Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19583
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    39259
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33745
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    88738
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/08/26 in Posts

  1. ரசோவை கட்டும் மாந்திரீகம் நம்மிடமிருக்கு ...அதுதான் சாம் கரன் ...இங்கிலாந்து ...பயந்து பயந்தே வென்றுவிட்டது.. நேபாளிக்காரன்களுக்கு ..சூரியவன்சிதான் கோச் போலகிடக்கு உவ்வளவு சனமும் நேபாளத்தில் இருந்து வந்ததுகளோ... மிகப் பெரிய முன்னேற்றம் ..நேபாள்.. எப்படியும் இலங்கைகாரருக்கு வயித்தை கலக்க..தொடங்கியிருக்கும்
  2. நான் முதலில் உங்கள் கருத்தினை சரியாக பார்க்கவில்லை, நீங்கள் குறிப்பிட்ட கோடாரிக்காம்பு என்பதன் மூலம் தமது இனத்தினை தாமே கருவறுப்பவர்களுக்கெதிராக பயன்படுத்தப்படுவதனை ஜஸ்ரின் தவறாக புரிந்து கொண்டாரோ என நினைத்தேன் பின்னர் உங்கள் கருத்தினை பார்த்த போது நிங்கள்தான் கோடாரி காம்பினை தவறாக பயன்படுத்தியதை உணர்ந்து கொண்டேன். நான் உங்கள் கருத்துக்களை எப்போதும் மதிப்பவன் அதனால் அந்த கருத்தில் கொஞ்சம் உடன்பாடில்லாமல் போய்விட்டது, அது ஒரு ஏமாற்றத்தின் விளைவாக எனது கருத்தினை பதிந்துவிட்டேன். நீங்கள் கோவத்தினால் அவ்வாறு கூறியிருந்தாலும் அது உண்மையான நீங்கள் இல்லை என கருதுகிறேன். உங்களின் நிலையில் நானிருந்தால் உங்களை விட மோசமாக வினையாற்றியிருக்ககூடும், எல்லோரும் இதே போல நிலைகளை எப்போதும் எதிர்கொள்கிறோம், கடைசியில் இவைகள் வெறும் கருத்துகள் மட்டுமே.
  3. நாளை திங்கள் 09 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT எதிர் ITA 18 பேர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும் மற்றைய ஐந்து பேர் இத்தாலி அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். இத்தாலி சுவைப்பிரியன் வாதவூரான் கிருபன் கோஷான் சே ரசோதரன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA எதிர் ZIM இருவர் மாத்திரம் ஓமான் அணி வெல்லும் எனவும் மற்றைய 21 பேரும் ஸிம்பாப்வே அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஓமான் சுவி கோஷான் சே இந்தப் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN எதிர் SA அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டைகள் பரிமாறப்படுமா?
  4. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 15 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை எடுத்திருந்தாலும் இறுதி ஐந்து ஓவர்களில் அயர்லாந்து இறுக்கமாக பந்து வீசாததாலும் தடுப்பில் தவறுகள் விட்டதாலும், குசல் மெண்டிஸின் ஆட்டமிழக்காது எடுத்த 56 (43 பந்துகளில்) ஓட்டங்களுடனும் கமிண்டு மெண்டிஸின் புயல்வேக 44 (19 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி சிறந்த துவக்கத்துடன் ஆரம்பித்தாலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததால் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: சிறிலங்கா அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
  5. இந்த கருத்தை முழுமையாக வாசிக்கவில்லை. மேலோட்டமாக வாசித்து நன்றி இட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். தனிப்பட எனக்கு இசுலாமிய தமிழர்கள் மீது அவநம்பிக்கைகளும் தும்பகரமான நிகழ்வுகளும் இருந்தபோதிலும் தமிழர்களை மத ரீதியாக பிரிந்து அல்லது இஸ்லாமியர்களை ஒதுக்கி எமக்கான விடுதலை சாத்தியமே இல்லை. இது எனது நிலைப்பாடு. நன்றி.
  6. தமிழர்களும், இஸ்லாமியர்களும் ஒரே மரத்தில் இருந்து வந்தவர்கள் என்கிற கருத்துக்கள் அர்த்தமற்றுப் போய் பல தசாப்த்தங்கள் ஆகிவிட்டன. சிங்கள பேரினவாதிகளின் சூழ்ச்சிகளுக்குட்பட்டு விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை பேரினவாதத்தோடு சேர்ந்து அழிக்கத் துணைபோன காலத்திலேயே இந்த "ஒருமரம், இருகிளை" எனும் சப்பைக்கட்டல்கள் அழிந்துபோயின. தனி அடையாளம், தனிப் பிராந்தியம், தனியலகு, தனிக் கலாசாரம் என்று இஸ்லாமியர்கள் தமிழர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போய்விட்டார்கள். 90 களில் கிழக்கில் இடம்பெற்ற தமிழருக்கெதிரான படுகொலைகளில் முஸ்லீம்களின் பங்களிப்பிற்கு அப்பால், போரின் பின்னரான காலத்தில் வாழைச்சேனையில் ஹிஸ்புள்ளா தலைமையில் இடம்பெற்றுவரும் தமிழ் நில அபகரிப்பு, மன்னாரில் இடம்பெற்ற பதிருதீன் தலைமையிலான நில அபகரிப்பு, கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் என்பன சொல்லும் செய்தி முஸ்லீமும் தனியான ஒரு இனம், அது தனது நிலப்பரப்பை தமிழர்களை வ‌ஞ்சித்தாவது பெற்றுக்கொள்ளும் என்பதுதான். இன்று இலங்கையில் இருப்பது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என்று மூன்று இனங்கள் மட்டுமே. அப்படியில்லாமல் முஸ்லீம்களும் தமிழர்கள்தான் என்று இங்கு யாராவது இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களை நீங்களே பேய்க்காட்டுகிறீர்கள் என்று அர்த்தம். என்னைக் கண்டிப்பதாக ஆளாளுக்கு போட்டிபோட்டு வருபவர்களுக்கு ஒரு செய்தி. நீங்கள் யார் என்னைக் கண்டிப்பதற்கு? நான் சரியென்று நினைப்பதை நான் எழுதுவதற்கு உங்களின் அனுமதியோ அல்லது அனுசரணையோ எனக்குத் தேவையில்லை. இத்திரியில் இன்னொருவருக்கு எழுதிய கருத்தில் தானாகப் புகுந்து, எனது கருத்தை கேலியாக விமர்சித்ததற்காகவே அந்த நபருக்கு நான் ப‌தில் எழுதினேன். இத்தளத்தில் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து, தமிழ்த் தேசியத்தை (புலிகளை மட்டுமல்ல, தந்தை செல்வாவிலிருந்து, தமிழரசுக் கட்சியிலிருந்த அனைவரையும் "யாழ்ப்பாணிகள்" என்று விளித்து) கடுமையாக விமர்சித்துவரும் வேற்றினத்தைச் சேர்ந்த ஒருவருக்கான எனது பதிலே அது. யாழ் இணையம் தமிழர்களின் விடயங்களை அலசுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. எமது இனத்துடன் சம்பந்தப்படாத, ஆனால் எமதினத்தின் இருப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய, ஏற்படுத்தி வருகின்ற இன்னொரு இனத்திலிருந்து ஒருவர் எனது கருத்திற்கு கேலியாக பதில் எழுதும்போது வருகின்ற இயல்பான கோபமே எனது பதிலில் இருப்பது, ஆனால் அதிலிருப்பது உண்மையான தகவல்களே என்பது உங்களுக்குத் தெரியும், ஆனாலும் நீங்கள் போடும் கனவான் வேட‌ங்களை அது பாதிக்கும் என்பதால் என்னை வைகிறீர்கள். நீங்கள் என்னைக் கண்டித்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நான் எழுதுவதை மாற்றப்போவதில்லை.
  7. என்னது கண்ணை பார்ப்பதா… தலை தெறிக்க வேணா ஓடலாம்….😂 கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்… அந்தியேட்டி என்று அர்த்தம்😂.
  8. இங்கு அடிமைகள் மற்றவர்களை அடிமைகள் ஆக இருக்க சொல்ல வேண்டாம் அதற்கு யாழை ஒரு ஊது குழல் ஆக்க வேண்டாம் தமிழ் தேசியம் தமிழர் என்பது உண்மையான தமிழனின் இயல்பு .அடிமையான மொக்கு கூட்டங்களுக்கு பலமுறை எடுத்து சொன்னாலும் விளங்காது என்பது எமக்கும் புரியும் எடுத்ததுக்கெல்லாம் யாழில் புலியை திட்டாது விட்டால் அன்றைய இரவுக்கு நித்திரை வராவிட்டால் ஒழுங்கான வைத்தியர் இடம் நித்திரை குளுசை வாங்கி போடுவது அடிமை விசுவாசிகளுக்கு மிகவும் நல்லது அதை விட்டு இந்த புனிதமான யாழை உங்கள் இஷடத்துக்கு அசிங்கம் பண்ண வேண்டாம் .
  9. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
  10. சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே ........! 😍
  11. உங்கள் அசாத்திய தைரியத்துக்கு வாழ்த்து😂. யாழ்களத்திலேயே அர்ஜூன், ஜூட், துல்பென், ஜீவன் என இப்படி வாய்ப்பை உருவாக்க முனைந்து, பிச்சை வேண்டாம் நாயை பிடி என ஓட வைக்கப்பட்டோர் பலர் 😂. அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்காத, நவீனன் சும்மா சங்ககாராவை அவதாரில் வைத்தமைக்காக கூட்டமாக கூடி கொத்தி கலைக்கப்பட்டார். இப்போ ஐலண்டுக்கு சுன்னத் டெஸ்ட் நடக்கிறது 😂. உண்மையில் இங்கே நாதம், நியாயம், கொழும்பான் தாம் முஸ்லிம்கள் என சொல்லி எழுதும் நிலை இருக்க வேண்டும்? ஆனால் தாதாக்களுக்கு பயந்து அவர்களும் தமிழர் என்பது போல் எழுதுகிறார்கள். நிலமை இப்படி இருக்கும் போது, ஒற்றுமையாவது, ஒரே திசையாவது, ஹைகோர்ட்டாவது என்பதுதான் என் மதிப்பீடு😂.
  12. இன்றும் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமென முத்திரை குத்தப்பட்ட இயக்கமாகவே இருக்கின்றது. அதை மனதில் வைத்து கரிக்கருத்துக்களாகவே கொட்டுகின்றீர்கள் போல் இருக்கின்றது. ஈழ அரசியலில் 2009 அழிவிற்கு பின்னரான காலத்தையும் இன்றைய நிலையும் நீங்கள் அலசத்தயாரில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. நாங்கள் மாறுவம் நீங்கள் மாறவே மாட்டீர்கள்.😎 உலகில் உள் நாட்டு அரசியலை வல்லமை மிக்க வெளிநாட்டு அரசியல் தீர்மானிப்பதன் அவலங்களை இன்று கண்கூடாக பார்த்த பின்னரும் ......உங்களுக்கு புலிக்காய்ச்சல் தீரவில்லை என்றால்...... அந்த காய்ச்சலுக்கு மருந்தே இல்லை. வணக்கம் ஐயா! நான் எழுதுவது நகைச்சுவைதான். இருந்தாலும் நான் நிற்கும் இடத்தை குறிப்பிடுகின்றேன். ஆனால் நீங்கள் யார் பக்கம் நின்று எழுதுகின்றீர்கள் என எந்த குருவிக்கும் தெரியாது. சீனடி சிலம்படி சுத்தியடி சுழட்டியடி என்பது போல் யார்பக்கம் ஏன் எழுதுகின்றீர்கள் என்பது புரிவதில்லை.
  13. யாழ் களத்தின் சக உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து தான் கண்டிக்கிறார்கள். உங்களுக்குச் சரியாகத் தெரியும் ஒரு கருத்து இன்னொருவருக்கு கடைந்தெடுத்த இனக் குரோதக் கருத்தாகத் தெரிந்தால் அவர் நிச்சயம் சுட்டிக் காட்ட வேண்டும். அதைத் தான் செய்திருக்கிறார்கள், "எங்கள் அங்கீகாரம் பெற்றுக் கொண்டு எழுதுங்கள்" என்று யாரும் சொல்ல வரவில்லை!
  14. @ரசோதரன் நீங்க‌ள் தெரிவு செய்த‌ நேபால் அணி க‌ட‌சி க‌ட்ட‌த்தில் எப்ப‌டி அடிச்சு ஆடினார்க‌ள் என்று பாருங்கோ...............என‌க்கு இங்லாந் அணியையும் அதிக‌ம் பிடிக்கும் அதே போல் நேபால் அணியையும் பிடிக்கும்.....................நேபால் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு ம‌ற்றும் ம‌ட்டைய‌டி இர‌ண்டும் அருமை..................என்ன‌ இங்லாந்தை போல் 50க்கு மேல் ப‌ட்ட‌ கிரிக்கேட் மைதான‌ம் நேபாள‌த்தில் இல்லை இருக்கிற‌ ஒன்று இர‌ண்டு மைதான‌த்தில் விளையாடி சர்வ‌தேச‌ப் போட்டியில் சாதிக்கின‌ம்...........................
  15. நான் காலையில் எழுந்து விளையாட்டை பார்த்தேன் அப்கானிஸ்தான் அடிச்ச‌ 182ர‌ன்ஸ் ந‌ல்ல‌ ர‌ன்ஸ் என‌ நினைத்தேன் எப்ப‌டியும் நியுசிலாந்தை அப்கானிஸ்தான் ம‌ட‌க்கி போடுவின‌ம் என‌ நினைத்தேன்..............சென்னை மைதான‌த்துக்கு 182பெரிய‌ ஸ்கோர்............நியுசிலாந் வீர‌ர்க‌ளின் அதிர‌டி ஆட்ட‌த்தால் 17ஓவ‌ரோட‌ விளையாட்டை முடித்து விட்டின‌ம்.............................
