Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் தான்!?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் தான்!?

25-einstei-mileva.jpg

லண்டன்: உலகிலேயே மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் என்று ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார் வால்டர் ஐசக்சன். இவர் எழுதிய 'Einstein: His Life and Universe', என்ற நூலில்தான் உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐன்ஸ்டீன் தொழில் ரீதியாக எத்தனையோ பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும், அற்புதங்களை நிகழ்த்தியிருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தன்னுடன் பணியாற்றிய விஞ்ஞானி மிலவா மாரிக்கைத்தான் கல்யாணம் செய்து கொண்டு வாழ்ககை நடத்தினார் ஐன்ஸ்டீன். இவர்களது திருமண வாழ்க்கை 11 ஆண்டு காலமே நீடித்தது. இந்த 11 ஆண்டு காலமும் அவரிடமிருந்து எந்தவிதமான காதல் அணுகுமுறையும் இருந்ததில்லையாம். இருவரும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்காக சம்பிரதாயத்திற்காக சேர்ந்து வாழ்க்கை நடத்தினார்களாம்.

தனது மனைவியை வேலைக்காரி போல நடத்தி வந்தாராம் ஐன்ஸ்டீன். அன்பையும், பரிவையும் அவர் தனது மனைவியிடம் காட்டியதில்லையாம். 11 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பின்னர்தான் தனது திருமண வாழ்க்கை தோல்வியடைந்த ஒன்று என்று அவருக்குப் புரிய வந்ததாம். ஐன்ஸ்டீனின் மனைவி மாரிக், ஐரோப்பாவிலேயே முதல் முறையாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் ஐன்ஸ்டீனை விழுந்து விழுந்து கவனத்திவர் மாரிக் என்பது குறிப்பிடத்தக்கது. ஐன்ஸ்டீனின் அறையை மிகச் சிறப்பாக அவர் பராமரித்து வந்தார். அவருக்கு மூன்று வேளை உணவை தவறாமல் அவரது அறைக்கே கொண்டு வந்து கொடுத்தார். உடைகளை சுத்தமாக துவைத்து தோய்த்துக் கொடுத்தார். படுக்கை அறையை சுத்தமாக வைத்திருந்தார். ஆனால் பதிலுக்கு மனைவிக்கு எந்த கைமாறும் செய்ததில்லையாம் ஐன்ஸ்டீன்.

மாறாக, மனைவிக்கு பல நிபந்தனைகளைப் போட்டு வைத்திருந்தாராம அவர். அதாவது அருகில் வந்து உட்காரக் கூடாது, வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது, வெளியுலக தொடர்புகளை அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது.. இப்படிப் போகிறது ஐன்ஸ்டீனின் நிபந்தனை லிஸ்ட்.

அதை விட கொடுமை, தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று தனது மனைவி எதிர்பார்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தாராம் ஐன்ஸ்டீன். எந்த வகையிலும் தன்னைக் கவர முயற்சிக்க் கூடாது. அனுமதி இல்லாமல் பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று.

11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்குப் பின்னர் ஐன்ஸ்டீனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தனது பிள்ளைகளையும் அழைத்துச் சென்று விட்டார்.

ஐன்ஸ்டீன் நடத்திய இந்த லட்சணமா இல்லறத்தில் பிறந்த குழந்தைகள் இருவர். ஒருவர் ஹான்ஸ் ஆல்பர்ட். இன்னொருவர் எட்வர்ட். 1902ம் ஆண்டு லிசரல் என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரைத் தத்துக் கொடுத்து விட்டனர். பிள்ளைகளோடு ஜூரிச் சென்ற மாரிக், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1919ம் ஆண்டு விவாகரத்து கோரினார். அது பின்னர் கிடைத்தது.

அதன் பின்னர் ஐன்ஸ்டீன் 1919ம் ஆண்டே எல்சா என்பவரை மணந்தார். பி்ன்னர் அவரது செயலாளர் பெட்டி நியூமன்னுடனும் உறவு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் வேறு ஒரு பெண்ணுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

ரிலேட்டிவிட்டி தியரியை உலகுக்கு அறிவித்த ஐன்ஸ்டீனால் ரிலேஷன்ஷிப்பை பராமரிக்க முடியாமல் போனது வியப்புக்குரியதுதான்...!!

