Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தரின் எலும்புகளை... இலங்கைக்கு, அனுப்பக் கூடாது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20-relic-from-kapilavathu.jpg

புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: பிரதமருக்கு வைகோ கடிதம்.

சென்னை: புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, புத்த பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்களை, வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதல், செப்டெம்பர் மாதம் 5ம் தேதி வரையிலும், இலங்கை முழுவதும் காட்சிப் பொருளாக வைப்பதற்காகக் கொண்டு செல்வது என, இந்திய அரசும், இலங்கை அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாக, ஏடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் வேண்டுகோளை ஏற்று, இந்திய அரசு இம்முடிவை மேற்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. இந்திய அரசின் முடிவு, வெந்து போன தமிழர்களின் நெஞ்சில் வேல் கொண்டு குத்துவதாக இருக்கிறது.

இப்போது, இலங்கையில், தமிழர்களின் இந்து சமய வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும், பௌத்த விகாரைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இலங்கைத் தீவு முழுமையுமே, ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு, இலங்கை அரசு வெறித்தனமாகச் செயல்பட்டு வருகின்றது.

இரத்தவெறி பிடித்த மகிந்த ராஜபக்சே கூட்டம், புத்தரின் பெயரைச் சொல்லுவதற்கு எவ்வித அருகதையும் அற்றவர்கள். மே 17,18 ஆகிய நாள்களில், படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களை நினைவுகூர்ந்து, உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்கள் வேதனையோடு கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டு இருக்கின்ற வேளையில், மே 18ம் நாள், இந்தியா இப்படி ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு இருக்கிறது.

இது இந்திய அரசு, தமிழர்களுக்கு இழைக்கின்ற மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். டெல்லி தேசிய ஆவணக்காப்பகத்தில் உள்ள புத்த பெருமானின் புனிதப் பொருள்கள், இன்றைக்கு உலகில் மிகவும் மதிக்கத்தக்க, பழமையான பொருள்களுள் ஒன்றாகும். புனிதம் நிறைந்த அப்பொருள்களை இலங்கைக்குக் கொண்டு செல்லக்கூடாது.

எனவே, புத்த பெருமானின் புனிதப் பொருள்களை, இலங்கைக்குக் அனுப்புவதற்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய, தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று வைகோ

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க்கனவே எதோ ஒரு பல்லை வைச்சு பண்ணுகின்ற பாடு, இதில வேற எலும்புகள் வேறா ? ! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பல்லையே முதலைப் பல்லு எண்டுறாங்கள்..! :D

கிந்திய ராம் ராஜியத்தில் இந்து சமையத்தை பாதுகாக்க ஒரு தலைவன் இல்லை. அப்போது கிந்தியர்களுக்கு ராமன் ஆண்டலென்ன ராவணன் ஆண்டாலென்ன. அதனால்த்தான் ராவண் ராஜ் அரசன் மகிந்த இடும் கட்டளைகளையெல்லாம் இந்த சீக்காவும், இத்தாலியும் நிறைவேற்றி வைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தரின் போதனகள் தெரியாத சிங்களவனுக்கு எதற்கு அவரின் எலும்புகள்?..... சூப்பு வைக்கவா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த எலும்புகள், யாழ்ப்பாணம் வரை கொண்டுவரப் பட்டுச் சிங்களத்தின் திமிர் மீண்டுமொருமுறை காட்டப் படும்!

அதற்குத் தான் இந்தியா, இதை அனுப்புவதற்கு அவசரம் காட்டுகின்றது! :o

அந்தப் பல்லையே முதலைப் பல்லு எண்டுறாங்கள்..! :D

என்த பல்லபா????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் கையெறிகுண்டு

ஒரு பௌர்ணமியன்று

போதிமரம் விட்டெழுந்து

புத்தர் வந்தார் நிர்வாணம் நாடி

விளக்கற்ற எங்கள் வீடு தேடி

இராணுவச்சப்பாத்தால்

எட்டியுதைத்து தாழ்ப்பாளற்ற

எம்கதவை மண்டியிடவைத்தவர்

எங்களைத் தரிசித்த அதிர்விலுதிர்ந்த

புருவத்துளிகளைத் துடைத்தொழித்தார்

காட்டுப்பச்சை அங்கியால்

நாங்களென்றால்...