  16. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, குல்படின் நைப்பின் அதிரடியான 63 (35) ஓட்டங்களோடு 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி டிம் செய்ஃபேர்ட்டின் வேகமான 65 (42) ஓட்டங்களோடு 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜேக்கப் பெத்தெல் 55 (35), ஹரி புரூக் 53 (32) ஆகியோரின் அதிரடி ஆட்டங்களுடனும், வில் ஜக்ஸ் ஆட்டமிழக்காமல் எடுத்த புயல்வேக 39 (18) ஓட்டங்களோடும் 7விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பாடிய நேபளம் அணி திபேந்திர சிங் ஐரீ 44 (29), ரோஹித் பெளடேல் 39 (34) ஆகியோரின் வேகமான ஓட்டங்களுடனும், லோகேஷ் பாம் ஆட்டமிழக்காமல் எடுத்த 39 (20) ஓட்டங்களுடனும் வெற்றி இலக்கை அண்மித்தாலும், இறுதி ஓவரில் சாம் கரனின் இறுக்கமான பந்து வீச்சால் வெற்றி இலக்கிற்கு 10 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, இறுதியில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 4 ஓட்டங்களால் வெற்றியீட்டியது இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த @ரசோதரன் க்கு புள்ளிகள் இல்லை.
  17. மைடியர் மீனா உன் ஐடியா என்ன ........! 😍
  18. அப்ப என்ன, இங்கிலாந்து பாகிஸ்தான் இலங்கை..... மூவரில் யார் முதலில் தோற்பது என்பதுதான் போட்டியோ. ஏதோ ஒரு சிறிய அணி அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  19. ரச்சின் துப்பரவா கணிக்கவேயில்லை. பந்து அப்பிடியே காலுக்கும் மட்டைக்கும் இடையால போய் விக்கட்டை உடைக்கும். நீங்கள் தெளிவாச் சொல்லியிருக்கிறீர்கள்
  20. லன்கன்ஸ் ஆருகாண்டியோ புல்லுப்போட்டு பொங்கினவை ...இப்ப அவைக்கே ஆபத்து...ரத்நாயக்கவும் அவுட் ..இந்த மச் வெல்லவிட்டால் உவை நாட்டில் இருந்தபாடில்லை
  21. 2009 இதன்பின்புதான் தமிழன்யார்? தமிழ் பேசுபவன்யார்?? தமிழைவைத்துப் பிழைப்பவன்யார்??? என்பதனை அறியமுடிந்தது.
  22. பொய்யுரை - சுப.சோமசுந்தரம் இக்கட்டுரை பொய்மையும் வாய்மையிடத்த பொய்யுரை பற்றியது. இரண்டொரு எடுத்துக்காட்டுகளுடன் அத்தகு பொய்யுரையை நிறுவ முற்படுவது. சமீபத்தில் நண்பர் ஒருவர் திருக்குறள் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில், "அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" (குறள் எண் 37) என்றுள்ள குறளுக்கு உரைகள் பலவற்றிலும் பொருள் தெளிவாகச் சொல்லப்படவில்லையே என்று தம் மனக்குறையை வெளியிட்டார். பரிமேலழகர், மணக்குடவர் போன்ற பழம்பெரும் உரையாளர்கள் 'கர்மா'வின் அடிப்படையில் தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல, பல்லக்கைத் (சிவிகை) தூக்குபவனும் (பொறுத்தான்) அதில் அமர்ந்திருப்பவனும் (ஊர்ந்தான்) அவர் தாம் செய்த அறத்தின் பயனை இவ்வாறு அனுபவிக்கின்றனர் எனச் சொல்ல வேண்டியதில்லை (தானாக விளங்கி நிற்பது) என்று சொல்லிச் செல்கின்றனர். வள்ளுவனைச் சிறந்த பகுத்தறிவாளனாய்ப் பார்த்துப் பழகிய நமக்கு குறளின் பொருள் வேறாய்த் தொனிக்கிறது. நமக்கு மட்டுமா ? ஜி.யு.போப், மு.வரதாசனார், சிற்பி பாலசுப்பிரமணியம் போன்றோருக்கும் அவ்வாறே தொனிக்கிறது. ஆனால் குறளைப் போலவே பொருளையும் அவர்கள் இரத்தினச் சுருக்கமாய்ச் சொல்லியதால் சிலருக்குப் பொருள் புலப்படாமல் போயிருக்கலாம். எனவே அந்த சிலர் உணர விரித்துரைக்கும் தொழிலை நாம் மேற்கொள்ளலாமே ! "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்" (குறள் 319) போன்று நாம் செய்த குற்றங்களுக்குத் தண்டனை உண்டு என்பதெல்லாம் முதிர்ச்சி குறைந்தோரை மிரட்டி அறவழி செலுத்துவதற்காகவே. இது சமூக நன்மை கருதி அறன் வலியுறுத்துவோரின் மேன்மைதகு பொய்யுரை. இதனை இக்கட்டுரையில் சுட்டப்படும் முதல் பொய்யுரை எனக் கொள்ளலாம். மற்றபடி முதிர்ச்சியுடையோர்க்கு இப்பொய்யுரையெல்லாம் தேவையில்லை. அறவழி நடத்தலே சமூகத்தில் இன்னல்களைத் தவிர்ப்பது என்று அன்னார் உணர்ந்து செயல்படுவர். எனவே ஒருவன் இன்று அல்லலுறும்போது அது அவன் முன் செய்த தீவினையால் என்று பழிக்கும் மனநிலை, நமது பொய்யுரையாலோ என்னவோ, வாழ்வில் பக்குவம் பெறாதோர்க்கு ஏற்படுவது இயல்பு (எடுத்துக்காட்டாக, எங்கள் வீட்டின் எதிரில் ஒரு தொழு நோயாளி இருந்தார். என் ஆச்சி, "அது அவன் முன்னம் செய்த பாவம்" என்று சொல்ல நான், "என்ன ஆச்சி இதெல்லாம்?" என்று அவளைக் கடிந்து கொண்டது உண்டு). அவ்வாறு பழித்தல் சரியன்று என்று அத்தகையோர்க்கு எடுத்துக் கூறும் பொறுப்பும் அறம் பேசுவோர்க்கு உண்டு. அப்பொறுப்பை சிரம் மேற்கொண்டு வள்ளுவன் தந்ததே முதலில் நாம் எடுத்த குறள் எண் 37. இன்று பல்லக்கு தூக்குபவனைப் பார்த்து இது அவன் முன்னம் செய்த தீவினையால் என்றும், பல்லக்கில் அமர்ந்திருப்பவனைப் பார்த்து அது அவன் முன்னர் நன்றாற்றியதால் என்றும் கொள்ள வேண்டாம் என்று குறள் உரைப்பதாய் நாம் உணர்கிறோம். இஃது பகுத்தறிவின்பாற்பட்டு பொய்யாமொழியின் தகைமைக்கு உற்றதாய் அமைகிறது. என்னைப் போன்ற இறை மறுப்பாளர் பலர், சமூகத்தில் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கையுடன் இருக்கட்டுமே என நினைப்பதற்குக் காரணம் உண்டு. அதுவும் சமூக நன்மை கருதியே ! எந்தவொரு சமூகக் குழுவிலும் பக்குவம் பெறாத மானிடரே அதிகம் இருப்பர் என்ற எங்கள் எண்ணம் சற்று அடாவடித்தனமாக இருக்கலாம். இருக்கட்டுமே ! இறை மறுப்பிற்கு அதீதமான விவேகம் தேவை என்பது எங்களின் இறுமாப்பு என்றும் கொள்ளலாம். பக்குவம் பெறாதோரிடம் இறை நம்பிக்கை இருப்பதாலேயே, இறை மீது ஏற்படும் பயத்தின் காரணமாக ஓரளவு அறவழி நிற்கின்றனர் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே நாங்கள் இறை மறுப்பைப் பொதுச் சமூகத்தில் அடக்கி வாசிப்பதும், சில நேரங்களில் ஒரு படி மேற்சென்று, "அது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம்" என்று சொல்லிக் கடந்து செல்வதும் எங்களின் பொய்யுரை. எங்களால் வேறு என்ன செய்ய முடியும் என்பதெல்லாம் வேறு. இக்கட்டுரையில் அடியேன் எடுத்துக்காட்டாக வைக்கும் பொய்யுரைகளில் இது இரண்டாவது. மேற்கூறிய இரண்டிலும் பகுத்தறிவாளர்தம் பொய்யுரைகளையே பேசினோம் - same side goal போல ! அதிகம் பொய்யுரைப்போர் எதிரணியினர் அல்லரோ !அதிலும் அன்னார் கூறுவதெல்லாம் சமூக நன்மை சார்ந்த பொய்யுரைகள் அல்லவே !அறியாமையில் உழலும் அவர் மீது ஏற்பட்ட கழிவிரக்கத்தினால் அவர் கூறும் பொய்யுரைகளில் நல்லதாக ஒன்றினை மட்டும் எடுத்துக்காட்டி நிறைவு செய்ய எண்ணம். இப்போது நாம் கையில் எடுப்பது உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட்பயன் பாடல் 9. "நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லவன் சலமிலன் பேர்சங் கரன்" அருஞ்சொற்பொருள் : நண்ணுதல் - விழைதல், விரும்புதல்; நண்ணார் - விழையாதார்; நண்ணினர் - விழைந்தவர்; சலம் - அசைவு, அசைவுள்ள பொருள் (அசலம் என்பது அசையாப் பொருள் என்று மலைக்குக் காரணம் பெயரானது; ஆகவே வேங்கட மலைக்கு வேங்கடாசலம் என்றும், அருண மலைக்கு அருணாசலம் எனவும் வழக்கு). முதல் வரியின் பொருள் : தன்னை விழையாதார்க்கு அவன் நலமில்லாதவன்; விழைந்தார்க்கு நலம் மிக்கவன். இரண்டாம் வரியின் பொருள் : அவன் வேண்டியவர், வேண்டாதவர் என்ற விருப்பு வெறுப்பற்ற நடுநிலையாளன் (சலம் இலன்). அவன் பெயர் சங்கரன். பாமரர் ஒருவர்க்கு இந்த இரண்டு வரிகளுக்கு இடையே உள்ள முரண் தெரிவதில்லை. முதல் வரியை எடுத்துக்கொண்டு, இறைவன் தன்னை நம்புபவர்களுக்கு மட்டுமே நன்மை தருவான் என்று கொள்வர்; இரண்டாம் வரியைத் தனியே எடுத்து அவன் வேண்டுதல் வேண்டாமை இலாதான் எனக் கொள்வர். எந்த ஒரு சமயமும் பாமரரிடத்தில் தன் இருப்பை நிலை நிறுத்த தன் இறைவன் ஒருவனே பக்தனுக்கான இளைப்பாறுதலைத் தர முடியும் எனப் பரப்புரை செய்வது வாடிக்கைதானே !ஆனால் பாடலை உய்த்துணரும் சான்றோர் இரு வரிகளுக்கு இடையே முரண் தெரிவதை எவ்வாறு கடப்பர் ? வரிகளை உற்று நோக்குங்கால், "அவன் நலமிலனாகவும் நல்லனாகவும் தெரிவதெல்லாம் அவரவர் மனதை அல்லது பார்வையைப் பொறுத்தது; மற்றபடி அந்த சங்கரன் மாறுபாடு இலாதவன்; தன்னை விழைந்தார் விழையாதார் அனைவருக்கும் நல்லன்" என்பதே பாடலின் உறுபொருளாய் நிற்பது என்பதை உய்த்துணர்வர். இவ்வாறு மாந்தரில் ஒரு சாரார்க்கு ஒரு பொருளும் மற்றொரு சாரார்க்கு வேறு ஒரு பொருளும் தந்து நிற்பது ஏதோ ஒரு வகையில் பொய்யுரைதானே ? இதனால் யாருக்கும் கேடில்லை என்பது வேறு. இங்கு வஞ்சகமோ ஏமாற்று வேலையோ இல்லைதான். பகுத்தறிவாளர் மக்கள் நலன் கருதி பொய்யுரைப்பது போல, தம் இருப்பைத் தக்க வைக்க யாருக்கும் தீங்கிழைக்காத பொய்யுரை மாற்றார்க்கும் உரிமையன்றோ ? எனவே பொய்மையும் வாய்மையிடத்த ...............................
