Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    20141
    Posts
  2. மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8586
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    89361
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    34065
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/24/26 in all areas

  1. யாழில் உள்ள பலர் யூத வெறுப்பாளர்கள் என்பதை நான் அறிவேன். அதன் பின்னால் உள்ள காரணங்களையும் நான் புரிந்து கொள்கிறேன். முரண் நகையாக, அதே ஆட்களில் சிலர் இலங்கை முஸ்லிம்கள் மீது பொது பல சேன செய்த அட்டூழியங்களை நான் எதிர்த்த போது என்னை பழித்தவர்களாக இருந்தனர். மேலும் சிலர் யசீதிகள் மீது ஐசில் செய்த அட்டூழியங்களை கண்டும் காணதவராய் இருந்தனர். ஐம்பதை தொடப்போகும் எனக்கு, வாழ்க்கை கற்றுத்தந்த முக்கிய பாடங்களில் ஒன்று, இந்த உலகில் நாம் அறச்சீற்றம் கொள்வது கூட தேர்ந்த எம் நிலைப்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே என்பதே. நான் கூட 2009 மேயில் அடைந்த மன உளைச்சல் போல் வேறு எந்த போருக்கும், மனித அழிவுக்கும் அடையவில்லை. ஆனால் உயிருக்கு ஆபத்து என வரும் போது இனம், மதம், நிறம் பார்க்காமல் உதவும், அப்படி உதவுபவர்களை தடக்கி விழுத்தும் எண்ணம் தவறு என்ற புரிதல், மனித தன்மை இன்னும் தமிழர்களிடம் எஞ்சி உள்ளது. அல்லது உள்ளது என நான் நம்ப விரும்புகிறேன். நிற்க, அண்மையில் யூத தன்னார்வ நிறுவனம் ஒன்றின் 5 முதலுதவி வண்டிகள் இலண்டனில் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த தன்னார்வ அம்பூலனன்ஸ் சேவை யூதர்களால் நடத்தப்பட்டாலும் அது எல்லோருக்கும்மானது. சில வருடங்கள் முன் வட மேற்கு இலண்டனில்…வீதியால் போகும் போது நடைபாதையில் ஒரு நடுத்தர வயது ஆசிய பெண் தடுக்கி விழுந்தார், என் கண்முன்னே. அது பிரெக்சிற்ரால் இலண்டனில் ஓட்டுனர் தட்டுப்பாடு இருந்த காலம். 999 ஆம்புலன்ஸ்சுக்கு அடித்தால், வண்டி அனுப்ப 3 மணி நேரம் எடுக்கும் என்றார்கள். அந்த பெண் வலியால் கதறி கொண்டு இருக்கிறார். அவரை விழுந்த இடத்தில் இருந்து அரக்க கூடாது அது உடைவுகளை மேலும் சிக்கலாக்கும் என்பது எனக்கு முதலுதவி பயிற்சி சொல்லி தந்த பாடம். விழுந்த காலமோ குளிர் மைனசில் இருக்கும் காலம். தரையில் கிடப்பதும் ஐஸ் கட்டியில் கிடப்பதும் ஒன்றேதான். மேலும் 999 க்கு அழைப்பை எடுக்கிறேன். அவர்களுக்கும் விபரீதம் விளங்கினாலும் எதுவும் செய்ய முடியாத நிலை. அப்போது இன்னொரு வெள்ளை இன பெண் நாயோடு வந்தார். என்ன என என்னிடம் விபரங்களை கேட்டு விட்டு, பட பட என தன் போனில் இருந்து அம்பூலனசுக்கு போன் அடித்தார். 5 நிமிடத்தில் அம்பூலனஸ் வந்தது. வீழ்ந்து கிடந்த ஆசிய பெண்ணை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு போனது. யார் இவர்கள் என கேட்டேன், தனியார் அம்பூலன்ஸ் எண்டால் செலவை யார் ஏற்பது என எண்ணியபடியே… இது ஒரு யூத தன்னார்வ அமைப்பு. மத, இன அடையாளம் இன்றி யார் உதவி என அழைத்தாலும் வருவார்கள் என சொல்லி சென்றார் அந்த பெண்மணி. அந்த 5 அம்பூலன்ஸ்தான் அண்மையில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளால் தீக்கிரையானது. (எதுவும் கற்பனை அல்ல)
  2. முன்னர் கும்பலாக இருந்த பலரையும் காணவில்லை. இன்னும் ஏழு இலக்கங்களே இருந்ததனால் நான் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகராமல் அங்கேயே நிற்க, ஆண்டனி மட்டும் அப்பப்ப காணாமல் போய் வந்துகொண்டிருந்தான். இப்ப எம்மோடு வருவதாகக் கூறிய அந்த மூன்றாவது நபரைக் காணாதது எனக்கு நிம்மதியாக இருக்க, அந்த ஆள் வீட்டை போட்டாராக்கும் என்று எண்ணிக்கொள்கிறேன். 48 ம் இலக்கத் தாயும் மகளும் கூட இப்ப எனக்கு அண்மையில் வந்து நின்றுகொண்டிருக்க, அவர்களுக்கு அந்தப் பெடியுடன் போவது பற்றிக் கூறவில்லையே என்ற குற்ற உணர்வும் எழுகிறது. 36 ம் இலக்கம் கூப்பிட நான் திரும்பிப் பார்க்கிறேன் ஆண்டனியைக் காணவில்லை. எனக்கு மனம் திக் திக் என்று அடித்தாலும் யாரிடமும் சொல்ல முடியாமல் நிற்கிறேன். 37 கூப்பிட்டு முடிந்து ஐந்து நிமிடம் ஆன பின் 38 என்று கூப்பிட, பதட்டத்துடன் திரும்பிப் பார்க்க ஆண்டனி வருவது தெரிகிறது. நான் பலமாக “ஆண்டனி விரைவாக வா, எமது இலக்கம் கூப்பிடுகிறார்கள்” என்றபடி வாயில் காப்பாளரைத் தாண்டி உள்ளே செல்ல அவனும் என்பின்னால் வருகிறான். இருவரும் சென்று கதிரைகளில் அமர, கவுண்டரில் உள்ள பெண் இலக்கச் சீட்டைக் கேட்கிறாள். ஆண்டனி கொடுத்தபடியே நாம் ஒன்றாக வந்திருக்கிறோம். ஆனால் வேறுவேறு விமான டிக்கற் என்றதும் அந்தப் பெண் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு “யாரின் டிக்கற்றை முதலில் செய்ய என்று கேட்க, எதையாவது செய் என்கிறார் ஆண்டனி. ஆண்டனியின் டிக்கற்றையே முதலில் செய்யுங்கள் என்கிறேன் நான். ஆண்டனிக்கு 18 ம் திகதி கொடுத்துவிட்டு என் விபரத்தைககேட்க எடுத்துக் கொடுத்தபின்னும் ஆண்டனி போகாமல் இருக்க, மிக்க நன்றி ஆண்டனி, நீ கிளம்பு என்றதும் “சீ யு நிவேதா” என்றுவிட்டு அவன் கிளம்ப, என் பெயரை நினைவில் வைத்திருக்கிறான் என்று ஆச்சரியம் எழுகிறது. எனக்கு 18 ம் திகதி போக ஓகே யா என்று பயண முகவர் கேட்க, நான் பதட்டப்படுமாப்போல் அய்யய்யோ என் மகளுக்கு 18 ம் திகதி நிச்சயதார்த்தம் இருக்கு. ஏற்கனவே பிந்திவிட்டது. தயவுசெய்து எத்தனை விரைவாக எனக்கு டிக்கட் போட்டுத் தர முடியுமோ தா என்கிறேன், இரண்டு நாட்களின் பின் எனக்கு விமானச் சீட்டுக் கிடைக்க நன்றி என்று கூறி அவள் தந்த விமானச் சீட்டைப் பெற்றுக்கொண்டு வெளியே வர அந்தத் தாயும் மகளும் வெளியே நிற்க, உங்களுக்கு முதலே கூறாமல் விட்டதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என்றுகூறிவிட்டு வெளியே வருகிறேன். நேரம் மாலை நான்கு மணி. முன்னால் பல ஓட்டோக்கள் நிற்க, நான் பிக்மீ ஓட்டோவுக்குப் பதிந்துவிட்டு நிற்க, ஓட்டோக்காரர் ஒருவர் எங்கு போகவேண்டும் என்கிறார். நான் ஏற்கனவே பிக்மீக்காக காத்திருக்கறேன் என்றதும் ஓகே என்றுவிட்டு அப்பால் நகர என் ஓட்டோ வருகிறதா என்று பார்க்கிறேன். முன்னர் நான்கு நிமிடம் என்று காட்டிய ஓட்டோ இப்ப 16 நிமிடம் என்று காட்ட மப்பைப் பார்க்கிறேன் அவர் வேறு பக்கமாகச் சென்றுகொண்டிருக்க, உடனேயே அதை இரத்துச் செய்துவிட்டு என்னிடம் வந்து கேட்டவரை வெள்ளவத்தைக்குப் போகவேண்டும் வருக்கிறாயா என்று கேட்டு ஏறி அமர்கிறேன். அப்போதுதான் நான் நின்ற கோட்டலின் பெயரோ முகவரியோ தெரியாது என்பது நினைவுக்கு வர, அந்த சசிக்கு போன் செய்ய அவர் கதைக்கிறார். அவரிடம் முகவரியை எனது போனுக்கு அனுப்பச் சொல்லிவிட்டு அக்கம் பக்கம் பார்த்தபடி வர எந்த வீதிக்குப் போகவேண்டும் என்கிறார் ஓட்டுனர். எனது போனில் பார்த்து இடத்தைக் கூறிவிட்டு எனது போனிலும் இடத்தைப் போட்டுச் சரியாகச் செல்கிறாரா என்று பார்க்கிறேன். எனது கொட்டேலுக்கு இன்னும் மூன்று நிமிடம் இருக்கும் நிலையில் சுமங்கலி ரெஸ்ட் என்னும் ஒன்று கண்னில் பட, ஓட்டுநாரை அங்கே போகும்படி கூற அவர் எதிரில் கொண்டுசென்று நிறுத்துகிறார். அங்கு தமிழ்ப் பெண்மணி ஒருவர் இருக்க, தங்குவதற்கு அறைகள் இருக்கா எனகிறேன். ஏசி அறைகள் இன்று இல்லை. மற்ற அறைகள் தான் இருக்கு. எத்தனை பேர் என்கிறா. நான் மட்டும் தான் என்று கூற தனி ஒருவருக்கு ஐந்தாயிரம் என்று கூற, பணத்தைக் கட்டி ரிசீற்ரைப் பெற்றதும் நான் இருக்கும் இடம் சென்று எனது பொதிகளை எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு ஓட்டோவில் ஏறுகிறேன். சசி வாசலிலே நிற்கிறார். ஒரு நாளுக்குரிய பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு என் பொருட்களுடன் சுமங்கலிக்குச் செல்கிறேன். அங்கு செல்லும்போது மாலை ஐந்துமணி. அறை நன்கு சுத்தமாக இருக்கிறது. மின்விசிறியைச் சுழல விட்டுவிட்டு தேனீருக்கு ஓடர் செய்ய அரைமணிநேரம் செல்லும் என்கிறார். சரி சிறிது நேரம் படுப்போம் என்று கண்ணயர மணி ஒலிக்கிறது. எழுந்து சென்று கதவைத் திறக்க தேனீர்க் கோப்பையுடன் நிற்பவரிடம் தேனீரை வாங்கி வைத்துவிட்டு 100 ரூபாய்களைக் கொடுக்க அவர் செல்கிறார். அந்தக் களைப்புக்கு தேநீர் சுவையாக இருக்க சுடச் சுட அதைக் குடித்துவிட்டு போனில் சின்னத்திரை நாடகங்கள் பார்த்துக்கொண்டிருக்க நேரம் போனதே தெரியவில்லை. வெளியே போய் உண்டுவிட்டு வருவோம் என எண்ணி ஜன்னல் சீலையை விலக்கினால் ஒரே இருட்டு. பெரிதாகப் பசி இல்லை. நாளை காலை சாப்பிட்டுக்கொள்வோம் என எண்ணியபடி கட்டிலில் சரிய கணவர் போன் செய்கிறார். அவர் கதைத்து முடிய பிள்ளைகள் சித்தி மச்சாள் என பத்து மணிவரை போன் கதைத்து ஓய தூக்கம் கண்களைச் சுழற்ற, இனி யாருடனும் கதைக்காமல் படுப்போம் என எண்ணி எழுந்து மின்விசிறியை நிறுத்திவிட்டு கட்டிலுக்கு வர என் கால் பக்கமாக இரண்டு இடங்களில் சிவப்பாகத் தெரிகிறது. இவர்கள் கட்டில் விரிப்பைத் துவைக்காமல் போட்டுள்ளார்களோ என்னும் ஐயம் எழுகிறது. குனிந்து பார்க்க இரத்தத் திட்டுக்கள் புதிதாகத் தெரிகின்றன, என் கால்களைத் தடவிப் பார்க்க எதுவும் தெரியவில்லை. நுளம்பும் வரவில்லையே. போன் கதைக்கும் போது நுளம்பு கடித்து நான் கவனிக்காமல் சொறிந்திருப்பேனோ என்னும் எண்ணம் ஓட, சரி தூங்குவோம் என்று எண்ணியபடி படுக்கிறேன். கண்ணயரும் நேரம் முதுகுப் பக்கம் ஏதோ ஊர்வதுபோல் இருக்க இடதுபக்கமாகத் திரும்பிக்கொள்கிறேன். மீண்டும் கண்ணயர்ந்தபின் ஒரு மணிநேரம் தூங்கியிருப்பேன் மணிக்கட்டில் ஏதோ கடிக்க திடுக்கிட்டு எழுந்து போனின் வெளிச்சத்தில் பார்க்க சிறிய பூச்சி ஒன்று குடு குடு என்று ஓட விரலால் அழுத்தினால் இரத்தம் தான் தெரிகிறது. அதைப் பார்த்தால் மூட்டைப்பூச்சி போல் இருக்காததால் என்னவாக இருக்கும் என்று யோசனை ஓடுகிறது. சரி மற்றப்பக்கம் திரும்பிப் படுத்துப் பார்ப்பம் என்று எண்ணிப் படுத்தால் இரண்டு மூன்று இடங்களில் கடிக்க இரண்டை நசுக்கியும் விட்டேன். மெத்தை விரிப்பைத் தூக்கிப் பாக்க மெத்தை புதிதாக இருக்கிறது. இனியும் இங்கு படுக்க முடியாது என எண்ணி கோட்டலுக்கு போன் செய்ய மானேஜர் வருகிறார். எங்கள் கோட்டலில் மூட்டைகள் இல்லையே என்கிறார். நான் கால்பகுதி விரிப்பு மற்றும் நான் நசித்த மூட்டைகளைக் காட்டுகிறேன். சரி உங்களுக்குக் கீழே உள்ள AC அறை தருகிறோம் என்று கூறி அழைத்துச் செல்கின்றார். கீழே சென்றவுடன் AC மற்றும் மின்விசிறியைப் போட்டுவிட்டுச் செல்ல எனக்கோ குளிர் தாங்க முடியாமல் இருக்கு. AC ஐ நிறுத்திவிட்டு மின் விசிறியையும் நன்றாகக் குறைத்துவிட்டுப் படுக்க தூக்கம் நன்றாக வர மீண்டும் தூங்கவாரம்பிக்கிறேன். ஒரு அரைமணி நேரம் தூங்கியிருக்கமாட்டேன் மீண்டும் கடி. மகளுக்கு போன் செய்து விபரத்தைக் கூற நீங்கள் முதன் முதலில் இருந்த ஹோட்டலில் இருந்து உங்கள் ஆடைகளோடு வந்திருக்குமோ? ஏனென்றால் அந்த ஹோட்டலின் றிவியூ பார்த்தேன் நல்லாத்தான் எழுதியிருக்கு. எதுக்கும் நீங்கள் அணிந்திருந்த ஆடைகளை உதறிப் பாருங்கள் என்கிறா. நான் ஆடைகளை உதறிப் பார்த்துவிட்டு மெத்தையின் விரிப்பைத் தூக்கி ஏதும் தெரிகிறதா என்று பார்க்க அதுவும் புத்தம் புதிதாக இருக்கிறது. இரண்டு அறைகளிலும் புதிதாக மெத்தை போட்டுள்ளார்கள் என்றால் ஏதோ இருக்கு என்று எண்ணி விட்டு மீண்டும் படுக்க, ஐந்து நிமிடங்களுக்குள்ளாக மீண்டும் கடிக்க ஏற்கனவே முன்னேற்பாடாக ஒன் செய்து வைத்திருந்த போனை எடுத்துப் பிடிக்க இரண்டு குஞ்சுகள் ஓடுகின்றன. விரல்களால் அழுத்திவிட இரத்தத்துடன் சமாதியாகின்றன. அதை உடனே போனில் வீடியோவும் படமும் எடுத்துவிட்டு ஆடைமாற்றிவிட்டு போனில் நாம் வழமையாகத் தங்கும் யூரோ லங்கா கோட்டலுக்குப் போன் செய்து இன்றாவது அறைகள் இருக்கின்றனவா என்று கேட்க அவரும் எத்தனைபேர் என்கிறார். நான் மட்டும்தான் என்றுகூற, எத்தனை மணிக்கு வருவீர்கள் என்கிறார். இப்பவே கிளம்புகிறேன். எப்படியும் அரை மணிநேரத்தில் வந்துவிடுறேன் என்று கூறிவிட்டு நேரத்தைப் பார்த்தால் இரவு 11.45 என்று நேரம் காட்டுகிறது. அதன்பின் சுமங்கலி வரவேற்புக்குப் போன் செய்ய உடனே வருகிறோம் என்று இருவர் வருகின்றனர். நான் போகப்போகிறேன் என்று முடிவு எடுத்தபின் மின் விசிறியையும் நிறுத்திவிட்டிருந்தேன். அவர்கள் வந்து பார்த்துவிட்டு என்ன நீங்கள் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டிருக்கிறீர்கள். அதுதான் உங்களுக்குக் கடிக்கிது என்கின்றனர். அப்ப உங்கள் அறைகளில் மூட்டை இருக்கிறதுதானா என்று கேட்க பதட்டத்துடன் இல்லை என்கிறனர். நீங்கள் AC போட்டுவிட்டு மின்விசிறியையும் போட்டுவிட்டுப் படுத்தால் எதுவும் வராது என்கிறார் மனேஜர். போட்டோ எடுத்தீர்களா என்றதற்கு ஓம் என்கிறேன். நான் போர்வை ஒன்று கொண்டுவந்து தருகிறேன். வடிவாப் போர்த்துக்கொண்டு படுங்கோ ஒண்டும் கடிக்காது என்றவுடன் எனக்கு கோபம் தலைக்கேற “நான் எப்படிப் படுக்கவேணும் என்று நீங்கள் முடிவெடுக்கத் தேவை இல்லை. நான் ஏற்கனவே வேறு இடம் பார்த்துவிட்டேன். என் பணத்தைத் திரும்பத் தாருங்கள் என்று கேட்க, கீழே வாங்கோ என்றபடி என் இரு பயணப்பொதிகளையும் எடுத்துக்கொண்டு செல்ல நான் சிறியதை எடுத்துக்கொண்டு செல்கிறேன். கீழே சென்றதும் பணத்தை எடுத்துத் தந்தபடி இதுவரை எமக்கு எந்தவித குற்றச்சாட்டும் யாரிடமிருந்தும் வரவில்லை என்று அவர் கூற, நான் எடுத்த படத்தைக் காட்ட பின்னர் அவர் எதுவும் கூறவில்லை. நான் பிக்மீக்கு பதிந்துவிட்டு ஓட்டுநரின் பெயரையும் ஓட்டோ இலக்கத்தையும் மகளுக்கு வற்சப் செய்கிறேன். உடனேயே ஓட்டோ வந்துவிட அதில் ஏறி அமர்ந்தபடி மகளுடன் போனில் கதைத்தபடியே போய் ஹோட்டலின் முன்னால் இறங்குகிறேன். ஒரு இரவுக்கு 7500 ரூபாய்கள். பணத்தைச் செலுத்திவிட்டு பற்றுச் சீட்டைக் கேட்கிறேன். நாளை தருவதாகக் கூற, பணம் இன்றுதானே தந்தேன். இப்பவே பற்றுச்சீட்டைத் தாருங்கள் என்கிறேன் சிரித்தபடி. நாங்கள் தராமல் விடப்போகிறோமா அக்கா என்கிறார் மற்றவர். நான் ஒருதடவை பற்றுச்சீட்டு வாங்காது மீண்டும் பணம் கட்டிய அனுபவத்தில் தான் கேட்கிறேன் என்றதும் பற்றுச்சீட்டைத் தருகிறார். வாங்கிக்கொண்டு போக அறைக்கு எல்லாப் பொதிகளும் வந்துசேர மணி இரவு 12.30. எனக்கே என்னை நினைத்து ஆச்சரியமாக இருக்க, என்னை நானே மெச்சியபடி படுக்கையில் சாய்கிறேன்.
