Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொட்டிக் கிடக்கும் IT தொழிற் துறை வேலை வாய்ப்புகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IT தொழிற் துறை

பணம் வேண்டுமா?, பணம் புழங்கும் இடம் தேடி போய்விடுங்கள் என்பது முதுமொழி.

எம்மில் பலர் செய்யும் வேலைகள் ஊரிலேயே தாரளமாக உண்டு, எனினும் நாம் புலம் பெயர்ந்து வந்து அந்த வேலைகளை செய்வதன் காரணம் பணம். எனினும் பலர் சரியான வழிகாட்டுதல் இன்றி தமது நேரத்தினையும் வீணாக்கி, தமது கல்விக்கு ஒவ்வாத வேலைகளை செய்வதனையும் பார்க்கின்றோம்.

மிகச்சிறந்த பல்கலைக்கலகங்களில் Msc, Phd பட்டம் பெற்றோர் கூட gas station / garage வேலைகளில் இருப்பதனை வேதனையுடன் பார்க்கின்றோம்.

இவர்களுடன் பேசினால், நாட்டில் பொருளாதார மந்தநிலை, இருக்கும் இந்த வேலையே பெரிய விடயம் என்பது போல் பேசுவார்கள். UK, Canada, US, NZ மற்றும் Australia போன்ற ஆங்கில மொழி நாடுகளில் மட்டும் இன்றி, Europe, Scandinavia நாடுகளில் உள்ள எமது அடுத்த சந்ததிகள் கூட தோலின் நிறத்தினையும் ஒரு சாட்டாக கூறுவதனையும் காணலாம்.

மீண்டும் முதலாவது வரிக்கு: சிறந்த பணம் சம்பளமாக தரும் வேலை வேண்டுமா?, அத்தகைய வேலை உள்ள துறை எது என தேடி போய்விடுங்கள்.

அத்தகைய துறைகளில் ஒன்று IT தொழிற் துறை.

இந்தியா

சற்றே இந்தியாவினை திரும்பிப் பார்போமா?

இன்று உலகின் நான்காவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு. உலகம் முழுவதும் கொட்டிக் கிடந்த, கிடக்கும் IT தொழிற் துறை வாய்ப்புக்களை மிகச்சரியாக இனம் கண்டு அதன் மூலம் பெரு வளர்ச்சி கண்ட நாடு. ஆங்கில காலனித்துவ பின்னணி காரணமாக இந்திய IT தொழிற் துறை, தன்னுடன் மோத முயன்ற சீனாவையும் பின்னே தள்ளி அசுர வேகத்தில் பயணம் செய்கின்றது.

இந்தியாவில் இருந்து ஒரு பட்டதாரி IT தொழிற் துறையில் வேலை பெற்று மேற்கு நாடுகளுக்கு விசாவுடன் கம்பீரமாக வருகையில் எமது தாயகத்தில் இருந்து ஒரு பட்டதாரி, முகவரிடம் பணம் கொடுத்து இழுபடும் அவலத்தினையும் பார்க்கின்றோம்.

IT தொழிற் துறை வேலை வாய்ப்புகள்: இன்றைய நிலைமை.

இந்த துறை பொருளாதார மந்த நிலைமையினால் பாதிப்பு அடையாமல், மிகவும் நன்றாக உள்ளது.

ஒரு பண்டிகை வந்தால் அதன் காரணமாக பழையன கழிதல் நம் வீடுகளில் நடைபெறும் அல்லவா. அதே போல் பல நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலைமையினை பாவித்து பல அதிக செலவு மிக்க மனித வலுக்களை, வீட்டுக்கு அனுப்பி அதற்கு பதிலாக புதிய system களை அறிமுகப்படுத்துகின்றன.

உண்மையிலேயே என்ன நடக்கின்றது, எனில், பொருளாதார மந்த நிலைமை நிலவும் காலத்தில், அரசியல், Trade Union தொந்தரவு இன்றி, நிறுவனங்கள் தாம் நீண்ட நாட்களாக திட்டம் இட்டிருந்த செலவு மறுசீரமைப்பு, ஆட்குறைப்பு, new systems implementation போன்ற விடயங்களை செய்து முடித்து விடுவர்.

இதனாலே IT துறை நன்றாக உள்ளது.

அற்புதமான சந்தர்ப்பம் ஒன்று எமக்கு கிடைத்துள்ளது.

அதேவேளை பொருளாதார மந்த நிலைமை நிலவும் காலத்தில், அரசுகள் தமது உள்ளூர் வாக்காளர்களின் வேலைகளைப் பாதுகாக்கும் கடமையினை முன் நிறுத்தும்.

US அரசு, இப்போது வேலை வாய்ப்புக்களை உள் நாட்டவர்களுக்கு கிடைக்க செய்யும் நோக்கில் H1B Visa முறைகளைக் கட்டுப்படுத்தி யதனால் நிராகரிப்பு விகிதம் 2% தில் இருந்து 22% ஆக அதிகரித்து உள்ளது.

Canada வாழ் பட்டதாரிகள் இதனை கவனத்தில் எடுக்க வேண்டும். NAFTA உடன்படிக்கை படி, அமெரிக்க வேலைகளைப் பெற முடியும். (TN-1 Visa for Canadians/Mexicans to work in the United States under NAFTA)

மறுபுறம் UK அரசு 'Skill Migration' வசதியினை நிறுத்தி வைத்துள்ளது.

