Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூப் போட்ட தாவணி.

Featured Replies

நன்றி குட்டி. பாட்டெல்லாம் பிரமாதமா இருக்குது. :D

இந்த அறிவிப்பாளர்.. சிறீலங்கா ஒளிப்பு மறைப்புக் கூட்டுத்தாபனத்தை சேர்ந்தவரோ..??! எங்கையோ கேட்ட குரலா இருக்குது. :lol::rolleyes:

இவர் யார் என்றே தெரியவில்லை நெடுக்ஸ், பாடலில் பெயரை யூ டியூபில் தேடியபோது பார்த்தது. பாட்டு என்னமோ பழைய நல்ல பாட்டுத்தான் ஆனால் தமிழ் உச்சரிப்புத் தான் கொஞ்சம் இழுக்குது.... :D

  • Replies 72
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழில ஒருத்தராவது "ஸ்தீரி லோலனாகாமல்" "சுய" கௌரவத்தோட இருக்கிறார் எண்டு இருந்தால் கடைசியில அந்தாளையும் கவித்திட்டாய்ங்களா? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் யார் என்றே தெரியவில்லை நெடுக்ஸ், பாடலில் பெயரை யூ டியூபில் தேடியபோது பார்த்தது. பாட்டு என்னமோ பழைய நல்ல பாட்டுத்தான் ஆனால் தமிழ் உச்சரிப்புத் தான் கொஞ்சம் இழுக்குது.... :D

எனக்கு ஊரில எங்கையோ கேட்ட குரலா இருந்திச்சு.. அதுதான். பொதுவாக எனக்கு மேடைப் பாடல்கள் பிடிப்பதில்லை. ஒரிஜினல ஒரிஜினலா ரசிப்பது தான் பிடிக்கும்..! :):icon_idea:

யாழில ஒருத்தராவது "ஸ்தீரி லோலனாகாமல்" "சுய" கௌரவத்தோட இருக்கிறார் எண்டு இருந்தால் கடைசியில அந்தாளையும் கவித்திட்டாய்ங்களா? :rolleyes:

அண்ணா.. அது நான் சின்னனா இருக்கேக்க.. நடந்த.. எதிர்பார்க்காத சம்பவம். ஒருத்தி தோழியாக பழக விரும்பியதன்.. கதை அண்ணா. ஸ்திரிகள்.. (பெண்கள்)... எங்களைக் கவிழ்க்க அனுமதிப்பமா என்ன..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊரில பெட்டையள் பெரிசானால் பெடியங்களை வீட்டுக்கு அனுப்புறவை :lol: :lol: :lol:

அப்ப நெடுக்ஸ் ஊரிலயே சின்னத்தம்பி பிரபு மாதிரி என்டு சொல்லுறீங்களா ரதி.என்றாலும் நீங்க ரொம்ப ஓவர் ரதி. :lol: :lol: :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. அப்பா அம்மாவுக்காக சொன்ன சொல்லத் தட்டாமல்.. விபரம் தெரியாமல்.. என்வலப் கொடுக்கப் போய்.. மாட்டிக் கொண்டதற்கு.. சின்னத்தம்பி பிரபு..ரேஜ்ஜுக்கு.. கற்பனை பண்ணுறீங்களே. அதுவும் நல்லதுக்குத் தான்..! :lol::D

யாழில ஒருத்தராவது "ஸ்தீரி லோலனாகாமல்" "சுய" கௌரவத்தோட இருக்கிறார் எண்டு இருந்தால் கடைசியில அந்தாளையும் கவித்திட்டாய்ங்களா? :rolleyes:

:unsure::rolleyes::lol:

அடப்பாவிகளா.. அப்பா அம்மாவுக்காக சொன்ன சொல்லத் தட்டாமல்.. விபரம் தெரியாமல்.. என்வலப் கொடுக்கப் போய்.. மாட்டிக் கொண்டதற்கு.. சின்னத்தம்பி பிரபு..ரேஜ்ஜுக்கு.. கற்பனை பண்ணுறீங்களே. அதுவும் நல்லதுக்குத் தான்..! :lol::D

