Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்13Points89361Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்11Points20141Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்8Points39582Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்8Points20564Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/21/26 in all areas
-
அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
4 pointsஅவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை கவிஞர் வைரமுத்து ஒரு கவிஞர் இல்லை வெறும் பாடலாசிரியர், அவருக்கு ஞானபீட விருது கொடுத்தது தவறு என ஆசான் ஜெயமோகனும், இன்னும் பல படைப்பாளிகளும் முழங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக சில படைப்பாளிகளும், இலக்கியம் என்றால் என்னவென்று தெரிந்த அல்லது தெரியவே தெரியாத கற்றுக்குட்டிகளும் கம்புசுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்! கவிஞர் வைரமுத்து காம உணர்வுகளை அழகியலோடு, சில நேரங்களில் அதையும் தாண்டி பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். உதாரணம் ஒன்று: ஜீன்ஸ் படத்தில் வரும் அன்பே அன்பே பாடலில்.. பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி ஆசான் ஜெயமோகனும் தனது படைப்புக்களில் பெண்களை, காம உணர்வுகளை, கலவியை சமரசம் எதுவுமின்றி எழுதி வாசிப்பவர்களை பிரமிக்கவைத்துள்ளார்! ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடர்களைப் பல வருடங்களாகப் படித்து வருகின்றேன் (26 இல் இன்னும் நான்கு நாவல்கள் படிக்க உள்ளன!). படிக்கும்போது குறிப்புக்கள் எடுப்பது வழக்கம். 😀 அவற்றில் காமரசம் ததும்பும் வரிகளை ஒன்றாக்கி AI மூலம் பாடல் ஒன்றை உருவாக்க கடந்த சில நாட்களாக முயற்சித்தேன்😍. தமிழில் லகர, ளகர, ழகர, ந,ன, ண போன்ற இடையினம், மெல்லினங்களில் AI தடுமாறியதால் எதிர்பார்த்த மாதிரி பாடலைக் கொண்டுவருவது இலகுவாக இருக்கவில்லை. ஆனால் பொதுவான தமிழ்ச் சொற்களைக் கொண்டு பாடல் உருவாக்குவது இலகு என்று தெரிந்தது. AI எப்படி வேலை செய்யும் என்பது AI நிபுணர்களுக்கே தெரியாது என்பதால் எப்படியான இசை வாத்தியங்களை அது தேர்வு செய்யும், எப்படிப் பாடல் அமைக்கும் என்பதை அறியமுடியாது. கிடைப்பதில் விருப்பமானதுடன் திருப்தியடையவேண்டியதுதான். அதிகம் பொருத்தமான பாடல்களை உருவாக்க வேண்டும் என்றால் இலவசமான limited model களை விட்டுவிட்டு கட்டணம் செலுத்தி தரமான model களை, AI agent களைப் பாவிக்கலாம் என்று நினைக்கின்றேன். எனக்கு அப்படி எல்லாம் கட்டணம் செலுத்த மனமில்லை! சரி எப்படிப் பாடலை உருவாக்கினேன் என்று கீழே விளங்கப்படுத்துகின்றேன். முதலில் AI tools களைப் பார்ப்போம். பாடல் வரிகளை உருவாக்க பொருத்தமான AI tools: Claude AI (sonnet 4.6 extended) - இலவசம். கட்டணம் செலுத்தி இன்னும் நல்ல tools ஐ பாவிக்கலாம் Gemini AI Pro: இலவசம் ஆனால் ஒரு நாளில் பல தடவைகள் பாவிக்கமுடியாது. கட்டண version உள்ளன. பாடல் உருவாக்க பொருத்தமான AI Tools: Suno AI: பாடல்களை இலகுவாக உருவாக்கலாம். வேறு சில AI tools உள்ளன ஆனால் நேரம் விரயமானதுதான் மிச்சம். படங்களை உருவாக்க: Gemini AI pro, Copilot படங்களில் இருந்து காணொளிகளை உருவாக்க: Grok, Meta AI, Runway போன்றவற்றை 5 செக்கன் காணொளிகளை உருவாக்கப் பாவிக்கலாம். பாடல்வரிகளை உருவாக்குதல்: நான் Claude, Gemini Pro இரண்டையும் பாவித்தாலும் Gemini Pro தான் பிடித்திருந்தது. எனது கேள்விக்குப் பின்னர் வெண்முரசு நாவல்களில் இருந்து எடுத்த குறிப்புக்களை அப்படியே ஒட்டிவிட்டேன்! கொடுத்த Prompt: Suno AI இல் ஒரு பாடல் கீழே உள்ள குறிப்புக்களைக் கொண்டு உருவாக்கவேண்டும். அழகிய இளம்பெண்ணைக் காணும் இளைஞன் ஒருவனின் ததும்பும் காம உணர்வுகளை வெளிப்படுத்தும் நான்கு நிமிடங்கள் வரக்கூடிய பாடலாக உருவாக்க உதவி தேவை. Suno AI இல் உணர்வு பூர்வமாகவும், சரியான தமிழ் உச்சரிப்புடனும் பாடலை உருவாக்க பொருத்தமான பாடல் வரிகளையும், தேவையான tags களையும், பாடலுக்குப் பொருத்தமான Styles களையும் தரமுடியுமா? அவள் இடையிலிருந்து நீலப்பட்டாடை முழுமையாக நழுவிச்சரிய, வெண்பளிங்குயானையின் மத்தக முழையென விரிந்த இடையும் மலர்தார் தொடைகள் நடுவே மான்குளம்பென அல்குலுமாக அவள் நின்றாள். மழைக்கால மலைகள் அருவிகளை அணிந்திருப்பதுபோல நகைகள் மட்டுமே அணிந்திருந்தாள். மூச்சில் முலைகள் மெல்ல ஏறியிறங்கின. முலைக்கண்களின் கருவட்டத்தில் மயிர்ப்புள்ளிகள் சிலிர்த்திருந்தன. விலாவெலும்புகள் வெண்தோலுக்குள் பாலைநில மணலலைகள் போல தெரிந்தன. அவள் விழிகள் அவனை நோக்கி ஒருசொல்லும் இல்லாமல் வெறுமனே விரிந்திருந்தன. நீரைப்பிளந்து எழுந்து கரைநோக்கிச் சென்ற ஒரு செந்நிறப்பேரழகியைக் கண்டான். அவள் உடல் தழலாக இருந்தது. கூந்தல் அதன் புகையென நெளிந்தது. செந்தாமரை இதழிலென நீர்த்துளிகள் ஆடையற்ற அவள் உடலில் ஒளியுடன் உருண்டு வழிந்தன. மலர் சுமந்த பனித்துளிகள் போல முலைகள் ததும்பின. இரையை இறுக்கும் மலைப்பாம்பு போல அசைந்தது இடை. நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத்தசைகள். செம்பொற்தாலத்தில் ஏந்திய அகல்விளக்கின் சுடரென அல்குலின் செந்நிற மென்மயிர். வைரத்தால் செதுக்கப்பட்ட பெண்ணுடல் Gemini AI தந்த பாடல்வரிகள். சில இடங்களில் பொருத்தமான சொற்களை நான் மாற்றினேன்.. கீழே உள்ளது பிந்திய வரைபு.. [Intro] [Seductive Flute with Deep Bass] [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Verse 1] நீலப் பட்டாடை இடையில் மெல்ல நழுவ... வெண்யானை மத்தகம் என விரிந்தது அவள் இடை...! மலர்தார் தொடைகள் நடுவே மான் குளம்பு சிமிட்டக் கண்டேன்...! என் மூச்சே உறைந்தது ஒரு கணம்..! [Build Up] என் நெஞ்சினிலே... புரவிக் குளம்பு ஓசை! [Pre-Chorus] செந்தாமரை இதழில் பனித் துளிகள் போலே... ஆடை இல்லா மேனியில் நீர்த் தாரை உருள... தழல் உடலோடு அவள் என்னை நோக்க... பனியாகக் கரைந்து போனேன்... அந்த அனலின் சூட்டிலே...! [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Verse 2] மூச்சில் மார்புகள் மெல்ல மெல்ல ஏறி இறங்க… மலர் சுமந்த பனித்துளிகள் போல அவை ததும்ப…! மலர்முலை கண்களில் மென் மயிர்கள் சிலிர்க்க….! வெண்மேனி விலாவினிலே பாலை மணல் அலை ஆகுதே…! [Verse 3] இரையினை இறுக்கும் பாம்பென நெளிந்தது இடை….! நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத் தசைகள்…! செம்பொன் தட்டில் தவழும் விளக்கின் சுடரென… செந்நிற மென் மயிர் தூவல் என் தேகத்தை அனலாய் சுடுதே….! [Bridge] அவள் விழிகள் என்னை நோக்கி அகல விரிந்தன…! என் ஆண்மை சிறகு விரித்தது…! காம நெருப்பின் கலசமே…! என் தாகம் தீர்க்கும் நதியே…! உன் தீண்டலில் உயிர்த்தெழ ஏங்கித் துடிக்கின்றேனே...! [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Outro] தழல் உடலே...! ஆஹா...! பனித்துளியே...! ம்ம்ம்...! வைரம் தகிக்கும் கனலே...! என் உயிரே...! உன் விரிந்த விழிகளில்.. நான் வீழ்ந்தேனே...! [Fade out: Sensuous flute and echoing vocals] Styles: Passionate Male Tenor Vocal, Sensual Tamil Cinematic Pop, Seductive Groove, Deep Bass, Traditional Indian Percussion With Modern Synth, Carnatic-Inspired Strings, Tabla Rhythm, Flute Melody, Romantic, Emotional Intense Erotic Vibe, A.R. Rahman Style Fusion, Young Expressive Voice, Accurate Tamil Diction. Pronounce Tamil Words Clearly Without Mistakes, Native Tamil Phonetics. No Accidental Hindi/English Accent In Tamil Lyrics பாடலை உருவாக்குதல்: Suno AI இல் Simple மற்றும் Custom என்று இரு தெரிவுகள் உள்ளன. Custom தெரிவுக்குள் உள்ள