Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்லாரையின் மகிமையை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vallarai_seithy150.jpg

வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும்.

* இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

* வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம்.

* பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம். இந்தக் கீரையை சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும்.

* வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும். வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.

* சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது. வல்லாரை கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து அது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

* வல்லாரைக் கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை வளர்க்கிறது. நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது.

* குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர் தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

* அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மன நோய்களும் விலகும்.

* தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.

* வல்லாரை இலை 4, அக்ரூட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 3, மிளகு 3 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.

* வல்லாரைச் சாறு 15 மி.லி., கீழ் நெல்லி இலைச்சாறு 15 மி.லி., பசும்பால் 100 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலை கூட குணமாகும்.

* வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.

* வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.

* வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.

என்ன? இனி, வல்லாரை சர்ப்பிட மறப்பீங்களா!!

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பர் ஒருவருடன் வேலை செய்யும் ஒரு வெள்ளைக்கார இனப் பெண்ணுக்கு ஏற்பட்ட அனுபவத்தை, உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்!

இவரது கண்களில் இருந்து எப்போதும் கண்ணீர் வந்த படி இருந்தது! இதற்காக மிகச் சிறந்த, மேலை நாட்டு வைத்தியர்களால் பல காலம் சிகிச்சை அழிக்கப்பட்டும், எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை!

பின்பு சத்திரசிகிச்சை மூலம், கண்ணீர் வருவது குறைக்கப் படலாம். ஆனால் முற்றாக நிற்பாட்ட முடியாது எனத் தெரிவித்தார்கள்!

இதன் பின்னர், எனது நண்பர் வல்லாரையை தினமும் உணவில் சேர்த்து வரும்படி கூறினார்!

சில நாட்களின் பின்பு, கண்ணீர் வருவது நின்றுவிட்டது!

இந்த வெள்ளைக்கார நண்பி, இவருக்குக் கொடுத்த உறுதிக் கடிதத்தை, நண்பர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்!

  • கருத்துக்கள உறவுகள்

எனது மகள் பிறந்த காலத்தில் இருந்து சில வருடங்கள் தொடர்ச்சியாக வல்லாரை கொடுத்து வந்தோம்.. நல்ல ஞாபகசக்தி இருக்கிறது..

எனது மகள் பிறந்த காலத்தில் இருந்து சில வருடங்கள் தொடர்ச்சியாக வல்லாரை கொடுத்து வந்தோம்.. நல்ல ஞாபகசக்தி இருக்கிறது..

ஒவ்வொரு கிழமையும் வல்லாரையை வாங்கி சம்பல் போட்டு சாப்பிடுவதுண்டு...அடிக்கடி சாப்பிட்டு சாப்பிட்டு பிறந்தவுடன் என்னை தூக்கின நேர்ஸ் இன் முகம் கூட இன்னும் நினைவில் இருக்கு :icon_idea:

  • தொடங்கியவர்

இது ரொம்பவும் ஓவரா இல்லையா நிழலி :lol: :lol: :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
DSCN5992.JPGvallarai1.jpg

நன்றி இணைப்புக்கு அரசு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு கிழமையும் வல்லாரையை வாங்கி சம்பல் போட்டு சாப்பிடுவதுண்டு...அடிக்கடி சாப்பிட்டு சாப்பிட்டு பிறந்தவுடன் என்னை தூக்கின நேர்ஸ் இன் முகம் கூட இன்னும் நினைவில் இருக்கு :icon_idea:

எனக்கு பெரிதாக இதில் நம்பிக்கை இருந்ததில்லை.. :D ஆனால் எங்களுடன்தானே ஒப்பிட்டுப் பார்க்க முடியும்??! :icon_idea:

மூன்று வயதிலேயே ஆயிரம் வரைக்கும் ஆங்கிலத்தில் எழுத்து முதற்கொண்டு சொல்லக்கூடியவாறு இருந்தவ.. ஆனால் சரியான காரணம் தெரியவில்லை.. வல்லாரையின்மீது பழிபோட்டு விட்டேன்.. :lol:

ஏனப்பா

போட்டது தானே முளைக்கும்.

:icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வல்லாரையை சின்ன,சின்னதாக வெட்டிப் போட்டு,சின்ன வெங்காயம்,ப.மிளகாய்,தே.புளி விட்டு சாப்பிட‌ பிடிக்கும் ஆனால் இப்ப எல்லாம் உதில மினக்கெடுவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

வல்லாரை மேலும் வல்லாராக்கும் பச்சை வல்லாரை

இணைப்பிற்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது மகள் பிறந்த காலத்தில் இருந்து சில வருடங்கள் தொடர்ச்சியாக வல்லாரை கொடுத்து வந்தோம்.. நல்ல ஞாபகசக்தி இருக்கிறது..

அதைவிட மனைவிமார் கற்பமாக இருக்கும் போது கீரைவகைகள் சாப்பிட்டால் இன்னும் விசேசம். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு கிழமையும் வல்லாரையை வாங்கி சம்பல் போட்டு சாப்பிடுவதுண்டு...அடிக்கடி சாப்பிட்டு சாப்பிட்டு பிறந்தவுடன் என்னை தூக்கின நேர்ஸ் இன் முகம் கூட இன்னும் நினைவில் இருக்கு :icon_idea:

இந்தப்பொடியளை என்ன செய்யலாம்.......பல்லெல்லாம் நெருடுதப்பா :icon_idea:

அதைவிட மனைவிமார் கற்பமாக இருக்கும் போது கீரைவகைகள் சாப்பிட்டால் இன்னும் விசேசம். :)

என்னுடைய அம்மாவின் வயிற்றுக்கை நான் இருந்ததே எனக்கு இன்னும் இப்ப எண்ட மாதிரி இருக்கு :lol: எல்ல்லாம் அந்த வல்லாரையின் அருள் தான்!

இன்று சமைக்கும் போது வல்லைரை ஞாபகத்துக்கு வந்தது. மதியம் சாப்பட்டை முடித்துவிட்டு யாழை பார்த்தால் வல்லாரை பற்றிய கட்டுரை :).

நான் இருக்கும் இடத்தில் ஒரு கிழக்காசியக் கடையில் வாங்கமுடியும். நீண்ட நாட்களாக அந்த கடைக்கு போகவில்லை.

மேலே சொன்ன கட்டுரையில் பயன்களாக சொன்னவற்றிற் கு எந்த மருத்துவ முறையில் இருந்து ஆதாரம் எடுத்தார்கள் என தெரியவில்லை. சில மிகைப்படுத்தலாக இருக்கும். சில மேற்கத்தேய விஞ் ஞானத்தால் இன்னும் ஆராயப்படாத, சீன, ஆயுர்வேத, சித்த மருத்துவ குறிப்புகளை அடியொற்றி இருக்கும்.

மேற்கத்திய மருத்துவம் சொன்னது தான் முடிந்த முடிவும், உண்மையும், ஏனையவை எல்லாம் போய் எனும் மனப்பான்மை தே வையர்றது அல்லது தூர நோக்கற்றது.

பொதுவாக ஆரம்ப காலங்களில் மேற்கத்திய விஞ்ஞானிகள்/ அல்லது மேற்கத்தைய மருத்துவமே முடிந்த முடிவு என நம்பிய பல ஆரய்ச்சி யாளர்கள் அந்த மனப்பான்மையை கைவிட்டு இப்போ கீழைத் தேச மருத்துவத்தில் சொல்லிய மூலிகைகளின் மருத்துவ குணங்களை ஆராய தலைபட்டுள்ளனர். அந்த வகையில் வல்லாரையின் உடல் நலனை காக்கும், மற்றும் மருத்துவ இயால்புகள் பற்றியும் ஆய்வுகள் நடந்து வருகிறது.

வல்லாரையின் விஞ்ஞான பெயர் : Centella asiatica

1, 2. எலிகளில் செய்த ஆய்வில். வல்லாரையில் இருந்து பிரிதேடுக்கபட்ட இரசாயன பொருளான asiaticoside காயங்களை ஆற்றும் வல்லமை உடையது என கண்டறியப்படுள்ளது. இப்பொருள காயம் ஏற்பட்ட பகுதியில் ஐதரோட்சி புரோலீன் எனும் அமினோ அமில சுரப்பை அதிகரிப்பதால், காயம் ஆறுவதில் பங்காற்றும் கொலாஜன் எனும் புரத்தின் உறுதியை அதிகரிக்க செய்கிறது. பொதுவாக சலரோகம்/ நிரிழிவு நோய் காயம் ஆறுவதை தாமதிக்க செய்யும் . வல்லாரையில் உள்ள இரசாயன பொருள் நிரிழிவு நோய் உள்ள எலிகளில் காயத்தை விரைவாக ஆற செய்யும்.

