Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீட்டின் இருப்பும் உங்கள் மகிழ்ச்சியும்.. ஜப்பானியர் கற்றுத்தரும் பாடம்.

Featured Replies

பொதுவாக கண்டியில் உள்ள பேராதனை தாவரவியல் பூங்காவிற்குத்தான் அநேகர் செல்வதுண்டு. இது நுவரெலியாப் பகுதியில் உள்ளது. சீதாஎலிய என்ற சீதை அம்மன் ஆலயம்( சீதைக்கு இங்கு தான் இராவணன் தஞ்சம் வழங்கி இருந்ததாக அந்த எழில் கொஞ்சும் இடத்தைச் சொல்கிறார்கள்.. அதை வட இந்தியர்கள் சிறை என்று சொல்கிறார்கள்.. தமிழ் மன்னனான இராவணனின் அழகுணர்ச்சியை நினைத்து பூரிக்கவே முடியும்..!) இதனை அண்டித்தான் உள்ளது..! :)

நன்றி இதே தான்! :)

நெடுக்ஸ் நீங்கள் இணைத்திருக்கும் படங்கள் எல்லாம் superb! ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு விதமான கொள்ளை அழகு!!

page16-thumbs-up-animated-3-3-2.gif

ஏன் அப்படி தாழ்வாகவே பார்க்கிறீர்கள்? ஊரில் எந்த சபையிலும் தரையில் பாய் விரித்து உட்கார்ந்து வாழையிலையைத் தரையில் வைத்து பரிமாறி உண்ட எங்களுக்கு இதில் என்ன கடினம் இருக்கென்பது புரியவில்லை.... :rolleyes:

வீடுகளின் அமைவு இடத்துக்கு இடம், காலநிலைகளுக்கு ஏற்வ வடிவமைக்க படும். ஊரில் அநேகமான வீடுகளை சுற்றி மரங்கள் நட்டு சோலை போல இருக்கும். வீட்டு வளவுக்குள் ஒரு கதிரை போட்டு இருப்பதோ...இல்லை மரநிழலில் சாக்கு கட்டிலில் குட்டி தூக்கம் போடுவதில் இருக்கும் சுகங்களோ யப்பானியர்களின் வீடுகளில் இருக்குமோ தெரியவில்லை.

புலம் பெயர் நாடுகளில், சனத்தொகை கூடிய பெரிய நகரங்களில் இருந்து கொண்டு அப்படி வடிவமைக்க முடியாது....

நீங்கள் சொல்வது சரி சபேஷ்...

ஊரில பிறந்து வளர்ந்தவர்கள், வேறு நாட்டிற்குப் புலம் பெயர்ந்து போனதால் அவர்கள் பூர்வீகத்தை மறக்க, அல்லது மறந்தது போல் நடிக்கத் தேவை இல்லைத் தானே?

ஊரில் குசினிக்குள் சப்பாணி கட்டிக் கொண்டும், பலாக்குதியில் இருந்தும் சாப்பிடுள்ளோம், அதை நான் இல்லை என்று மறுக்கவில்லை, மறக்கவும் இல்லை.

ஆனால் இங்கே கொஞ்ச பேர் 70- 80களில் வந்தவர்கள் இருக்கிறார்கள்... அவையள் போற இடத்தில சாப்பாட்டு மேசை இல்லாமல் (சாதாரண கதிரை/ சோபாவில் இருந்து) சாப்பிட மாட்டினம்... பீங்கானைக் கையில வைச்சுக் எங்கேயும் சாப்பிடுறதோ என்று கேட்பினம்? :rolleyes:<_< வெள்ளைக்காறனின்ர நாட்டுக்கு வந்தால் அவங்களை மாதிரி இருங்கோ எண்டுவினம் ஆனால் இன்னும் சாப்பிடும் போது டிவி பார்த்துக் கொண்டு தான் சாப்பிடுவினம் ^_^ காரணம் அவை சாப்பிடும் போது நல்லாச் சப்பி சத்தம் போட்டுச் சாப்பிடுவினம்... ஆகப் பகிடி, ஒரு நாள் சமைச்சதை அடுத்த நேரம் வைச்சுச் சாப்பிட மாட்டினமாம்... இன்னும் வில்லேஜில இருந்தது போல இஞ்ச வந்து இருக்கக் கூடாதாம்... இப்படியான power கதைகள் கதைப்பவர்களை நினைத்துத் தான் எழுதினேன்!

பெரிய நகரங்களில் இடவசதி இல்லைத் தான், ஆனால் இருக்கும் ஒரு சிறிய இடத்தையும் எமக்குப் பிடித்தது போல் ஆக்குவது மனதிற்கு ஒரு சந்தோசம் தானே? இல்லையா?? :)

*கடைசியில் உள்ள கருத்தும் சேர்க்கப்பட்டுள்ளது.