நான்கைப் பெற்றவளை

நாராக்கிக்கொண்டிருந்த

பத்து துப்பாக்கிதாரிகள்

துப்பாக்கிக்கட்டையிடியிடித்து

நசுங்கிய முகத்தில்

ஊதிப்போன உதடுகளால்

எந்தக் கடவுளின் பெயரையோ

சினிமாத்தனமான அற்புதத்துக்கு

ஓதிக்கொண்டிருக்கும் அப்பா

லிங்கயோனி சமர்புரியாமல்

யார் சாமான் பெரிசென்ற

குளியலறைப் போட்டிகளை

மறுஒளிபரப்பு செய்தவாறு

மரக்கட்டைகளான மூன்று தம்பிகள்

வந்தவர் அங்கியில்

காவி ஏன் தங்கவில்லையென

விழித்துக்கொண்டிருக்கும்

நான்

கைகூப்பிக் கதறும்

அப்பாவின் விரல்கள்

பூட்ஸ் கால்களில் கூழாவதை

புத்தர் அவதானித்தார்

மயிரைப் பிடித்துத் தூக்கியெறிந்து

மண்டைகள் சுவர்சித்திரமாவதற்குள்

மூன்று பொடியன்கள்

முண்டியடித்துக்கொண்டு

தன் அங்கிக்குள் பதுங்குவதைத்

தவறாமல் விமர்சித்தார்

மோட்சம் தரும் பாதக்கமலங்களிலிருந்து

பிடுங்கப்பட்டு விரிக்கப்பட்டு

இராணுவ சிகரெட்டுகளின் தீக்கண்கள்

புட்டத்தில் தீய்க்கப்பட்டு

அழுக்கேறிய விரல்கள் என்னுள்

ஆழங்காணத் துழாவுவதை

புத்தர் பதிவுசெய்தார்

அம்மாவின் அலறல்களை

ஆயுதபாணிகளின் குறிகள்

வாயடைத்தன

கல்யாண நாளுக்கு

கட்டிய புடவை

சிறுநீரில் திருநீறானது

தாத்தாவின் தேக்குமர

மேசைமேலிருந்து வேர்விட்ட

தாயின் தொடைகளில் குருதிவரிகள்

மேசைக்காலில் ஒரு பழைய கிறுக்கல்

'நான் உன்னை நேசிக்கிறேன் அம்மா'

என படிக்கச்சொன்னது

குண்டுமழையில் தூக்கிக்கொண்டோடிய

கால்கள் காற்றை உதைத்தன

பல்துலக்காதவர்களின் பற்றுகையில்

இரத்தம்கசியும் முலைக்காம்புகள்

பால்குடிக்கும் பருவத்திலென்

பற்கடிக்குச் சிரித்தவள் இராணுவ

தொடைகளால் பிணைக்கப்பட்டும்

தூர ஓடிவிடு ஓடிவிடு கண்மணியென்று

சைகை காட்டித் துவளும் கைகள்

புத்தர் அவர்களது

ஆண்மை வெடிப்பை ஆராய்ந்தார்:

"எப்படி இருக்கே?"

"சிகரெட்டு இருக்கா?"

"ஒரு புட்டி அரக்கு கிடைக்குமா?"

"சிறுபான்மையைக் கொளுத்த நீயும் ஏறுறியா?"

"ஏய்! எங்கடா உன் துப்பாக்கி?"

புத்தரின் அங்கியைத் தூக்கிப்பார்த்து

பூஜ்யமான அதிகாரச்சமிக்ஞையைப்

புரிந்துகொண்டனர்

தலைவணங்கி

பூஜைக்கு யாசகமிட்டு

வெளியேறும்போது காதில் கிசுகிசுத்தனர்

"நாங்கள் மறுபடியும் வருவோம்

நீ வயசுக்கு வரும்போது..."