  23. தேனீக்களிடம் இருந்து 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர்நீத்த பெண் பட மூலாதாரம்,Puneet Barnala படக்குறிப்பு,55 வயதான அங்கன்வாடி உதவியாளர் காஞ்சன் பாய், குழந்தைகளைக் காப்பாற்ற தேனீக்களோடு போராடினார். கட்டுரை தகவல் விஷ்ணுகாந்த திவாரி பிபிசி செய்தியாளர் 7 பிப்ரவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் "காஞ்சன் பாய் துணிச்சலோடு செயல்படாமல் இருந்திருந்தால், எத்தனை குழந்தைகள் இறந்திருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்." மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தின் ரன்பூர் கிராமத்தில் நீங்கள் யாரிடம் பேசினாலும், அவர்கள் காஞ்சன் பாயின் துணிச்சலையும் தைரியத்தை பற்றியுமான விஷயத்தையே சொல்கிறார்கள். மாவட்ட தலைமையகத்திலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரன்பூரின் அங்கன்வாடி வளாகம், பிப்ரவரி 2 ஆம் தேதி திங்கள் கிழமை பிற்பகல் தேனீக்களின் தாக்குதலுக்கு உள்ளானது. குழந்தைகளின் சிரிப்பும் குறும்பும் வழக்கமாகக் கேட்கும் இடத்தில், திடீரென்று அலறல் சத்தமும் கூச்சலும் எழும்புகின்றன. அதே அங்கன்வாடி வளாகத்தில் ஆரம்பப் பள்ளி மதியம் 2 மணி முதல் இயங்குகிறது, அங்கன்வாடியைச் சுற்றி கூடியிருந்த குழந்தைகளை தேனீக்கள் கூட்டம் தாக்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அப்போது வளாகத்தில் சுமார் 20 முதல் 25 குழந்தைகள் இருந்தனர். குழந்தைகளைக் காப்பாற்ற ஓடிய காஞ்சன் பாய் பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,தண்ணீர் குழாய் அருகே ஒரு பெரிய தேன் கூடு இருந்தது. "தேனீக்கள் நேராக குழந்தைகளை நோக்கி நகர்ந்தன, அங்கே முழுமையான குழப்பம் நிலவியது" என்று பள்ளியின் ஆசிரியரான குணசாகர் ஜெயின் கூறுகிறார். அதே நேரத்தில், அங்கு இருந்த 55 வயதுடைய அங்கன்வாடி உதவியாளர் காஞ்சன் பாய், நிலைமையை உணர்ந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஓடினார். குழந்தைகளை உள்ளே அழைத்துச் செல்வதில் காஞ்சன் பாய் நேரத்தை வீணாக்கவில்லை என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். முதலில் அங்கன்வாடியில் வைக்கப்பட்டிருந்த பாய்கள் மற்றும் போர்வைகளால் குழந்தைகளை மூடினார், பின்னர் தனது புடவையால் அவர்களைக் காப்பாற்ற முயன்றார். அவரது துணிச்சலான செயல் அவரது சொந்த பேரன் உட்பட சுமார் 25 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியது, ஆனால் தேனீக்களின் தாக்குதலில் அவர் மோசமாக காயமடைந்திருந்தார், மருத்துவமனையை அடைந்ததும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். "ஜவாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரன்பூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் திங்கள்கிழமை பிற்பகல் தேனீக்கள் தாக்கிய சம்பவம் நடந்தது. அப்போது, அங்கு பணிபுரிந்து வந்த காஞ்சன் பாய், குழந்தைகளை காப்பாற்ற முயன்றார். காஞ்சன் பாய் தேனீக்களால் காயமடைந்தார், இதனால் அவர் இறந்தார்" என்று நீமுச் காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெய்ஸ்வால் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 'தாயை நினைத்து பெருமைப்படுகிறேன்' பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,காஞ்சன்பாயின் மகன் ரவி மேக்வால், தனது தாயை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக கூறுகிறார். காஞ்சன்பாய்க்கு அவரது மகன் ரவி மேக்வால் மற்றும் அவரது கணவர் ஷிவ்லால் ஆகியோர் உள்ளனர். மகன் திருமணமானவர், காஞ்சன்பாய்க்கு ஒரு பேரன் உள்ளார், அவர் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். காஞ்சன் பாயின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருக்கிறார். காஞ்சன்பாய் உயிர்நீத்ததால் முழு குடும்பமும் துக்கத்தில் இருந்தபோதும் அவரது மகன் ரவி மேக்வால் தனது தாயைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதாகக் கூறுகிறார். "நான் அப்போது கிராமத்தில் இல்லை, ஆனால் என் அம்மா டஜன் கணக்கான குழந்தைகளின் உயிரை எவ்வாறு காப்பாற்றினார் என்பதை எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். என் அம்மா மிகவும் அன்பான குணம் கொண்டவர். அவர் அனைவரையும் நேசித்தார், ஆனால் குழந்தைகளை மிகவும் நேசித்தார். குழந்தைகள் கடவுளின் வடிவம் என்று அவர் எப்போதும் கூறுவார். அவர் அவர்களை தனது சொந்த குழந்தைகளாக அல்ல, கடவுளாக நடத்தினார்" என்று ரவி பிபிசியிடம் கூறினார். காஞ்சன் பாய் கிராமத்தின் ஜெய் மாதா தி சுய உதவிக் குழுவின் தலைவராக இருந்தார் மற்றும் அங்கன்வாடி பணிகளை நிர்வகித்தார். அவரது அன்றாட பொறுப்புகளில் சமைத்தல், தண்ணீர் ஊற்றுதல் மற்றும் குழந்தைகளைப் பராமரித்தல் ஆகியவை அடங்கும். படக்குறிப்பு,கிராம மக்கள் காஞ்சன்பாயை ஒரு அங்கன்வாடி ஊழியராக மட்டுமல்ல, அங்கன்வாடியில் நம்பகமானவராகவும் நினைவில் கொள்கிறார்கள். தனது தாயார் காப்பாற்றிய குழந்தைகளில் தனது சொந்த குழந்தையும் இருந்ததாக ரவி கூறுகிறார். "அவரது உடலில் இருந்து ஐந்து அல்லது ஆறு தேனீக்களின் கொட்டுதல்களும் அகற்றப்பட்டன." தனது தாயாரை நினைவுகூர்ந்து ரவி கூறுகையில், "இந்த வேலையை அவர் ஒருபோதும் வேலையாகக் கருதியதில்லை. இது அவரது வாழ்க்கையின் ஒரு அங்கம். அவர் ஒருபோதும் தாமதமாக வந்ததில்லை, விடுப்பு எடுத்ததும் இல்லை. மிகுந்த சிரமம் காரணமாக அவரால் செல்ல முடியாவிட்டாலும், முதலில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் தண்ணீரை ஏற்பாடு செய்வார்." என்றார். அந்த நேரத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்ல சுரேஷ் சந்திர மேக்வால் வந்திருந்தார், அவருடைய மகன் அதே அங்கன்வாடியில் படிக்கிறார். "நான் வெளியே எட்டிப் பார்த்தபோது, மேடம் அலறிக் கொண்டிருந்தார், உள்ளே இருந்து குழந்தைகள் அழும் சத்தம் கேட்டது. நான் கொஞ்சம் அருகில் சென்றபோது, தேனீக்கள் தாக்குதல் இருப்பதை உணர்ந்தேன். காஞ்சன் பாய் குழந்தைகளை பாய்கள், விரிப்புகள் மற்றும் தனது சேலையால் மூடினார். அங்கே ஒரு பெரிய தேனீ கூட்டம் இருந்தது" என்று அவர் கூறுகிறார். குழந்தைகளை காப்பாற்ற முயற்சிக்கும்போது காஞ்சன் பாய் ஏராளமான தேனீக்களின் தாக்குதல்களைச் சந்தித்தார். "அன்று அவர் அங்கு இல்லாதிருந்தால், பல குழந்தைகள் தங்கள் உயிரை இழந்திருப்பார்கள்" என்று சுரேஷ் கூறுகிறார். கிராம மக்கள் என்ன சொன்னார்கள்? பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,கஞ்சன் பாயின் மைத்துனர் திலீப் மேக்வால் அங்கன்வாடிக்கு வருவதற்குள், கஞ்சன் பாய் தரையில் விழுந்துவிட்டார். காஞ்சன் பாயின் மைத்துனரான திலீப் மேக்வால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், அங்கன்வாடி தேனீக்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதாகவும் கூறினார். அங்கன்வாடியை அடைந்தபோது நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதாக திலீப் கூறினார்."நான் காஞ்சன் பாய் தரையில் கிடப்பதைப் பார்த்தேன். அவரது உடலில் நிறைய தேனீக்கள் கொட்டியிருந்தன. சில தேனீக்கள் இன்னும் அங்கேயே இருந்தன. காஞ்சன் பாய் மயக்கமடைந்தார், அவர் வாயிலிருந்து நுரை வந்து கொண்டிருந்தது, அவரால் எதுவும் பேச முடியவில்லை." சம்பவம் நடந்த இடத்தை நினைவு கூர்ந்த திலீப், "அருகில் குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர், மக்கள் பீதியடைந்தனர். நான் காஞ்சன் பாயை அழைத்துக்கொண்டு ஒரு குழந்தையுடன் வெளியே வந்தேன். அதற்குள் சுரேஷ் சந்திராவும் அங்கு வந்துவிட்டார், அவர் ஆம்புலன்ஸையும் காவல்துறையையும் அழைத்தார்" என்று அவர் கூறினார். போலீஸ் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வந்த பிறகு, காஞ்சன் பாய் அருகிலுள்ள சர்வானியா மகாராஜ் ஆரம்ப சுகாதார மையத்திற்கு (PHC) கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,கஞ்சன் பாய் கிராமத்தின் ஜெய் மாதா டி சுயஉதவி குழுவின் தலைவராக இருந்து அங்கன்வாடி பணிகளை கையாண்டார். சர்வானியா மகாராஜ் ஆரம்ப சுகாதார மையத்தின் பொறுப்பாளரான சந்தீப் சர்மா பிபிசியிடம் பேசுகையில், "அன்று நான் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். இதற்கிடையில், மாலையில், கடுமையான தேனீ தாக்குதலுக்குப் பிறகு ஒரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக PHC யிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது," என்று கூறினார். "அப்போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களின் கூற்றுப்படி, அவர் மருத்துவமனையை அடைவதற்கு முன்பே இறந்துவிட்டார். தேனீ தாக்குதலால் அவர் அனாபிலாக்டிக் அதிர்ச்சிக்கு ஆளாகிறார், இது மரணத்தை விளைவிக்கும்." என சந்தீப் சர்மா கூறினார். அனாபிலாக்டிக் அதிர்ச்சி என்பது ஒரு கடுமையான, திடீர் மற்றும் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினையாகும், இது ஒரு ஒவ்வாமைக்கு ஆளான சில நிமிடங்களுக்குள் ஏற்படலாம். டாக்டர் சந்தீப்பின் கூற்றுப்படி, தேனீ கொட்டுவது அத்தகைய அதிர்ச்சிக்கு ஒரு நியாயமான காரணமாகும். காஞ்சன் பாயின் மரணம் ரன்பூர் கிராமம் முழுவதையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கிராம மக்கள் அவரை ஒரு அங்கன்வாடி ஊழியராக மட்டுமல்ல, அங்கன்வாடிக்குள்ன் இருக்கும் ஒரு நம்பகமான இருப்பாகவும் அவரை நினைவில் கொள்கிறார்கள். "காஞ்சன் பாய் அங்கு வசித்தபோது, குழந்தைகள் பாதுகாப்பான கைகளில் இருப்பதாகவும், அவர்களின் பராமரிப்பு குறித்து எந்த கவலையும் இல்லை என்றும் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம்" என்று ஒரு கிராமவாசி கூறினார். திலீப் கூறுகையில், தான் குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் போது அவர்களுக்கு உணவளிப்பதாகவும், அவர்களுடன் கேலி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் காஞ்சன்பாய் குடும்பம் பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,காஞ்சன்பாயின் வீட்டுக்கு வெளியே திரண்ட கிராம மக்கள் காஞ்சன் பாய் மறைவுக்கு பிறகு அவரது குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது, நிதி நிலைமை ஏற்கனவே கடினமாக இருந்தது. ரவியின் தந்தை நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்டு முடங்கிப்போயிருந்தார். "வீட்டின் முழுப் பொறுப்பும் என் அம்மாவின் மீது இருந்தது. என் தந்தையின் சிகிச்சைக்காக ஐந்து முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இதற்காக, நான் என் நிலத்தை விற்க வேண்டியிருந்தது. இன்றும் கூட, மருந்துகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை செலவிடுகிறேன்" என்று ரவி கூறினார். ரவி கூறுகையில், "வீட்டில் மட்டுமல்ல, வெளியிலும் குடும்பத்திற்காக அம்மா கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார். காலையில், வீட்டுப் பொறுப்புகள், தந்தையைப் பராமரித்தல், பின்னர் பள்ளி மற்றும் இடையில், சுய உதவிக்குழுவில் வேலை செய்தல். எப்படி என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் எல்லாவற்றையும் சமாளித்தார்." "தேனீக்களின் தாக்குதல் மிகப்பெரியது. குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது காஞ்சன் பாய் உயிரிழந்தார். குடும்பத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது" என்று கிராம சர்பஞ்ச் லாலாராம் ராவத் கூறுகிறார். கிராம சபை அதன் விதிகளின் கீழ் குடும்பத்திற்கு உதவி வழங்கும் என்று அவர் கூறுகிறார். "அரசாங்கம் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கவும், மகனுக்கு வேலைவாய்ப்பைப் பரிசீலிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." கிராமத்தில் நிலவும் அச்சம் பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,தண்ணீர் குழாய் அருகே செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிராமம் முழுவதும் அச்சம் நிலவுகிறது, அங்கன்வாடிக்கு அருகிலுள்ள கை பம்ப் மட்டுமே முழு கிராமத்திற்கும் நீர் ஆதாரமாக உள்ளது. அதே பகுதியில் ஒரு தேனீக்கூடு இருப்பதால் மக்கள் அங்கு செல்ல தயங்குகிறார்கள். "பள்ளிக் கட்டிடம் பாழடைந்த நிலையில் இருப்பதால், குழந்தைகள் அங்கன்வாடியில் படிக்க வேண்டியுள்ளது. பள்ளியின் நிலையை மேம்படுத்தவும், குழந்தைகள் அங்கன்வாடியில் உட்கார வேண்டிய நிலையை மாற்றும் வகையில், சுற்றுச்சுவர் மற்றும் தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் நான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். எல்லாம் சரியாக இருந்திருந்தால், என் அம்மா அந்த நேரத்தில் அங்கன்வாடியில் இருந்திருக்க மாட்டார்" என்று ரவி கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20d0d1xz5qo
  24. சென்றமாதம் இந்தியாவில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 88 ஓட்டங்களை பெற்றார்.
  25. செம்பாட்டான் கூறுவது, ஒரு தரமான ஆட்டக்காரரை என்றைக்கும் சரிவரமாட்டார் என ஒதுக்கி விடக்கூடாது என்பதே! நீங்கள் பி பி எல் பார்த்திருப்பீர்கள் அவுஸ்ரேலிய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களையும் விட சிமித்தான் அதிக ஓட்ட விகிதத்துடன் அதிக ஓட்டங்களை எடுத்திருந்தார் என கருதுகிறேன் (கெட்டும், டேவிட்டும் விளையாடவில்லை). சிறந்த ஆட்டக்காரர்கள் போர்மிற்கு வந்தால் அணிக்கு மிக நன்மையாக இருக்கும், சிமித்திற்கு உலக போட்டி அணியில் இடமில்லை.
  26. கமலுக்கு தெரியவில்லை உண்மையில் அண்ணா சோழவம்சதின் நேரடி நீட்சி என்று. அண்ணா காஞ்சிபுரம் (கஞ்சிவரம்) முதலியார் - இவர்கள் இப்போதும் தென்கரை மூலநாத சாமி கோயிலில் இருக்கும் சவான் கல்லை (நவகாண்டத்துக்கு எழுப்புபப்பட்டு இப்போதும் உள்ள, நவகாண்டம் அநேகமாக அரச உறவுகளில் ஒருவரே செய்வது) பூசிப்பவர்கள். அனால் இதன் ஆதி வரலாறை சொல்வது கந்தபுராணம் - வீரவாகுதேவர் மற்றும் சோகோதர்கள் முருகனால் அனுப்பப்பட்டது, முசுகுந்த சோழ இராச்சியத்தை மீட்பதற்கு , பரப்புவதற்கு (சுருக்கமாக). அதில் முடிவின் தறுவாயில் இருந்த (சிறிய) சோழவம்சத்தை, வீரஆகுதேவரின் மகளான சித்திரவல்லியை முசுகுந்த சோழன் மணம் முடித்து தொடங்கி, பின் விருட்சமாகிய சோழவம்சம் என்று (சுருக்கமாக). (இந்த (அரச) இறைவரம் என்ற பகுதி பாண்டியர், சேரருக்கு இல்லை) ஆம் அண்ணா (வரலாற்றில் சரியாகத் தான்) குறிப்பீடான அரியணையில் ஏற்றப்பட்டார்.
