Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுவறிவுப் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேல் உள்ள படத்தில் இடமிருந்து வலமாக 4ஆவது இப்போதைய இங்கிலாந்து ஆல்ரவுண்டர், 6ஆவது 80பதுகளின் ஆஸ்திரேலிய, உலக அதிவேகப்பந்து வீச்சாளர்.

கீழ் உள்ள படத்தில் இடமிருந்து வலமாக முதலாவது இங்கிலாந்தின் ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர் , 3வது  பாகிஸ்தான் அதிவேக பந்து வீச்சாளர் (>100mph ), 5ஆவது  தென்னாபிரிக்க முதல் கறுப்பின வேகப்பந்துவீச்சாளர்.

மற்றய உங்கள் கணிப்புகள் எல்லாம் சரியானவையே!!👍

  • 1 month later...
  • Replies 4.5k
  • Views 397.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2020 at 18:28, Eppothum Thamizhan said:

Image

கிரிக்கெட்  ரசிகர்களுக்காக!! மேலுள்ள படங்களில் உள்ள வீரர்களை கண்டுபிடியுங்கள்??

On 28/4/2020 at 15:34, Eppothum Thamizhan said:

மேல் உள்ள படத்தில் இடமிருந்து வலமாக 4ஆவது இப்போதைய இங்கிலாந்து ஆல்ரவுண்டர், 6ஆவது 80பதுகளின் ஆஸ்திரேலிய, உலக அதிவேகப்பந்து வீச்சாளர்.

கீழ் உள்ள படத்தில் இடமிருந்து வலமாக முதலாவது இங்கிலாந்தின் ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர் , 3வது  பாகிஸ்தான் அதிவேக பந்து வீச்சாளர் (>100mph ), 5ஆவது  தென்னாபிரிக்க முதல் கறுப்பின வேகப்பந்துவீச்சாளர்.

மற்றய உங்கள் கணிப்புகள் எல்லாம் சரியானவையே!!👍

மேல் வரிசையில் 
நான்காவதாக இருப்பவர் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்  பந்துவீச்சாளர் மேவ் ஹியூஸ்
ஆறாவதாக இருப்பவர் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்  பந்துவீச்சாளர் ஜெவ் தோம்ப்ஸன்

கீழ் வரிசையில் 
முதலாவதாக இருப்பவர் இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்ஸ்ன்
மூன்றாவதாக இருப்பவர் பாகிஸ்தானின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சொகைப் அக்தார்
ஐந்தாவதாக இருப்பவர் இங்லிலாந்தின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் கிறேம் ஸ்வான்
 
spacer.png

மேவ் ஹியூஸ்

spacer.png

ஜெவ் தோம்ப்ஸன்

spacer.png

ஜேம்ஸ் அன்டர்ஸ்ன்

spacer.png

சொகைப் அக்தார்

spacer.png

கிறேம் ஸ்வான்

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, வாலி said:

Jeff Thompson ஐயும் Graeme Swann ஐயும் என்னால் அடையாளம் காணமுடியவில்லை. Jeff Thompson ஐ முன்னர் ரிவியில் பார்த்த நினைவும் இல்லை!

இந்தப் புதிரை முடித்து வைத்ததற்கு நன்றி வாலி😀

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, வாலி said:

மேல் வரிசையில் 
நான்காவதாக இருப்பவர் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்  பந்துவீச்சாளர் மேவ் ஹியூஸ்
ஆறாவதாக இருப்பவர் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்  பந்துவீச்சாளர் ஜெவ் தோம்ப்ஸன்

கீழ் வரிசையில் 
முதலாவதாக இருப்பவர் இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்ஸ்ன்
மூன்றாவதாக இருப்பவர் பாகிஸ்தானின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சொகைப் அக்தார்
ஐந்தாவதாக இருப்பவர் இங்லிலாந்தின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் கிறேம் ஸ்வான்
 
spacer.png

மேவ் ஹியூஸ்

spacer.png

ஜெவ் தோம்ப்ஸன்

spacer.png

ஜேம்ஸ் அன்டர்ஸ்ன்

spacer.png

சொகைப் அக்தார்

spacer.png

கிறேம் ஸ்வான்

👍வாழ்த்துக்கள் வாலி 👏

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of road and text that says 'Why? www.dailycivil.com'

இந்த வீதியை... நேர் கோட்டில் போட்டிருந்தால், செலவு குறைந்திருக்கும்.
அப்படி போடாமல்... ஏன், வட்ட வடிவில் போட்டுள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வாகன ஓட்டிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு வடிவமைத்து இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, வாலி said:

வாகன ஓட்டிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு வடிவமைத்து இருக்கலாம்!

