Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20453
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    3168
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7163
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    89148
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/10/26 in Posts

  1. போட்டியை மிகச் சிறப்பாக, எப்போதும் போல, நடத்திய கிருபனுக்கு @கிருபன் மிக்க நன்றிகள் பல! போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும், போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் நன்றிகள்! முதல் இடங்களைப் பிடித்த @Newbalance , @கந்தப்பு , @நியாயம் ஆகியோருக்கு வாழ்த்துகள்.....................👍. பி.கு: ஆப்கானிஸ்தானில் எனக்கும், வாதாவூரானுக்கும் சிலைகளை திறப்பதாக முடிவெடுத்து இருந்த நேரத்தில் ஒரு உலகப் பிரச்சனை வந்துவிட்டது.................🤣.
  2. பூனைக்குட்டி இப்ப தான் வெளிய வருது. வென்றிருந்தால் இத்தனை முறைப்பாடுகளும் வந்திருக்காது. சரி சரி வரும் ஐபிஎல் சோதனையில் இவர்களை ஒதுக்கி வையுங்கள். ஆப்கானில் இடம் இல்லாவிட்டால் என்ன ரம்பிடம் சொன்னால் ஈரானில் இருவருக்கும் சிலை(உயிரோடு)வைத்துவிடுவார்.
  3. பங்குபற்றிய உறவுகளுக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த @Newbalance @கந்தப்பு அண்ணை @நியாயம் மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் அவர்களுக்கம் நன்றியும் வாழ்த்துக்களும். நான் அதிகம் கருத்துக்கள் எழுதாவிட்டாலும், பலரின் கருத்துக்களை வாசித்து வருகின்றேன். குறிப்பாக @ஈழப்பிரியன் அண்ணா, @செம்பாட்டான் , @வீரப் பையன்26 @goshan_che இன்னும் பலருக்கும் நன்றிகள்
  4. விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை விடுமுறைக்கு நாட்டுக்குப் போவதாக இருந்தால் பொதுவாக என் குடும்பத்தைத் தவிர வேறு யாரிடமும் அதை ப் பற்றி நான் கதைப்பதில்லை. “எதற்கு வில்லங்கத்தைச் சும்மா வாங்க வேண்டும்?” என்ற உயரிய எண்ணம்தான் அதன் காரணம். ஆனால், சில சமயம் வில்லங்கம், நாங்கள் தேடாமல் எங்களைத் தேடித் தானாக வந்து விடும். அடுத்த நாள் எனது பயணம். செய்ய வேண்டிய வேலைகள் சில இருந்தன. அப்போது அலைபேசி அழைத்தது. அழைப்பு நியூசிலாந்தில் இருந்து வந்திருந்தது. அங்கு வசிக்கும் எனது உறவினர் ஒருவர். என்னை “தம்பி” என்று உரிமையோடு அழைப்பார். நானும் அவரின் பெயரின் பின்னால் “அக்கா” சேர்த்துஅழைப்பேன். “என்ன, சிறீலங்கா போறியாம்?” “சிறீலங்காவுக்கா? யார் சொன்னது?” “விடாதை . கதை விடாதை . எனக்குத் தெரியும். சிறீலங்காவிலையிருந்து எனக்கொரு தாலிக்கொடி வாங்கி அனுப்பிவிடுறியே?” தங்கம் விற்கும் விலையில் தாலிக்கொடி வாங்க வேண்டுமா என்ற எண்ணத்தில் தலை சுற்ற ஆரம்பித்தது. நல்லவேளை அவர் அடுத்ததாகச் சொன்னவார்த்தைகளில் நான் தப்பித்தேன். “பவுணில இல்லை. இமிட்டேஷன் தாலிக்கொடி. இஞ்சை எனக்குத் தெரிஞ்ச ஒருத்தியின்ரை மகளுக்கு கொஞ்ச நாளைக்கு முன் கல்யாணம் நடந்தது. அவையள் ஹொலிடேக்குப் போயினம். போற இடத்திலை சொந்தக்காரர்கள் வீட்டுக்கும் போவினம். பவுண் தாலிக்கொடியை போட்டுக் கொண்டு போய் எதுவும் நடந்தாலும் எண்டு பயப்படுயினம். அதுக்குத்தான். வெள்ளவத்தையில வாங்கலாம். ‘யாழ்ப்பாணத் தாலிக்கொடி’ என்று கேள். வட்டமா இருக்கும்.” நான் பயணத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்க முயன்றாலும், வில்லங்கம் எப்படியோ என்னைத் தேடி வந்துவிடும் போல. இந்த இமிட்டேஷன் யாழ்ப்பாணத் தாலிக்கொடியே அதற்கான ஆரம்பமாக இருக்கப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. கொழும்பில் நான் வழமையாகத் தங்குவது என் நண்பன் கணேசனின் வீட்டில். அவன் சட்டத்தரணியாக இருந்த காலத்தில் மாலை நேரத்தில் மட்டும் “தீர்த்தம்” அருந்துவான். இப்போது வயதும் ஓய்வும் சேர்ந்து, மதியம் ,மாலை இரு வேளைகளிலும் தீர்த்தக் களிப்பில் இருக்கிறான். இந்த வருடப் பொங்கலை அவனுடனேயே கொண்டாடினேன். 40, 45 வருடங்களுக்கு பிறகு நான் காணும் பொங்கல் அது. பொங்கல் முடிந்து இரண்டுநாட்களுக்குப் பிறகு நியூசிலாந்து அக்கா கேட்ட யாழ்ப்பாணத் தாலிக்கொடி நினைவுக்கு வந்தது. அதை வாங்கி அனுப்பிவிட்டு அடுத்த வேலையைப்பார்க்கலாம் என்று கடைகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். நான் வாங்கி வந்த தாலிக்கொடியைப் பார்த்து கணேசனின் மனைவி உடனேயே சொன்னார், “பிழையா வாங்கிட்டீங்கள். இது இமிட்டேஷன் என்று அப்பிடியே காட்டிக்குடுக்கும்.” சொன்னதோடு மட்டும் நின்று விடாமல், தனது கழுத்தில் இருந்த தடித்த தாலிக்கொடியைக் காட்டினார். “இது செய்து எத்தினை வருசமாச்சுது . செத்த பாம்பு மாதிரி இருக்குது. அவன் வாங்கினது சரிதான். யாழ்ப்பாணத் தாலிக்கொடி இப்பிடித்தான். இதுதான் இப்ப பாஷன்” என்று கணேசன் என்னைக் காப்பாற்றினான். “சிவபெருமான் கழுத்தில சுத்தியிருக்கிற பாம்பு மாதிரி…” என்று முணுமுணுத்தபடி கணேசனின் மனைவி எங்களை விட்டு அகன்றார். அடுத்த நாள் அந்த யாழ்ப்பாணத் தாலிக்கொடியை நியூசிலாந்துக்கு அனுப்பி வைத்தேன். அந்தத் தாலிக்கொடி வாங்கச் சென்றபோது ஒரு கடையில் பார்த்த ஒரு விளம்பரம் என்னைச் சற்று யோசிக்க வைத்தது. “மாணிக்கக்கற்கள் பொருந்திய நகைகள் 40% முதல் 60% வரை தள்ளுபடி” என்று ஒரு கண்காட்சி விளம்பரம். சும்மா போய் பார்த்து வரலாம் என்று நினைத்து