Lyrics பெட்டிக்குள் Gemini Pro தந்த பாடல்வரிகளை (tags உடன்) ஒட்டவேண்டும். சரியான தமிழ் உச்சரிப்பு வர நான் சில இடங்களில்: - (hyphen) - syllables ஐ சரியாகப் பிரிக்க , காற்புள்ளி - இடைவெளி விட ! ஆச்சரியக்குறி - நிறுத்த … (ellipses) - நீட்டிப் பாட பாவித்திருந்தேன். இவற்றை பாடல்களின் Suno இணைப்புக்களில் பார்க்கலாம். Styles பெட்டிக்குள் Gemini AI தந்த styles களை அப்படியே ஒட்டவேண்டும். பின்னர் Advanced Options இல்: Style Influence: 100 80 க்கு மேல் கொடுத்தால் கேட்ட style களுக்கு கிட்டவரும் Weirdness: 0 10க்கு கீழ் கொடுத்தால் AI வித்தியாசமாக முயற்சி செய்வதைக் குறைக்கும் எனத் தெரிவு செய்தேன். ஆனால் இவற்றை இப்படியான extreme ஆக தெரிவு செய்வதும் நல்லதல்ல. பாடலுக்கு ஒரு தலைப்பையும் Titles இல் கொடுக்கலாம். இரண்டு பாடல்களை உருவாக்கினேன். அவற்றை தரவிறக்கி Files இல் சேமித்த பின்னர், Copilot AI ஐப் பாவித்து ஒரு பொருத்தமான படத்தை உருவாக்கினேன். படத்திற்கான prompt ஐ ஆசானின் வரிகளை Claude AI இல் கொடுத்துக் கேட்டிருந்தேன்😁 Prompt: Create an image of A Tamil girl, a red enchantress rising from the water. Her body like fire, her hair coiling like smoke, a fiery beauty burning with love. A blue silk saree gently slipping from her waist, revealing her hips like a white elephant’s forehead. Water droplets like dewdrops on red lotus petals, streams of water rolling on her body. Her fiery body gazes at me, and I melt like snow in the heat of that fire. Her reddish black hair floats in the breeze கிடைத்த படத்தை Meta AI, Runaway AI ஐப் பாவித்து 5 செக்கன்கள் வீடியோ உருவாக்கி, அதையே loop ஆக ஓடவிட்டு iMovies இல் காணொளிகளைக் தயாரித்தேன். கீழே உள்ள பாடல்களில் எது உங்களுக்குப் பிடித்துள்ளது என்பதைச் சொல்லுங்கள்😊 ஒன்று 4 நிமிடங்கள் 19 செக்கன்கள் Suno: https://suno.com/s/PsdURePRy1Ahzj8b இரண்டு: 6 நிமிடன்கள் 28 செக்கன்கள் Suno: https://suno.com/s/GohzmvqVFQbeBnvc4 points
-
மறவோம்
2 pointsஇது 'அகழ்' இணைய இதழில் செல்வேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. மறவோம்: செல்வேந்திரன் செல்வேந்திரன் திரு.வி.க முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள், திரு.வி. கல்யாணசுந்தரம் அவர்களை அவருடைய இறுதிக்காலத்தில் சந்திப்பதற்காகச் செல்கிறார். அப்போது திரு.வி.க மிகச்சிறிய இல்லமொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரை கவனித்துக்கொள்வதற்கு ஆட்கள் யாருமில்லை. திரு.வி.க-வை தன்னுடைய ஆசிரியராகக் கருதியதால், டாக்டர் மு. வரதராசனார் தினந்தோறும் அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருக்கிறார். ஒருநாள் கி.ஆ.பெ. அவரைப் பார்ப்பதற்காகச் செல்லும்போது, கட்டிலில் இருந்து கீழே விழுந்து, கூனிக் குறுகிச் சுருங்கிய நிலையில் கிடக்கிறார் திரு.வி.க. இவர் எங்கே இந்த வீட்டில் அனாதையாக இறந்து போய்விடுவாரோ என்று அஞ்சிய அந்த வீட்டின் உரிமையாளர், ‘நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும்’ என்று திரு.வி.க.விற்கு வழக்கறிஞர் மூலம் அறிக்கை கொடுத்து அவரை துன்புறுத்தத் துவங்குகிறார். இதைப் பார்த்து கி.ஆ.பெ மனம் கொந்தளித்து, “வாழ்நாளெல்லாம் தமிழைத் தூக்கிச் சுமந்த இந்தத் தமிழ் அறிஞருக்கு ஒதுங்குவதற்கு ஒரு கூரை கிடையாதா? இவருக்கு நாம் நிதி திரட்ட வேண்டும்” என்று தமிழ்நாட்டினுடைய முக்கியமான புரவலர்களுக்கு, அவரும் மு.வ.வும் இணைந்து கடிதங்கள் எழுதுகிறார்கள். அதற்கு, உடனடியாக மதுரையில் உள்ள தொழிலதிபரான கருமுத்து தியாகராஜன் செட்டியாரிடமிருந்து ஒரு பதில் கடிதம் வருகிறது. அந்தக் கடிதத்துடன் மற்றொரு உறையும் உள்ளது. அந்த உறையைத் திறந்தால், ஒரு பெரிய தொகைக்குக் கருமுத்து தியாகராஜன் அவர்கள், திரு.வி.க அவர்களுக்கு அனுப்பிய காசோலை. அனுப்பிய சில நாட்களிலேயே மீண்டும் தியாகராஜன் அவர்களுக்கு ஒரு கடிதம் வருகிறது, கூடவே ஒரு குறிப்பும் உள்ளது. அதில், “நான் வாழ்நாளெல்லாம் கௌரவமாக வாழ்ந்திருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் நான் எதைச் செய்யவில்லையோ, அந்த ஒரு காரியத்தை என்னுடைய மரணத் தருவாயில் செய்யும்படி என்னைப் பணித்துவிடாதீர்கள்” என்கின்ற குறிப்போடு, தியாகராஜன் செட்டியார் அனுப்பிய அந்தக் காசோலையை அவருக்கே திரு.வி.க. திருப்பி அனுப்பிவிட்டார். இது ஒரு நிகழ்வு. மற்றொன்று, பாரதியாருடைய நண்பரும், அதே எட்டயபுரத்தில் பிறந்தவருமான நாவலர் சோமசுந்தர பாரதியார், கந்தசாமிக் கவிராயரைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்குச் செல்கிறார். அவர் வீட்டுத் திண்ணையில், அழுக்கடைந்த வேட்டி ஒன்றை உடுத்திக்கொண்டு, பரட்டைத் தலையோடு, சட்டை இல்லாமல் பார்ப்பதற்குப் பிச்சைக்காரரைப் போல ஒருவர் படுத்திருக்கிறார். சோமசுந்தர பாரதியாரும் கந்தசாமிக் கவிராயரும் தொல்காப்பியத்தின் மிகச் சிக்கலான ஒரு பகுதியைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, திண்ணையில் பிச்சைக்காரரைப் போல படுத்திருந்த அந்த நபர் எழுந்து அமர்ந்து, தர்க்க ரீதியாக ஒரு விளக்கத்தைச் சொல்கிறார். உயர்தரமானதொரு ஆய்வாளர் மட்டுமே சொல்லக்கூடிய விளக்கம் அது. அதைக் கேட்கும்போது அதிர்ந்துபோன நாவலர், “யார் இவர்?” என்று கேட்கிறார். இவர்தாம் தொல்காப்பியப் பேரறிஞர் என்றும், இலக்கணக் கடல் என்றும் போற்றப்படக்கூடிய ‘அரசன் சண்முகனார்’ என்று அறிமுகப்படுத்துகிறார்கள். அரசன் சண்முகனாரை ஒருமுறை தூத்துக்குடி சைவ சித்தாந்தக் கழகம் சிறப்புரையாற்றுவதற்காக அழைக்கிறது. அவரைத் தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்று அழைத்து வருவதற்காக விழா ஏற்பாட்டாளர்கள் செல்கிறார்கள். அவர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை. “யாரோ ஒரு பிச்சைக்காரன் இறங்கிப் போகிறான்” என்று அவரைப் பார்க்கிறார்கள். தன்னுடைய வாழ்நாளில், தமிழ் அறிஞர்களால் மிக மிக இழிவு செய்யப்பட்ட, மிக மிக அவமானப்படுத்தப்பட்ட ஒரு தமிழ் அறிஞர் இந்த மண்ணிலே வாழ்ந்திருந்தார் என்றால், அவர் சோழவந்தானில் வாழ்ந்த அரசன் சண்முகனார்தான். அப்படி அவர் என்ன குற்றம் செய்தார்? அவருடைய தொல்காப்பியப் பாயிர விருத்தி, திருக்குறள் ஆராய்ச்சி போன்ற நூல்களை எல்லாம் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் அன்று வாழ்ந்த புலவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அவர் செய்த குற்றம் என்னவென்றால், நமக்கு முந்தைய உரையாசிரியர்கள் செய்த உரைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், தன்னுடைய சொந்த அறிவை, தன்னுடைய சொந்த வாசிப்பை, தன்னுடைய சொந்த ஆய்வுகளின் வழியாக அதற்கான மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தார் என்கிற ஒரே காரணத்துக்காக, தமிழ்நாட்டின் புலவர் கூட்டம் அவரை வேட்டையாடியது. பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு 46 வயதில் அரசன் சண்முகனார் இறந்து போனார். சி.வை. தாமோதரம் பிள்ளையைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழ்ப் பதிப்புத்துறையினுடைய தந்தை என்று அறியப்படக்கூடியவர். கலித்தொகையிலிருந்து, சூளாமணியிலிருந்து, நீதிநெறி விளக்கத்திலிருந்து, வீரசோழியம் வரை எண்ணற்ற நூல்களைப் பதிப்பித்தவர். உ.வே.சா.விற்குப் பல விதங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவருக்குப் பத்து புதல்வர்கள். எட்டுப் பிள்ளைகள் இறந்துவிட்டார்கள். எஞ்சி இருந்த இரண்டு பிள்ளைகளில் ஒரு மகன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு ஒரே மகள்தான். சி.