும்பாலான மாணவர்கள் கத்தோலிக்கர்கள், ஓரிருவரைத் தவிர. ஆகவே ஒவ்வொரு காலையும் தவறாது 6 மணிக்கு அருகில் அமைந்திருந்த புனித மரியண்ணை தேவாலயத்திற்கு காலைத் திருப்பலிக்காகச் செல்வது எமது நாளாந்தக் கடமைகளில் முதலாவது. சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் திருப்பலியினை ஒவ்வொரு நாளும் அத்தேவாலயத்தின் பங்குத் தந்தையான, குருவானவர் சந்திரா பெர்ணான்டோவே நடத்துவார். அவரது கனிவான முகவும், மென்மையான குரலும், அவர் திருப்பலியினை நடத்திச் செல்லும் விதமும் ஈர்ப்பினை உருவாக்கும். நாம் மிக்கேல் கல்லூரியின் மாணவர்கள் என்பதை அறிந்த அவர் எம்முடன் சிலவேளைகளில் பேசுவதுண்டு. எமது விடுதி நடத்துனரும், குருவானவர் சந்திராவும் நண்பர்கள் ஆதலால் திருப்பலி முடிந்தபின்னர் சிலவேளைகளில் அவர்கள் பேசும்வரை நாம் காத்திருப்போம். வார விடுமுறை நாளான சனி காலையில் அவரது திருப்பலி முடிந்தவுடன், சிசிலியா பெண்கள் பாடசாலையில் நடைபெறும் கத்தோலிக்க வகுப்புகளுக்கு நாம் செல்வோம். அங்கு தவறாது குருவானவர் சந்திராவும் கலந்துகொள்வார். சிலவேளைகளில் வகுப்புகளுக்கு வந்து மாணவர்களுடன் பேசுவதும் நடக்கும். இவ்வாறு மாணவர்களாலும், ஆசிரியர்கள், பெற்றோர்களாலும் நன்கு அறியப்பட்ட ஒருவர் சந்திரா அவர்கள். புலிகள் தொடர்பாக மென்மையான போக்கினைக் கொண்டிருந்தவர் என்று அறியப்பட்ட சந்திரா அவர்கள், அக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவந்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவந்தவர். மட்டக்களப்பில் இயங்கிய பிரஜைகள் குழுவின் தலைவராகவும் அக்காலத்தில் பணியாற்றியவர். இராணுவத்தினராலும், துணைராணுவக் குழுவினராலும் கைதுசெய்யப்பட்ட பல இளைஞர்களை மீட்கும் காரியங்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார். ஆகவே கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல் மட்டகளப்பு வாழ் தமிழர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு மனிதராக அவர் வலம்வந்தார். இவ்வாறான ஒரு நாள், ஆனி மாதம் 6 ஆம் திகதி மாலை வேளையில், விடுதி மாணவர்கள் சிலருடன் எமது விடுதிக்கு முன்னால் இருந்த வெற்றுக் காணியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். விடுதி நடத்துனரான‌ ஸ்டீபன், ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை படிப்பதை வாடிக்கையாகக் கொண்டவர். ஆகவே அவர் படிக்கும் வீரகேசரிப் பத்திரிக்கையினை வழக்கமாக போல் என்று அழைக்கப்படும் ஒரு மாணவனே மட்டக்களப்பு நகருக்குச் சென்று வாங்கிவருவான். அன்று வழமை போல போல் நகருக்கு பத்திரிக்கை வாங்கச் சென்றான்.