  27. கிவுல் ஓயா திட்டமும் 13 ஆவது திருத்தச் சட்டமும் --- --- --- *உலக அரசியல் ஒழுங்குக் குழப்பங்களை நன்கு பயன்படுத்தும் இலங்கை *பண்டாரநாயக்க, ஜேஆர் காலம் முதல் அநுர வரையான அறிவூட்டல் அவசியமானது *ரில்வின் சில்வா குழுவின் டில்லி பயணம் வெளிப்படுத்துவது என்ன? --- ---- --- இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் சாத்தியப்படக் கூடியது அல்ல என்பது ஏற்புடைய யதார்த்தம். ஏனெனில், காணி அதிகாரம் என்பது மிக முக்கியமானது. அந்த அதிகாரத்தை தமிழர்களிடம் வழங்காமல். கொழும்பில் இருந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தீர்மானிக்க முடியாது. இதன் காரண காரியமாகவே, போர் இல்லாது ஒழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில். கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் முன்வைத்த அபிவிருத்தி திட்டங்கள் பல தோல்வி கண்டன. அவை அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் பிரதேசங்களில் கவர்ச்சிகரமாக மேற்கொள்ளும் அரசியல் பிரச்சாரங்கள் மாத்திரமே. இப் பின்ணியை அறிந்துதான், ஈழத்தமிழர்களின் 80 வருடங்களுக்கும் மேற்பட்ட அரசியல் விடுதலை விவகாரத்தை, “மாற்றம்” “சோசலிசம்” “சமத்துவம்” என்ற பொதுச் சொல்லாடல்களுக்குள் வலிந்து திணிக்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. அதாவது -- 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சியை கைப்பற்றிய ஜேவிபியை மையப்படுத்திய அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, அபிவிருத்தி என்ற மாயை “இன சமத்துவம்” என்ற புதிய வடிவத்தில் முன்நிறுத்தி தமிழர் பிரதேசங்களில் அரசியல் சித்து விளையாட்டை பரிசோதிக்கிறது. குறிப்பாக -- பண்டாரநாயக்க, ஜேஆர் காலத்து சிந்தனைகளை “மாற்றம்” என்று பொறி வைத்து அநுர கையாளுகிறார் என்றால், “இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற பௌத்த கோட்பாட்டுச் சிந்தனையில், அநுரவுக்கும் மாற்றுக் கருத்தில்லை என்பது பகிரங்கமாகியுள்ளது. அதாவது “மாற்றம்” என்ற பொறிக்குள் பௌத்த சிந்தனையை, அநுர மிக நுட்பமாக கொண்டு வருகிறார் என்பதே இதன் பொருள். அநுர, எதிர்க்கட்சியாக இருந்தபோது அந்த நிலைப்பாடு தெரிந்தது. ஆனாலும் அரசாங்கத்தை அமைத்த பின்னர் “அரச முறைமை மாற்றம்” (System Change) ஏற்படும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது. ஆனால், அரச முறைமை மாற்றம் என்பது கூட பௌத்த தேசியத்தை முதன்மைப்படுத்தியது என்பதை வடக்குக் கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாக்களித்த மக்களுக்கு புரியவில்லை. ஆனால், தற்போது படிப்படியாக அது வெளிப்பட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக -- தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த கடந்த ஒரு வருடத்தில் அதாவது கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வடமாகாணத்தை பிரதானப்படுத்தி அறிவிக்கப்பட்ட கிவுல் ஓயா நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டம், வாக்களித்த தமிழர்கள், அநுர மீது வைத்திருந்த அந்த நம்பிக்கையை தற்போது கருவறுத்துள்ளது. பொய்யான வாக்குறுதிக்கு வாக்களித்து ஏமாந்துவிட்டோம் என்ற உணர்வு தற்போது அந்த மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பண்டாரநாயக்க காலத்தில் 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா குடியேற்றச் சிந்தனையின் நீட்சியை. அநுர, புதிய வடிவத்தில் செதுக்குகிறார் என்பது பட்டவர்த்தனமாகியுள்ளது. கிவுல் ஓயாத் திட்டத்தை 2011 ஆம் ஆண்டு முதன் முதலில் செதுக்கியவர் மகிந்த ராஜபக்ச. அப்போது அவருடைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம். கல்லோயா குடியேற்றத் திட்டம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே கிவில் ஓயாத் திட்டமும் அமைய வேண்டும் என்ற தொனி வெளிப்பட்டிருந்தது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மகிந்தவுக்கு ஆதரவு வழங்க, ஜேவிபி கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில், வீடற்றவர்களுக்கான குடியேற்றத் திட்டங்கள், பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல நிபந்தணைகள் உள்ளடங்கியிருந்தன. சிங்கள மொழியில் வெளியான ஒப்பந்தத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக அபிவிருத்திக்கான முக்கியத்துவம் என்பது அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தது. “வீடற்றவர்களுக்கான குடியேற்றத் திட்டம்”. “அபிவிருத்தி” என்பதன் பொருள் வடக்கு கிழக்கை மையப்படுத்தியிருந்தது. அப்போதைய தேர்தல் பிரச்சாரங்களில் அது தென்பட்டது. அது மாத்திரமல்ல -- 13 ஆவது திருத்தச் சட்டம் கூட அவசியம் இல்லை என்ற பேச்சுகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் தீவிரமாக பேசப்பட்டது. 2017 ஆம் ஆண்டு வேறு சில காரணங்களை கூறி மாகாண சபைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்டதன் பின்னணியும் இதுதான். 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என்றும், குடியேற்றத் திட்டங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் உள்ளடக்கம். வடக்கு கிழக்கை மையப்படுத்தியது. தேர்தல் பிரச்சாரங்களில் சஜித் அப்போது அதனை பகிரங்கப்படுத்தியிருந்தார். கோட்டாபய முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனமும் வடக்கு கிழக்கை மையப்படுத்திய குடியேற்றங்கள், பௌத்த சமய முன்னுரிமை மற்றும் நிர்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் முக்கியமானது. ஆகவே -- இதன் நீட்சிதான் அநுர அரசாங்கம் முன்வைத்த கிவுல் ஓயாத் திட்டம். இத் திட்டம், 13 ஆவது திருத்தச் சடடத்தை ரத்துச் செய்யும் ஒரு உத்தி என்றே ஈழத்தமிழர்கள் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் -- இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருந்தாலும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், 1987 ஆம் ஆண்டின் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆனால் --- 13 ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள மாகாண சபை அதிகாரப் பட்டியலில் காணி விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், இலங்கைத் தேசிய காணி கொள்கை, அரச காணிகள் தொடர்பான மத்திய அரசின் அதாவது கொழும்பு நிர்வாக அதிகாரம் தொடர்ந்து நிலவுவதால், நடைமுறையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அதாவது, சிங்கள அரச அரசியல் தலைவர்களின் கீழ் இயங்கும் சிங்கள அரச அதிகாரிகளிடம் அந்த அதிகாரங்கள் உள்ளன. தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவர்களிடமே உண்டு. அதேவேளை -- இலங்கை காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் (11 ஆம் அட்டவணை) காணி நிர்வாக விடயங்களின் ஒரு பகுதி மாகாண சபைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும், மாகாணங்களுக்கிடையிலான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மத்திய அரசிற்குரிய காணிகளின் நிர்வாகம், காணி ஆணையாளர் திணைக்களத்தின் அதிகார வரம்பிற்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே செயல்படுகிறது. அதாவது -- கொழும்பு அரசியல் நிர்வாகத்தின் இறுதி முடிவில்லாமல் காணி ஆணையாளர் நாயகம் இயங்க முடியாது. அதேவேளை, இலங்கை தேசிய காணி கொள்கை, ஒட்டுமொத்த இலங்கைக் காணி வளங்களை நிலையான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க வகையில் நிர்வகித்தல், காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல், மற்றும் தேசிய அபிவிருத்திக்காக காணிகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக் கொள்கையானது கொழும்பை மையப்படுத்திய காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் மூலம் நிர்வகிக்கப்பட்டு, சட்டரீதியான சட்டக் கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே -- 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவான முறையில் காணி அதிகாரங்கள், பெயரளவில் மாகாணத்துக்கு உரியதாக இருந்தாலும், செயற்பாட்டுப் பொறிமுறைகள், இலங்கை ஒற்றையாட்சி அரசின் அமைச்சரவையும் அதன் நாடாளுமன்றமும் எடுக்கும் தீர்மானத்துக்கு ஏற்பவே இயங்குகின்றன என்பது இங்கே தெளிவாகப் புரிகிறது. குறிப்பாக -- அற்ப சொற்ப அதிகாரமுடைய 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கும் பரிந்துரைகள், மிலிந்த மொறகொட பேராசிரியர் ரொகான் குணரெட்ன மற்றும் சில மூத்த சிங்கள அரசியல் தலைவர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் ஒன்று கசிந்துள்ளது, ஏற்கனவே அநுர அரசாங்கத்திடம் அந்த நிலைப்பாடு தெளிவாக உண்டு. இப் பின்புலத்தில் தான் ரில்வின் சில்வா புதுடில்லிக்கு அழைக்கப்பட்டார் என்று கூட உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. டொனால்ட் ட்ரம்பின் குழறுபடிகளினால் எழுந்துள்ள புவிசார் அரசியல் சூழலில், 13 ஐ விடவும். இலங்கை அரசு என்ற கட்டமைப்பு இந்திய நலனுக்கு அவசியமானது. ஆகவே -- ஈழத்தமிழர் பற்றிய ஜேவிபியின் நிலைப்பாடு பற்றி புதுடில்லி கவனத்தில் எடுக்காமல் இருக்கும் சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லை. ஆகவே, இப் பின்புலத்தில், இலங்கைத் தேசிய காணிக் கொள்கைக்கு அமைவாக, இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் ஆகியவற்றின் பரிந்துரைகளோடு கிவுல் ஓயாத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை புலனாகிறது. அதாவது --- கடந்த ஏழு வருடங்களாக மாகாண சபைகள் இயங்காத நிலையில், மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்கள் முழுமைப்படுத்தாத பின்னணியில், மாகாணங்களை மையப்படுத்திய தேசிய காணிக் கொள்கை இதுவரையும் உருவாக்கப்படாத சூழலில், கொழும்பு அரச இயந்திரம், 1949 இல் இருந்து இயங்கிய அதே ஒற்றையாட்சிப் பொறிமுறையில் இன்றும் இயங்குகின்றது என்பதையே கிவில் ஓயாத் திட்டம் கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆகவே --- 'மாற்றம்' 'சோசலிசம்' 'சமத்துவம்' என்று மார்தட்டிய அநுர அதாவது, தேசிய மக்கள் சக்தி என்று பெயரை மாற்றிக் கொண்ட ஜேவிபியின் உண்மை முகம் என்பது பண்டாநாயக்க, ஜேஆர் கால முகமாகவும், மகிந்தவின் வழித் தோன்றலாகவும் நடப்பு 2026 ஆம் ஆண்டு பகிரங்கமாகியுள்ளது. எனவே, தற்போதைய புவிசார் அரசியல் போட்டிகளினால் ஐ. நா சபை உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இன அழிப்பை தடுக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் அனைத்தும் செயலிழக்கவுள்ள ஆபத்தான ஒரு கட்டத்தில் இருக்கும் போது, ஈழத்தமிழர்களுக்கு எதிராக கடந்த 80 வருடங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் இன அழிப்புத் திட்டம் பற்றிய நுட்பமான வரை படங்கள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு தெளிவுபடுத்தாமல் மக்களை ஒன்றிணைத்து நடத்தும் போராட்டங்கள் வெறும் உணர்வு சார்ந்ததாக மாத்திரமே அமையும். உரிய அறிவூட்டல்களோடுதான், ஜனநாயக வழியிலான உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். ஏனெனில் --- குழப்பமடைந்துள்ள உலக அரசியல் ஒழுங்கைப் பயன்படுத்தி இலங்கை பொருளாதார உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெருமளவில் பெறக்கூடிய சாத்தியங்கள் நெருங்கியுள்ளன. சீனாவும் இலங்கையுடன் பேச்சு நடத்துகிறது. ஆகவே, இந்த நிதிகளை வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்று கூறி கிவுல் ஓயா போன்ற திட்டங்களை நிறைவேற்றக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே அறிவும் உணர்வும் ஒன்றித்த, மக்கள் பங்கேற்பு உரையாடல்கள் ஜனநாயக வழியில் அவசியமானது. அதுவும் கட்சி அரசியலுக்கு அப்பால். அவ்வாறு நடத்தப்படும் உரையாடல்கள் தீர்வுக்குரிய பொறிமுறை தயாரிப்புக்கும் வழி வகுக்கும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid029PG66whPEcruSHDMhW6tCsLWS5ftmuMBdeMXYYz49hnRELHwA11Z1JY78iiVqNwEl&id=1457391262
  28. ஏன் ஜி ? அடிக்கடி நட் லூஸ் ஆகுமோ😂?
  29. யார் சாமி நீங்க. லண்டனுக்கு வந்தா ஒரு எட்டுப் பாத்திட்டு, பேசாமப் போயிடனும் போல கிடக்கு. 🤣
  30. நான் அயர்லாந்தையும் தெரிவு செய்திருந்தால், இந்த மூன்று போட்டிகளிலேயே ஒரு ஹாட்ரிக் அடித்து விடுவேன் போல..............🤣. அடிமுடி, இதில் ஏதோ ஒன்று, இப்பவே தெரியுதே..................😜.
