Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகரத்தில் அடைத்த பலாப்பழப் பிரியன். ஒரு புலத்துச் சிறுவன்...

Featured Replies

புலத்தில் ஒரு தமிழ்ச் சிறுவன். அவனிற்கு பலாப்பழம் என்றால் கொள்ளைப் பிரியம். இ;த்தனைக்கும் அவன் அறிந்தது எல்லாம் தகரத்தில் அடைத்துத் தமிழ்க்டையில் விற்கும் பலாப்பழத்தை மட்டுமே. அவனுடன் பேசும் போது ஒரு முறை என்னைக் கட்டுப்படுத்த முடியாதவனாக, எங்கள் குளைக்காட்டையும் பலா மரத்தையும் பழத்தையும் இலையையும் இன்ன பிறவற்றையும் பலா பற்றிப் பேசிக்கொண்டேன். பலா இலையில் கூழ் குடித்தல், பலாக் கொட்டையின் பயன்கள் என்றெல்லாம் கூடச் சென்றிருந்தேன். மொத்தத்தில் தகரப்பேணிப் பலாப்பழப் பிரியனிற்குள் ஒரு ஏக்கத்தைக் கட்டவிழ்த்;து அவனது ஏக்கம் நான் அனுபவித்துக் களித்தது என்ற தோரணையில் அந்தக் கதையினை அன்று முடித்திருந்தேன்.

நாங்கள் அனேகர் இப்படித்தான். பொதுவாக ஒருவனிற்கு மாம்பழம் பிடிக்கும் என்று சொன்னால் ஆமா அப்படியா எனக்கும் தான் என்று அச்சம்பாசனையினை முடித்துக் கொள்வதில்லை. இதென்ன மாம்பழம், எங்கட வீட்ட நிண்ட கறுத்தக்கொளும்பானை நீங்க சாப்பிடோணும் என்ற தோரணையில் தான் பல உரையாடல்கள் தொடரும். இது பழங்களிற்கு மட்டுமல்ல பல முனைகளில் இப்படித்தான். இந்த உளவியலின் பல பரிமாணங்களைப் புரிய முடிகிறது. ஆனால் புரியுதோ புரியேல்லையோ, சிறுவனிற்குத் தகரத்தில் அடைத்த பலாப்பழம் பிடிக்கும் என்று தெரிந்தபோது நானும் பீத்தத் தான் செய்தேன். ஆனால் எனது பீ;;த்தலைத் தொடர்ந்த ஒருநாளில் எனக்கு ஒருவன் எதிர்பாரா விதத்தில் பீத்தினான். சிறுவனில் எனது பேச்சு கட்டவிழ்த்த ஏக்கத்தை அவன் பேச்சு என்னுள் பெருகச் செய்தது. சிரித்து விட்டுப் பதிவெழுதத் தொடங்கி விட்டேன்.

எனக்குள் ஏக்கத்தை விதைத்தது ஜெயமோகன். ஜெயமோகனின் சில கட்டுரைகள் வாசித்ததால் ஜெயமோகனில் அலுப்புத்தட்டி இருந்தேன். கதை எழுதுபவன் கட்டுரை எழுதும் போதும் கட்டுரைக் காரன் கதை எழுதும்போதும் வாசகரிற்குள் இவ்வாறான மாற்றங்கள் ஏற்படவே செய்யும். கதை, கட்டுரை, கவிதை, நாடகம், பாட்டு, ஓவியம் எதுவாகினும், படைப்பாளிக்குப் பாதிப்பு என்று ஒன்று இருக்கும். அதை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதில் ஒவ்வொருவரிற்கு ஒவ்வொரு பாணி தாய்மொழிபோல வரும். ஜெயமோகன் தனது பாதிப்புக்களை இலக்கியத்தின் பாத்திரங்களாக்குகையில் பிடித்த எனக்கு அவர் தனது பாதிப்புக்களை வெறும் கட்டுரையாகப் போட்டபோது வெறுத்தது. அதோட முன்னரும் குறிப்பிட்டதுபோல, ஜெயமோகனை நான் 'ஏழாம் உலகம்' வாசித்து வாசிக்கத் தொடங்கி பின்னர் 'டார்த்தனியம்' என்ற அவரின் அற்புத சிறுகதை வாசித்து வளர்வதால் 'றப்பா'; நாவல் எனக்குப் பிடிக்கவில்லை. றப்பறை வாசித்தபின்னர் வாசித்த கட்டுரைகள் வாசித்து முடிக்காமல் புத்தகத்தை மூடச்செய்தன. இதனால் ஜெயமோகன் செத்துவிட்டார் என்று இருந்தபோது, 'காடு' கையில் கிடைத்தது. எந்த நூலையும் வாசித்து முடிக்கு முன் அதன் தாக்கத்தில் இதுவரை பதிவு போட்டதில்லை. ஆனால் 'காடு' வாசித்து முடிப்பதற்குள் நான் நிறை இழந்து புவியீர்ப்பை வென்று பறந்துவிடுவேன் என்று தோன்றுகிறது. இன்று காட்டைப் பற்றிப் பேசப்போவதில்லை, ஆனால் பலாப்பழத்தைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் கற்பனை பற்றியும் பேசுகையில் காட்டின் தாக்கம் அங்கங்கே தெரியும் என்று சொல்வதற்காக இப்பந்தியினை எழுதிவிட்டுச் செல்கிறேன்.