புத்தர் பிச்சைபொருளைக்

கையிலெடுத்து அதனுள் சிறைப்பட்ட

போதிசத்துவர்களை ஆசிர்வதித்தார்

விசையை இழுத்து அம்மாவின்

பிறப்புறுப்பில் புதைத்தார்

விரிந்த கால்களை ஒருங்கிணைத்தார்

ஒரு பெண்ணின் புழைக்குள்

கையெறிகுண்டின் கைங்கர்யம்

குறித்து தியானித்த புத்தர்

அமைதி பிரசங்கத்துக்கு நகரும்போது

பெருவெடிப்பில் பளீரிட்டு

அம்மாவின் யோனித்தோல்

அவர் வாயில் ஒட்டிக்கொண்டது

புத்தரின் இராணுவச்சப்பாத்து

சூத்திர உச்சாடனம்

இப்போதும் என் காதுகளில்

அடியெடுத்து வைக்கிறது

இன்னொரு கையெறிகுண்டுவிசை இழுக்க

என் பெயரில்லாப் புதைக்குழித் தேடி

அவர் வந்து கொண்டிருக்கையில்

புத்தம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

http://vallinam.com.my/issue9/poem8.html

  • கருத்துக்கள உறவுகள்

செத்து போன உயிரினங்கள் எல்லாம் கார்பனை அந்த அந்த இறந்து போன வயதிற்கு ஏற்ப வெளியிடுதாம்.. இறந்து போன உயிரினங்களின் வயதை கணக்கிடுவது இப்படித்தான்.. உடனே அந்த எலும்புகளை புத்தரின் காலத்தோடு ரெஸ்ட் செய்யவேண்டும்.. இது எனக்கென்னவோ கண்ணம்மா பேட்டை இடுகாட்டில் சுட்ட குப்பன் எலும்பு போல தெரியுது... :lol: :lol:

இல்லறத்தை விட்டு ஓடிவந்த புத்தன்

நல்லறத்தை அழிக்க பல்லு நகம், எலும்பு என்று சேர்த்து வைத்துள்ளான். :(

  • கருத்துக்கள உறவுகள்

உவங்கள் திருந்தமாட்டாங்கள்......உந்த மதபயங்கரவாதத்தை எவனாலும் அழிக்கமுடியாது..

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நடுத்தர வர்க்கம் வீட்டுப் பணியாளர்களை கேவலமாகவும் கொடூரமாகவும் நடத்துவதற்கு காரணம் என்ன?

in தொழிலாளர்கள், பெண், மொழிபெயர்ப்பு கட்டுரைகள், வாழ்க்கை by வினவு, May 19, 2012 -

வீட்டுப் பணியாளர்கள் மீது அடி, உதை முதல் பாலியல் வன்முறை வரை அனைத்து வகையான சித்திரவதைகளும் அலட்சியமாக பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

2

Share

50

பதிவு

மறுமொழிகள்

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் புறநகர் ரயில் நிலையம் ஒன்றில் வீட்டு வேலைக்கு போவதற்கு பெண்கள் காத்திருக்கிறார்கள்

மீட்கப்பட்ட வீட்டு உதவியாளர்களுக்கு செவிலியராக வேலை செய்த தனது ஒன்பது ஆண்டு கால அனுபவத்தில் மோசமானவற்றை எல்லாம் பார்த்து விட்டதாக கே மாரியம்மா நினைத்திருந்தார். 2010 இல் அவரும் உடன் பணி புரிபவர்களும் மேற்கு தில்லியில் இருக்கும் வீடு ஒன்றிலிருந்து சங்கீதா என்ற 17 வயது பெண்ணை மீட்பதற்கு போன போது அவர் தனது நினைப்பை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. சங்கீதா உடல் முழுவதும் கடிக்கப்பட்ட காயங்களுடன் காணப்பட்டார். “நாங்கள் கடும் அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு விலங்கையா அல்லது மனிதப் பிறவியையா என்று சந்தேகமாக இருந்தது” என்று நினைவு கூர்கிறார் மாரியம்மா. மாரியம்மா, வீட்டு உதவியாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் நிர்மலா நிகேதன் என்ற குழுவில் வேலை செய்கிறார்.

