Jump to content

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 07

Recommended Posts

பருத்தித்துறை வடை .

4195180274_f75a6e9a39_b.jpg

இந்தப் பக்குவத்துக்குச் சொந்தக்காறி என்ரை மாமி தான் . நான் போனவருடம் பருத்தித்துறையில் நின்றபோது மாமியுடன் கதைத்து சுட்ட பக்குவம் .

தேவையான பொருட்கள்:

கோதுமை மா 1 கிலோ .

*****உளுத்தம்பருப்பு 500 கிறாம் .

உப்பு 2 மேசைக்கறண்டி .

பெருஞ்சீரகம் 2 மேசைக்கறண்டி .

மிளகாய்தூள் ( தேவைக்கு ஏற்ப ) .

கறிவேப்பமிலை 30 - 35 இலை .

எண்ணை ஒரு போத்தில் .

பக்குவம் :

உழுத்தம் பருப்பை 2 மணி நேரம் உறவைத்துப் பின் வடித்துக் கொள்ளுங்கோ. கோதுமை மாவை அரித்து அதனுள் உப்பைச் சேர்த்து நன்றாகக் கையால் சேருங்கோ. கறிவேப்பிலையை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கோ. கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெ.சீரகம் மூன்றையும் மாவுடன் சேர்த்து நன்றாகக் கலவுங்கோ. பின்பு உழுத்தம் பருப்பைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கலவுங்கோ. ரொட்டிப் பதம் வரும்வரை அடித்துக் குழையுங்கோ. அதன்பின்பு லட்டு உருண்டையளவு உருட்டி ஒரு தட்டில் போடுங்கோ. பூவரசம் இலையின்******** மேல் துளி எண்ணை பூசி , உருண்டையை வைத்து இரு கைப் பெருவிரல்களால் தட்டையாக வட்டமாகத் தட்டுங்கோ. நீங்கள் தட்டையாகத் தட்டுகின்ற வேளை விரலால் எண்ணையில் தொட்டு உருண்டை மேல் தொட்டுவிட்டுத் தட்டையாக்கினால் சுகமாகத் தட்டுப்படும். தட்டிய பூவரசம் இலைகளுடன் கூடிய வடைகளை ஓர் தட்டில் ஒன்றுடன் ஒன்று முட்டாமல் வையுங்கோ. முழுவதும் செய்த பின்பு தாச்சியில் எண்ணையை விட்டு மொறுகல் நிலை வரும்வரை பொரித்து எடுக்கவும்.இப்ப பருத்தித் துறை வடை தயார் .

************* பூவரசம் இலையில் வைத்துத் தட்டினாலே வடையின் உண்மையான சுவை வெளிப்படும் . ஆனால் பூவரசம் இலை இங்கு கிடைக்காத படியால் , கடையில் ஓயில் பேபர் வாங்கி சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டி வையுங்கோ . ஒரு ரின்பால் பேணியின் அடிப்பக்கத்தில் ஓயில் பேப்பரை வைத்து , அதன் மேல் உருண்டையை வைத்து ரின்பால் பேணி விட்டம்வரை வட்டமாகத் தட்டுங்கோ .

***** உழுத்தம்பருப்பு அளவில் தவறு ஏற்பட்டதால் திருத்தியுள்ளேன் .

படிமானம் :

இதை சூடு ஆறினவுடன் ஒரு கிளாஸ் வைன் அல்லது விஸ்கி அல்லது பிளேன் ரீ யோடை சாப்பிட்டுக்கொண்டு யாழை விடுப்பு பார்க்கலாம் .

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்................ நன்றி கோ. 1கிலோ மா????? மா கூடினால் கடையில் விற்கும் பருத்தித்துறை வடை மாதிரியல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்................ நன்றி கோ. 1கிலோ மா????? மா கூடினால் கடையில் விற்கும் பருத்தித்துறை வடை மாதிரியல்லா இருக்கும்.

இது பெரும்படியானுகளுக்கு . நீங்கள் வேணுமெண்டால் ஒவ்வொரு அளவிலும் அரைவாசியாய் குறையுங்கோ . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிலோ மாவுக்கு 200 கிராம் உழுந்து???????????...அவிச்ச மாவா/பச்ச மாவா?

Link to comment
Share on other sites

ஒரு கிலோ மாவுக்கு 200 கிராம் உழுந்து???????????...அவிச்ச மாவா/பச்ச மாவா?