ஜெயமோகன் பலாப்பழம் பற்றிச் சொன்னதை, முழுதா குவோட் பண்ணாம சாரம்சத்தைத் தேவைக்கேற்ப சொன்னால் இப்படி வரும்.

ஒரு குட்டிக்காடுபோலக் கிளைகள் பரப்பி நின்ற பென்னம்பெரிய பலாமரம். பெரிய பன்றியின் முலைகள் போல அதன் உடம்பெங்கும் காய்களும் கனிகளுமாகப் பலா. எங்கு பாத்தாலும் பழங்கள். பெரிய அடிமரத்துடன் ஒட்டியபடி வெந்நீர் அண்டா அளவிற்குப் பெரிய பழங்கள். அடர்ந்த காட்டிற்குள் வானாகிப்போய், முனகி உரசிக்கொண்டிருந்த உயர்ந் கிளைகள். விலங்குகளும் பறவைகளும் பழம் தின்றுகாண்டிருக்க நானுமொரு பழம் பறித்தேன். தொட்டால் பிய்ந்து விடும் பழமாக இன்றிச் சற்றுக் கெட்டியானதாய். ஒருபோதும் ஊரில் பலாப்பழத்திற்கு அந்த மணமும் சுவையும் வருவதில்லை--ஊரிலே காயிலே பறித்துப் பழுக்க வைப்பதனாலாh? என் மார்பிலே தேன் சொட்டியது. இரண்டு சுளைகளிற்குட் திகட்டி விட்டது.

தகரத்தில் அடைத்த பலாப்பழப்பிரியனான சிறுவனிற்கு நான் குளைக்காட்டைப் பற்றிப் பினாத்திப்போட்டுப் போக, ஜெயமோகன் குளைக்காட்டானிற்கே காட்டைப் பற்றிப் பீத்தி ஏக்கம் வரச்செய்து போகிறாhர். அது மட்டுமா 'சினை தொறும் தீம்பழம் தூங்கும் பலவின்'. 'சினைதொறும் தீம்பழம். சினைதொறும் தீம்பழம்.'. 'விசும்புதோய் பசுந்தழை'

என்று குறுந்தொகையினைக் கொண்டந்து கொட்டி கிறங்கச் செய்து கிறுக்கேத்திப் போகிறார். எனக்குச் சங்ககால எழுத்துக்களை வாசித்த அனுபவம் இல்லை. முதற்காரணம், எனக்கு அந்தத் தமிழ் தெரியாது. பொழிப்பு என்று எழுதுகின்ற பல நபர்கள் பிரசங்கம் கணக்கில், அநியாயத்திற்கு ஆத்திரப்படுத்தும் லொஜிக்கில்லா இடைச்செருகல்களைத் தமது வித்தகத்தைக்காட்டப் புகுத்த வெளிக்கிட்டு அதனால் முன்னையதன் இனிப்பை அனுபவிப்பதற்குப் பதில் பின்னையதன் வெறுப்பில் புத்தகத்தை எறியும் அனுபவங்கள் நிகழ்ந்துள்ளன. இநத நிலையில் கபிலரை எனக்குள் புகுத்திய முதல் ஆள் ஜெயமோகன் தான். 'காடு' வாசித்து முடிந்த பின் கபிலரின் எழுத்தைத் தேடும் எண்ணம் எழுந்தது. ஆகமொத்தம் குளைக்காட்டில் பலாம்பழம் தின்றவன் என்று நினைக்கையில் 'நீயெல்லாம் உண்டதன் பெயர் பலாப்பழமாக்கும்' என்பதுபோலும், எனக்கும் கொஞ்சம் வாசிக்கப் பிடிக்கும் என்று நினைக்கையில், 'கபிலரை வாசிக்கவில்லையாம் அதுக்குள்ள அவரிற்கு வாசிக்கப் பிடிக்குமாம்' என்பதுபோலும், நான் அந்தத் தகரத்தில் அடைத்த பலாப்பழம் விரும்பி உண்ணும்; பையனிற்குச் செய்த அநியாயத்திற்கு வட்டியும் முதலுமாக ஜெயமோகன் எனக்குச் செய்து செல்கிறார்.

இனிப் பலாப்பழத்தில் இருந்து பெண்ணுக்குப்போவோம். தேன் என்று வந்தபின் ஏது கட்டுப்பாடு ☺

