Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்கார்போரோ கடையொன்றில் விற்கப்பட்ட மீனில் நச்சு கலந்திருப்பதாக கனடிய உணவு கண்காணிப்பு முகவரமைப்பு எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கார்போரோ கடையொன்றில் விற்கப்பட்ட மீனில் நச்சு கலந்திருப்பதாக கனடிய உணவு கண்காணிப்பு முகவரமைப்பு எச்சரிக்கை

Apr 21 2012 06:25:46

ஸ்கார்போரோ கடையொன்றில் விற்பனைக்காக உப்பிலிட்டு பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கெண்டை மீனில் நச்சுத் தன்மையுள்ள இரசாயனங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லோட்டஸ் கேட்டரிங் அண்ட் பைன் பூட் நிறுவனக் கடையிலேயே இந்த மீன் விற்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை, ஏப்ரல் 17 என திகதி குறிக்கப்பட்டிருந்த இந்த மீனை வாங்கி உண்ட மூவர் உடல் சுகவீனமடைந்தனர்.

இந்த விடயம் அறிந்து சோதனையில் இறங்கிய கனடிய உணவு கண்காணிப்பு அதிகாரிகள் மீனில் கிளாஸ்டிரீயம் என்ற நச்சேற்றத் தன்மையுடைய பாக்றீரியா கலந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதை உண்பவர்களுக்கு பொற்றியுலிசம் என்ற நச்சுப் பாதிப்பேற்படுத்தும் ஒருவகை நோய் வரக் கூடும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 1960 லாரென்ஸ் ஆவென்யூ என்ற முகவரியில் இயங்கி வந்த கடையில் விற்கப்பட்டுள்ள இந்த சிறப்பு வகை மீன் வேறெந்தக் கடைகளுக்கும் அனுப்பப்பட்டதாகத் தகவல் இல்லை.

பலவிதமான எடைகளைக் கொண்ட பாக்கெட்டுக்களில் இவை விற்கப்பட்டுள்ளன. பலவற்றில் திகதி ஏதும் குறிப்பிடப்படாமலேயே விற்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. மீனை வாங்கி உண்ட சில நிமிடங்களில் மூவர் பாதிப்பிற்குள்ளானதோடு அவர்கள் மருத்துவமனையிலும் அனுமதிக்கபப்ட்டுள்ளனர்

www.ekuruvi.com

  • கருத்துக்கள உறவுகள்

கவனத்தில் எடுக்கவேண்டிய விடயம்.

இனிவரும்காலங்களில் இதன் தொடர்ச்சியாக பலவிடயங்களை ஒன்றாரியோ சுகாதாரத் திணைக்களம் நம்மவர்கள் மத்தியில் அதிகமாக மேற்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

கனேடிய சமஸ்டி அரசு (ஒட்டாவா) இந்த திணைக்களத்தில் (உணவு பாதுகாப்பு) பலரை வேலையால் நிற்பாட்டியுள்ளது என்பது இப்படியான உணவு பாதுகாப்புகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழரின் கடையா?

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழரின் கடையா?

உப்பு போட்டு, பதப்படுத்தி வைத்திருந்தபடியால்.... அது கருவாடு.

அப்ப அது, தமிழ்க்கடை தான். :D

  • கருத்துக்கள உறவுகள்

உப்பு போட்டு, பதப்படுத்தி வைத்திருந்தபடியால்.... அது கருவாடு.

அப்ப அது, தமிழ்க்கடை தான். :D

அதெப்படி கறுப்பினத்தவரும் கருவாடு சாப்பிடுவார்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி சாப்பாட்டு ராமன் நிழலிக்கு அறியப்படுத்தி உள்ளீர்களா ? :lol:

கனடிய உறவுகள் கருவாடு மீன் உணவு பொருட்கள் வாங்கும் போது கவனமாக பார்த்து வாங்கவும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி சாப்பாட்டு ராமன் நிழலிக்கு அறியப்படுத்தி உள்ளீர்களா ? :lol:

கனடிய உறவுகள் கருவாடு மீன் உணவு பொருட்கள் வாங்கும் போது கவனமாக பார்த்து வாங்கவும். :)  

இந்த செய்தியை யாழ் வரை கொண்டு வந்ததே சந்தி,சந்தியாக இருக்கிறகடைகளில் பொருட்களை வாங்கி ஏமாறுபவர்களுக்காகத் தான்..ஏமாந்தாலாவது பறவா இல்லை. உடல் நலத்தை தாங்களும் கெடுத்து இருக்க கூடிய பிள்ளை குட்டிக்கும் கெடுத்துடக் கூடாது..

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது அந்தக்கடை பூட்டப்பட்டிருக்குமே

காசைக் கொடுத்துச் சமாளிக்க இதென்ன சிறீலங்காவா?

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி இச்செய்தி பழையது என்று நினைக்கின்றேன்...

இச்சம்பவம் இடம்பெற்று பல மாதங்கள் கடந்துவிட்டன என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி இச்செய்தி பழையது என்று நினைக்கின்றேன்...

இச்சம்பவம் இடம்பெற்று பல மாதங்கள் கடந்துவிட்டன என்று நினைக்கிறேன்.