சென்ற சிறிது நேரத்திலேயே அதிர்ச்சி மேலிட்டவனாக திரும்பி வந்தான். "பாதர் சந்திராவைச் சுட்டுப் போட்டாங்கள். கோயிலுக்குள்ள நிறைய ஆக்கள் நிக்கிறாங்கள்" என்று படபடக்கக் கூறினான். மரியாள் பேராலயம், எமது விடுதியில் இருந்து பார்க்கும் தூரத்திலேயே இருக்கிறது. ஓடிச்சென்றால் இரு நிமிடங்களில் ஆலயத்தை அடைந்துவிட முடியும். ஆகவே அவன் கூறியவுடன் மைதானத்தில் நின்ற அனைவரும் தேவாலயம் நோக்கி ஓடினோம். தேவாலயம் பூட்டிக் கிடந்தது. ஆனால் அதன் அருகில் இருக்கும் குருவானவர் சந்திரா பெர்ணான்டோவின் அலுவலகம் சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஒருவாறு சனக்கூட்டத்தினுள் நுழைந்து, அவரது அறையினுள்ச் சென்றோம். எனக்கு நன்கு பரிச்சயமான ஒருவரை, நாம் மதிக்கும் ஒருவரை, இரத்த வெள்ளத்தில் நான் முதன் முதலாகப் பார்த்தது அங்கேதான். குருவானவர் தனது கதிரையில் அமர்ந்தபடி கொல்லப்பட்டிருந்தார். அவரது உடல் கதிரையில் இருந்து பின்புறமாகச் சரிந்திருக்க, நெற்றியின் அருகிலிருந்து குருதி வழிந்தோடி அவரது ஆசனம் இருந்த அறையின் பகுதியை நனைத்திருந்தது. அவர் சுடப்பட்டு வெகுநேரமாக இருக்கமுடியாது, ஏனென்றால் குருதி இன்னமும் காயாது அப்படியே கிடந்தது. அவர் அணிந்திருந்த வெண்ணிற ஆடை குருதியில் நனைந்திருக்க அவர் அங்கு கிடந்த காட்சி பார்த்த அனைவரையும் மிகுந்த துன்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருந்தது. எவ்வளவு நேரம் அங்கிருந்தோம் என்று நினைவில் இல்லை. அதிர்ச்சியும், பயமும் எம்மை ஆட்கொள்ள மெதுமெதுவாக விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இதனை யார் செய்திருப்பார்கள் என்கிற கேள்வியே எம்மிடம் அன்று இருந்தது. குருவானவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவரைச் சந்திக்கவென்று இருவர் வந்ததை தேவாலயத்தில் தோட்டவேலைகளில் ஈடுபட்டு வரும் ஒருவர் பார்த்திருக்கிறார். குருவானவ‌ருடன் வந்த இருவரும் முரண்பாட்டுடன் சத்தமாகப் பேசுவது கேட்டிருக்கிறது. அதன்பின்னரே அவர்கள் குருவானவின் நெற்றியில், மிக அருகில் நின்று சுட்டிருக்கிறார்கள். மரியாள் பேராலயம் அமைந்திருந்த பகுதி இந்திய ராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியாகும். இப்பகுதியில் அமைந்திருந்த ஒவ்வொரு இந்திய இராணுவ முகாமின் முன்னாலும் தவறாது தமிழ் துணை ராணுவக் குழுவினரின் பிரசன்னமும் அக்காலத்தில் இடம்பெற்றிருக்கும். குருவானவர் கொல்லப்பட்டு சில நாட்கள் கடந்தபின்னர் அவரைக் கொன்றது இந்திய ராணுவத்துடன் மட்டக்களப்பு நகரில் இயங்கிவந்த புளோட் மற்றும் ஈ பி ஆர் எல் எப் துணை ராணுவக் குழுவினரே என்று பேசிக்கொண்டார்கள். குருவானவரைக் கொன்றவர்கள் மிக நிதானமாகவே அப்பகுதியில் இருந்து வெளியேறிச் சென்றிருக்கிறார்கள். தாம் அகப்பட்டுவிடுவோம் என்றோ, அருகில் அமைந்திருக்கும் இந்திய