Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. அவசர வாசிப்பில் தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது எனக்கும் ........நான் இன்னும் வாசிக்கப் பழக வேண்டும் .........! 😇
  2. ஆம் ஆனால் ........ஒரு சமூகத்தின் பிரதிநிதி அவ்வளவுக்கு நான் நினைத்த மாதிரி பகிரங்கமாய் தரம் தாழ்ந்து போகமாட்டார் என்று நினைத்தேன் ......! இப்ப விளங்கீட்டுது இந்த விளையாட்டு . ........கானல் நீரை நம்பி கட்டு கட்டாய் பணமிழந்து கடன்பட்டும் தொலையாததாய் தொல்லை கொடுக்கும் ஒன்றென்று ........!
  3. இந்த முயற்சி வெற்றி பெற்றால் பனைகள்,வடலிகள் அழிவில் இருந்து தப்பிச் சினை பிடித்துப் பெருகலாம் . .....! 🫠
  4. ஒரு தேசியத்தின் கௌரவம் அனாதையாகவும் , ஒரு கேவலத்தை சுற்றிலும் ஊடகங்கள் .......இதைவிட கேவலம் வேறில்லை . .......!
  5. சாம்பார் சாதம் செய்து பாருங்கள் . ...........! 👍
  6. (படத்திலிருப்பது Lady with Lamp செவிலியர் சேவையின் அன்னையான Florence Nightingale அம்மையார். அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் அவரது சேவைக்கால ஆடை. நைட்டிங்கேல் புனிதமான செவிலியர் சேவையின் அஸ்திவாரமாக இருந்தவர் இருப்பவர். அவரையும் அவரது சேவையின் தொடக்கப்புள்ளியையும் நினைவு கூறுதலின் ஒரு வடிவம்தான் தலைக்கவசமும் நீண்ட வெள்ளை ஏப்ரனும். ஆரம்பத்தில் அவர் அணிந்த அதே வடிவில் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டாலும் கால இட சூழலுக்கேற்ப பொருத்தமான பல பரிமானங்களை எடுத்திருக்கிறது, அவரின் நினைவு கூறலுக்கான அடிப்படைகளை விட்டுக் கொடுக்காமல். தவிர்த்து நைட்டிங்கேல் அம்மையார் நினைவு கூறப்படவேண்டியது மகத்தான தாதியர் சேவையில்தானே தவிர அவரது ஆடையொழுங்கில் மாத்திரம் அல்ல. எப்பொழுது அந்த சேவைக்கு இனம் மதம் என்ற கறை பூசப்படுகிறதோ அப்பொழுதே அது தன் புனிதத்தன்மையை இழக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. தாதியம் என்ற சேவை ஆடைகளுக்கு அப்பாற்பட்டது என்ற சிறிய தெளிவே இந்தச் சிக்கலுக்கு மிக இலகுவான பதிலாக இருந்தும் அத்தனை இலகுவாக அதையெல்லாம் எமது நாட்டின் சூழலில் எதிர்பார்த்து விட முடியாது என்பதே வெள்ளிடை மலையும் யதார்த்தமும்.) Voir la traduction
  7. Prakasam P Palani · நம் நிலாவில் எடுக்கப்பட்ட உண்மை புகைப்படம். 1969-ல் நாசா அனுப்பிய அப்பலோ 11 விண்கலம் நிலாவில் இறங்கியபோது விண்வெளி வீரரான பஸ் ஆல்ட்ரின் பதித்த கால் தடம் தான் இது. புகைப்படத்தை நல்லா பாருங்க. கால் தடத்தின் ஆழத்தை பார்க்கும்போது ஆல்ட்ரின் ரொம்ப குண்டாக இருந்த மாதிரி தெரியுது தானே...? ஆனா, அது இல்ல. நிலாவில் தரையிறங்கியபோது பஸ் ஆல்ட்ரினின் எடை 27 கிலோ தான். 'என்னாது...வெறும் 27 கிலோவா...'