வை தாமோதரம் அவர்கள் தன்னுடைய மரணப் படுக்கையில், “என்னுடைய சொந்த சேகரிப்பிலுள்ள புத்தகங்களையும், என்னுடைய தனிப்பட்ட சேகரிப்புகளையும் விற்று என் மகளுடைய கல்விக்கு உதவுங்கள்” என்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து போனார். சி.வை தாமோதரப்பிள்ளை இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் கலைக்களஞ்சியம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அப்படி ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தபோதே, ஒவ்வொரு புத்தகமும் 750 பக்கங்கள் என பத்து புத்தகங்களைக் கொண்டுவர வேண்டும் என்று அவிநாசிலிங்கம் செட்டியார் ஒரு குழுவை அமைக்கிறார். அந்தக் குழுவிற்குத் தலைமை ஏற்றவர் ‘பெரியசாமித் தூரன்’. அந்த கலைக்களஞ்சியத்திற்காகப் பங்களிப்பாற்றிய ஒவ்வொரு அறிஞருக்குமே அரைச் சம்பளம் என்று நிர்ணயிக்கப்படுகிறது. உலக சாதனை என்று கருதத்தக்க அளவுக்கு அந்த கலைக்களஞ்சியத்தைத் தனி மனிதராகப் பெரியசாமித் தூரன் உருவாக்குகிறார். தன்னுடைய சம்பளத்தை கொஞ்சம் ஏற்றிக் கேட்பதற்குக்கூட முடியவில்லையே என்று, அன்றைக்குத் தமிழில் வந்து கொண்டிருந்த ஒவ்வொரு ஆய்விதழ்களிலும் அவர் வருமானத்துக்காகக் கட்டுரைகள் எழுதுகிறார். அவருடைய நாட்குறிப்பில், “சற்று கூடுதல் சம்பளம் கொடுத்தால் இன்னும் நன்றாக வேலை பார்த்திருப்போமே” என்கிற ஆதங்கம் காணக்கிடைக்கிறது. பெரும்பாலான துறை சார்ந்த அறிஞர்கள் நம்முடைய தமிழ் கலைக்களஞ்சியத்துக்கு எழுதிய கட்டுரைகளுக்கு எந்தச் சன்மானமும் பெற்றுக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட பெரியசாமித் தூரனுக்கு, அவருடைய குடும்பத்தார் சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு விழா ஏற்பாடு செய்தார்கள். குறைந்தபட்சம் ஐநூறு பேர் வருவார்கள் என்று இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிகழ்வுக்கு வந்தவர்கள் வெறும் முப்பத்திரண்டு பேர். மீதமான அந்த உணவை என்ன செய்வது என்று தெரியாமல் தூரன் குடும்பத்தார் திகைத்து நின்றார்கள். அவரை இந்தப் பொதுச்சமூகத்தில் மீண்டும் நினைவுறுத்தும் பொருட்டு, எழுத்தாளர் ஜெயமோகனும் அவருடைய நண்பர்களும் ‘தமிழ் விக்கி தூரன் விருது’ என்றொரு விருதைத் தோற்றுவித்து, பண்பாட்டு ஆய்வுகளில் முன்னோடியாகத் திகழக்கூடிய ஆய்வாளர்களுக்கு ஈரோட்டில் வைத்து விருது வழங்குகிறார்கள். பெரியசாமித் தூரன் இதுவரை ஐந்து ஆய்வாளர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்குகிற நிகழ்வுகளுக்கு நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று வற்புறுத்தி, வலியுறுத்தி அழைத்தும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஒரு பத்திரிக்கையாளர் கூட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில்லை. ஒரு பத்திரிக்கைகூட தூரன் விருதைப் பற்றியோ, அந்த விருது பெறும் ஆய்வாளர்களைப் பற்றியோ ஒரு வரிகூட எழுதியதில்லை. இன்னொரு ஆளுமையை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் ஜி.யு. போப்; இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் இந்திய மொழிகளுக்கான, அதிலும் குறிப்பாகத் தமிழ், தெலுங்குக்கான துறைத் தலைவராக இருக்கும்போது ஜி.யு. போப் அவர்களுக்கும், உ.வே. சாமிநாத ஐயர் அவர்களுக்கும் இடையே நட்பு உருவாகிறது. இத்தனைக்கும் உ.வே. சாமிநாத ஐயரை விட 35 ஆண்டுகள் வயதில் மூத்தவர் ஜி.யு. போப். உ.வே.சா எழுதிய கடிதங்களும், அவருக்கு வந்த கடிதங்களும் தொகுக்கப்பட்டுத் தனி நூலாக வந்துள்ளது. தமிழ் இணைய நூலகத்தில் (Tamil Digital Library) இலவசமாகவே அதை நீங்கள் வாசிக்கலாம். அதில் ஜி.யு. போப் அவர்கள் உ.வே.சா.விற்கு எழுதிய முதல் கடிதத்தில் “மதிப்பிற்குரிய ஐயா” என்று தொடங்குகிறார். மூன்றாவது கடிதத்திலேயே “என் அன்பிற்கினிய நண்பா” என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் இருவருக்குள்ளான உறவு மிகவும் வலுப்படுகிறது. ஜி.யு. போப் லண்டனில் இருந்து தன்னுடைய புகைப்படத்தை அவருக்கு அனுப்புகிறார். “என் புகைப்படம் அனுப்பினேனே உங்களுக்குக் கிடைத்ததா?” என்று கேட்கிறார். இருவரும் கடிதங்களில் அன்பைப் பரிமாறிக் கொள்கிறார்கள். முழுக்க முழுக்கத் தமிழ் சார்ந்த எண்ணற்ற விஷயங்கள் அந்தக் கடிதங்களில் உரையாடப்படுகின்றன. அதில் ஒரு கடிதத்தில், “அருமையும் பெருமையும் உடைய நம் தமிழ் மொழிக்கு, ஒரு முறையான தொல்காப்பிய ஆய்வுப் பதிப்பை உருவாக்க வேண்டும்” என்று உ.வே. சாமிநாத ஐயருக்கு ஜி.யு. போப் ஒரு கோரிக்கை வைக்கிறார். அடுத்த கடிதத்தில், “உலகத் தாய்மொழிகளின் வரலாற்றில் நம்முடைய தமிழ் மொழிக்குத் தகுதி வாய்ந்த ஒரு இடத்தை உருவாக்குவதற்கு நான் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்” என்று எழுதுகிறார் ஜி.யு. போப். இதைச் சொல்லக்கூடிய ஜி.யு. போப் கனடாவில் பிறந்தவர், ஆக்ஸ்போர்டில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் எந்தத் தமிழச்சியின் முலைப்பாலும் குடித்து வளரவில்லை. ஆனால் நிச்சயம் ஜி.யு. போப் மறைந்த அன்று இரவு அந்தக் கல்லறையில், தமிழ்த்தாய் விழுந்து புரண்டு, அழுதிருப்பார் என்று நான் நம்புகிறேன். ஜி.யு.போப் அவர் இன்னோர் கடிதத்தில், “திருவாசகத்தில் 28 இடத்தில் தளை தட்டுகிறது” என்கிறார். மற்றொரு கடிதத்தில், “குறள் வெண்பா என்கின்ற இந்த இரண்டடி வெண்பா வடிவத்தை உருவாக்கியது வள்ளுவர்தான். வள்ளுவருடைய காலத்திற்கு முன்பு யாருமே அதைச் செய்திருக்க வாய்ப்பில்லை. இப்போது சந்தையில் கிடைக்கிற இந்த இரண்டடி வெண்பாக்கள் எல்லாமே போலி. ஏனென்றால், திருக்குறளின் வைர வரிகளுக்கு இந்த போலி வரிகளை இணை வைக்கவே முடியாது” என்று சொல்கிறார். வைணவ இலக்கியங்களைப் படித்துவிட்டு “திருவாய்மொழியை வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு அது ஒரு பெருங்கடலைப் போன்றிருக்கிறது” என்று தன்னுடைய பிரமிப்பைச் சொல்கிறார். இந்தக் கடிதங்களைப் பார்க்கும்போது மிக நெகிழ்ச்சியான ஒரு விஷயம் என்னவென்றால், 85 வயதில் ஜி.யு. போப் இந்த மொழி சார்ந்து கொண்டிருந்த கனவுகள் இருக்கிறதே, ஒவ்வொரு கடிதத்திலும் அவருடைய கனவுகள் அனைத்தும் இமாலயப் பணிகள். அவர் பழந்தமிழ் இலக்கியத்துக்கான ஒரு அகரவரிசையை உருவாக்க வேண்டும், அத்தனையும் ஆக்ஸ்போர்டில் சேகரிக்க வேண்டும், அத்தனையும் மீண்டும் மறுபதிப்பு செய்ய வேண்டும், அத்தனையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று அவர் தன்னுடைய ஒவ்வொரு கனவையும் சொல்கிறார். கண்ணில் நீர் வராமல் அந்தக் கடிதங்களைப் படிக்க முடியாது. ஆனால், மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு ஆளுநர், மரியாதைக்குரிய ஆர்.என். ரவி என்ன சொல்கிறார்? கால்டுவெல்லும், ஜி.யு. போப்பும் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர்கள். பள்ளிப் படிப்பைத் தாண்டாத அறிவிலிகளாம், அரைகுறைகளாம். மதம் மாற்றுகிற ஒரு நோக்கம் மட்டும்தான் அவர்களுக்கு இருந்தது என்கிறார். இதற்கெல்லாம் மேலே சென்று, திருக்குறளை ஜி.யு. போப் ஆன்மீக நீக்கம் செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறார். ஆனால் “நம் தாய்மொழி” என்று ஜி.யு. போப் எழுதுகிறார். ஒவ்வொன்றிலும் வைர வரிகள் என்கிறார், கம்பனைக் கொண்டாடுகிறார், திருவாசகத்தை மொழிபெயர்க்கிறார், திருக்குறளை மொழிபெயர்க்கிறார். இன்று உலக அறிஞர்களால் திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவதற்கு ஒரே காரணம் ஜி.யு. போப். சரி, அவரைப் பள்ளிப் படிப்பைக் கைவிட்டவர் என்று சொல்லக்கூடிய ஆளுநர் மாளிகை எப்படி இருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும் அல்லவா? ஆளுநர் மாளிகையில் நடந்த, மருத்துவர்களுக்குப் பரிசளிக்கப்பட்ட கேடயத்தில் போலியான திருக்குறள் பதிப்பிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (ChatGPT) கொடுத்த, அதுவரை இல்லாத ஒரு திருக்குறளைப் பதிப்பித்துக் கையில் நினைவுப் பரிசாகக் கொடுக்கிறார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், மற்றொரு அறிஞர், ‘எஸ்.