UK வாழ் பட்டதாரிகள் இதனை கவனத்தில் எடுக்க வேண்டும். 'Skill Migration' முறையினை பயன் படுத்தி இந்தியர்கள் மட்டும் அல்ல, பெருமளவில் நைஜிரியர்கள், தென் ஆபிரிக்கர்கள், அவுஸ்திரேலியர்கள், மலேசியர்கள் பாகிஸ்தானியர்கள், பங்களாதேஷிகள், ஏன் இலங்கையர் கூட பலர் உள்ளே வந்து விட்டார்கள். கடந்த நான்கு வருடங்களில் 188,000 பேர் வந்து வேலை எடுத்து உள்ளதாக அரசு கூறி, இதனை நிறுத்தி உள்ளது.

அவர்களது IT Skills காரணமாக, அவர்களிடம் காணப்படக் கூடிய கலாசார மற்றும் மொழி உச்சரிப்பு வேறுபாடுகள் கூட பொருட்படுத்தபபடவில்லை.

மொழி தெரியாவிடினும் பரவாயில்லை. ஆங்கிலத்தில் சமாளித்துக் கொள்ளலாம். வந்து உதவுங்கள் என ஐரோப்பிய பெரும் பொருளாதார நாடுகள், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், நோர்வே, ஸ்வீடன், இத்தாலி பெல்யியம் போன்ற நாடுகள் IT Skills உள்ளோரினை கூவி அலைகின்றனர்.

சற்றே சிந்தித்து பார்போமாயின், மிகச் சிறந்த வாய்ப்பு எமது காலடியில் கொட்டிக் கிடக்கின்றது.

இங்கேயே பிறந்த, இங்கேயே கல்வி பெற்ற எம்மவர்கள் இதனை எவ்வாறு புறக்கணிக்க முடியும்?

பொருளாதார மந்த நிலைமை காரணமாக வேலை கிடைக்கவில்லை என்று காரணம் கூறினால், எம்மை நாமே ஏமாற்றுகின்றோம் என்பதே அர்த்தம்.

நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் IT skills இணை சேர்த்துக் கொள்வதன் மூலம் சிறந்த வருமானத்தினையும், உயர்ந்த வாழ்க்கைத்தரத் தினையும் பெற்றுக்கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு Tution ஆசிரியர், Lerning Management System (LMS) உபயோகிப்பதன் மூலம் உலகமெங்கும் உள்ள பல மாணவர்களுக்கு கற்பித்து சிறந்த வருமானத்தினை பெறலாம்.

Accountants, IT skills சேர்த்து 'Systems Accountant' ஆகி மிகப் பெரும் வருமானம் பெறலாம்.

இன்னுமோர் உதாரணதினையும் இங்கே தர விளைகின்றேன். UK யில் மருத்துவ கல்வி முடிக்கும் சுதேசிகளுக்கு அமெரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் கிராக்கி இருந்ததால் அவர்கள் அங்கே செல்ல, டாக்டர்கள் தட்டுப் பாட்டினை போக்க இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து டாக்டர்கள் வர அனுமதிக்கப்பட்டார்கள்.

எனினும் இப்பொது எமது அடுத்த தலைமுறையினர் பெருமளவில் மருத்துவ கல்வி பயில்வதால், டாக்டர்கள் தட்டுப்பாடு நீங்கயதால், அரசு வெளியே இருந்து வேலை செய்ய டாக்டர்கள் வர இப்போது அனுமதிப்பதில்லை.

இந்த நிலை IT தொழிற் துறையிலும் ஏற்பட வேண்டும்.

எம்மவருக்கான வாய்ப்பு:

ஐரோப்பிய யூனியன் குடிகளாயிருப்பின் பெரும்பாலும் ஐரோப்பிய யூனியன் முழுவதும் தங்கு தடை இன்றி வேலை செய்ய முடியும்.

மேலும் British பிரஜையாயின் USA, Canada, Australia, NZ. Middle East போன்ற இடங்களுக்கு இலகுவாக விசா பெற்றுக் கொள்ளலாம்.

கனடா பிரஜையாயின், USA, Mexico மற்றும் இலகுவாக விசா பெற்று Australia, NZ. Middle East, ஐரோப்பிய யூனியன் எங்கும் வேலை செய்ய முடியும்.

Australia, NZ பிரஜைகள் UK, USA, Canada இலகுவாக விசா பெற்று எங்கும் வேலை செய்ய முடியும்.

USA, H1B Visa விற்கு நாட்டுக்கு நாடு என ஒரு குறித்த தொகை ஒதுக்குவதும், அவற்றினை தமது நாடுகளில் உள்ள skill shotage காரணமாக நாடுகள் முழுவதுமாக பயன் படுத்துவதில்லை என்பதனை கவனியுங்கள்.

எமது குடியுரிமையுடன் சேர்த்து, எமது பாரம்பரிய கணக்கியல் தொழில் துறை. IT Skills உடன் சேரும் போது; வானமே எல்லை.

நீங்கள் உங்களுக்கு தேவையான மேலதிக தகவல்களைப் பெற இந்த தளத்துக்கு செல்லுங்கள்: keysoftskills.com

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இணைப்பு...நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 2

தாயகத்தில் அல்லது UK யில் இருந்து ஆஸ்திரேலியா குடி பெயர்ந்து செல்பவர்கள், IT skills பெறுவதன் மூலம் அங்கே தாரளமாக கிடைக்கும் வேலை வாய்ப்புகளை பெற முடியும்.

ஜெர்மனி. சுவிஸ், பிரான்ஸ், ஸ்காண்டிநேவிய நாடுகளில் உள்ளோர், அந்த நாடு மொழிகளில் படித்தவர்க்கள், IT skills பெறுவதன் மூலம் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறலாமே.

ஒரு முக்கியமான விடயத்தினை மறந்து விடாதிர்கள்.