ஹிஹிஹி.... :D சொன்ன சொல்லைத் தட்டாமலா, இல்லை சொன்னதைக் கேட்காமலா? சும்மா பகிடிக்கு... :lol: :lol:

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹிஹி.... :D சொன்ன சொல்லைத் தட்டாமலா, இல்லை சொன்னதைக் கேட்காமலா? சும்மா பகிடிக்கு... :lol: :lol:

நானும் அப்ப எல்லாம்.. அப்பாவி தான்.. அதுக்காக சின்னத்தம்பி பிரபு அளவுக்கு மோசமான அப்பாவி இல்லையே..! :lol:

நன்றி.. குட்டி. இப்ப புரியுது.. மேலே ஏன் அப்படிச் சொன்னாங்கென்னு..! :lol:

பிரச்சனை என்னென்னா.. உள்ள ஒரு கருத்து.. வெளில ஒரு கருத்து வைச்சு எழுதிறாங்களா.. கஸ்டமா இருக்கு கண்டிபிடிக்க..! :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு இவர்களை பற்றி நீங்க இசையும் கதையிலும் எழுதியுள்ள மாதிரி இருக்கு, விடுங்க இதெல்லாம் பிரச்சனையா எடுத்து, கல்யாணமே வேண்டாமென்று இருப்பதா, நல்லா எழுதியுள்ளீர்கள், எங்களை கிட்டவே விடமாட்டார்கள் ஊரில், நீங்க கொடுத்து வைச்சனீங்க

http://www.yarl.com/forum3/index.php?showtopic=91195&st=80

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நெடுக்ஸ்..அவ தோழி என்றால் இப்பவும் அவவின் தொடர்பை எடுத்து உறவை புதுபிக்க வேண்டியது தானே? அவ Face book இல் இல்லையோ? :)

.

நீங்க டைடில் போடாத விசயம் எங்களுக்குத்தெரியாது.

நாங்க யோசித்தது உங்கட டைடிலுக்கு இசை டைடில் சாங் போட்டாராக்கும் என்று. அதுக்கு 34 நிமிசமா என்று யோசித்தோம்.

சாங் எல்லாம் எங்களுக்கு ஹீ.. ஹீ...

சாரி பிறதர்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு இவர்களை பற்றி நீங்க இசையும் கதையிலும் எழுதியுள்ள மாதிரி இருக்கு, விடுங்க இதெல்லாம் பிரச்சனையா எடுத்து, கல்யாணமே வேண்டாமென்று இருப்பதா, நல்லா எழுதியுள்ளீர்கள், எங்களை கிட்டவே விடமாட்டார்கள் ஊரில், நீங்க கொடுத்து வைச்சனீங்க

http://www.yarl.com/...pic=91195&st=80

நன்றி உடையார்.

அங்க சுருக்கப்பட்டிருந்த சம்பவத்தை இங்க கொஞ்சம் விரிவா சொல்லி இருக்கிறம். என்ன ஆமிக்காரன் இராணுவ நடவடிக்கை தொடங்க.. ஓடிறதும் வாறதுமா இருந்தவர்கள்.. பின்னர் ஒரேயடியா ஓடிட்டாங்க. நாங்களும் இடம்பெயர்ந்திட்டம்..! :)

ஏன் நெடுக்ஸ்..அவ தோழி என்றால் இப்பவும் அவவின் தொடர்பை எடுத்து உறவை புதுபிக்க வேண்டியது தானே? அவ Face book இல் இல்லையோ? :)

தோழமை பில்டப் ஆக முதலே.. ஆமிக்காரன் ஆப்பு அடிச்சிட்டானே. அப்புறம்.. பேஸ்புக்கில வலியப் போய் அட்பண்ணிறதா.... நமக்கு ஒரு கெளரவம் வேணாம்..??! அதுவும் இல்லாமல்.. சின்னனில நடந்ததை பேயன் பைத்தியக்காரன் போல.. நாங்கள் ஞாபகம் வைச்சிருக்கிறது போல.. எல்லாரும் வைச்சிருப்பாங்களா என்ன. :lol::icon_idea: பல பேர் நேற்று நடந்ததையே மறைச்சிட்டு.. மறந்திட்டு.. காயா.. அடுத்தவங்க கூட கைகோர்த்துக்கிட்டு சுத்துற உலகம் இது.