ராணுவ முகாமில் தடுக்கப்படுவோம் என்றோ அவர்கள் கலவரம் அடைந்திருந்ததாகத் தெரியவில்லை. இந்திய இராணுவத்தினதும், துணை ராணுவக் குழுக்களினதும் மனிதவுரிமை மீறல்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிவந்த குருவான‌வர் சந்திராவின் குரலை அடக்கவேண்டிய தேவை இந்திய இராணுவத்திற்கும் இருந்தமையினால், அவர்களின் பூரண ஆசீர்வாதத்துடனேயே சந்திரா துணை ராணுவக் குழு உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குருவானவர் சந்திராவின் இறுதிக் கிரியைகள் மட்டக்களப்பில் நடைபெற்றன. மிகப்பெருந்திரளான மக்கள் மத வேறுபாடின்றி அதில் கலந்துகொண்டார்கள். நானும் அந்த இறுதிநிகழ்வில் கலந்துகொண்டேன்.
  38. வீட்டிலிருந்து கொண்டுவந்த தேங்காய்கள், அரிசி மற்றும் சில மரக்கறிகள் ஓரிரு வாரத்திலேயே தீர்ந்துவிட்டது. மீண்டும் போகலாம் என்று முடிவெடுத்தோம். அந்நாட்களில் வேறு சிலரும் கோண்டாவில் பகுதிகளில் தமது வீடுகளைப் பார்க்கப் போய்வருவது தெரிந்தது. ஆகவே, நாம் இரண்டாவது தடவையாகவும் எமது வீடு நோக்கிப் பயண‌மானோம். இம்முறை கெடுபிடிகள் சற்றுக் குறைந்திருந்ததைப்போலத் தெரிந்தது. ஆனால் இந்திய ராணுவத்தின் பிரசன்னம் அப்பகுதியில் இருந்தது. பலாலி வீதியின் ஓரத்தில் முகாம்களை அமைத்திருந்தார்கள். போய்வருவோர் கடுமையாகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். எம்மையும் அவர்கள் சோதித்தார்கள். எதற்காக வீடுகளுக்குச் செல்கிறோம் என்று கேட்கப்பட்டது. இன்னமும் சேதப்படாமல் இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல வந்திருக்கிறோம் என்று கூறினோம், அனுமதித்தார்கள். இம்முறை நாம் வீட்டை அடைந்தபோது பக்கத்து வீட்டில் ஆட்கள் பேசும் சத்தம் கேட்டது. சென்று பார்த்தபோது அவ்வீட்டில் ஒருவரான பழனியண்ணாவும் இன்னுமொருவரும் நின்றிருந்தார்கள். வீட்டிலிருந்து துரத்தப்பட்ட நாளுக்கு முன்னைய நாளில் அவரைக் கண்டதற்கு இன்றுதான் அவரைக் காண்கிறேன். என்னைப் பார்த்தவுடன் அழத் தொடங்கினார். எதற்காக அழுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஏன் என்று நான் வினவியபோது அவர் . நடந்ததை விபரித்தார். அவர் விபரிக்க விபரிக்க‌ அன்றிரவு நடந்த அகோரம் எனக்கு வெளிச்சமாகியது. எமது வீடுகளுக்குள் இந்திய ராணுவம் நுழைந்த நாளன்று பக்கத்து வீட்டில் எவருமே இல்லையென்றுதான் நாம் நினைத்திருந்தோம். ஏனென்றால், தாம் நல்லூருக்குப் போகப் போவதாக பாமா அக்கா கூறிவிட்டுச் சென்றதனால், அவர்கள் அங்கு இல்லை என்றுதான் முதலில் எண்ணியிருந்தேன். ஆனாலும் அன்றிரவு எமது வீட்டைக் கடந்து சென்ற இந்திய இராணுவம் பாமா அக்கா வீட்டினுள் நுழைந்தபோது கேட்ட அழுகுரல்களும் அதனைத் தொடர்ந்து கேட்ட