  3. சாதாரணமாக மலிவான விமானச் சீட்டைத்தான் சாதாரணர்கள் எல்லோரும் தெரிவு செய்வது. கடந்த ஆண்டு ஸ்ரீலங்கன் விமானத்தில் நேரே செல்வோம் என்று நூற்றைம்பது பவுண்டஸ்கள் அதிகம் கொடுத்து கொழும்பில் இறங்கியபோது விரைவில் வந்து சேர்ந்தாச்சு. இனிமேல் இதிலதான் வாறது என்று முடிவெடுத்து, திரும்ப வரும்போது மலசலகூடம் சுத்தம் செய்யப்படாமல் நாறிக் கிடந்ததில் இனிமேல் அதில் போவதில்லை என்று முடிவெடுத்து ஒன்லைனில் தேடினால் எல்லாம் 700 பவுண்சுக்கு மேலே காட்ட, “ஸ்கைவிங்ஸ்” மூலம் கடவுச்சீட்டைப் பதிவு செய்து ஐப்பசி மாதம் பதினெட்டாம் திகதி கட்டார் ஏயார்வேஸ் விமானத்தில் டோகா வழியாக இலங்கை போய் இறங்கியாச்சு. ஒரு கட்டுமான வேலைக்காகத்தான் முதலில் போக யோசித்தது. ஆனால் இம்முறை சரியான மழை என்று எல்லோரும் கதைத்ததனால் சரி தை மாதம் அளவில் செல்லலாம் என்று எண்ணியிருக்க, கணவரின் அண்ணன் அழைத்து கடைசி மகளுக்கு இன்னும் இரு மாதத்தில திருமணம் செய்துவைக்க இருக்கிறம். குடும்பத்தோட வாங்கோ என்றுவிட, நான் இப்ப எல்லாத்தையும் விட்டிட்டு வர ஏலாது. போக வெளிக்கிட்டனி இப்பவே போவன் என்று மனிசன் எனக்குக் கூற, எனக்கோ பெரிதாக விருப்பம் வரவில்லை. கணவரின் தமையன் மகளும் போன் எடுத்து சித்தி கட்டாயம் வாங்கோ என்று கூற மறுக்க முடியாமல் சரி வருகிறேன் என்று கூறி போனை வைத்தபின் மனிசனை வீட்டில் விட்டுவிட்டுப் போகவும் மனமின்றி நீங்கள் தான் கட்டாயம் போகவேணுமப்பா, நீங்களும் வாங்கோ என்கிறேன். எமது வீட்டின் பின்னால் ஒரு மேலதிக அறையும் மலசலக்கூடமும் கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதனால் தான் விட்டுவிட்டு வரமுடியாது. நீ மட்டும் போ என்கிறார். சரி என்று அங்கிருப்பவர்களுக்குக் கொண்டுபோவதற்கான சொக்லற்,பிஸ்கட் என வாங்கி அடுக்கி, எனக்கும் ஐந்தாறு மாதங்கள் நிற்பதற்கான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வாங்கி நிரப்ப இரண்டு பெரிய பொதிகள் ஒவ்வொன்றும் 23 கிலோக்கள். கையில் கொண்டுபோவது ஏழு கிலோ என எல்லாம் நிரம்ப, “எப்ப பாத்தாலும் அள்ளி கொண்டு போய் தானதருமம் பண்ணு” என்று திட்டும் மனிசனைக் கணக்கெடுக்காமல் எல்லாவற்றையும் கச்சிதமாக முடித்து, செல்லும் நாளுக்காகக் காத்திருந்து யாழ்ப்பாணமும் போயாச்சு. திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் குளிர், மழை, புயல் என்று ஓய, கார்த்திகை மாதக் கடைசியில் வீடு திருத்தும் வேலை ஆரம்பித்து அத்தனை பேருடன் மல்லுக்கட்டி ( அதை விபரமாக இன்னொரு பதிவில் போடுறன் ) இன்னும் வேலை முடிந்தபாடில்லை. மாசி மாதம் 15 போட்ட விமானச் சீட்டை பங்குனி 11 ற்கு வீணாக 70 பவுண்ட் கட்டி மாற்றிய பின் ஈரான் போர் தொடங்க என்ன செய்றது எந்த யோசனையும் ஓடிது. மாதக் கடைசியில் யாழ்ப்பாணம் வரவிருந்த கணவரும் கடவுச்சீட்டு மூன்று மாதங்களே இருந்த காரணத்தால் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துவிட்டு, அதுதான் சாட்டென்று வீட்டு வேலை முடிய கிளம்பி வா. இங்கை ஒரு அசுமாத்தமும் இல்லை என்கிறார். எனக்கு இன்னும் பயணத்துக்கு நான்கு வாரங்கள் இருக்க, மூன்று வாரங்களில் கிளம்பவேண்டும். வேலையை விரைவாக முடியுங்கள் என்கிறேன், இரு வாரங்களின் பின் எனக்குக் கடவுச் சீட்டை மாற்றித் தந்த ஸ்கை விங்ஸ் இலங்கை முகவருடன் தொடர்புகொண்டு என்ன நிலமை என்று கேட்க, அக்கா எனக்கு இன்னும் சொல்லத் தெரியேல்லை. எதுக்கும் 9 ம் திகதி உங்கள் விமானம் பற்றிக் கூறுகிறேன். மறக்காமல் எனக்கு போன் எடுங்கோ என்கிறார். மனதில் சிறு பயம் எட்டிப் பார்க்கிறது. கணவர் பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் போகுமோ என்னும் யோசனையும் எழ மூத்த மகளுக்குப் போன் செய்கிறேன். அம்மா நீங்கள் போன் செய்ய முதலே நான் பாத்துக்கொண்டுதான் இருக்கிறன். நேரில் வரும் விமானம் எல்லாம் 1500/ 2000 பவுண்டஸ் போடுகிறார்கள். டெல்லி வந்து துருக்கி போய் லண்டன் வர 800 பவுண்டஸ் டிக்கற் இருக்கு. புக் செய்யவோ என்கிறாள். வீணாக ஏன் அவ்வளவு காசு. எதுக்கும் ஒன்பதாம் திகதிவரை பொறும் என்றுவிட்டு வீட்டு வேலைகளில் மூழ்கிப்போகிறேன். காசைப் பார்த்து போர் அதிகமானால் என்ன செய்வது? நான் தனிய இங்க மாட்டுப்படப் போறேனோ என்று யோசனையாகவும் இருக்க இரண்டாவது மகள் அழைக்கிறாள். கோவிட் நேரம் போல பொருட்கள் எல்லாம் கடைகளில் தட்டுப்பாடோ என்று கேட்க. யாரும் எதையும்பற்றிக் கவலை கொள்ளவில்லை. எல்லாம் சாதாரணமாகத்தான் போகுது. வீட்டுவேலைகள் முடிந்துவிட்டதா? என்கிறாள். இன்னும் ஒருவாரத்தில் முடிப்பதாகச் சொல்கிறார் பொறுப்பானவர். பார்ப்போம் என்கிறேன். காசைப் பார்க்காதைங்கோ. நான் டிக்கற் போடுறன் என்றவளைத் தடுத்து எதுக்கும் ஒன்பதாம் திகதிவரை பார்ப்போம் என்கிறேன். ஏழாம் எட்டாம் திகதிகளில் வேலையாட்களுடன் பொழுது போய்விட, இரவில் பிரையாணம் சரிவருமா என்ற குழப்பத்தில் தூக்கமே வரவில்லை. அடுத்தநாள் காலை ஒன்பதுக்கு கொழும்புக் கிளைக்குத் தொலைபேசியில் அழைத்தால் என்னுடன் பேசவேண்டியவர் தற்போது இல்லை. மதியம் இரண்டு முப்பதுக்குப் பின் போன் செய்யுங்கள் என்கின்றனர். அதுவரை காத்திருந்து போன் செய்தால் உங்கள் விமானம் 11 ம் திகதி ஓடாது அக்கா. இப்ப மூன்று நாட்களாக எதுவும் ஓடவில்லை என்கிறார். ஓடவில்லை என்றால் ஒடுற விமானமாப் பார்த்து நீங்கள் தான் டிக்கற் மாற்றிப் போட்டுத் தரவேணும் என்கிறேன். நான் பார்க்கிறன், பார்த்திட்டு இண்டைக்கு நான்கு மணிக்கு உங்களுக்கு போன் செய்யிறன். எதுக்கும் உங்கள் இலங்கை இலக்கத்தைத் தாங்கோ என்று கூற, நான் இப்ப கதைக்கிற இலக்கம் தான் என்கிறேன். ஒருக்காச் சொல்லுங்கோ அக்கா நான் எழுதிறன். இந்த போனில காட்டாது என்று கூற நான் இலக்கத்தைச் சொல்கிறேன். நேரம் நான்கு ஆகி நாலரை ஆன பின்னும் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. நான்இரண்டு மூன்று தடவைகள் போன் செய்தும் யாருமே எடுக்கவில்லை. விடாமல் பத்து நிமிட இடைவெளியில் ஒரு பத்துத் தடவையாவது போன் எடுத்தும் யாரும் எடுக்கவில்லை. அவர்களின் இலக்கம் சாதாரணமாது. அதனால் எந்த செய்தியையும் கூட அனுப்ப முடியாமல் டென்ஷன், கோபம் எல்லாம் எழ, கணவருக்குப் போன் செய்து விடையத்தைக் கூற அவர் வேலையில் நிற்பதாகவும் வேலை முடிய லண்டன் முகவரிடம் போய்க் கதைக்கிறேன் என்கிறார். இரவு பதினொரு மணிக்குக் கணவர் வற்சப்பில் வருகிறார். இந்தா உன்னோடை கதைக்கவேணுமாம் என்கிறார். நான் அவர்களுக்கு விபரத்தைக் கூறுகிறேன். என்னை போனில் வைத்துக்கொண்டே கொழும்புக்குப் போன் செய்கின்றனர். கஷ்டமருக்கு சரியான தகவல் சொல்ல வேணுமல்லா? நிறையத் தடவை போன் செய்தும் நீங்கள் ஏன் போனை எடுக்கவில்லை என்று கேட்க அந்தப்பக்கம் ஏதோ சொல்கிறார். பதினொரு மணிவரை Office இல் நிக்கவேணும். வேறை அலுவல் பார்க்கப் போகக்கூடாது என்று திட்டிவிட்டு, அக்கா இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள்ள உங்களுக்கு மெயில் போடுறம் என்றுவிட்டு கணவரிடம் போனைக் குடுக்க, அப்ப சரி பிறகு கதைக்கிறன் என்றுவிட்டு மனிசன் போனை நிறுத்த, எனக்கு முன்னர் இப்பிடித் திட்டுவதாக நடித்துவிட்டு என்ன செய்யப்போறாங்களோ என்ற யோசனை ஓட வேறு வழியின்றிக் கண்ணயர்கிறேன். அடுத்தநாள் காலை எழுந்து பார்த்தால் கொழும்பு முகவர் எனக்கு 18ம் திகதிக்கு அதே டோகா வழியாக டிக்கட் போட்டு இது ஓகே என்றால் மெயில் செய்யுங்கள் என்று தகவல் அனுப்புகிறார். அவரைப்பற்றி முறைப்பாடு கொடுத்துவிட்டு மீண்டும் அவருக்கு போன் செய்யவும் ஒரு மாதிரியாக கிடக்க, ஒன்பதரைக்கு அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் கதைக்க, நீங்கள் அவரிடம்தான் கதைக்கவேண்டும். அவர் இன்று மூன்றரைக்குத்தான் வருவார் என்கிறா. வீட்டில் வேலைகள் நடந்துகொண்டிருக்க இன்னும் எத்தனை நாட்களில் முடித்துத் தருவீர்கள் தம்பி என்று பொறுப்பானவரைக் கேட்க இன்னும் ஒரு நாளில் உள் வேலை முடிந்துவிடும். அதுக்கு அடுத்தநாள் வெளிவேலை முடித்து உங்களிடம் திறப்புத் தாறன் அக்கா என்கிறார். அன்று பத்தாம் திகதி. 18 என்றால் கொழும்பு போக ஏழு நாட்கள் இருக்கு. இரண்டு நாளில் திறப்புத் தந்தால் ஒருநாள் சினிமாவுக்கும் போகலாம். திரியாய்ப் பாரைக் கருவாடும், மிச்சசொச்சச் சாமான்களும் வாங்கவும் நேரம் போதுமானதாக இருக்கும் என்று கணக்குப் போட்டபடி மதிய உணவுக்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டு அப்பப்ப அவர்கள் செய்யும் வேலைகளையும் கண்காணித்துவிட்டு மீன்காறருக்காகக் காத்திருக்கிறேன். பதினொரு மணிக்கு அவர் வர அவரிடம் பொரிப்பதற்கு நான்கு சிறிய மீன்களும் குழம்புக்கு ஒரு விளை மீனும் 700 ரூபாய்களுக்கு வாங்கி சுத்தம் செய்து வளவில் கிடந்த மரவள்ளியை இழுத்து அதிலும் ஒரு கறியை வைத்துவிட்டு நிமிர 12.30 ஆக சுடச் சுட உண்டபின் ஒருமணிநேரம் போனில் நாடகங்கள் ஓடஓடப் பார்த்துக்கொண்டிருக்க, வேலை செய்யும் எட்டுப் பேரும் கடையில் வாங்கிவந்த உணவுப்பொதிகளைத் திறக்க, சரி அவர்கள் உண்டு முடித்து ஓய்வெடுத்து மீண்டும் வேலை தொடங்க ஒரு மணித்தியாலம் ஆகிவிடும். நானும் ஒரு மணித்தியாலத்துக்கு அலாம் வைத்துவிட்டுக் கட்டிலில் சாய்கிறேன். 2.30 இற்கு அலாம் அடிக்க எழுத்து உடனேயே கொழும்பு முகவருக்குப் போன் செய்ய, அவர் இன்னும் வரவில்லை ஒரு மணிநேரம் கழித்து எடுங்கள் என்கிறார் அந்தப் பெண் மீண்டும். ஒரு மணி நேரத்தில் பின் மீண்டும் அழைக்க அந்த ஆண் குரல் போலவே ஒருவர் கதைக்கிறார். ஆனால் வேறு பெயர் சொல்கிறார். வேண்டுமென்றே அப்படிச் சொல்கிறாரா என்ற ஐயம் எழ, அவர் எங்கே என்கிறேன். அவர் ஒரு அரைமணி நேரத்தில் வந்துவிடுவார். வந்ததும் உங்களுக்குக் கட்டாயம் போன் செய்யச் சொல்கிறேன் என்கிறார். சொன்னதுபோலவே அரைமணி நேரத்தில் போன் வருகிறது. என்ன தம்பி 18 விமானம் ஓடுமா? அல்லது சும்மாதான் டிக்கட் புக் செய்திருக்கா? உள்ளதைக் கூறுங்கள். என் மகளுக்கு 18 ம் திகதி சிவில் வெடிங்க் இருக்கு. நான் இரண்டு நாட்களுக்கு முன்பாவது அங்க நிக்கவேணும். தயவுசெய்து எனக்கு டிக்கட்டை மாத்தித் தாருங்கள் என்று அழுவாரைப்போல் சொல்கிறேன். அக்கா அவங்கள் எங்களுக்குத் தந்ததைத்தான் உங்களுக்குப் போட்டிருக்கிறம். “நீங்கள் இப்ப எங்க நிக்கிறியள்? கொழும்பிலா யாழ்ப்பாணத்திலா? “நான் யாழில்தான் நிக்கிறன்” “அப்ப உடனம் வெளிக்கிட்டு கொழும்பு வாங்க. இங்க வந்து கட்டார் ஏயாயர்வேஸ் நிறுவனத்துக்கு நேரில் சென்றீர்கள் என்றால் அங்க மாத்திக் குடுக்கிறாங்கள் எண்டு சொல்லினம்” “சரி அப்ப இண்டைக்கே கிளம்புறன், நன்றி தம்பி” ஒரு நிமிடம் என்ன செய்யலாம் என்று கண்களை மூடி யோசித்தவுடன் முக்கியமான வேலைகள் முடிந்திட்டுது. இங்க நிக்க நிக்க பிரச்சனை கூடினாலும். கிளம்புவதே நல்லது என்று முடிவெடுத்து பொறுப்பான பெடியனுக்கு போன் செய்ய அவரும் அரை மணி நேரத்தில் வருகிறேன் என்கிறார். பின்னர் இரவு கொழும்பு செல்லும் வான்களுக்கு அடித்து ஒரு இடம் தருமாறு கேட்க, இரவு எழு மணிக்கு ஒரு வான் வெளிக்கிடுவதாகக் கூற சரி என்றுவிட்டு உடனேயே அறைக்குச் சென்று தேவையானவற்றை எடுத்துக்கொண்டு எனது மிச்சக் கறிகள், மற்றும் அனைத்து உணவுப் பொருட்களையும் வீட்டின் மாற்றப் பகுதியில் இருப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டு,எனது சமையல் உபகரணங்கள் மற்றும் மண்வெட்டி கடப்பாரை, அலவாங்கு என்பவற்றையும் உள்ளே எடுத்து வைத்துவிட்டு அனைத்துக் கதவுகள் யன்னல்களையும் மூடித் திறப்பெடுக்க பொறுப்பானவர் வருகிறார். அவரிடம் முன் கதவுத் திறப்பைக் கொடுத்துவிட்டு வேலை முடிந்ததும் கணவரின் தங்கையிடம் திறப்பைக் கொடுக்குமாறு கூறிவிட்டு பிக்மீ மூலம் ஓட்டோவை வரவழைத்து வேலையாட்கள் முதற்கொண்டு அனைவரிடமும் விடைபெற்று வீட்டில் நின்ற உடையுடன் ஓட்டோவில் ஏறி அமர கண்களில் நீர் முட்டுகிறது. ஐந்து மாதங்கள் சும்மா நின்ற என்னை விதி இப்படி ஓட விடுகிறதே என எண்ணியபடி இணுவிலுக்கு சித்தி வீட்டுக்குக் கிளம்புறேன். போகும் வழியில் கணவரின் தங்கைக்கு விபரத்தைக் கூறி இன்னும் இருபது நிமிடங்களில் வந்துவிடுவேன். திரித்து வைத்த அரிசிமா, மிளகாய்த்தூள், குரக்கன, கோப்பித்தூள் என்பவற்றை சித்தி வீட்டுக்குக் கொண்டுவரும்படி கூறுகிறேன். நான் பிறந்து வளர்ந்த வீட்டில் தான் சித்தி இருக்கிறார். வயதானவர். அங்குதான் நான் போய் இறங்குவது. எனது பயணப் பொதிகளும் அங்குதான் வைத்திருந்தேன். போய் இறங்கியவுடன் சித்தியிடம் விடையத்தைக் கூறிவிட்டு சூட்கேசைத் திறந்து பிள்ளைகளுக்கு வாங்கிய உடைகளை எல்லாம் எடுத்து வைக்க நிரம்பிவிடுகிறது. திரும்பிப் போகும்போது போடவேண்டிய குளிராடைகள், காலனி எல்லாம் எடுத்து வைத்துவிட்டு நிறுத்துப் பார்க்க 23 kg காட்ட அதைப் பூட்டி வைத்துவிட்டு அடுத்ததைத் திறக்க மச்சாள் உணவுப்பொதிகளுடன் வந்து சேர அதையும் வைத்துவிட்டு நிறுக்க அது 23.6 என்று காட்ட, அட இனி வேறு எதுவுமே வைக்க முடியாதே என்றபடி கையில் கொண்டு போகும் சிறியதை எடுத்து முக்கியமான ஆவணங்கள் சில ஆடைகள் துவாய்கள், எண்டு அடுக்க அதுவும் ஏழு கிலோ எனக் காட்டுது. இனிமேல் உந்த அரிசிமா, மிளகாய்த்தூள் எதுவும் கொண்டுபோவதில்லை என எண்ணியபடி நேரத்தைப்பார்க்க மாலை ஆறு மணி என்கிறது மணிக்கூடு, இன்னும் ஒருமணிநேரம் இருக்கு. சாப்பிட்டுவிட்டுப் போவதுதான் நல்லது என எண்ணி மச்சாளிடம் சொல்ல அவர் கொண்டுவந்த இடியப்பத்தைத் தருகிறார். இடியாப்பம் உண்டபடியே சித்தி மற்றும் கேள்விப்பட்டு வந்த முன்வீட்டு அக்கா ஆகியோருடன் கதைத்துக்கொண்டிருக்க வான்காரர் இன்னும் பத்து நிமிடத்தில் வருவதாக போன் செய்கிறார். அப்பதான் எனது ஸ்கூட்டி அங்கு வெளிப் விறாந்தையில் நிற்பது தெரிய எப்படி அதை உள்ளே தூக்கி விடுவது என்று யோசித்துக்கொண்டிருக்க, என் ஒன்றுவிட்ட அண்ணா ஓட்டோ ஒன்றில் வந்து இறங்குகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஸ்கூட்டியை உள்ளே தூக்கி வைத்த சிறிது நேரத்தில் வானும் வர உடை மாற்ற மறந்துவிட்டது அப்போதுதான் நினைவில் வருகிறது. எல்லாவற்றையும் வைத்துப் பூட்டிவிட்டேன். திரும்பத் திறந்து எடுக்க நேரம் போய்விடும். ஒரு பிஜாமாவும் முழுக் கைச் சட்டையும் போட்டிருந்ததானால் அப்படியே போவோம். இரவுப் பயணம் தானே என முடிவெடுத்து காலணியை அணிய வான் வந்து நிற்கவும் சரியாகிறது. ஓட்டுனர் இருக்கைக்குப் பின்னால் எனக்கு இடம் கிடைக்க ஜன்னலில் தலையணையை சாய்த்து வைத்துவிட்டு தூங்க முயல, அப்பதான் கொழும்பில் தங்குவதற்கான ஒழுங்கை இன்னும் செய்யவில்லை என்கிற நினைவு வருகிறது. போனில் Hotel சிலதைத் தேடிப் பார்த்தால் அந்தஇரவு எதுவும் காலி இல்லை என்று காட்ட பயமும் எட்டிப் பார்க்க, தெரிந்த வான் ஓடும் ஊர் பெடியன் ஒருவருக்கு போன் செய்ய தான் தேடிப் பார்த்துச் சொல்வதாகக் கூறுகிறார். அரை மணி நேரம் செல்ல எல்லா கொட்டேலும் இடம் இல்லை என்கின்றனர். எனக்குத் தெரிஞ்ச இடம் ஒண்டு இருக்கு. அது உங்களுக்கு சரிவருமா என்று தெரியவில்லை என்கிறார். எதுக்கும் அதை புக் செய்யுங்கோ. பிறகு நான் பார்க்கிறேன் என்கிறேன். அவர் தொலைபேசி இலக்கத்தைப் போட்டு எதுக்கும் நீங்களும் கதையுங்கோ என்றதும் நான் போன் செய்கிறேன். அட்டாச் டாய்லெட் பாத் இருக்கா, ஏசி இருக்கா என்று கேட்க எல்லாத்துக்கும் ஓம் என்கிறார். ஒரு நாளுக்கு நான்காயிரம் என்றதும் காலை 3.30 -4.00 இக்குள் வருவேன் என்றுவிட்டு போனை வைக்கிறேன். 