உணர்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அழகாக சொன்னார்: 'கொம்புகளை மறந்த மாடுகள் பொதி சுமக்கின்றன' என.

விசா, பிரஜாஉரிமை, மேற்கு நாட்டுக் கல்வி, மொழி, கலாசார அறிவு அனைத்தும் உள்ள எம்மவர்கள், படித்தவர்கள் கூட, கடை, பெட்ரோல்/காஸ் ஸ்டேஷன் என லாபம் குறைந்த, சம்பளம் குறைந்த, தொழில்களை, வேலைகளை, தேடி ஓடும் போது, பல்லாயிரம் மைல் தொலைவில் உள்ளோருக்கு, நாம் வாழும் நாடுகளில் எந்த மூலையில் என்ன சம்பளத்தில், எந்த நிறுவனம், என்ன வகையான வேலைக்கு ஆள் தேடுகின்றது என் அறிந்து, மிக உயரத்தில் இருந்து இரையை கண்டு, குறி வைத்து வேகமாக கீழே வரும் கழுகினைப் போல் பாய்ந்து ஓடி வரும் பிற நாட்டவர்களிடம் கற்க, எமக்கு பல விடயங்கள் உள்ளன.

நீங்கள் உங்களுக்கு தேவையான மேலதிக தகவல்களைப் பெற இந்த தளத்துக்கு செல்லுங்கள்: www.keysoftskills.com

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் உண்மை, நாதமுனி!

நீங்கள் குறிப்பிடாத வேறு பல காரணிகளும் உண்டு என எண்ணுகின்றேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதில் தந்தவர்களுக்கு நன்றி.

இசைக்கலைஞன் அவர்களின் நேர்முகத் தேர்வு குறிப்புகள் பார்த்தேன். நாமும் ஏதாவது பங்களிப்பு செய்ய முடியுமா என முயல்கின்றேன்.

பகுதி 3

UK யில் நம்மவர் மத்தியில் பல பொருளாதார ரீதியில் தற்கொலைக்கு ஒப்பான விடயங்கள் நடை பெறுகின்றன. எனினும் யாரும் இது குறித்து சாதாரண மக்களுக்கு ஆலோசனை கூறுவதில்லை.

Mothercare எனும் குழந்தைகள் தொடர்பான பொருட்கள் வியாபாரம் செய்யும் பெரிய நிறுவனம், online போட்டியினால், 111 சில்லறை வியாபார நிலையங்களைப் பூட்டி தாமும் செலவைக் குறைத்து online வியாபாரத்தினை கவனிக்க தொடங்கி விட்டனர்.

அதே போல் Thomas Cook எனும் Holiday packages விற்கும் மிகப் பெரிய நிறுவனம் 100 வியாபார நிலையங்களைப் பூட்டி online வியாபாரப் பக்கம் ஒதிங்கி விட்டனர்.

இந்த பூட்டப் பட்ட கடைகளை எடுக்க போட்டி போடும் நம்மவர்களை என்ன சொல்வது?

வியாபாரத்தில் ஒரு பதம் சொல்வார்கள்: வியாபாரம் என்பது இறால் போட்டு சுறா பிடிக்கும் கலை. இங்கே சுறா போட்டு இறால் பிடிக்கும் முயற்சி அன்றோ நடக்கின்றது.

தயவு செய்து online மூலம் வியாபாரம் செய்யும் வித்தையினை அறிந்து கொள்ளுங்கள். Youtube, Twitter, Facebook LinkedIn போன்ற பல நவீன ஊடகங்களை எவ்வாறு உங்கள் வியாபார வளர்ச்சிக்கு பயன் படுத்தலாம் என அறிந்து கொள்ளுங்கள்.

புலம் பெயர் தமிழர்களுக்கு வெளியே, மிகப் பெரிய சந்தை, online மூலம், மிகக் குறைந்த முதலீட்டுடன் தயாராக உள்ளதனைப் புரிந்து கொள்ளுவோம்.

மேலும் வரும்

keysoftskills.com

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி.. காலத்திற்கேற்ற பதிவு..

கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி முன்னேறிக்கொள்ள வேண்டும் என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.. மறைந்திருக்கும் வேலைச் சந்தையை அடையாளம் காண்பது மிக முக்கியமானது. உங்கள் தகவல்கள் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.. தொடருங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாதமுனி.. காலத்திற்கேற்ற பதிவு..

கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி முன்னேறிக்கொள்ள வேண்டும் என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.. மறைந்திருக்கும் வேலைச் சந்தையை அடையாளம் காண்பது மிக முக்கியமானது. உங்கள் தகவல்கள் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.. தொடருங்கள்..

நேற்று மகாராணிக்கு message இன்று இப்பதிவு. உங்கள் மூலம் எமக்கும் யாழுக்கும் நன்மை கிடைக்கப்போகிறது என்று மட்டும் தெரிகிறது. தொடருங்கள்..... :)

இது ஒரு நல்ல பதிவு. ஆனால் அரிச்சுவடி பகுதியில் பதிந்து கொண்டிருக்கிறீர்கள். இன்னும் உங்களை உள்ளே கருத்தெழுத அனுமதிக்கவில்லையா? அனுமதி கிடைத்த பின் உரிய பகுதிக்கு மாற்றும்படி நிர்வாகத்திடம் கேளுங்கள். :)

நல்ல பதிவு நாதமுனி. பலருக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பதிவு தொடருங்கள்

நல்ல பதிவு

நானும் IT யில் இருப்பதால், அதன் மூலம் கனடா வரவும் வந்த ஒன்ரரை மாதங்களுக்குள் என் துறையிலேயே வேலை எடுக்கவும் முடிந்தது.