டி.சாமிக்கண்ணு’. அவர் வானியல் சாஸ்திரத்தினுடைய அடிப்படையில், ஜோதிட நூல்களினுடைய அடிப்படையில் தமிழ் இலக்கியங்களின் காலங்களைக் கணிப்பு செய்தவர். நம்மிடம் இருக்கக்கூடிய எல்லா கல்வெட்டுகளையும் படித்து, இந்தக் கல்வெட்டில் இருக்கக்கூடிய செய்திகள் நடந்ததாகச் சொல்லப்பட்ட ஆண்டுகளை மிக மிகத் துல்லியமாக வகுத்துக் கொடுத்தவர். ஆங்கில அரசால் ‘ராவ் பகதூர்’ பட்டமும், ‘திவான் பகதூர்’ பட்டமும் பெற்றவர். தமிழ்நாடு சட்டப்பேரவையினுடைய செயலராக இருந்தவர். அவருடைய ஆய்வுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விவாதம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், “இந்த எஸ்.டி. சாமிக்கண்ணு, பஞ்சாங்கத்தைத் தொகுக்கத்தான் லாயக்கு” என்று விமர்சிக்கிறார் தீரர் சத்தியமூர்த்தி. அதாவது ஆக்ஸ்போர்டு அவரைப் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, உள்ளூரில் இருக்கக்கூடிய தலைவர்கள் அவரை அவ்வளவு இழிவாக நடத்தினார்கள். அரசன் சண்முகனார் ‘வ.உ.சிதம்பரம் பிள்ளை’ மற்றும் ‘நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்’ பற்றி நாம் நன்று அறிவோம். அவர்கள் சிறைப்பட்டிருந்தபோது, சிறையில் அவர்களுக்கான சரியான உணவுக்காக தமிழ்நாட்டுப் புரவலர்கள் அவர்களுக்கு அனுப்பிய அந்தப் பணத்தைக் கொண்டு காகிதமும், புத்தகமும், பேனாவும் வாங்கி, சிறையில் பட்டினி கிடந்து இலக்கியங்கள் படைத்தவர்கள். திருக்குறள் நாமக்கல்லாருடைய உரை சிறைச்சாலையில் எழுதப்பட்டது. நம்முடைய தமிழ்நாட்டில் உருவான மூன்று அறிவு இயக்கங்களில் ஒன்று தனித்தமிழ் இயக்கம், இன்னொன்று திராவிட இயக்கம், மூன்றாவது தலித் சிந்தனை இயக்கம். இந்த திராவிட இயக்கத்திற்கும் தலித் சிந்தனை இயக்கத்திற்கும் இன்று வலுவான அரசியல் பின்புலம் இருக்கிற காரணத்தால், அதற்குப் பங்களிப்பாற்றிய அறிஞர்கள் அவர்களுக்கு உரிய கௌரவத்தையும் அடையாளத்தையும் பெறுகிறார்கள். ஆனால் இந்த 19-ஆம் நூற்றாண்டு, 20-ஆம் நூற்றாண்டு தமிழ் அறிஞர்கள் ஒரு சாபக்கேடான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அதற்கு முந்தைய தமிழ் அறிஞர்களை ஆதரிப்பதற்கு மன்னர்கள் இருந்தார்கள், நிலவுடைமைச் சமூகம் இருந்தது. ஆனால், இவர்கள் முழுக்க முழுக்கக் கைக்காசைப் போட்டு ஆய்வு செய்ய வேண்டும், அல்லது மடங்களினுடைய உதவி தேவை. அப்படி இல்லையென்றால் கல்வி நிறுவனங்களுடைய உதவி வேண்டும். அன்றைய சூழல் அப்படித்தான் இருந்தது. ஆகவே, தமிழுக்கு அரும்பணியாற்றிய 19-ஆம் நூற்றாண்டு, 20-ஆம் நூற்றாண்டு தமிழ் அறிஞர்களில் 99 சதவிகிதம் பேர் ரத்தம் கக்கிச் செத்திருக்கிறார்கள். வாழ்ந்தபோது அவர்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது, எந்த அங்கீகாரமும் கிடையாது. வாழ்ந்து மறைந்த பிறகும் அவர்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடையாது. ஓர் ஆய்வுக்காக ‘அ.கா. பெருமாள்’ ஐயா அவர்கள் தோவாளைக்குப் பக்கத்தில் இருக்கிற பீமநகரி என்கிற ஊருக்குச் செல்கிறார். அங்கே ஒரு முப்பது வீடுகளே உள்ள சின்ன கிராமம் இருக்கிறது என்பதை கண்டறிகிறார். அந்த ஊர், நாடகக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய ‘ஆண்டி சுப்பிரமணியம்’, மகா வித்வான் ‘கே.என். சிவராஜப் பிள்ளை’, பண்டிதர் ‘சண்முகம் பிள்ளை’ ஆகிய மூன்று தமிழ் அறிஞர்கள் அந்த முப்பது வீடுகளிலிருந்து உருவாகி வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது தோவாளை சென்றபோது பார்க்கிறேன், அந்த பீமநகரியில் எல்லாத் திசையிலும், ‘ஒரு சென்ட் நிலம் விலை இவ்வளவுதான்’ என்று வீட்டுமனை விற்பனைப் பலகைகள் இருக்கின்றன. அந்த ஊர் முழுக்க அலைந்து திரிந்தாலும், மூன்று மகத்தான தமிழ் அறிஞர்கள் வாழ்ந்த ஊர் என்பதற்கான எந்த ஒரு சிறிய அடையாளமும் அங்கே கிடையாது. கே.என்.சிவராஜ பிள்ளை ‘வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார்’, தென்காசியில் பிறந்தவர், கால்நடை மருத்துவர். அவரை ஆங்கில அரசாங்கம் வெளிநாட்டுக்கு அனுப்பி கல்வி பயில வைத்தார்கள். கால்நடை மருத்துவம் குறித்து ஏராளமான நூல்கள் எழுதியிருக்கிறார். அவருக்கு ராவ் பகதூர் பட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவருடைய அகலிகை வெண்பா, அவருடைய கம்பராமாயண சாரம்… அதை, “அவருடைய கம்பராமாயண சாரத்தைப் படிக்காத யாருமே கம்பன் கழகத்தில் உரையாற்றியதில்லை” என்று வேடிக்கையாகக் கூடச் சொல்வார்கள், தமிழ்நாட்டு அறிஞர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்களாக இருந்தால் கண்டிப்பாக வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாருடைய புத்தகங்களை வாசித்திருப்பார்கள். மில்ட்டனைத் தமிழில் மொழிபெயர்த்தவர், கம்பனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். எண்ணற்ற நூல்கள் எழுதியிருக்கிறார். நான் இந்த மேடையில் குறிப்பிட்ட தமிழ் அறிஞர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் முப்பது நாற்பது புத்தகங்களை எழுதியவர்கள். தொண்ணூறு வயது வரை பாளையங்கோட்டையில் வாழ்ந்தவர். இந்த நகரத்தின் வளர்ச்சிக்குப் பல விதங்களில் பங்களித்தவர். பல்வேறு அமைப்புகளின் வழியே ஈடுபட்டிருக்கிறார். நம் ஊரில் எங்கேயாவது இந்த வெள்ளக்கால் முதலியாருக்கு ஒரு பெயர் இருக்குமா? நம் ஊர் நூலகத்தில் இந்த வெள்ளக்கால் முதலியாருடைய ஒரு படம் வைக்கப்பட்டிருக்குமா? மற்றொன்று, என்னுடைய ஊர் சாத்தான்குளம். ‘சாத்தான்குளம் அருணாசலக் கவிராயர்’ என்று அழைக்கப்பட்ட அ. ராகவன். சாத்தான்குளத்தில் பிறந்தவர், பாளையங்கோட்டையில் வளர்ந்தவர். தன் வாழ்வின் கடைசி மூச்சு வரை தமிழ் பேசிக்கொண்டிருந்தவர். ஒரு மேடையில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு வந்து மரணமடைந்தவர். ஆதிச்சநல்லூரைப் பற்றியும், பொருநை நாகரிகத்தைப் பற்றியும் புத்தகம் எழுதியிருக்கிறார். ‘கோநகர் கொற்கை’, ‘தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்’, ‘தமிழர் பண்பாட்டில் தாமரை’, தமிழர்களுடைய ஆடைகள், தமிழர்களுடைய வாழ்க்கை முறை பற்றி எண்ணற்ற பண்பாட்டு நூல்களை எழுதியவர். எங்கள் ஊரில் அவருக்கு ஒரு பெயர்ப்பலகை கூட கிடையாது. அவர் வாழ்ந்து மறைந்த இந்தப் பாளையங்கோட்டையிலும் ஒரு பெயர்ப்பலகை கிடையாது. அவருடைய புகைப்படத்தைக்கூட இன்றைக்கு நீங்கள் எங்கேயும் பார்க்க முடியாது. இதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில், புதுமைப்பித்தன் வாழ்ந்த தெருவிற்கு, அவருடைய பெயர் வைப்பதற்கே நமக்கு அறுபத்தெட்டு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அவர் வாழ்ந்த வீதிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை எழுப்பப்பட்டு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் அங்கே ‘புதுமைப்பித்தன் தெரு’ பெயர் வைக்கப்படுகிறது. 1900-இல் ‘பரிதிமாற் கலைஞர்’, நச்சினார்க்கினியருக்கு மதுரையிலே ஒரு வெண்கலச் சிலை வைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைக்கிறார். நூற்றி இருபத்தாறு ஆண்டுகள் ஆகிவிட்டன நண்பர்களே, இன்னமும் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இங்கே திருநெல்வேலி மாநகராட்சியில் புதுமைப்பித்தனுக்குச் சிலை வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி எவ்வளவு ஆண்டுகள் ஆயிற்று? இது எல்லாவற்றையும் அரசுதான் செய்ய வேண்டுமா? ஒரு ஊரில் எத்தனை அரிமா சங்கங்கள் உள்ளது? ஒவ்வொரு ஊரிலும் எத்தனை ரோட்டரி சங்கங்கள் உள்ளது? ஒவ்வொரு ஊரிலும் எத்தனை தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன? ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு இலக்கிய அமைப்புகள் இருக்கின்றன? அவர்கள் நினைத்தால் அந்த ஊருடைய எல்லையில் ஒரு பலகை வைக்க முடியாதா?சமீபத்தில் நெல்லைக்கு வரும்போது காருக்குறிச்சி வழியாக வந்தேன். அப்போது, என் மகளிடம், “காருகுறிச்சி அருணாசலம் என்கின்ற ஒரு மேதை இருந்தார். திருவாவடுதுறை ‘ராஜரத்தினம் பிள்ளை’ திருநெல்வேலிக்குக் கச்சேரி செய்ய வரும்போது, ஒத்து ஊதுவதற்கு ஆள் இல்லாமல் காருகுறிச்சியைக் கொண்டு வந்து விட்டார்கள். இருபத்திரண்டு வருடம் அந்த ஆசிரியரைப் பின்தொடர்ந்தார். உலகம் போற்றுகின்ற ஒப்பற்ற மாமேதையான காருக்குறிச்சியின் ஊரை நாம் தாண்டிப் போகிறோம்” என்று சொன்னேன். அந்த ஊர் எல்லையில் ஓர் ஐநூறு ரூபாய் செலவில் ஒரு பலகை வைக்க முடியாதா? நம்ம ஊர் நூலகங்களில் இந்த அறிஞர்களுக்கு, அவர்கள் பிறந்த ஊரில் இருக்கக்கூடிய நூலகங்களில் ஒரு புகைப்படத்தை மாட்டி வைக்க முடியாதா நம்மால்? அந்த அறிஞர்கள் பெயரில் ஒரு சிறிய போட்டியை நடத்தி இந்தப் பிள்ளைகளுக்கு நான்கு திருக்குறள் புத்தகம் கூட நம்மால் வாங்கிக் கொடுக்க முடியாதா? இதை எது செய்யவிடாமல் தடுக்கிறது? புத்தகக் கண்காட்சிக்கு ஈரோடு மகேஷ் வந்தால் நூறு பேர் அவரோடு செல்ஃபி எடுப்பார்கள். அது தவறு கிடையாது. ஏனென்றால் ஒரு பிரபலத்தைப் பார்த்தால் அவரோடு போய்ப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று பொதுச்சமூகம் விரும்புவது இயல்பு. ஆனால், 80 நூல்களுக்கு மேல் எழுதிய அ.கா. பெருமாள் அதே சபைக்கு வந்தால், முப்பது நூல்களுக்கு மேல் எழுதிய, ‘ஆலயக் கலையின் ரகசியங்கள்’ அனைத்தையும் தமிழ்ச்சமூகத்துக்கு வகுப்பெடுத்த ‘குடவாயில் பாலசுப்பிரமணியம்’ அதே அவைக்கு வந்தால், முப்பது நூல்களுக்கு மேல் எழுதிய பண்பாட்டு ஆய்வாளர் ‘பக்தவத்சல பாரதி’ வந்தால், தமிழ் இலக்கியத்தினுடைய இருள் மண்டிய பக்கங்களில் தன்னுடைய ஆய்வுகளால் ஒளிப்பாய்ச்சிய ‘ஆ.இரா. வேங்கடாசலபதி’ இந்தச் சபைக்கு வந்தால், ஒருவருக்குக்கூட அவர்களை யாரென்றே நமக்குத் தெரியாது. அவர்களைப் பார்த்துப் புன்னகைப்பதுகூட இல்லை. ‘ஐயா நலமாக இருக்கீங்களா?’ என்று நாம் கேட்கக்கூட மாட்டோம். ஏன் இப்படி நிகழ்கிறது என்றால், நம்முடைய அறியாமை. நமக்கு அவர்களைத் தெரியாது. நாம் இங்கே வந்தால் கதைப் புத்தகம் வாங்குவோம், கவிதைப் புத்தகம் வாங்குவோம். புனைவிலக்கிய எழுத்தாளர்களுக்கு, குறைந்தபட்சம் அவர்களின் வாசகர்களாவது கொஞ்சம் நன்றியோடு இருப்பார்கள். ஆனால் இந்தத் தமிழ் அறிஞர்களுக்கு? அவர்கள் யாரென்று நமக்குத் தெரியாது, அவர்கள் செய்த ஆய்வு நூல்களை நாம் வாங்க மாட்டோம், அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை நாம் வாங்க மாட்டோம், அவர்களைப் பற்றி நமக்குத் தெரியவும் தெரியாது. இது ஒரு காரணம்தான். ஆனால் இது முழுக் காரணம் அல்ல. இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது. அது என்னவென்றால், அந்த அமைப்பிடம் போய் “இவர் நம் ஊரில் பிறந்து வளர்ந்தவர், நம் ஊருக்குப் பெருமை சேர்த்தவர், தமிழ்ப் பண்பாட்டில் தமிழ் என்னும் தேரின் வடம் பிடித்து இழுத்தவர், ரத்தம் கக்கிச் செத்தவர், இவருக்கு நம் ஊரில் ஒரு பலகை வைக்க வேண்டும், அல்லது இவருடைய படத்தை நம் ஊர் நூலகத்தில் திறக்க வேண்டும்” என்று சொன்னீர்களென்றால், “அவர் என்ன ஆளு?” என்ற கேள்விதான் முதலில் எழும். அவர் ஜாதி தெரியாமல் அவருக்கு அங்கீகாரம் கிடைக்காது. அது ஓர் உண்மையான காரணம், இல்லையா? முன்னோர்கள் மரணிக்கையில் அவர்களுடைய வாழ்க்கையின் செய்தியாக ஒன்றைக் கேட்போம் அல்லவா? அதுபோல், திரு.வி.க மரணப் படுக்கையில் இருக்கும்போது அவரிடம், “ஐயா! நம் மொழிக்கு, நம் நாட்டுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கி.ஆ.பெ. விசுவநாதம் கேட்கிறார். அதற்கு கி.ஆ.பெ.வின் கையைப் பிடித்து, தன்னுடைய முகத்துக்கு அருகில் கொண்டு வந்து, தனது இறுதி மூச்சின் எஞ்சிய ஆற்றலைத் திரட்டி திரு.வி.க சொல்கிறார்: “நாடு இருக்கிறது, மக்கள் இருக்கிறார்கள், மொழி இருக்கிறது, நீங்கள் இருக்கிறீர்கள், பார்த்துக்கொள்வீர்கள்”. இதுதான் திரு.வி.க.வுடைய இறுதி வாசகம். “நாம் பார்த்துக்கொண்டோமா?” https://akazhonline.com/?p=116642 points
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். கள்ளிக்காட்டு இதிகாசமும் மற்றும் இவரின் ஒரு சிறுகதை தொகுப்பும் இருக்கின்றது. இரண்டுமே மிகச் சாதாரணமானவை. அதிலும் அந்த சிறுகதை தொகுப்பு..................... கடவுளே....... யாழ் களத்தில் கள உறவுகள் எழுதும் சிறுகதைகள் பலவுமே அதைவிட மேலானவை. கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ரா (கி. ராஜநாராயணன் அவர்கள்). வைரமுத்து அவரை நெருங்கவே முடியாது. பாவிகள்...... தங்கள் செல்வாக்கால் அவருக்கு கிடைக்க வேண்டியதை மறுத்துவிட்டார்கள். இதுவே தான் அசோகமித்திரனுக்கும் நடந்தது. ஏழைகளின் சொற்கள், அவை எவ்வளவு மேம்பட்டது என்றாலும், அம்பலம் ஏறாத, ஏற விடாத அற்ப மனிதர்கள் நிறைந்த தேசம் இந்தியாவும், தமிழ் நாடும். இப்படி நடந்து கொண்டிருக்க, தன்னை ஒரு இலக்கியவாதி, தமிழ் செழிக்க உழைக்கும் ஒரு தலைவன் என்றிருந்த கருணாநிதி கண்டும் காணாது இருந்தார். இதனால் அவரும் இந்த இழிநிலைக்கு ஒரு பிரதான காரணம். தன்னை ஒரு இலக்கியவாதியாக முன்னிறுத்துவதிலேயே அவர் முனைப்பாக இருந்தார். ஆனால் ஒரு சிறு குளம் போல தேங்கி விட்ட அவருக்கு ஜீவநதிகளையும், பரந்த கடல்களையும் பார்க்க துணிவு வரவில்லை. கருணாநிதி அவர்களின் எந்த ஆக்கம் இன்று பொருட்படுத்தப்படுகின்றது, எது ஒரு இலக்கிய வழிகாட்டியாக சொல்லப்படுகின்றது..................... இதுவே தான் தகுதிக்கு மேல் விளம்பரப்படுத்தப்படும் படைப்பாளிகளுக்கும், படைப்புகளுக்கும் காலம் கொடுக்கும் தண்டனை.................2 points
-
இளம்தாய் உயிருடன் மீட்கப்பட்ட கிணற்றினுள் இருந்து அழுகிய சடலமொன்று கண்டுபிடிப்பு ; வயல் பகுதியில் இரண்டரை வயது குழந்தையும் மீட்பு
அத தெரண நேற்று வந்த தகவல்களையே வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்தி அப்படியே போட்டுவிட்டு, புதிய தகவல் வெளியானதாக செய்தியை வெளியிட்டு இருக்கின்றது. இலங்ககை தமிழ் / முஸ்லிம் ஊடகங்கள் எல்லாம், பொலிஸார் தரும் அறிக்கைகளையே செய்திகளாக தருபவை. கொஞ்சம் கூட நிருபர்களை சம்பவ இடங்களுக்கு அனுப்பி வைத்தோ, ஆராய்ந்தோ செய்திகளை வெளியிடுபவை அல்ல. கடும் சோம்பேறிக் கூட்டங்கள் இவர்கள். இவர்களை விட சிங்கள ஊடகவியலாளர்கள் பல மடங்கு மேல்.2 points
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
புளித்த மாவு இந்த விடயத்தில் நடந்து கொண்ட முறைக்கு முழுக்க முழுக்க எரிச்சல்தான் காரணம் என்பதை இந்த கட்டுரை தெளிவாக சொல்கிறது. இதற்குள் அதிபர், அன்பான சர்வாதிகாரியும் அவரின் தூசண தம்பிகளும் வேறு குறுக்க மறுக்க ஓடுகிறார்கள்😂 ஊசி நுழைய முடியாத இடத்தில் கூட பழத்தட்டு நுழைந்து விடும். -பவுடர் டப்பா- இவர் ஒரு அற்பன் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை ஐயா. கண்ணதாசன் என்ற கான மையிலை விட தான் ஒரு படி மேல் என நினைத்து பேரரசு பட்டம் கட்டி கொண்ட வான்கோழி இவர். கவிஞர்கள் என்றால், கல்யாணசுந்தரம், அப்துல் ரஹ்மான், கண்ணதாசன், வாலி, மேத்தா, வைரமுத்து என்பதே என் வரிசை.2 points
-
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
2 pointsபெண்கள் சத்தமில்லாமல் நேர்த்தி வைத்துவிட்டு சமயம் வரும்போது கழுத்தில் தொங்குவார்கள்.2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
1 pointபூ மிதி அண்ணை!1 point- அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