அந்த கண்காட்சிக்குச் சென்றேன். இடம் கொள்ளுப்பிட்டிய. அங்கு சென்றபோது, மூன்று ஊழியர்களும் ஒரு காவலாளியும் தவிர வேறு யாரும் இல்லை. அப்போதே திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக உள்ளேபோனேன். அங்கு சபையர் கல் பதித்த ஒரு மோதிரம் என்னைக் கவர்ந்தது. அவர்கள் சபையரை பரிசோதித்து காட்டினார்கள். மோதிரம் 14 கரட் என்று சொன்னார்கள். விலையையும் குறைத்துத் தந்தார்கள். நான் வாங்கிவிட்டேன். யேர்மனிக்குத் திரும்பினேன். சிறீலங்காவில் +30°C யேர்மனியில் -12°C என காலநிலை இருந்தது. நேரமாற்றமும் குளிரும் சேர்ந்து நீண்ட நேரம் தூங்கிக்கொண்டிருந்தேன். எழுந்தபோது சூட்கேஸ் எல்லாம் திறந்து ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. உடுப்புகள் தோயலுக்குப் போயிருந்தன. கொண்டு வந்தபொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குள் மோதிரப் பெட்டியும் இருந்தது. மனைவியை ஆச்சரியப்படுத்த வாங்கி வந்த மோதிரம். “நல்ல வடிவான மோதிரம்,” என்றாள். கண்காட்சியில் வாங்கிய விபரத்தைச் சொன்னேன். ஆனால் அந்த மோதிரத்தை நான் மீண்டும் பார்த்தபோது, வாங்கிய போது இருந்த கவர்ச்சி கல்லில்இப்போது குறைந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. தவறு கல்லிலா? இல்லை நீண்ட நித்திரையில் இருந்த என் கண்களிலா? அந்தச் சந்தேகத்தை அப்போது மனைவியிடம் சொல்லவில்லை. அவளது மகிழ்ச்சி வீணாகிவிடக் கூடாது என்று நினைத்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு வழமையான வாழ்க்கைக்கு திரும்பியபோது என் சந்தேகத்தை மனைவியிடம் கூறினேன். “கடையில குடுத்துக் கேட்டால் அதன் பெறுமதி சொல்லிவிடுவினம். வேணுமென்டால் நான் கேட்டுப் பார்க்கிறன்,” என்றாள். அடுத்த நாள் முடிவு தெரிந்தது. மோதிரம் 14 கரட் தங்கம். அதில் பொருத்தியிருந்தது உண்மையிலேயே சபையர் கல்லுதான். ஆனால் அதன் தரம் வெறும் 0.9 கரட் மட்டுமே. வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம் வந்தபின்னே அது தாழைமரம் அதாவது நான் கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ற கல் இல்லை. நான் பார்த்த மோதிரத்தை மாற்றி வேறு ஒன்றைத் தந்திருக்கலாம் என்ற சந்தேகம்உறுதியாகியது. அவர்களின் விவரங்களை இணையத்தில் தேடியபோது, நான் தனியாளாக இல்லை. எனக்குத் துணைகளும் இருப்பது தெரிந்தது. என்னைப் போல சிலவெளிநாட்டவர்களும் ஏமாற்றப்பட்டிருப்பது அங்கே பதியப்பட்டிருந்தன. யேர்மனியில் என்றால் இப்படிப்பட்ட விஷயங்களைச் சட்டப்படி சுலபமாக கையாளலாம். ஆனால் சிறீலங்காவில் நடந்த விஷயம். அதுவும் நான் யேர்மனியில்இருந்து கொண்டே முடியுமா? “விட்டு விடலாமா?” என்ற எண்ணம் ஒரு கணம் வந்தது. உடனேயே அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள்? குறைந்தபட்சம் சிலருக்காவது இது பற்றி எச்சரிக்கையைத் தரவேண்டும் முதலில் யேர்மனியில் உள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு முழு விவரத்தையும் எழுதினேன். அவர்கள் உடனடியாக பதில் அனுப்பினார்கள், “இந்த தீவிரமானவிஷயத்தை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி. உங்கள் புகாரை விசாரணைக்காக இலங்கையில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்குஅனுப்பியுள்ளோம். தகவல் கிடைத்தவுடன் தெரிவிப்போம்.” அடுத்ததாக என் வங்கியையும் தொடர்புகொண்டேன். அவர்கள் சொன்னது, “நீங்கள் வாங்கிய பொருள் உங்களிடம் இருக்கிறது. ஆகவே நேரடியாக பணத்தைத் திரும்பப் பெற முடியாது. அந்தப் பொருளைஅவர்களிடம் ஒப்படைத்து அவர்கள் பெற்றுக்கொண்டதாக உறுதிப்பத்திரம் கிடைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.” மோதிரம் வாங்கிய ரசீதைப் பார்த்தேன். அதில், “Goods once sold can be exchanged only” என்று இருந்தது. ஆனால் நான் விடவில்லை. அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினேன், “வாங்கிய பொருள் தரமற்றது. கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ப இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளைத் திருப்பி அனுப்புகிறேன். பணத்தை என் வங்கி கணக்கில் வரவு வைக்கவும். 14 நாட்களில் பதில் வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கைஎடுப்பேன்.” காத்திருந்து சரியாக 14வது நாள் அவர்கள் பதில் அனுப்பினார்கள். “நாங்கள் விற்ற பொருள் தரமானது. திருப்பிப் பெற முடியாது.” எதிர்பார்த்த பதில்தான். “அப்படியானால் நான் சட்ட நடவடிக்கை எடுக்கிறேன். உங்களின் இறுதிப் பதிலுக்கான கால எல்லை நாளை சிறீலங்கா நேரம் 14:00வரை” எனப் பதில் அனுப்பினேன். மீண்டும் நான் எதிர்பார்ததபடி நேர எல்லைக்குள் அவர்களிடம் இருந்து பதில் வந்தது, “நேரடியாக எங்கள் நிறுவனத்துக்கு வாருங்கள். நாங்கள் பேசித்தீர்க்கலாம்” “நன்றி. நான் இந்த விவகாரத்தை சட்டப்படி அணுகுகிறேன்” என அவர்களுக்கு பதிலைத் தந்துவிட்டு, அடுத்து நான் நாடியது சிறீலங்காவின் Tourist Police. மறுநாள் மாலை நேரம், கணேசனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “எதுக்கு உன்னுடைய Power of Attorneyயை எனக்கு அனுப்பியிருக்கிறாய்? அதென்ன மோதிரம்? எப்ப வாங்கினனீ? ” விஷயத்தைச் சொன்னேன். அவன் போனில் கன நேரம் என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். மாலை நேரமாக இருந்ததால் அவன் தமிழ் தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்தது.