பழைய செய்திகளைப் போட்டு எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி இச்செய்தி பழையது என்று நினைக்கின்றேன்...

இச்சம்பவம் இடம்பெற்று பல மாதங்கள் கடந்துவிட்டன என்று நினைக்கிறேன்.

www.ekuruvi.com :D

இப்பதான் ஈ-குருவி முட்டை பொரிச்சிருக்கு போலை.. :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட இணையத்தில் பதியப்பட்டள்ள திகதியோடு தான் இந்த செய்தியை இங்கு கொண்டு வந்து இணைத்தேன் அக்கா..அதையும் விட நேற்றய தினம் சி.பி 24லயும் இதைப் பற்றிய செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன்..ஒரு வேளை பழைய செய்தியை அந்த இணையம் புதிதாக போட்டு இருந்தாலும் சி.பி 24ல எப்படி....???எது எப்படியோ யாவரும் இப்படியான விசயங்களை அறிய வேணும் என்பதைற்காகவே எடுத்து வருவதே தவிர யாரையும் குளப்ப அல்ல..

  • கருத்துக்கள உறவுகள்

சரியான ஆதாரங்கள் கைவசம் இல்லாமல் தொலைக்காட்சிச் செய்தியில் இணைக்கமாட்டார்கள். வைத்தியப்பரிசோதனைகள் நிரூபிக்கப்பட்டபின்னர்தான் அவர்கள் தொலைக்காட்சி செய்தியில் இணைத்திருக்கிறார்கள் போல் இருக்கிறது. என்னுடைய வேலை இடத்தில் நீண்ட நாட்களுக்கு முன்னர் இதனைப்பற்றிக் கதைத்ததாக ஞாபகம் அதுதான் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இது புதிய செய்திதான். இது ஒரு எகிப்திய கடை போல் உள்ளது.

http://www.680news.c...-botulism-fears

http://www.inspectio...20120419e.shtml

Edited by vaasi

  • கருத்துக்கள உறவுகள்

இது புதிய செய்திதான். இது ஒரு எகிப்திய கடை போல் உள்ளது.

http://www.680news.c...-botulism-fears

http://www.inspectio...20120419e.shtml

இப்போதைக்கு தப்பிட்டன் :lol:

இந்த Clostridium botulinum பக்ரீரியா ஒட்சிசன் அதிகம் இல்லாத சூழலில் வாழ்வதாகும். இயற்கையாகவே நீர் நிலைகளின் அடிபகுதில் உள்ள சேற்று பகுதிகள், மீனின் குடல்/ உணவு கால்வாயில் காணப்படலாம். பொதுவாக பலவகை பக்ரீரியாக்கள் மீனின் உடலில் வாழ்வதால் இவை அவற்றுடன் போட்டியிட்டு பெருகமாட்டாது. ஆனால் மீனை வெட்டி துப்பரவு செய்து முழுமையாக உப்பிட்டு உலரவிடும் பொது அதிக உப்பு, நீர் இழப்பால் ஏனைய பக்ரீரியாக்கள் இறந்துவிடும். ஆனால் Clostridium botulinum பக்ரீரியா spore எனும் அமைப்பை உருவாக்கி தப்பி வாழ வல்லது.

அதேபோல கற்று (vacuum) இல்லாத பைகளில் அடைத்த உணவுகளிலும் இது காணப்படலாம்.

காற்று அற்ற/ ஒட்சிசன் இல்லாத இடத்தில் வாழவிரும்பும் பக்ரிரிய ஆகையால் இது தகரத்தில் அடைத்த உணவுகளிலும் போதுமான வெப்பத்தில், போதுமான நேரத்துக்கு சூடாக்கி கிருமி நீக்கம் செய்ய விட்டால் தப்பி வாழ வல்லது.

http://foodpoisoning...sible-botulism/

நோய் அறிகுறிகள்

Symptoms

  • Nausea
  • Diarrhea
  • Fatigue
  • Blurred vision
  • Dry mouth
  • Difficulty speaking and swallowing
  • Descending paralysis of the arms, legs, trunk, and breathing muscles (starts in arms and moves down)

Potential health impacts

  • llness is rare in Canada, but it can be severe.
  • Most people can recover if diagnosed and treated promptly. Treatment includes early doses of antitoxin and intensive respiratory care.
  • Recovery can take several weeks to months. In some cases, it can take years and you may never fully recover.
  • Severe botulism can lead to

    • a need for intensive medical and nursing care
    • paralysis and respiratory failure, which can require a person to have ventilator assistance to breathe

    [*]If not diagnosed and treated, death from respiratory failure can happen within 3 to 10 days.

  • கண்டுபிடித்து மருத்துவ சிகிச்சை கொடுக்காவிட்டால் இறப்பையும் ஏற்படுத்தலாம்.