? ஆமா. ஆனா, அவர் பூமியில் இருந்தபோது அவரோட எடை 80 கிலோ. அவர் போட்டுக்கொண்ட விண்வெளி உடைகள்+உபகரணங்களின் எடை 80 கிலோ. ஆக மொத்தம் 160 கிலோ. இது பூமியில் இருந்தபோது இருந்த எடை. அவர் நிலாவுக்கு போனதும் மொத்த எடையும் 27 கிலோவுக்கு மாறிவிட்டது. காரணம் நிலாவில் உள்ள குறைவான ஈர்ப்பு விசை தான். நீங்க இங்க பூமியில் 60 கிலோ எடை இருந்து, அப்படியே நிலாவுக்கு போனால் அங்கே உங்க எடை வெறும் 10 கிலோ தான் இருக்கும். இப்ப ஒரு விஷயத்தை தெளிவாக புரிஞ்சிக்கங்க. இங்க பூமியில் நீங்க 60 கிலோ எடையுடன் இருந்தால், அது உங்களுடைய உடலின் எடை கிடையாது. உங்களை இந்த பூமி எப்போதும் இழுத்து பிடித்துக் கொண்டுருக்கும் விசை தான் அந்த எடைக்கான காரணம். அப்ப, உங்க உடலில் இருப்பது என்ன...? அதுக்கு பேர் தான் mass. அதாவது நிறை. இந்த நிறை பூமி, நிலா, மார்ஸ் என எந்த இடத்திலும் மாறாது. ஆக, நிலாவில் பஸ் ஆல்ட்ரினின் எடை 27 கிலோ, ஆனா நிறை அதே 160 கிலோ தான். சரி இவ்வளவு குறைவான எடையிலும் கால் தடம் ரொம்ப ஆழமா இருக்கே...? ஏன்னா, நம் பூமி மண் போல் நிலாவில் இருக்காது. கிட்டத்தட்ட சிமெண்ட் மாதிரி பவுடராக தான் இருக்கும். இதனால் தான் கால் தடம் மிக ஆழமாகவே விழுந்திருக்கு. இந்த படத்தை பார்த்து நான் சொல்ல வந்த விஷயம் என்னான்னா... "நிலாவில் நீர், காற்று, உயிரினங்கள் என எதுவுமே இல்லை என்பதால், இந்த கால் தடம் எப்போதும் அழியாமல் அப்படியே இருக்கும்" என இந்த போட்டோவில் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். ஆனால், அது தவறு. நிலாவில் நீர், காற்று எதுவும் இல்லை என்பது உண்மை தான். ஆனால், இன்னொரு விஷயம் அங்க தினமும் நடந்துக்கிட்டு இருக்கே..!! இங்க பூமியில் தினமும் சிறிய அளவிலான எரிகற்கள்(Micrometeorites) விழுந்துக்கிட்டு தான் இருக்கு. இதனால் பூமியின் எடையும் கூடிக்கிட்டு தான் இருக்கு. இதே மாதிரி தான் நிலாவிலும் சிறிய அளவிலான எரிகற்கள் தினமும் விழுந்துக்கிட்டே இருக்கு. இங்க பூமியில் வளிமண்டலம் இருப்பதால் வரும் எரிகல் சில நேரம் உராய்ந்து ஆவியாகிவிடும், அல்லது சிறிய சிறிய பீஸ்கள் மிஞ்சி போய் கீழே விழும். ஆனால், நிலாவில் வளிமண்டலம் இல்லை என்பதால் உராய்வு எதுவும் ஏற்படாமல் அப்படியே விழும். ஆக, அங்கேயும் பிரச்சனை இருக்கு. இப்ப இந்த மாதிரி சிறிய சிறிய பீஸ்கள் இந்த கால் தடம் மீது விழத்தானே செய்யும்...? அப்போ, கால் தடம் அழிந்து விடுமே...? இந்த புகைப்படம் எடுத்து 56 வருஷம் ஆகிட்டதால, அது இன்னும் அழியாம இருக்குமா...? அட்லீஸ்ட், shape கூட மாறியிருக்கலாம் என்பதே உண்மை!!! Voir la traduction
  8. ❣எங்கே எனது கவிதை ❣ · (1887–1895ல்) முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பிரிட்டிஷ் எஞ்சினீயர் பென்னி குவிக் அணயைக் கட்டுவதில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.......!