Edited by குட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுவாக கண்டியில் உள்ள பேராதனை தாவரவியல் பூங்காவிற்குத்தான் அநேகர் செல்வதுண்டு. இது நுவரெலியாப் பகுதியில் உள்ளது. சீதாஎலிய என்ற சீதை அம்மன் ஆலயம்( சீதைக்கு இங்கு தான் இராவணன் தஞ்சம் வழங்கி இருந்ததாக அந்த எழில் கொஞ்சும் இடத்தைச் சொல்கிறார்கள்.. அதை வட இந்தியர்கள் சிறை என்று சொல்கிறார்கள்.. தமிழ் மன்னனான இராவணனின் அழகுணர்ச்சியை நினைத்து பூரிக்கவே முடியும்..!) இதனை அண்டித்தான் உள்ளது..! :)

உண்மை தான் நெடுக்ஸ் அண்ணா.

2007ம் ஆண்டு போயிருந்தேன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக திருத்த வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்ன ஒரு அழகான ரம்மியமான இடம். போகும் பாதைகள் எல்லாம் பச்சைப்பசேலென்று அவ்வளவு அழகு. கோவிலின் பின்னால் சலசலத்து ஓடும் அருவி

அனுமாரின் காலடித்தடம் என்று சொல்லப்படும் அடையாளம்.

மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றும் இடம்.

ஒரு மாதம் தான் நுவரெலியாவில் இருந்தேன். ஊருக்கு போனால் அங்கை தான் இருக்க வேண்டும் என்று ஆசை. :)

DSC08779.JPG

Seetha_Amman_Temple_Seetha_Eliya.jpg

வீடுகளுக்கு மேலாக, கூரையில் கூட பூங்கா வளர்ப்பது ஜப்பானில் - ஒளிப்பதிவில் மூன்று நிமிடத்தில்

IMG_0829.JPG?width=737&height=552

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

japanese-wooden-furniture.jpg

japanese-bathroom-with-minimalist-style.jpg

ஜப்பானிய குளியலறை தளபாடங்கள்.. தனித்துவமான வடிவில்..

japanese-dining-room-design.jpg

வகையான ஜப்பானிய சாப்பாட்டறை.. அதன் தளபாடங்களுடன்..

japanese-reading-room.jpg

ஜப்பானிய வாசிப்பறை... போதிய விசாலம்.. காற்றோட்டம் மற்றும் வெளிச்சத்தோடு..!

japanese-livingroom-design.jpg

ஜப்பானிய வரவேற்பறை... எளிமையான வடிவில்... பிரத்தியேகமான நிறம் மற்றும் அதிக பிரகாசமான கண்ணைக் கூசும்.. வெளிச்சம் இன்றி..

worth-japanese-style-platform-bed.jpg

ஜப்பானிய படுக்கை அறை.. தனித்துவமான கட்டிலோடு.. பிரத்தியேகமான நிறப் பின்னணியில்..

படங்கள் விபரம்:

http://www.modecodesign.com/

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கத்தைய பாணி வீட்டு ஒழுங்கமைப்புக்கள்....

521596_10150686422468461_732278460_9455699_269454024_n.jpg

மேற்கத்தைய பாணி வீட்டின் வடிவமைப்பு.

579216_10150686421803461_732278460_9455692_1067004529_n.jpg

வரவேற்பறை.

549169_10150686421888461_732278460_9455693_1572536258_n.jpg

வரவேற்பறை.

527985_10150686420473461_732278460_9455680_1215576345_n.jpg

வரவேற்பறை.

405083_10150686421978461_732278460_9455694_1457685559_n.jpg

படுக்கையறை.

427871_10150686422083461_732278460_9455695_540238075_n.jpg

படுக்கையறை.

561371_10150686422268461_732278460_9455697_1356350786_n.jpg

படுக்கையறை.

36613_10150686419998461_732278460_9455675_1005069605_n.jpg

சாப்பாட்டறை.

523996_10150686420118461_732278460_9455676_1857154807_n.jpg

சமையலறையுடன் கூடிய சாப்பாட்டறை..!

380367_10150686420318461_732278460_9455679_255352585_n.jpg

சாப்பாட்டறை.

148744_10150686421348461_732278460_9455688_1600046502_n.jpg

சமையலறை.

149301_10150686422163461_732278460_9455696_1148846493_n.jpg

குளியலறை.

559403_10150686420863461_732278460_9455683_435905263_n.jpg

வரவேற்பறையும் சாப்பாட்டறையும்.

நன்றி: facebook

  • கருத்துக்கள உறவுகள்

523996_10150686420118461_732278460_9455676_1857154807_n.jpg

இப்படியான சமையலறைகளில் நாம் கண்டபடி..... கணவாய்ப் பொரியல், நண்டுப் பொரியல், தோசை, கொத்து றொட்டி போன்றவை சமைக்க முடியாதாகையால்...

வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு அவுட் கவுஸ் கட்டி, அங்கு எமது நாவுக்கு ருசியான சமையலை செய்ய சின்னக் குசினி ஒன்று கட்ட வேணும். :D

நெடுக்ஸ் நீங்கள் இணைதிருப்பதுதான் கனடாவில் அதுவும், இப்போ கட்டப்படும் அனேக வீடுகள் உந்த மாதிரித்தான். மேலே உந்த வீடு 3000SQ FT-3200 SQ FTவரை இருக்கும் .அதன் விலை $600,000- $800,000 வரை போகின்றது .

எம்மவர் இரண்டு வேலை செய்து உதற்குள் தான் கொட்டுகின்றார்கள்,கஷ்டப்பட்டாலும் மிக நல்ல முதலீடுதான் .

உங்கடை வீடும் கிட்டத்தட்ட உப்பிடித்தானோ? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. நீங்கள் இணைக்கிற படங்களைப் பார்த்தால் கனடா வீடுகள்போலை இருக்கு.. :D

Luxury_House_Interior_Design.jpgmid-century-modern-house1.jpg

INTERIOR DESIGN சாப்ட்வேர் (நிறைய இருக்கு ) மூலம் எமக்கு பிடித்தமான விதத்தில் எமது வீட்டை அலங்கரிக்க முடியும்

ஆன்லைன் ளையும் செய்ய கூடியதாக இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நீங்கள் இணைதிருப்பதுதான் கனடாவில் அதுவும், இப்போ கட்டப்படும் அனேக வீடுகள் உந்த மாதிரித்தான். மேலே உந்த வீடு 3000SQ FT-3200 SQ FTவரை இருக்கும் .அதன் விலை $600,000- $800,000 வரை போகின்றது .

எம்மவர் இரண்டு வேலை செய்து உதற்குள் தான் கொட்டுகின்றார்கள்,கஷ்டப்பட்டாலும் மிக நல்ல முதலீடுதான் .

உண்மைதான்

3 மாடி வீடு

10 அறைகள்

4 குளியலறை

3 சமையலறை

3 வரவேற்பறை

3000 மீற்றர் காணி

3 வாகனங்கள்

இருப்பது 2 அல்லது 3 பேர். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் பேசாமல் ஒரு யப்பானிய பெண்ணை மணமுடியுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

523996_10150686420118461_732278460_9455676_1857154807_n.jpg

இப்படியான சமையலறைகளில் நாம் கண்டபடி..... கணவாய்ப் பொரியல், நண்டுப் பொரியல், தோசை, கொத்து றொட்டி போன்றவை சமைக்க முடியாதாகையால்...

வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு அவுட் கவுஸ் கட்டி, அங்கு எமது நாவுக்கு ருசியான சமையலை செய்ய சின்னக் குசினி ஒன்று கட்ட வேணும். :D

ஓம் சிறித்தம்பி!உப்புடியான வீடுகளை கட்டிப்போட்டு சொறி வாங்கிப்போட்டு வைச்சுவடிவுபாக்கத்தான் சரி.....அதோடை இரண்டுவேலைகாரருக்கு சமைக்க எங்கைநேரம்?மூண்டுசதம் ஐஞ்சுசதத்துக்கு இடியப்பமும்சம்பலும் வாங்கேலுமெண்டால் என்ரைவீடும் கீளீன்சூட்டாய்த்தானிருக்கும்......... நாக்குக்கும் ருசியாய் கண்ணுக்கும் வடிவாய் குப்பைமலிவிலை சாப்பாடு செய்துகுடுக்கிறாங்கள்...பிறகென்ன கோதாரிக்கு சின்ன அடுப்படி? :lol::D

குமாரசாமி அண்ணை... இங்கும் ஒருவர் மற்றவர்களைப் பார்த்து,

தனது வருமானத்துக்கு மிஞ்சி பெரிய வீடொன்றை வாங்கி, விலையுயர்ந்த தளபாடங்களையும் கடனுக்கு வாங்கியதுடன், வரவேற்பறைக்குள் தனது குழந்தைகளை விட்டால்... பழுதாக்கிப் போடுவார்கள் என்று பூட்டியே வைத்திருந்தவர். சிறிது காலத்தில் அவரால் வீட்டுக்கு வாங்கிய கடனை சீரான முறையில் கட்ட முடியாததால்....

அவரின் தளபாடங்கள் எல்லாவற்றையும் தூக்கி நடுவீதியில் எறிந்து, வீட்டை வங்கி அபகரித்துக் கொண்டது. இப்போது... அவர், பெரும் பொருளையும், பணத்தையும் இழந்து சிறிய வீடொன்றில் மன விரக்தியுடன் வசிக்கின்றார்.

ஜப்பானியர்களின் சிறிய வீடுகளின் அமைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி, எனக்கும் வீட்டில் தளபாடம் அதிகம் வைக்க பிடிக்காது, சுத்தமா இருக்கனும், அத்துடன் வீட்டில் பின்வளவு பெரிதாக விட்டுள்ளேன் பிள்ளைகளுடன் விளையாட.

ஆபிஸ் மேசையைப் பார்த்தால் தெரியும் வீடு எப்படி வைத்திருப்பார்கள் என்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.