  31. இன்னும் 11 மாதம் இருந்தாலும் இதை இந்த ஆண்டின் சிறந்த நகைசுவையாக நான் முன்மொழிகிறேன். 2009 மேயில் சம்பந்தரிடமோ அல்லது வேறு எந்த ஈழ தமிழரிடமோ.., கோட்டையும் இருக்க வில்லை… ஒரு.. கொ….கொத்தளமும் இருக்கவில்லை. நாம் பலமாக இருந்தது 1983-2009 வரை மட்டுமே. பங்கு வர்தகத்தில் exit strategy என்பார்கள். பங்குகளிம் விலை கூடிக்கொண்டே போய் ஒரு கட்டத்தில் வாங்கிய விலைக்கு கீழேயும் போய் விடும். நல்ல exit strategy இருப்பவர்கள், பங்குகள் விலை கட்டம் கட்டமாக கூடும் போது, கட்டம் கட்டமக குறித்தளவு பங்குகளை விற்று நல்ல இலாபத்தை நிரந்தரமாக்கி கொள்வார்கள். மிகவும் பேராசை உள்ளோர், அல்லது அதீத தன்னம்பிக்கை உள்ளோர் - பங்குகள் எப்போதும் விலை கூடிக்கொண்டே இருக்கும் என தாமும் நம்பி, ஏனையோரையும் நம்பவைத்து - கடைசி வரை எந்த பங்கையிம் விற்காமல், சின்ன இலாபத்தை கூட நிரந்தரமாக்காமல் - கம்பெனி திவாலாகும் போது போட்ட முதலீடு அனைத்தையும் இழப்பார்கள். ஒரு இனமாக நாம் வாங்கிய பங்குகள் 1983 - 2005 டிசம்பர் வரை ஏறுமுகமாகின. இந்த காலகட்டத்தில் கொஞ்சம் இலாபத்தை நிரந்தரமாக்கி கொண்டு, மேலும் முன்னேற சில exit points வந்து போயின. ஆனால் - எமது exit strategy யோ பங்கு விலை கூடி கொண்டே போகும், அது சாத்தியமில்லாத உச்ச புள்ளியை (தமிழ் ஈழம்) அடையும் மட்டும் நாம் ஒரு பங்கைதானும் விற்பதில்லை என்பதாக இருந்தது. ஆனால் நாம் நினைத்த உச்ச புள்ளியை பங்கு விலை அடைய முன்பே, நாம் பங்குகளை வாங்கிய கம்பெனி (போராட்டம்) திவாலாகி விட்டது. இப்படி திவாலாகி விட்ட கம்பெனியில் அதிக பங்குகளை வைத்திருந்த்த ஒரு ஐந்து சதம் பெறுமதியில்லாத portfolio வைத்தான் மே 2009 இல் சம்பந்தர் பொறுப்பெடுத்தார். பிகு அப்படி ஒரு நாசமாய் போன portfolio வை உலக தமிழரை இணத்து மீட்க சம்பந்தர் வினைதிறனாக செயல்படவில்லை, கதிரை அரசியல் செய்யார் என்றால் - அது நியாயம். Portfolio வையே 2000-2009 வரை சொன்னதை சொல்லும் கிளி பிள்ளையாக்கி வைக்கப்பட்டிருந்த சம்பந்தர்தான் போட்டடித்தார் என்பது நகைப்புக்கிடமானதும், உண்மைக்கு புறம்பானதும்.
  32. முதல்ல யார் முதல்ல வாறோம்றது முக்கியம் இல்ல.. கடைசில யார் கடைசியா வாறோம் என்றதுதான் முக்கியம்😂 -கோஷான் சே- ஓம்…ஆனால் இங்கிலாந்துக்கும் ஒரு பாகிஸ்தான் குணம் இருக்கு…3 போட்டி சூப்பராக விளாடினா அடுத்த போட்டியில் சொதப்புவார்கள். இலங்கையில் ஒரு சொதப்பல் overdue 😀
  33. எப்போதும் இங்கிலாந்து banana skin எனப்படும் பெரிய அணி சின்ன அணியிடம் அடிவாங்கும் விடயத்தை வேர்ல்ட் கப்பில் அரங்கேற்றும். இதில் நேபாளத்தை போடலாம் என நான் கூட யோசித்தேன். அச்சொட்டாக…😀 முதலில் நியாயத்தை சொல்ல வந்தாலும்…பிறகு இந்த ரோதனை எனக்கு ஏன் எண்டு ஒரு எஸ், எஸ்சாகினாரே…. சாட்சாத்…😀
  34. எனக்கும் திருமாவை வைச்சு விளாச ஆசைதான். ஆனால் நான் இப்ப திருமாவ பத்திக் கதைக்கபோக நம்ம ஆளு இத விட நூறு மடங்கு புளுகி வைச்சிருகிறனேப்பா. அவன ரவுண்டு கட்டி அடிப்பாங்களே. அதுவும் இந்த @goshan_che யும் இதுக்குள்ள நிக்கேக்க என்ன பண்ண? பேசாம தெரியாத மாதிரி அங்கால போவம்.
  35. நாளை ஞாயிறு 08 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG எதிர் NZ இருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் மற்றைய 21 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் வாதவூரான் ரசோதரன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு முட்டை கிடைக்கும்? 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG எதிர் NEP 22 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நேபாளம் ரசோதரன் இந்தப் போட்டியில் @ரசோதரன் புள்ளிகள் எடுக்கும் யோகம் இருக்கின்றதா? 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL எதிர் IRE 21 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் அயர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். அயர்லாந்து நிலாமதி நந்தன் இந்தப் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  36. பாப‌ரிட‌ம் க‌ப்ட‌ன் ப‌த‌வி கொடுக்க‌ப் ப‌ட்டு திரும்ப‌ ப‌றிக்க‌ப் ப‌ட்ட‌து.............பாப‌ர் ரென்ச‌ன் பாட்டி................க‌ப்ட‌னாய் செய‌ல் ப‌ட்ட‌ கால‌த்தில் ச‌க‌ வீர‌ர்க‌ள் சிறு பிழை விட்டாலும் கோவ‌ப் ப‌டுவார்..............வீர‌ர்க‌ளை வ‌ழி ந‌ட‌த்த‌ தெரியாத‌ க‌ப்ட‌ன்................... பாப‌ர‌ நான் ஒரு நாள் தொட‌ர் ம‌ற்றும் டெஸ்ட் தொட‌ருக்கு குறை சொல்ல‌ மாட்டேன்..................பாப‌ர் 20ஓவ‌ர் விளையாட்டுக்கு அவ‌ரின் விளையாட்டு போக்கை மாற்ற‌னும் இல்லையேன் அணிக்கு தான் பாதிப்பு இப்ப‌த்த‌ இள‌ம் பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளில் பாப‌ர் தான் அதிக‌ செஞ்சேரி அடிச்ச‌ வீர‌ர்..................ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பாப‌ர் அள‌வுக்கு ர‌ன்ஸ் அடிக்க‌ வில்லை என‌க்கு பாப‌ர் மீது சிறு வெறுப்பு கூட‌ இல்லை..............பாப‌ர் 20ஓவ‌ர் விளையாட்டில் அதிர‌டி ஆட்ட‌த்தை கையில் எடுக்க‌னும்.................. ஆமைவேக‌ ஆட்ட‌ம் எதிர் அணிக்கு சாத‌க‌மாய் அமைந்து விடும்..............நான் என்ன‌ சொல்ல‌ வ‌ருகிறேன் என‌ இப்ப‌ உங்க‌ளுக்கும் செம்பாட்ட‌ன் அண்ணாக்கும் புரிந்து இருக்கும் என‌ ந‌ம்புகிறேன்😁.................
  37. பாக்கிஸ்தான் சிம்பிலா வென்று இருக்க‌ வேண்டிய‌ விளையாட்டை..............க‌ட‌சி ஓவ‌ர் வ‌ரை போன‌ பின்பு தான் வென்ற‌வை...............................
  38. அப்போதே ஆமையின் பல்லை தட்டி கையில் கொடுத்திருந்தால் திருமா, குருமா எல்லாம் இப்படி கருமாத்திர வரலாற்று திரிபை சொல்லும் தைரியம் வந்திராது. ஆமைகதையை பொய்யான தெரிந்தும் கடந்து போனதன், இல்லை உண்மைதான் என் பொய் சாட்சி சொன்ன புலம்பெயர் புஸ்வானங்கள்தான் இந்த இழிநிலைக்கு முழு பொறுப்பு! பச்சை பொய். திருமாவுக்கு மறை கழண்டு விட்டதா? ஏரம்பு ஆரம்பத்தில் காதலை எதிர்த்தார் என நானும் கேள்விபட்டுள்ளேன். இதற்கு பல காரணங்கள் சொல்லபட்ட்டாலும், எந்த தந்தையிம் ஒரு ஆயுத போராளிக்கு மகளை கொடுக்க தயங்குவார். அதுவும் பாலா அண்ணையின் புத்தகம் சொன்னது போல் இப்படி இந்தியா போய் திருமணமானால். இதில் வியப்பேதும் இல்லை.
  39. இங்கே இது பெரும் பேசுபொருளாகியுள்ளது. குடியரசுக் கட்சியின் தலைவர்களே வெறுத்து பேசுமளவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக தான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று தலைவர் ரம் பேசியுள்ளார். அனேகமாக இது உலகம் முழுவதும் பேசுபொருளாக இருக்கும்.
  40. அந்தக் கோப்புகளில் பெயர் இடம்பெற்றவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்று நியாயமில்லை. ஆனால் ஒரு கொரடூரமான குற்றவாளிக்கு இவர்களைப்பற்றித் தெரிந்திருக்கிறது.இவர்களைச் சிபாரிசு செய்யும் அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்பது ஒரு நெருடலான விடயம்.எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டியதில்லை.இப்பொழுது வரை அவர்கள் இந்த விடயத்தில் நிபராதிகள்.
  41. இன்னும்…இன்னும்…மேலே…மேலே…. அடுத்த முறை காவடி தோளுக்கு ஏறும் போது அந்த திரியில் சந்திப்போம். முகம் காட்டும் கண்ணாடி… நிஜம் காட்டும் எப்போதும் 😂 நீங்களும், நானும். ஏற்கிறேன்.
  42. ட்றம்புக்கு… 79 ஆகியும், மூளை 10 வயதிற்கு மேல் விருத்தி அடையவில்லை.
  43. ஆமாம் அப்படி ஒரு காலகட்டத்திலேயே தேசியத்தலைவரும் ஆயுதம் தூக்கி போராடினார். நாம் போராட முடியாத நிலை ஆனால் அவர்களை தவிர்த்திருக்கலாம். தட்டு வைத்து, ஆரத்தி எடுத்து அழைக்கத்தேவையில்லை என்பதே எங்களின் தவிப்பு. எங்களுக்காக போராடியவர்களை அவமதிக்கும் செயல் இது. இராணுவத்தை மரியாதைப்படுத்தும் போதெல்லாம் நம் வீரர்களை குற்றவாளிகளாக்குகிறோம். அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஜனாதிபதி சுதந்திர தினத்தில் இராணுவத்தினரை மரியாதை செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படும்போது, நமது மக்கள் அவர்களுக்கு தட்டு வைத்து, மாலை போட்டு, ஆரத்தி எடுத்து மரியாதை அளித்துள்ளனர். இப்போ அனுராவுக்கு எதிராக தெற்கில் என்ன விமர்சனம் எழும்? அதுதான் எனது கவலையெல்லாம். யுத்த குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் தண்டிக்கப்படுவர் என்று வேறு அறிவித்திருக்கிறார், அவருக்கு நாம் சொல்லும் செய்தியென்ன? அனுரா காவடி என்று ஏளனம் வேறு. தவறை தவறு என சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிக்காட்டும்போது எனக்கு எதிராக காவடி தூக்குகிறார்கள். இவர்களின் பிரச்சனைதான் என்ன? சாத்தான் எது கூறினாலும் குற்றம் கண்டுபிடித்து விரட்டுவோம் என்பதா?
  44. எதிலும் இராணுவத்தை பொதுச்சேவைகளில் வலிந்து புகுத்தி அவர்கள் மக்களுக்கு சேவை செய்கின்றனர் என மக்களாலும் சர்வதேசத்தாலும் புகழப்படவேண்டும், அவர்கள் செய்த கொலைகள், குற்றங்கள் மறக்கப்பட, மறைக்கப்பட வைக்கவேண்டும், அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை, விசாரணை நடத்தப்படக்கூடாது. பாருங்கள்! சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, நாமல், பிக்குகள் இனி மேல் பிரச்சாரம் எப்படியிருக்குமென்று. நமது மக்களுக்கெல்லாம் இப்படியான கட்டிடங்கள் கட்டத்தெரியாது. இதற்கு முன் தமிழர் பிரதேசங்களில் எத்தனையோ பாடசாலைகள், கோயில்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டனவே, அப்போதெல்லாம் இல்லாத ஆரவாரங்களும் பாராட்டுகளும் இப்போது ஏன்? ஒன்றை மறைக்க இன்னொன்று. பாடசாலைகளையும் கோவில்களையும் வீடுகளையும் வைத்தியசாலைகளையும் இடித்து தரை மட்டமாக்கியவர்கள், மக்களை அழித்து ஏதிலியாக்கியவர்கள், காணாமல் ஆக்கியவர்கள் இப்போ முன்னிலையில். நாளைக்கு இதற்கு பக்கத்தில் ஒரு விகாரையும் கட்டுவார்கள். முன்பே இங்கு விகாரை கட்ட திட்டமிட்டு சலசலப்பு ஏற்பட்டது, இப்போ தானாகவே சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள் தட்டு வைத்தழைத்து.
