Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்து வருவது 'ஏ-6': ஒரே ஏவுகணை, பல அணு குண்டுகள், ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் திறன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20-agni55-300.jpg

அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துவிட்ட நிலையில், அடுத்தபடியாக வரப் போவது 'ஏ-6' என்று பெயரிடப்பட்டுள்ள ஏவுகணை. இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல அணு குண்டுகளை ஏந்திக் கொண்டு 10,000 கி.மீ. வரை சென்று ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.

17.5 மீட்டர் உயரம் கொண்ட அக்னி 5 ஏவுகணை திட எரிபொருளால் இயக்கக் கூடியதாகும். இதனால், இதை மிக எளிதாக ராணுவ வாகனங்களில் எந்த இடத்துக்கும் கொண்டு சென்று ஏவ முடியும்.

சுமார் 1.5 டன் (1,500 கிலோ) எடை கொண்ட அணு குண்டையோ அல்லது வேறு ஆயுதங்களையோ இந்த ஏவுகணையால் ஏந்திக் கொண்டு 5,000 கி.மீ. வரை பயணிக்க முடியும்.

'இன்டர் காண்டினென்டல் பேலிஸ்டிக் மிஸைல்' (Inter-Continental Ballistic Missile-ICBM) எனப்படும் இந்த ஏவுகணை, ஏவப்பட்டவுடன் முதலில் பூமியிலிருந்து 40 கி.மீ. உயரத்தை அடையும். அத்தோடு அதன் முதல் ஸ்டேஜ் ராக்கெட் தனியே கழன்றுவிடும்.

இதையடுத்து அதன் இரண்டாவது ராக்கெட் செயல்பட்டு அதை மேலும் 150 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும். இதன் பின்னர் அதன் 3வது ராக்கெட் இயங்கி அதை மேலும் 800 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும்.

இந்த உயரத்தை அடைந்த பின்னர் ஏவுகணையில் உள்ள கம்ப்யூட்டர்கள், செயற்கைக் கோள் மற்றும் ரேடியோ சிக்னல்கள் உதவியோடு, அதை தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை நோக்கித் திருப்பும்.

இதையடுத்து அடுத்த 18 நிமிடங்களில் இந்த ஏவுகணை 5,000 கி.மீ. தூரத்தைக் கடந்து குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கும்.

3வது கட்ட ராக்கெட் செயல்பட ஆரம்பிக்கும்போது இந்த ஏவுகணையின் வேகம் ஒலியை விட 24 மடங்கு அதிகமானதாக இருக்கும். அதாவது, போர் விமானங்களை விட சுமார் 30 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும்.

இந்த ஏவுகணையால் பாகிஸ்தான், சீனாவின் எந்தப் பகுதியையும், கிழக்கு ஐரோப்பாவையும், வடக்கு-கிழக்கு ஆப்பிரிக்காவைத் தாக்க முடியும்.

நிகோபார் தீவுகளில் இருந்து இதை ஏவினால் ஆஸ்திரேலியாவைக் கூட தாக்கலாம்.

திபெத் பகுதியில் இந்தியாவுக்கு எதிராக ஏவுகணைகளை சீனா நிறுத்தி வைத்துள்ள நிலையில், இந்த அக்னி 5, சீனாவுக்கு எதிரான மிகப் பெரிய தற்காப்பாக இருக்கும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் மட்டும் தான் இந்த வரை ஐசிபிஎம் ஏவுகணைகள் உள்ளன. இப்போது இந்தத் திறனைப் பெற்றுள்ள 5வது நாடு இந்தியாவாகும்.

இந்தியா முதலில் தயாரித்த அக்னி-1 ஏவுகணை 700 கி.மீ. தூரத்தைக் கடக்க வல்லதாக இருந்தது. இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த ஆராய்ச்சிகளை நடத்தி அதன் தூரம் 5,000 வரை நீடிக்கப்பட்டுள்ளது (அக்னி-5 உண்மையில் 8,000 கி.மீ. தூரத்தை கடக்க வல்லது என்கிறது சீனா).

அக்னி ரகத்தைச் சேர்ந்த முந்தைய ஏவுகணைகளுக்கும் அக்னி- 5 ஏவுகணைக்கும் இடையே மிக மிக முக்கியமான வித்தியாசம் உண்டு. அது re-entry technology எனப்படும் பூமிக்கு வெளியே போய்விட்டு திரும்ப உள்ளே நுழையும் தொழில்நுட்பம்.