3, 4. மனிதர், எலிகளில் வல்லாரை anxiety (என்ன தமிழ் கருத்து? கவலை? , பதற்றம் ? சந்தோசம் கொடுக்காத பயம் கலந்த அக்கறை?) ஐ தடுக்கும் வல்லமை உடையது என சொல்லப்படுகிறது.

5. சொரியசிஸ் (Psoriasis). இது ஒரு நிர்பீடன நோய். மனித உடலின் நோய் எதிர்ப்பு பொறிமுறை மனித தோலை நோய்க்கிருமிய அடையாளம் கண்டு தோலை தாக்குவதாகும். வல்லாரையில் இருந்து பிரித்தேடுக்கபட்ட பொருட்கள் இந்நோய்க்குட்பட்ட தோல் கலங்கள் பெருகுவதை தடுக்கும்.

6. எலிகளில் செய்யபட்ட ஆய்வில் வல்லாரை cognitive impairment (தமிழ்?, கற்றல் குறைபாடு?) ஐ குறைப்பதாக கண்டறியபட்டுள்ளது.

7.நரம்பு காலங்களில் ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்து நரம்பு கலங்கள் மீள புதிப்பிக்க படுவதில் வல்லாரை உதவுகிறது.

ஆதாரம் :

1. http://www.sciencedirect.com/science/article/pii/S037887419800141X

2.http://informahealthcare.com/doi/abs/10.3109/03008209009152427

3. http://journals.lww.com/psychopharmacology/Abstract/2000/12000/A_Double_Blind,_Placebo_Controlled_Study_on_the.15.aspx

4. http://www.sciencedirect.com/science/article/pii/S0944711306000237

5. http://www.sciencedirect.com/science/article/pii/S0944711304700343

6. http://www.sciencedirect.com/science/article/pii/S0091305702010444

7. http://onlinelibrary.wiley.com/doi/10.1211/jpp.57.9.0018/abstract

ஒவ்வொரு கிழமையும் வல்லாரையை வாங்கி சம்பல் போட்டு சாப்பிடுவதுண்டு...அடிக்கடி சாப்பிட்டு சாப்பிட்டு பிறந்தவுடன் என்னை தூக்கின நேர்ஸ் இன் முகம் கூட இன்னும் நினைவில் இருக்கு :icon_idea:

ஒரு தடவை இல்லாமல் கிழமைக்கு இரண்டு தடவைகள் வல்லாரை சாப்பிட்டால் உங்களுக்கு முற்பிறப்பு ஞாபகமும் வந்துவிடும் போல.

நான் எனது குழந்தைகளுக்கு பச்சையாக சம்பலாக அரைத்து உணவுடன் கொடுப்பதுண்டு விரும்பி உண்பார்கள்

இணைப்பிற்கு தமிழரசு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை இல்லாமல் கிழமைக்கு இரண்டு தடவைகள் வல்லாரை சாப்பிட்டால் உங்களுக்கு முற்பிறப்பு ஞாபகமும் வந்துவிடும் போல.

:icon_idea: :icon_idea: :icon_idea:

இன்று சமைக்கும் போது வல்லைரை ஞாபகத்துக்கு வந்தது. மதியம் சாப்பட்டை முடித்துவிட்டு யாழை பார்த்தால் வல்லாரை பற்றிய கட்டுரை :).

நான் இருக்கும் இடத்தில் ஒரு கிழக்காசியக் கடையில் வாங்கமுடியும். நீண்ட நாட்களாக அந்த கடைக்கு போகவில்லை.

மேலே சொன்ன கட்டுரையில் பயன்களாக சொன்னவற்றிற் கு எந்த மருத்துவ முறையில் இருந்து ஆதாரம் எடுத்தார்கள் என தெரியவில்லை. சில மிகைப்படுத்தலாக இருக்கும். சில மேற்கத்தேய விஞ் ஞானத்தால் இன்னும் ஆராயப்படாத, சீன, ஆயுர்வேத, சித்த மருத்துவ குறிப்புகளை அடியொற்றி இருக்கும்.

