Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூப் போட்ட தாவணி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tamilgal.jpg

வாங்கோ.. தம்பியவை.. பிள்ள.. ரஞ்சினி.. இந்த நாய்களைப் பிடிச்சு வைச்சிரு.. தம்பியவையை உள்ள வர விடுகுதில்ல...

அயலில் இருந்த அந்த ஆன்ரியின் வீட்டு கேற்றடியில்.. வரவேற்பில் நெகிழ்ந்த படி.. நானும் என் உடன்பிறவாத தம்பியும்.. நாங்கள் என்றுமே போயிராத அந்த வீட்டுக்குள் நுழைகிறோம்.. சுற்றும் முற்றும் இருந்த வகை வகையான பூமரங்களை.. விடுப்புப் பார்த்தப்படி...

வீட்டு வாசலை அடைந்த நாங்கள்.. ஆன்ரி.. இந்த என்வலப்பை அம்மா உங்களட்ட கொடுக்கச் சொல்லி தந்து விட்டவா என்று சொல்லி நான்.. அதை நீட்ட..

நாங்கள் வந்திருக்கின்ற நோக்கத்தை அறிந்து கொண்ட ஆன்ரி.. நீங்களே அதை அக்காட்டை கொடுங்கோ.. என்று சொல்லி.. எங்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்றா.

என்ன.. அக்காவோ.. எங்கட வயசை ஒத்தவா.. பள்ளியில அவாட பெயரைத்தான் எனக்கு பட்டப் பெயரா வைச்சுக் கூப்பிடுறாங்க.. இவா என்னடான்னா.. அக்கா என்றா.. என்று என் எண்ணத்தை ஓட விட்டபடி.. வீட்டுக்குள் நுழைந்ததும்..

அக்கா அந்த அறைக்குள்ள இருக்கிறா போல.. என்வலப்பை அவாட்டையே கொடுங்கோ.. என்று சொல்லி அவா இருந்த அறையை நோக்கி கையைக் காட்டி விட்டா ஆன்ரி.

நாங்கள் இருவரும் திறக்கப்படாதிருந்த அறைக் கதவை மெல்லத் தட்டினம்..

உள்ள இருந்த அவா கதவை மெல்லத் திறந்து பார்த்தா.. மெல்லிய புன்னகையோடு..

நான் என்றுமே அவ்வளவு நெருக்கத்தில் நேரில் அவாவைப் பார்த்ததில்ல. அதுவும் அழகான பட்டுச் சேலை கட்டி.. நகைகள் ஜொலிக்க.. அதைவிட அவாவின் வெளிர் மஞ்சள் மேனி மிளிர.. அழகு தேவதையாக அவா நின்று கொண்டிருந்தா..! அந்தக் காட்சியை கண்களால் மனதார ரசித்தபடி.. அக்கா என்று கூப்பிடுறதை வலிந்து நிறுத்திக் கொண்டு.. அவாவிடம்... என்வலப்பை நீட்டினேன்.. கைகளில் ஒரு வித நடுக்கத்தோடு.

நன்றி.. என்று என்வலப்பை வாங்கிக் கொண்டவா.. கதவைத் திறந்து கொண்டு கோலுக்கு ஓடினா. கால் சலங்கைகள்.. கீதமாக இசைக்க...

ஓடியவா திரும்பி வருவாவோ என்று.. நாங்கள் சில நிமிடங்கள்.. ஆச்சரியத்தோட.. காத்திருக்க.. ஒரு சில நிமிடங்களிலேயே.. இந்தாங்கோ கூல் ரிங்க்ஸ் குடியுங்கோ என்று எவர் சில்வர் தட்டில் வைத்திருந்த கூல் ரிங்சை நீட்டினா அவா. அந்தத் தட்டைப் பிடித்திருந்த.. அவாவின் கை விரல்களின் நகைப்பூச்சை ரசிப்பதா.... தட்டில் பட்டுத் தெறிந்து என் கண்களை அடைந்த அவாவின் அழகு வதனத்தை ரசிப்பதா.. என்று.. என் கண்கள் தனக்குள் தானே போட்டிபோட்டு களைச்சுப் போக.... இறுதில்.. அவாவின் கண்களை பார்த்தேன். அவாவின் கருவிழிகள் இரண்டும் இமைகளோடு போட்டியிட்டு களைத்து.. ஆடாமல் அசையாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதைப் போல... அவாவும் என் கண்களைப் பார்த்தா...