மற்ற ஏவுகணைகள் செலுத்தியவுடனே எதிரி நாட்டு திசை நோக்கி பயணித்து குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும். அவை 'க்ரூயிஸ்' (cruise missiles) ரக ஏவுகணைகள். ஆனால், அக்னி-5 பேலிஸ்டிக் மிஸைல் ரகத்தைச் சேர்ந்தது. அதாவது, ஏவப்பட்டவுடன் பூமிக்கு மேலே பல நூறு கிலோ மீட்டர்கள் பயணித்துவிட்டு, பின்னர் வானிலியிருந்து பூமி நோக்கித் திரும்பி, எதிரி நாட்டு இலக்கை நோக்கி பாயும் ஏவுகணை இது.

இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஏகப்பட்ட சிக்கல்கள். ஆனால், இந்த தொழில்நுட்ப உதவியை வெளிநாடுகளில் இருந்து பெற சர்வதேச சட்டமான Missile Technology Control Regime தடுக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றாலும், ரீ-எண்ட்ரி தொழில்நுட்பத்தை பிற நாடுகளிடமிருந்து இந்தியாவால் பெற முடியவில்லை.

இதனால் அந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவே உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அதை செய்தும் காட்டிவிட்டனர் நமது DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவின் விஞ்ஞானிகள்.

இந்த ஏவுகணைத் தயாரிப்புக்கான பல தொழில்நுட்பங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவிடமிருந்து வந்துள்ளதை மறுக்க முடியாது. அக்னி ஏவுகணையின் திட எரிபொருள் ராக்கெட்டுகள், செயற்கைக் கோள்களை ஏவ இஸ்ரோ தயாரித்த எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி. ராக்கெட்களின் அடிப்படையில் அமைந்தவை தான் என்கிறது குளோபல் செக்யூரிட்டி என்ற சர்வதேச பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி மையம்.

இப்போது உருவாக்கப்பட்டுள்ள அக்னி-5 ஒரே ஒரு அணு அல்லது வேறு குண்டை ஏந்திச் செல்ல வல்லது. அடுத்தகட்டமாக ஒரே ஏவுகணையில் பல குண்டுகளை ஏந்திச் செல்லும் தொழில்நுட்பத்தை (Multiple independently targetable reentry vehicle-MIRVed) இந்தியா உருவாக்கி வருவதாகத் தெரிகிறது. 'A6' என்று கோட் நேம் இடப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஏவுகணையின் தூரமும் 6,000 முதல் 10,000 கி.மீயாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஏவுகணைக்கு 'சூர்யா' எனப் பெயரும் சூட்டப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

அடுத்த கட்டமாக இந்த ஏவுகணையை நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் செலுத்தக்கூடியாதவும் (Submarine-launched ballistic missile) மேம்படுத்தும் திட்டத்திலும் டிஆர்டிஓ உள்ளதாகத் தெரிகிறது.

இப்போது இந்தியாவிடம் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் பிருத்வி குறைந்த தூர ஏவுகணை, தரையிலிருந்தும் கப்பல்களில் இருந்தும் கப்பல்களைத் தாக்கும் திரிசூல், தரையிலிருந்து விமானத்தையோ அல்லது விமானத்திலிருந்து விமானத்தையே தாக்கும் ஆகாஷ், இரவு-பகல் என எந்த நேரத்திலுந் கவச வாகனங்களைத் தாக்க உதவும் நாக் ஆகிய ஏவுகணைகளும், நீண்ட தூரம் சென்று தாக்கும் அக்னி வரிசையில் 1,2,3,4,5 ஆகிய ஏவுகணைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி-5 ஏவுகணையை மேலும் கூர்மையாக்க மேலும் 5 முதல் 6 சோதனைகள் வரை தேவைப்படும் என்று தெரிகிறது. இதனால் வரும் காலங்களில் அடிக்கடி அக்னி-5 சோதனைகள் நடக்கலாம்.

http://tamil.oneindia.in/editor-speaks/2012/04/india-next-missle-a-6-multiple-independently-targetable-aid0090.html

What Chinese can do? Indians can also do it. India and China are friends not rivals. Both are proud children of Asia.

562278_409875665698750_134004893285830_1587000_1368456638_n.jpg

Know your weapon: Agni-V The Intermediate Range Nuclear Capable Intercontinental... Ballistic Missile (ICBM)

Agni V Facts:

1). India will break into the exclusive ICBM club of countries including the United States, Russia, United Kingdom, China and France.

2). The Agni series of missiles, including Agni-V, is crucial for India's defence vis-a-vis China since Beijing has upped the ante in recent times by deploying missiles in Tibet Autonomous Region bordering India.

3). Tipped to be a game changer by DRDO Chief Dr VK Saraswat, Agni-V will extend India's reach all over Asia, parts of Africa and parts of Europe.