மேற்கத்திய மருத்துவம் சொன்னது தான் முடிந்த முடிவும், உண்மையும், ஏனையவை எல்லாம் போய் எனும் மனப்பான்மை தே வையர்றது அல்லது தூர நோக்கற்றது.

பொதுவாக ஆரம்ப காலங்களில் மேற்கத்திய விஞ்ஞானிகள்/ அல்லது மேற்கத்தைய மருத்துவமே முடிந்த முடிவு என நம்பிய பல ஆரய்ச்சி யாளர்கள் அந்த மனப்பான்மையை கைவிட்டு இப்போ கீழைத் தேச மருத்துவத்தில் சொல்லிய மூலிகைகளின் மருத்துவ குணங்களை ஆராய தலைபட்டுள்ளனர். அந்த வகையில் வல்லாரையின் உடல் நலனை காக்கும், மற்றும் மருத்துவ இயால்புகள் பற்றியும் ஆய்வுகள் நடந்து வருகிறது.

வல்லாரையின் விஞ்ஞான பெயர் : Centella asiatica

1, 2. எலிகளில் செய்த ஆய்வில். வல்லாரையில் இருந்து பிரிதேடுக்கபட்ட இரசாயன பொருளான asiaticoside காயங்களை ஆற்றும் வல்லமை உடையது என கண்டறியப்படுள்ளது. இப்பொருள காயம் ஏற்பட்ட பகுதியில் ஐதரோட்சி புரோலீன் எனும் அமினோ அமில சுரப்பை அதிகரிப்பதால், காயம் ஆறுவதில் பங்காற்றும் கொலாஜன் எனும் புரத்தின் உறுதியை அதிகரிக்க செய்கிறது. பொதுவாக சலரோகம்/ நிரிழிவு நோய் காயம் ஆறுவதை தாமதிக்க செய்யும் . வல்லாரையில் உள்ள இரசாயன பொருள் நிரிழிவு நோய் உள்ள எலிகளில் காயத்தை விரைவாக ஆற செய்யும்.

3, 4. மனிதர், எலிகளில் வல்லாரை anxiety (என்ன தமிழ் கருத்து? கவலை? , பதற்றம் ? சந்தோசம் கொடுக்காத பயம் கலந்த அக்கறை?) ஐ தடுக்கும் வல்லமை உடையது என சொல்லப்படுகிறது.

5. சொரியசிஸ் (Psoriasis). இது ஒரு நிர்பீடன நோய். மனித உடலின் நோய் எதிர்ப்பு பொறிமுறை மனித தோலை நோய்க்கிருமிய அடையாளம் கண்டு தோலை தாக்குவதாகும். வல்லாரையில் இருந்து பிரித்தேடுக்கபட்ட பொருட்கள் இந்நோய்க்குட்பட்ட தோல் கலங்கள் பெருகுவதை தடுக்கும்.

6. எலிகளில் செய்யபட்ட ஆய்வில் வல்லாரை cognitive impairment (தமிழ்?, கற்றல் குறைபாடு?) ஐ குறைப்பதாக கண்டறியபட்டுள்ளது.

7.நரம்பு காலங்களில் ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்து நரம்பு கலங்கள் மீள புதிப்பிக்க படுவதில் வல்லாரை உதவுகிறது.

ஆதாரம் :

1. http://www.sciencedi...37887419800141X

2.http://informahealthcare.com/doi/abs/10.3109/03008209009152427

3. http://journals.lww...._on_the.15.aspx

4. http://www.sciencedi...944711306000237

5. http://www.sciencedi...944711304700343

6. http://www.sciencedi...091305702010444

7. http://onlinelibrary...9.0018/abstract

பயனுள்ள பதில்

நன்றி குளம்

எனது மகள் பிறந்த காலத்தில் இருந்து சில வருடங்கள் தொடர்ச்சியாக வல்லாரை கொடுத்து வந்தோம்.. நல்ல ஞாபகசக்தி இருக்கிறது..

சில வேளை இது பரம்பரை காரணமாகவும் இருக்கலாம்.