3.45 இற்கு வான் என்னைக் கொண்டுபோய் இறக்க ஆளரவமற்ற இடத்தில் நிற்பது போல் இருக்க போன் செய்கிறேன் அவர் எடுக்கவில்லை. பதட்டமும் சேர எனக்கு புக் செய்தவருக்கு போன் செய்ய அவரும் உடனே எடுத்துக் கதைப்பதாகக் கூறி வைத்துவிட கொட்டாவி விட்டபடி ஒருவர் வந்து கதவைத் திறக்கிறார். வான்காரரும் அவருமாக எனது பொதிகளை இழுத்துவந்து முதலாம் மாடியில் அறைக்கு முன்னால் வைத்துவிட்டுச் செல்ல சசி என்பவர் கதவைத் திறக்கிறார். உள்ளே சென்று fan போட்டதும் காற்றோட்டம் இல்லாத அறை என்று மணம் சொல்ல டாய்லெட்டீன் உள்ளே சென்று பார்க்கிறேன். பரவாயில்லை என்று எண்ணியபடி திரும்ப பக்கத்திலும் ஒரு கதவு தெரிய குளியலறைதான் தனியாக இருக்கோ என்றபடி திறந்தால் அது இன்னொரு அறை. ஆனால் நல்ல வேளை யாரும் அங்கில்லை. உடனேயே என்ன தம்பி தனி அறை என்று சொன்னீர்கள். இரண்டு அறைகள் இருக்கு. என்னால் இங்கு தங்க முடியாது. வேறை அறை மாற்றுங்கள் என்கிறேன். இப்ப மாற்ற முடியாது அக்கா. அந்த அறையில் யாரும் இல்லை. அதன் திறப்பையும் பூட்டி உங்களிடமே தருகிறேன். நீங்கள் கொண்டியையும் போடுங்கள். யாரும் வர முடியாது என்கிறார். கணவரிடம் விபரம் கூற சரி நாளைக்கு வேற இடம் பாரான் என்றுவிட்டு அவரும் தூக்கக் கலக்கத்துடன் போனை வைக்கிறார். வானில் 7 மணிநேரம் இருந்து வந்ததில் முதுகு வலிவேறு. கொண்டுவந்த துவாயை தலையணைக்குமேல் விரித்துவிட்டு காலை 6.30 இற்கு அலாம் வைத்துவிட்டுப் படுத்ததுதான். இரண்டரை மணிநேரம் நல்ல தூக்கம். எழுந்து பல் துலக்கித் தோய்ந்துவிட்டு வெளியே வந்து தலைகாயவிட்டு நல்ல ஆடைகளை அணிந்தபடி அறையைப் பூட்டியபடி வெளியே வந்தால் யாரையுமே காணவில்லை. அந்த சசி என்பவருக்கு போன் செய்தால் அவரும் போனை எடுக்கவில்லை. நிமிர்ந்து பார்த்தால் அந்த கொட்டேலுக்குப் பெயரையும் காணவில்லை. நடந்து வெளியே வந்தால் ஒரு சிறிய வீதி தெரிகிறது. தொடர்ந்து நடக்க ஒரு பிரதான வீதி தெரிய வீதியில் போய் ஒருவரை நிறுத்தி ஏதும் உணவகம் இருக்கிறதா என்று கேட்க நேரே நடந்து போக ஒன்று வருவதாகக் கூற நடந்து செல்கிறேன். இப்போது எனக்கு இடம் கொஞ்சம் விளங்குகிறது. நான்கு மாதங்களின் முன்னர் விசா எடுப்பதற்காக வந்தபோது அதற்கு அண்மையில் உள்ள தங்குவிடுதியில் தங்கி இங்கு வந்து உணவு உண்டிருக்கிறேன். அங்கு சென்று தோசையும் சாம்பார் வடையும் உண்டு கோப்பியும் குடிக்க ஒரு உற்சாகம் வருகிறது. அங்கிருந்தவாறே ஒன்லைனில் கட்டார் ஏயார்வேஸ் முகவரியை எடுத்து பிக்மீ யில் போட்டுவிட்டு ஒரு ஓட்டோவின் இலக்கமும் ஓட்டுநரின் பெயருடன் 4 நிமிடங்களில் வருவதாகக் காட்ட வெளியே வந்து போகும் ஓட்டோக்களைப் பார்க்கிறேன். ஓட்டோக்காரரிடம் இருந்து போன் வர எடுத்துக் கதைக்க எங்கே நிற்கிறீர்கள் என்று கேட்கிறார். அந்த உணவகத்துக்கு முன்தான் என்று கூற நானும் அங்குதான் நிற்கிறேன் என்றவர் எனக்கு அருகில் வருகிறார். ஓ நீங்கள் தானா என்றபடி அவருடன் சென்றால் அவரின் ஓட்டோ வேறு இலக்கம் காட்டுகிறது. இதில் நான் வரமுடியாது. என்னிடம் பிக்மீயில் வந்த இலக்கம் இதில்லை. என்றபடி நான் திரும்பிவர, பயமில்லை வாங்கோ என்று அவர் ஆங்கிலத்தில் கூற நான் மறுப்பாகத் தலையாட்டிவிட்டு பிக்மீயை கான்சல் செய்துவிட்டு புதிதாக ஒன்றைப் போட ஐந்து நிமிடங்களின் பின் இன்னொன்று வர அதில் ஏறி அமர்கிறேன். நேரம் எட்டேகால். அங்கு போவதற்கு முக்கால் மணிநேரம் காட்டுகிறது. ஒன்பதுக்குள் போய்விடலாம் என்று எண்ணினால் வீதியில் மெதுவாக நகர்கின்றன வாகனங்கள். 9.15 இற்கு World Trade Centre என்னும் கட்டடத்தின் முன்னால் ஓட்டோ நிற்க, பணத்தைக் கொடுத்துவிட்டு இறங்கி உள்ளே சென்றால் நூறுக்கும் அதிகமானவர்கள் Qatar Airways நிறுவனத்தின் முன்னால் நிற்கின்றனர். வரிசை ஒன்றும் இல்லையா என்று நின்றவர்களிடம் கேட்க, ஏற்கனவே நூறுவரை இலக்கங்கள் கொடுத்துவிட்டார்கள். எதுக்கும் இடதுபுறமாகத் திரும்பிச் சென்றால் அங்கே ஓர் அறையில் இலக்கங்கள் கொடுக்கிறார்கள் என்று கேள்வி என்கிறார் ஒருவர், சென்று பார்த்தால் ஒரு அறையின் வெளியே பத்துப்பேர் நிற்க, எங்கே டோக்கிண் கொடுக்கிறார்கள் என்று கேட்க, நாங்களும் அதற்குத்தான் நிற்கிறோம். ஆனால் யாரும் டோக்கிண் கொடுப்பதாகத் தெரியவில்லை என்கிறார் இன்னொருவர். நான் அந்த அறையைப் பார்க்கலாமா என்று கேட்க ஓ போய்ப் பாருங்கள் என்கின்றனர். நான் சென்று பார்த்தால் அங்கே ஒரு ஐம்பது பேர்வரை கதிரைகளை நிறைத்திருக்க நிர்வாக அதிகாரிகளின் இடமோ வெறுமையாக இருக்க வெளியே வந்து இதுவரை இலக்கம் கொடுக்கப்படவில்லையா என்கிறேன். இல்லை என்று அவர்கள் தலையாட்ட இனி இதில் நின்று பயனில்லை என எண்ணி முன்பக்கமாக வர பதினோராம் இலக்கம் கூப்பிடப்படுகிறது. அங்கு கூடி நின்ற சிலரிடம் விபரங்களை அறியலாம் என்று கதைக்க, இருவர் யேர்மனியிலும் மற்றவர் மூவர் சுவீசிலும் ஒருவர் லண்டனிலிருந்தும் வந்தாகக் கூறுகின்றனர். அதில் இருவர் தான் காலை ஆறரையில் இருந்து வரிசையில் நின்று நம்பர் எடுத்ததாகக் கூற அவரின் இலக்கம் கேட்டால் 40 என்கிறார். மற்றவர் 17 மற்றும் 25 என்கின்றனர். அப்ப உங்கள் இலக்கம் என்ன என்று மற்றவரைக் கேட்க, நான் இவருடன் வந்தனான் என்கிறார். அப்ப இன்று நின்று பயன் இல்லை. காலை நான்கு மணி போல்தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து களைத்துவிட்டேன். இனிப் போட்டு நாளை காலை 6 மணிக்கு வரவேண்டியதுதான் என்றபடி கிளம்ப எத்தனிக்க, சுவிசில் நின்று வந்த ஒருவர் “தங்கச்சி இவ்வளவு தூரம் வந்திட்டியள். போகாமல் தனிய நிற்கும் வேறு யாரையாவது சேர்ந்து போகக் கேட்டுப் பாருங்கோ என்கிறார். உங்களுக்கு யாரையும் தெரியுமா என்று கேட்க, நாங்கள் மூன்று பேர்தான் நம்பர் எடுத்தது. மற்றவை எங்களோட சேர்ந்து வர நிக்கினம். போய் ஆரையும் விசாரியுங்கோ என்கிறார். கேட்டு யாரும் மாட்டான் என்று சொன்னால் என்ன செய்யிறது என்று தயக்கமாகவும் இருக்க, இரு பெண்கள் நிற்பதைப் பார்த்து அவர்கள் அருகில் செல்கிறேன். நீங்கள் எங்கு போகிறீர்கள் என்று கேட்க கனடா செல்லவேண்டும். 48 ம் இலக்கம். மாலைதான் கூப்பிடுவினம் போல கிடக்கு என்கிறார் தாய். நான் என் விபரங்களைச் சொல்லி அங்கலாய்த்துவிட்டு நானும் உங்களோட உள்ளே வரலாமோ என்று கேட்க, மகள் வங்ககோ அன்ரி என்கிறா. அப்பாடா என்று மனம் நிம்மதியடைய வாயிலில் நிற்கும் பாதுகாப்பு அதிகாரி விடாது தடுத்தால் என்ன செய்வது என்று எண்ணியபடி முதலில் கதைத்த குழுவினரிடம் வந்து வாசலில நிற்பவர் இருவரை ஒன்றாக விடுவாரா என்ற சந்தேகத்தைக் கேட்க, வெள்ளையள் எல்லாம் அப்பிடித்தான் போயினம். உள்ளே இரண்டே இரண்டு கவுண்டர்கள் தான் இருக்கு. ஒவ்வொரு கவுன்டரிலும் இரண்டு கதிரைகள் போட்டிருக்கு. அதனால பிரச்சனை இல்லை என்கிறார். நேரம் 10.30 என்று காட்ட 17 ம் இலக்கம் கூப்பிடப்படுகிறது. உள்ளேயே பெரிய உணவகம் ஒன்று காணப்பட, அங்கு சென்று ஒரு Hot Chocolate வாங்கி அங்கிருந்தே குடித்துவிட்டு மீண்டும் வெளியே வந்து அந்த இரு பெண்களின் அருகில் சென்று கதைத்துக்கொண்டு இருக்கிறேன். சிறிது நேரம் செல்ல இன்னொரு இந்தியப் பெண் அருகில் வருகிறார். தான் இத்தாலியில் இருந்து வந்ததாகவும் இப்ப தான் உள்ளே வந்ததால் இலக்கம் கொடுத்துமுடித்துவிட்டார்கள் என்று தான் அறிந்ததாகவும் கூறி உங்களில் யாராவது ஒருவர் என்னையும் சேர்த்துக்கொள்கிறீர்களா என்று கேட்க, நாங்கள் மூவரும் சேர்ந்து போகிறோம் என்கிறா மகள். அப்படியா என்று கேட்டுவிட்டு அவர் நகர உங்கள் அம்மாவும் கனடா வருக்கிறாரா என்று கேட்க இல்லை என்று அவர் சொன்னதான் பின் தான் நான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன். மீண்டும் அலுவலக வாசலில் நிறு உள்ளே பார்க்க அவர்கள் ஆடிப்பாடி வேலை செய்வதுபோல் தெரிய, இப்பிடி அவசரமான நேரத்திலையாவது அதிகமான வேலையாட்களைப் போட்டால் என்ன. இவர்கள் இருவரும் எத்தனை மணிக்குப் பார்த்து முடிக்கப் போகிறார்களோ என்கிறேன். உள்ளே இருந்து வாயிற்காப்பாளர் வர எத்தனையாம் இலக்கம் போயிருக்கு என்று கேட்க 19 என்கிறார். உள்ளே நடப்பது ஏதும் விளங்காதுவிட்டாலும் சும்மா பார்த்துக்கொண்டே நிற்கிறேன். மூன்று வெள்ளையர்கள் வந்து வாயிலில் நிற்பவரிடம் டிக்கற் மாற்றவேண்டும் என்கின்றனர். வாருங்கள் என அழைத்துக்கொண்டு நான் போய் வந்த பின்பக்க அறைக்குக் கூடிக்கொண்டு போக, நானும் அவர்களுடன் போவோமா என்னும் எண்ணம் ஒரு நொடி எழுந்தாலும் உள்ளதும் கெட்டுவிடும் என எண்ணியபடி வாசலுக்குத் தள்ளிப் போய் நிற்க ஒரு பெடியன் எனக்கு அருகில் வந்து நிற்கிறார். நான் அவரைத் திரும்பிப் பார்க்க அவரும் என்னைப்பார்த்து சிரித்துவிட்டு நிற்க, உன் இலக்கம் என்ன என்கிறேன். 38 என்றவர் உன் இலக்கம் என்ன என்கிறார். நான் காலையில் தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தேன். இலக்கம் எல்லாம் கொடுத்துவிட்டார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு இலக்கத்தில் இரண்டு மூன்று பேர் கூடப் போகிறார்கள். நீ என்னைக் கூட்டிக்கொண்டு போகிறாயா என்று கேட்க, அதனால் என்ன என்னுடன் வா என்கிறார். எனக்கு மனதில் மகிழ்ச்சி எட்டிப்பார்த்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாது நிற்கிறேன். நேரம் 12 என்று தொலைபேசி நேரம் காட்ட அதை மூடி வைத்துவிட்டுத் திரும்பினால் என்னருகில் அந்தப் பெடியனைக் காணவில்லை. நான் மீண்டும் போய் அந்தப் பெண்கள் இருவருடனும் கதைத்துக்கொண்டு நிற்கிறேன், ஆனால் அந்தப் பெடியிடம் சேர்ந்து போகக் கேட்ட விடயத்தை மட்டும் சொல்லவில்லை. நீண்ட நேரம் நின்றதில் கால்கள் வலியெடுக்க சுற்றுமுற்றும் பார்க்கிறேன். நீர் பூப்போல் தூவிக்கொண்டிருக்க சுற்றிலும் கட்டியுள்ள கட்டில் பலரும் இருந்துகொண்டிருக்க நானும் அதில் சென்று அமர இரு யேர்மன் நாட்டினர் வந்து எனக்கு அருகில் அமர்கின்றனர். தாங்கள் நேற்றும் வந்ததாகவும் நேரம் போய்விட்டதனால் இன்று வரச்சொன்னதாகக் கூறுகின்றனர். அரைமணி நேரத்தில் அவர்கள் எழுந்து சென்றுவிட அந்தத் தாயும் மகளும் என்னருகில் வந்து அமர்கின்றனர். நீங்கள் ஏதும் சாப்பிட்டீர்களா? என்கிறேன். நாங்கள் காலையிலேயே சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தோம். சிறிது நேரத்துக்கு முன்தான் உந்த உணவகத்துக்குச் சென்று கோப்பி குடித்துவிட்டு வருகிறோம். நீங்கள் எதுவும் சாப்பிட்டீர்களா என்று கேட்க, பசிக்கிறமாதிரி இருக்கு என்கிறேன். அப்ப போய் சாப்பிட்டுவிட்டு வாங்கோ. இன்னும் நிறைய நேரம் இருக்கே என்கின்றார் மகள். நானும் சென்று பார்த்தால் மரக்கறி உணவுகள், மச்ச மாமிச உணவுகள் என்று அடுக்கி வைத்திருக்கும் நேர்த்தியைப் பார்த்தால் எதையும் சாப்பிடலாம் போல் இருக்க, எதுக்கும் மரக்கறி உணவையே உண்போம் என்று சிவப்பு அரிசிச் சோறு மற்றும் ஐந்து கறிகளுடன் தண்ணீர் போத்தல் மற்றும் புடிங் என்று எடுக்க 900 இலங்கை ரூபாய்கள் தான். ஆற அமர இருந்து உண்டு முடித்துவிட்டு வெளிவந்து நிறுவன முகப்புக்கு வந்தால் அந்தப் பெடியன் நிக்கிறார். நீ சாப்பிட்டுவிட்டாயா என்று கேட்க சாப்பிட்டு சிகரற்றும் பற்றிவிட்டு வந்துவிட்டேன் என்கிறார். அப்பதான் நீ எங்கு செல்கிறாய் என்று கேட்க இற்றாலி என்றவர் நீ எங்கே என்கிறார். நான் யூகே என்றதும் நீ தமிழ் கதைப்பாயா என்கிறேன். எனக்கு சிங்களமும் ஆங்கிமும் மட்டும்தான் என்றவுடன், வாயிற் காப்பாளர் ஏதும் கண்டுபிடித்துத் தடுத்துவிடுவாரோ என்ற பயம் எழ, உன் பெயர் என்ன என்கிறேன், ஆண்டனி என்றவுடன் நான் நிவேதா என்கிறேன். என் கையைப் பிடித்துக் குலுக்கியபடி உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றபின் அவரைப் பற்றிய வேலை வசிப்பிடம் என்பவற்றைக் கேட்டு அறிகிறேன். நாம் இருவரும் நின்ற இடத்துக்கு அருகில் இன்னொருவர் வருகிறார். அவரை இலங்கையரா அல்லது ஆபிரிக்க நாட்டவரா என்று அடையாளங்கான முடியவில்லை. உங்கள் இலக்கம் என்ன என்று கேட்க 38 என்கிறேன். நான் இப்பதான் வருகிறேன். என்னையும் கூட்டிக்கொண்டு செல்ல முடியுமா என்றதற்கு நான் திகைப்புடன் பார்க்க ஆண்டனி நானும் இவவும் சேர்ந்து போகிறோம். உள்ளே மூன்றுபேரை விடுவார்கள் என்றால் நீயும் வரலாம் என்கிறார். என்னடா இது நானே ஒட்டிக்கொண்டு போக இவர் வேறு எல்லாவற்றையும் கெடுக்கப் போகிறார்போல என மனதில் எண்ணியபடி பேசாமல் இருக்கிறேன். 31 ம் இலக்கத்தைக் கூப்பிட இன்னும் ஏழுதான் என மனம் குதூகலிக்கிறது.
