-
Posts
11187 -
Joined
-
Last visited
-
Days Won
12
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by நிலாமதி
-
என் இந்தியப் பயணம்
நிலாமதி replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
பயணம் முடிந்து வந்த கையோடு யாழிலும் பகிர்வதற்கு என் பாராட்டுக்கள். எங்கே சுமே யின் கதையை (யாழின் பங்களிப்பை ) காணவில்லயே என எண்ணினேன். -
😃 அன்னம் போன்ற அலகுடன் (வாய் ))
-
நிகழ் கால உண்மையிது . உரிய பகுதிக்கு நகர்த்த சொல்லி கேளுங்கள். முப்பது வருடங்களாகி போராடி கிடைத்த நிலையை (கனடா வாழ்க்கை ) விசிட் விசாவில் வந்த மூன்று நாட்களில் கிடைக்கும் என எண்ணுகிறர்கள்.
-
ரசோதரன் உங்கள் இளமைக் கால நினைவுகள் எல்லாம் மீட்டப் படுகிறன. நன்று தொடருங்கள்.
-
பொன்னுலகம் பெண் இனத்தை மறந்திருந்தால் இவ்வுலகமே இல்லை ..
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
நிலாமதி replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இளசுகளுக்கு பணம் தான் குறிக்கோள் என வாழ்கிறார்கள். இலகுவாக காசு கிடைக்கும் என எண்ணுகிறார்கள். அக்கரைகள் பச்சை இல்லை. இளங்கன்றுகள் துள்ளத்தான் செய்வார்கள். -
அதென்னப்பா ஆணுக்கு கை கொடுத்த பெண். அவரது அதிஷ்டம் ஒரு பெண்ணின் கை கிடைத்தது. " இழந்த கைகளை மீண்டும்பெற்ற அதிசயம்" என போடலாமே . ஒவ்வொரு ஆணுக்கும் பின்னே ஒரு பெண்ணின் ஊக்கம் இருக்கும் .தாயாய் ,சகோதரியாய் ,தாரமாய் ,மகளாய் . 😄
-
வீட்டுக்கு வீடு வாசல் படி என்பது போல இந்த ஜந்து வந்தால் தொலையாது. உணவில்லாமல் ஆறுமாதங்களுக்குக்கூட சீவிக்குமாம். சுத்தம் அவசியம்.
-
உண்மை தான் அன்று போல் இன்று இல்லை. இழந்ததை நினைத்து வருந்துவதை விட இனி என்ன செய்யலாம் என சிந்திப்போம். கடந்துபோன காலமும் பேசிய வார்த்தைகளும் மீள வருவதில்லை.
-
புங்கையூரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வாழ்க வளத்துடன்.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நிலாமதி replied to நிழலி's topic in வாழும் புலம்
இருப்பினும் சில கனேடியர்களுக்கு இரண்டு இனம் என்று தெரியாது (சிங்களம் தமிழ் ) எல்லோரும் சிறீ லாங்கன் என தான் பார்ப்பார்கள். முன்பு ஒரு தாய் குழந்தைகள் கொன்ற சேதி வந்த போது தமிழ் பெண்களை கண்டதும் தங்கள் குழந்தைகளை இழுத்து கொண்டு அப்பாற் சென்றார்களாம். நம் இளையவர்கள் படித்து முன்னேறும் நாட்டில் தான் இந்த போதை ஆசாமிகளும் ஊடுருவி உள்ளர்கள். -
..96 பச்சை புள்ளடி கொடுத்திருக்கிறார்கள்.முன் வரிசையில் நிற்கிறீர்கள் உங்கள் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் தந்த அங்கீகாரம். நிகேதனம் என்றால் என்ன என்று உங்கள் மூலம் அறிந்தேன். தொடருங்கள் ...நேரம் கிடைக்கும் போதெல்லாம். ( ஆரோக்கிய நிகேதனம்' என்பது மூன்று தலைமுறையாக மருத்துவம் செய்துவரும் குடும்பத்தவரது மருத்துவ நிலையம்.)
-
தற்கால நடை முறையை நகைச்சுவையோடு சொல்லியது அருமை.