அந்த நொடியில்.. என் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் சிறகடித்தன. என் உதடுகள்.. என் பள்ளி நண்பர்கள் எனக்கு பட்டப் பெயராக அழைக்கும்... அவாவின் பெயரை ரகசியமாக உச்சரித்தும் கொண்டது. அந்த நிலையில் இருந்து ஒருவாறு என்னைச் சுதாகரித்துக் கொண்டு.... கூல் ரிங்ஸை கையில் எடுத்த நான்..

இதில இருங்கோவன்.. என்று அவா கோலில் இருந்த சோபாவைக் காட்ட.. நானும் தம்பியும் போய் உட்கார்ந்து கொண்டோம்.

எங்களை கோலில் இருத்திவிட்டு தனது அறைக்குள் போனவா.. சிறிது நேரத்திலேயே.. கோலுக்கு வந்து எங்களுக்கு எதிராக இருந்த இன்னொரு சோபாவில் அமர்ந்து கொண்டு..

எப்படி படிப்பு எல்லாம் போகுது. அண்டைக்கு எங்கட ஸ்கூல் எக்ஸிபிசனுக்கு வந்திருந்தீங்கள் எல்லோ. அப்ப நீங்கள் கேட்ட கேள்வி தான் இப்பவும் என் மனசில ஓடிக்கிட்டு இருக்குது.. எண்டா..

என்ன இரண்டு மாசத்துக்கு முதலில நடந்தது இன்னும் மனசில ஓடிக்கிட்டு இருக்காமோ.. என்று எனக்குள் நினைத்துக் கொண்டு.. ஒருபுறம் உள்ளூர ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியில் குளித்தப்படி..

ஓ.. அதைச் சொல்லுறீங்களா. நான் அப்படி தான். எங்க எக்ஸிபிசனுக்கு போனாலும்.. கேள்வி கேட்டு ஆக்களை குழப்பிவிடுறது தான்.. அதிகம் செய்யுறது. நீங்களும் குழப்பிட்டீங்களோ... எண்டன்.

அதற்கு அவா தன்னை மறந்து கலகல என்று சிரித்துக் கொண்டு.. இல்ல.. இல்ல.. உங்கட கேள்வியை விட.. நீங்கள் அதில அசிட்டில கை விரலை வைச்சிட்டு.. அவஸ்தைப் பட்டதை கவனிச்சன். இப்ப எப்படி இருக்குது கைவிரல்.. எண்டா..!

என்ன.. கை விரலில அசிட் பட்டதா.. எனக்கே தெரியாதே.. நானே அவதானிக்கல்லையே என்று எனக்குள் எண்ணியபடி.. கைவிரல்களை ரகசியமாக நோட்டமிட்டேன். ஒரு கைவிரலின் ஓரமாக கொஞ்சம் மஞ்சள் கறை போல இருந்தது.... ஒருவாறு அதைச் சமாளிச்சுக் கொண்டு.. ஓஓ.. அதைச் சொல்லுறீங்களா. அதை நான் பெரிசா எடுக்கல்ல.. எண்டன்..!

இப்படி எல்லாம் கவனிக்காமல் இருந்தா எப்படி. அது எங்கட எக்ஸிபிசனில எங்கள் சந்திப்புக்கு நல்ல ஞாபகார்த்தமாக இருக்கும்... எண்டு நினைக்கிறன் எண்டா.. பகிடி போல..!

நானோ.. அசடு வழிய சிரிச்சுக் கொண்டு.. ஓ.. அது நீங்கள் புரதத்திற்கு செய்த பரிசோதனை எல்லோ.. அதுக்கு என் கை தானா கிடைச்சுது.. என்று கதையை மாத்த கடும் பிரயத்தனம் செய்தேன்.

சும்மா கதையை மாத்தாதேங்கோ... எனக்குத் தெரியும்.. நீங்கள் எங்களுக்கு முதலே உதுகளை எல்லாம் செல்வடிவேல் மாஸ்ரரட்ட படிச்சிட்டீங்கள் என்று. அதுதான் அங்க வந்து கேள்விகளாக் கேட்டனீங்கள். உங்கட ரியூசனுக்கு வாற என்ர பிரண்ட் உங்களைப் பற்றி நிறையச் சொன்னவா..