  4. விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை விடுமுறைக்கு நாட்டுக்குப் போவதாக இருந்தால் பொதுவாக என் குடும்பத்தைத் தவிர வேறு யாரிடமும் அதை ப் பற்றி நான் கதைப்பதில்லை. “எதற்கு வில்லங்கத்தைச் சும்மா வாங்க வேண்டும்?” என்ற உயரிய எண்ணம்தான் அதன் காரணம். ஆனால், சில சமயம் வில்லங்கம், நாங்கள் தேடாமல் எங்களைத் தேடித் தானாக வந்து விடும். அடுத்த நாள் எனது பயணம். செய்ய வேண்டிய வேலைகள் சில இருந்தன. அப்போது அலைபேசி அழைத்தது. அழைப்பு நியூசிலாந்தில் இருந்து வந்திருந்தது. அங்கு வசிக்கும் எனது உறவினர் ஒருவர். என்னை “தம்பி” என்று உரிமையோடு அழைப்பார். நானும் அவரின் பெயரின் பின்னால் “அக்கா” சேர்த்துஅழைப்பேன். “என்ன, சிறீலங்கா போறியாம்?” “சிறீலங்காவுக்கா? யார் சொன்னது?” “விடாதை . கதை விடாதை . எனக்குத் தெரியும். சிறீலங்காவிலையிருந்து எனக்கொரு தாலிக்கொடி வாங்கி அனுப்பிவிடுறியே?” தங்கம் விற்கும் விலையில் தாலிக்கொடி வாங்க வேண்டுமா என்ற எண்ணத்தில் தலை சுற்ற ஆரம்பித்தது. நல்லவேளை அவர் அடுத்ததாகச் சொன்னவார்த்தைகளில் நான் தப்பித்தேன். “பவுணில இல்லை. இமிட்டேஷன் தாலிக்கொடி. இஞ்சை எனக்குத் தெரிஞ்ச ஒருத்தியின்ரை மகளுக்கு கொஞ்ச நாளைக்கு முன் கல்யாணம் நடந்தது. அவையள் ஹொலிடேக்குப் போயினம். போற இடத்திலை சொந்தக்காரர்கள் வீட்டுக்கும் போவினம். பவுண் தாலிக்கொடியை போட்டுக் கொண்டு போய் எதுவும் நடந்தாலும் எண்டு பயப்படுயினம். அதுக்குத்தான். வெள்ளவத்தையில வாங்கலாம். ‘யாழ்ப்பாணத் தாலிக்கொடி’ என்று கேள். வட்டமா இருக்கும்.” நான் பயணத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்க முயன்றாலும், வில்லங்கம் எப்படியோ என்னைத் தேடி வந்துவிடும் போல. இந்த இமிட்டேஷன் யாழ்ப்பாணத் தாலிக்கொடியே அதற்கான ஆரம்பமாக இருக்கப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. கொழும்பில் நான் வழமையாகத் தங்குவது என் நண்பன் கணேசனின் வீட்டில். அவன் சட்டத்தரணியாக இருந்த காலத்தில் மாலை நேரத்தில் மட்டும் “தீர்த்தம்” அருந்துவான். இப்போது வயதும் ஓய்வும் சேர்ந்து, மதியம் ,மாலை இரு வேளைகளிலும் தீர்த்தக் களிப்பில் இருக்கிறான். இந்த வருடப் பொங்கலை அவனுடனேயே கொண்டாடினேன். 40, 45 வருடங்களுக்கு பிறகு நான் காணும் பொங்கல் அது. பொங்கல் முடிந்து இரண்டுநாட்களுக்குப் பிறகு நியூசிலாந்து அக்கா கேட்ட யாழ்ப்பாணத் தாலிக்கொடி நினைவுக்கு வந்தது. அதை வாங்கி அனுப்பிவிட்டு அடுத்த வேலையைப்பார்க்கலாம் என்று கடைகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். நான் வாங்கி வந்த தாலிக்கொடியைப் பார்த்து கணேசனின் மனைவி உடனேயே சொன்னார், “பிழையா வாங்கிட்டீங்கள். இது இமிட்டேஷன் என்று அப்பிடியே காட்டிக்குடுக்கும்.” சொன்னதோடு மட்டும் நின்று விடாமல், தனது கழுத்தில் இருந்த தடித்த தாலிக்கொடியைக் காட்டினார். “இது செய்து எத்தினை வருசமாச்சுது . செத்த பாம்பு மாதிரி இருக்குது. அவன் வாங்கினது சரிதான். யாழ்ப்பாணத் தாலிக்கொடி இப்பிடித்தான். இதுதான் இப்ப பாஷன்” என்று கணேசன் என்னைக் காப்பாற்றினான். “சிவபெருமான் கழுத்தில சுத்தியிருக்கிற பாம்பு மாதிரி…” என்று முணுமுணுத்தபடி கணேசனின் மனைவி எங்களை விட்டு அகன்றார். அடுத்த நாள் அந்த யாழ்ப்பாணத் தாலிக்கொடியை நியூசிலாந்துக்கு அனுப்பி வைத்தேன். அந்தத் தாலிக்கொடி வாங்கச் சென்றபோது ஒரு கடையில் பார்த்த ஒரு விளம்பரம் என்னைச் சற்று யோசிக்க வைத்தது. “மாணிக்கக்கற்கள் பொருந்திய நகைகள் 40% முதல் 60% வரை தள்ளுபடி” என்று ஒரு கண்காட்சி விளம்பரம். சும்மா போய் பார்த்து வரலாம் என்று நினைத்து அந்த கண்காட்சிக்குச் சென்றேன். இடம் கொள்ளுப்பிட்டிய. அங்கு சென்றபோது, மூன்று ஊழியர்களும் ஒரு காவலாளியும் தவிர வேறு யாரும் இல்லை. அப்போதே திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக உள்ளேபோனேன். அங்கு சபையர் கல் பதித்த ஒரு மோதிரம் என்னைக் கவர்ந்தது. அவர்கள் சபையரை பரிசோதித்து காட்டினார்கள். மோதிரம் 14 கரட் என்று சொன்னார்கள். விலையையும் குறைத்துத் தந்தார்கள். நான் வாங்கிவிட்டேன். யேர்மனிக்குத் திரும்பினேன். சிறீலங்காவில் +30°C யேர்மனியில் -12°C என காலநிலை இருந்தது. நேரமாற்றமும் குளிரும் சேர்ந்து நீண்ட நேரம் தூங்கிக்கொண்டிருந்தேன். எழுந்தபோது சூட்கேஸ் எல்லாம் திறந்து ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. உடுப்புகள் தோயலுக்குப் போயிருந்தன. கொண்டு வந்தபொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குள் மோதிரப் பெட்டியும் இருந்தது. மனைவியை ஆச்சரியப்படுத்த வாங்கி வந்த மோதிரம். “நல்ல வடிவான மோதிரம்,” என்றாள். கண்காட்சியில் வாங்கிய விபரத்தைச் சொன்னேன். ஆனால் அந்த மோதிரத்தை நான் மீண்டும் பார்த்தபோது, வாங்கிய போது இருந்த கவர்ச்சி கல்லில்இப்போது குறைந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. தவறு கல்லிலா? இல்லை நீண்ட நித்திரையில் இருந்த என் கண்களிலா? அந்தச் சந்தேகத்தை அப்போது மனைவியிடம் சொல்லவில்லை. அவளது மகிழ்ச்சி வீணாகிவிடக் கூடாது என்று நினைத்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு வழமையான வாழ்க்கைக்கு திரும்பியபோது என் சந்தேகத்தை மனைவியிடம் கூறினேன். “கடையில குடுத்துக் கேட்டால் அதன் பெறுமதி சொல்லிவிடுவினம். வேணுமென்டால் நான் கேட்டுப் பார்க்கிறன்,” என்றாள். அடுத்த நாள் முடிவு தெரிந்தது. மோதிரம் 14 கரட் தங்கம். அதில் பொருத்தியிருந்தது உண்மையிலேயே சபையர் கல்லுதான். ஆனால் அதன் தரம் வெறும் 0.9 கரட் மட்டுமே. வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம் வந்தபின்னே அது தாழைமரம் அதாவது நான் கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ற கல் இல்லை. நான் பார்த்த மோதிரத்தை மாற்றி வேறு ஒன்றைத் தந்திருக்கலாம் என்ற சந்தேகம்உறுதியாகியது. அவர்களின் விவரங்களை இணையத்தில் தேடியபோது, நான் தனியாளாக இல்லை. எனக்குத் துணைகளும் இருப்பது தெரிந்தது. என்னைப் போல சிலவெளிநாட்டவர்களும் ஏமாற்றப்பட்டிருப்பது அங்கே பதியப்பட்டிருந்தன. யேர்மனியில் என்றால் இப்படிப்பட்ட விஷயங்களைச் சட்டப்படி சுலபமாக கையாளலாம். ஆனால் சிறீலங்காவில் நடந்த விஷயம். அதுவும் நான் யேர்மனியில்இருந்து கொண்டே முடியுமா? “விட்டு விடலாமா?” என்ற எண்ணம் ஒரு கணம் வந்தது. உடனேயே அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள்? குறைந்தபட்சம் சிலருக்காவது இது பற்றி எச்சரிக்கையைத் தரவேண்டும் முதலில் யேர்மனியில் உள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு முழு விவரத்தையும் எழுதினேன். அவர்கள் உடனடியாக பதில் அனுப்பினார்கள், “இந்த தீவிரமானவிஷயத்தை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி. உங்கள் புகாரை விசாரணைக்காக இலங்கையில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்குஅனுப்பியுள்ளோம். தகவல் கிடைத்தவுடன் தெரிவிப்போம்.” அடுத்ததாக என் வங்கியையும் தொடர்புகொண்டேன். அவர்கள் சொன்னது, “நீங்கள் வாங்கிய பொருள் உங்களிடம் இருக்கிறது. ஆகவே நேரடியாக பணத்தைத் திரும்பப் பெற முடியாது. அந்தப் பொருளைஅவர்களிடம் ஒப்படைத்து அவர்கள் பெற்றுக்கொண்டதாக உறுதிப்பத்திரம் கிடைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.” மோதிரம் வாங்கிய ரசீதைப் பார்த்தேன். அதில், “Goods once sold can be exchanged only” என்று இருந்தது. ஆனால் நான் விடவில்லை. அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினேன், “வாங்கிய பொருள் தரமற்றது. கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ப இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளைத் திருப்பி அனுப்புகிறேன். பணத்தை என் வங்கி கணக்கில் வரவு வைக்கவும். 14 நாட்களில் பதில் வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கைஎடுப்பேன்.” காத்திருந்து சரியாக 14வது நாள் அவர்கள் பதில் அனுப்பினார்கள். “நாங்கள் விற்ற பொருள் தரமானது. திருப்பிப் பெற முடியாது.” எதிர்பார்த்த பதில்தான். “அப்படியானால் நான் சட்ட நடவடிக்கை எடுக்கிறேன். உங்களின் இறுதிப் பதிலுக்கான கால எல்லை நாளை சிறீலங்கா நேரம் 14:00வரை” எனப் பதில் அனுப்பினேன். மீண்டும் நான் எதிர்பார்ததபடி நேர எல்லைக்குள் அவர்களிடம் இருந்து பதில் வந்தது, “நேரடியாக எங்கள் நிறுவனத்துக்கு வாருங்கள். நாங்கள் பேசித்தீர்க்கலாம்” “நன்றி. நான் இந்த விவகாரத்தை சட்டப்படி அணுகுகிறேன்” என அவர்களுக்கு பதிலைத் தந்துவிட்டு, அடுத்து நான் நாடியது சிறீலங்காவின் Tourist Police. மறுநாள் மாலை நேரம், கணேசனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “எதுக்கு உன்னுடைய Power of Attorneyயை எனக்கு அனுப்பியிருக்கிறாய்? அதென்ன மோதிரம்? எப்ப வாங்கினனீ? ” விஷயத்தைச் சொன்னேன். அவன் போனில் கன நேரம் என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். மாலை நேரமாக இருந்ததால் அவன் தமிழ் தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்தது.
  5. 2009 இல் நீங்களும், உங்கள் பரம்பரைகளும் பாதுகாப்பாக ஜேர்மனியில் இருந்தீர்கள் அல்லவா? ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கோ, அல்லது இலண்டனில் உள்ள விகாரைக்கோ வந்து ஒரு போத்தலில் பெற்றோலை நிரப்பி எரிய விட்டு ஏன் எறியவில்லை? ஒரு மேற்கு நாட்டில் இருக்கும், இன மத வேறுபாடின்றி மக்களின் உயிரை காக்கும் தன்னார்வ அமைப்பின் மீது தாக்குதலை நடத்ததாத இனமாக நாம் இருப்பதில் ஒரு தவறும் இல்லை. அப்படி ஏதேனும் மோட்டுதனமாக செய்திருப்பின் இன்றுவரை அது வெளிநாட்டில் எம்மை அடக்க ஒரு கருவியாக பயன் பட்டிருக்கும். இப்படியான முட்டாள் சிந்தனையாளர்கள் ஆலோசனை சொல்லும் இடத்தில் இருந்தபடியால்தான் நாமும், போராட்டமும் தலைமையும் தோற்றுப்போகும் படி ஆனது. பிகு இதை செய்தது ஈரானின் உளவு அமைப்பின் கீழ் இயங்கும் ஒரு இயக்கம். சாதாரண யூகே வாழ் முஸ்லிம்கள் அல்ல. இந்த பழியில் இருந்து தம்மை பாதுகாக்க யூகே முஸ்லிம்கள் படாத பாடு படுகிறார்கள். ஆனால் - இதைவைத்து ரிபோர்ம் கட்சி - முஸ்லிம் எதிர்ப்பை ஊதி வளர்கிறது. இப்படியா அடி முட்டாள்தனங்களை ஏன் செய்ய கூடாது, அவை இப்படி செய்தோர் சார் சமூகத்கை பாதிக்கும், இதை வரவேற்பது எவ்வளவு வடிகட்டிய முட்டாள்தனம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். இந்த தன்னார்வ அமைப்பினரோடு எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒரு படைப்பாக கீழே 👇
  6. அடுத்த கட்ட போர் தயார்ப்படுத்தல்களிற்கு தேவையான கால அவகாசத்தை பெறுவதற்கு மற்றும் ஏனைய திசை திருப்பல்களிற்கு டிரம்ப் ஐயா இப்படி கூறக்கூடும். முன்பும் பேச்சுவார்த்தை போரிற்கான கால அவகாசத்தை பெறுவதற்கு பயன்படுத்தப்பட்டது. சிறிது ஆறப்போட்டுவிட்டு பின்னர் திடீரென மூர்க்கமாக தாக்குவார்கள் என நினைக்கின்றேன்.
  7. இப்படி ஆனால், அதில் ஒரு silver line இருப்பதாகவே எனக்குப் படுகிறது. சகல வழிகளிலும் பலம் கொண்ட ஒரு தரப்பு, தன் பலத்தை ஒட்டு மொத்த நன்மைக்குப் பாவிக்காமல் (பிபி டரம்பிற்குச் செய்தது போல) " தன் பின் பக்கத்தை முத்தமிடும் ஒருவருக்காக மட்டும்" பாவித்தால் இப்படியான நிலை வரும் என்பது நிரூபிக்கப் பட வேண்டும்! அடுத்த 3 ஆண்டுகளுக்கு மட்டுமாவது பல்லைப் பிடுங்கி விட்டால், அடுத்து வரும் நிர்வாகம் கொஞ்சம் நிவர்த்திக்க இடம் கிடைக்கும். இது நடந்தால், பிபி யும் இத்தோடு அரங்கில் இருந்து அகன்று விட வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. தீய சக்திகளுக்கு பலம் நிலைத்திருக்கக் கூடாது, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி!