  5. இது விவகாரமான கேள்வியல்ல. விபரமான கேள்விதான் உறவே!! மாமனிதர் விருது மாமனிதர் விருது – தமிழீழத்தின் அதிஉயர் விருதினை ஈழப்போராட்டத்தில் பல்வகைகளிலும் தோளோடு தோள்நின்று பங்காற்றிய கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுக்கு மேதகு தலைவர் வே. பிரபாகரனால் அவர்களால் வழங்கப்பட்டது. பின்னர் தமிழகத்திலேயே தங்கிவிட்ட காசி ஆனந்தன் இன்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அங்கு குரல் கொடுத்தவண்ணமுள்ளார்.
  6. மத அடிப்படை வாதம் மக்களை முட்டாள்கள் ஆக்கும். இயன்ற அளவுக்கு அது அரசியலில் இருந்து அகற்றப்படல் வேண்டும்்அல்லது அரசியலில் ஆக குறைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாவண்ணம் பலவீனப்படுத்தப்படல் வேண்டும். ஆரம்பத்தில பாலஸ்தீன விடுதலை என்று புறப்பட்ட பாலஸ்தீன விடுதலை இன்று ஹமாஸின் இஸலாமிய மத அடிப்படை வாதத்தில் வந்து நிற்கிறது. மத்திய காலத்தில் மனிதர்களை மூடபழக்கங்களுக்குள் தள்ளிய உலகில் உள்ள எல்லா மதங்களும் மீண்டும் அந்த நிலைக்கு போக அனுமதிக்கக கூடாது. இலங்கையில் புத்தமதம் இந்தியாவில் இந்துமதம் ஆகியவையும் இதே போல செல்லவே முயலுகின்றன. ஈழத்தமிழர்களிடமும் மத அடிபடைவாதத்தை புகுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களிடையே முட்டாள்தனங்களை பரப்பி அதை விமர்சிக்கமுடியாத அளவுக்கு புனிதப்படுத்திவிட்டால் கேள்விகள் எதுவும் இன்று தமது எதேச்சதிகாரத்தை தொடர முடியும் என்பதும் கேள்வி கேட்பவனை கடவுளுக்கு எதிரானவன் என்று அடக்கலாம் என்பதுமே மத அடிப்படைவாதத்தின் நோக்கம். மத அடிப்படைவாதம், கண்மூடித்தனமான தேசபக்தி, இனப்பற்று என்ற ரீதியிலான இனவெறி என்பன மக்களை தர்ககரீதியாக நியாயமான கேள்விகளை கேட்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தும் கருவிகள். அதை நாடுகளும் விடுதலை இயக்கங்கள் என்று கூறப்படுபவையும் சிறப்பாக பயன்படுத்துகின்றன.
  7. ஊடக பிரச்சார தகவல்கள் மற்றும் அந்த தகவலின் ஊட்டலின் தரவுகளினடிப்படையில் செயற்படும் செயற்கை நுண்ணறிவுகள் மூலம் உலக நகர்வுகளை சரியாக புரிந்து கொள்ளமுடியாது. பல இலட்சம் பேர்களை கொல்லும் எதிரெதிர் தரப்புக்களில் சினிமாத்தனமான கதாநாயக் விம்பங்களை உருவாக்கும் கட்டமைப்புகளில் நின்று சரிகளையும் அதன் எதிர்த்தரப்பினை தவறாகவும் பார்க்கும் நிலை உண்மையான புரிதலை கொடுக்காது. அறிவு அனைவரது பிறப்புரிமை, அதனைபக்க வாதங்களுடன் அணுகாமல் சிந்திக்கும் சமுதாயமாக மாறினாலே எமது சமூகம் தன்னை காலா காலத்திற்கும் நிலைத்து முன்னேறும்.
  8. அண்ணை நீங்களாச்சும் கேட்டது கொஞ்சம் மனதுக்கு ஆறுதலாக இருக்கு. அவுஸ்திரேலியாவையும் நன்றாக விளையாடுவினம் என்று நான் கருதிய அணிகளும் தோற்றது ஒரு காரணம். அதிக ஓட்டம், அதிக விக்கெட் போன்ற குண்டக்கமண்டக்க(உபயம் தம்பி @வீரப் பையன்26) கேள்விகளில் சறுக்கியதும் மற்றொரு காரணம். எனக்கு நல்ல துணை தம்பி @வாதவூரான் இருக்கிறபடியால பயமில்லாமல் இருக்கிறேன்! @goshan_che அண்ணை தான் ஏமாத்திப்போட்டார்!
  9. வருடா வருடம் விளையாட்டுப்போட்டியை திறம்பட நடத்தி யாழ் களத்தை கல கலப்பாக்கும் கிருபனுக்கும் இம்முறை முதலாம் ரெண்டாம் மூன்றாம் இடத்தை பிடித்தவர்களுக்கும் என்னை கீழே மிதிப்படாமல் காத்த வாதவூரானுக்கும் என் நன்றிகள் . கிருபனுக்கு மேலதிக பாராட்டுக்கள்.
  10. போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் க்கு நன்றியும் வாழ்த்துகளும். பங்குபற்றிய உறவுகளுக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நியூபலன்ஸ், கந்தப்பு, நியாயம் மூவருக்கும் வாழ்த்துகள். மற்றும் திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
  11. முதல்வர் நியூபலன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ......! அவரைத் தொடர்ந்து வந்திருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் பாராட்டுக்கள் .......! முதலில் இது போன்ற போட்டிகளை திறமையாக நடத்திவரும் கிருபனுக்கு பாராட்டுக்கள் . .....! இப்போட்டியில் அவருக்கு பக்கபலமாய் நின்ற செம்பாட்டானுக்கும் நன்றிகள் ........! பங்குபற்றிய மற்றும் திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் பாராட்டுக்கள் ........! எல்லாவற்றுக்கும் களம் அமைத்துத் தந்த யாழ் இணையத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ......!
  12. வெற்றியாளர் நியூபலன்ஸ்சுக்கும் 2வது இடத்தைப்பிடித்த கந்தப்புவுக்கும் வாழ்த்துகள்.போட்டியைத்திறம்பட நடத்திய கிருபன்ஜீக்கும் திரியைத் தொய்வில்லாமல் நகர்த்திச் சென்ற கள உறவுகளுக்கும் வாழ்த்துகள்.