இதைக் கேட்ட நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். அட நான் இவங்களைப் பற்றி எல்லாம் எதுவுமே அறிந்ததில்லை. நண்பர்கள் இவாட பெயரா பட்டம் பெயரா எனக்குச் சொல்லுறதைக் கேட்டதோட சரி. இவங்க எல்லாம் நம்மளப் பற்றி முழு விபரமும் அறிஞ்சிருக்காங்களே. டேஞ்சர் பாட்டிங்க தான்.. என்று மனதுக்குள் எண்ணியபடி.. அவாக்கு பதில் அளிக்க முற்பட்டன். செல்வவடிவேல் மாஸ்ரட்ட போறனான் தான்.. ஆனால் அவர் எங்களுக்கு அது இன்னும் படிப்பிக்கேல்ல. இருந்தாலும் முந்தி ஸ்கூலில படிக்கேக்க தெரிஞ்சு வைச்சிருந்த ஞாபகத்தில தான் கேள்விகள் கேட்டனான் என்று உண்மையைச் சொன்னதும்..

அப்படியா. அப்படின்னா சரி. நான் நினைச்சன் நீங்கள் முந்திப் படிச்சிட்டீங்களோ என்று. அதுசரி.. நீங்கள் தானே எங்கட வீட்டுக்கெல்லாம் வாறதில்லையே... இப்ப என்ன இங்கால..

இல்ல அம்மா தான். தனக்கு நேரமில்ல.. உங்களைப் போய் பார்த்திட்டு வரச் சொன்னா. ஏன் எதுக்கு என்றெல்லாம் கேட்கல்ல. நாங்கள் புறப்பட்டு வந்திட்டம் எண்டன்.

சரி.. சரி.. இதுக்கு மேல நான் உங்களைக் கேள்வி கேட்கமாட்டன். பயப்பிடுறீங்கள் போல...!

பயம் எல்லாம் இல்ல. கொஞ்சம் தயக்கம்... எண்டன் பதிலுக்கு..!

சரி வெட்கப்படாதேங்கோ. அம்மா.. சாப்பாடு செய்யுறா... சாப்பிட்டுப் போங்கோ என்ன. என்றா அவா.

நாங்களும் மறுப்புச் சொல்லாமல்.. தலையசைக்க...

தலை கவனம் எண்டா.

என்ன வீடு தேடி வந்தவங்ககிட்ட பகிடி ரெம்பவே ஓவரா இருக்கு என்று மனசுக்குள் எண்ணிக் கொண்டு.. கஸ்டப்பட்டு.. கட்டுப்படுத்தி.. அடங்கி ஒடுங்கி இருந்து கொண்டம்.

சிறிது நேர மெளனத்தின் பின்... அதுசரி.. உங்களுக்கு என்னவா வர விருப்பம் எதிர்காலத்தில என்று கேட்டா...

இவாக்கேன்.. உது... என்று நினைச்சுக் கொண்டு.. பெரிசா ஒன்றுமில்ல. நல்லா உயரமா வளரனும் என்று விரும்புறன் எண்டன்.

ம்ம்.. எண்டவா.. நான் பெரிசா ஏதாவது சொல்லுவீங்க என்று எதிர்பார்த்தன் எண்டா.

இல்ல.. பெரிசா என்னத்தைச் சொல்லுறது.. அது சரி.. உங்களை இப்படி சோடிச்சு இருத்தி வைச்சிருக்கே.. கஸ்ரமா இல்லையா என்றேன்.

என்னைப் பார்க்க பாவமா இருக்கா.. என்று பதிலுக்கு கேட்டுக் கொண்டே.. ஒரு நாளைக்குத் தானே. நாங்களும் பெரிய ஆள் ஆகிட்டமில்ல.. என்று தான்... எண்டா.. சிரித்துக் கொண்டே.

எவ்வளவு சிம்பிளா சொல்லுறா... நல்ல துணிச்சல்காரி போல என்று நினைச்சுக் கொண்டு.. நினைப்புத் தான்...என்றேன் பதிலுக்கு.