ஏதோ கொஞ்சம் கற்பனை கைப்படும் மனிதர்களிற்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. அதாவது, நிஜத்தைக் காட்டிலும் பலமடங்கு பெருத்துப் போன விம்பங்கள் அவர்கள் மனதில் தாமாக வந்து குந்திக்கொள்ளும். உதாரணமாக, எந்த ஒரு எதிர்ப்பாற் கவற்சியுடைய மனிதரிற்கும் (ஆணாயினும் பெண்ணாயினும்) எதிர்ப்பால் சாhந்த ஒரு அடிப்படைக் கிளர்ச்சி இருக்கும். அந்தக்கிளர்ச்சிக்கு வடிகால் கிடைப்பதற்கு முன்னதாகவே, அந்தக் கிளர்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதுள் இருக்கும். இது அனைவரிற்கும் இருப்பது. ஆனால், கொஞ்சம் கற்பனை கைவரும் மனிதர்கள், இந்தக் கிளர்ச்சி சார்ந்த சிந்தனையினை பல மட்டங்களிற்கு எடுத்துச் செல்வார்கள். சிலர், கட்டற்ற கற்பனையில் உலகில் இல்லாத எதிர்ப்பாலை உருவாக்கி வாழ்ந்துவிடுவார்கள். கற்பனை உயிர்ப்பாக உண்மையாக உணரும் வகை வாழ்ந்ததால் நிஜ உலகில் அக்கற்பனைக்கு ஈடான சதையும் தோலுமான துணையை அவர்களால் கண்டடைய முடியாது போய்விடும். கிடைக்கும் துணையால் அவர்களைத் திருப்;த்திப் படுத்த முடியாது போய்விடும். நான் நினைக்கிறேன் ஆண்டாள் என்ற கற்பிதம் கூட இந்தவகையினைச் சேர்ந்தது தான். அதுபோன்றே பேர்னாட் ஷhவின் பிக்மேலியன் நாடகம் கூட, புராதன கிரேக்கத்தின் பிக்மேலியன் தாக்கத்தில் உருவானது தான். இந்தப் பிக்மேலியன் கதையின் சாராம்சம் என்னவெனில் ஒரு ஓவியன் (அல்லது சிற்பி) ஒரு ஓவியத்தை (அல்லது சிலை) உருவாக்குகிறான். அது அவனது கற்பனையின் உச்சமாய் அமைகிறது. திடீரென அந்த ஓவியம் (அல்லது சிலை) உயிர் பெற்றுவிடுகிறது. அவனிற்கும் அவன் படைப்பிற்கும் இடையே காதல் பிறந்துவிடுகிறது. நான் நினைக்கிறேன் ஓவியம் உயிர்பெறுவது என்பது உவமை. உண்மையில் கற்பனை நிஜம் என்ற அளவிற்கு கற்பனை செய்பவனின் உளத்தில் உருவாகி விடும் நிலை அது.

எனவே கற்பனை கைவரும் மக்காள், அவதானம். அவதானம். நிஜத்தில் உங்களைத் திருப்;த்திப்படுத்த உயிர் இல்லை என்ற அளவிற்கு எண்ணங்கள் உங்களை அடிமைப்படுத்திவிடுவது சாத்தியம். அப்பிடி ஒரு ஆபத்தான காட்டுக்கனி போன்ற கற்பனையினைக் குறிப்பிட்டு இப்திவை முடித்துக்கொள்கிறேன்.

தான் காதலிக்க வேண்டியவள் எப்பிடி செக்சியாக இருக்கவேண்டும் என்ற எதிர்பாhர்ப்பில் கனவு காணும் இளைய மனங்களில் ஒரு விதை போல் இறங்கக் கூடிய ஒரு பெண்ணின் படைப்பையும் கபிலரிடம் இருந்து எடுத்து காட்டுக்குள் உயிர்கொடுத்து ஜெயமோகன் நடக்க விடுகிறார். அதிலும், கபிலனின் கற்பனை காணாது என்பதாக, தனது கற்பனையினை கபிலரின் கற்பனையில் இருந்து இன்ஸ்ப்பறேஷன் எடுத்து உருவாக்கிப் பிறகு கபிலரின் கற்பனையோடு அதனைப் பியூசன் பண்ணி—தேனில் திணைகுளைத்த கணக்கில்--ஆயர்வேத மாத்திரை போன்று கற்பனை விதை வாகனின் மனதுள் இறக்கப்படுகிறது.

நேரடியாக குவோட் பண்ணாது சாராம்சமாய் எழுதுகிறேன்.

கருத்த அழகி. திமிர்த்த மார்பு. தொங்கிக் கிடக்காது மேல்நோங்கி வளைந்து விடக்கின்றன மார்புகள். முலைகள் தனித்துவத்தோடு தெரிகின்றன. இடை திடமானது. வனத்தடாகத்தில் ஆம்பல் பூப்பறித்து மாலைகட்டி மார்ப்புத்துணியேதும் இன்றி மாலைiயினை மார்பின் உடையாக்குகிறாள். மார்புகள் மாலைக்குள் திமிறுகின்றன. அப்பெண்ணின் குடிசை சந்தன மரக்காட்டிற்குள் மலையடிவாரத்தில் இருக்கிறது. சந்தண மரத்தில் உண்பதற்கு ஏதுமில்லாததால் பறவைகள் இல்லை. அவள் அற்புதமாய்ப் பாடுவாள். குளிப்பதற்கு வனத்தடாகம் வருவாள். தடாகத்திற்கருகில் பறவைகள் உண்டு. வனத்தடாகத்தில் ஆம்பல் நிறைந்து கிடக்கிறது. வனத்தடாகத்தில் பூப்பறித்து மாலைகட்டி அணிந்து காட்டில் கிளியோட்டும் பெரிய கண் அழகி அறியமாட்டாள், தூங்கும் யானை போல் பெருமூச்சு விட்டு என்மனம் அவள் நினைவைத் தொடர்வதனை.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லி வேலையில்லை...நன்றி இன்னுமொருவன்..நிறையப் பதிவுகள் தொடர்ந்து யாழில் எழுதுங்கள்...வாசித்துச் சுவைக்க நாங்கள் இருக்கிறம்..