நீண்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் எனக்கு அங்கு ஆட்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லிற்று. ஆனால் அங்கிருந்தோர் யார், எத்தனைபேர், அவர்களுக்கு என்ன நடந்ததது என்பதுபற்றி பழனியண்ணை சொல்லும்வரை எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. காலையில் என்னுடன் பேசிவிட்டுச் சென்ற பாமா அக்காவின் குடும்பம் நல்லூருக்குப் போக ஆயத்தமாகியிருக்கிறது. ஆனால் செல்வீச்சுக் கடுமையாக நடக்க ஆரம்பித்ததையடுத்து, நிலைமை ஓரளவிற்கு சுமூகமானதும் நல்லூருக்குச் செல்லலாம் என்று இருந்திருக்கிறார்கள். ஆனால் நள்ளிரவுவரை செல்த்தாக்குதல் குறையவில்லை. அதன்பின்னர் துப்பாக்கிச் சண்டைகள் ஆர்ம்பமாகிவிட்டிருந்தமையினால் அவர்கள் நல்லூருக்குச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு வீட்டிலேயே இருக்கலாம் என்று இருந்துவிட்டார்கள். பாமா அக்காவின் வீட்டிற்குப் பின்னால் அமைந்திருக்கும் பேபி அக்காவின் வீட்டினரும் அன்றிரவு பாமா அக்காவின் வீட்டிலேயே அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். இந்திய இராணுவம் அவர்களது வீட்டருகில் வந்தபோது, பாமா அக்காவின் வீட்டிற்கு முன்னால் அமைந்திருக்கும் புகையிலைகளுக்கு புகைபோடும் குடிலுக்குள் பாமா அக்கா, பேபியக்கா, குலம் அண்ணா, மற்றும் பேபியக்காவின் இரு சகோதரர்கள், பேபியக்காவின் தகப்பனார் என்று ஏழுபேர் அடைக்கலம் புகுந்திருக்க ஏனையோர் அனைவரும் வீட்டினுள் இருந்திருக்கிறார்கள். முதலில் வீட்டினுள் நுழைந்த இராணுவம் சமயலறைப் புகைப்போக்கியின் கீழ் அமர்ந்திருந்த குடும்ப உறுப்பினர்களை யன்னலூடாகப் பார்த்துத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அதன்போதே "ஐய்யோ, சுடாதேயுங்கோ" என்ற அழுகுரல்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அதன்பின்னர் புகையிலைக் குடில்ப் பக்கம் தனது பார்வையைத் திருப்பிய இந்தியப் பேய்கள் உள்ளிருப்போரை வெளியே வரும்படி அழைத்திருக்கின்றன. தம்மை அவர்கள் கொல்லம்மாட்டார்கள் என்று நம்பிய குலம் அண்ணை முதலில் வெளியே வர அவரை வெட்டிச் சாய்த்தது இந்திய ராணுவம். அப்போதுதான், "ஐயோ, பிள்ளைகளை வெட்டாதேயுங்கோ" என்று பேபியக்காவின் தாயார் அலறியிருக்கிறார். குலம் அண்ணை கொல்லப்பட்டதைக் கண்ட ஏனையோர் தொடர்ந்தும் குடிலுக்குல் ஒளிந்திருக்க, அவர்கள்மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதோடு கைக்குண்டுகளையும் வீசி எறிந்திருக்கிறது இந்தியாவின் சாத்தான்படை. உள்ளிருந்தோர் அனைவரும் கொல்லப்பட்டு குடிலுடன் எரிக்கப்பட்டார்கள். ஆனால் வீட்டினுள் இன்னமும் பதுங்கியிருந்தோருக்கு வெளியே நடக்கும் அகோரம் எதுவுமே தெரிந்திருக்கவில்லை. காலையில் எம்மை இழுத்துச் சென்றது போல