ஏன் அப்படிச் சொல்லுறீங்க... நாங்க தான் தாவணிக்கு தாவிட்டமில்ல..! வெள்ளிக் கிழமையில.. அப்பப்ப எங்கட வைரவரட்ட வருவீங்களில்ல.. அப்ப வாங்கோ.. பூ போட்டுப் பார்த்துச் சொல்லுறன்.. ஏன் என்று.. எண்டா..!!

எதுக்குப்.. பூ..

தெரியாது... வாற வெள்ளிக் கிழமை.. அங்க வாங்க அப்ப சொல்லுறன்.. எண்டவா சிரித்துக் கொண்டே தலை குனிந்தவா தான். எழும்பி தாயிருந்த கிச்சினை நோக்கிப் போயிட்டா.

அதுக்கு அப்புறமா.. சிறிது நேரத்தில்.. சாப்பாடு வர.. சாப்பிட்டு.. நாங்களும் நன்றி சொல்லி.. விடைபெற்றுக் கொண்டம்.

அதுதான் நாங்கள் சந்தித்த இறுதிச் சந்திப்பு. அதற்கு அடுத்த நாளே.. சிங்கள ஆமிக்காரன்.. முன்னேற்ற நடவடிக்கைக்காக ஆக்கிரமிப்புத் தாக்குதலைத் தொடுக்க.. சிறிது சிறிதாக.. ஷெல் அடி.. பொம்பர் அடி என்று.. அவனும் முன்னேறி இடங்களைப் பிடித்துக் கொண்டு வர.. நாங்கள் எல்லோரும் ஊரைவிட்டு.. திக்குத் திக்காக ஓடியது தான்...

இன்றும்.. அந்தத் தாவணி போட்ட பூப் புதிருக்கு விடையின்றி.. நான்.

அவாவும் எங்கேயோ.. நான் அறியேன்..???!

Edited by nedukkalapoovan

  • Replies 72
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குள் ரைட்டில் போடுவம்.. :D

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்ன புது ட்ரென்ட் ஆ இருக்கு? :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...

இன்றும்.. அந்த தாவணி போட்ட பூ புதிருக்கு விடையின்றி.. நான்.

அவாவும் எங்கேயோ.. நான் அறியேன்..???!

எல்லாப் புதிருக்கும் விடை கிடைத்தால் வாழ்கையில் ஒரு பிடிப்பு இருக்காது நெடுக்ஸ், இது அட்வைஸ் இல்லை, அனுபவம்... :)

இதுக்கு முதல வாசிச்சது மாதிரி இருக்கு... :unsure:

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குள் ரைட்டில் போடுவம்.. :D

:lol:

கொஞ்ச நேரம் தலைப்போடையே விட்டிருக்கலாம் போல. கற்பனைக் குதிரையில் பறந்தடிச்சு.. நல்ல பாடல் காட்சிகளாவது பதியப்பட்டிருக்கும் போல..! :):icon_idea:

இது என்ன புது ட்ரென்ட் ஆ இருக்கு? :rolleyes::icon_idea:

சும்மா வேர்க் அவுட் ஆகுதோ.. என்று பார்க்கத்தான். அது ஆகுது..! (ஜோக்ஸ்) :lol::D

நன்றி கு.சா ண்ணா. :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் புதிருக்கும் விடை கிடைத்தால் வாழ்கையில் ஒரு பிடிப்பு இருக்காது நெடுக்ஸ், இது அட்வைஸ் இல்லை, அனுபவம்... :)

இதுக்கு முதல வாசிச்சது மாதிரி இருக்கு... :unsure:

உண்மை தான். அன்றைய பூப் புதிருக்கு அப்பவே ஏதாவது ஒரு விடை கிடைத்திருந்தால். அது.. இப்ப நினைவில் எழுந்து.. கதையாகி இருக்குமா என்ன..! :lol:

இதே சம்பவத்தை வேறோரு வடிவிலும் எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்..! அந்தளவிற்கு அதன் பாதிப்பு இதயத்தின் ஓரத்தில் எங்கேயே.. உள்ளது என்று நினைக்கிறேன். :)

உண்மை தான். அன்றைய பூப் புதிருக்கு அப்பவே ஏதாவது ஒரு விடை கிடைத்திருந்தால். அது.. இப்ப நினைவில் எழுந்து.. கதையாகி இருக்குமா என்ன..! :lol:

