Jump to content

பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி.....


Recommended Posts

பதியப்பட்டது

யாழ் எட்டாவது அகவையை முன்னிட்டு யாழ் கள உறவுகளால் பெருமையுடன் வழங்கும் பட்டிமன்றம்

நடுவர் இளைஞன்

பிள்ளைகள்

சாத்திரி - அணித்தலைவர்

ரமா

சோழியன்

நாரதர்

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு இடையேயான இடைவெளி உருவாதற்கு ????

பெற்றோர்

தல - அணித்தலைவர்

சுஜீந்தன்,

புயல்,

ஈஸ்வர்,

சூழல்

நிதர்சன், - அணித்தலைவர்

சுடர்

குருக்ஸ் ,

சாணாக்கியன்

அணி பிரித்துவிட்டேன் அவர்கள் அந்த அணியில் வாதாட சம்மதம் என நினைக்குறேன். 30 திகதி நடுவர் இளைஞன் அவர்கள் பட்டிமன்றத்தை ஆரம்பித்து வைப்பார். அதற்கிடையில் யாராவது ஏதும் மாற்றம் செய்ய விரும்பினால் அறியத் தரவும். 30ஆம் திகதி இளைஞன் அவர்கள் ஆரம்ப உரை வைத்தவுடன் பிள்ளைகள் அணித்தலைவர் சாத்திரி அவர்கள் அன்றே தனது தலைவர் கருத்தை வைக்க வேண்டும் ஆகவே அவரை தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பட்டிமன்றம் சம்பந்தமான அரட்டைகளை மற்றும் பட்டிமன்றம் சம்பந்தமான பார்வையாளர்கள் கருத்துக்களை பட்டிமன்றம் தொடர்வோமா என்ற தலைப்பில் வைக்கவும். இங்கு வாதம் மட்டுமே வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்.

விதிகள் சில

(1). பட்டிமன்றம் ஆரம்பமாகுமுன்னர் கொடுத்த ஒழுங்கின்படியே அனைவரும் பங்குபற்றவேண்டும்.

(2). ஒவ்வெருவருக்கும் அவரது வாதங்களை முன்வைக்க இரண்டு நாட்கள் மட்டுமே கொடுக்கவேண்டும். கொடுக்கப்பட்ட நாட்களுக்குள் அவர் வந்து வாதத்தை வைக்கவேண்டும்.

Posted

அன்பு வணக்கம் கள உறவுகளே...

யாழ் இணையத்தின் 8 ஆவது அகவையை முன்னிட்டு இந்தச் சிறப்புப் பட்டிமன்றம் நிகழ இருக்கிறது. உங்கள் அனைவரோடும் - உங்கள் கருத்துக்களோடும் இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி. யாழ் கருத்துக்களத்தில் இடம்பெற்ற பட்டிமன்றங்களில் இது கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு தலைப்பை மூன்று வெவ்வேறு கருத்தியல் நிலைப்பாடுகளிலிருந்து விவாதிக்க மூன்று அணிகளாக - தயாராக இருக்கிறார்கள். இதுவரை நடந்த பட்டிமன்றங்களிலிருந்து அனுபவங்களைப் பெற்று, தொடர்கின்ற இந்தப் பட்டிமன்றத்தை ஒழுங்கமைப்பதிலும் ஒருங்கமைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

என்னை நடுவராக இணைத்திருக்கிறீர்கள். நேரம் ஒத்துழைக்குமா என்பது சிக்கலான விடயம். எனவே முடிந்தளவு சிறப்பாக உங்கள் கருத்துக்களை வாசித்து தொகுத்தளிக்க முனைகிறேன். தவறுகள் நேர்ந்தால் பொறுத்தருள்க.

சரி. முதலில் - யாழ் இணையத்தின் எட்டாவது அகவையில் யாழ் இணையத்தையும், அதன் நிர்வாகத்தையும், கள உறவுகளையும் மனதாற வாழ்த்துகிறோம். அத்தோடு இந்தப் பட்டிமன்றத்தை ஒழுங்குபடுத்துவதில் மீண்டும் தனது பங்களிப்பை நல்கிய தோழி இரசிகைக்கும், ஏனையவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

தொடர இருக்கிற இப் பட்டிமன்றத்தின் கருப்பொருளாக அல்லது விவாதப்பொருளாக முன்வைக்கப்பட்டிருக்கிற விடயம்: "பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே உருவாகி, விரிவடைந்து வருகிற இடைவெளி" ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு "இவ் இடைவெளிக்குக் காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா?" என்று மூன்று கருத்தியல் நிலைப்பாடுகளிலிருந்து கேள்வி எழுப்பப் பட்டிருக்கிறது.

தலைப்பில் எந்தவித எல்லைகளும் விதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே "ஈழத்து மண்ணிலிருந்து புலம்பெயர் ஈழத்து சமூகம்" வரைக்குமாக விவாதத்தை விரித்துக்கொள்ள முடியும் என நம்புகிறேன். காலம் காலமாக பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது எமது சமூகமாக இருந்தாலென்ன, ஏனைய சமூகங்களாக இருந்தாலென்ன. ஆனால், இங்கு முன்வைக்கப்பட்டிருக்கிற விடயம் யாதெனின்: இடைவெளி விரிவடைகிறது என்பதுதான். எனவே விவாதத்தில் பங்கேற்கிற கள உறவுகள் இதனையும் முக்கிய கவனத்தில் கொள்ளவேண்டும்.

"தொழில்நுட்பப் புரட்சி, யுத்தசூழல், புலம்பெயர் வாழ்வு, கலாசார அதிர்வு, உலகமயமாதல்" போன்ற விடயங்களும் "சமூகத்திலும் அதன் உறவுநிலைகளிலும்" பாரிய மாற்றங்களை உருவாக்கும் காரணிகளாக அமைகின்றன என்பதை நாம் மறுத்துவிட முடியாது. அந்தவகையில் சூழல்தான் இந்த "இடைவெளி விரிவடைவுக்கு" காரணம் என்று வாதாட வந்திருக்கிற அணியினரையும், அவ்வணிக்கு தலைமையேற்றிருக்கும் நிதர்சனையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

"வழிநடத்தல், நெருங்கிப் பழகல், விட்டுக்கொடுப்பு, அன்பு பகிர்தல், குடும்பத் தலைமைத்துவம், சுதந்திரம், வீடு, புரிந்துணர்வு" போன்றவற்றில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெற்றோர்கள். வாழ்வியல் அனுபவங்களூடாக வளர்ந்து வந்தவர்கள். காலத்தின் சுழற்சியில் "பிள்ளைகளின்" வயதுநிலையைத் தாண்டி வந்தவர்கள். அந்தவகையில் "இடைவெளி விரிவடைவில்" ஆதிக்கம் செலுத்துபவர்களாக பெற்றோர்களே இருக்கமுடியும் என்று தமது வாதத்தை முன்வைக்க வந்திருக்கும் அணியினரையும், அவ்வணிக்குத்து தலைமையேற்றிருக்கும் தல அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

"துடிப்பு, வேகம், சுதந்திரம், அனுபவமற்ற தன்மை, நவீனத்துவத்தோடு உறவு, மாற்றம் வேண்டுகிற மனசு, புதிதை விரும்புகிற குணம்" என்று பல்வேறு குணாம்சங்களைக் கொண்டுள்ளவர்களாக - சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களாக இருக்கிறவர்கள் பிள்ளைகள்(இளைஞர்கள்). அந்தவகையில் "பிள்ளைகளே இடைவெளி விரிவடைந்துகொண்டு செல்வதற்கு" காரணமானவர்கள் என்று தமது தரப்பு வாதத்தை வழங்க இணைந்திருக்கிற அணியினரையும், அவ்வணிக்கு தலைமையேற்றிருக்கிற சாத்திரி அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

இவர்கள் அனைவரும ஆக்கபூர்வமான விவாதத்தை நிகழ்த்தப்போகிறார்கள் - நிகழ்த்துவார்கள். எனவே இவர்களுடைய கருத்துக்களை, கருத்தாடல்களை கவனமாக அனைத்து கள உறவுகளும் வாசித்து உற்சாகமளிக்க வேண்டும். ஒவ்வொரு அணியினரும் பட்டிமன்ற சிறப்பு விதிமுறைகளையும் கவனத்தில் கொள்க.

பட்டிமன்றம் தொடங்குகிறது. முதலாவதாக "பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உருவாகி விரிவடைந்து வருகிற இடைவெளிக்கு பிள்ளைகளே காரணம்" என்று தனது அணியின் வாதத்தை முழங்க அணித்தலைவர் சாத்திரி அவர்களை அழைக்கிறோம். :lol:

Posted

எங்கள் குழந்தை யாழிற்கு வயது எட்டு என கேட்கும் போது ஆச்சரியமாகதான் இருக்கிறது அதை கட்டி தழுவிகொண்டிருந்ததில் காலம் போனது தெரியவில்லை.

யாழை பலர் பலமாதிரி உருவகித்து கவிதைகள் எழுதினார்கள் ஆனால் எனக்கு அது ஒரு குழந்தை போல காரணம் அதனிடம் அன்புசெலுத்தியிருக்கிறோம் அரவணைத்திருக்கிறோம் அதட்டியிருக்கிறோம் ஏன் சிலரால் அது அடிகூட வாங்கியிருக்கிறது ஆனாலும் அது அடித்த தாயிடமே அழுது கொண்டு ஓடும் குழந்தையை போல எழுந்து எழுந்து எம்மை நோக்கியே ஒடிவருகின்றது அதை தாலாட்டி சீராட்டி வளர்க்க வேண்டியது ஒவ்வொரு யாழ்உறுப்பினரின்கடைமையாகும

Posted

"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பிள்ளைகளே" என முழங்கிச் சென்றார் "பிள்ளைகளே" அணித் தலைவர் சாத்திரி.

யாழிற்கு வயது எட்டு என்று என்றார். யாழைக் குழந்தை என்றார். தாலாட்டி சீராட்டி வளர்க்க வேண்டிய பொறுப்பு எமதென்றார். பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் யாழுக்கும், அதன் நிர்வாகத்துக்கும் கூறிக்கொண்டு, பட்டிமன்றத்தில் பங்குகொள்வோர்க்கும் ஏனையோர்க்கும் வணக்கங்கள் கூறி தனது வாதத்தை தொடங்கினார்.

பட்டிமன்றத் தலைப்பில் "தாய் நிலத்திலா" அல்லது "புலம்பெயர் நிலத்திலா" என்று எதனையும் வரையறை செய்யாவிட்டாலும், புலம்பெயர் மண்ணை மையமாக வைத்தே தனது கருத்துக்களை சொல்வதாக முன்னறிவித்தார்.

"தலைப்பில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு விடை அனைவருக்கும் தெரியும் - அது: இடைவெளிக்குக் காரணம் பிள்ளைகளே என்பது - இருந்தும் நடுவர் தொடங்கி எதிரணியினரும் குழம்பியிருக்கின்றனர்" எனக் கூறினார்.

தொடர்ந்தவர், நடுவர் தலையையே உருட்டத் தொடங்கிவிட்டார். அடடா, ஐயையோ என்று விழிகளை உருட்டி - "மவுசை" உருட்டிப் பார்த்தால்:

பிள்ளைகளின் தேவைகளை அறிந்து, அவர்கள் கேட்பதை, அவர்கள் விரும்புவதை பூர்த்தி செய்கின்றனர் பெற்றோர். தமது பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்து தம்மால் முடிந்தளவு அவர்களை மகிழ்விக்கின்றனர். ஆனால், சிறுவயதில் "அம்மா நண்பி கொண்டு வந்த பேனா பிடிச்சிருக்கு அது வாங்கித் தாங்கோ" என்று கேட்கத் தெரிந்த பிள்ளைகளுக்கு, இளவயதை அடைந்ததும் பல விடயங்களை ("அம்மா அந்த நண்பியை பிடிச்சிருக்கு சேர்த்து வையுங்கோ" :wink: என்று கேட்கத் தெரியாமல்) மறைக்கத் தொடங்குகிறார்கள். எனவே, முதலில் பிள்ளைகளே இடைவெளியை உருவாக்குகிறார்கள் என்று தனது கருத்தை அற்புதமாக முன்வைத்தார்.

"சேர்த்து வையுங்கோ" என்று கேட்டால் போல சேர்த்து வைத்துவிடப் போகிறார்களா என்று மற்றைய அணிகளில் இருக்கிற பிள்ளைகள் குமுறுவது புரிகிறது. :)

இளவயதையடைந்ததும் பிள்ளைகள் பெற்றோரிடம் பலவிடயங்களை மறைப்பதற்கு காரணம் என்ன? பயமா? அல்லது அலட்சியமா? - இனி வாதாட வருகிற அணியினர் தான் சொல்லவேண்டும்.

பிள்ளைகளின் மீது நம்பிக்கை வைக்கிற பெற்றோரின் நம்பிக்கையைத் தகர்த்து, மனதில் காயங்கள் உண்டாக்கி, இடைவெளியை உருவாக்குவதோடு நில்லாமல் - கண்டிக்கிற பெற்றோரை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதிர்த்துப் பேசி மேலும் மேலும் இடைவெளியை விரிவடையச் செய்கிறார்கள் என்று விளக்கமாகச் சொன்னார்.

சிறுவயதில் அம்மா அப்பாவில் தங்கியிருந்தவர்கள், இளவயதை அடைந்ததும் போலியான உலகத்தின் போதைகளில் மயங்கி "பெற்றவரையே" தூக்கியெறியத் துணிந்துவிடுகிறார்கள் என்று சில உதாரணங்கள் மூலம் சிறப்பாகச் சொன்னார்.

"பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு" என்கிற முதுமொழி ஞாபகம் வருகிறது. பார்ப்போம், மற்றைய அணியினர் ஏதும் புதுமொழியுடன் வருகிறார்களா என்று. :lol:

பெற்றோரை உயர்த்தி உச்சத்தில் வைத்தார் - மெல்ல (தமது)எதிரணி இரண்டையும் நன்றாகவே சாடினார் - "தல" யிலும் கைவத்தார். நவீனம் நவீனம் என்று நவீனம் நோக்கிய பயணத்தில் "பெற்றோரை விட்டு விலகாமல்", பெற்றோருடன் இணைந்து பயணிக்கலாமே என்று நறுக்கென ஒரு கேள்வி எழுப்பினார். :!:

இறுதியாக: (தமது)எதிரணியனரின் வாதங்களையும், நடுவரின் தீர்ப்பையும் கேட்காமலே தமது அணிக்குத்தான் வெற்றி எனக் கூறி நம்பிக்கையோடு விடைபெற்றார்.

சாத்திரியின் கருத்துக்களை வாசித்த "பிள்ளைகள்" எல்லாம் "பொங்கியெழும் பிள்ளைகள் படையாக" புறப்படக் காத்திருக்கிறார்கள். எனவே "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் பெற்றோர்களே" என்று வாதாட வந்திருக்கும் அணித் தலைவர் "தல" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம்.

Posted

நடுவர் அவர்களே...! எமதணியினரே....! எதிரண்னியினர்....! பார்வையாளர்ராக இருக்கும் உறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கம்...! வணக்கம்..!

எட்டு ஆண்டு பூர்த்தியாகி வாழ்ந்துவரும் யாழ் இணையத்துக்கு என் வாழ்த்துக்கள் முதலில் உரித்தாகட்டும்...!

எதிரணி ஒண்றின் உறுப்பினராய் இந்த பட்டி மண்றத்தை ஒழுங்கு செய்த சோழியன் அண்ணாவுக்கு நண்றிகளையும் மறக்காமல் சேர்க்க வேண்டும்..

எதிரணியின் ஒண்றன் தலைவர் சாத்திரியார் அவர்கள் தனது தலைப்புரையை வைத்துவிட்டார்...எனது தலயும் உறுட்டியதை பார்த்தேன்.... ரசித்தேன்.... அதை எதிர்த்து சொல்ல அல்லது மறுத்து பேச எமது அணியினர் காத்திருப்பதால் நான் எம்மணியின் ஆணித்தரமான வாதத்துக்கு அல்லது கருத்துக்கு நேரடியாகவே போய்விடலாம் என நினைக்கிறேன்.....

இளயவர்கள் என்பவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி அவர்களிடம் எப்படி உணர்வுகளை பிரதிபலிக்கிறோமோ அப்படியே அவர்களும் தங்களை பிரதிபலிக்கிறார்கள்... உணர்வுகளை உள்வாங்கி பிரதிபலிக்கும் முகத்தில் அன்பை கொண்டுவந்து பிளைகளிடம் அன்பாக பேசாத பெற்றோரிடத்தில் பிள்ளைகள் அன்பாக இருக்காதது அவர்களின் தவறும் கிடையாது....

ஒரு பாடல் எனக்கு ஞாபகத்தில் வருக்கிறது...

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே

அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே...!

இதில் தீயவராவது மட்டும் அல்ல அன்பானவராக குடும்பத்தோடு ஒத்தவராக பெற்றோரை மதிப்பவராக வரவும் அன்னை அணைப்பு தேவைப்படுகிறது.... அன்பாக வளரும் எந்த குழந்தையும் தன் எதிர்காலத்தை பற்றி கவலை கொள்வதில்லை... அதானால் பிள்ளைகள் எப்போதும் பெற்றோரை மதித்து ஒண்றி வாழ்கிறார்கள்... அன்பு இல்லாத விடத்து அந்தப் பிள்ளை தன் எண்ணப்படி வாழத் தலைப்படுகிறார்கள்.... பெற்றோரையும் மதிப்பது கிடையாது...!

அன்பு மட்டும் பிள்ளைகளுக்கு போதுமா எண்றும் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது..? அதுக்கு பதிலை சிந்தித்து பார்த்தேன். அதையும் தாண்டி பிள்ளைகளின் விருப்பு ஆர்வம் சிந்தனை என்பன வேறு படும்போது.... அதுக்கு ஒவ்வாத சிந்தனை உள்ள பெற்றோர் தாங்கள் விரும்புவதை திணிப்பதனால் இளையவர் விலகுவதும் ஒண்றும் விளங்காத விடையம் அல்ல..!

தான் பெரிய விளையாட்டு வீரராக வரவேண்டும் என இளயவை ஒருவர் நினைக்கிறார். ஆனால் பெற்றோர் அவர் வைத்தியராகத்தான் வரவேண்டும் என நினைத்தால் எப்படி அவனால் அதை செய்ய முடியும்....??? இயற்கையிலேயே விஞ்ஞானப்பாடம் மண்டக்குள் ஏறாமல் இருந்தால், அவன் படப்போகும் பாடு தான் என்ன...??? விரும்பும் விளையாட்டு ஆசையை படுகுழியில் போட்டு மூடும் கொடுமையை அவனால் சீரணிக்க முடியாமல் பெறோரை வெறுப்பதையோ இல்லை ஒதுங்குவத்தோதானே அவனால் செய்ய முடியும்.... கடைசியில் பரீட்சயில் தோத்துப்போகும் அவனால் எதிர்காலத்தில் என்ன செய்ய முடியும்...??? பின்னர் சூழலின் பிடிக்குள் சிக்கி எதிர்காலத்தை சிதைந்து போக விட்டு விடும் பரிதாபத்தை பெறோரால் தடுத்து நேர் படுத்த முடியாதது அல்லவே...! தங்களின் விருப்பு வெறுப்பை பிள்ளைகள் மீது காட்டும் பெற்றோர் எதை சாதித்து விடுகிறார்கள்... அவர்களை அன்னியபடுத்துவதை விட..???

இளையவர் சூழலால் கெட்டு போய்த்தான் குடும்பதில் ஒட்டுவதில்லை எண்றும் பலர் சொல்லலாம் அது உண்மையா எண்றால், இல்லை எண்றே சொல்ல வேண்டி இருக்கிறது.... ஒருவன் கெட்டுப்போகிறானா...??? அதுக்கும் சரியான கவனிப்பு இல்லாமல் அவனுக்கு உறுதுணையாக எப்போதும் இருக்காத பெற்றோரால்தான் அவன் வீதிக்கு வருகிறான்....

இயந்திர வாழ்க்கை கொண்ட தற்கால உலகில் அன்பாக வளர்ப்பதா...??? ரீவி சீரியலும் பக்கத்துவீட்டு புதினமும் கேட்க்கவே நேரம் போதாத உலகில் பிள்ளைகளின் உணர்வை புரிந்து கொள்ள பெற்றோருக்கு நேரம் இருக்கிறாதா எண்று வேறு ஒரு பட்டிமண்றம் வைக்கலாம் அதில் அவ்வளவு சிக்கல்... ஆகவே அதை இப்போ விட்டு விடலாம்...

குடும்பம் என்பது என்ன...??? கணவன் மனவி பிள்ளைகள்.... இதில் ஒருவர் தவறு செய்யும் போது மற்றயவர் அவருக்கு புரிவது போல பேசி தீர்ப்பதுதானே வளமை.... இதில் தகப்பனால் இல்லை தாயாரால் ஒரு பிள்ளை அளவுக்கு மீறி கண்டிப்பதனால் அவனின் தவறு என்ன எண்று சரியாக புரிய வைக்க படாத்ததால்த்தான் அவன் வஞ்சிக்கப்படுவதாக சிந்திக்கிறான்.... விலகி வெளியிலேயே காலத்தை களிக்கிறான்... சூழலின் பிடிக்குள் சிக்கி சின்னா பின்னமாகிறான்... பெற்று வளர்க்கும் பெற்றோரே இளையவரின் வளர்ச்சிக்கும் தாழ்ச்சிக்கும் காரணமானவர்கள்....

அன்பு செலுத்தினால் மட்டும் பிள்ளைகள் சீரளிந்து குடும்மத்தில் இருந்து விலகுவதில்லையா...??? விலகுகிறார்கள்...!

பட்டினத்தார் பாடிய பாடல் ஒண்று ஞாபகத்தில் வருகிறது..!

துள்ளித்திரியும் காலத்திலே என் துடுக்கடக்கி

பள்ளிக்கு அனுப்பிலன் என் தந்தையாகிய பாதகனே...!

எண்று வருகிறது....

இதைத்தான் நானும் சொல்கிறேன்... விடலைப்பருவத்தில் தீயதை எல்லாம் பிள்ளைகளை தீண்டிவிடாது நல்ல அறிவுரையும் அவரது வளர்ச்சிக்கு உறுதியான படிகளை எடுத்து காட்டாத, பிள்ளைகளில் அக்கறைப்படாத பெற்றோரால்த்தான் பிள்ளைகள் சீரளிந்து பெற்றோரை மதிப்பது கிடையாது... அவர்கள் சொல்வது சரியானது என எண்ண தேண்றுவது கிடையாது....! இதை அனுபவத்தில் கண்டவர் பலர் சொல்ல கேட்டு இருக்கிறோமே..!

ஈழத்தில் நடக்கும் சமூகம் சார்ந்த இனப்பிரச்சினையினால் இடம் பெயர வைத்த சூழல் குடும்ப இடைவெளிக்கு காரணம் எண்று சிலர் சொல்ல முற்படலாம்....

ஆனாலும் அங்கு பிரச்சினைக்கு அடிப்படையாய் தோண்றிய நிலைமைய தடுக்காது சமூக அக்கரையோடு செயற்படாத இளயவரின் பெறோரே அல்லது பெற்றவரின் பெறோரே காரணம் எண்று கூறி வாய்ப்புக்கு நண்றி கூறி வணங்குகிறேன்.... வணக்கம்...!

Posted

"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பெற்றோரே" என உறுதிபட எடுத்துக்கூறிச் சென்றார் "பெற்றோரே" அணித் "தல" தல அவர்கள்.