மிகவும் சிறப்பான முயற்சி ........ கவிதையும் நன்றாக இருக்கு...... அதை நீங்கள் திருத்திய 2 வது கவிதை சிறப்பு.....! 👍 நான் "வீதியோரம்" கதைக்கு AI யால் படங்கள் போட முயற்சி செய்தேன். அது நன்றாக வந்தது. ஆனால் பலமுறை முயற்சித்தும் யாழில் ஓட்ட முடியவில்லை....... பின்பு தான் கூகுள் படங்களை எடுத்து ஓட்டினேன் .......!1 point- அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
வாசிக்கவே தலையை சுத்துது. எப்படி இதையெல்லாம் தயாரிப்பது? பாராட்டுக்கள்.1 point- ஈரான் எச்சரிக்கை : “உலகின் எந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்காது”
இரானுக்கு முழு உரிமை இருக்கிறது, எங்கும் எதிரியை தாக்க. பொது இடம் எனும் பொது, அங்கு எதிரியின் நிலை (உ.ம். 1 படைச்சிப்பாய் கூட) இருந்தால் தாக்கலாம். இதை மேற்கும் செய்வது. இஸ்ரேல் செய்கிறது. முன்பு மேற்கிற்கு இருந்த நிலையான எவரையும் தாக்கும் போது, அந்த இடத்தில் மட்டுமே எதிர்ப்பு வரும், வரவேண்டும் என்ற தன்தகுதி (entitled) எதிர்பார்ப்பு இப்போதும் மேற்கிடம் இருக்கிறது. இதனால் தான், Diego Garcia ஐ இரான் தாக்கியதை UK கண்டித்து இருப்பது.1 point- வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
5´000 அமெரிக்க வீரர்களும் ஈரானில் இருந்து திரும்பிப் போகும் போது, ⚰️ பெரிய சூட்கேசில் போகிறார்கள். 😂 🤣1 point- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
உண்மைநான் ரசோதரன். வைரமுத்து தன்னைத் தானே கவிப்பேரரசு என அடையாளப்படுத்திக் கொண்டவர். எனது பார்வையில் அவர் ஒரு சினிமா பாடலாசிரியர் மற்றும் திமுக அபிமானி. (முற் குறிப்பு) கோசான் ஜி, நீங்கள் பச்சைக் கொடி காட்டியதாலேயே இதை எழுதுகிறேன். “கவிஞர் கண்ணதாசன் இலக்கியங்களில் இருந்தும், சித்தர் பாடல்கள், தேவாரப் பாடல்கள் போன்ற பல்வேறு இடங்களில் தான் வாசித்து அதிலே கவரப்பட்டு சினிமா பாடல்களில் அவற்றை புகுத்தியவர் என்பது உண்மை. ஆனால் அதைப் பற்றி அவர் ஒருபோதும் மறைத்ததில்லை, அதுமட்டுமல்ல, எங்கேயிருந்து எடுத்தார் என்பதையும் அவர் ஏதாவது ஒரு இடத்தில் சொல்லிவிடுவார். அந்த நேர்மைதான் கண்ணதாசன். உதாரணத்திற்கு, பட்டினத்தார் சொல்வது: “மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே…”என்ற பாடல் புரிவதற்கு நேரம் எடுக்கும். அதையே கண்ணதாசன், பாமரனுக்கும் புரியும் வகையில், “வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ…” என்று எழுதியபோது பலரால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் கவிப்பேரரசு அப்படியா என்றால்… கொஞ்சம் சிக்கல்தான். எங்கேயிருந்து வந்தது என்று சொல்லாமல், “இது எல்லாம் என் தலையில்தான் உதித்தது!” என்பார். அதிலும் கர்வம் சேர்ந்திருக்கும். சரி அவரது கவிதையை ரசிக்கலாம் என்று பார்த்தால், அதில் உள்ள உவமைகளையும் “இது எனது கண்டுபிடிப்பு” என்று முத்திரையும் குத்தி விடுவார். சில நேரங்களில் “தமிழ் என்னால்தான் வாழ்கிறது” என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு தன்மேல் நம்பிக்கையிருக்கிறது. எங்களுக்கு எரிச்சல் அதிகரிக்கிறது. ‘பொன்மாலை’ என்ற சொல் கூட தனது கண்டுபிடிப்பு என்றார். ஆனால் அதற்கு முன்பே கவிஞர் வாலி,“பொன்மாலை மயக்கம்…”என்று அன்பேவா படத்தில் எழுதி விட்டார். அப்படியென்றால் இது கண்டுபிடிப்பு இல்லை, கவிப்பேரரசின் மீள்பதிவு. மருதகாசி எழுதிய“கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தே…” என்ற பாடல் வரி கவிப்பேரரசுவினால்“விழியில் விழுந்து இதயம் நுழைந்து…” என்று மாறுகிறது. அதேபோல், “ஆண்டவன் உலகத்தின் முதலாளி…”என்று ஆலங்குடி சோமு எழுதியிருக்க, பின்னர் “ஒருவன் ஒருவன் முதலாளி…”என்று வருகிறது. கவிப்பேரரசு பற்றி இப்படி எடுத்துக்காட்டுகள் நிறைய சொல்லலாம். ஆனால் அது வீணான நேரமாகிவிடும். இதற்கிடையில், கண்ணதாசன் சினிமாவைத் தாண்டி ‘யேசு காவியம்’, ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ போன்ற பல அருமையான படைப்புகளைத் தந்தவர். வாலியும் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களை கவிதை வடிவில் படைத்தார். கவிப்பேரரசுக்கு கல்லிக்காட்டு இதிகாசத்துக்கு ஞானபீட விருது தந்திருக்கிறார்கள். ஒரு பேட்டியில் ரங்கராஜ் பாண்டி குறிப்பிட்டார், “ பா.இரஞ்சித்துக்கு தமிழ்நாடு அரசு பரிசு தரவில்லை. ஆனால் வைரமுத்துவுக்கு ஒன்றிய அரசு ஞானபீட விருது தந்திருக்கின்றது” என்று. தேர்தல் நேரம். எல்லாம் அரசியல் நோக்கம்தான். அதுசரி கவிப்பேரரசுவின் ஈழகாவியம் என்னாச்சு? அவர் மட்டும் அதை எழுதினால் புலம் பெயர் தமிழர்களது விருது நிச்சயம்.1 point- முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
வேலியில் போன ஓணானை பிடித்து தம்பர் தன்ர ரவுசருக்குள் விட்டுவிட்டு படும் அவதி சொல்லிவேலையில்லை🤣1 point- குட்டிக் கதைகள்.
1 point· Suivre oteprSdonst32ac42ia5tsu9 :1ctLl802r10aà a3c4 u6e1cm206af1a l · பரமார்த்த குருவும் சீடர்களும் பொரி வாங்கிச் சாப்பிட்டபடி மடத்துக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, பக்கத்துத் தெருவில் தெருக்கூத்து ஒன்று நடக்க இருந்தது. அதில் நடிப்பதற்காக, கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு அந்த வழியாக வந்தார் ஒருவர். அவரைப் பார்த்த சீடர்கள், நிஜமான கிருஷ்ணர் தான் வருகிறார் என்று நம்பினார்கள். “அதோ பாருங்கள் குருதேவா... கிருஷ்ண பரமாத்மா வருகிறார்” என்று குதித்தான் மட்டி. “ஆமாம் குருவே.. கையில் புல்லாங்குழல் கூட வைத்திருக்கிறார்” என்றான் மடையன். பரமார்த்தரும் அவரைக் கடவுள் என்றே நம்பினார்.. உடனே நன்றாக இருந்த தன் வேஷ்டியைக் கிழித்து விட்டுக் கொண்டார். “சீடர்களே, நீங்களும் உங்கள் துணிகளை இதே போல் கிழித்துக் கொள்ளுங்கள்” என்றார் பரமார்த்தர். “புதுத் துணிகளைக் கிழிப்பதா? ஏன் குருவே?” என்று கேட்டான், முட்டாள். “புத்தி கெட்டவனே.. ஏன் என்று கேட்காதே. சீக்கிரம் கிழி... அப்போதுதான் நாம் ஏழைகள் என்று அவர் நம்புவார்” என ஆணையிட்டார் பரமார்த்த குரு. சீடர்கள் ஐவரும், குருவின் கட்டளைப்படி கட்டியிருந்த வேட்டிகளைக் கிழித்துக் கந்தல் கந்தலாக ஆக்கினார்கள்.. உடனே பரமார்த்தர் வேகமாகச் சென்று, கிருஷ்ணர் வேடம் போட்டவர் காலில் விழுந்து வணங்கினார். “பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்து மானம் காத்த கிருஷ்ணா.. அதே போல் நீதான் எங்களுக்கும் ஆளுக்கு ஒரு புடவை கொடுத்து எங்கள் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டினார் பரமார்த்தர். “குருவே.. நமக்கு எதற்குப் புடவை?” என்று கேட்டான் மண்டு. “அதானே? நமக்கு வேட்டி அல்லவா தேவை” என்றான் மூடன். “கார்மேகக் கண்ணா.. இந்தா, பொரி உன் இஷ்டம் போல் கொரி..” என்றபடி கொஞ்சம் பொரியைத் தந்தான் மட்டி. கிருஷ்ணர் வேடம் போட்டவருக்கோ ஒன்றும் புரியவில்லை. “நான் கடவுள் இல்லை.. எனக்கு நேரமாகிறது, என்னைப் போகவிடுங்கள்” என்றார். “கண்ண பெருமானே எங்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்” எனக் கெஞ்சினான், முட்டாள். “கண்ணா.. அன்று குசேலர் கொடுத்த அவலை மட்டும் சாப்பிட்ட நீ, இந்த ஏழைப் பரமார்த்தர் தரும் பொரியைச் சாப்பிடத் தயங்குவது ஏன்?” என்றார் குரு. “கோபாலா கோவிந்தா.. தயவு செய்து கொஞ்சம் பொரியையாவது சாப்பிடு” என்றான் மடையன். “பொரியைச் சாப்பிடாவிட்டால் விடமாட்டார்கள்” என்று நினைத்து, கொஞ்சம் பொரியைச் சாப்பிட்டார் தெருக்கூத்து நடிகர். “பொரி கொடுத்ததற்கு நன்றி.. நான் போய் வருகிறேன்” என்று நகரத் தொடங்கினார் நடிகர். “என்ன? பொரியைத் தின்றுவிட்டு சும்மா போகிறீர்கள்? எங்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுங்கள்” என்றார் பரமார்த்தர். “வரமா?” அதென்ன?” “ஆமாம்.. குசேலர் வீடு பொன்னாக மாறியது போல