  45. ஆண்குறிகள் அழுக்கானவை நீலாவணை இந்திரா 1 கோதுமை ரொட்டியென நிலத்தைச் சூடேற்றிக் கொண்டிருக்கும் சூரிய வெப்பம் தகிக்கின்ற பட்டப்பகலில் நான் அக்காட்சியைக் கண்டேன். ரோமன் ஃபாதரின் முகம் வழக்கத்தை விடவும் அதிகமாக விகாரமடைந்திருந்தது. அவர் கைகளில் இருந்த சவுக்கு மரக்கம்பின் முனையில் சிறுதுளி இரத்தம் அப்பியிருந்ததைக் கூட என்னால் கவனிக்கமுடிந்தது. வெயில் கொதித்துக் கொண்டிருக்கும் அந்த நண்பகலில், ஒழுங்காகவும் ஒழுங்கின்றியும் கட்டப்பட்டிருக்கும் கல்லறைகளுக்கு நடுவில் குச்சானை முட்டுக்காலில் வைத்திருந்தார். பள்ளிக்கூடம் விட்டுத்திரும்பிய நீலக்களிசனைக் கூட மாற்றாமல் கிழிக்கப்பட்ட சட்டையுடன் முகமெங்கும் அழுது வடித்த கண்ணீர்க்கறையுடன் வானத்தைப் பார்க்கும் படியாக அவன் இருந்தான். அவனது களிசனில் மூத்திரம் ஒழுகியிருந்தது. முன்னால் சில துண்டுப் பத்திரிகைகளும் அதில் அரைகுறை ஆடைகளுடனான நடிகைகளது புகைப்படமும் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு நஞ்சு குடித்துச் செத்துப்போன டேவிட்டின் கல்லறைக்கு மேல் பெரு மணலைப் பரப்பி வைத்திருந்த ஃபாதர், அவனை முட்டுக் காலில் இருத்திய விதத்தைப் பார்க்க எனக்கு அழுகையாக வந்தது. அவர் அவனை எதற்காகவோ திட்டிக்கொண்டிருந்ததையும் வேசியின் மகன் என்று உரத்துக் கூறியதையும், நான் மறைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் நிச்சயமாகக் கையும்களவுமாகப் பிடிபட்டிருக்க வேண்டும். (சுயமைதுனம் செய்யும் போதே ஃபாதர் அவனைக் கண்டிருக்கவேண்டும்.) நிலத்தில் விழுந்த பனம்பழம் போன்ற தொத்திப்பான முகத்தையுடைய குச்சான், மெலிந்த தேகமுடையவன், எண்ணை அப்பிய முகத்துடன், கிறிஸ்துமஸ் இற்கு வழங்கப்படும் சட்டையை வருடம் முழுக்கப் போட்டுக் கொண்டு அலையும் எங்களைப் போன்றவர்களுள் அவனும் ஒருவன். அவனைச் சரியாக அடையாளம் காட்ட வேண்டுமென்றால் அவனது சூத்தாமட்டியின் மீது ஏறியிருக்கும் தசைத்துண்டத்தில் அதிகளவு மயிர்களுடன் ஒரு மாங்காய் மச்சம் இருக்கும் குறளி வித்தைக்காரனானவன், தனது சகோதரி மேர்லினுடன் தேவாலயத்தின் விடுதியில் தான் வசித்துவருகின்றான். அப்துல்லாஹ் தான் முதன் முதலாக எங்களுக்குச் சுயமைதுனம் செய்யப் பழக்கிவிட்டவன். ஆண்குறியிலுள்ள தோலை மேலும், கீழுமாக அசைக்கையில், அதிலிருந்து வெண்ணிறமாக திரவம் பீச்சியடிக்கும் போதெல்லாம் உடலுக்குள் ஏற்படும் கிளர்ச்சியை எங்களால் விவரிக்க முடியவில்லை. அதிலிருந்து நாங்கள் அடிக்கடி அதனைத் திரும்பத் திரும்பச் செய்ய ஆசைப்பட்டோம். அப்துல்லாஹ்வின் கரைவலைத் தோணியின் மறைவில், தேவாலயத்தின் பின்புறமுள்ள கல்லறைகளுக்குள் உள்ள பனை மரங்களுக்கிடையில், சவுக்குமரப் பற்றைக்குள், கடலை ஒட்டியிருந்த பாறைகளின் மறைவில் என நானும் குச்சானும் தனித்தனியாகவோ, சேர்ந்தோ சுயமைதுனம் செய்து கொண்டோம். எங்களுக்குள் அது அலாதியான ஒரு ஆசையைத் தூண்டிவிட்டது. சாப்பாடு, தண்ணீர் போல நாங்கள் தினமும் அதனை செய்து கொண்டோம். பள்ளி லைப்ரரியில் இருந்து பழைய நாளிதழ்களில் உள்ள நடிகைகளின் புகைப்படங்களைக் கிழித்துக் கொண்டு வந்தோம். அதைப் பார்த்துக் கொண்டே செய்வதற்கும் பழகியிருந்தோம். அப்படியொரு நாளிதழ் புகைப்படத்தில் வெள்ளையாக இருந்த நடிகையை குச்சான் விரும்பத் தொடங்கினான். அவளைப் போன்ற ஒரு பெண்ணைத்தான் காதலிப்பேன் என்றும் கூறிக் கொள்வான். அவன் தனது அம்மா மர்யத்தையோ அப்பாவையோ பார்த்ததில்லை. ஆனால் இந்த நடிகையைப் பார்க்கும் போதெல்லாம் எனது அம்மாவின் பழைய புகைப்படத்தைப் பார்ப்பது போன்றே இருக்கும் என்று குச்சான் சொல்வான். ஒரு தடவை கூட அந்தப் புகைப்படத்தை அவன் பிரிந்ததே இல்லை. தனக்கு விருப்பமான கணிதப்புத்தகத்தினுள் அதை ஒழித்து வைத்திருந்தான். 2 சிம்னி விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும் கருக்கல் பொழுதொன்றில் கடல் பெரும் பூதம் போலக் காட்சியளித்தது. மர்யம் சிவப்புக் கற்கள் பதித்து வைத்திருந்த தனது தங்கத் தோடுகள் இரண்டையும் கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியின் முன்னால் அமர்ந்திருந்தாள். இரசமிழந்து தேய்ந்து போயிருந்த உடைந்த கண்ணாடியின் மீதிருந்த பல்லியொன்று அவளது நிர்வாணத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. அவளது கழுத்தின் கீழே கண்டித்துப் போயிருந்த இரத்த வடுக்கள் தென்பட்டன. முலைகள் இரண்டும் பருமனில் பெரிதாகியிருந்தன. சகாயப்பனை திருமணம் செய்த போதிருந்த நீளமான முடி அவளிடமிருக்கவில்லை. அவை கொட்டப்பட்டிருந்தன. இடது காதுக்கு மேலால் சிறுநரையுடன் மொட்டையாகத் தலை தெரிந்தது. பெரும்பாலும் இப்போதெல்லாம் அவளிடம் வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இளம் வயதாக இருந்தாலும் தொடர்ந்தும் அரிசிக்கும், சாளை மீன்களுக்காகவும் உடலை விற்றுக் கொண்டிருப்பவளிடம் தேகச்சத்து குறைந்து போயிருந்ததே அதற்கான காரணமாயிருந்தது. கண்ணாடியின் முன்னால் அமர்ந்திருந்த மர்யம் கைகள் இரண்டையும் உடலோடு சேர்த்து இறுகப்பற்றிக் கொண்டு எழுந்தாள். அன்று குளிர் மிகவும் அதிகமாக இருந்தது. கிழிந்த பாயில் படுத்துக் கொண்டிருந்த மேர்லின் மீது தன்னுடைய போர்வையை எடுத்துப் போர்த்தினாள். அவளுக்குத் தூக்கம் வருவதாக இல்லை. பைபிளை எடுத்துப் புரட்டினாள். மத்தேயு 11 வசனம் 28 ல் ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்’ என்கிற வசனத்தை வாசித்தவள் மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டாள். ரோமன் ஃபாதரேர் அவள் சேர்ச்சின் தாழ்வாரத்தில் இளைப்பாறுவதைக் கூட அனுமதிப்பதில்லை. அப்படியிருக்கையில் தேவாலயத்திற்குள் உள்ள தேவனால் இரட்சிக்கப்படுதல் நடைபெறாத காரியமாகவே இருந்தது. அவள் ஒரு விபச்சாரி என்பது அனைவருக்கும் பட்டும் படாமலும் தெரிந்திருக்க, அவள் தேவாலயத்திற்குள் வரக்கூடாதென்பதும் ஊரில் இருக்கும் வரைக்கும் கல்லறைத்தோட்டத்தில் ஊழியம் செய்ய வேண்டுமென்பதும் தேவாலய நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டிருந்த சட்டமாயிருந்தது. இந்த நிலையில்தான் மர்யத்திற்கும் ஜேக்கப்பிற்குமான சந்திப்பு நிகழ்ந்தது. அந்தக் கடற்கரையோரக் கிராமத்திற்கு வருகை தந்திருந்த தொண்டு நிறுவனத்தின் ஊழியனாக அவன் இருந்தான். அவுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேக்கப்; கிறிஸ்தவத் தொண்டு நிறுவனமொன்றின் கணக்காளராக இருந்தான். சுனாமியால் சிதிலமடைந்த தேவாலயத்தினைப் புனரமைப்புச் செய்து மீளவும் ரோமன் ஃபாதர் மூலம் கிறிஸ்தவச் சபைக்கு ஒப்புக் கொடுக்கும் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனால் எப்போதும் கடுகடுப்பாக இருக்கும் ஃபாதர் அவனிடம் மட்டுமே குழைந்து குழைந்து பேசுவார். அதிக வளர்த்தியுடன் இருந்தவன் நவீன முறையில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தேவாலயத்தின் நில வரைபடமொன்றைத் தன்னோடு எப்போதும் வைத்திருந்தான். அதனுடன் தேவாலய ஊழியர்கள் தங்குவதற்கென ஒரு தங்குமிடமும், சமையலறையும் அதற்கான தாழ்வாரமும் கூடவே கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வேலைத்தளத்தைப் பார்வையிடுவதுடன் அதற்கான பணத்தினை வங்கியிலிருந்து பெற்று வழங்குவதும் பின்னர் தினக் கணக்குகளைக் குறித்து வைத்து வாரம் ஒரு முறை குறித்த தொண்டு நிறுவனத்தின் மேலாளருக்குக் கணினி மூலம் அறிவிப்பதும் அவனது வேலையாக இருந்தது. அந்த ஊரில் இருந்த எல்லோரும் ஜேக்கப்பை வெள்ளைக்கார பொஸ் என்றே அழைத்தார்கள். மர்யமும் அவனை அப்படியே அழைத்தாள். ‘வெள்ளைக்கார பொஸ் தேத்தண்ணி குடிக்கிறீங்களா?’ கட்டிட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மர்யத்தின் கேள்விகளால் உந்தப்பட்டு ‘என்ன?’ என்பது போல விழிகளை உயர்த்தினான். மர்யம் தனது கைகள் இரண்டையும் மேல் கீழாகத் தேத்தண்ணியை ஆற்றுவது போல் சைகை காட்டியபடி வெறும் குவளையொன்றை வாயருகே வைத்து ஊதி ஊதி தேநீரை அருந்துவது போல் பாவனை செய்தபடி தேநீர் வைத்திருக்கும் பிளாஸ்க்கைக் காட்டினாள். அவனும் மனதுவிட்டுச் சிரித்துக் கொண்டே ஆம் என்றபடி தலையாட்ட அவள் ஒரு குவளைத் தேநீரை அவனுக்கு வழங்கினாள். இஞ்சியின் ரசம் ஏறியிருந்த தேநீரைப் பருகியவன் சீனி அதிகம் என்றாலும் சுவையாக இருக்கிறது என்று ஆங்கிலத்தில் கூற எதுவும் அறியாதவளாக மர்யம் சிரித்தபடி முகத்தைத் துடைத்தவாறே விடைபெற்றாள். ஜேக்கப் இற்கான உணவைத் தயாரிக்கவென இருந்த தேவாலயச் சமையற்காறி ரோசம்மா, மேல் வருத்தங்கண்டு வரமுடியாமல் போகவே அந்த வேலைக்காக மர்யம் நியமிக்கப்பட்டாள். ஜேக்கப்பிடம் பணிவாக நடந்துகொள்ள வேண்டும், வேண்டிய வேலைகளைச் செய்து கொடுக்க வேண்டும். அடிக்கடி தொந்தரவு செய்யக்கூடாது, அவனது நீண்ட மேலங்கியை ஸ்திரி பண்ணிக்கொடுக்க வேண்டும், அதிகம் பேசக்கூடாது. வெள்ளைக்காரர்களுக்கு அதிகம் பேசும் கறுப்பர்களைப் பிடிப்பதில்லை. ஆகவே கவனமாக இருக்கவேண்டும் என்கிற ரோமன் ஃபாதரின் பல நிபந்தனைகளுடன், அவள் அவனது வசிப்பிடத்திற்குள் நுழைந்த போது, ஜேக்கப் தனது குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தான். விடுதியில் யாரும் இல்லாததால் அவனது குளியலறைக்கதவு தாழ்ப்பாள் இடாமலே இருந்தது. முழு நிர்வாணத்துடன் அவன் குளித்துக் கொண்டிருந்த கோலம் மர்யத்திற்கு விநோத அனுபவமொன்றை ஏற்படுத்தியது. மெல்லிய பாடலொன்றை உரத்துப்பாடிக் கொண்டிருந்தவன் தனது முகத்தில் விழும் நீரை கழுத்தளவு வளர்ந்த தலை மயிர்கள் மீது கைகளால் தடவிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தான். பக்கவாட்டில் சிலுவையில் அறையப்படாத இயேசு நாதராக இருந்தவன் பாடலின் சந்தத்திற்குப் பொருத்தமில்லாத குரல்வளத்தோடு அலட்டிக் கொண்டிருந்தது, ரசிக்கும் படியாக இல்லாதது போல அவனுக்கு வேறு விதமான உடலமைப்பும் இருந்ததையும் மர்யம் கவனித்தாள். தொடைகளிலோ, மார்பிலோ மயிர்கள் இல்லாத வழவழப்பான