  13. ரஸ்ய சார்பு கட்டுரைகளை மட்டும் தேடி, தேடி கூகிள் டிரான்சிலேட் பண்ணி ஒட்டினால் - உண்மையான புரிதல் ஏற்படுமா வசி😂
  14. இரு மாதங்களில் சீன வர்த்தகம் அதிகரிப்பு --- --- --- *அமெரிக்கவுக்கான ஏற்றுமதி சரிவு *ஐரோப்பிய - ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதி உயர்வு --- --- --- சீனாவின் வர்த்தகம் 2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஐந்தில் ஒரு பங்காக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் (Bloomberg) என்ற அமெரிக்க செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் விபரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வை மக்குப்பிஸ்னஸ் (macaubusiness) என்ற சீன அரச செய்தி நிறுவனம், இன்று செவ்வாய்க்கிழமை பிரசுரித்துள்ளது. இந்த ஆய்வின் பிரகாரம், 2026 ஆம் வருடத்தின், முதல் இரண்டு மாதங்களுக்கான அதிகாரபூர்வ புள்ளி விபரங்கள், ஈரான் மீதான போர் ஆரம்பிப்பதற்கு முன் வலுவானதாக இருந்தது. இந்த மதிப்பீட்டின் படி, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் சரிவு உள்ளது. ஆனாலும் கடந்த இரண்டு மாதங்களிலும் சீனாவின் வர்த்தகம் உயர்வடைந்துள்ளது. ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு 21.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. பொருளாதார நிபுணர்களின் மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட 7.2 சதவீதத்தை முறியடித்துள்ளதாக சீன சுங்கத்தின் பொது நிர்வாகம் கூறியுள்ளது. ப்ளூம்பெர்க் மதிப்பீட்டில் கணிப்பிடப்பட்ட ஏழு சதவீதத்தை விடவும் இறக்குமதிகள் 19.8 சதவீதம் உயர்ந்துள்ளன. 9 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியான அதிகாரபூர்வ தரவுகளின் பிரகாரம், இறக்குமதி அதிகரிப்பு நுகர்வோர் விலைகள் மூன்று ஆண்டுகளில் மிக விரைவான வேகத்தில் உயர்ந்ததைக் காட்டுகிறது. அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் 11.0 சதவீதம் சரிந்தன, வோஷிங்டனுடனான வர்த்தக முரண்பாடுகள் நீடித்தமை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கட்டண பிரச்சாரத்தை (tariff campaign) முன்னெடுத்தமை ஆகிய காரணங்களினால் இச் சரிவு ஏற்பட்டது. சென்ற ஜனவரி - பெப்ரவரி மாதங்களில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் மொத்தம் $67.24 பில்லியன்களாக இருந்தாக புள்ளி விபரங்கள் காண்பிக்கின்றன. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் $75.56 பில்லியனாக இருந்தது. அதேநேரம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதி 27.8 சதவீதம் உயர்ந்ததுள்ளது. ஆசியான் (ASEAN )நாடுகளுக்கான ஏற்றுமதி 29.2 சதவீதம் உயர்ந்ததுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவன ஆய்வில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid03aNB2LprEEtWR64HRvRXDXptHyASdPpMmtbTHCuQ9y2kV4CgPaWu71cfMwJgEmT7l/?mibextid=wwXIfr
  15. உங்களுக்கு வேறு ஒரு இடம் பார்த்து வைத்துள்ளார்.
  16. ஏனண்ணை என்னைத் தவிர்த்துவிட்டீர்கள்?!
  17. "ட்ரம்ப் ஐயா" வும் அவரது கூட்டுக்களும் அமெரிக்கா அல்ல! அவர்களிடம் தற்போது ஒலி வாங்கி இருக்கிறது, எனவே அவர்களது குரல்கள் தான் பெரிதாகக் கேட்கிறது. இதன் அர்த்தம் "அமெரிக்காவில் மதவாதம் ஓங்கியிருக்கிறது" என்பது அல்ல! 2024 இல் எடுக்கப் பட்ட கணக்கெடுப்பின் படி, அமெரிக்காவில் மத நம்பிக்கையில்லாதோரின் வீதம் மெதுவாக அதிகரித்து வருகிறது. கீழே ஆதாரம்👇. Gallup.comHow Religious Are Americans?Most Americans have a religious preference -- predominantly a Christian one -- but less than half say religion is "very important" to them.
  18. சிறித்தம்பி! யாழ்ப்பாணீஸ் உந்த பதுக்கல்,அமுக்கல் விசயத்திலை விண்ணாதி விண்ணர்கள்.🤣 கோயில் படையல் புக்கை மோதகம் தொடக்கம் பாதி வாழைப்பழம் எல்லாத்தையும் கதவுக்கு பின்னாலை ஒளிச்சு வைக்கிறதில வலு கெட்டிக்காரங்கள்.40,50 வருசத்துக்கு முதலே மண்ணெண்ணை தகரத்தை கிடங்கு வெட்டி மண்ணுக்கை பதுக்கி வைச்ச பரம்பரை நம்ம பரம்பரை.😂 பதுக்கல் எண்டது யாழ்ப்பாணத்து மண்வாசனையோட சேர்ந்தே இருக்கும்.😎
  19. ‘அடப்பாவி’ நான் ஒரு நேர்சு என்றுதான் எண்ணினேன்.🧐 வயித்தைப்பற்றி எரியுது.😩
  20. இந்தியாவின் டி20 உலக்கோப்பை வெற்றி 2026 - சில எண்ணங்கள் By ஆர். அபிலாஷ் March 10, 2026 ஒருதலைப்பட்சமாக இப்போட்டி மாறியதற்கு ஆடுதளம் முக்கியமான காரணம். கடந்த 12 ஆண்டுகளாகவே அகமதாபாத் மைதானத்தின் ஆடுதளத்தில் டி20 இன்னிங்ஸின் ம்ட்டையாட்ட சராசரி 165-175தான். கறுப்பு மண்ணால் ஆன ஆடுதளம் சற்று மெத்தனமாக, பவுன்ஸ் குறைவாக இருக்கும். நியுசிலாந்து அதற்காகவே தயாராகி வந்தார்கள். அதனாலே அது ஒரு இறுதிப் போட்டிக்கு ஏற்றதாக இருக்காது என நினைத்தேன். இம்மாதிரி கோரிக்கைகள் ஆடுதளத் தயாரிப்பாளரிடமும் சென்றிருக்கும். ஆகையால் அவர் செம்மண்ணும், கறுப்பு மண்ணும் கலந்த ஒரு ஆடுதளத்தைத் தயாரித்தார். அதில் பந்துக்கு ஓரளவுக்கு வேகமும் பவுன்ஸும் இருந்தது. பந்து பழையதானதும் ரொம்பவே நின்று வந்தது. அதாவது ஆரம்பத்தில் செம்மண்ணும், கடைசிப் பகுதியில் கறுப்பு