  8. படிப்பதினால் மட்டும் அறிவு வளர்வதில்லை. என்னடா விளையாட்டு வீட்டைபோய் படியிங்கோடா. அவன் சித்தப்பாவின் அதட்டல் அவனையும் அவன் அண்ணனையும் மற்றும் நண்பர்களையும் நடுங்கி ஒடுங்கவைக்கும். அவர் கையில் அருகே இருக்கும் வேலியில் ஒடித்த நீண்ட கிளிசூரியோ பூவரசம் கம்பு ஒன்று மேலும் கீழும் ஆடி அண்ணன் தம்பி இருவரினதும் கால் கைகளைப் பதம்பார்க்கும். இது அவர்கள் பள்ளிக்கூடம் முடிந்த மாலை நேரங்களில், லீவு நாட்களில்கூட அவர்கள் விளையாடும் இடங்களில் நடக்கும் சம்பவம். சித்திரையில் அதுவும் வருடப்பிறப்பு அன்று தம்பி பிறந்த தோசம் காரணமாகவே சில மாதங்களில் அவர்கள் அப்பா இறந்துவிட்டதாக சொந்தங்களால் காரணம் கூறப்பட்டது. காரணம் எதுவக இருந்தாலும், பெரியப்பாக்களும் சித்தப்பாவுமே இவர்கள் குடும்பத்துக்கு உதவிகள் செய்து அவர்களைப் பாதுகாத்து வந்தார்கள். ஆனாலும் சித்தப்பா சற்று வித்தியாமானவர். தான் பெற்ற பிள்ளைகளை மிகுந்த செல்லம் கொடுத்து வளர்க்கும் அவர் தன் அண்ணனின் பிள்ளைகளை அதட்டி ஒடுக்கி வைத்திருப்பதில் கர்வம் கொள்பவர். அண்ணனின் பிள்ளைகள் என்றாலும் அவர்களைச் சீராக வளர்க்கிறேன் என்று தன்னை ஒரு சிறந்த காவலனாக காட்டிக்கொள்வதில் பெருமை கொள்பவராக இருந்தார். அண்ணனின் பிள்ளைகளை ஒரு டாக்டராகவோ, எஞ்சினியராகவோ வளர்த்தெடுப்பேன் என்று எல்லோரிடமும் சொல்லி இறுமாப்படைவார். ஆனால் “படிடா படிடா” என்று படுத்துபவருக்கு என்ன படிக்கவேண்டும் எப்படிப் படிக்கவேண்டும் என்று சொல்லவோ வழிகாட்டவோ தெரியாது. ஒரு டாக்டர், எஞ்சினியர் என்றால் தன் பிள்ளைகளைத் தன்வழி வருவதற்கான வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து வளர்க்க முடியும். கடையொன்றில் சிப்பந்தியாக வேலைபார்க்கும் சித்தப்பாவால் உப்பு எப்படிக் கட்டுவது, சீனி, சக்கரை எப்படிச் சரை கட்டுவது என்பதைத்தவிர வேறென்ன சொல்லிக்கொடுக்க முடியும். “அடியாதமாடு படியாது” என்பது போன்ற முதுமொழிகளுகான விளக்கங்களை தனது பெரியப்பாவின் பிள்ளைகள்மூலமே பரிசோதனை செய்து விளங்கிக்கொள்வது வழக்கமான செயலாகியது. கல்கி, குமுதம், ஆனந்தவிகடனில் வரும் கதைகள், நாவல்கள், கட்டுரைகளைப் படித்து தம்பிக்கு தானும் ஏதாவது எழுதவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனாலும் அவன் கையெழுத்தை அவனாலேயே திரும்ப வாசிக்க முடியவில்லை. அத்தனை மோசமான எழுத்து வடிவங்கள். இருந்தும் சிறந்த எழுத்தாளர், திரைப்படங்களுக்கும் கதை வசனங்கள் எழுதி பாராட்டுகள் வாங்கும் கலைஞர் கருனாநிதியின் கையெழுத்து ரெம்பவும் மோசமானது என்பதையும், அவர் எழுதுவதை வாசிக்கக் கூடிய ஒருவரை உதவிக்கு வைத்துள்ளனர் என்ற செய்தியையும் அவன் அறியவந்ததும், வந்த தயக்கம் நீங்கியது. அவன் எழுத்தையும் வாசித்து அறியக்கூடியவர்கள் உலகில் இல்லாது இருப்பார்களா? சூரியன் காலையில் பிரகாசமாக எழுந்தான், மாலையில் ஒளியிழந்து மறைந்தான், சந்திரன் மலர்ந்தான் என்று ஏதேதோ எழுதி வீரகேசரிக்கு அனுப்பும் எண்ணத்தோடு அண்ணா அக்காமாரிடம் காட்டினான், அவர்கள் அதனைச் சிரமத்தோடு வாசித்தாலும் பின்பு செய்த பரிகாசம் அவன் ஆர்வத்தை அடக்கிச் சோர்வடையச் செய்தது. அவ்வேளையில்தான் யாழ் இணையம் என்ற ஒரு களத்தை திரு மோகன் அவர்கள் ஆரம்பித்தார். களத்தில் இணையும் வழிமுறைகளும் இருக்கவே அவனும் இணைந்து உறுப்பினராகி எழுத ஆரம்பித்தான். சித்தப்பா பிள்ளைகளின் வேண்டுதலில், சித்தப்பா தன் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுத்த கணனியில், அவர் வேலைக்குச் செல்லும் நேரங்களில் சென்று பயிற்சி பெற்றுவந்தது இணையத்தில் எழுத உதவியது. இணையம் அவனையும் அரவணைத்தது. சித்தப்பாவின் பிள்ளைகள் அவர்கள் அப்பனைப்போல் அல்லாது நண்பர்கள்போல் பழகினார்கள். யாழ்கள உறவுகளும் அவன் எழுதும் தமிழை வரவேற்றுப் பாராட்டவே வானத்தில் பறந்தான். இன்றும் பறக்கிறான். பறக்கும்போது அவன் சிந்தனையில் எழுந்த, தமிழின் பெருமைகளை அறிந்த, அறிந்தும் மறந்த சில விடயங்களைத் திரும்பவும் நினைவூட்ட விரும்பினான். அதனால் அவன் விருப்பமும் கீழே பதிவாகியுள்ளது. தமிழினம் முதல் தலைமுறை: நாம் இரண்டாம் தலைமுறை: தாய் தந்தை மூன்றாம் தலைமுறை: பாட்டன் பாட்டி நான்காம் தலைமுறை: பூட்டன் பூட்டி ஐந்தாம் தலைமுறை: ஓட்டன் ஓட்டி ஆறாம் தலைமுறை: சேயோன் சேயோள் ஏழாம் தலைமுறை: பரன் பரை பரன்+பரை இதுவே பரம்பரை எனும் தமிழ்சொல்லாக மருவி வழக்கில் உள்ளது. ஒரு தலைமுறை என்பது தோராயமாக 60 வருடங்கள் என்றும், 7 தலைமுறை 480 வருடங்கள் என்றும் ஈரேழு தலைமுறை 960 வருடங்கள் என்றும்(கிட்டத்தட்ட 1000 வருடங்கள்) ஆக பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு பதின்நாங்கு தலைமுறையாக என்று பொருள் வருமாறு தமிழ் மொழி வகுத்துள்ளது. இப்படியான அமைப்பு வேறெந்த மொழிகளிலும் இருப்பதாகத் தெரியவில்லை. எண்கணிதம் 1= ஒன்று -one 10= பத்து -Ten 100= நூறு -Hundred 1000= ஆயிரம் -Thouand 10000= பத்தாயிரம் -Ten Thousand 100000= நூறாயிரம் -Hundred Thousand 1000000= பத்துநூறாயிரம் -One Million 10000000= கோடி -Ten Million 100000000= அற்புதம் - One Hundred Million 1000000000= நிகரபுதம் - One Billion 10000000000= கும்பம் - Ten Billion 100000000000= கணம் - Hundred Billion 1000000000000= கற்பம் - One Trillion 10000000000000= நிகற்பம் - Ten Trillion 100000000000000= பதுமம் - Hundred Trillion 1000000000000000= சங்கம் - One Zillion 10000000000000000= வெல்லம் - Ten Zillion 100000000000000000= அன்னியம் - Hundred Zillion 1000000000000000000= அர்த்தம் - ? மேலும் எழுத ஆங்கிலத்தில் சொற்கள் தெரியவில்லை. 10000000000000000000= பராத்தம் - ? 100000000000000000000= பூரியம் - ? 1000000000000000000000= முக்கோடி - ? 10000000000000000000000= மகாயுகம் - ? நாம் கெடுவதற்குக் காரணங்களை நமது ஒளவை மூதாட்டியாரும் அழகாகச் சொல்லியுள்ளார். 01 பார்க்காத பயிரும் கெடும் 02 பாசத்தினல் பிள்ளையும் கெடும் 03 கேளாத கடனும் கெடும் 04 கேட்டால் உறவும் கெடும் 05 தேடாத செல்வம் கெடும் 06 தெகிட்டினால் விருந்தும் கெடும் 07 ஓதாத கல்வியும் கெடும் 08 ஒழுக்கமில்லா வாழ்வும் கெடும் 09 சேராத உறவும் கெடும் 10 சிற்றின்பம் பெயரும் கெடும் 11 நடாத நட்பும் கெடும் 12 நயமில்லா சொல்லும் கெடும் 13 கண்டிக்காத பிள்ளை கெடும் 14 கடன்பட்டால் வாழ்வு கெடும் 15 பிரிவால் இன்பம் கெடும் 16 பணத்தால் அமைதி கெடும் 17 சினமிகுந்தால் அறமும் கெடும் 18 சிந்திக்காத செயலும் கெடும் 19 சோம்பலினால் வளர்ச்சி கெடும் 20 சுயமில்லா வேலை கெடும் 21 மோகித்தால் முறைமை கெடும் 22 முறையற்ற உறவும் கெடும் 23 அச்சத்தால் வீரம் கெடும் 24 அறியாமையால் முடிவு கெடும் 25 உழாத நிலமும் கெடும் 26 உழைக்காத உடலும் கெடும் 27 இறைக்காத கிணறும் கெடும் 28 இயற்கையை அழிக்கும் நாடும் கெடும் 29 இல்லாளில்லா வம்சம் கெடும் 30 இரக்கமில்லா மனிதம் கெடும் 31 தோகையினால் துறவு கெடும் 32 துணையில்லா வாழ்வு கெடும் 33 ஓய்வில்லா முதுமை கெடும் 34 ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும் 35 அளவில்லா ஆசை கெடும் 36 அச்சப்படும் கோழை கெடும் 37 இலக்கில்லா பயணம் கெடும் 38 இச்சையினால் உள்ளம் கெடும் 39 உண்மையில்லா காதல் கெடும் 40 உணர்வில்லாத இனமும் கெடும் 41 செல்வம் போனால் சிறப்பு கெடும் 42 சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும் 43 தூண்டாத திரியும் கெடும் 44 தூற்றிப்பேசும் உரையும் கெடும் 45 காய்க்காத மரமும் கெடும் 46 காடழிந்தால் மழையும் கெடும் 47 குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும் 48 குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும் 49 வசிக்காத வீடும் கெடும் 50 வறுமை வந்தால் எல்லாம் கெடும் 51 குளிக்காத மேனி கெடும் 52 குளிர்ந்து போனால் உணவு கெடும் 53 பொய்யான அழகும் கெடும் 54 பொய்யுரைத்தால் புகழும் கெடும் 55 துடிப்பில்லா இளமை கெடும் 56 துவண்டிட்டால் வெற்றி கெடும் 57 தூங்காத இரவு கெடும் 58 தூங்கினால் பகலும் கெடும் 59 கவனமில்லா செயலும் கெடும் 60 கருத்தில்லா எழுத்தும் கெடும் இந்த 60ஐயும் அறிந்துகொண்டால் நம் வாழ்க்கை கெடவே கெடாது.
  9. இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார் Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 04:37 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக்கொண்ட ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை திங்கட்கிழமை ( 23 ) அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த இவரின் இந்த வளர்ச்சி, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட ஆதித்யா ஆனந்தராசா, 19 வயதிலேயே நகர மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர், தொடர்ந்து பொதுச் சேவையில் ஈடுபட்டு, மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டதன் பலனாக தனது 25 ஆவது வயதில் துணை மேயர் பதவியை அடைந்துள்ளார். அவரது இந்த முன்னேற்றம், இளம் தலைமுறையினருக்கு அரசியல் மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட ஊக்கமளிக்கும் சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. மேலும், பல்துறை சமூகத்துடன் இணைந்து செயல்படுவதிலும், உள்ளூர் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241832
  10. லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை! வடக்கு லண்டனில் உள்ள ஒரு யூத சமூக அமைப்பிற்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் இரவோடு இரவாகத் தீக்கிரையாக்கப்பட்டமை மிகவும் அதிர்ச்சியளிக்கும் யூத எதிர்ப்புத் தீவைப்புத் தாக்குதல் என்று பிரதமர் இங்கிலாந்து கெய்ர் ஸ்டார்மர் குறிப்பிட்டார். தீ விபத்தினை அடுத்து சம்பவ இடத்திற்கு ஆறு தீயணைப்பு வாகனங்களையும் 40 தீயணைப்பு வீரர்களையும் அனுப்பிய லண்டன் தீயணைப்புப் படை, வாகனங்களில் இருந்த பல சிலிண்டர்கள் வெடித்ததால் அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னல்கள் நொறுங்கியதாகக் கூறியது. எனினும், இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியது. கோல்டர்ஸ் கிரீனில் உள்ள ஒரு யூத ஜெப ஆலயத்திற்கு அருகே நடந்த தாக்குதலுக்கு ஈரானுடன் இணைந்த பன்னாட்டுப் போராளிகள் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளதாக பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தீவிரவாத செயல்பாடுகளை கண்காணிக்கும் நிறுவனமான ‘The SITE Intelligence’ இணையதளம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம், கிரீஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடந்த இதேபோன்ற தீவிபத்துகளுக்குப் பின்னணியில் இந்தக் குழு இருந்ததாகவும் அது கூறியது. https://athavannews.com/2026/1469640
  11. போன தடவை கேட்க மறந்திட்டன்… இப்ப இது அவசியமாய் இருக்கு.. இது இல்லாமல் இங்கு வாழுறதே கஸ்டம் இல்லையென்று சொல்லிவிடாதே.. மாடு .வளர்த்து ..பால் வித்த காலம் போயிட்டுது பாலுக்கு இப்ப சனம் பூட் சிற்றிக்கு போகுது பகுதிநேர உழைப்பொன்று தேடப் போறன் பார்த்து நல்ல போனா அனுப்பிவிடு… ஆடு வளர்த்து கிடாய் வித்த காலம் போயிட்டுது ஆரிப்ப ஆடடித்து பங்கு போடுகினம் ஆட்களெல்லாம் இப்ப மட்டன் திருவிழாவுக்கு போகினம் ஆரெட்டையென்றாலும் ஒரு போன் கொடுத்துவிடு.. தோட்டத்திலை கத்தரி வெண்டி போட்டாலும் போயிலையை நட்டாலும் விலை போகாதாம் கஞ்சாவும் ..குடுவும் அடிக்கிற வாய்க்கு இவை ஏன் அப்பிள் நல்லதாம் அதைத்தான் அனுப்பிவிடு மானாண்டிச் சந்தையில்..மாலை நேரத்தில் பாய் பெட்டி இழைத்து வித்த காலமும் போச்சு பாயையும் பெட்டியையும் இப்ப ஆர் தேடிகினம் பார்சலில் என்றாலும் போனை அனுப்பிவிடு அவசரம் ஆச்சிக்கு ஏன் இப்ப அப்பிள் போனென்று கேட்கிறாய் ஆச்சி டிக் –ரொக் போடப்போறன் ஆரெட்டை பழகப் போறன் என்று நினைப்பாய் அயலட்டையெல்லாம் உதுதான் தொழில் ஆயிரக்கணக்கில் காசுவருதாம்.. ஆச்சியின் அறிவுக்கும் ..இந்த குரலுக்கும் ஆயிரம் வியூஸ் வரும் … வயதுதான் போட்டுது அதுக்கும் வழியிருக்கு…மேக்கப் படிப்பது.. அப்பன் உன்னை நம்பி அயலட்டையெல்லாம் சொல்லிப்போட்டன் அவையும் ஆச்சியின் ரிக்-ரொக் பார்க்க ரெடி அப்பிள் போன்தான்..வேணும்தம்பி அதை மறக்காமல் அனுப்பிவிடு…
  12. ரோஜர் ஓட்டிய விமானம்! 50 ஆண்டுகள் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கும் Gen-X நண்பர்களுக்காக, ஒரு நனவிடை தோய்தல் பதிவு! தற்போது இளம் தலைமுறை ஒரு இசையைக் கேட்க வேண்டுமானால், எத்தனையோ வழிகள்: போனில் இருந்து நேராக செவி பன்னிக்கு, அல்லது புளூ ரூத் ஒலி பெருக்கிக்கு, காரின் ஸ்பீக்கர்களுக்கு என்று ஏராளமான வழிகள். இதெல்லாம், வராத 80 களில் எங்களுக்கு இசை என்றால் வானொலிப் பெட்டி தான். நான் நினைக்கிறேன் யாழ்ப்பாணத்தில் 1986 இல் மின்சாரம் முற்றாக நின்று போனது, பின்னர் 1987 - 89 இல் இந்திய இராணுவம் வந்த பின்னர் பகுதி நேரமாக வந்த மின்சாரம், மீண்டும் 91 இல் இல்லாமல் போய் விட தொலைக்காட்சிப் பெட்டிகள் வீடுகளில் தூசி படிந்து தூங்க ஆரம்பித்தன. மின்கலத்தில் இயங்கக் கூடியவை என்பதால், வானொலிப் பெட்டிகள் வீடுகளில் முக்கியமான ஒலியெழுப்பும் உபகரணங்களாக இடம் பிடித்தன. ஒரு பழைய கால பக்கிஸ் பெட்டி றேடியோ. இந்த வானொலிப் பெட்டிகளில் தான் எத்தனை வகைகள்? சில வீடுகளில், பாட்டன் காலத்து சுவர் மணிக்கூடு போலவே பெரிய பெட்டி ரேடியோக்களும் பாவனையில் இருந்தன. வானொலிப் பெட்டி கண்டு பிடிக்கப் பட்ட காலத்தில் உருவாக்கப் பட்டவையான வால்வு ரேடியோக்கள் (ரியூப் ரேடியோ என்றும் அழைப்பார்கள்) தான் இந்த பெரிய பெட்டி ரேடியோக்கள். இவை வால்வு (Valve) ரேடியோக்கள் என்று அழைக்கப் படக் காரணம், இந்த ரேடியோவின் முக்கியமான பாகம் கண்ணாடியினால் ஆன ஒரு குழாய் தான். இந்தக் குழாய் ஒரு திசையில் மட்டும் இலத்திரன்களைப் பாய அனுமதிக்கும், வெற்றிடம் நிரம்பிய குழாய் என்பதால் இதனை வால்வு என்றும் அழைப்பார்கள். இந்த வெற்றிடம் நிரம்பிய கண்ணாடிக் குழாயின் வழியே பாயும் மின்சாரத்தைக் கூட்டிக் குறைப்பதன் மூலம், வானொலிப் பெட்டி சிறைப்பிடிக்கும் சில ஆயிரம் வானலைகளில் (Radio waves) இருந்து சில அலைகளை மட்டும் ஒலியாக மாற்றும் விந்தை நிகழ்கிறது. வானலைகள் அடிப்படையில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் மின்காந்த அலைகள் தான். நாம் கண்ணால் காணும் வர்ணங்களைத் தாங்கி வரும் ஒளிக்கும், வானொலி அலைகளுக்கும் அவற்றின் அலை நீளம் (wave length), அதிர்வெண் (frequency), அவை தாங்கி வரும் சக்தி (energy) என்பவற்றில் தான் வேறு பாடுகள். குறைந்த சக்தி, நீண்ட அலை நீளம், குறைந்த அதிர்வெண் என்பன காரணமாக, வானொலி அலைகள் கட்டிடடங்கள் போன்ற தடைகளைத் தாண்டிப் பயணிக்க, ஒளி அலைகள் தெறித்தும், உறிஞ்சப் பட்டும் சிறு