இதே சம்பவத்தை வேறோரு வடிவிலும் எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்..! அந்தளவிற்கு அதன் பாதிப்பு இதயத்தின் ஓரத்தில் எங்கேயே.. உள்ளது என்று நினைக்கிறேன். :)

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D

நன்றி குட்டி. பாட்டெல்லாம் பிரமாதமா இருக்குது. :D

இந்த அறிவிப்பாளர்.. சிறீலங்கா ஒளிப்பு மறைப்புக் கூட்டுத்தாபனத்தை சேர்ந்தவரோ..??! எங்கையோ கேட்ட குரலா இருக்குது. :lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான். அன்றைய பூப் புதிருக்கு அப்பவே ஏதாவது ஒரு விடை கிடைத்திருந்தால். அது.. இப்ப நினைவில் எழுந்து.. கதையாகி இருக்குமா என்ன..! :lol:

இதே சம்பவத்தை வேறோரு வடிவிலும் எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்..! அந்தளவிற்கு அதன் பாதிப்பு இதயத்தின் ஓரத்தில் எங்கேயே.. உள்ளது என்று நினைக்கிறேன். :)

நெடுக்கர், உங்கள் மருத்துவ அறிவை வைச்சுச் சொல்லுங்கோ!

இதயத்திற்கு எந்தப் பக்கம் ஓரம் இருக்கின்றது? :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், உங்கள் மருத்துவ அறிவை வைச்சுச் சொல்லுங்கோ!

இதயத்திற்கு எந்தப் பக்கம் ஓரம் இருக்கின்றது? :icon_idea:

ஒரு பேச்சுக் சொன்னா... ஊரே சொல்லுது... அவங்கள நிற்பாட்டச் சொல்லுங்க.. நானும் நிப்பாட்டிறன்..

என்ன ஏற்றம் இறக்கமா கதைக்கிறேன்னு.. நினைக்கிறீங்களா... இதுக்குப் போயி.. மருத்துவ ஆரய்ச்சி செய்யச் சொன்னா.. எவன் தான் மெளனமா பேசுவான்.... ஆக மிஞ்சிப் போனா.. இதயத்தைப் பிளந்துவிட்டா ஓரம் வந்திட்டுப் போகுது..!!! :lol::D

Edited by nedukkalapoovan

உங்க கதை பாத்தேங்க . நல்லா கதை சொல்றீங்க . ஆனா உங்க ஊரு பேச்சு வழக்கு புரிஞ்சுக்கிறது அவ்வளவு ஈசியா இல்லைங்க . தொடந்து எழுதுங்க .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்க கதை பாத்தேங்க . நல்லா கதை சொல்றீங்க . ஆனா உங்க ஊரு பேச்சு வழக்கு புரிஞ்சுக்கிறது அவ்வளவு ஈசியா இல்லைங்க . தொடந்து எழுதுங்க .

தங்கள் கருத்துக்கு நன்றிங்க. அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல்லங்க.. நம்ம மொழி உங்களுக்கு புரியுதில்ல.. ஆனா.. நமக்கு உங்க மொழி புரியுதே..! :)

எதுவெல்லாம்.. புரியல்லைன்னு.. highlight பண்ணிக் காட்டினீங்கன்னா.. நமக்கும் உங்களுக்கு புரியுற மாதிரி எழுத வருமில்ல..! :icon_idea:

நீங்க மட்டுமல்ல.. நம்ம தமிழக நண்பர்களும் தான்.. ஏப்பா.. கொஞ்சம் ஸ்பீட்ட குறைச்சு பேசுப்பா.. என்றாங்க..! நம்ம பேச்சு அவ்வளவு வேகமாவா இருக்கு...! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊரில பெட்டையள் பெரிசானால் பெடியங்களை வீட்டுக்கு அனுப்புறவை :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊரில பெட்டையள் பெரிசானால் பெடியங்களை வீட்டுக்கு அனுப்புறவை :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊரில பெட்டையள் பெரிசானால் பெடியங்களை வீட்டுக்கு அனுப்புறவை :lol: :lol: :lol:

அம்மா அப்பாக்கு.. வேறு அலுவல் இருந்ததால்.. கட்டாயம் போகனும் என்பதற்காக என்னையும் தம்பியையும் அனுப்பினாங்க. என்வலப்பை கொடுத்திட்டு வரச் சொல்லி மட்டும் தான். அங்க நடந்த மிச்ச சொச்சத்துக்கு அவங்க என்ன செய்ய முடியும்..! நாங்க தான் என்ன செய்ய முடியும். :)

நான்.. போயிருக்கேன்.. ஒன்றிரண்டுக்கு..! அதுவும் அவாள.. கூப்பிட்டு.. போட்டோ எல்லாம் எடுத்திருக்கா..! நாங்க பொண்ணுங்க கூட அச்சாப் பிள்ளையா... அதுதான்..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ரதிக்கு, ஐயாயிரம் பதிவுக்குக் கெதியாய்ப் போயிர வேணும் எண்டு அவசரம் போல!