மண்ணும் தத்தம் வேலைகளைச் செய்தன. இந்தியாவின் ஆரம்பத்திலேயே குண்டு மழை பொழியும் ஆட்டபாணி இதற்குத் தோதாக இருந்தது. கறுப்பு மண் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தபோது நம் ஸ்கோர் 15வது ஓவரில் 203ஆக இருந்தது. இதுவே 120ஆக இருந்திருந்தால் நம்மால் 160-170தான் எடுக்க முடிந்திருக்கும். நியுசிலாந்து பெங்களூர் டிராபிக்கில் நகர்ந்து நகர்ந்து பைக் ஓட்டி சிக்னலை வெறித்துப் பார்த்து, பச்சை விளக்கு விழுந்ததும் பறக்க முயன்று ஒரளவு வேகத்தில் ஓட்டுவதைப் போல ஆடி வென்றிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. பெங்களூர் டிராப்பிக்கில் ஓடிப் பழகியவரை ரேஸ் டிராக்கில் இறக்கி விட்டதைப் போலாகிவிட்டது இப்போட்டி. நியுசிலாந்து குழம்பிப் போனது. அவர்களுடைய உலகக்க்கோப்பைத் தொடர் சாதனைகளுக்கு (அதாவது பாவமான அணியை வைத்துக் கொண்டு அரை இறுதி, இறுதி நிலைகளை எட்டுவது) அவர்களுடைய உளவியல் தயார்நிலையால்தான் என்று சில கட்டுரைகளைப் படித்தேன். அவர்களுடைய உள்ளூர் கிரிக்கெட் படிநிலையிலேயே அமைதியாக, நிதானமாக ஆடுவது, பரஸ்பரம் நட்புடன் பழகுவது வலியுறுத்தப்பட்டு, போட்டியால் விளையும் அழுத்தம் தவிர்க்கப்படுகிறது எனப் பேசியிருந்தார்கள். ஆனால் இந்த முறை மட்டும் நியுசிலாந்து அணி சற்று தன் இயல்பில் இருந்து பிறழ்ந்து கடுமையான நெருக்கடியை தன் மீது சுமத்திக் கொண்டது. இந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்க வேண்டி வரும் என அவர்களுடைய அணித்தலைவர் சாண்ட்னர் சொன்னபோதே இது ஆரம்பித்தது. அவர் அதற்குப் பதிலாக "நாங்கள் பலவீனமான அணி, இந்தியாவே பலமான அணி. நாங்கள் நன்றாகப் போட்டியிடுவோம். வெற்றி பெற்றேயாக வேண்டிய அழுத்தம் எங்கள் மீது இல்லை" எனச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தமக்குப் பழக்கமில்லாத மனநிலையை வரித்துக் கொண்டார்கள். ஆட்டத்திலும் கூட ஆப் ஸ்பின்னர் ஒருவரைக் (மெக்கோஞ்சி) குறைத்து வேகவீச்சாளரை எடுத்தது, ஹென்ரிக்கும், பிலிப்ஸுக்கும் தொடர்ச்சியாக ஓவர் கொடுக்காதது எனத் தவறுகள் செய்தார்கள். மெக்கோஞ்சியும் பிலிப்ஸும் மூன்று ஓவர்கள் சேர்ந்தும், ஹென்ரி இரண்டு ஓவர்களும் வீசியிருந்தால் இந்திய அணியின் வேகம் குறைந்திருக்கும். நேராக நல்ல நீளத்தில் வீசி பவுண்டரிகளை, க்ஸர்களைக் கட்டுப்பாட்டி இருந்தாலே அவர்கள் ஆட்டத்தில் இருந்திருக்க முடியும். பந்து பழசானதும் ஆட்டத்துக்குள் வந்திருக்க முடியும். நியுசிலாந்தின் தடுமாற்றத்தை இந்திய நன்கு பயன்படுத்திக் கொண்டது. இப்போட்டித் தொடரில் இந்தியா செய்த உருப்படியான விசயம் ஒரே டெம்பிளேட்டை கடந்த ஒராண்டாகப் பின்பற்றினார்கள், அதை அவர்கள் உலகக்கோப்பைத் தொடருக்காக முழுமையாக மாற்றவில்லை என்பது. சற்று சிரமமான ஆடுதளங்களில் கூட பவர் பிளேயில் முரட்டு அடி அடித்தார்கள். மத்திய ஓவர்களிலேயே நிதானமாக ரன்களைச் சேகரித்தார்கள். சாதகமான ஆடுதளங்களில் எல்லா ஓவரிலுமே அடித்தார்கள். அதாவது இந்தியாவுக்கு என்று ஒரு அடையாளம், சந்தைப்படுத்தத்தக்க USP, இருந்தது. இந்தியாவில் சில சிக்ஸர்கள் அடித்தாலே இது எதிரணிகளுக்கு நினைவு வந்து அச்சத்தை விளைவித்தது. இந்தியாவின் மட்டையாட்டம் நல்ல ஆட்டநிலையில் உள்ளபோது இந்த அடையாளமே பாதி போட்டியை வென்றளித்தது. இது இம்முறை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மே.இ தீவுகள் போன்ற அணிகளுக்கு இருக்கவில்லை. நியுசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளின் பாணி என்னவென்று அவ்வணிகளுக்கே சரியாகத் தெரியவில்லை. நியுசிலாந்தும் இங்கிலாந்தும் ஒவ்வொரு போட்டியிலும் தேவையான அளவுக்கு தம் ஆட்டத்தைத் தகவமைத்து வென்றனர். தென்னாப்பிரிக்கா தன் மட்டையாட்டத் திறனைக் கொண்டு ஆதிக்கம் செய்தது, பந்து வீச்சிலும் சரியான வியூகத்துடன் வந்தது. இதை ஒரு தென்னாப்பிரிக்க பாணியென்றாலும் இதை எல்லா போட்டிகளிலும் ஒரே போலப் பயன்படுத்தினார்களா? இல்லை. நியுசிலாந்துக்கு எதிராக அரை இறுதியில் பந்து மட்டைக்கு வரவில்லை என்றதும் அவர்களுடைய மத்திய வரிசை நிதானமாகவும் அதிரடியாகவும் அடித்து அவர்களைக் காப்பாற்றி இருக்க வேண்டும். பிரெவிஸ், மில்ல்லர், யான்ஸன் ஆகியோர் இதை ஒரு டெம்பிளேட்டாகக் கொண்டு வந்து எதிரணியை அச்சுறுத்தியிருக்க வேண்டும். இதைத் தம் ஊடகங்களின் வழி அவர்கள் வலியுறுத்தி இருக்க வேண்டும். அதையே நம்பி ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் முன்னெடுத்திருக்க வேண்டும். இந்த உலகக்கோப்பைத் தொடரின் சேதி இதுதான் என நினைக்கிறேன். கம்பீர்-சூர்யகுமாரின் முக்கியமான பங்களிப்பு இந்த ஆட்ட பாணியை முன்னிறுத்தி அதையே கடைசி வரை எல்லாரையும் (அதாவது எதிரணியையும் நம்மையும் சேர்த்து) நம்ப வைத்தது. இந்த டெம்பிளேட் சொதப்பியதும் அவர்கள் இஷான் கிஷனைக் கொண்டு வந்தார்கள். சாம்ஸனைக் கடைசி வரை ஆதரித்தார்கள். திலக்கை கடைசி ஐந்து ஓவர்கள் அடிக்க அனுப்பினார்கள். ஆனால் டெம்பிளேட் மட்டும் மாறவில்லை. இந்த உலகக்கோப்பையில் சொந்த ஊர் ரசிகர்கள் முன்னர் நடந்தது இந்தியாவுக்கு ஒரு 'பின்னடைவுதான்'. இதுவரை எந்த அணியும் அந்த அழுத்தத்தைக் கடந்து