நீங்க என்னடான்னா..??! பழைய நினைவை.. புதிய உறவாக்கு என்று சாத்தியப்படாததை.. சாத்தியப்படுத்த நிற்கிறீங்க..! இதெல்லாம் கதையில எழுதி.. ஆதங்கத்தை சொல்ல முடியுற விசயமே தவிர.. நீங்கள் சொல்லுறது எல்லாம்.. இப்போதைய நிலையில்... நடைமுறைச் சாத்தியமற்றவை..! :)

நாங்கள் நிஜத்திற்கும்.. கற்பனைக்கும் இடையில் கிடந்து தவிக்கிறம். எல்லோருக்கும் இந்த நிலை வராது தானே..! அதுதான்.. கதை.. கவிதை என்று எழுத மூளையில.. எண்ணம்.. வருகுது..!நினைக்கிற எல்லாமே வரிசைக் கிரமத்தில நடந்திட்டு.. கிடைச்சிட்டுன்னு இருந்தா எவன்.. கதை.. கவிதை எழுதிக்கிட்டு இருக்கப் போறா..! அந்த நேரத்திற்கு அவன்.. எத்தனையோ வேலை செய்திடுவான்.. இல்ல செய்ய வைக்கப்பட்டிடுவான். பாவம்.. அவன் கதை தனிக்கதை.. அதுவேற..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க டைடில் போடாத விசயம் எங்களுக்குத்தெரியாது.

நாங்க யோசித்தது உங்கட டைடிலுக்கு இசை டைடில் சாங் போட்டாராக்கும் என்று. அதுக்கு 34 நிமிசமா என்று யோசித்தோம்.

சாங் எல்லாம் எங்களுக்கு ஹீ.. ஹீ...

சாரி பிறதர்..

தோஸ்து.. நான் சும்மா தான்.. தலைப்புப் பின்னணியை எழுதினன். ஒருவேளை இசை தலைப்புக்குரிய விடயத்துக்காக காத்திருந்திட்டு.. அந்தக் காணொளியை இணைச்சிருக்கலாம் இல்லையா. அதுதான்..! எங்க பக்கம் நடந்ததை ஒரு குட்டி விளக்கமா எழுதி இருந்தன். இதுக்கெல்லாமாவா.. சாரி..! நமக்குள்ள சாரி எல்லாம் எதுக்கு புறோ..! :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன்

அழகான ஆழமான வாழ்க்கையைச்சொல்லும் அனுபவக்கதை.

எல்லோருக்கும்ஒரு வயிதில் வந்து போவதுதான்.

இதைக்காதல் என்று சொல்லாவிடடாலும் ஒருவகை ஈர்ப்பு வகைக்குள் அடக்கலாம்.

அத்துடன் போனவை பல.

தொடர்ந்தவை சில.

திருமணம்வரை வந்தவை ஒன்று அல்லது இரண்டு. :D:icon_idea:

தங்களின் தாழ்மையான கருத்துக்கு நன்றி விசுகு அண்ணா..! :)

  • கருத்துக்கள உறவுகள்

பதினாறு வயதினிலே பசுமையான நினைவுகள்

மீட்கும் நெடுக்கருக்கு வாழ்த்துகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதினாறு வயதினிலே பசுமையான நினைவுகள்

மீட்கும் நெடுக்கருக்கு வாழ்த்துகள்

நன்றி வாத்தியார். பதின்ம வயதுப் பசுமை நினைவுகள் என்று சொல்லலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கதையை வாசிக்க இந்த பாட்டுதான் ஞாபகம் வருதே