தனது "தல" யை உருட்டிய எதிரணித் "தல" சாத்திரியின் "தல"ப்புரை வாதத்தை பார்த்து ரசித்ததாக குறிப்பிட்ட "தல" அவர்கள் அவரை தனது அணியினர் கவனித்துக்கொள்ள காத்திருப்பதாகக் கூறி நேரடியாக விடயத்துக்குள் நுழைந்தார். ("பிள்ளைகளே" அணித் தலைவர் சாத்திரி அவர்கள் "பாதுகாப்பு வலயம்" ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது நல்லதோ?)

இளையவர்களை அதாவது பிள்ளைகளை முகம் பார்க்கும் கண்ணாடியெனக் குறிப்பிட்டுள்ளார். கண்ணாடிக்கு முன்னால எதை காண்பிக்கிறீர்களோ அதைத்தான் கண்ணாடி பிரதிபலிக்கும் என்று அழகாக தனது வாதத்தை முன் வைத்தார். கண்ணாடிக்கு முன்னால் முள்ளை வைத்துவிட்டு ரோஜாவை காட்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? அப்படி எதிர்பார்த்தால் அதைப் போல முட்டாள் தனம் இருக்கமுடியுமா? பிள்ளைகளிடம் அன்பைக் காட்டி அன்பைப் பெறவேண்டும் - அரவணைப்பைக் காட்டி அரவணைப்பைப் பெறவேண்டும் என்று பெற்றோரைச் சாடினார். (பார்ப்போம் - தல விரைவில் பெற்றோர் நிலையை அடைந்ததும் எதைக்காட்டி எதைப் பெறுகிறார் என்று :) )

அழகான, அர்த்தமுள்ள பாடல் வரிகளை எடுத்துக்காட்டி பெற்றவரின் வளர்ப்பில் தான் எல்லாம் தங்கியிருக்கிறது என்று தனது அணியின் வாதப்பொருளுக்கு வலுச்சேர்த்தார். அன்பு, அரவணைப்பு என்கிற ஈர்ப்பு சக்தியால் பெற்றோர் தான் பிள்ளைகளை ஈர்த்து வைத்திருக்கவேண்டும். அவர்கள் அந்த ஈர்ப்பு சக்தியை வெளிப்படுத்த தவறும்போது பிள்ளைகள் விலகிப் போகிறார்கள் - இடைவெளி உருவாகிறது - என சிறப்பாக எடுத்து சொன்னார்.

அடுத்ததாக பிள்ளைகளிடம் அன்பு செலுத்துதல் மட்டும் போதாது - அதனோடு புரிந்துணர்வும் இருக்கவேண்டும் என்றார். கால இடைவெளிகள் சிந்தனை வேறுபாட்டை உருவாக்குவது என்பது இயல்பு - அதனை உணர்ந்து பெற்றவர்கள் செயற்படுவதை விடுத்து - பிள்ளைகள் மீது தமது சிந்தனைகளையும், விருப்பங்களையும் திணிக்க வெளிக்கிடும் போது - பெற்றவருக்கும் பிள்ளைகளுக்குமிடையில் பெரிய ஓட்டை விழுகிறது என்பதை தெளிவாக சொன்னார்.

பெற்றோர்கள் தமது ஆசைகளை, தமது கனவுகளை, தமது எண்ணங்களை எல்லாம் பிள்ளைகளூடாக நிறைவேற்றிப் பார்க்க நினைக்கிறார்கள் - முனைகிறார்கள். பிள்ளைகளின் தனித்துவத்தை, அவர்களின் ஆசைகளை மதிக்கத் தவறிவிடுகிறார்கள் - இதனால் பிள்ளைகள் பெற்றவரிடம் இருந்து அன்னியப்படுத்தப்படுகிறார்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நெஞ்சத்தில் எமது சமூதாயத்தின் மீதான கோபத்துடனும்.. அதை சொல்லிட இடம் கிடைத்த மகிழ்வினாலும் என் உள்ளத்து உணர்வுகளை எடுத்துரைக்க வந்தேன். நடுவிருக்கும் நடுவருக்கும் அருகிருக்கும் அன்புத்தோழர்களுக்கும் முன்னிருந்து பார்த்திருக்கும் வாசகர்களுக்கும் என் இனிய வணக்கங்கள்

பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி ஒன்று உருவாகி அது கால வளர்ச்சியில் விரிவடைவதை உணர முடிகிறது. ஆகவே இந்த இடைவெளிக்கு காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா?

காலத்திற்கேற்ற கருத்து மிக்க பட்டி மன்றம் ஒன்றில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்வடைகின்றேன். இன்று வந்த புலத்தில் என்றால் என்ன சொந்த நிலத்தில் என்றால் என்ன பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே மிக பெரியதொரு இடைவெளி ஏற்ப்பட்டுள்ளது. இதற்க்கு காரணம் யார்? ஏன் பிள்ளைகள் பெற்றோர் களிடமிருந்து தூரவிலகியிருக்கின்றனர்? அதற்க்கு பிள்ளைகளுக்கு இடையூறாக இருப்பவை எவை? சற்று ஆழமாக நாங்கள் சிந்திப்போமானால்... பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளாத , சமூகமும், பிள்ளைகள், பெற்றேரர்கள் வாழுகின்ற சூழலுமே காரணம். புகலிடத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் மிக மிக அதிகமான கருத்து வேறுபாடுகள் ஏற்ப்பட்டுள்ளமைக்கு காரணத்தை முதலில் பார்ப்போம். அதற்க்கு பிரதான காரணம் வித்தியாசமான சூழல். நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல். எம் பெற்றோர்கள் வாழ்நத சூழல் முற்று முழுதாக வித்தியாசமான, தமிழ் சமூகத்துடன் ஒன்றித்து போயிந்த சூழல். ஆனால் நாம் வாழும் புகலிடமோ, பல்லின சமூகங்கள் நிறைந்த ஒரு பல் கலாச்சார சூழலாகும். இந்த சூழலில் பெற்றோர் நினைபது போல தமிழ் கலாச்சாரத்தை மட்டும் மனதில் வைத்த வாழ முடியுமா? பெற்றோர் ஒன்றை சொல்லி விட்டு நாம் அங்கு அப்படியா இருந்தோம் அல்லது நாம் படிக்கும் போது அப்படியா செய்தோம் என்று கேட்க்கும் நிலையில் பிள்ளை என்ன செய்ய முடியும்? அந்த காலத்திற்க்கும் அந்த சூழலுக்குமிடையே இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ள இந்த சமூகம் தயாராய் இல்லை. இதனால் பிள்ளைக்கும் பெற்றோருக்குமிடையே என்ன புரிந்துணர்வா வரும்? காலாச்சாரத்தின் படி பிள்ளை வாழ முடியாத சூழலை எமது தமிழ் சமூகம் புரிற்து கொள்ளததால் பெற்றோருக்கும் பிள்ளைக்கு மிடையே வாக்கு வாதமேற்ப்படுகின்றது. அந்த வாக்கு வாதம் முற்றி தாய் நாட்டில் இருப்பதாய் நினைத்து கொண்டிருக்கும் பெற்றவர்கள் பிள்ளையை அடிக்கும் போது பிள்ளையே இந்த நாட்டு சூழலில் வாழ்ந்து பழகியவன் இந்த கட்டுப்பாடுகள், மிரட்டல்கள், பேச்சுக்களை பொறுக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்ப்படுகின்றது. ஆனாலும் இந்த சூழல் மீண்டும் அவனை பெற்றோரும் இணைய விடாமல் செய்கின்றது. பிள்ளையிடம் ஒன்றையும் பிள்ளையைப்பற்றி பெற்றோரிடம் ஒன்றையும் வம்பு மூட்டி விடுகின்றது இந்த சூழல். அடுத்து இந்த சமூதாயம் காதலை எதிரியாயே பார்க்கும் காலம் இன்னும் மாறவில்லை எனலாம். அப்படியான சூழலில் பெற்றோருக்கு பிள்ளையின் காதல் சரியேனப்பட்டாலும் இந்த பாழாய் போன சமூகம் பல கட்டு கதையை கட்டி அவர்களுக்கும் பிள்ளைக்குமிடையே பிரச்சினையை உருவாக்கி விடும். இப்படியான சூழலை உருவாக்குவது யார்? இந்த சூழல் தானே!

இங்கே வாழும் எமக்கு தமிழ் நண்பர்களை விட வேற்று நாட்டு நண்பர்களே அதிகம் எனலாம். அப்படியிருக்கையில் நாம் எமது வழியில் இருக்க முடியாது சிலவற்றில் விட்டு கொடுத்து ஒரு புதிய கலாச்சார சூழலை நாம் ஏற்ப்படுத்த வேண்டும். அதாவது எமது கலாச்சாரங்களை கைவிடாது அதே நேரம் மற்றவர்களது கலாச்சாரங்களில் உள்ள நல்ல வற்றை உள்ளேடுத்து எமது கலாச்சாரத்திலுள்ள தீயவற்றை வெளியே விலத்தி விட்டு மற்றைய சமூகங்களுடன் ஒன்றித்து வாழ நாம் பழக வேண்டும். பிள்ளைகளை பொறுத்த வரை அவர்கள் அப்படி செய்ய முனைகளில் பெற்றோர்கள் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் காட்டி அவர்களது விரும்பங்களுக்கு முழுக்கு போட்டு விடுகின்றனர். இதனால் என்ன நடக்கும்? அத்தோடு மற்றைய நாட்டு நண்பர்களோடு பழகும் போது பிள்ளைகள் அவர்களைப் போலவே வாழப்பழகுவார்கள். ஒரு வெள்ளையினத்து இளைஞன் சொன்னான் " நீ எதுக்கு வேலைக்கு போறாய், அதையேன் உன் பெற்றோரிட்ட கொடுக்கிறாய்" என்று கேட்டான் அதே போல ஒரு விருந்துபசாரத்துக்கு அழைத்தான் அதற்க்கு நான் சொன்னேன் " அப்பா அம்மாட்டை கேக்கனும் என்று" அதுக்கு அவன் சிரித்தான். இப்படி நாம் வாழும் சூழல் எம்மை மாற்றும் போது பெற்றோருடுன் நாம் ஒன்றாக குதூகலிக்கவா தோன்றும்?

பக்கத்து விட்டில் இருப்பவனை யார் என்று தெரியாமல் வாழும் இந்த புகலிட வரழ்வில் ஒற்றுமையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் எப்படி வரும்! எம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் நின்று பேச நிமிடங்கள் இன்றி உழைத்து கொண்டிருக்கும் இந்த சூழலில் என்ன நடக்கும்? மற்றவனை போலவே வாழ வேண்டும் மற்றவனை போலவே இவனும் வைத்தியராக வேண்டும் என்று தங்கள் ஆசைகளை பிள்ளைகள் மீது பெற்றோர் திணிப்பதற்க்கும், அந்த மாணவன் போல் உடையணிய வேண்டும், அவன் படிக்கும் பாடமெல்லாம் படிக்க வேண்டும் என் பெற்றோரை ஆக்கினை படுத்தும் பிள்ளைகளை உருவாக்கியது யார்? இந்த சமூதாயம் தானே! இந்த சூழல் தானே! உலக மயமாக்கலில் எல்லாம் இயந்திர மயமாக இருக்கும் போது, பிள்ளை கதைப்பதற்க்கும் இயந்திரமான கணனியே நட்பாகின்ற காலத்தில் பிள்ளைகள் மனதில் என்ன தோன்றும். இந்த உலக மயமாதலால் குடும்பங்களில் பிள்ளைக்கும் பெற்றோருக்கும் எப்படி சண்டை வருகின்றது என்று கேட்க்கும் பலர் அச்சண்டைகளுக்கு என்ன காரணம் என்றால் வாய் மூடி மெளனிகளாக இருக்கின்றனர். இந்த உலக மயமாக்கல் அனைவரையும் ஒரு பரபரப்பான சூழலில் வைத்துள்ளது. யாரே சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகின்றது. சூரிய ஒளியில் பிள்ளையின் முகம் பார்த்து காலங்கள் போய் மின்னொளியிலே பிள்ளையின் முகம் பார்க்கும் காலத்தில் நாம் வாழுகின்றோம்" இதலிருந்து நாம் என்ன அறிய முடிகின்றது? பிள்ளைகளை இரவிலே தான் பெற்றோர் சந்திக்கின்றனர் மற்ற நேரமெல்லாம் உழைப்பின் நிமிர்தம் அவர்கள் வீட்டுக்கு வெளியிலே நிற்க்கின்றனர். இது எதனால் இந்த உலக மயமாக்கலால் தான். இப்படியே ஏற்ப்படும் இடைவெளி எங்கே முடிகிறது கூட்டுக்குடும்பத்திலா?

 அடுத்து நாம் யுத்த சூழலை நாம் எடுத்து கொண்டால் இவற்றால் பாதப்படைந்தது தாயகத்தில் இருக்கும் எங்கள் சமூதாயமே! தினம் தினம் யுத்தத்தினால் இடம் பெயர்வுகளாலும், உயிர் இழப்புக்களாலும் வறுமையாலும் வாடிய பிள்ளைகளது தேவைகளை பெற்றோர் நிறைவேற்ற முடியாமல் போனதற்க்கு எது காரணம்? அதனால் ஏற்ப்பட்ட பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலான நீண்ட இடைவெளி யாரால் ஏற்ப்பட்டது? இந்த யுத்த சூழலால் பிள்ளைகள் உயிரை காக்க பிறருடன் பிள்ளைகளை அனுப்பி விட்டு தனித்திருந்த பெற்றோருக்குமிடையே பிணக்கினை மூட்டியது யார்? இன்றை ய காலத்தில் பெற்றோர் பிள்ளைகளிடையே முரண்பாடு வருவதற்க்கு முக்கிய காரணங்கள் என்ன? காதல், கல்வி, அளவுக்கதிகமான கட்டுப்பாடு, எதை செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் தன்மை. இவை அனைத்துக்கும் காரணம் சூழல் இந்த சூழலுக்குள் இருப்பது வேறு எதுவுமல்ல எம்மை சுற்றி தினம் தினம் இருப்பவையே. காதலலால் எப்படி இடைவெளி வருகிறது என்று பார்த்தால், காதல் என்பது இரு உள்ளங்களுக்கிடையே உள்ள உணர்வுகளின் சங்கமம் என்பார்கள். ஆனால் இந்த சமூகம் இந்த காதலர்கள் அதாவது பிள்ளைகளை வாழ விட்டதா? பள்ளியில் ஒன்றாக பழகினால், மாலை பிள்ளையின் வீட்டில் பத்தி வைப்தற்கேன்று ஒரு கூட்டமே இருக்கின்றது. ஆனால் அந்த பிள்ளை தனது காதலைப்பற்றி பெற்றோரிடம் சொல்ல முடியாமல் மனதுக்குள் அடக்கி வைக்கவும் இந்த சமூகமே காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். இப்படி இவர்கள் பெற்றோரிடம் சொல்லும் போது பெற்றோருக்கு பிள்ளைகள் மிது நேசமா உருவாகும்? அதை விட இன்னோன்று பத்து பேர் கொண்ட குழுவில் இரு மாணவர்கள் புகை பிடித்தால் இந்த அதை பார்த்தவர்கள் என்ன சொல்லுவார்கள், அதில் நின்ற பத்து பேரும் புகை பிடிப்பதாய் பத்து பேரின் வீட்டிலும் அதற்க்கு மேலாய் ஊர் எல்லாம் சொல்லி திரிவார்கள். இதை கேட்ட பெற்றோருக்கு பிள்ளை மேல் அன்பா வரும்? குற்றம் செய்யாமல் தண்டனை கிடைக்கும் போது பெற்றோர் மீது பிள்ளைக்கு பாச பிணைப்பா வரும்?

இந்த சமூகத்துக்கு பயந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளை விதிக்க முற்ப்படுகின்றனர். எந்த இளைஞனுக்கு தான் கட்டுப்பாடுகளுக்குள் வாழ பிடிக்கும்? எனவே இங்கே உரசல்கள் ஏற்ப்படுகின்றது. இந்த உரசல்களால், அவன் எதை செய்தாலும் குற்றம் கண்டு பிடிக்கும் இந்த சமூதாயம், இதனால் பிள்ளை மீது வெறுப்பு ஏற்படுகின்றது. இது எதனால்? இந்த சமூதாயத்தின் தவறான கண்னோட்டத்தால் தானே? பிரச்சினைகள் எங்கள் சமூதாயத்தின் மீது இருக்கும் போது பிள்ளைகள் மீதும் பெற்றோர் மீதும் வீணாக பழியை போடுவத மடமை என்பதை எதிரணியினர் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை விடுத்து சும்மா வீம்புக்கு கதைப்பதில் அர்த்தமில்லை.அடுத்து நாம் பிள்ளை பராமரிப்பு நிலையங்களை பரர்ப்போமானால், இங்கே என்ன பழக்க வழக்கங்கள் உருவாகின்றது? வீட்டிலே ஒரு காலாச்சாரத்தை பழகும் பிள்ளை அங்கு ஒரு பல் கலாச்சார சூழலில் எதை பழகும். இங்கு குழந்தைகள் வீட்டிலிருப்பதை விட பராமரிப்பு நிலையங்களில் தான் அதிகம் வளர்கின்றன. இந்த பரமரிப்பு நிலையம் என்கின்ற சூழல் பிள்ளைகளை பெற்றோரிடமிருந்து அன்னியப்படுத்தவே பயன் படுகின்றது. இந்த அன்னிய படுத்தலானது பிள்ளை வளரும் காலத்தில் பெரிய விரிசல்களாக மாறி மிக் பெரும் ஈடு செய்ய முடியாத இடைவெளியை ஏற்ப்படுத்துகின்றது என்றால் அது மிகையாகாது. அதை விட பாடசாலையில் ஆசிரியர்களால் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றார்

  • 2 weeks later...
Posted

"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் சூழலே" என உறுதிபட எடுத்துக்கூறிச் சென்றார் "சூழலே" அணித்தலைவர் நிதர்சன் அவர்கள்.

சமூகத்தின் மீது கோபம் கொண்ட இளவயதினனாக தனது உணர்வுகளை கொட்டித் தீர்த்தார். புகலிடத்து மண்ணாக இருந்தாலென்ன, தாய்நிலத்து மண்ணாக இருந்தாலென்ன - பிள்ளைகளை சரியாக புரிந்துகொள்ளத் தவறுகிற சமூகத்தால் அதாவது சூழலால் தான் இடைவெளிகள் அதிகமாகிறது என்று சொல்லிச் சென்றார். குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகிற எமது தமிழ்ச் சமூகத்தில் பெற்றோர் - பிள்ளை முரண்பாடுகளும், அதனால் உருவாகிற இடைவெளிகளும் எதனால் என்று கேள்வி எழுப்பினார். அவரே அதற்கு அருமையாகப் பதிலும் சொன்னார். மாறுபட்ட புகலிடச் சூழல் தான் ஏற்கனவே இயல்பாக இருக்கிற இடைவெளியை இன்னும் பெரிதுபடுத்துகிறது என்றார். பல்லின சமூகங்களும், பல் கலாச்சாரங்களும் இணைந்த சூழலோடு முரண்பட்டு நிற்கிறது தமிழ்ச் சமூகச் சூழல். இந்த முரண்பாட்டுக்குள் சிக்கித் தவிக்கிறார்கள் பெற்றோர்களும் பிள்ளைகளும் என்று சிறப்பாக தனது வாதத்தை முன்மொழிந்தார். அதற்கு பல உதாரணங்களையும் சுட்டிக் காட்டினார்.

பக்கத்து வீட்டில் வசிப்பவர் யார் என்று அறியாத சூழல், எம்மைச் சுற்றி நடப்பதை அறியமுடியாமல் துரத்துகிற பொருளாதார சிக்கல், அடுத்தவன் போலவே வாழ விரும்புகிற மனோநிலை, இயந்திர மயமாதல், உலக மயமாதல் போன்ற சூழற்காரணிகளை அடுக்கிக் கொண்டே போனார். மிக அழகாக ஒன்றைச் சொன்னார்: "சூரிய ஒளியில் பிள்ளையின் முகம் பார்த்த காலங்கள் போய், மின்னொளியிலே பிள்ளையின் முகம் பார்க்கும் காலத்தில் நாம் வாழுகின்றோம்". மனித உணர்வுகள் எங்கே போயின? அன்பு பாசம் எங்கே போயின? கொஞ்சி மகிழ்தல், கூடி வாழ்தல் எங்கே போயின? இவையெல்லாம் எல்லாமல் புரிதல் எங்கிருந்து வரும்? புரிதல் இல்லாமல் நெருக்கம் எங்கிருந்து வரும்? நெருக்கமில்லாவிடில் இடையில் வெளிதானே தோன்றும்? இந்த நிலையைத் தோற்றுவித்தது என்ன? சூழல்தானே என்கிறார். (--> "இந்த சூழலை உருவாக்கியவர்கள் யார்?" என்று மற்ற இரு அணியினரும் கூட்டணி போட்டு தாக்கப்போகிறார்கள். கவனம்.)

அடுத்து, யுத்த சூழல் பற்றி குறிப்பிட்டார். யுத்த சூழல் தந்த வடுக்களையும் - அவற்றினால் சமூகத் தளத்தில் ஏற்பட்டிருக்கிற முரண்பாடுகளையும் - அவை குடும்பங்களுள் விளைவித்திருக்கிற இடைவெளிகளையும் குறிப்பிட்டார்.

பெற்றோர்-பிள்ளைகள்-முரண்பாட்டிற்கு காரணம் (அல்லது முரண்பாடு தொடங்குகிற இடம்): காதல், கல்வி, (அளவுக்கதிகமான) கட்டுப்பாடு, குறைகூறல் என வரிசைப்படுத்துகிறார். இவற்றுக்கு காரணம் சூழல் என்றும் குறிப்பிட்ட அவர், சூழல் என்பது தினம் தினம் எம்மை சுற்றி நிகழ்பவையை மையமாகக் கொண்டதே என்றும் குறிப்பிடுகிறார். குழுவாக இருக்கிற இளைஞர் கூட்டத்துள் ஒருவன் புகைப்பிடித்தால் ஒட்டுமொத்தமாய் குறைகூறி குடும்பங்கள் மத்தியில் இடைவெளியை உருவாக்குவது யார்? இந்த பாழாய்ப்போன சமூகம் தான் என்கிறார். (--> உண்மையா? சமூகம் குறைகூறுகிறது என்றால், பெற்றோர் பிள்ளைகளிடையே உண்மையான புரிதல் இருந்தால் ஏன் சமூகத்தைப் பொருட்படுத்துகிறார்கள் என்கிற கேள்வியை எழுப்பக் காத்திருப்பார்கள் மற்றைய அணியினர்.).

சூழலுக்கு அல்லது சமூகத்துக்கு பயந்த பெற்றோர் தமது பிள்ளைகள் மீது அளவுக்கதிகமாக அழுத்தங்களை பிரயோகிக்கிறார்கள். அழுத்தங்கள் அதிகமாக அதிகமாக பிள்ளைகள் குமுறி வெடிக்கிறார்கள். இந்த வெடிப்பு பெற்றோர் பிள்ளைகள் இடையே இடைவெளியாக உருவெடுக்கிறது என்று அழுத்தமாக சொல்லிச் சென்றார்.

இன்னொன்றையும் இறுதியாக ஆனால் உறுதியாகச் சொன்னார். "நீ உன்னை முதல் திருத்து, உலகம் தன்னால் திருந்தும்", "சூழலை குற்றம் சாட்டி நீ தப்பித்துக்கொள்ளாதே" என்றெல்லாம் எதிரணியினர் சொல்லலாம் - ஆனால், நானும் (இளைஞர்களும்) பெற்றோர்களும் திருந்துவதற்கு (இடைவெளிகளைக் குறைப்பதற்கு) தகுந்த சூழலை இந்த சூழல் (சமூகம்) உருவாக்கித் தந்தால் தான் தனிமனிதனாக நாம் திருந்த முடியும் என்றார். சேற்றுக்குள் இருந்துகொண்டு சேறுபடாமல் இருக்கச் சொன்னால் எப்படி முடியும்?