கருத்த அழகி. திமிர்த்த மார்பு. தொங்கிக் கிடக்காது மேல்நோங்கி வளைந்து விடக்கின்றன மார்புகள். முலைகள் தனித்துவத்தோடு தெரிகின்றன. இடை திடமானது. வனத்தடாகத்தில் ஆம்பல் பூப்பறித்து மாலைகட்டி மார்ப்புத்துணியேதும் இன்றி மாலைiயினை மார்பின் உடையாக்குகிறாள். மார்புகள் மாலைக்குள் திமிறுகின்றன. அப்பெண்ணின் குடிசை சந்தன மரக்காட்டிற்குள் மலையடிவாரத்தில் இருக்கிறது. சந்தண மரத்தில் உண்பதற்கு ஏதுமில்லாததால் பறவைகள் இல்லை. அவள் அற்புதமாய்ப் பாடுவாள். குளிப்பதற்கு வனத்தடாகம் வருவாள். தடாகத்திற்கருகில் பறவைகள் உண்டு. வனத்தடாகத்தில் ஆம்பல் நிறைந்து கிடக்கிறது. வனத்தடாகத்தில் பூப்பறித்து மாலைகட்டி அணிந்து காட்டில் கிளியோட்டும் பெரிய கண் அழகி அறியமாட்டாள், தூங்கும் யானை போல் பெருமூச்சு விட்டு என்மனம் அவள் நினைவைத் தொடர்வதனை.

இன்னுமொரு கொம்புத்தேன்

ஏன் சுணக்கம் ?

பல தேனாய் வடியுங்கோ .

தொட்டுச் சுவைக்க நாங்கள் .............

  • கருத்துக்கள உறவுகள்

யெயமோகனின் "காடு"

காட்டைப்பற்றி அணுஅணுவாக அடர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறது அந்த நாவல். இப்படியும் எழுத முடியுமா என்று மூக்கில் விரல் வைக்கப் பண்ணியிருக்கிறது அவருடைய எழுத்துக்கள்.

காடு வாசிக்க முற்படும்போது ஆரம்பத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை ஒவ்வொரு அங்கங்கள் தாண்ட தாண்ட அடந்த காட்டின் நடுவில் நாம் நிற்பதாய் உணர்வித்துவிடும் வல்லமையுள்ள எழுத்துக்கள்...

இன்னுமொருவன் உங்கள் பார்வையில் பகிர்ந்திருக்கிறீர்கள். உங்கள் பகிர்வை நாமும் புசித்தோம்

  • தொடங்கியவர்

சுபேஸ், கோமகன், வல்வைசகாகரா உங்கள் கருத்துக்கு நன்றி. காடு இன்னமும் வாசித்து முடிக்கவில்லை. நிச்சயமhக இனிமையான வாசிப்பாய் அமையும் என்பது தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் தெரியாமல்த் தான் கேட்கிறேன் இது பலாப்பழத்தை பற்றிய கதையா? அல்லது ஜெயமோகன் புகழ் பாடும் கதையா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் தெரியாமல்த் தான் கேட்கிறேன் இது பலாப்பழத்தை பற்றிய கதையா? அல்லது ஜெயமோகன் புகழ் பாடும் கதையா?

ஜெயமோகன் எழுத்தைப் படித்தால் தமிழ்மீது உள்ள பெருமை இன்னும் கூடும்!

ஜெயமோகன் எழுதிய நாவல்கள் பலவற்றை அதிகமாகப் படித்திருந்தாலும் காடு படிக்கும்போது அந்தக் காட்டில் நானும் கூடவே நடந்த உணர்வு ஏற்பட்டது!

ஏழாம் உலகம் மிகவும் பாதித்த நாவல் எனினும் அந்த அப்பட்டமான குரூரத்தை இரண்டாவது முறை படிக்கவேண்டும் என்று விருப்பமில்லை (மகாநதி படத்தை ஒருதடவைக்கு மேல் பார்க்கமுடியாமல் இருந்தது மாதிரி).

  • தொடங்கியவர்

இன்னுமொருவன் தெரியாமல்த் தான் கேட்கிறேன் இது பலாப்பழத்தை பற்றிய கதையா? அல்லது ஜெயமோகன் புகழ் பாடும் கதையா?

ரதி,

உங்கள் கேள்விக்கு நன்றி. முதலில் இது கதை அல்ல. தமிழும் நயமும் பகுதியில் பதியப்பட்டுள்ள ஒரு பதிவு என்பதைக் கூறிக்கொண்டு உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