உலகக்கோப்பையை வென்றதில்லை. இந்தியா இதைச் சாதித்தது மெச்சத்தக்கது. சூர்யகுமார் யாதவ் இந்த அழுத்தத்தை ஒரு மகிழ்ச்சியான வாய்ப்பாகப் பார்க்கும்படி தன் அணியினரிடம் கேட்டதாக ஊடகங்களிடம் சொல்லி இருக்கிறார். நான் கவனித்தபோது அணியிடம் ஒருவித நெர்வஸான ஆற்றல் இருந்தது. தம் மீதான அழுத்தத்தை மிகை உணர்வு வெளிப்பாடாக, ஆவேசமாக அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இதற்கு ஆடுதளமும் எதிரணியின் பந்து வீச்சும் உதவிட அவர்கள் அந்த விசையைப் பற்றிக் கொண்டு ஆதிக்கம் செய்தார்கள். ஜிம்மி நிஷமின் ஓவரில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தபோதுதான் அவர்கள் கொஞ்சமாவது நின்று யோசித்தார்கள். இது ஒரு விளையாட்டு, இது உலகக்கோப்பை இறுதிப்போட்டி என நினைவுகொண்டார்கள். ஆனால் நீஷமின் கடைசி ஓவரில் துபே இருபது ரன்களுக்கு மேல் அடித்ததில் அந்த பின்னடைவும் காணாமல் போனது. நியுசிலாந்து ஒருவேளை கடைசி ஓவரை வென்றிருந்தால் இந்தியாவின் ஸ்கோர் 230க்குள் இருந்திருந்தால் அது அவர்கள் இன்னும் நேர்மறையாக ஆட ஊக்கம் கொடுத்திருக்கும். இலக்கை நெருங்கிக் கூட ஒருவேளை வந்திருப்பார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் எந்தக் கட்டத்திலும் நேர்மறையாக மட்டுமே சிந்திக்க வேண்டும் எனும் தீர்மானம் உதவியது. இதற்கும் சூர்யகுமார் யாதவையும் கம்பீரையும் பாராட்ட வேண்டும். ஆனால் இந்தியா இந்த வெற்றியுடன் திருப்தி அடையாமல் மட்டையாட்ட ஆல்ரவுண்டர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். எல்லா ஆட்டங்களிலும் 3-4 ஓவர் சுழல் பந்து வீசுவதற்கு ஒரு மட்டையாளர் வேண்டும். துபெ ஒன்று தன் மிதவேகப் பந்து வீச்சை மேம்படுத்த வேண்டும் அல்லது அவரை முழுநேர மட்டையாளராகக் கருதி மற்றொருவரை ஆல்ரவுண்டராக அணிக்குள் கொண்டு வர வேண்டும். ஆறாவது, ஏழாவது பந்து வீச்சாளர்கள் அவசியம். அவர்களால் ரன்களைக் கட்டுப்படுத்தவோ விக்கெட் எடுக்கவோ முடிய வேண்டும். அதே போல மட்டையாடும் திறன்பெற்ற ஒரு வேகவீச்சாளரைக் கொண்டு வர வேண்டும். அதாவது ஹர்ஷித் ரானாவுக்கு மாற்றாக. இம்முறை ரானா காயமாகி வெளியேறியதும் சிராஜ் வந்தாலும் சிராஜை நம்மால் சுலபத்தில் ஆட வைக்க முடியவில்லை. அவரை ஒரு மட்டையாளரின் இடத்தில் ஆட வைத்தால் மட்டையாட்டம் பலவீனமாகும். ஆனால் ரானா இருந்திருந்தால் சில போட்டிகளில் சுலபமாக ஆறாவது வீச்சாளரை ஆட வைக்க முடியும். அதேபோல வாஷிங்டன்னின் மட்டையாட்டத்தையும் பந்து வீச்சையும் மேம்படுத்த வேண்டும். அவருக்கு அந்த அறிவுறுத்தல் தெளிவாக வழங்கப்பட வேண்டும். பவர் பிளேயில் மட்டுமல்ல மத்திய ஓவர்களிலும் கட்டுப்படுத்த அவர் கற்க வேண்டும். வந்ததும் சிக்ஸர் அடிக்கப் பழக வேண்டும். இது அக்ஸர் காயம்பட்டால் மாற்று வீரரைப் பெற உதவும் (குல்தீப்பை அங்கு கொண்டு வர முடியாது என்பதால்). இந்திய அணி தன் களத்தடுப்பையும் மேம்படுத்த வேண்டும். திலக்கும் துபேயும் ஆடுவதைப் பார்க்கையில் ரிங்குவுக்கு அணியில் இடமில்லை என்பது தெளிவு. ரிங்கு ஒரு ஆல்ரவுண்டராக அணிக்குள் வர முயல வேண்டும். அவருடைய போட்டி துபேயுடன் தான். துபேயின் போட்டி திலக்குடன். ஹர்த்திக் பாண்டியா காயமுற்றால் அவரிடத்தில் யார் ஆடுவார்கள்? இது மற்றொரு தலைவலி. நிதீஷ்குமாரிடம் போகாமல் உள்ளூர் அணிகளில் தேட வேண்டும். தேடி வாய்ப்பளித்தால் புதிய ஆல்ரவுண்டர்கள் தாமே வருவார்கள். ஹர்த்திக்குக்கு போதிய ஓய்வு கொடுத்ததாகவும் இருக்கும். இந்த வெற்றியுடன், இந்தக் கோப்பையுடன் இந்திய டி 20 அணி ஒரு சூப்பர் பவராக மாறுகிறது. அயலுறவில் இந்திய அவமானப்பட்டிருக்கும் நிலையில் இந்த வெற்றி ஒரு நல்ல கவனத் திருப்பமாக இருக்கும். கம்பீர் மீதான பல விமர்சனங்களை இது மறக்கடிக்கும். 35 வயதாகிவிட்ட, கடந்த ஓராண்டாகவே ஆட்டநிலையில் தலைகுப்புற விழுந்து வரும் சூர்யகுமார் யாதவின் ஆட்டவாழ்வின் ஆயுளை இரண்டாண்டுகள் கூட்டும். சஞ்சு சாம்ஸனின் மீள்வருகையை, நாயகத் திண்மையை காலம் நினைவில் வைத்திருக்கும். அடித்தாடுவதை, அதிக மட்டையாளர்களை முக்கியத்துவத்துப்படுத்தும் இந்தியாவின் டி20 ஆட்டக் கொள்கையை இக்கோப்பை நியாயப்படுத்தும். இந்த ஆட்டப் பாணியின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் ஒரு துவக்க மட்டையாளரையோ 3வது, 5வது எண்ணில் ஆடுபவரையோ ஒரு சுழலரையோ மாற்றினாலோ கூட அணி இப்படியே அதிரடியாக ஆடி வெற்றி பெறும். அதேநேரம் ஹர்த்திக்கும் பும்ராவும் இல்லாவிடில் ஐந்து வீச்சாளர்களை வைத்துச் சமாளிப்பது சிரமமாகும். வரும் ஆண்டுகளில் முதல் 10 ஓவர்களில் 150 என்பது சராசரி ஸ்கோராகும். 300 இலக்கையும் விரட்டிச் சென்று வெல்வார்கள். இன்னும் பல நாடுகள் சர்வதேச டி20 ஆடுவார்கள். அப்போது இரண்டு மூன்று நாடுகள் ஆதிக்கம் செய்வது சாத்தியப்படாது என நினைக்கிறேன். கிரிக்கெட் யுடியூபைப் போல ஆகும். இன்றைய வெற்றியாளர் நாளை இருக்க மாட்டார். அதனால் இப்போதுள்ள இக்காலம் நிலைக்காது என்றாலும் கொண்டாடத்தக்கது. இந்திய அணிக்கு வாழ்த்துகள்! https://www.writerabilash.in/2026/03/20-2026_10.html
  21. தோல்வி தான் வெற்றியின் முதல்படி! இப்ப நான் முதல்படியில கால் வைச்சிட்டன் அண்ணை.