இப்படியாக, தனது எண்ணங்களை தனது அணிசார்பாக முன்வைத்துச்சென்றார். பெற்றோர்களையும், பிள்ளைகளையும் பிரிக்கிற சூழலை கடுமையாகச் சாடிச்சென்றார்.

சரி அணித்தலைவர்கள் எல்லாம் தமது கருத்துக்களை முன்வைத்துவிட்டார்கள். இனி அடுத்ததாக "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் பிள்ளைகளே" என்று வாதாட வந்திருக்கும் "ரமா" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம். பிள்ளைகளைக் கிள்ள வாருங்கள் ரமா... :lol:

Posted

இந்த பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்த ரசிகைக்கும், நீதியான தீர்ப்பை வழங்க எமது கருத்துக்களை கணக்கு பார்த்துக்கொண்டிருக்கும் நடுவர் அவர்கட்கும், மற்றும் எமதணி, எதிரணி நண்பர்களுக்கும், இப்பட்டிமன்றத்தை ரசித்துக்கொண்டு... எமக்கு ஊக்கம் அளித்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி ஒன்று உருவாகி அது கால வளர்ச்சியில் விரிவடைவதை உணர முடிகிறது. ஆகவே இந்த இடைவெளிக்கு காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா? என்ற தலைப்பில் இடைவெளி உருவாவதற்கு காரணம் பிள்ளைகளே என்று வாதிட வந்திருக்கிறேன்.. இதனூடாக " பிள்ளைகள் தமது சுயநலங்களுக்காக வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை அவர்களுக்கு உதவ வேண்டிய நேரத்தில் விலகிசெல்வதும், அதற்காக அவர்கள் கூறும் விளக்கங்கள்" பற்றிய தவறான விடயங்களை சுட்டிக்காட்ட எனக்கு வாய்ப்பு ஒன்று கிடைத்தமைக்காக மகிழ்ச்சி அடைக்கிறேன்.

எனது கருத்தை கூறும் அதே நேரத்தில், எதிரணியினரின் சில பிழையான கருத்துக்களையும் சுட்டிக்காட்டி அதன் மேலே எனது சரியான கருத்தை வைக்கலாம் என்று நினைக்கிறேன். பிள்ளைகள் சுயநல தேவைகளுக்காக பலகாரணங்களை கூறி பெற்றோரின் மீது பிழையை போட்டு விட்டு விலகிவிடுகின்றனர், தமது பிழையை மறைப்பதற்கு, தமது குற்ற உணர்வை குறைத்துக்கொளுவதற்கு, மற்றவர்களிடத்தில் தமது அனுதாபத்தை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் கூறும் காரணங்களை தான் எதிரணியினரும் கூறியிருக்கிறார்கள். நிதர்சன் ஒரு உதாரணம் சொன்னார்... வருவாயை பெற்றோரிடம் கொடுத்தல்... அப்புறம் விருந்துபசாரத்துக்கு செல்வதற்கு பெற்றோரை கேட்க வேண்டும் என்று கூறுவதின் மூலம் சமுதாயத்தின் மீது பழியை போட்டு விட்டு தனது குற்ற உணர்வை குறைக்க முற்பட்டிருக்கிறார்.

ஆனால் நான் கூறுகிறேன்.. வெள்ளையின பெற்றோர் போலவா எமது பெற்றோர் எம்மை வளர்த்தார்கள்?? ஒரு வெள்ளையின பிள்ளையின் பேட்டி பார்த்தேன். புதுவருடத்தில் உனது ஆசை என்ன?? பதில் கூறியது அந்த பிள்ளை. இந்த வருடத்திலாவது எனது அம்மா அப்பா வேளைக்கு எழும்ப வேண்டும். என்னை கவனிக்கவேண்டும். இப்படியா எமது பெற்றோர் எம்மை பராமரித்தார்கள். அப்படியான எமது பெற்றோருக்கு அவர்கள் செய்ததை திருப்பி காட்ட வேண்டுமா?? அல்லது வெள்ளையின நண்பன் காசை கொடுக்காதே என்று கூறினால் அதை கேட்டு நம் பெற்றோரை வெறுக்க வேண்டுமா?? காசை கொடுக்க கூடாதா?

அத்துடன் நிதர்சனின் சமுதாய கருத்தை மறுப்பதுக்கு நான் ஒன்று கூறுகிறேன். புலம் பெயர்நாடுகளில் மட்டுமா பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி வருகின்றது?? எமது தாய்நாட்டில் இடைவெளி வரவில்லையா?? புலம்பெயர் நாடுகளை மையமாக வைத்து நீங்கள் கூறிய 2..3 காரணங்கள் இல்லாதபோதும் தாயகத்திலும் இடைவெளி இருக்கத்தானே செய்கிறது. அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்??

சமுதாயத்துக்கு வலுச்சேர்க்க நிதர்சன் இன்னொரு கருத்தை சொன்னார். சமுதாயம் பெற்றோரிடம் பத்திவைக்கிறது என்று. நிட்சயமாக பெற்றோரிடம் சென்று நேரடியாக உங்கள் பிள்ளை செய்கிறது என்று சொல்ல கூடியவர் இன்னும் ஒரு பெற்றோராகத்தான் இருப்பார். அதுவும் பத்திவைப்பதற்காக அவர் சொல்ல மாட்டார். அந்த பிள்ளையை நெறிப்படுத்த வேண்டும் என்ற நல்நோக்கிலேயே அவர் சொல்லுவார் என்பது என் கருத்து. ஆனால் பிள்ளைகள் அதை பத்திவைப்பதாக எடுத்துக்கொண்டு பெற்றோர்களிடம் சண்டை போடுகிறார்கள். சரி இப்போது பிள்ளைகளை தான் போன போக்கில் விட்டு விட்டால்... பிள்ளைகள் பெற்றோரை விட்டு விலக மாட்டார்களா?? பெற்றோர் மீது பிழை சொல்லமாட்டார்களா?? அதுவுமில்லை. புலர்பெயர் நாடுகளில் வாழும் இளைஞர்கள் பலர் பெற்றோர்களிடத்திலிருந்து விலகி.. பலவிதமான குற்ற செயல்களை செய்து விட்டு பெற்றோரின் முகங்களின் முகத்திலேயே முழிக்கமுடியாத அளவுக்கு ஒழிந்துவாழ்கிறார்கள். ஆனால் பெற்றோர் அந்த வேளையில் கூட பிள்ளைகளை அரவணைத்து, காவல்துறையினரின் உதவியுடன் பிள்ளைகளை மீண்டும் ஒரு வளமான வாழ்வை கொடுக்க முற்படுகிறார்கள். அதை நாம் அன்றாடம் புலம் பெயர்நாடுகளில் காண்கிறோம். இவ்வேளையில் பைபிளில் இடம்பெறும் ஒரு கதை அனைவருக்கும் நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன். வீட்டில் இருக்கும் தனது மகனைவிட விலகிசென்ற மகன் திரும்பிவானா என்று ஒரு தந்தை ஏங்குவது போல அக்கதையில் வருகின்றது. ஆகவே பெற்றோர் பிள்ளைகள் விலகிச்செல்வதற்கு காரணமாக அமைவதில்லை.

எதிரணி நண்பர் தலா கூறிய கருத்துக்கள் அனேகமாக பெற்றோர்கள் அன்பு செய்யவில்லை, பிள்ளைகளை நல்வழிப்படுத்தவில்லை. அதனால் தான் பிள்ளைகள் பெற்றோர்களை வெறுக்கிறார்கள், விலகிச்செல்கிறார்கள் என்று கூறினார். ஒரு சம்பவத்தை கூறி எனது கருத்துக்கு வலுச்சேர்க்க நினைக்கிறென்.. சிறிது காலத்துக்கு முன்பு களத்தில் ஒரு கவிதையை உறவுகள் பார்த்திருக்கலாம். விலகிப்போகும் பிள்ளையை நினைத்து கவலையில் எழுதிய கவிதை அது. புலம் பெயர்நாடுகளில் உள்ள ஒவ்வொரு பெற்றோரது ஏக்கம் கவலையை பிரதிபலிக்க கூடியதாய்... ஒரு பெத்தமனம் எழுதிய கவிதை இது. இது தான் யதார்த்ததில் நடைபெறுகிறது. இவ்வாறு பெற்றோர் எபோதும் பிள்ளைகளின் நன்மைக்காகவே செயற்படுகின்ற போதிலும்.... முதுமையடைந்த பெற்றோருக்கு உதவி செய்யவிரும்பாத பிள்ளைகள், தமது ஆசைகளை நிறைவேற்றுக்கொள்வதற்காக சுயநலமாக செயல்படும் பிள்ளைகள், பெற்றோரின் மீதும் சமுதாயத்தின் மீதும் பிழைகளை போட்டு விட்டு தப்பித்து கொள்ள முற்படுகிறார்கள். என்று கூறி.. இப்பட்டி மன்றத்தைப் பார்த்து இனியாவது பிள்ளைகள் சரியாக நடப்பதற்கு வழிசமைக்கும்படி ஒரு தீர்ப்பை நடுவரவர்கள் வழங்குவார் என்ற எதிர்பார்ப்போடு விடைபெறுக்கிறேன். நன்றி வணக்கம்.

இன்னுமொன்றை கூறுகிறேன் நடுவரவர்களே.... எதிரணியினதின் பிழையான கருத்தை சுட்டிக்காட்டி அவர்களின் கருத்தை வெட்டுவதும், எமதணிக்காக ஒரு கருத்தைக் கூறி எமதணிக்கு ஒரு கருத்தை சேர்ப்பதும் ஒன்று தான். சில வேளையில் கருத்துக்களை சரியாக வாசிக்காத சிலபேர் எங்கே உங்கள் கருத்தை காணவில்லை என்று கேட்க முற்படுகிறார்கள். அதற்காகத்தான் சொன்னேன்.

நன்றி வணக்கம்.

Posted

"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பிள்ளைகளே" என தனது அணியின் வழிநின்று தனது கருத்துக்களை இடித்துரைத்தார் ரமா அவர்கள்.

பிள்ளைகள் தம்முடைய சுயநலத் தேவைகளுக்காக தம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டு விலகுவதும், அதற்கு போலித்தனமான காரணங்களைக் கூறுவதும், தமது பிழைகளை மறைத்து பெற்றோர் மீதும், சமூகம் மீதும் பழி சுமத்துவதும் நாளாந்தம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது என்று தனது மையக் கருத்தை முன்வைத்தார்.

மற்றவர்களிடம் அனுதாபங்களைப் பெறுவதற்காகவே தம்மை பாவப்படவர்களாக மற்றைய அணியினர் காட்டிக்கொள்கிறார்கள் என்று கருத்துரைத்தார். ஏனைய மேலைத்தேய சமூகத்து பெற்றோர் போல் எமது பெற்றோர் எம்மை வளர்த்தார்களா என்று கேள்வி எழுப்புகிறார். எமது பெற்றோர்கள் எம்மை அன்போடு பராமரிக்கிறார்கள் என்றார். (நமது) பெற்றோருக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார். அந்தப் பெற்றோர்க்கு நாம் என்ன செய்கிறோம் - மற்றவர் பேச்சைக் கேட்டு எமது பெற்றோரை நாம் வெறுக்கவேண்டுமா - என்று கேள்விகளை அடுக்கினார்.

புலம்பெயர் நாட்டில் மட்டுமா பெற்றோர்-பிள்ளை-இடைவெளி இருக்கிறது, தாயகத்திலும் இருக்கிறதே - நிதர்சன் சமூகத்தின் மீது சுமத்திய பழிகள் அங்கு பொருந்துமா? - என்று நிதர்சனிடம் தனது கேள்வியினை முன்வைக்கிறார்.

சமூகத்தின் மீது நிதர்சன் "பெற்றோரிடம் சமூகம் பத்தி வைக்கிறது என்கிற கருத்தை"முன்வைத்த குற்றச்சாட்டை ரமா மறுதலிக்கிறார்: பெற்றோரிடம் பிள்ளைபற்றி கூறுவது பத்திவைப்பதற்காக இல்லை - பிள்ளைகளை திருத்தி நல்வழிப்படுத்துவதற்காகவே - ஆனால் பிள்ளைகள் அதைத் தவறாக புரிந்துகொண்டு பெற்றோருடன் முரண்படுகிறார்கள் என்கிறார். (--> உண்மைதானோ. நல்லதைச் சொன்னால் யார் கேட்கிறார்கள். ஏதோ தங்களைக் கொலை செய்வதாகவே எண்ணுகிறார்கள்.)

பிழைவிடும் பிள்ளைகளையும், விலகிச்செல்கிற பிள்ளைகளையும் அரவணைத்து, அன்புசெலுத்தி பிள்ளைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கை வகிக்கிறார்கள் பெற்றோர்கள் - அப்படிப்பட்ட பெற்றோரை குறைகூறலாமா என்கிறார். தனது கருத்துக்கு வலுச்சேர்க்க "பைபிளில்" இருந்து உதாரணம் கூறுகிறார்.

இப்படியாக பெற்றோரை உயர்த்தி - பிள்ளைகளின் பெற்றோர் மீதான புரிதலின்மையைக் கண்டித்து - பிள்ளைகளைக் கிள்ளி விடைபெற்றார்.

இனி அடுத்ததாக "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் பெற்றோர்களே" என்று வாதாட வந்திருக்கும் "சுஜீந்தன்" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம். தொட்டிலை ஆட்ட வாருங்கள் சுஜீந்தன்...

Posted

இந்தப் பட்டிமன்றத்தை ஒழுங்கு செய்து எனக்கு வாதாட வாய்ப்பழித்த ரசிகை அக்காவுக்கும் நடுவர் பங்கை செவ்வனே ஆற்றிக்கொண்டிருக்கும் இளைஞன் அண்ணாவுக்கும் உண்மை எதுவென்று தெரிந்தும் பொய்ச்செடிக்கு உரம் போட்டுக்கொண்டிருக்கும் எதிரணி வாதிகளுக்கும் இவர்களின் அறியாமை என்னும் இருளை அகற்றி அறிவு புகட்ட வந்திருக்கும் என் அருமைத் தோழர்களுக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இங்கு வாதாட வந்திருப்பது புலம்பெயர் நாடுகளில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே விரிவடைந்து வரும் இடைவெளிக்கு காரணம் பெற்றோர்களே என்று வாதிடுவதற்காகும்.

ஒரு குழந்தை பிறந்து 5 வயது வரும் வரை அந்தக் குழந்தையின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் பெற்றோரே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒரு குழந்தை என்ன மொழி பேச வேண்டும் என்ன வகையான் உணவுகளை உண்ண வேண்டும் அதன் நடை உடை பாவனை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பெற்றோரே தீரிமானிக்கின்றனர். சூழல் என்ற ஒன்று குழந்தையின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துவது அதற்கு பிறகுதான். அடித்தளம் ஆணித்தரமாக இருந்தால் கட்டிடம் பலமாக இருக்கும். புயலையும் எதிர்த்து நிற்கும். அதுபோலவே அந்த 5 வயது வாழ்கையில் பெற்றோர் சரியான அடித்தளம் இட்டால் அதன்பின் வரும் சூழலால் குழந்தையை அசைக்க முடியாது. இதனை அறிந்துதான் நம்மினத்தவர்கள் ஒரு பிள்ளையின் குறைகளையும் நிறைகளையும் பெற்றோருக்கே சமர்ப்பிக்கின்றனர். எடுத்துக்காட்டாக " கந்தையாவின் பொடியன் சின்னராசாவின் பொட்டையோடு ஒடிப்போட்டான் " அல்லது " கனகலிங்கத்தின் பொடியன் இப்ப இஞ்சினியராம். அந்தக் காலத்தில கனகலிங்கம் டபுள் அடிச்சு எப்படியோ தன் மகனைப் படிப்பிச்சுப்போட்டுது. " என்று கூறுவார்களே தவிர பிள்ளைகளின் பெயர் சொல்லி அழைப்பது மிகவும் குறைவு. ஆகவே சூழல்தான் பெற்றோர் பிள்ளைகளுக்கான விரிவுக்கு காரணம் என்ற நிதர்சனின் சுத்துமாத்து இங்கு பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. இதுவரை சூழல் எவ்வாறு இடைவெளிக்கு காரணம் இல்லை என்று ஆராய்ந்;தோம். இனி பெற்றோர்கள் எவ்வாறெல்லாம் இந்த இடைவெளிக்கு காரணம் என்று விரிவாகப் பார்ப்போம்.

கனடா போன்ற புலம் பெயர் நாடுகளில் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலை அல்லது பல்கலைக்கழகம் அனுப்பும் போது சொல்லிவிடுவது இதுதான்: " அப்பு! நீ இசுகூலில தமிழ் ஆக்களோட சேராதே. எல்லாரும் சுத்துமாத்துக்காரன்கள். வெள்ளைக்காரப் பொடியன்களோட சினேகிதம் வைச்சுக்கொள் அப்பதான் இங்கிலீசு கெதியாப் படிக்கலாம்." இப்படிச்சொன்னா பொடியன் என்ன செய்வான். அவன் அவர்களுடன் பழகும்போது அவர்களின் நடை உடை பாவனை தனிமனிதச்சுதந்திரம் போன்றவற்றை பின்பற்றத் தொடங்குவான். தனது அலுவல்களில் பெற்றோர் தலையிடக்கூடாது என்ற எண்ணம் தோன்றும.; பெற்றோரின் சொல்லைக்கேளாமல் நீள்காற்சட்டையை பி~;டபாகத்திற்கு கீழ் போட்டு நடப்பான். திருநீறு இருக்கவேண்டிய இடத்தில் பன்டானாவின் ஆட்சி நிகழும். கடைசில ஒரு வெள்ளைக்கார பொட்டையோட வந்து நிற்பான். அப்பதான் பெற்றோர்களுக்கு உறைக்கும். ஆனால் அப்பொழுதும் தாங்கள் விட்ட தவறை மறைத்து " கூட்டுச் சரியில்லை. அதுதான் பிள்ளை இப்படி மாறிப்போட்டான்" என்பார்கள். ஆனால் இதற்கு உண்மையான காரணம் யார்? பெற்றோர்களே. பெற்றோர்கள் முதலிலேயே சரியான அறிவுரையை கொடுத்திருந்தால் அந்தப் பிள்ளைக்கு தனிமனித சுதந்திரம் என்ற எண்ணம் தோன்றாமல் குடும்பம் என்ற உணர்வு உதித்திருக்கும்.

அடுத்ததாக இங்கு வாழும் பெற்றோருக்கு மற்றவர்கள் போல் வசதியாக வாழ வேண்டும் என்ற பேராசை. அந்நாட்டிலே பிறந்து அந்நாட்டிலேயே வளரும் குடும்பங்கள் பெரிய வீடுவைத்திருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இன்னும் விமானத்தில் ஏறிய பிரமிப்பில் இருந்து மீளாதவர்களுக்கும் 5 அறையுள்ள மனை பென்சு மகிழுந்து போன்றவற்றை வாங்கவேண்டும் என்ற பேரவா. இந்;த ஆசையை நிறைவேற்றும் முகமாக தாயும் தந்தையும் மாறி மாறி இரண்டு வேலை செய்து விட்டு அலுப்பில் படுத்துவிடுவார்கள். இதனால் அவர்களின் பிள்ளை அவர்களிடமிருந்து தூர இருப்பதுபோல் உணருகின்றது. தனது பெற்றோரைவிட தனது நண்பர்களிடம் நெருக்கமாக இருப்பதை உணருகின்றது. இதனால் தன் நண்பர்கள் சொல்வதையே செய்கின்றது. இறுதியில குழுச்சண்டைகளில ஈடுபட்டு தன் வாழ்க்கையை சிறுவயதிலேயே தொலைக்கின்றது. இவ்வாறே பிறந்த குழந்தைகளையும் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் சேர்த்துவிட்டு பெற்றோர் வேலை செய்கின்றனர். பெற்றோர்களின் அரவணைப்பில் வாழாத குழந்தை பெற்றோர்களிடமிருந்து விலகி வேறு உறவுகளைத் தேடிக்கொள்கின்றது. இதற்கெல்லாம் முழுமுதற்காரணம் யார்? பெற்றோர் என்பது தெளிவு. இவர்களின் நடவடிக்கை எல்லாம் கார் திறப்பை தேடப்போய் காரையே தொலைத்த போல்தான் உள்ளது. இவர்கள் சாதாரண( ஆடம்பரம் இல்லாத) வாழ்க்கை வாழ்ந்திருந்தால் இவை எல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை.

இன்னுமொன்று கூறுகின்றேன் கவனமாகக் கேளுங்கள். ஒருநாள் நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு தாயும் சிறுபிள்ளையும் ஒரு தரிப்பிடத்தில் ஏறினார்கள். அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் போது ஒட்டுக்கேட்டதில் இருந்து சில பகுதிகளைக் கூறலாம் என்று நினைக்கின்றேன். அந்தப் பிள்ளை கூறியது “ அம்மா என்ட இசுகூலுல இரண்டு பேர் தமிழ் கிளாசுக்கு போறவை. நானும் போகட்டே.” அதற்கு அம்மா கூறுகின்றார் “ தமிழ் படிச்சு என்னத்தை இப்ப கிழிக்கப்போறாய். பிரஞசு படிச்சாலாவது ஏதாவது வேலை எடுக்கலாம்.” இது எவ்வாறு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்துகின்றது என்று சிலர் கேட்கலாம். கொஞ்சம் பொறுங்கள் கூறுகின்றேன். தமிழ் இப்பொழுது வேண்டாதது ஒன்று என்று கூறி தாய்மொழியை அந்தப் பிள்ளையிடமிருந்து தாய் அந்நியப்படுத்துகின்றாள். இதையே சிறிது காலத்தில் தாயால் ஒரு பயனும் இல்லை என்று கூறி தாயை கொண்டுசென்று முதியோர் இல்லத்தில் அந்தப் பிள்ளை சேர்க்கும். கடைசியில் தங்கள் இரக்கமான நிலைக்கு தாங்களே காரணமாகின்றார்கள். தமிழில் உள்ள கௌசிகர் கதையைக் கூறி வளர்த்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?

அடுத்து ஒருபிள்ளை தான் 94 புள்ளிகள் எடுத்துவிட்டதை சந்தோசத்துடன் வந்து தாயிடம் சொல்கின்றான். அதற்கு தாய் சொல்கின்றாள் "மிகுதி ஆறு புள்ளிகள் எங்கே?" இது அந்தப் பிள்ளைக்கு எவ்வளவு வேதனை தரும் விடயம். பெற்றோரும் பிள்ளைகளின் பாடங்களைப்பற்றி கேட்டு பிள்ளைகளிடன் அக்கறை இருப்பதைக் காட்டிக்கொண்டால்தானே அந்தப் பிள்ளையும் தனது தாய் தந்தையிடம் பாசமாக இருக்கம். இதைவிட்டு இவ்வாறு பொறுப்பில்லாமல் கேட்டால் இடைவெளி கூடாமல் வேறு என்ன நடக்கும். அதைவிட புலம்பெயர் நாடுகளில் குடும்பத்துடன் கூடி உணவருந்துவதோ அல்லது சுற்றுலா செல்வதோ மிகக்குறைவு. இதற்கும் காரணம் பெற்றோரின் இடைவிடாத வேலை. இவையெல்லாம் பிள்ளைகளின் மனநிலையைப் பாதிக்கக் கூடிய விடயங்கள். மனநிலை பாதிப்பால் அந்த பிள்ளை சிறிது சிறிதாக தனது பெற்றோரிடமிருந்து விலகுகின்றது. எனவே பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் அதிகரித்துவரும் இடைவெளிக்குக் காரணம் முழுக்க முழுக்க பெற்றோர்களே என்று கூறி என் வாதத்தை சில கேள்விகளுடன் நிறைவு செய்கின்றேன்.