தேகத்தை ஜேக்கப் கொண்டிருந்தான். மார்பு சற்று இறக்கமாயிருந்தது. பெண்களுக்கான மார்பின் அளவில் பாதிக்கும் குறைவான அளவு கீழ் நோக்கியதான மார்பகங்களும் வழக்கத்திற்கு மாறான இடுப்பும் அவனுக்கிருந்தது. ஆண்குறி மிகவும் சிறியதாக இருந்தது. அந்த ஊரில் இருக்கும் ஆண்கள் பலரிலும் சிறிதான ஆண்குறி அவனுடையதாக இருந்தது. அடர்ந்து திரண்ட மயிர்களில் கீழிருக்கும் அடர்த்தியான வீங்கியபடியிருக்கும் சகாயப்பனின் நீண்ட ஆண்குறி ஸ்கலிதம் அடைந்தபின் சுருங்கிவிடும் அளவிலும் சிறிதான அளவில் அது இருந்தது. கடல் நீரின் உப்புத்திரண்டிருக்கும் ஆண்குறிகள் பலவற்றை அவள் உள்ளெடுத்துக் காறி உமிழ்ந்த தருணங்களையெல்லாம் அவனது உறுப்பு அவளுக்கு ஞாபகப்படுத்தியது. தலையைத் திருப்பி அவளை ஒரு கணம் அவன் பார்த்தான். எந்த சலனமுமின்றி அவனது இடுப்பின் கீழ் ஆராய்ச்சி நடாத்திக் கொண்டிருந்த மர்யத்தை ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தவன் உஷ்…. என்று சத்தம் எழுப்ப சுய நினைவுக்கு வந்தவள் சற்று பார்வையை வேறுபக்கமாகத் திருப்பிக் கூரையை வெறித்தாள். ஈரமான தலையுடன் வெளியேறியவன் என்ன என்பது போல சைகை செய்ய பூனைக் கண்களுடன் இருந்த மர்யம் இன்னுமொரு பூனைக் கண்களுடன் இருந்தவனை உற்றுப்பார்த்தாள். சமையல் வேலைகளுக்காக வந்திருக்கிறேன் என்றவள் “கோக்கி” சமைக்க என்றாள். எனக்குத் தமிழ் தெரியும் என்றவனை ஆச்சரியம் மேலிடப் பார்த்தாள் மர்யம். அவனை நிர்வாணத்துடன் பார்த்தது குறித்து எதுவும் அலட்டிக்கொள்ளாதவன் உடைகளை மாற்றிவிட்டு மேசையின் மீதிருந்த மாம்பழத்துண்டுகளை உண்டுவிட்டு வெளியேறினான். விடுதி புழுதி படிந்து கிடந்தது. ஆங்காங்கே புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. மேசை மீதிருந்த சீனிப்பேணியைச் சுற்றி வட்டமிட்டு பின்னர் நேர்கோடாய் நகரும் எறும்புகள் சமையற்கட்டை நோக்கிப் பயணித்தன. கருகிய வாழைப்பழத்தோல்கள் நிலத்தில் கிடந்தன. ரோசம்மாள் வராததால் அவ்விடுதி சொற்பத்துக்குள்ளே ஜேக்கப்பால் குழப்பி வைக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டினாள் மர்யம். அறையைக் கூட்டித் துப்பரவு செய்தபின் பின் கிணற்று நீரை வாளியில் அள்ளி எடுத்துக்கொண்டு தரை முழுவதையும் கழுவிச்சுத்தம் செய்தாள். ஜேக்கப்பினுடைய உடைகளை முழுமைக்குமாகத் துவைத்துக் காயப் போட்ட பின்னர் சமையல் வேலைகளைச் செய்துவிட்டு வீட்டின் முற்றத்தில் வந்து அமர்ந்து கொண்டாள். தாமதமாக வருகை தந்த ஜேக்கப், தனது கையில் ஒரு டைரியையும், ஆங்கில நூலொன்றையும் வைத்திருந்தான். உடனே மேலங்கியை மாற்றிவிட்டு உணவு மேசையில் அமர்ந்தவனுக்கு உணவு பரிமாற எத்தனித்தாள் மர்யம். அவளை இடைமறித்தவன் நீயும் உட்காரு சாப்பிடலாம் என்றான். அவள் ஒருவித ஆச்சரியப் பார்வையை அவன் மீது செலுத்தினாள். அதை உணர்ந்து கொண்டவன். ஆங்கிலத்தில் சிற் என்றான். தனித்து விடப்பட்டிருந்த செம்மறியாடொன்றை இழுத்துக் கட்டியது போன்ற மனநிலையில் அவளிருந்தாள். அவனது தமிழ் உச்சரிப்புக்கள் வேறுவிதமாக இருந்ததையும் மர்யம் கவனிக்கத் தவறவில்லை. ‘நீ சில்வியா பிளாத் படித்திருக்கிறாயா?’ என்றான். ‘இல்லை’ என்றாள் மர்யம். சில்வியா பிளாத்தின் டியூலிப் கவிதையை விவரிக்கத் தொடங்கியவன் அவை ரோஜா மலர்களிலும் அழகானவை. குளிர்காலம் வரும் போது அவை இன்னும் அழகாக இருக்கும். எப்போதெல்லாம் எனக்கு மனம் உறுத்தலாக இருக்கிறதோ அப்போதெல்லாம் டியூலிப் மலர்களுள்ள தோட்டத்தில் கவிதைகளுடன் நான் அமர்ந்து விடுவேன். அந்தப் பொழுது மிகவும் ஆசுவாசமாக இருக்கும். இன்றைய உணவு ரொம்பச் சுவையாக இருந்தது என்றவன், சில இனிப்புக்களைக் கொடுத்துச் சென்று வா என்று அவளை வழியனுப்பி வைத்தான். 3 தேவாலயமும், விடுதியும் கட்டிமுடிக்கப்பட்டுக் கையளிக்கப்படவிருந்த நாட்களுக்கு முன்னராகவே ஜேக்கப்பிற்கும் மர்யத்திற்கும் இடையில் இனம்புரியாதவொரு அன்பும், உறவும் காணப்பட்டது. திராட்சை வைனையும், தென்னஞ்சாராயத்தையும் அருந்திக்கொண்டிருந்த மாலைப்பொழுதொன்றில் மேர்லினை நலம் விசாரித்தவன் தானும் அவளைப்போலவே வாழ ஆசைப்பட்டதைக் கூறினான். நிறைவெறியில் தலைமுத்திய தனது தந்தையைப் பற்றி ஏகத்திற்குத் திட்டித்தீர்த்தவன் தமிழும், ஆங்கிலமும் கலந்தபடி தனது கதையைக் கூறத் தொடங்கினான். ‘மர்யம் உன்னை நான் காதலிப்பதாக நீ நினைக்கிறாயா?’ என ஆரம்பித்தவன் அவளது பதிலைக் கேட்காமலே ‘இல்லை’ என்றான். அப்படியென்றால் உன்னுடன் செக்ஸ் வைக்க விரும்புகிறேனா என்று கேட்டவன் அதற்கும் அவளைப் பதில் கூற விடாமல் ‘நிச்சயமாக இல்லை… ஆம் நிச்சயமாக இல்லை’ என்று தலையை இருபக்கமாக ஆட்டியபடி பேசினான். சவுத் வேல்சில் தான் பிறந்தேன். சரியாகச் சொன்னால் அங்கே கடற்கரையோரமாகக் கழிமுகம் இருக்கும் யம்பா எனும் சிறுநகரம். அழகான நகரமது. எனது தந்தை அங்கிருந்த தபால் நிலையத்தில் கடைநிலை ஊழியராக இருந்தார். அங்கு வரும் பொதிகளைப் பக்கத்திலுள்ள இலூக்கா, பலினா, லிஸ்மோர் ஆகிய நகரங்களுக்கு விநியோகிப்பது அவரது வேலையாக இருந்தது. ஓரளவு திக்கிப் பேசும் அவரின் கோபத்தின் இரண்டாவது இலக்காக நான் இருந்தேன். ஆம்… முதல் இலக்காக எனது அம்மா இருந்தாள். எழுபதுகளின் பின்னர் அதிகமாகப் பயிரிடப்பட்ட கரும்புத் தோட்டமொன்றில் கரும்பு வெட்டும் வேலை அவளுடையது. தினமும் நீராவிப் படகொன்றில் பயணித்துக் கரும்புத் தோட்டத்திற்குச் சென்று விடுவாள். அங்கு நீள் வரிசையில் இருக்கும் கரும்புகளை வெட்டிய பின்னர், உருட்டிச் செல்லப்படும் சக்கர வண்டிகளில் ஏற்றிவிட்டு மீளவும் வெட்டச் சென்று விடுவாள். கரும்பு வெட்டு இல்லாத நாட்களில் தொழிற்சாலையில் இருக்கும் உபரி வேலைகளுக்காகவும் அவள் செல்வதுண்டு. பாடசாலை விடுமுறைவிடும் நாட்களில் நானும் அவளுடன் கரும்புத் தோட்டத்திற்குச் செல்வது வழக்கமாய் இருந்தது. அகலமான பாத்திகளின் இடையே நீள் வரிசையில் நடப்பட்டிருக்கும் கரும்புகள் உங்கள் ஊரிலுள்ள கிளிசரியாத் தடிகளைப் போன்று மொத்தமாகக் காணப்படும். அவற்றை அம்மா வெட்டித்தர, ஒவ்வொரு கரும்பாக நான் சக்கர வண்டியில் போடுவேன். அவள் என்னை வேலை செய்ய விடுவதேயில்லை. எனது உள்ளங்கை வியர்க்கும் போது அவற்றை தனது உள்ளங்கைகளால் அழுத்தித் துடைத்து விடுவாள். பின்னர் சிறுதானியங்களை அவித்த நீரை நானும் அவளும் பருகுவோம். அது ஒரு விலை குறைந்த சூப் போன்று இருக்கும். அங்கிருந்து பயணமாகி வீட்டிற்கு வரவும், அப்பா வரவும் சரியாக இருக்கும் என்று கூறிய ஜேக்கப் தலையின் மேல் சுழலும் மின்விசிறியை உற்று நோக்கினான். நான் ஒரு ஆண் போன்று இல்லாதது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. எனது நடவடிக்கைகளில் ஒருவிதப் பெண் தன்மை இருந்தது. அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. வைத்தியர்கள் அது ஹார்மோன் பிரச்சினையாக இருக்கலாம் என்றார்கள். நான் முழுமையாக ஆணாக இருக்கவில்லை என்பதை நானே உணர்ந்தேன். ஆனால், நான் ஒரு முழுமையான பெண்ணும் இல்லை என்பதையும் உணர்ந்தேன். என்னோடு படித்த பையன்களது பிறப்புறுப்பு போன்று என்னுடையது இருக்கவில்லை, உடலும் இருக்கவில்லை ஆனால் திருநங்கை எனும் அளவிற்கும் நான் இருக்கவில்லை இப்படியான ஒரு உடலியல் பிரச்சனை எனக்குள் இருக்கிறதை என்னுடைய பதின்ம வயதின் ஆரம்பத்திலேயே நான் அறிந்து கொண்டேன். எனக்கு ஆண்களின் மீது ஈர்ப்பு வரவில்லை, பெண்களின் மீது சுத்தமாக வரவேயில்லை. இந்தச் சமூகத்தைக் குறித்தான ஒருவித அச்சம் என்னிடம் இருந்து கொண்டேயிருந்தது. அதை விடவும் தனது பெல்ட்டினால் அடிக்கும் அப்பாவிடம் அதிக பயம் இருந்தது. ஆணின் நடத்தைகள் கைவரப்பெறாத என்னை அவர் திட்டியபடியே இருந்தார். இதற்காகவே நான் ஆண் போன்று நடிக்கப் பழகிக்கொண்டேன். அவ்வப்போது அந்த நடிப்பு தோற்றுப்போகும் வேளையிலெல்லாம் நான் மீண்டும் தாக்கப்பட்டேன். என்னால் அம்மாவும், அம்மாவின் கண்ணீரால் நானும் திரும்பத் திரும்ப உடலளவிலும் மனதளவிலும் தாக்கப்பட்டோம். நான் முழுமையற்ற ஆணாகவும், முழுமையற்ற ஆண் உறுப்புடனும் பிறந்தது குறித்து வெட்கப்பட்டேன். என்னுடைய உடல் சார்ந்து எனக்குக் கழிவிரக்கம் உண்டானது. அதை நான் வெறுத்தேன். அப்பாவையும் வெறுத்தேன். ஆண்களையும், ஆண்மையையும் வெறுக்கத்தொடங்கினேன். நான் நேசித்தது அம்மாவை மட்டும்தான் என்றான். அப்பாவின் அதிகாரத்தில் இருந்து தப்பிக்கவே நான் திருச்சபையின் விடுதியில் சேர்ந்தேன். அப்பாவிடம் இருந்து விடுதலை பெற்றதொரு உணர்வு இருந்தாலும் அம்மாவை இழந்தது குறித்து வருத்தமடைந்தேன். அங்கிருந்து பல நாடுகளுக்குச் சென்றேன். தனிமையில் வாழ்ந்தேன். இந்தியாவில் இரண்டு வருடத்திற்கும் மேலாக இருந்தேன். தமிழை நன்கு பேசவும், கொஞ்சம் வாசிக்கவும் கற்றுக் கொண்டேன். கச்சத்தீவு தேவாலயத்திற்குச் சென்றிருக்கிறேன். அங்கிருந்து இங்கு வந்தேன் என்றவன் தனது வைனின் இறுதிமிடறையும் பருகினான். யாரும் எனது தனிமைக்கு ஆறுதலாக இருக்கவில்லை என்று அவளது கைகளைப்பற்றி முத்தமிடவும், மர்யத்தின் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர்த்துளியொன்று ஜேக்கப்பின் கைகளை நனைக்கவும், ரோமன் ஃபாதர் அவ்விடுதிக்குள் நுழையவும் சரியாக இருந்தது. தேவாலயமும், விடுதியும் திறக்கப்பட நாட்குறிக்கப்பட்டவுடன் அவுஸ்திரேலியாவில் இருந்து குறித்த தொண்டு நிறுவனத்தின் மேலாளர்களும், பணியாளர்களும் வருகை தந்திருந்தனர். தேவாலயத்திற்கு வெள்ளை நிறமும், முன்னான மேல் தளத்திற்கு நீல வண்ணமும் பூசப்பட்டிருந்தது. ரோமன் ஃபாதரின் தலைமையில் ‘அர்ச்சிப்பு’ நிகழ்விற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தபடியிருக்க, ஊர் மக்கள் தேவாலயத்தின் முன்றலில் திரண்டிருந்தனர். வர்ண விளக்குகளால் ஆலயம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன் மண்டபத்தில் கருணை பொங்கிய இயேசுவைத் தாங்கிய அன்னை மரியாள் திருவுருவச்சிலை நிறுவப்பட்டிருந்தது. மெழுகுவத்திகளுடன் ஊர்வலமாக