முதலில் சங்கீதாவின் எஜமானர்கள், அவள் தன்னைத்தானே கடித்துக் கொண்டதாகச் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் கழுத்தில் எப்படி காயங்கள் ஏற்பட்டன என்பதற்கு விளக்கம் இல்லை. அதன் பிறகு அவர்கள் கதையை மாற்றிக் கொண்டு - வீட்டு எஜமானி மனநிலை சரியில்லாதவர் என்று சொன்னார்கள். “ஆனால் நாங்கள் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் ஏன் தனது குழந்தைகளைக் கடிக்காமல் வீட்டு உதவியாளரை மட்டும் கடிக்க வேண்டும்’ என்று மாரியம்மா வாதிட்டார். பின்னர் பிரச்சினை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்ளப்பட்டது. அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு 50,000 ரூபாய் கொடுக்கப்பட்டது, அவர் அஸ்ஸாமில் இருக்கும் தனது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தான் பார்த்த மோசமான கொடூரங்களைப் பற்றிப் பேசுவதற்கு மாரியம்மா தயாராக இருக்கலாம். ஆனால் தில்லியின் வீட்டு வேலை செய்பவர்கள் மன்றத்தின் தன்னார்வலர்களுக்கு அது அவ்வளவு எளிதாக இல்லை. அவர்களின் அனுபவம், சென்ற ஆண்டு பிப்ரவரியில் எஜமானி தனது காலணியின் கூர்மையான அடிப்பகுதியை முதுகில் உதைத்ததை எதிர் கொண்ட வீணாவாக இருக்கலாம், அல்லது வேலைக்கு வைத்திருந்த நர்சினால் மார்பில் சூடு போடப்பட்ட ஜார்கண்டை சேர்ந்த 15 வயது சோபனாவாக இருக்கலாம் அல்லது ஒரு அரசு அதிகாரியின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட அந்தரங்க உறுப்புகள் பல முறை உருளைக் கட்டையால் தாக்கப்பட்டிருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சிறுமி ஹசீனாவாக இருக்கலாம்.

“இந்தியாவில் 9 கோடி வீட்டு வேலை செய்பவர்கள் இருப்பதாக அதிகாரபூர்வமாக மதிப்பிடப்பட்டுள்ளது. புது தில்லியில் இருக்கும் சுமார் 2,300 ஏஜன்சிகளில் 269 மட்டுமே பதிவு செய்யப்பட்டவை”

இப்போது நாட்டின் தலைநகரில் நிலைமை மோசமாக இருப்பதாகத் தோன்றுகிறது. (சென்ற மாதம் விடுமுறைக்கு சென்ற தம்பதியர் அவர்களது வீட்டில் வேலை செய்யும் 13 வயது ஜார்கண்ட் சிறுமியை மிகவும் சொற்பமான உணவுப் பொருட்களுடன் வீட்டில் பூட்டி வைத்து விட்டுப் போன செய்தி வெளியானது). ஆனால், உண்மையில் நாடு முழுவதும் குறிப்பாக வட இந்தியாவில் (பட்டியலைப் பார்க்கவும்) வீட்டு உதவியாளர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துக் கொண்டே போகிறது.

உடல்ரீதியாக வன்முறைக்குள்ளானவர்கள்

1. 2004 கல்கத்தாவின் கோல்பார்க் ஹோம்சில் உதவியாளராக வேலை செய்த 14 வயது சிறுமி தூக்குப் போட்டுக் கொண்டிருந்தாள். பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகள் இருந்தும் போலிசு அதைத் தற்கொலை வழக்காகப் பதிவு செய்தது.

2. ஜூன் 2009 நடிகர் ஷைனி அஹூஜா அவனது வீட்டு உதவியாளரைப் பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 2011 இல் பிணை வழங்கப்பட்டது.

3. ஆகஸ்ட் 2009 நடிகர் ஊர்வசி தனோர்கரிடம் வேலை செய்யும் 10 வயது சிறுவன் கைகளில் தீக்காயங்களுடனும், உடல் முழுவதும் கீறல்களுடனும் மீட்கப்பட்டார்.

4. செப்டம்பர் 2011 ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூலில் 12 வயது சிறுமி எஜமானரின் வீட்டில் எரிந்து கருகிய நிலையில் கண்டுபிடிக்கப் பட்டாள். பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன.

5. டிசம்பர் 2011, 15000 ரூபாய் கடனைத் திருப்பித் தராத தனது வீட்டு உதவியாளரை எரித்ததாக உறுதி செய்யப்பட்டு சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

6. மார்ச் 2012, ஒரு இந்திய வீட்டு உதவியாளர் நியூயார்க் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு பெற்றார். அவரது முன்னாள் எஜமானர்கள் நீனா மல்ஹோத்ரா என்ற ஒரு ஐ.எப்.எஸ் அதிகாரியும் அவரது கணவரும் கொடுமைப்படுத்தியதாகவும், அடிமை போல நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டிய அவருக்கு 1.5 மில்லியன் டாலர் நிவாரணம் வழங்கப்பட்டது.