பி.கு:

நாதமுனி, உங்களுக்கு மற்ற பகுதிகளிலும் எழுத அனுமதி வழங்கப்பட்டு இருக்கு

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் மிக்க நன்றி.

நிழலி, ஒரு வேண்டுகோள்: முடிந்தால் நிருவாகத்தினரிடம் மிகவும் உபயோகமான இந்த இலவச தளத்திற்கு ஒரு இணைப்பினை (link) கொடுக்குமாறு கேளுங்கள். www.hindukidsworld.org

உங்கள் ஆதரவு என்னை உற்சாகம் கொள்ள வைக்கின்றது. திட்டம் இல்லாமல் எழுத தொடங்கினேன். இனி முடிந்த வரையில் ஒரு ஒழங்கு முறையில் பார்க்கலாம்.

முக்கியமாக நான் இங்கே வியாபார நோக்கத்துடன் வரவில்லை என்பதனை சொல்ல வைக்க விரும்புகின்றேன். இந்த துறையில் உள்ளவர்களை ஒன்று இணைத்து எல்லோருமாக இதனை முன் கொண்டு செல்வோம்.

இதோ நிழலி தான் IT துறையில் இருப்பததாக குறிப்பிட்டுள்ளார். அவரது skills set குறித்து நாம் அறிந்து பயன்படுத்த முடியும்.

மருத்துவத்துறையில் நாம் மிக அழுத்தமான முத்திரை பதித்துளோம். கணக்கியல் துறையில் எமது முத்திரை குறித்து நான் சொல்ல வேண்டியதில்லை. கல்வித் துறையில் எமது அடுதத தலைமுறையினர் பதிக்கும் முத்திரை 'சும்மா அதிருது இல்ல'. வியாபாரத்திலும் குறித்த சில வெற்றி அடைந்தாலும் கூட இன்னும் காத தூரம் செல்ல வேண்டும்.

எமது சமூகத்தில் உள்ள மிகத் தீவிரமான குறைபாடு IT துறை பற்றிய விளிப்பு இன்மையே. மணிக்கு $50 தரும் வேலை ஒன்று உள்ளது என பட்டதாரி ஒருவரிடம் சொல்ல, கிண்டல் பண்னுவதாக கூறி, மணிக்கு$10 வேலைக்காக கண் முன்னே, வேறு ஒருவரை போனில் அழைத்து, முயன்றவரையும் பார்த்திருகின்றேன்.

எம்மால் முடியும்

ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விளம்பரக் கவர்ச்சிவாசகம் (slogan) உபயோகப் படுத்துவார்கள். Cannon நிறுவனம் பயன் படுத்தும் வாசகம் உலகப் பிரசித்தி பெற்றது. எனக்கும் மிகவும் பிடித்த அந்த வாசகம் இதோ:

'IF ANYONE CAN CANNON CAN'

சற்று மொழிபெயர்ப்புச் செய்து பார்த்தால் 'அட, உன்னால் இதை செய்ய முடிந்தால் , என்னாலும் முடியும் டா'.

இது வெளியே மற்றவர்களுக்கு அட்டகாசமாக சொல்ல ஒரு தமிழ் பட பஞ்ச் வசனம் அல்ல. உங்கள் மனதில் நீங்கள் சொல்ல வேண்டிய உற்சாக மந்திரம்.

நம்மவர்கள் இதனையே இவ்வாறு சொல்லுவார்கள்: 'வென்று காட்டுறேன்'. மிகவும் பிரபலமான இந்த சொல் தமிழ் படம் 'தெனாலி' யில் கூட இடம் பிடித்தது.

மனதில் உறுதி இருந்தால் அதில் தெளிவு இருந்தால் எல்லாமே வென்று காட்டமுடியும்.

IT துறை

IT என்பது ஒரு பரவலாகப் பாவிக்கப் படும் ஒரு பொதுச்சொல்.

ஒருவருக்கு coding எழுதுவது தான் IT Skill என்றால் இன்னும் ஒருவருக்கு Microsoft Excel நிபுணத்துவம் IT Skill.

இங்கே ஒருவர் பார்க்க வேண்டியது என்னவெனில் எந்த Skill, இலகுவாக கற்றுக் கொள்ளவும், விரைவாக வேலை பெறவும், உயர்ந்த ஊதியத்தினை பெற்று கொள்ளவும் கூடிய வகையில் இருக்கின்றது என்பதுடன், உங்கள் கல்வியுடன் தொடர்புடையதாக உள்ளது என்பனவேயாகும்.

மீண்டும் சந்திப்போம்

keysoftskills.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் என்பது உங்கள் IT Skill தேர்வுக்கு முக்கியமானது.

உதாரணமாக நீங்கள் 'Online Business (e-business) துறையில் நிபுணத்துவம் பெற விரும்பலாம். அல்லது மருத்துவ துறை தொடர்பில் உள்ள நிபுணத்துவம் பெற விரும்பலாம்.

இன்னும் கல்வி இயல் (Education) தொடர்பான Lerning Management System (LMS) தொடர்பில் உள்ள நிபுணத்துவம் பெற விரும்பலாம். (To Become Educational Consultant)

தொலை தொடர்புத்துறை..... கணக்கே இல்லாத வகையில் இந்த துறை விரிந்து பரந்து செல்லுகின்றது.

எனவே தான், நான் முன்பு குறிப்பிட்ட வாறு உங்கள் கல்வியுடன் தொடர்பு உள்ளதாக உங்கள் தேர்வு அமைந்தால் உங்கள் முயற்சி இலகுவாகும்.

IT Skill தொடர்பில் நான் இரு விடயங்களை உங்களுக்கு விளக்கலாம் என நினைக்கின்றேன்.