இத்துடன்... வேறு சில காரணங்களும் உள்ளது வாலி.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்ட, வாலிக்கு பாராட்டுக்கள்.
அந்த வீதி, ஒரு நேர் கோட்டில் வந்திருக்குமானால்...
இடது, வலது பக்கங்களில் செல்லும் வாகனங்களின் எடை அதிகரிக்கும்.

அதற்கு மேலும் பலமான அத்திவாரத்தை போடுவதற்கு...
அந்த ஆற்று மண்ணின்  தன்மை பொருத்தம் இல்லாததால்..
எடையை பாதியாக குறைக்க... வட்ட வடிவில் அந்தப் பாதையை அமைத்துள்ளார்கள்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்
On 6/17/2021 at 10:02, தமிழ் சிறி said:

May be an image of text

தாங்களே சொல்லிவிடுங்கள் யாருக்கும் தெரியவில்லை போலுள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்

நான்கிலும் சமமாக உள்ளது.....!   👍

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மியாவ் said:

தாங்களே சொல்லிவிடுங்கள் யாருக்கும் தெரியவில்லை போலுள்ளது...

7 minutes ago, suvy said:

நான்கிலும் சமமாக உள்ளது.....!   👍

மியாவ்.... கொஞ்சம் பொறுங்கோ.

இப்போதான்....  சுவி அண்ணாவும் வந்திருக்கிறார்.

இன்னும்... பலருக்கு, சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்  அல்லவா. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆகிமிடிஸ் தத்துவபடி B

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

மியாவ்.... கொஞ்சம் பொறுங்கோ.

இப்போதான்....  சுவி அண்ணாவும் வந்திருக்கிறார்.

இன்னும்... பலருக்கு, சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்  அல்லவா. :)

என்னிடம் அறிவியல் சார்ந்த ஒரு கேள்வி இருக்கிறது... அதை கேட்கவே இந்த அவசரம்... 😋

தங்களது கேள்விக்கு எனது சிறு மூளைக்கு எட்டிய பதில்

B...

குவளை B ல் தான் அதிக தண்ணீர் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜெகதா துரை said:

1 hour ago, goshan_che said:

ஆகிமிடிஸ் தத்துவபடி B

1 hour ago, மியாவ் said:

என்னிடம் அறிவியல் சார்ந்த ஒரு கேள்வி இருக்கிறது... அதை கேட்கவே இந்த அவசரம்... 😋

தங்களது கேள்விக்கு எனது சிறு மூளைக்கு எட்டிய பதில்

B...

38 minutes ago, தமிழினி said:

குவளை B ல் தான் அதிக தண்ணீர் உள்ளது

Cat GIFs | Tenor

போட்டியில், ஆர்வத்துடன் கலந்து கொண்ட....
சுவி அண்ணா, ஜெகதா துரை, கோசான்,  மியாவ், தமிழினி... ஆகியோருக்கு நன்றி. 👍

சரியான பதில்...  "B".

ஒரு மணித்தியால இடை வெளியில்.... ஐந்து  பேரை,
இங்கு கூட்டி  வந்த, மியாவுக்கு... விசேட நன்றி.   :) :grin:

  • கருத்துக்கள உறவுகள்

"ஆகிமிடிஸ்"  தத்துவம் என்றால் என்ன? 
எப்போது,  எங்கே, எந்த இடத்தில்.... எந்த  நாட்டவரால்,  கண்டு பிடிக்கப் பட்டது.  

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

"ஆகிமிடிஸ்"  தத்துவம் என்றால் என்ன? 
எப்போது,  எங்கே, எந்த இடத்தில்.... எந்த  நாட்டவரால்,  கண்டு பிடிக்கப் பட்டது.  

எழுத பஞ்சியில் விக்கியை வெட்டி ஒட்டி உள்ளேன் அண்ணா. ஆனால் சரியான தரவுதான்.