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

பாலாடை போன்ற முகம் மாறியதேனோ

பனி போல நாணம் அதை மூடியதேனோ

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

(வாவென்று கூறாமல் வருவதில்லையா

காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா) * 2

சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா

இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

(தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா

நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா) * 2

முத்தமிழே முக்கனியே மோகவண்ணமே

முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்

ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்

மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்

நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது கண்ணதாசன் பாடல் தானே. அவர் பெண்களைப் பற்றி நல்லாவே ரசிச்சு ருசிச்சு எழுதி இருக்கிற ஆள் தானே. நாங்க எல்லாம் அப்படியா..??! நாங்க எல்லாம் பெண்களை அந்தளவுக்கு பார்க்கல்ல என்றாலும் அழகை தூரத்த இருந்து ரசிக்கிறம் என்றது என்னவோ இயற்கையின் நியதிக்கு உண்மை தான்..! (குட்டியும் இந்தப் பாடலை இணைத்திருந்தார். உடையார் நீங்களும் இணைச்சிருக்கீங்க. இந்தப் பாடலுக்கு அத்துணை விசேசமோ..! நன்றி உடையார் தேடிப் பிடிச்சு வரிகளை இணைத்ததற்கு.) :):lol:

Edited by nedukkalapoovan

.

புறோ.. :)

இதயத்தில இப்டி ஓரமா ஒக்காந்திட்டு அப்பப்ப வந்து வாட்டி எடுக்கிற மெமரீஸ் எல்லாத்தையும் அழிச்சுக்கிறத்துக்கு ஏதாச்சும் வழி இருக்கா சொல்லுங்க.. :(

பை தி வே... ஹெப்பி நியூ இயர்மா.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

புறோ.. :)

இதயத்தில இப்டி ஓரமா ஒக்காந்திட்டு அப்பப்ப வந்து வாட்டி எடுக்கிற மெமரீஸ் எல்லாத்தையும் அழிச்சுக்கிறத்துக்கு ஏதாச்சும் வழி இருக்கா சொல்லுங்க.. :(

பை தி வே... ஹெப்பி நியூ இயர்மா.. :)

அப்படி ஒரு வசதி இருந்திருந்தா.. complete format க்கு command கொடுத்திட்டு.. முன் பின் தெரியாம.. பழகித் தொலைச்சதுகள்.. தெரிஞ்சு.. பழகித் தொலைச்சதுகள்.. பழகிட்டு இடையில விட்டிட்டு ஓடினதுகள்.. என்று மண்டிப்போய் உள்ள நினைவுகளை எல்லாம் அழிச்சு கிளீன் பண்ணிட்டு.... எவ்வளவு பிறியா இருக்கலாம்.. புறோ. என்ன செய்வம்.. இயற்கைக்கு அப்படி வைக்கத் தெரியல்லையே..! :lol::D

அதன் பின் வாழ்வில் என்ன இருக்கு.....??? :icon_idea:

ஊரில் இருந்த நேரம், எங்கட மாமா ஒருவர் அடிக்கடி இந்தப் பாடலை நன்றாகப் பாடுவார்.. அப்போதெல்லாம் வார்த்தைக்கு அர்த்தம் தேடுறதில்லை.. வளரும் காலங்களில்த் தான் கேள்விப் பட்டேன், ஆறடி உயரத்தில் இருக்கும், கம்பிரமான அந்த உருவம் வீதியில் போனால், வேலிக்குப் பின்னால் பல கண்கள் இருக்குமென்று... அவருக்கும் ஏதோ ஒரு பழைய நினைவு இன்னும் நெஞ்சோடு இருப்பதால் தான் அப்போதிலிருந்து இப்பவரை பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்கும் போதெல்லாம் முதலில் எடுத்து விடும் பாடல் 'பாவடைத் தாவணியில் பார்த்த உருவமா' பாடல் தான்.. ^_^