7. மார்ச் 2012 தில்லியின் துவாரகாவிலிருந்து 13 வயது சிறுமி மீட்கப்பட்டாள். அவரது எஜமானர்கள் மருத்துவர்கள் சஞ்சய், சுனிதா வர்மா தம்பதியினர் தாய்லாந்துக்கு விடுமுறைக்குப் போகும்போது அவளை வீட்டில் பூட்டி வைத்து விட்டுப் போனார்கள். அவள் உடல் முழுவதும் கிள்ளியது உள்ளிட்ட காயங்களுடன் காணப்பட்டாள். அவள் இரண்டு சப்பாத்தியும், உப்பும் கொண்ட உணவில் உயிர் பிழைத்திருந்திருக்கிறாள்.

8. ஏப்ரல் 2012 பீகாரைச் சேர்ந்த பதின்ம வயது வீட்டுத் தொழிலாளரை எஜமானர்களின் மகன்கள் நதீமாலும் பர்தீனாலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாகவும், உடல்ரீதியாக துன்புறுத்தியதாகவும் தகவல் வெளி வந்தது. அந்தச் சிறுமியின் கைகளில் சூட்டுக் காயங்கள் இருந்தன. பர்தீன் கைது செய்யப்பட்டான்.

இந்த அப்பட்டமான கொடூரம் எங்கிருந்து உருவானது? நகரங்களில் வசிக்கும் பணக்காரர்களின் வீடுகளில் வேலை செய்வதற்கு சந்தையில் தொழிலாளர்கள் நிறையக் கிடைப்பதும், அவர்கள் சுரண்டப்படுவதற்கு எதிரான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இருப்பதும்தான் காரணமா? மோசமான, கிட்டத்தட்ட இல்லவே இல்லாத குற்ற நிரூபண விகிதம், பணம் இருந்தால் எல்லாவற்றையும் சரிக்கட்டி விடலாம் என்ற நிலைமை இவைதான் நகரத்தில் வசிப்பவர்கள் மத்தியில் இந்தக் கொடூர குணத்தை வளர்த்திருக்கிறதா? (இரண்டாவதாகச் சொன்னதுதான் சரி என்று தோன்றுகிறது. முன்பு குறிப்பிட்ட மருத்துவ தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் போதே அவர்கள் பிரச்சனையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள 75,000 ரூபாய் கொடுப்பதாகப் பகிரங்கமாக அறிவித்தனர்).

புதிய பணக்காரர்கள் ஆகியிருக்கும், ஏழைகளை மனிதர்களாகவே மதிக்காத நடுத்தர வர்க்கத்திற்கு இது சிறப்பாகப் பொருந்துகிறது. உண்மையில் “ஒருவரை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் ஏதோ சமூக சேவை செய்வதாகப் பலர் நினைக்கிறார்கள். ஏழைகளுக்கு உணவு அளிப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். இத்தகையவர்கள் மத்தியில் நிறைய தார்மீக ஆவேசமும், கோபமும் இருக்கிறது” என்று பல பெண்களை மீட்பதற்கு உதவி செய்த சமூக ஆர்வலர் ரிஷி காந்த் சொல்கிறார். “’ஏன் அவர்களை அழைத்துக் கொண்டு போகிறீர்கள்.. குறைந்த பட்சம் இங்கு அவர்களுக்கு சாப்பாடு போடுகிறோம்’ என்று சில வீடுகளில் எஜமானர்கள் எங்களிடம் கேட்கிறார்கள்…..” “இந்தக் குழந்தைகளுக்கு மாதம் 1,000 ரூபாய் சம்பளம் வழங்கி, பழைய உடைகளையும், மீந்து போன உணவையும் கொடுப்பதை பெரிய உதவி செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள்” என்கிறார் இன்னொரு ஆர்வலர் ராகேஷ் செங்கர்.

நமிதா ஹல்தார். நமிதா வேலை செய்யும் பத்துப் பன்னிரெண்டு வீடுகளில் எந்த வீட்டிலும் கழிவறையைப் பயன்படுத்த அவருக்கு அனுமதி இல்லை என்பது இந்தியாவின் வளரும் நடுத்தர வர்க்கத்தைப் பற்றி என்ன சொல்கிறது? இருந்தும் அவர் தன்னை அதிர்ஷ்டக்காரராகவே கருதிக்கொள்ள வேண்டும். இன்னும் பலருக்கு அவமதிப்புகள் உடல் ரீதியான கொடுமைகள் வரை நீள்கின்றன.