நிச்சயமாக இது பலாப்பழமும் பற்றிய பதிவு தான். ஜெயமோகனைப் பற்றியும் பேசப்பட்டுள்ளது. கபிலரைப் பற்றியும் பேசப்பட்டுள்ளது. ஆனால் இங்கு பேசப்பட்டன பேசப்படத் தொடங்குவதற்கு எனக்குக் காரணமாக அமைந்தது, தகரத்தில் அடைத்த பலாம்பழப்பிரியனான புலத்துச் சிறுவனும் அவனுடனான எனது பலாப்பழம் பற்றிய உரையாடலும் தான். ஒரு புள்ளியில் தொடங்கி ஒரு உரையாடல் விரிவதைப் போல, அந்தச் சிறுவனில் தொடங்கி ஜெயமோகன் வாயிலாகக் கபிலர் வரை பலாப்பழம் சென்றமை தான் நடந்தது. அதனால் தான் தலைப்பில் தகரத்தில் அடைத்த பலாப்பழம் இருக்கிறது. அப்பிடியே, பலாப்பழம் கூட்டிச் சென்ற பாதையில் வேறும் சில இனிமை தெரிந்ததால் பலாப்பழத்தோடு அவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஈழத்தில் பலாப்பழத்துடனான எனது அனுபவம் 22 வருடங்களிற்கு முந்தியது. தகரத்தில் அடைத்த பலாப்பழம் உண்பதைக் காட்டிலும் எனது ஈழத்துப் பலாப்பழ அனுபவம் உயரியதாய் எனது மனதில் பதிவாகியுள்ளது. பலாப்பழமே தித்திப்பானது. அந்தப் பலாப்பழத்தைப் பற்றி அதைக்காட்டிலும் தித்திப்பான பாடலில்; கற்பனையும் கூட்டி விபரித்தால் அது எப்படி இருக்கும். ஜெயமோகனிற்கு அது தான் நடந்தது. தனது பள்ளி வாசகசாலையில் தான் படித்த சங்ககாலத்தின் பாடல்கள் மனதில் பதிவாகியதன் அடிப்படையில், பலரிற்குப் புரியாத சங்ககாலத்துப் பாடலின் தித்திப்புச் சற்றும் குறையாது, சங்கத் தமிழ் தெரியாத என்னைப்போன்ற மனிதர்களும் ரசிக்கக்கூடிய விதத்தில் ஜெயமோகன் கொண்டுவர விரும்பினாரோ என்னமோ, சங்கப்பாடடிpற்கு உயிர்கொடுத்து அதனனை காட்டுக்குள் பலாவின் இயற்கையின் வடிவத்தில் தனது நாவலில் பாத்திரப்படுத்தியிருக்கிறார். காட்டுப் பலாப்பழத்தோடு ஒப்பிடுகையில் ஊர்ப்பலாப்பழங்கள் கிட்டவரமுடியாது என்றும் ஒரு கருத்தை முன்வைக்கிறார்.

தகரத்தில் அடைத்த பலாப்பழம் ஊரின் பலாப்பழத்திற்குக் கிட்டவராது என்று எனக்குப்பட, ஊரின் பலாப்பழம் காட்டின் பலாப்பழத்திற்குக் கிட்டவராது என்று ஜெயமோகன் கூற அதில் எனக்கு ஒரு தொடர்பு தெரிந்ததால் பதிவு வந்தது.

இனி இது ஜெயமோகன் புகழ்பாடலா என்ற கேள்விக்கு வந்தால். இல்லை என்று சொல்வதற்கில்லை. நீங்களோ நானோ எவராகட்டும் ஏதோ ஒரு பாதிப்பில்லாமல் பதிவு போடப்போவதில்லை. நாம் எதிர்பார்க்காத வகையில் எமக்கு யாரேனும் ஒரு மகிழ்வைத் தரின், அந்த மகிழ்வு பற்றிப் பேசுவதில் ஏதும் தவறிருப்பதாய் எனக்குப்படவில்லை.

ஆனால் நீங்கள் கூறுவது புரிகிறது. உங்கள் கேள்வியைத் தொடர்ந்து யோசித்துப் பார்க்கையில், ஒருவேளை எனது பதிவுகளில் எழுத்தாளர்கள் அதிகபட்சமம் புகழப்பட்டே வெளிவருகிறார்கள் என்பது தெரிகிறது. இதற்கு இருகாரணங்கள். முதலாவது, எனக்குப் பிடிக்காத எந்த நூலையும் நான் வாசித்து முடிப்பதில்லை. தெரியாமல் தொடங்கினால் கூட, நூலின் நகர்ச்சியில் எனக்கு நூல் பிடிக்கவில்லையெனின் மூடி வைத்துவிடுவேன். மனிதனிற்கு உள்ள நேரப்பற்றாக்குறையில் பிடிக்காததைப் படிப்பதற்கும் பின்னர் அது பிடிக்கவில்லை என்று கூறுவதற்கும் நேரம் விரயமாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. இரண்டாவது, எனக்குப் பிடிக்காத எழுத்தாளர்கள் படைப்பாளிகள் ஏராளம் பேர் இருக்கிறார்கள் என்றபோதும் அவர்களை எனக்குப் பிடிக்கவில்லை என்று நான் பதிவு தொடங்குவதால் எவரிற்கும் என்ன பலனும் இருப்பதாய் எனக்குப்படவில்லை. மேலும், எனக்குப் பிடிக்காமல் இருப்பதற்கு எனது புரியாமை கூடக் காரணமாக இருக்கலாம். அதனால் பிடிக்காதனவற்றைப் பிடிக்கவில்லை என்று கூறுவதில் அதிக சிரத்தை வேண்டும் என்று எனக்குப் படுகிறது.

மீண்டும் உங்கள் கேள்விக்கு நன்றி. உங்கள் கேள்வி பதிலளிக்கப்படவில்லை எனின் கூறுங்கள்.