4). Once fired, it cannot be stopped. It travels faster than a bullet and can carry 1,000 kilograms of nuclear weapons. It can be launched using a special canister. Why, it can even be launched from a roadside!

5). With a range of 5,000 km, Agni-V, once validated and inducted into the armed forces after several more tests, will be India's longest-range missile to carry a nuclear warhead. It will have the capacity to carry a nuclear warhead weighing over a tonne.

6). Agni-V will give India the technological know-how to launch many nuclear warheads using the same missile.

7). Agni-V can be configured to launch small satellites and can be used later even to shoot down enemy satellites in orbits.

8). Seventeen metres tall, Agni-V's three-stages are powered by solid propellants. The first rocket engine takes it to a height of about 40 kilometres. The second stage pushes it to about 150 kilometres. The third stage takes it to about 300 kilometres above the Earth. The missile finally reaches a height of about 800 kilometres.

9). This is India's first launch of a 5,000 kilometre range missile.Tabasco Media

  • கருத்துக்கள உறவுகள்

" இந்தியாவும் சீனாவும் ஆசியாவின் பெருமை மிக்க குழந்தைகள்" :rolleyes:

ஏவுகணை அணுவாயுதம் என்று செலவு செய்யும் நாடுகளில் மேற்கு நாடுகள் எல்லாத் துறைகளிலும் வளர்கின்றன. அமெரிக்கா, பிரான்ஸ். பிரித்தானியா போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால் அங்கே வறிய மக்களுக்கும், பாதுகாப்பு அவசியமான பெண்கள் குழைந்தைகளுக்கும் பாதுகாப்பு வலையை ஏற்படுத்தி விட்டு இராணுவச் செலவுகளைக் கவனிக்கிறார்கள். இந்தியாவும் சீனாவும் அப்படியல்ல. இந்தியாவில் பிறக்கிற பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை. வளர்ந்த பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை. இந்த லட்சணத்தில். அக்னி ஏவுகணைத் திட்டத்தில் வேலை செய்த பெண் விஞ்ஞானி ஒருவர் "இது எங்கள் நாட்டுக்குப் பெருமை தரும் விடயம்" என்று சொல்லி இந்தியாவின் அழுக்கு மூட்டைகளை எல்லாம் ஏதோ சின்னப் பிரச்சினைகள் மாதிரி பின்னுக்குத் தள்ளி விட்டு இளிக்கிறார்.

இந்தியா, சீனா, வடகொரியா, ஈரான், பாகிஸ்தான் இவையெல்லாம் ஒரே ரகம் என்பதே சரி!

பல அணு குண்டுகள், ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் திறன்! ...... :icon_mrgreen:

10,000 கி.மீ. வரை சென்று ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. .... :lol:

இதையடுத்து அடுத்த 18 நிமிடங்களில்..... :icon_idea:

ஒலியை விட 24 மடங்கு அதிகமானதாக இருக்கும். அதாவது, போர் விமானங்களை விட சுமார் 30 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும்...... :(

இந்த ஏவுகணையால் பாகிஸ்தான், சீனாவின் எந்தப் பகுதியையும், கிழக்கு ஐரோப்பாவையும், வடக்கு-கிழக்கு ஆப்பிரிக்காவைத் தாக்க முடியும்...... :icon_mrgreen::lol:

அக்னி-5 ஏவுகணையை மேலும் கூர்மையாக்க மேலும் 5 முதல் 6 சோதனைகள் வரை தேவைப்படும் என்று தெரிகிறது. இதனால் வரும் காலங்களில்..... :icon_mrgreen: new vallarasu India :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு உண்மையை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஒரு ஏவுகணை இலங்கையைத் தாக்கினால்

நான் அவர்களை ஒரு வல்லரசாக ஏற்றுக்கொள்ளத்தயார் :)

இந்தியாவின் ஒரு ஏவுகணை இலங்கையைத் தாக்கினால்

நான் அவர்களை ஒரு வல்லரசாக ஏற்றுக்கொள்ளத்தயார்   :)

வாத்தி ஐயோ என்ர மனிசி பிள்ளைகளின் கதி என்ன?