பச்சை மா ரதி . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துகளுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ர ஆத்துக்காறி அடிக்கடி செய்வது.இதோட ஒரு பிலேன் ரீ. போதும் எனக்கு. (கோ பெடியளை பழுத்தாக்காதீர்கள் ஒரு கிளாஸ் வைன் அல்லது விஸ்கி - ஏற்கனவே தண்ணியல கனபேர் எழுதிறமாதிரி தெரியுது) :lol::D :D

Link to comment
Share on other sites

அலைமகள் , ரதி நான் அளவில் ஒரு பிழை விட்டுவிட்டேன் . தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கோ . தவறை திருத்தியுள்ளேன் . மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் விரும்பி உண்ணும் சிற்றுண்டிகளில் இதுவும் ஒன்று.

இணைப்பிற்கு நன்றி கோமகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் இந்தப் பருத்தித்துறை வடையோட தேத்தண்ணி குடித்திட்டு வாறன் ,இங்க உங்களின் பதிவு !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி .. :)

பகிர்வுக்கு நன்றி கோமகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் செஃப்!!!!

வடமராட்சியாளுக்கு வாழ்க்கைப்பட்டுப்போனவனுக்கு.......பின்னேரதேத்தண்ணியும் பருத்தித்துறை வடையும்....சொல்லவே வேணும்.

Link to comment
Share on other sites

அலைமகள் , ரதி நான் அளவில் ஒரு பிழை விட்டுவிட்டேன் . தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கோ . தவறை திருத்தியுள்ளேன் . மிக்க நன்றிகள் .

மாமி செய்யும் போது கவனமாகக் குறிப்பெடுக்காமல் என்ன செய்தீர்கள்? விஸ்கி அடித்திருக்கச் சந்தர்ப்பம் இல்லை. :lol:

பகிர்வுக்கு நன்றி.

செய்து பார்க்கத் தான் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு நாளும் பருத்தித்துறை வடை கட‌லைப் பருப்பில செய்யிறது என்டு நினைச்சுக் கொண்டு இருக்கன்...வட்ட சேம் ர‌தி :lol:

Link to comment
Share on other sites

கோ...! பருத்தித்துறை எண்டாலே அந்த வடையும் ஞாபகத்துக்கு வரும்.

நான் பருத்தித்துறைக்காறன்.

என்னோட கஷ்டகாலம்... 6 மாசம் ஆச்சு இந்த வடையை சாப்பிட்டு. :(

இன்னொரு பார்ஷல் அனுப்பச்சொல்லி அம்மாட்ட சொல்லி இருக்கிறன். கெதியில வந்திடும்.

தண்ணி அடிக்கைக்குள்ள பைட்ஸுக்கு சுப்பர் இதுதான். :wub:

ஃபோர்மூலாவைப் போட்டிட்டீங்கள்... அப்புறமென்ன, சொந்தமா செய்து பாத்திட வேண்டியதுதான். :lol:

பி.கு: மிளகாய்த் தூளுக்கு பதிலா "அரையிடி மிளகாய்த்தூள்" போட்டால் வடை இன்னும் ரேஸ்ரா இருக்கும்.

Link to comment
Share on other sites

அண்மையிலும் அம்மா ஊரிலிருந்து எனக்கு இதனை செய்து அனுப்பி இருந்தார். அதுதான் என் பல்லை பதம் பார்த்ததும் :)

Link to comment
Share on other sites

இது என்ர ஆத்துக்காறி அடிக்கடி செய்வது.இதோட ஒரு பிலேன் ரீ. போதும் எனக்கு. (கோ பெடியளை பழுத்தாக்காதீர்கள் ஒரு கிளாஸ் வைன் அல்லது விஸ்கி - ஏற்கனவே தண்ணியல கனபேர் எழுதிறமாதிரி தெரியுது) :lol::D :D

பிள்ளையள் வலு முன்னேற்றம் விசுகர் . நான் சொல்லித்தான் அவங்கள் பழகவேணுமெண்டில்லை . எல்லாக் காயளும் மாஸ்ரர் டிக்கிறி எடுத்தவங்கள் இதிலை .

நான் விரும்பி உண்ணும் சிற்றுண்டிகளில் இதுவும் ஒன்று.

இணைப்பிற்கு நன்றி கோமகன்.

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் வாத்தியார் .

இப்பதான் இந்தப் பருத்தித்துறை வடையோட தேத்தண்ணி குடித்திட்டு வாறன் ,இங்க உங்களின் பதிவு !

சந்தோசம் சுவியர் வந்து கருத்து சொன்னதிற்கு .

எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி .. :)

பகிர்வுக்கு நன்றி கோமகன்.