1 பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளிக்குக் காரணம் சூழல் என்றால் ஏன் அந்தச் சூழலில் உள்ள அத்தனை குடும்பங்களிலும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி இருப்பதில்லை?

2 பிள்ளைகள்தான் காரணம் என்றால் ஏன் பாடசாலைகளில் பிள்ளைகள் விடும் தவறுகளுக்கு பெற்றோரை வரவழைத்து கதைக்கின்றனர்?

3 இங்கு வாதாட வந்திருக்கும் எதிரணி உறுப்பினர்களே!!!!!1 நீங்கள் புலம் பெயர் நாடுகளுக்கு வந்தவுடன் சூழல் காரணமாக உங்களுக்கும் பெற்றோருக்கும் இடையில் இடைவெளி வந்துள்ளதா? அவ்வாறு வராவிடின் அதற்கு காரணம் உங்கள் பெற்றோர்களின் வளர்ப்பு என்பதை ஓத்துக்கொள்கின்றீர்களா?

இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு அங்கால் நகருங்கள். முடியாவிடின் பட்டிமன்றத்தைவிட்டு ஓடிவிடுங்கள். ஓடாவிடின் உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன். நான் வெறும் தென்றல்தான் எனக்குப்பின்னே இருப்பது புயல். புயலில் சிக்கினால் மீளுவது கடினம்.

Posted

"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பெற்றோர்களே" என தனது அணியின் வழிநின்று தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தார் சுஜீந்தன்.

ஒரு பிள்ளையின் குழந்தைப் பருவத்தில் அதன் நடவடிக்கைகளில் பிறரை அல்லது பிறவற்றை விட பெற்றோரே அதிகமாய் ஆதிக்கம் செலுத்துகின்றனர் - அந்த அடித்தளம் தான் பிள்ளையின் எதிர்காலத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது என்கிற தனது மையக் கருத்தினை முன்வைத்து அதற்கு வலுவூட்ட சில உதாரணங்களையும் கூறிநின்றார். (--> "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா" என்கிற பழமொழி நினைவுக்கு வருகிறது)

பிள்ளைகளின் குறை+நிறைகள் எல்லாமே பெற்றோரைச் சென்றடைகின்றன - பெற்றோரின் வளர்ப்பில் தான் இவை தங்கிநிற்கின்றன என்று தனது அணித் தலைவரின் கருத்துக்கு வலுச்சேர்த்தார். (-->அண்மையில் வந்த "திருட்டுப்பயலே" என்கிற தென்னிந்தியத் திரைப்படமும் இதே வகையான கருத்தை வெளிப்படுத்துகிறது)

புலம்பெயர் நாடுகளில் தமது பிள்ளைகள் தமிழர்களோடு பழகுவதை (சில) பெற்றோர்கள் விரும்புவதில்லை - வேற்றினத்தவரோடு பழகும்படி சொல்லிக்கொடுக்கிறார்கள் - அதனால் பலவிதமான கலாசார மாற்றங்கள், சீரழிவுகள் நிகழ்கின்றன - இதற்கு தொடக்கத்தில் பெற்றோரின் பிழையான வழிகாட்டலே காரணம் என்கிறார். (--> தமிழர்களோடு கூட்டுச் சேராதே என்று பெற்றோர்கள் எதற்கு சொல்கிறார்கள் என்கிற காரணத்தை மற்றைய அணியினர் தான் முன்வைக்கவேண்டும். --> தனிமனித சுதந்திரம் என்பது தவறானதா?, திருநீறு அணிதல் அவசியம் தானா?, வேற்று இனத்துப் பெண்ணை மணப்பது குற்றமா?, இவற்றுக்கும் பெற்றோர்-பிள்ளை-இடைவெளிக்கும் என்ன தொடர்புண்டு என்பதையும் மற்றைய அணியினர் விரிவாக அலசி காயப்போடுவார்கள் என நம்புகிறேன் :lol: )

புலம்பெயர் பெற்றோர்க்கு பிறர் போல் வசதியாய் வாழ்வதில் அவா என்றொரு கருத்தை முன்வைத்துள்ளார். (--> புலம்பெயர்ந்த பெற்றோர்கள் கண்டன அறிக்கை விடப்போகிறார்கள். கவனம் சுஜீந்தன். -->உறவுக்கு, ஊருக்கு, நாட்டுக்கு கொடுக்க உழைப்பவர்கள் எத்தனைபேர். :lol: ) பணம் தேடும் பெற்றோர் பிள்ளைகளின் தேவை அறிந்து அவர்களை அரவணைக்கத் தவறிவிடுகிறார்கள். பெற்றோரிடம் இடைவெளியை பிள்ளை உணர்கிறது - அதனை ஈடுகட்ட வேறு உறவுகளை நாடுகிறது - நாடுகிற உறவுகளால் தவறுகள் நேர்கிறது - என எடுத்துரைத்தார்.

தாய்மொழியால் என்ன பயனென தாய்மொழியை அந்நியப்படுத்தும் தாய் தந்தையரை - தாய்தந்தையால் என்ன பயனென முதியோர் இல்லத்தில் விலக்கி வைத்திருக்க ஒரு காலம் வருமென அழகாக கருத்துரைத்தார்.

கல்வி விடயத்திலோ அல்லது வேறு திறமை சார் விடயத்திலோ பிள்ளைகளை ஊக்குவிப்பதை விடுத்து - பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தாமே தாழ்த்திக் கதைப்பதுவும், பிறரோடு ஒப்பிட்டுக் கதைப்பதுவும் பிள்ளையை பெற்றோரிடமிருந்து விலகிநிற்கச் செய்கிறது என்றும் சொல்லிச்சென்றார்.

இறுதியாக சில கேள்விகளை முன்வைத்து - அதற்கு பதில் வைத்துவிட்டு அங்கால் நகருங்கள் - இல்லையெனில் ஓடிப் போங்கள் என்கிறார். (--> கவனம் பதில் கேள்வியுடன் வரப்போகிறார்கள். தயாராக இருங்கள்.).

தென்றலாய் வந்து போனார் சுஜீந்தன். தனக்குப் பின் புயல் வருமென எச்சரித்தும் சென்றார். புயலுக்கு முதல் சுடர் வரட்டும்.

அந்தவகையில் அடுத்ததாக "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் சூழலே" என்று வாதாட வந்திருக்கும் "சுடர்" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம். சுடர் விடும் கருத்துக்களைச் சுடச் சுடத் தாருங்கள்...

  • 2 weeks later...
Posted

எல்லாருக்கும் என் அன்பான வணக்கம்.

புலம் பெயர்ந்து வாழும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயான இடைவெளி அதிகமாவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், சூழல் தான் அதிக தாக்கத்தினை உண்டாக்குகிறது என்ற அணியில் சுடருக்குப் பதிலாக வாதாட வந்துள்ளேன்.

சின்ன வயசில அம்மா அப்பா நாங்கள் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கித் தந்தவைதான் யாரில்லையென்றது. அந்த ஆசை ஏன் வந்தது? நாங்கள் வாழும் சூழலில வாழும் மற்றவர்களிடம் இருக்கும் ஏதோ ஒன்று எங்களிட்ட இல்லையெனறதால தானே. தன் ஆசைகளைத் தானே நிறைவேற்றிக் கொள்ளும் தகுதியை அவர்கள் வாழும் சூழல் ஏற்படுத்திக்குடுக்கும்போது பெற்றோரிடம் கேட்கவேண்டும் என்ற தேவை ஏன் தோன்றப் போகுது? உதாரணமா புலம்பெயர்ந்த நாங்கள் 16 அல்லது 17 வயதிலேயே பகுதிநேர வேலை செய்யத்தொடங்குகிறோம். எங்களுக்குள்ள சின்ன சின்னத் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்து கொள்கிறோம். எல்லாத்துக்கும் அம்மா அப்பாட்ட போய் நிக்க வேண்டிய தேவையில்லை அதால பெற்றோருடன் செலவிடும் நேரம் குறைகிறது. கோப தாபங்களைக்கூட நண்பர்களிடையே பகிர்ந்து கொள்கிறோம். பெற்றோர்களை விட எம்மோடு அதிக நேரம் செலவிடுபவர்களான நண்பர்கள் இருக்கும்போது பெற்றோரைத் தேடத் தோன்றுவதில்லை. இதுவே தாயகத்தில் வாழும் பிள்ளைகள் அநேக தேவைகளை நிறைவேற்ற பெற்றோரில் தங்கியிருக்கிறார்கள. தினமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். சண்டை பிடிக்கிறார்கள். அன்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பாணும் சம்பலும் என்றால் கூட ஒரு நேரமாவது ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆனால் புலம் பெயர்ந்து நாம் வாழும் சூழல் அவ்வாறில்லையே.

அம்மா அப்பா இருவரும் வேலைக்குப் போவார்களாக இருந்தால் பிள்ளைகளுடன் செலவிடும் நேரம் மிகக்குறைகிறது. பிள்ளைகளுக்குத் தொலைக்காட்சியோ இணையமோ தஞ்சமாகிறது. ரமாக்கா சொன்ன மாதிரி எத்தின பெற்றோர் காலம எழும்பி பிள்ளைக்குச் சாப்பாடு செய்து குடுக்கினம். வேலையால வந்த அலுப்பில விடிய நல்ல நித்திரை கொள்ளுவினம். அல்லது பிள்ளை எழும்ப முதலே வேலைக்குப் போயிருப்பினம். பிள்ளை எழும்பி மைக்றோவேவில பாலைச் சூடாக்கி பாணை ரோஸ்ட் பண்ணிச் சாப்பிட்டுட்டுப் பள்ளிக்கூடம் போய் அதால அப்பிடியே வேலைக்குப்போய் வீட்ட வர இரவாயிடும். வந்த பிறகாவது அம்மா அப்பாவோட ஏதாவது கதை? வீட்டுப்பாடம் செய்யவே நேரம் காணும். அம்மா அப்பாவைக்கு மற்ற எல்லார் மாதிரியும் வாழோணும் என்றாசை. டபுளடிச்சு வாற காசில மோட்கேஜையும் கட்டி காருக்குக் காப்புறுதி, வீட்டுக்காப்புறுதி, ஆயள்காப்புறுதி என்று கட்டிக்கொண்டிருப்பினம். மிச்சக் காசில வீட்டை அலங்கரிச்சு தங்களையும் அலங்கரிச்சாச் சரி. எல்லாரைப் போலவும் நாங்களும் வெளி உலகுக்கு நல்லா வாழுறம். ஆனால் வீட்டில இருக்கிற ஒராளுக்கு காய்ச்சல் வந்தாலே மற்றாளுக்குத் தெரியாது. இப்பிடி வாழ்ந்தால் இடைவெளி எப்பிடி இல்லாமப் போகும்.

உறவினர்களை எப்பவாவது விழாக்களில் சந்தித்துக் கொள்வது மாதிரித்தான் குடும்ப உறுப்பினர்களையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை. அதுவும் விடுமுறை நாட்களில் விழாக்கள் வரும் ஆனால் பிள்ளைகளுக்கு பகுதி நேர வேலையிருக்கும். அப்பிடியே சந்திச்சுக் கொண்டாலும் என்ன உடுப்பு இது? ஆக்கள் வாற இடத்தில மானத்த வாங்க என்று வந்து பிறந்திருக்குதுகள் என்று தொடங்குவினம் பெற்றோர். போதும் போதாததுக்கு சொந்தக் காறர் வேற. என்ன சின்னக்கா மகள் குடைக்கம்பியை வளைச்சுப் போட்ட மாதிரி காதில எதையோ தொங்க விட்டிருக்கிறாள். ஊரில் எப்படி தங்கத்தால் தம்மை மூடிக்கொண்டு தங்கள் அந்தஸ்தை அளவிட்டுக்கொண்டார்களோ அதே கற்பனை சூழலில் ஒரு குட்டி யாழ்ப்பாணம் குட்டி கரவெட்டியை உருவாக்கித்தான் இவர்கள் இன்னமும் வாழ்கிறார்கள. இவர்கள் வாழ்ந்த சூழலில் பாடசாலைக்கு சீருடை அணிகலன்களுக்கு கட்டுப்பாடு என்று இருந்தது.ஆனால் இங்கு அப்பிடி இல்லையே .பிள்ளைகள் தங்கள் நண்பர்கள் எப்பிடி ஆடை அணிகலன்களை அணிந்து கொள்கிறார்களோ அப்பிடித்தான் அணிந்து கொள்ள விரும்புவார்கள். அப்பத்தான் அவர்களால் தாம் வாழும் சூழலில் தம்மை இணைத்துக் கொள்ள முடியும். பெடியங்களும் பாக்கி பான்ஸ், காதணி அணிதல் ரற்று போடுதல் போன்றவை இந்தச் சூழலில் அநேகமான இளம் வயதினர் விரும்புவது. வெள்ளி நகையணியாமல் ரைற் பான்ற்ஸ் போடாம நல்லாப் படிக்கிற பிள்ளைகள் இல்லையா என்று கேட்காதீர்கள். அப்படியும் இருக்கிறார்கள்தான். ஆனால் அவர்களுக்குள்ளே ஒரு தனிமை ஒரு வேறுபாடு ஏற்பட்டு இது நாளடைவில் வளர்ந்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

பெற்றோரிடம் உதவி கேட்க வேண்டிய விடயங்களில கூட நண்பர்களிடம் கலந்தாலோசித்து செயலாற்றுகிறார்கள். உதாரணத்துக்கு யாரையும் புண்படுத்தாதென்ற நம்பிக்கையில் ஒரு கதை சொல்றன். ஒரு 11 வயசுப்பிள்ளை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அழைத்து வந்த ஏஜென்சியை விரும்பி 13 வயசில திருமணம் செய்து 18 வயசில பிரிந்து வந்து பெற்றோருடன் இருக்கிறா. இதுக்கு யார் காரணம்? 11 வயசில காதல் என்றால் என்ன என்று எப்பிடித் தெரியும்? நாங்கள் வாழுற சூழல்ல பதினொரு பன்னிரண்டு வயதிலெல்லாம் டேற்றிங் போகத் தொடங்கி விடுவார்கள். சின்ன வயசில கேட்ட எல்லாத்தையும் வாங்கித் தந்த அம்மா அப்பாட்ட "என்ர பிரன்ட்ஸ் எல்லாருக்கும் போய்பிரன்ட் இருக்கு எனக்கில்லை" என்று போய்க் கேக்கிற உறவு ஒரு சில பெற்றோர் பிள்ளைகளிடையேதான் உண்டு. அப்பிடியே போய் எனக்கு போய்பிரண்ட் இருக்கென்று சொன்னாலும் ஏதோ உலக மகாத் தப்பு பண்ணி விட்ட மாதிரி அழுதோ மிரட்டியோ தங்கள் காரியத்தையே சாதிக்க நினைப்பார்கள். ஏனென்றால் பெற்றோர்கள் வளர்ந்த சூழல் வேறு நாம் வளரும் சூழல் வேறு. அவர்கள் வளர்ந்த சூழலில் பதினொரு வயதில் என்ன தெரிந்திருக்கும். ஆனால் புலத்தில் வாழும் ஒரு பிள்ளையிடம் கேட்டுப் பாருங்கள்? ஒவ்வொரு படத்திலயும் கோட் பண்ணி சொல்லுவினம்.அம்மா அப்பாவை வளர்ந்த சூழலில ஒரு வருசத்தில மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு பத்துப் படம் பார்த்திருப்பினமா? ஆனால் நாங்கள் ஒரு மாசத்தில பத்துக்கு மேற்பட்ட திரைப்படம் பார்க்கிறம். இணைய வசதியிருக்கு. டீவீடி வாங்கி அடுக்கி விட்டிருக்கு. கேபிள் இருக்கு. அம்மா அப்பா இரண்டு பேரும் வேலை. எவ்வளவு நேரம் தான் ஒரு பிள்ளை படிக்கும்? படம் பார்க்குது பிள்ளை. அதில எத்தினை காதல் காட்சிகள் வருது. ரீவில படம் பார்க்கும்போது 12 வயசுப்பிள்ளை பார்க்கக் கூடாத ஒரு காட்சி வருது. அதைப் பார்க்கக் கூடாது என்று சொல்ல யாருமில்லாத ஒரு சூழல். காணாததைக் கண்ட கண்கள் - மனம் அப்பா அம்மா வேலையால வரும்போது போய்க்கதைக்க விடாது. மனசு தப்புப்பண்ணிட்டமோ என்று குறுகுறுக்கும். அப்பவும் அங்க ஒரு இடைவெளிதான் வருது. பிஞ்சு மனதில் தேவையில்லாத எண்ணங்கள் எல்லாம் குடிகொள்ளும். அது வளர்ந்து வளர்ந்து ஒருநாள் பெற்றோருடன் முரண்பட்டு, நண்பர்களின் உதவியோடு; வீட்டைவிட்டு வெளியேற வைக்கும்.

சூழல் பெற்றோர் பிள்ளைகளுக்குண்டான உறவில் இடைவெளியை அதிகமாக்கும் இன்னொரு சந்தர்ப்பம்: புலத்தில் படிக்கும் சில பிள்ளைகள் பகுதிநேர வேலைக்காகத் தங்கள் பாடநேரங்களில் சில இணக்கங்கள் செய்து இரவு நேர வகுப்புக்குச் செல்வது. ஊரில ஊரடங்குச்சட்டத்தில வாழ்ந்து பழகியவர்களுக்கு தம் பிள்ளைகள் மிகச் சாதாரணமாக இரவு பதினொரு பன்னிரண்டு மணிக்கு வீடு திரும்பும் சூழல் ஒத்து வருவதில்லை. "சாமம் சாமமா தண்ணி தெளிச்சு விட்ட மாதிரி திரியுதுகள் ஒரு வார்த்தை கேட்டா படிக்கினமாம் என்னத்த படிச்சுக் கிளிக்கினமோ என்று அப்பா தொடங்கினா பதிலுக்குப் பிள்ளையும் "இப்ப என்ன நான் படிக்கப் போவேல, நைட் கிளப்புக்குத்தான் போட்டு வாறன்" என்று கத்த இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகும்.

இந்த இடைவெளிக்கு நாம் வாழும் சூழலில் அதிகாரம் செலுத்தும் மொழிகூட ஒரு காரணம் தான். ஊரில படிக்கிற ஒரு பிள்ளை வீட்டுப்பாடம் செய்யவோ கைவேலை செய்யவோ அம்மா அப்பாட்டதான் கேட்கும். ஆனால் இங்க படிக்கிற பிள்ளை பெற்றோரிட்ட வந்து உதவி கேட்டா எத்தின பேரால தங்கள் குழந்தைகளின் வீட்டுப் பாடங்களில் உதவி செய்ய முடிகிறது. இவர்கள் டபுளடிச்சு பிள்ளைய ரியுசனுக்கு அனுப்பி படிக்க வைக்கினம். வீட்டில பெற்றோருடன் ஒன்றாயிருக்கிற கொஞ்ச நஞ்ச நேரமும் இல்லாமப் போகும். விடுமுறை நாட்களில் ஒரு நாளாவது குடும்பத்தோட வெளில போய்ச் சாப்பிட்டு??? -நடக்காது! ஏனென்றால் கூட வேலை செய்யிறவான்ர பிள்ளையள் நடன வகுப்பு, கராட்டி, ருஊஆயுளு, நீச்சல், பியானோ, கணினி இப்பிடி எத்தனையோ வகுப்புக்களுக்குப் போகுதுகள், என்ர பிள்ளையளையும் அப்பிடி அனுப்போணும். இதுக்கு பெற்றோர் சொல்ற இன்னொரு காரணம் பிள்ளையளை ஏதோ ஒரு திசையில வழி காட்டினா அதுகள் வளர்ந்து குழுக்களாக அடிபட்டுக் கொண்டு திரியாதுகளாம். சமுதாயம் என்ன சொல்லும் என்று யோசிச்சு யோசிச்சுத்தான் நாங்கள் வாழுறம். எங்களுக்காக எப்ப வாழத் தொடங்கிறமோ அப்ப இந்த இடைவெளி குறையும். பெற்றோர்களின் மொழிப் பிரச்சனை மற்றும் வேலைத்தளங்களில் விடுப்பு எடுக்க முடியாது போன்ற காரணங்களால் பாடசாலையில் ஆசிரியர் பெற்றோர்கள் சந்திக்கும் நாள் வரும்போதும் பல பெற்றோர் சமூகமளிப்பதில்லை. பிள்ளைகளுக்கு இது மனத்தாக்கத்தை ஏற்படுத்தும். நாளடைவில அது இடைவெளியை உருவாக்கும்.

சாத்திரி அண்ணா சொன்னமாதிரி ரசி அக்காவும் இளைஞனும் பட்டி மன்றம் வைக்க என்ன காரணம்? நாம் வாழும் சூழலில் பல நாடுகளிலுள்ளோர் சேர்ந்து யாழில் பட்டிமன்றம் வைக்கக்கூடிய வசதியுண்டு. பெற்றோர்களுக்கு கள்ள ரீவில உடன உடன செல்வி, நிம்மதி என்று நாடகம் பார்க்க வசதியிருக்கு. பிள்ளை கணினில அரட்டை அடிக்கிறது அப்பாக்குப் பிடிக்காது. ஒருமுறை கணினியைத் தூக்கி உடைப்பார் அடுத்த முறை? பிள்ளைக்கு அம்மா வீட்டில நிக்கிற நேரம் முழக்க செல்வி பார்த்தா ரீவியைப் போட்டு உடைக்க ஏலாது வெறுப்புத்தான் மிஞ்சும். அப்ப இடைவெளிதானே உருவாகுது. நீங்கள் சொன்ன மாதிரி பேனையும் சட்டையும் வாங்கித் தந்தவை செல்போன் கேட்டா இந்த வயதில உனக்கது தேவையில்லை என்றுவினம். ஏனென்றால் அவைக்குப் பயம் தாங்கள் வாழுற சூழலில் செல்போனால் என்ன என்ன செய்யலாம் என்று ஒன்றுக்குப் பத்தாப் படத்திலயும் பத்திரிகையிலும் பார்த்திட்டு இதுகளும் இப்பிடிச் செய்யுங்கள் என்று. ஆனால் பிரண்ட்ஸ் எல்லாரும் செல்போன் வைச்சிருக்கினம் என்னட்;ட இல்லையென்று பிள்ளைக்கு ஆத்திரம், கோபம், இயலாமை எல்லாம் வரும். அதால அம்மா அப்பாட்ட கேட்டு ஒன்றும் நடக்காதென்று பிள்ளை விலகத் தொடங்கும்.

தல அண்ணா ஒரு பெற்றோர் தன் பிள்ளை வைத்தியராகவோ பொறியியலாளராகவோ வர வேண்டும் என்று விரும்புவதற்கு என்ன காரணம்?? அவர்கள் வாழ்ந்த சூழலில் அந்தத் தொழில்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு இல்லையா? நாங்கள் வாழும் சூழலில் இந்தத் தொழில்களைத்தாண்டி இன்னும் எத்தனையோ தொழில்களுண்டு. ஆனால் பெற்றோருக்குத் தன் பிள்ளை கணிதத் துறையிலோ விஞ்ஞானத்துறையிலோ படிக்குது என்று சொல்லிக்கொள்வதில் தான் பெருமை என்று அடம் பிடிச்சா இடைவெளிதான் அதிகமாகும்.

ஓருவன் கெட்டுப்போகச் சரியான கவனிப்பின்மையே காரணம். அந்தக் கவனிப்பின்மை ஏன் வருகிறது? பிள்ளையக் கவனிக்கப் பெற்றோருக்கு நேரமில்லை. வீட்டில் ஒருவர் மட்டும் வேலைக்குப்போய் சமாளிக்கமுடியாது. இருவரும் வேலைக்குப் போனால் தான் தம் செலவுகள் போக உறவுகளுக்கும் காசனுப்ப முடியும். நாங்கள் வாழும் சூழலில் பிள்ளைக்காக பெற்றோரும் பெற்றோருக்காப் பிள்ளைகளும் வாழ்வது சாத்தியமில்லை. கண்ணில எண்ணெய் விட்டுக் கவனிச்சாலும் கெட்டுப்போக நிறைய வழியிருக்கு.