தூரத்திலேயே பயணத்தை முடித்துக் கொள்கின்றன. இப்படியாக தடைகளைத் தாண்டி வரும் வானொலி அலைகளை வாங்கிக் கொள்ளும் (receiver) வேலையைத் தான் வானொலிப் பெட்டி செய்கிறது. சில சமயங்களில், வாழ்க்கையில் எதையாவது விட்டு விலகி ஓடும் போது தான் நாம் நல்ல இடத்திற்குச் சென்று சேர்கிறோம். இதைப் போன்ற ஒரு நிலை தான் என்னுடைய பதின்ம வயதில் என்னை வானொலித் தொழில் நுட்பம் பற்றிக் கற்க வைத்தது. அந்தக் காலத்தில் தொழிற்கல்வி என்று ஒரு பாடம் 6 ஆம் வகுப்பிற்குப் பின்னர் எல்லோரும் எடுக்க வேண்டும். இரும்பு வேலை, மர (தச்சு) வேலை, விவசாயம், கணக்கியல் என்பவற்றோடு, வானொலி திருத்தவேலை (Radio mechanics) என்ற தெரிவும் எங்கள் கல்லூரியில் இருந்தது. தச்சு வேலை, இரும்பு வேலை, தானே வளரும் வாழை மரத்திற்கு வாய்க்கால் கட்டும் விவசாய வேலை என்பன குறித்து ஒரு ஆர்வம் வராமையாலும், பல்வேறு காரணங்களால் அக்கவுன்ரிங்கையும் தள்ளி விட்டு, வானொலி திருத்தும் வேலையில் நான் சரணடைந்தேன். “கரன்ட் இல்லாத ஊரில் வானொலித் தொழில் நுட்பம் கற்று என்ன செய்வது?” என்ற யோசனையால் போலும் வகுப்பும் ஒரு ஐந்து பேர்களுடன் சிறிதாகவே இருந்தது. றேடியோ, ரிவி, டெக் எல்லாம் திருத்தப் பழகலாம் என்று நாம் கனவில் இருக்க லிங்கன் மாஸ்ரர் (பாசையூரைச் சேர்ந்த ஒரு மாவீரரின் தந்தையார் இவர்) "உந்த உடைஞ்சதைத் திருத்துற வேலையெல்லாம் சரி வராது. நீங்கள் எல்லாம் றேடியோ தயாரித்துக் காட்ட வேணும், அது வேலை செய்ய வேணும்" என்று தன் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தார். எப்படி றேடியோ தயாரிப்பது? தற்காலத்தில் அமெச்சூர் வானொலி கிளப்புகள் என அழைக்கப் படும் ஆர்வலர் அமைப்புகள் ஏராளம் மேற்கு நாடுகளில் இருக்கின்றன. அவர்களுடைய இணையத் தளங்கள், சமூக ஊடகக் கணக்குகளில் போய்ப் பார்த்தீர்களானால் வானொலி தயாரிப்பது மிகவும் இலகு என்று புரிந்து கொள்வீர்கள். இதற்குரிய உதிரிப் பாகங்களைக் கூட இலகுவாக இணையச் சந்தைகளில் வாங்கி விடலாம். ஆனால், 80 களின் இலங்கையில், அதுவும் பொருளாதாரத் தடை காரணமாக மின்கலங்கள் கூட கிடைக்காத வடக்கில் வானொலி தயாரிப்பது சவாலான முயற்சி தான். ஆனால் ஒரு வானொலியின் அமைப்பு அடிப்படையில் 3 பகுதிகள் தான்: வானலைகளை உள்வாங்கிக் கொள்ளும் உணரி (அன்ரெனா), உள்வாங்கிய வானலைகளை தரம் பிரித்து, தரம் பிரித்ததைப் பெருப்பிக்கும் பகுதி, அந்த பெருப்பித்த வானலையை ஒலியாக வெளிவிடும் ஒலிப்பான் (ஸ்பீக்கர்). (இதை விட, வானொலி இயங்குவதற்கான மின்சக்தியை மின்கலம் கொடுக்கும் அல்லது ஏ.சி மின்சாரத்தில் இருந்து டி.சி மின்சாரமாக மாற்றும் மின்மாற்றி (ட்ரான்ஸ்போமர்) அந்த வேலையைச் செய்யும்). அன்ரெனா ஒரு பழைய செப்பு அல்லது அலுமினியக் கம்பி தான். ஸ்பீக்கரை, யாராவது கைவிட்ட பழைய வானொலிப் பெட்டியில் இருந்து கழட்டி எடுத்துப் பாவிக்கலாம். எனவே, வானொலிப் பெட்டி செய்வதானால் வானலைகளை சுத்தம் செய்து, பெருப்பிக்கும் அதன் மையப் பகுதி தான் மிக முக்கியமான பகுதி. ரியூப் அல்லது வால்வு தான் பழைய றேடியோக்களின் உயிர்நாடி. இந்த வானொலியின் உயிர் மையத்தை உருவாக்கும் முக்கியமான உதிரிப் பாகமாக 80 களில் ட்ரான்சிஸ்ரர் (transistor) இருந்தது. “ட்ரான்சிஸ்ரர் றேடியோ” என்ற சொல்லாடல் மூலம் தான் நாம் அனேகர் ட்ரான்சிஸ்ரர் பற்றி முதலில் அறிந்திருப்போம். ஆனால், இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த 1948 இல் மூன்று விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ட்ரான்சிஸ்ரர், அதன் பின்னர் நிகழ்ந்த சகல விதமான இலத்திரனியல் சாதனைகளுக்குமான மூலைக்கல் என்று சொல்லலாம். குறை கடத்திகள் (semi-conductors) என்று அழைக்கப் படும் "பகுதியளவில்” மின்சாரத்தைக் கடத்தும் திண்மப் பொருட்கள் இருக்கின்றன. இவை பற்றிய ஆராய்ச்சியின் முக்கியமான விளைவாக ட்ரான்சிஸ்ரர் உருவானது. அது வரை றேடியோவின் முக்கிய பாகமாக இருந்த வால்வு செய்து வந்த வேலையை ட்ரான்சிஸ்ரர்க்ள் எடுத்துக் கொண்டன. ஒரு ட்ரான்சிஸ்ரர் என்பது அடிப்படையில் ஒரு சுவிட்ச் தான். எந்த விதமான அசையும் பாகங்களும் இல்லாமல், தன்னுள்ளே இருக்கும் அணுக்களின் முனைவுத் தன்மையை (polarity) மாற்றுவது மூலம், செக்கனுக்கு ஆயிரம்,பல்லாயிரம், இலட்சம் தடவைகள் “ON-OFF” ஆகும் ஒரு சுவிட்ச் தான் ட்ரான்சிஸ்ரர். ட்ரான்சிஸ்ரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, வானொலிப் பெட்டியின் தரமும் அதிகரிக்கும். அந்தக் காலப்பகுதியில் 8 ட்ரான்சிஸ்ரர் றேடியோ தயாரிப்பது தான் உச்ச இலக்காக இருந்தது. ஆனால், 4 அல்லது 5 ட்ரான்சிஸ்ரர்களோடு, ஒரு சாதாரண றேடியோவைத் தயாரிக்கலாம். இத்தகைய சாதாரண றேடியோவைத் தான் நாம் வகுப்பில் படிப் படியாகத் தயாரித்தோம். ட்ரான்சிஸ்ரர், செப்புக் கம்பிகள், இன்ன பிற லொட்டு லொடுக்குச் சாமான்களையெல்லாம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்திருந்த ஓரிரு மின்சாரப் பொருட்கள் விற்கும் கடைகளில் வாங்கக் கூடியதாக இருந்தது. ஆனால், வாங்கிய பொருட்களை ஈயம் மூலம் ஒட்டி ஒரு வானொலிப் பெட்டியின் சுற்றுப் போல செய்வதற்கு ஒட்டுக் கருவி தேவை. மின்சாரத்தில் இயங்கும் சூடாக்கி ஒட்டும் கருவி (soldering iron) மின்சாரம் இல்லாத ஊரில் பயனற்றது. எனவே, சிரட்டையை எரித்து அதன் வெப்பத்தில் இயங்கும் ஒட்டும் கருவி தான் எங்கள் வானொலி தயாரிப்பிற்கு உதவியாக இருந்தது (சிரட்டை அயன் பெட்டி போல). தற்கால இலத்திரனியல் உபகரணங்களைக் கழட்டிப் பிரித்துப் பார்த்தீர்களானால் printed circuit board (PCB) எனப்படும் நேர்த்தியாக அமைக்கப் பட்ட பச்சை நிற அட்டைகள் இருப்பதைக் காணலாம். இதே போன்ற சுற்று அட்டைகளை போமிகா ஷீற் (Formica laminate) எனப்படும் தளவாடங்களில் பயன்படுத்தும் வழு வழுப்பான பூச்சுப் பலகையில் துளைகள் இட்டு, அதனூடாக ட்ரான்சிஸ்ரர், ஏனைய பாகங்கள், செப்புக் கம்பி என்பவற்றை இணைத்து, ஈயத்தை உருக்கி ஊற்றி எங்கள் அமெச்சூர் றேடியோக்களை நாம் தயாரித்தோம். கையுறை எதுவும் அணியாமல், ஈயத்தையும் அழைந்து, அது உருகும் போது உருவாகும் ஈய ஆவியையும் கொஞ்சம் சுவாசித்து தாராளமாக ஈயத்தில் புரண்டெழும்பிய பின்னர் வெளிநாடுகளுக்கு வந்த போது தான், ஈயம் (lead) எவ்வளவு ஆரோக்கியக் கேடானது என்று புரிந்து கொண்டோம். ட்ரான்சிஸ்ரரின் வருகை றேடியோக்களின் திறனை அதிகரித்து பருமனைக் குறைக்க உதவியது. சில ஆயிரம் - இலட்சம் ட்ரான்சிஸ்ரர்களும் ஏனைய உதிரிப் பாகங்களும் ஒருங்கே அமைந்த “ஒருங்கிணைந்த சுற்று-Integrated circuits (IC)” நவீன கால "சிப்-chip/microchip" களுக்கு முன்னோடி. சரி, வானொலிப் பெட்டியைத் தயாரிக்கலாம், ஆனால் எந்த வானொலி நிலையத்தின் ஒலி பரப்பை இந்த அமெச்சூர் வானொலிப் பெட்டியில் கேட்க கேட்க முடியும்? பொதுவாக வானொலி ஒலிபரப்பு (broadcasters) நிலையங்கள் AM, FM எனப்படும் இரு வகையான அலைவரிசைகளில் ஒலி பரப்புவார்கள். இவற்றுள் AM (Amplitude Modulation) அலை வரிசை சக்தி வாய்ந்த, தொலை தூரம் செல்லக் கூடிய அலை வரிசை. இந்தியாவின் ஆகாஷவாணி (All India Radio-AIR) திருச்சிராப்பள்ளி (திருச்சி) ஒலி பரப்பு நிலையம் யாழ்ப்பாணத்திலிருந்து 200 கிலோ மீற்றர்கள் தொலைவில் இருந்தாலும், AM அலைவரிசை மூலம் வட இலங்கை வரை தன் நிகழ்ச்சிகளை பெருமளவு துல்லியமாக ஒலி பரப்பியது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் (SLBC) கொழும்பு நிலையமும் AM அலைவரிசைகளில் (மத்திய அலை வரிசை (MW), சிற்றலை வரிசை-SW) இலங்கை முழுவதும் ஒலி பரப்பியது. ஆனால், எங்கள் எளிமையான வானொலிப் பெட்டிகளால் இந்த AM அலைவரிசைகளைத் தெளிவாகத் தரம் பிரிக்க இயலாது. என் நினைவு இப்போது தெளிவாக இல்லை, ஆனால் பலாலி அல்லது மண்டைதீவில் அமைந்திருந்த உப நிலையம் (relay station) மூலம் இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத் தாபனத்தின் நிகழ்ச்சிகளை பண்பலை (FM-Frequency Modulation) வழியாக யாழ் நகரப் பகுதி நோக்கியும் ஒலி பரப்பினார்கள் என நினைக்கிறேன். குறுகிய தூரம் மட்டும் செல்லும் இந்தப் பண்பலை ஒலி பரப்பை, இரவு 8 மணிக்குப் பின்னர் எங்கள் அமெச்சூர் வானொலியில் மிக மெலிதாகக் கேட்கக் கூடியதாக இருந்தது. பலவீனமாக வந்து சேரும் வானலைகளைத் தெளிவாக்க Intermediate Frequency (IF) transformer என்ற இன்னொரு உதிரிப் பாகத்தைச் சேர்க்கலாமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்த இடை வெளியில், அந்தப் பண்பலை ஒலி பரப்பும் நாட்டுச் சூழ் நிலை காரணமாக நின்று போனது. இப்போது எங்கள் வகுப்பின் 5 பேர்களில் இருவர் முழுவதுமாகத் தயாரித்து முடித்திருந்த அமெச்சூர் வானொலிப் பெட்டிகளும், ஒரு சிறு பிள்ளை வேளாண்மை போல தூசி படிந்து மூலையில் முடங்கி விட்டது. இந்தக் காலப் பகுதியில் ஊரின் நிலைமையும் சமாந்தரமாக மாறிக் கொண்டிருந்தது. இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தின் தரைக் கட்டுப் பாட்டை தமிழ் விடுதலைப் போராட்ட அமைப்புகளிடம் இழந்து விட்டதால், வான் தாக்குதல்கள் ஆரம்பித்தன. ஆரம்பகால வான் தாக்குதல்களை இத்தாலிய தயாரிப்பான சியா மார்செற்றி (SIAI-Marchetti) என்ற சிறிய ப்றொபெல்லர் விமானங்கள் தான் பத்தாயிரம் அடிகளுக்கு கீழான உயரத்தில் பறந்து நிகழ்த்தின. இந்த SIAI-Marchetti-SF260TP குண்டு வீச்சு விமானங்களை இத்தாலிய விமானிகள் தான் முதலில் ஓட்டினார்கள் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். இந்த விமானங்கள் திடீரென வானில் தோன்றி (சோடியாகத் தான் வரும்) வட்டமடித்து, இலக்கை நோக்கித் தாழ்ந்து வந்து றொக்கற் தாக்குதலை நடத்தும். ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் விமானத்திற்கு இரண்டு குண்டுகளை வீசிய பின்னர் வவுனியா/அனுராதபுரம் நோக்கிப் பறந்து விடும். இந்த விமானங்கள் எங்கள் வான் பரப்பில் இருக்கும் போது, விமானிகளின் உரையாடலை தரையில் வீடுகளில் இருக்கும் வானொலிப் பெட்டிகளில் குறிப்பிட்ட ஒரு பண்பலை வரிசையில் கேட்கக் கூடியதாக இருக்கும் (பிற்காலத்தில் பதுங்கு குழிகள் வீடுகளில் உருவான போது அதற்குள் ஒரு றேடியோவைத் தூக்கிக் கொண்டு போய் மக்கள் பதுங்கும் பழக்கமும் உருவானது). தரமான ஒரு பனாசொனிக் வானொலிப் பெட்டியில் சில சமயங்களில் இந்த விமானிகளின் உரையாடல்களை செவி மடுத்த நினைவிருக்கிறது. நீளமாக வசனங்கள் எதுவும் அவர்கள் பேசுவதில்லை. இரைச்சல்..பின்னர் ஏதோ ஒரு சொல் மீண்டும் இரைச்சல் என்றவாறு இருக்கும். அடிக்கடி "றோஜர்" என்ற சொல் வந்து போகும். அந்தக் காலப் பகுதியில், எங்கள் வயது மட்டத்தினருக்கு "றோஜர்" என்று விமானிகள் சொல்வதன் அர்த்தம் புரிந்திருக்கவில்லை. எனவே, கற்பனா சக்தி கூடிய பள்ளித் தோழர்கள் சிலர் "இந்த விமானத்தை ஓட்டிய பைலற்றின் பெயர் றோஜரடா!" என்று ஒரு றொக்கற்றை ஏவி விட்டார்கள். "றோஜர் தற்-Roger that" என்பது "தகவல் கிடைத்தது-Received" என்பதன் சுருக்கிய சமிக்ஞை என்பது பின்னர் தான் தெரிய வந்தது. அது புரியும் வரை, எங்கள் மீது குண்டு வீசிய சியாமா செற்றியை ஓட்டிய எல்லா விமானிகளின் பெயரும் றோஜர் தான்! பட உதவிகள்: வால்வு றேடியோவின் படம், ஒரு அமெச்சூர் வானொலி ஆர்வலரின் வலைப்பூவில் இருந்து நன்றியுடன் எடுக்கப் பட்டது. ஏனைய படங்கள்: நன்றியுடன் pixabay தளத்தில் இருந்து எடுக்கப் பட்டன.
  13. இரண்டு கிழமைக்கு முன்பு... தோட்டத்தில் இருந்த ரோஜா செடிகளின் கிளைகளை வெட்டும் போது... முள் ஒன்று நடு விரலில் குத்தி விட்டது. இப்படி வேலை செய்யும் போது, வழமையாக குத்தினாலும்... அடுத்த நாளில், முள் குத்திய இடமே தெரியாமல் மாறிவிடும். இம்முறை, அது குத்திய சில மணி நேரங்களில்... விரல் பயங்கரமாக வீங்கி, சரியான குத்து வலியாக இருந்தது. நானும், இரண்டு நாள் பொறுத்து வைத்தியரிடம் செல்வோம்... அது வரை எமக்குத் தெரிந்த வீட்டு வைத்தியங்களான "ஐஸ்" ஒத்தடம் கொடுத்தல், "நோ" கிறீம் பூசுதல், நோவை குறைக்க சில குளிசைகள் என்று போட்டும், பலன் கிடைக்காததால்... குடும்ப வைத்தியரிடம் போக... அவர் இதுவரை நான் செய்த வைத்திய முறைகளை கேட்டு விட்டு, சிலவேளை கிருமி தொற்று ஏற்பட்டிருக்க சாத்தியக் கூறுகள் உள்ளது என்று... Antibiotic குளிசைகளை காலையும், மாலையும் 5 நாட்களுக்கு போடும்படி தந்தார். 5 நாட்களும் கடந்த பின்பும்... Antibiotic குளிசைக்கு நோவும், வீக்கமும் சொல்வழி கேட்கவில்லை. இப்படியே பொறுத்து இருந்தால்... கடைசியில் பிரச்சினை பெரிதாகி விடும் என நான் முடிவெடுத்து, அருகில் உள்ள வைத்தியசாலையின் அவசர நோயாளர் பிரிவிற்கு சென்று நடந்ததை சொல்ல... அவர்கள் "எக்ஸ் ரே", இரத்தப் பரிசோதனை எல்லாம் எடுத்து சோதித்து பார்த்து விட்டு... மூன்று நாட்களுக்கு, தினமும் மூன்று போத்தல் வீதம்... கையில் Antibiotic ஐ, திரவ வடிவில் ஏற்றி கண்காணிக்க வேண்டும் என்றும், வீக்கம் வற்றாது விட்டால்... அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம் என்றும் சொன்னார்கள். நமக்கும்... ஆஸ்பத்திரி சாப்பாடு சாப்பிட்டு கனநாள், ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என்று , அவர்கள் நீட்டிய காகிதங்களில் கையெழுத்தை போட்டுக் கொடுத்து விட்டு... நான் அந்த ஆஸ்பத்திரியின் வாடிக்கையாளன் என்ற படியால், எங்கு அடுத்துப் போக வேண்டும் என்று எனக்கு ஒருவரும் கூட்டி வந்து காட்ட வேண்டிய தேவை இருக்கவில்லை . அவர்கள் தந்த சில காகிதங்களை வாங்கிக் கொண்டு, நான் தங்க வேண்டிய பகுதிக்கு பொறுப்பான "நேர்ஸ்" ஐ சந்திக்க சென்றேன். தொடரும்... ✍
  14. சும்மா சொல்லக் கூடாது ஊர் இப்ப நல்ல முன்னேற்றம் . வெளிநாட்டுக் காசில நல்ல வசதி .. இங்கு குளிரில் விறைத்து வெயிலில் வாடி நின்ற நிலையில் வேலை செய்து அனுப்பினால் , காசின் அருமை பெருமை தெரிவதில்லை .அல்வாயனுக்கு நன்றி ..மேலும் தொடருங்க
  15. Sumitha Panneerselvam கஞ்சியில... பென்சில் சீவின தூள் போட்டு பார்த்தால், அழி ரப்பர் வரும். ############### سدام حسين நாம் ஆட்சிக்கு வந்தால் wine shop மூடப்படும். ############### Pradhisha V முடிய வெட்டி, வாழை மரத்துக்கு கீழ மறைச்சு வச்சா... நிறைய வளரும். ############### Sam Santhakumar விழுந்த பல்லை வானத்துக்கு காட்டினால் திரும்ப முளைக்காது.. அந்த பல்லை சாணியில வைத்து கூரை மேல எறிஞ்சாதான் முளைக்கும். ############### Gowtham Balamurugan நீ இருக்க அழகுக்கு சீமையிலிருந்து தான் பொண்ணு வருவாள். தோள்ல கை போட்டால்... வளர மாட்டோம். ############### Pothigai Pugal வீட்டு தாழ்பாளை ஆட்டினால், சண்டை வரும். ############### ராஜ ராஜா அரிசி தின்றால், கல்யாணம் அன்று மழை வரும். ############### Mahi நீ நல்லவன் டா. உன் நல்ல குணத்துக்கு நல்ல பொண்ணா கிடைக்கும்டா. ############### Sankar Thala இலவசம் தருபவர்களுக்கு ஓட்டு போட்டால் நாடு முன்னேறும். ############### Saleem Saleem ரஜினி அரசியலுக்கு வர போறாரு...