சமீபத்தில் வெளியான நிகழ்வுகளையும், அது பற்றிய கொதிப்புகளையும் (குறைந்தபட்சம் ஊடகங்களில்) தொடர்ந்து இந்த உறவை நவீன எஜமானருக்கும் அடிமைக்குமான உறவாகப் பலர் சித்தரிக்கிறார்கள். இது மிகச் சிறிய பரிமாற்றங்களில் கூட பிரதிபலிக்கின்றது. உதாரணமாக கொல்கத்தாவின் நமீதா ஹல்தார் பல வீடுகளில் வேலை பார்த்தாலும் ஒரு வீட்டில் கூட கழிவறையைப் பயன்படுத்த அவருக்கு அனுமதி இல்லை. “அவர்களை மனிதர்களாக நடத்துவதற்கு நமக்குத் தோன்றாததற்குக் காரணம் நமது ஆழ் மனதில் அவர்களை மனிதர்களை விடத் தாழ்ந்தவர்களாகப் பார்க்கிறோம் என்பதுதான். பணம் கொடுப்பதாலேயே கடைசி பைசா வரை தமது பணத்தின் மதிப்பைக் கறந்து விட வேண்டும் என்று வேலைக்கு வைப்பவர்கள் நினைக்கிறார்கள்” என்று கொல்கத்தாவைச் சேர்ந்த பரிசித்தி அமைப்பின் காகுலி தேப் சொல்கிறார்.

நாடு முழுவதிலும் இருக்கும் 9 கோடி வீட்டு உதவியாளர்களில் பெரும்பகுதியினர் வறிய பகுதிகளான ஜார்கண்ட், மேற்கு வங்கம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களிருந்து வருகின்றனர். நகர்ப்புற வீடுகளைத் தூய்மையாக வைத்திருக்கவும், நகர வாசிகளின் அவசர வாழ்க்கையை வசதியாக்கவும் இந்தத் தொழிலாளர்களில் பலர் பெரு நகரங்களுக்குக் கடத்திச் செல்லப்படுகின்றனர்.

மேற்கு வங்காளத்தில் மட்டும் 2010 ஆம் ஆண்டும் 2011 ஆ ம் ஆண்டும் 8,000 சிறுமிகள் தொலைந்து போனதாகப் பதிவாகியிருக்கின்றது. வேறு புகல் இல்லாத பழங்குடிப் பகுதியைச் சேர்ந்த சிறுமிகளுக்குத்தான் தேவை அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார் சஞ்சய் கே. மிஷ்ரா. அவர் மீட்கப்பட்ட வீட்டு உதவியாளர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் பணியைச் செய்து வருகிறார். “அவர்கள் எளிமையானவர்களாகவும், அப்பாவிகளாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக எந்த ஆதரவும் இல்லாதவர்கள். அதனால் நடக்கும் கொடுமைகள் பெரும்பாலும் பதிவாகாமலேயே போய் விடுகின்றன”. சிறுமிகளை ஏஜென்சிகள் எங்கு கொண்டு செல்கின்றன என்ற விபரம் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருப்பதால் எல்லா வகையான சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள்.

இந்தப் பெரிய சந்தையில் தெளிவற்ற அடையாளத்துடன் கொழுக்கும் பல ‘ஆள் சேர்ப்பு ஏஜென்சிகள்’ செயல்படுகின்றன (தில்லியில் மட்டும் சுமார் 2,300). எஜமானர்கள் வேலைக்கு ஆள் தேட இந்த ஏஜென்சிகளுக்கு பணம் கொடுப்பதோடு, பெரும்பாலும் மாதச் சம்பளத்தையும் தொழிலாளருக்குக் கொடுக்காமல் ஏஜென்சியிடம் கொடுக்கின்றனர்.