றமாக்கா சொன்ன மாதிரி சம்பளத்தைப் பெற்றோரிடம் குடுக்காதது ஒரு குற்ற உணர்வா எனக்குத் தெரியேல்ல. வேலை செய்யிற எல்லாரும் படம் பார்க்ப் போயினம். பிரண்ட்ஸோட பிக்னிக் போயினம். வேற வேற நாட்டுக்கெல்லாம் போய் விடுமுறையைக் கழிச்சிட்டு வரினம். எக்ஸாம் முடிய குவாட்டர்ஸ்குப் போயினம். அப்ப நான் மட்டும் ஏன் வேலை செய்து உழைச்ச காசை அம்மாட்ட குடுக்கவேணும்? மூன்று மாசத்துக்கு ஒரு கெயர்ஸ்டைல் செய்துகொண்டு எல்லாரை மாதிரியும் இருக்கோணும் என்று ஆசைப்படக் கூடாதா? நாங்கள் வாழுற சூழல்ல மற்றாக்கள் அப்பிடித்தானே இருக்கினம் றமாக்கா.

சமுதாயத்தில கோள்மூட்டிற ஆக்கள் நிச்சயம் ஒரு பெற்றோராத்தான் இருக்கோணும் என்றில்லை றமாக்கா. தன்ர பிள்ளை உங்கட மகள் மாதிரி றோட்ல நின்று பெடியங்களோட கதைக்கிறேல்ல என்று சொல்லித் தன்ர அந்தஸ்தை உயர்த்த வேணும் என்று நினைக்கிற ஒரு மனிதனாகக் கூட இருக்கலாம். இவர்களுக்கு அக்கறையிருந்தால் இந்தச் சூழலில் ஒரு பெண் தன் நண்பர்களுடன் கதைப்பதைக் கூட திரித்துப் பெற்றோரிடம் சொல்ல மாட்டார்கள். இவர்கள் சொல்வதை நம்பி ஏன்டி றோட்ல நின்று கதைச்சியாமே யாரவன்? என்ன சாதியோ யாரோ?இந்த வயசில இதெல்லாம் தேவையில்லை. எங்கட குடும்பத்தில யாருக்கும் இல்லாத பழக்கம். இனிம நீ அவனைப் பார்கக்கூடா பேசக்கூடா என்று அம்மா தொடங்கினா, பிள்ளை என்ன செய்யும். ஓரு பிரண்டோட கதைச்சதுக்கு இவ்வளவு கூப்பாடா என்று வெறுப்பைத்தான் வளர்த்துக்கொள்ளும்.

சுஜீந்தன் நீங்கள் சொன்ன மாதிரி பிள்ளை திருநீறு பூசாம பன்டானா கட்ட என்ன காரணம்? நாங்கள் அன்றாடம் சந்திக்கிற நபர்கள் திருநீறு பூசினமா பன்டானா கட்டினமா? ஒரு பொருளை எங்களுக்குப் பிடிக்க முக்கிய காரணம் நாங்கள் அந்தப் பொருளை வாழ்க்கையில எத்தின தரம் பார்க்கிறம் என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். அப்போ நாங்கள் வாழும் சூழலில் பன்டானா கட்டுவது ஒரு பாசன். நம் பெற்றோர்களுக்கு அப்பிடி ஒன்றே தெரிந்திருக்காது. அதால அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. பெற்றோர் பிள்ளைகளுக்கான இடைவெளியை சூழல் தீர்மானிப்பதால்தான் அச்சூழலில் வாழும் ஒரே பழக்கவழக்கங்களைக் குணாதிசயங்களைக் கொண்ட எம்மினத்தவரிடையே இந்த விரிசல் அதிகமாகிறது. சூழல் இடைவெளியை அதிகமாக்;குவதால் தான் புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் எல்லா இனத்தவருமே இந்தப் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் சுஜீந்தன். ஆனால் என்ன அவர்களுடைய நம்பிக்கை விழுமியங்களைப் பொறுத்து இந்த இடைவெளியின் தாக்கம் இருக்கும். உதாரணமா பாகிஸ்தானில் பர்தா போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போனவை எல்லாரும் இங்க பர்தா போட்டுக்கொண்டு திரிவதில்லை என்பது தீவிர இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிரச்சனையாத்தானிருக்கும்.

பல்கலைக்கழகம் போகும் பிள்ளைக்கு தமிழாக்களோட சேராத என்று பெற்றோர் சொன்னாலும் பிள்ளை அப்பிடி நடக்கக் கூடிய சூழல் அங்கில்லை. எல்லாப் பிள்ளையளும் தங்கள் கலாச்சார விழாக்களில் கலந்து கொள்ளும்போது நீங்கள் சொன்னமாதிரிப் பெற்றோருடைய பிள்ளைகள் என்ன செய்வதாம்? பிள்ளைகள் ஒற்றுமையாகத்தானிருக்கிறார்

  • 2 weeks later...
Posted

"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் சுழலே" என தனது அணியின் கருத்துக்கு வலுச்சேர்க்க சுடரை அழைத்தோம். சுடரைக் காணோம். அவருக்குப் பதிலாக, கருத்துச் சுடருடன் சிநேகிதி வந்தார். தனதணியின் வழிநின்று அருமையான கருத்துக்களை முன்வைத்தார்.

* இடைவெளி உருவாக பலகாரணங்கள் இருக்கின்றன - ஆயினும், அதிக தாக்கம் செலுத்துவது சூழல்தான். - என்றார். பொதுவாக மனிதனுடைய தேவைகளை, ஆசைகளை உண்டுபண்ணுவதில் அல்லது அதிகப்படுத்துவதில் சூழலின் பங்கு பெரிது என்றார். சிறுவயதில் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பெற்றோரில் தங்கியிருக்கும் பிள்ளைகள், வளர்ந்ததும் பெற்றோரை ஒதுக்கிவிடுகிற நிலையை (தகுதியை :lol: ) உருவாக்குவது சூழல். - என்று சூழலின் தாக்கம் பற்றிச் சொன்னார். இதற்கு பல உதாரணங்களையும் முன் வைத்தார்.

* பள்ளி செல்கிறோம். பகுதிநேர வேலை செய்கிறோம். பெற்றோர் இருவரும் வேலைக்கு போகிறார்கள். சிலவேளைகளில் இரண்டு வேலைகள் செய்கிறார்கள். பெற்றோர்க்கு: வேலைக் களைப்பு. ஊர் உறவுகளின் கவலை. குடும்பச்சுமை. பொருளாதாரச் சிக்கல். ஆடம்பரச் செலவுகள். பிள்ளைகள்: நண்பர்களையே அதிகம் சந்திக்கிறோம். துணைக்கு இணையம், தொலைக்காட்சி. குடும்பமாக சேர்ந்து செயற்படுவது குறைகிறது. ஊர்நிலை வேறு. - என்று பொருளாதாரத் தாக்கம் பற்றி எடுத்துரைத்தார்.

-->(கனடாவில்) சிநேகிதிக்கு காய்ச்சல் வந்தால், சிநேகிதியின் அம்மாக்கு தெரிவதற்கு முன்னால் (யேர்மனியில்) இளைஞனுக்குத்தான் முதலில் தெரிகிறது. (அது என்ன காய்ச்சல் என்பது சிநேகிதியின் கடவுளுக்குத் தான் வெளிச்சம்)

* பிள்ளைகளின் நடை, உடை, பாவனை பற்றிய அவசியமற்ற விமர்சனங்களை சமூகம் முன்வைக்கிறது. இது பெற்றோர் பிள்ளைகள் மத்தியிலே பிளவுகளை ஏற்படுத்த காரணமாய் அமைகிறது. ஊர்ச்சூழலோடு புலம்பெயர் சுழலை ஒப்பிட்டு வீணான திணிப்புகளை மேற்கொள்ள முனைகிறது சமூகம். இதற்கு பிள்ளைகளும் பெற்றோரும் பலிகடாக்களாகின்றனர். - என்று சமூகக் கலாசார காரணிகளை முன்வைத்தார்.

-->எண்ணெய் வைத்து, தலைமுடி வழித்து இழுத்து, நெற்றியில் திருநீறு பூசி கனடாவில் பள்ளிக்கூடம் போனால் பகிடி பண்ணவா போகிறார்கள் :D. இளைஞன் யேர்மனிக்கு வந்த புதிதில் 3 வருடங்கள் பள்ளிக்கு திருநீறு பூசி, சந்தனப் பொட்டு வைத்துத் தான் பள்ளிக்கு போனேன் (சுயவிருப்பத்தில்!).

* புலம்பெயர் நாடுகளில் உள்ள மொழிப் பிரச்சனை, பிள்ளைகளின் புதிய கல்விமுறை (கற்றல் முறைமை) போன்றவற்றையும் சூழல் காரணிகளாக முன்வைத்தார்.

* தனது பிள்ளையை மற்றைய பிள்ளைகளோடு பெற்றோர்கள் ஒப்பிடுவதாலும், சமூக நிலை, போட்டி, பொறாமைகள், சமூக விருப்பு வெறுப்புக்களைத் திணித்தல், சமூகத்துக்காக வாழ்தல் போன்றவற்றால் உண்டாகிற விளைவுகள் பற்றியும் சொன்னார்.

* புதிய தொழில்நுட்பங்களால் வருகிற விளைவுகளும், அவற்றினால் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் உண்டாகிற பிரச்சனைகளும் என்று சிலவற்றை எழுதிச்சென்றார்.

* இங்கே பெற்றோர் பிள்ளைகள் என்பதைவிட சமூகம்/சூழல் ஆட்டுவிக்கின்ற அவற்றின் பிரதிநிதிகளாகத்தான் பலரும் செயற்படுகிறார்கள். எனவே இவர்களிடை உண்டாகும் இடைவெளிக்கு சூழலே காரணம் என்கிறார்.

பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயான இடைவெளி அதிகமாவதற்கு உலகமயமாக்கல், கலாச்சார அதிர்வு மற்றும் சமூக பொருளாதார நிலை ஆகியவற்றை உள்ளடக்கிய நாம் வாழும் சூழலே காரணம் என்று முடிவாக தனது கருத்தாடலின் கருப்பொருளை எழுதி விடைபெற்றார். தனது கருத்துக்களில் ரமா, சுஜீந்தன், தல போன்ற தனது எதிரணியினரின் கருத்துக்களுக்கு தனது அணிசார்பாக பல பதில் கருத்துக்களை முன்வைத்தார். பார்ப்போம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று.

அந்தவகையில் அடுத்ததாக "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் பிள்ளைகளே" என்று வாதாட வந்திருக்கும் இரு பிள்ளைகளின் தந்தை "சோழியான்" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம். பெற்றோர் சார்பாக பிள்ளைகள் மீதான தமது ஆதங்கத்தை முன்வைப்பார் என நம்புவோம்...

***கடும் நேர அழுத்தம் காரணமாக தாமதமாகவே நடுவர் உரையை வைக்க முடிந்தது. அதற்காக வருந்துகிறேன். முடிந்தளவு உடனுக்குடன் கருத்துக்களை எழுத முனைகிறேன்.

Posted

பட்டிமன்ற நடுவருக்கும், பட்டிமன்றத்திலே கலந்துகொள்ளும் உறவுகளுக்கும்,அவ்வப்போது பட்டிமன்றத்தை பார்த்து பொறுமையின் விளிம்பில் நின்று கருத்துகளால் விமர்சிக்கும் நட்புகளுக்கும், பரீட்சை முடிந்த கையோடு, கிளித்தட்டு விளையாடும் பட்டிமன்ற உறவுகளை துரத்தித் துரத்தி கருத்து வைக்கத் தூண்டும் ரசிகைக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்து, "பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பிள்ளைகளே" எனும் தலைப்பிற்கு கருத்துக்களால் வலுச் சேர்க்க முயற்சிக்கிறேன்.

ஒரு மனித உயிரானது பூமியை முதன்முதலாக பார்க்கும் போது அது முற்றுமுழுதாக பெற்றோரின் தயவிலேயே தங்கியுள்ளது. இவ்வாறு முழுமையாக பெற்றோரில் தங்கியுள்ள குழந்தையானது, அதன் படிப்படியான வளர்ச்சியின்போது, அது படிப்படியாக தானாகவே இயங்கும்போக்கானதும் வளர்ச்சியடையும்போது, அது பெற்றோரில் தங்கியிருக்கும் நிலைப்பாடானதும் படிப்படியாகத் தேய்ந்துகொண்டே செல்கிறது. உண்ணல், உறங்கல், உடுத்தல், விளையாடல் என்று அனைத்துக்குமே முற்றுமுழுதாக பெற்றோரின் உதவியை நாடிய குழந்தையானது, தானாக விளையாட ஆரம்பிக்கும்போது அது விளையாட்டைப்பொறுத்தளவில் பெற்றோரை நாடும் எண்ணம் குறைகிறது. அதேபோல பேச ஆரம்பிக்கும்போது, பெற்றோரின் உன்னிப்பான அவதானிப்பிலிருந்து விலக ஆரம்பிக்கிறது. இவ்வாறு படிப்படியான வளர்ச்சியினால், பெற்றோரில் தங்கியிருக்கும் போக்கு குறையும்போது, அதன் பக்கவிளைவாக பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையேயான இடைவெளியானது படிப்படியாக விரிவடைவதை அவதானிக்க முடியும். இந்த விரிவடைவுக்கு இயற்கையான வாழ்க்கைச் சுற்றோட்டம் ஒருபுறத்திலும், வலிந்தேற்கும் மன எழுச்சிகளின் தூண்டுதல்கள் இன்னொரு புறத்திலும் காரணங்களாய் அமைகின்றன. ஆக, இங்கே வலிந்தேற்கும் மன எழுச்சிகளால் உருவாகும் இடைவெளியானதற்கு எவ்வகையில் பிள்ளைகள் காரணமாகிறார்கள் என்பதை ஓரளவாவது கூற முயற்சிக்கிறேன்.

ஒரு பிள்ளை பாதுகாப்பாக, பண்பாக, முன்னேற்றகரமாக வளரவேண்டும் என்ற நோக்கிலே பெற்றோர்களால் விதிக்கப்படும் நியாயமான கட்டுப்பாடுகளும் அறிவுறுத்தல்களும் அறிவுரைகளும், பெரும்பாலான பிள்ளைகளிடையே பெற்றோர்கள் மீதான தப்பபிப்பிராயத்தையோ வெறுப்பையோ உருவாக்குவதை காணமுடியும். பெற்றோர்கள் தாம் கடந்து வந்த பாதை தமக்கேற்படுத்திய சாதக பாதக அம்சங்களைக் கருத்திற்கொண்டு, தமக்கேற்பட்ட பாதிப்புகள் தமது பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடாது என்ற நோக்கில் செயற்படும்போக்கானது பிள்ளைகளிடையே மாறுபட்ட தப்பபிப்பிராயத்தை உருவாக்கி, அவர்களின் மனதில் பெற்றோர்மீதான அலட்சியப்போக்கை உருவாக்குகிறது. இந்த அலட்சியப்போக்கும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே தோன்றும் இடைவெளிதான். பல பிள்ளைகள் புத்தகக் கல்வியை அளவுகோலாக்கி தமக்கு யாவும் தெரியும் என்ற போக்கிலே, பெற்றோர்களின் கருத்துகளை பாமரத்தனமான முட்டாள்களது கருத்துகளாக நினைக்கும் அளவுக்கு வீங்கிவிடுகிறார்கள். அதனால், அவர்கள் மனதளவில் பெற்றோர்களைவிட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்னும் போக்கில், தமக்கே எதுவும் தெரியும் என நம்பி, மனம்போன போக்கிலும் வாழ துணிந்துவிடுகிறார்கள்.

'மனம்போன போக்கில்' என்ற பதத்துள் இது தொடர்பான பல வெளிப்பாடுகளை ஒவ்வொருவரது இயல்புகளுக்கு ஏற்ப கூற முடியும். சிலர் பெற்றோரது வார்த்தைகளை உடனேயே மறந்துவிடுவார்கள். சிலர் அந்த வார்த்தைகளை பின்பற்றுவதாக நடித்துக்கொண்டே அதற்கு மாறுபட்ட இயங்குதலை மேற்கொள்ளுவார்கள். வேறு சிலர் அவற்றை மனதில் தாங்கி, சித்திரவதைப்படுவதாக உணர்வெய்தி, தமக்கு ஒரு காலம் வரும்போது பெற்றோரைப் பதிலுக்கு பழிவாங்கவும் நினைப்பார்கள். இவ்வாறாக மனதில் தோன்றும் இடைவெளிகள் கால ஓட்டத்தில் ஒவ்வொரு விதமாக விசுவரூபமெடுப்பதை அனுபவபூர்வமாக நோக்க முடியும்.

இன்றைக்கு பெற்றோர்களின் உதவியால் வெளிநாடு வந்து, குடும்பமாகி தமது இருப்பை நிலைநிறுத்திய பின்னர், தாயகத்திலிருந்து பெற்றோரை 'ஸ்பொன்சர்' மூலம் வரவழைத்துள்ள பல வளர்ந்த பிள்ளைகளின் செய்கைகளைப் பாருங்கள். தாயையும் தந்தையையும் ஒவ்வொரு பிள்ளையாகப் பரித்துச் சென்று, தமது வீட்டு சமையல் வேலை, குழந்தைகளைப் பராமரிக்கும் வேலை, வீடு துப்பரவாக்கும் வேலை என அவர்களைக் கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் பலரும் அறியாததல்ல. உதிரத்தால் உயிர்தந்து, ஊனோடு உணர்வுதந்து உருவாக்கிய பெற்றோர்களை கொத்தடிமைகளாக கொடுமைப்படுத்தும் கொடுமைக்காரப் பிள்ளைகள்தான் புகலிட நாடுகளில் எம்முள் மிகமிக அதிகம். தமது வருமானமொன்றையே கணக்கிட்டு, தமது பொருளாதாரத்தைமட்டுமே கருத்திட்டு, தமது சுகத்தைமட்டுமே பெரிதாய் எண்ணி, தமக்காக வாழ்ந்த பெற்றோரை கேவலமாய் நடாத்தும் இந்த வளர்ந்த பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான இடைவெளியை உங்களாலோ என்னாலோ நினைத்துப் பார்க்க முடியுமா?

'தோளுக்கு மிஞ்சினால் தோழன்' என்றொரு முதுமொழி உண்டு. இது பெற்றோர்களுக்காக கூறப்பட்ட முதுமொழி எனப் பலர் தவறாக நினைப்பதுண்டு. இது பிள்ளைகளுக்காகவும்தான் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வயதுக்குப் பின் பெற்றோரை நல்ல நண்பர்களாகப் பாவிக்கும் நிலை அநேகமான இளைஞர்களுக்கு இல்லை. பெற்றோர்கள் அவர்களை நெருங்கி வந்தாலும் இளைஞர்கள் விலகி ஓடுகிறார்கள். பெற்றோர்களுடன் மனம்விட்டு தமது பிரச்சினைகளை, சிக்கல்களை, மனக்கிலேசங்களை கூறும் மனத்தைரியமில்லாதவர்களாக அல்லது தமக்குள்ளேயே ஒரு எல்லைக்கோட்டைப் போட்டு அதைத் தாண்ட முடியாதவர்களாக உள்ளார்கள். பெற்றோர்கள் அவர்களது நலன் கருதி போடும் சில கட்டுப்பாடுகளை வைத்து, பெற்றோர்களைப்பற்றி எல்லா விடயங்களிலுமே அவர்கள் 'இப்படி'த்தான் இருப்பார்கள் என ஒரு கற்பனைப் பாத்திரத்தை படைத்து, தாமகவே பெற்றோரைவிட்டு விலகி நிற்கும்போக்கே மிகமிக அதிகமான நிகழ்வுகளாகும்.

ஆனால் பிள்ளைகளின் உருவம் எவ்வாறு பெற்றோர்களது உருவக் கலப்பாலானதோ அதேபோலவே இயல்புகளும் அவர்களது இயல்புகளது கலப்பானதாகவே உள்ளபோது, பிள்ளைகளது இயல்புகளை, அவர்களது எண்ணங்களை அவர்களால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதை, இந்தப் பிள்ளைகள் எப்போதுதான் புரிந்துகொள்ளப் போகிறார்களோ?!

இத்தகைய போக்கு பிள்ளைகளை எங்கே கொண்டுபோய் நிறுத்துகிறது என்றால் அது பெரிய வேடிக்கை. இந்த பிள்ளைகள் காதலிப்பார்கள். 'அன்பு என்றால் இதுதான் அன்பு.. பாசம் என்றா இதுதான் பாசம்... நேசம் என்றால் இதுதான் நேசம்.. வானம் உள்ளளவும் வையகம் வாழுமளவும் நமது அன்புதான் நிலைக்கும்' என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, எழுதி எழுதி, ஏங்கி ஏங்கி காதலிப்பார்கள். தமது வாழ்வின் முக்கிய சம்பவமாகவும் நினைப்பார்கள். ஆனால் அதுபற்றி பெற்றோர்களுக்கு மூச்சுக்கூட விடமாட்டார்களாம். ஏனென்றால் பெற்றோர்களுக்கு அவர்கள் சந்தோசமாயிருப்பதில் உடன்பாடில்லை என்று அவர்களே நினைத்துக் கொள்ளும் ஒரு பதில். ஆண்டாண்டு காலமாக பிள்ளைகஇகு, பிள்ளைக்காக என வாழும் பெற்றோர்கள் பிள்ளைகளது காதலுக்கு எதிர்ப்பாம். நம்ப முடிகிறதா? அதுமட்டுமல்ல.. சொற்ப காலத்துள் அறிமுகமாகி தோன்றிய காதல் என்ற அன்பானது, ஆண்டாண்டு காலமாக உதிரத்தோடு தோன்றிய பந்தம் என்ற அன்பை உசாதீனமாக்கும் அளவுக்கு செல்வதை நோக்கும்போது, இங்கே அன்பானது இடைவெளியையும் ஏற்படுத்துவதை வேடிக்கையாக நோக்க முடிகிறதல்லவா?

ஆகவே, பெற்றோர்களுக்கும் பிள்ளைக்கும் இடையே தோன்றும் இடைவெளிக்கு பிள்ளைகளே காரணம் எனக் கூறி, எனக்கீந்த சந்தர்ப்பத்துக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.

  • 2 weeks later...
Posted

"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பிள்ளைகளே" என தனது அணியின் கருத்துக்கு வலுச்சேர்த்து அருமையான பல வாதங்களை சோழியான் அவர்கள் முன்வைத்தார்.

* பூமியில் தனது முதல் பார்வையை விரிக்கும் ஒரு குழந்தை முற்றுமுழுதாக பெற்றோரின் தயவிலேயே தங்கியுள்ளதென்றும் - வளர வளர தனித்திருத்தல் அல்லது தனித்தியங்கல் என்கின்ற நிலைக்கு அது வருகின்றது என்றும் - அதனால் இடைவெளி விரிவடைகின்றது என்றும் குறிப்பிட்டார். இடைவெளி விரிவடைதலுக்கு காரணம் இயற்கையான வாழ்க்கைச் சுற்றோட்டமும், வலிந்தேற்கும் மன எழுச்சிகளின் தூண்டுதல்களும் என்றார்.

* பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பெற்றோர்களால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன - ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் அவை நியாயமானவை என்றார். அறிவுரைகளும் கட்டுப்பாடுகளும் பிள்ளைகளிடத்தே பெற்றோர் மீது தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்துகின்றன என்றும் - அதனால் விலகிச்செல்லல் நிகழ்கின்றது என்றும் குறிப்பிட்டார். அதேபோல புத்தகக் கல்வியை மட்டும் நம்பி பெற்றோரின் அனுபவ அறிவை அலட்சியப்படுத்துவதாலும் விரிசல்கள் ஏற்படுகின்றன என்றும் விளக்கினார்.

* "மனம்போன போக்கில்" இயங்குதலால் பெற்றோர் மீதான புரிதல்களை பிள்ளைகள் இழக்கிறார்கள் என்றும் - அப்புரிதலின்மையால் பெற்றோர் பிள்ளை உறவில் ஓட்டைகள் விழுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

* புலம்பெயர்ந்த வாழ்வும் - புலம்பெயர்வதற்கான பெற்றோரின் பங்களிப்பும் - புலம்பெயர் வாழ்வில் அப்பெற்றோரின் வாழ்வு நிலையும் - பிள்ளைகளின் சுயநலப் போக்கும் என்று யதார்த்த நிலைகளை எடுத்துரைத்தார். (--> "பெற்ற மனம் பித்து - பிள்ளை மனம் கல்லு" என்ற பழமொழியும், "இன்றைய பிள்ளைகள் நாளைய பெற்றோர்கள்" என்பதுவும் நினைவுக்கு வருகின்றன.)

* பெற்றோர்கள் பற்றிய ஒரு கற்பனையான பிம்பத்தை உருவாக்கி - இவர்கள் இப்படித்தான் என்கிற உருவகப்படுத்தலினால் விலகி நிற்கிற பிள்ளைகள் பலருண்டு என்றார். பெற்றோர்கள் தம்மோடு நண்பர்களாக பழகுவதில்லை என்கிற இளைஞர்களின் வாதத்தை மறுதலித்து, பெற்றோர் நெருங்கிப் போனாலும் பிள்ளைகள் பெற்றோரோரை நண்பராக நினைத்து பழக முன்வருவதில்லை என்று தனது வாதத்தை வைத்தார்.

* இளம் வயதில் - குறிப்பிட்ட ஒரு பருவத்தில் - தமக்கு தோன்றும் காதல் பற்றியும், அதன் மகத்துவம் பற்றியும் எழுதியும் பேசியும் பிரமித்தும் போகும் இந்தப் பிள்ளைகளால், பிறந்ததிலிருந்து பெற்றோர்களால் செலுத்தப்படும் அன்பை சரியாக புரிந்துகொள்ளமுடிவதில்லை என்று மிகவும் வருத்தத்தோடு தெரிவித்தார். காதலினால் பிள்ளைகள் பெற்றோரிம் இருந்து விலகித் தோற்றுவிக்கும் இடைவெளி பற்றியும் குறிப்பிட்டார்.

(--> அம்மா அப்பாவிடம் தனக்கு ஒராளை பிடித்திருக்கிறது என்று சொல்ல எத்தனை பேருக்கு தைரியம் இருக்கிறது?)

(--> பெற்றோருக்காக தமது விருப்பங்களை, ஆசைகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு பெற்றோரின் மகிழ்ச்சியையும், பெற்றோரின் விருப்பத்தையும் மதித்து நடக்கிற பிள்ளைகள் இல்லையா?)

மொத்தத்தில் பிள்ளைகளே இடைவெளியைத் தோற்றுவிக்கிறார்கள் என்று தனது வாதத்தை வைத்துச் சென்றார் சோழியான் அவர்கள்.

பிள்ளைகள் பற்றி சொன்னால் பிள்ளைகள் சும்மா இருப்பார்களா? பொங்கி எழமாட்டார்களா? இதோ அந்தவகையில் அடுத்ததாக "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் பெற்றோர்களே" என்று புயலாகி வாதாட புயல் அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம். இளம்புயலாய் வந்து பெற்றோர் மீது புழுதிவாரித் தூற்றப் போகிறாரோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

Posted

யாழ் இணையம் அகவை எட்டை எட்டியிருப்பது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நான் நீண்ட காலம் யாழ் இணையம் பார்த்து வந்தாலும் கருத்துக்களத்தில் இணைந்தது அண்மையில் தான். என்னை வரவேற்ற யாழ் ணையத்திற்கும் பொறுப்பாளர் மோகனுக்கும் மற்றும் கள உறவுகள் அனைவருக்கும் எனது பண்பான வண்ணத் தமிழ் வணக்கம்.

எட்டாவது அகவையில் இப்பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்த ரசிகைக்கும் நடுவராக இணைந்துள்ள இளைஞனுக்கும் சிறப்பான பாராட்டுக்கள்.

பிள்ளைகளைக் குற்றம் காண வேண்டும் என்ற எண்ணத்தில் வருகை தந்துள்ள சாத்திரி (என்னய்யா சாத்திரி உங்கள் அணி தோற்கப் போவதை சாத்திரத்தால் தெரிந்து கொள்ள முடியாத இவரெல்லாம் ஒரு சாத்திரி சிரிப்பாயில்லை), போதாதற்குச் சோழியனாம் (சாத்திரிக்கு என்ன ஜால்ராப் போடவா சோழியன்) அடுத்ததாகப் பாருங்கோ நாரதராம் (கையிலை யாழுமில்லை குடுமியும் இல்லை அதுக்குள்ளை இவற்றை கலகம் நன்மையிலை முடியுமாம் தானே தனக்குச் சொல்லிக் கொள்ளுறார் இவற்றை கலகம் குழப்பத்தில் தான் முடியுமையா) அடுத்து ரமாவாம் இவையெல்லாம் சேர்ந்து ரமா என்ற சின்னப் பிள்ளையை

இழுத்துத் தங்களின் பலத்திற்கு வைச்சிருக்கினம். பிறகு இன்னொரு அணியாம் போகட்டும் விட்டு விடுவோம் ஏனெனில் அவ்வணி சுூழலைக் குற்றம் கூற வந்த படியால் தப்பிப் போகட்டும் விட்டு விடுவோம் என அனைத்து அணியினரையும் அரவணைத்துக் கொண்டு சதா பிள்ளைகளைத் தொணதொணத்துக் கொண்டு இருக்கும் பெற்றோர்களையும் மனதில் எண்ணியபடி பட்டிமன்றத்திற்குள் பாதம் பதிக்கின்றேன்.

நடுவர் அவர்களே பட்டிமன்றம் ஆரம்பத்திலே சாத்திரி அவர்களின் வாதத்தைத் தயவுசெய்து உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்தீர்களேயானால் ஒரு உண்மை புலப்படும். என்னவெனில் தனது கருத்தை மற்றவர்கள் மீது பலாத்காரமாகத் திணிக்கும் தன்மை தான் அதிகம் காணப்படுகின்றது. ஏனெனில் அவர் தனது கருத்தை மன்றத்தில் வைத்த உடனேயே வெற்றி தனது அணிக்குத் தான் என்று நடுவர் முடிவு செய்திருப்பார் எனக் கூறுகின்றார். அவருக்குப் பின்னர் பதினொரு பேர் கருத்து வைக்க இருக்கும் வேளையில் மதிப்பிற்குரிய சாத்திரி எவ்வாறு அவ்வாறு கூறமுடியும். இதிலிருந்து பெற்றோர்களை ஆதரிப்பவர்களின் மனநிலை நடுவருக்கு மாத்திரமல்ல சகல உறவுகளிற்கும் தெட்டத் தெளிவாகியிருக்கும் என நான் நினைக்கின்றேன். இவர் போன்ற பெற்றோர் உள்ள சமுதாயம் எவ்வாறு பிள்ளைகளுடன் ஒத்துப்போகும்.

நடுவர் அவர்களே அடுத்தாகப் பாருங்கோ

சாத்திரியே சொல்லுறார் ரசிகை என்ற இளையவர் தான் இப்பட்டிமன்றத்தை ஒழுங்கு செய்தார் என்று, ரசிகை என்ற பிள்ளைக்கு இருக்கின்ற பொறுப்பு ஏன் இவருக்கு இல்லாமல் போனது. இவர் போன்ற பெற்றோரின் தொணதொணப்புத் தாங்க முடியாமல் அந்த இளைய உள்ளம் பெற்றோரை விட்டு விட்டு வெளியே போகாமல் அதற்கு மாறாக ஏழெட்டு வருடமாகப் பழகிய உறவுகள் மூலமாகக் கலந்துரையாடி நல்லதொரு முடிவைக் காணலாம் என நினைத்ததிலிருந்து நடுவர் அவர்களே பிள்ளைகள் எவ்வளவு து}ரம் பெற்றோர்களுடன் ஒட்டி உறவாட விழைகின்றார்கள் என்பது உங்களுக்கே புரியுமென நினைக்கின்றேன்.

பிறகு என்ன என்று பார்த்தால் பிள்ளைகள் பெரிய தொழில்நுட்பவியலாளராவோ அன்றி ஒரு மேதையாகவோ வரவேண்டுமென்ற நப்பாசையாம். நடுவர் அவர்களே நப்பாசையாம் இதிலிருந்து என்ன தெரியுதென்றால் இவர்கள் ஆதரித்து நிற்கும் பெற்றோர்களுக்கே தங்கள் பிள்ளைகளின் திறமை மீது நம்பிக்கை இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாகின்றது. இவ்வாறு பிள்ளைகளின் திறமையை நம்பாத பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் இடைவெளி உருவாகுவதற்குக் காரணமாக அமைகின்றார்கள் என்பதை எனது அணியின் ஆணித்தரமான கருத்தாகத் தங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். பெரிய மேதையாக வரவேண்டுமென்பது உங்கள் விருப்பம் எனக் குறிப்பிடுகின்றீர்களே, யாராவது ஒரு பெற்றோர் பிள்ளைகளுடைய விருப்பம் என்ன என்று ஒரு செக்கனாவது எங்களைக் கேட்கிறீர்களா? இதைத் தான் எமதணித் தலைவர் குறிப்பிடுகின்றார் பிள்ளைகளின் விருப்பு, ஆர்வம், சிந்தனை என்பன வேறுபடும் போது அதுக்கு ஒவ்வாத சிந்தனையுள்ள ……….. (தொடர்ந்து பார்க்க விரும்பின் எமதணித் தலைவரின் தலைப்புரையைப் பார்க்கவும்) ஐயா சாத்திரியாரே ஒரு வாசகம் ஆனாலும் திருவாசகம் ஐயா எமது அணித் தலைவரின் வாசகம். சரி ஐயா உங்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென நாங்கள் முழுமூச்சுடன் ஈடுபடும் வேளை, நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றால் பியர் வாங்கி வா, சிகரெட் வாங்கி வா என்று எங்களை தொந்தரவு செய்வதையும் பொறுத்துக் கொண்டு மௌனமாகத் தொடர்ந்தும் படிக்கின்றோம். நடக்கும் பரீட்சைகளில் திறமையான புள்ளிகள் எடுக்கும் போது எல்லாம் நீங்கள் எங்களை மனம் விட்டுப் பாராட்டியது கிடையாது. அதே வேளையில் என்றாவது ஒரு நாள் பரீட்சையில் புள்ளிகள் குறைவாக எடுத்தால் நீங்கள் எங்களை நச்சரிக்கும் நச்சரிப்பை எழுதுவதற்கு தமிழில் எழுத்துக்கள் கிடையாது. அவ்வேளையில் நான் தானே பிள்ளையின் படிப்பிற்கு இடையுூறாக

இருந்தேன் எனச் சிறிதும் சிந்திப்பதே இல்லை. அதேவேளையில் நடுவர் அவர்களே ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகும் போது எங்களின் கல்வி நிலையும் மிகவும் கனமாக மாறுகின்றது என்பதை எந்தப் பெற்றோரும் உணரக் கூடிய நிலையில் இல்லை. பக்கத்து வீட்டுப் பையன் அதி கூடிய புள்ளி எடுத்தால் நானும் எடுக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் அந்தப் பையனை விட நாம் கூடுதலான புள்ளிகள் எடுக்கும் போது என்றாவது ஒரு நாள் எங்களை அரவணைத்துப் பாராட்டியிருப்பார்களா? இவ்வளவு மனக்குமுறல்

உள்ள போதும் ரசிகை போன்ற இளையோருடன் இந்தப் பட்டிமன்றத்தில் பங்கு கொள்கின்றேன் என்றால் பெற்றோர்கள் எம்மைப் புரிந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்புத் தான். நடுவர் அவர்களே எமக்கும் பெற்றோருக்கும் இடையே

இடைவெளி ஏற்படக் காரணம் யார் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கமென நம்புகின்றோம்.

இன்னொன்று நடுவரே கொடுமையிலும் கொடுமை பெற்றோரின் உத்தரவாதம்.

பரீட்சையில் சித்தியடைந்தால் அது வாங்கித் தாறேன் இது வாங்கித் தாறேன் என்று புூச்சாண்டி காட்டுவார்கள். ஆனால் பரீட்சைப் பெறுபேறு சிறப்பாக வந்த பின் அம்மா அப்பாட்டை இப்ப காசு இல்லை, அடுத்த மாதச் சம்பளம் வந்த உடனே வாங்கித் தரலாம் எனச் சொல்லிச் சொல்லியே அந்தச் சம்பவத்தை மறக்கடித்து விடுவார்கள். நடுவர் அவர்களே இவர்களின் பரிசு பொருட்களுக்காக நாங்கள் படிக்கவில்லை, எங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதில் இவர்களை விட எங்களுக்குத் தான் அதிகம் அக்கறை உண்டு. இதை ஏன் பிள்ளைகளாகிய நாம் குறிப்பிடுகின்றோம் என்றால் அடிக்கடி பெற்றோர்கள் எம்மை இதேபோல ஏமாற்றுவதால் அவர்களிடம் எமக்குள்ள பாசம் அற்றுப் போய் பெரியதொரு இடைவெளி உருவாகுவதற்குக் காரணம் உள்ளது என நாம் எண்ணுகின்றோம்.

ஐயா நாங்கள் வாதாடும் அணியின் பரிதாபகரமான நிலை தன்னை இன்னும் கூறுகின்றேன்

ஊரோடு ஒத்தோடு ஒருவன் ஓடினால் கேட்டோடு என நீங்கள் தான் இந்தப் பழமொழியை எங்களுக்குப் புலம் பெயர் மண்ணில் சொல்லித் தருககின்றீர்கள், அதன்படி பெற்றோரே நீங்கள் நடக்கின்றீர்களா என்றால் அது தான் இல்லை உதாரணத்திற்குக் கட்டாயமாக எனது பாடசாலை மாணவ மாணவியர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டியதொரு நிலை. கட்டாயமாகச் செல்ல வேண்டும் ஏனென்றால் சுற்றுலா சென்று வந்ததைப் பற்றியோ அல்லது சுற்றுலா சென்ற இடத்தின் தன்மையைப் பற்றியோ நான் கட்டுரை எழுத வேண்டிய நிலையில் இருப்பேன். எனவே இந்தச் சுற்றுலாவிற்குப் பெற்றோரிடம் அனுமதி பெறுவதும் கல்லிலே நார் உரிப்பதும் சமமாக இருக்கும் நடுவரே. எங்களுடைய கலாச்சாரப்படி நீ பெண்பிளைப்பிள்ளை தனியப் போய் நிற்கக் கூடாது நாங்கள் யாராவது ஒருவர் உன்னுடன் கூட வர வேண்டும் எனப் போய் ஆசிரியரிடம் கேட்டுவா என அனுப்புவார்கள். நாங்களும் கல்வியின் மேல் உள்ள ஆர்வத்தால் ஆசிரியரிடம் அனுமதி கேட்டு வாங்குவதுண்டு. (அனைத்து மாணவர்களும் தனித்தனியே வரும் போது எனது பெற்றோர் மட்டும் எங்களுடன் வருவதை சில மாணவர்கள் கேலி செய்யும் போது எங்களது இதயம் இரத்தக் கண்ணீர் சொரிவது பெற்:றோரில் யாருக்காவது தெரியுமா நடுவரே) தொடருவோம் நடுவரே அனுமதியுடன் வந்த பெற்றோர் சுற்றுலா போற இடத்திலும் எந்நேரமும் அவர்களின் நேரடிப் பார்வையில் தான் உலாவ வேண்டுமாம்: நடுவர் அவர்களே நீங்கள் ஒரு பிள்ளையாக உங்களைப் பாவித்து இதே போன்ற ஒரு நிலையைக் கற்பனை பண்ணிப் பார்த்தால் உங்களுக்கும் விளங்கும் நாங்கள் ஆதரித்து நிற்கும் அணியினரின் மனக்குமுறல். நாங்கள் பெற்றோர்களை எவ்வளவு து}ரம் நம்புகின்றோமோ அவ்வளவு து}ரம் பெற்றோரும் எங்களை நம்பினால் இதே போன்ற பட்டிமன்றம் தேவையற்ற ஒன்றல்லவா?

இவ்வுலகத்தில் பிழை விடாதவர் எவருமேயில்லை, நாங்கள் எங்களை அறியாமல் ஏதாவதொரு பிழை விட்டால் ஒரு தடவை அதைக் கண்டும் காணாமல் விடலாம். ஆனால் அந்த மனப்பான்மை எந்தப் பெற்றோருக்கும் கிடையாது. சரி அந்தப் பிரச்சனையை அன்றோடாவது விடுகின்றீர்களா என்றால் அதுவும் இல்லை அந்தக் கிழமை முழுவதும் அதைப் பற்றியே தொணதொணத்துக் கொண்டேயிருப்பார்கள். பல நாட்களின் பின் வேறு ஏதாது கதை வந்துவிட்டால் முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சு போடுவது போல பழைய பிரச்சனையையும் இன்றைய பிரச்சனையையும் சேர்த்து வைத்துக் கதைப்பார்கள். அம்மம்மா இவையின்ரை வண்டவாளங்களை எடுத்து விட்டால் அது தங்களின்ரை இளமைப் பராயத்தின் வீரப்பிரதாபங்களாம். இது என்ன வகையிலை நியாயம் நடுவரே.அவர்களின் இளமைக்கு ஒரு நீதி, எங்களின் இளமைக்கு ஒரு நீதியா?

எங்களின்ரை மரியாதையைக் காப்பாற்றுங்கோ, குடும்ப மரியாதையைக் காப்பாற்றுங்கோ என அடிக்கடி எங்களுககு அறிவுரை கூறும் பெற்றோரே பிள்ளைகளின் கௌரவம், மரியாதை போன்றவற்றைக் காப்பாற்றுகின்றீர்களா என்று கேட்டால் நடுவரே அமு தான் இல்லை. பல பேர் கூடும் இடத்தில் நாங்கள் எங்கள் நண்பர்களுடன் இருந்த சமயங்களில் எவ்வளவு தடவை எங்களை அவமானப்படுத்தி இருக்கின்றீர்கள் என்பதை அனைத்துப் பெற்றோரும் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்களின் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாமல் உங்களுடன் நாங்கள் வீடு நோக்கி வரவில்லை. ஒரு கணம் எங்களின் உணர்வுகளை உங்களின் உணர்வுகளில் நிறுத்திப் பார்க்க வேண்டும் என நினைத்தீர்களா? பிள்ளைகளின் உணர்வுகளைப் புதைகுழியில் புதைக்கும் பெற்றோர்களே உங்களால் தான் இடைவெளி அதிகரிக்கின்றது என்பதை ஒரு செக்கன் சிந்தித்தீர்களேயானால் இடைவெளி என்ற அற்றுப் போய்விடும்.

அடுத்ததாக இளைஞனான நிதர்சனின் நிதர்சனமான கருத்து ஒன்று மற்றவன் போல் நீயும் வரவேண்டும் என்ற தமது ஆசைகளைப் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது திணிக்கின்றார்கள் என்பதாகும். எனவே மொத்தத்தில் பிள்ளைகள் மீது சகல வழிகளிலும் திணிப்பு என்பது அவர்களின் விருப்பம் இன்றி அவர்கள் மீது திணிக்கப்படுகின்றது என்பது தெட்டத் தெளிவாக தெரிய வருகின்றது. எனவே பெற்றோர்களே பிள்ளைகள் மீது உணவோ அன்றி உடையோ அல்லது கல்வியையோ எதையும் திணிக்க முற்படாதீர்கள்.

அடுத்து விவாதிகள் பலரால் கூடுதலாக விவாதிக்கப்பட்ட காதல் விவகாரம் பற்றி எனது கருத்தைக் கூற விழைகின்றேன். அதாவது வந்து ................................... வேண்டாம் எனது பெற்றோருக்கு விருப்பம் இல்லாத ஒன்றைப் பற்றி நினைக்கக் கூட நான் விரும்பவில்லை. அதற்காகக் கள உறவுகளே என்னை மன்னிப்பீர்களாக. ஆமாம் என்னுள் மொட்டவிழ்ந்த அந்த மென்மையான, உவமானம் சொல்ல முடியாத அவ்வுணர்வை என்னை இவ்வுலகம் காண வைத்த என் கண் கண்ட தெய்வங்களிற்காக என்னுள:ளே எரித்துக் கொள்கின்றேன். என் இதய உணர்வு ஊமை கண்ட கனவாகவே இருக்கட்டும்.

நடுவர் அவர்களே இந்தப் பட்டிமன்றத்திற்கான உங்களின் தீர்ப்பு சுஜீந்தன் போன்ற தென்றல்களை புயலாக மாற்றக்கூடாது என்றும், என் போன்ற புயல்களை சுனாமியாக மாற்றக்கூடாது என்றும் பணிவுடன் கேட்டு சந்தர்ப்பம் தந்த யாழ் இணையத்திற்கும், பட்டிமன்றத்தில் என்னையும் இணைத்த ரசிகைக்கும் நன்றி கூறி தங்களின் நல்லதொரு தீர்ப்பை எதிர்பார்த்து அமைகின்றேன்.

  • 3 weeks later...
Posted

"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பெற்றோர்களே" என தனது அணியின் கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் பல நல்ல கருத்துக்களை புயல் அவர்கள் முன்வைத்துச் சென்றார்.

பிள்ளைகளைச் சாட வந்திருக்கும் பெற்றோர் அணிபற்றி விமர்சித்துவிட்டு, அனைவரையும் அரவணைத்துக்கொண்டு பட்டிமன்றத்துக்குள் நுழைவதாக கூறி தனது வாதத்தை தொடங்கினார்.

பெற்றோர்கள் அணிசார்பாக கருத்துக்களை வைத்த சாத்திரி அவர்களை விமர்சித்து, அவர் கருத்து வைத்த முறைமையே பெற்றோரின் மனிநிலையை தெட்டத்தெளிவாக வெளிக்காட்டுகிறது என்று குறிப்பிட்டார். பிள்ளைகளின் மீது தங்கள் கருத்துக்களை, விருப்பங்களை திணிக்க நினைக்கும் பெற்றோரால் தான் இடைவெளியே உருவாகிறது என்ற வாதத்தை முன்வைத்தார்.

அடுத்ததாக இந்தப் பட்டிமன்றத்தையே உதாரணமாகக் காட்டி பிள்ளைகளின் மனநிலை பற்றிக் குறிப்பிட்டார். அதாவது பெற்றோரின் உராய்வுகளைத் தாங்கமுடியாமல், அதேநேரம் பெற்றோரிடம் இடைவெளியை வளர்க்காமல் ஒரு கலந்தரையாடலை நிகழ்த்தி சுமூகநிலையை அடைவதற்கு முயல்கிற அவர்களின் பொறுப்புணர்வைச் சுட்டிக்காட்டினார்.