  22. இதில் உள்ள இராணுவ ஆய்வாளர் விடயம் அறிந்தவர். youtube click bait அல்ல.
  23. ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்! ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பான தற்காலிக விலக்கு அளிக்கும் வொஷிங்டனின் நடவடிக்கை குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும் அது வெளிநாட்டு அரசாங்கங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாது என்றும் அவர் கூறினார். இது குறித்து சமூக ஊடக தளமான எக்ஸில் பகிரப்பட்ட ஒரு திறந்த கடிதத்தில் மக்கள் நீதி மையத்தின் நிறுவனர் கமல்ஹாசன் அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்தியாவின் கொள்கை முடிவுகளில் சுதந்திரத்தை மதிக்குமாறு கேட்டுக் கொண்டார். மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியில் இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எரிசக்தியை தொடர்ந்து வாங்குவதற்கு 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து அவரது இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளன. https://athavannews.com/2026/1467571
  24. எத்தனை பேர் வாய் வழியாக சிரிச்சினம் ரெல் மீ..
  25. எலிகளை விரட்டி கோயிலை பத்திரமாக பாதுகாக்கும் சிவகணங்கள்(கிராபிக்ஸ் உதவியுடன் ) ஏகாம்பரநாதர் கோயில் - காஞ்சிபுரம்
  26. உலகிலேயே மனிதாபிமானம் மிக்க வல்லரசின் நடவடிக்கைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போன்ற ஒரு முக்கியமான மனிதாபிமான நடவடிக்கையொன்றின் விபரங்கள் கீழே. நம்புங்கள், வல்லரசு எனும் பொறுப்புணர்வுடனேயே இவை யாவும் நடத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போர் (1939–1945) முடிவில், குறிப்பாக 1944–1945 காலத்தில், சோவியத் Red Army ஐரோப்பாவில் முன்னேறியபோது சில இடங்களில் பெரிய அளவில் பாலியல் வன்முறைகள் நடந்ததாக பல வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் சரியான எண்ணிக்கையை நிரூபிக்க முடியவில்லை, ஏனெனில் பல சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் மதிப்பீடு வரலாற்றாசிரியர்கள் கூறும் முக்கியமான மதிப்பீடுகள்: ஜெர்மனி – சுமார் 14 லட்சம் முதல் 20 லட்சம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மதிப்பீடு. பெர்லின் நகரம் மட்டும் – சுமார் 1 லட்சம் பெண்கள். ஹங்கேரி (புடாபெஸ்ட்) – சுமார் 50,000 பெண்கள். ஆஸ்திரியா (வியன்னா) – சுமார் 70,000 – 1,10,000 பெண்கள். ரோமேனியா – சில ஆய்வுகள் 3 லட்சம் வரை சம்பவங்கள் நடந்ததாக கூறுகின்றன. செர்பியா / யூகோஸ்லாவியா – ஆயிரக்கணக்கில் இருந்து பத்தாயிரக்கணக்கில் சம்பவங்கள். ஐரோப்பா முழுவதும் மொத்தமாக வரலாற்று ஆய்வுகள் கூறும் மதிப்பீடு: சுமார் 20 லட்சம் முதல் 30 லட்சம் பெண்கள் சோவியத் படையினரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கலாம். கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இது மேலும் உறுதியாக தெரியாதது. இருப்பினும் சில ஆய்வுகள் கூறுவது: ஜெர்மனியில் மட்டும் சுமார் 2,40,000 பெண்கள் பலாத்காரம், காயம், நோய் அல்லது தற்கொலை காரணமாக இறந்திருக்கலாம். பெர்லின் நகரத்தில் சுமார் 10,000 பெண்கள் பலாத்காரம் தொடர்பான காரணங்களால் இறந்ததாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இந்த மரணங்களில் அடங்குவது பலாத்காரத்தின் போது கொலை செய்யப்பட்டவர்கள் கடுமையான காயங்களால் இறந்தவர்கள் மனவேதனையால் தற்கொலை செய்தவர்கள் நோய்கள் அல்லது சிகிச்சையில்லாமை காரணமாக இறந்தவர்கள்
  27. உலகிலேயே அதிகம் மனிதாபிமானத்தைக் காக்கும் வல்லலரசு என்றவுடன் எனது மனதில் முதலாவதாக உதித்த நாடொன்றின் மனிதாபிமான நடவடிக்கைகளின் குறிப்பு. 1945க்கு பிறகு ரஷ்யா / சோவியத் நடவடிக்கைகளால் உயிரிழந்த பொதுமக்கள் (நாடு வாரியாக) நாடு சம்பவம் / போர் பொதுமக்கள் உயிரிழப்பு (மதிப்பீடு) Afghanistan Soviet–Afghan War (1979–1989) 562,000 – 2,000,000 பொதுமக்கள் Hungary Hungarian Revolution of 1956 சுமார் 2,500 பேர் Czechoslovakia Prague Spring invasion (1968) சுமார் 137 பொதுமக்கள் Lithuania Soviet suppression (1991 Vilnius events) சுமார் 14 பொதுமக்கள் Latvia Soviet crackdown (1991 Riga events) 5 பொதுமக்கள் Germany East German uprising suppression 300,000 +பேர் 240,000 பெண்கள் பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டனர் Poland Soviet-backed repression (1945–1950s) ஆயிரக்கணக்கான கைது, நூற்றுக்கணக்கான மரணங்கள் China Sino-Soviet border conflict (1969) நூற்றுக்கணக்கானோர் Afghanistan தனிப்பட்ட படுகொலைகள் (உதா: Laghman, Kunduz) சில நூறு முதல் ஆயிரம் வரை சோவியத் ஒன்றியத்துக்குள் (Russia உட்பட) பொதுமக்கள் மரணங்கள் இடம் சம்பவம் மதிப்பீடு Soviet Union (உள்ளக அடக்குமுறை) Gulag, அரசியல் அடக்குமுறை மில்லியன் கணக்கில் (பல்வேறு ஆய்வுகள்) Chechnya First Chechen War (1994–1996) 30,000–50,000 பொதுமக்கள் Chechnya Second Chechen War (1999–2009) சுமார் 30,000 பொதுமக்கள் முக்கிய நாடுகள் – மொத்தம் (rough estimate) நாடு பொதுமக்கள் உயிரிழப்பு Afghanistan 0.6 – 2 மில்லியன் Hungary ~2,500 Czechoslovakia ~137 East Germany 300,000 Lithuania 14 Latvia 5 Chechnya (Russia) ~60,000–80,000
  28. வத்திக்கானுடன் முரண்பட்டு பாருங்கள் சுயரூபம் தெரியும்.😎 கீழே இருக்கும் தரவுகளை பார்க்கலாம். எதற்காக அழிப்பதை தொழிலாக கொண்டுள்ளார்கள் என்பது புரியும்.அங்கே ஆன்மீகமும் இல்லை அண்டங்காககளும் இல்லை. மாறாக தமது பாதையில் குறுக்கே வருபவர்களை அழிப்பதுதான் அவர்கள் நோக்கம். அது அவர்களுக்கு சரியாக தெரிகின்றது.வல்லமையுள்ளவர்கள் எது செய்தாலும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டியது வல்லமை இல்லாதவர்களின் உலக நிலை. இங்கே ஆன்மீகத்தை கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றார்கள்.அவ்வளவுதான். மற்றும் படி அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை.ஜேர்மனியில் கூட ஆன்மீகத்தை அரசியலிருந்து அகற்ற முடியாது. வல்லரசு என்பது அழிப்பதில் முன்னிலை வகிப்பதல்ல. மாறாக மனிதாபிமானங்களும் வல்லரசுகளுக்கு சொந்தமானது. மற்றும் படி...... ரஷ்யாவின் மகிமை ஐரோப்பிய தொழிற்சாலைகளுக்கும் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் நட்பு பேணியிருந்தால் இன்றும் அதாவது ஈரான் யுத்தத்தின் போதும் அதன் பொருளாதாரம் வலிமையுடன் இருந்திருக்கும்.