நன்றி

ஹஹ ஹா... நான் காடு வாசித்து பித்துப் பிடித்த நிலையில் இருந்தவன். அதே நிலை இன்னுமொருவனுக்கும் வந்ததையிட்டு மகிழ்ச்சி.

காடு எனக்கு மிகப் பிடித்த நாவல்களில் என்றுமே முதலிடத்தில் இருப்பது. ஜெயமோகனால் கூட இன்னுமொடு முறை இப்படி ஒரு நாவலை எழுத முடியுமா எனத் தெரியவில்லை. காடு என்பது போதை தரும் ஒரு பிரதேசம் என்றும், அதன் அழகில் மயங்கி உள்ளே புகுந்தவர்களால் வெளியே வருவது இலேசில்லை என்றும் ஜெயமோகனே சொல்லியிருப்பது அவரின் 'காடு' நாவலுக்கும் பொருந்தும்

இன்னுமொருவன், உங்களிடம் இருந்து காடு பற்றிய இன்னும் விரிந்த ஒரு பதிவை எதிர்பார்க்கின்றேன்... அத்துடன் ஒரு கேள்வி. ஜெயமோகனின் 'ஊமைச் செந்நாய்' எனும் சிறுகதை வாசித்தீர்களா? எனக்கு டார்த்தினியத்தை விட மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது 'ஊமைச் செந்நாய்' தான்

தகரத்தில் அடைத்த பலாப்பழம்- குளைக்காட்டு பலாப்பழம்- ஜெயமோகனின் பலாப்பழம் - அதையும் விட ருசியானததை தான் தேடி அலைகின்றோம்.

என்ன மொழியில் எந்த நாட்டில் ஒழிந்து கிடக்கோ யாரறிவார் ?

மிகவும் நன்றி இன்னுமொருவன் ,தொடர்ந்து எழுதுங்கள் .

ஜெயமோகன் எழுத்து -எனக்கு நினைத்தே பார்க்க முடியாத ஒரு பிம்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இன்னுமொருவன்.உங்கள் எழுத்து குழைக்காட்டு பலாப்பழம் போல் இனித்தது. :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இன்னுமொருவன்.அருமையான பதிவு.எனக்கும் காடு வாசிக்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

உங்கள் கேள்விக்கு நன்றி. முதலில் இது கதை அல்ல. தமிழும் நயமும் பகுதியில் பதியப்பட்டுள்ள ஒரு பதிவு என்பதைக் கூறிக்கொண்டு உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

நிச்சயமாக இது பலாப்பழமும் பற்றிய பதிவு தான். ஜெயமோகனைப் பற்றியும் பேசப்பட்டுள்ளது. கபிலரைப் பற்றியும் பேசப்பட்டுள்ளது. ஆனால் இங்கு பேசப்பட்டன பேசப்படத் தொடங்குவதற்கு எனக்குக் காரணமாக அமைந்தது, தகரத்தில் அடைத்த பலாம்பழப்பிரியனான புலத்துச் சிறுவனும் அவனுடனான எனது பலாப்பழம் பற்றிய உரையாடலும் தான். ஒரு புள்ளியில் தொடங்கி ஒரு உரையாடல் விரிவதைப் போல, அந்தச் சிறுவனில் தொடங்கி ஜெயமோகன் வாயிலாகக் கபிலர் வரை பலாப்பழம் சென்றமை தான் நடந்தது. அதனால் தான் தலைப்பில் தகரத்தில் அடைத்த பலாப்பழம் இருக்கிறது. அப்பிடியே, பலாப்பழம் கூட்டிச் சென்ற பாதையில் வேறும் சில இனிமை தெரிந்ததால் பலாப்பழத்தோடு அவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஈழத்தில் பலாப்பழத்துடனான எனது அனுபவம் 22 வருடங்களிற்கு முந்தியது. தகரத்தில் அடைத்த பலாப்பழம் உண்பதைக் காட்டிலும் எனது ஈழத்துப் பலாப்பழ அனுபவம் உயரியதாய் எனது மனதில் பதிவாகியுள்ளது. பலாப்பழமே தித்திப்பானது. அந்தப் பலாப்பழத்தைப் பற்றி அதைக்காட்டிலும் தித்திப்பான பாடலில்; கற்பனையும் கூட்டி விபரித்தால் அது எப்படி இருக்கும். ஜெயமோகனிற்கு அது தான் நடந்தது. தனது பள்ளி வாசகசாலையில் தான் படித்த சங்ககாலத்தின் பாடல்கள் மனதில் பதிவாகியதன் அடிப்படையில், பலரிற்குப் புரியாத சங்ககாலத்துப் பாடலின் தித்திப்புச் சற்றும் குறையாது, சங்கத் தமிழ் தெரியாத என்னைப்போன்ற மனிதர்களும் ரசிக்கக்கூடிய விதத்தில் ஜெயமோகன் கொண்டுவர விரும்பினாரோ என்னமோ, சங்கப்பாடடிpற்கு உயிர்கொடுத்து அதனனை காட்டுக்குள் பலாவின் இயற்கையின் வடிவத்தில் தனது நாவலில் பாத்திரப்படுத்தியிருக்கிறார். காட்டுப் பலாப்பழத்தோடு ஒப்பிடுகையில் ஊர்ப்பலாப்பழங்கள் கிட்டவரமுடியாது என்றும் ஒரு கருத்தை முன்வைக்கிறார்.