உங்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மீனவர்கள் என்று நீங்கள் எழுதியதை வாசித்த ஞாபகம். மீனின் சில எண்ணை வகைகள் மூளை வளர்ச்சிக்கு அவசியம். உங்கள் கொள்ளுத்தாத்தா தொடக்கம் இப்படி மீன் பிடித்து உடன் மீன் கறிவைத்து உண்டு வந்திருந்தால் இது சாத்தியமே.

கனடாவின் முன்னனி சுரங்கம் தோண்டும் பொறியியளாராக நீங்கள் வெற்றிநடை போடுவதின் ரகசியம் பாவப்பட்ட வல்லாரையல்ல. தங்களின் வெங்காயம் போட்டுப் பொரித்த மீன் பொரியலே.

:lol: :lol: :lol:

என் பரம்பரையைப் பற்றி அப்படி எழுதிய ஞாபகம் இல்லை.... :D ஆனால் இங்கே ஒரு போட் வாங்கி மீனவன் ஆகலாமென்றால் அதுக்கு அனுமதி கிடைக்குதில்லை.. :lol:

இங்கே ஒரு போட் வாங்கி மீனவன் ஆகலாமென்றால் அதுக்கு அனுமதி கிடைக்குதில்லை..

தங்கள் கவலை புரிந்து கொள்ளக்கூடியது.. :(

பாரம்பரியத்தை உயர்வாகப் பேணும் தங்கள் மனப்பான்மை போற்றுதற்குரியது.

மிக்க நன்றி. வணக்கம்.

மீனின் சில எண்ணை வகைகள் மூளை வளர்ச்சிக்கு அவசியம். உங்கள் கொள்ளுத்தாத்தா தொடக்கம் இப்படி மீன் பிடித்து உடன் மீன் கறிவைத்து உண்டு வந்திருந்தால் இது சாத்தியமே.

என் அப்பாவின் அப்பா வேலணையைச் சேர்ந்தவர். அப்பாவின் காலத்தில் அவர்கள் வசாவிளான் பக்கம் குடியேறினார்கள். பரம்பரை தீவு என்பதால் மீனையே முக்கிய உணவாக என் அப்பா கொள்ளுவார். மீன் இல்லாமல் சாப்பிட முடியாது அப்பாவுக்கு. அப்பா தன் வாழ்நாளில் சாப்பிட்ட மீன்களின் எண்ணிக்கையை யாராவது கணக்கெடுத்து இருந்தால் ஒரு பெருங்கடலில் உள்ள மீன்களின் எண்ணிக்கைக்கு சற்றும் குறைவில்லாமல் வந்திருக்கும். அப்பாவின் ஞாபக சக்தி அபாரமானது. ஆங்கில அகராதி அவர் (அவர் ஆங்கிலத்தில் எனக்கு கொடுத்த இம்சையால் ஆங்கிலத்தை நான் சிறுவயதில் வெறுத்தது இதன் பக்க விளைவு)...அப்பாவால் சாகும் வரையிலும் அபிராமி அந்தாதி, திருப்புகழ், காயத்திரி மந்திரம், எண்ணற்ற தேவராங்கள் என்பனவற்றை முழுமையாக ஞாபகத்தில் வைத்திருக்க முடிந்தது. அத்துடன் ஆயிரக்கணக்கான சினிமாப் பாடல்களையும் நினைவில் வைத்து இருந்தார். அவரின் நினைவாற்றலுக்கு முக்கிய காரணம் மீன் உணவுதான் என்று நம்புகின்றேன்