ஆர்க்கிமிடீசு தத்துவம் எனப்படுவது ஓர் இயற்பியல்விதி. இவ்விதி ஒரு பாய்மத்தினுள் (திரவம் அல்லது வாயு) அமிழ்த்தப்பட்ட ஒரு பொருளின் மீது அப்பாய்மம் செலுத்தும் மிதப்பு-விசைஅப்பொருளினால் இடம்பெயர்க்கப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமம் எனக் கூறுகிறது. இன்னொரு வகையில் கூறுவோமானால் ஒரு பொருள் ஒரு நீர்மத்தினுள் மூழ்கியிருக்கும் போது அது இழந்ததாகத் தோன்றும் எடை அதனால் வெளியேற்றப்பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமம். இத்தத்துவம் முழுமையாக அமிழ்த்தப்பட்ட பொருளுக்கும் பொருந்தும்; ஒரு-பகுதி அமிழ்த்தப்பட்ட பொருளுக்கும் பொருந்தும். ஆனால், பொருள்களின் எடையின்மை நிலையில் ஆர்க்கிமிடீசு தத்துவம் உண்மையாயிராது. இதனைக் கண்டுபிடித்தவர் ஆர்க்கிமிடீஸ்.[1]

ஆக்கிமிடிசு இந்த தத்துவத்தை அவர் ஒரு குளியல் தொட்டியில் குளிக்கும் போது கண்டறிந்ததாயும், சந்தோசத்தில் “அப்படியே”😮 நகர தெருக்களில் “யூரேகா, யூரேகா” என கத்தியபடி ஓடியதாயும் ஒரு செவிவழி கதையும் உண்டு.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

"ஆகிமிடிஸ்"  தத்துவம் என்றால் என்ன? 
எப்போது,  எங்கே, எந்த இடத்தில்.... எந்த  நாட்டவரால்,  கண்டு பிடிக்கப் பட்டது.  

அதுவா..

ஆர்க்கிமிடிஸ் கிரேக்க தத்துவ, அறிவியல், கணிதவியலளார்! 

விஞ்ஞானத்தில் அடர்த்தி படித்தபோது ஆசிரியர் சொன்ன கதை என்னவென்றால்…

ஆர்க்கிமிடிஸ் காலத்து கிரேக்க அரசர் ஒரு கிரேக்க ஆலயத்துக்கு கிரீடம் செய்ய கலப்பில்லாத தூய தங்கத்தை பொற்கொல்லன் ஒருவனிடம் கொடுத்தாராம். பொற்கொல்லன் கிரீடம் செய்து கொடுத்தபோது, அதில் தான் கொடுத்த கலப்பில்லாத தங்கத்தில் கொஞ்சத்தை பொற்கொல்லன் எடுத்து அதற்குப் பதிலாக செப்பையோ, வெள்ளியையோ கலந்திருப்பதுபோல அரசருக்கு சந்தேகம் வந்ததாம். 

சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஆர்க்கிமிடிஸை புலனாய்வுசெய்து கண்டுபிடிக்க அரசர் உத்தரவு போட்டார்.  கிரீடம் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதால் அதனை உரசி எல்லாம் மறு ஏற்படுத்தமுடியாது. அடர்த்தியை சரியாக அளக்க திணிவும் (நிறை அல்ல) கனவளவும் தேவை. ஏனெனில் அடர்த்தியானது திணிவின் கீழ் கனவளவு ஆகும்!

கிரீடத்தின் திணிவை இலகுவாக அளக்கலாம். ஆனால் கேத்திரகணித அமைப்பில் ஒழுங்கில்லாத பொருளாக கிரீடம் இருந்ததால் கனவளவு சரியாக அளக்கமுடியாது. என்ன செய்யலாம் என்று ஆர்க்கிமிடிஸ் மண்டையைக் குடைந்துகொண்டு இருந்தார்.  ஒன்றும் பிடிபடவில்லை. சரி ஒரு குளியல் போட்டால் மூளை புத்துணர்ச்சி பெற்று ஏதாவது பொறி தட்டும் என்று குளியல் தொட்டிக்குள் தண்ணீரை நிரப்பினார். ஆடைகளையெல்லாம் களைந்துவிட்டு நீர் நிறைந்த குளியல் தொட்டிக்குள் இறங்கினார். அவர் உள்ளே இறங்கும்போது நீரின் உயரம் ஏறுவதை அவதானித்ததும் பொறி தட்டியது. கனவளவை அளக்க வழி கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்தில் “யூரேக்கா” (கண்டுபிடித்துவிட்டேன்) என்று கத்திக்கொண்டே தெருக்களில் ஓடினார். மகிழ்ச்சியில் உடலில் ஆடைகள் இல்லையென்பதே ஆர்க்கிமிடிஸுக்கு தெரிந்திருக்கவில்லை! 