Thanks:thatstamil.com

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ இப்ப உள்ள கணவன்மாரெல்லாம் மனிசிமாரை விழுந்து விழுந்து கவனிக்கிறாப் போல எல்லோ எழுதி இருக்காங்க. அதேபோல.. மனைவிமாரெல்லாம் கணவனை விழுந்து விழுந்து கவனிக்கிறாப் போல எல்லோ இருக்குக் கதை..! :):lol:

" ரிலேட்டிவிட்டி தியரியை உலகுக்கு அறிவித்த ஐன்ஸ்டீனால் ரிலேஷன்ஷிப்பை பராமரிக்க முடியாமல் போனது வியப்புக்குரியதுதான்...!!" - எல்லாம் அளவோட இருக்கவேண்டும் என்பார்கள் :icon_idea:

ரிலேசன்ஷிப் தியரி நன்றாக போகாத படியால் தான் அந்த மனிசனால் ரிலேட்டிவிட்டி தியரியை கண்டுபிடிக்க முடிந்தது :icon_idea: :icon_idea:

Edited by ukkarikalan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரிலேசன்ஷிப் தியரி நன்றாக போகாத படியால் தான் அந்த மனிசனால் ரிலேட்டிவிட்டி தியரியை கண்டுபிடிக்க முடிந்தது :icon_idea: :icon_idea:

இதெண்டால் உண்மை போலத்தான் இருக்குது.

காரணம்.. நியூட்டன் ஒரு கட்டைப்பிரமச்சாரி. அதேபோல் அப்துள் கலாம்.. ஒரு கட்டைப்பிரமச்சாரி.. இந்தியாவின் அணு விஞ்ஞானி என்ற வகையில் அவர் அந்த நாட்டுக்கு செய்தது பெரிய விசயம்..! இவர்கள் எல்லாம் சாதிக்க முக்கிய காரணம்.. ரிலேசன்சிப்பை தள்ளி வைச்சதாகக் கூட இருக்கலாம்..! அதேபோல்.. நோபல் பரிசு பெற்ற அன்னை தெராசா..!

அதுக்காக எல்லோரும் அப்படி செய்யனும் என்பது அல்ல எங்கள் வாதம். அப்படிச் செய்யாத பலரும்.. நல்ல சாதனையாளர்களா இருந்திருக்கினம்.. என்பதும் கண்கூடு.. எனினும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தெரிய வந்தால்.. அங்கும் இந்தக் கதைதானோ யார் அறிவார்..???! :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

images-5.jpg

நான் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய பல்கலைக்கழகம் இருக்கின்றது.எத்தனையோ பேராசிரியர்களை கண்டிருக்கிறேன்.........அவர்களைப்பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்....அவர்களின் போக்குவித்தியாசமானது...அனேகரின் குடும்பவாழ்க்கை சந்தோசமற்றது......திருமணம் செய்தும் தனிவாழ்க்கை வாழ்பவர்கள்....சிலர் அழகாக உடுத்தமாட்டார்கள்.....தலைவாரியிருக்க மாட்டார்கள்....துவிச்சக்கரவண்டியில் திரிவார்கள்.....அல்லது விலையுயர்ந்த வாகனத்தில் சென்றாலும் ஆடம்பரமெதுவுமே இல்லாமலிருப்பார்கள்.......சிலர் தனிமையில் கதைத்துக்கொண்டு செல்வார்கள்......ஒருசிலரை பார்த்தால் பஞ்சப்பரதேசி போலிருப்பார்கள்..ஆனால் உள்ளுக்குள் இருப்பது அவ்வளவும் பொருள் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை இழந்தால் தான் இன்னும் ஒன்றை அடையமுடியும்.

இது எல்லார் வாழ்க்கைக்கும் பொருந்தும்.

அயன்ஸ்ரின் அவர்களுக்குக் கிடைத்த வெற்றிக்கு முன்னர்

அவருடைய குடும்ப வாழ்க்கை அவருக்கு சிறியதாக இருந்திருக்கும்.

ஒன்றுக்கு நான்கு பெண்களுடன் வாழ்ந்திருக்கின்றார். :lol::D

.

இது அவ்வளவும் உண்மை என்றில்லை நெடுக்ஸ்.

ஐன்ஸ்டீனுக்கு கணக்கு அவ்வளவாக வராது. மனுசி கணக்கில் புலி. ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளை கணித ரூபத்திற்கு மாற்றி அந்த கோட்பாடுகள் மேற்கொண்டு முன்னேற வழிவகுத்ததே அவதான். தனக்குக் கிடைத்த நொபேல் பரிசின் பெரும்பகுதி அவவுக்குத்தான் ஐன்ஸ்டீன் கொடுத்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெண்டால் உண்மை போலத்தான் இருக்குது.

காரணம்.. நியூட்டன் ஒரு கட்டைப்பிரமச்சாரி. அதேபோல் அப்துள் கலாம்.. ஒரு கட்டைப்பிரமச்சாரி.. இந்தியாவின் அணு விஞ்ஞானி என்ற வகையில் அவர் அந்த நாட்டுக்கு செய்தது பெரிய விசயம்..! இவர்கள் எல்லாம் சாதிக்க முக்கிய காரணம்.. ரிலேசன்சிப்பை தள்ளி வைச்சதாகக் கூட இருக்கலாம்..! அதேபோல்.. நோபல் பரிசு பெற்ற அன்னை தெராசா..!