தகரத்தில் அடைத்த பலாப்பழம் ஊரின் பலாப்பழத்திற்குக் கிட்டவராது என்று எனக்குப்பட, ஊரின் பலாப்பழம் காட்டின் பலாப்பழத்திற்குக் கிட்டவராது என்று ஜெயமோகன் கூற அதில் எனக்கு ஒரு தொடர்பு தெரிந்ததால் பதிவு வந்தது.

இனி இது ஜெயமோகன் புகழ்பாடலா என்ற கேள்விக்கு வந்தால். இல்லை என்று சொல்வதற்கில்லை. நீங்களோ நானோ எவராகட்டும் ஏதோ ஒரு பாதிப்பில்லாமல் பதிவு போடப்போவதில்லை. நாம் எதிர்பார்க்காத வகையில் எமக்கு யாரேனும் ஒரு மகிழ்வைத் தரின், அந்த மகிழ்வு பற்றிப் பேசுவதில் ஏதும் தவறிருப்பதாய் எனக்குப்படவில்லை.

ஆனால் நீங்கள் கூறுவது புரிகிறது. உங்கள் கேள்வியைத் தொடர்ந்து யோசித்துப் பார்க்கையில், ஒருவேளை எனது பதிவுகளில் எழுத்தாளர்கள் அதிகபட்சமம் புகழப்பட்டே வெளிவருகிறார்கள் என்பது தெரிகிறது. இதற்கு இருகாரணங்கள். முதலாவது, எனக்குப் பிடிக்காத எந்த நூலையும் நான் வாசித்து முடிப்பதில்லை. தெரியாமல் தொடங்கினால் கூட, நூலின் நகர்ச்சியில் எனக்கு நூல் பிடிக்கவில்லையெனின் மூடி வைத்துவிடுவேன். மனிதனிற்கு உள்ள நேரப்பற்றாக்குறையில் பிடிக்காததைப் படிப்பதற்கும் பின்னர் அது பிடிக்கவில்லை என்று கூறுவதற்கும் நேரம் விரயமாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. இரண்டாவது, எனக்குப் பிடிக்காத எழுத்தாளர்கள் படைப்பாளிகள் ஏராளம் பேர் இருக்கிறார்கள் என்றபோதும் அவர்களை எனக்குப் பிடிக்கவில்லை என்று நான் பதிவு தொடங்குவதால் எவரிற்கும் என்ன பலனும் இருப்பதாய் எனக்குப்படவில்லை. மேலும், எனக்குப் பிடிக்காமல் இருப்பதற்கு எனது புரியாமை கூடக் காரணமாக இருக்கலாம். அதனால் பிடிக்காதனவற்றைப் பிடிக்கவில்லை என்று கூறுவதில் அதிக சிரத்தை வேண்டும் என்று எனக்குப் படுகிறது.

மீண்டும் உங்கள் கேள்விக்கு நன்றி. உங்கள் கேள்வி பதிலளிக்கப்படவில்லை எனின் கூறுங்கள்.

நன்றி

இன்னுமொருவன் துரதிஸ்டவசமாக நான் இன்னும் ஜெயமோகனின் நூல்களை வாசிக்கவில்லை...எனக்கு இணையத்தில் ஓடர் செய்து எடுப்பதில் விருப்பமில்லை.போன வருடம் இங்கே உள்ள ஒரு புத்தக கடையில் போய் ஜெயமோகனின் நூல்கள் இருக்கின்றதா எனக் கேட்டேன் அவர் என்னைத் திருப்பிக் கேட்டார் யார் அந்த ஜெயமோகன் என :o ...ஜெயமோகனின் நூல்களை வாசித்துப் பார்த்து விட்டு நீங்கள் எழுதியது எவ்வளவு தூரம் உண்மை என சொல்கிறேன்...நன்றி

  • தொடங்கியவர்

கிருபன், நிழலி, அர்யுன், நுணாவிலான், சஜீவன், ரதி அனைவரது கருத்துக்களிற்கும் நன்றி.

நுணாவிலான், குழைக்காடு 'ழ' என்பதைக் குறித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி.

இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிடத்தோன்றுகின்றது. எதையுமே மனப்பாடம் பண்ணிக் கடைப்பிடிப்படிதில் எனக்குச் சற்றுப் பிரச்சினையிருக்கிறது. தமிழில் 'ழ' 'ள' விலும் இந்த மனப்பாடம் பண்ண மறுக்கும் என் மனதின் அடம்பிடிப்பால் பிரச்சினை தொடர்கிறது. எனது கணக்குச் சரியானால், இதுவரை 23 தமிழ் அறிஞர்கள் மற்றும் பண்டிதர்களிடம் எந்த இடத்தில் 'ழ' வரும் எப்போது 'ள' வரும் என்று கேட்டும் பலன் கிடைக்கவில்லை. அனைவரும் சொல்லிவைத்துக்கொண்டதைப் போல் 'அது வாசிக்கும் போது அவாதானித்து வைத்துக்கொள்வதால் மட்டுமே சரியாகப் பயன்படுத்தப்படக்கூடியது" என்றே கூறுகிறார்கள். நான் நினனக்கிறேன் பிரச்சினை உச்சரிப்பில் உள்ளது. தமிழில் தேவைக்கதிகமான எழுத்துக்கள் உதிரிகளாகக் கிடப்பதாக எனக்குத் தோன்றவில்லை. தமிழைச் சரியாக உச்சரித்துக்கொண்டிருப்பின் எந்த இடத்தில் 'ழ' எந்த இடத்தில் 'ள' வரவேண்டும் என்பது தானாகத் தெரியும். ஏனெனில் எனது அறிவிற்கெட்டியவரை, தமிழில் ஓசையினை வைத்துச் சரியாக எழுத்துக்கூட்ட முடியும். துரதிஸ்ரவசமாக உச்சரிப்பு அவரவர் பாட்டிற்கு எங்களிற்குள் பரிட்சயப்பட்டுப் போனதால் இவ்வாறான பிரச்சினைகள். அத்தோடு சிறுவயயது தொட்டு இலக்கணம் என்றால் எனக்கு ஒரு ஒவ்வாமை. யாரோ போட்டு வைத்த விதிகளை மனப்பாடம் பண்ணி சரியாகப் பிரயோகித்து அவர்களின் அங்கீகாரம் பெறவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது போல இலக்கணம் எனக்குள் தோன்றும். அதற்காக உலகில் உள்ள விதிகளை எல்லாம் அலட்சியப்படுத்தி சிறைக்குச் செல்லவா முடியும். அதனால் பிரச்சினை வராத விதிகளை அப்பப்போ லேசா அலட்சியம் செய்வதில் ஒரு குட்டிப் புழுகு :D

போன வருடம் இங்கே உள்ள ஒரு புத்தக கடையில் போய் ஜெயமோகனின் நூல்கள் இருக்கின்றதா எனக் கேட்டேன் அவர் என்னைத் திருப்பிக் கேட்டார் யார் அந்த ஜெயமோகன் என :o ...

பெரிய தமிழ்க் கடைகளில் புத்தகங்களின் பெயரைக் கொடுத்தால் மொத்த விற்பனையாளரிடம் சொல்லி எடுத்துத் தருவார்கள் என்று நண்பர் சொன்னார்.

  • தொடங்கியவர்

அத்துடன் ஒரு கேள்வி. ஜெயமோகனின் 'ஊமைச் செந்நாய்' எனும் சிறுகதை வாசித்தீர்களா?

நிழலி நான் இன்னும் 'ஊமைச் செந்நாய்' வாசிக்கவில்லை. அறியத்தந்தமைக்கு நன்றி.

'ஊமைச் செந்நாய்' வாசிக்க

http://www.yarl.com/...showtopic=81838

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய தமிழ்க் கடைகளில் புத்தகங்களின் பெயரைக் கொடுத்தால் மொத்த விற்பனையாளரிடம் சொல்லி எடுத்துத் தருவார்கள் என்று நண்பர் சொன்னார்.

ஓ அப்பிடியா நன்றி தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய தமிழ்க் கடைகளில் புத்தகங்களின் பெயரைக் கொடுத்தால் மொத்த விற்பனையாளரிடம் சொல்லி எடுத்துத் தருவார்கள் என்று நண்பர் சொன்னார்.

www.udumalai.com ஊடாகப் பெற்றுக்கொள்வதில் எந்தச் சிரமும் இருந்ததில்லை. எனினும் தபாற்கட்டணத்தை மீதப்படுத்த வேண்டும் என்றால் பத்மநாப ஐயரிடம் கேட்டாலும் எடுத்துத் தருவார்.

  • கருத்துக்கள உறவுகள்

www.udumalai.com ஊடாகப் பெற்றுக்கொள்வதில் எந்தச் சிரமும் இருந்ததில்லை. எனினும் தபாற்கட்டணத்தை மீதப்படுத்த வேண்டும் என்றால் பத்மநாப ஐயரிடம் கேட்டாலும் எடுத்துத் தருவார்.

இவர் புத்தகங்களை மலிவாக எடுத்துத் தருவாரா?

www.udumalai.com ஊடாகப் பெற்றுக்கொள்வதில் எந்தச் சிரமும் இருந்ததில்லை. எனினும் தபாற்கட்டணத்தை மீதப்படுத்த வேண்டும் என்றால் பத்மநாப ஐயரிடம் கேட்டாலும் எடுத்துத் தருவார்.

உடுமலைக்கு Paypal மூலம் பணம் கட்ட முயன்ற பொழுது 'தொடர்புகொள்ள முடியாது' என்பது போன்ற தகவல் வந்தது. மின்னஞ்சல் அனுப்பினேன் பதில் அனுப்பவில்லை.

'கிழக்கு (600024 )' பதிப்பகத்திடம் Paypal மூலம் பணம் செலுத்தும் வசதியிருக்கவில்லை. மின்னஞ்சல் அனுப்பிய பொழுது தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்படி கேட்டிருந்தார்கள். தொலைபேசியில் கடனட்டை இலக்கம் கொடுக்கப் பயம். விட்டுவிட்டேன்.

பத்மநாப ஐயரிடம் முயற்சித்துப் பார்க்கிறேன். நன்றி கிருபன்.

  • தொடங்கியவர்

'ஊமைச் செந்நாய்' இணைப்பிற்கு நன்றி தப்பிலி. ஆறுதலாக வாசிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.