எங்கள் மடமும் தங்கமாக மாற வேண்டும். எங்கு பார்த்தாலும் பொற்காசுகளும், வைரங்களும் மின்ன வேண்டும்” என்றான். “எங்கள் கந்தல் உடைகள் பட்டாடையாக மாற வேண்டும்” என்றான் முட்டாள். “வரம் தராவிட்டால் ஆளை விடமாட்டோம்” என்றான் மடையன். “சரி.. நீங்கள் நினைத்தபடியே நடக்க்கடவது..” என்று அருள்புரிவது மாதிரி கையைக் காட்டினார் தெருக்கூத்து நடிகர். “ஆஹா.. பொரிக்குப் பொன் கொடுத்த கிருஷ்ணா.. உன் கருணையே கருணை” என்றபடி குருவும் சீடர்களும் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள். ஆளைவிட்டால் போதும் என்று தெருக்கூத்து நடிகர் ஓட்டம் பிடித்தார். “அப்பாடா! கடவுளேயே நேரில் பார்த்து விட்டோம், அவரும் ஏமாந்து போய் வரம் கொடுத்து விட்டார்” என்றார் பரமார்த்தர். “குருவே! நாம் மடத்துக்குப் போகும்போது, மடமெல்லாம் தங்கமாக மாறி விட்டிருக்கும். மடம் முழுதும் பொற் காசுகள் குவிந்து கிடக்கும்.. அதனால் இனிமேல் நீங்கள் நடந்து போகக் கூடாது” என்றான் மட்டி. “எங்காவது பல்லக்குக் கிடைத்தால் வாங்கி விடலாம்” என்றான் மடையன். போகும் வழியில் ஒருவன் பாடை கட்டிக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட முட்டாள், “குருவே! இதோ பாருங்கள் பூப்பல்லக்கு.. இதையே விலைக்கு வாங்கி விடலாம்” என்றான் மடையன். பாடை கட்டியவனிடம் சென்ற மட்டி, “இந்தப் பல்லக்கு என்ன விலை?” என்று விசாரித்தான். “இது பல்லக்கு இல்லை” என்றான் பாடை கட்டியவன். “நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.. இது பல்லக்கே தான். உனக்கு வேண்டிய பணம் தருகிறோம்” என்றான் மடையன். சீடர்களின் தொல்லையைப் பொறுக்காமல், “நான் வேறு ஒன்று செய்து கொள்கிறேன்; நீங்கள் இதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான், அவன். பரமார்த்தரும் மகிழ்ச்சியோடு பாடையில் ஏறி அமர்ந்து கொண்டார். இருட்டத் தொடங்கியதும், முட்டாள் கொள்ளிக் கட்டையைத் தூக்கியபடி முன்னே நடந்தான். மற்ற சீடர்கள் பாடையைத் தூக்கி வந்தனர். சிறிது தூரம் வந்ததும், “ஒரே தாகமாக இருக்கிறது” என்றபடி பாடையை இறக்கி வைத்தார்கள், சீடர்கள். ஐந்து பேரும் தண்ணீரைத் தேடிச் சென்றபோது, பரமார்த்தர் விழித்துக் கொண்டார். “என்ன? யாரையுமே காணோம்?” என்றபடி சீடர்களைத் தேடி வேறு பக்கம் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த நாய் ஒன்று பாடையில் ஏறிப் படுத்துக் கொண்டது. திரும்பி வந்த சீடர்களோ, எதையும் கவனிக்காமல் பழையபடி பாடையை தூக்கிக் கொண்டு புறப்பட்டனர். மடத்தை நெருங்கியதும், நாய் விழித்துக் கொண்டது. “லொள், வள்” என்று குரைத்தது. அவ்வளவுதான்.. பாடையைத் “தொப்” என்று கீழே போட்ட சீடர்கள், “ஐயையோ! இதென்ன அதிசயம்? நம் குரு நாயாக மாறி இருக்கிறாரே” என அலறினார்கள். “அந்தக் கிருஷ்ணக் கடவுள் தான் ஏதோ மந்திரம் போட்டு விட்டார்” என்றான் முட்டாள். “நம் மடம் கூடத் தங்கமாக மாறாமல், பழையபடி அப்படியே இருக்கிறதே” என்று துக்கப்பட்டான் மண்டு. அப்போது இருட்டில் விழுந்தடித்து ஓடிவந்த பரமார்த்தர், “புத்திகெட்ட சீடர்களே! என்னைப் பாதி வழியிலேயே விட்டு விட்டு வந்து விட்டீர்களே” எனத் திட்டினார். “குருநாதா..” அந்தக் கிருஷ்ணக் கடவுளை நம்பினோம்.. அவரும் பொரி வாங்கித் தின்று விட்டு, நம்மைக் கைவிட்டு விட்டாரோ” என்று ஒப்பாரி வைத்தனர் சீடர்கள். பரமார்த்தரும் சீடர்களும் சேர்ந்து கொண்டு புலம்பினார்.. Voir la traduction.....!1 point- உங்களுக்கு தெரியாத வட கொரியா
1 point👌 நான் வாழ தயாராக இல்லாத தப்பிவந்த ஒரு வாழ்க்கை முறையை மற்றவர்களுக்கு பரித்துரைப்பது மிக மோசமான வழிகாட்டுதலாகும்.1 point- இந்திய பெருங்கடலில் போர் அபாயம்!!!
https://www.facebook.com/1457391262/posts/pfbid0Bj2uL1uwoc2ThhSpJFrjxzc2JRxQfaMLL9ofxBTy7LNpY4BekuBhRANm4vdYuNCWl/?mibextid=wwXIfr1 point- ‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
ட்ரம்ப், ஓவரா கெத்துக்காட்டி வெனிசுலா மாதிரி, அயத்துல்லா அலி கொமெய்னியை கொலை செய்தவுடன் போர் முடிந்துவிடுமென தப்புக்கணக்கு போட்டு வாங்கிக்கொண்டதுதான் மிச்சம். போர் முடிந்தவுடனேயோ, இவர்களின் பதவிக்காலம் முடிந்தவுடனேயோ இரண்டு சாத்தான்களையும் சிறையில் அடைத்து, சொத்துக்களெல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும். இல்லையேல் சர்வதேச குற்றப்புலனாய்வு நீதிமன்றம் இவர்களை கைது செய்து தண்டிக்கவேண்டும். இந்த நெத்தன்யாகு, ட்ரம்ப் ஐ விட இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள்தான் முட்டாள்கள், போர் வெறி பிடித்தவர்கள்.1 point- வடக்கில் வாழும் சிங்களவர்களுக்கு உரிமை கோரி யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம்
அது என்றால் உண்மைதான் சிறியர்.1 point- உங்களுக்கு தெரியாத வட கொரியா
1 pointஇவற்றில் கியூபா மட்டுமே (கஸ்ரோ மறைவுக்கு பின் பெயரளவில் மட்டும்) கம்யூனிச நாடாக உள்ளது. பேர்லின் சுவர் உடைந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டன அண்ணை. கியூபாவில் ஜேர்மனிய ஓய்வூதியகாரர் சிலர் போய் வாழ்வதால் அது ஜேர்மனியை விட திறம் என்பதும் அபத்தமான கருத்து. முன்னர் சில வெள்ளையள் இலங்கைக்கு கொலிடே போய் வந்து, அன்பான மக்கள், அருமையான நாடு ஏந்தான் நீங்கள் சிங்களவரோடு சண்டை பிடிக்கிறீர்கள் என உளறுவார்கள். கொலிடே, பென்சன் எடுத்து போட்டு, வெளிநாட்டு காசை, வெளிநாட்டு பாஸ்போட்டோடு விசுக்கும் ஆட்களை வைத்து ஒரு நாட்டின் வாழ்க்கை தரத்தை எடை போட முடியாது.1 point- உங்களுக்கு தெரியாத வட கொரியா
1 point😂😂😂 சில அவதானிப்புகள். இந்த உலகில் வட கொரியா மட்டுமே கம்யூனிச நாடு. 1990 ற்கு பின் ரஸ்யா பக்கா முதலாளிதுவ நாடு. ஆங்கிலத்தில் hypocrisy என ஒரு சொல் உண்டு. தமிழில் அதை சொல்வது ஒன்று, செய்வது இன்னொன்று அல்லது இரெட்டை நிலைப்பாடு என சொல்ல முடியும். நாம் ஒரு விடயத்தை சொன்னால் - அது சும்மா பம்பலுக்கு சொல்லும் கருத்தாக இருக்க கூடாது. உளப்பூர்வமாக அந்த கருத்தை நாம் நம்பி சொல்ல வேண்டும். நாமும் சொலவதன் படி நடக்க வேண்டும். வடகொரியா போல் ஒரு சர்வாதிகார நாட்டில் வாழ்வது, ஜேர்மனி போல் ஜனநாயக நாட்டில் வாழ்வதை விட மேலானது என்பது உங்கள் கருத்து. ஆனால் ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு அதை சொல்வது இரெட்டை தன்மையானது. நான் மட்டும் அல்ல நீங்களும் இலங்கையர்தான். நீங்கள் ஏன் இலங்கை திரும்பவில்லை? ஜனநாயக குறை பாடு, கட்டுப்பாடு, சர்வாதிகாரம் உள்ள இலங்கையில் உங்கள் அரசியலை நீங்கள் இப்போ செய்வது போல் செய்தால், அல்லது நீங்கள் முன்னர் செய்த அரசியலால் உங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்பதால். ஆகவே உங்களுக்கே ஒரு உச்சபட்ச ஜனநாயக நாட்டில்தான் பாதுகாப்பு, பேச்சுரிமை உத்தரவாதம் உள்ளது. இப்படி ஒரு நிலையில் நீங்கள் ஜனநாயக நாட்டை விட சர்வாதிகார நாட்டில் வாழ்வது திறம் என எழுதினால், அந்த இரெட்டை நிலைப்பாட்டை சுட்டி காட்டும் உரிமை இன்னொரு கருத்தாளருக்கு உள்ளது. இதன் அடிப்படையில் உங்களை ஒரு hypocrite என எழுதுவது தனிமனித தாக்குதல் அல்ல. உங்கள் இரெட்டை நிலைப்பாட்டுக்கு மேலதிகமாக, வடகொரியா, ரஸ்யா போன்ற நாடுகள் ஜனநாய நாடுகளை விட மேலானவவை என்ற உங்கள் கருத்து மிகவும் அபத்தமானது. இதையும் ரொம்ப மட்டமான, அபத்தமான கருத்து என சாடி எழுதும் உரிமை ஏனைய கருத்தாளருக்கு உள்ளது. இதில் ஏன் நிர்வாகத்தை இழுத்தீர்கள் என்பது விளங்கவில்லை. காரசாரமாக விவாதிப்பது என்பது நிர்வாகம் தலையிடும் வண்ணம் சக கருத்தாளரை தாக்குவதோ அல்லது ஏலும் எண்டால் எண்ட ஏரியாவுக்கு வா என சண்டிதனம் பண்ணுவதோ அல்ல. இதே திரியில் கூட காரசாரம், நக்கல், நையாண்டி எல்லாமும் விதிக்குட்பட்டு எடுத்தாளப்பட்டுள்ளதை காண்க.1 point- வீதியோரம்.