-
இலை என்றால் உதிரும் -------------------------------------- என்ன அழகு என்றுதினம் மாறும் வர்ணங்கள் பார்த்து நிற்க இலைகள் கொட்ட ஆரம்பித்தன வாசல்களும் தெருக்களும்விழுந்த இலைகளால் நிரம்பி வழிந்தன என்றாலும் என் வீட்டில் அதிகம் என்றே தோன்றியது அயல் வீட்டு சருகுகளும்என் வாசலிலேயே ஒதுங்குவது போன்றும் இருந்தது நின்று கூட்டியால் நின்று நின்று கூட்டி அள்ளி அள்ளி குவிக்க அன்றைய பொழுது முடிந்து கொண்டிருந்தது அக்கம் பக்க வீடெல்லாம் குப்பையாக தெருவெல்லாம் சருகாக கிடக்க என் வீடு மட்டும் பளிச்சென்று இருந்தது 'அப்பாடா, முடிந்தது' என்று அண்ணாந்து வானம் பார்த்து நிற்க மெல்லிய காற்று ஒன்று முகம் வருடிச் சென்றது காற்று வந்து கொண்டேயிருந்தது இலைகள் புதிதாக விழுந்து கொண்டேயிருந்தன பொழுது சாயமனமும் சாய இனிஇன்னொரு நாள் கூட்டி அள்ளுவோம் என்று சலிப்புடன் அன்று முடிந்தது கனவில் ஒருவர் வந்தார் அரைக்கண் மூடி நீண்ட காது தொங்க இருந்தார் இதுவரை இலையே விழாத பெருமரம் ஒன்றிலிருந்து ஒரு இலை எடுத்து வா என்றார் எடுத்து வந்தால் என் மரத்திலிருந்து இலை விழாமல் இனிமேல் பார்க்கின்றேன் என்றார் நீங்கள் ஓடித் தப்பி விட்டு அதைக் கொண்டு வா இதைக் கொண்டு வா என்கின்றீர்கள், பெருமானே.
-
அன்றாட நிகழ்வை , கால மாற்றத்தை கவி வரியாக சொல்ல முயன்று இருக்கிறீர்கள் .இடை வெளியை சற்று கவனியுங்கள். முயற்சிக்கு பாராட்டு .
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
நிலாமதி replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இதை பார்த்த எனக்கு ஒரு கணம் ....பின்னோக்கி என் மனம் சென்றது .கெலியின் சத்தம்கேட்டாலே இதயம் பலமுறை துடிக்கும். பிஞ்சுகளுக்கு எங்கே தெரியப்போகிறது . வலிகளும் அதன் வடுக்களும். தமிழரும் சிங்களரும் ஒன்றாக கொண்டாடுகிறார்கள் உங்களுக்கு ஏன் .தமிழ் ஈழம். சிங்களருக்கு வால்பிடிக்கும் நம்மவர்கள் செய்யும் கூத்து .யாழ் மண்ணுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுக்கு காசு சிங்களர் வேடிக்கை காட்டி அள்ளிக் கொண்டு போகிறார்கள். இளம் சமுதாயம் உடல் உழைப்புக்கு தயாரில்லை. -
படத்தை பார்த்தால் தானே தெரிகிறது அட ஏன் இதை பார்த்தோமென்று ....பட்டுத் தெளிவது அறிவு.
-
மயிலாடட்டும் நாங்கள் வாசிக்கிறோம் ( ரசிக்கிறோம்) சுவி ஐயாவின் கதைகளில் ஒரு "சுவை " இருக்கும். தொடருங்கள் ..
-
என்ன இருந்தாலும் பாட்டிமாரை அழைக்காதது பெரும் பிழை. அவர்களுக்கும் ஒரு அவுட்டிங் போல இருக்கும் .சில பாட்டிமார் வைன் அடிப்பார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் இந்த பாகுபாடு அடுத்த முறை பாட்டிமாருக்கும் அழைப்பு வேண்டும். பார்ட்டியில் தாத்தாமார் "ஏத்திக்" கொண்டு வீட்டில் வந்து என்ன அலடடலோ?(கூத்தோ ) அதை யாரு சகித்து கொள்வது .
-
உங்களிடம் நிறைய தகவல்கள் இருக்கும் போல. ஆர்வமுடன் பகிருங்கள் வாசித்து பாராடட நாங்கள் இருக்கிறோம்.
-
வாழ்க்கையின் தேவைகள் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள். களைத்த மனிதருக்கு ஒரு கோப்பை தேநீர் மிகவும் இதமாக இருக்கும். நல்ல உபசரிப்புள்ள குடும்பத்தவர் போல , பொறுப்பான குடும்பஸ்தர்