ஹா ஹா..... நான் தான் அவர்களின் வழக்குகளை கையாள்கிறேன், எனக்கு பிரதம மந்திரியாக பதவியேற்பதற்கு அழைப்பு வருமென காத்திருப்பதாக அறிவித்திருந்தார், இப்போ இப்படி ஒரு கதை விடுகிறார். கொஞ்ச நாளாய் அமைதி நிலவுகிறதே என நினைத்தேன், அவர் கற்பனையில் இருந்திருக்கிறார் பாவம். ஜனாதிபதி தேர்தலில், தமிழ் வாக்காளருக்கு வாக்களியுங்கள் என்று சொன்னால், அது இனவாதமாம். ஆனால் மாகாணசபைத்தேர்தலில், பாராளுமன்றத்தேர்தலில் தமிழர் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்கவேண்டும், அதுதான் தமிழரின் ஏகோபித்த கட்சி என்று சொல்வது என்ன வாதம்? அது இருக்க, ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்க கேட்டு விட்டு, அனுராவிடம் பதவி எதிர்பார்க்கிறார். அமைதியாக இருந்த கட்சியில் பிரச்சனையை ஏற்படுத்தி, தெருவுக்கு கொண்டுவந்து, நீதிமன்றத்தில் நிற்கவைத்துவிட்டு நீதியமைச்சர் பதவியை எப்படி இவர் எதிர்பார்க்கிறார்? சிலர் இப்படித்தான் பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பது, கிடைக்காத போதுஎச்சரிப்பது, சவால் விடுவது, பயமுறுத்துவது. பின் சீசீ இந்தப்பழம் புளிக்கும் என்பார்கள். எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்பாடு இல்லாமல் பதவிக்காக சாயும் இவருக்கு அனுரா பதவி தருவேன் என்று சொன்னாராம். என்று இவர் சொல்வதிலிருந்து இவர் கடந்த காலங்களில் எதற்காக முண்டு கொடுத்தார் என்பது தெரிகிறது. எந்தக்காலத்திலும் இவர் தனக்கு வாக்கு போட்ட மக்களின் கவலைகளை தேவைகளை முன்னிறுத்தியதேயில்லை, இப்போ அவருக்கு பதவிக்காக மக்கள் நினைப்பு வருகிறது. தமிழ் மக்கள், தங்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களின் ஆலோசனை, வழிகாட்டுதல் இல்லாமல் தாங்களாகவே அனுராவை தேர்ந்தெடுத்தனர், யாரும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆகவே தமிழரின் கவலைகளை, அபிலாசைகளை, உணர்வுகளை மதித்து அவற்றிற்கு தீர்வு வழங்குவது அனுராவின் கடமை. அதைவிட்டு சுமந்திரனுக்கு பதவி வழங்குவதால் தமிழரின் பிரச்சனை தீர்ந்துவிடாது என்பது அனுராவுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே புரியும். இப்போ தெரிகிறதா யார் பதவிக்காக நாக்கைத்தொங்க போட்டுகொண்டு அலைவது என்பது? இருங்கோ. யார் வேண்டாம் என்றது? அதற்காக என்ன செய்தீர்கள்? அனுரா நீதியமைச்சர் பதவி தருகிறேன் என்று சொல்வதாலோ, அல்லது நிராகரிப்பதாலோ எதுவும் நிகழாது.