1 point- இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
1 pointஅதைக் காக்கத்தான் ..இந்த அய்யா போயிருக்கிறார் ...1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- ‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
ட்ரம்ப் செய்கிற குறுக்காஸ் வேலைகளுக்கெல்லாம் முரட்டு முட்டுக் கொடுக்கும் ஒரு நண்பர்கள் குழு ஒன்று (அமெரிக்க இலங்கையர்கள், தமிழர்கள் தான் எல்லோரும்) இங்கே என் ஊரில் இருக்கிறது. மஸ்க் தாறு மாறாக மத்திய அரசின் வேலையாட்களை வீட்டுக்கனுப்பி குடும்பங்களை வறுமையில் தள்ளிய போது, இப்படி "ஒரு மூவாயிரம் டொலர் செக் எல்லோருக்கும் மஸ்க் அனுப்புவார்" என்று முட்டுக் கொடுத்தார்கள். தற்போது இந்த நண்பர்கள் கொடுக்கும் ஒரு முட்டு இருக்கிறது, என்ன தெரியுமா? "ட்ரம்ப் தான் ஆட்சியில் இருந்து போக முன்னர் சகல அமெரிக்கர்களுக்கும் வருமான வரியை இல்லாமலாக்கி விடுவார்" என்பது தான் அந்த முட்டு! வருமான வரி இல்லாத அமெரிக்கா😂! இதைக் கேட்டால் ட்ரம்பே அதிர்ச்சியில் போய் சேர்ந்து விடுவார்!1 point- ‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
சொந்தக் காசில், தனக்குத் தானே... சூனியம் வைத்த கதையாக போச்சுது. சுவிசில வைத்த நேச நாடுகளுக்கு வைத்து சூட்டில் விலகி நிற்கிறார்கள்.1 point- ‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
1 point- உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
உக்ரேனுக்கு... கடந்த நாலு வருசமாக கிடைத்த ஓசி ஏவுகணை போதும். ஊரான் காசில்... வாண வேடிக்கை காட்ட நினைக்கிறார் செலென்ஸ்கி. 😂 இனி சொந்தமாக தயாரியுங்கள்.1 point- ‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
- சாணி அடி வாங்கிய ட்ரம்பு - 😂 (சிற்றுவேஷன் வீடீயோ.) ஊர் உலகம் எல்லாம் பயந்து கிட்டிருந்த என்னை கொண்டாந்து, ஒரு சின்ன சந்துக்குள்ளை நிறுத்தி... பயந்துக்கிட்டு இருந்தவங்களை எல்லாம்... எறி எறி என்று எறிய வைச்சத்தும் இல்லாம, நாத்தம் அடிக்குது என்றா சொல்லுறாய். 🤣1 point- உங்களுக்கு தெரியாத வட கொரியா
1 pointஇதை சொன்னது பிரெஞ் நாட்டில் ஒரு இளவரசி. Qu’ils mangent de la brioche ஜோன் ஜேக்ஸ் ருசோ வின் புத்தகம் ஒன்றில் இப்படி ஒரு இளவரசி சொன்னதாக சொல்லபட்டுள்ளது. அதை மேரி அண்டெர்னைட் சொன்னார் என பிற்காலத்தில் ஒரு கருத்து உருவாக்கப்பட்டது. ஆனால் ருசோ இதை எழுதிய சமயம் மேரிக்கு 9 வயது. ஆகவே அவர் சொல்லி இருக்க வாய்பில்லை. சொல்லி இருந்தாலும் அது சிறுபிள்ளையின் பேச்சு. கருத்தாளருக்கும் தரவுகளுக்கும் உள்ள இடைவெளி எனக்குத்தெரியும். வாசகர் நன்மைக்காக எழுதியுள்ளேன். 👆😂 அடிச்சுத்தான் விடுறம் கொஞ்சம் ரியாலிட்டியோடு ஒத்து போகும் வண்ணம் - இந்தியாப்ப இல்லாவிடில் கிரிபத் சாப்பிடுங்கள் என சிரிமா சொன்னார் எண்டாவது அடிச்சு விட்டிருக்கலாம்😂.1 point- வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
சீனா 😎..... புதைகுழிக்குள் காலை வைத்துவிட்டார்கள், எப்படி எடுக்க போகின்றார்கள்☹️, கப்பலில் வரும் 5000 அமெரிக்க பாடை வீரர்களுக்கு முதலே 😭...1 point- கருத்து படங்கள்
1 point- மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?
1 point- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
நன்றி கவிஞரே.................. நீங்கள் நலமா.................... சமீப நாட்களில் நான் எதுவுமே எழுதவில்லை. ஆனாலும் இந்த விடயத்தில் அப்படி இருக்க முடியவில்லை. கவிஞரின் பெயரையும், ஜெயமோகனின் பெயரையும் முற்றாக தவிர்க்க நினைத்தேன். கவிஞரின் பெயர் இங்கு வந்தால், அது ஒரு சினிமா உரையாடலாகவும், கவிஞர் எதிர் வைரமுத்து என்றும் போய் விடுமோ என்று நினைத்தேன். ஜெயமோகன் அடிவாங்காத இடமே கிடையாது தானே............🤣. அவர் உள்ளே வந்தால் இந்த திரியே வெறும் வாய் கலப்பாகத்தான் முடியும்...............🤣. 'சக்கரவர்த்தி உலா' என்று நான் இந்த உரையாடலில் முன்னர் குறிப்பிட்டிருந்த ஒரு கட்டுரையை எழுதியது ஜெயமோகனே......................1 point- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
உங்கள் பொறுப்புதுறப்பை தாண்டியும் - தொடர்பிருப்பதாக எனக்கு படுகிறது. கிட்டதட்ட ஒரே விடயம் (கண்ணதாசன் கொள்ளை அடிக்கவில்லை எனில்) ஆனால் பார்க்கும் பார்வை வேறு படுகிறது.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இதென்ன பிரமாதம்… நேற்று கலிபோர்னியா கவர்னரை…அமெரிக்க ஜனாதிபதி என விளித்தார் தம்பர் 😂1 point- கருத்து படங்கள்
1 point1 point- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
பெரும்பாலான தமிழ் யூடியூப்பர்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே இவர்கள் தாம் பேசுவது தெரிந்துதான் பேசுகிறார்களா அல்லது தமிழ்பேசும் இஸ்லாமியர்களைக் குளிர்விக்க இப்படிப் பிதற்றுகிறார்களா என்று எண்ணத் தோன்றுகிறது. இஸ்ரேல் சுக்குநூறாகியது, மரண அடி, அழிந்தான் யூதன், அமெரிக்கா பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடுகிறது, அமெரிக்காவின் விமானத் தாங்கிக் கப்பல்களை ஈரானின் ட்ரோன்கள் நிர்மூலமாக்கின, இஸ்ரேல் பிரதமர் நெத்தென்யாகு ஈரானினால் துல்லியமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று தாம் விரும்பியவாறு தலைப்பிட்டு தமது மனம் போன போக்கில் எடுத்துவிடுகிறார்கள். இதிலும் சில ஈழத்தமிழர்கள் மதில்மேல் பூனைபோல இருந்துகொண்டு ஒரு நாள் அமெரிக்காவிற்குச் சார்பாகவும் மறுநாள் ஈரானுக்குச் சார்பாகவும் பேசுகிறார்கள். தமிழ் அடியான் என்கிற யூடியூப்பர் ஒருநாள் அமெரிக்காவை போர்க்களத்தில் இருந்து ஈரான் அகற்றிவிட்டது, அமெரிக்கப் படைகள் முற்றாக மத்திய கிழக்கில் இருந்து காணமலாக்கப்பட்டிருக்கின்றன என்று செய்தி வெளியிட்டார். மறுநாள் அமெரிக்காவின் பாரிய நெடுந்தூரக் குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் பல நிலைகளைத் தாக்கியழித்தபோது, தான் முதல்நாள் கூறியதற்கு நேரெதிராகப் பேசியிருந்தார். நான் இதுகுறித்து அவரிடம் கேள்வவி எழுப்பியபோது சில மணிநேரத்தில் எனது பதிவு அவரால் நீக்கப்பட்டது. இப்படித்தான் தமிழ் யூடியூப்பர்களின் நிலை. இவர்கள் வெளியிடும் காணொளிகளை உண்மையென்று நம்பும் எம்மவர்கள் இதுகுறித்துச் சிந்திப்பது நலம். 😊1 point- கருத்து படங்கள்
1 point- கருத்து படங்கள்
1 point1 point- நான் ரசித்த விளம்பரம் .
1 point1 point- இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
1 point- இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
1 point1 point- இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
1 pointப்பா…சான்சே இல்லை… அருமையான கவிதை. ——— பிரிந்ததும் பிரியாமல் இருந்தோர் கூடினால் செற்றிக்கு விடுமுறை.1 point- யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர், மருமகனால் அடித்து கொலை!
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர், மருமகனால் அடித்து கொலை! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இதுகுறித்து விசாரணைகள் செய்வதற்காக யாழ்ப்பாண பொலிசார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி ஆதாரமும் காணப்பட்டது. இந்நிலையில் பொலிசார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றையதினம் திருகோணமலை பகுதியில் வைத்து 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் என இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் விரிவுரையாளரான குறித்த பெண், மருமகனின் தாக்குதலின் போது உயிரிழந்த விடயம் தெரிய வந்துள்ளது. மேலும் உயிரிழந்தவரது சடலத்தை எடுத்து சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு இடத்தில் வீசிவிட்டு இருவரும் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந்தவகையில் குறித்த சடலம் எங்கே வீசப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், அந்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/14694770 points- யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர், மருமகனால் அடித்து கொலை!
பேரிழப்பு! 😭 கடந்த 18ம் திகதி தனது மருமகனால் கொ*லை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தயாளினி திலீபன் அவர்கள் பற்றி யாழ் பல்கலைக்கழக இணையத்தளத்தில் இருந்து அவரின் கல்வித்தகைமைகள் ஆய்வுகள் பற்றிய தகவல்களை பார்த்தபோது மிகவும் கவலையாகவிருந்தது. 1999 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத் துறையில் சகல பாடங்களிலும் சிறப்புச் சித்தி (distinction) பெற்று 1st class இல் பட்டம் பெற்றுள்ளார். பின்பு 2005 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழத்தில் முதுமானி பட்டமும், அதன் பின்பு 2016 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளார். 2001 ஆம் ஆண்டு உதவி விரிவுரையாளராக ஆரம்பித்து தற்போது வரை சிரேஸ்ட விரிவுரையாளர் தரம்-1 இல் கடமையாற்றி வந்துள்ளார். நான்கு நூல்கள், 16 peer-reviewed journal publications, 55 மாநாட்டு ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவற்றை அவர் வெளியிட்டுள்ளார் என்று அவரின் இணையப்பக்கத்தில் இருந்து தெரியவருகின்றது. அவரின் இழப்பு தமிழ்க் கல்விச்சமூகத்திற்கு ஒரு பேரிழப்பென்றால் மிகையாகாது. அன்னாரின் பிரிவால் துயருறும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! Kumar Ganesh0 pointsImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.