அவர்களின் வீட்டினுள் மீதமாயிருந்தோரையும் இந்திய இராணுவம் இழுத்துச் சென்று துரத்திவிட்டிருக்கிறது. ஆகவே குடிலுக்குள் தஞ்சமடைந்திருந்தோர் இன்னமும் உயிருடன் இருப்பதாகவே குடும்பங்களின் ஏனையோர் நினைத்திருந்திருக்கின்றனர். சில வாரங்களின் பின்னர் பாமா அக்கா எமது குடும்பத்துடன் நல்லூர்க் கோயிலில் காணப்பட்டதாக அவரது குடும்பத்திடம் யாரோ கூறிவிட அவர்கள் எம்மை பல வாரங்களாகத் தேடியிருக்கிறார்கள். எம்முடன் பாமா அக்கா இருப்பதாக அவர்கள் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களது நம்பிக்கைகளையெல்லாம் வேறோடு அறுத்துவிட்ட சம்பவம் நாம் இரண்டாவது தடவையாக வீடுகளைப் பார்க்கச் சென்றபோது அவர்களுக்கு நடந்தது. பாமா அக்காவின் மாமனாரான பழனியண்ணாவும் அவரது உறவினர் ஒருவரும் எம்மைப்போலவே தமது வீடுகளைப் பார்க்க‌ வந்திருக்கின்றனர். முதலில் வீட்டினுள் சென்று அழிவுகளை நோட்டம்விட்டு விட்டு, பின்னர் புகையிலைக் குடிலுக்குள் சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை கடுந்துயரத்தில் ஆழ்த்திவிட்டது. உள்ளே பாதி எரிந்த நிலையில் ஏழு சடலங்களை அவர்கள் கண்ணுற்றிருக்கிறார்கள். அப்போது அங்கு இருந்தது யாரென்பது ஓரளவிற்குத் தெரிந்துவிட்டது அவர்களுக்கு. அங்கு கிடந்த ஏழு சடலங்களுல் ஒன்று பாமா அக்காவினுடையது. அவர் அணிந்திருந்த மோதிரமும், அவர் தலையில் குத்தியிருந்த இரும்பிலான கிளிப்பும் அவரை அடையாளம் காட்டின. அங்கிருந்த மற்றைய பெண்ணின் சடலம் பேபி அக்காவுடையது. பாதி எரிந்த நிலையில் காணப்பட்ட அவரது ஆடைமூலம் அவரை அடையாளம் கண்டுகொண்டார் பழனியண்ணை. அவர்களைத் தவிர மீதமாயிருந்த நால்வரும் குலம் அண்ணை, பேபியக்காவின் தந்தை மற்று பேபியக்காவின் இரு சகோதரர்கள் என்பதை நாம் உணர்ந்துகொண்டோம். பாமா அக்கா உயிருடன், எம்முடன் இருக்கிறார் என்று அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை அன்று காலையுடன் அற்றுப்போனபோதே அவரை துக்கம் ஆட்கொண்டது. அதனாலேயே என்னைக் கண்டவுடன் அவர் அழத் தொடங்கினார். அன்று அவரும் அவரது உறவினரும் எமது ஒழுங்கையினுள் காணப்பட்ட சடலங்கள் அல்லது எலும்புக் கூடுகளை ஒரு குவியலாகப் போட்டு எரித்தார்கள். அவர்களது உறவினர்கள் ஏழுபேருடையவை தவிர்ந்த இன்னும் இருபது மனித எச்சங்களை அவர்கள் ஒழுங்கையின் அருகிலிருந்து தூக்கிவந்தார்கள். உடைந்த தளபாடங்கள், மரங்கள் , சருகுகள் கொண்டு நாம் அவர்களுக்கான இறுதிக் கிரியைகளைச் செய்தோம். எமது ஒழுங்கையில் மட்டுமே கொல்லப்பட்ட எம்மக்களின் எண்ணிக்கை 27.
  39. இங்கையும் அதே கூத்துதான் தோழர் ..
  40. தக்காளி நெய் பருப்பு . .........நல்ல சுவையாய் இருக்கும் . .......! 😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.