ஒன்று நான் சார்ந்த கணக்கியல் துறையுடன் சார்ந்த IT Skill. அடுத்தது நான் மிகவும் விரும்பி (பொழுது போக்காக) ரசித்து பழகிய 'Online Business (e-business) துறை.

மேலும் ஒரு துறை, கல்வி இயல் (Education), சிறந்த எதிர்காலம் உள்ளதாகவே தெரிகின்றது. எனினும் அது குறித்து, யாரேனும் விரும்பினால், பின்னர் பார்க்கலாம்.

முதலாவதாக 'business world software' குறித்து பார்க்கலாம். இதன் உள்ளாகவே நான் சார்ந்த கணக்கியல் துறையுடன் சார்ந்த software வரும்.

1. Softwares of the business world

IT யில் பெரிய மீன், சிறிய மீன்களை விழுங்கும் செயற் பாடுகள் நிறையவே உண்டு. ஒன்றை ஒன்று விழுங்கி இப்பொது நான்கு முக்கியமான நிறுவனங்களே முன்னணியில் 'business world software' பகுதியில் உள்ளன.

அவையாவன:

1. SAP

2. Oracle

3. IBM

4. Microsoft

இதில் முதலாவது SAP ஜேர்மன் நாட்டினை தாயகமாக கொண்ட, ஒரு மென்பொருள் நிறுவனம். உலகின் முன்னணி 10 நிறுவனங்களில் குறைந்தது 6 இந்த மென்பொருளிணை பயன் படுத்துகின்றன.

பிரான்ஸ் நாட்டின் 'Business Object' எனும் பிரபல்யமான reporting software நிறுவனத்தினை இந்த பெரிய மீன் விழுங்கியுள்ளது.

SAP Consultant ஆக வருவதற்கு மிகவும் கவனமான படிப்பும், பயிற்சியும் அவசியம். SAP Consultant பல படி நிலைகளில் இருப்பார். உலகம் முழுவதும் மிகவும் கிராக்கி மிக்கவராக, நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் டொலர்களை, பவுண்களை, ஈரோக்களை கட்டணமாக அறவிடும் ஒருவராக இருப்பார்.

இது தவிர நிரந்தர வேலைகளில் உள்ளவர்கள் கூட நல்ல சம்பளம் பெற்றுக் கொள்வார்கள்.

இதோ சில உதாரணங்கள்.

UK

SAP BI Principal Consultant urgently needed - London - c.£100,000

Australia

SAP FI/CO Lead and Functional Consultants needed in Melbourne Area for a globally renowned organaisation. $133K - $172K

USA:

SAP FSI/Banking - FICO - Senior Consultant

Location:

Los Angeles, CA

Salary: Open (Six Figure)

Canada

Permanent - SAP - BASIS Administrator ($80-90k),

Toronto, ON, CANADA

இரண்டாவதாக Oracle குறித்து பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Oracle, database உலகின் ராஜா. தனது மென்பொருளை எல்லோரும் உபயோகிப்பது கண்டு இந்த ராஜாவுக்கு வேறு ஆசை வந்தது. நாமும் வேறு மென்பொருள் பகுதிகளுள் மூக்கை நுழைத்தால் என்ன என்று நினைத்து முயன்று பார்த்தது.

ஆனால் ஐயா நீங்கள் database உலகின் ராஜாவாக கம்பீரமாக இருந்து விட்டு போங்கள், அது போதும் என சந்தை சொல்லி விட, இந்த ராஜா, கையில் இருத்த காசைப் போட்டு சிறிய ஆனால் கீர்த்தி மிக்க அரசர்களை வாங்கி போட்டு விட்டார்.

Peoplesoft (HR, Payroll Arena)

Sibel (Customer Relatonship Management Arena)

Hyperion (budgetting, forecasting Arena)

Java

என Oracle விழுங்கி இருப்பது பல.

அடுத்ததாக IBM.

என்ன இது, IBM ஒரு hardware வியாபாரியாக தானே அறியப் பட்டார் என நீங்கள் கேட்கக் கூடும். ஆம், நானும் எவ்வளவு நாள் தான் இந்த Dell, HP பயலுகளுடன் மல்லு கட்டுவது என நினைத்தோ என்னவோ, Canada வின் Cognos என்னும் Business Intelligence, budgetting, forecasting Arena ல் புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தினை வாங்கிப் போட்டு, முதல் நான்கு இடத்தில உள்ளது.

IBM Cognos எனும் இந்த மென்பொருள் தான் எனது skill set.

அடுத்ததாக Microsoft.

Computer வைத்திருப்போர் எல்லோருக்கும் தெரிந்த இது குறித்து பெரிதாக விளக்கம் தேவை இல்லை.

SQL Server, Advanced Excel, Access, Powerpoint போன்றவை நல்ல வேலை பெறக் கூடிய skill set.

சரி, சுருக்கமாக இவை குறித்துப் பார்த்தோம்.

அடுத்து Online (e-business) தொடர்பான Internet Technology குறித்து பார்க்கலாம்.

ஒரு விளக்கம்: வெப்சைட் ஒன்றினை வைத்திருப்பதே e-பிசினஸ் க்கு போதுமானது என சிலர் கருதுகின்றனர். இதனால் வெப்சைட் ஒன்றை செய்வித்தேன். ஒன்றையும் காணவில்லையே என சிலர் சொல்லுவதனையும் கேட்டிருப்பீர்கள்.