கடைசி நான்று வரிகளைக் கேட்கும் போது அவரின் நினைவில் உள்ள ஆழம் இப்போது நன்றாகப் புரிகிறது, கிட்டத் தட்ட அதே நினைவின் ஆழத்தைத் தான் உங்கள் கதை மூலமும் விளங்கிக் கொண்டதால் தான் அந்தப் பாடலை இணைத்தேன். (ஒரிஜினல் பாடலைத் தான் தேடினேன், எனக்குக் கிடைத்ததில் தொழில்நுட்ப கோளாறு இருந்தமையால் மேடைப் பாடலை இணைத்திருந்தேன்... :D)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதன் பின் வாழ்வில் என்ன இருக்கு.....??? :icon_idea:

மீண்டும் அப்பழுக்கற்ற அந்தக் குழந்தை மனசு கிடைக்குமே அண்ணா. கண்ணாடி போல இருந்த மனதில் கிறுக்கி விளையாடிட்டு போனவர்களை நோவதா.. தவிர்ப்பதா.. மன்னிப்பதா.. என்று புலம்பிக் கொண்டிருப்பதிலும்.. கீறலை கிளீன் பண்ணிற வசதி இருந்திட்டா எவ்வளவு நல்லம்.. ஆனால் அது சாத்தியமில்லை..! :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருந்த நேரம், எங்கட மாமா ஒருவர் அடிக்கடி இந்தப் பாடலை நன்றாகப் பாடுவார்.. அப்போதெல்லாம் வார்த்தைக்கு அர்த்தம் தேடுறதில்லை.. வளரும் காலங்களில்த் தான் கேள்விப் பட்டேன், ஆறடி உயரத்தில் இருக்கும், கம்பிரமான அந்த உருவம் வீதியில் போனால், வேலிக்குப் பின்னால் பல கண்கள் இருக்குமென்று... அவருக்கும் ஏதோ ஒரு பழைய நினைவு இன்னும் நெஞ்சோடு இருப்பதால் தான் அப்போதிலிருந்து இப்பவரை பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்கும் போதெல்லாம் முதலில் எடுத்து விடும் பாடல் 'பாவடைத் தாவணியில் பார்த்த உருவமா' பாடல் தான்.. ^_^

கடைசி நான்று வரிகளைக் கேட்கும் போது அவரின் நினைவில் உள்ள ஆழம் இப்போது நன்றாகப் புரிகிறது, கிட்டத் தட்ட அதே நினைவின் ஆழத்தைத் தான் உங்கள் கதை மூலமும் விளங்கிக் கொண்டதால் தான் அந்தப் பாடலை இணைத்தேன். (ஒரிஜினல் பாடலைத் தான் தேடினேன், எனக்குக் கிடைத்ததில் தொழில்நுட்ப கோளாறு இருந்தமையால் மேடைப் பாடலை இணைத்திருந்தேன்... :D)

உங்கள் மாமா இப்படி. எங்களுக்கு ஒரு மாமா.. அவர்.. "பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து".. என்று அடிக்கடி பாடுவார். எனக்கு என்னவோ.. அந்தப் பாட்டின் மீது... அறிவு வர முந்திய சின்ன வயதில் கூட.... ஏதோ ஒரு வெறுப்பு (பொதுவா எனக்கு பழைய பாடல்கள் பிடிப்பதில்லை). அவர் அந்தப் பாடலைப் பாடுவதாலோ என்னவோ.. சின்னனில் இருந்தே அவரைப் பிடிக்காமலே போய்விட்டது. இப்போதும் அவரைக் கண்டால்.. அந்தப் பாடல் ஞாபகத்தோடு.. சேர்ந்து.. வெறுப்பும் வந்துவிடுகிறது. ஆனால் அவர் நமக்கு எந்தத் தீமையும் செய்யவில்லை..! தானும் தன்பாடும். இதனை இன்று வரை என்னால் விளங்கிக் கொள்ளவோ.. விலக்கவோ முடியவில்லை..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.