இந்த இழவுகணைகளை வழி நடத்துவது செய்மதி கோள்கள். யுத்தம் அங்கே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடக்கின்றன. அதாவது வழி நடத்த யாரும் இல்லாவிட்டால் இந்த ஏவுகணைகள் செல்லாக்காசு.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

" இந்தியாவும் சீனாவும் ஆசியாவின் பெருமை மிக்க குழந்தைகள்" :rolleyes:

ஏவுகணை அணுவாயுதம் என்று செலவு செய்யும் நாடுகளில் மேற்கு நாடுகள் எல்லாத் துறைகளிலும் வளர்கின்றன. அமெரிக்கா, பிரான்ஸ். பிரித்தானியா போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால் அங்கே வறிய மக்களுக்கும், பாதுகாப்பு அவசியமான பெண்கள் குழைந்தைகளுக்கும் பாதுகாப்பு வலையை ஏற்படுத்தி விட்டு இராணுவச் செலவுகளைக் கவனிக்கிறார்கள். இந்தியாவும் சீனாவும் அப்படியல்ல. இந்தியாவில் பிறக்கிற பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை. வளர்ந்த பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை. இந்த லட்சணத்தில். அக்னி ஏவுகணைத் திட்டத்தில் வேலை செய்த பெண் விஞ்ஞானி ஒருவர் "இது எங்கள் நாட்டுக்குப் பெருமை தரும் விடயம்" என்று சொல்லி இந்தியாவின் அழுக்கு மூட்டைகளை எல்லாம் ஏதோ சின்னப் பிரச்சினைகள் மாதிரி பின்னுக்குத் தள்ளி விட்டு இளிக்கிறார்.

இந்தியா, சீனா, வடகொரியா, ஈரான், பாகிஸ்தான் இவையெல்லாம் ஒரே ரகம் என்பதே சரி!

இந்தியா, தனது தலையில்... கூழ் முட்டையை அடித்த நாடு.

ஒன்றில் வருந்த வேண்டும், அன்றில் திருந்த வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஒரு ஏவுகணை இலங்கையைத் தாக்கினால்

நான் அவர்களை ஒரு வல்லரசாக ஏற்றுக்கொள்ளத்தயார் :)

கூப்பிட்டு அடி போட்டாலே .............. வேண்டிக்கொண்டு போகும் அகிம்சை நாடு.

(ஜேஆர் ராஜிவுக்கு போட்டதை சொன்னேன்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஒரு ஏவுகணை இலங்கையைத் தாக்கினால்

நான் அவர்களை ஒரு வல்லரசாக ஏற்றுக்கொள்ளத்தயார் :)

இதெல்லாம் வேலைக்காத மத்தாப்பூ வானவேடிக்கைக்கும் பாகிஸ்தானை வெருட்டவே தயாரிக்கப்பட்டது :lol::icon_mrgreen:

நீங்கள் என்னவோ யுத்தத்துக்கு பயன்படுத்தக்கூடிய ஆயுதம் என்று நினைத்து விட்டீர்கள் :)

பல அணு குண்டுகள், ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் திறன்! ...... :icon_mrgreen:

10,000 கி.மீ. வரை சென்று ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. .... :lol:

இதையடுத்து அடுத்த 18 நிமிடங்களில்..... :icon_idea:

ஒலியை விட 24 மடங்கு அதிகமானதாக இருக்கும். அதாவது, போர் விமானங்களை விட சுமார் 30 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும்...... :(

இந்த ஏவுகணையால் பாகிஸ்தான், சீனாவின் எந்தப் பகுதியையும், கிழக்கு ஐரோப்பாவையும், வடக்கு-கிழக்கு ஆப்பிரிக்காவைத் தாக்க முடியும்...... :icon_mrgreen::lol:

அக்னி-5 ஏவுகணையை மேலும் கூர்மையாக்க மேலும் 5 முதல் 6 சோதனைகள் வரை தேவைப்படும் என்று தெரிகிறது. இதனால் வரும் காலங்களில்..... :icon_mrgreen: new vallarasu India :lol:

நீங்கள் இந்தியப்படம் பார்பவரா?

ஒரு ஹீரோ தனிய நின்று எத்தினை பேரை அடிப்பார்... அப்பிடித்தாம்பா இதுவும்.

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி ரைம் நெருங்கிட்டு இருக்கு .. பல பல புரோடக்டுகளை அறிமுகம் செய்யதான் செய்வார்கள் . அதற்காக நீங்களா வீணா கற்ப்னை பண்ணி ரையத்தை பதில் எழுதி வேஸ்ட் செய்யபடாது.இவனுங்கள நம்பி வாங்கவும் முடியாது காலி போத்திலில் குத்த வச்சி நேராக போக வேணும் என கொளுத்தினாலும் . ஆனால் அது என்னவோ பக்கத்து வீட்டுக்குதான் போகுது. டெக்னிகல் டிபெகட்

டிஸ்கி:

இது ஸ்டேண்டர் பயர் ஒர்க்ஸ் கம்பனியா? அல்லது குருவி மார்க்கு கம்பனியா? என சரியா தெரியல... வர தீபாவளிக்கு வாங்கி வெடிப்பன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.