Website என்பது வாசலில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள புதிய கார் போன்றது. அதனை இயக்கி பயன் பெற, முதலில் நான்கு டயர்களில் காத்து இருக்க வேண்டும். பின்னர் Fuel, Road Worthy Certificate, Insurance, Tax, Driver with license என இவ்வளவும் இருந்தால் தான் காரின் பலன் கிடைக்கும் அல்லவா.

எனவே, முதலில் e-business சூட்சுமத்தினை தெரிந்து கொள்வோம். பின்னர் பொழுது போக்காக எவ்வாறு வெப்சைட் அமைப்பது என தெரிந்து கொண்டு, பின்னர், e-business கில்லாடிகள் செய்வது போல், கார் HP கட்டுவதற்க்கு ஒரு site வருமானம், வீட்டு mortgage கட்டுவதற்க்கு ஒரு site வருமானம், இன்னுமோர் site வருமானம் விடுமுறைக்கு என ஒரு பத்து sites வைத்து கொள்ளலாமே.

(கில்லாடிகள், இதனை சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள்.)

இந்த சூட்சுமம் ஒன்றும் கடினமான சீனத்து வித்தை அல்ல. மிகவும் ஆர்வம் தரும் ஒரு logic உள்ள ஒரு விடயம். Youtube, Twitter, LinkedIn, Facebook, Google SEO, GogglePlus போன்ற ஊடகங்கள் எவ்வாறு செயல் படுகின்றன என அறிந்து அதனை நமது வசதிக்கு பயன் படுத்திக் கொள்வதே இங்கு உள்ள விடயமாகும்.

காட்டின் நடுவே உள்ள வருடா வருசம் பொங்கல் நடக்கும் பிள்ளையார் கோவில் உண்டியலுக்கும், பெருந்தெரு ஒன்றில் வாகனங்கள் சிறு ஓய்வுக்காக நிறுத்தும் இடத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் உண்டியலுக்கும், உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியும்.

காட்டின் நடுவே உள்ள பிள்ளையார் கோவிலினை, தள்ளிக் கொண்டு வந்து மக்கள் பார்க்கக் கூடிய பெருந்தெரு ஒன்றின் அருகில் வைத்தால் உண்டியல் வருமானம் என்னாகும்?

சூட்சுமம் என்னவெனில் எமது தளத்தினை எவ்வாறு அதிக மக்கள் பார்க்க வைப்பது மட்டுமல்ல, அவர்களை எமது பொருட்களை வாங்க வைப்பது.

இதனை சிறப்பாக புரிந்து கொண்டால், மட்டுமே, உங்கள் வீட்டின் கம்ப்யூட்டர் மூலம் பணம் கொட்டும். அது மட்டும் அல்ல. தெரிந்து கொண்ட வித்தையினை, தெரியாதவருக்கு சேவையாக வழங்கியும் பணம் பெறலாம்.

மறுபடி நாம் ஆரம்பித்த இடத்திக்கு வந்து கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள் குறித்துப் பார்க்கலாம்.

சந்திப்போம்

keysoftskills.com

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுதான் பார்த்தேன்

அருமையான

எமது இனத்துக்குத்தேவையான

எமது இனம் வரவண்டிய பகுதி.

தொடருங்கள்

மற்றவர்களும் பங்கு கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நாதமுனி.. :D

நாம் வீட்டுக்கு வெளியே வந்து வானத்தை அண்ணாந்து பார்த்தால்தான் இந்த உலகம் எவ்வளவு பெரியது என்று விளங்கும்..! :rolleyes:

உருப்படியான வேலைசெய்ய ஒருவர் வந்துள்ளார்.தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொட்டிக் கிடக்கும் IT தொழிற் துறை வேலை வாய்ப்புகள்.

Accoutants

முதலில் நாம் கணக்காளர்கள் (Accoutants) இந்த IT Skills இணை சேர்ப்பதன் மூலம் அடையக் கூடிய பொருளாதார நன்மை குறித்து பார்போமா?

பின்வரும் விளம்பரங்களை பாருங்கள்.

முதலாவது ஒரு fully qualified Accoutant வேண்டப்படுகின்றார்: சம்பளம் £20,000

இரண்டாவதனை பாருங்கள். Asst Accountant வேண்டப்படுகின்றார்: சம்பளம், முதலாவதிலும் பார்க்க இரு மடங்கு கூட. Cognos Skills குறித்த தேவையினை வேறு நிறத்தில் தந்திருக்கின்றேன். (இரு விடயங்களை கவனியுங்கள்: Asst (-) & Cognos (+) = Salary (++) )

இப்போது மூன்றாவதனை பாருங்கள்: Fully qualified with Cognos skills. நீங்கள் திறமையான negiotiater எனில் உங்கள் ஒரு நாள் சம்பளம் £500

இதற்கு மேல் நான் புரிய வைக்கத் தேவை இல்லை.

1. Accountant

Type: Permanent

Location: Bristol [south-West England], Gloucestershire [south-West England]

Rate: £20,000 per annum

Reference: GW BGNS01

Published: 16 May 2012

We are looking for a Recharge Accountant to join our Accounts department. Within the role you will ensure that all recharges are posted correctly in the accounting system and reflect the current position of all of the companies. Key Accountabilities: collate financial information for management account reporting; post and reconcile financial data using accounting software; assist with all functions of the accounts department if required and assist where possible with other parts of the business if required; balance sheet reconciliations; recharge costs accurately to the group companies including accruals and prepayments; provide insight to Company Accountants on monthly costs; ensure salaries postings are accurate (including pensions); ensure allocations of costs is accurate and justifiable. Experience Knowledge Skills Required: bookkeeping experience required; good working knowledge of Excel; computer and keyboard skills; self-motivated; ability to concentrate in an open office environment; ability to work to tight deadlines; good accuracy skills; ability to communicate with non-financially minded staff; good problem solving and investigative qualities; good communication skills; good organisational skills; time keeping; effective team participation and assistance skills.