  29. போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் க்கு நன்றியும் வாழ்த்துகளும்.
  30. நான் நினைக்கிறேன் பாணில், பணிசில் சின்ன வண்டு (கோதுமை மாவில் இருக்கும் வண்டு), பீடித் துண்டு போன்றவற்றை கண்டு அவற்றை அலாக்கா தூக்கி எறிந்து விட்டு மிச்ச பாணை சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நாங்கள் தான் போல...
  31. அவுஸ்ரேலியாவும் இலங்கையும் ஆப்கானிஸ்தானும் தான் என்னை ஏமாற்றியது (குறிப்பு; இலங்கையைத் தெரிவுசெய்தது விருப்பத்தின் காரணமாக மட்டுமே)
  32. வெற்றிபெற்றநியூபலன்சுக்கும் பங்குபற்றிய அனைவருக்கும் போட்டியை திறம்படநடத்திய கிருபன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.நான் கோசானின் வீட்டை ஆட்டையைப்போடுவன் எண்டு எனக்கு எப்பவோ தெரியும். @goshan_che
  33. காதல் என்பது எதுவரை ....... ஜெமினி & சந்திரபாபு ......படம் : பாதகாணிக்கை .......! 😂
  34. நான் ஏற்கனவே என்னை அறிமுகப்படுத்தியிருந்தேன் நான் ஜெர்மன் பிரெமனிலிருந்து நியூபலன்ஸ் .நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை, முதல் இடம் பிடித்ததற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
  35. நியூபலன்ஸ் ம‌ற்றும் கந்தப்பு அண்ணா இருவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்😍🙏..........................
  36. போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் க்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்கள். போட்டியில் பங்கு கொண்டு போட்டியை கலகலப்பாக வைத்திருந்த உறவுகளுக்கு பாராட்டுக்கள். @Newbalance @கந்தப்பு @நியாயம் வாழ்த்துக்கள்.
  37. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இறுதி நிலைகள்: T20 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெற்ற அணிகளையும், சாதனை படைக்கும் பல அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இல் இறுதி நேரத்தில் பதில்களைப் பதிந்ததில் முந்தியதின் அடிப்படையில் வெற்றியைத் தட்டிச் செல்லும் அதிகம் உரையாடாத @Newbalance க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! வெற்றியைத் தட்டிச் செல்லும் @Newbalance க்கு துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டடத்தில் இருந்து பெற்ற தங்க நாணயத்தின் நிழல்பிரதி தரப்படுகின்றது! இரண்டாவது இடத்தைப் பிடித்த @கந்தப்பு வுக்கும், மூன்றாம் இடத்தில் உள்ள @நியாயம் க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களில் பலநாட்கள் நின்ற @alvayan , @கந்தப்பு க்கும் வாழ்த்துக்கள். அத்துடன் பல நாட்கள் சுமைதாங்கியாக இறுதி நிலையில் நிற்கும் @வாதவூரான் க்கும் நன்றி பல! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும், குறிப்பாக @செம்பாட்டான் @வீரப் பையன்26, @goshan_che @ரசோதரன், @vasee , @suvy ஐயா, @ஈழப்பிரியன் ஐயா போன்றோருக்கு நன்றி பல. விடுமுறையில் மத்திய கிழக்கில் நின்றபோது புள்ளிகளைக் கணிக்கவும், நிலைகளை சரியாக வரிசைப்படுத்தவும் உதவிய @செம்பாட்டான் க்கு பிரத்தியேகமான நன்றிகள்!
  38. கிந்தியா முதலில் பட்டிங்க்காம். நாக்கில எச்சிலை தடவை நாலைஞ்சு தேசிக்காயை உருட்டிவிடுங்கோ பொல்லுகள் பறக்கவேணும் என்று. ஒரு 150 இற்குள் கிந்தியாவை அமத்தினால் சிறப்பு.
  39. தாம் நாகரீகமானவர்கள் என கூறும் மேற்கத்தையவர்கள் தான் நாடு விட்டு பிற நாடுகளுக்கு சென்று போர் செய்கின்றார்கள். கொரோனா பரவலுடன் எல்லா நாடுகளும் மக்களும் வலுவிழந்து விட்டார்கள். போதாக்குறைக்கு உக்ரேன் போரும் வர அனைத்து மனித வாழ்க்கையும் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. கொடுமைக்கு மேல் கொடுமையாக தற்போது ஈரான் மீதான போர். அதை விட கொடுமை என்னவென்றால் ஈரான் போர் நடக்க ஆரம்பிக்க ஜேர்மனியில் கையிருப்பில் இருக்கும் எரிபொருட்களின் விலையையே கூட்டி விட்டார்கள்.😋 இனிவரும் காலங்களில் என்னென்ன கொடுமைகளை சந்திக்கப்போகின்றமோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். போர்களும் அதற்க்குரிய காரணங்களும் மூட நம்பிக்கைகைகளை விட கொடியது.
  40. அட... நம்ம விஜய் என நினைத்து வந்தால், இது வேறை விஜய்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.