  16. பயணம் போகும் நாளன்று காலையில் எழுந்து தோய்ந்துவிட்டு எட்டு மணிக்குப் பக்கத்தில் இருக்கும் இந்திய உணவகத்துக்குச் சென்று உணவருந்திவிட்டு மீண்டும் வந்து அறையுள் அடைகிறேன். சாதாரணமாக வெளியில் சென்று பார்ப்போமா என்று எண்ணிவிட்டு, பிறகும் வேண்டாம் என முடிவெடுக்கிறேன். ஏனெனில் பயணப் பொதிகளுள் இடம்தான் இல்லையே. வீணாக பணம் கொடுத்து வாங்கி கடந்த ஆண்டுபோல் எதற்காக விமான நிலையத்தில் விட்டுவிட்டு வரவேண்டும் என்று எண்ணிக்கொள்ள போன் ஒன்று வருகிறது. புதிய இலக்கமாக இருக்க யார் என்கிறேன். “மடம் நான் வரவேற்பில் இருந்து பேசுகிறேன், இன்னும் எத்தனைநாள் நிற்கப் போகிறீர்கள்” “நேற்றே இன்று ஒருமணிக்குப் போகவேண்டும் என்று சொன்னேனே” “உங்களுக்கு விமானநிலையம் போக வாகனம் வேண்டுமா” “எவ்வளவு எடுக்கிறீர்கள்” “12000 ரூபாய்கள்” “வேண்டாம். நானே ஒழுங்குசெய்துகொள்கிறேன். நன்றி” என்றுவிட்டு பிக்மீயில் பெரிய கார் போட 4500 ரூபாய்கள் என்று வருது. பக்கத்துக் கடையில் ஏதும் உணவு வாங்கிக்கொண்டு போவோமா என எண்ணிவிட்டு, வேண்டாம் விமான நிலையத்திலேயே வாங்கிக்கொள்வோம் என எண்ணி எதையும் வாங்கவில்லை. 12.45 இற்கு நான் கிளம்பவேண்டும். எனது பொதிகளைத் தூக்கிவர யாரையாவது அனுப்புகிறீர்களா என்றுவிட்டு சிறிய பொதியைத் தூக்கிக்கொண்டு வெளியே வர, இருவர் வாசலில் வந்து நிற்கின்றனர். கீழே சென்று திறப்பைக் கொடுத்தபின் பிக்மீக்குப் பதிய ஏழு நிமிடங்களின் பின் அந்தக் கார் வர, பொதிகள் மூன்றையும் ஏற்றிவிட்டபின் நானும் ஏறி அமர்கிறேன். விமான நிலையத்தில் பெரிதாகச் சனங்கள் இருக்கமாட்டார்கள் என்று எண்ணியிருக்க உள்ளே செல்லும் வாசலில் ஒரே சனம். பொதிகளைக் கொண்டு உள்ளே சென்று ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் பகுதியில் இரு பெரிய பொதிகளையும் ஒப்படைத்து போடிங்பாஸ் வாங்கியபின் “உங்கள் பொதிகள் ரியாத்துக்கு வராது. நேரடியாக யூகே சென்றுவிடும். நீங்கள் அங்கு சென்றபின் உங்கள் பொதிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றவுடன் நானும் சரி என்றுவிட்டு டியூட்டிஃப்ரீ யில் ஏதாவது வாங்கலாம் என்று பார்த்தால் எல்லாம் சரியான விலை. ஒரு உலர் தேயிலைப் பக்கற் மட்டும் வாங்கிக்கொண்டு போய் ஒரு இருக்கையில் அமர்கிறேன். விமான வாயிலுக்குச் செல்ல நேரம் இன்னும் நிறைய இருக்க, ஏதாவது உண்ணலாம் என்னும் எண்ணம் எழுகிறது. இரண்டு மூன்று கடைகளைப் பார்த்தால் எதுவும் பிடிக்கவில்லை. நான்காவது கடையில் ஓர் சிக்கன் சலாட் மற்றும் ஒரு கோப்பியும் ஓடர் செய்ய, 11 டாலர் வர BOC வங்கி அட்டை மூலம் பணம் செலுத்திவிட்டு வருகிறேன். விமானம் புறப்பட இன்னும் இரண்டரை மணிநேரம் இருக்க மெதுவாக சூட்கேசை இழுத்தபடி இலக்கம் 8 ஐத் தேடியபடி சென்றால் பெரிதாக யாரையும் காணவில்லை. போனை சார்ஜ் செய்ய வசதியாக ஒரு இருக்கையில் அமர்ந்து போனைப் பார்க்க நேரம் போனதே தெரியவில்லை. சாதாரணமாக ஒரு முக்கால் மணிநேரம் இருக்கும்போதுதான் அதற்குரிய மண்டபத்தைத் திறப்பார்கள். அன்று ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னரே திறந்துவிட நானும் இன்னும் சிலரும் மட்டும் உள்ளே சென்று அமர்கிறோம். போரின் பயத்தில் ஆட்கள் போகவில்லையோ என்று எண்ணியபடி போனில் மூழ்கியிருக்க, என் இருக்கைக்குப் பக்கத்தில் ஒருவர் வந்து அமர்வது தெரிகிறது. திரும்பிப் பார்க்க, ஒரு பெண் என்னைப் பார்த்து சிரித்தபடி இதில் அமரலாம்தானே என்கிறார். நான் தாராளமாக என்று கூறிச் சிரித்தபடி எந்த நாட்டுக்குச் செல்கிறாய் என்கிறேன். “நான் ரியாத்தில் வேலைக்காகச் செல்கிறேன்” “ஓ நீண்ட நாட்களாக அங்கு வேலை பார்க்கிறாயா? “14 ஆண்டுகளாகச் செய்கிறேன். ஆனால் இது புதிய வேலை” “பழைய வேலை என்னவாயிற்று” “இம்முறை நான் ஆறு மாதங்கள் நாட்டில் நின்றுவிட்டேன். தொடர்ந்து வேலை செய்வதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை நாட்டுக்கு வந்து போகும்போது பழைய வேலை இல்லாமற் போய்விடும்” “உனக்கு எத்தனை குழந்தைகள்? “எனக்குக் குழந்தைகள் இல்லை. 53 வயதாகிறது” “உன் கணவர் வேலை செய்வதில்லையா? “அவர் செய்யும் வேலையில் நிறையப் பணம் வராது” “குழந்தைகள் இல்லாதபடியால் உனக்கு பெரிதாகச் செலவு இருக்காதுதானே. ஏன் உள் நாட்டிலேயே ஒரு வேலை தேடிக்கொள்ள முடியாதா? “எனக்கு சின்னதா ஒரு வீடு காட்டவேண்டும் என்று நீண்டநாள் ஆசை. முன்னர் பத்து இலட்சங்கள் சேர்த்து வைத்து ஒரு முகவர் நியூசீலாந்தில் வீடுகள் மலிவு, அங்கு நீ ஒரு வீடு வாங்கினால் அங்கு போவதற்கு விசாவும் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார். இப்ப திரும்பவும் இலங்கையில் வீடுகட்டப் பணம் சேர்க்கிறேன்” “பணத்தை நீயே வைத்திருப்பாயா அல்லது...... “ “ என் கணவரின் வங்கி இலக்கத்துக்கு மாதாமாதம் அனுப்பிவிடுவேன்” “ கணவர் செலவழிக்காமல் பத்திரமாக வைத்திருப்பாரா” அதெலாம் வைத்திருப்பார். நான் அனுப்பும் பணத்தில் எதையும் வீணாக்குவதில்லை. ஆனால் உறவினர்கள் அயலவர்கள் எப்போதும் கடன் கேட்டபடிதான் இருப்பார்கள். இல்லை என்று சொன்னால் கதைக்கவும் மாட்டார்கள்” தமிழர்கள் என்றால் என்ன சிங்களவர் என்றால் என்ன. பண விடயத்தில் எல்லோரும் ஒரேமாதிரித்தான் போல. பாவம் இந்தப் பெண் என எண்ணியபடி கதைப்பதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தால் அரைவாசி இடங்கள் நிறைந்துவிட்டன. இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. நான் கணவருக்கும் ஊரில் இருப்பவர்களுக்கும் போன் செய்து இன்னும் அரை மணித்தியாலத்தில் கிளம்பிவிடுவேன் என்றதும் ரியாத் போய்ச் சேர்ந்த பிறகு போன் செய் என்றபடி முடிக்க, நான் அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தால் அவர் இன்னொருவருடன் கதைப்பது தெரிய சுற்றுமுற்றும் பார்க்க இரண்டுநாட்களின் முன் கட்டார் ஏயார்வேஸ் நிறுவனத்தின் முன்னால் கண்ட பல முகங்கள் தெரிகின்றன. விமானத்தில் ஏறி அமர்ந்தால் யன்னல் ஓரத்தில் ஒருவரும் மற்றப் பக்கம் நானும் நடுவில் ஒரு இருக்கை வெறுமையாகவும் இருக்க, கடவுளே ஒருவரும் எனக்குப் பக்கத்தில் வரக்கூடாது என்ற என் நேர்த்தியை சனீஸ்வரர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் விமானம் முழுவதும் ஆட்களால் நிறைந்துவிட்டது. ஐந்தரை மணித்தியாலத்தின் பின் விமானம் தரையிறங்க விமான நிலையம் கண்ணில் படவில்லை. நாம் இறங்கியவுடன் பஸ்சில் ஏற்றிக்கொண்டு கிட்டத்தட்ட இரண்டு கிலோமீற்ரர் தொலைவில் உள்ள விமான நிலையத்தில் கொண்டுபோய் விட வேறு விமானங்களுக்கு மாறுபவர்களின் வரிசை சிறிதாகவும் அந்த நாட்டுக்குள் பிரவேசிப்பவர்கள் நீண்ட வரிசையிலும் காத்திருக்கிறார்கள். எமக்கு புதிய போடிங் பாஸ் அங்குதான் தரப்படுகிறது. எமக்கு இன்னும் ஆறு மணிநேரம் இருக்கிறது. ஏற்கனவே இரவானதால் குளிர். அதைவிட எல்லா இடத்திலும் ஏசி போட்டு நடுக்கம் வராத குறை. கணவர் பிள்ளைகளுக்கு இங்கு வந்து சேர்ந்ததைச் சொல்வோம் என்றால் நெட்வேர்க் வேலைசெய்யவில்லை. அவர்களின் Wi-Fi கூட சரியாக வேலை செய்யவில்லை. பலதடவை போன் செய்தும் நான் கதைப்பது கணவருக்குக் கேட்கவில்லை. அவர் கூறுவதும் எனக்குக் கேட்கவில்லை. சரி மெசேஜ் போட்டுவிடுவோம் போனால் போகட்டும் என எண்ணியபடி Wi-Fi ஐ நிறுத்திவிட்டு மெசேஜ் போட்டால் அது போய்விட்டது. போனை மூடி வைத்துவிட்டு ஒரு இரண்டு மணிநேரம் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு இருக்க எனக்குப் பசியெடுக்க ஆரம்பிக்கிறது. விசர் வேலை பார்த்தது. உண்பதற்கு ஏதும் வாங்கி வந்திருக்கலாம். விமானத்தில் முன்னர்போல் திருப்தியாக உண்பதற்கு உணவு தருவதில்லை. இன்னும் நான்கு மணிநேரம் பசியோடு இருக்க முடியாது என எண்ணிக்கொள்கிறேன். நான் இருந்த இருக்கையின் பக்கத்தில் ஒரு வயதான கணவன் மனைவி அமர்ந்திருக்க நீங்கள் எங்கு செல்கிறீர்கள் எனப் பேச்சுக்கொடுக்க தாமும் UK செல்வதாகக் கூறிவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருக்கின்றனர். என் இடத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் உணவு வாங்கிக்கொண்டு வருகிறேன் என்றபடி கழுத்துக்கு வைக்கும் தலையணையை நான் இருந்த இடத்தில் வைத்துவிட்டு எனது சூட்கேசைத் தள்ளியபடி ஒரு சிறிய உணவகத்துக்குச் செல்கிறேன். சாண்ட்விச், சலாட் மற்றும் ஹாட் சொக்ளற் என்று கூற 17 dollars என்கின்றார் அந்தப் பெண். நான் என் பாங்க் காட்டைக் கொடுக்க அந்தப் பெண் காட் ரீடரில் போட்டால் டிக்கிளைண்ட் என்று வருகிறது. அதில் போதிய பணம் இருக்கிறது மீண்டும் போடுங்கள் என்கிறேன். மீண்டும் போட அப்படியே வர அந்தப் பெண் பக்கத்தில் நின்ற ஒருவருடன் ஏதோ குசுகுசுக்க அவர் காட்டை வாங்கிப் பார்த்துவிட்டு உங்கள் காட் ஒரு மாதத்தின் முன்னரே முடிந்துவிட்டது என்றபடி காட்டை எனக்குத் தர, நான் நம்பாமல் வாங்கிப் பார்க்கிறேன். அவனமானம் ஒருபுறம் இந்த எளிய மனிசன் புதிய காட் வந்ததை எனக்குச் சொல்லவில்லை என்று மனிசன்மேல் கோபமும் வர, மன்னியுங்கள் நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். பவுண்ட்ஸ் எடுப்பீர்கள் தானே என்கிறேன். அந்தப் பெண் நோ என்கிரா. எனக்கு சரியான பசி. மற்றைய நாடுகளில் UK பவுண்டஸ் எடுப்பார்கள். நீ ஏன் மாட்டேன் என்கிறாய் என்று கேட்க பக்கத்தில் நின்றவர் சரி எடுக்கிறேன். ஆனால் மிகுதி தரமாட்டோம் என்கிறார். நீ மிகுதி தரவேண்டாம். எனக்கு உணவைக் குடு என்கிறேன். இவ்வளவு உணவும் எத்தனை பவுண்ட்ஸ் வருகிறது என்று போனில் பார்த்தால் 12.70 பவுண்டஸ் என்று காட்ட, அட மிகுதி ஏழு பவுண்டஸ் வீணாகப் போகிறதே என எண்ணியபடி ஒரு கேக் மற்றும் யூஸ் எடுத்துவிட்டு 20 பவுண்ஸ் கொடுத்து உணவுகளை வாங்கிக்கொண்டு வர அந்தக் கணவனும் மனைவியும் பிஸ்கற் உண்டு கொண்டு இருக்கின்றனர். நான் என் உணவுகளை உண்டுவிட்டு கோப்பியைக் குடித்தபின் கேக்கையும் யூசையும் சூட்கேசுள் வைத்துப் பூட்டிவிட்டு சுற்றுமுற்றும் பார்க்க அங்கு பல இருக்கைகள் காலியாக இருக்கின்றன. சதுரமாக பெஞ்சுகளும் சிறிது தூரத்தில் போடப்பட்டிருக்க இரு பெண்கள் போர்வையால் போர்த்துக்கொண்டு படுத்திருக்க, எதுக்கும் நானும் படுப்போம் என எண்ணியபடி பக்கத்து முதியவர்களுக்கு நான் அந்த பெஞ்சில் போய் இருக்கப்போகிறேன். நீங்களும் வாருங்கள். இந்தக் கதிரையிலும் அது வசதியாக இருக்கும் என்று கூற அவர்களும் எழுந்து வருகின்றனர். அந்த முதியவர் போனைப் பார்த்துக்கொண்டிருக்க, அந்தப் பெண் அவரின் தோளில் சாய்ந்து தூங்க, நான் காலை மடக்கியபடி என் கைப்பையை தலைமாட்டில் வைத்து அதன் மேல் தலை வைத்தபடி சூட்கேசை ஒருகையால் பிடித்தபடி கோழித்தூக்கம் போடுகிறேன். ஆனாலும் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பேன் போல. என்னை யாரோ தட்ட திடுக்கிட்டு விழித்தால் அந்தப் பெண்மணி. எமது விமானம் வேறு இடத்தில் என்று அறிவித்தார்கள். அதுதான் எழுப்பினேன் என்று அவர் கூற நான் எழுந்து என் பொதியையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு நேர அட்டவணை இருக்கும் இடத்திற்குச் சென்று பார்க்கிறேன். வேறு பலரும் எமக்கு அருகே வந்து நின்று பார்க்கின்றனர். எமது விமானம் இரண்டுமணி நேரம் இன்னும் பிந்தும் என்று போட்டுள்ளார்களே அன்றி வேறு எந்த விபரமும் இல்லை. இன்னும் மூன்று மணி நேரம் இருக்கே. பிறகுதான் போடுவார்கள். சும்மா இதில நின்று எந்தப் பிரயோசனமும் இல்லை. வாங்கோ போய் இருப்பம் என்றபடி நாம் இருந்த இடத்துக்குப் போக, இரு ஆண்கள் அங்கு நீட்டி நிமிர்ந்து படுத்திருக்க வேறு பக்கமாகச் சென்று அமர்கிறோம். விமானநிலையம் பெரும்பாலும் வெறிச்சோடிப்போய் இருக்கு. இன்னும் இரண்டு வயதானவர்களும் எம்மோடு வந்து அமர்கின்றனர். அவர்களும் UK தான் போகிறோம் என்கின்றனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருக்க நேரம் போவது தெரியவில்லை. அடிக்கடி எழுந்து சென்று நேர அட்டவணையில் ஏதும் போடுகிறார்களா என்று பார்த்தால் இரண்டு மணி நேரத்தின் பின்னரே நாம் நான்காம் இலக்க மண்டபத்துக்குப் போக வேண்டும் என்று எல்லோரும் விரைந்து அங்கே செல்கிறோம்.
  17. இரகுவரனும் இரவிக்கை நாடாவும். சேவல்கள் கூவ காகங்கள் கரைய இளங்காலைக் கதிர் காமத்துடன் பூமியைத் தழுவிக் கிடக்கையில் நல்லூரானின் முன் சந்நிதியில் மேளங்கள் முழங்க மாவிட்டபுரத்தழகி பூரணியின் பொன்னிறக் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் நம்ம இரகுவரன் தாவணி போர்த்தி தாவி நடந்தவளை தரதரவென இழுத்து வந்து அறிவுரை தந்து ஆறுமுழம் சீலையை அழகாய் உடுத்தி விட்டு அலங்கரித்த அறைக்குள் தள்ளி விட்டனர் தோழியர் " இஞ்சேருங்கோ கொஞ்சம் வாங்கோ " கெஞ்சி கொஞ்சி அழைக்கிறாள் வஞ்சி, நம்ம இரகுவும் கண்கள் மின்ன நெஞ்சம் களித்திட கால்கள் தயங்க "என்னங்கோ " ஒற்றை வார்த்தை முனகி வருகிறது கட்டிய சேலை காலடியில் விழுந்து கிடக்க ஜாக்கட் தளர்ந்து தோள்வழி சரிய நின்றவள் கொஞ்சம் " இந்த நாடா கொக்கியை கழட்டி விடுங்களேன் கை எட்டுதில்லை " கிளி கொஞ்சுகிறது தாமரைக் கிழங்கும் சுவாசித்திருக்கும் தண்ணியில்லாத் தாமரைக் குளத்தில் முட்டிமோதி கிழங்கெடுக்கும் வராகம்போல் - நம்ம ரகுவும் தட்டுத்தடுமாறி கொக்கியை கழட்டுகிறான் ஆடை பாதி ஆசை மீதியென அலைக்கழிந்தவளை அள்ளியெடுத்து தன்னுடன் சேர்த்தணைத்தபடி அப்படி இப்படியென ஆயிற்று ஐயிரண்டு மாதம் அவன் கைகளில் ஓர் மழலை கொள்ளைச்சிரிப்புடன் காற்றும் புகாத நெருக்கத்திலும் முளைத்திருந்தான் நடுவில் மூத்தமகன் கட்டிலின் ஓர் புறத்தில் பூரணி ஆங்கே ஓர் ஓரத்தில் படுத்தும் புரண்டு படுத்திடவும் கால் நீட்டிடவும் இடமில்லை நம்ம இரகுவரனுக்கு கனிந்ததொரு சிறுபொழுதில் கணநேர ஸ்பரிசத்தில் மலர்ந்து சிரித்தன இரு மொட்டுகள் கொள்ளை அழகுடன் பூரணியோடு பிள்ளைகளுமாய் கட்டில் நிறைந்திட - இன்று மன்னவன் ரகு படுப்பதோ ஹாலில் கிடைக்கும் செற்றியில் செற்றியின் கட்டிலை இழுத்துறங்க அருகே ஒரு முனகல் பார்த்தால் காலடியில் வந்து கிடக்குது கடுவன் நாயும் நாலைந்து வருடங்கள் வேலையும் வீடுமாய் விரைந்தோடிட பூரணியின் நாணமும் வெட்கமும் கூடவே போயின நம்ம ரகுவுக்கு காதலும் காமமும் கணவாய் போயின ஆசைகள் மட்டும் அடிமனதில் கனன்று கொண்டிருக்கும் கல்லுக்குள் தேரையாய் கரைந்திருந்த நேரமது பிள்ளைகள் வளர்ந்தன படித்தன வெளியே பறந்தன " இஞ்சேருங்கோ இங்கே கொஞ்சம் வாங்களேன் " பூரணி அழைக்கிறாள் கிளி கொஞ்சும் குரலில் அதுவும் கொஞ்சம் என்கிறாள் அந்த கொஞ்சம் இன்று கொஞ்சத்தானோ , கற்பனைகள் பல அறைக்குள் வந்து அருகில் நெருங்கி ஆசையை மறைத்து மீசையை முறுக்கி "என்ன" என்று மிடுக்காய் வினவ மோகமாய் முறுவலித்து மெதுவாய் சொல்கின்றாள் இரவிக்கைக் கொக்கி நெளிஞ்சு போச்சு கையால் கழட்டிட வருகுதில்லை , முறுவலிக்கிறாள் பூரணி பரந்த முதுகு பழைய கதைகள் பல கூறுது மனம் சூடாகுது எனக்கு மட்டுமா அவளும் இந்நாள்வரை இதுக்காக காத்திருந்தாளா பல்லால் கடித்து இறுக்கி இழுத்திட ரவிக்கை நாடாவும் அறுந்து விட கழன்ற கொக்கியும் தெறித்துப் பறந்தது பயந்த மாதும் அவன் மார்பில் பதுங்கினள் பாசமுடன் பரிவாய் ரகுவரனும் அவளை மெதுவாய் அணைக்கிறான் சத்தம் கேட்டு அங்கே வந்த கடுவன் நாயும் கதவால் எட்டிப் பார்த்தே அனுங்கியவாறு ஹாலுக்கு வந்து செற்றியை பார்த்துக் கொண்டு வாலையும் ஆட்டியபடி நடந்தது வாசற்படிக்கு ......! யாழ் இணையம் 28 க்காக ஆக்கம் சுவி .......!