2. Assistant Reporting Accountant

Type Temporary

Rate: From £35,000 to £40,000 per annum

Location Bournemouth, Dorset [south-West England]

Qualifications Qualified/part-qualified Passed Finalist (or equivalent)

Agency: Reed Finance

Contact chloe rourke

Published 29 May 2012

Start: ASAP

Reference GW 21608427

Job description

Interesting opportunity to join this large well known organisation for the post of Assistant Reporting Accountant to assist the Senior Reporting Accountant in the production of management reporting (ie management accounts, forecasts, budgets, strategic plan etc) and provide supplementary reports on both a periodic and ad hoc basis. The key accountabilities of the job holder will be as follows: ensure accurate management accounts are produced each month in a timely and accurate manner using systems available, assisting in the production of and data load for the management accounts, budgets and forecasts to Cognos, Navision etc; assist with the monthly balance sheet reconciliation and review process; prepare base data analysis for statutory accounts production and corporation tax returns; preparation and explanation of data submissions to both Internal and External Auditors; preparation of monthly inter/intra company statements; preparation of base data for regular reviews and reports; ad hoc projects/other eg fixed asset management, loan & interest reviews; base analysis for preparation of accruals and prepayments; balance sheet reconciliations to support management accounts; nominal ledger journal preparation and backup; standard system generated reports from Cognos and Navision. We are looking for an individual who is ideally qualified or Passed Finalist level. Someone who is numerically literate and able to understand and operate financial systems eg Cognos, Navision is required. A high level of computer literacy on both corporate and Microsoft based applications will be needed. You must have the ability to work to tight deadlines and achieve targets also having the ability to present and explain data clearly & concisely. Good written and verbal communication skills are also essential.

3. Systems Accountant

Type: Temporary

Location: London [south-East England]

Rate: From £400 to £500 per day Pro Rata

Reference: GW SM-21/5-PSA4l

Published: 29 May 2012

An exceptionally interesting opportunity has arisen within a FTSE-listed, business services organisation on an initial 6 month contract. To aid in the harmonisation of two finance systems, this project will rationalise the necessary data requirements and structure, simplify and standardise the month end close process and to implement a seamless data upload from PeopleSoft to Cognos (Controller). Ideally, applicants will be highly proficient in the use of PeopleSoft and Cognos, although knowledge of PeopleSoft is absolutely key! Responsibilities are varied but will include documenting the process of data transfer from PropleSoft into Cognos and highlighting any specific areas of difficulty, reviewing the chart of accounts in PeopleSoft...

இரு விடயங்கள்:

1. உங்கள் IT Skills மிகப் பெரிய (FTSE Listed) நிறுவனங்களின் வாசல்களைத் திறக்கின்றது. (Patel களுடன் மாரடிப்போர் கவனத்துக்கு)

2. உங்கள் வருமானத்தினை பல மடங்காக உயர்த்துகின்றது.

சந்திப்போம்

keysoftskills.com

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்களுக்கு நன்றிகள் நாதமுனி..

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் நான் வாசித்த மிகச்சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று..நானும் இதே துறையில்தான் படித்தேன்..தலைவா உங்களிடம் எனது துறையையும் வேலை வாய்ப்பு சம்பந்தமாகவும் ஒரு சந்தேகம் கேட்கவேணும்...தனிமடலில் கேட்கிறேன்...மிகச்சிறந்த அனுபவமும் அதை அழகாகச் சுவாரசியமாக சொல்லும் திறமையும் உங்களிடம் இருக்கிறது..உங்களை விரைவில் தொடர்புகொள்கிறேன்...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Cognos Skills Set குறித்தும் மேல் உள்ள கடைசி இரு விளம்பரங்களிலும் இருப்பது குறித்து சொல்லி இருந்தேன்.

ஒரு நிறுவனம் அடுத்து வருடம் நான்கு புதிய பொருட்களை சந்தைப்படுத்த திட்டமிடுகின்றது. (Planning)

சந்தைப் படுத்தும் பொருட்களில் வருமானம் $200M வரலாம் என எதிர் பார்க்கின்றது. (Forecasting).

இதற்கு மூலப் பொருள், மனித வலு, விளம்பரம் போன்ற செலவுகளுக்கு செலவுக்கு ஒதுக்கீடு செய்கிறது (Budgetting)

இறுதியில் இந்த Planning, Forecasting, Budgetting (P,F & B) ஆகியவற்றுடன் ஒப்பிட்டு ACTUAL ஆக நடந்ததை reporting (business intelligence) செய்வதில் market leader தான் இந்த Cognos எனும் கனேடிய நிறுவனம்.

இங்கே (P,F & B) பொதுவாக கணக்காளர்களது பணி. இவர்கள் Microsoft Excel மூலம் இவற்றினையும், reporting யும் செய்து வந்தார்கள்.

ஒரு நிறுவனம் Cognos software உபயோகிக்க முடிவு செய்தவுடன் Database உடன் தொடர்பான இந்த reporting வேலைக்கே வெளி நாடுகளில் இருந்து IT Skilled ஆட்கள் வந்தார்கள்.

மறுபுறத்தே உள்ளே நுழைந்து கொண்ட Cognos நிறுவனம் Planning, Forecasting, Budgetting பகுதிகளை இலக்கு வைத்தால் மேலும் பணம் பண்ணலாமே என திட்டம் போட்டது.