அதுக்காக எல்லோரும் அப்படி செய்யனும் என்பது அல்ல எங்கள் வாதம். அப்படிச் செய்யாத பலரும்.. நல்ல சாதனையாளர்களா இருந்திருக்கினம்.. என்பதும் கண்கூடு.. எனினும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தெரிய வந்தால்.. அங்கும் இந்தக் கதைதானோ யார் அறிவார்..???! :):icon_idea:

நீங்களும் கட்டைப்பிரமச்சாரிதானே? என்ன செய்யபோறியள் என்டு பாப்பம் :lol::D:icon_idea:

(இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க? :D )

நெடுக்ஸ் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. தனிமையில் இருப்பவர்கள் கவனம் முழுவதும் தங்கள் காரியத்தில் குவிக்க முடியும் என்பது தான் காரணம் என்று நினைக்கிறேன். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகம் தொடர்ந்து பிரமச்சாரிகளால் தான் பராமரிக்க படுகிறது என்று கேள்விப்பட்டேன். கூடுதல் தகவல் அவர்கள் எல்லோரும் காதலில் தோல்வி உற்றவர்கள் என்று கேள்வி. :D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதெண்டால் உண்மை போலத்தான் இருக்குது.

காரணம்.. நியூட்டன் ஒரு கட்டைப்பிரமச்சாரி. அதேபோல் அப்துள் கலாம்.. ஒரு கட்டைப்பிரமச்சாரி.. இந்தியாவின் அணு விஞ்ஞானி என்ற வகையில் அவர் அந்த நாட்டுக்கு செய்தது பெரிய விசயம்..! இவர்கள் எல்லாம் சாதிக்க முக்கிய காரணம்.. ரிலேசன்சிப்பை தள்ளி வைச்சதாகக் கூட இருக்கலாம்..! அதேபோல்.. நோபல் பரிசு பெற்ற அன்னை தெராசா..!

அதுக்காக எல்லோரும் அப்படி செய்யனும் என்பது அல்ல எங்கள் வாதம். அப்படிச் செய்யாத பலரும்.. நல்ல சாதனையாளர்களா இருந்திருக்கினம்.. என்பதும் கண்கூடு.. எனினும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தெரிய வந்தால்.. அங்கும் இந்தக் கதைதானோ யார் அறிவார்..???! :):icon_idea:

என்ர ராசா

இதுகளை உதாரணமாக எடுத்துப்பாடாத ராசா

நெடுக்ஸ் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. தனிமையில் இருப்பவர்கள் கவனம் முழுவதும் தங்கள் காரியத்தில் குவிக்க முடியும் என்பது தான் காரணம் என்று நினைக்கிறேன். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகம் தொடர்ந்து பிரமச்சாரிகளால் தான் பராமரிக்க படுகிறது என்று கேள்விப்பட்டேன். கூடுதல் தகவல் அவர்கள் எல்லோரும் காதலில் தோல்வி உற்றவர்கள் என்று கேள்வி. :D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆக நெடுக்கும் ஒரு விஞ்ஞானி. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக நெடுக்கும் ஒரு விஞ்ஞானி. :lol:

விஞ்.. சாணி..! நாங்க தான் உங்களுக்கு காமடி பண்ணக் கிடைச்சமா..! அவனவன்.. ஒரு பாடத்தைப் படிச்சு பாஸ் பண்ணவே படுற பாடு.. இவைக்கு அதுக்குள்ள நக்கல் நளினம்..! :lol::icon_idea:

ஐன்ஸ்டீனின் உலகமே தனி. மிகவும் சுவாரஸ்யமானதும் கூட. அவரின் வெற்றிக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அவரின் கடின உழைப்பும், விடா முயற்சியும் பௌதிகத்தின் மீதிருந்த தீராத காதலும் தான் காரணம். அவர் தன் மனதுக்கு நேர்மையானவர்.

சாதாரண மக்களுடன் ஒப்பிடும் போது ஐன்ஸ்டீன் மிக மெதுவாக சிந்திக்கும் ஒரு நபர் (slow thinker).

பொதுவாகவே விஞ்ஞானிகள் (ஏன் ஞானிகளும்தான்) குடும்பம், குழந்தைகள் என்ற சிறு வட்டத்துக்குள் அடங்குவதில்லை.

ஐன்ஸ்டீனின் வாழ்க்கைக் குறிப்புக்கள், அவரின் இன்ப துன்பங்கள், அவர் தந்த சார்பியல் தத்துவம் மற்றும் அவரின் இறுதிப் பயணம் என்பவற்றை ஒருங்கிணைத்து யாழில் ஒரு நீண்ட கட்டுரை எழுதலாம் என நினைத்திருக்கிறேன். தமிழில் இப்படியான ஆக்கங்கள் வரவேண்டும் என விரும்புகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.