மிக்க நன்றிகள் தமிழ்அரசு உங்கள் கருத்து .

Link to comment
Share on other sites

வணக்கம் செஃப்!!!!

வடமராட்சியாளுக்கு வாழ்க்கைப்பட்டுப்போனவனுக்கு.......பின்னேரதேத்தண்ணியும் பருத்தித்துறை வடையும்....சொல்லவே வேணும்.

ஏன் தென்மராட்சிப்பக்கம் என்ன குறைச்சல் ராசா ?

மாமி செய்யும் போது கவனமாகக் குறிப்பெடுக்காமல் என்ன செய்தீர்கள்? விஸ்கி அடித்திருக்கச் சந்தர்ப்பம் இல்லை. :lol:

பகிர்வுக்கு நன்றி.

செய்து பார்க்கத் தான் இருக்கு.

அந்த நேரம் பாத்து சிகறட் பத்தப்போட்டன் . உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஈஸ் .

நான் இவ்வளவு நாளும் பருத்தித்துறை வடை கட‌லைப் பருப்பில செய்யிறது என்டு நினைச்சுக் கொண்டு இருக்கன்...வட்ட சேம் ர‌தி :lol:

உது நல்லாய்யில்லை சொல்லிப்போட்டன் .

Link to comment
Share on other sites

மாமி செய்யும் போது கவனமாகக் குறிப்பெடுக்காமல் என்ன செய்தீர்கள்?

வேறு என்னத்தைக் கோ செய்யிறது பக்கத்து வீட்டுப் பரிமளத்துக்கு கண்குடுக்கிறது தான்! :D

Link to comment
Share on other sites

அண்மையிலும் அம்மா ஊரிலிருந்து எனக்கு இதனை செய்து அனுப்பி இருந்தார். அதுதான் என் பல்லை பதம் பார்த்ததும் :)

சொல்லிறன் எண்டு கோபிக்கக் கூடாது அதென்ன உங்களுக்கு மட்டும் ப.வடையாலை பிரைச்னை வருகிது ? நாங்களும் சாப்பிடுகிறம் தானே ?உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் .

வேறு என்னத்தைக் கோ செய்யிறது பக்கத்து வீட்டுப் பரிமளத்துக்கு கண்குடுக்கிறது தான்! :D

இதை வன்மையாகக் கண்டிக்கின்றேன் எனக்கும் குசாவுக்கும் உள்ள நட்பை பிரிக்க எதிர்கட்சிகளின் கூட்டு முயற்சி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வன்மையாகக் கண்டிக்கின்றேன் எனக்கும் குசாவுக்கும் உள்ள நட்பை பிரிக்க எதிர்கட்சிகளின் கூட்டு முயற்சி .

ஏன் ரோகிணி கோவிப்பாபோ??

பரிளம் பற்றி பேச்சுவந்தால்?? :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அண்ணை...வடை கீல வெடக்னா...

ஏன் தென்மராட்சிப்பக்கம் என்ன குறைச்சல் ராசா ?
குமாரசாமி அண்ணை தென்மராட்சியோ....? சொல்லவே இல்லை....
Link to comment
Share on other sites

கோமகன் அண்ணை...வடை கீல வெடக்னா...

குமாரசாமி அண்ணை தென்மராட்சியோ....? சொல்லவே இல்லை....

சுபேஸ் தென்மராட்சியா????

Link to comment
Share on other sites

ஏன் ரோகிணி கோவிப்பாபோ??

பரிளம் பற்றி பேச்சுவந்தால்?? :lol::D :D

கூல் விசுகர் எங்கடை முகராசி அப்பிடி.

கோமகன் அண்ணை...வடை கீல வெடக்னா...

குமாரசாமி அண்ணை தென்மராட்சியோ....? சொல்லவே இல்லை....

அப்படியெண்டால் என்ன ராசா ?

Link to comment
Share on other sites

அண்ணா , நாங்களும் பரித்திதுறை வடை என்றுதான் சொல்றனான்கள்.

அனால் கன பேருக்கு தட்டு வடை என்றால் தான் தெரியும்!!!

பரித்திதுறை வடை என்று ஏன் சொல்றவங்கள் ??? :icon_idea:

Link to comment
Share on other sites

பரித்திதுறை வடை என்று ஏன் சொல்றவங்கள் ??? :icon_idea:

பருத்தித்துறை ஆட்கள் தான் முதன் முதல் பருத்தித்துறை வடையை இன்ரடியூஸ் பண்ணினபடியால்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.