எனவே, P,F & B ஏரியாவில் நன்றாக வந்து கொண்டிருந்த Adaytum எனும் சின்ன British நிறுவனத்தினை வாங்கி Cognos Planning எனும் பெயர் இட்டு சந்தை படுத்தியது.

ஏற்கனவே business intelligence & reporting பகுதியில் நல்ல பெயர் இருந்ததால் பெரிய நிறுவனங்கள் எல்லாம் P,F & B வேலைகளுக்கு Microsoft Excel லில் இருந்து Cognos Planning க்கு பாய்ந்து விட்டனர்.

வியாபாரம் நல்லாக போவதனைப் பார்த்த Cognos நிறுவனம் P,F & B ஏரியாவில் தனது மேலும் ஒரு போட்டி நிறுவனமான TM1 எனும் அமெரிக்க நிறுவனத்தினை வாங்கி Cognos TM1 எனும் பெயர் இட்டு சந்தை படுத்தியது.

ஆக

Cognos BI (Business Inteligence),

Cognos Planning , Cognos TM1 (for Planning, Forecasting and Budgeting)

ஆகிய Performance Measurement Software (PMS) வினை நன்கு சந்தை படுத்துகையில் இந்த Cognos மீனை IBM எனும் பெரிய மீன் விழுங்கி IBM Cognos பெயரிட்டு சந்தைப்படுத்துகின்றது.

இங்கே நீங்கள் எவ்வாறு ஒரு Accountant வேலை, சம்பளம் என்பன நவீன தொழில் நுட்பத்தினால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது என்பதனைஅவதானித்து இருப்பீர்கள்.

பெரிய நிறுவனங்கள் எல்லாம் இந்த புதிய தொழில் நுட்பங்களுக்கு சென்று குறித்த IT Skills கொண்டவர்களை கூடிய பணம் கொடுத்து எடுத்துக் கொள்கின்றனர். (மேலே மூன்றாவது விளம்பரம்).

சிறிய நிறுவனங்கள் Microsoft Excel யே பாவிக்கக் கூடிய பொருளாதார வசதி கொண்டதால் அவர்கள் கொடுக்கும் சம்பளம் குறைவு (மேலே முதலாவது விளம்பரம்).

Accountancy தொழிலில் IT ஏற்படுத்தக் கூடிய பாதிப்பு குறித்து ஓர் ஆய்வு அறிக்கை 1998 September மாதம் CIMA 'Management Accounting' யில் வெளி வந்தது.

அப்படியானால் CIMA, ACCA போன்ற பெரும் எண்ணிகையில் கணக்காளர்களை எமது சமூகம் கொண்டுள்ளதே என நீங்கள் கவலைப் படக்கூடும்.

எமது கணக்காளர்கள் IT Skills இணை அரவணைத்துக் கொள்வதே உயர் வருமானத்துக்கும், வேலைப் பாதுகாப்புக்கும் ஒரே வழி என்பதுடன் அவ்வாறு செய்யும் போது எமது பலவீனமே மிகப் பெரும் பலமாகும்.

எப்படி?

அடுத்த முறை பார்க்கலாம்.

keysoftskills.com

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nathamuni

வேலைவாய்ப்புக்களை இழந்து தவிக்கும், மற்றும் உலகப்பொருளாதார மாற்றங்களால் எந்தத்துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம் என்று தெரியாமல் தவிக்கும் பலருக்கும் உதவும் மிகவும் பயனுள்ள திரியாய் இது அமைந்துள்ளது.

உதாரணங்களும் மிகவும் எளிதாக அமைந்து எல்லோரும் புரியும் படியாக அமைந்துள்ளதும் இத்திரி பலரையும் கவர்ந்துள்ளதற்கு ஒரு காரணம்.

தனிமடலில் தொடர்புகொண்டு சில விடயங்களைக் கேட்க இருக்கிறேன்...

மிக்க நன்றி உங்கள் பயனுள்ள தகவல்களுக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வந்த பல கடிதங்களில் ஒரு கடிதம்: keysoftskills.com forward செய்து இருந்தார்கள்.

இது மொழி பெயர்க்கப் பட்டது

FAO: Nathamuni

admin@keysoftskills.com (தொடர்புகொள்ள nathamuni@ymail.com)

உங்கள் பதிவுகளைப் பார்த்து வருகின்றேன். நீங்கள் குறிப்பிட்ட பல விடயங்கள் சரியாக உள்ளது.

எனது கணவர் ஒரு சீக்கியரிடம் கடந்த 9 வருடங்களாக வேலை செய்கிறார். சம்பளம் £20,000 மேல் செல்வது கனவிலும் நடக்காது போல் உள்ளது.

வேறு நல்ல நிறுவனங்களில் முயலுங்கள் என்று சொன்னால், 'தந்து விட்டு தான் வேறு வேலை பார்ப்பார்கள்' என்று சொல்லிக் கொள்வார்.

இத்தனைக்கும் நல்ல ஆங்கில அறிவும், வேலை அனுபவமும், பல்கலைக் கழக மற்றும் கணக்கியல் பட்டப் படிப்பும் உள்ளவர். எங்கே பிழை என குழம்பிக் கொண்டிருந்தேன்.

உங்களது பதிவினை நேற்று அவரை பார்க்க வைத்தேன். சிறிது நேரம் அமைதியாக யோசனை செய்தார். நேரத்தினை வீணாக்கி விட்டேனே என்றார்.

தனது முன்னேற்ற பாதையில் தடைக்கு என்ன காரணம் என அவருக்கு புரிகின்றது, என்ன செய்ய வேண்டும் என தெரிகின்றது, என உணர்கிறேன்.

மேலும் எழுதுங்கள். மிகவும் பயன் உள்ளது.

நன்றி

Mrs K

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.