அடுத்து பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடைவெளி அதிகரிப்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக எடுத்து வைக்கிறார். அனைத்துக்கும் நடைமுறையில் அன்றாடம் ஒவ்வொரு வீட்டிலும், பொதுவிடத்திலும் நடக்கிற நிகழ்வுகளைச் உதாரணங்களாகச் சுட்டிக்காட்டியுள்ளார். சுருக்கமாக அவை:

பிள்ளைகள் மீதும், அவர்களின் திறமை மீதும் நம்பிக்கையின்மை

பிள்ளைகளின் தனிப்பட்ட விருப்பங்களை மதியாமை, தம் விருப்பங்களைத் திணித்தல்

பிள்ளைகளின் முயற்சிகளை, திறமைகளை மனம்திறந்து பாராட்டாத தன்மை

பிள்ளைகள் கல்வியில் ஆர்வம் செலுத்தக்கூடிய வீட்டுச் சூழலை உருவாக்காமை

பிள்ளைகளை மற்றைய பிள்ளைகளோடு ஒப்பிடுவதும், தாழ்த்திக் கதைப்பதுவும்

பிள்ளைகளுடைய கல்வி பற்றிய புரிதலின்மையும் - அதன் கனம் பற்றிய அறியாமையும்

பிள்ளைகளுக்கு அடிக்கடி ஏமாற்றங்களையும், தாழ்வுமனப்பான்மையையும் அளித்தல்

பிள்ளைகள் மீதான மூடத்தனமான கலாச்சார கட்டுப்பாடுகளும் - பெண்பிள்ளைகள் மீதான கலாசார அழுத்தங்களும்

பிள்ளைகள் தவறு செய்தால் அதை அன்பாக அரவணைத்து சுட்டிக்காட்டாமை - அதை வைத்தே பிள்ளைகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் விமர்சித்தல்

பிள்ளைகளின் உணர்வுகளை மதியாமை

பிள்ளைகளை பொதுவிடத்தில் வைத்து அவமதித்தலும் - பலர் முன்னிலையில் தாழ்த்திக் கதைப்பதுவும்

இப்படிப் பல கருத்துக்களைக்கூறி பெற்றோரோ இடைவெளியை உருவாக்குவதில் பெரும்பங்காற்றுகின்றனர் என்று உறுதியாகக் குறுப்பிட்டு தனது அணிக்கு பலம் சேர்த்துள்ளார்.

புயல் அவர்கள் எழுப்பியுள்ள சில கேள்விகள் இங்கு முக்கியமாகப் படுகின்றன:

ஒன்று - பெற்றோர்கள் எல்லோரும் தமது கெளரவத்தையும், மரியாதையையும் பிள்ளைகள் காப்பாற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் - ஆனால் பிள்ளைகளின் கெளரவத்தை, அவர்களுக்கு இருக்கிற மரியாதையை காப்பாற்ற அவர்கள் முனைகிறார்களா?

இரண்டு - பிள்ளைகள் தம் பெற்றோர் மீது வைத்திருக்கிற நம்பிக்கையை, பெற்றோர்கள் ஏன் பிள்ளைகள் மீது வைப்பதில்லை?

மூன்று - பெற்றோர்களும் இளவயதைக் கடந்துதானே வந்தார்கள் - பிள்ளைகளாக இருந்துதானே பெற்றொர்கள் ஆனார்கள். இருந்தும், ஏன் அவர்களால் தம் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிவதில்லை?

இவற்றிற்கு ஏனைய அணியினர் என்ன பதில்களை முன்வைக்கப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

இறுதியாக, காதல் பற்றிய தனது கருத்தை எழுத விரும்பியும் - பெற்றோருக்கு அது விருப்பமில்லையென்பதால் - பெற்றோரின் கெளரவத்தை அது பாதிக்கும் என்பதால் - தனக்குள் மொட்டவிழ்ந்த காதலெனும் மென்மையான உணர்வு பற்றி எழுதாமல் தவிர்த்துக்கொண்டதாக குறிப்பிட்டார். (பெற்றோரோ கவனியுங்கள்: உங்கள் பிள்ளைகள் உங்களுக்காக - உங்கள் கெளரவத்துக்காக எத்தனை விட்டுக்கொடுப்புக்களைச் செய்கிறார்கள் என்று :lol: )

இப்படியாக நிதர்சன உண்மைகள் பலவற்றை பிள்ளைகள் சார்பாக இங்கு குறிப்பிட்டார். புயலாகத் தொடங்கி - இறுதியில் தென்றலை தனக்குள் சிறைபூட்டி வைத்த கதை சொல்லி - விடைபெற்றார்.

இனி: பிள்ளைகளைச் சொல்லியென்ன, பெற்றவரைச் சொல்லியென்ன, பாழாய்ப்போன சூழல் தான் சதிசெய்கிறது என்ற தனது ஆராட்சி முடிவுகளை முன்வைக்க குறுக்ஸ் அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம். பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் குறுக்காலபோவது சூழலே என்கிற உங்களின் வாதத்தை முன்வையுங்கள்.

Posted

எல்லாருக்கும் வணக்கம்

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான இடைவெளி உருவாகி அதிகரிக்கிறது. அதன் விளைவுகளை நாம் எல்லோரும் அன்றாட வாழ்வில் பிள்ளைகளிற்கும் பெற்றோரிற்கும் இடையிலான உறவுநிலை நடத்தையில் காண்கிறோம். ஆனால் அந்த இடைவெளியால் வஞ்சிக்கப்பட்ட பெற்றோர் தான் காரணம் என்று ஒரு அணியினரும் அதே இடைவெளியால் தனது எதிர்காலத்தையே பறிகொடுக்கக்கூடிய பரிதாபத்தில் உள்ள பிள்ளைகள் தான் முழுக்க முழுக்க காரணம் என்று இன்னொரு அணியினர் வாதிடுகிறார்கள்.

பெற்றோர் ஒரு காலத்தில் பிள்ளைகளாக இருந்தவர்கள் ஆனபடியால் அவர்களால் பிள்ளைகளை புரிந்து கொள்ள கூடி பக்குவம் இருக்க வேண்டும் என்ற நியாயமான வாதம் வைக்கப்பட்டது. நிச்சையமாக தமது சூழல் தமது காலத்து சிந்தனையில் உள்ள ஒரு பிள்ளையை பெற்றோர்கள் மாத்திரமல்ல உறவினர்கள் ஆசிரியர்கள் என எவருமே புரிந்து கொள்வார்கள். அங்கு இடைவெளி குறைந்தபட்சமாக அல்லது இல்லை என்றே இருக்கும். ஒரு பிள்ளை தனது பெற்றோர் காலத்து சிந்தனையில் இருப்பதற்கு அந்த காலத்து சூழலில் வழர வேண்டும்.

சிறுவரின் மனம் வெள்ளைக் காகிதம் போன்றது என்பார்கள். எழுதிக் கொள்ள தாராளமாக இடம் இருக்கிறது அதனால் அந்த பிள்ளை தன்னைச் சுற்றி நடப்பவற்றை விரைவாக திறம்பட பதிவு செய்து கொள்ளும். அதுவே வாழ்வு முறையாக தெரியும், மாற்றம் பெறும். இது இயற்கை. பெற்றோரின் தாக்கம் பிள்ளை பாடசாலை செல்லும் வரைதான் இருக்கும். அதற்கு பின்னர் பாடசாலையில் சகமாணவர்கள், ஆசிரியர்கள், பாடவிதானங்கள் தான் பிள்ளையின் வெள்ளைக் காகிதத்தை ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றன. எனவே பிள்ளைகளிற்கும் பெற்றோருக்கும் இடையில் இடைவெளி வருவதை தவிர்க்க பெற்றோர்களுடைய சிந்தனைகளும் மனமும் அதே பாடசாலை சமூக சூழலால் செதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகம் காணப்படுவது புலம்பெயரந்த சமூகங்களில் தான் என்பதை எல்லாரும் ஒத்துக் கொள்வார்கள். இதற்கு காரணம் பெற்றோர் காசு காசு என்ற இயந்திர வாழ்க்கை அதனால் பிள்ளைகளோடு செலவிடும் நேரம் குறைவு என்பதால் அல்ல. பெற்றோர்களின் மனம் தமது பிள்ளைகளின் மனம் போன்று புலம் பெயர்ந்த சூழலில் நடப்பவற்றை பதிவு செய்து வாழ்வு முறையாக ஏற்றுக் கொள்ளும் வெள்ளைக்காகிதமாக இல்லை. அவர்கள் ஏற்கனவே ஒரு வாழ்வு முறையை தமது இளமைக்காலத்தில் தாம் வாழ்ந்த சூழலின் அடிப்படையில் தமக்குள் பதிவு செய்து கொண்டுவிட்டார்கள். பெற்றோர்கள் எந்தளவிற்கு எத்தனை வயதில் தம்மை புலம்பெயர்ந்த வாழ்விற்கு கலாச்சாரத்திற்கு அறிமுகமாக்கினார்கள் பிள்ளைகள் எந்த வயதில் புலம்பெயர்ந்தார்கள் என்பதும் இந்த இடைவெளியன் அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த புலம்பெயர்ந்த வாழ்வில் காணப்படும் இடைவெளி ஆனது சமூக கலாச்சாரரீதியில் ஒத்த ஒரு இடத்திற்கு புலம்பெயர்ந்து செல்பவர்களிடம் இந்த அளவிற்கு மோசமாக இருப்பதில்லை. உதாரணமாக ஜரோப்பாவில் இருந்து வடஅமெரிக்காவிற்கு புலம்பெயர்பவர்கள்.

அடுத்ததாக புலம்பெயராது தாயகத்தில் வாழ்பவர்கள் மத்தியிலும் பெற்றோர்களிற்கும் பிள்ளைகளிற்கும் இடையில் இடைவெளியிருக்கிறது. இந்த இடைவெளி 20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுகளில் அதிகரிப்பதற்கு காரணம் தகவல் தொலைத்தொடர்பு போக்குவரத்து முறைகளில் நடந்துவரும் புரட்சிகள் அதனால் முழு உலகமுமே ஒரு கிராமமாக மாறும் நிலை. இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் முழு உலகத்திற்குமே உரியது ஆனால் கலாச்சார சமூகரீதியில் அதிக அளவில் தாக்கத்தை உருவாக்குவது மூடிய உள்நோக்கிய சிந்தனைகளை கொண்ட கலாச்சாரங்களில் சமூகங்களில் மாத்திரமே. மாற்றங்களிற்கு உள்ளாவன ஒருவகை மூடநம்பிக்கைகளில், மாயையில், மக்களின் அறிவின்மையின் அடிப்படையில் கட்டிக்காக்கப்பட்டவை. மூடிய உள்நோக்கிய சிந்தனை கொண்ட கலாச்சாரங்களில் சமூகங்களில் உள்ள இளையவர்கள் தகவல் தொழில்நுட்பங்களின் உதவியுடன் உலகம் என்ற கிராமத்தின் வசிக்கிறார்கள். எனவே அவர்கள் உலகரீதியாக அவதானிப்பவற்றை வைத்து தமது வாழ்வு முறையை தெரிவு செய்ய முயல்கிறார்கள். இதுபோன்ற தொழில்நுட்ப வசதிகளினூடாக வேற்றுக்கலாச்சாரங்கள் சமூக வாழ்வுமுறைகளை அவதானித்து அவர்களது பெற்றோர்கள் தமது வாழ்வு முறையை தெரிவு செய்யவில்லை.

ஆனால் உதாரணத்திற்கு ஜரோப்பிய சமூகங்களில் தகவல் தொழில்நுட்ப்பப் புரட்சி கலாச்சார சீரழிவை கொண்டுவருவதாக முறைப்பாடுகள் இல்லை. பெற்றோருக்கும் பிள்ளைகளிற்கும் இடையில் இடைவெளியை அதிகரிக்க கூடிய ஒரு நிலையை உருவாக்குகிறது என்ற நிலையில்லை அவர்களது கலாச்சாரம். காரணம் மூடநம்பிக்கை, மாயை, அறிவின்மை என்பவற்றை அடிப்படையாக கொண்டு தமது கலாச்சாரத்தை காப்பாற்றும் நிலையில் இருந்து ஏற்கனவே விடுதலை பெற்றுவிட்டார்கள். அவர்களுடைய கலாச்சாரம் என்பது தற்பொழுது திறந்த தொடர்பாடல், தன்நம்பிக்கை, சுயமரியாதை, பொறுப்புணர்வு, கொளரவம், தேடல், ஆய்வு, அறிவு சார்ந்த முற்போக்கான அம்சங்களை கொண்டது.

கால ஓட்டத்தில் மாற்றங்கள் என்பது நிறுத்தப்பட முடியாதது. ஆனால் அந்த மாற்றங்கள் மேற்கூறிய காரணங்களால் பாரிய அளவில் நடை பெறும் பொழுது அவற்றை தற்போதைய தலைமுறையால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்க அடுத்த தலைமுறை அவற்றை உள்வாங்கிக் கொள்வது என்பது தவிர்க்க முடியாது இருக்கும்.

ஆகவே இடைவெளிக்கு தூண்டுதலாக புலம்பெயரந்த வாழ்வும் தகவல் தொழில்நுட்ப புரட்சிகள் போன்ற புறச்சூழல் மாத்திரமல்ல எமது சமூகமும் அவர்கள் முன்னிறுத்தும் கலாச்சாரமும் உலகமயமாக்கலுக்கு இன்னமும் இசைவாக்கமடையவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டும். உலகம் என்ற கிராம வாழ்கைக்கு ஏற்றதாக எமது கலாச்சாரத்தில் மாற்றங்கள் வந்து ஒரு இயற்கையான சமநிலையை எமது நாகரீகத்தின் பரிணாம வழ்ர்ச்சியில் எமது எதிர்காலச் சந்ததியினர் அடையும் பொழுது இரு தலைமுறைகளிற்கிடையிலான இடைவெளி குறைவாக இருக்கும்.

நன்றி

Posted

"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் சூழலே" என தனது அணியின் கருத்தை வழிமொழிந்து, வலுச்சேர்த்து வாதங்களை முன்வைத்துச்சென்றார் "குறுக்ஸ்" அவர்கள்.

பெற்றோர் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோரையும் புரிந்துகொள்வதற்கு அவர்கள் ஒரே சூழலில் வளர்ந்திருக்கவேண்டும் என்றார். சூழல் மாறுபாடும், அதனால் ஏற்படுகிற சிந்தனை வேறுபாடும்தான் பெற்றோர் பிள்ளைகளிடையேயான புரிதலின்மையையும், அதனால் ஏற்படுகிற இடைவெளி அதிகரிப்பையும் உண்டுபண்ணுகின்றன என்று குறிப்பிட்டார்.

பிள்ளை மனம் வெள்ளைக் காகிதம் என்கிறார். பெற்றோர் பிள்ளைகள் மீது தாக்கம் செலுத்துவதென்பது ஒரு குறிப்பிட்ட காலம்வரைதான் - பள்ளிசெல்லும் காலம்வரைதான். அதன்பின்பு பிள்ளையின் பாடசாலைச் சூழல், நட்பு வட்டம் என வெளிச்சூழல் பெரிதும் தாக்கம் செலுத்துகிறது. இந்தநிலையில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான இடைவெளியை தவிர்ப்பதற்கு - பெற்றோர் பிள்ளைகளின் பாடசாலைச் சமூகச் சூழலை உள்வாங்கியவர்களாக, புரிந்துகொண்டவர்களாக செயற்படவேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறினார்.

அடுத்து புலம்பெயர்ந்து வாழ்கிற சமூகத்தில் தான் இப்படியான இடைவெளி அதிகம் காணப்படுகிறது என்றார். அதற்குக் காரணம் பெற்றோரின் பொருளாதாரச் சிக்கல், இயந்திர வாழ்வு, நேரமின்மை என்பவற்றிற்கும் அப்பால் - புலம்பெயர் நாட்டு சமூக, கலாச்சாரச் சூழல் என்பதைத் தெளிவுபடுத்தினார். தாம் புலம்பெயர்ந்து வாழ்கிற நாட்டின் கலாச்சார வாழ்வுள், அந்த சமூகத்துள் ஒன்றித்து வாழாத, விலகியிருத்தல் பண்பையே பெரும்பாலான தமிழ்ப் பெற்றோர் கையாளுகிறார்கள். ஆனால் பிள்ளைகள் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள், அல்லது சிறு வயதில் புலம்பெயர்ந்தவர்கள் இலகுவாக இந்த சமூகச் சூழலுள் ஒன்றித்துப் போகிறவர்களாக அல்லது உள்வாங்கிக்கொள்ளக்கூடியவர

Posted

அனைவருக்கும் வணக்கம்,

இப்படி ஒரு விறு,விறுப்பான பட்டி மன்றத்தை வெகு சுறு,சுறுப்பாக தலமை ஏற்று நடாத்திக்கொண்டிருக்கும் நடுவர் இளைஞனுக்கு வணக்கங்கள். ஒழுங்கு செய்த சோழியனுக்கும் ,பின்னால் இருந்து கரச்சல் குடுத்து இதை நெறிப்படுத்திக் கொண்டிருக்கும் ரசிகைக்கும், சொந்தக் காசில கன பேரை கரை சேத்துக்கொண்டிருக்கும் யாழ்க் கள பொறுப்பாளர் மோகனுக்கும் முதற் கண் என் நன்றிகள்.

சரி இனி விசயத்துக்கு வருவம்.உந்தத் தலைப்பு என்ன? உதில என்னத்தை இடை வெளி எண்டுகினம்? இடையில இருக்கிற வெளி. பெண்களின் இடையப்பறிக் கதைக்கேல்ல, அப்ப என்ன உந்தக் கதியாலுக்கு இடையில கிடக்கிற இடை வெளியே. இல்லயே. அப்ப எங்க கிடக்குது உந்த இடை வெளி?மனிதரின் மனங்களில் இருக்கிற இடை வெளியப் பற்றித் தானே கதைக்கிறம்.அட குறுக்கால போவார் ,மனசில இருக்கிற இடை வெளிக்கும் சூழலுக்கும் என்ன சம்பந்தம்? நாங்க சந்திரனுக்குப் போனா என்ன சூரியனுக்குப் போனா என்ன உந்த இடை வெளி வாறது மனசில தானே?உந்த பெரிய படிச்ச மனிசர் உந்த மனசைப் போய் எதோ காகிதத்தில எழுதின மாதிரி எண்டு சொல்லுறார், அட மனசு எண்டுறது வோலடைல் மெமொரி ,உதென்ன கருங்கல்லிலயே செதுக்கி வச்சிருக்கு?காகித்தைல எழுதினதேய ரப்பாரால அழிச்சுப் போட்டு எழுதலாம். நாங்க தானே எங்கட மனசில என்ணங்களை உருவாக்கிறம்? அது புலம் எண்டா என்ன களம் எண்டா என்ன என்ன மண்ணாங்கட்டிச் சூழல் எண்டா என்ன?இப்ப என்ன புலம் பெயர்ந்தவர் வீடுகளில் எல்லாம் சண்டயோ நடக்குது இல்லாட்டி புலம் பெயராதவர் வீடுகளில் எல்லாம் உந்த இடை வெளி இல்லாமலா இருக்குது?

பிறகு உந்தச் சூழல் அணியில வந்த நிதர்சன் என்ன வாதிட்டார் என்றே எனக்கு ஒண்டுமா விளங்கேல்ல, நடுவருக்கு விளங்கிச்சுதோ தெரியாது?கனக்க யந்திரமயமான வாழ்க்கை அடிபிடி எண்டு கனக்க எதோ சொல்லிப் போட்டு கடைசியில அவர் சொல்லுறார் சூழல் பாதிக்குது எண்டு அட உதச் சொல ஏன் இவ்வளவு கஸ்ட்டப் படுவான்.உதுக்கு ஒரு பட்டி மன்றம் வேணுமே? சூழல் பாதிக்குது எண்டு எல்லாருக்கும் தெரியும் தானே, நாங்கள் பாதிப்பைப் பற்றியே இங்க கதைக்கிறம், நாங்கள் கதைக்கிறது இடை வெளி பற்றி. இந்த இடை வெளி ஏன் உருவாகுது என்பதை ஆராயிந்தால் தானே அதற்கான விடை கிடைக்கும்.

பிறகு வாறா சினேகிதி , இவவும் நிதர்சன் அரைச்ச மாவையே அரைக்கிறா,புலம் பெயர் சூழலில் எற்படும் தாக்கங்கள் பற்றிச் சொல்லுறா.எனக்கு இப்ப தலைப்பில ஒரு சந்தேகம் வந்திட்டுது ,திரும்பிப் போய்ப் பாக்கிறன் அதில புலம் எண்டு ஒண்டையும் காணன், சூழல் எண்டு தான் கிடக்கு.அப்ப சூழல் எண்டா புலமா?அப்ப ஊரில உந்த தலைமுறை இடை வெளி இல்லயா?ஓம் குறுக்கால போவர் அதுக்கும் எதோ இணயம் ,உலகமய மாதல் எண்டு சொன்னவர் என்ன. நான் இன்னும் குளம்பிப் போய்ட்டன் அப்ப உந்த இடை வெளி வர வேண்டாம் எண்டா நங்கள் எல்லாரும் என்ன வெற்றிடத்துக்கையே வாழ வேணும்,ஓ அப்பத் தானே ஒரு தாக்கமும் இருக்காது?அட சூழல் எண்டுறது எப்பவும் இருக்கிறது அது எப்பவும் தாக்கம் செலுத்தும் ,மாற்றமடையும் சூழல் எப்பவுமே தாக்கம் செலுத்திக் கொண்டுதான் இருக்கும் ஏனெண்டா சூழலும் அதன் மாற்றம் என்பதுவும் எப்பவுமே நிகழ்பவை.ஆனா இடை வெளி எங்கட மனசில தான் உருவாகுது ,அதை நாங்க தான் உருவாக்கிறம்.அதை நாங்கள் தான் கட்டுப்படுத்திறம்.ஆகவே நாண்பர்களே, நடுவரே இதனை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கோ , உந்தச் சூழல் காறர் குழம்பின மாதிரி நீங்களும் குழம்பிடாதையுன்கோ.

சரி இடை வெளி மனசில உருவாகுது எண்டு பாத்தாம், யாற்ற மனசில எப்படி உருவாகுது?புயலாகி வந்தவர் வந்தவுடனயே குற்றம் காண்பதில் தான் தொடங்கினார்.அட இது எனக்கு ஒண்டும் புதிசில்ல ,ஏனெண்டா இப்படித் தான் சின்னச் சிறிசுகள் விளங்காம குற்றம் காண்பதிலயே குறியா இருக்குங்கள்.அவர் செய்ததைப் போல் இளயவர்கள் மீதான குற்றங்க்களை சிறு பிள்ளைத் தனமாக நான் பட்டியல் இடப் போவதில்லை.ஏனெனில் அதில் எந்தப்பிரயோசனமும் இல்லை.ஏன் எதற்கு என்ற சீரிய சிந்தை உடையோர் பெரியவர்கள்.அந்தளவுக்கு சீரிய சிந்தனை உடயவர்களாக சிறுவர்கள் இருப்பத்தில்லை,இதற்கு புயலின் வாதமே சான்ராக அமைகிறது.காரணம் அது அந்த வயதுக் குணம்.அந்த வயதில் ஆளமாகப் பகுத்தறிவது,உலகப் பட்டறிவு என்பவை குறைந்தே காணப்படும்.குறிப்பாக நீங்கள் ஒன்றை அவதானித்தீர்கள் என்றால் பதின்னம வயதுகளில் தான் பிள்ளைகளுக்கும் ,பெறோருக்குமான இடை வெளி அதிகரித்து இருக்கும் பின்னர் அவர்களும் பக்குவம் அடைந்து பட்டறிவு பட்டவர்களாக ஆகும் போது இந்த இடை வெளி குறைகிறது.இந்த ஒரு விடயத்தில் இருந்தே இந்த இடை வெளிக்கான அடிப்படைக் காரண கர்தாக்கள் யார் என்று துலாம்பரமாகத் தெரியவில்லயா? நடுவரே இதை நீங்களே உங்கள் வாழ்க்கை அனுபவத்தினூடகவே உணர்ந்திருபீர்கள் ,இங்கு எதிர் அணியில் வாதிட்டுக் கொண்டிருக்கும் நன்பர்கள் கூட இதனை ஒத்துக் கொள்வார்கள்.ஆகவே அடிப்படைப் புரிந்துணர்வு இல்லாமயே இந்த இடை வெளிக்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது .அது வாழ்பனுவத்திலும், சிந்தனையிலும் அனுபவப் பட்ட பெறோர்களால் உணரப்பட்டு , பிள்ளைகளை நல்வழிப்படுத்கின்றனர் பெற்றோர்.