ஆனால் தெருவில் வந்த ஆண்கள், பெண்களுக்கு எல்லாம் அவர் பிறந்தமேனியாக மணியை 🔔  ஆட்டிக்கொண்டு ஓடியதுதான் புதினமாக இருந்தது!

எனக்கும் அதுதான் எப்பவும் நினைவில் இருக்கின்றது😜

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

எழுத பஞ்சியில் விக்கியை வெட்டி ஒட்டி உள்ளேன் அண்ணா. ஆனால் சரியான தரவுதான்.

ஆர்க்கிமிடீசு தத்துவம் எனப்படுவது ஓர் இயற்பியல்விதி. இவ்விதி ஒரு பாய்மத்தினுள் (திரவம் அல்லது வாயு) அமிழ்த்தப்பட்ட ஒரு பொருளின் மீது அப்பாய்மம் செலுத்தும் மிதப்பு-விசைஅப்பொருளினால் இடம்பெயர்க்கப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமம் எனக் கூறுகிறது. இன்னொரு வகையில் கூறுவோமானால் ஒரு பொருள் ஒரு நீர்மத்தினுள் மூழ்கியிருக்கும் போது அது இழந்ததாகத் தோன்றும் எடை அதனால் வெளியேற்றப்பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமம். இத்தத்துவம் முழுமையாக அமிழ்த்தப்பட்ட பொருளுக்கும் பொருந்தும்; ஒரு-பகுதி அமிழ்த்தப்பட்ட பொருளுக்கும் பொருந்தும். ஆனால், பொருள்களின் எடையின்மை நிலையில் ஆர்க்கிமிடீசு தத்துவம் உண்மையாயிராது. இதனைக் கண்டுபிடித்தவர் ஆர்க்கிமிடீஸ்.[1]

நான், படித்த  காலங்களில்.... 
கிரேக்க நாட்டை  சேர்ந்த ஒரு மனிதர்.
அவர் குளிப்பதற்காக.... குளியல் தொட்டியில், தண்ணீரை நிரப்பி விட்டு,
அம்மணமாக... குளிக்க, தண்ணீரில் இறங்கிய போது....  
கன தண்ணீர் வெளியேறியதை கண்டு....

ஆக்கிமிடீஸ்,  ஆக்கிமிடீஸ், ஆக்கிமிடீஸ்.... என்று,
உரிஞ்சாங் குண்டி,  உடம்புடன்... கத்திக்  கொண்டு,
குளியலறையை விட்டு வெளியே.. வந்து, தெரு எங்கும்   ஒடினாராம்.

"ஆக்கிமிடிஸ்" என்றால்.... கிரேக்க மொழியில்  "கண்டு பிடித்து விட்டேன்"  என்று அர்த்தமாம். 

உண்மை, பொய்  தெரியவில்லை... மற்றையவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

அதுவா..

ஆர்க்கிமிடிஸ் கிரேக்க தத்துவ, அறிவியல், கணிதவியலளார்! 

விஞ்ஞானத்தில் அடர்த்தி படித்தபோது ஆசிரியர் சொன்ன கதை என்னவென்றால்…

ஆர்க்கிமிடிஸ் காலத்து கிரேக்க அரசர் ஒரு கிரேக்க ஆலயத்துக்கு கிரீடம் செய்ய கலப்பில்லாத தூய தங்கத்தை பொற்கொல்லன் ஒருவனிடம் கொடுத்தாராம். பொற்கொல்லன் கிரீடம் செய்து கொடுத்தபோது, அதில் தான் கொடுத்த கலப்பில்லாத தங்கத்தில் கொஞ்சத்தை பொற்கொல்லன் எடுத்து அதற்குப் பதிலாக செப்பையோ, வெள்ளியையோ கலந்திருப்பதுபோல அரசருக்கு சந்தேகம் வந்ததாம். 

சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஆர்க்கிமிடிஸை புலனாய்வுசெய்து கண்டுபிடிக்க அரசர் உத்தரவு போட்டார்.  கிரீடம் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதால் அதனை உரசி எல்லாம் மறு ஏற்படுத்தமுடியாது. அடர்த்தியை சரியாக அளக்க திணிவும் (நிறை அல்ல) கனவளவும் தேவை. ஏனெனில் அடர்த்தியானது திணிவின் கீழ் கனவளவு ஆகும்!

கிரீடத்தின் திணிவை இலகுவாக அளக்கலாம். ஆனால் கேத்திரகணித அமைப்பில் ஒழுங்கில்லாத பொருளாக கிரீடம் இருந்ததால் கனவளவு சரியாக அளக்கமுடியாது. என்ன செய்யலாம் என்று ஆர்க்கிமிடிஸ் மண்டையைக் குடைந்துகொண்டு இருந்தார்.  ஒன்றும் பிடிபடவில்லை. சரி ஒரு குளியல் போட்டால் மூளை புத்துணர்ச்சி பெற்று ஏதாவது பொறி தட்டும் என்று குளியல் தொட்டிக்குள் தண்ணீரை நிரப்பினார். ஆடைகளையெல்லாம் களைந்துவிட்டு நீர் நிறைந்த குளியல் தொட்டிக்குள் இறங்கினார். அவர் உள்ளே இறங்கும்போது நீரின் உயரம் ஏறுவதை அவதானித்ததும் பொறி தட்டியது. கனவளவை அளக்க வழி கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்தில் “யூரேக்கா” (கண்டுபிடித்துவிட்டேன்) என்று கத்திக்கொண்டே தெருக்களில் ஓடினார். மகிழ்ச்சியில் உடலில் ஆடைகள் இல்லையென்பதே ஆர்க்கிமிடிஸுக்கு தெரிந்திருக்கவில்லை! 

ஆனால் தெருவில் வந்த ஆண்கள், பெண்களுக்கு எல்லாம் அவர் பிறந்தமேனியாக மணியை 🔔  ஆட்டிக்கொண்டு ஓடியதுதான் புதினமாக இருந்தது!

எனக்கும் அதுதான் எப்பவும் நினைவில் இருக்கின்றது😜

என்ன கிருபன் ஜி வர வர @Nathamuni ஸ்டைலில் எழுதுகிறீகள்🤣.

2 minutes ago, தமிழ் சிறி said:

இல்லை அண்ணை. அவர் பெயர்தான் ஆக்கிமிடிசு. அவர் கத்தி கொண்டு ஓடியது “யுரேக்கா” என்று.

கிருபன் ஜீ...  நீங்கள் படித்தது, கனக்க நினைவிருக்கு. 👍
எனக்கு.... குளியலறையும், உரிஞ்சாங்  குண்டியும் தான் நினைவில் உள்ளது. 😂

"நீரளவே... ஆகுமாம், ஆம்பல்"  🤣

6 minutes ago, goshan_che said:

என்ன கிருபன் ஜி வர வர @Nathamuni ஸ்டைலில் எழுதுகிறீகள்🤣.

இல்லை அண்ணை. அவர் பெயர்தான் ஆக்கிமிடிசு. அவர் கத்தி கொண்டு ஓடியது “யுரேக்கா” என்று.

ஓம்.... கோசான். வர வர.... மறதிக் குணம், அதிகமாக வருகின்றது. 👍
இதுக்கு.. ஏதாவது, குளிசை எடுக்க வேணும் போலை கிடக்குது. :)

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

என்ன கிருபன் ஜி வர வர @Nathamuni ஸ்டைலில் எழுதுகிறீகள்🤣.

நான் கீபோர்ட்டில் தமிழ் தட்டச்சு செய்தால் நிறையக் கதைகள் நாதமுனியை விட கிளுகிளுப்பாக எழுதுவேன்😜 மூளை வேலை செய்யும் வேகத்திற்கு விரல்கள் வேலை செய்யும். 

ஆனால் இப்ப ஐபோனில் தட்டுவதும், predictive text ஐ திருத்துவதும், எழுத்துப் பிழை திருத்துவதும் flow ஐ குழப்பிவிடுகின்றது. அதுதான் short ஆக எழுத அது பூடகமாக சிலருக்குத் தெரிகின்றது😄

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் தெரியுது நான் கணக்கில எலியானதுக்கு காரணம் அந்த தரங்கெட்ட  அரசனும், துணியின்றி தெருவில்  துணிந்து  ஓடிய மிடிசும்தான்......!   🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.