மக்கள் திரண்டிருந்தனர். மேர்லினோ ஜேக்கப் வாங்கிக் கொடுத்திருந்த புதிய சட்டையை அணிந்திருந்தாள். மர்யம் வாசலில் நின்றபடி கருணை கூர்ந்த கடவுளைத் தொழுது கொண்டிருந்தாள். கொரிந்தியார் 13:7 இல் உள்ளபடி அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும் என்ற வாசகம் பதிக்கப்பட்டிருந்த வளைவை நோக்கி வெளிப்பட்ட ஜேக்கப், வாசலில் நின்று கொண்டிருந்த மர்யத்தின் கைகளைப் பிடித்து ஆலயத்திற்குள் அழைத்துவர ரோமன் பாஃதர் உள்ளிட்ட ஊரவர்கள் எரிச்சலுடன் அவனைப் பார்த்தனர். சமையற்காரி ரோசம்மாளைத் தாண்டி உள்ள வந்தவன் யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் நடத்தையில் பிழைத்த அகோலா, அகோலிபாளைத் தண்டித்தது போல் கர்த்தராகிய இயேசு இவளைத் தண்டிப்பதாக இருந்தால் அவளை தேவாலயத்தில் ஊழியம் செய்யும் நிலைக்கு வழியேற்படுத்தியிருக்கமாட்டார். அவளைக் கல்லெறிந்து கொல்லுமளவிற்கு இங்கு தூய்மையான ஆண்கள் எவருமில்லை. அவளது குடும்பத்தாரைத் தொண்டு நிறுவனம் தத்தெடுக்கிறது. இந்த ஆலயத்திற்குப் பாத்தியப்பட்டவளாகச் சாகும் வரை அவள் ஊழியம் செய்யட்டும். அவளுக்கான மாதச் சம்பளத்தை எங்கள் தொண்டு நிறுவனம் பார்த்துக்கொள்ளும். சமையல்காரி ரோசம்மாளுக்கு உதவியாகவும், சபை ஊழியர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்கவும் அவளுக்கு இந்தத் திருச்சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். ரோமன் ஃபாதர் இதனை வழிமொழிவார் எனக்கூறவே சபை ஒரு கணம் துணுக்குற்று நின்றது. பசப்பி, வெள்ளைக்காரனை மயங்கிப் போட்டாள் என்று சில குரல்கள் அலை மோதப் புதிய தேவாலயத்தின் சுவர்களில் அவை எதிரொலித்து அடங்கின. மர்யம் கண்ணீர் மல்க ஜேக்கப்பின் கால்களில் விழவும் எதுவும் செய்ய முடியாத ஃபாதர் தேவனின் ஆசி அதுவென்றால் அப்படியே ஆகட்டும் என்று கூறவும், மெழுகுவத்திகள் கரைந்தொழுகிப் பலரது விரல்களைச் சுட்ட போதே திருப்பலி ஆரம்பமானது. சில தினங்களுக்குப் பின்னர் ஜேக்கப் அவுஸ்திரேலியா திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் வந்தது. இறுதியாக அவன் மர்யத்தைச் சந்திக்க வந்த போது அவள் அழுது கொண்டிருந்தாள். அவளை ஆசுவாசப்படுத்தியவன் அவளது புகைப்படமொன்றை அவளுக்குப் பரிசளித்தான். நான் எனது அம்மாவுடன் உன்னைக் காண மீண்டும் வருவேன் என்று ஜேக்கப் உறுதியளித்துச் சென்ற மூன்றே மாதத்தில் கர்ப்ப வாந்தியெடுத்தாள் மர்யம். மர்யத்திற்குத் தலைசுற்றலுடன், காய்ச்சலும் ஆரம்பமானது. ஊர் முழுக்க வெள்ளைக்காரனுடன் படுத்தெழும்பி விட்டாள் வேசை என்கிற பிதற்றல் கதைகள் அதிகம் உலாவத் தொடங்கின. விடுதியின் அறையில் அவளை வைத்திருப்பது ரோமன் ஃபாதருக்கு எரிச்சலைக் கிளப்பியது. அவளது வயிறு வளருகையில் தேகம் மெலிந்து சூம்பிப்போனது போலானது. சமையல்காரி ரோசம்மாள் மட்டும் அவளுக்கு ஆதரவாக இருந்தாள். மெல்ல மெல்ல இருமத்தொடங்கியவள் அடிக்கடி மூச்சிரைப்பிற்கு உள்ளானாள். இரத்தம் கலந்த சளி அவளுடலில் இருந்து வெளியானது. அதைக்குறித்து அவள் சட்டை செய்யாதிருந்தாள். இரவு முழுக்கக் கண்களை மூடியபடி இருந்தாள் பின் தீராத இருமலால் அவதிப்பட்டாள். பைபிளை வாசித்தபடி உளமாற தனது கணவன் சகாயப்பனை நினைத்துக் கர்த்தராகிய இயேசு என்னும் ஆண்டவர் தனக்குப் பாவமன்னிப்பு அளிப்பார் என்று புலம்பினாள். இருமல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. தேய்பிறை நாளொன்றில் சமையல்காரி ரோசம்மாள் உதவியுடன் குறைமாதக் குழந்தையாகக் குச்சானைப் பெற்றெடுத்தவள் காச நோயால் பீடிக்கப்பட்டதை அறியாமலே சிலநாட்களின் பின் இருமி இருமிச் செத்துப் போனாள். விடுதியில் இடம் கிடைத்தாலும், கல்லறைத் தோட்டத்தில் இடம் கிடைக்காததால் கடற்கரையோரத்திலே அவளது சடலம் புதைக்க அனுமதிக்கப்பட்டது. ரோமன் ஃபாதர் தள்ளி நிற்க ரோசம்மாளும் சில மீனவர்களும் சேர்ந்து சடலத்தைப் புதைக்க குச்சானைக் கைகளில் ஏந்தியபடி மேர்லின் அழுது கொண்டிருந்தாள். அதன் பிறகு மர்யத்தின் அத்தனை வேலைகளையும் சேர்ச்சின் விடுதியில் தங்கியிருந்த மேர்லின் செய்து கொண்டே தனது தம்பியையும் ரோசம்மாளின் உதவியுடன் வளர்த்து வர எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடன் அவளை அடிமை போல நடாத்தத் தொடங்கினார் ரோமன் ஃபாதர். 4 வழக்கம் போல குச்சானும், நானும் தும்பி பிடிக்கக் கிளம்பிக்கொண்டிருந்தோம். உலங்கு வானூர்தி போல படபடவெனச் சிறகடித்துக்கொண்டு திமிருடன் அலைகிற தும்பி, சிறு செடிகளுக்குள் புகுந்து புகுந்து பின்னர் ஏதாவது ஒரு செடியிலுள்ள இலையின் நுனியில் அமர்ந்திருந்து, தனது உடைந்த கண்ணாடிச்சில்லுகளை ஒட்ட வைத்திருப்பது போலிருக்கும் கண்களைச் சுழற்றி அங்குமிங்கும் இரைகௌவிகளை நோட்டமிட்டபடியிருக்கும். அப்போதுதான் குச்சான் தன்னுடைய வேலையைத் தொடங்குவான். அடிக்கடி வியர்த்துக் கொண்டிருக்கும் தனது உள்ளங்கையைச் சட்டையில் தடவியபடி முடிதும்பைச்செடிகளைக் கற்றையாகப் பிடித்து எடுத்துக் கொள்வான். முடிதும்மையின் பூக்கள் வெள்ளை நிறத்தில் கொள்ளை அழகுடையதாயிருக்தும் அவை மேர்லினைப் போல, எனது அம்மாவைப் போல, எனது அம்மாவைப்போலவே அந்தத் துண்டுப்பத்திரிகையில் இருக்கும் நடிகையைப் போல மென்மையானதும் அழகானதுமாகும் என்பான். மேர்லினுக்கு முடிதும்பைப்பூக்களை ரொம்பப் பிடிக்கும் அதை அவள் வட்டமிட்டுச் சேர்த்து இடியப்பம் போல செய்வதுண்டு. அதற்காகவென முடிதும்பைப்பூக்களைப் பத்திரப்படுத்திவிட்டு இலைகளுடன் கூடிய செடிகளை எடுத்து வைத்திருப்பான். பூனைக்கண்களையுடை குச்சான் மெல்ல மெல்ல பூனை போல நடக்கத் தொடங்குவான். தும்பியின் வால் நீட்டப்பட்டிருக்கும் திசையில் பணிந்து செல்வான். முடிதும்பைக்கற்றையைக் கண நேரத்தில் அதன் மீது போடுவான். ‘ஒரே அமுக்கு…. மாட்டிவிட்டது… மாட்டிவிட்டது…’ என்று கத்துவான். பின்னர் ஒவ்வொரு முடிதும்பைச்செடிகளாக விலக்க அது செடிகளுக்கிடையே உள்ள இடைவெளியினூடாகப் பறந்துவிடும். அன்றும் அப்படித்தான் பல பிரயத்தனங்களுக்குப்பிறகு தும்பியொன்றைப் பிடித்தவன். சொப்பின் பேக்குகள் நிறைய முடிதும்பைப்பூக்களை எடுத்துக் கொண்டு பெருங்கடலின் அலைவாக்கரையோரமாக ஓட்டமெடுத்தான். கத்திக்கூச்சலிட்டபடி வெறி கொண்டு ஓடினான். மேர்லின்… மேர்லின்… இன்று நான் பச்சைத்தும்பியொன்றைப் பிடித்துவிட்டேன் என்றபடி ஓடினான். அவன் கூடவே நானும் பற்களும் ஈறுகளும் தெரியும் படிச் சிரித்துக் கொண்டே ஓடினேன். வழக்கத்திற்கு மாறாக, தேவாலயத்தின் முன்பு மக்கள் திரண்டிருந்தனர். விடுதியின் தாழ்வாரத்தில் மேர்லின் குத்துக்காலிட்டிருந்தாள். அவளது தலைமுடி நறுக்கப்பட்டிருந்தது. ரோசம்மாள் செருப்பை எடுத்து ஆங்… ஆங்… என்றபடி ரோமன் ஃபாதரை மூச்சிரைக்க அடித்துக் கொண்டிருந்தாள். அவள் நிறைவெறியில் மூர்க்கத்துடன் இருக்கும் புருஷனொருவன் பொண்டாட்டியைப் போட்டு அடிப்பது போல அடித்துக்கொண்டிருந்தாள். அப்பாவிப் பெண்ணை நாசம் செய்துவிட்டாயே பாவி என்று கத்தினாள். இறைவனுக்குச் சாட்சியாய்த் தொண்டு செய்ய வந்தவன் செய்கிற காரியமா எனப் பெண்களில் சிலர் குமுறினர். அங்கிருந்தவர்கள் அடித்த அடியில் ஃபாதரின் நீண்ட வெள்ளை அங்கி கிழிந்திருந்தது. கிழிந்த சட்டையில் தாடை உடைந்ததால் கசிந்திருந்த இரத்தத் துளிகள் அப்பியிருந்தது. அவர் முட்டுக்காலில் இருத்தப்பட்டிருந்தார். டேவிட்டின் கல்லறை மீதிருந்த குச்சானை விடவும் பரிதாபமான நிலையில் அவர் இருந்தார். செருப்பை வைத்திருந்த ரோசம்மாள் அவரது முகத்தில் காறி உமிழ்ந்தாள். என்னை…. மன்னித்…. என்று ஏதோ சொல்லத் தொடங்க ஃபாதரின் முகத்தில் மீண்டும் ஒரு அடி விழ, அவர் நிலை தடுமாறி தரையோடு தரையாகச் சாய்ந்தார். அவரது ஆடை கிழிக்கப்பட முழு நிர்வாணமாக நின்றவர், தனது இரு உள்ளங்கைகளாலும் அழுக்கேறிய தனது பிறப்புறுப்பை மறைத்தபடி அழுதடங்கினார். பொலிசார் சற்று நேரத்திலே அங்கு வருகை தந்தனர். மேர்லினை ஆம்பியூலன்ஸில் ஏற்றியவர்கள் ஃபாதரை தூக்கி நிறுத்தினர். உச்சக்கட்ட வலியில் தள்ளாடிக் கொண்டிருந்த அவரை பொலீஸ் ஜீப்பை நோக்கி அழைத்துச் சென்றனர். அப்போதுதான் நான் அதனைக் கண்டேன். தனது பிருஷ்டங்களை மறைக்க முடியாமல் எதிர்த்திசையில் தலைகுனிந்தபடி நடந்து கொண்டிருந்த ஃபாதரின் சூத்தாமட்டியின் மீது ஏறியிருக்கும் தசைத்துண்டத்தில் அதிகளவு மயிர்களுடன் ஒரு மாங்காய் மச்சம் இருந்தது, குச்சானுக்கு இருப்பதைப் போலவே! illustration by Sam Weber பாக்கியராசா மிதுர்ஷன் எனும் இயற்பெயரையுடைய நீலாவணை இந்திரா என்பவர், இலங்கையைச் சேர்ந்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியல் பிரிவில் அணுத்தொழில்நுட்பத்தில் இளமாணிப் பட்டத்தை நிறைவு செய்துவிட்டு தற்போது அதே பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர்த் தொழிநுட்பப் பாடப்பரப்பில் தனது முதுமாணிப் பட்டத்திற்கான கற்கைநெறியினை மேற்கொள்கிறார். இவரது கக்கூஸ் வாளி எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு தடைப்பட்டு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட இவரது இரண்டு கவிதைகள் கிழக்கின் கவிக்கோர்வையிலும், றெதிநெந்தா என்று பேசப்பட்ட சிறுகதையொன்று கிழக்கின் நூறு சிறுகதைகளில் நூறாவதாகவும் வந்துள்ளது. கிழக்குப் பண்பாட்டலுவல்கள் நூலின் அடிப்படையில் இவரே மிகவும் இளம்வயதுடைய கிழக்கு மாகாண சிறுகதை எழுத்தாளர் ஆவார். மேலும் விவாதங்களிலும், மேடைப்பேச்சுக்களிலும் செயற்பட்டு வருகிறார். https://thadari.com/penises-are-dirty-nilavanai-intira/
  46. ஏ ஐ மொழிப்போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்பது உலக நாயகனின் ஏ ஐ பற்றிய தவறான புரிதல் என்பதே எனது கருத்து. ஏ ஐ வெறும் தொழில்நுட்பம் மட்டுமே. அதனை பயன்படுத்தும் மனிதர்களே போரையும், சமாதானத்தையும் தீர்மானிக்கின்றார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.