  18. இந்த யோசனையெல்லாம் ஒரு குழந்தை பிறந்து ஒரு வருசத்துக்குள் இன்னொன்றை பெற்றுக்கொள்பவர்களுக்கு வருவதேயில்லை😜
  19. மனிதம் சாகவில்லை, அது ஒருபோதும் சாகாது ........! 🙂
  20. உலக சந்தையில் எரிபொருளின் விலையேற்றமும் அதனால் ஏற்பட்டுவரும் பொருளாதாரச் சிக்கல்களும் அனைத்து நாடுகளையும் பாதித்து வருகின்றன. போர் தொடங்குமுன்னர் ஒரு லீட்டர் ஒரு டொலர் அறுபது சதத்திற்கு விற்கப்பட்ட டீசலை நான் இன்று மூன்று டொலர்கள் 20 சதங்கள் கொடுத்து வாங்குகிறேன். இரு மடங்கைக் காட்டிலும் அதிகரித்திருக்கிறது. இதனோடு பொருட்களின் விலைகளும் அதிகரித்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்த பொருட்களின் விலைகள் சடுதியாக 50 சதத்திலிருந்து ஒரு டொலர்கள் வரை அதிகரித்திருக்கிறது. இது போதாது என்று வட்டி வீதத்தினை குறைந்தது இரு முறையாவது அதிகரிக்கவேண்டி நேரிடும் என்று அவுஸ்த்திரேலிய மத்திய வங்கியின் ஆளுனர் எதிர்வு கூறுகிறார். நிலைமை இப்படியிருக்கிறது. ஆனாலும், இப்போர் ஆரம்பிக்கப்பட்டமைக்கான சில காரணங்கள் இருக்கின்றன. அவையாவன, ஈரான் அணுவாயுத உற்பத்தியைக் கைவிட வேண்டும், நீண்டதூர ஏவுகணை உற்பத்தியைக் கைவிடவேண்டும், இஸ்ரேலினைச் சுற்றியிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதக் குழுக்களுக்கான தனது நிதி, ஆயுத மற்றும் தார்மீக ஆதரவினை கைவிடவேண்டும் என்பன. ஆனால், இவை எவற்றையும் தான் கைவிடப்போவதில்லை என்று ஈரான் கூறுவதாலேயே போர் ஆரம்பித்தது. முன்னர் 2000 கிலோமீட்டர்கள் பாய்ந்துசென்று தாக்கும் ஏவுகணைகளுடன் நிறுத்திக்கொள்வேன் என்று கூறிய ஈரான், இரு நாட்களுக்கு முன்னர் சுமார் 4000 கிலோமீட்டர்கள் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் இரண்டினை இந்துசமுத்திரத்தின் டியேகோகார்சியா தீவில் அமைந்திருக்கும் இங்கிலாந்து - அமெரிக்க கூட்டு இராணுவ தளம் மீது ஏவியிருக்கிறது. ஒரு ஏவுகணை பாதி வழியில் தானாக வீழ்ந்துவிட, இரண்டாவது அமெரிக்கக் கடற்படையினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. ஆக, ஈரான் தனது ஆயுத பெருக்கத்தை நிறுத்தப்போவதில்லை என்பதுடன் இஸ்ரேலினைத் தொடர்ச்சியாக அழிக்கும் தனது நோக்கத்தினையும் கைவிடவில்லை என்பது உறுதியாகிறது. போதாக்குறைக்கு தான் அழிக்கப்பட்டால், உலக பொருளாதாரத்தையும் சேர்த்து அழித்துச் செல்வேன் என்றும் சபதமிட்டிருக்கிறது. போர் பெருமளவு தூரத்தினைக் கடந்து வந்துவிட்டது. சீன - ரஸ்ஸிய உதவியினால் இன்றுவரை தாக்குப்பிடிக்கும் ஈரானின் முல்லாக்களும், அவர்களின் இராணுவ வல்லமையும், அணுவாயுதக் கனவும் முற்றாக அழிக்கப்பட வேண்டும். இஸ்ரேல் எனும் நாட்டிற்கு மட்டுமல்லாது, மொத்த உலகிற்கும் ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் இருப்பு ஆபத்தானது. ஆகவே போர் தொடரப்பட்டு, ஈரான் முல்லாக்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, அயல்நாடுகளுக்கும் உலகிற்கும் ஆபத்தில்லாத ஈரான் உருவாகும்வரை சண்டை தொடரப்படுதல் அவசியம். எதிர்கால மத்திய கிழக்கும், மொத்த உலகும் அமைதியை அடைய வேண்டுமென்றால் இப்போர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முழுமையான வெற்றியுடன் முடிக்கப்படுதல் அவசியமானது. அதற்கான விலையினை உலகம் செலுத்துவதும் தவிர்க்க முடியாதது.
  21. சார் இது ரொம்ப டூமச்😋 இங்கே சொல்ல வேண்டியதை அழகாக சொல்லிவிட்டீர்கள். இதற்குமேல் நான் சொல்ல என்ன இருக்கிறது?
  22. சீனாவை பற்றிய உங்கள் பார்வை சரியானதே. அதை விட மிக சரியானது உங்கள் “அமெரிக்காவே மேல்” என்ற கூற்று. இதை சொல்லப்போய்த்தான் யாழில் என்போன்றோருக்கு மேற்கின் அடி வருடி பட்டம் சூட்டப்பட்டது. உலக நியதி என்பது எப்போதும் வல்லான் வகுப்பதே சட்டம் என்பதே. குறிப்பாக அளவில், இராணுவ வல்லமையில் சிறிய ஆனால் வளத்தில் பெரிய யூ ஏ ஈ, கத்தார் போன்ற நாடுகள்… ஏதாவது ஒரு தூரத்தில் உள்ள வலிய நாட்டை நம்பி இருக்க வேண்டும், அல்லது ஈரான் போன்ற அருகில் இருக்கும், மதம் கலாச்சாரம், மொழியால் வேறுபட்ட நாட்டால் விழுங்கப்பட வேண்டும். 1945 ற்கு பின் இப்படியான சிறிய நாடுகள் அமெரிக்கா, ரஸ்யாவில் தங்கி இருந்தன…. 1990 க்கு பின் ரஸ்யாவில் தங்கி இருப்பது பயனற்றது என்றாகியது… 2026 இல் அமரிக்காவில் தங்கி இருப்பதும் அப்படியே என்ற நிலை வருகிறது… ஆகவே சிறிய நாடுகள் அடுத்த பாதுகாவலரை நாட வேண்டியதுதான். ரோமோ, இஸ்தான்புல்லோ, இலண்டனோ, மாஸ்கோவோ, வாசிங்டனோ, பேய்ஜிங்கோ…. உலகில் எப்போதும் ஒரு நாட்டாமை இருந்தே ஆகும். அந்த நாட்டாமைக்கு கப்பம் கட்டி விட்டு பிரதிபலனாக பாதுகாப்பை கோரும் சிறிய நாடுகளும் எப்போதும் இருக்கும். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த சிறிய நாடுகளை விழுங்க துடிக்கும் அயல்நாடுகளும் இருக்கும். அதேபோல் இந்த அடிப்படை யதார்த்தம் புரியாமல், இப்போ மேற்கை எதிர்ப்பவர்கள் போல் அப்போ ரோமை, இஸ்தான்புல்லை, இலண்டனை எதிர்தவர்களும் இருந்தார்கள்.
  23. பக்கத்தில "வீதியோரம் " இருக்கு அங்கும் உங்கள் நடைப்பயிற்சியை கொஞ்சம் செய்யலாமே .........! 😘
  24. ஈரான்காரன்… அமெரிக்க வரை போயிட்டான் போலுள்ளது. 😂 தம்பருக்கு இது தேவையா. 🤡 கெத்து காட்டப் போய், அவன் வீட்டு வாசல்லை வந்து நிற்கிறான். 🤣
  25. சரியாகச் சொன்னீர்கள். உண்மையில் எதிர்காலத்தில் உலகம் எங்கும்… விமான நிலையம், பஸ் நிலையம், பல் பொருள் அங்காடிகள், மற்றும் பெருமளவு மக்கள் கூடும் விழாக்கள் என்று… தொடர் குண்டு வெடிப்புகள். நடக்க சாத்தியக் கூறுகள் மிக அதிகம். அந்தக் கடைசி வரி… மிக அருமை.
  26. கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவனுக்கு கல்லெறிந்தால் இது தான் நடக்கும். பிரச்சனைகளை தீர்க்காத வரைக்கும் எங்கும் எதிலும் தனகிக்கொண்டே இருப்பார்கள். தலைவனை அழித்த பின் முடங்கிப்போக அவர்கள் ஒன்றும் தமிழர் பரம்பரை அல்ல.
  27. அமெரிக்காவிற்கு தோல்விகள் ஒன்றும் புதிதல்ல.😎 வியட்நாம் போர் தொடக்கம் இன்று வரைக்கும் வெளிநாட்டின் மீதான அத்துமீறல் போர்களில் அமெரிக்கா தோல்விகளையே தழுவியுள்ளது.அயல் நடான கியூபாவையே தன் காலடியில் கொண்டுவர முடியாமல் திணறும் நாடு அமெரிக்கா.அற்ப சொற்ப அரசியலுக்காக ஒரு நாட்டின் மேல் பொருளாதார தடை போடுவது ஒருவித கொடுங்கோல் ஆட்சிக்கு சமனாகும்.அதையே அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் இன்றும் செய்து வருகின்றன. இதனால் பாதிக்கப்படுவது யார் என்பது மதில் மேல் இருக்கும் பூனைகளுக்கு தெரியாது. இன்றைய போர்கள் பொருளாதார தடைகளால் மட்டுமே வருகின்றது என்பது என் கருத்து. இந்த நிலையில் ஈரான் போர் அமெரிக்காவிற்கு தோல்வியாகும் என நான் முன்னரே எழுதியுள்ளேன். இந்த நிலையில் வேண்டப்படாதவர்களுக்கும் அமெரிக்க அரசியல் வரலாறு தெரியாதோர்க்கும் டொனால்ட் ரம்ப் மட்டும் அமெரிக்க வரலாற்றில் தவறு இழைத்தவராக தெரிகின்றார். அமெரிக்க இரத்தத்தில் ஓடுவது போர் மூர்க்க குணம். இதை வரலாறு சொல்லும்.அதையே ஆண்டாண்டு தோறும் செய்து வருகின்றார்கள். நாட்டின் மீது படையெடுக்காமல் விட்டாலும் ஒவ்வொரு ஜனாதிபதி ஆட்சியிலும் பிற நாடுகள் மீது ஏவுகணை வீசாமல் இருந்ததில்லை. மத்திய கிழக்கில் பலஸ்தீனியர்களை சுதந்திரத்துடன் வாழ விட்டிருந்தால் இவ்வளவிற்கு பிரச்சனைகள் வந்திருக்காது. அரேபியர்கள் ஒட்டகத்துடனேயே தாமும் தம் வாழ்வும் என இருந்திருப்பர்.குளவி கூட்டை கலைத்ததின் பலன் இந்த உலகமே நின்மதியில் இல்லை.
  28. புலிகள் சோசலிச கொள்கை என்று ஏனைய இயக்கங்கள் போல பகிரங்கமாக கூவிகொண்டு திரியவில்லை...அமெரிக்கர்களை கடத்துதல்,சிவப்பு தொப்பி நட்சத்திரம்,அரிவாள் என பிரச்சாரம் செய்யவில்லை... எங்களை விட அமெரிக்கா தெளிவாக உள்ளது ....சிறிலங்கா என்ற நாடு தனக்கு தேவையானது என..ஈரானின் கப்பல் சிறிலங்காவில் வைத்து நீர்மூழ்கியால் தாக்கப்பட்டமையும் ஒர் செய்தியை சொல்லி செல்கிறது. நண்பன் என்றால் அமைதியாக் இரு இல்லையென்றால் ...
  29. ஆச்சிக்கு ஒரு ஆப்பிள் போன் வாங்கிக் குடுத்து விடுங்கோ ....... கொட்டப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு திரியட்டும் ......! 😂 அருமையான கவிதை அல்வாயன் ........!
  30. தம்பர் விழுந்தும் மண்படவில்லை என்று எஸ்கேப் ஆகப்பார்க்கிறார்.
  31. கொமேனியின் மறைவை போல ஒரு நல்ல விடயமாகவே பி பி யின் தம்பரின் அகற்றமும், அடக்கமும் இருக்கும், என்னை பொறுத்தமட்டில். ஆனால் ஈரானிய அடிப்படைவாதிகள் இவ்வாறு வெல்வது, நிச்சயம் அரபு முஸ்லிம் நாடுகளுக்கோ எனைய தனி மனித சுதந்திரங்களை அனுசரித்து போகும் இஸ்லாமிய நாடுகளுக்கோ, நல்ல சகுனமாக இராது. அமெரிக்காவின் அடிவருடிகள் என நாம் மிக சுலபமாக அரபுநாடுகளை கடந்து போகலாம். ஆனால் உண்மையில் அடிப்படைவாதத்துக்கு எதிரான மிக் முக்கிய பங்கை ஆற்றுவது யு ஏ ஈ. சல்மான் வந்த பின் சவுதியில் கூட மிக நல்ல மாற்றங்கள் வந்தன. சில மத விதிகளை, சில ஹதீசுகளை நடைமுறை படுத்தவே தேவையில்லை என அண்மையில் அறிவித்தார். ஈரான் இந்த போரில் படுதோல்வி அடையாமல், சரணாகதி ஆகாமல், ஒரு போர்நிறுத்தம் வரும் எனில் - அது ஈரானின் வெற்றியே. தம்பர், செத்த கிளி, பிபி எல்லாரும் தற்காலிகமானவர்கள். ஆனால் ஈரானின் இந்த வெற்றி, அந்த பிராந்தியத்துக்கும், உலகுக்கும், ஷியா அடிப்படைவாதத்தில் நம்பிக்கை இல்லாத அனைவருக்கும் நீண்ட கால நோக்கில் ஒரு பெரும் தலையிடியாக அமையும். யாழ்களத்தில் ஸ்கோர் கேட்கும் மனநிலையில், அமெரிக்காவுக்கு அடி போட்டால் காணும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு இது உறைக்கும் போது காலம் கடந்து விட்டிருக்கும். இதே ஆட்கள்தான் பொதுபல சேனாவின் முஸ்லிம் எதிர்ப்பை ஆதரித்து, முஸ்லிம்களை ஆதரித்து எழுதிய எம்போன்றோரை திட்டினார்கள் என்பது அடுத்த லெவல் முரண்நகை. ஆனால் உங்கள் போன்ற கருத்தாளர்களுக்கு நான் சொல்வது புரியும் என நினைக்கிறேன்.
  32. தம்பர்🤡 சொன்னது போல் அப்படி ஒரு பேச்சும் இல்லை வார்த்தையும் இல்லை என ஈரான் சொல்லி உள்ளதாம் 😂
  33. உலக அரசியல்னா சதுரங்கம் மாதிரி, யாரை நம்புறது, யாரை விட்டுடுறது, யாரு பின்னால நிக்குறது, யாரு முன்னால விழுறத எல்லாமே சூழ்நிலையோட மாறுறது தான். நம்பகத்தன்மைன்னு ஒரு வார்த்தை இருக்குது, ஆனா அதுக்கு எல்லா நாடுகளும் ஒரே அர்த்தம் குடுக்காது. இன்று தோழன் போல நடக்குறவன், நாளை தன் லாபத்துக்காகவே பாதை மாற்றிக்கலாம், அதுதான் வரலாறு காட்டுற பெரிய பாடம். சில நாடுகள் தங்கள் சக்தியை சத்தமில்லாம நிரூபிக்குறது, சில நாடுகள் சத்தமா பேசுறது, சில நாடுகள் யாரோட சேர்ந்து தான் நிற்குறது, சில நாடுகள் தனியா நிக்குற தைரியம் காட்டுறது. அதுல யாரு பெரியவர், யாரு பலவீனம்னு ஒரு வரியில சொல்ல முடியாத விஷயம். அரசியல் உலகத்துல “நேற்று எதிரி, இன்று கூட்டணி” “நேற்று கூட்டணி, இன்று எதிரி”ன்னு பக்கத்துல பக்கத்துலே எழுதுற மாதிரி தான் நடக்குது. அதனால யாரை நம்பினாலும், யாரை எதிர்த்தாலும், ஒரு நாட்டுக்கு முக்கியம் தன் நிலை, தன் நலன், தன் பாதுகாப்பு. அதை யாரும் அட்சய பாத்திரமா கொடுக்க மாட்டாங்க. மொத்தத்தில் சொல்லப்போனா, உலக அரசியல்னா ஒரு பெரிய காமெடி மேடை, ஆனா அதுல நடக்குற நாடகம் சிரிப்புக்காக இல்ல; ஒவ்வொரு நாட்டுக்கும் உயிர் நிலைக்கு சம்பந்தப்பட்ட விஷயம். தம்பர் என்ன சமாதான புறவா?
  34. சரியான முடிவாகவே படுகிறது. பிரித்தானிய பணமுறிகளில் முதலீடு அதிகரிக்க காரணம் அமெரிக்க முறிகளில் இருந்து பல முதலீட்டாளர் வெளியேறுவது என ஒருவர் சொன்னார். டுபாயை மையமாக கொண்ட பல நிறுவனங்களுக்கு அமெரிக்க பணமுறிகளில் இருந்து வெளியே வருமாறு இல்லை என்றால் உங்கள் நிறுவனங்களும் எமது இலக்கே என ஈரான் மிரட்டல் அனுப்பியதாக சொல்கிறார் ஒருவர். உண்மையா தெரியவில்லை. வழமைக்கு மாறாக யுத்தம், ரிசெர்சன் ஆபத்து இருந்தும் தங்கம் விலை விழுகிறது. அரபுநாடுகள் செலவுக்காக தங்கத்தை விற்பதாலாம். மத்தள போன்ற இடத்துக்கு செயல்பாட்டை மாற்றினாலே ஒழிய அரபு நாட்டு விமானசேவைகள் பல வங்குரோத்தாகும் நிலை வரக்கூடும். மத்தளவுக்கு மாற்றினாலும், எரிபொருள் கிடைப்பது சுலபம் அல்ல. விமான எரிபொருட் செலவு 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிமிடம் சண்டை நின்றாலும் கூட உலக எண்ணை, எரிவாயு விலையும், உஅலகன்பொருளாதாரமும் மீள 6 மாதமாவது செல்லும். உலக நாடுகள் அனைத்திலும் recession உறுதி என எண்ணுகிறேன். இப்போதை நிலை இன்னும் 1 மாதம் நீடித்தால் - depression கூட வரலாம்.
  35. செந்தமிழ் தேன் மொழியாள் .......! 😍
  36. வாடிக்கை மறந்ததும் ஏனோ ........! 😍
  37. நான் எப்பவும் சுவியருக்கு பின்னும் முன்னும் திரியறனான்.எப்படி இதை தவற விட்டேன் என்று தெரியவில்லை.அருமை.
  38. @suvy அவர்கள் எப்போதும் 18+ வாசகர்களைக் குறி வைத்துத் தான் எழுதுவார் போல! யாழ் களத்தின் புஷ்பா தங்கதுரை😂!
  39. எனக்கு எமது வரலாற்று பாடம் ஒரு விடயத்தை நினைவுபடுத்துகின்றது. விடுதலை புலிகள் அமைப்பு மாவிலாறு நீர்த்தேக்கத்து நீரை திறந்துவிடாது தடைசெய்தமையும் அதைத்தொடர்ந்து இராணுவ நகர்வுகள் நடைபெற்று முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு போர் முற்றுப்பெற்றது. ஹோர்மூஸை ஈரான் முடக்குவது போரில் ஈரானை முழுமையான தோல்விக்கு இட்டுச்செல்லும் என ஊகிக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.