ஒவ்வொரு கருத்தும், இரண்டிரண்டாப் போகுது! :D

  • கருத்துக்கள உறவுகள்

ரதிக்கு, ஐயாயிரம் பதிவுக்குக் கெதியாய்ப் போயிர வேணும் எண்டு அவசரம் போல!

ஒவ்வொரு கருத்தும், இரண்டிரண்டாப் போகுது! :D

நான் நிர்வாகத்திற்கு சொன்னேன் எனது கருத்து இரண்டிரண்டாய் வருகுது என ஆனால் அவர்கள் கணக்கெடுக்கவில்லை :(

பூப் போட்ட தாவணி தலைப்பை பார்த்தவுடன் வேறு யாரோதான் எழுதிருக்கிறார்களோ வந்து பார்த்தால் எழுதியவரை பார்த்ததும் நம்பவே முடியவில்லை... நம்ம நெடுக்கண்ணா இப்படி?ம்ம்ம்ம் கதை இன்ரசிற்க்காகத்தான் இருக்கின்றது... ஆனாலும் ஒரு சந்தேகம் இவ்வளவு பேசும்வரை அவங்களோட அம்மா பார்த்துக்கொண்டோ இருந்தவர்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூப் போட்ட தாவணி தலைப்பை பார்த்தவுடன் வேறு யாரோதான் எழுதிருக்கிறார்களோ வந்து பார்த்தால் எழுதியவரை பார்த்ததும் நம்பவே முடியவில்லை... நம்ம நெடுக்கண்ணா இப்படி?ம்ம்ம்ம் கதை இன்ரசிற்க்காகத்தான் இருக்கின்றது... ஆனாலும் ஒரு சந்தேகம் இவ்வளவு பேசும்வரை அவங்களோட அம்மா பார்த்துக்கொண்டோ இருந்தவர்கள்...

நன்றி சுஜி..!

அவங்கட அப்பா அம்மாக்கு எங்கட அப்பா அம்மா குடும்பம் பற்றி நல்லா தெரியும். அவங்க அம்மா எங்க அம்மாட பெஸ்டு பிரண்டு. அதுவும் இல்லாம.. நாங்க போனது பின்னேரமா.. அவங்க எங்களுக்கு என்று சாப்பாடு செய்ய வேண்டி இருந்திச்சு என்று நினைக்கிறன். கிச்சினில தான் அதிகம் நிண்டாங்க. அவங்க அப்பா இருக்கல்ல. அதால அறிமுகம் பண்ணி வைச்சிட்டு போய்ட்டாங்க..! சின்னப் பயபுள்ளைங்க கதைக்கிறதை எல்லாம் கேட்டிட்டு இருப்பாங்களா என்ன..??! எங்க ஊரில அப்படி எல்லாம் செய்யுறதில்ல. நாங்க வம்பு தும்பு செய்யமாட்டமுன்னு.. ஊரில எல்லாருக்கும் தெரியும். :lol::icon_idea:

அதுக்குள் ரைட்டில் போடுவம்.. :D

:lol:

இவருக்கு டைடில் போட 34 நிமிசம் எடுத்திருக்கு. நாம முழிச்சிருந்தொமின்னா 34 செக்கன். ஆ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு டைடில் போட 34 நிமிசம் எடுத்திருக்கு. நாம முழிச்சிருந்தொமின்னா 34 செக்கன். ஆ..