Edited by நிழலி
எழுத்துப் பிழையை சரி செய்ய

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் அப்பாவின் அப்பா வேலணையைச் சேர்ந்தவர். அப்பாவின் காலத்தில் அவர்கள் வசாவிளான் பக்கம் குடியேறினார்கள். பரம்பரை தீவு என்பதால் மீனையே முக்கிய உணவாக என் அப்பா கொள்ளுவார். மீன் இல்லாமல் சாப்பிட முடியாது அப்பாவுக்கு. அப்பா தன் வாழ்நாளில் சாப்பிட்ட மீன்களின் எண்ணிக்கையை யாராவது கணக்கெடுத்து இருந்தால் ஒரு பெருங்கடலில் உள்ள மீன்களின் எண்ணிக்கைக்கு சற்றும் குறைவில்லாமல் வந்திருக்கும். அப்பாவின் ஞாபக சக்தி அபாரமானது. ஆங்கில அகராதி அவர் (அவர் ஆங்கிலத்தில் எனக்கு கொடுத்த இம்சையால் ஆங்கிலத்தை நான் சிறுவயதில் வெறுத்தது இதன் பக்க விளைவு)...அப்பாவால் சாகும் வரையிலும் அபிராமி அந்தாதி, திருப்புகழ், காயத்திரி மந்திரம், எண்ணற்ற தேவராங்கள் ஆகியவனவற்றை முழுமையாக ஞாபகத்தில் வைத்திருக்க் முடிந்தது. அத்துடன் ஆயிரக்கணக்கான சினிமாப் பாடல்களையும் நினைவில் வைத்து இருந்தார். அவரின் நினைவாற்றலுக்கு முக்கிய காரணம் மீன் உணவுதான் என்று நம்புகின்றேன்

வெளிநாடுகளில் உள்ள புரோஷன் மீன்கள் தாம் வாழ்ந்த காலத்தை விடவும் புரோஷனாக்கபட்டு அதிக காலம் இருந்திருக்கு இந்த மீன்களை சாப்பிட்டாலும் மூளை வளர்ச்சி இருக்குமா ? :D:)

  • கருத்துக்கள உறவுகள்

என் அப்பாவின் அப்பா வேலணையைச் சேர்ந்தவர். அப்பாவின் காலத்தில் அவர்கள் வசாவிளான் பக்கம் குடியேறினார்கள். பரம்பரை தீவு என்பதால் மீனையே முக்கிய உணவாக என் அப்பா கொள்ளுவார். மீன் இல்லாமல் சாப்பிட முடியாது அப்பாவுக்கு. அப்பா தன் வாழ்நாளில் சாப்பிட்ட மீன்களின் எண்ணிக்கையை யாராவது கணக்கெடுத்து இருந்தால் ஒரு பெருங்கடலில் உள்ள மீன்களின் எண்ணிக்கைக்கு சற்றும் குறைவில்லாமல் வந்திருக்கும். அப்பாவின் ஞாபக சக்தி அபாரமானது. ஆங்கில அகராதி அவர் (அவர் ஆங்கிலத்தில் எனக்கு கொடுத்த இம்சையால் ஆங்கிலத்தை நான் சிறுவயதில் வெறுத்தது இதன் பக்க விளைவு)...அப்பாவால் சாகும் வரையிலும் அபிராமி அந்தாதி, திருப்புகழ், காயத்திரி மந்திரம், எண்ணற்ற தேவராங்கள் ஆகியவனவற்றை முழுமையாக ஞாபகத்தில் வைத்திருக்க் முடிந்தது. அத்துடன் ஆயிரக்கணக்கான சினிமாப் பாடல்களையும் நினைவில் வைத்து இருந்தார். அவரின் நினைவாற்றலுக்கு முக்கிய காரணம் மீன் உணவுதான் என்று நம்புகின்றேன்

அது தானே பார்த்தேன்

அது தான் தீவின் மகிமை. :icon_idea: :icon_idea:

உண்மைதான்

எனது தகப்பனாருக்கும் மீனின் தலையில் ஒவ்வொரு நாளும் கூழ் வேண்டும்.

அதன் காரணமாக 84 வயதில் இறக்கும்வரை எந்த வருத்தமும் இல்லாதிருந்தார்.

அத்துடன் லட்சக்கணக்கான தேவார மற்றும் பக்திப்பாடல்களை பார்க்காமல் மனசில் வைத்துப்பாடுவார்.

எனது சொந்த மாமனார்தான் வித்துவான். பொன். அ. கனகசசபை அவர்கள்.

இலங்கையில் இந்து சமய நெறி சார்ந்த பட்டத்தில் இதுவரை இவரே முன்னிடத்திலுள்ளார்.

ஆனால் இருவரும் ஒரு இடத்தில் இருந்து தேவாரம் படிக்கவேண்டி வந்தால் மாமா பார்த்துப்படிப்பார். அப்பா பார்க்காது படிப்பார். ஏனெனில் மாமா சுத்த சைவம் வாழ் முழுவதும். :D

(எனது தகப்பனாரை பாட்டுக்காற ....... என்று தான் ஊரில் அழைப்பார்கள்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.