  9. Sathiya Kumaran · டியர் மந்தனா இந்த மாதிரி Consistent பேட்டிங் எல்லாம் இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் உங்களை தவிர வேற யார்க்கிட்டயும் நான் பாரத்ததே இல்லை! இனிமேல் இன்னொரு வீராங்கனையிடம் பார்க்க போகிறானே என்பதும் தெரியவில்லை! பெண்கள் கிரிக்கெட்டில் உலகின் டாப் அணிகளில் இரண்டு அணிகளோடு அரைசதம், இன்னொரு அணியோடு சதம் என்று உலககோப்பையில் அடிக்கிறதெல்லாம் உண்மையாலுமே வேற லெவல் 🔥" நம்பர் 1 பேட்டர்ன்னு சும்மாவா? அதற்கு உண்டான தரம் வெளிப்படுமே! அந்த வெளிப்பாடு தான் மந்தனாவின் பேட்டிங்! நாங்க ஆவலுடன் எதிர்பார்த்த அந்த 18 ஆம் நம்பர் ஜெர்ஸி ஏமாற்றினாலும், அதற்கும் சேர்த்து வைத்து இந்த 18 ஆம் ஜெர்ஸி நான் இருக்கேன்னு வட்டியும் முதலுமாக பேட்டிங்கில் காட்டி இருக்கிறீர்கள் 👏" பெண்கள் கிரிக்கெட்டில் பல வீராங்கனைகள் வருவார்கள் ஆடுவார்கள் செல்வார்கள்! ஆனா மந்தனா அப்படி கிடையாது! பின்னாளில் வரலாற்றை எடுத்து பார்க்கும் போது ஸ்மிரிதி மந்தனாவின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்கும் 💯" இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் அணியின் அரசனாக அவர் இருக்கும் போது பெண்கள் கிரிக்கெட்டில் அரசியாக நான் இருக்கிறேன் என்று நிரூபித்து உள்ளீர்கள் ! ஒருநாள் போட்டிகளில் மந்தனாவின் 14-வது சதம் இதுவாகும்! இந்த உலகக்கோப்பையில் ஒரு வீராங்கனையின் முதல் சதமாகும்! ஒட்டுமொத்த ஒருநாள் உலககோப்பையில் அவர் அடிக்கும் மூணாவது சதம் இதுவாகும்!! அதுமட்டுமின்றி பெண்கள் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இரண்டாவது வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா உள்ளார்! முதல் இடத்தில் ஆஸி வீராங்கனை 15 சதங்களுடன் மெக் லானிங் உள்ளார்! Queen of Indian Womens Cricket 🏏" #smiritimandhana #TeamIndia #INDIANWOMENSCRICKETTEAM #INDWvsNZW #womensworldcup2025 #cricketlovers Voir la traduction
  10. அது வேறொன்றுமில்லை ......அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள், இவர்கள் ஒற்றுமையில் வேற்றுமையாய் இருக்கிறார்கள் ........!
  11. பாராட்டுக்கள், சூரன்போர் நடக்கும் நேரத்தில் யாழில் சூரனின் விஜயம் பொருத்தமாய் அமைந்திருக்கு . .....! 😂
  12. வணக்கம் வாத்தியார் ........! தமிழ் பாடகி : சின்மயி பாடகர் : உதித் நாராயண் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ பெண் : சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ ஆண் : என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ பெண் : கனவோ நிஜமோ காதல் மந்திரமோ ஆண் : ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது பெண் : தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில் புலன்களைத் திறந்துவிடு ஆண் : பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில் நிரப்பட்டுமா பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே வானுக்குள் நடக்கட்டுமா ஆண் : என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ குழு : அடடா ஆண் : அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ பெண் : கனவோ நிஜமோ காதல் மந்திரமோ.......! --- சஹாரா சாரல் தூவுதோ ---
  13. மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் ........ கல்யாணகுமார் & ஷீலா (பாவாடை தாவணியில் நீண்ட பின்னல் குஞ்சத்துடன் ஆட செம அழகு )........! 😍
  14. https://www.youtube.com/watch?v=O__LTVD27_g இந்த இணைப்பில் நீங்கள் பல பேச்சு சொற்களைப் பேசிப் பழக முடியும் . .......! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.