உணவுகள்

Food commonly associated

  • Home-canned low-acid food that has been processed improperly, such as asparagus, beets, corn, garlic, green beans, mushrooms, peppers, chicken and chicken livers, ham, liver pâté, sausage
  • Smoked, salted and fermented fish
  • Fermented marine mammal meat, for example whale, walrus, seal
  • Baked potatoes stored in aluminium foil
  • Honey: Although honey may naturally contain Clostridium botulinum, the bacteria can't grow or produce toxins in the honey, but it could grow and produce toxins in a baby's body, and this can cause infant botulism
  • Low-acid juice, such as carrot juice
  • Improperly-cured meat products

http://www.inspectio...botulisme.shtml

Edited by KULAKADDAN

10 ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறன், நோர்வேயில் ஒரு தமிழ் கடையில் frozen மீன் பக்கெட் ஒன்றினை வாங்கிச் சசமைத்துச் சாப்பிட ஒருவரும் இறந்ததாகக் கேள்விப்பட்ட ஞாபகம்...

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு தப்பிட்டன் :lol:

சஜீவன் கவனமப்பு.

இங்கு, சிலகாலத்துக்குமுன் ஒரு தமிழ்க்கடையில் மாலையில் கடையை... பூட்டி விட்டு செல்லும் போது, மின்சாரத்தை மிச்சம் பிடிப்பதற்காக... மீன் உள்ள குளிர் சாதனப் பெட்டியின் மின் இணைப்பை, நிறுத்தி விட்டு சென்றதை... சுகாதார திணைக்களத்தினர் கண்டு பிடித்து, தண்டனை வழங்கியதாக அறிந்தேன்.

இந்த Clostridium botulinum பக்ரீரியா ஒட்சிசன் அதிகம் இல்லாத சூழலில் வாழ்வதாகும். இயற்கையாகவே நீர் நிலைகளின் அடிபகுதில் உள்ள சேற்று பகுதிகள், மீனின் குடல்/ உணவு கால்வாயில் காணப்படலாம். பொதுவாக பலவகை பக்ரீரியாக்கள் மீனின் உடலில் வாழ்வதால் இவை அவற்றுடன் போட்டியிட்டு பெருகமாட்டாது. ஆனால் மீனை வெட்டி துப்பரவு செய்து முழுமையாக உப்பிட்டு உலரவிடும் பொது அதிக உப்பு, நீர் இழப்பால் ஏனைய பக்ரீரியாக்கள் இறந்துவிடும். ஆனால் Clostridium botulinum பக்ரீரியா spore எனும் அமைப்பை உருவாக்கி தப்பி வாழ வல்லது.

அதேபோல கற்று (vacuum) இல்லாத பைகளில் அடைத்த உணவுகளிலும் இது காணப்படலாம்.

காற்று அற்ற/ ஒட்சிசன் இல்லாத இடத்தில் வாழவிரும்பும் பக்ரிரிய ஆகையால் இது தகரத்தில் அடைத்த உணவுகளிலும் போதுமான வெப்பத்தில், போதுமான நேரத்துக்கு சூடாக்கி கிருமி நீக்கம் செய்ய விட்டால் தப்பி வாழ வல்லது.

காற்று இல்லாத பைகளில் அடைக்கப்பட்ட உணவிலும், தகரத்தில் உள்ள உணவிலும் வாழக்கூடிய... பொல்லாத கிருமியாக உள்ளது.

உணவுப் பொருட்களை, வாங்கிச் சமைக்கவே... பயமாக இருக்கின்றது.

தகவலுக்கு நன்றி, குளக்காட்டான்.

காற்று இல்லாத பைகளில் அடைக்கப்பட்ட உணவிலும், தகரத்தில் உள்ள உணவிலும் வாழக்கூடிய... பொல்லாத கிருமியாக உள்ளது.

உணவுப் பொருட்களை, வாங்கிச் சமைக்கவே... பயமாக இருக்கின்றது.

தகவலுக்கு நன்றி, குளக்காட்டான்.

ஆம் தகரத்தில் அடைத்த உணவை சரியான வெப்பநிலையில் போதுமான நேரத்துக்கு சூடாக்காவிட்டால் தப்பி வாழ வல்லது. ஆனால அப்படி தகரத்தில் அடைக்கபட்ட உணவில் இருந்தால், இந்த பக்ரீரியா வளரும் பொது வெளியிடும் வாயுக்களால் உப்பிவிடும். எனவே உப்பி போய் இருக்கும் தகரத்தில் அடைத்த உணவுகளை சாப்பிடாது விடுவது நல்லது.

அத்துடன் இந்த பக்ரீறிய சுரக்கும் நச்சு பொருள் உணவுகளை கொதிக்கும் வரை சூடாக்கினால் அழிந்து போய்விடும்.

உங்கள் தகவல்களுக்கு நன்றி குளக்காட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தமிழ்க்கடைகளில் விற்கப்படும் மீன்களிலும் அளவுக்கு அதிகமான மீன்வாடையை ஏற்படுத்தவும் மீன்கள் பழுதடையாமல் கூடிய காலம் இருக்கவும் ஏதோ இரசாயனப் பொருளைக் கலந்தே அனுப்புகிறார்கள்போலத் தெரிகிறது. இது விடயத்தில் இங்குள்ளவர்களும் கவனமெடுத்து இத்தகைய சமூகவிரோதச் செயலைக் கட்டுப்படுத்த நடவடிக்கையெடுப்பது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.