எங்கே இதனை மறுத்து தமக்கும்,பெற்றோருக்கும் இடையில் ஒரு சுவற்றை எழுப்பி தம்மை அந்தச் சூழலில் இருந்து விடுவித்து தாம் எண்ணியவாறு நடக்கின்றனரோ அங்கே தான் இந்த இடை வெளி பெருகி , வாழ்க்கையில் தோற்றவர்களாக சில இளயவர்க்கள் மாறி விடுகின்றனர்.எங்கெல்லாம் பெற்றோரின் அரவணைப்பும்,அன்பும் , வழிகாட்டலும் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த இடை வெளி குறைந்து புரிந்துணர்வு மலர்கிறது.எந்தப்பெற்றோர் தான் தமது பிள்ளைகள் அழிய வேன்டும் என்று விரும்புவார்கள்?பிள்ளைகளின் விளக்கம் இன்மை தானே இதற்கு அடிப்படைக் காரணம்.

கடைசியா சுஜீந்தன் கேட்ட சில கேள்விகளுக்குப் பதில் அழிக்கப் போறன்.அவர் கேக்கிறார் ஏன் பாடசாலையில பிள்ளயள் விடுற பிழைக்கு பெற்ரோரைக் கூப்புடுகினம் எண்டு.இதைத் தானே நானும் சொல்லுறன் அப்பு, பிழை விடுறது பிள்ளயள் அவைக்கு அது விளங்காது எண்ட படியாத் தான் பெற்றோரைக் கூப்புடுகினம்.விளக்கம் குறைந்ததால் தானே பிழை வருகிறது,ஆசிரியர் கூறுவது பற்றிய புரிந்துணர்வு இல்லாததால் தானே பிழை வருகிறது.பெற்றோரிடம் அதை விளங்கும் பட்டறிவு இருப்பதால் தானே அவர்கள் அழைக்கப் படுகிறார்கள்.அவர்கள் பிள்ளையின் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்ற எதிர்பார்ப்பினால் தானே அவர்கள் அழைக்கப் படுகிறார்கள்.ஆகவே யாரால் இடை வெளி வருகிறது நன்பர்களே, உங்கள் பெற்ரோரின் நல்லெண்ணத்தில் இருந்து ,அவர்களின் உழைப்பில்,அக்கறையில் இருந்து கூறுங்கள் உண்மையை.

.

ஆகவே நடுவரே இந்த வாதங்களை எல்லாவற்றையும் சீர் தூக்கிப்பார்த்து நல்ல ஒரு முடிவை, நீதியான, நியாயமான முடிவை நீங்கள் முன் வைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அமர்கிறேன்,

நன்றி வணக்கம்.

Posted

"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பிள்ளைகளே" என தனதணியினரின் கருத்துக்களுக்கு உறுதிசேர்க்கும் வண்ணம் பல கருத்துக்களை முன்வைத்துச் சென்றார் நாரதர் அவர்கள்.

எது இடைவெளி? "குறுக்கால" போகிற வேலியா இடைவெளி? இல்லை! மனசில் தோன்றுகிற அல்லது இருக்கிற இடைவெளி பற்றியே இங்கு கருத்தாடப்படுகிறது - அதற்கும் சூழலுக்கு என்ன சம்பந்தம்? - என்ற கேள்வியோடு தொடங்கினார் தனது வாதத்தை. நாம் தான் மனதில் எண்ணங்களை விதைக்கிறோம் - அந்த எண்ணங்களை நம்மால் மாற்ற முடியும் என்றார். மானுடரும் சூழல் மீது தாக்கம் செலுத்துகின்றனர் என்பதை குறிப்பிட்டார்.

சூழற் காரணிகளால் ஏற்படும் பாதிப்புகளால் பெற்றோர் பிள்ளையர் இடைவெளி அதிகமாகிறது என்பதையே நிதர்சன் சுட்டிக்காட்டினார். இருந்தாலும் சூழலாலான பாதிப்புகளுக்கும் இடைவெளிக்கும் என்ன தொடர்பு என்பதைப் போல நாரதர் கேள்வியெழுப்பியுள்ளார். சூழல் அணியினர் தான் விளக்கி, முழக்கி தெளிவு படுத்தவேண்டும்.

அடுத்து, சூழல் எப்போதும் இருப்பது - அதில் மாற்றங்கள் நிகழும் - அது தாக்கம் செலுத்துவதாய் இருக்கும் என்று குறிப்பிட்டார். இடைவெளி மனதில் உருவாகிறது - அதை நாம்தான் உருவாக்குகிறோம் - நாம் தான் கட்டுப்படுத்தவேண்டும் என்கிறார்.

தொடர்ந்து குறிப்பிடுகையில்: பிள்ளைகள் வேகமானவர்கள், துடிப்பானவர்கள். அவர்களிடம் ஆழமாகப் பகுத்தறியும் தன்மையும், உலகப் பட்டறிவும் குறைவு - ஆனால் பெற்றோர்கள் சீரிய சிந்தனையுடையவர்களாக, அனுபவ அறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதனடிப்படையில் பிள்ளைகளிடம் உள்ள அடிப்படைப் புரிந்துணர்வின்மையால் தான் இடைவெளி உருவாகிறது என்பதாக தனது வாதத்துக்கு வலுச்சேர்த்தார்.

பெற்றோர்களின் அரவணைப்பும், அன்பும் இருக்கிற இடத்தில் இடைவெளி தொன்றுவது குறைவு என்றும் - பிள்ளைகள் சீர்கெட்டு அழிந்துபோவதை பெற்றோர் விரும்புவதில்லை என்பதையும் சொன்னார். பெற்றோரின் அனுபவத்தை ஒதுக்கி (மனங்களுக்கு) குறுக்கால் சுவரெழுப்பும் போது இடைவெளி அதிகமாகிறது என்பதையும் குறிப்பிட்டார்.

மொத்தத்தில் இடைவெளி தோன்றுவது மனதில் - அது வளர்வதற்கு காரணம் பிள்ளைகளின் அடிப்படைப் புரிதலின்மையும், விளக்கமின்மையும், அவசர தூரநோக்கற்ற சிந்தனையும் என்பதைக் குறிப்பிட்டார்.

இனி: இடைவெளி வளர்வதற்கு காரணம் பிள்ளைகளில்லை, பெற்றோர்தான் என தனதணியின் கருத்தை வளப்படுத்த ஈஸ்வரை அழைக்கிறோம். வாருங்கள் வந்து உங்கள் தரப்பு நியாயத்தை முன்வையுங்கள். :D

Posted

நடுவர் அவர்களே...! தலை முறை இடைவெளி தோன்றுவதற்குக் காரணம் என்ன வென்ற இந்தப் பட்டிமன்றத்தில் பெற்றோர் தான் என்று சரியான ஒரு காரணத்திற்காக வாதிட்டுக் கொண்டிருக்கும் எனது சக தோழர்களே...! மற்றும் இங்கு வாதிட வேண்டுமென்ற வற்புறுத்தல் காரணமாக ஏனோ தானோ வென்று வாதிட்டுக் கொண்டிருக்கும் எதிரணியினரே...! அனைவருக்கும் வணக்கம்...!

என்னதான் சில்லறைக் காரணங்களை நீங்கள் தூக்கிப் பிடித்தாலும் பெற்றோரின் பொறுப்பற்ற செயல்களும் அறியாமையுமே எல்லாவற்றுக்கும் முழுமுதல் காரணம் என்பதை நீங்களும் அறிவீர்கள். அந்தக் காரணங்கள் எவ்வாறு இந்த இடைவெளியை ஏற்படுத்துகின்றது என்பதை விரிவாக எடுத்து வருகிறேன்....

"தந்தை மகற்காற்றும் உதவி அவயத்து

முந்தியிருக்கச் செய்யும் செயல்"

என்று வள்ளுவப் பெருந்தகை கூறியிருக்கிறார். இங்கு பெற்றோரின் கடமை விதந்துரைக்கப் பட்டுள்ளது. பிள்ளைகளைப் பெறுவது ஒரு ஆணினதும் பெண்ணினதும் உடல் இச்சை தொடர்புடையதும் இயற்கை சம்பந்தப் பட்ட தூண்டுதலும் ஆகும். பிள்ளைகளைக் கேட்டு யாரும் பிள்ளைகளைப் பெறுவதில்லை. பெற்ற பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி விட வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு இருக்கின்றது. இந்தக் கடமையை இன்று எத்தனை பெற்றோர்கள் சரிவர நிறைவேற்றுகிறார்கள் என்பதில் தான் இந்த இடைவெளிக்கான காரணமும் உருவாகின்றது.

புலம் பெயர்ந்த தேசங்களில் இந்தப் பெற்றோர் எவ்வகையான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள

  • 3 weeks later...
Posted

"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பெற்றோர்களே" என தனது சகதோழர்களின் கருத்துக்கு வலுச்சேர்க்கும் வண்ணம் அருமையான பல கருத்துக்களை வைத்துச்சென்றார் எல்லாளன் அவர்கள்.

பெற்றோரின் பொறுப்பற்ற செயல்களும், அறியாமையுமே இடைவெளிக்கு முழுமுதற் காரணம் என்று குறிப்பிட்டார்.

வள்ளுவனின் குறளை எடுத்துக்காட்டி பெற்றோரின் கடமையையும், அதை நிறைவேற்றுவதில் தான் இடைவெளியின் ஆழமும் தங்கியிருக்கிறது என்பதையும் எடுத்துரைத்தார்.

அடுத்து மகாகவியின் வாக்கியத்தைக் குறிப்பிட்டு பணம், வசதி என அங்கலாய்க்கும் பெற்றோரையும், அதனால் பாழாய்ப் போகும் பிள்ளைகளின் வாழ்வையும், பொறாமை போட்டி என அவலமாகி நிற்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகச் சூழலையும் சாடிநின்றார்.

(ஆனால் என்ன பெண்கள் > மனைவியர் > அன்னையர் தான் போட்டி - பொறாமை - வீண் ஆசை என அலைபவர்கள் போலவும், ஆண்கள் புனிதர்கள் போலவும் கருத்துக் கையாளப்பட்டிருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. இன்னொரு பட்டிமன்றத்துக்கு தலைப்போ? :lol: )

அடுத்து பழமொழிகளைப் பட்டியலிட்டு அடித்தளத்தை இடும் பணி பெற்றவரின் கையிலேயே இருக்கிறது என்றும், அதிக திணிப்பு ஆபத்தில் முடியும் என்பதையும் தெளிவாக எடுத்துச் சொன்னார். பாரதியார் வரிகளையும் உதாரணம் காட்டினார்.

ஆடம்பரம் ஒருபுறம், அடக்குமுறை ஒருபுறம் என உருவாகியிருக்கும் நமது தமிழ்சசமூகக் குடும்பச் சூழலானது அன்பையும், அரவணைப்பையும் மறந்துவிட்டது என்றும் - பிள்ளைகள் எதிர்பார்க்கும் அன்பும் அரவணைப்பும் கிடைக்காவிடத்து இடைவெளியே அதிகமாகிறது என்றும் குறிப்பிட்டார்.

பெற்றோரே பிள்ளைகளுக்கு முதல் முன்னுதாரணம். பெற்றோரிடமிருந்தே பிள்ளைகள் பலவற்றை தொடக்கத்தில் கற்றுக்கொள்கிறார்கள். பிள்ளைகள் தமது சாதனைக்கு பெற்றோர்களுக்கே முதலில் நன்றி கூறுவதையும், நல்ல பெற்றோர்கள் அமையப் பெற்ற பிள்ளைகள் சாதிக்கிறார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

மொத்தத்தில் இடைவெளி என்பது வீட்டில் பெற்றோரிலிருந்தே உருவாகிறது என்பதை பல பழமொழிகளையும், பாடல்களையும், குறளையும் உதாரணங்காட்டி தெளிவுற தனதணியின் கருத்துக்கு வளம் சேர்த்துச் சென்றார் எல்லாளன் அவர்கள்.

இனி: பெற்றோர் பிள்ளைகளிடையேயான இடைவெளி அதிகரிப்புக்குக் காரணம் பெற்றோருமில்லை, பிள்ளைகளுமில்லை பொல்லாத இந்தச் சூழலே என வாதிட சாணக்கியன் அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம். வாருங்கள், வந்துங்கள் அணிக்கு வலுச்சேர்த்து சாணக்யத்துடன் கருத்தாடுங்கள். :lol:

Posted

அனைவரிற்கும் வணக்கம்,

எமது அணி சார்பாக அடிக்கடி ஆட்களை மாற்றிக்கொண்டிருக்க வேண்டிய நிலமை இந்தப் பாழாப் போன சூழலால் உருவாகிவிட்டது. அதற்காக முதலில் மன்னிப்புக்கோரிக்கொண்டு எமது பட்டிமன்ற விவாதப் பொருளிற்குச் செல்கிறேன்.

பெற்றோர் பிள்ளைகளிடையே இடைவெளி உண்டாகி விரிவடைந்து செல்கிறது. இதற்குக் காரணம் பெற்றோரா, பிள்ளைகளா, அல்லது சூழலா. இம்மூன்றில் எதுதான் இவ்விடைவெளியை உண்டாக்கிறது.

எமதணியைச் சார்ந்தவர்கள் ஏலவே எவ்வாறு சூழல் இடைவெளியினை ஏற்படுத்துகின்றது என்பதனை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறிவிட்டார்கள். இருந்தாலும் நானும் எனது பங்கிற்குச் சிலத சொல்லிவிட்டுப் போகின்றேன். ஒரு அணியில் நான்கு பேர் வாதாட வேன்றும் என்றுவிட்டார்கள். எமது அணியில் ஒருவர் வாதாடினாலே போதும் இருந்தும் விளங்காதவர்களிற்கு கூறுவதற்காக நான்கு பேர் வேண்டும் என்றுவிட்டார்கள்.

நாரதர் கூறியது போல் நாம் இவ்விடைவெளிக்கு காரணத்தை ஆராயவேண்டும். பெற்றோர் பிள்ளைகள் காரணம் என்கிறீர்களே, அவர்களிடம் இடைவெளியினை தூண்டிவிட காரணம் யாது. அதுதானுங்க அவர்களிடையே எண்ணை ஊற்றி தீ வளர்ப்பது எது. சூழல் தவிர வேற எதாக இருக்க முடியும். இப்பிடிக் கூறியவுடன் நீங்க சூழலத் தேடிப்பிடிச்சு மரஞ் செடி கொடியளப் பிடித்துக் கொண்டு வைத்துப் பார்க்காதீர்கள்; எப்பிடி இவையெல்லாம் நமக்கும் பெற்றோருக்கும் இடையில் இடைவெளிய உண்டாக்குகிறது. உங்களைச் சுற்றி இருக்கும் வசதி வாய்ப்புக்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்களைத்தான் நாம் சூழல் என்று விளிக்கிறோம்.

நாரதர் தன் வாதத்தின் போது, "நீங்கள் ஒன்றை அவதானித்தீர்கள் என்றால் பதின்னம வயதுகளில் தான் பிள்ளைகளுக்கும் ,பெறோருக்குமான இடை வெளி அதிகரித்து இருக்கும் பின்னர் அவர்களும் பக்குவம் அடைந்து பட்டறிவு பட்டவர்களாக ஆகும் போது இந்த இடைவெளி குறைகிறது"என்று கூறிச்சென்றார்.

நிச்சயமாக நாம் மறுக்கவில்லை. பதின்மவயதில் தான் அதிகமாக பதின்ம வயதினிலேயே பெற்றோருக்கும் பிள்ளைகளிற்கும் இடைவெளி அதிகரித்துக் காணப்படும். இதற்குக் காரணம் யாதென்று பார்த்தால் அதற்குக் காரணமாக சூழலே முன்னிற்கும். ஒரு பதின்மவயதுப்பிள்ளை வீதியிலே இரண்டுபேருடன் கூடிப்போய் விட்டு வீடு வந்தால் அண்டைக்கு வீட்டிலே அப்பிள்ளையைக் கேள்விகளால் துளைத் தெடுத்துவிடுவார்கள். இவ்வளவும் எதனால் நடக்கும் என்றால் அதைப் பார்த்துவிட்டு வீட்டில் சொல்லிக்கொடுக்கும் வேறு ஒருவரினால். இவ்வளத்திற்கும் அப்பிள்ளை வீட்டினில் கூறிவிட்டுப் போய் இருக்கும் நான் இன்று இங்கு சென்றுவிட்டு வீடுவருவேன் என்று. அதைப் பார்த்துவிட்டு வீட்டில் கூறுபவர்கள் அதற்குக் கை வைத்து கால் வைத்துப் போட்டுக் கொடுத்துவிடுவார்கள். நடுவர் அவர்களே! நிலைமை இப்படி இருக்கும் போது அப்பிள்ளைக்கு பெற்றோரில் நெருக்கும் வருமா இல்லை பெற்றோரில் இடைவெளி உண்டாகுமா. இங்கு சுவர் கட்டுவதற்கு அத்திவாரம் போட்டது சூழல்.

நடுவர் அவர்களே, சூழல் எவ்வாறு பிள்ளைகளிற்கும் பெற்றோருக்கும் இடைவெளியை அதிகரிக்கிறது என்பதற்கு உண்மையில் நிகழ்ந்த ஓர் சம்பவம் ஒன்றினைக் கூறிச் செல்லலாம் என நினைக்கிறேன். (சொல்லுறது என்று முடிவாகியபின் பிறகெதுக்கு நினைக்கிறது). இது ஓர் ஆரம்பப் பாடசாலையில் நிகழந்த ஓர் சம்பவம். முதலாம் வகுப்பில் கல்விபயிலும் பிள்ளை வழமைபோல் பாடசாலை சென்று வரும் போது ஒருநாள் பாடசாலையில் இருந்த அழைப்பு. பிள்ளை அதிபர் காரியாலயத்தில் இருக்கிறார். அவர்பற்றிய ஓர் முறைப்பாடு இருக்கிறது. அது தொடர்பாக உங்களை அழைக்கிறோம் எனப் பாடசாலையில் இருந்து பெற்றோரை அழைத்தார்கள். பாடசாலை சென்றால் பிள்ளையின் மேல் குற்றச்சாட்டு. வகுப்பில் இருந்து பணம் திருடியதாக!. இதைக்கேட்ட பெற்றோர் என்ன செய்தார்கள், அவர்கள் பிள்ளையை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுவந்து தங்களின் முறைப்படி விசாரணை. பிள்ளையோ தான் எடுக்கவில்லை என ஒரே பிடியில் நிற்கிறது. விடுவார்களா இவர்கள். பின்னர் மீண்டும் பாடசாலையில் விசாரணை செய்திருக்கிறார்கள். அவ்விசாரணையின் முடிவு அப்பிள்ளை அப்பணத்தினை எடுக்கவில்லை என்பதாகும். இப்போது கூறுங்கள் அப்பிள்ளைக்கும் பெற்றோரிற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தியது யார். பெற்றோரா, பிள்ளையா அல்லது அச்சூழலா??

தெரியாது என்பதை ஒத்துக் கொண்டால் குடும்பத்தலைவன் என்ற மவுசு என்னாவது. எனவே வசதியான ஆயுதம் அடக்கு முறை . மண்ணின் வாழ்க்கை முறையும் அடக்கு முறையை அங்கீகரித்து விட்டிருந்ததே.

பயந்து பயந்து வளரும் குழந்தை எப்படி பெற்றோரிடம் ஒட்டிக்கொள்ளும். புலம் பெயர் மண்ணில் மட்டும் எப்படி அடக்குமுறை இல்லையா என்று கேட்கலாம். அடக்கு முறை மட்டுப்படுத்தப் பட்டு விட்டது.காரணம் பயம் 911. எந்தப் பெற்றோராவது பிள்ளைகளை நாங்களாகவே சுதந்திரமாக விட்டிருக்கிறோம் என்று கூறுவார்களா..? 911 பயத்தில் விட்டிருக்கிறார்கள்... பயப்படாமல் அடக்கு முறையில் ஈடுபட்டவர்கள்...பயப்படாமல் உள்ளுக்குள் இருக்கிறார்கள். குடும்பம் சிதறிச் சின்னாபின்னமாகிப் போயிருக்கிறது.

புலம் பெயர் நாடுகளின் சட்டங்களுக்குள் எமது வாழ்க்கையையும் பலவந்தமாக நாம் திணித்துக் கொண்டுள்ளோம்.

என்று தனது வாதத்தின் போது எல்லாளன் கூறிச்சென்றார்.

நடுவர் அவர்களே! தெரிந்தோ தெரியாமலே எமதணிக்கு தானே சான்று பகிர்ந்து விட்டுள்ளார்.

இதைத்தானே ஐயா நாங்களும் கூறுகிறோம். நாம் வாழும் சூழலே எமக்கும் எமது பெற்றோரிற்கும் இடையே உருவாக்கிவிடுகிறது என்று. புலத்தினிலே பெற்றோர் அடக்குமுறை என்னும் ஆயுதத்தினைக் கையில் எடுத்துக் கொண்டிருந்தார்கள். புலம்பெயர்ந்து வந்ததன் பின்னோ பிள்ளைகளின் ஆயுதமாக 911 ( 911 என்றவுடன் ஏதோ அமெரிக்கத்தாக்குதல் இவ்விடைவெளிக்குக் காரணம் என்று யோசித்துவிடாதீர்கள். அது வடஅமெரிக்காவில் காவற்றுறையுடனான அவசரத் தொலைத்தொடர்பு இலக்கம். வேன்றுமென்றால் ஐரோப்பாவில் இருப்பவர்கள் உங்களது அவசரத் தொலைத்தொடர்பு இலக்கத்தை மாற்றி வாசிக்கலாம்.) எதுக்கெடுத்தாலும் 911க்கு அடிப்பேன் என வெருட்டல். இதுகூட பெற்றோர்களிடம் இருந்து விலகிப்போக சந்தர்ப்பம் அளிக்கிறது. நடுவர் அவர்களே! இயல்பான ஓர் வாழ்க்கைக்கும் திணிக்கப்படும் ஓர் வாழ்க்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது . இத்திணிக்கப்படும் வாழ்விலே சூழல் தாக்கத்தை ஏற்படத்தாது வேறு எது தாக்கத்தை ஏற்படுத்தும்.

எல்லாளன் தனது வாதத்தின் போது பெற்றோரின் ஆடம்பர வாழ்வு பிள்ளைகளைச் சரிவரக் கவனிப்பதில்லை என்று கூறினார். நாமும் அதை ஏற்றுக் கொள்கிறோம். அவ்வாடம்பர வாழ்வு வேண்டி நிற்பதற்குக் காரணம் சூழல் நடுவர் அவர்களே. தன்னைச் சுற்றி இருக்கும் பகட்டு வாழ்வு தனக்கு வேண்டும் என்று நினைப்பது மனிதனின் இயல்பு. அப்படியான ஓர் இயல்பு இல்லாதவரை முற்றும் முறந்தவர் என்றுதான் கூறவேண்டும். அவ்வாடம்பரத்தைத் தூண்டிவிடுவது சூழல் இல்லையா நடுவர் அவர்களே!.

ஆக இறுதியாக, பெற்றோருக்கும் பிள்ளைகளிற்கும் இடையில் இடைவெளி தோன்றுவதற்குக் காரணம் சூழலே தவிர எதிரணியனர் கூறுவதுபோல் பெற்றோரும் அல்ல பிள்ளைகளும் அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.