நாங்க குட்டிக் கதை எழுதிறதுன்னா.. யாழில் நேரடியாகவே எழுதிக் கொண்டிருக்கிறது. நேற்றும் அப்படித்தான் எழுதிக் கொண்டிருக்க திடீர் என்று எழுதிய கதை.. பிரீஸ் ஆகிட்டுது. எழுதியதை கொப்பி பண்ணி வேறு எங்கும் ஒட்டவும் முடியல்ல. இந்த நிலையில்.. ஒரே வழி.. எழுதிய கதையை எழுதிய மட்டில் பிரசுரிப்பது.. அது யாழில் தோன்றினால்.. லக்கி. இல்லைன்னா.. இந்தக் கதையை அப்படியே விட வேண்டியதுதான் என்ற முடிவில்.. கதையை பதிவு செய்தேன். என்ன.. இந்த நட்பினை தேடிய..இதயத்தின் வேண்டுதலோ.. என்னவோ.. பிரீஸான கதை யாழில் தெரிய.. அதை கொப்பி பண்ணி வேறிடத்தில் ஒட்டி.. கதையை முழுதாக எழுதி முடிச்சிட்டு பிரசுரித்தன். இதுதான் உண்மையில்.. நடந்த சம்பவம். :)

ஆனால்.. தலைப்போடு கதையைக் காணாததால்.. குழப்பிப் போன... யாழ் கள உறவுகள் தங்களால் இயன்ற மட்டில்.... ஆக்கமும்.. ஊக்கமும்.. தந்து எம்மை நெகிழ வைத்துவிட்டார்கள். அதற்கு மீண்டும் நன்றி. அந்த வகையில்.. இசையின் பாடல் தலைப்போடு பொருந்தி இருந்ததால்.. அதைக் கேட்டு ஆச்சரியமே மிகுந்தது..! :)

பல தடவைகள் கதை எழுதி கீபோட் கீயை மாறி அழுத்தி அவை காணாமல் போன பல சந்தர்ப்பங்கள் உள்ளன. பிறகு மீண்டும் அதே மனநிலையில் கதை எழுத முடியாமல் உருப்பெறாமல்.. விட்டுவிட்ட ஆக்கங்கள் பல..! இந்தக் கதைக்கு அப்படி ஒரு கதி நேராதது.. யார் செய்த பாவமோ.. புண்ணியமோ..! :lol::D

முன்பு இந்தக் கதை மேலோட்டமாக வேறொரு வடிவில் வந்தது.

இதில் அடி மனதின் ஆழத்தில் சலசலத்து ஓடும் உணர்வுகளும் வெளிப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி அது இது என்றுகொண்டு திரியும் நெடுக்ஸ் கூட இதயத்தின் ஓரம் என்று கதைக்க வெளிக்கிட்டுவிட்டார்.

என்ன செய்வது எல்லாம் வயது தான். அனுபவிக்க வேண்டிய வயசில அனுபவிக்க வேண்டும்.

ஜமாயுங்கள்.......................... எழுதுவதை சொன்னேன்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இந்தக் கதை மேலோட்டமாக வேறொரு வடிவில் வந்தது.

இதில் அடி மனதின் ஆழத்தில் சலசலத்து ஓடும் உணர்வுகளும் வெளிப்பட்டுள்ளது.

அந்த அப்பழுக்கற்ற தோழியை மிஸ் பண்ணிட்டனோ என்று இப்ப நினைக்கிறன். அதால கதையும் இயல்போடு மெருகேறுதோ தெரியல்ல. அப்ப இதெல்லாம் ஒரு விசயமாவே தெரியல்ல. உலகத்தை நிறைய புரிஞ்சிக்கிற போதுதான் தெரியுது எது மிகவும் நல்லது எது மிகவும் கெட்டது என்று..! :):icon_idea:

ஆராய்ச்சி அது இது என்றுகொண்டு திரியும் நெடுக்ஸ் கூட இதயத்தின் ஓரம் என்று கதைக்க வெளிக்கிட்டுவிட்டார்.

என்ன செய்வது எல்லாம் வயது தான். அனுபவிக்க வேண்டிய வயசில அனுபவிக்க வேண்டும்.

ஜமாயுங்கள்.......................... எழுதுவதை சொன்னேன்! :D

I missed a lovely heart..! அப்படின்னு இப்ப எண்ணத் தோணுது..! எல்லா நேரத்திலும் அதிஸ்டம் வராது..! ஆனால் துரதிஸ்டம் வரும்.... என்பது இப்ப புரியுது. அப்ப கொஞ்சமும் புரியல்ல..! :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.