குழந்தைத் தொழிலாளரைப் பயன்படுத்துவதைப் பற்றிய உறுத்தல் இருந்தாலும் பலர் இன்றும் அதை கண்டு கொள்ளாமல் இருக்க விரும்புகிறார்கள். கொல்கத்தாவில் கரியாகாத் பகுதியில் ஒரு சிறு நிறுவனத்தை நடத்தும் முகுல் தாஸ் “வீட்டு வேலை செய்யும் சிறுமிகள்” கூடுதல் பணிவுடன் இருக்கிறார்கள் என்கிறார். அவரது வீட்டில் கடைசியாக வேலை செய்த 8 வயது ஷெபாலி கழுவுவது, பெருக்குவது, சமைப்பது என்று எல்லா வேலைகளையும் செய்து விட்டு, தரையில் படுத்து உறங்கி விடுவாள். அது நிச்சயமாக லாபகரமான ஒப்பந்தம்தான். சென்ற ஆண்டு தில்லியின் நடுத்தர வர்க்க வீடுகளிலிருந்து 116 ‘தொழிலாளர்கள்’ மீட்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் மட்டுமே 18 வயதுக்கு அதிகமானவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடத்தப்பட்ட சர்வேயில் 5-14 வயதுடைய சிறுமிகள் கிட்டத்தட்ட 60,000 பேர் வீட்டுத் தொழிலாளர்களாக இருப்பது தெரிய வந்தது.

18 வயதே ஆகும் சாந்தினி. அமிர்தசரஸில் எஜமானரின் மாமனாரால் திரும்பத் திரும்ப பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டாள். அவளுக்கு உதவி செய்வதாக அழைத்துப் போன ஒரு ஆளால் தில்லியில் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள். அவள் செய்த பல ஆண்டு வேலைக்கு ஒரு பைசா கூட சம்பளமாக கொடுக்கப்படவில்லை

இந்தியா முழுவதிலும் 1.26 கோடி சிறுவர்கள் வீட்டு உதவியாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்களில் 86% சிறுமிகள், 25% பேர் குழந்தை தொழிலாளர் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள 14 வயதை விட குறைவானவர்கள்.

‘குறைந்த பட்சம் இந்த குழந்தைகளுக்கு உணவும் உடையும் கிடைக்கிறது. விபச்சார விடுதியில் போய்ச் சேராமல் போனது அவர்கள் அதிர்ஷ்டம்’ என்ற வழக்கமான நியாயப்படுத்தல் நடுத்தர வர்க்கத்தினரிடையே இருக்கின்றது. ஆனால், அவர்கள் எஜமானர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இப்போது 18 வயதாகும் சாந்தினி அமிர்தசரஸில் எஜமானரின் மாமனாரால் திரும்ப திரும்ப பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டாள். அவளுக்கு உதவி செய்வதாக அழைத்துப் போன ஆளால் தில்லியில் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள். தனது துன்பங்களை நினைவு கூரும் அவள், தனது வீட்டுக்கு உதவி கேட்டு அழைக்கக் கூட முடியவில்லை என்கிறாள். “அவர்கள் வெளியில் போகும் வீட்டுத் தொலைபேசியை பூட்டி விட்டுதான் போவார்கள். என்னைச் செருப்பால் அடிப்பார்கள். நான் செய்த அத்தனை வேலைகளுக்கும் ஒரு பைசா கூட சம்பளமாக கிடைக்கவில்லை” என்கிறாள் அவள். அவளது பிரச்சனையைப் பற்றி விபரம் சேகரிக்க வந்த தில்லி பத்திரிகையாளர் மாதுரி சிங் இப்போது அவளை வேலைக்கு வைத்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்தினர் இந்தச் சிறுமிகளைச் சுரண்டுவதற்கு காரணம் அவர்களுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லாமல் இருப்பதே ஆகும் என்று அவர் கருதுகிறார். “அதிகார மட்டங்களில் தங்களது சொல்தான் எடுபடும் என்று எஜமானர்களுக்குத் தெரியும். இந்தத் தொழிலாளர்களின் பேச்சு எடுபடாது.”

கொடுமை என்னவென்றால் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் கூட வீட்டு உதவியாளர்களைத் துன்புறுத்துவதில் சளைத்தவர்கள் இல்லை. தேசிய வீட்டுத் தொழிலாளர்கள் இயக்கத்தின் ஆந்திரப் பிரிவு தலைவர் அத்தகைய ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். ஹைதரபாத்தில் உள்ள ஓய்வு பெற்ற டிஐஜியின் வீட்டில் இரண்டு குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்டனர். 14 வயதும் 15 வயதுமான அந்தச் சிறுமிகள் ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் பேரக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள அமர்த்தப்பட்டிருந்தார்கள். ஒருமுறை அந்தக் குழந்தை நீச்சல் குளத்துக்கு அருகில் போய் விட்டதைத் தொடர்ந்து, தண்டிக்கும் விதமாக அந்தச் சிறுமிகளைக் கழுத்தளவு தண்ணீரீல் இரவு முழுவதும் நீச்சல் குளத்தில் நிற்க வைத்தார் டிஐஜி. “அந்தக் குழந்தைகள் வீட்டிலிருந்து தப்பித்து போன போது, அந்தச் சிறுமிகள் நகைகளைத் திருடி விட்டதாக அவர் போலி வழக்கு பதிவு செய்தார். விசாரணையின் போது அந்தச் சிறுமிகள் சித்திரவதை செய்யப்பட்டது தெரிய வந்தது.”

ராஞ்சிக்கு அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மணிரூபா என்ற சிறுமி தில்லியில் பல கொடுமைகளை அனுபவித்தாள். பின்னர் ஒரு தன்னார்வக் குழுவால் மீட்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டாள்

வீட்டுத் தொழிலாளர் சந்தையின் மிகப்பெரிய பிரச்சினை ஏஜென்சிகள் தொழிலாளர்கள் குறித்த விபரங்களைப் பதிவு செய்யாமல் இருப்பது. அதன் மூலம் சுரண்டல் எளிதாகி விடுகின்றது. “ஒவ்வொரு ஏஜென்சியும் தான் சேர்த்து விடும் வீட்டு உதவியாளர்கள் பற்றிய முழு விபரங்களையும் பதிவு செய்திருக்க வேண்டும். வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வதற்கு, அவள் ஒரு ஆட்டுக் குட்டியோ அல்லது அலங்கார பொருளோ அல்ல. நீங்கள் அப்படி ஒருவரை வேலைக்கு வைத்துக் கொண்டால் அது ஏதாவது ஒரு இடத்தில் ஏன் பதிவு செய்யப்படக் கூடாது” என்று கேட்கிறார் அமைப்பு சாரா துறைகளின் தொழிலாளர்களுக்கான தேசிய போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் பட்நாகர்.

வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டம் 2008 லேயே தயாராக இருந்தாலும் அது இன்னமும் தேசிய பெண்கள் ஆணையத்தில் (NCW) தேங்கிக் கிடக்கிறது. “அது சட்டமாக மாறுவதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும். அதிகார மையங்களில் இருக்கும் பலர் வீட்டு உதவியாளர்களை நம்பி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை” என்கிறார் தில்லி குழந்தைகள் நல வாழ்வு குழுவின் முன்னாள் தலைவர் பாரதி ஷர்மா.

இது போலவே, மாநிலங்களிலும் சட்டங்கள் சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு வீட்டுத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிளாரா, 2007 இல் திமுக அமைச்சரிடம் குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு 30 ரூபாய் நிர்ணயிக்கும்படி வலியுறுத்தியதாகச் சொல்கிறார். ஆனால் முடிவு தள்ளிப் போடப்பட்டு விட்டது. “சென்ற ஆண்டு தொடக்கத்தில், தேர்தல்கள் வரும் நேரத்தில் வேலைக்கு வைப்பவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருக்க முடிவு தள்ளிப்போடப்பட்டதாக அமைச்சர் என்னிடம் சொன்னார்”. மார்ச்சில் தொழிலாளர் துறைச் செயலரைச் சந்தித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் “விசயம் பரிசீலனையில் இருப்பதாக” சொல்லப்பட்டது. சட்டம் இயற்றுவதற்கு அதற்கே உரிய காலம் பிடிக்கலாம், ஆனால், சுதந்திர இந்தியாவில் நடுத்தர வர்க்க வீடுகளில் சமத்துவமின்மையும், அடக்குமுறையும் நிலவுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கக் கூடாது.

(தனிநபர் நலன்களை பாதுகாக்க பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

நன்றிகள் வினவு.கொம்http://www.vinavu.com/2012/05/19/domestic-help-abuse-in-india/

புத்தருடைய எலும்பை விட இது முக்கியம் சிங்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.